தினசரி உபதேசம்

ஐக்கியத் தொடர் ஜெனிப்பினுள்ளே… ஐக்கியமாகிவிடு ஈஸ்வரபட்டாய குருதேவா – ஈஸ்வரபட்டர்

ஒவ்வொரு மதத்தவரும் ஆண்டவனை அவரவர்கள் உணர்ந்த நிலையில் உலகிற்கு உணர்த்தி வந்தார்கள். அனைத்து ஆத்மாக்களுக்குமே நல்லுணர்வு பெற வேண்டுமென்று அவர்களை அறியாமலேயே அவர்களுக்குள்ளும் ஓர் எண்ண நிலை ஓடிக்கொண்டுதான் உள்ளது.
1.ஆனால் அவரவர்கள் வளர்ந்த நிலையினால்
2.அந்த நல் உணர்வுகளைச் செயல்படுத்த முடியவில்லை.

பல காலமாய் நல்லுணர்வு கொண்ட சப்தரிஷிகளும் பல மகான்களும் எண்ணங்களில் பக்தியைச் செலுத்தியும் இன்றளவும் செயல் கொண்டுள்ளார்கள்.

ஆனால் இம் மகான்கள் எல்லாம் ஏன் பிறப்பில் வந்து செயலாக்குவதில்லை…?

சப்தரிஷியாய் சகலத்துடன் கலந்திட்ட ஒளி பிம்ப சக்தி பூண்ட ஆண்டவன்களெல்லாம் பிறப்பில் வருவதில்லை. ஏனென்றால் பிறப்பில் வரும் பொழுதே இவ் ஆண் பெண் என்ற இச்சையில்… ஆசையில் உட்பட்டால் அவர்கள் பெற்ற சக்தி தடைப்படுகிறது.

1.ஒவ்வோர் ஆத்மாவும் பிறப்பிற்கு வரும் பொழுது
2.முன் பிறப்பு நிலை மறைக்கப்படுவது இந்த இச்சை நிலையினால் தான்.

பிறப்பிற்கு வந்து விட்டால் முன் ஜென்மத்தில் முந்தைய நாட்களில் எத்தனை சக்தி பெற்றிருந்தாலும் “பிறப்பு…” என்று ஆசைப்பட்டவுடனே பெற்ற பலன் சிதறுண்டு இவ்வுலக ஆசையில் சிக்குண்டு விடுகிறது. அதனால்தான் எம் மகான்களும் பிறப்பில் வந்து பிறப்பதில்லை.

ஈஸ்வரப்பட்டரின் வாழ்க்கை நிலையை உணர்த்தி வந்தேன்.

பதினாறாவது வயதில் ஈஸ்வரப்பட்டர் என்ற நாமம் கொண்ட உடலில் ஒரு மகான் செயல் கொண்டார். அவர் பழனி ஸ்தலத்தில் சில நிலைகளை வெளிப்படுத்தினார் “பைத்தியக் கோலம் பூண்டு…!”

பல அன்பர்களின் இல்லத்தில் வைத்திய முறையை உணர்த்தியும் சில வாழ்க்கைக்குகந்த செயல்களைச் செய்வித்தும் அவ்வாத்மாக்களை ஞானம் பெற்றிட ஈர்க்கப் பார்த்தார்.

அந்த நிலையில் அவர்களுக்கும் பல ஆசை நிலைகளையூட்டி இவ் உலக மக்களின் பேராசையான “தங்கம்” செய்விக்கும் முறையெல்லாம் இரசமணியின் மூலமாய் உணர்த்தி அவர்களின் ஆத்மா இவ்வாசையின் பிடியில் சிக்குண்டு அல்லல் படுவதையும் உணர்த்திட்டேன்.

1.எம்மை ஒரு கருவியாக்கி எம்மால் அடையும் பலனைப் பற்றித் தான் விரும்பினார்களே தவிர
2.அழியாத பொருளான ஆத்மச் செல்வத்தை யாரும் விரும்பவில்லை.

பல இல்லங்களில் ஈஸ்வரப்பட்டரின் உடல் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்தி ஞானத்தைப் போதிக்க முயன்றோம்…
1.எம்மிடமுள்ள வித்தை என்ன…?
2.அதனால் பெறப்போகும் பயனென்ன…?
3.பயன் என்பதையே அழியப் போகும் பொருளுக்காக எண்ணிவிட்டார்களப்பா…!

அந்நிலையில்தான் வேணுகோபால நாயகனையும் (ஞானகுரு) பிடித்தேன். அவனது முன் ஜென்மத்தில் பல சக்தியைப் பெற்றிருந்தான். எம்மிடமும் தொடர்பு கொண்டிருந்தான்.

அஜ்ஜென்ம ஆசையிலிருந்து விடுபடாமல் வேணுகோபால பிம்ப உடலைக் கொண்ட ஜென்மத்திற்கும் வந்தான். அவனின் ஆத்மாவை அதே பழனி ஸ்தலத்திலேயே பல இன்னல்களுக்கு உட்படுத்தினேன்.

மற்ற ஆத்மாக்களாய் இருந்தால் இன்றைய இக்கலியில் மீளுவது கடினம். பல இன்னல்களைத் தந்துதான் அவனை ஞானத்தின் வழித்தொடர் அறிய வைத்தேன்.

1.பல காலமாய் இவ் இன்னலில் இருந்த பிறகுதான் அவனை அதிலிருந்து ஜெயிக்க வைத்தேன்
2.பல ஆசை நிலைகளையும் ஊட்டி விட்டேன்
3.இவ்வாத்மாவையே முடித்துக் கொள்ளலாம் (தற்கொலை) என்னும் சங்கட நிலையையும் ஊட்டிவிட்டேன்.

பல ஊர்களுக்கு அலையவிட்டு ஒவ்வோர் ஆத்மாக்களின் எண்ண நிலை ஆசை நிலை அனைத்தையும் அறியச் செய்து அவ் வேணுகோபால சாமியை ஒரு கருவியாக்கி பல சக்திகளை வெளிப்படுத்தி பல ஆத்மாக்களுக்கு ஞான வழித் தொடர் பெறும் நிலையை எல்லாம் செயலாக்கினேன்.

அந்த நிலையிலேயே எமக்குச் சிஷ்யனாக்கி… அவனையே எம் எண்ணத்தின் செயலாக்கிடலாம் என்பதனை உணர்ந்து ஈஸ்வரப்பட்டரின் உடலைப் பழனியிலேயே விட்டுப் பிரிந்தேன். அவ்வுடல் இன்றும் சமாதியில் உள்ளது.

ஈஸ்வரப்பட்டரின் உடலில் இருந்து பிரிந்து வேணுகோபாலின் மூலமாய் இவ்வுலகத்தின் ஒரு பாகத்தில் சில நிலைகளை உணர்த்தினேன்.

எம்மைப் போல் உள்ளவர்களின் நிலையெல்லாம் ஒவ்வொரு ரூபத்திலும்… மனித ஆத்மாக்களை ஞான வழியில் ஈர்க்க பல செயல்களைச் செய்விக்கின்றோம்.

1.அனைத்து ஆத்மாக்களுமே எமக்கு ஒன்றுதான்…!
2.எம் செயலை வெளிப்படுத்திட உடல் ஆத்மா ஒன்று தேவை.
3.எம் செயலை ஈர்க்கும் ஞானத்தின் சக்தியைத்தான் எம் செயலுக்குகந்த சக்தியாகச் செயல்படுத்த முடியும்.
4.அதன் வழி வருவோர் அனைவரும் அவர்கள் வேறல்ல யான் (ஈஸ்வ்ரபட்டர்) வேறல்ல என்ற நிலையில் ஐக்கியப்பட்டே
5.எம் செயல் நிலை இவ்வுலகினில நடந்திடும்.

ஒரு நாளைக்கு உயிரான ஈசனை எத்தனை முறை நினைக்கின்றோம்…?

 

இயற்கையின் உண்மைகளைத் தெரிந்து கொள்வதற்கு குருநாதர் எத்தனையோ இம்சைகளை எனக்குக் (ஞானகுரு) கொடுத்தார். முழுவதும் தெரிந்து கொள்வதற்கு அவஸ்தைப் பட்டேன்.

ஏனென்றால் சாதாரண மக்கள் எப்படிக் கஷ்டப்படுகின்றார்கள்…? அதிலிருந்து மீட்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு செய்தார் குருநாதர்.

பரிணாம வளர்ச்சியில் உயிர் எத்தனையோ உடல்களைக் கடந்து வந்து மனிதனாக உருவாக்கி உள்ளது.
1.ஆனால் அந்த உயிரை மதிக்கமாட்டேன் என்கின்றார்களே…!
2.உடலைத்தான் மதிக்கின்றார்கள்… இந்த உயிரை யாரும் மதிப்பதில்லை.

நாம் எண்ணுவதைத்தான் உயிர் உருவாக்குகின்றது. நாம் எண்ண வேண்டியது எது…? இதையாவது மக்களுக்கு எடுத்துச் சொல்… ஆண்டவனுக்கு இந்தச் சேவையைச் செய்…! என்றார் குருநாதர்.

ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு உடலை ஆளுகின்றது. அப்பொழுது அந்த ஆண்டவனுக்கு நீ என்ன செய்ய வேண்டும்…? என்று உணர்த்தினார் குருநாதர்.

ஈசன் வீற்றிருக்கும் அந்த ஆலயம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும். குருநாதர் எனக்கு உணர்த்திய இந்த வழிப்படி
1.இப்பொழுது இங்கே சொல்லக் கூடிய உபதேசங்களை நீங்கள் நுகரப்படும்போது
2.அந்த ஆண்டவனுக்கு இந்த உணர்ச்சியின் தன்மை இந்த அருள் உணர்வுகள் அபிஷேகமாக நடக்கின்றது.

எது…?

கோவிலில் பாலாபிஷேகம் செய்கின்றார்கள் என்றால் அந்த நல்ல குணத்திற்குப் பாலாபிஷேகம்…! அதாவது நம் நல்ல குணத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணினால் “அந்தப் பாலைப்போல் மனம் பெற வேண்டும்…” என்று நாம் எண்ண வேண்டும்.

ஆனால் வேதனை உணர்வை எடுக்கப்படும் பொழுது பாருங்கள். இந்த வேதனையுடன் தான் அபிஷேகம் செய்வார்கள். இந்த உயிரில் அந்த வேதனை தான் அபிஷேகம் ஆகும்.

வேதனை உணர்ச்சிகள் முன்னாடி இருக்கின்றது. அப்பொழுது பாலாபிஷேகம் செய்தால் என்ன செய்யும்…?
1.விஷத்தில் பாலை ஊற்றினால் என்ன செய்யும்…! பாலும் விஷமாக மாறிவிடும்
2.அது போல் தான் யாம் கொடுக்கும் வாக்கும் பயனற்றதாகப் போகும்.

நான் பல முறை சொல்லியிருக்கின்றேன். இதைப் பயனற்றதாக ஆக்காதீர்கள் என்று. சிரமப்பட்டு சம்பாதித்த சொத்து அந்த வித்தை நீங்கள் காப்பாற்றிப் பழக வேண்டும்.

1.உங்கள் உயிரான ஈசனை நீங்கள் மதிக்க வேண்டும்
2.அவனை மதித்து அந்த அருளை பெற்றீர்கள் என்றால்
3.இந்த உடலுக்குப் பின் நீங்கள் பிறவியில்லா நிலை அடைகின்றீர்கள்.

என்ன தான் ஆபரேஷன் செய்து உடலை நலம் பெறச் செய்தாலும் அடுத்தாற்படி மனிதனின் கடைசி முடிவு எங்கே செல்கிறது…! எடுத்துக் கொண்ட விஷமான உணர்வுக்குத் தக்க… இந்த உயிர்… நீ செய்தாய் அல்லவா…! என்று விஷம் கொண்ட உயிரினங்களில் கொண்டு போய்ச் சேர்த்துவிடும்.

ஆனால் இதை எல்லாம் நமக்குள் தெரியச் செய்வது கார்த்திகேயே… சேனாதிபதி…! பாதுகாக்கக் கூடிய சக்தியாக இருக்கின்றது.

1.அதைச் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றால்..
2.நாம் இன்றைக்கு மனிதன்… நாளைக்கு எடுத்துக் கொண்ட வேதனைக்குத் தக்க வேறு ஒரு உருவம்.

இது போன்ற நிலைக்கு உயிர் மாற்றிவிடும் என்ற நிலைகளில் தான் இத்தனையும் என் உடலில் பாய்ச்சி
1.நீ கெட்டதை நுகரப்படும்போது அது என்ன செய்கின்றது…?
2.எவ்வளவு நேரத்தில் அது உடலில் என்னென்னவெல்லாம் செய்கின்றது…? என்று குருநாதர் காட்டினார்.
3.அவஸ்தைப்பட்டுத்தான் இதை எல்லாம் தெரிந்து கொண்டேன்.

அதற்குப் பின் அதை எப்படித் திருத்துவது என்று குருநாதர் சொன்ன நிலைகளைத் திருப்பி எடுத்து எனக்குள் மாற்றி அமைத்துக் கொண்டேன். அதைத் தான் இப்பொழுது உங்களிடம் சொல்கின்றேன். அதை நீங்களும் எடுத்து மாற்றிக் கொள்ள முடியும்.

உயிரணு தோன்றி உணர்வின் தன்மை முழுமையானது துருவ நட்சத்திரம்…! அதிலிருந்து வரக்கூடிய உணர்வை உங்களுக்குள் செலுத்தி எப்படியாவது அந்தச் சக்தியைப் பெறச் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றேன்.

1.“உயிரான ஆண்டவன் உங்களை ஆண்டு கொண்டிருக்கின்றானே…”
2.அவனுக்கு என் சேவையை நான் செய்வதற்கு
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் அனுப்பி வைக்கின்றேன்.

ஆனால் அப்படி அனுப்பும் அந்த நேரத்தில் நீங்கள் உங்கள் கஷ்டத்தையும் வேதனையையும் எண்ணிக் கொண்டு வந்தால் எப்படி உள்ளுக்குள் போக போடுவீர்கள்…? நன்றாக யோசனை செய்து பாருங்கள்…!

இந்த நாடு… உலகம்… காற்று மண்டலமே நச்சுத் தன்மையாக உள்ளது. அதிலிருந்து நீங்கள் தப்ப வேண்டும் அல்லவா…!

பிறந்துவிட்டோம்… மனிதராக வளர்ந்துவிட்டோம் மனிதனுக்குபின் நாம் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் அதுதான் கடைசி நிலை…!

நாம் எண்ணியதை எல்லாம் உருவாக்குபவன் உயிர். அது ஈசனாக இருக்கிறது. உருவாக்கிய உணர்வு உடலாகி சிவமாகின்றது. உடலான இந்தச் சிவத்திற்குள் தீமையை நீக்கிய உணர்வு மணம் அந்தக் குணம் ஆறாவது அறிவாக இருக்கின்றது.

1.ஆறாவது அறிவின் துணை கொண்டு
2.உயிரான ஈசனிடம் வேண்டி
3.ஒளியான அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எடுத்து
4.உங்களைத் தெளிவாக்கி கொள்ளுங்கள் என்று தான் யாம் சொல்கிறோம்.

அந்தத் தீமையை நீக்கிய உணர்வின் தன்மையை ஒவ்வொரு நிமிடமும் உங்கள் உடலிலுள்ள இரத்தத்தில் கலக்கப்படும்போது அந்த ஒளியான அணுக்கள் உங்களுக்குள் பெருகும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.நமக்கு முன் பரவிக் கிடப்பது பரமாத்மா.
2.எண்ணி எடுப்பது ஆத்மா.
3.இந்த உணர்வின் தன்மை உடலுக்குள் விளைந்தால் ஜீவாத்மா.

விளைந்த உணர்வுகள் எதன் எதனுடன் இணைத்து எதைக் காக்க வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அந்த உணர்வினுடைய ஆற்றலின் நிலைகள்
1.உயிருடன் சேர்த்து நினைவுடன் சேர்ந்து இயக்கக்கூடிய ஆற்றலாக
2.ஒரே இயக்கமாக வருவது நான்காவது – காயத்ரி.

நாம் எண்ணிய உணர்வுகள் அனைத்தும் நமக்குள் அது சிருஷ்டிக்கப்படுகின்றது. ஆனால் உயிரின் ஓட்டத்திற்குள் தான் இது நிலைத்திருக்கின்றது என்ற நிலையை காயத்ரி – சூரியன் என்று சொல்வது. சூரியன் என்றால் நம் உடலுக்கு “உயிர்” சூரியனாகின்றது.

குருக்ஷேத்திரம் என்பது நம் உடலுக்குண்டான நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் இந்தக் குருவான (உயிர்) நிலைகள் கொண்டு அது வளர்த்துக் கொண்ட நிலைகள் தான்.

நாம் எதை எடுக்கின்றோமோ அந்த நிலைக்கொப்ப ஞானத்தை உருவாக்கி அது உபதேசிக்கும் உணர்வின் நிலைகளில் தான் குருவுடன் அணுகி
1.நமக்கு எப்பொழுது துன்பம் வருகின்றதோ
2.அவனை நினைக்கும் பொழுது
3.அந்த ஆற்றல்மிக்க சக்திகள் நமக்கு உறு துணை செய்கின்றது.
4.இதைத் தான் அன்று கீதா உபதேசத்தின் நிலைகள் கொண்டு கண்ணன் சொன்னது.

நாம் கண்ணிலே பார்க்கப்படும் பொழுது “பிறர் செய்யும் தவறின் தன்மை தெரிகின்றது…, உணர முடிகின்றது”, அது உணர்த்திய நிலைகள் கொண்டு தவறு செய்தவரை எண்ணியே என்னை இயக்குகின்றது.

என்னுடைய நல்லதைக் காக்க வேண்டும் என்றால் அவர்களின் உணர்வுகள் என் உடலுக்குள் சென்று தீய விளைவுகள் உருவாக்காதபடி அதைத் தடைப்படுத்த வேண்டும்.

அதைத் தடைப்படுத்தும் நிலைகளுக்குத்தான் கீதா உபதேசம் காட்டப்பட்டது.

1.”ஒ…ம்” என்ற உணர்வின் உணர்ச்சி “ஓ…ம்..கார”நாதம் கொண்டு வானை ஏகுகின்றான்.
2.இந்த உடலுக்குள் இருக்கக்கூடிய பல எண்ண அலைகளை அடக்கி
3.அந்த “ஓ…ம்” என்ற நாதத்தை உயிருடன் சுருதியை ஏற்றி இந்த உணர்வை
4.வலு கொண்டு சுவாசிக்க (இழுக்க) வேண்டும்.

ஏனென்றால் கண்ணன் (கண்களால்) இங்கே தவறு செய்பவர்களைப் பார்க்கும் பொழுது இந்த நிலை ஆகின்றது.

இந்த உடலுக்குக் குருவான உணர்வின் தன்மை கொண்டு அங்கே விண்ணை நோக்கி ஏகி “ஓ…ம்” என்ற ஓங்கார உணர்ச்சியைச் செலுத்தி மனித உடலுக்குள்ளிருந்து வரும் சிற்றலைகளை அடக்கிடல் வேண்டும்.

பின் இந்த உணர்வின் எண்ணத்தை ஓங்கிச் செலுத்தி மெய் உணர்வை ஊட்டிய மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும் என்று விண்ணை நோக்கி ஏங்கித் தியானிக்க வேண்டும்.

அந்த மெய் ஒளியை நமக்குள் சேர்த்து இந்த உணர்வின் தன்மை கொண்டு
1.எங்கே எண்ணித் தாக்க வேண்டும் (எனக்கு இடைஞ்சல் செய்ய வேண்டும்) என்று எண்ணினார்களோ
2.அந்த எண்ணத்தை “அங்கேயே” நிறுத்த வேண்டும்.
3.அம்பைக் கொண்டு அல்ல.
4.புறத்தால் காட்டிய இந்த அம்பை எய்து அந்த உடலைத் தவறு செய்பவர்களை வீழ்த்துவது அல்ல.

உடலை வீழ்த்த வேண்டும் என்ற அந்த உடலுக்குள் நின்று அந்தத் தீமையான உணர்வை இயக்கியதை அந்த ஆற்றல்களை அங்கே நிறுத்தி “அவனை நல்லவனாக்க வேண்டும்”.

(மகாபாரதத்தில்) குருவே எதிரியின் பக்கம் இருந்து அந்த விஷத்தின் தன்மை சிக்கியபின் குருவாகக் காட்டப்பட்ட அந்த மெய் உணர்வின் சக்திகளை எப்படி மீட்டுவது?

குருவிற்குள் தன்னை அறியாது வந்தாலும் அந்தக் குருவின் நிலையை அவரை அறியாது ஏனென்றால் அந்தப் பாசத்தின் வலைகளில் சிக்கும் பொழுது
1.குரு என்ற நிலையில் மரியாதை
2.இங்கே சகோதரர் என்ற மரியாதை
3.ஆனால் அவர்கள் செய்வதோ தவறு.

எனக்குள் இருக்கக்கூடிய வலிமை கொண்டு “அவரை வீழ்த்தி விட்டால்…” நான் யாருக்காக வேண்டி வாழ்கிறேன் என்ற இந்த உணர்வின் சோகங்கள் இங்கே தூண்டும் பொழுது அப்பொழுது தீமையை வளரவிடும் நிலையாகி “நல்லதைக் காக்கும் திறன் இழக்கின்றது”.

மனித வாழ்க்கையில் எடுத்துக் கொண்ட இந்தப் பாசத்தின் நிலைகள் எல்லை கடந்து செல்லும் பொழுது நம்மால் அதை மீட்டும் நிலை அது பலம் இழந்து நம்மையே வீழ்த்தி விடுகின்றது.

இத்தகைய நிலையைத்தான் அர்ச்சுனனுக்கு (அர்ச்சுனன் என்பது சகல வலிமையும் கொண்ட உணர்வின் நிலைகள்) தன் உயிரான நிலைகள் கீதா உபதேசத்தின் தன்மை உபதேசிக்கும் பொழுது
1.நீ எங்கே எடுத்தாலும் என்னிடம் தான் வருகின்றாய்.
2.எதை நினைத்தாலும் அந்தக் கண்ணின் வழி கொண்டு தான் அறிய முடியும்.
3.நீ எதைச் சேர்த்தாலும் அதனின் உணர்வு கொண்டு தான் இந்த உடலிலே விளைகின்றது.
4.நீ எதை நினைக்கின்றாயோ அதனின் நிலைகள் யார் எதைச் செய்தாலும் என்னிடமே நீ வந்து சேர்வாய்.
5.என் நிலையையே நீ அறிவாய் என்று
6.இந்தக் கண்ணின் உபதேசம் கண்ணனின் நிலைகள் கொண்டு காட்டப்பட்டது.

ஆனால் கண்ணின் நினைவுகள் என்னாகின்றது? கண்ணன் வெண்ணையைத் திருடுகின்றான் என்கிறபோது அவர் அறியாத நிலைகள் அங்கே வருகின்றது.

அவர் எடுக்கும் உணர்ச்சிகள் இந்த உடலை ஆட்டிப்படைக்காதபடி இந்தக் கண்ணின் நிலையை அவருடன் ஒன்றி கண்ணா…! என்று நாம் எண்ணும் பொழுது
1.இந்தக் கண்ணின் நிலைகள் உயிருடன் எண்ணி
2.நினைவை நாம் இங்கே புருவ மத்தியில் செலுத்தி
3.நமக்குள் இயக்கிக் கொண்டிருக்கும் குருவான – உயிருடன் அங்கே ஏங்குவது.

அதைத் தான் குருக்ஷேத்திரப்போர் என்பது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஆரம்பத்தில் ஓர் உயிரணு ஓர் தாவர இனத்தை அது உணவாக உட்கொண்டு தான் உடல் பெறுகின்றது.

அப்படி உடல் பெற்றாலும் மற்றொரு தாவர இனச் சத்தை நுகரப்படும் போது இந்த உயிரணுவிற்குள் (உடலுக்குள்) போராட்டமாகி இந்த உணர்வின் நிலைகள் மாறுபட்டு விடுகின்றது. அப்பொழுது
1.அந்தத் தீமையிலிருந்து தற்காத்துக் கொள்ளும் இயக்கமாகத்
2.தன்னைக் காத்திடும் உணர்வுகள் இணைந்து
3.அது புது உணர்வின் தன்மையாக உருவாகின்றது.

ஒரு உயிரணு மற்ற தாவர இனங்களை நுகரும்போது அதனால் ஏற்பட்ட போர் முறைகள் தனக்குள் நோயாக விளைகின்றது.

நோயாக விளைந்தாலும் இரண்டறக் கலந்து அது உணர்வின் ஞானமாக விளைந்து அது உடலுக்குள் இணைந்தபின் முதலிலே எடுத்துக் கொண்ட உணர்வின் தசைகள் மாறுகின்றது.

அந்தத் தசைகள் உருமாறும் தன்மையில் அதற்குள் இணைந்த உணர்வின் மணங்கள் (புது) எண்ணமாகி அது எவ்வாறு இணைந்து கொண்டது என்ற நிலையை வியாசக பகவான் நான்காயிரம் ஆண்டுகளுக்குள் தெளிவுபடுத்தியுள்ளார்,

அன்று எழுத்தறிவு கிடையாது. ஆனால் அவர் சந்தர்ப்பம் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் கண்ட உண்மைகளை தனக்குள் நுகர்ந்தறிந்து வெளிப்படுத்தினார்.

மேரு என்ற மலையை மத்தாக வைத்து வாசுகி என்ற பாம்பைக் கயிறாக வைத்துப் பாற்கடலில் கடையும் போது கடைந்தவற்றில்
1.தான் விழுங்கியது அனைத்தும் தேவர்கள் என்றும்
2.மலமாகக் கழித்ததை அசுரர்கள் என்றும் காட்டினார்.

ஒரு பொருளை உணவாக எடுத்து உட்கொள்ளும் பொழுது உட்கொண்டது அனைத்தும் உடலுக்குள் உருப்பெறும் சக்தியாகவும் அதிலே கலந்து மனிதனாக உருவானபின் கழிவின் சத்தையெல்லாம் மலமாகவும் வெளிப்படுத்துகின்றோம்.

அந்தக் கழிவு நஞ்சின் தன்மை கொண்டது என்றும் அந்த நஞ்சினை உணவாக விழுங்கியது அனைத்தும் நஞ்சு கொண்டதாக மற்றொன்றை அழித்திடும் நிலையாக வருகின்றது என்றும் தெளிவாக உணர்த்தியுள்ளார் வியாசகர்.

உட் கொண்ட நிலைகளில் கழிவுகளை அகற்றும் போது அந்தத் தீமைகளை அகற்றி வெளியே சென்றாலும் அது இன்னொரு தீமையின் நிலைகளை வளர்த்து அதனின் நிலைகள் வளர்ச்சி ஆகின்றது.

இதைத்தான் அசுரர்கள் தேவர்கள் என்றும் நெகட்டிவ் பாசிட்டிவ் என்று காட்டினார். ஒரு இயக்கத்தின் தன்மை வேண்டும் என்றால் “எதிர் நிலை… மறைகள்” இருந்தால் தான் இயக்கும்.

இதைப் போல தான் மனித உடலுக்குள்ளும் ஒரு உணர்வின் தன்மை எதிர் நிலையானால் தான் நம் உடலிலுள்ள அணுக்களும் இயங்கும். ஆனால்
1.எதிர் நிலையான உணர்வின் தன்மைகள் அதிகரித்து விட்டால்
2.நல் நிலையின் தன்மைகள் இங்கே ஒடுங்கி விடுகின்றது.
3.நல் நிலையான உணர்வின் தன்மைகள் எதிர் நிலையாக ஓங்கி வளர்ந்தால்
4.தீமைகளை அது ஒடுக்கி விடுகின்றது.

உதாரணமாக காரத்தை நாம் வாயிலே போட்டால் நம் உமிழ் நீர் அனைத்தும் காணாது போய் விடுகின்றது.

ஆனால் மற்ற பொருளுடன் இந்தக் காரத்தை இணைத்தால் உமிழ் நீரை நன்கு சுரக்கச் செய்து உணவை தாராளமாக உட்கொள்ளச் செய்கின்றது. உமிழ் நீர் சுவை மிக்கதாக மாறுகின்றது.

இதைப்போன்று தான் தீமைகளுக்குள் நல்லவைகள் அதிகரித்து விட்டால் தீமைகள் ஒடுங்குகின்றது. அதாவது தீமை சிறிதாக இருக்கும் போது நன்மைகள் பலவாக இருந்தால் ஒரு நொடியில் அமிழ்த்திவிடும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குழந்தை கருவில் இருக்கப்படும் போது சந்தர்ப்பவசத்தால் தன்னிச்சையாக அந்தத் தாய்க்கு ஒரு இம்சை வருகிறது என்று வைத்துக் கொள்வோம்.

அதில் இருந்து தான் எப்படியும் மீள வேண்டும் என்பதற்காக
1.தனக்குத் தெரிந்த ஞானியின் உணர்வை எண்ணி
2.அவர் அருள் எனக்குக் கிடைக்க வேண்டும்
3.என்னை அறியாது இந்த இருள்கள் நீங்க வேண்டும்.
4.என்னை ஏசுவோர் என்னை இம்சிப்போர் இதை உணரவேண்டும் என்ற எண்ணத்தை ஏங்கிப் பெற்றால்
5.தாய் கருவிலே இருக்கக்கூடிய குழந்தைக்கு இது பூர்வ புண்ணியமாக அமைகின்றது.

ஞானியின் உணர்வுகள் தாயின் உடலுக்குள் சென்று இரத்தத்தில் கலக்கின்றது. அந்த இரத்தத்திலிருந்து வரும் உணர்வை உணவாக உட்கொள்ளும் கருவிலிருக்கக்கூடிய உயிரின் உணர்வுகளுக்கு அந்த அருள் சக்திகள் இணைந்து விடுகின்றது.

ஏனென்றால் கருவுற்ற தாய் தன்னை இம்சிப்போர்களை விட்டு விட்டு அதில் இருந்து மீள வேண்டும் என்று எண்ணுகின்றது. தனக்குத் தெரிந்த எந்த மகரிஷியோ வாழ்க்கையில் அதைக் கண்டுணர்ந்து உணர்ந்த நிலையைத் தனக்குள் எடுக்கப்படும்போது அது நல்ல சந்தர்ப்பம் ஆகின்றது.

அப்பொழுது மகா ஞானிகள் வெளியிட்ட உணர்வை அந்தத் தாய் நுகர நேர்கின்றது. தாயின் கருவில் இருக்கக்கூடிய அந்தக் குழந்தைக்கு அதுவே பூர்வ புண்ணியமாக அமைகின்றது.

அந்தத் தத்துவ ஞானிகள் எதையெல்லாம் பேசினரோ உணர்த்தினரோ அந்த உணர்வுகள் கருவிலே வித்தாக ஊன்றப்பட்டு அந்தக் குழந்தை பிறந்த பின் அது வளர வளர அந்தக் குழந்தையிடம் தத்துவ ஞானங்கள் வளர்கின்றது. அதைச் செயல்படுத்துகின்றது.

அதே சமயத்தில் “பாவிகள்… என்னை இப்படி எல்லாம் பேசுகிறார்களே… இவர்கள் எல்லாம் உருப்படுவார்களா…? அவர்கள் குடும்பம் நாசமாகப் போய் விடும்…! அவர்கள் குடும்பம் இப்படி எல்லாம் போய்விடும்… கண் காது முடமாகப் போய்விடும்…” என்று கர்ப்பமுற்ற தாய் பேசிச் சாபமிட்டால் போதும்.

கீதையிலே கண்ணன் சொல்வது நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்.

அந்தத் தாய் தான் எண்ணியது எதுவோ அந்தச் சாபமிடும் உணர்வைச் சுவாசிக்கும் போது உயிரான ஈசன் “ஓ…” என்று பிரணவமாக்கி “ம்…” என்று தன் உடலுக்குள் ஆக்கும் போது அந்தக் கருவிலிருக்கக்கூடிய குழந்தைக்கு அது உருவாகின்றது.

கருவுற்ற தாய் தன்னை இம்சித்தவர்களுக்கு எதையெல்லாம் செய்ய வேண்டும் என்று எண்ணியதோ அது அனைத்தும் அந்தக் குழந்தைக்குள் பதிவாகி குழந்தை பிறந்து வளரப்படும்போது தன் தாயையே உதைக்கக்கூடிய நிலைக்கு வந்து விடுகிறது.

யாரையெல்லாம் இம்சிக்க வேண்டும் என்று எண்ணியதோ தன் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு இந்த நிலை ஆகி தாயை இரக்கமற்றுக் கொல்வதையும் பார்க்கலாம்.

ஆகவே சந்தர்ப்பத்தால் பிறர் ஏசும் அந்த உணர்வில் இருந்து விடுபட வேண்டும் என்ற நல்ல எண்ணங்களை எண்ணாது பதிலுக்கு அவர்களைக் கடுமையான நிலைகளில் தாக்க வேண்டும் என்ற எண்ண உணர்வுகள் வெளிபட்டபின் இதைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது.

சாபமிட்டுப் பேசும் நிலையில் மீண்டும் செவிப்புலனில் உந்தப்பட்டு இந்த உணர்வின் சக்தி மீண்டும் தன் உடலுக்குள் போனவுடனே கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்து விடுகிறது.

அந்தக் குழந்தை பிறந்த பின்னாடி பார்க்கலாம். எந்நேரமும் பார்த்தாலும் வீட்டில் சண்டையும் சச்சரவுமாக இருக்கும்.

எல்லோரும் வீட்டில் நன்றாக முக்கியமாகப் பேசிக்கொண்டு இருப்பார்கள். அந்த நேரம் இந்தக் குழந்தை “வீல்..!” என்று கத்தும்.

நல்ல நேரத்தில் “சனியன் மாதிரிக் கத்துகிறதே…!” என்று சொல்வார்கள். ஒருவருக்கொருவர் சண்டை மூட்டிக்கொண்டே இருக்கும்.

அப்போது கடவுள் என்ன செய்கின்றார்? இது தான் கீதையிலே கண்ணன் சொன்னது நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய் என்பது.

நம் கண்ணின் நினைவுக்கு வரப்போகும் போது யாரை நினைக்கின்றோமோ அந்த உணர்வின் சத்தை நமக்குள் கவர நேர்கின்றது. அதைச் சுவாசிக்கும்போது அதன் வழி கருவிலிருக்கக்கூடிய குழந்தைக்கும் அது போய்ச் சேர்கின்றது.

இதைத்தான் கண்ணன் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு உபதேசித்தான் என்று ஞானிகள் சொன்னார்கள்.

நமக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு அதற்குண்டான காரணப் பெயரை வைத்து இவ்வாறு இன்னென்ன சந்தரப்பத்தில இவ்வாறெல்லாம் இயக்குகிறது என்ற நிலையைத் தெளிவாக எடுத்து உரைத்துள்ளார்கள் ஞானிகள்.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக ஒரு கண்ணுள்ள புழு பாறை மீது நகர்ந்து செல்கிறது என்று வைத்துக் கொள்வோம். தன் உணவைத் தேடிச் செல்கின்றது.

கண்களால் பார்த்துத் தான் உணவாக உட்கொள்ளும் தாவர இனத்திற்குச் சென்றாலும் சூரியனுடைய ஒளிக் கதிர்கள் சிறிது நேரம் அதிகமாகிவிட்டால் வெப்பம் அதிகமாகிவிடுகின்றது.

பாறை மீது நகர்ந்து செல்கின்றது. நகர்ந்து செல்வதற்கு ஒரு பதினைந்து நிமிடம் ஆகிவிட்டால் பாறை வெப்பமாகிவிடுகின்றது. இந்தப் புழுவின் மெலிதான உடல் தாங்க முடியவில்லை என்றால் “துடிக்கின்றது”.

இதிலிருந்து…, “தன்னைக் காக்க வேண்டும்…” என்ற நிலைகளில் கூர்மையாகத்
1.தாவர இனங்களைப் பார்க்கின்றது.
2.அதே சமயத்தில் இந்தப் பாறைகளையும் பார்க்கின்றது.
3.இந்த வெப்பம் அந்தப் பாறைக்குள் பட்டுக் “கடினமான நிலைகள்” வருவதை நுகர்கின்றது.
4.இந்தப் பாறையைக் கூர்மையாக உற்றுப் பார்த்து
5.இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற உணர்வுகளை அதிகமாக நுகர்கின்றது.

நுகர்ந்த உணர்வுகள் எல்லாம் “ஓ…ம்… நமச்சிவாய” என்று அந்த ஜீவ அணுவாக மாற்றி அந்த உடலாக மாற்றுகின்றது. அதனின் மலங்களை
1.இந்தப் பாறையைப் போன்று கடினமாக வெளிவிடும் அணுக்கள்
2.இந்தப் புழுவிற்குள் உருவாகின்றது.

ஆனாலும் இந்தத் துடிப்பின் தன்மை கொண்டு நுகர்ந்த உணர்வின் அணுக்களான பின் இந்த உடலைப் பிளந்து விடுகின்றது. புழு மடிகின்றது.

புழு கூர்மையாகக் கவர்ந்த உணர்வுகள் உடலிலே விளைந்து உயிரிலே சேர்ந்து அதற்குத்தக்க அடுத்த உடலாக “ஆமையாகின்றது”.

1.எந்தப் பாறையினுடைய வெப்பத்திலிருந்து காக்கப்பட வேண்டும் என்ற உணர்வுகளை எடுத்ததோ
2.(அந்த உணர்வின் சத்து) ஆமையின் ஓடு வலுவாகின்றது.
3.அதற்குள் வெப்பத்தைத் தாங்கும் சக்தி (பாறையைப் போன்று) வருகின்றது.

ஆமையை நெருப்பு இருக்கும் இடத்தில் போட்டுப் பாருங்கள். அந்த வெப்பத்தைத் தாங்கக்கூடிய சக்தி அதற்குண்டு.

இந்த உணர்வின் இயக்கங்கள் “எப்படி வந்தது…?” என்ற நிலையைக் கண்டுணர்ந்தவன் அன்று அகஸ்தியன். அதைத்தான் கடவுளின் அவதாரத்தில் கூர்மை அவதாரமாக ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்றைய விஞ்ஞான அறிவால் உலகில் நச்சுத் தன்மைகள் வந்து கொண்டிருக்கின்றது.

