தாவர இனச் சத்தை உலோகத்துடன் கலந்து புடமிட்டு அந்தச் சக்திகளை வளர்த்துக் கொண்டவர்களே மெய் ஞானிகள்

trust-yourself

தாவர இனச் சத்தை உலோகத்திற்குள் கலந்து புடமிட்டு அந்தச் சக்திகளை வளர்த்துக் கொண்டவர்களே மெய் ஞானிகள் 

விஞ்ஞானி கடினமான பாறைகளையும் ஒரு இரும்பைக் கொண்டு மிக எளிதாக அறுத்து எறிகின்றான்.

மரத்தை ரம்பம் கொண்டு அறுக்கக் கடினமாக இருக்கின்றது. ஆனால் விஞ்ஞானியோ
1.இரும்பைச் செறிவு ஏற்றி
2.அதை மிகவும் ஆற்றல் மிக்கதாக மாற்றி
3.மிகக் கடினமான பாறைகளையும் எளிதில் அறுத்து எறிகின்றான்.
4.எவ்வளவு எளிதாகச் செய்ய முடியுமோ அவ்வளவு எளிதாகச் செய்துவிடுகின்றான் விஞ்ஞானி.

இரும்புக்கு எந்த அளவுக்கு வலுவாக இருக்கின்றதோ அதைப் போன்று சற்று வலுவாகத் தட்டினால் வளைந்து நெளிந்துவிடக் கூடிய உலோகமான அலுமினியத்தை விஞ்ஞான அறிவு கொண்டு செருகேற்றி வலுகொண்டதாக மாற்றுகின்றான் விஞ்ஞானி.

சில உலோகத்தின் நிலைகளை கரும்புச் சாற்றுக்குள் கலந்து அதிலுள்ள அழுக்கைப் பிரித்து வெண்மையான சர்க்கரையாகச் சுவை கொண்டதாக மாற்றுகின்றான்.

அப்படி அழுக்கை நீக்கினாலும் அழுக்கான கழிவை விஞ்ஞான அறிவால் மற்ற பொருள்களைச் சேர்த்துப் பிளாஸ்டிக்காக உருப்பெறச் செய்கின்றான்.

அவ்வாறு உருப்பெறச் செய்தால் இந்த பிளாஸ்டிக் அழிவதேயில்லை.

இந்த இனிப்பான சத்தைக் கவர்ந்து கொள்ளும் இச்சக்தியினை விஞ்ஞானி பிரித்து அதைப் பிளாஸ்டிக்காக மாற்றுகின்றான். அதை மண்ணிலே போட்டாலும் மக்குவதில்லை.

இரும்பு உலோகமோ மண்ணிலே போட்டால் அது மக்கிவிடுகின்றது. இரும்புக்குள் மற்ற உப்புச் சத்தின் நிலைகள் பட்டாலோ இரும்பு மண்ணைப் போல ஆகிவிடும்.

அதையும் தனக்குகந்த அமிலத்தின் தன்மையை காற்றலைகளாக மாற்றி அந்தக் காற்றலையின் அழுத்தத்தை இரும்புக்குள் பாய்ச்சி இரும்பு துருப் பிடிக்கும் நிலையை இழக்கச் செய்து அதை “எவர்சில்வர்” ஆக மாற்றுகின்றான் விஞ்ஞானி.

விஞ்ஞானிகள் மிகச் சக்திவாய்ந்த நிலைகளைச் செய்கின்றனர்.

யாம் (ஞானகுரு) இதையெல்லாம் புத்தகத்தில் படிக்கவில்லை. பார்த்துச் சொல்கிறோம். படிக்கவில்லையென்றாலும் குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டு பார்த்தோம்.

அதை எவ்வாறு செயல்படுத்துகின்றனர்? அந்த உணர்வின் தன்மை எவ்வாறு மாறுகின்றது? என்பதை குருகாட்டிய வழியில் அவரின் ஆற்றல் மிக்க அந்தச் சக்தியின் துணை கொண்டுதான் இதை யாம் அறிந்திட முடிகின்றது.
1.உங்களுக்கு அதை உபதேசிக்கவும் முடிகின்றது.
2.உங்களுக்கு உணர்த்திடவும் முடிகின்றது.

அன்று சாதாரண மனிதனாக இருக்கும் பொழுது பிறிதொரு மனிதனின் நோயை நீக்கச் செய்தான் மெய் ஞானி.

ஒவ்வொரு கட்டத்திலும் சந்தர்ப்பத்தால் மனிதன் சந்திக்க நேரும் குணங்கள் அவனுக்குள் வளர்ந்த நல்ல பண்பையும் பாசத்தையும் பரிவையும் அன்பையும் அறிவையும் துணிவையும் ஞானத்தையும் இழக்கச் செய்துவிடுகின்றது.

அத்தகையை விஷத்தின் தன்மைகள் அது மனிதனின் உடலில் தீய விளைவுகளை விளைவிக்கின்றது.

அந்தத் தீயவிளைவுகளை நீக்க அன்று சிந்தனையுடைய நிலைகள் கொண்டு சிந்தித்துத் தன் எண்ணத்தை வலு கூட்டி விண்ணிலே செலுத்தி விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பெற்றான் மெய் ஞானி.

விண்ணின் ஆற்றல் தாவர இனச்சத்துக்களின் எந்த அளவு கலந்துள்ளது. அதனின் வீரிய செயல்கள் எவ்வாறு செயல்படுகின்றது என்றும் கண்டுணர்ந்தான் மெய்ஞானி.

அந்த வீரிய செயலுக்குக் காரணமான உலோகங்களின் அமைப்புகள் எவ்வாறு உள்ளது என்றும் இந்த உலோகத்திற்குள் பிறிதொன்றாக மாற்றிடும் அந்த வீரிய சக்தியைக் கண்டுணர்ந்து நுகர்ந்து அதனின் ஆற்றலைத் தனக்குள் எண்ண வலுவாகக் கூட்டிக் கொண்டான்.

அதைக் கொண்டுதான்
1.தாவர இனச் சத்தை உலோகங்களுடன் கலந்து புடமிட்டு
2.அதன் தரத்தை வலுவுடையதாக்கி
3.மனிதனுக்கு வரும் எத்தகைய தீமையாக இருந்தாலும் அதை நீக்குகின்றான் மெய் ஞானி.

அகத்திற்குள் வளர்த்துக் கொண்ட ஆற்றலின் துணை கொண்டு வேகா நிலை அடைந்து மரணமில்லாப் பெரு வாழ்வு வாழ்கின்றார்கள் அந்த மெய் ஞானிகள்.

Leave a Reply