மாடு மேய்ப்பவன் மூலம் பதஞ்சலி அறிந்து கொண்ட பேருண்மைகள்

 

thirumoolars

மாடு மேய்ப்பவன் மூலம் பதஞ்சலி அறிந்து கொண்ட பேருண்மைகள்

பதஞ்சலி முனிவர் தனக்குள் அந்த விண்ணுலக ஆற்றலை அகஸ்தியன் காட்டிய இந்த முறைகளை மாற்றி கூடு விட்டுக் கூடு பாயும் நிலைகளைச் செய்தவர்

அதாவது விஷத்தின் தன்மை தனக்குள் செருகேற்றி பாம்பின் உடலுக்குள் புகுந்த பின் பாம்பின் உடலிலுள்ள நஞ்சை இன்னோர் உடலுக்குள் பாய்ச்சி அந்த உடலின் வலிமையை இழக்கச் செய்து அந்த உடலுக்குள் புகுந்து அந்த உடலை ஆட்கொண்டு தன் செயலாக்கங்களுக்குப் பயன்படுத்தும் முறைகள் தான் அது.

அந்த அரசனுக்குத் தான் முனிவர் என்று பெயர் வைத்துப் பதஞ்சலி முனிவர் என்றார்கள்.

மந்திர ஒலியைத் தன் மக்களுக்குள் பதியச் செய்து தன் மதத்தின் கீழ் மடிந்த மக்களின் உணர்வைத் தனக்குள் கவர்ந்து… கவர்ந்து… மிக சக்தி வாய்ந்தவர்களாக மாறுவார்கள்.

யாரைக் கண் கொண்டு பார்த்தாலும் தன் ஆற்றலைப் பாய்ச்சி அவர்களை அடக்கி ஆட்சி புரியும் நிலைகள் பெற்றவர்கள். அப்படிப்பட்டவர்களைத் தான் முனிவர் என்று சொல்வார்கள்.

1.இன்றும் அந்த மந்திர ஒலிகள் பெற்று இறந்தவர்கள் இன்னொரு உடலுக்குள் சென்றால்
2.புகுந்த உடலிலுள்ளோர் ஒரு மனிதனை அறியாது கண் கொண்டு பார்த்தாலும்
3.அந்த மனிதனுடைய உடல் கருகும்.
4.இரும்பைக் காட்டினால் உருகும். ஆனால் அவனுக்கே தெரியாது.

இதை நேரடியாக நான் (ஞானகுரு) கண்டுணர்வதற்காக ஒரு சமயம் பம்பாய் நகருக்கு அருகில் ஒரு குக்கிராமத்திற்கு அழைத்துச் சென்றார் குருநாதர்.

அங்கே உள்ள ஒரு பையனுக்கு அது ஒன்றும் தெரியாது. அவன் உடலுக்குள் புகுந்த அந்த ஆவியால்
1.யாரையாவது அவன் பார்த்தான் என்றால் அல்லது நினைத்தான் என்றால்
2.அந்த உடலில் ஓட்டையே போட்டு விடும்.
3.ஒரு இரும்பைப் பார்க்கிறான் என்றால் கரைந்து அப்படியே தொங்கும்.
4.அந்த அளவிற்கு வெப்பக் கனல் அவன் உடலிலிருந்து வருகிறது.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் மந்திர ஒலிளைப் பாய்ச்சி ஒரு மனிதனின் உடலில் உருவாக்கப்பட்ட உணர்வின் துணை கொண்டு பல மாயாஜாலங்களைச் செய்து காட்டிவிட்டு ஆண்டவனையே நான் கைவல்யப்படுத்துகிறேன் என்று சொல்கிறார்கள்.

அதனின் உண்மை நிலைகளையும் காட்டினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர். மாயாஜாலத்தில் என்னை அங்கே அழைத்துக் கொண்டு போய்க் காட்டினார்.
1.குருநாதர் என்னைக் கட்டி அரவணைத்தார்
2.அவருடன் சேர்ந்தபின் என்னையும் ஆவியாக மாற்றுகிறார்.
3.கண நேரத்தில் அங்கே (பம்பாய்) செல்லும் போது அந்தப் பையனின் நிலையைக் காட்டுகின்றார்.

இது நடந்த நிகழ்ச்சி. நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன்…!