ஏனென்றால் இனி “நாம் யார்…?” என்று ஒருவருக்கொருவர் அடையாளம் தெரிந்து கொள்ள முடியாத நிலை வரும் வாய்ப்புகள் இருக்கின்றது. (ஏற்கனவே 2004 டிசம்பரில் இப்படித்தான் நடந்தது)

அடையாளம் தெரிந்து கொள்ளக்கூடிய அளவிற்காவது நாம் தியானம் எடுத்தாக வேண்டும். இல்லை என்றால் நம்மை நாம் அறிய முடியாது. என் குழந்தை யார்…! என் பிள்ளை யார்…! என்பதை அறியவே முடியாது.

அத்தகைய சூழ்நிலை ஏற்கனவே வந்தாகிவிட்டது.

அணுக்கதிரியக்க நிலையும் கடும் விஷக் கதிரியக்கங்களும் கெமிக்கல் கலந்த குண்டுகளையும் நீரிலும் காற்றிலும் உணவுப் பொருள்களிலும் பல வகையிலும் தூவுகின்றனர்.

இதை போன்ற நிலை வரும் பொழுது மனிதனுடைய சிந்தனை இழக்கும் பொழுது நீங்கள் யாரைத் தேடி எவரிடம் முறையிடப் போகின்றீர்கள்? எந்தக் கடவுள் உங்களைக் காப்பாற்றப் போகிறார் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் உயிரே கடவுள். உங்கள் எண்ணமே இறைவனாகின்றது. இறையின் உணர்வு செயலாக்கப்படும் பொழுது
1.காக்கும் உணர்வு பெற்ற துருவ நட்சத்திரத்தின் உணர்வை
2.உங்கள் உடலுக்குள் இறையாக்குங்கள்
3.அந்த உணர்வைச் செயலாக்குங்கள்
4.வாழ்க்கையில் உங்கள் சிந்தனையைச் சீர்படுத்துங்கள்.
5.இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடையுங்கள்.

இதையெல்லாம் நீங்கள் தெளிந்து கொள்ளுங்கள்.

சும்மா சாமியைப் பார்த்தேன்… சாமியாரைப் பார்த்தேன்… கடவுளைக் கும்பிட்டேன்… அதைச் செய்தேன் இதைச் செய்தேன்…, என்று சொல்லலாம்… எந்தக் கடவுள்…!

நாம் எண்ணும் உணர்வுகள் நமக்குள் வரும் பொழுதுதான் கடவுளாகின்றது. உணர்வின் தன்மை இறையாகிவிட்டால் உணர்வைச் செயலாக்கும் பொழுது அந்தக் குணமே நமக்குள் தெய்வமாகச் செயல்படுத்துகின்றது.

நம் சாஸ்திரங்கள் இதைத் தெளிவாகக் கூறுகின்றது.

உங்கள் எண்ணம் தான் உங்களைக் காக்குமே தவிர…,
1.எண்ணத்தை வைத்துக் காக்கும் உணர்வை எண்ணினால்
2.”உயிர் காக்கின்றது”.
3.அது தான் வசிஷ்டர் பிரம்ம குரு.

வசிஷ்டர் தசரத சக்கரவர்த்திக்குப் பிரம்ம குரு. தீமையை நீக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகரப்படும் பொழுது நம் உடலிலே “தீமையை நீக்கிடும் உணர்வுகள் பிரம்மமாகின்றது”.

அந்தச் சக்திக்குப் பெயர் அருந்ததி என்று காரணப் பெயர் வைக்கின்றார்கள். இதெல்லாம் நாம் தெரிந்து கொள்வதற்காக இப்படிப் பெயர் வைத்துள்ளார்கள் ஞானிகள்.

பத்தாவது நிலை அடையக்கூடிய நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறவேண்டும் என்று ஆசைப்பட்டால் அது நமக்குள் பிரம்ம குருவாகி “அருந்ததி” தீமையை நீக்கிய அந்தச் சக்தி (அது) நமக்குள் உள் நின்று இயக்கும்.

அருந்ததி என்றால் எதன் உணர்வின் தன்மை பிரம்மமாகி நம் உடலாகின்றதோ இந்தப் பத்தாவது நிலை அடையும் அதனுடன் இணைந்து வாழும் சக்தி என்ற நிலைகளைத் தெளிவாக்கப்படுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இராமேஸ்வரத்தில் இராமன் செல்லப்படும்பொழுது சிவலிங்கத்தைப் பூஜிக்க லிங்கத்தை எடுத்து வருவதற்கு ஆஞ்சநேயனை அனுப்பினான்.

ஆனால் அவன் வரக் காலதாமதமாகிவிட்டது. ஆகவே “இராமன் மணலைக் குவித்தான்”. அதைச் சிவலிங்கமாக வைத்து வணங்கினான் என்று காட்டுகின்றார்கள்.

இராமாயணத்தில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதன் உட்பொருள் என்ன?

இராமன் என்றால் நம் எண்ணங்கள். ஆக, எண்ணத்தால் உருவாக்கப்பட்டது இராமேஸ்வரம். நம் மனதைக் குவிக்கும் இடம்தான் “இராமேஸ்வரம்”.

கடைசியில் “நேரமாகிவிட்டது..,” என்று இராமன் என்ன செய்கின்றான்? மணலைக் குவித்து பூஜித்தான்.

எல்லோரும் அன்போடு இருக்க வேண்டும் என்று (நம் எண்ணங்களை) நம் மனதைக் குவித்துப் பழக வேண்டும். மனதைக் குவிக்கவில்லை என்றால் என்னவாகும்?

இரண்டும் சேர்த்து சண்டைப் போட்டுக் கொள்ளும்.

“சிறிது காலமே.., இந்த மனித உடலில் வாழ்கின்றோம்..!” அதற்குள் இந்த மனித உடலில் மனதைக் குவித்தல் வேண்டும். அதாவது எல்லாக் குடும்பங்களும் நல்லது பெறவேண்டும் என்று மனதில் எண்ண வேண்டும்.

ஆனால் இப்பொழுது என்ன செய்கின்றார்கள்? விஷ்ணு பக்தர்கள் சிவனை வணங்க மறுக்கின்றனர்.

சிவனை வணங்குவோர் இராமனை வணங்கினால் அது பாபம் என்றும் இராமனை வணங்குவோர் சிவனை வணங்கினால் அது தோஷம் என்றும் இப்படியெல்லாம் நம்மைப் பிரித்து விட்டனர்.

மதத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு உண்மைகளின் இயக்கத்தை நாம் அறிய முடியாது அரசர்கள் ஆண்ட நிலையில் காலத்தால் தடைப்படுத்தப்பட்டுள்ளது.

ஞானிகளால் உணர்த்தப்பட்ட பேருண்மைகளை நாம் அறிய முடியாதவண்ணம் காலத்தால் அழிந்தே போய்விட்டது.

இன்று அதை யாம் வெளிப்படுத்தினால்.., இது என்ன? “புதிதாக இருக்கின்றது…!” இவர் கடவுளே இல்லை.., என்று சொல்கிறாரே.., என்றெல்லாம் எண்ணத் தொடங்கிவிடுகின்றார்கள்.

இராமேஸ்வரத்தில் இராமன் மணலைக் குவித்ததாக இராமாயணத்தில் காட்டுகின்றார்கள். இராமேஸ்வரத்தில் “மனிதனுடைய பொக்கிஷம்” அத்தனையும் உண்டு.

இராமாயணத்தில் “இராமேஸ்வரம்”, எண்ணத்தின் உணர்வின் தனமையை உயிர் இயக்குகின்றது என்பதை உணர்த்தும் நிலையாக இராமர் தனுசுகோடிக்கு வந்தபின், “பூஜைக்கு நேரமாகிவிட்டது..,” என்று அங்கு இருக்கும் மணலைக் குவித்து சிவலிங்கமாகச் செய்து பூஜை செய்தார்.

“நேரமாகிவிட்டது..,” என்றால் பூஜை செய்ய நேரமாகி விட்டது என்று மற்றவர்கள் சொல்கின்றனர். ஆனால் “இந்த உடலில் காலதாமதமாகி விட்டது..,” என்பது தான் அதனுடைய பொருள்.

நமது உணர்வுகளை ஒருங்கிணைத்துச் சேர்க்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்கு இராமர் மணலைக் குவித்து (மனதைக் குவித்து) சிவ பூஜை செய்தார். சிவலிங்கத்தை பூஜித்தார்.., சிவலிங்கமாக மாற்றினார்.., என்று காண்பித்தார்கள்.

எண்ணங்களைக் குவித்து உருவானதுதான் இராமேஸ்வரம்.

நாம் எண்ணத்தால் பல தீமைகளை அகற்றி உணர்வின் எண்ணங்களைக் குவித்தால் அத்தகைய எண்ணங்களால் உருவானது தான் “உயிரின் ஒளிகள்..,” என்பதை “இராமலிங்கம்..,” என்று காரணப் பெயரை வைத்து அழைக்கின்றனர்.

எதனின் உணர்வைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கின்றதோ அதை நுகர்ந்தால் அந்த உணர்வின் தன்மை அணுவாகி அந்த உணர்ச்சியின் செயலாக நாம் செயலாக்கி அந்த “உணர்ச்சிக்கொப்ப உடலின் ரூபங்கள் ஆனது..,” என்று இராமாயணத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விஞ்ஞான அழிவிலிருந்து மீட்டிடும் நிலையாக கருவில் வளரும் சிசுக்களுக்கு நாம் அருள் ஞானத்தை ஊட்டி உலக ஞானம் பெறச் செய்ய வேண்டும்.

வான்மீகி ஆசிரமத்தில் சீதா கருவுற்றிருக்கும் பொழுது கருவிலிருக்கும் குழந்தைகளுக்கு வான்மீகி ஓதிய உணர்வுகள் சீதாவின் கருவில் வளரத் தொடங்குகிறது.

இராமனைப் பற்றிய உண்மைகளையும் உலக நிலைகளையும் இந்த உலகிற்கே எடுத்துச் சொல்லக்கூடிய நிலைகள் அந்தக் குழந்தைகளுக்கு வந்தது.

இதைப் போல நம் குடும்பத்தில் வரும் அறியாத நிலையும் உலகத்தில் வரும் தீமைகளிலிருந்து மீட்டிடும் அருள் ஞானிகளை நாமும் உருவாக்கிடல் வேண்டும்.

விஞ்ஞானத்தை வெல்லும் மெய்ஞானத்தை உருவாக்கச் செய்யும் அருள் ஞானிகளை உருவாக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் மறைவில் தான் நாமும் வாழ முடியும்.

கருவில் வளரும் சிசுக்களில் இந்த ஞானத்தை வளர்த்துவிட்டால் பேரருளைப் பெறும் ஞானிகளாக அவர்கள் வளரத் தொடங்குவார்கள்.

சீதா பல துன்பங்களை அனுபவித்தாலும் அன்று வான்மீகி இராமனைப் பற்றிய உண்மைகளையும் உலக ஞானத்தையும் சீதாவின் கருவில் வளரும் சிசுக்களுக்கு எடுத்து ஓதினார்.

1.உலகைக் காத்திடும் தன்மையாக ஞானத்தைப் பெறும்படி செய்து
2.ஞானத்தின் உணர்வின் தன்மையைப் போதித்த நிலைகள்
3.அங்கே உருப்பெற்றது தான் லவா குசா என்று உணர்த்தினார்.
4.விஷ்ணுவிடம் சொர்க்கமடைய அதாவது உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெறும் மார்க்கத்தைக் காட்டினார் வான்மீகி.

“இன்றும்…,” உலகில் பரவிக் கொண்டிருக்கும் அந்த “மெய்ஞானியின் உணர்வுகள் – லவா குசா” தனக்குள் எடுத்து அந்த அருள் ஒளியை நமக்குள் வளர்க்க வேண்டும் என்று உணர்த்தினார்.

இருளை அகற்றிய அருள் உணர்வை நமக்குள் சேர்ப்பிக்கும் சக்தியின் தன்மையைத் தான் அன்று வான்மீகி காவியமாகப் படைத்துள்ளார்.

1.மனிதன் எப்படி வாழ வேண்டும்?
2.உணர்வுகளும் எண்ணங்களும் எப்படி வருகின்றது?
3.நாம் நுகரும் (குணங்கள்) சுவையின் உணர்ச்சிகள் எப்படியெல்லாம் நம்மை இயக்குகின்றது? என்ற உண்மைகளைக் காவியமாகக் காட்டினார்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.பல தாவர இன சத்துக்களை எடுத்து வளர்ந்து மனிதனாக வளர்ந்தாலும்
2.உயிருடன் ஒன்றி உணர்வுகள் ஒன்றாகி
3.வேறொரு உடலை உருவாக்குகின்றது.
4.இது இயற்கையின் நியதி.

ஆனால் அதே சமயத்தில் எந்தத் தாவர இனத்தை எடுத்து உணர்வுகள் உட்கொண்டதோ மீண்டும் பூமிக்குள் அடைகிறது என்று இராமாயணத்தில் தெளிவாகக் கூறுகின்றது.

எதன் உணர்வைத் தன்னுடன் சேர்த்ததோ அது உயிருடன் ஒன்றி அந்த உணர்வுக்கொப்ப அது மாறுகின்றது.

சீதாவோ தன் கணவனின் உணர்வு கொண்டு கலக்கமில்லாத உணர்வைத் தனக்குள் எடுத்துக் கொண்ட பின்
1.எந்த உயிரின் பண்பைத் தனக்குள் எடுத்ததோ
2.அந்தச் சொர்க்கம் என்ற நிலைகளைத் தன் உணர்வின் உறுதி கொண்டு
3.ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலத்தில் இணைந்தது என்பதை
4.சொல்லாமல் சொல்லிக் காட்டுகின்றனர்.

சீதா என்ற நிலை இராமனிடம் பட்ட துன்பங்களும் அது எண்ணாதபடி அதன் உணர்வின் தன்மை பெறப்படும் பொழுது எத்தனையோ இன்னல்களை இராவணனிடத்தில் பட்டது.

சீதா பட்ட இன்னல்கள் இன்னது என்று சொல்ல முடியாது.

அத்தனை அவஸ்தைகளையும் தாங்கிக் கொண்டு உயிரின் உணர்வின் தன்மையை உண்மையை நிலைப்படுத்திய அந்த உணர்வுகள்
1.இந்த உடலை விட்டுச் செல்லும் உயிரான்மா
2.சொர்க்கத்தை அடைந்தது.
3.இந்த உடல் என்ற சீதா பூமிக்குள் மண்ணைப் பிளந்து
4.மீண்டும் மண்ணுடன் மண்ணாக மற்றவைகளுக்கு உணவாக மக்கியே விட்டது.

இதை இராமாயாணத்தில் தெளிவாகக் காட்டுகின்றனர்.

அதை இன்னும் நமக்குப் பக்குவப்படுத்தி ஞானிகள் காட்டிய நிலைகளை அவரவர்கள் சுயநலன்களுக்காக அரசர் வாழ்ந்த நிலைகளில் சித்தரித்துவிட்டார்கள்.

தன் அரசு தன் ஆட்சி என்ற நிலைகளில் மக்களைத் தனக்குள் அடிமைப்படுத்தப் பயன்படுத்திக் கொண்டார்கள். உண்மையின் உணர்வை நாம் அறியப்படும் நிலைகள் காலம் காலமாக மறைந்து விட்டது.

இப்பொழுது அதை குருநாதர் காட்டிய வழிகளில் யாம் வெளிப்படுத்தினாலும் இது என்ன புதிராக இருக்கின்றது என்ற எண்ணத்தில் பார்க்கின்றார்கள்.

இராமன் என்பது எண்ணங்கள். சீதா என்பது சுவை. சீதாராமன் தான். இராமாசீதா அல்ல. இராவணன் என்பது நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் எடுத்துக் கொண்ட ஒலிகள் (நாதங்கள்). லவ குச என்பது நஞ்சை வென்று உயிருடன் ஒன்றி ஒளியான “விண்ணுலக ஆற்றல்”

நாம் கவர்ந்து கொண்ட உணர்வின் சுவை உயிரிலே பட்டபின் நாதங்களாக… உணர்ச்சிகளாக… எண்ணங்களாக அது எப்படி இயக்குகின்றது” அந்தந்த எண்ணத்தின் இயக்கமாக நம் வாழ்க்கை எப்படியெல்லாம் அமைகிறது? பல பல மாற்றங்கள் ஆகிக் கொண்டேயிருக்கின்றது.

ஆக மனித உடலின் கடைசி முடிவையும்… உயிராத்மா அடைய வேண்டிய எல்லையையும்… இராமாயணத்தில் வான்மீகி தெளிவாகக் காட்டியுள்ளார்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இப்போது நமக்குள் எடுத்து கொண்ட உணர்வுகள் நல்லதாக வேண்டும் என்று எண்ணினாலும் பிறருடைய கஷ்டங்கள் பிறருடைய நஷ்டங்கள் பிறருடைய தொல்லைகள் எல்லாம் சேர்க்கப்படும்போது நம் உடலுக்குள் என்ன செய்கின்றது?

அரக்க உணர்வுகள் அதிகமாகின்றது.

அப்போது நமக்குள் சந்தோஷம் என்ற சீதாவைச் செயலற்றதாக மாற்றுகின்றது. நமக்குள் என்ன செய்கின்றோம்?

(உயிர் – விஷ்ணு; உயிரின் காந்தம் – இலட்சுமி; இராமன் – எண்ணங்கள்; சீதா என்றால் சுவை – மகிழ்ச்சி; உடல் – இலங்கை; உடலின் இச்சை – இராவணன்)

1.ஒவ்வொரு நாளும் நாம் தேடிக்கொண்ட உணர்வுகள் பலவானாலும்
2.இலங்கேஸ்வரன் (இராவணன்) இந்த உடலின் இச்சைகள் தனக்குள் ஆகி நல்லதை உருவாக்காதபடி
3.நமக்குள் நல்லதைச் சிறைப்பிடித்துக் கொள்கிறோம்.
4.சீதா என்ற அந்த நல்ல குணத்தைச் செயலற்றதாக மாற்றுகின்றது.

அப்பொழுது நாம் என்ன செய்கின்றோம்? இராமன் என்ன செய்கின்றான்? இராமன் சீதாவை எண்ணிச் செயல்படுத்தும்போது சீதா என்ன செய்கின்றது.

1.தன் கணவனின் உணர்வின் தன்மையை எண்ணி
2.அதை அதே உணர்ச்சியின் தன்மை கொண்டு
3.உயிரான விஷ்ணுவிடம் ஏங்குகின்றது.

இந்த அரக்கனோ தீமையின் உணர்வு கொண்டு நான் வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வை எண்ணி அவனும் (உயிரான) விஷ்ணுவை நோக்கித் தவம் செய்கின்றான்.

அவன் உணர்வு அதிகமாக்கப்படும் போது அவன் உடலுக்குள் நல்ல குணங்களைக் கொல்கின்றான். இந்திரலோகத்தில் (உடலுக்குள் அணுக்கள் உருவாகும் இடத்தில்) இவன் எடுத்துக் கொண்ட உணர்வு எதிர்மறையாக மனிதனின் ஆறாவது அறிவை இழக்கச் செய்துவிடுகின்றான்.

அப்பொழுது சீதா எண்ணிய அந்த உணர்வின் தன்மை வரப்படும்போது
1.அந்த உணர்ச்சியின் எண்ணங்கள் கணவருக்குத் தூண்டப்பட்டு
2.அதைக் காக்கும் படைகலன்களாக வருகின்றது.
3.ஆகவே இதையெல்லாம் சேர்த்து “வானரப்படை”.

தான் எண்ணிய உணர்வுகள் வலுவாகி அந்த உணர்வின் தன்மை அந்த உணர்வின் தன்மை பெற்ற பின் தனக்குள் “பாதுகாப்பு” என்ற உணர்வு வருகின்றது.

தீமைகளை நீக்குவதற்காக நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை வலுவான நிலைகள் கொண்டு எடுக்கும்போது நம் உணர்வின் தன்மை எப்படி ஆகின்றது?

நமக்குள் அந்த நல்ல குணத்தைச் சேர்க்கச் சேர்க்க நம் ஆன்மாவில் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள் வானரப்படைகளாகச் சேர்க்கின்றது.

தீமைகளை நீக்கும் நிலையாக தனக்குள் அந்தப் பாதுகாக்கும் நிலைகள் கொண்டு அது போர் செய்து சீதாவை மீட்டும் தன்மை வருகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வெறுப்பு வேதனை கோபம் ஆத்திரம் பயம் என்ற உணர்வுகள் நம் உடலிலே வளர்ந்து விட்டால் சந்தோஷம் என்ற நிலை நமக்கு இல்லை.

தொழிலினாலோ அல்லது குடும்பத்தினாலோ “வேதனைப்படுவோர்; கோபப்படுவோர்; சஞ்சலப்படுவோர்; இன்னும் எத்தனை வகையான நிலைகளில் அவதிப்படுபவர்களிடம் ஒரு சந்தோஷமான செய்தியைச் செய்தால் அவர்கள் மனம் அதற்கு உடன்படுகின்றதா?

இதைத்தான் (தன் உடலிலுள்ள சந்தோஷத்தை) “சீதாவைச் சிறைப் பிடித்தான் இராவணன்…!” என்று இராமாயணத்தில் காட்டுகிறார்கள். சந்தோஷத்தை உருவாக்கும் நிலையைச் சிறைப்பிடித்து அதை நாம் செயலற்றதாக மாற்றுகிறோம் என்று உணர்த்துகின்றார்கள்.

பையன் மேல் அன்பாக இருக்கின்றோம், அவன் சொன்னபடி கேட்கவில்லை என்றால்
1.நான் எண்ணியபடி அவன் நடக்கவில்லை என்று எண்ணி
2.”அவனை உதைத்தால்தான் தீரும்…!” என்ற அரக்க உணர்வு வருகின்றது.

அவனுடைய சந்தோஷத்தில் மகிழ்வதற்கு மாறாக நாம் அந்த நல்ல உணர்வைச் சிறைப் பிடிக்கின்றோம். ஒவ்வொரு நாளும் நம் உடலிலே இத்தகைய நிகழ்ச்சிகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றது.

யாரும் “இல்லை…” என்று மறுக்க முடியாது.

குடும்பத்தில் எவ்வளவு ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தாலும் சில நேரங்களில் அசுர உணர்வுகள் வந்த பின் நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக அது மாற்றி விடுகின்றது.

அதைத்தான் இராவணன் சீதாவைச் சிறைப்பிடித்துச் சென்று விட்டான் என்று இராமாயணத்தில் தெளிவாகவே காட்டுகின்றார்கள்.

சீதாவை (மகிழ்ச்சியை) மீட்டுவதற்காக இராமனுடைய எண்ணங்கள்
வானரப் படைகளை நாடுகின்றது. வானரப் படைக்குத் தலைமை தாங்கி நடத்துபவர் யார்…? சுக்ரீவன்.

சுக்ரீவன் என்றால் துருவ நட்சத்திரம்.

துருவ நட்சத்திரத்தின் துணை கொண்டு அந்த உணர்வின் அலைகளை நமக்குள் பாய்ச்சி நம் உடலுக்குள் இருக்கும் தீமைகளை எப்படி மாற்றிக் கொள்வது என்பதைத்தான் “இராமன் சுக்ரீவன் துணை கொண்டு… சீதாவை மீட்கிறான்” என்று இராமாயணம் காட்டுகின்றது

1.வான் வீதியிலிருந்து வரும் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள் அது தான் “வானரப் படை”
2.அந்தப் பேரருள் பேரொளியை நம் புருவ மத்தியின் வழியாகக் கவர்ந்து
3.நம் உடலுக்குள் செலுத்தி தீமை என்ற உணர்வுகளை நீக்கி
4.அரக்கச் சக்திகளை (அடக்க) மாற்ற வேண்டும் என்று வான்மீகி மாமகரிஷி காட்டுகின்றார்.

இராவணன் இடத்தில் சிறைப்பட்டிருக்கும் சீதா… “எப்படி இருக்கிறாள்..?” என்று ஆஞ்சநேயர் இலங்கைக்குள் உட்புகுந்து பார்க்கின்றார்.

“இலங்கை…!” என்றால் இந்த உடலே ஒரு இலங்கை. அதாவது
1.நம் உடலுக்குள் வேதனை என்ற உணர்வு அதிகமான நிலையில்
2.சந்தோஷமாக இருக்கும் சீதா உடலுக்குள் எப்படி சிறைப்பட்டிருக்கிறது என்று
3..தன் எண்ணத்தால் எண்ணி சீதா எப்படி இருக்கிறது…! என்று அறியும்படி செய்கின்றார்கள்.

யாரை வைத்து…? வானரப் படைகளிலிருந்து வந்த ஆஞ்சநேயனைக் காட்டுகின்றார்கள்.

அதாவது பாராசக்தி குளித்துக் கொண்டிருக்கும் குளத்தில் ஆண்கள் குளித்தால் பெண்களாக மாறி விடுவார்கள் என்று சாபம் இருந்தது.

ஆனால் அந்தக் குளத்தில் ஒரு ஆண் குரங்கு தவறி வரப்படும் பொழுது விழுந்து விடுகின்றது. உடனே அது பெண்ணாக மாறி விடுகின்றது.

அந்தப் பெண் அழகான நிலைகளில் இருக்கப்படும் பொழுது வாயு ஆசைப்படுகின்றான். அதாவது நம்முடைய ஆசைகள் நாம் நுகரும் உணர்வு வாயுவாகி உடலுக்குள் செல்லுகின்றது.

அந்த உடலுக்குள் சென்று உணர்வின் தன்மை நம் “உமிழ் நீராக” மாறும் பொழுது நம் வாய்க்குள் வருகின்றது.

அந்த வாய்வு என்ற உணர்வு ஆசை என்ற உணர்வினுடன் சேர்த்து உமிழ் நீராக மாறும் பொழுது மற்ற உணர்வுடன் சேர்க்கப்பட்டு அது “இந்திரீகமாக” மாறுகின்றது. இந்திரன் அதனின் அழகைக் கண்டு இரண்டாவதாக ஆசைப்படுகின்றான்.

நாம் நுகர்ந்த உணர்வுகள் உமிழ் நீராக மாறி இரத்தத்தில் (இந்திரீகம்) எப்படிக் கருவாக உருவாகின்றது? அதன் தன்மை எப்படி உருவாகின்றது” என்பதனை இராமாயணக் காவியத்தில் தெளிவாகக் கூற்படுகின்றது.

“ஆஞ்சநேயன்…” என்று இப்படிக் காரணப் பெயர் வைக்கின்றார்கள். ஆனால் விளக்கம் சொல்லாது விட்டார்கள்.

நீங்கள் இராமாயணக் காவியத்தை இப்பொழுது படித்துப் பாருங்கள்.
1.முன்பு நீங்கள் படித்த நிலைக்கும்
2.இப்பொழுது யாம் (ஞானகுரு) சொல்லும் நிலையும்
3.இராமாயணத்திற்குள் “எவ்வளவு மூலக் கூறுகள் பொதிந்துள்ளது…!” என்பதை நீங்கள் அறிய முடியும்.

நம் எண்ணத்தால் உருவாக்கப்பட்ட உணர்வுகள் நம் உடலிலே எப்படி இயங்குகின்றது என்பதனை
1.தன்னை அறிந்து கொள்ள முடியும்.
2.”தன்னை அறிந்து கொள்ளும் நிலை தான்…” இராமயாணம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இராவணன் என்ன செய்கின்றான்…? சந்தோஷம் என்ற நிலைகள் வந்தாலும் சந்தோஷத்தை அவன் சுவாசிப்பதில்லை. இராமாயணத்தில் காட்டுகின்றார்கள்.

புலி என்ன செய்யும்? அது சந்தோஷத்தையா சுவாசிக்கும்? புலி ஆண் பெண் என்ற நிலையில் மகிழ்ச்சியுடன் இருந்தாலும் அது வெறுப்பு கலந்த உணர்வுகளையே தான் நுகரும்.

அதனிடன் சந்தோஷம் என்பது இம்மியும் கிடையாது. ஆனால், பாசத்தின் தன்மையில் தன் குட்டிகளை வேண்டும் என்றால் வளர்க்கும்.

பாசம் என்ற நிலையில் தன் இனத்தின் மீதே கிடையாது. தன் சுயநலம் ஒன்றே தான் அதற்குண்டு. ஆனால், கொஞ்சம் இடையூறு என்றாலும் உடனே “ஜிர்…” என்று மோத ஆரம்பித்துவிடும்.

இதைப் போன்று இந்த இயற்கையின் நியதிகளை அறிந்து கொண்டவன் மனிதன். தன் விஞ்ஞான அறிவால் மிருகங்களை எப்படி மாற்றி அமைப்பது? மிருக உணர்வுகளை இணை சேர்த்து மிருகங்களை எப்படிச் சாந்தமாகக் கொண்டு வருவது? மனிதர்களை ஒன்று போல அழகாக எப்படி உருவாக்குவது?

கர்ப்பமாக இருக்கின்றார்கள் என்றால் அதற்குத்தகுந்த சில உணர்வுகளைக் கொடுத்து அழகான குழந்தைகளாக உருவாக்குவது. இதையெல்லாம் விஞ்ஞானி செய்கின்றான்.

விஞ்ஞானத்தால் எத்தகைய அழகாக உருவாக்கினாலும் இவன் நுகரும் மணம் அனைத்தும் நஞ்சாகத் தான் மாறும். அழகுபடுத்தினாலும் விஞ்ஞானி அவன் கண்டுபிடித்த உணர்வும் அவன் வாழ்க்கையில் வந்த வேதனையும் குடும்பத்தில் சிந்தனையைச் செலுத்தும் பொழுது குடும்பப் பற்றற்றுத்தான் இருப்பார்கள்.

குடும்பப் பற்று இல்லை என்றால் அவனுக்குள் வேதனை என்ற உணர்வுகளே மிஞ்சும். விஞ்ஞானத்தில் பல நிலைகளைக் கண்டாலும் இந்தப் பூமியின் ஈர்ப்புக்குள் தான் சுழல முடியும். மெய்ஞானத்திற்குள் அவனால் செல்ல முடியாது.

மீண்டும் அஞ்ஞான வாழ்க்கைக்கே சென்று “மனிதனல்லாத உருவைத்தான்” அவன் பெற முடியும்.

நாம் ஒவ்வொருவரும் சந்தோஷம் என்ற நிலைகளில் இருந்தாலும் “வாலி” – பிறிதொரு தீமையான உணர்வுகளை எடுத்தால் அடுத்த நிமிடமே இந்தச் சந்தோஷத்தை அடக்கிவிடும்.

அதைத்தான்..,
1.“இராவணன் சீதாவைச் சிறைப்பிடித்துக் கொண்டான்”.
2.சந்தோஷத்தை அவனுக்குள் அடைத்து வைத்துக் கொண்டான்
3.செயல்படுத்தவில்லை என்ற நிலைகளைக் காட்டுகின்றார்கள்.

நாம் நினைக்கின்றோம். இலங்கையில் சீதாவை அடைத்துவிட்டான் இராவணன் என்று.

இந்த உடலே இலங்கை தான்… ஒரு தீவு தான். “அதிலே கொண்டு அடைத்துவிட்டான்…!” என்று நாமெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்காக அன்றைய நிலைகளில் மக்களுக்குப் புரிய வைக்க மெய்ஞானிகள் இதைச் செய்தனர்.

நாம் ஒவ்வொரு நொடிப்பொழுது எடுக்கும் உணர்வின் எண்ணங்கள் என்ன செய்கின்றது? என்று காட்டுகின்றார்கள்.

இன்று அதைப் படித்தவர்கள் சரியாக உணராதபடி இராமனையும் சீதாவையும் பற்றி நல்லதாகப் பேசி இராவணன் இப்படிச் செய்தான்…! என்று சொல்லும் போது நாமும் அதைக் கேட்டு வேதனைப்படுகின்றோம்.

கதையைப் படித்துவிட்டு நாம் நினைக்கின்றோம்…, சீதா இராமனுடன் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் இராவணனிடம் சிக்கியவுடன் “சீதா எவ்வளவு வேதனைப்படுகின்றது” என்று நாமும் வேதனையைத்தான் வளர்க்கின்றோம்.

ஆக சந்தோஷத்தையா ஊட்டுகின்றது…? அதே சமயத்தில் அதைப் பார்த்து அழுகின்றவர்கள் எத்தனை பேர் இருக்கின்றார்கள்..?

இவைகளெல்லாம் இந்த உணர்வின் உணர்ச்சிகள் எப்படி நம்மை மாற்றுகின்றது என்ற நிலையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் நம் வாழ்க்கையில்
1.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வரும் இடையூறுகள் அது எப்படி வருகின்றது? என்றும்
2.சந்தர்ப்பங்கள் எப்படி பல இன்னல்களாக எப்படி மாறுகின்றது? என்றும்
3.நல்லவைகள் அனைத்தும் எதனால் மாற நேர்கின்றது? என்றும் காட்டினார்.

நீங்களும் அதையெல்லாம் தெரிந்து கொண்டால் தீமைகளை நீக்கிடும்.., இன்னல்களிலிருந்து விடுபடும்.., “நல்லவைகளைக் காத்திடும்” அந்த நினைவுகள் உங்களுக்குள் வரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று மக்கள் ஆட்சி என்ற நிலையிலிருந்தாலும் மக்களைக் காப்பதற்கில்லை. அன்றைய அரசர்கள் கடவுள் என்ற நிலையில் மக்களைக் காக்கவே சட்டங்களை இயற்றினார்கள்.

கடவுள் என்று வந்தாலும் இன்று நாம் கடவுளைக் காப்பவர்களாகத்தான் இருக்கின்றோமே தவிர கடவுள் மக்களைக் காப்போராகத் தெரியவில்லை.

“மதத்தின் அடிப்படையில் வகுத்துக் கொண்ட கடவுள்… எவரும் எல்லை…”

மனிதனுக்குள் உயர்ந்த உணர்வின் தன்மையை வளர்த்துக் கொண்ட உணர்வின் செயலே “உள் நின்று… (கட+உள்) கடவுளாக இயக்குகின்றது…” என்று நமது குருநாதர் தெளிவாக உணர்த்துகின்றார்.

மகான்கள் உணர்த்திய நிலைகள் கொண்டு எவரொருவர் தீமைகளை வென்றிடும் உணர்வை நுகர்ந்தனரோ “அது உள் நின்று.., தீமைகளை அகற்றும்” நிலைகள் பெறும்.

தீமைகளை அகற்றிடும் நிலை வரும் பொழுது பண்புடன் அரவணைக்கும் தன்மையே வரும். இதைத்தான் தெளிவாக வான்மீகி மாமகரிஷி இராமாயணத்தில் உணர்த்துகின்றார்.

ஜனகச் சக்கரவர்த்தி சீதாவிற்குத் திருமணம் செய்வதற்காக போர் முறைகளைக் காட்டுகின்றார். யார் யார் இந்த வல்லமை கொள்கின்றனரோ “திறமை கொண்டோருக்கே…” எனது வளர்ப்பு மகளைத் திருமணம் செய்து கொடுப்பேன்…! என்கிறார்.

சீதாவிற்குத் திருமணம் செய்ய இவ்வாறு பறை சாற்றுகின்றனர்.

ஒவ்வொருவரும் படையெடுத்து அந்தச் சீதாவைத் திருமணம் செய்ய முந்தியடித்து வருகின்றார்கள். எல்லோரும் அவரவர் திறமைகளைக் காட்டுகின்றார்கள்.

இராமனோ “தீமையை விளைவிக்கும்… அந்த வில்லையே ஒடித்து விடுகின்றான்”.

பிறருடைய எண்ணங்களைப் பகைமையாக்கும் அல்லது ஒருவருக்குத் தீமை செய்யும் உணர்வினைத் தன் உடலிலிருந்து நீக்குகின்றான். அப்பொழுதுதான் “அரவணைக்கும் சக்தியான… அந்தச் சீதாவைத் தன்னுடன் அரவணைத்து” அந்த உணர்வின் தன்மை ஒன்றி வாழ்ந்தான்.

உலகில் “நாம் அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும்” என்ற இந்த உணர்வு வருவதைத்தான் “கல்யாணராமா..,” என்று காட்டினார்கள். “எண்ணங்கள்.., நமக்குள் ஒன்றாகக் குவித்து” வரும் நிலையைக் காவியத் தொகுப்புகள் கூறுகின்றது.

இராமனைக் காட்டப்படும் பொழுது வீர தீரம் படைத்தவன். பராக்கிரமம் வாய்ந்த அவன் “மற்றவர்களைக் கொன்றான்..,” என்று தான் இவர்கள் காட்டுகின்றார்கள்.

அதே சமயத்தில் இராமன் கடவுள் என்று சொல்லும் பொழுது இன்னொரு சாரார் “வாலியை ஏன் மறைந்திருந்து தாக்கினான்..,? இவன் எப்படி வீரன் ஆவான்..?” என்று அவர்களுடைய அளவுகோல்படி வான்மீகி மாமகரிஷி காட்டிய நிலைகளைப் “பட்டி மன்றங்கள் வைத்துத்தான்… சீறிப்பாயும் நிலையில்” உள்ளது.

ஆனாலும், சீதாராமன் அந்த வாலியை.., எதற்காக “மறைந்திருந்து தாக்கினான்..,” என்று வான்மீகி மாமகரிஷி காட்டிய நிலைகளைப் பார்ப்போம்.

சுவை கொண்ட உணர்வு கொண்டு கல்யாணராமனாக வாழும் தன்னுடன் அரவணைத்து வாழும் பண்பு கொண்டவன் என்று காட்டுகின்றார்.

உதாரணமாக, ஒருவன் “நோயால் வாடுகின்றான்..,” என்றால் அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்தால் என்னவாகும்?

அவனின் நிலைகள் நமக்குள் வந்து “அது வாலி..,” என்ற நிலைகளில் நம்மை அடக்கிவிடும்.

ஆகவே தான் அந்த வாலியை அடக்கும் வல்லமையாக இராமன் என்ன செய்தான்…?

“தீமையில் வாடும்..,” உணர்வின் தன்மையைத் “தனக்குள் நேர்முகமாகப் பார்க்காதபடி” அந்தத் தீமையின் வலிமை தனக்குள் வராதபடி அருள் மகரிஷிகளின் உணர்வைத் தனக்குள் செலுத்திக் கொண்டான்.

அந்தத் தீமையின் வலு தன்னைத் தாக்கிடாது பாதுகாத்து அருள் ஒளியின் தன்மையை அவன் உடலுக்குள் பாய்ச்சி அவனில் விளைந்த பகைமை உணர்வை அழித்தான்.

தான் நேர்முகமாக இல்லாதபடி அருள் உணர்வின் தன்மையைத் தனக்குள் சேர்த்து “அந்த நோயாளிக்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படரவேண்டும்..,” என்று “நோயால் வாடும் அந்த உணர்வின் தன்மையை – அந்த வாலியை” அழித்தான்.

