அகஸ்தியன் “பாகமண்டலத்தில் அமர்ந்து” பெற்ற அகண்ட அண்டத்தின் ஆற்றலை நாம் பெறவேண்டும்
உலக யுத்தம் வந்தால் அணுகுண்டு ஹைட்ரஜன் குண்டுகளை வெடிப்பார்கள். அதனால் இரு மடங்கு மின் உற்பத்தியாகும் நிலை ஏற்படும்.
அந்த அணுக்கதிரியக்கங்கள் பிரபஞ்சத்தில் மோதி எல்லாக் கோள்களும் அதை எடுத்து அது உமிழ்த்தும் போது
1.சூரியன் அருகிலே போனதும் மோதி
2.இரு மடங்கு காந்தத்தை உற்பத்தி செய்யப் போகின்றது.
3.அந்த மாதிரி இயக்கச் சக்தி வரும் பொழுது நம் உயிரின் துடிப்பு அதிகரிக்கும்.
4.உடலில் உள்ள அணுக்களின் துடிப்பு அதிகரிக்கும்.
நம் உணர்வின் தன்மை மடிந்து போகும் நேரத்திலே நாம் நம்மைக் காக்க வேண்டும் என்றால் அந்த அகஸ்தியனின் உணர்வை எடுத்தே ஆக வேண்டும்.
எப்படி வராகன் தீமையைப் பிளந்ததோ அந்த அருள் ஞானிகளின் உணர்வைச் சேர்த்து விஷத் தன்மைகள் நமக்குள் வராது பிளந்து பழகவேண்டும்.
சொல்வது லேசாகத் தான் தெரியும். இதைக் கண்டுபிடித்து அர்த்தத்தைக் கொண்டு வர வேண்டும் என்றால் உங்களுக்கு ஆயுள் பத்தாது.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் சக்தியின் உணர்வுகள் கொண்டு அகஸ்தியன் உணர்வைக் கவரும்படி செய்தார்.
பாக மண்டலத்தில் அகஸ்தியன் அமர்ந்த இடத்தில் என்னையும் (ஞானகுரு) இருக்கச் செய்தார் குருநாதர். அங்கே மேலே தண்ணீர் இருக்கும். ஆனால் கீழே அடிவாரத்தில் நீர் கிடையாது. மேலே ஊற்றுகள் உண்டு.
மேகங்கள் கூடி வருவதை நுகர்ந்து அதை நீராக மாற்றுகின்றது. அதனால் தான் அகஸ்தியனுக்கு நீர் சக்தி வருகின்றது. நீர் சக்தி வருவதனால் ஜீவ சக்தியை அவனால் பெற முடிந்தது.
இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவாகின்றது அகண்ட அண்டம் ஆதியிலே எப்படி உருவானது என்று அகஸ்தியன் கண்டுணர்ந்த உண்மைகளை அங்கே அமர்ந்து தியானிக்கும்போது அறிய முடிந்தது. குரு அருளால் அதைக் கண்டுணர முடிந்தது.
1.அகஸ்தியன் கண்டுணர்ந்த அந்த உணர்வின் அறிவு தான்
2.எனக்குள்ளும் புகுந்து இத்தகைய நிலைகளை எல்லாம் அறிய முடிந்தது.
இதைப் போல நீங்களும் அறிந்து தீமைகளைப் பிளந்து அந்த “அகஸ்தியனின் அருள் ஒளிகளை” உங்களுக்குள் விளைய வைத்துப் பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும்.
அகஸ்தியன் அருள் சக்தியை எடுத்தால் தான் நம்மைக் காக்க முடியும்.