மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம் – “நீங்கள் எல்லாம் மகரிஷிகளாக வேண்டும்”

ஞானி, மகரிஷி

 

மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம் – “நீங்கள் எல்லாம் மகரிஷிகளாக வேண்டும்”

 

வைரம் தனக்குள் நஞ்சினை அடக்கி அது தன் பிரகாசமான நிலைகளை வெளிப்படுத்துகின்றது. இதைப் போல் தான்

1.மகரிஷிகள் அனைவரும் நஞ்சு கொண்ட உணர்வுகள் எதுவாகினும்

2.அதனை அடக்கித் தன் உயிருடன் ஒன்றிய

3.ஒளியின் சரீரமாக என்றும் நிலைத்துள்ளார்கள்.

 

அத்தகைய ஞானிகள் இன்னொரு மனிதனின் ஈர்ப்புக்குச் செல்லாது தன் உணர்வின் தன்மையைத் தன் நிலை அடைந்து உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாகச் சப்தரிஷி மண்டலமாக திகழ்ந்து கொண்டுள்ளார்கள்.

 

ஒளியின் உணர்வாக அந்த அருள் ஞானிகள் உடலிலிருந்து வெளிப்பட்ட அந்த உணர்வின் சத்தை நாம் கவர வேண்டும் என்றால் நமக்கு அத்தகைய வலு வேண்டும்.

 

சாதாரணமாக ஒரு நூலை வைத்து ஒரு கடினமான பொருளைத் தூக்குவோம் என்றால் அது அறுந்துவிடுகின்றது.

 

இதைப் போல சாதாரண மக்களாக இருக்ககூடிய நாம் ஞானிகள் மகரிஷிகளின் மிகச் சக்திவாய்ந்த எண்ணங்களை அவர்களின் உணர்வுகளை

1.நம் எண்ணத்தால் கவர வேண்டும் என்றால் அது முடியாத காரியம்.

2.நம்முடைய எண்ணத்திற்கு வலு இல்லை.

3.அது செயலற்றதாக ஆகிவிடுகின்றது.

4.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற நம் எண்ணத்திற்கு வலிமை வேண்டும்.

 

ஒரு சிறு கல்லாக இருந்தால் அதை ஒரு மனிதன் தூக்கிவிடுவான். பெரும் கல்லாகும் பொழுது அவனால் தூக்க முடியாது. ஆனால் பலரும் சேர்ந்தால் அதை எளிதாகத் தூக்க முடிகிறது.

 

ஒரு நூல் நிலையாக இருப்பினும் பல நூல்கள் கொண்டு அதை ஒருக்கிணைந்து கயிறாகத் திரிக்கும் பொழுது அந்தக் கயிறால் ஒரு கடினமான பொருளையும் தூக்கிட முடிகின்றது.

 

இதைப் போலத்தான் நாம் அனைவரும் சேர்ந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எல்லோரும் பெறவேண்டும் என்ற ஏக்க உணர்வை கூட்டுத் தியானங்களில் தூண்டச் செய்கிறோம்.

 

1.அந்த உணர்வால் உந்தச் செய்து தியானிக்கச் செய்து

2.அவ்வாறு தியானிக்கும் பொழுது தான்

3.படர்ந்திருக்கும் அருள் ஞானியின் உணர்வை

4.நம் உடலின் அருகே கொண்டு வர முடியும்.

 

ஆலயங்களில் உள்ள பெரும் தேரை நாம் வடம் பிடித்து இழுக்கப்படும் பொழுது பலரும் ஒருக்கிணைந்த நினைவுடன் தேரை இழுத்தால்தான் அது எல்லை வந்து சேரும்.

 

ஒருவர் தெற்கே ஒருவர் கிழக்கே ஒருவர் மேற்கே ஒருவர் வடக்கே என்று அந்த வடத்தை இழுத்தால் அந்தத் தேர் எல்லை வந்து சேராது.

 

இதைப் போல் தான் நாம் அனைவரும் ஒருக்கிணைந்த நிலைகள் கொண்டு

1.அந்த மகரிஷிகளின் நினைவலைகளைக் குவித்து

2.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்று உங்களை எண்ணச் செய்கிறோம்.

