மனிதன் தன் நிலை உணர்ந்தால் தேவனாகலாம்…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Maharishikaludan Pesungal - gnanam

மனிதன் தன் நிலை உணர்ந்தால் தேவனாகலாம்…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இந்த உலக மாற்றத்தினால் இந்த உலகிலுள்ள மனித ஆத்மாக்களின் உடல் அழிந்தாலும் அவர்களின் உயிரணுவும்… உயிராத்மாவும்… சப்த அலைகளும்… சகல எண்ணத்தில் விட்ட சுவாச அலைகளும்… பூமியின் சுழற்சியில் சுழன்றுள்ள நிலையில் மீண்டும் கல்கி பிறந்தால் இந்த எண்ண வளர்ச்சி எங்கே செல்லும்…?

இந்தப் பூமியின் காற்று மண்டலத்தில் கலந்துள்ள இந்நிலைகள் எல்லாமே அடுத்த நிலைக்கு வர ஏதுவாகின்றதா…? என்ற வினா எழும்பலாம்..!

இதன் நிலையில் இக்கலி மாறி கல்கி வரும் தருணத்தில் சில நிலைகள் ஏற்படலாம்.

இப்பூமியில் இன்று வாழும் ஆத்மாக்களும்… பல கோடி ஜீவ ஜெந்துக்கள்… தாவரங்கள்.. இன்று பூமியில் வளர்ந்துள்ள கனி வளங்கள்… நீர் நிலைகள்.. மனித உடலை விட்டுப் பிரிந்து வாழும் அனைத்து உயிராத்மாக்கள் உயிரணுக்கள்… இது நாள் வரை நம் பூமியின் காற்று மண்டலத்தில் நிறைந்துள்ள சப்த அலைகள் அனைத்து நிலைகளுமே… இந்தப் பூமியின் மாற்றம் நிகழும் தருவாயில் பல நிலைகள் மாறி கலியில் இன்றளவும் வளர்ந்து விட்ட நிலையில் மாற்றம் காணப் போகிறோம்.

இந்தக் கலியில் மாறுகிறது என்றால் இந்த உலக மாற்றத்தில் ஏற்படும் அதிர்வினால் சில ஒளி அலைகள் நம் பூமியின் காற்று மண்டலத்திற்கு மேல் அனைத்திற்கும் பொதுவான பால்வெளி மண்டலத்தில் கலந்து விடும் நிலை பெறுகின்றது.

இன்னும் பல சப்த அலைகள் இந்தப் பூமியின் ஈர்ப்பில் இந்த அதிர்வினால் மோதுண்டு இந்தப் பூமியுடன் கலக்கும் நிலை பெறுகின்றது.
1.பல பல மாற்ற நிலைகள் இந்தக் கலி மாறிக் கல்கியில் காணப் போகின்றீர்கள்.
2.இவ் ஈஸ்வரபட்டன் உணர்த்தும் நிலை பைத்தியமாகத் தோணலாம்.
3.இனிமேல் மனித ஆத்மாக்களின் எண்ண நிலை எல்லாம் தடுமாற்றம் கொள்ளப் போகிறது.

உலகின் பல திரையறியச் செயல்படும் கருவிகளும்… இந்தக் காற்றிலிருந்து ஈர்த்து ஓரிடத்திலிருந்து இன்னோரு இடத்திற்கு ஒலி அலைகளைப் பரப்பி வாழும் நிலைகளும்… மற்றும் மனிதனால் செயற்கைக் கோள்களை ஏவி விட்டு அதிலிருந்து உணரும் ஒளி அலைகளும்… ஒலி அலைகளும்,,, இன்று செயலாற்றும் முறைப்படிச் செயலாகாது.

இயந்திரத்தின் துணை கொண்டு காற்று மண்டலத்தில் இவர்கள் இன்று பிரித்து எடுக்கும் நிலையெல்லாம் செயல்படுத்தும் முறையில்
1.இன்றுள்ள நிலைக்கொப்ப செயலாக்க முடியாமல்
2.அதற்காக இன்னும் பல புதிய சாதன முறைகளை மனிதன் உருவாக்கப் பார்ப்பான்.

மீண்டும் இந்தக் காற்று மண்டலத்தின் விஷத் தன்மை கூடி… ஆவி உலகில் வாழும் ஆத்மாக்களின் வெறி உணர்வும் அதிகப்பட்டு… “எண்ணிலடங்கா விபரீத நிலைகள் ஏற்படும் தொடர்…” இனி வரப் போகும் காலத்தில் நிகழத் தான் போகின்றது.

மனித ஆத்மாக்களே…!
1.உங்களை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள்…!
2.என்றிருந்தாலும் “மடியத்தான் போகின்றீர்கள்…!” என்று எண்ணம் கொள்ளாமல்
3.மனித ஆத்மாக்களால் தான்… நிகழப் போகும் சக்தியை மனிதன் உணர்ந்து செயல்படத்தான்… இங்கே பல நிலைகளைப் போதிக்கின்றோம்.
4.மனிதனாக அறிவு கொண்டு… அன்பு பட்டு… ஞானம் பெற்றிட வாருங்கள்.

இந்த மனித ஆத்மாவிற்குத்தான் அறிவாற்றலை வளர்க்கும் ஆற்றல் உண்டு. அறிவு நிலை கொண்ட மிருகங்கள் வாழ்ந்தாலும் மனிதனை ஒத்த ஞான சக்தி பெறும் தன்மையற்ற நிலையில் தான் மிருக இனம் உள்ளது.

தேவனாக வாழக்கூடிய மனிதன் தன் நிலை உணர்ந்தால் தேவனாகலாம்…!


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply