தான் செய்வது தான் சரி…! என்ற எண்ணம் இன்று எல்லோருக்கும் வருவதன் காரணம் என்ன..?

kali-purush.jpg

தான் செய்வது தான் சரி…! என்ற எண்ணம் இன்று எல்லோருக்கும் வருவதன் காரணம் என்ன..?

அகஸ்தியன் கண்டுணர்ந்த மெய் உணர்வுகளை அகஸ்தியனுக்குப் பின் அதிகம் வெளிப்படுத்தியவர் வியாசகர்.

அவருக்குக் கல்வி அறிவு இல்லை எனும் பொழுது அவர் வெளிப்படுத்திய உண்மையின் உணர்வுகளை பிருகு.. அத்திரி… என்று ஏழு பேர் பாட நூல்களாக எழுதுகின்றார்கள்.

பிருகு நட்சத்திரத்தின் ஒளிக் கதிரை எடுக்கும் பொழுது அந்த உணர்வின் தன்மையை அவர் நுகர்ந்து அதைப் பற்றும் நிலைக்கு அவர் செல்கின்றார்.

அத்திரியோ ஆலம் விருட்சம் போன்று மற்ற நிலைகளைக் கூட்டி தன் அரசை எப்படி நடத்துவது…? என்று அவர் திட்டம் போடுகின்றார். தன் அரசைக் காக்கும் வழிகளும் மந்திர ஒலிகளை வைத்து எதைப் பெற வேண்டும் என்று இப்படித் தான் செயல்படுத்தினார்கள் பிருகும் அத்திரியும்.

ஆக வியாசகர் கண்டுணர்ந்து வெளிப்படுத்தியதை ஒவ்வொருவரும் தங்கள் உடலின் இச்சைக்காக மாற்றி அதன் வழியில் அமைக்கப்பட்ட நிலைகள் கொண்டு தான் இன்று அரசுகளாக வந்தது.

மனிதனின் உடலில் ஆசைப்படும் உணர்வுகள் எப்படி எல்லாம் வந்தது என்றால்
1,மந்திரங்கள் தந்திரங்களை மனிதனுக்குள் பாய்ச்சுவதும்
2.அவர்கள் ஆன்மாக்களைக் கைப்பற்றுவதும் கைவல்யப்படுத்துவதும் என்ற நிலைகள் கொண்டு
3.தங்கள் அரசாட்சிகளை நடத்தும் நிலைகளுக்குக் கொண்டு சென்றனர்.

அவர்கள் செய்த நிலை தான் இன்று உலகம் முழுவதற்கும் மதங்களாக உருவாக்கப்பட்டதும் மதங்களுக்குள் இனங்களாக உருவாக்கப்பட்டதும்,

1.ஆதியிலே அன்று அகஸ்தியரால் தோற்றுவித்த உணர்வுகளை மற்றவர்கள் கவர
2.அந்த உணர்வின் தன்மை அவர்கள் சொல்ல இவர்கள் தனக்குகந்த சாதக நிலையைக் கொண்டு வர
3.அதன் பின் இந்த மூலத்தைத் தேட வேண்டும் என்று இன்று தேடிக் கொண்டும்
4.சாதுக்களாகக் குடும்பத்தைத் துறந்து வருவதும் மதங்களுக்கு மத குருவாக வருவதும் மதத்தைக் காக்கும் சாமியார்களாக வருவதும்
5.இதைப் போன்ற நிலைகளையே பெரும் பகுதி உருவாக்கப்பட்டு
6.ஆட்சி செய்த அரசனை நிலை நாட்ட விழுதுகளாகப் பாய்ச்சப்பட்டு
7.பெரும்பகுதியான நிலைகள் இன்று உலக நாடுகள் அனைத்தும் சிதைவுண்டும்
8.மனிதன் மீண்டும் தேய்பிறையான நிலைகள் செல்லும் கலியின் தன்மையில் உள்ளோம்.

கலி என்றால் அவரவர்கள் உருவாக்கும் தன்மைகள். அவரவர் உருவாக்கிய நிலைகள் கொண்டு நான் தான் கடவுள்… நான் தான் கடவுள்… நான் தான் கடவுள்… நான் தான் கடவுள்…! என்ற நிலைகளில்
1.”நான்” என்ற அகங்கள் உருவாக்கப்பட்டு
2.தான் செய்தது தான் நல்லது… தான் செய்வது தான் சரி.. மற்றவர்கள் செய்வதெல்லாம் தவறு…! என்ற நிலைகளில்
3.இப்படி உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இதைப் போன்ற தீமைகளை நீக்கும் நிலைகளே நரசிம்மா…! என்பது.

வாழ்க்கையில் வரும் பகைமை உணர்வுகளைத் தனக்குள் புகாது எவர் தடுத்தனரோ… அதைத் தடுப்பதற்கு என்ன வேண்டுமோ.. அதை முறைப்படிச் செய்வோர் தான் அங்கே விண் செல்ல முடியும்… பிறவி இல்லா நிலையை அடைய முடியும்.

Leave a Reply