தாய் தந்தையரின் ஆசி பெற்று நாம் பிறவியில்லா நிலை அடைய வேண்டும்

Father day mother day.jpg

தாய் தந்தையரின் ஆசி பெற்று நாம் பிறவியில்லா நிலை அடைய வேண்டும்

நமக்கு கடவுள் யார்…? நம்மை உருவாக்கியது யார்…? நமது அன்னை தந்தை உயிரே ஈசன். அவர்களுடைய எண்ணங்களால் தான் தனக்குள் எடுத்து நம்மை உருவாக்கினர்.

தாய் தந்தையர் கடவுளாக இருந்து தெய்வமாக நம்மைக் காத்தார்கள்…! எப்படி…?
1.நாம் பாம்பாக இருந்திருப்போம் அல்லது கொசுவாக இருந்து அவர்களின் இரத்தத்தை குடித்திருப்போம்.
2.அடித்த பின் அவர்கள் உடலுக்குள் போயிருப்போம்.
3.வீட்டில் எறும்பு தொல்லை கொடுத்தது என்று நசுக்கி இருப்பார்கள்.
4.நம் உயிர் அந்த உடலுக்குள் போயிருக்கும். அந்த உடலிலிருக்கும் உணர்வை எடுத்து மனிதனாக பிறக்கும் தகுதி பெறும்.

ஆகவே மனிதனாக நம்மை உருவாக்கியது யார்…? கடவுள் எங்கே இருக்கின்றான்…? நமது தாய் தந்தை தான் கடவுள். நம்மை மனிதனாக உருவாக்கிய அவர்கள் தான் கடவுள். இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

முதலில் அவர்கள் மனிதன் ஆனார்கள். பல இன்னல்களைக் கடந்து வந்து இன்னலிலிருந்து மீண்டிடும் நிலை பெற்றார்கள். இன்னலிலிருந்து மீள்வதற்காக ஒன்றை அடித்துக் கொன்றார்கள். அந்த உயிர் அங்கே சென்றது. மனிதனாக உருவானது.

ஆகவே நமக்கு மனித உரு கொடுத்தது யார்..? நம்முடைய தாய் தான். தெய்வமாக காத்ததும் நம் தாய் தான்.

கர்ப்பிணியாக இருப்பவர்கள் எத்தனை அவஸ்தைப்படுகிறார்கள்…? குழந்தை பிறந்த பின் அந்தத் படுகிர அவஸ்தையைப் பார்த்தால் தெரியும். குழந்தைக்குத் தலை வலிக்கிறது என்றால் தாய் என்ன செய்கிறது…?
1.உடனே பதறுகின்றது… குழந்தைக்கு என்ன ஆயிற்றோ…? என்ற உணர்வை நுகர்கின்றது,
2.காக்கும் உணர்வைக் கொண்டு வருகின்றது.
3.அந்த உணர்வுகள் அனைத்தும் நம் உடலிலேயும் பதிவாயிருக்கின்றது.

குழந்தைப் பருவத்தில் அதை எண்ண முடியவில்லை என்றாலும் வளர்ந்த பின் தாயின் காக்கும் உணர்வை எண்ணினால் எத்தகைய தீமையாக இருந்தாலும் நாம் காக்கப்படுவோம்.

“தாயின் உணர்வு நம்மைக் காக்கும்…!” என்ற நிலையை நாம் மறந்தே விட்டோம். விநாயகர் தத்துவத்தில் இது தெளிவாகக் கூறப்படுகின்றது.

இன்று தாயைத் திட்டுவதும் பேய் என்று விரட்டுவதும் அவஸ்தைப் படச் செய்வதும் தான் பெறும் பகுதிக் குடும்பங்களில் இருக்கிறது.

வேதங்களைக் கற்றுவந்த பின் யாக சாலைகளில் மந்திரங்கள் ஓதி பல உணர்வுகளைத் தீயிலே போட்டுப் பொசுக்கிப் பிற ஆன்மாக்களைத் தனக்குள் கைவல்யம் ஆக்கி மந்திரமாக்கிக் கொண்டு நான் கடவுளையே கை வசம் வைத்திருக்கிறேன் என்று தான் உலக மதங்கள் கூறுகின்றது.

இதிலிருந்தெல்லாம் நாம் என்று மீளப்போகிறோம். முழுமையாக அழியும் தருணத்தில் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் நாம் எப்படி வாழவேண்டும் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்..!

இன்று கடலில் உள்ள மணலில் இருந்து யுரேனியத்தைப் பிரித்து எடுத்து அணுகுண்டாகவும் ஹைட்ரஜன் குண்டுகளாகவும் உருவாக்கி வைத்துள்ளார்கள். அதை எல்லாம் பரீட்சாந்திரமாக விண்வெளியிலும் வெடிக்கச் செய்துள்ளார்கள்.

வான் வீதியில் உள்ள நிலைகளைத் தெரிந்து கொள்ள இராக்கெட்டுகளை உந்து விசையால் அனுப்புகிறார்கள். அவைகள் வெளிப்படுத்திய கதிரியக்கச் சக்திகள் அனைத்தும் அங்கேயும் கலக்கப்பட்டு விட்டது.
1.சூரியன் அதைக் கவர்ந்து அலைகளாக மாற்றும் போது
2.நம் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து கோள்களிலும் அந்த விஷக் கதிரியக்கங்கள் கலந்து விட்டது.

உதாரணமாக இரண்டு மின்சாரம் (PHAES TO PHASE) ஒன்றானால் என்ன ஆகும்…? வீட்டில் உள்ள பல்புகள் பீஸ் ஆகிறது. அதைப் போன்று மனிதனின் சிந்தனைகள் அனைத்தும் சிதறப் போகின்றது. அந்த ஒரு நொடிக்குள் மனிதர்கள் மிருகம் ஆகிறார்கள்.

அதாவது மனித உடலாக இருந்தாலும் சிந்தனைகள் சிதறி மிருகங்களைப் போன்ற இயக்கமாகிவிடும். (ஏற்கனவே சில இடங்களில் அப்படித்தான் இருக்கிறது)

இந்த நிலையில் தான் நாம் அனைவரும் இருக்கின்றோம். ஒரு நொடிக்குள் மாறி விடுகிறது. நமக்கே தெரியாது. மனிதனுக்கு மனிதன் கொல்லும் நிலை வருகின்றது.

கடவுளின் அவதாரம் வராக அவதாரம் நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வின் தன்மையை எடுப்பது போல் விஷமான உணர்வுகள் கலந்திருக்கும் இந்த உலகிலிருந்து மீண்டிட அருள் மகரிஷிகளின் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்கிக் கொள்ளுங்கள். அத்தகைய தீமைகள் வருவதற்கு முன் நுகர்ந்து பழகுங்கள்.

காலையில் விழித்தவுடன் வானை நோக்கி ஏங்கித் தன் கணவருக்கு/மனைவிக்கு அந்த மகரிஷியின் அருள் சக்தி கிடைக்க வேண்டும். அவர் உயர்ந்த ஞானம் பெற வேண்டும். அந்த அருள் என்றும் எனக்குள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று இருவருமே எண்ண வேண்டும்.

இந்த மனித வாழ்க்கையில் நாம் என்றுமே தீமைகளைப் பற்றிடாமல் அருள் உணர்வுகளைப் பற்றுடன் பற்றி பிறவி இல்லா நிலைகள் அடைதல் வேண்டும்.

Leave a Reply