சர்க்கஸில் விளையாடுபவர்களுக்கும் உடலை வைத்துச் சில பயிற்சிகளைச் செய்பவர்களுக்கும் (GYMNASTICS) எலும்புகள் எப்படி… ஏன்… வளைந்து கொடுக்கின்றது…?

GYMNASTICS

சர்க்கஸில் விளையாடுபவர்களுக்கும் உடலை வைத்துச் சில பயிற்சிகளைச் செய்பவர்களுக்கும் (GYMNASTICS) எலும்புகள் எப்படி… ஏன்… வளைந்து கொடுக்கின்றது…?

 

சாதாரணமாக சர்க்கஸில் (GYMNASTICS) விளையாடுகிறார்கள் என்றால் சரியாக அந்த அளவுகோல் பிடித்து பத்து பன்னிரண்டு என்று சுழலச் செய்கிறார்கள். தூக்கிப் போடுவார்கள். அவர்கள் சுவாசித்த அந்த உணர்வின் வேகத் துடிப்பிற்கொப்ப அதைச் செய்கின்றார்கள்.

நாமும் மனிதர்கள் தான் அவர்களும் மனிதர்கள் தான். பல பல உணர்வுகளையும் அவர்கள் இயக்குகிறார்கள். பல அற்புதங்களைச் செய்கிறார்கள்.

அவர்களின் உடல் வலுவான நிலைகளில் இருந்தாலும்
1.சிறுகச் சிறுக இந்த உணர்வின் எண்ணங்களைப் பாய்ச்சி
2.இதைச் செய்ய வேண்டும்…! என்ற மன உறுதி கொண்டு
3.வில்லைப் போல உடலை வளைக்கிறார்கள்.

ஆனால் ஒரேயடியாக வளைத்தால் ஒடிந்து போகும். “வளைய வேண்டும்…” என்ற அந்த உணர்வின் தன்மை சேர்த்து அந்த உணர்வின் அலைகளை அவர்களின் வலுக் கொண்டு செலுத்தப்படும் போது
1.எலும்பில் உள்ள நிலைகளும்
2.இவர்கள் எண்ணிக் கொண்ட உணர்வுகளும்
3.அதற்குத் தக்கவாறு ரப்பர் மாதிரி ஆகி விடுகிறது.

ஏனென்றால் நுகரும் உணர்வுகள் அந்த எழும்பிலுள்ள அணுக்களுக்கு “நாம் வளைய வேண்டும்…!” என்ற உணர்வு சேர்க்கப்படும் போது
1.அந்த அணுக்கள் புது மலத்தை உண்டாக்கும்.
2.அந்த வலுவான உணர்வுகள் சேர்க்கப்படும் போது வளையும் தன்மை வருகிறது.

இடுப்பு வலிமையாக இருக்கிறது. தாய் கர்ப்பமாக இருக்கும் போது வாயுவின் உணர்வின் உணர்ச்சிகள் மோதப்படும் போது அந்த எலும்பு பாகம் விரிந்து கொடுத்த பின்னாடிதான் குழந்தை வெளியே வருகிறது.

ஒரு இரும்புக் கம்பியையோ கண்ணாடி வளையலையோ வளைக்க வேண்டுமென்றால் நெருப்பு ஜுவாலையில் காட்டினால் வளைகிறது.

இதே மாதிரித் தான் எலும்பு பாகங்கள் விரிவடைந்து குழந்தை பெரிய குழந்தையாக இருந்தாலும் வெளிப்படுத்தும் உணர்வுகளுக்கு அது இடம் கொடுக்கிறது.
1.குழந்தை வெளி வந்த மறு கணம் அந்த எலும்புகள் சுருங்கி விடும்.
2.இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

எலி பார்த்தால் ரொம்ப சிறியது தான். அதனுடைய குட்டி வெளிப்படும்போது பார்த்தால் தெரியும்.