பகைமை உணர்வால் நோயால் வாடுபவனிடத்தில் அதை யார் நுகர்ந்தறிந்தாலும் பரிவு கொண்டு பார்த்தாலும் “அவனுடைய வலிமை – வாலி…’ எவரைப் பார்த்தாலும் “சம வலிமை பெற்றுக் கொள்வான்” என்று காவியங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

மனிதன் எப்படி வாழ வேண்டும் என்ற எண்ணத்தின் உணர்வின் தன்மையை அங்கே தெளிவாகக் காட்டினார் வான்மீகி மாமகரிஷி.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உங்களுக்கு மனம் பக்குவப்பட வேண்டும். அதற்காக வேண்டி.., “வாருங்கள் போகலாம்..,” என்று சொல்லி உங்களை நான் காட்டுக்குள் அழைத்துச் செல்ல முடியுமா…?

அப்பொழுது உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் என்ன சொல்வார்கள்? “சாமியார் வருகிறார்” என்றால் ஒரு வேளை குடும்பத்தை விட்டு இவரும் “ஓடி விடுவாரோ.., என்னமோ…!” என்று சொல்லிப் பெண்கள் பேசத் தொடங்குவார்கள்.

இந்த மாதிரியெல்லாம் இன்று உலக நிலைகள் இருக்கின்றது.

ஆனால், உங்கள் உடலே ஒரு காடு. அந்தக் காட்டிற்குள் என்னென்ன நடக்கின்றது என்று தான் இராமாயணத்தில் காட்டுகின்றார்கள்.

காட்டிற்குள் இராமனும் சீதாவும் செல்லும் பொழுது குகன் என்ன செய்கின்றான்? நீரைக் கடந்து செல்வதற்குப் படகு கொடுக்கின்றான். அதனுடைய விளக்கம் என்ன?

“நாம் எதை எண்ணுகின்றோமோ..,” அந்த உணர்வுகள் அனைத்துமே “இரத்தத்தில் தான்” கலந்து செல்கின்றது.

நல்ல இடத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் நாம் போகக்கூடிய இடத்திற்கு போகின்றோம். அதனால் தான் குகனைப் பற்றிச் சொல்கின்றார்கள்.

1.நாம் எடுக்கும் உணர்வுகளிலிருந்து இயங்கி
2.இந்த “இரத்தம்”
3.நம் உடலில் எவ்வளவு பக்குவமாகக் கொண்டு போய்ச் சேர்க்கின்றது?
4.அங்கங்கே அவரவர்களுக்கு வேண்டிய இடத்தில் கொண்டு போய் இந்த உணவைக் கொடுக்கின்றது.
5.உடலிலுள்ள எல்லாவற்றிற்கும் உணவு இந்த இரத்தத்தின் வழியாகத் தான் செல்கின்றது என்பதைப் பச்சையாகவே காவியத்தில் காட்டுகின்றார்கள்.

இதையெல்லாம் சற்றுச் சிந்தனை செய்து பாருங்கள்.

ஆனால் இங்கே “பட்டி மன்றம்” வைத்துப் பேசினார்கள் என்றால் என்னவெல்லாம் பேசுகின்றார்கள்?

இராமனைப் பற்றிப் பேசுபவர்கள் இராமனுக்கு.., “எல்லா உதவியும்” செய்தது.., யார் தெரியுமா…?

குகன்.

அந்த இடத்தில் வான்மீகி எழுதிய காவியத்திற்கு இவர்கள் கற்பனை கட்டுகின்றார்கள்.

ஒவ்வொரு ஞானியும் எத்தனையோ காவியங்களைப் படைத்துள்ளார்கள். அதை இன்று பட்டி மன்றம் வைத்து வாதித்து இவர்கள் ஒரு புத்தகத்தை எழுதுகின்றார்கள்.

இன்று இருப்பவர்கள்.., அதைப் படிப்பவர்கள் எல்லோரும் மண்டையைப் போட்டுப் பிய்த்துக் கொள் என்கிறார்கள்.

அதே மாதிரி கந்தப் புராணத்திலும் சரஹணபவா.., குகா.., இங்கேயும் குகனாகின்றது. கந்தா – வருவதை அறிந்து; கடம்பா – உருவாக்கத் தெரிந்து கொண்டவன் – இந்த ஆறாவது அறிவு முருகன்.

1.தெரிந்து கொள்ளும் உணர்வின் தன்மை எழுப்பும் பொழுது
2.குகன் அந்த நல்ல வழிக்குக் கொண்டு போகின்றான்.

இராமாயணத்திலும் குகனைப் பற்றிக் கொடுக்கின்றார்கள். இங்கே கந்த புராணத்திலும் அதே தத்துவத்தைக் கொடுக்கின்றார்கள்.

ஏனென்றால் ஒவ்வொரு காவியத் தொகுப்பிலும் குகன் முக்கியமானவனாக வருகின்றான்.

இராமயாணக் காவியத்தில் இராமன், குகனை நண்பனாக ஆக்கிக் கொண்டான் என்று உரைத்திருப்பார்கள். குகன் ஆற்றில் படகை ஓட்டி வாழ்க்கை நடத்தி வருபவன் என்றும் உரைத்திருப்பபார்கள்.

ஆக, நமது உடலில் உள்ள இரத்த நாளங்களை ஆறாகவும், நம் எண்ணங்களால் உருவாக்கிய உணர்வுகள் எதுவோ அவைகள் நமது இரத்த நாளங்களில் சுழன்று வருவதை உணர்த்துவதற்குத்தான் இராமயாணத்தில் இராமனின் நண்பன் குகன் என்று உரைத்தார்கள்.

1.நமது இரத்த நாளங்களில் நட்புள்ள உணர்வுகளாகச் சேர்த்து விட்டால்
2.நமக்குள் வெறுப்பை உண்டாக்கும் நோய்களை உண்டாக்கும் உணர்வுகளை
3.நாம் ஒவ்வொன்றாகச் சமப்படுத்திவிடலாம் என்பதை உணர்த்துவதற்குத்தான் இவ்வாறு காவியங்களைப் படைத்தார்கள்.

நாம் எண்ணும் எண்ணங்களில் பகைமை உணர்வைக் கலந்து அதன்வழி செல்லப்படும் பொழுது நமது உடலில் நல்ல அணுக்களை உருவாக்கியவைகளுக்குப் பகையாகி அவைகளுக்கு நல்ல உணர்வுகள் கிடைக்காவிடாமல் தடைப்படுத்துகின்றது.

தீய உணர்வின் அணுக்கள் நல்ல உணர்வின் அணுக்களை விழுங்க எண்ணும். ஏனென்றால் அவைகளுக்கு வரும் நல்லுணர்வுகளைத் தடைப்படுத்தும் பொழுது, நல்ல அணுக்கள் மடியும்.

இதனை உணர்த்துவதற்குத்தான் முதலில் குகன் என்ற நிலையை உருவாக்கினார்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உடல் என்பது திடப்பொருள் – சிவம். ஒரு உணர்வின் தன்மை எடுத்து ஒன்றைத் தாக்கி அதை அடக்கிப் பரிணாம வளர்ச்சி அடைந்து இன்று மனிதனாக வந்திருக்கின்றோம்.

ஆனால் மனிதனான பின் அசுர உணர்வுகளைச் சேர்த்தால் என்ன ஆகின்றது.

ஒருவரை எதிரியாகக் கருதி அவர் உணர்வை எடுத்து நாம் சொல்லால் தாக்கும் பொழுது சிவ தனுசு. இந்தச் சிவ தனுசு
1.அவரிடமிருக்கும் நல்ல குணங்களையும்
2.நம்மிடமிருக்கும் நல்ல குணங்களையும் வீழ்த்திவிடுகின்றது.

இராமாயணத்தில் பரசுராமனுக்கும் சீதாராமனுக்கும் சண்டை நடந்ததாகச் சொல்வார்கள். இரண்டு பேரும் கடவுள் தான். ”ஏன் சண்டை நடந்தது…?”

மனிதனான பின் நாம் தீமைகளை நீக்கி நீக்கிச் சமப்படுத்தும் உணர்வுகள் நமக்குள் வருகின்றது. “சமப்படுத்தும் நிலையையே… பரசுராமன்” என்பது.

சமப்படுத்தும் நிலைகளில் நாம் இருந்தாலும் ஒருவர் நம்மிடம் கோபம் வேதனை போன்ற உணர்வுடன் தாக்கிப் பேசும் பொழுது நம் நல்ல உணர்வுடன் அது சேர்ந்து கொள்கின்றது.

அப்படிச் சேர்ந்து கொண்டவுடன் அதைச் சரிக்கட்ட வேண்டும் என்றால் நாம் என்ன செய்கின்றோம்?

அவர் உடலிலிருந்து (கோபமான நிலைகளில்) வந்தவுடன் “இரு நான் பார்க்கின்றேன்…” என்று சமப்படுத்தும் நிலைகளில் சண்டையிடுகின்றோம்.

அதாவது சிவ தனுசாக மாறுகின்றது. (உடல் – சிவம்…, தனுசு – இயக்ககூடிய உணர்வின் உணர்ச்சிகள்) ஆக நம் உடலுக்குள் தான் இந்த மாற்றமாகின்றது.

நாம் எப்படிப் புலி கரடியாக இருந்தோமோ அதே கோப உணர்வின் தன்மை நமக்குள் அணுக்களை மாற்றிவிடுகின்றது. அப்படித் தாக்கும் உணர்வு வரும் பொழுது நம்மிடம் உள்ள நல்ல குணங்களைப் பலியிடுகின்றோம்.

காளி கோவிலுக்குச் சென்றால் நாம் புலியையா பலியிடுகின்றோம்…?

கோபப்படுவோரைப் பார்த்தால் காளி…! காளிக்கு முன்னாடி என்ன இருக்கின்றது? புலி. அந்தக் கோப உணர்வைச் சுவாசித்தால் நமக்குள் காளியாக மாறிவிடுகின்றது.

இரு…! உன்னை நான் பார்க்கின்றேன் என்று ருத்ரதாண்டவம் ஆட வைக்கின்றது இந்த உடலான சிவம்.

இந்த உணர்வின் தன்மை நம் உடலுக்குள் போனால் நல்ல குணங்களால் உருவான அணுக்களைக் கொல்லும் அணுக்களாக மாறுகின்றது.

அதாவது நம் உடலில் உள்ள நல்ல குணங்களைப் பலியிடுகின்றோம் என்று அர்த்தம். இதைத் தெளிவுபடுத்துவதற்குத்தான் காளி கோவிலில் காளிக்கு முன்னாடி புலியை வைத்துக் காட்டியுள்ளார்கள்.

நாம் யாராவது இதைக் கொஞ்சம் சிந்திக்கின்றோமா…!

மற்ற மிருக நிலையிலிருந்து மனித உருவ அமைப்பு கொண்டு நாம் எப்படி வந்தோம் என்பதற்காக ஆலயங்களில் ஞானிகள் தெய்வச் சிலைகளை உருவங்களாக வடித்துக் காட்டினார்கள்.

நல்ல குணங்கள் பலியானவுடன் ருத்ரதாண்டவம் ஆடுகின்றோம். இது போய் நம் இரத்தத்தில் கலக்கின்றது. கலந்த பின் நம் நல்ல குணங்களைக் கொல்ல ஆரம்பிக்கின்றது.

நம்மைத் தாக்கியவரைக் கொல்ல வேண்டும் என்று நாம் எண்ணுகிறோம். இது சிவ தனுசு. இந்த வீரிய உணர்வு கொண்டு வலுவாகத் தாக்கப்படும் பொழுது வீழ்ச்சி அடைகின்றது.

அப்பொழுது இதை வெல்லக் கூடியது எது? அதைத்தான் அங்கே இராமாயணத்தில் காட்டுகின்றார்கள். சீதாராமன் என்ன செய்கின்றான்?

விஷ்ணு தனுசை எடுக்கின்றான்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகும் பொழுது விஷ்ணு தனுசு. உயிருடன் ஒன்றி ஒளியாகவே இருக்கின்றது. எதையும் அது வென்றிடும் ஆற்றல் பெற்றது.

நம் வாழ்க்கையில் எந்தத் தீமை வந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று
1.அதை எடுத்துப் புருவ மத்தியில் நிறுத்தி
2.நம் உடலுக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று
3.அந்த விஷ்ணு தனுசைப் பாய்ச்சுதல் வேண்டும்.
4.அப்பொழுது நமக்குள் கோபம் உண்டாகும் நிலை அடங்குகின்றது.

நம் உடலிலுள்ள இரத்தங்களில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கலந்தவுடன் கோப உணர்வின் வீரியத் தன்மை அடங்குகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வான்மீகி இராமயாணக் காவியத்தை அருளினார்.

1.மனிதன் நீ எண்ணும் எண்ணத்தின் நிலைகள் சீதாராமா.
2.நீ கவர்ந்து கொண்டது அனைத்தும் இராமனாக
3.(எண்ணங்களாகவும் உணர்வுகளாகவும்) விளைகின்றது என்ற நிலையைக் காட்டினார்.

சீதாராமா பலராமா ஜானகிராமா கோதண்டராமா கோசலைராமா என்று பல கோடி இராமனைச் சொல்லி இருப்பார்கள்.

ஆனால் நீங்கள் சொல்வது ஒரு இராமனைத்தான். இராமன் காட்டிற்குள்ளே போனான். எத்தனை தவி தவிக்கின்றான்.

நாம் எடுத்துக் கொண்ட இந்த இராமன் (எண்ணங்கள்) இந்த காடான நிலைகளுக்குள் போகும்போது ஒவ்வொரு எண்ணத்திலேயும் பார்க்கின்றோம்.

புலியைப் பார்க்கிறோம் கரடியைப் பார்க்கிறோம் வேங்கையைப் பார்க்கிறோம் எல்லாவற்றையும் பார்க்கிறோம் கல்லு முள்ளைப் பாரக்கிறோம் ஒவ்வொருவரும் இடித்துப் பேசுகிறார்கள் கேவலமாகப் பேசுகிறார்கள்
1.இத்தனையும் (கண்களால்) பார்க்கிறோம் அல்லவா…!
2.அது அதற்குத்தக்க எண்ணங்கள் வருகிறது அல்லவா..?

1.இத்தனையும் கடந்து நாம் எத்தனை துன்பத்தை அனுபவிக்கின்றோம்?
2.எப்படி நாம் நல்ல உணர்வின் தன்மை திண்டாடுகின்றது?
3.தான் விளைய வைத்த நல்ல உணர்வுகள் எப்படிப் பாடுபடுகின்றது?
4.இதை எப்படிக் காக்க வேண்டும்…? என்ற நிலைகளைத்தான் இராமயாணத்தில் கூனி போன்ற பாத்திரங்களாக அமைத்து
1.ஒவ்வொரு குணங்களுக்கும் பிறரை முடிச்சு போடுகின்ற நிலையும்
2.பிறரைக் கெடுக்கும் நிலைகளும் அந்த உணர்வு என்ன செய்கின்றது?
3.என்று காட்டினார் வான்மீகி.

இந்த உணர்வினுடைய நிலைகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கும் நிலைகள் வருகின்றது. இயற்கையினுடைய உணர்வு ஒன்றுடன் ஒன்று கலந்து ஒன்றை உருவாக்குகின்றது.

இதைப் போன்ற நிலைகள் மனிதனுடைய பாத்திரங்களில் சந்தர்ப்பங்கள் எப்படி இருக்கின்றதென்ற நிலையை மனிதனுடைய உருவத்தைப் போட்டு இராமயாணக் காவியங்களைத் தீட்டியுள்ளார்கள்.

மனிதன் நாம் எண்ணும் பல உணர்வுகள் எப்படி ஒரு இராமனாக நமக்குள் விளைகின்றது? என்ற இந்த நிலையைத்தான் அன்று வான்மீகி இராமயாணத்தில் காட்டினார். மகரிஷிகள் காட்டிய அந்த அருள் வழிப்படி நாம் அந்த ஞானியின் அருள் வித்தைப் பெறுவதற்குச் சீதாராமனாகக் கவர்தல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

“கிருஷ்ணா… கிருஷ்ணா…” என்பார்கள். ஹரே கிருஷ்ணா ஹரே இராம்… ஹரே கிருஷ்ணா ஹரே இராம்…! என்று சொல்கிறோம். அந்த இராமன் யார்..? ஹரே கிருஷ்ணா யார்…?

நாம் ஒருவருக்கு உதவி செய்கிறோம். (அவரைப் பற்றி) அந்தக் கண்ணின் நினைவுகள் வரும், அது ஹரே கிருஷ்ணா. அவரைப் பற்றி நான் தெரிந்து கொள்கிறேன் என்று சொல்வோம்.

முதலில் ஹரே கிருஷ்ணா அடுத்து ஹரே இராம். உன்னை நான் பார்க்கிறேன் அப்பொழுது அந்த உணர்வின் தன்மை எனக்குள் இரண்டாவது அந்த எண்ணமாக வருகிறது,

அப்போது அந்த எண்ணத்தின் செயலாக ஹரே கிருஷ்ணா ஹரே ராம்.

ஹரே கிருஷ்ணா ஹரே இராம்,
ஹரே இராம் ஹரே கிருஷ்ணா.
நாம் இதைப் பார்ப்பது கண்களின் தன்மை கொண்டு தான் பார்க்கின்றோம். இப்போது சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறதா…?

“ஹரே இராம்… ஹரே கிருஷ்ணா… ஹரே இராமா… ஹரே கிருஷ்ணா…” என்று பாடல்கள் பாடுகின்றார்கள்.

ஒருவர் கோபமாகப் பேசுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்படிக் கோபிப்பவரின் எண்ணங்களை எண்ணும் பொழுது அந்த எண்ணத்தின் தன்மையை
1.நாம் கண் கொண்டு பார்க்கின்றோம்.
2.கண்களால் பார்த்தபின் ஹரே கிருஷ்ணா… அதாவது அவன் தவறு செய்வதை “நாம் பார்க்கும்போது ஹரே கிருஷ்ணா”
3.அதே உணர்வுகள் நம் உயிரிலே படும் பொழுது அதே (கோபிக்கும்) எண்ணம் வருகின்றது “ஹரே இராமா…”
4.ஆகவே அந்தக் கோபிக்கும் எண்ணம் நம் உடலுக்குள் உருவாகின்றது.

நம் உடலுக்குள் உருவான பின் ஹரே இராமா ஹரே கிருஷ்ணா…

நமக்குள் அந்த எண்ணம் வரும் பொழுது நாம் கண் கொண்டு பார்த்து… “எனக்கு இவன் தீமை செய்தவன்…” என்று அதை உணர்த்துகின்றோம்.

எண்ணங்களை “இராமன்” என்றும் கண்களைக் “கண்ணன்” என்றும் நம் காவியத் தொகுப்புகளில் இது தெளிவாகக் காட்டப்படுகின்றது.

நாம் எதை எண்ணினாலும் “எப்படி எண்ண வேண்டும்?” என்பதைத் தெளிவாக்குவதற்காக ஞானிகள் நமக்கு இப்படி உணர்த்தியுள்ளார்கள்.

நாம் எண்ணும் எண்ணங்களே நமக்குள் கடவுளாக இருக்கின்றது.
1.நாம் எதை எண்ண வேண்டும்?
2.நமக்குள் எதை உருவாக்க வேண்டும்?
3.எந்தத் தீமைகளை அகற்ற வேண்டும்?
4.அசுர சக்திகள் புகாதபடி நாம் எப்படி அகற்ற வேண்டும்? என்று காட்டியுள்ளார்கள்.

இந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தான் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் உருவாக்க முடியும்.

அவ்வாறு உருவாக்கிவிட்டால் நமக்குள் தீமையை அகற்றும் சக்தியாக உருவாகி அது நமக்குள் கடவுளாக நின்று தீமையை அகற்றும் வல்லமையான அணுக்களாக உடலுக்குள் உருவாகின்றது.

கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அருள் உணர்வை விளைய வைத்து இணைபிரியாத நிலைகள் கொண்டு அதை உருவாக்கிவிட்டால் உடலை விட்டுச் சென்ற பின் இனி அடுத்துப் பிறவியில்லா நிலைகள் கொண்டு ”என்றும் ஒளியின் சரீரமாக நிலைத்து வாழ” இது உதவும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

“ஹரே ராம்…ஹரே ராம்…” என்று காந்திஜி அடிக்கடி சொல்வார். எதற்காக அவ்வாறு சொன்னார்…? அவர் சொன்னதன் உட் பொருள் என்ன…? என்பதைப் பார்ப்போம்.

1.நமது உயிர் பல கோடி உணர்வின் தன்மை கொண்டு
2.அந்த எண்ணங்களால் தன்னைக் காத்திடும் உணர்வைப் பெற்றது இந்த மனித உடல்.
3.அந்த எண்ணத்தைத் தான் “ராமா…!” என்றார்.

நான் எந்த உணர்வின் நிலையை அதாவது எந்தக் குணத்தை எண்ணுகின்றேனோ அந்தக் குணமே எனக்குள் இருந்து… ராமனாகச் செயல்படுகின்றது.

அதைச் சொல்வதற்குத் தான் எதை எடுத்தாலும் ஹரே ராம்…! ஹரே ராம்…! என்று சொல்கிறார்.

1.ஹரி என்றால் சூரியன்.
2.சூரியனினால் கவரப்பட்ட உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது
3.”எண்ணங்களாக வருகின்றது…” என்பதைக் காந்திஜி நமக்குத் தெளிவாக எடுத்துக் கூறி உள்ளார்.

ஹரே ராம்…! ஹரி என்றால் சூரியன். இப்பொழுது நான் பேசிக் கொண்டிருக்கின்றேன்.
1.நான் பேசுவதை இந்தச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொண்டால்
2.அந்தக் “காந்தம்” ஹரி.
3.நுகர்ந்து கொண்ட அந்த உணர்வுகள் “சீதாவாகின்றது…!
4.அதை நீங்கள் நுகரப்படும் போது “ஹரே ராம்…!”

அதாவது… அந்தச் சூரியனின் எதிரொளியாக… நாம் நுகர்ந்து கொண்ட உணர்வுகள் நமக்குள் “எண்ணங்களாக உருவாக்குகிறது…” என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே காந்திஜி எதை இயக்கமாகக் கொண்டார்…?

நீ எத்தனை நிலைகள் கொண்டாலும் எதன் வழி கொண்டாலும் ஒவ்வொருவரையும் மதத்தால்.. இனத்தால்… நீ பார்க்காதே…!

மதம் என்றோ இனம் என்றோ எல்லாம் அரசனால் உருவாக்கப்பட்டது. அரசனால் பிரிக்கப்பட்ட மதங்கள் தான் இனங்கள் தான் அவை. அவன் சுகமாக வாழ வேண்டும் என்பதற்காகச் செய்த நிலைகளால் தான் பல இனங்கள் இப்படி வந்தது என்று உணர்த்தினார்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் தவறு செய்யவில்லை என்றாலும் தவறு செய்பவரைப் பார்த்தால் அந்த உணர்வுகளை நாம் நுகர நேருகின்றது. “தவறு செய்கின்றான்” என்று அறிகின்றோம்.

நம் உயிர் அதை அணுவாக மாற்றிவிடும். அந்த அணுவின் தன்மை வரும் போது அது பிரம்மம் ஆகின்றது.

பிரம்மாவின் மனைவி சரஸ்வதி. எக் குணத்தின் தன்மையோ அந்த ஞானத்தின் தன்மை கொண்டு அந்த அணுவை இயக்கும்.

இதைப் போன்று இயற்கையில் நாம் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நாம் எதனை எவ்வாறு எவ்வழியில் பெற வேண்டும் என்பதற்குத் தான் இப்பொழுது உங்களுக்குள் நினைவுபடுத்துவது.

நமது காற்று மண்டலத்தில் TV Radio Computer போன்ற கெமிக்கல் கலந்த காந்தப் புலனறிவில் வீரியம் கொண்ட விஷத் தன்மை இணைத்து ஒரு நாடாவைப் பதிவு செய்து அதில் பதிவாக்குகின்றனர்.

இப்பொழுது நாம் பேசுவதையோ மனிதனையோ படமாக்குகின்றனர். படமாக்கி மீண்டும் இயந்திரத்தின் தன்மை கொண்டு ஒலி/ஒளி அலைகளாகப் பரப்புகின்றனர்.

அவ்வாறு பரப்பப்படும் போது அதையெல்லாம் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து அலைகளாக மாற்றி விடுகின்றது.

விஞ்ஞான அறிவுப்படி எந்த அலை வரிசையில் (FREQUENCY) வைத்தால் இது வரும் என்று நினைவுபடுத்துகின்றனர்.

டெல்லியில் ஒரு ஒலிபரப்பு செய்கின்றனர். மெட்ராஸில் ஒரு ஒலிபரப்பு செய்கின்றனர். உலகம் முழுவதிலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான ஒலிபரப்பு செய்து கொண்டிருக்கின்றனர்.

எதை எங்கிருந்து ஒலிபரப்பு செய்கின்றனரோ அது இன்ன அலை வரிசை (frequency) என்று வைக்கின்றார்கள். அலை வரிசை என்றால்
1.காந்தத்தின் ஈர்ப்பு அழுத்தம் அதிகம்
2.ஈர்ப்பு அழுத்தம் குறைவாக இருப்பது – உணர்வுகளில் மாற்றம்.

காரம் ஒரு உணர்ச்சியை ஊட்டுகின்றது. புளிப்பு ஒரு உணர்ச்சியை ஊட்டுகின்றது. துவர்ப்பு ஒரு உணர்ச்சியை ஊட்டுகின்றது.

அதைப் போல காந்தப் புலனறிவில் எதன் உணர்வு கொண்டு அலை வரிசையில் எடுத்து ஒலி அலைகளைப் பாய்ச்சுகின்றானோ அதன் அலைவரிசையில் காரம் என்ற அலை வரிசையில் வைத்தால் அந்தக் காரத்தின் உணர்வின் தன்மை பெற்ற அந்த ஸ்டேசனிலிருந்து ஒலிபரப்பு செய்தால் அதை மட்டும் காற்றிலிருந்து பிரித்து எடுத்துக் கொள்ளும்.

இதே போல,
1.ஒருவன் கோபப்படும் உணர்வை நாம் கண்களால் உற்று நோக்கி
2.நம் உடலிலே பதிவாக்கி
3.மீண்டும் அதை நுகர்ந்து நம் உயிரிலே பட்டால்
4.அந்தக் கோபத்தை உருவாக்கும் அணுவின் தன்மை அடைந்து விடுகின்றது.

நமக்குள் பதிவான உணர்வை மீண்டும் “இப்படி அவன் கோபித்தான்” என்ற உணர்வை நுகர்ந்தால் அந்த உணர்வுகள் அந்த உணர்ச்சியைத் தூண்டுகின்றது.

நுகர்ந்த உணர்வோ நம் இரத்த நாளங்களில் பெருகத் தொடங்கி விடுகின்றது.

(ஒரு நெல்லை நாம் சமைத்துச் சாப்பிட முடியாது. பல நெல் மணிகளை இணைத்தால் தான் சாதமாகிறது.)

அது போல கோப உணர்வை நுகர்ந்தாலும் அது
1.பல அணுக்களின் தன்மை அடையப்படும் போது தான்
2.இரத்தக் கொதிப்பு என்ற உணர்ச்சியைத் தூண்டுகிறது.
3.ஒரு அணு மற்ற உணர்வுகளோடு கலக்கப்படும் போது இரத்தக் கொதிப்பு வராது.
4.அது உணர்ச்சி ஊட்டும் உணர்வு என்று தான் பெயர் வரும்.
5.மற்ற குணங்களுடன் சேர்த்து இந்த உணர்வின் தன்மை இயக்கம் குறைவாக இருக்கும்.

நாம் அடிக்கடி அடிக்கடி வேதனைப்படுபவரைப் பார்த்து வேதனைப்படுகிறார் என்று திரும்பத் திரும்ப எண்ணினால் அந்த எண்ணத்தின் கணக்கு நமக்குள் அதிகரித்து விடுகின்றது.

இதைத்தான் சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப் பிள்ளை என்று காட்டினார்கள் ஞானிகள்.
1.நாம் எந்தக் குணத்தைச் சுவாசிக்கின்றோமோ (நந்தி)
2.அது நமக்குள் உள் சென்று
3.அந்தக் குணம் உடலுக்குள் உருவாகும் என்பதைக் காட்டுவதற்கு
4.நந்தீஸ்வரன் என்று காரணப் பெயர் வைக்கின்றார்கள்.

உருவான குணமோ அது தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கி விடுகின்றது.

ஒரு அணுவின் தன்மையாக உருப் பெற்ற பின்
1.அந்த உணர்ச்சியைத் தூண்டி
2.நம் உயிரின் நிலைகளுக்கு நினைவுபடுத்தி
3.அதை மீண்டும் சுவாசிக்கச் செய்து
4.நம் இரத்த நாளங்களில் கலக்கச் செய்து
5.அந்த உணர்வின் தன்மையைத் தனக்கு உணவாக எடுத்து விளைகிறது.

ஒரு நெல்லை ஊன்றியபின் எப்படிப் பல நெல்லாக விளைந்து வருகின்றதோ அது போல ஒரு வித்தின் தன்மை அதற்குத் தக்கவாறு பல எண்ணங்கள் உணர்வுகள் வருகின்றது. அந்த வித்தின் தன்மையே விளைகின்றது.

சிவன் ஆலயத்தில் சிவனின் கணக்குப் பிள்ளை யார்…?

நாம் சுவாசித்த உணர்வுகளே – நந்தீஸ்வரன். அதாவது நாம் நுகரும் உணர்வுகளைத்தான் நந்தீஸ்வரன் என்று காட்டுகின்றார்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தீமையை நீக்கி மகிழ்ந்திடும் உணர்வாக இருப்பதை “மகிழ்வாகனா…!” என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.

“வேலும் மயிலும் துணை…” என்று காட்டி மயிலின் காலடியில் பாம்பைக் காட்டுவார்கள் ஞானிகள். விஷமான பாம்பை மயில் விழுங்கினாலும் அதனின் மகிழ்ச்சியின் தன்மையில் மகிழ்ந்து ஆடுகின்றது.

ஆறாவது அறிவு கொண்ட நாம் இயற்கையில் உருவான பல பொருள்களை மாற்றி அதைச் சமைத்து சுவையானதாக ஆக்கி உட்கொண்டு மகிழ்ச்சியான நிலைகளில் நாம் வாழுகின்றோம்.

இந்த நிலையை உணர்த்துவதற்குத்தான்
1.ஆறாவது அறிவின் கூர்மையைச் “சக்தி வேல்…”
2.அந்த வேலின் தன்மை – அடி பெருத்தும் நுனி சிறுத்தும் காட்டினார்கள்.

1.ஆறாவது அறிவை “அகண்ட நிலைகள்..” என்ற நிலையைக் காட்டி
2.அந்த எண்ணத்தின் நிலையில் வளர்ச்சி எதுவோ
3.அகண்ட (அண்டத்தின்) நிலையையும் மனிதன் நாம் அடைந்திட முடியும் என்று காட்டுவதற்காகத்தான்
4.முருகனுக்கு வேலைப் போட்டுக் காட்டினார்கள் ஞானிகள்.

நம் எண்ணங்கள் எவ்வளவு கூர்மையாக எதன் மீது பாய்ச்சப்படுகின்றதோ அதன் தன்மை கொண்டு அகண்ட நிலைகள் “பின்…” வருகின்றது. (கூர்மை – நுனி. அகண்ட நிலைகள் அடைவது – வேலின் அடிப்பாகம் பெரிது)

அகண்ட அண்டத்தில் ஒளியின் சரீரமாக நாம் அடைய முடியும். அகண்ட பேரண்டத்தில் இருக்கும் நாம் எல்லாவற்றையும் அடைய முடியும் என்ற காரண விளக்கங்களைக் காட்டி கந்த புராணத்தில் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள்.

ஒரு பொருளைக் காட்டினாலும் அதனின் “மூல இயக்கங்கள்… எவ்வாறு…?” என்று எல்லோரும் அதை அறிவதற்குத் தான் காரணப் பெயர்களை அவ்வாறு வைத்தார்கள்.
1.காரணங்களுக்குள் “காரணம்..”
2.அதாவது “ஓமுக்குள் ஓ…ம்” என்பார்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சாதாரண மக்களும் புரிந்து கொள்வதற்கு வள்ளி திருமணம் என்ற நிலைகளைக் காட்டுகின்றார்கள் ஞானிகள்,

வள்ளி திணைக் காட்டிலே காவல் காத்துக் கொண்டு இருக்கின்றாள். தான் விளைய வைத்த பொருளை மற்றது கொத்தித் தின்று விடாதபடித் தன் பாதுகாப்பிற்காக வேண்டி அங்கே காவல் புரிகின்றாள்.

வெகு தூரத்தில் இருந்து வருவதைத் தன் பாதுகாப்புக்காக வேண்டி கவண் கொண்டு வீசுகின்றது. அவள் யார்…? வேடுவனின் மகள்.

பல கோடிச் சரீரங்களில் வேட்டையாடி அதிலே விளைந்த சக்தி தான் மனித உடலில் இருந்து வரக்கூடிய வலிமை மிக்க சக்தி “ஆறாவது அறிவு” வள்ளி.

பாதுகாக்கும் சக்தி – வலிமை – வல்லவன் – வல்லவி = “வள்ளி”

வல்லவன் “வல்லவி…” வள்ளி என்று பெண்பாலைக் காட்டி எதைத் தன்னுடன் இணைத்துச் செயல்பட வேண்டும் என்பதை “வள்ளி திருமணம்” என்ற காவியமாகப் படைத்துத் தெளிவாகக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.
1.அந்த வள்ளியை முருகன் காதலிக்கின்றான்.
2.ஆறாவது அறிவின் தன்மை கொண்டு
3.இந்த வலிமை மிக்க சக்தியைத் தனக்குள் நேசிக்க வேண்டும்.

ஆறாவது அறிவு கொண்டு உடல் பெற்றவன் முருகா… “முருகு….” முருகு என்றால் மாற்றி அமைக்கும் சக்தி.

தீமையை மாற்றியமைக்கும் உடல் பெற்றவர்கள் மனிதர்கள் என்றும் தன்னைப் பாதுகாக்கும் அந்தச் சக்தியை நீ நேசிக்க வேண்டும் என்று காவியப் படைப்பு வருகின்றது.

நம்மை ஏசுவோரையும் நமக்குத் தீமை செய்வோரையும் நாம் எண்ணிக் கொண்டிருந்தால் என்றால் அது நம்முடைய நல்ல உணர்வைத் தின்றுவிடும்.

வேதனைப்படுவதை ஒருவர் சொல்லி விட்டால் அந்த உணர்வின் சக்தி நமக்குள் வந்து நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களைத் தின்றுவிடும்.

அதாவது வேதனை வேதனை என்று அதை நாம் நுகர்ந்தால் டி.பி. நோய் வருகின்றது. நம் நல்ல குணங்களை உடலை அது தின்று விடுகின்றது.

அதைத் தான் திணைக் காட்டில் குருவியை உட்கார விட்டோம் என்றால் அதில் விளைய வைத்ததைத் தின்று விட்டுப் போய்விடும். வள்ளி அவ்வாறு ஆகாதபடி அதைக் காவல் காக்கின்றாள் என்று காட்டினார்கள் ஞானிகள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு தையல் மிஷினிலே துணியைத் தைக்கப் பழகுகின்றோம். பழகும் போது கையையும் விரலையும் ஒன்று போல இணைத்து கால் மிதியும் ஒன்றாக்கி அதைச் சீராக்கித் தைக்கின்றோம்.

பின் ஒழுங்காகத் தைக்க முடிகின்றது. பழக்கப்படுத்தி விட்டால் மிகவும் எளிதாக நாம் தைக்க முடிகின்றது.

இதைப் போல தான் நாம் பிறந்து வளர்ந்து இன்று மனிதனாக வந்த நிலையை முழுமையாகத் தெரிந்து கொண்டு
1.மனித வாழ்க்கையில் எத்தகைய இன்னல் வந்தாலும்
2.அதை நீக்கும் பழக்கம் வர வேண்டும்.

வாழ்க்கையில் தன்னை அறியாமல் சேரும் துன்பங்களையும் துயரங்களையும் நீக்கிடும் உபாயங்களைச் சாதாரண மக்களும் அறிந்துணர்ந்து செயல்படுத்துவதற்காகத்தான் ஆற்றங்கரையில் விநாயகரை வைத்துக் காட்டினார்கள் ஞானிகள்.

அதிகாலையில் விநாயகரை நாம் பூஜிக்கப்படும் போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏக்கத்தால் எண்ணும்போது அந்தச் சூரியனின் காந்த அலைகள் இணைந்து நம் எண்ணத்திற்கு வலு கூடுகின்றது.

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு மின் காந்த சக்தியால் இயங்கக்கூடிய ஆண்டெனாவை வைத்து மிகவும் சக்தி வாய்ந்த நிலைகளை ஈர்க்கும்படி செய்கிறார்கள்.

தொலை தூரத்திலிருந்து அலைகள் வந்தாலும் அதற்குகந்த நிலைகளில் திசைகளைத் திருப்பி வைக்கப்படும் போது அதை இழுத்துக் கவர்ந்து நமக்கு சுலபமாகக் கொண்டு வருகின்றது. இதைப் போன்று தான்
1.நாம் விநாயகரைப் பார்க்கப்படும் போது
2.இதை உணர்த்திய அந்த அகஸ்தியரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி
3.அதைப் பின்பற்றிச் சென்ற சப்தரிஷிகளை எண்ணிக்
4.கூர்மையான நினைவுகளை நமக்குள் கொண்டு வரும் பொழுது
5.சூரியனின் காந்த சக்திகள் இங்கே இணைக்கப்படுகின்றது.

அதை இணைக்கப்படும் போது அந்தச் சக்தியின் தன்மை வலு பெறுகின்றது. அப்போது நம் எண்ணத்தின் நினைவலைகளுக்கு ஆண்டெனாவினுடைய பவர் அதிகமாகின்றது.

ஆண்டெனாவை எந்தப் பக்கம் திசை திருப்பி வைக்கின்றோமோ அந்தத் திசையிலிருந்து ஒலிபரப்பாகி வரும் அலைகளைச் சுலபமாக கேட்பது போல்
1.நம் கண்ணின் ஆண்டெனா பவரைக் கூட்டச் செய்து
2.விண்ணிலிருந்து வரும் ஆற்றலை எளிதில் கவர்வதற்காக
3.அவ்வாறு செய்தார்கள் ஞானிகள்.