இதைப் போன்று தான் அன்று பதஞ்சலி முனிவர் (அந்த அரசன்) அதர்வண வேதத்தைத் தனக்குள் கடைப்பிடித்து அதிலே வளர்ச்சி பெற்றவன்

மாற்று அரசர்கள் போர் முனைக்கு வரும் போது அவர்களிடமிருந்து எப்படித் தப்ப வேண்டும்…? எப்படித் தாக்க வேண்டும்…? என்று இதைப் பரிட்சாந்தரமாகச் செய்து பார்ப்பதற்காகத் தான் கற்றுணர்ந்த உணர்வினை தன் சேனாதிபதியிடம் சொல்கிறான்.

நான் பாம்பின் ரூபமாக மாறுகின்றேன், இந்த உடலை விட்டு நான் வெளியேறிய பின் என்னுடைய மனித உடலை நீ பாதுகாப்பான இடத்தில் பத்திரமாக வைத்திரு…! என்று சொல்கிறான்.

“சரி” என்று சொன்னான் அந்தச் சேனாதிபதி.

போர் முரசு கொட்டி வரும் மாற்று அரசனிடமிருந்து எப்படி நாம் தப்பிக்க வேண்டும் என்று பதஞ்சலி பரீட்சாந்திரமாகப் பார்ப்பதற்காகப் பாம்பின் உடலில் சென்ற பின் அந்தச் சேனாதிபதி என்ன செய்கின்றான்…!

இது தான் நமக்கு உகந்த தருணம் என்ற நிலைகளில் கூடு விட்டுக் கூடு பாய்ந்த பதஞ்சலி முனிவரின் உடலைச் சிதைத்து எரித்து விட்டான்.

எதிரி அரசனிடம் சரணடைந்து இந்த சாம்ராஜ்யத்தை எனக்குக் கொடுத்தால் போதும் என்று அந்தச் சேனாதிபதி சொன்னான்.

அவன் ஆட்சி புரிவதற்காக வேண்டி இவனை வீழ்த்தினான் அந்தச் சேனாதிபதி. அவன் உணர்வின் சூழ்ச்சியில் சிக்கிய பதஞ்சலியோ காடு மேடெல்லாம் பாம்பாக ஊர்ந்து செல்கின்றான்.

எந்தப் பகுதியில் அந்தக் காடு மேடுகளில் பதஞ்சலி முனிவர் அலைந்தார் என்று அறிந்து கொள்ள வெறும் வேஷ்டி துண்டுடன் ஒரு கிராமத்துக்காரன் போல் சிதம்பரம் பகுதிக்குச் சென்று அவர் போன பாதைகளை எல்லாம் போய்ப் பார்த்து வந்தேன்.

அன்று நடந்த நிகழ்ச்சிகள்… அந்த உணர்வலைகள்… அது எப்படிப் பூமியில் படர்ந்துள்ளது. அதைச் சூரியனின் காந்த சக்தியை எவ்வாறு கவர்ந்துள்ளது…? என்ற நிலையை உணர்த்துகின்றார் குருநாதர்.

(இன்று இருக்கும்) சிதம்பரம் கோவிலுக்கு முன் தெப்பக்குளம் ஒன்று உண்டு. அந்த இடத்தில் விநாயகர் கோவில் ஒன்று உண்டு. அங்கே அக்காலத்தில் ஒரு பாம்புப் புற்று உண்டு.

அந்தப் புற்றுக்குள் தான் பதஞ்சலி நுழைந்து சுழன்று வந்தார். தான் செய்து கொண்ட உணர்வின் தன்மையால் அங்கே சிந்திக்கும் திறன் இல்லை.

ஆனாலும் தன் செயல்களைச் செயல்படுத்த அதற்குகந்த உடலைத் தேர்ந்தெடுப்பதற்காக வேண்டி ஊர்ந்து சென்று காடு மேடு சுற்றினார்.

அப்பொழுதுதான் சூதுவாதற்ற ஒரு மாடு மேய்ப்பவனின் அருகில் சென்று இவனைத் தீண்டி இந்த விஷத் தன்மையை அந்த உடலுக்குள் பாய்ச்சி அந்த விஷத்தின் துணை கொண்டு அவன் உடலுக்குள் சென்று அவன் உணர்வை அடக்கி அந்த உடலைச் செயல்படுத்தத் தொடங்கினான் பதஞ்சலி.

சாயங்காலம் மாடுகளுடன் சேர்ந்து அந்த உடலின் (மாடு மேய்ப்பவன்) வீட்டுக்குச் செல்லுகின்றான்.

அப்போது அவனின் மனைவி கணவன் காட்டில் மாட்டை மேய்த்து விட்டு வந்திருக்கின்றான் என்று சொல்லிப் பல பணிவிடைகள் செய்கிறாள்.