ஆகவே இதைப்போல ஒவ்வொன்றுக்கும் அந்த உணர்ச்சிக்கொப்ப எலும்புகளில் அந்த உணர்வின் அழுத்தம் வரப்படும் போது மோதலில் விரிவடைந்து குழந்தை எளிதாக வெளி வரும் தன்மை உண்டாகின்றது.

ஆனால் கருவில் உருவான சில குழந்தைகள் வெளி வராத நிலை ஏற்படுகின்றது. “குழந்தை திரும்பி விட்டது…!” என்பார்கள். அதனால் அந்த உணர்ச்சி பலவீனம் ஆகும் போது வாயுவின் உந்தல்கள் வரப்படும் போது அந்தக் குழந்தையின் பாகம் சரியாகச் சீர்படுவதில்லை. இயற்கையான முறையில் பிரசவமாவதில்லை.

ஏனென்றால் குழந்தையின் காலோ மற்றதோ முதலில் வெளி வந்தால் அதற்கு மூச்சுத் திணறலாகும். அதைச் சீர் செய்ய விஞ்ஞான அறிவு கொண்டு டாக்டர்கள் சில முயற்சிகளை எடுத்தாலும் கூட ஒன்றும் முடியவில்லை என்றால் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுக்கின்றார்கள்.

அதைப் போன்று தான் எலும்பின் பாகங்களில் அதிகமான மோதல்கள் ஏற்படும் போது சர்க்கஸில் விளையாடக் கூடியவர்களுக்கு அதற்குண்டான அமிலங்கள் சுரக்கப்பட்டு அந்த அணுக்களின் தன்மை பெருக்கப்பட்டு எலும்புகள் ரப்பர் மாதிரி வேலை செய்யும்.

ஆனால் நாம் வளைக்க முடியுமா…? அவர்கள் எடுக்கும் உணர்வை நாம் கூட்டினால் நமக்கும் அந்த நிலைகள் வரும். ஒரு நான்கு நாட்களுக்குச் செய்து பாருங்கள்.
1.அந்த உணர்வின் பாகங்கள் நரம்புகள் நீண்டு வருவதும்
2.அந்த ஆசிட் பவர் கூடுவதும்
3.அந்த அணுக்களுக்கு ஆகாரம் கிடைப்பதும்
4.அதனுடைய மலங்கள் விரிவாவதும் இதெல்லாம் வரும்.
5.ஏனென்றால் இயற்கையின் நியதிகள் இவைகளெல்லாம்.

ஆகவே உடல் உறுப்புகளை இந்த உயிர் எப்படி இயக்குகிறது…? நுகர்ந்த உணர்வுக்கொப்ப எப்படி மாற்றுகின்றது…? என்ற நிலைகளை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குத் தெளிவாகக் கூறினார்.

டாக்டர்களுக்குப் படிப்பவர்கள் அவர்களுக்குக் கற்பிக்கும் போது அந்தக் கற்பனைக்கு உண்டான நிலைகளை அதைப் படித்துப் பாடம் செய்து இன்ன இன்னது தான் செய்கிறது…! என்று சொல்வார்கள்.

1.படித்த பாடத்தின் நிலைகள் அவர்களுக்குள் இருந்தாலும்
2.சுவாசித்ததன் உணர்வுகளால் தான் எலும்புகள் விரிவடைந்தது என்றும்
3.நுகரும் உணர்வுகள் மாறினால் அந்த இயக்கங்கள் மாறும் என்பதும் அவர்களுக்குத் தெரியாது.

இயற்கையில் உருவான நிலையிலிருந்து விளைந்தது என்ற நிலையில் அதிலுள்ள அமிலங்களை பிரித்து பார்த்து அந்த அமிலங்களை மாற்றுவதற்கு மாற்று உபாயமான செயல்களை (இயற்கையில் விளைந்த உணர்வுகளை) செயற்கையில் செய்கிறார்கள்.