விண்ணை நோக்கி எண்ணி அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கும்போது “பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்…” அவர் உடலில் விளைந்த அருளாற்றல்களை நாம் கவர முடிகின்றது.

ஏனெறால் அவர் தன் வாழ்க்கையில் வந்த தீய வினைகளை மாற்றி ஒளியாக மாற்றினார். அகஸ்தியர் ஒளியாக மாற்றி வெளிப்படுத்திய அந்த உணர்வின் அலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நம் பூமி முழுவதும் படரச் செய்து கொண்டு இருக்கின்றது.

விநாயகரைப் பார்த்து அந்த அலைகளை நமக்குள் கவர்ந்து நம் உடலுக்குள் சேர்க்கச் செய்வதற்குத்தான் இப்படி ஒரு பழக்கத்தை ஏற்படுத்தி வைத்தார்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நட்சத்திரங்கள் அது அது தான் எடுத்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக… அதாவது கார்த்திகை நட்சத்திரம் ஒளிச் சுடராக மாறுகின்றது. ரேவதி நட்சத்திரம் இன்னொரு விதமாக மாறுகின்றது.

கோள்கள் அது அது சேர்த்துக் கொண்ட வினைகளுக்குத் தக்கவாறு உருவங்கள் மாறுகின்றது.

இதைப் போன்று தான் ஒவ்வொரு உயிரணுவும் தான் எடுத்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக உடல் அமைப்பு வருகின்றது. இது தான் விநாயகா.

எல்லாவற்றிற்கும் ஓர் உணர்வின் சத்துதான் வினையாகின்றது. அதற்கு நாயகனாக அந்த உணர்வே இயக்கி அது உடலின் தன்மையாகக் காட்டுகின்றது. அன்று அகஸ்தியன் இந்த உணர்வின் இயக்கத்தைப் பற்றித் தெளிவாக எடுத்துக் காட்டினான்.

இதே மாதிரி நாம் ஒவ்வொருவருடன் சேர்ந்து பழகப்படும் போதெல்லாம் நுகர்ந்த உணர்வுகள் இது வினையாகச் சேர்ந்து விடுகின்றது. வினை என்றால் இயக்கம் என்று பொருள்.

அது நாயகனாக நமக்குள் சேர்ந்து என்ன செய்கின்றது?

நாம் சந்தோஷமாக இருப்போம். வீட்டில் பையன் ஏதாவது தப்பாகப் பேசிவிட்டான் என்றால் அதைக் கேட்டுக் கொண்டிருப்போம்.

நாம் அதைச் சுவாசித்தவுடன் உடலுக்குள் போய் இந்த உணர்வின் மணம் என்ன செய்கிறது? எப்போது பார்த்தாலும் நம்மை வேதனைப்படச் செய்து கொண்டு இருக்கும்.

உடல் நன்றாக இருக்கும். பூரிப்பின் தன்மையாக இருந்தாலும் என்னால் நிற்க முடியவில்லையே மூட்டு வலிக்கிறது கை வலிக்கிறது பிடரி வலிக்கின்றது கண் எரிகின்றது என்று நினைப்போம்.

ஏனென்றால் இந்த உணர்வின் தன்மை தன்னை அறியாமலேயே இந்த உடலுக்குள் சேர்த்து அந்த வினைக்கு நாயகனாக நம்மை இயக்குகின்றது. இதை நிறுத்த வேண்டுமல்லவா…?

இந்த வினைகளை நிறுத்த வேண்டும் என்பதற்காக வேண்டித்தான் அதாவது மாதத்திற்கு ஒரு விநாயகர் சதுர்த்தியும் வருடத்தில் ஒரு விநாயகர் சதுர்த்தியும் வைத்தது.

களி மண்ணில் விநாயகரைச் செய்து ஊர்வலமாக எடுத்துக் கொண்டு போய்க் கடலில் கரைக்கின்றோம். அது ஏன் கரைக்க்ச் சொன்னார்கள்…? என்று தெரியாது

சந்தர்ப்பத்தால் நமக்குள் சேர்ந்த தீய வினைகளை வளராது தடுத்து
1.அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும்.
2.எல்லாக் குடும்பங்களும் நலம் பெறவேண்டும்
3.எங்கள் பகைமைகள் அழிய வேண்டும் என்று ஏகோபித்த நிலையில் பிரார்த்திக்கும் பொழுது
4.நம் உடலிலும் நம் பகைவர்களின் உடலிலும் பதிந்த தீய உணர்வுகள் அனைத்தும் கரைந்து விடுகின்றன.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பூமி சுழலும் போது வட துருவத்திற்கு நேராக எது எல்லாம் பிரபஞ்சத்தில் மிதந்து கொண்டிருக்கின்றதோ அந்தச் சத்தையெல்லாம் நமது பூமி கவர்ந்து வட துருவத்தில் உறையச் செய்கிறது என்பதை அகஸ்தியர் கண்டுணர்ந்தார்.

அதே சமயம் வெப்பத்தால் கரைந்து நீராகப் பல வகையில் சென்றாலும் அதிலிருந்த சத்தின் தன்மைகள் ஆவியாகப் படரப் படும் போது நமது பூமிக்குள் மீண்டும் வரும் வெப்ப காந்தங்கள் அதைக் கவர்ந்து அதனதன் நிலைகள் கொண்டு இயக்கச் செய்கிறது.

1.நமது பூமியில் வெளிப்படும் ஒவ்வொன்றையும் இந்தக் காந்தம் கவரும் போது
2.எத்தகைய சத்தோ அதை அந்த அணுவுடன் இயக்கப்படும் போது மணம் அது ஞானமாக மாறுகிறது.
3.அதற்குப் பெயர் சரஸ்வதி என்று வைக்கின்றார் அகஸ்தியர்.

வெப்பம் காந்தம் விஷம் மணம் என்று நான்கு நிலை அடைந்த பின் இவை அனைத்தையும் சேர்த்துக் கூட்டாக வரும் போது ஐந்தாவது “உணர்வு…” ஐந்து நிலைகள் கொண்டு ஐந்து விதமான செயல்களைச் செய்யும்.

1.கண்களால் பார்க்கின்றோம் அதிலிருக்கக் கூடிய காந்தம் இழுத்து மற்றதை நுகர்ந்து அறியச் செய்கிறது.
2.காதால் கேட்கின்றோம் அந்த ஒலிக்கு உண்டான உணர்வின் அலைகளை இயக்கச் செய்து அந்த உணர்வைத் தட்டியெழுப்புகிறது.
3.அந்த உணர்ச்சிகளை சுவாசிக்கச் செய்து கண்ணின் நிலைகளை இயக்கி அதைத் திரும்பிப் பார்த்து அந்த உணர்வைக் கவருகிறது.

நாம் எடுத்துக் கொண்ட இந்த உணர்வுகள் அனைத்தும் உடலிலே படும்போது அந்த உணர்வின் தன்மையை அது உணர்த்துகின்றது.
இப்படி நம் புலனறிவுகள் அதாவது
1.மணமாக வரும் போது நுகரச் செய்கின்றது.
2.வாயில் போடும் போது சுவையாகத் தெரிகின்றது.
1.ஒவ்வொரு அணுவிற்குள்ளும் ஐந்து புலனறிவுகள் தான்
2.மனிதனுக்கும் இதே ஐந்து புலனறிவுகள்
3.மிருகங்களுக்கும் இதே ஐந்து புலனறிவுகள்.
4.பாம்பிற்கு மட்டும் நான்கு புலனறிவுகள் அதற்குக் காது இல்லை.
விஷத்தின் தன்மை ஆற்றல் மிக்கதாக அங்கே பாம்பிற்கு இருக்கிறது.

இந்த உண்மையின் நிலைகளை ஒரு அணுவின் ஆற்றல் எப்படிப்பட்டது என்றும் அணுவிற்குள் அணுவின் இயக்கத்தையும் அன்று அகஸ்திய மாமகரிஷி தெளிவுறத் தெரிந்திருந்தார்.

அகம் என்ற நிலையில் அணுவிற்குள் இருக்கும் உள் நிலைகளை (அகம்) “அகத்தை…” அறிந்து வெளிப்படுத்தியதால் தான் அகத்தியர் என்று காரணப் பெயர் பெற்றார்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாரதர் சிவனிடம் வருகின்றார். கனியைக் கொண்டு வந்து கொடுக்கின்றார். இந்த உலகை யார் வலம் வருகின்றார்களோ அவர்களுக்கு இந்தக் கனி.

அப்பொழுது முருகன் என்ன செய்கின்றார்? தன் உணர்வின் ஆற்றல் இருக்கப்படும் பொழுது அவரிடம் வேகமாகச் செல்லும் மயில் இருக்கிறது.

ஏறி உட்கார்ந்து ஒரு நொடியில் உலகை வலம் வருகின்றேன் என்று அவருடைய உணர்வு வேகமாக ஓடுகின்றது.

புழுவிலிருந்து மனிதனாக ஆகி தனக்குள் பல உணர்வின் சத்தை எடுத்து தான் சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக மனித உடல் பெற்ற இந்த உடல் இது இருந்த இடத்திலிருக்கின்றது – விநாயகர்

1.உணர்வின் எண்ண அலைகள் ஊடுருவிச் செயல்படும் நிலைகள்
2.அந்த எண்ணத்தைப் பாய்ச்சி அங்கே செல்கின்றது – முருகர்
3.ஆனால் இவர் இருந்த இடத்திலிருந்து
4.உணர்வின் சக்தியைத் தனக்குள் எடுத்து வினையாகச் சேர்த்து
5.இந்த வினையின் உருவமாக அது சேர்க்கப்பட்டது.

பேரண்டத்தின் நிலைகள் பெரும் உலகமும் இந்தத் தாய் தந்தை தனக்குள் எடுத்துக் கொண்டது. அது இருந்த இடத்திலிருந்தே தன் உணர்வின் சத்தை அது கருவாக எடுத்து விளைய வைத்தது.

மரம் பல அலைகளின் தொடர் கொண்டு தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் நிலைகள் கொண்டு இந்தச் சத்திற்குள் விளைய வைக்கின்றது தன் கனிகளை.

அதே போல் தன் அன்னை தந்தைக்குள் விளைந்தது இந்த உணர்வின் வித்து. இந்த வித்தின் தன்மையே அந்த உயிரான அந்தச் சத்து.

இந்த உடலின் வினையாகச் சேர்த்துக் கொண்ட அந்த நிலைகள் கொண்டு அந்தச் சத்தின் தன்மையைப் பெறக்கூடிய தகுதியை
1.இந்த உயிர் எப்படி ஒளியாக ஆனதோ
2.அதைப் போல அந்த உயிரின் தன்மை தனக்குள் எடுப்பது.

ஒரு மாங்கனி அது வித்தாகி மரமாகிப் பின்பு தனக்குள் வித்தின் சத்தாகச் சேர்க்கின்றது. இதைப் போல் தன் இனத்தின் சத்தின் தன்மை “அந்த ஒளியின் சுடராக… வளரும் பக்குவ நிலைகள்” பெறுகின்றது.

அந்தப் பக்குவ நிலையைக் காட்டுவதற்குத்தான் இங்கே காட்டுகின்றார்கள்.

தாய் தந்தையரின் பாசத்தால்தான் நாம் அனைவரும் வளர்கின்றோம். அப்படிப் பாசத்தால் வளர்க்கப்படும் பொழுது
1.அந்த ஞானி காட்டிய அருள் உணர்வின் எண்ண அலைகளை நீ எடு
2.அவன் வழியில் நீ பெறு… “கனியாகு”

அன்று வான்மீகி வானை நோக்கி ஏகினான். துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வை நுகர்ந்தான். அனைதும் அறியும் ஞானியாக ஆனான்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளி வரக் கூடிய அணு நாரதன். அந்த உணர்வின் தன்மை அங்கே இயக்கப்பட்டது. நாரதன் வான்மீகியின் காதிலே ஓதினார் என்று காவியம் உண்டு.

அதே நாரதனை இங்கே காட்டினார்கள்.

மரத்தில் விளைந்து முதிர்ந்தது கனி. கனியிலிருந்து சுவையான மணம் வரும். அது இனிமை கொண்டது.

நாரதன் கையில் நாதம் சுருதி ஏழு. சரஸ்வதி வைத்திருப்பதும் சுருதி ஏழு. இவ்வளவையும் காட்டியுள்ளார்கள். படத்தையும் காட்டியுள்ளார்கள். பேருண்மையின் தன்மையைக் காட்டுவதற்கு அன்று மெய்ஞானிகள் இப்படிக் கொடுத்துள்ளார்கள்.

தாய் தந்தையரை நேசித்து வளர்ந்தால் “ஞானக் கனியைப் பருகலாம்… அருள் ஞானியாக முடியும்” என்பதே ஞானிகள் நமக்குக் காட்டிய பேருண்மைகள்

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விநாயகரை வைத்து அதை உற்று நோக்கி உணர்வினைப் பதியச் செய்து விண்ணை நோக்கி ஏங்கிப் பார்க்கும்படி செய்தார்கள் ஞானியர்கள்.

கண்ணின் நினைவுகளை உயிருடன் ஒன்றி உணர்வின் தன்மை ஓங்கி எண்ணத்தைச் செலுத்தி அந்த மகரிஷிகளின் ஆற்றலைப் பெறவேண்டும் என்று அதைத் தனக்குள் கவர்ந்து தீமையை அகற்றும்படி செய்து உணர்த்தினார் அகஸ்தியர்.

எதைக் கண்டுணர்ந்து அன்று அகஸ்தியன் விண்ணுலகம் சென்றானோ அதைத் தன் இன மக்களுக்கும் பெறவேண்டும் என்று அவ்வாறு செய்தான்.

அதை யாரும் இப்போது செய்யவில்லை.

அதைச் இப்பொழுது சொன்னோம் என்றால் “தேங்காய் பழம் உடைக்காமல்…, எப்படிச் செய்வது? அரச மரத்தைச் சுற்றாமல்…, எப்படி அந்தச் சாமியிடம் வரம் வாங்குவது? என்று கேட்பார்கள்.

எங்கள் மூதாதையர்கள் இறந்து விட்டால் இறந்த பிற்பாடு நாம் மோட்ச தீபம் போட்டு அங்கே அர்ச்சனை செய்யாவிட்டால் மோட்சத்திற்கு எப்படிப் போவார்கள்.

இப்படி இந்த ஐதீகத்திலும் சாங்கியத்திலும் தான் நாம் தொடர்ந்து கொண்டுள்ளோம். நம்முடைய வாழ்க்கையே சாங்கியம் சாஸ்திரங்களில் காட்டியபடிதான் போய்க் கொண்டிருக்கின்றது.

சாங்கிய சாஸ்திரம் என்பது வேறு. ஞானிகள் காட்டிய சாஸ்திர விதிகள் வேறு.

ஆக ஒவ்வொரு குணங்களுக்கும் விதி அமைத்து இதை முடக்கி அந்த உணர்வின் தன்மை கொண்டு மதி கொண்டு விதியை மாற்றும் மார்க்கங்களைக் காட்டினார்கள் மகரிஷிகள்.

நம் விநாயகர் தத்துவமே ஞானவான் என்று விநாயகரைச் சொல்வார்கள். அதாவது அந்த மதி கொண்டு மனிதன் வாழ்வில் வந்த இருளைப் போக்கிய நிலைகள் பெற்றவர்கள் மகரிஷிகள்.

ஒன்றைக் கூர்மையாக உற்றுப் பார்த்தால் கண்ணின் கருவிழி நம் உடலிலுள்ள எலும்புகளுக்குள் ஊழ்வினை என்ற நிலைகள் பதிவாக்குகின்றது. அதன் கதியில் நமக்குள் விளையப்படும் போது அது விதியாக மாறுகின்றது.

ஓர் வித்தினை நாம் ஊன்றினால் அது மரமாக வளரும் போது அதன் “கதியிலே” வளருகின்றது. வித்தின் தன்மை பெறும்போது “விதியாக” மாறி விடுகின்றது. தன் இனச் செடியை அது “விருத்தியாக்கச்” செய்து விடுகின்றது.

இதைப்போன்று தான் மனிதன் நாம் தீமையான சொற்றொடர்களைக் கேட்டுணர்ந்தால்
1.ஊழ்வினையாகப் பதிவாகிவிடுகின்றது.
2.பின் அந்தத் தீமைகளைப் பற்றிய நினைவுகள் கூடிக் கூடி
3.அதனின் கதியிலே மனிதன் வாழ்க்கை கூடிவிடுகின்றது.
4.ஆக, அந்தத் தீமையை விளைவிக்கும் அந்த உணர்வின் நிலையாக விளையப்படும் போது “விதியாக..” மாறி விடுகின்றது.
5.அந்த விதியிலிருந்து மீள முடியாது.., என்ற நிலை சாங்கிய சாஸ்திர விதிகளில் காட்டப்பட்டிருக்கின்றது.
6.விதி வழி நடக்கும் என்கிறார்கள், அதை மதி கொண்டு மாற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள்.

சாங்கிய சாஸ்திரத்திலே இவர்கள் சொல்லும் “மதி…” என்பது என்ன?

1.சாஸ்திர விதிப்படி யாக வேள்வியினை நடத்தி
2.தீயிலே பல பொருள்களைப் போட்டுப் பொசுக்கி விட்டால்
3.பல மந்திரங்களைச் சொல்லி விட்டால்
4.மதி கொண்டு விதியை மாற்றுவதாக இவர்கள் சொல்கின்றார்கள்.

எந்த மதி கொண்டு… விதியை மாற்ற வேண்டும்….!

நீங்கள் காசைக் கொடுத்துவிட்டு அதிலே யாகத்தை வளர்த்து தீயிலே போட்டு பொருளைப் பொசுக்கிவிட்டால் “மதியாக” மாறிவிடுமா…?

நம் உயிர் நெருப்பு. அருள் மகரிஷிகளின் அருளாற்றலை உயிர் வழி சுவாசித்து உடலில் உள்ள இரத்தங்களிலும் அதில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்களிலும் பாய்ச்சுதல் வேண்டும்.

பின் நம் உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று பாய்ச்சுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

முருகனுக்காக வேண்டி முருகனை எண்ணி காவடிகளை எடுத்து வருவார்கள்.

மந்திரங்களைப் பதிவு செய்து கொண்டு மந்திர ஒலிகளை எழுப்பிய பின் ஆற்று மணலை எடுத்துக் கொண்டு போய் சட்டியில் போட்டுக் காவடி எடுத்து வருவார்கள்.

30 நாள் அல்லது ஒரு மண்டலம் விரதம் இருந்து பல ஆயிரம் பேர் முன் வைத்து காவடியை எடுத்து வருவார்கள். அந்த 48 நாளும் மந்திர ஒலிகளை மீண்டும் மீண்டும் ஜெபித்துக் கொண்டே இருப்பார்கள்.

108, 1008 அல்லது ஒரு இலட்சமோ மந்திர ஒலிகளை எழுப்பி அந்த உணர்வின் தன்மை இவர்கள் ஏங்கி எடுக்கும் பொழுது அந்தக் காலம் உணர்வின் நினைவாற்றல் பருகப்படும் பொழுது எந்தக் கை கொண்டு இவர் தொட்டாரோ அந்த மணல் சர்க்கரையாக மாறும்.

இது நமக்குச் சாட்சியாகின்றது.

முருகனுக்காகக் காவடி எடுத்து வந்தேன் நான் இங்கே போய்த் திறந்து பார்த்தேன். அங்கே போய்த் திறந்து பார்த்தேன். இல்லை.

இரவும் பகலும் இங்கும் அங்கும் சுற்றுவார்கள். அப்புறம் கடைசியில் பார்த்தால் சர்க்கரையாக வரும்.

முருகனின் அருள் கிடைத்தது. சர்க்கரை கொடுத்தான் என்று சொல்வார்கள். பார்த்தபின் பக்தியின் நிலைகள் கொண்டு அதற்காக வேண்டி அதிலே சாய்கின்றோம்.

1.சர்க்கரையை விளையவைத்தான் என்ற
2.இந்த மந்திர ஒலிக்குத்தான் நாம் சாங்கிய சாஸ்திரங்களில் சிக்கிக் கொண்டோமே தவிர
3.நம் உணர்வின் தன்மை இனிப்பாக வரும் சாஸ்திரங்கள் இல்லை.

அதே போல நான் (ஞானகுரு) பழனியில் இருக்கும் காலத்தில் மச்சக் காவடி என்று எடுத்து வருவார்கள். மச்சக்காவடி என்றால் மீனை அறுத்து அதில் மஞ்சள் பொடி போட்டு மற்ற பொருள்களையும் போட்டுக் காவடி எடுத்து வருவார்கள்.

பத்துப் பதினைந்து நாள்கள் சுற்றுவார்கள். நானும் கூடப் போய்ச் சுற்றிப் பார்த்திருக்கின்றேன். இந்தக் காவடி எடுத்துச் சுற்றும் பொழுதெல்லாம் சில இடங்களில் வரவில்லை.

அப்புறம் மீண்டும் மீண்டும் மீண்டும் அந்த மந்திரங்களைச் சொல்லி அதை எடுத்து வந்தபின் சரியான நிலையில் வந்தபின் அந்த மீன் உருப்படியாகவே (உயிருடன்) வருகின்றது.

அந்த மீன்களை வையாபுரிக் குளத்தில் கொண்டு விடுகின்றார்கள். கோவிலைச் சுற்றியுள்ள ஒரு கிணற்றிலும் அந்த மீன்களை விடுகின்றார்கள்.

இதைப் போன்று சேவல் காவடி என்று சேவலைச் சமைத்து மறுபடியும் வந்தபின் இதைப் போல சேவலும் உருப்படியாக வந்ததைப் பார்த்துள்ளேன்.

ஏனென்றால் இந்த மந்திர ஒலிகளைக் கொண்டு சில நிலைகளைச் செய்கிறார்கள். கந்த புராணத்தில் எதைச் சொல்லியிருக்கின்றதோ அதற்குள் புராண காவியமாக மாற்றியமைத்து வைத்துள்ளார்கள்.

1.மந்திரங்களை ஜெபிக்கப்படும் பொழுது இந்த உணர்வுகள் அதற்குள் படப்பட்டு
2.இது மீண்டும் சரியான பருவம் வரும் பொழுது இணைந்துவிடும்.
3.இதைக் கரையான் மந்திரம் என்பார்கள்,

ஆனால் பக்தி மார்க்கங்களில் இதையெல்லாம் “முருகன் செயல்” என்று நிலைக்கு வரும் பொழுது
1.அந்த முருகனை வணங்கினால்
2.சாங்கியங்களைச் செய்தால் நமக்கு நல்லது
என்ற நிலையில் தான் இன்று நாம் ஆலயங்களுக்குச் செல்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பல மந்திரங்களைக் கற்றுணர்ந்தவர்.
1.மந்திரத்தின் உண்மைகளையும் அறிந்தார்.
2.மந்திரத்திற்குள் இருக்கும் உட்பொருளை அறிந்தார்.
3.மெய்ப்பொருளைக் காணும் நிலையில் தன் எண்ணத்தைச் செலுத்தினார்.
4.மெய்ப்பொருளை அடைந்தார்.

தன் வாழ்க்கையில் மந்திரங்களைப் பதிவு செய்து கொண்டால் அதன் பின் விளைவுகள் என்ன ஆகும் என்று குருநாதர் எமக்குத் தெளிவுபடுத்திக் காட்டினார்.

1.யார் யார் எந்தெந்த மந்திரங்களைப் பதிவு செய்து கொண்டார்களோ
2.அதே மந்திரத்தைத் திரும்பச் சொல்லப்படும் பொழுது
3.அந்த மந்திரத்தைப் பதிவு செய்தவரின் உணர்வுகள்
4.அந்த உடலை விட்டு உயிர் பிரிந்தபின் (இறந்தபின்) அந்த ஆன்மா மந்திரம் சொல்பவர் உடலுக்குள் வருகின்றது.
5.இந்த மனிதனின் உடலுக்குத்தான் இது பயன்படுத்த முடியும் என்ற நிலையைக் குருநாதர் தெளிவாக உணர்த்துகின்றார்.
7.ஆகவே இதைப் போல மந்திரங்களை எவர் சொன்னாலும் அதை நீ பதிவு செய்யாதே.

அந்த மந்திரங்களை மற்றவர்கள் சொல்வதை நீ கேட்டறிந்தாலும் உடனடியாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என் உடல் முழுவதும் அது படரவேண்டும் என்று மெய் ஒளியின் உணர்வை வைத்துத் துடைத்துக் கொள்.

கேட்டு…, இரசித்து…, “மந்திரம் தானே” என்ற நிலைகள் நீ கேட்டறிந்தாலும் அது உனக்குள் பதிவாகிவிடுகின்றது.

பதிவான பின் அதை நீ நுகர நேரும். இந்த உடலை விட்டுச் சென்றபின் அந்த “மந்திர ஒலிகளிலே” நம் உயிரான்மா அது இயக்கப்பட்டுவிடும்.., சிக்கிவிடும்.

ஆகையினால் எந்த மந்திர ஒலிகளை ஒருவர் சொன்னாலும் அதை அழித்திட “ஓ…ம் ஈஸ்வரா” என்று உயிரை வேண்டு.

அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெறவேண்டும் என்று விண்ணை நோக்கி அந்த உணர்வின் ஆற்றலை உன் உடலுக்குள் சேர்த்துக் கொள்.

நம் உடலை எப்படித் தூய்மைப்படுத்துகின்றோமோ துணியில் இருக்கும் அழுக்கை எப்படித் தூய்மைப்படுத்துகின்றோமோ அதைப் போல் நம் ஆன்மாவிற்குள் பட்ட இந்த உணர்வின் தன்மையைத் துடைக்க வேண்டும் என்றார் குருநாதர்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஆயுள் ஹோமம் செய்கின்றார்கள்.

ஆனால் முதலில் ஆயுள் ஹோமத்தைச் செய்து கொடுப்பவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா…! அப்புறம் அவர் இவருக்கு ஆயுள் ஹோமம் செய்தால் ஆயுள் எப்படி விருத்தியாகும்?

நாம் இதைத் தெரிந்து கொள்ளவும் செய்கின்றோம். தெரிந்தாலும் செய்கின்றோம்.

1.ஆயுள் ஹோமம் செய்பவரே இறந்து போகின்றார்.
2.அப்புறம் அவரிடம் போய் ஆயுள் ஹோமம் செய்தால் எப்படி ஆயுள் நீடிக்கும்?
3.”நம்முடைய ஆசை…” இதைச் செய்தால் ஆயுள் நீடிக்கும் என்று செய்கின்றோம்?
4.யாருக்கு ஆயுள் நீடிக்கின்றது…! ஒருவருக்கும் நீடிப்பதில்லை.

சனிப் பெயர்ச்சி… குரு பெயர்ச்சி… இங்கே போ… அங்கே போ… என்று “ஏழரை நாட்டான் பிடித்துக் கொண்டான்…” அப்படி என்று ஜாதகக் குறிப்பு சொல்கின்றது.

ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு சட்டத்தை இயற்றுகின்றது. இயற்றிய அந்தச் சட்டத்தைப் பதிவு செய்து அதையே மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் அதுவே நமக்குள் இயக்குகின்றது.

ஜோதிடம் பார்ப்பவனிடம் சென்று பையன் பிறந்திருக்கின்றான். பையனுக்கு “நல்ல நேரம் வருகின்றதா….! கெட்ட நேரம் வருகின்றதா….! என்று அந்த ஆசையில் கேட்கின்றீர்கள்.

அவன் அந்தத் தேதியின் பிரகாரம் சட்டங்களில் எழுதி வைத்த பிரகாரம் படித்துக் கொண்டு வருகின்றான்.

அது நமக்குப் பொருந்தி அதைச் சொன்னவுடன் வரிசைப்படுத்தி அதைச் சிருஷ்டிக்கின்றோம். நம் எண்ணத்தால் எடுத்துக் கொள்கின்றோம்.

பையன் பிறந்திருப்பான். குழந்தை அவனுக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லி தந்தையார் இவனின் எதிர்காலம் எப்படி இருக்கின்றதோ என்று எண்ணிக் கேட்பார்.

ஜோதிடம் பார்ப்பவன் எழுதி வைத்த குறிப்பைப் படித்தவுடன் அவன் சொன்னதை மனதில் பதிய வைத்துக் கொள்வார். தாயிடம் வந்து குழந்தை குழந்தை பிறந்த நேரம் ஏழரை நாட்டான் சனி பிடித்திருக்கிறது என்று சொல்வார்.

“ஆஹா…” அந்தப் பிறந்த கருவின் தன்மை இந்த உணர்வின் நினைவை அங்கே கூட்டுகின்றது.
1.ஒன்றும் அறியவில்லை என்றாலும் கூட
2.நம்முடைய அணு செல்களில் பதிவு செய்து கொள்கின்றோம்.

நம் பாசத்தின் நிலைகள் கொண்டு அங்கே பதிவு செய்து கொண்ட பின் இரண்டாவது பையனுக்கும் ஆபத்து…, “அதனால் கொஞ்சம் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்பார்கள்.

அவனை உடனே கூப்பிட்டு…, அங்கே ரோட்டிலே பார்த்துப் போடா… பஸ்ஸில் ஆபத்துடா… போகாதடா…. இதைச் செய்யாதேடா…! என்று அவனிடமும்
1.இந்த விதையை விதைத்து விடுகின்றோம்.
2.பஸ்ஸை விட்டுப் போனாலும் வீட்டை விட்டுப் போனாலும் இவன் எங்கே போனாலும்
3.எங்கே போய் அடிபடுகின்றானோ…! என்னமோ…! ஏதோ…! என்ற இந்த சிந்தனை
4.அவன் பின்னாடியே நம் எண்ணங்கள் போய்க் கொண்டிருக்கும்.
5.வெளியிலே போனால் போதும். இப்படித்தான் வரும்

அப்பொழுது ஜோதிடக்காரன் உருவாக்கிக் கொடுத்தது எனக்குள் உருவாகி அதையே நான் சிருஷ்டிக்கின்றேன். அப்புறம் என்ன ஆகின்றது?

ஏழரை நாட்டான் சனி பிடித்ததென்றால் கொடுக்கல் வாங்கலில் ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பார்கள்.

வியாபாரத்திற்குச் சென்றால் கொடுக்கல் வாங்கலில் தன்னையே சுருக்கி நாம் உணர்வினுடைய நிலைகளைக் கவர்ந்து நாம் எந்த நினைவு கொண்டு இருக்கின்றோமோ அதற்குத் தக்க தான் வியாபாரம் ஆகும்.

நீ எதை நினைக்கின்றாயோ நீ அதுவாகின்றாய். இந்த வேதனை வரும்… துன்பம் வரும்… என்ற இந்த எண்ணத்தைக் கூட்டி நாம் செலுத்தி அடுத்தாற்போல் நாம் எங்கே சென்றாலும் இந்த உணர்வே வரும்.

என் உணர்வுகள் வாங்க வருவோர் செவிக்குள் பட்டவுடன் நான் எதை நினைக்கின்றேனோ அதன் உணர்வே அதையே எனக்குள் அவரைப் பேச வைக்கின்றது.

ரேடியோவில் எந்த ஸ்டேசனைத் திருப்பி வைக்கின்றோமோ அந்த அலை வரிசையில் வருவதைத்தான் பாடும்.

1.எந்தச் சந்தேக உணர்வை எனக்குள் எடுகின்றேனோ
2.இந்த உணர்வின் ஒலிகள் மற்றவர்கள் செவிகளில் பட்டவுடன்
3.அந்த உனர்வின் நிலைகள் அங்கே இயக்கச் செய்து
4.அந்தப் புலனறிவை எனக்கு அது ஊட்டும் – இது இயற்கை
5.இது தான் இன்றைய நிலைகளில் நாம் ஜாதகம் பார்க்கும் நிலை.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நான் எல்லா வித்தைகளையும் கற்றுக் கொண்டவன். தவ வலிமை கொண்டவன் அனைத்தையும் அறிந்துணர்ந்தவன் கூடு பாயும் வித்தைகளை எல்லாம் தெரிந்தவன் என்ற நிலையில் அன்றைய அரசர் காலங்களில் நிறையப் பேர் உண்டு.
1.பிறருடைய எண்ணங்களைத் தன் மந்திரத்தால் அறிந்துணர்ந்து
2.இன்னொரு உடலுக்குள் புகுந்து அந்த உடலுக்குள் நின்று
3.பலருடைய ஆற்றல்களையும் சக்திகளையும் பெற முடியும் என்று இருந்தவர்கள் பலர்.

அந்த அளவிற்குச் சென்றாலும் ஒரு உடலுக்குள் ஊடுருவி பாம்பு உடலிலோ மற்ற மனிதனின் உடலிலோ சென்றாலும் இந்த உடலில் வாழப்படும் பொழுது அந்தச் சந்தர்ப்பத்திற்கோப்ப கடினமான நிலைகள் வந்தவுடன் என்ன ஆகின்றது?

இப்பொழுது சாதாரண மனிதன் தான் வளர்த்துக் கொண்ட நிலைகளுக்கொப்ப ஒருவr உணர்ச்சிவசப்பட்டு அதே நிலைகளில் ஏங்கியிருந்தால் இங்கே செல்லும்.

முதலிலே கூடுவிட்டுக் கூடு பாய்ந்துவிடலாம். ஆனால் அதிலிருந்து புகுந்த உடலில் அவன் எடுத்துக் கொண்ட அசுத்த நிலைகள் மறுபடியும் கூடு விட்டுக் கூடு பாயும் நிலைகள் அந்தச் சக்திகள் இழந்துவிடுகின்றது.

மறு கூட்டினுடைய நிலைகள் கொண்டு எந்த உடலைப் பெறுகின்றதோ அந்த உடலின் உணர்வின் சக்தி கலக்கப்பட்டு அந்த உணர்வின் ஆன்மா தேய்ந்து தேய்ந்து கட்டெறும்பாகத்தான் ஆகின்றது.

அப்படித் தேய்ந்துதான் இன்றும் பல வித்தைகளைச் செய்கின்றது. இன்று நாம் பார்க்கலாம்.
1.பலர் அருளாடுகின்றார்கள்…,
2.பல சித்தர்கள் இவர் உடலிலிருந்து செயல்படுகின்றார்கள் என்று சொல்வார்கள்.

இந்த உடலிலிருந்து செயல்பட்டாலும் இந்த உடலுக்கொப்ப ஆசைகள் தூண்டப்பட்டு இன்றைய வாழ்க்கைக்குக் காலத்தை வேண்டுமென்றால் தள்ளலாம்.

அதே சமயம் “அறிதல்…” என்ற நிலைகளில் முன் கூட்டியே மற்றவைகளையும் மற்றவர்களைப் பற்றியும் அளந்தறிந்து
1.அவர்கள் துன்பத்தையோ நோய்களைப் பற்றியோ
2.அறிந்துணர்ந்து அவர்களால் சொல்லவும் முடியும்.

அப்படிச் சொல்வார்களேயானால் அவர்களுடைய உணர்வுகள் அனைத்தும் இவர் உடலில் சேர்ந்து அந்தத் தீமையான உணர்வின் சத்துகள் இவர் உடலுக்குள் விளையத் தொடங்கும்.

சொல்லும் நிலைகள் கொண்டு அறிந்து கொள்ளலாம்.

அதே சமயத்தில் பலருடைய துன்பத்தின் நிலைகள் இவர் உடலிலே சேர்க்கப்பட்டு நஞ்சான நிலைகள் கொண்டு அடுத்து நஞ்சான உடல்களாக மாறும் நிலைகள் தான் வரும். மனிதனாகக் கூட மீண்டும் பிறக்க முடியாது.

மந்திரத்தால் மக்கள் மத்தியிலே நான் அதைச் செய்கிறேன்… இதைச் செய்கிறேன்… என்றும் அந்தத் தாய் செய்கின்றது… இந்தத் தாய் செய்கின்றது…, என்றும் சொல்வார்கள்.

அந்தத் தாய்… என்பது எது?

எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தியைத்தான் தாய் என்கிறார்கள். அந்தச் சக்தியின் தொடர் வரிசையின் நிலைகள் ஒரு மனிதனுக்குள் எந்த நிலைகள் வளர்த்துக் கொள்கின்றனரோ அந்தச் சக்திகள் செயல்படுகின்றன.

சாமியார் செய்வார் மந்திரம் செய்யும் ஜோதிடம் செய்யும் இயந்திரம் செய்யும் இந்தச் சக்தி செய்யும் அந்தச் சக்தி செய்யும் என்றால்
1.“எந்தச் சக்தியும் செய்யாது”.
2.அவர்கள் மனித ஆசையில் எடுத்துக் கொண்ட சக்தி
3.இந்த மனித உடலில் சிறிது நேரம் நமக்கு மகிழ்ச்சியைத் தரும்.
4.அடுத்த கணம் துன்பத்தில் ஆழ்த்திவிடும்.

ஒவ்வொரு மனிதனும் அவரவர் ஆசைக்கொப்ப எத்தனையோ மந்திரங்களைச் சொல்கின்றார்கள்.

இந்த மனித உடலில்
1.ஒவ்வொருவருடைய ஆசை விருப்பு வெறுப்பினுடைய நிலைகள் வெளிப்பட்டு
2.அதனின் நிலைக்கோப்ப எந்தெந்தத் தெய்வங்களை எண்ணுகின்றனரோ
3.அந்த உணர்வின் அலைகளைத்தான் இயக்கச் செய்ய முடியும்.
4.அந்த நிலைகளில் தான் வாழ்க்கை அமைந்திருக்கும்.

இன்னும் அந்த நிலைகளில் தான் நாமும் இருக்கின்றோம். இதைச் செய்தால் சரியாகுமா…? அங்கே போனால் சரியாகுமா…? தர்மம் செய்தால் சரியாகுமா…! என்று அலைந்து கொண்டே தான் இருக்கின்றோம்.

யாரோ எவரோ தான் செய்வார்கள்… நம்மால் எப்படி முடியும்…! “எல்லாம் அவன் செயல்…!” என்று இப்படித்தான் எண்ணம் உள்ளது.

இதை எல்லாம் மாற்றிப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

குருநாதர் காட்டிய அருள் வழியை நீங்கள் ஏற்றுக் கொண்டால்தான் “நமது” என்று வருகின்றது

 

கோடிச் செல்வம் வைத்திருந்தாலும் சரி… அதை வைத்து இந்த உடலை நாம் அழகு படுத்தினாலும் சரி…
1.இந்த உடலை நாம் காக்கப் போவதில்லை… இது நிலைத்திருக்கப் போவதும் இல்லை… இது நிலையனதும் இல்லை.
2.நிலையாக இல்லாத இந்த உடலுக்கும் நிலையற்ற சொத்துக்கும் தான் அது பயன்படுகிறது.