அவனுக்குத் தண்ணீர் கொடுப்பதும்… தண்னீரை மேலே ஊற்றிக் குளிப்பாட்டுவதும்…! இப்படி தொடரப்படும் போது இவனுக்குக் “கூச்சம்” வருகிறது.

ஏனென்றால் மாடு மேய்ப்பவனின் உடலுக்குள் புகுந்த நிலைகளில் அந்த உணர்வுகளைப் பார்க்கப்படும் போது விலகி விலகிச் செல்லுகின்றான்.

அப்போது தன் மனைவி சந்தேகிக்கும் நிலைகள் வருகிறது. ஏனென்றால் தன் கணவனை வரவேற்பதும் அவனை மகிழச் செய்வதும் ஒரு மனைவியின் கடமை என்று அவள் அவ்வாறு செய்கிறாள்.

அப்பொழுது தான் பதஞ்சலி சிந்திக்கத் தொடங்குகின்றான்…!

அரசனாக இருக்கும் போது மாற்று அரசனின் மகளைத் திருமணம் செய்து கொண்டேன்.
1.ஆனாலும் அந்த அரசிக்கு நான் அஞ்சியே வாழ வேண்டியிருந்தது
2.தான் இட்ட சட்டத்தின்படி மக்களுக்கு அஞ்சியே நான் வாழ வேண்டியிருந்தது
3.நாட்டைக் காத்திடும் தன் சேனாதிபதிக்கு அஞ்சி வாழ வேண்டியிருந்தது. (ஏனென்றால்) அவனுக்குக் கொடுத்த அதிகாரத்தின் துணை கொண்டு தன்னைத் தாக்கிடாது அவன் என்ன செய்கிறான் என்று அதற்கு உளவாளிகளை வைத்துப் பாதுகாக்க வேண்டும்.

இத்தனை நிலைகளுக்கும் மத்தியில் சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்து எவ்வளவு பெரிய சக்தியைக் கற்றுணர்ந்திருந்தாலும் இந்த நாட்டைக் காக்கும் காவலாளியான சேனாதிபதியே “தன்னை வீழ்த்தி விட்டானே…!” என்று சிந்திக்கின்றான் பதஞ்சலி.

ஆனால் ஒரு சாதாரண மாடு மேய்ப்பவனுடைய வீட்டில் அவனுக்கு அவன் மனைவி செய்யும் சேவைகளைக் கண்ட பின் உண்மையின் உணர்வினை அறியத் தொடங்குகின்றான்.

தான் அரசனாக இருக்கும் போது கற்றுணர்ந்த ஞானிகளால் காட்டப்பட்ட வேதங்கள் ரிக் வேதம் சாம வேதம் அதர்வண வேதம் யஜுர் வேதம் என்ற நான்கு மறைகளின் பேருண்மையை அப்பொழுது உணரத் தொடங்குகின்றான்.

(திருமூலரின் உண்மை நிலைகளை அறிவதற்காக “அன்றைய காலத்திற்கே…” குருநாதர் என்னை அழைத்துச் சென்று காட்டினார்)

அவனின் உணர்வின் நினைவாற்றலில் எதை எதை இந்த உலகம் எவ்வாறு பெறுகிறது என்ற நிலையை அறிந்து கொள்ளும் ஆற்றல் வருகின்றது.

“தில்லை” – பூமி ஒரு எல்லையாக நின்று வான் வெளியில் சுழன்று கொண்டு நிற்காமல் தன் சுழற்சியின் வேகத்தால் ஈர்ப்பதும் சுழற்சியால் தனக்குள் வெப்பமாவதும் தான் கவர்ந்து கொண்ட உணர்வுகள் விளைவதும் எப்படி…? என்ற பேருண்மைகளை அறிகின்றான்.

அதற்குத் “தில்லை நடராஜா…!’ என்று காரணப் பெயரைச் சூட்டுகின்றான். இந்தப் பூமி நின்று விட்டால் நாம் என்ன கதியாவோம்,,,? என்று இந்த உணர்வின் தன்மையை வெளிப்படுத்தும் போது தான் “திருமூலர்” என்ற பெயர் அவருக்கு வருகிறது.

பூமியின் செயலாக்கத்திருந்து உரு பெறும் உணர்வின் அணுக்களின் செயல்கள் விண்ணுலக ஆற்றலால் எவ்வாறு பெற்றது என்றும் அங்கே வெளிப்படுத்துகின்றான்.

உலகம் உருவாவதற்கு முன் பேரண்டத்தில் இலகுவான வெப்பத்தின் தன்மை தான் ஆதியிலே மூலமாக இருக்கிறது.

