உயிரான ஈசனுக்கு நல்ல உணர்வுகளைத்தான் கொடுக்க வேண்டும் – கெட்டதைக் கொடுத்தால் கெட்டதை உருவாக்கிவிடும்

உயிரான ஈசனுக்கு நல்ல உணர்வுகளைத்தான் கொடுக்க வேண்டும் – “கெட்டதைக் கொடுத்தால் கெட்டதை உருவாக்கிவிடும்”

 

நாம் சங்கடமாக எண்ணினாலும் துன்பமாக எண்ணினாலும் இந்த உணர்வின் தன்மை உயிரிலே படும்போது இந்த உணர்வின் நிலைகள்தான் நம்மை இயக்கிவிடுகின்றது.

அதனால் இந்த உடலுக்குள் இருக்கக்கூடிய நம் ஈசனுக்கே கெடுதல் செய்கின்றோம். அதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

கோபமான நிலைகளையோ வெறுப்பான நிலைகளையோ அல்லது ஆத்திரமான உணர்வுகளையோ நாம் சுவாசிக்கும் பொழுது நம் உயிரில் பட்டுத்தான் அதற்குப் பின் வெளியிலே நாம் சொல்கின்றோம்.

யாரைத் திட்டினாலும் முதலில் நாம் தான் அனுபவித்துக் கொள்கின்றோம். கீழே சேறு இருக்கிறதென்றால் அந்தச் சேற்றைக் கையில் அள்ளும் பொழுது முதலில் நாம் அசிங்கப்படுகின்றோம்.

இதைப் போலத்தான் ஒருவன் கெட வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் எடுத்துக் கொண்டால் முதலில் நமக்குள் தான் அந்த உணர்வுகள் சாடி நம் உடலுக்குள் நல்ல குணங்கள் அனைத்துமே கெடுகின்றது.

1.முன் பகுதி தெரியாது

2.பின் பகுதி நம் உடலுக்குள் அழுகிய சரீரமாக உண்டாக்கி

3.அந்த வேதனையின் தன்மையைப் பார்க்கலாம்.

ஏனென்றால் உயிர் பிரம்மம். யாரை ஏமாற்றினாலும் உயிரான ஈசனிடம் ஏமாற்ற முடியாது. நாம் கொடுத்ததைப் பிரம்மமாக்கி நமக்குள் சிருஷ்டித்துவிடுவான்.

மெய் ஞானிகளின் அருள் ஒளியைச் செலுத்தினால் தான் தீமைகளை அகற்றி உயிரான பிரம்மனிடத்தில் மகிழ்ச்சியை ஊட்ட முடியும்.

யார் சங்கடமான நிலைகளைச் சொன்னாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியை நாம் சுவாசித்து இந்த ஒளியினைப் பாய்ச்சும் பொழுது

1.பிறருடைய உணர்வுகள் தீயதாக இருந்தாலும்

2.அதை மாற்றும் ஆற்றல் நமக்குக் கிடைக்கின்றது.

Leave a Reply