இதைக் காக்க எவரால் முடியும்…!

1.சொத்தை வைத்து என் பிள்ளையைக் காப்பேன்…! என்று யாராலும் உறுதி கூற முடியுமா..?
2.தேடிய சொத்தை என் பையன் வைத்துக் காப்பான் என்று நீங்கள் எண்ணுகின்றீர்களா…?

அப்படி வைத்திருந்தாலும் வேதனையைத் தான் உருவாக்கும் நிலை வருகின்றது. செல்வத்தைத் தேடினாலும் பையன் குறும்புத்தனம் செய்தான் என்றால் “இப்படிச் செய்கிறானே…!” என்ற வேதனையை உங்களுக்குள் வளர்த்து உடலை விட்டுச் சென்ற பின் அவன் உடலுக்குள் சென்று அவனை அழிக்கத்தான் முடியுமே தவிர… அவனைக் காக்க முடியாது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் மனிதன் விடுபட வேண்டும் என்பதற்குத் தான் முன்னோர்களை விண் செலுத்தும் தத்துவத்தைத் தெளிவாகக் கொடுத்தார்கள் ஞானிகள்.

ஆகவே… நம்மைச் சார்ந்த முன்னோர் மூதாதையர்களின் உயிரான்மாக்களை விண்ணுக்குச் செலுத்தி அவர்களை முதலில் பிறவியில்லா நிலை அடையச் செய்ய வேண்டும்.

ஒரு தேரை இழுக்கிறோம் என்றால் ஒருவரால் இழுக்க முடியாது. பலரும் சேர்ந்து தான் அந்தத் தேரை இழுக்க வேண்டும்.

1.கூட்டுத் தியானத்தின் மூலம் பலரும் சேர்ந்து அந்த மகரிஷிகளின் அருள் உணர்வின் சக்தியை நுகர்ந்து வலுவாக்கிக் கொண்டு
2.நம் மூதாதையர்கள் ஆன்மாக்களை (இதற்கு முன் நம் செய்யத் தவறியதை) முறைப்படி நாம் விண் செலுத்த வேண்டும்.

ஏனென்றால் விஞ்ஞான அறிவால் இந்தக் காற்று மண்டலமே விஷத் தன்மையாகி விட்டது. அதை நுகரும் போது விஷ அணுக்கள் நமக்குள் உருவாக்கப்பட்டு… சிந்தித்துச் செயல்படும் திறன் இழக்கப்பட்டு… அசுர உணர்வு கொண்ட கொடூர செயல்களைச் செய்யும் தன்மை இன்று உருப்பெற்று வருகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நாம் விடுபடுதல் வேண்டும்.

உயிர் மனிதனாக நம்மை உருவாக்கிய பின்… பௌர்ணமி எப்படி ஒளியாக… முழுமையாகப் பிரகாசிக்கின்றதோ அதைப் போல் அறிந்திடும் அறிவாற்றல் பெற்றவர்கள் தான் நாம்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் ஒளியின் சரீரமான அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை உபதேச வாயிலாக உங்களுக்குள் பாய்ச்சப்படும் பொழுது… நினைவு கொண்டு நீங்கள் எண்ணி எடுத்தீர்கள் என்றால் வாழ்க்கையில் வரும் தீமைகளை நீங்களே அகற்றும் சக்தியும் அருள் ஒளியை வளர்க்கும் சக்தியையும் நீங்கள் பெறுகின்றீர்கள்.

1.அந்த நிலை பெறச் செய்வதற்கே எமது குருநாதர் காட்டிய அருள் வழியில்…
2,இல்லை… நமது குரு…!
3.ஏனென்றால் அவர் காட்டிய அருள் வழியை நீங்கள் ஏற்றுக் கொண்டால் “நமது” என்று வருகின்றது.
4.ஆனால் நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை இல்லை என்றால் “எனது குரு…” என்று தான் வருகிறது.

அவர் காட்டிய முறைப்படி அந்த அண்டத்தின் சக்தியை இந்தப் பிண்டத்தில் சேர்த்து உணர்வின் சக்தி ஒளியாக ஆக்கும் சக்தியை உங்களுக்குள் பதியச் செய்கிறேன் (ஞானகுரு).
1.எமது குரு (ஈஸ்வரபட்டர்) ஒளியின் சரீரமாக இருக்கும் அவர் வழியில் செல்லப்படும் பொழுது
2.இந்த முறைபப்டி செய்தால் நமது குரு என்று வருகிறது.

இதன் வழியில் சென்றால் இந்த வாழ்க்கையில் வரும் இருளை உங்கள் எண்ணத்தால் போக்க முடியும்.

ஏனென்றால் இருளை நீக்கும் அந்த ஒளியின் தன்மையைப் பெற்று ஒளியின் சரீரமாக ஆக வேண்டும். பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும். அதற்குத் தான் இந்த உபதேசம்…!

உயிரின் உயர்வுத் தன்மையை உணர்ந்து நாம் வாழ வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

இந்தப் பூமியின் இயக்கத்தின் கதியால் பூமி எதை எதை எடுத்து வளர்க்கின்றதோ அந்தத் தொடரின் அமிலக் கலவையின் உயர்ந்த வீரியம் கொண்ட உயிர் நிலை தான் மனிதச் சரீரம் எடுக்கும் உண்மை நிலை.

பூமியின் இயற்கைத் தன்மையிலேயே அறிவின் ஆற்றலைச் செயலாக்கும் திறன் கொண்ட மனித நிலையில் ஜீவித சரீர ஓட்டத்தில்
1.எந்தச் சுவையின் உணவு முறையில் மனிதன் உண்டு வாழ்கின்றானோ
2.அந்த அமிலம் மட்டுமல்லாமல் இந்தப் பூமியிலுள்ள கனி வள அமிலத் தன்மையின் குணமும் மனிதச் சரீரத்தில் உண்டு.

மனிதன் தான் எடுக்கும் சுவாசத்தின் உணர்வால் இந்தப் பிறப்பின் தொடர் வாழ்க்கையில்
1.பிறப்பு… இறப்பு…! என்ற இயற்கையின் கதியில் உட்பட்டு
2.அதையே நியாயப்படுத்தி வாழ்கின்றானே தவிர
3.மனிதனுக்குள் மறைந்துள்ள “நான் என்பது யார்…?” என்ற நிலையை மனிதன் உணரவில்லை.
4.பிறப்பையும் இறப்பையும் ஏற்றுக் கொண்ட நிலை தான் உள்ளது
5.எங்கிருந்து வந்தோம்… எங்கே செல்ல வேண்டும்… ஏன்… எதற்காக.. எப்படி…? என்று அறியும் நிலை இல்லை.

ஆனால் கோள்களில் செயல்படும் எண்ணிலடங்காத தெய்வ சக்திகளின் சூட்சமத்தின் சூட்சமமே “மனித உயிரும்…!”

மனித உயிரின் ஜீவித உடலின் உயிர் அணுக்கள் தான் உயிர்ப்பித்து உணர்வு கொண்ட சுவாச கதியில் செயல் கொண்ட அமில உயிர்ப்புத் தன்மைகள் அதனுடைய கதியின் நிலைக்கொப்பத்தான் வாழ்க்கையின் எண்ண உணர்வு நிலையின் செயலின் கதி ஓட்டம் இன்று மனிதன் வாழும் நிலை.

(அதாவது உயிரால் ஜீவன் பெறும் நம் உடலில் உள்ள அணுக்கள் அனைத்துமே அந்த உயிரின் தொடர்பால் தான் சுவாசிக்கும் நிலையே பெறுகிறது. அப்படி வெளியிலிருந்து உடலுக்குள் வரும் பல சக்திகள் அது எந்த எந்த உணர்வு கொண்டு வந்ததோ அதற்கு ஒப்பத்தான் நம்முடைய் எண்ணம் சொல் செயல் இயங்கி நம் வாழ்க்கையே அமைகிறது)

இந்த உலகில் கலந்துள்ள அமிலத்தின் அனைத்துத் தொடர்புகளும் மனித உயிரின் சூட்சமத்தில் அடங்கியுள்ளது. அது எல்லாவற்றையும் பெறும் தகுதியும் உண்டு.

ஆனால் இன்றைய மனித வாழ்க்கையில்
1.எண்ணத்தின் உணர்வு சரீர இயக்கத்தின் கதியால் இருப்பதாலும்
2.”சரீரத்தையே நான்…!” என்ற முறைப்படுத்திச் செயல்படுத்துவதாலும்
3.சரீரத்திற்காக மட்டுமே பிறப்பின் தொடர் கொண்டு தன் வாழ்க்கையை அமைத்து வாழ்வதாலும்
4.கடைசியில் இறப்பு நிலையை எய்துகின்றனர்.

உயிரின் உயர்வை ஒவ்வொருவரும் இனியாவது உணர்ந்து கொள்ளுங்கள்.

தாயத்து… மந்திரித்த கயிறு… கட்டுவதனால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

 

உதாரணமாக தன் வாழ்க்கையில் விரக்தி அடைந்து ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம். யார் மீது அவர் பற்று கொண்டு வாழ்ந்தாரோ அவர் தற்கொலை செய்ததைக் கேள்விப்பட்டு ஆ…! என்று அதிர்ச்சி அடைந்தால் போதும். அந்த ஆன்மா இவர் உடலுக்குள் வந்துவிடும்.

இப்படி இந்த உடலுக்குள் வந்த பின் அந்தப் பேய் மனம் கொண்ட உணர்வுகளையே இந்த உடலுக்குள் தூண்டும். ஆனால் புகுந்த உடலில் எந்த எரிச்சல் இல்லை என்றாலும் இது (புகுந்த ஆன்மா) “எரியுதே… எரியுதே…!” என்று எரிச்சலை ஊட்டும்.

இந்த உடலில் உள்ள நல்ல அணுக்கள் அனைத்தும் மடியத் தொடங்கும்.
1.இத்தகைய நிலைகள் ஆன பின் தாங்காது
2.இதுவும் அதே வேலையைச் செய்யும்.

இதிலிருந்து நாம் எப்படி மீள்வது..?

ஆனால் பக்தியின் தன்மையில் நாம் இதற்கு என்ன செய்கிறோம்…? கோவிலில் போய் அர்ச்சனை செய்தால் இந்தக் கஷ்டம் தீரும். அதற்கும் முடியவில்லை என்றால் யாகத்தை வளர்த்துப் பாவத்தைப் போக்கிக் கொள்…! என்று சொல்கிறார்கள்.

யாகத்திலே அவர்கள் சொல்லும் மந்திரத்தைக் கேட்டுப் பதிவாக்கிக் கொள்கிறோம்.
1.இன்ன மந்திரத்தையே நீ சொல்லிக் கொண்டிருந்தால் உனக்குத் தொந்திரவு இல்லை
2.காளி உன்னைக் காப்பாற்றும்…! என்று எந்தக் காளியை அவர் வணங்குகின்றாரோ இவ்வாறு சொல்வார்கள்.

உதாரணமாக புலியைக் கண்ட பின் மற்ற மிருகங்கள் எல்லாம் அஞ்சத் தான் செய்யும். பொதுவாகக் கோப உணர்வு கொண்டு இறந்த ஆன்மாக்கள்… அந்தக் காளியை வணங்கத் தான் நேரும்.

அந்த மந்திரத்தைச் சொல்லியே வாழ்ந்து கடைசியில் அந்த ஆன்மா வெளியிலே வந்தது என்றால் அதே மந்திரத்தைச் சொல்லும் போது “காளியை (ஆனால் அது ஆவி) நான் வசியம் செய்துவிட்டேன்…!” என்பார்கள்.

இதற்குள் ஒரு உணர்வினைச் செலுத்தி கரு மையாக்கி உடலிலே ஒரு இரட்சையாகப் (தாயத்து) போட்டுவிடுவார்கள்.

போட்ட பின் புலியைக் கண்டு எப்படி மற்ற மிருகங்கள் அஞ்சி ஓடுகின்றதோ இதே போல் அந்த இரட்சையைத் தொட்ட பின் உடலில் இருக்கும் அந்த ஆன்மா (முதலில் புகுந்தது) பயந்து ஓடும்.

பின் இதே உணர்வின் தன்மையைச் சில காலம் சுவாசித்தால் போதும். தாயத்து கட்டி இருப்பவர்கள் பெரும்பகுதியானோர் உடலில் எல்லாம் பார்க்கலாம். கை கால் குடைச்சல் இருந்து கொண்டே இருக்கும்…! (தாயத்தில் இருக்கும் பிறிதொரு ஆன்மாவின் இயக்கம்)

இந்த உணர்வுகள் உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு எதிர்நிலையாகி இடையூறு ஊட்டும்.
1.இந்த உணர்வின் தன்மையை அதிகமாகச் சுவாசித்தால் அப்புறம் இன்னொருத்தரிடம் போய் தாயத்தைக் கட்டச் சொல்லும்.
2.இன்ன இடத்தில் போய்த் தாயத்தைக் கட்டினால் நன்றாகும் என்று கேள்விப்பட்டவுடனே அங்கே போவோம்.
3.இப்படி ஒவ்வொரு மந்திரக்காரர்களிடம் நாம் போய்ச் சிக்கிக் கொள்ள வேண்டியது தான்…!

நாம் இறந்த பின் என்ன நடக்கும்…? இதே மந்திரத்தைச் சொல்லி நம் ஆன்மாவைக் கைவல்யப்படுத்திக் கொள்வான் “இன்னொரு மந்திரவாதி…”

முதல் மந்திரக்காரன் என்ன வேலை செய்தானோ அதே வேலைக்கு நம்மை இவனும் பயன்படுத்துவான். யானை தேய்ந்து கட்டெறும்பாக ஆன மாதிரி ஆக வேண்டியது தான்…!

நாம் நினைக்கின்றோம் உடலில் இருக்கும் பொழுது பல தொல்லைகள் என்று…! ஆனால் உடலை விட்டுப் பிரிந்து சென்றால் எந்த நிலை ஆகின்றோம்…! என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கிறேன் (ஞானகுரு).

ஆனால் விஞ்ஞானிகள் இதை எல்லாம் தெளிவாக்குகின்றார்கள். ஒரு தாய் கருவுற்ற பத்து நாளிலேயே அந்தக் கருவில் வளரும் சிசுவை ஒரு காந்த ஊசி கொண்டு (கதிர்கள் மூலமாக) இலேசாக எடுத்து மோதச் செய்கிறார்கள். அப்பொழுது அந்தச் சிசு வேதனையால் துடி துடிக்கின்றது…!

இதை எல்லாம் நேரடியாகக் காட்டுகின்றார் குருநாதர். ஏனென்றால் அன்றைய ஞானிகள் இதை எல்லாம் மிகவும் தெளிவாகவே உணர்த்தியுள்ளார்கள்.

1.கருவுற்ற தாய் ஒன்றைக் கூர்மையாக உற்றுப் பார்த்துப் பயந்து அந்த உணர்வின் தன்மையை நுகரப்படும் பொழுது
2.கருவில் வளரும் உயிருக்கும் இந்த உணர்வுகள் பாய்ச்சப்பட்டு
3.தாய் பயப்படுவது போன்றே அந்தக் குழந்தையும் பயப்படுகிறது.

நாம் துடிப்பதைப் போன்றே கருவில் இருக்கும் குழந்தையும் துடிக்கின்றது. இதுகள் எல்லாம் கருவில் வளரும் குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைகின்றது.

இந்த மனித வாழ்க்கையில் நம்மை அறியாமலே இது போன்ற தீமைகள் வருகிறது. இதை எல்லாம் மாற்றி அமைத்த அருள் ஞானிகளின் சக்தியை எடுத்து உங்களை நீங்கள் காத்துக் கொள்ள வேண்டும்… உடலுக்குப் பின் ஞானிகள் வாழும் எல்லையை அடைய வேண்டும்…! என்பதற்கே இதை எல்லாம் சொல்கிறேன் (ஞானகுரு).

உண்டு கழித்து உறங்கி இனத்தைப் பெருக்கும் நிலைக்குத் தான் தான் இன்றைய மனித ஞானம் செயல்படுகிறது – ஈஸ்வரபட்டர்

 

பலா மரம் அதனுடைய பலனாக ஒவ்வொரு தருணத்திலும் காய்த்துப் பல ஆண்டுகள் அந்த மரத்தினுடைய பலனை வெளிப்படுத்தியபின் அந்த மரம் பட்டு விடுகின்றது.

1.அந்த மரத்தின் பலனான பலாப் பழத்தின் சுவை பக்குவப்படும் நாள் இரண்டு தினங்களே…!
2.அறுத்த பின் அதனுடைய மணமும் சுவையும் அந்த இரண்டு தினங்களுக்குத் தான்…!
3.அந்த நேரத்தில் அந்தக் கனியை மனிதன் தனக்கு உணவாக்கிக் கொள்கின்றான்.

இரண்டு தினங்களுக்கு மேல் அப்படியே வைத்திருந்தால் அழுகிய துர்நாற்றமும் ஈ கொசு எறும்பு போன்ற பூச்சிகள் மொய்க்கத் தொடங்குகிறது. அதற்குப் பிற்பட்ட நாளில் அந்தக் கனியிலேயே புழுக்கள் புழுத்து விடுகின்றது.

பலாக் கனியின் பயனை இரண்டு நாளில் சுவையாக மனிதன் உட்கொள்கின்றான். அதே சமயத்தில் அந்த இரண்டு நாளிலேயே அதனைத் தன் உணவுக்காகப் பல நாட்கள் கெடாமல் பக்குவப்படுத்தும் வழியையும் மனிதன் செய்து கொள்கின்றான்.

பலா மரத்தின் கனியின் சுவையைச் சுவைப்பதற்காக மனிதன் அதனை மீண்டும் மீண்டும் பயிர் செய்கின்றான். மனித இனத்தின் உணவின் பெருக்கத்திற்கு வித்தாக்கி வளர்க்கின்றான்.

மனிதனின் பக்குவத்தால் பலா மரத்தின் வளர்ச்சியின் விகிதங்கள் பூமியின் இயற்கையில் கூடுகின்றது. ஏனென்றால் பலா மரம் தானாக வளரக்கூடிய நிலை அதிகம் இல்லை.

1.மனிதனின் செயல்பாட்டினால் பூமியின் இயக்கத்தில் தாவரத்தின் இனப் பெருக்கத்தை வளர்த்துக் கொள்வது போல்
2.கனி வளங்களான உலோகங்களின் வளர்ச்சியை மனிதனின் செயலால் இந்தப் பூமியின் இயக்கத்தில் வளர்க்க முடியவில்லை.

பூமியின் ஜீவ ஜெந்துக்களின் இன விருத்தியையும் நீர் நிலைகளில் வளரும் முத்துக்கள் போன்ற சில இனங்களையும் மனிதனின் செயல்பாட்டால் வளர்க்க முடிகின்றது.

1.பூமியில் உருவாகும் அனைத்துத் தனிமங்களையும் வெட்டி எடுத்துப் பயன்படுத்தும் மனிதனால்
2.அந்த உலோகத் தன்மையைத் தன்னுடைய செயலால் வளர்க்க முடியவில்லை… விளைய வைக்கவும் முடியவில்லை.
3.ஆனால் இந்தப் பூமியின் ஜீவ நாடியே பூமிக்குள் விளையும் உலோகங்கள் தான்…! விஞ்ஞானிகள் இது வரை உணரவில்லை.

ஆக இன்றைய மனிதனின் ஞானச் செயலும் விஞ்ஞான வளர்ச்சி கண்ட மனிதனுடைய திறமையும் உயிரினங்களையும் தாவரங்களையும் தனக்கு உணவாக்கிக் கொள்ளும் தேவைக்காகத் தான் செயல்பட்டுக் கொண்டுள்ளது.

இந்தப் பூமியின் ஜீவ நாடியான உலோகத்தை அழித்து வாழும் மனிதனின் ஞானம்
1.உலோகத்தின் பெருக்கத்தை வளர்க்கும் மெய் அறிவை மெய் ஞானத்தில் கூட்டினான் என்றால்
2.இந்தப் பூமியையே ஆட்சி செலுத்தும் “உயர் ஞானியாக…” ஆகலாம்.

உலோகத்தின் சத்தைக் கொண்டு தான் இயற்கையின் கதியை இந்தப் பூமியின் பெருக்கத்தின் ஜீவ நாடியாக்க முடியும் என்பதனை மனிதனின் மெய் அறிவு இனிமேலாவது விழிப்படைதல் வேண்டும்.

ஏனென்றால் மனிதன் என்பவன் உண்டு உறங்கிக் கழிக்க மட்டும் இந்தப் பூமியில் பிறப்பு எடுக்கவில்லை. ஞானத்தின் பகுத்தறிவை மெய்யின் விழிப்படைந்து மனிதன் இந்தப் பூமியின் இயக்கத்தின் செயல் சூட்சமத்தில் சுழல வேண்டும்.

சூரியனும் பல கோள்களும் இந்தப் பூமியின் தொடர்புடன் சுழலும் பொழுது இந்தப் பூமியின் இயக்கத்தின் கதியில் வாழும் மனிதன் “இந்த மெய்யை அறிதல் வேண்டும்…!”

கடும் விஷத்தையும் பேரொளியாக மாற்றும் திறன் கொண்ட துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தான் உங்களைப் பெறச் செய்கின்றோம்

 

இந்த உபதேசத்தைப் பதிவாக்குவோர் ஒவ்வொருவரும் உங்கள் வாழ்க்கையில் அகஸ்தியனின் அருளாற்றலைப் பெற்றுச் சிந்தித்துச் செயல்படும் தன்மை பெறலாம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருளை நமக்குள் பெருக்கி நம் உடலில் உள்ள அணுக்களை உயிருடன் ஒன்றாக்கப்படும் போது ஒளியின் உடலின் உணர்வாக மாறுகின்றது.

இந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தான் நாம் இதைச் சேர்க்க முடியும்.

1.இதிலே நாம் சற்று சலிப்படைந்தாலோ அல்லது சிறிது தடையானாலோ
2.இந்த மனிதனின் வாழ்க்கையில் விஷத் தன்மைகள் நம்மை ஆட்கொண்டுவிடும்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் ஞான வித்தைப் பதிவாக்குகின்றேன் (ஞானகுரு). இதை மீண்டும் மீண்டும் நினைவாக்கி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் கவரப் பழகிக் கொள்ளுங்கள்.

1.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அருள் ஞானத்துடன் நீங்கள் வாழ்ந்து
2.இல்லற வாழ்க்கையிலும் சரி… தொழில் வழியிலும் சரி… மற்ற நிலைகளிலும் சரி…
3.தீமைகளை அகற்றும் வல்லுநராக நாம் ஆக வேண்டும்.

தீமையை அகற்றும் வல்லுநராக ஆக வேண்டும் என்றால் ஒவ்வொரு நிமிடமும்
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஏங்கிக் கவர்ந்தே ஆக வேண்டும்.
2.உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பரப்பியே ஆக வேண்டும்.

இத்தகைய நிலைகளில் வாழ்க்கையில் நீங்கள் செயல்படுவீர்கள் என்றால் இந்த உயிர் மனித உடலை உருவாக்கிய நிலை கொண்டு நாம் என்றும் ஏகாந்த நிலை பெறலாம் அது தான் “விஜய தசமி…”

நம் உயிர் பூமிக்குள் விஜயம் செய்து பத்தாம் நிலை என்ற நிலை அடைந்து… “ஏகாதசி…” என்றுமே அழியாத தன்மையாக அந்த ஒளியான நிலைகளை நாம் முழுமை அடையும் தன்மை பெறுகின்றோம்.

எதை வைத்து…?

இந்த ஆறாவது அறிவை வைத்துத் தான்…! அதனால் சற்று சிந்தித்து இந்த மனித வாழ்க்கையைச் சீராக்கிக் கொள்ளுங்கள்.

1.ஏனென்றால் சர்க்கஸில் விளையாடுவது போல்
2.“கரணம் தப்பினால் மரணம்…!” என்ற நிலையில் தான் இன்றைய மனித வாழ்க்கை நிலை உள்ளது.

நாம் எத்தகைய நல்ல மனிதராக இருந்தாலும் சந்தர்ப்பத்தில் பேதங்கள் வரும் பொழுது நம் நல்ல சிந்தனை இழந்து தவறு செய்வோனாகவே மாறுகின்றோம்.

நல்ல பண்புள்ளவராக இருப்பினும் பிறர் செய்யும் தவறுகள் நமக்குள் வந்தால் நம் குணங்களும் மாறுபட்டு நாமும் தவறு உள்ளவர்களாக மாறுகின்றோம்.

தவறு செய்தே வாழும் தன்மை வரப்படும் பொழுது இந்த உடலுக்குப் பின் மீண்டும் இன்னொரு உடலுக்குள் தான் செல்ல முடிகின்றது. இந்த உடலில் எத்தகைய உணர்வை நுகர்ந்தோமோ அதற்குத் தக்க தான் இந்த உடலை மாற்றுகின்றது உயிர்.

ஆகவே தினமும் காலை துருவ தியானத்தில் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில்
1.துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை ஏங்கித் தியானித்து
2.இந்த உடலில் பதிவாக்கி அதன் உணர்வைச் சுவாசமாக்கி எடுத்துக் கொண்டால்
3.தீமையை நீக்கிடும்… நஞ்சினை வென்றிடும்… நஞ்சினை ஒளியாக மாற்றிடும் சக்தியை நாம் பெறுகின்றோம்.
4.வைரம் எப்படி விஷத்தின் தன்மை ஒளியாக மாறுகின்றதோ அதைப் போல்
5.விஷத்தின் தன்மையை ஒளியாக மாற்றும் திறன் கொண்டது தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள்.

அந்தச் சக்தியைத் தான் உங்களைப் பெறும்படி செய்து கொண்டிருக்கின்றோம்…!

ஆத்ம விழிப்பு நிலை என்றால் என்ன…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

1.இந்தப் பூமியின் சமைப்பு அமிலத்தின் முதிர்வு நிலையின் முலாம் தன்மை தான்
2.மனித உடலின் அமிலக்கூறின் வார்ப்பு நிலை. (பூமியின் முதிர்ந்த வளர்ப்பு தான் மனிதன்)

பூமிக்கு அடியில் உருவாகும் உலோகத் தன்மையில் முதிர்வு நிலை வளர வளர பூமியின் முதிர்வின் வலுத் தன்மை கூடுவதைக் காண்கின்றோம். (உலோகத்தின் வளர்ச்சியில் பூமி அடுத்து நட்சத்திரமாகிப் பின் சூரியானாக வளர்ச்சி பெறும்.)

தாவர இனங்களின் வளர்ச்சியில் காய்களாக உருவாகும் பொழுது அந்தப் பிஞ்சு முற்றிப் பழமாகிப் பழுத்து விடுகின்றது. அதற்கடுத்த நிலையாக அதனுடைய கொட்டை மீண்டும் ஒரு வித்தாகப் பயிருக்கு வருகின்றது.

ஆனால் உலோக வளர்ச்சியில் பல மாறுபாடு கொண்டு அதனுடைய வளர்ச்சி முதிர்வின் நிலை பெறுகின்றது. முதிர்வு நிலை பெற்ற உலோகம் தான் செயலுக்கு வருகின்றது.

இந்தப் பூமியின் இயற்கை வளத்தை ஒட்டிய உயிர் அணுக்களின் வளர்ச்சி யாவும் உலோகப் படிவத்திலும் தாவர இன வளர்ச்சியிலும் மாறி மாறி வளர்கிறது. பல உருவங்களாகப் பரிணாம வளர்ச்சி அடைகின்றது.

அப்படி உயிர் பெறும் அத்தகைய ஜீவ ஜெந்துக்களின் உயிராத்மாவின் பரிமாணம்
1.வலு கொண்ட மனித உருவத்திற்கு வரவும்
2.அதிலே ஞானத்தின் ஒலியை எடுக்கும் செயலாக உருவத்திற்கு வரவும் பல கோடி ஆண்டுகள் ஆகின்றன.

அப்படி வளர்ந்து வந்த மனிதன் ஞானத்தின் முதிர்வு நிலை பெற்றுத் தன் ஆத்மாவின் வலுவின் ஒளியை விழிப்பு நிலைக்கு (ஒளிச் சரீரமாக) வித்தாக ஆக்கவில்லை என்றால் என்ன ஆகும்…?

ஆரம்பத்தில் பூமியில் இருக்கும் முலாம் தன்மையில் (தாவரத்திலும் உலோகத்திலும்) உயர் நிலை பெற்ற வலுவை… அந்த வலுவை வளர்த்த தொடர்ச்சியைப் போல்
1.மீண்டும் மிருக இனத்திற்கும்
2.மற்ற ஜீவ ஜெந்துக்களின் இன நிலைக்கும்
3.புழு பூச்சியாகத் தாவர இனம் மற்ற உலோக நிலைக்கும்
4.பூமியின் சுழற்சி வட்டத்தில் பல கோடி ஆண்டுகளுக்குச் சுழலும் நிலை தான் ஏற்படும்.
5.பல கோடி ஆண்டுகளில் வளர்ந்து மனிதனான நாம் மீண்டும் தேய்பிறையாகிக் கீழே போய் விடுவோம்.

பூமியின் சுழற்சியுடனே பல வார்ப்பில் வளர்ந்த நாம் நம்முடைய இந்த மனித வாழ்க்கையின் தொடரில்
1.தன் உயிராத்மாவின் வளர்ச்சியை வளர்க்காதபடி
2.உடலின் இயக்கத்துக்கு அடிமைப்பட்டு வாழ்ந்தால்
3.இந்தப் பூமியின் இயக்கச் சுழற்சியில் மட்டும் தான் சிக்கிக் கொண்டிருக்க முடியும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து ஒவ்வொருவரும் விடுபட வேண்டும். ஏனென்றால் இந்தப் பூமியின் வளர்ச்சியில் வலுப் பெற்ற வளர்ச்சியே மனிதனின் நிலை தான். பூமியின் செயல்பாட்டிலேயே உயர்ந்த நிலை கொண்டதும் மனிதனின் நிலை தான்.

மனிதன் தன்னைத் தானே உணரும் ஞான ஒலியை… அதாவது அந்த “ஆத்மாவின் விழிப்பையும்…” அதன் மூலமாகப் பெறும் ஆத்ம ஒளியின் செயல்பாடு கொண்ட சக்தியினால் தான் சூட்சம இயக்கம் சுழல்கிறது.

1.கனம் கொண்ட கயிறைச் சுற்றி முறுக்கும் பொழுது “திடம்” பெற்று விடுகின்றது.
2.சில பொருள்களை வேக வைக்கும் பொழுது அதனுடைய “மணம்” வெளிப்படுகின்றது.
3.சில பொருள்கள் எரியும் பொழுது அதனுடைய மணமும் எண்ணமும் “ஆவியாக” புகை நிறத்தில் வெளிப்படுகின்றது.

அந்தந்தச் செயல்பாடுகளுக்கொப்ப அடுத்த நிலையின் மாற்றத்தில் (வேக வைத்தலோ அல்லது எரித்தலோ) திடமாகும் பொழுது
1.அதனுடைய வார்ப்பு நிலை
2.கயிறைத் திரித்தவுடன் முறுக்குவதைப் போன்று
3.கெட்டித் தன்மை ஏற்பட்டு விடுகின்றது.

பொருளை வேக வைக்கும் பொழுது ஆவி வெளிப்பட்டுப் பொருள் திடப்படுகின்றது. பொருளை எரிக்கும் பொழுது நீர்ச் சத்து வெளியேறி அந்தப் பொருள் பஸ்பமாகிச் சாம்பல் தான் திடமாகின்றது.

அதைப் போன்று இந்த ஆத்மாவின் இயக்கம்…
1.சரீரத்தின் ஓட்டத்தில் வாழும் காலத்தில்
2.ஆத்மாவின் வலு வளர்ச்சியைத் திடமாக்கிக் கொள்ள வேண்டும்
3.ஏனென்றால் ஆத்மாவின் வலு திடம் பெற்றால் தான் உயிரின் பரிமாணம் அதிகரிக்கப்படும்.

மனிதனுக்கு அடுத்த உயர்வு நிலையான ஞான நிலை எய்திட அந்த மெய்யை அறியும் மெய் அறிவிற்கு முலாமாக்கும் நிலையாக (சக்தியைச் சேமிக்கும்) ஆத்மாவின் முதிர்வு நிலையை “விழிப்பு…” நிலையாக்கினால் தான் முடியும்.,

அத்தகையை ஆத்ம விழிப்பு நிலை பெறவேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

ஒவ்வொரு நிமிடமும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும்
1.அந்த ஆத்மாண்டவனை..
2.நம் உயிரான ஈசனைப் புருவ மத்தியில் ஈஸ்வரா…! என்று எண்ணி
3.மெய் வழியைக் காட்டிக் கொண்டிருக்கும் சகல ரிஷிகளின் நேரடி அலைத் தொடர்பில்
4.உயிர் வழிச் சுவாசமாக ஈர்த்தெடுக்கும் பேரருள் பேரொளி வளர்ப்பினால் தான் முடியும்.

என் கடைசி எல்லை பிறவி இல்லா நிலை தான்..! என்ற உறுதி கொள்ளுங்கள்

 

சொர்க்கத்தை அடையும் தகுதி பெற்ற இந்த மனித உடலில் பிறருடைய குறை உணர்வுகளை நாம் நுகர்ந்து விட்டால் என்ன ஆகும்…?
1.நம் காரியங்கள் அனைத்தும் செயலற்றதாக ஆகிவிடுகிறது.
2.நமக்குள் குழப்ப நிலைகளை உருவாக்கி சிந்தித்துச் செயல்படுத்தும் சக்தியையும் இழக்கின்றோம்
3,நாம் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறும் தகுதியையும் இழந்து விடுகின்றோம்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும்.

அரும் பெரும் சக்தியை உங்களுக்குள் பதிவு செய்கிறேன் (ஞானகுரு) ஞான வித்தை உங்களுக்குள் உருவாக்குகிறேன். குரு காட்டிய அருள் வழியில் அந்த வித்தினை உங்களுக்குள் பெருக்க வேண்டும்.

1.இந்த வாழ்க்கையில் இனிப் பிறவி இல்லா நிலைகள் அடைவேன்.
2.அரும் பெரும் சக்தியான மகரிஷிகளின் அருள் சக்திகளை எனக்குள் சேர்ப்பேன்…
3.அருள் வழியில் இந்த வாழ்க்கையை வாழ்வேன்…
4.என் கடைசி எல்லை பிறவி இல்லா நிலை தான்..! என்ற
5.இந்த உறுதி கொண்ட உணர்வுடன் வாழ்ந்து பழகுங்கள்.
6.உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.

ஆனால் மற்ற எந்த ஆசை கொண்டு எண்ணி எடுத்தாலும் அத்தகைய ஆசைகளால் செல்வங்கள் நிலைப்பதில்லை.

செல்வம் இருப்பினும் இந்த உடல் உபாதையான காலங்களில் கூட அது செலவழிக்கப் போதுமானதாக இருப்பதில்லை. பணம் அதிகமாக இருப்பினும் உடல் நலிவுற்ற நேரங்களில் நல்ல உணவையும் உட்கொள்ள முடிவதில்லை.

இது போன்ற நிலைகளில் விடுபட்டு இந்தப் பிறவி நிலை என்ற கடனைக் கடந்து பிறவி இல்லா நிலை அடையும் நிலையைச் செயல்படுத்துதல் வேண்டும்.

கீதை சொல்வது… நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்.
1.நமது வாழ்க்கையில் அருள் ஒளியைப் பெற வேண்டும் என்று நினைத்தால்
2.அருள் ஒளியின் சக்திகளை வளர்க்கின்றோம்… அதுவாக ஒளியாகின்றோம்.

அது இல்லாது இவன் அப்படி… அவன் அப்படி… அவன் அப்படி… அவன் அப்படி…! என்ற நிலைகளில்
1.பார்க்கும் அனைவருக்குள் இருக்கும் குறைகளையும் கண்டு… அதையே கூறிக் கொண்டிருந்தால்
2.குறையின் உணர்வுகள் வளர்ச்சியாகி நோயின் தன்மையாகி இது நமக்குள் அதுவாகவே ஆகின்றது.

நமக்குள் சீர்படும் செயலை இழந்து செயலற்ற நிலைகள் படும் போது நம் தொழிலே குந்தகமாகின்றது. இது போன்ற எதிர்க்கும் உணர்வை வளர்த்து வளர்த்து… நமக்குள்ளேயே எதிரியை உருவாக்கி.. அடுத்து மனிதனல்லாத உருவை உருவாக்கும் தன்மை வந்துவிடுகின்றது. இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.

1.அருள் ஒளி பெற அனு தினமும் மறவாது இருத்தல் வேண்டும்.
2.அருள் ஞானம் பெற மறவாது இருக்க வேண்டும்.

அதற்குத் தகுதியான நேரம் இந்த அதிகால துருவ தியான நேரமே…! நான்கிலிருந்து ஆறுக்குள் விழித்த நேரத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை எடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

உங்கள் உடலில் உள்ள பல கோடி ஜீவ அணுக்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறச் தவறிவிடாதீர்கள்.

1.அருள் ஒளியைப் பரப்புங்கள்… அருள் வழியில் வாழ்க்கை வாழுங்கள்.
2.அருள் சொல்களையே சொல்லிப் பழகுங்கள்…. உங்கள் சொல்லைக் கேட்போரின் தீமைகள் அகலட்டும்.

ஆகவே… அருள் ஞான வழியில் நாம் வாழ்வோம்… வளர்வோம்…! நம் பார்வையில் அனைவரது தீமைகளையும் அகற்றுவோம். நம்மைப் பார்க்கும் அனைவரது தீமைகளும் அகலட்டும்.

அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்திலேயே என்றென்றும் மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்வோம்.

ஞானப் பாதையில் மெய் ஞானிகளைப் பற்ற (பிடித்துக் கொள்ள) வேண்டிய முறை

 

மேலை நாட்டில் இது நடந்த நிகழ்ச்சி. ஒரு சிறுவன் பாலத்தில் இருந்து தவறிக் கீழே விழுந்து விட்டான். கீழே விழுகும் பொழுது ஒரு கம்பியைப் பிடித்து அனாதையாக மூன்று நாள் தொங்கிக் கொண்டே இருக்கின்றான்.

