மீடியம் பவர் என்றால் என்ன…? மெய்யான சக்தி எது…?

மீடியம் பவர் என்றால் என்ன…? மெய்யான சக்தி எது…?

 

 

சிலர் மீடியம் பவரை – ஆவிகள் வைத்து (MEDIUM POWER) அபூர்வ சக்தி பெறுவதாகச் செய்கிறார்கள்.

 

அதில் நம் எண்ணத்தைச் செலுத்தினால்

1.பிறிதொரு ஆன்மா நமக்குள் வந்துவிடும்.

2.அதனின் ஆசைகளையெல்லாம் நமக்குள் வந்து வெளிப்படுத்தும்.

3.அதே உணர்வுகள் வளர்ந்துவிட்டால் அந்த ஆசையின் தன்மையே நமக்குள் விளைவிக்கின்றது.

 

(அதாவது அதனின் வலுவை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது அந்த ஆன்மாக்கள் நமக்குள் வந்துவிடுகின்றது)

 

ஒரு ஆன்மா மனித உடலுக்குள் வந்தபின் அது எந்த நிலையிலும் வெளியில் வரவே முடியாது. அந்த உடலுடன் இருப்பவர் மடியும் பொழுது தான் அதுவும் வெளியேறும். இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

1.சிலர் வழி தெரியாதபடி புத்தகங்களைப் படித்துக் கொண்டு

2.இதைப் போல் செய்தால் மீடியம்களுடன் தொடர்பு கொண்டு ஆவியுடன் பேசலாம்.

3.அருள் சக்திகளைத் தெரிந்து கொள்ளலாம் என்றெல்லாம் விளையாட்டாகச் செய்து எளிதில் அதற்குள் சிக்கிக் கொள்கின்றார்கள்.

4.பின்பு வெளியில் சொல்ல முடியாதபடி பல அல்லல் பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்

 

நம்முடைய சக்தி எதுவாக இருக்க வேண்டும்?

 

இந்த மண்ணுலகில் நஞ்சினை வென்று விண்ணுலகில் ஒளியின் சுடராக வாழும் அந்த மகரிஷிகளின் உணர்வை நாம் பெறுதல் வேண்டும்.

 

அந்த உணர்வின் தன்மை எடுத்துக் கொண்ட பின் நம் எண்ணம் நம் நினைவு மகரிஷிகளின் அலைவரிசையுடன் அங்கே செல்ல வேண்டும்.

 

மகரிஷிகளின் உணர்வை எடுத்துக் கொண்டால் நாம்

1.மீடியம் (ஆவிகள்) பவர் உள்ள இடத்திற்கு எங்கே சென்றாலும்

2.அது வேலை செய்யாது… இதைப் பார்க்கலாம்.

 

தியானத்தைச் சரியான வழிகளில் செய்து வந்தால் மீடியம் வைத்துச் செயல்படுவோர்கள் “அந்த மீடியம் உணர்வுகள்” என்று அவர்கள் உடலில் இருந்தாலும்

1.அந்த இயக்கச் சக்தி மாறிவிடும்.

2.அது பேசாது. அதனின் உணர்வுகள் செயல்படாது. இதையும் பார்க்கலாம்.

 

ஏனென்றால் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் மீடியமாக்கப்படும் பொழுது இந்த உணர்வு அங்கே விண்ணுக்கே அழைத்துச் செல்லும்.

 

குலதெய்வங்களாக இன்று நாம் நம் ஊரில் வணங்கிக் கொண்டிருப்பதெல்லாம் நம் மூதாதையர்களின் உயிராத்மாக்கள் தான்.

 

அவர்கள் உடலை விட்டுச் சென்ற பின் அவர்கள் எண்ணங்களை எடுத்தால் அவர்கள் இங்கே நம் உடலுக்குள் வந்து அருளாடுவார்கள். அதைப் பார்க்கலாம்.

 

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட்டு அருள் மகரிஷிகளின் உணர்வுடன் ஒன்றுவோம். அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நாம் பெறுவோம்.

 

நம்முடைய குல வழியில் வந்த மூதாதையர்களை விண் செலுத்துவோம். மூதாதையர்களின் உயிராத்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்திற்கு அனுப்பி அவர்கள் உடல் பெறும் உணர்வின் சக்தியைக் கரைத்திடல் வேண்டும்.

Leave a Reply