 

நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உங்கள் உயிரை ஈசனாக மதித்து

1.ஈசன் வீற்றிருக்கும் இந்த ஆலயத்திற்குள்

2.மகரிஷிகளின் அருள் சக்தி அது கிடைக்க வேண்டும்

3.அந்த ஆலயம் புனிதமாக வேண்டும்

4.அதற்குள் இருக்கும் நல்ல குணங்கள் தெளிந்திட வேண்டும்

5.அந்தத் தெய்வ நிலைகள் அங்கே வளர வேண்டும் என்று

6.உங்களை நான் தியானிக்கின்றேன்.

 

உங்களுக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு நீங்கள் எண்ணி ஏங்கும் பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று உங்களை நான் எண்ணும் பொழுது அந்தச் சக்தியின் தொடரை நீங்கள் பெற முடிகின்றது. கவர முடிகிறது.

 

இன்று டி.வி.யோ மற்ற சக்தி வாய்ந்த எதுவாக இருந்தாலும் அதைக் கவர்வதற்கு “ஆன்டெனா” வைத்துள்ளார்கள்.

 

அதனுடன் சக்தி வாய்ந்த இயந்திரங்களையும் நுண்ணிய கருவிகளையும் பொருதி அதன் துணை கொண்டுதான் இந்த ஆன்டெனா தனக்கு முன் இருக்கும் மிகச் சக்திவாய்ந்த அலை வரிசைகளைக் கவர்கின்றது,

 

அவ்வாறு ஆன்டெனா கவரும்போது நிசப்தமான நிலைகளிலும் சீராகவும் திரைப்படங்களில் காண்பது போல் அந்த அலைகளை ஒருமித்த நிலை கொண்டு சீராக நாம் பார்க்க முடிகின்றது.

 

இதைப் போல் தான் எண்ணங்கள் அனைத்தும் ஒருக்கிணையச் செய்கின்றோம். நீங்கள் அதைப் பெறுவதற்காக

1.உங்களை நான் தியானிக்கும்போது

2.நீங்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று நான் தியானிக்கும் பொழுது

3.அந்தச் சக்திகளை நீங்கள் பெற முடிகிறது.

 

நீங்கள் ஒவ்வொருவரும் குருநாதர் காட்டிய அருள் வழியில் மகரிஷிகளின் அருள் சக்தியால்

1.உங்களை அறியாது சேர்ந்த தீமைகள் அகல வேண்டும்

2.பொருளறிந்து செயல்படும் திறன் நீங்கள் பெறவேண்டும்.

3.உயிரான ஈசனுக்கு நீங்கள் எண்ணும் உயர்ந்த எண்ணங்கள் அது மகிழ்ச்சியூட்டும் செயலாக வளர வேண்டும்.

4.அந்த உணர்வின் தன்மை உங்கள் உடல் முழுவதும் படரவேண்டும்

5.உங்கள் உடலுக்குள் மனிதனாக உருவாக்கிய மகிழ்ந்திடச் செய்யும் அந்த ஆற்றல்மிக்க நல் உணர்வுகள் அனைத்தும் சீராக விளைந்திட வேண்டும்

6.அது நல்ல வலுவின் தன்மை அடைய வேண்டும்.

7.என்றுமே உங்களுக்குள் மகிழ்ச்சி நிலைத்திட வேண்டும்

8.தீமைகள் வரும்போது அதை போக்கிடும் ஆற்றல்கள் நீங்கள் பெறவேண்டும் என்ற

9.இந்த நிலையில் தான் உங்களை நான் தியானிக்கின்றேன்.

 

அதே சமயம் “நீங்களும்…” மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணும் பொழுது உங்களுக்கு முன் காற்றிலே படர்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருளாற்றல் மிக்க இச்சக்திகளைக் கவர முடிகிறது.

 

அவ்வாறு கவரும் பொழுது ஒவ்வொருவருடைய ஆன்மாவின் நிலைகளிலும் மகரிஷிகளின் அருள் சக்தி வந்து கலக்கின்றது.

 

இதை நீங்கள் சுவாசிக்கும் பொழுது உங்களுக்குள் அந்த அருள் ஞானியின் உணர்வைச் சேர்ப்பிக்கும் நிலையாக அமைகின்றது.

 

அதற்குத்தான் இத்தகைய “கூட்டுத் தியானங்களை” அமைப்பது.

 

கூட்டுத் தியானத்தின் மூலம் அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் சக்திவாய்ந்ததாக அதை இணையச் செய்த பின்

1.உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் எந்த நேரமும்

2.நீங்கள் எண்ணும் பொழுதெல்லாம்

3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவீர்கள்.

4.உங்களுக்கு அந்தத் தகுதியைத்தான் ஏற்படுத்துகின்றோம்.

Leave a Reply