அந்த வெப்பத்தில் ஆவியாக உரு பெற்று அமைதி கொண்ட ஆவியாக அது வளர்ச்சி பெறப்படும் போது நாளாக ஆக அதனின் தன்மை விஷத் தன்மையாக மாறுகிறது.

அந்த விஷத்தன்மை அடைந்த பின் புதிதாக உருவாகும் ஆவியின் தன்மையைத் தாக்கி வெப்பமாக மாற்றுகிறது. வெப்பமாக மாற்றிய பின் அணுவாக மாறுகிறது.

1.விஷத்தின் தாக்குதலை ஆதிசக்தி என்றும்
2.தாக்குதலால் உருவாகும் வெப்பத்தைப் ஆதிபராசக்தி – எல்லாவற்றையும் உருவாக்கும் நிலை என்றும்
3.வெப்பத்தின் தன்மை கூடும் போது ஈர்க்கும் காந்தம் உருவாவதை ஆதிலட்சுமி என்றும்
4.ஆதிபராசக்தி என்றும் ஆதிசக்தி என்றும் ஓர் அணுவின் தன்மையை
5.அந்த இயக்கத் தொடரை திருமூலர் உணர்த்துகின்றார்.
(ஆதியிலே உருவான நிலை எப்படி என்பதைத்தான் அவர் வெளிப்படுத்தினர் – தில்லை இரகசியம் என்பது)

இவ்வழியில் அணுக்களின் சேர்க்கையால் இந்த பூமி உருவானது உணர்வுக்குத்தக்க அணுக்கள் மாற்றமானது என்ற பேருண்மையைப் பாடுகிறார்.

1.பற்பல உணர்வுகள் மோதுண்டு மோதுண்டு
2.அதில் அணுக்களின் தன்மை பெருகப் பெருக
3.அணுக்கள் ஒவ்வொன்றும் தனக்குள் கவர்ந்த உணர்வுகள் மாற மாற
4.ஒன்றைக் கண்டு மற்றொன்று அஞ்சி ஓடுவதும் மற்றொன்றோடு மோதுவதும்
5.மோதலில் ஏற்படும் இணைந்து வெப்பமாவதும் இரண்டு சத்தும் இரண்டறக் கலப்பதும்
6.அணுக்களின் வளர்ச்சியும் அணுக்களில் மாற்றம் எவ்வாறு உருவாகிறது என்ற நிலைகள் அங்கே உணர்த்துகின்றான்.

அதிலே தோன்றிய அந்த அணுக்களின் தன்மை தான் ஆவியாகி மேகமான பின் மேகத்துக்குள் இந்த அணுக்களுக்குள் போர் முறை ஆகப்படும் போது தான் நீராக மாறுகின்றது. நெருப்பிலிருந்து தான் “நீர் தோன்றியது…!” என்று உணர்த்துகின்றார் திருமூலர்.

அந்த நீருக்குள் அணுக்கள் சிக்கி எடை கூடிய நிலையில் ஓடும் போது அதனுடைய உராய்வில் மீண்டும் இந்த நீர் ஆவியாக மாறி இணைந்து கொண்ட உணர்வுகள் ஒன்றாகச் சேர்த்து ஒரு பரமாகிறது. “பரம்பொருள்” ஆனதென்று உணர்த்தினார் திருமூலர்.

ஒரு அமைதி கொண்ட மாடு மேய்ப்பவனின் உடலுக்குள் கூடு விட்டு கூடு பாய்ந்தபின் தான் கற்றுணர்ந்த அனுபவத்தை அந்த அகஸ்தியன் உணர்வை நுகர்ந்து பேருண்மைகளை வெளிப்படுத்துகின்றான்.

மனித வாழ்க்கையில் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிய அகஸ்தியன் துருவ மகரிஷியாக துருவ நட்சத்திரமான நிலையும் அதன் வழியில் பின்பற்றிச் சென்ற சப்தரிஷி மண்டலங்கள் எவ்வாறு இருக்கிறது என்ற நிலையையும் திருமூலர் வெளிப்படுத்திக் காட்டுகின்றார்.

அவர் வெளிப்படுத்தியதை மாற்றித் விட்டு திருமூல மந்திரம் என்று இவர்களுக்கு உகந்த நிலைகள் கொண்டு “மந்திர ஒலியிலே…” சாடி விட்டார்கள்.

அந்தத் திருமூலரின் சமாதியைத் தான் தில்லையம்பதியில் சிதம்பர ரகசியம் என்று இன்றும் காட்டிக் கொண்டு பொருள் தேடுகிறார்கள். பணத்திற்காகத் தில்லை ரகசியம் என்று காட்டுகிறார்கள்.

Leave a Reply