அதை விட்டு விட்டால் கடலில் தான் விழுக வேண்டும். ஆனால் விழுகாதபடி தொங்கிக் கொண்டே இருக்கின்றான். அவன் தொங்கிக் கொண்டிருக்கக்கூடிய இடத்திற்குப் போக முடியாத நிலை. ஏனென்றால் அது ஒரு மலை உச்சி.

அவனைக் காப்பாற்ற நான்கு நாள் ஆனது.
1.அது வரையிலும் அவன் மன உறுதி கொண்டு இறுக்கிப் பிடித்திருக்கின்றான்.
2.இப்படி எல்லாம் இயற்கையின் நியதிகள்… தன் மன வலுவால் தன்னைக் காக்கும் நிலை அவனுக்கு வருகிறது.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் ஞானிகள் காட்டிய அருள் வழியில் நம்முடைய மன வலிமை எதிலே… எப்படி இருக்க வேண்டும்…?

அந்த அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்ற மன வலிமை எந்த நேரத்திலும் நமக்கு இருக்க வேண்டும். அப்படிப்பட்ட மன உறுதி இருந்தால்
1.சிந்தித்துச் செயல்படும் தன்மையையாக அது இயக்கச் செய்யும்
2.நம்மைக் காத்துக் கொள்ளும் அருள் உணர்வுகள் வளரும்.

அதற்குத்தான் தொடர்ந்து உங்களுக்கு உபதேசித்துக் கொண்டே இருக்கின்றேன் (ஞானகுரு). இந்த அருள் உணர்வுகளைப் பதிவாக்கிய பின் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து அந்தச் சிந்தித்துச் செயல்படும் ஞானத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

1.ஆக.. உங்களைக் காக்க உங்கள் நினைவு தான் வர வேண்டுமே தவிர
2.நான் (ஞானகுரு) காப்பாற்றுவேன்…! என்ற இந்த எண்ணத்தில் இருந்தால்
3.தான் எடுக்கக்கூடிய சக்தியை இழந்து விடுகின்றோம் என்று தான் பொருள்.

இன்றைய உலகில் விஞ்ஞான அறிவால் கடுமையான விளைவுகள் வருகின்றது. அதிலிருந்து நாம் தப்ப வேண்டும்.

இந்த உபதேசத்தின் வாயிலாக அருளைப் பெருக்கும் நிலையை உங்களுக்குள் உருவாக்குகின்றேன். அதைப் பெருக்கும் அருள் ஞானம் உங்களுக்குள் வளரட்டும்.

அந்த ஞானம் உங்களுக்குள் வளர வேண்டும் என்பதற்குத்தான் இந்தத் தூண்டுதலைக் கொடுத்து அதன் மூலம் ஞானிகளின் உணர்வை உங்களைச் சுவாசிக்கச் செய்கிறோம்.

ஞானிகளின் உணர்வுகளைச் சுவாசிக்கும் போது உங்கள் இரத்தங்களில் ஒரு புது விதமான ஓட்டங்கள் இருக்கும். அந்த உணர்வின் தன்மை பல நிலைகள் பல கலவைகள் ஆகின்றது.

சிந்திக்கும் ஆற்றலைப் பெருக்கும் அந்தக் கருத்தன்மை (அணுவாக மாறும் தன்மை) உங்களிலே உருவாகின்றது. அதை வளர்த்துக் கொண்டால் அருள் ஞானத்தைக் கொண்டு வாழ்க்கையைச் சீரபடுத்த “உங்கள் எண்ணம் உங்களுக்கு உதவும்…!”

காரணம்… அத்தகைய அணுக்கள் உருவாகி விட்டால் அந்த உணர்வின் தன்மை நுகரும் போது
1.உங்கள் உயிரிலே படுகின்றது. சிந்திக்கும் ஆற்றல் வருகிறது.
2.நல்ல உணர்வை நுகரச் செய்கிறது.. நல்ல அணுக்கள் உடலில் விளைகிறது… அருளைப் பெருக்குகிறது.
3.இந்த உடலுக்குப் பின் ஞானிகளின் அருள் வட்டத்தில் நாம் செல்கிறோம்.
4.எந்த ஞானி இருளை நீக்கி ஒளியாக மாற்றினானோ அவன் ஈர்ப்பு வட்டத்திற்கே நாம் செல்ல முடியும்.

ஆகவே… துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தைச் சென்றடைவதே மனிதனின் கடைசி எல்லை…!

உயிர் ஒளியானது… எத்தனையோ கோடிச் சரீரங்களிலிருந்து தப்பிடும் உணர்வு பெற்றுத் தான் இந்த மனித உடலை அமைத்தது நம் உயிர்.

எல்லாத் தீமைகளையும் வென்று உணர்வின் தன்மை ஒளியாக ஆனவன் துருவ நட்சத்திரம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை எப்படியும் நீங்கள் பெறவேண்டும் என்பதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்கு இதை உபதேசிக்கின்றேன்.

குருநாதர் எனக்குப் பல அனுபவங்களைக் கொடுத்தார். அதன் வழியிலேயே தான் உங்களுக்குள் பதிவாக்குகிறேன். இதை மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் அந்த அருள் ஞானம் உங்களைக் காக்கும் சக்தியாக வருகின்றது.

1.அந்த ஞானத்தின் வழி கொண்டு தான்
2.அருள் ஞானத்தை வைத்து இருளை நீக்கிடும் அந்த மெய் ஞானிகளாக நீங்கள் மாற முடியும்.

உறக்க நிலை… மயக்க நிலை… உடலை விட்டுப் பிரிந்த நிலை இவைகளில் மனிதனின் எண்ண ஓட்டம் எப்படி உள்ளது…?

 

நம்முடைய எண்ணம் ஓடிக் கொண்டே உள்ளது உடல் உறங்கும் வரை.

உறக்கத்தில் உடலையும் எண்ணத்தையும் மறந்துள்ள தன்மையில் கனவுகள் சில நேரம் நமக்கு வருகின்றது. எல்லாக் கனவுகளும் மீண்டும் நம் நினைவுக்கு வருவதில்லை.

உறக்கம் இல்லாத நிலையில் கண்ணை மூடிக் கொண்டிருந்தாலும் உடல் உறங்கும் வரை நம் எண்ணங்கள் ஓடிக் கொண்டே தான் உள்ளது.

சிலருக்குச் சில சமயங்களில் மயக்கம் ஏற்பட்டால் அந்த நேரத்தில் எண்ணத்தின் ஓட்டமில்லை. மயக்கம் தந்து (ANESTHESIA) உடல் உபாதைகளை நீக்க அறுவை சிகிச்சைகளைச் செய்யும் வேலைகளில் நம் எண்ணத்தின் ஓட்டம் மறந்து விடுகின்றது.

ஆக விழிப்புடன் உள்ள நேரங்களில் தான் மனிதனின் எண்ண ஓட்டம் ஓடிக் கொண்டே உள்ளது. உடல் உறக்கத்தில் எண்ணத்தின் ஓட்டம் இல்லை. சாதாரண வாழ்க்கை நிலையில் நாம் வாழ்ந்து இறக்கும் வரையிலும் இப்படித்தான் செயலாகின்றது.

1.உறக்க நிலையிலே எண்ண ஓட்டம் இல்லாத பொழுது
2.உடல் இறந்த பிறகு ஆன்மாவின் எண்ணம் செயலாகுமா…?
3.ஆன்மாவின் எண்ணம் செயலாகக் கூடிய வழி முறை யாது…?

சாதாரணமாக இறந்த மனிதனின் ஆன்மா அது உடலை விட்டுப் பிரிந்த பிறகு அந்த ஆத்மாவின் எண்ண ஒலிகள் ஜீவன் பிரிந்த பிறகு செயலாக்கும் சக்தியின் வீரியம் குறைந்து விடுகின்றது.

உடலில் இருக்கும் பொழுது தான் ஏற்படுத்திக் கொண்ட வலு நிலைக்கொப்ப அந்த ஆத்மா இந்தப் பூமியின் சுழற்சியில் அதனுடைய தன்மைக்குகந்த வலுவில் தான் சுழன்று கொண்டிருக்கும் தன் ஆசை நிலைக்கொப்ப…!

அதாவது அதனுடைய செயலுக்குகந்த ஆத்ம சந்திப்பு ஏற்படும் காலம் வரை அப்படியே தான் சுழன்று கொண்டிருக்கும். தானாக மாற்ற முடியாது.

உடல் விழிப்பு இருந்தால் தான் எண்ண ஓட்டத்தின் கதியின் செயலாக சரீர இயக்கத்தின் நிலையே உள்ளது.

அப்படியானால்
1.உறங்கா நிலை…
2.விழிப்பு நிலை… என்பதின் பொருள் யாது…?

உடல் உறக்கமற்ற நிலையில் எண்ணத்தின் விழிப்பு நிலையில் இந்தச் சரீர வாழ்க்கைக்கு ஒத்த அமைப்பு கொண்டது தான் அந்த “எண்ணத்தின் ஓட்டம்…!”

ஆகவே “ஆத்மாவின் விழிப்பு நிலை ஏற்படுத்தும் வலுவால் தான்…” என்றுமே நாம் அழியாத வாழ்க்கையாக என்றும் பதினாறு என்ற பிறவியில்லா நிலையை அடைய முடியும்.

இந்த உடல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த உடலுடன் வாழ்ந்தாலும்
1.வாழும் காலத்தில் மெய் ஞானத்தை அறிய விரும்புவோருக்கு
2.உடல் உறக்கத்திலும் ஆத்மாவின் விழிப்பால் எண்ணத்தின் ஓட்டத்தைக் கொண்டு
3.என்றுமே விழிப்பு நிலை ஏற்படுத்திக் கொண்டால்
4.ஒளியாக… ஜோதி நிலையாக அறியும் நிலைக்கு
5.ஆத்மாவின் எண்ணச் செயல் செயலாக்கும் அந்தத் தெய்வ நிலைக்கு
6.அஷ்டமா சித்தின் சக்தியைப் பெற முடியும்.

வாழ்க்கையில் வரும் “இன்னல்களை” எப்படி எதிர் கொள்ள வேண்டும்…? என்பது ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஜீவன்கள் வாழ இந்தப் பூமியின் ஜீவ நாடியாக நீர் உள்ளதற்குப் பூமியில் எப்பொழுதுமே மழை பெய்து கொண்டிருப்பதில்லை. மேகங்கள் கருத்து இடியும் மின்னலும் தோன்றுகிறது. அப்பொழுது பல இடங்களில் பெய்யக்கூடிய அந்த மழை வெள்ளமாகின்றது.

வெள்ளமே ஆறாகக் கரை புரண்டு ஓடி நீர் நிலைகள் பூமியில் நிறைகிறது. அந்த நீரைக் கொண்டு தான் பல ஜீவராசிகள் உயிர் வாழ்கிறது. ஒரு இடத்தில் பெய்யும் மழை ஆறாகும் பொழுது பல இடங்களுக்குச் செல்கிறது.

இதே நிலை போல் மீண்டும் மீண்டும் அந்தந்த இடங்களுக்கொப்ப ஏற்படக்கூடிய நிலைகளைக் கொண்டு ஜீவராசிகளின் நிலையும் தாவர இனங்களின் வளர்ச்சியின் பயனாகக் கனியும் பூக்களும் (புஷ்பங்களும்) வளர்கிறது.

1.கனியும் பூக்களும் வருவதைப் போன்று தான்
2.மனித உணர்வில் மெய் ஒலி பெற.. மெய் ஒளி பெற… மெய் ஞானமாக்க..
3.பல நிலைகளில் நம் உணர்வின் எண்ணமுடன் மோதிடும் இன்னல்கள் ஏற்படுத்தும் காலங்களை
4.புருவ மத்தியில் “ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணி அந்த ஜீவித உணர்வில் எடுக்கும் ஒலி கொண்டு தான் ஒளியாக மாறும்…!

அதாவது இடி மின்னலைப் போன்றே ஒலி ஒளி செயல் ஏற்படும் இன்னல்கள் அனைத்தையும் பேரொளியாக மாற்ற வேண்டும்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் ஏற்படக்கூடிய எண்ணத்தின் மோதலை இடி மின்னலைப் போன்று உணர்வின் சமைப்பாக நாம் மாற்றும் பொழுது
1.நீரான பெருக்கம் மழையாகி ஜீவன்களை வளர்க்கப் பூமிக்கு வலு ஏற்படுகின்றதோ
2.அதைப் போன்று எண்ணத்தில் எதிர்படும் பல மாற்றங்களையும் உணர்வில் எடுத்து
3.நம் உணர்வுடன் எந்த எண்ணத்தின் மாற்று நிலைகள் மோதினாலும்
4.மேகத்தின் கருமை கொண்டு இடி மின்னல் வெடித்து மழை வருவதைப் போன்று
5.நாம் போகும் மார்க்கத்தில் ஞானத்தின் மெய் ஞானம் அறிய…
6.மோதிடும் எதிர் தன்மைகளை உணர்வின் எண்ணத்தால் மாற்றி உயர்ந்த ஞானத்தின் ஒலியாக நாம் எண்ணினால்தான்
7.அந்த ஒலியே (எந்த ஒலியாக இருந்தாலும்) ஒளியாகும்… நம் ஆத்மா பேரொளியாக ஆகும்.

மெய் ஒலி… மெய் ஒளி பிறக்க… மெய் ஞானிகள் அன்று என்ன செய்தார்கள்…?
1.வாழ்க்கையில் தன் உணர்வுடன் மோதிய “எண்ணத்தின் ஓட்டத்தின் கதியைக் கொண்டுதான்…”
2.எண்ணத்தால் எதிர்படும் எதிர் நிலைகளை ஞானத்தின் பகுத்தறிவால் உணர்ந்து
3.மெய் ஒலி மெய் ஒளி பெற்றால் மெய் ஞானியாகும் குணங்களைத் தன் ஆத்ம ஞானத்தால் வளர்த்து
4.ஆத்ம சக்தியின் சூட்சமத்தை… ஆதிசக்தியின் ஒளி சக்தியாக..
5.அகிலத்தில் படர்ந்துள்ள பரமாத்மாவின் பரம்பொருளை
6.”தனக்குள்ளேயே…!” மெய் ஞானிகள் அன்று கண்டார்கள்.

பால்வெளியில் படர்ந்துள்ள உண்மைத் தன்மைகளை உணரும் சக்தியாக ஆதிசக்தியின் சக்தியை மெய் ஞானிகள் அன்று இப்படித்தான் கண்டார்கள்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம் உயிரிலே மெருகேற்றிக் கொள்ள வேண்டும்

 

அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் உணர்வைச் சூரியனின் காந்த சக்தி கவர்கிறது. நம் பூமி துருவத்தின் வழி அதை இழுத்துக் கவர்கிறது. “துருவத்தில் அந்த அடர்த்தியின் தன்மை அடைகிறது…!”

அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமான அந்தப் பேரருள் பேரொளியை
1.அந்த நேரத்தில் நாம் கவர்ந்து நம் உடலுக்குள் இருக்கும் எல்லா அணுக்களுக்குள்ளும் இணைக்க வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கிச் சுவாசிக்க வேண்டும்.

நம் உடலில் இருக்கும் எல்லா அணுக்களுக்குள்ளும் கணங்களுக்கு அதிபதி கணபதியாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிபதியாக்கிடல் வேண்டும்.

அப்பொழுது நாம் சுவாசித்த உணர்வு நந்தீஸ்வரன் அதனின் உணர்வின் இயக்கமாக தீமையை நீக்கிடும் உணர்வாக நமக்குள் உருவாகிறது.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை அடிக்கடி நுகர்ந்தோம் என்றால் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று சொல்வது போல்
1.தீமையை நீக்கும் உணர்வின் கணக்குகள் கூடி
2.நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்புக்குச் செல்வோம்.

குருநாதர் காடு மலைகள் எல்லாம் எம்மை (ஞானகுரு) அலையச் செய்தார். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் பல இன்னல்களை ஏற்படுத்தினார்.

1.அதை நுகரும் போது உன் உடலுக்குள் மாறுபடும் உணர்வுகள் எப்படி வருகிறது…?
2.பயத்தின் எல்லை கடந்து செல்லும் போது அந்த உணர்வின் தன்மை எப்படி இயக்குகிறது…?
3.உன் உடலில் பதட்டங்கள் எப்படி வருகிறது…? சிந்தனைகள் எப்படிச் சிதறுகிறது…?
4.சிந்தனையில்லாத நிலையில் உன் உடலுக்குள் என்னென்ன மாற்றங்கள் வருகிறது…?
5.உடலில் இரத்த அழுத்தங்கள் (BLOOD PRESSURE) எப்படி அதிகமாகிறது…?
6.அதை எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு எப்படி மாற்ற வேண்டும்…? என்று நேரடியாக அனுபவ வாயிலாகத் தெளிவாக்கினார்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை உங்களுக்குள்ளும் பதிவாக்குகின்றோம். அது பதிவானால் உங்களுக்குள் சிந்திக்கும் ஆற்றல் கூடும்.

1.நாம் தவறு செய்கின்றோமா…?
2.நாம் நுகர்ந்த உணர்வு தவறு செய்ய வைக்கிறதா…? என்று
3.நீங்கள் சிந்தித்துச் செயல்படுவதற்கு இது உங்களுக்கு உதவியாக இருக்கும்.

ஏனென்றால் ஞானத்தின் வழியில் நீங்கள் வழி நடந்து தீமைகள் புகாது தடுக்கும் அந்த வல்லமைகளை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான் எனக்குக் குருநாதர் எப்படி உபதேசித்தாரோ அதே உணர்வைப் பதிவாக்குகின்றேன். பொறுமையாக இருந்து பதிவாக்க வேண்டும்.

கடவுளின் அவதாரத்தில் கூர்மை அவதாரம் என்று கண்களின் ஆற்றலைக் காட்டியுள்ளார்கள் ஞானிகள். அது போல் யாம் உபதேசிக்கும் உணர்வுகளைக் கூர்மையாகப் பதிவாக்கி கொண்டால் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் கணக்குகள் உங்களுக்குள் கூடும்.

அந்தக் கணக்கின் பிரகாரம் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் வலுவாகி அதன் வழி வாழச் செய்து தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வின் சக்தியை உங்களுக்குள் பெருக்கிக் கொள்ள முடியும்.

1.உங்கள் உயிர் கடவுள்
2.உங்கள் உடல் ஆலயம்
3.ஆண்டவன் வீற்றிருக்ககூடிய அந்த ஆலயத்தில் அருள் உணர்வுகளை ஊட்டப்படும் பொழுது
4.இதை நீங்கள் உற்றுக் கேட்டு நுகர்ந்தால் தீமைகளை அகலச் செய்யும்…
5.உங்கள் உடலான ஆலயத்தைப் பரிசுத்தமாக்கும்.

அத்தகைய தூய்மைப்படுத்தும் உணர்வின் தன்மை உங்களுக்குள் அணுக்களாக விளையும். பரிசுத்தமான எண்ணங்களை உங்களுக்குள் தோற்றுவிக்கும்.

ஆகவே உங்கள் உயிரான கடவுளை நீங்கள் மதிக்க வேண்டும்.
1.அவன் வழியே அவனுடன் சேர்த்து ஒளியின் உணர்வாக இருந்து
2.இருளை நீக்கிப் பொருளைக் காணும் செயல்படுத்திய அந்த உணர்வுடன்
3.நீங்கள் ஒன்றி வாழ வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கிறேன்.

நீங்கள் அந்த அருள் சக்தி பெறவேண்டும் என்று நான் (ஞானகுரு) சொல்லும் பொழுது எனது ஈசனும் அதே வழியில் செயல்படுத்தும்.

எத்தனையோ பேரிடம் பழகினாலும் அவர்களும் அருள் உணர்வுகள் பெற வேண்டும்… பொருள் காணும் உணர்வுகள் அவர்கள் பெற வேண்டும்… என்ற இந்த உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது நான் என்னும் இந்த உணர்வுகளை உயிரான ஈசன் எனக்குள் இதை உருவாக்குகின்றான்.

அதே வழியில் நீங்களும் செயல்படுத்திப் பாருங்கள். பேரானந்த நிலை பெறுவீர்கள்.

இந்த உடல் நமக்குச் சதமல்ல… ஆனால் உயிர் அழியாதது….! அதைத் தான் நாம் சொந்தமாக்க வேண்டும். உயிரைப் போன்றே உணர்வை ஒளியாக்கி அதைச் சொந்தமாக்க வேண்டும்.
1.ஆகவே ஒவ்வொரு நிமிடமும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை
2.நமக்குள் செருகேற்றிக் கொள்ள வேண்டும்… உயிரிலே மெருகேற்றிக் கொள்ள வேண்டும்.

அஷ்டமி.. நவமி… தசமி…! என்று சொல்வதன் மூலக் கருத்து என்ன…? – ஈஸ்வரபட்டர்

நம் சூரியக் குடும்பத்தில் சூரியனை மையம் கொண்டு சுழன்று ஓடும் கோள்களும் அதன் உபகோள்களும் பூமியுடன் தொடர்பு கொண்ட 27 நட்சத்திரங்களும் ஒரு மண்டலம் 48 கோள்கள் கொண்டு ஒரு முழுமையாகின்றது.

இந்த வான இயலின் தத்துவத்தை அறிந்துணர்ந்து தன் எண்ணம் கொண்டு ஈர்த்திடும் உயிர் சக்தியின் மின் காந்தத் தொடர் கொண்டு பேரருள் பேரொளியாக அன்றே ஆனவர்கள் மாமகரிஷிகள்.

தனக்குப் பின் வரும் தன் இன மக்கள்
1.நல்ல எண்ணம் நல்ல சுவாசம் கொண்டு தியானத்தின் வழி பெறும் மார்க்கமாகவும்
2.மனித குலம் வாழ்ந்து நல்லாக்கம் பெற்றிடவும்
3.பேரானந்தப் பேரருள் சக்தியாகப் பெற்று ஆதிசக்தியில் கலந்திடவும்
4.அந்த மகரிஷிகள் காட்டிய தத்துவமே “நவஜோதித் தத்துவம்…!”

இராம நவமி என்றும் கோகுலாஷ்டமி என்றும் மக்கள் கொண்டாடி மகிழ்கின்றார்கள். இருந்தாலும் தங்கள் அன்றாட வாழ்க்கையில் நடத்த வேண்டிய கர்ம வினைச் செயல்களுக்கு “அஷ்டமி… நவமி…” என்று காலத்தைக் கணக்கிட்டு அன்று எந்தச் சுப காரியம் செய்யக் கூடாது…! என்கிறார்கள்.

அந்த நேரத்தில் அவதரித்த இராமனையும் கிருஷ்ணனையும் வணங்கிடும் செயலில் “மறைக்கப்பட்ட உண்மைப் பொருளே… நவ ஜோதியின் தத்துவமப்பா…!”

ஆனால் அந்த நவ ஜோதியைத் தன் உயிராத்மாவை ஜோதியாக்கும் செயலுக்குச் செயல்படுத்தும் ஒவ்வொருவருக்கும்
1.வாழ்க்கையின் எல்லா நேரங்களும் நல்ல நேரம் தான்…!
2.நல்ல நேரம் கெட்ட நேரம் என்பது இல்லையப்பா…!
3.விஷ அமில குணங்களையே (துன்பங்களையும் இன்னல்களையும்) அமுதமாக்கிடும் திறன் நாம் செய்யும் தியானத்திலேயே கிடைக்குமப்பா.

நம்முடைய எண்ணத்திலும் சுவாசத்திலும் மாற்றம் கொண்டு விடக் கூடாது…! என்று கூறுவதெல்லாம்
1.விஷத்தின் அமிலத் தன்மையில் ஒலி பிறப்பதைப் போல் (ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது)
2.நம் மீது மோதும் அனைத்திலுமே நம் உயிராத்மா வலுவான சக்தியைப் பெறுவதற்குண்டான
3.அத்தகைய செயற்பாடுகள் நிலை பெற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தான்
4.நவக் கோள்களின் விஷத்தையே “நவபாஷாணச் சிலையாக” முருகனின் சிலையாக உருவாக்கியவர் போகர்.

ஜோதி நிலை – தசமி என்ற பத்தாவது நிலை பெறுவதற்காக
1.தன் எண்ணத்தின் தன்மையை ஞானவேல் என்ற ஆறாவது அறிவை உயர்த்தி
2.வான இயல் சக்திகளைப் புவியியலில் உள்ள மனிதர்கள் அனைவரும் பெற்றிட
3.5300 ஆண்டுகளுக்கு முன்பே வழி காட்டினார் அந்தப் போகமாமகரிஷி.

அதே தத்துவத்தை… அதாவது நவக் கோள்களின் சக்தியை தியான வலு ஈர்ப்பு கொண்டு
1.ஒவ்வொருவரும் தன் உயிராத்மாவின் முலாம் பிரகாசித்துச் சக்தி பெறுவதற்காக
2.நீல வண்ண இராமனாகக் காட்டினார் வான்மீகி மாமகரிஷி.
3.அனைத்துமே ஆத்ம வலு பெற்றிடும் செயல் முறைகள் தான்.

திட்டியவன் உணர்வு நம்மை இயக்குவது போன்றே மகரிஷிகளின் உணர்வை நமக்குள் இயக்கச் செய்ய முடியும்

 

அடிக்கடி நான் (ஞானகுரு) உங்களுக்கு வற்புறுத்துவது எல்லாம் இது தான்…!
1.அழியாப் பேரின்பச் செல்வத்தை நாம் தேடுவதற்குத் தான்
2.மகரிஷிகளின் உணர்வுகளை இங்கே உபதேசிக்கின்றோம்.

ஒவ்வொரு நிமிடமும் எத்தகைய கஷ்டங்கள் வந்தால் அதை மாற்றும் தன்மைக்கு நாம் வரவேண்டும். ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வே அந்த உணர்ச்சியை ஊட்டி அதைச் செயலாக்குகின்றது. அது தான் அரங்கநாதன்.

1.நாம் நுகரும் உணர்வு எதுவோ இந்த உயிரிலே பட்டு அந்த உணர்வுகள் வருகிறது.
2.நாம் பேரருள் பெறவேண்டும் என்ற உணர்வினை நாம் நுகர்ந்தால் அந்த உணர்வுகள் அரங்கநாதங்களாகி
3.தீமைகள் அகற்றும் உணர்வின் தன்மை நம்மை ஆளும்… ஆண்டாள்.
4.தீமைகள் புகாது தடுக்கும் அந்தச் சக்தி பெறுகின்றது.

இதை நீங்கள் மனதில் வைத்து ஒவ்வொரு நிமிடமும் காலை துருவ தியானத்தின் மூலம் எடுத்துக் கொண்ட துருவ நட்சத்திரத்தின் சக்தி கொண்டு உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றிடும் அந்த வலுவைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

என்னுடைய (ஞானகுரு) உபதேசத்தை கேட்டுப் பதிவாக்கிக் கொண்டீர்கள். இந்தப் பதிவின் துணை கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என் உடல் நலமாக வேண்டும் என்று இதை எண்ணி எடுத்துக் கொண்டாலே போதும்.

1.இந்த உணர்வுகள் உங்கள் உடல் என்ற அரங்கத்தில் நாதங்களாகின்றது
2.ஏங்கிப் பெறும் போது அந்த உணர்வுகள் உணர்ச்சிகளாக இயக்குகிறது.
3.இந்த உணர்ச்சிகள் வரும் பொழுது உங்கள் உடலில் எந்த நோய் இருந்தாலும் அது குறையும்.

ஆனால் இதை விடுத்து விட்டு எனக்கு வேதனையாக இருக்கின்றது… என்னால் முடியவில்லை…! என்ற எண்ணத்திற்குப் போக வேண்டியதில்லை.

நோயாக இருக்கிறது என்று வேதனைப்பட்டுச் சொன்னால் அதைக் கேட்டு அதற்கு மருந்து கொடுக்கும் நிலைக்கு இல்லை. “மருந்து கொடுத்து நோயை நீக்கும் வழியைச் சொல்ல வரவில்லை…”

மருந்துக்கு முன்னாடியே…
1.யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல்
2.அருள் ஞானிகளின் உணர்வைப் பதிவாக்கப்படும் பொழுது
3.அந்த உணர்வைக் கிரகித்து இழுக்கும் வலிமை கிடைக்கின்றது.
4.அந்த வலிமை கொண்டு பல தீமைகளைப் போக்கும் சக்திகளை நீங்கள் பெறுகின்றீர்கள்.

அதைப் பெறச் செய்வதற்குத்தான் உங்களுக்கு இத்தனை உபாயங்களும் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

கோவிலுக்குச் சென்று அழுது புலம்பி வரம் கேட்பது போல் இல்லாது… “ஈஸ்வரா…” என்று உங்கள் உயிரை எண்ணி அருள் உணர்வுகளை எடுக்கும் பழக்கத்திற்கு நீங்கள் வர வேண்டும்.

ஏனென்றால் நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ அதை உங்கள் உயிர் இயக்குகிறது. அந்த உணர்வுகள் தான் உடல் முழுவதும் படர்கிறது. அது தான் உங்களை ஆட்சி புரிகிறது…! என்று பல முறை உங்களுக்கு எடுத்துக் கூறுகின்றேன். அதை யாரும் எடுத்துக் கொள்வதில்லை.

ஏனென்றால் யாரோ செய்வார்… எவரோ செய்து கொடுப்பார்…! என்று தான் எண்ணுகின்றோம்.

உதாரணமாக ரோட்டில் நடந்து செல்கிறோம். ஒரு மாட்டைப் பார்க்கிறோம். அழகாக இருக்கிறது என்று இரசிக்கவும் செய்கின்றோம். ஆனால் சாதாரணமாக இருக்கும் அந்த மாடு திடீரென்று நம் பக்கம் வெகுண்டு திரும்பினால் உடனே “ஆ…” என்று அலறுகிறோம்.

அந்த உணர்வின் தன்மை ஆன பிற்பாடு அந்தப் பயம் என்ன செய்கிறது…? நம்மை ஒதுங்கி ஓடச் செய்கிறது. அந்தப் பயத்தால் நம் உடல் நடுக்கமாகி அது அடங்கச் சிறிது நேரம் ஆகிறது.

ஆகவே நம்மை அங்கே எது இயக்குகிறது…? நாம் நுகர்ந்த உணர்வு தான் நம்மை ஆட்டிப் படைக்கின்றது.

இதைப் போல் நாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும்… இருளை அகற்றும் அந்தப் பேரருள் பெற வேண்டும்… என்று ஏங்கினால்
1.அந்த உணர்வு உங்களுக்குள் அருளைப் பெருக்கி இருளைப் போக்கும் உணர்ச்சிகளாக உங்களை இயக்கும்.
2.நல்ல சிந்தனையும் நற் செயலும் வரும்.

இதை எளிதில் பெறச் செய்வதற்குத்தான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் சாமி செய்து தருவார் என்று என்னைத் தான் நம்புகிறீர்களே தவிர உங்களை நீங்கள் நம்புவதில்லை.

உங்களால் அந்த அருளைப் பெருக்கிக் கொள்ள முடியும். இந்தக் காற்றிலே அந்த ஞானிகளின் உணர்வுகள் பரவி உள்ளது. அதை எடுக்ககூடிய எண்ணத்தைத்தான் உங்களுக்குள் பதிவு செய்கிறேன்.

திட்டியவனை எண்ணியவுடன் உங்களுக்குக் கோபம் வருகிறதல்லவா. திட்டியவுடன் அந்தச் சந்தர்ப்பத்தில் சோர்வடைந்து உங்கள் காரியங்கள் தடையாகிறது அல்லவா.

அதற்கு முன்னாடி நம் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருந்திருப்போம். ஆனால் ஒருவன் திட்டி அதனால் நாம் சோர்வடைந்த பின் குழந்தையை இரண்டு சாத்து சாத்துவோம்.

முதலில் குழந்தையை அனுசரிப்போம். சோர்வடைந்த நேரத்தில் குழந்தை ஒரு பேப்பரைக் கிழித்துப் போட்டால் போதும்…! போங்கடா உங்களுக்கு இது தான் வேலையா…? என்று இந்தக் கோபம் நிச்சயம் வரும்.

எந்தக் குழந்தை மேல் மிகுந்த பாசமாக செல்லமாக இருந்தோமோ அந்தக் குழந்தை மீதே இந்த வெறுப்பு வரும்.

அந்த நேரத்தில் கோபிப்பது யார்..? சற்று சிந்தித்துப் பாருங்கள்…! அந்தச் சோர்வான உணர்வு இயக்கப்படும் பொழுது தன் குழந்தை மீது இருக்கும் பாசத்தைக் கூட மறந்து குழந்தையைத் தாக்கும்படி செய்கிறது.

இதைப் போல் தான் ஒரு தீமை செய்யும் உணர்வை ஏங்கிப் பெற்றால் அந்த உணர்வின் இயக்கம் வளர்ந்து நம்மை நல்ல வழிக்கே விடுவதில்லை

1.ஆனால் நல் வழி வளர்க்கும் அருள் ஞானிகளின் உணர்வை நுகர்ந்தால்
2.அந்த உணர்வின் தன்மை நம்மை நல்வழி நடத்தும்.

ஈகோ (EGO) பிரச்சினையால் ஒவ்வொரு மனிதரும் எத்தனையோ துயரப்படுகிறார்கள்

 

நாம் நல்லதை எண்ணும் போது பிறிதொரு தீமை வந்தால் அந்த நேரத்தில் நமக்குள் (மனதில்) போர்கள் எப்படி வருகிறது…? தன் உடலுக்குள் சேர்த்துக் கொண்ட உணர்வுக்கும் நாம் நுகரும் உணர்வுகளுக்கும் நமக்குள் எப்படிப் போர்கள் எப்படி நடக்கின்றது…?

கண்களால் பார்க்கும் உணர்வுகள் நாம் நுகர்ந்து உயிரிலே படப்படும் பொழுது இங்கே குருக்ஷேத்திரம்.

இந்த உடலுக்குள் இருக்கும் அனைத்திற்கும் உயிரே குருவாக இருக்கும் போது…
1.நமக்குள் ஏற்கனவே இருக்கும் எண்ணத்திற்கு மாறான உணர்வை நுகரப்படும் போது
2.இங்கே போர் முறைகள் எப்படி வருகிறது…?

அந்தப் போர் முறை கொண்ட உணர்வுகள் அது இணைத்து அந்த உணர்வின் தன்மை உடலில் வரப்படும் போது நம் உடலில் நல்ல அணுக்களுக்கும் மற்றதுக்கும் போர் எப்படி வருகிறது…?

நம் உடலுக்குள் தீமைகள் எப்படி வருகிறது…? சிந்தனை எப்படி இழக்கப்படுகின்றது…? இதைப் போன்ற செயல்களை எப்படி மாற்ற வேண்டும்…? என்று வியாசகர் தெளிவாகக் கூறியுள்ளார்.

நாம் நல்ல எண்ணம் கொண்டு இருந்தாலும்… பிறருடைய நிலை கௌரவர்கள்… “நான் எதை வளர்த்துக் கொண்டேனோ அதன் வழியே நான் வழி நடத்துவேன்…!”

நான் ஒருவனை நல்லவனாக எண்ணும் போது அந்த நல்லதின் தன்மையை நாம் ஏற்றுக் கொள்ள முடிகிறது. அதே சமயத்தில்…
1.நான் நல்லது என்று எண்ணிக் கொண்டு
2.பிறருடைய நிலைகள் என் வழிக்கு வர வேண்டும் என்று இதை எடுத்துக் கொண்டால் இது “ஈகோ…!”

அவன் சொல்வதை நான் என்ன கேட்பது…? அவன் சொல்வதை நான் ஏன் செய்ய வேண்டும்…? என்ற உணர்வு வந்தால்… இந்த ஈகோ வந்தால் இரண்டு பேரும் சண்டை போட்டுக் கொண்டிருக்க வேண்டியது தான்..!

அவன் சொல்வதோ செய்வதோ நல்லதாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளாத நிலை ஏற்படுகின்றது.

மனிதனாக வாழும் நிலையில் இந்தக் கௌரவப் பிரச்சினைகள் எப்படி வருகிறது…? என்ற நிலையைத் தான் இந்தக் கௌரவர்கள் என்ற நிலையில் கௌரவப் போர் நடத்தினார்கள் என்ற நிலையில் மகாபாரதத்தில் தெளிவாகக் கூறப்படுகின்றது.

இதை எல்லாம் சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

ஒவ்வொரு மகான்களும் அவர்கள் கண்ட பேருண்மையை மக்கள் எப்படிப் பெறவேண்டும்…? எதன் வழி வாழ வேண்டும்…? என்ற நிலையில் நமது நாடு மட்டுமல்ல உலக நாடுகள் எல்லாவற்றிலும் தோன்றிய எல்லா ஞானிகளும் இதைத்தான் கூறியுள்ளார்கள்.

ஆனாலும் இன்று மனிதனின் வேட்கை என்ன…?

நாட்டாசை வரப்படும் பொழுது தன் மதத்தைப் பெருக்கி விட்டால் தன் இணக்கத்திற்கு வந்து விடுவான் என்று செயல்படுகிறார்கள். அவன் தன் இணக்கத்திற்கு வரவில்லை என்றால் உடனே போர் முறை வருகிறது.

இப்படித்தான் அநாகரீகத் தன்மை தான் உலகெங்கிலும் நடந்து கொண்டிருக்கின்றது.

எப்படி வாழ்ந்தாலும் இந்த உடலை விட்டு ஒரு நாள் சென்றே தான் ஆகவேண்டும். எதன் உணர்வை இங்கே உடலில் வளர்த்தோமோ இந்த உயிர் வெளியே சென்ற பின் அசுர உணர்வு கொண்டு தாக்கி வாழும் மற்ற மிருக இனங்களாக நம்மை உயிர் உருமாற்றிவிடும்.

இந்தத் தருணத்திலிருந்து நாம் எப்படி மீள வேண்டும் சற்று யோசனை செய்து பாருங்கள். நாம் எத்தனை கோடிச் செல்வங்கள் வைத்திருப்பினும் அவைகள் நம்முடன் வருகின்றதா…?

அழகான உடலாக நாம் வைத்திருந்தாலும் அன்பு பரிவு கொண்டு பண்புடன் பிறரின் கஷ்டங்களைக் கேட்டறிந்து உதவி செய்தாலும் அவனுடைய கஷ்டம் தான் நமக்குள் வந்து அவர்கள் பட்ட வேதனை தான் நமக்குள்ளும் வளர்கிறது.
1.நம் அழகான உடலும் குறைகிறது
2.தேடிய செல்வமும் அழிகிறது
3.கடைசியில் அதிக வேதனை என்ற உணர்வே வருகிறது.