ஆடு மாடுகளிலிருந்தும் மூளை போன்ற பாகங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு அதற்குள் இரசாயனங்களைச் சேர்த்து மற்றவர்களுக்கு மருந்தாக நேரடியாகவும் கொடுக்கிறார்கள்… மாத்திரையாகவும் கொடுக்கிறார்கள்.

இரத்தத்தில் கலக்கச் செய்து வலு கொண்ட நிலைகளாக மனித உடலில் உள்ள அணுக்களுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய பக்குவத்தை ஊட்டுகின்றார்கள். விஞ்ஞான அறிவு கொண்டு இப்படி எத்தனையோ நிலைகளை மாற்றலாம்.

பால் குறைவாக இருக்கக் கூடிய மாட்டிற்குப் பாலை அதிகமாகச் சுரக்கச் செய்ய மரபு அணுக்களை மாற்றி அமைக்கின்றார்கள். இன்னும் சொல்லப் போனால் குளோனிங் (CLONING) மூலம் உருவாக்கி கன்றுவாக இருக்கும் பொழுதே சில சக்திகளைக் கூட்டிப் பால் அதிகமாகச் சுரக்கும் தன்மையைக் கொண்டு வருகிறார்கள்.

ஆணையும் பெண்ணாக மாற்றுகின்றான். பெண்ணையும் ஆணாக மாற்றுகின்றான். விஞ்ஞான அறிவு கொண்டு புலிகளையும் மிருகங்களையும் கொடூரமான நிலைகளையும் பாம்புகளையும் கொடூரமாகக் கொன்று குவிக்கும் ஓநாய் இனங்களையும் அவைகளுக்குள் மற்ற மற்ற உணர்வுகளைச் சேர்த்து அதன் அறிவின் ஞானத்தை இயக்கும் சிறு மூளைகளுக்கே எட்டும் படிச் செய்கின்றான்.

அப்போது அந்தக் கொடிய மிருகங்கள் இவன் சொல்லும் உணர்வுகளை எடுத்து மனிதனுக்கொத்த நிலையில் இவன் சொல்வதைக் கேட்கும் நிலைக்குக் கொண்டு வருகின்றான்.

அந்த மிருகங்களைப் பிடிப்பதற்கு என்ன செய்கின்றான்…? எவன் மிருகத்தைப் பிடிக்கின்றானோ அவன் உடலை நக்கச் செய்கின்றான். அவ்வாறு நக்கி அந்த மணங்களை எடுத்துக் கொண்ட பின் இவன் உடலின் உணர்வுகள அந்த மிருகத்திற்குள் சேர்க்கப்பட்டு அடுத்து அது சாந்தமான நிலைகளில் வருகின்றது.

இப்படிச் சிறுகச் சிறுகச் சிறுகச் சேர்த்து விஞ்ஞான அறிவு கொண்டு அதை மாற்றி இவன் சொன்னபடி எல்லாம் கேட்க வைக்கின்றான். இவன் மணத்தை நுகர்ந்தவுடன் அது விட்டு விடும் நிலை வருகிறது.

சிறு பாம்பாக இருந்தாலும் சில வகையான உணவுகளைத் தன் வாயிலே போட்டு தன் உணர்வைக் கலந்து அதை மற்ற உயிரினங்களை தின்னச் செய்கின்றான்.

இவன் எண்ணத்திற்குண்டான நிலைகளைப் பரப்பி அதற்குத் தக்க ஆசிட்டைக் கலந்து கொடுத்து விடுகிறான். அதைச் சாப்பிட்டுப் பழகியதும் அந்த உயிரினங்கள் “இவன் வா…!” என்று கூப்பிட்டால் அப்படியே வரும்.

1.உணர்வின் இயக்கங்களையும்
2.அந்த உணர்வுக்கொப்ப நம் உயிர் எப்படி இயக்குகிறது…? மாற்றியமைக்கின்றது…? என்பதையும்
3.நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான்
4.விஞ்ஞான அறிவுடன் இணைத்து இதைச் சொல்கின்றோம்.

Leave a Reply