எல்லோருக்கும் நன்மையைச் செய்தேன் எனக்கு இப்படி நிலை வந்தது என்று இந்த உணர்வை எடுத்துக் கொண்ட பின் என்ன நடக்கின்றது…?

இந்த வேதனை என்ற உணர்வை எடுத்தால் உடலுக்குப் பின் உயிர் நீ எதை வேதனைப்பட்டாயோ அதன் வழி கொண்டு
1.விஷத்தைப் பாய்ச்சி உணவாக உட்கொள்ளும் அதிலே நீ சென்று அடங்கி
2.அங்கே விஷத்தைப் பாய்ச்சி இரசித்து வாழும் உடலை (விஷ ஜெந்துக்களாக) அமைத்துக் கொடுக்கின்றது உயிர்.

அது தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்லப்பட்டது.

இருக்கட்டும்… அவனை நான் தொலைத்து விடுகின்றேன் என்ற உணர்வு கொண்டு நாம் இருந்தால் அதன் வழி பழி தீர்க்கும் உணர்வைக் கொண்டு வருகின்றது.

இதன் உணர்வை எடுத்துக் கொண்டால் பிறரை அழித்திடும் உணர்வு வருகின்றது. இந்த உணர்வுகள் விளைந்து விட்டால் நல்ல குணங்களை நமக்குள்ளேயே கொல்கிறது.

கொன்று கொண்ட இந்த உணர்வின் தன்மை தான் இந்த உயிரிலே மிஞ்சுகிறது. இந்த உடலை விட்டு உயிர் வெளியே செல்லும் தருணம் அது தான் வருகிறது.

அப்படிபட்ட உணர்வுடன் வெளியே சென்ற பின் அடுத்து புலியின் ஈர்ப்புக்குள் சென்று அங்கே புலிக் குட்டியாக மாற்றி மற்றொன்றை இரக்கமற்றுக் கொன்று சாப்பிடும் தன்மை வருகிறது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

ஒரு மண்டலம்… “48 நாள்…” என்ற தியானத்தை நம் முன்னோர்கள் நமக்கு உணர்த்தியதை நாம் அறிந்துள்ளோமா…? – ஈஸ்வரபட்டர்

 

நம் சூரியக் குடும்பத்தில் உள்ள 48 மண்டலங்களிலிருந்து நாம் பெறும் சக்தி நிலையை வைத்துத்தான் இப்பூமியின் நிலை உள்ளது.

இந்தப் பூமியில் தோன்றியுள்ள உயிரினங்களும் மனித உடல் பெற்ற இவ்வாத்மாக்களும் இந்தப் பூமியைச் சுற்றியுள்ள மண்டலங்களின் தன்மையில் மாறுபட்டுள்ளது. மனித ஆத்மாக்கள் அந்த 48 மண்டலங்களிலும் இல்லை.
1.ஆனால் இந்த 48 மண்டலங்களின் சக்தி கொண்டு தான்
2.இந்தப் பூமியில் உள்ள மனிதர்களின் நிலையெல்லாமே உள்ளது.

நமக்கு முதலில் இருந்த சித்தர்களும் ஞானிகளும் கடும் தவமிருந்த நிலையில்
1.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டலத்தின் சக்தியை ஈர்த்தெடுத்து
2.ஒரு மணடலம் என்ற 48 நாளைத் தியானத்திற்குகந்ததாக எடுத்து
3.பேரண்டத்தின் பல உண்மைகளை அந்த ஜெபத்தினால் அறிந்தனர்
4.அதன் வழியில் வந்தது தான் நாம் இன்று சொல்லும் ஒரு மண்டலம் 48 நாள் என்ற முறையெல்லாம்.

நம் முன்னோர்கள் நமக்கு உணர்த்திய பல முறைகளை நாம் ஊன்றிப் பார்த்தால் ஒவ்வொன்றின் உண்மை நிலையும் நமக்குப் புரிந்திடும்.

கண்ணில் நாம் சாதாரணமாகப் பார்க்கும் பொழுதே வானத்தில் எண்ணிலடங்காத நட்சத்திரங்களைக் காண்கின்றோம். புள்ளி போல் நாம் காணும் நட்சத்திரங்கள் எல்லாம் நாம் வாழும் பூமியைக் காட்டிலும் பல மடங்கு பெரிய மண்டலமாகச் சுற்றி வாழ்கின்றன. நம் சூரியனைக் காட்டிலும் இன்னும் வேகமாகச் சுழலும் பல சூரிய மண்டலங்களும் உள்ளன.

புள்ளியாகத் தெரியும் அத்தகைய மண்டலங்களில் பல மண்டலங்களில் நம்மை ஒத்த இந்த மனித உடல் பெற்ற ஜீவாத்மாக்கள் உள்ளன. பல மண்டலங்களில் நம்மைக் காட்டிலும் திறன் பெற்ற ஜீவாத்மாக்களும் உள்ளன.

ஆனால் நம் பூமியைச் சுற்றியுள்ள நாம் காணும் சூரியனிலிருந்து இந்த 48 மண்டலங்களிலுமே நம்மை ஒத்த இந்த மனித உடல் கொண்ட ஜீவாத்மாக்கள் இல்லை,

இந்த உலகிலே நாம் மனிதனாகப் பிறவி எடுத்து வாழும் பாக்கியத்தைப் பெற்றிருக்கின்றோம். அந்தச் சித்தர்கள் ஞானிகள் மகரிஷிகள் வழியில் ஜெபத்தின் அருளைப் பெற்று எண்ணத்தையும் நினைவையும் தூய்மையாக்கி நாம் பெற்ற சக்தியை அழியாச் சக்தியாக்கிடல் வேண்டும்,

இந்த உலகில் உதித்துள்ள மனித உயிரணுக்களுக்கெல்லாம் தாம் செய்யும் ஜெப நிலையில்
1.நாம் வேறல்ல இந்த உலகம் வேறல்ல
2.இந்த உலகைச் சுற்றியுள்ள பிற மண்டலங்கள் வேறல்ல
3.தனித்து நிற்பவை எவையுமில்லை
4.எல்லாவற்றிலும் எல்லாமாகக் கலந்துள்ள நாம்
5.நம் உயிராத்மாவைப் பெரும் சக்தியுள்ளதாக ஆக்கி சகல நிலையையும் ஈர்த்தெடுத்து அறிந்திடலாம்.
6.இந்த உலகத்தின் உண்மையை மட்டுமல்ல சகல மண்டலங்களின் நிலையையும் அறிந்திடலாம்.

ஏனென்றால் உங்கள் எல்லோருக்குமே அந்தத் தகுதி உண்டு…!

1.படைத்தவனின் படைப்பான நீங்கள்
2.படைக்கப்பட்டவனின் படைப்பாக… படைப்பின் படைப்பாக
3.படைக்கும் நிலைக்கு உருத் தாருங்கள்…!

ஆண்டவனின் சக்தியைத் தான் பெறுகிறோமா…? – ஈஸ்வரபட்டர்

 

இன்று இவ்வுலகில் ஒவ்வொரு பகுதியிலும் வசிக்கின்ற மக்களின் எண்ணம்… வாழ்க்கை முறை… இதைப் பொறுத்து அங்கங்கு வாழும் மக்கள் அவர்கள் எந்த நிலை கொண்ட சுவாச நிலையில் வாழ்ந்தார்களோ உடலை விட்டுப் பிரிந்த பின் அந்தந்த நிலையிலேயே அவ்வாவிகள் சுற்றிக் கொண்டேயுள்ளன.

தெய்வப் பற்றும் ஒற்றுமைப் பற்று கொண்ட கூட்டு நிலை கொண்ட குடும்ப நிலைகளும் இங்கே (நம் நாட்டில்) உள்ளது.

ஏனென்றால் அன்று வாழ்ந்த சித்தர்களின் நிலையினால் இங்கு ஆண்டவன் என்ற பக்தியை மக்களின் மனதில் பல ரூபம் கொண்ட கல்களிலே வடித்து உணர்த்திச் சென்றதால் இங்கு வாழ்ந்த மக்களின் எண்ணம் எல்லாம் ஏறக்குறைய ஒன்று போல் சுற்றிக் கொண்டுள்ளது.

தெய்வத்தைக் கல்லின் ரூபத்தில் பக்தி கொண்டு வணங்கிய நிலை கொண்டு இங்கு வாழ்ந்த மக்கள் அவரவர்கள் வாழ்ந்த காலத்தில் எடுத்த சுவாசத்தையும் எண்ணத்தையும் கொண்டே கடைசியில் உடலை விட்டுப் பிரிகின்றார்கள்.

உடலை விட்டு ஆவி பிரிந்து சென்ற பிறகும் அந்நிலையிலேயே தான் அந்த ஆவிகள் சுற்றிக் கொண்டுள்ளன.

அவ்வாறு சுற்றிக் கொண்டிருக்கும் அந்த ஆவிகள் கோவில்களுக்குச் சென்று வணங்கிடும் நிலையில் உள்ளவர்களின் நிலையில் அந்த ஆவி அவர்களின் உடலுக்குள் சென்று சில நிலைகளைச் சொல்கிறது.
1.அதாவது சாமி வந்து அருள் வாக்குச் சொல்கிறது என்பதுவும்
2.அருள் வந்து ஆடுவதுவும் எல்லாம் இந்நிலை கொண்ட இந்த நாட்டில் தான்
3.நம்மை நம் முன்னோர்கள் நடத்திச் சென்ற பாதையில் வந்ததுவே இந்த நிலை.

இதே நிலை ஒவ்வொரு நாட்டிலும் வேறுபட்ட நிலையில் உள்ளது.

அங்குள்ள மக்களின் எண்ண நிலைகளும் வாழ்ந்த நிலைகளும் பக்தி தெய்வப் பற்று எத்தன்மையில் இருக்கின்றதோ அதற்குத்தக்க அந்த ஆன்மாக்கள் அவர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்றன.

அந்த நிலை கொண்டு அது சுற்றிக் கொண்டுள்ள நிலையில் தன் எண்ணத்திற்கும் செயலுக்கும் உடைய உடல்களை ஏற்று வருகின்றது அங்கங்கு (மற்ற நாடுகளில்) உள்ள நிலை.

ஆனால் பக்தி என்னும் நிலையில் இங்கு ஏன் இந்த நிலை…?

1.இங்கு மட்டும் தான் அந்த ஆண்டவன் உள்ளானா…?
2.ஆண்டவன் எந்த நிலையில் இங்கு அருள் தருகின்றான்..? என்றெல்லாம் எண்ணினாலும்
3.அந்த ஆண்டவனின் நிலையைப் பற்றி நம் சித்தர்கள் நமக்குத் தெளிவாக உணர்த்திய நிலையை
4.நாம் ஏற்றுக் கொண்ட நிலையால் வந்தது தான் இந்த நிலை.

உலகில் உள்ள பல பாகங்களில் பல நிலைகள் கொண்டு அந்த ஆண்டவனை எண்ணிப் பல வழிகளிலும் வணங்குகின்றார்கள்.

அவர்கள் எல்லாம் எந்த நிலையில் அந்த ஆண்டவனின் அருள் வருகிறது…? என்றே புரியாத நிலை கொண்டு வணங்குகின்றார்கள்.

அதே சமயத்தில் இன்று இந்த உலகில் உள்ள எல்லாப் பாகங்களிலுமே தன்னத் தான் நம்பாமல் ஜோதிடம் என்ற நிலையில் நம்பி வாழ்கின்றார்கள்.

அந்த நிலையை எல்லாம் யார் சொல்கிறார்கள் என்று உணராமல்
1.பல ஆவிகளின் தொடர்புடன்
2.தன்னைத் தான் நம்பாமல்
3.பிற ஆவிகளுக்கு அடிபணிந்து வாழ்கின்றதப்பா… இன்றைய இந்த உலகமே…!

ஆவியின் நிலை எந்த நிலையில் தன் எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ளலாம் என்று சுற்றிக் கொண்டுள்ளது. அந்த நிலைக்கே அடிபணிகின்றான்.

1.ஆண்டவனின் ரூபமாக அந்த ஆவியையே வணங்கி இன்றைய மனிதன் வாழ்கின்றான்.
2.எந்த நிலையில் வாழ்ந்தால் என்ன..? அந்த ஆவியே வந்து நமக்கு நல்ல உபதேசம் அளிக்கும் பொழுது…! என்று…

பல நன்மைகளை நமக்குச் செய்யும் பொழுது நாம் ஏன் அதை ஏற்கக் கூடாது என்று எண்ணுகின்றார்கள். (முருகன் சொன்னான்… அம்மா வந்து சொல்கிறது… ஆத்தா சொல்கிறாள்… அது சொல்கிறது… இது சொல்கிறது… பரிசுத்த ஆவி… எல்லாமே இந்த நிலை தான்)

எல்லா ஆவிகளின் நிலையுமே எந்த மனிதனின் மேல் சென்று அதன் காரியத்தைச் செலுத்துகின்றதோ “அதே நிலையில் அந்த மனிதன் உள்ள நாள் வரைதான்…!” அது அவனுக்கு உதவி செய்யும்.

அதன் எண்ணமும் அது ஏற்றிருக்கும் மனிதனின் எண்ணமும் மாறுபடும் பொழுது…
1.எந்த நிலை கொண்டெல்லாம் அது மனிதனுக்கு உதவியாக வந்ததோ
2.அதற்கு மேல் தீமை செய்ய வல்லது அந்த ஆவிகளின் நிலைகள் எல்லாம்.

இந்தப் பூமியில் மனிதப் பிறவி எடுத்த உயிராத்மாக்களின் நிலை எல்லாம் ஒரே ஆத்மாவைக் கொண்டு இந்த உடலில் வாழ்ந்திடவில்லை. பல ஆத்மாக்களின் நிலை எல்லாம் தாக்கித் தான் மனிதன் வாழ்கின்றான்.

இதிலிருந்து மனிதன் மீள்வதற்குத் தன்னைத் தான் நம்பும் நிலைக்கு வர வேண்டும்…!

தன்னுள் எந்தத் தீய சக்திகளுக்கும் இடம் கொடுக்காமல் கோபத்தையும் அச்சத்தையும் அகற்றித் தன் நிலையைச் சமமாக்கிடல் வேண்டும். தான் எடுக்கும் எண்ணத்தையும் சுவாசத்தையும் நல் நிலையாகப் பெற்று வாழ்ந்திட வேண்டும்.

ஆகவே நல் உணர்வை எடுங்கள். ஈஸ்வரபட்டனாகிய நான் நல் வாழ்த்து அருள்கின்றேன்… “ஜெகஜோதி வாழ்க்கை வாழ்ந்திடுங்கள் என்றே…!”

குறை காணும் பழக்கத்தை மாற்றி குறைகள் அகல வேண்டும் என்று எண்ணத்திற்கு நாம் வர வேண்டும்…!

 

நான் நல்லதைத் தான் செய்கிறேன்… என் பையனுக்கு எத்தனையோ நல்லதைச் செய்தேன் ஆனால் என் பையன் சொன்னபடி கேட்கவே மாட்டேன் என்கிறான்…! என்று தாய் தந்தையர் சொல்வார்கள்.

முதலில் அவனைப் பற்றி உயர்வாகப் போற்றித் தான் பேசுகிறோம். ஆனால் சிறு தவறுகள் நடந்த பின் “நான் நல்லதைச் சொன்னேன் கேட்க மாட்டேன் என்கிறான்…!” என்ற நிலையில் பக்குவம் தவறி நாம் என்ன செய்கிறோம்…!

அவனைக் குறை கூறும் உணர்வு வந்து விடுகிறது. குறை கூறும் நிலை வரப்படும் பொழுது அந்தக் குறை நமக்குள்ளும் வந்து நம்மையும் குறை உள்ளவனாக மாற்றுகிறது.

1.ஆனால் குறை காணும் பொழுதெல்லாம் அவனுக்கு ஞானிகள் காட்டும் அருள் வழியைக் காட்டினால் அது நன்மை பயக்கும்
2.சிறிது பொறுமையுடன் இருந்து அந்த மகரிஷிகளின் உணர்வை ஊட்டினால் அவன் ஞானியாக ஆவான்.

தொழில் செய்கிறோம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் வருகிறது.
1.அன்றைக்குக் கொடுத்தேன்… ஏண்டா திரும்பக் கொடுக்கவில்லை…? என்று சொல்லி அதட்டிக் கேட்கும் பொழுது
2.அங்கே அந்தப் பக்குவம் தவறுகிறது… வெறுப்பின் தன்மை அதிகமாகி கொடுத்த பணமும் வராது போகிறது.

இதே போல் நம் வாழ்க்கையில் எதை எல்லாம் எண்ணுகின்றோமோ அந்தப் பக்குவம் தவறிவிட்டால் மனிதனுக்குள் இருக்கும் நல்ல குணங்களை எல்லாம் மாற்றித் தீய உணர்வுக்கே நம்மை அழைத்துச் செல்லும்.

இதைப் போல் நம் வாழ்க்கை முழுவதற்கும்… ஒவ்வொரு நொடியிலும் நாம் சந்திக்கும் இடங்களில் குடும்பத்திலும் சரி… மற்ற எந்த இடத்திலும் சரி… சில தவறுகளும் ஏற்பட்டாலும் பக்குவப்படுத்தும் முறை கொண்டு நாம் நடக்க வேண்டும்.

வீட்டில் மருமகள் கூட்டிக் கொண்டிருக்கின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

மாமியார் பார்த்து.. வீட்டைப் பெருக்கி இருப்பதைப் பார்…! அன்று மருமகளிடம் சொல்லும். இப்படிக் குறையாகச் சொல்லும் பொழுது மாமியார் மீது மருமகளுக்குக் கோபம் வருகிறது.

உடனே போய் தன் வீட்டுக்காரரிடம் சொல்கிறது… நான் எந்த வேலையைச் செய்தாலும் உங்கள் அம்மா இப்படிக் குறை சொல்கிறார்கள் என்று…!

ஆனால் இதை மாமியார் காதிலே கேட்டால் “நான் என்னத்தைச் சொன்னேன்..? நீ என்னைக் குற்றம் சொல்கிறாய்…!” என்று இந்தப் பகைமை வரும்.

இந்த மாதிரி நேரங்களிலும் நாம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். குடும்ப வாழ்க்கை என்றாலும் குறைகள் வரும். அது வளராதபடி உடனுக்குடன் துடைத்துப் பழகுதல் வேண்டும்.

ஏனென்றால்…
1.சந்தர்ப்பம் இது போன்ற தீமைகளை நமக்குள் வளர்க்கும்
2.நாம் அருள் ஒளி கொண்டு எடுத்துத் தூய்மையாக்கிடல் வேண்டும்.

இதே மாதிரித் தான் பள்ளியில் படிக்கும் குழந்தைகளாக இருந்தாலும் ஏதோ சந்தர்ப்பம் படிப்பில் குறைவாக இருந்தால் ஆசிரியர்கள் கோபமாகத் திட்டுவார்கள் அல்லது அடிப்பார்கள்.

ஆனால் திட்டுவதனாலேயோ ஏசுவதனாலேயோ மிரட்டுவதனாலேயோ அந்தக் குழந்தையின் கல்வியின் தரம் உயராது.

பக்குவப்படுத்தி உண்மையை உணர்த்தினால் தான் அந்தக் குழ்ந்தைகளை ஞானிகளாக மாற்ற முடியும். இதைச் செய்யத் தவறினால் நாம் கற்றுணர்ந்தும் பயனற்ற நிலை ஆகிறது.

1.ஏனென்றால் பள்ளிக் குழந்தைகளிடம் எது பதிவாகின்றதோ
2.ஒரு தரம் மிரட்டி விட்டால் ஆசிரியரைப் பார்த்தாலே வெறுப்பு வரும் பயமும் வரும்…
3.பயத்தால் சிந்தனை குறையும்… சிந்தனை குறைந்தால் பாடத்தை எப்படிச் சரியாகப் படிப்பான்…?

இதைப் போன்ற நிலைகளில் ஆசிரியர்களும் ஞானிகளை உருவாக்க வேண்டும் என்றால் அந்தப் பக்குவ நிலைப்படுத்த வேண்டும்.

பள்ளியில் படிப்பவர்களைப் பற்றி நிறைய உயர்வாகச் சொன்னாலும் இது போன்று பக்குவம் தவறி குறைகள் வளர்ந்து விட்டால் குழந்தைகளை உயர்த்துவதற்கு மாறாக வெறுப்பின் உணர்வை வளர்த்து விடுகின்றது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு நாம் அருள் ஒளியின் உணர்வை நமக்குள் கூட்டி அந்தப் பரிபக்குவ நிலை கொண்டு சிந்தித்துச் செயல்படும் பழக்கம் வர வேண்டும்.

ஆகவே ஒருவர் தவறு செய்கிறார்… என்று எண்ணும் பொழுது “அவர்களை அறியாமல் அது இயக்குகிறது…!” என்பதை நாம் உணர்தல் வேண்டும். அதற்காகத் தான்
1.நாம் பார்க்கும் அனைவரையும் மதிப்போம்
2.உடலைக் கோவில் என மதிப்போம்
3.அதில் வீற்றிருக்கும் உயிரைக் கடவுள் என்று துதிப்போம் என்று சொல்வது.

ஈசனால் உருவாக்கப்பட்ட ஆலயம் தான் அந்த உடல். அவர்களை அறியாமலே அந்தச் செயல்களும் அந்தச் சொல்களும் வெளிப்படுகிறது என்று சொன்னால்
1.ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் என்று
2.அந்த நேரத்தில் நாம் எண்ணுதல் வேண்டும்.

இப்படிச் செய்தால் நம்முடைய நல்ல உணர்வுகளும் காக்கப்படுகின்றது. நம் மனதில் அமைதியும் கிடைக்கின்றது. அருள் சக்திகளும் நமக்குள் கூடுகின்றது. நம் சொல்லைக் கேட்கும் மற்றவருக்கும் நல்லதாகின்றது.

அதனால் தான் பாட்டை மட்டும் பாடிவிட்டுப் பல நினைவில் நான் இல்லாமல் பரிபக்குவ நிலையை எனக்கருள் செய்வாய் ஈஸ்வரா என்று உயிரான ஈசனிடம் வேண்டும்படி சொல்கிறோம்.

நம் திறமையை எதிலே காட்ட வேண்டும்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இவ்வுலகில் உதித்த இவ்வுலகில் பிறந்த எல்லா உயிரணுக்களுக்கும் ஒவ்வொரு திறமை உண்டு. அத்திறமை பெற்றுத்தான் இப்பூவுலகிற்குள் வந்து பிறக்கின்றன.

மனிதன் மிருகங்கள் பட்சிகள் செடி கொடி புழு பூச்சி எல்லாமே அச்சக்தியின் அருளில் ஒவ்வொரு திறன் கொண்டு சக்தி பெற்றே இப்பூமண்டலத்தில் வந்து பிறக்கின்றன.

இந்நிலையில் பிறக்கும் பாக்கியத்தைப் பெற்ற நாம்
1.நம் சக்தியை…
2.நம் திறனை…
3.நம் எண்ணத்தைப் பல வழிகளில் சிதறவிட்டு…
4.நாம் பெற்ற பாக்கியத்தையே இழந்து வாழும் நிலையில்தான்
5.நாம் இந்த உலகில் இன்று வாழ்கின்றோம்.

இச்சக்தியின் அருளில் ஒவ்வொருவருக்கும் செயலாற்றும் தன்மையிலே ஒவ்வொரு திறனுண்டு. மனிதனாகப் பிறவி எடுத்த நமக்கு அச்சக்தியின் அருளில் மற்ற மிருகங்களுக்கு இல்லாத நிலையான செயலாற்றும் தன்மை உள்ளது.

அதாவது…
1.இரண்டு கைகளால் செயல்படும் திறனையும்
2.ஆற்றல் கொண்ட சொற்களைப் பேசும் திறனையும்
3.நமக்களித்த அத்திறன்களை ஒரே நிலை கொண்டு
4.நம் எண்ண நிலையைச் சிதறவிடாமல் செயலாற்றும் தன்மை உடையவர்களாக இருந்திடல் வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வழியில் அவரவர்கள் எடுக்கும் சுவாச நிலை கொண்டு பல செயல் திறன்களை வென்று வாழ்ந்தாலும்
1.பெரும் உன்னத நிலை அடையச் செய்யும்
2.அருள் ஞானப் பொக்கிஷத்தை மறந்து வாழும் வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்ற நிலைக்கு வாருங்கள்.
3.உங்களை இயக்கிக் கொண்டிருக்கும் உயிரான ஈசனின் துணை கொண்டு வாழுங்கள்.

ஒவ்வொருவரும் ஜெப நிலை பெற்று இந்த உடலையும் உயிராத்மாவையும் பூமியையும் புனிதமாக்கும் தன்மையில் அன்பு கொண்டே… நல் வாழ்க்கை வாழ்ந்திடுங்கள்…!

தியான நிலையில் என்றுமே இருந்திடுங்கள்…!

மாதா பிதா குரு தெய்வம்

 

ஒரு விஷம் கொண்ட பாம்பு அது தன்னைப் பாதுகாக்க மற்றதைத் தீண்டும். பாம்பு மனிதனைத் தீண்டி விட்டாலோ அந்த மனிதனின் நினைவு பூராமே பாம்பின் பால் வந்துவிடும்.

ஆனால் பாம்பு தீண்டுவதற்கு முன் மனிதன் அதை அடித்துக் கொன்று விட்டால் பாம்பின் உயிர் அடித்தவர் உடலில் வந்துவிடும்.

இதைப் போல் நான் (ஞானகுரு) பரிணாம வளர்ச்சியில் மற்ற எந்தெந்த உடலைப் பெற்றிருந்தேனோ
1.என் தாய் வழி அல்லது என் தந்தை வழி அடிக்கப்பட்டு
2.இந்த உயிர் அவர்கள் உடலில் சென்று சிக்கி
3.எனது உயிர் அவர்களுக்குள் ஈர்க்கப்பட்டு
4.அதன் வழி என்னை மனிதனாக உருவாக்கக் காரணமாக இருந்தார்கள் என் அன்னை தந்தை தான்.

ஆகவே மற்ற உடலிலிருந்த என்னை மனிதனாக உருவாக்கிய என் தாய் தந்தை தான் எனக்குக் கடவுள். என்னை மனிதனாக்கிய தாய் தந்தை தான் எனக்குக் கடவுள்.

மனிதனாக உருவாக்கினாலும் அதே சமயத்தில்
1.என் தாய் எப்பொழுதுமே எனக்கு நல் வழி காட்டி
2.நல் வழி நான் வாழ வேண்டும் என்று உபதேசித்த முதல் குருவும் அது தான்.

ஒவ்வொரு கால கட்டத்திலும் குறிப்பறிந்து என்னைத் தாலாட்டிச் சீராட்டி இன்று இத்தகைய ஞானத்தைப் பேசும் உணர்வுக்கு என்னை ஆளாக்கியது என் தாய் தான் அந்தத் தெய்வம்…!

இத்தகைய நிலைகளுக்கு என்னை ஆளாக்கிய என் தாய் தந்தையைக் கடவுளாக வணங்குகிறேன்.

1.என்னை மனிதனாக உருவாக்கிய கடவுளை
2.என்னை மனிதனாக்கித் தாலாட்டிச் சீராட்டி வளர்த்த என் அன்னை தந்தையை
3.என்றுமே என் வாழ்வில் கடவுளாக வணங்குகிறேன்.

உங்கள் ஒவ்வொருவரையும் மனிதனாக உருவாக்கிய உங்கள் உயிர் கடவுள் என்றும் அவனால் உருவாக்கப்பட்ட உங்கள் உடல் ஆலயம் என்பதை எமது குரு எனக்கு உபதேசித்த அருள் வழிப்படி வணங்குகிறேன்.

1.என் அன்னை தந்தையைக் கடவுளாக வணங்கி…
2.என் அன்னை தந்தை பெற்ற அந்த உணர்வின் சத்தை எடுத்து மனிதனாக உருவாக்கிய என் உயிரையும் கடவுளாக மதித்து
3.இங்கே இந்த உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருக்கும் அனைவரது உயிரையும் கடவுளாக மதித்து
4.அவன் வீற்றிருக்கும் இந்த ஆலயம் என்ற நிலைகள் மதித்து
5.குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் அருள் ஞானத்தைப் பெருக்கச் செய்ய வேண்டும்
6.உங்களை அறியாது சேர்ந்த இருளைப் போக்கும் அருள் சக்தி நீங்கள் பெறவேண்டும் என்று தான் இதை உபதேசிக்கின்றேன் (ஞானகுரு).

நீங்கள் செவி கொண்டு இதைக் கேட்டாலும் கண் கொண்டு பார்த்து மூக்கு வழி சுவாசித்து ஞானிகளின் உணர்வைக் கவரப்படும் பொழுது அது உங்கள் உயிரிலே பட்டு அந்த ஞானத்தின் உணர்வின் இயக்கமாகி உங்கள் உடலில் இது ஐக்கியமாகின்றது.

உங்கள் கண்ணின் கருவிழி உங்களுக்குள் இதைப் பதிவாக்குகின்றது. கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ நான் வெளிப்படுத்தும் உணர்வைக் கவர்கின்றது. உங்கள் ஆன்மாவாக மாற்றுகின்றது.

நான் பேசும் போது வெளிப்படும் உணர்வுகளைச் சூரியனின் காந்தப்புலன்கள் கவர்ந்து வான்வீதியில் பரமாக இருக்கும் பரமாத்மாவாக மாற்றுகின்றது.

ஆகவே… உங்கள் கருவிழி என்னைப் பதிவாக்கிய பின் நான் வெளிவிடும் உணர்வை உங்கள் ஆன்மாவாக மாற்றுகின்றது. அதிலிருந்து உங்கள் உயிரின் காந்தப் புலன் கவர்கிறது… உயிரிலே மோதுகின்றது. மோதிய பின் உணர்ச்சிகளாக ஒலிகளாக எழும்புகிறது. உடல் முழுவதும் அதைப் பரவச் செய்கிறது.

அதை தான் நாம் அறிவதற்குத் தான் சப்தத்திற்குச் சங்கு என்றும் எந்த உணர்வுகளை நுகர்கின்றோமோ அதன் உணர்வுப்படி இந்த உணர்ச்சிகள் உடல் முழுவதும் சுழல்வதைச் சக்கரம் என்றும் அதன் வழிப்படி தான் எண்ணம் சொல் செயல் கொண்டு நாம் செயல்படுகின்றோம் என்று ஞானிகள் காரணப் பெயர் வைத்து நமக்குக் காட்டுகின்றார்கள்.

நம் உயிரை விஷ்ணு என்று காரணப் பெயர் வைக்கின்றனர். நமக்குள் இயக்கச் சக்தியாக இருக்கும் உயிரை நாம் புரிந்து கொள்வதற்குத் தான் உருவக வழிப்படுத்தி அதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள உதவினார்கள் மகரிஷிகள்.

1.இயக்கம் ஈசன் என்றும்
2.அதில் ஏற்படும் வெப்பம் விஷ்ணு என்றும்
3.ஈர்க்கும் காந்தம் இலட்சுமி என்றும்
4.இந்த முறையில் மூன்று நிலைகளில் நம் உயிர் வேலை செய்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

மிருகத்தனமாகச் செயல்படுபவர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

 

மனித நிலையில் உள்ள பொழுது கோபம் குரோதம் கடும் விஷம் கலந்த பகைமை நிலையிலெல்லாம் மனதைச் செலுத்தி வாழும் மனிதர்கள் அவர்கள் உடலை விட்டு ஆவி பிரிகின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம்

அவர்கள் உடலுடன் உள்ள பொழுது எந்த நிலையில் சுவாசம் பெற்றுச் சப்த அலைகளை வெளியிட்டார்களோ அந்த நிலையிலேயே அவர்களின் ஆவியைச் சுற்றியே அவர்கள் வெளியிட்ட சப்த அலைகளும் சுற்றிக் கொண்டேயிருக்கும்.

அதே நிலையில் (கோப குரோத) இருக்கும் ஒரு மிருகத்தின் நிலையும்
1.அந்த மிருகத்தைச் சுற்றிக் கொண்டுள்ள மிருகத்தின் சப்த அலையும்
2.உடலை விட்டுப் பிரிந்த மனிதனின் சப்த அலையும் ஒன்று போல் உள்ள பொழுது
3.ஒன்றை ஒன்று எதிர்படும் தன்மையில் இரு சப்த அலையும் ஒன்றுபட்டு
4.இந்த மனிதனின் உயிரணு (உயிராத்மா) அந்த மிருகத்தின் உடலுக்குள் செல்கிறது.

இந்நிலையில் அந்த மிருகத்தின் இரத்த நாளங்களில் கலந்து மிருகத்தின் ஜெனனத்திற்கு அந்த மனிதன் வருகின்றான்.
1.மிருகமாகப் பிறக்கும் தன்மைக்கு வந்து
2.மனிதன் மிருக நிலைக்கும் வருகிறான்…! என்பதன் பொருளும் இதுவே.

சில மனிதர்களின் ஆவிகள் மிருக உடலுக்குள் வந்த பிறகு அந்த மிருகத்தின் ஆயுள் காலம் முடிந்து அந்த மிருகம் இறக்கும் வரை அந்த உடலிலிருந்து பின் வெளிப்படும் நிலையில் மனிதனல்லாத பிற ஜென்மத்திற்குத்தான் வர முடிகின்றது.

மிருக உடலுக்குள் சென்ற உயிரணு (மனித ஆன்மா) ஏன் அந்த உடலிலிருந்து வெளிப்பட முடிந்திடாதா..? என்று எண்ணிடலாம்.

மிருக உடலுக்குச் சென்ற பிறகு அந்த மிருகத்தின் சுவாச நிலை மாறுபட்டால் தான் இந்த அணு வெளி வர முடியும். மிருகத்தின் எண்ணம் ஒரே நிலையில் இருக்கும் பொழுது இந்த மனித உயிரணு எப்படி மீண்டு வெளி வந்திட முடியும்..?
1.ஆக்ரோஷம் கொண்ட மனித ஆவிகள் எல்லாம் மிருகமாகவே தான்
2.மிருகத்தின் சப்த அலையுடன் கலந்து மிருகமாகவே செல்கிறது.

மிருக சரீரத்திற்குள் சென்ற உயிரணுக்கள் அதே சரீரத்தில் அந்த மிருகம் எடுத்த சுவாச நிலையையே தானும் பெறுவதால் அந்த மிருகத்தின் உடல் பழுதுபட்டவுடன் இந்த உயிரணுக்கள் எல்லாம் புழுவாகின்றன.

சில உயிரணுக்கள் வெளிப்பட்டு அந்த மிருகத்தின் உடலுடன் கூடிய நிலையில் எந்த நிலை கொண்ட சுவாச அலைகளைப் பெற்றதோ அதே நிலையில் தான் மிருக ஜெனனத்திற்கு வருகின்றது.

மனிதனின் உயிரணுக்கள் மட்டும் மிருகத்தின் சுவாச நிலைக்குச் செல்கிறது என்பதல்ல…! மிருகத்தின் உயிரணுவும் (மிருகத்தின் ஆவியும்) மனிதனின் சரீரத்தில் வந்து சேரும் நிலை உண்டு.

மனிதன் சுவாசிக்கும் நிலையில் அவன் எண்ணும் நிலைகளில் மிருகத்தின் குணங்கள் பெற்று கோபம் வெறி குரோதம் இந்நிலை கொண்ட உணர்வுகளைப் பெற்றான் என்றால்
1.மனித உடலின் அந்தச் சுவாச நிலைக்கும்
2.மிருகத்தின் சுவாச நிலைக்கும் ஒன்றுபடும் பொழுது
3.மிருகத்தின் உயிரணு மனிதனின் உடலுக்குள் சென்று
4.அந்த மனிதனையே அந்த உயிரணு மிருகமாக்கும் தன்மையில்
5.மிருகத்தின் குண நிலைக்கு அம்மனிதனின் நிலையும் செல்வதனால் மிருக நிலையிலிருந்து மாறுபட முடியாமல்
6.மென்மேலும் விரோதத்தைதையும் வெறியையும் அதிகமாக்கி வாழும் நிலைக்குத் தான் மனிதனின் தன்மையும் வருகின்றது.

அத்தகைய மனிதன் இறந்தான் என்றால் மீண்டும் மனித உடலுக்குள் வராதபடி மிருக உடலுக்குள் சென்று மிருகமாகத் தான் பிறக்க நேரிடும். இன்று நல்ல மனித உடலில் இருந்தாலும் சந்தர்ப்பத்தால் எடுக்கும் அதீத தீமையான உணர்வுகளால் சுவாசம் மாறுபட்டு மனிதன் மிருகமாகத்தான் மாற முடியும்.

நாம் அடைய வேண்டிய மெய் உலகம்…!

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி
1.தீமையை நீக்கிய துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தால்…
2.துருவ நட்சத்திரம் ஒளியாக மாற்றி அனுப்பும் அதன் உணர்வுடன் நாமும் சேர்ந்து விட்டால்
3.துருவ நட்சத்திரத்தைப் போன்றே இந்தப் பிரபஞ்சத்தில் எந்தக் கோணத்தில் எந்த அகண்ட அண்டத்திலிருந்து வருவதையும்
4.ஒளியாக மாற்றிடும் ஆற்றலை நாமும் பெற்று ஒளியின் உடலாகப் பிறவியில்லா நிலை அடைவோம்.
5.இது தான் மனிதனின் கடைசி நிலை… இந்தச் சூரியனுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை…!

சூரியனால் உருவாக்கப்பட்டது தான். ஆனால் இந்த உயிர் இந்த உணர்வின் துணை கொண்டு தனித்தன்மை வாய்ந்ததாக பிற மண்டலங்களிலிருந்து வருவதை ஒளியின் உடலாக மாற்றிக் கொள்கின்றார்கள் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும்.

அதாவது… இந்தப் பிரபஞ்சத்தில் அகண்ட அண்டத்தில் “சூரியனாக…” அது எப்படி உருவானதோ அதே போல் இந்தப் பிரபஞ்சத்திற்குள் உயிரணு தோன்றி இந்த உணர்வுகள் முழுவதையும் ஒளியாக மாற்றி தனித்தன்மை வாய்ந்ததாக மாறுகிறது.

இதை எல்லாம் குருநாதர் இந்த இயற்கையின் உண்மையின் உணர்வுகள் எப்படி இயங்குகிறது…? கடவுள் யார்..? என்று தெள்ளத் தெளிவாகக் காட்டியுள்ளார்.

1.ஓர் சாந்தமான உணர்வுக்குள் ஒரு வலிமையான உணர்வு இணைந்தால்
2.அது உள் நின்று அந்தச் சாந்தத்தை மாற்றித் தன் வழிக்கே அது அழைத்துச் செல்கிறது.

இதைப் போலத் தான்
1.நாம் அந்த ஒளியின் உடல் பெற்ற உணர்வினை நமக்குள் எடுத்தால்
2.உள் நின்று இருளை நீக்கி ஒளி என்ற உணர்வினை மாற்றுகின்றது.

பல கோடி உடல்களில் நாம் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் கொண்டு நம் உடல் நஞ்சை மலமாக மாற்றி நல் உணர்வினை உடலாக ஆக்கி எல்லாவற்றையும் அறிந்திடும் கார்த்திகேயனாக வருகின்றது.

ஆகவே தீமை என்று தெரிந்து கொண்ட பின் தீமையை நீக்கும் உணர்வை நாம் நுகர்ந்து பழகுதல் வேண்டும்.

தீமையை நீக்கிய உணர்வு பெற்ற அகஸ்தியன் உணர்வுகளை நாம் கவர்ந்து நமக்குள் அதை எடுத்து விளையச் செய்தால் தீமைகளை நீக்கும் உணர்வு பெற்று
1.இந்த வாழ்க்கையில் பிறவியில்லா நிலை அடையும் அந்தப் பேரானந்த நிலை பெற்று
2.என்றுமே ஒளி உடலாகப் பெறும் அந்த அருள் சக்திகளைப் பெற முடியும்.
3.இதுவே நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் பிறவி இல்லா நிலை அடையும் மார்க்கம்.

அருள் ஒளியின் உணர்வை நமக்குள் வலிமை ஆக்கிக் கொண்டால் தீமைகளை எளிமையாக்கி இந்த வாழ்க்கையில் புனிதம் என்ற நிலைகளை நாம் ஒவ்வொருவரும் அடைய முடியும்.

இராமேஸ்வரத்தில் காட்டியபடி…
1.குறுகிய காலமே வாழும் இந்த மனித வாழ்க்கையில்… “நேரமாகி விட்டது மனதைக் குவியுங்கள்…!” என்று
2.இராமன் மனதைக் குவித்துச் சிவலிங்கமாக்கிப் பூஜித்தான் என்று செய்ததை
3.அந்த மனதைக் குவிக்க வேண்டியதை இங்கே மணலைக் குவித்தான் எறு காட்டி விட்டனர்.

இதைத் தான் ஆலயங்களில் காட்டி நாங்கள் பார்க்கும் அனைவரும் அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற்று மன மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று நம் மனைதைக் குவித்து ஒன்றாக்கும்படி காட்டினர் ஞானிகள்.

ஆக.. பகைமையற்ற நிலையை உருவாக்கி மனிதர்கள் ஏகாந்தமாக விண் செல்ல வேண்டும் என்பதே ஞானிகள் நமக்குக் கொடுத்த பேருண்மைகள்.

பயமான உணர்வுகளைப் போக்கி மன பலம் பெறும் வழி முறை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

மன நிலையில் பயந்தவர்கள் தன் நிலையை மறந்துவிடுகின்றனர். எதைப் பார்த்தாலும் அந்தப் பயந்த நிலை அடைந்து அதனால் உடல் நிலையும் மன நிலையும் கெடும் நிலைக்கு ஆளாகின்றார்கள்.

ஏனென்றால் நம்மைச் சுற்றியுள்ள இந்தக் காற்று மண்டலத்தில் எண்ணிலடங்காத நிலைகள் கொண்ட பல உயிரணுக்களும் நல்ல அணுக்கள்… தீமையான அணுக்கள்.. பல ஆவி நிலைகள்… என்று இப்படிப் பல சுற்றிக் கொண்டுள்ளன.

இந்தக் காற்று மண்டலத்தில் தான் ஈரப்பசையும் உள்ளது. மேகங்கள் படிந்துள்ளதும் இந்தக் காற்று மண்டலத்தில் தான் உள்ளது.
1.இந்தக் காற்று மண்டலத்திற்கு மேல் உள்ள காற்றில் ஈரப்பசையில்லை
2.அந்த நிலையில் ஓரே சமமான நிலை தான் உண்டு,

காற்று மண்டலத்தில் உள்ள மேகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடியுடன் கூடிய மழை பெய்யும் பொழுது அந்த நிலையில் அலைந்து கொண்டுள்ள பல ஆவிகள் அதனுடைய செயலைச் செயல்படுத்த முற்படுகின்றன.
1.அத்தகைய ஆவிகள் எந்த உடலை ஏற்கலாம்…? என்ற நிலையில்
2.இடிக்கும்… மழைக்கும்… இருட்டிற்கும்.. பயந்த நிலையில் உள்ளவர்களை
3.அந்தத் துர் ஆவிகள் வந்து அண்டிக் கொள்கிறது.
4.இந்த நிலையில் நம்மை அறியாமலேயே நாம் நம்மை அந்த ஆவியின் நிலைக்குச் செல்லும் தன்மை வந்துவிடுகின்றது.

அப்பொழுது பயம் கொண்ட நிலையில் உள்ளவனுக்குத் தன் எண்ண நிலை அற்றுப் போகிறது. எண்ண நிலை இல்லாததினால் செயல் திறன் மங்கி விடுகின்றது.

சோர்வுத் தன்மைக்கு அடிபணியும் தன்மை வந்து மன நிலை மாறுபட்டு உடல் நிலை கெட்டு தன் வாழ்க்கை நிலையே பெரும் சஞ்சலத்தில் செல்லும் நிலைக்குச் செல்வதெல்லாம் “மன நிலையில் தான்…!”

ஒவ்வொரு மனிதருக்கும்…
1.அவரவர் எடுக்கும் சுவாச நிலையும் மன நிலையும் பொறுத்துத்தான்
2.அவர்கள் வாழ்க்கை முறையும் உடல் நிலையும் செல்வ நிலையும் சந்தோஷ நிலையும் சோர்வு நிலை பெறுவதும் எல்லாமே…!

சூரியனின் சக்தியிலிருந்து சகல சக்தியும் இந்த உலகினிலே சுற்றிக் கொண்டுள்ள நிலையில் நமக்கு அவன் அளித்த சக்தியைக் கொண்டு நம் சக்திக்குகந்த நல்ல அணுக்களையும் மகரிஷிகளின் ஆசியைப் பெறும் தன்மையில் நாம் நம் ஆத்ம ஜெபத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆத்மீக வழியில்…
1.நல் வழி ஒன்றிலேயே நாட்டம் கொண்டு ஜெபிக்கும் பொழுது
2.நல் ஆத்மாக்களின் நல் உறவை நாம் பெற்று நல் மனத்துடன் நாம் இருந்தால்
3.நம்மை எந்தத் தீய சக்திகளும் தீய ஆவிகளும் தீண்டும் தன்மையை அகற்றும் நிலை நமக்கு வந்தடையும்.

நம் எண்ணத்தில் அச்சக்தியின் ஒரே சக்தி நிலை மட்டும் சத்திய நிலையில் இருந்து விட்டால் பயம் அச்சம் என்ற நிலையெல்லாம் வந்து அண்டாது.

நம்மை நாமே பரிசுத்தப்படுத்துவதற்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தியானம் ஒன்று தான் சகல வித்தையும்…! சகல மந்திரமும்…! மந்திரம்…மாயம்…! எல்லாமே…!
1.அச்சக்தி நிலை பெற்ற சத்தியவானுக்குச் சகல நிலைகளும் தானாக நடந்துவிடும்.
2.எந்த நிலையிலும் சலிப்பிற்கும் சங்கடத்திற்கும் ஆளாகாமல் ஜெப நிலை பெறுங்கள்…! என்பது இந்தச் சக்தியைப் பெறுவதற்குத்தான்.

புத்திர பாக்கியம் பெற தியானிக்க வேண்டிய முறை

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா. துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் அனைவரது உடல்களிலும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

கூட்டுத் தியானங்களில் இப்படி எண்ணி எடுக்கும் பொழுது இந்த உணர்ச்சிகள் உந்தப்பட்டு அந்த உயர்ந்த உணர்வைச் சுவாசிக்கும் தகுதி பெறுகின்றோம். சுவாசித்த உணர்வுகள் அனைத்தும் இரத்தத்தில் கலக்கின்றது.

அதனின் வலுக் கொண்டு கை கால் குடைச்சலோ அசதியோ தலை வலியோ உடலில் நீர்ப் பிடிப்போ சர்க்கரைச் சத்தோ இரத்தக் கொதிப்போ இருதய வலியோ இது போன்ற நோய்களை அகற்ற முடியும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று ஏங்கித் தியானிக்கும் பொழுது இந்தச் சுவாசத்தை எடுக்க எடுக்க உங்கள் இரத்த நாளங்களில் அந்தச் சக்தி கலக்கும். உங்கள் உடலில் உள்ள வலிகள் குறையும்… அதை நீங்கள் உணரலாம்.

இடுப்பு வலியுடனோ கால் வலியுடனோ தலை வலியுடனோ வயிற்று வலியுடனோ வேறு எந்த வலியுடன் இருந்தாலும் அந்த வலி நீங்க வேண்டும் என்ற நினைவைச் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

உங்கள் உடலில் அந்த அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற்று “எங்கள் உடல் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா…!” என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.உங்கள் உடலில் மின்சாரம் பாய்வது போல் பாயும்
2.நீங்கள் சுவாசிக்கும் அந்த அருள் உணர்வுகள் இரத்த நாளங்களில் கலந்து
3.உங்கள் உடலில் உள்ள விஷத் தன்மைள் கலைந்து செல்லும்
4.உங்கள் உடலில் உள்ள நோய்கள் அகலும்.

அகஸ்தியன் அவன் கண்டுணர்ந்த தீமைகள் அகற்றிய அருள் உணர்வுகள் அனைத்தும் உங்கள் உடல் முழுவதும் இப்பொழுது பரவும்.
1.சர்வ பிணிகளும் நீங்கும்… இருதயம் சீராக இயங்கும்.
2.எத்தகைய நோயாக இருப்பினும் அது எல்லாம் குறையும்
3.உடலில் உள்ள சிக்கல்கள் நீங்கி உடல் நலம் பெறும் சக்தியாக மாறும்
4.குடலில் நல்ல ஜீரண சக்தி கிடைக்கும்.

புத்திர பாக்கியம் வேண்டுவோர்
1.தன் உடலில் புத்திர பாக்கியம் பெறும் அருள் சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா என்று எண்ணி
2.அதே போல் என் கணவருக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று பெண்கள் எண்ண வேண்டும்.
3.ஆண்களும் தன் மனைவிக்கு புத்திர பாக்கியம் பெறும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணி
4.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

புத்திரபாக்கியம் பெறும் அருள் உணர்ச்சிகள் உங்கள் உடலிலே உருவாவதைக் காணலாம்.

உங்கள் இரத்தநாளங்களில் புது விதமான உணர்ச்சிகள் தூண்டி
1.கருப்பைகளில் சில நல்ல மாற்றங்கள் ஏற்படும்
2.கரு விந்துகளிலும் இதன் உனர்வுகள் உணர்ச்சிகள் கூடி
3.குழந்தைகள் பெறும் உணர்வின் அணுக்கள் வளர்ச்சி அடையும்.

1.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி கணவன் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று மனைவியும்
2.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி மனைவி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கணவனும் எண்ண வேண்டும்.
3.புத்திர பாக்கியம் பெறும் அணுக்கள் எங்கள் இருவருக்குள்ளும் ஓங்கி வளர வேண்டும் ஈஸ்வரா என்று
4.கணவன் மனைவி இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் நெற்றியைப் பார்த்து
5.மேலே சொன்ன உணர்வுகளை எல்லாம் பாய்ச்சுதல் வேண்டும்.

சீக்கிரமே கரு உருவாகி ஞானக் குழந்தையாக உருப்பெறச் செய்யும் சக்தி பெறுவீர்கள்.

இது எல்லாம் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் யாம் (ஞானகுரு) வாக்குடன் கொடுக்கக்கூடிய ஞான வித்துகள். ஈஸ்வரா என்று உங்கள் உயிரை எண்ணி… அந்த நல்லது நடக்க வேண்டும் என்று இச்சைப் பட்டால் உங்களுக்குள் அது கிரியையாகி உங்கள் எண்ணத்தாலேயே அந்த நல்லவைகளை நீங்கள் பெற முடியும்.

இறை சக்தி பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

1.இறை சக்தியைக் கண்டிடவே… இறைவன் பூஜை செய்து விட்டால் இறைவன் அருள் கிட்டுமா…?
2.அந்த இறைவனின் எண்ணம் மட்டுமே இருந்து…
3.அந்த இறைவனே வந்து நமக்கு எல்லா அருளையும் அருள்வான்…! என்று
4.இறைவனையே எண்ணிப் பூஜித்தால் இறைவன் அருள் கிடைக்குமா…?

ஒரு தாய் தன் குழந்தைக்குப் பாலூட்டும் பருவம் முதல் எந்த எண்ணத்தை முதலில் பாய்ச்சுகின்றாளோ அந்த எண்ணம் அந்தக் குழந்தைக்குச் சுற்றிக் கொண்டே தான் இருக்கும்.

ஒரு குழந்தை அது பிறந்தது முதல் அந்த இல்லத்தில் உள்ளோரின் எண்ணத்தின் சுவாச நிலைகளை வளர்ந்து வரும் அந்தக் குழந்தைக்கும் நாம் அளிக்கின்றோம் என்பதனை உணர்ந்து
1.வளரும் பருவத்திலேயே நல் உணர்வை
2.நாம் அந்தக் குழந்தைக்கு அளிப்பது தான்
3.இறை சக்தியை அதற்கு அளிக்கும் நிலையப்பா…!

இறை சக்தி என்பதைப் பல நாமம் கொண்டு அழைத்து வணங்குகிறோம். அப்படி வணங்கும் பொழுது நம்முள் உள்ள இறைச் சக்தியை
1.நாம் எந்த நிலை கொண்டு நாம் அதன் தன்மையைப் பெற்றுள்ளோமோ
2.அதற்குகந்த சக்தித் தன்மை தான்
3.நாம் அழைத்து வணங்கும் இறை நாமத்திலிருந்து நமக்குக் கிடைக்கின்றது.

இந்த மனித வாழ்க்கையில் நம் எண்ணத்தில் பல கலக்கங்களைக் கொண்டு கோப தாப துவேஷ நிலைகளை எல்லாம் நம்மையே சுற்றிக் கொண்டுள்ளது.

அந்த நிலையிலிருந்தெல்லாம் நாம் நம்மைச் சாந்தப்படுத்திச் சமநிலைப்படுத்திக் கொண்டு நாம் எண்ணும் நிலை கொண்டு
1.நாம் அடைந்த இத் தீய நிலைகளை எல்லாம்
2.நம்மையே சுற்றிக் கொண்டுள்ளாமல் இருக்கும் நிலைக்கு
3.நம்மை நாம் பக்குவப்படுத்திச் சாந்த நிலை கொண்டு
4.நம் நிலையில் என்றும் நாம் மாறுபடாமல்
5.சாந்தமான நிலையில் அன்பு கொண்டு வாழ்ந்திடும் வாழ்க்கையே
6.அந்த இறை சக்தியை நாம் பெற்ற வாழ்க்கையாகும்.

பூஜையும் பல நாமங்கள் கொண்டு ஜெபிப்பதும் ஆண்டவனின் அருள் பெறும் நிலையல்ல.

மன அமைதிப்படுத்திட நம் மனதை அன்பு கொண்டு அந்த ஆண்டவனின் நாமத்தை அன்புடன் உச்சரிக்கும் பொழுது அந்த நாமத்தின் வழியினிலே “நம்மை நாமே பக்குவப்படுத்திக் கொள்ளும் நிலை தான் அது”

தெய்வத்தின் ஆணை நமக்குள் எப்படி ஒலிக்கும்…?

 

இந்த மனித வாழ்க்கையில்…
1.அன்றாடம் நாம் எத்தனை பேரைச் சந்திக்கின்றோமோ
2.எத்தனை பேர் துயரங்களைக் கேட்டோமோ
3.அவர்களுக்கெல்லாம் நாம் உதவி செய்தாலும் அந்த உணர்வுகள் (துயரம்) எல்லாம் நமக்குள் இயக்கமாகிறது.
4.நமக்குள்ளும் அந்தத் தீமையின் உணர்வுகளாக விளைந்து விடுகிறது.

ஆகவே நம் உடலான ஆலயத்திற்குள் எதைச் சேர்க்க வேண்டும்…?

எத்தனையோ உணர்வுகளை நாம் நுகர்ந்தோம். அதிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்று உயிரான ஈசனைப் புருவ மத்தியில் எண்ணி
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாங்கள் பெறவேண்டும்
2.அந்த அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும். என்று
4.இந்த உணர்வுகளை உட்செலுத்தி வலுவாக்கிக் கொள்ள வேண்டும்,

பின்… எங்கள் வாழ்க்கையில் எத்தனை பேரைச் சந்தித்தோமோ பார்த்தோமோ… அவர்கள் குடும்பம் எல்லாம் நலம் பெறவேண்டும்… அவர்கள் தொழில்கள் எல்லாம் வளம் பெறவேண்டும்… அவர்கள் வாழ்க்கை எல்லாம் வளம் பெற வேண்டும்… அவர்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும்… என்று எண்ணி எல்லோரையும் (எல்லா உணர்வுகளையும்) ஒன்று சேர்க்க வேண்டும்.

எல்லோரும் ஒன்றாக ஆன பின் என்ன ஆகிறது…?

1.ஒரு வேம்பின் உணர்வைக் கண்ட பின் ரோஜாப்பூவின் மணம் எப்படி ஓடுகின்றதோ
2.ஒரு விஷமான செடியின் மணத்தின் தன்மை கண்ட பின் ரோஜாப்பூவின் மணம் சுழற்சி ஆகின்றதோ
3.இதைப் போல் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுக்கும் பொழுது
4.தீமை செய்யும் உணர்வலைகள் நம் ஆன்மாவிலிருந்து அகன்று ஓடிவிடும்.

ஒவ்வொருவரும் இதே போல் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துத் தனக்குள் வலுவாக்கிக் கொண்டு
1.அனைவருக்கும் அந்த நற்பயன்கள் கிடைக்க வேண்டும்
2.அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும்
3.அனைவரும் அரவணைத்து வாழும் சக்தி பெறவேண்டும்
4.அனைவரும் பேரன்பு கொண்டு பெரு வாழ்வு வாழ வேண்டும்
5.அனைவரும் அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும் என்று எண்ணி இந்த மூச்சலைகளை வெளிப்படுத்த வேண்டும்.

எல்லோரும் ஏகோபித்த நிலைகள் கொண்டு இப்படி வெளிப்படுத்தும் இந்த உணர்வுகள் எல்லாம் அலைகளாக மாறினால் நமக்கு முன் இருக்கும் மற்ற நஞ்சான தீமை செய்யும் உணர்வுகளை ஒதுக்கித் தள்ளிவிடும்… பரமாத்மா (காற்று மண்டலம்) தூயமையாகும்..!

இந்தப் பூமியின் நிலைகளை மாற்றுவதற்கும் தூய்மைப்படுத்துவதற்கும் ஞானிகள் இதைச் செய்தார்கள்.

ஆகவே தீமையை நீக்கிய உணர்வை இந்த முறைப்படி வினைக்கு நாயகனாக ஆக்கப்படும் பொழுது இது நமக்குள் இணைந்து வலிமை மிக்க சக்தியாக மாறுகின்றது.

இதே உணர்வை வைத்து…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று உயிரிலே மோதச் செய்தால்
2.அது எப்படித் தீமைகளை நீக்கியதோ அந்த உணர்வுகள் தெய்வ ஆணை…! தீமையை நீக்கிய அந்த எண்ணங்கள் நமக்குள் வருகிறது
3.அந்த ஆணைப்படி செய்தால் இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி.

நம் ஞானிகள் மிகவும் அற்புதமாக சாதாரண மனிதனும் புரிந்து தன் வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்ற இவ்வளவு பெரிய தத்துவத்தைக் கொடுத்துள்ளார்கள்.

இதை நாம் அன்றாடம் செய்கின்றோமா…? இல்லை…! ஞானிகள் சொன்ன முறைகளுக்கு மாறான நிலைகளைத்தான் நம் வாழ்க்கையில் அமைத்துக் கொள்கிறோம்.

இயற்கையை வணங்க வேண்டும் என்பதன் அவசியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

சூரியனின் ஒளிக் கதிர்கள் படும் இடங்களில் எல்லாம் உயிர் அணுக்கள் ஜீவன் பெற்று வாழ்கின்றன. பூமியின் மேல் பகுதியிலும் அடிப்பகுதியிலும் உயிரணுக்கள் உயிர் பெற்று வாழ்கின்றன.

அதே போல் காற்றிலும் பல உயிரணுக்கள் உயிர் பெற்று வாழ்கின்றன. வான மண்டலத்தில் பல உயிரணுக்கள் பறந்து இக்காற்றினில் வீசிடும் பல உயிரணுக்களையே ஆகாரமாக எடுத்து அந்த நிலையிலேயே முட்டையிடுகின்றது.

அந்த முட்டை மேலிருந்து கீழ் வரும் பொழுது பூமிக்கு வந்து தாக்குவதற்கு முதலிலேயே வான மண்டலத்திலேயே அந்த முட்டை வரும் வேகத்திலேயே வெடித்து குஞ்சு வெளிப்பட்டு அந்தக் குஞ்சு அந்த நிலையிலேயே பறக்கும் நிலை பெற்று உயிர் வாழ்கின்றது.

இப்படி பூமிக்கும் உயிரணுக்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமலேயே வான மண்டலத்திலும் பல கோடி உயிரணுக்கள் உயிர் பெற்று வாழ்கின்றன. அதே போல்
1.பூமியிலும் கல்லுக்கடியில் தேரை எப்படி வந்தது…?
2.அந்தத் தேரை முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கத் தாயினம் இருந்ததா…?
3.மாம்பழத்திற்குள் வண்டு எந்த நிலை கொண்டு உள்ளே சென்றது…?
4.பூவிலேயே முட்டையிட்டு அந்த முட்டை அதே நிலை கொண்டு உயிர் பெற்றதா…?
5.பூ காயாகிக் கனியாகும் வரை அந்த முட்டை அங்கேயே முட்டையிலிருந்து புழு வந்து வண்டானதா..? என்று எல்லாம் எண்ணுகின்றோம்.

இதன் நிலையை ஆராய்ந்து உண்மை அறிந்தோர் வெளியிடவும் இல்லை. ஆனால் பல மெய் ஞானியர்கள் அறிந்த பேருண்மை இது.

மாம்பழத்தில் வண்டு வந்ததின் உண்மை நிலை அந்த மரத்தில் பூப்பிடித்துக் காயாகும் தருணத்தில் அந்தப் பூவில் உள்ள ஈரப்பசை கொண்டு அக்காய் பிடித்து அது கனியாக ஆவதற்கு முன்
1.அந்தக் காய்க்கு மேல் சூரியனின் ஒளிக் கதிர்கள் படும் பொழுது
2.அந்த ஒளிக் கதிரிலிருந்து காயில் உள்ள ஈரப்பசையின் சுவாச நிலைக்குகந்த உயிரணு
3.அந்தக் காயிலேயே தான் உற்பத்தியாகின்றது.

சூரிய ஒளி பட்டவுடன் அவ்வுயிரணு ஜீவன் பெற்றுப் புழுவாகி வண்டாகி அந்தக் காயில் உள்ள மாங்கொட்டையின் பருப்பினையே உணவாக ஏற்று மாங்காயின் உள்ளேயே உயிர் வாழ்கின்றது.

அதன் சுவாச நிலைக்கேற்ப ஆகாரமும் அம்மாங்காயிலே தான் அதற்குக் கிடைக்கின்றது. அந்தக் கனியைப் பறித்து அதை அறுத்துப் புசிக்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.

அப்பொழுது அந்த வண்டு வெளிப்படுகின்றது. வெளிப்பட்ட வண்டிற்கு வேறு நிலையிலுள்ள (வெளி உலக) சுவாசத்தை ஈர்க்கும் தன்மை இல்லாததினால் கனியிலிருந்து வெளிப்பட்ட உடனே அது மடிகின்றது. அதன் சுவாசத்திற்குகந்த ஆகாரம் இல்லை என்றால் அதனால் வாழ்ந்திட முடியாது.

கல்லுக்குள் தேரை வந்ததும் இதே நிலையே. கல்லிற்குள் இருக்கும் ஈரப்பசையில் கல்லிற்கு மேல் படும் சூரிய ஒளியின் தன்மை கொண்டு அந்தக் கல்லுக்குள் இருக்கும் ஈரத்தில் அங்கேயே ஒரு ஜீவன் உற்பத்தியாகி அது வாழ்ந்து அந்தக் கல்லுக்குள்ளேயே மடிகின்றது.

1.எல்லா உயிரணுக்களுக்கும் தாய் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் நிலை இல்லை.
2.தேரை மாம்பழத்தில் உள்ள வண்டு ஈ கொசு எறும்பு விட்டில் பூச்சிகள் ஈசல்கள் பலவிதமான புழுக்கள் இவைகளில் எல்லாம்
3.ஆண் பெண் என்ற நிலை இல்லை… தாய் தந்தை என்ற நிலையும் இல்லை.
4.சூரிய சக்தியிலிருந்து அந்தந்த நிலைக்கு ஏற்பச் சுவாச நிலை கொண்டு உயிர் பெற்று வாழ்வதுவே.
5.இப்படி இயற்கையின் சக்தியிலே பல கோடி உண்மைகள் உள்ளது.

அதற்காகத்தன் நம் முன்னோர்கள் இயற்கையையே ஆண்டவனாகப் பணித்தார்கள்.

சூரியனையும் காற்றையும் மழையையும் இவற்றின் அருள் பெற்ற இயற்கை அன்னையையும் என்றென்றும் நாம் எண்ணி வணங்கிடுவோம்… போற்றிடுவோம்…!

இயற்கையின் அன்பு நிலையில் நம்மையும் அன்பு கொண்டு
இயற்கைகளின் இயற்கையையும் (படைப்புகளையும்) அன்பாக்கி
இயற்கை அன்னை தந்த – அந்த இயற்கையில் வந்த நாமும்
இயற்கையுடனே ஒன்றி அன்பு கொண்டே என்றும் வாழ்ந்திடுவோம்.

“பிராணன்…” (சுவாசம்) பற்றி ஞானிகள் சொன்னதன் உண்மை நிலைகள்

 

பூமிக்குள் ஏற்படும் உணர்வுகள் (கல் மண் தாவரம் உயிரினங்கள் வெளிப்படுத்துவது) சூரியனால் கவரப்படும் பொழுது அது பிராணாயாமம்.

மற்ற உயிரணுக்கள் அல்லது உயிரினங்கள் இந்த உணர்வை நுகர்ந்தால் அதே உணர்வுகள் இயக்கப்பட்டு அதன் உணர்வின் வழியிலேயே அதை இயக்கத் தொடங்குகின்றது.

உதாரணமாக ஒரு வேதனைப்படும் உணர்வை நாம் நுகர்ந்தால் நம் உயிரிலே அது பட்டால் பிராணாயாமம். அதாவது
1.நமக்குள் இப்படி எந்தெந்த உணர்வு வருகின்றதோ “பிராணன்…!”
2.அதை ஜீவனுள்ளதாக இயக்குகின்றது என்பதனை அவ்வாறு காட்டுகின்றனர்

ஆனால் இங்கே “பிராணாயாமம்” என்று சொல்லி…
1.மூச்சை (காற்றை) இழுத்து உடலுக்குள் அதிகமாகச் செலுத்தப்படும் பொழுது
2.நம் உடலில் “எதன் வேக உணர்வுகள் அதிகமோ” அதைக் கவர்ந்து விடுகிறது.

இயற்கையாகவே… சுவாசிக்கும் உணர்வுகளை எல்லாம் உயிரிலே ஃபில்டர் செய்யக் கூடிய சளி இதை வடிகட்டிவிடும். அதிகமானால் வெளித் தள்ளிவிடும். இப்படி வடிகட்டிய நிலைகள் கொண்டு தான் சுவாசம் உள்ளே போகிறது.

ஆனால்… உணர்வின் தன்மை உந்து விசை அதிகரிக்கப்படும் பொழுது காற்றை இழுத்துச் சுவாசிக்கும் போது
1.நம் உடலில் உள்ள சுவாசப்பைகளில் அதிகமாகச் சென்று விட்டால்
2.நாளடைவில் அந்த உறுப்புகளில் பல விதமான இருமல்கள் வரும்.

இதே உணர்வுகள் நுரையீரலில் அழுத்தப்பட்டு உடல் முழுவதற்கும் இந்த வாயுவை உந்தப்படும் பொழுது அந்த வாயு மண்டலத்தை இழுத்துச் செல்லும் நரம்பு மண்டலங்களுக்குள் சென்றுவிடும்.

அப்படிச் சென்றவுடன் இது எதை எடுத்தார்களோ அதனின் உணர்வின் தன்மை விஷத் தன்மையாகி கடு…கடு என்று கிடு…கிடு என்கிறது என்றெல்லாம் “மூச்சுப் பயிற்சி செய்பவர்கள் பெரும்பகுதி கடைசியில் கேட்டால் இதைத் தான் சொல்வார்கள்…!”

இன்று இவர்கள் இழுத்து இதை எல்லாம் கற்றுக் கொள்ளலாம். ஆனால் ஒருவன் வேதனைப்படுகிறான் என்ற நிலைகளில்… அவன் என்ன செய்கிறான்…? என்று எடுத்துச் சுவாசிக்கலாம். அப்பொழுது அந்த உணர்வின் தன்மை உடலுக்குள் வரும் பொழுது வேதனை உருவாக்கும் உணர்வின் தன்மையாக வரும்.

பிராணாயாமம் என்று இதை எடுத்துக் கொண்டு முதல் நிலையானாலும்
1.பிறருடைய உணர்வுகளைச் சுவாசித்துப் பார்த்தால் “சரம்”
2.அவன் உணர்வுக்கும் நம் உணர்வுக்கும் என்ன மோதுகின்றது…?
3.அவன் என்ன நினைக்கின்றான்…? அவன் உடலில் என்ன இருக்கின்றது…? என்ற நிலையை
4.பிராணாயாமம் சுவாசித்து உயிரிலே பட்டு இந்த உணர்வுகளை உணர்ந்தாலும்
5.பிறருடைய எண்ணங்களையும் (அவரவர் குணத்தின் எண்ணங்கள்) கவர்கின்றது.

கவர்ந்த இந்த உணர்வின் தன்மை தன் உடலுக்குள் சென்றால் வாயு மண்டலங்களில் விஷத் தன்மையாகிக் கை கால் குடைச்சல் என்ற நிலைகள் உருவாகிவிடும்.

ஏனென்றால் அந்த உணர்வுகளை நேரடியாகச் செலுத்தி இரத்த நாளங்களில் கலப்பதற்கு முன் வாய்வால் (காற்றாக) இது சுவாசப் பைகளில் சென்று உடலில் விஷத் தன்மைகளைப் பரப்புவதால் அந்த நிலை ஏற்பட்டு விடுகிறது.

வட கிளை தென் கிளை என்று சுவாசித்து… வடிகட்டும் திறனை இழந்து… இயல்பாக இருப்பதை மூக்கை அடைத்து இதைச் செயல்படுத்துவது என்பது இவர்கள் சொல்வது.

ஏனென்றால் இதை எல்லாம் குருநாதர் தெளிவாகக் காட்டினார்… அதைத் தான் உங்களுக்குச் சொல்கிறேன் (ஞானகுரு).

1.நேரடியாகச் சுவாசித்து (அந்தந்தக் குணத்தின் உணர்வுகள்) உயிரிலே பட்டு வாயிலே உமிழ் நீராகி…
2.அந்த உமிழ் நீர் உணவுடன் கலந்து அந்த உணர்வுக்குள் உயர்ந்த நிலை ஆன பின் இது இரத்தமாக மாறும் பொழுது…
3.நாம் எந்தக் குணத்தை நாம் எண்ணுகின்றோமோ அதன் உணர்வு கொண்டு பிராணாயாமம்.

அருள் உணர்வுகளைப் “பிராணன்…” உருவாக்கி இதன் வழி நமக்குள் உருவாக்குதல் வேண்டும் என்பது தான் ஞானிகள் காட்டியது.

தியானத்தில் உயரிய சுவாசம் எடுப்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

1.நாம் தியானத்தில் அமர்ந்தவுடனே
2.சுவாசம் ஒரு நிலையில் இல்லாமல்
3.மேலும் கீழுமாக ஆடிக் கொண்டே தான் வரும்.

நம் எண்ணம் முழுவதையுமே அந்த ஜெப நிலையில் நினைவைச் செலுத்திய பிறகுதான்
1.ஒரே நேர்பட்டுச் சம நிலை பெற்று…
2.பிறகு உயர்ந்த நிலையில் நாம் இருப்பதைப் போன்ற
3.நம் உடலும் மனமும் எண்ணும்படி அந்தச் சுவாசம் உயர்ந்து செல்கிறது.

அந்த நிலையில் இவ்வுலகம்… இந்த உடல்.. எல்லாவற்றையும் மறந்து நாம் உயர்ந்த நிலையில் “பறந்த நிலையில்… சஞ்சரிக்கும் தன்மை பெற்றுச் சஞ்சரிக்கின்றோம்…!”

நம் நினைவுகள் அந்தத் துருவ நட்சத்திரத்திலும் சப்தரிஷி மண்டலத்திலும் சஞ்சரிக்கும். உடல் உணர்வு இல்லாதபடி ஏகாந்தமாக மேல் நோக்கி நாம் செல்வது போல் நிச்சயம் உணரலாம்.

1.நாம் செய்யும் தியானத்தில் இதை எல்லாம் உணர்கிறோம் என்றால்
2.அந்த மெய் ஞானிகள் மகரிஷிகள் வெளிப்படுத்தும் அருள் சக்திகள்
3.அப்பொழுது நம் உடலுக்குள் சேர்ந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

ஆகவே நமக்கு முன் தோன்றிய பல மகரிஷிகளும் ஞானிகளும் எப்படி நமக்கு நல் அருளை அளிக்கின்றார்கள் என்பதனை உணர்ந்து நாமும் அந்த ஜெப அருளைப் பெற்றுப் பழகிக் கொள்ள வேண்டும்.

இந்தப் பிறவியில் நாம் எடுக்கும் சுவாசத்திற்கும் நம் எண்ணத்திற்கும் உகந்தபடி நல் எண்ணம் கொண்டு
1.அந்தச் சூட்சம உலகில் கலந்துள்ள பெரியோர்கள் (மெய் ஞானிகள்) நம்முள் வந்து
2.நமக்குப் அருள் வழிகளைப் புகட்டும் பாக்கியத்தை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
3.நம் உயிராத்மாவிற்குச் சேர்க்கும் நல் சொத்தாக அந்த மகரிஷிகளின் ஆசிகளை ஏற்று நம் வாழ்க்கையை வழி நடத்துதல் வேண்டும்.

இந்த உடலை விட்டு எப்பொழுது பிரிந்தாலும் அவர்கள் வாழும் அந்தச் சூட்சம உலகுக்குச் செல்ல நம்மை நாம் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.

விண் செல்லும் மார்க்கத்தைக் காட்டுகின்றோம்… விரும்புவோருக்கு அது கிடைக்கும்

 

ஒவ்வொரு நாளும் அந்தத துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் எடுத்து வளர்த்துக் கொண்டே வந்தால் நாம் பிறவியில்லா நிலை அடையும் தகுதி பெறுகின்றோம். இந்த வாழ்க்கையில் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் பெறுகின்றோம்.

1.துருவ நட்சத்திரத்தின் மீது நாட்டம் செலுத்தினால்
2.அந்தப் பேரருள் உணர்வுகள் நம் உயிரிலே அரங்கநாதனாக மாறி
3.அதன் வழியில் தீமைகளை அகற்றிடும் உணர்ச்சிகளாகப் பரவி அந்த உணர்வே நம்மை ஆளும்… ஆண்டாள்…!

இதை அறிந்து கொண்ட நிலையில் நாம் அருள் உணர்வுகளை நுகர்ந்து பழக வேண்டும்.

ஆனால் தீமை என்ற உணர்வை நுகரும் பொழுது உயிரிலே பட்டு அது அரங்கநாதனாக இயக்கி அடுத்துத் தீமையின் நிலையாகத்தான் நம்மை ஆளும் ஆண்டாள்.

தீமையை நீக்கிய துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து நம் உடலுக்குள் பெருக்கினால்
1.தீமையை நீக்கும் உணர்ச்சிகள் நம்மை ஆளும்… ஆண்டாளாக மாற்றி அமைக்கும்
2.இவ்வாறு நாம் வாழ்ந்தால் நமக்குள் ஆழ்வார் என்ற நல்ல உணர்வின் தன்மை அணுக்கள் உருவாகினால்
3.நம் சொல்லும் செயலும் புனிதம் பெறும்… நம் உடலும் தெளிந்த நிலைகள் பெறும்.

உடலை விட்டுப் பிரிந்தால் இந்த உடலில் விளைந்த சூட்சம சரீரம் (உயிராத்மா) துருவ நட்சத்திரத்தின் இணைப்பில் பிறவியில்லா நிலை அடையும் தன்மை வரும்.

எத்தகைய விஞ்ஞான அறிவு கொண்டாலும் இந்த உண்மையை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

நம் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் வரும் சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் போன்ற பகைமை உணர்வுகள் நம் உடலில் விளையப்படும் பொழுது (மாற்றியமைக்கவில்லை என்றால்) அது நாளடைவில் கேன்சர் டி பி. ஆஸ்த்மா சர்க்கரைச் சத்து இரத்தக் கொதிப்பு இருதய நோய் போன்ற நோய்களாக நமக்குள் விளைந்துவிடும்.

உடலை உருவாக்கிய நல்ல அணுக்களை மாற்றித் தீய உணர்வின் தன்மையாகி நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட உறுப்புகளை அழித்து விடுகின்றது.

ஆடு மாடு மான் போன்ற உயிரினங்களை சாந்தம் கொண்டு அவைகள் தன் உடலை வளர்த்தாலும் புலியோ மற்ற மிருகங்களோ அவைகளை அடித்துக் கொல்லும் போது அந்த உடல்கள் அழிந்து விடுகிறது.

அதைப் போன்று தான்… நாம் சந்தர்ப்பத்தால் நுகர நேரும் வேதனை வெறுப்பு கோபம் பயம் போன்ற உணர்வுகள் நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட நம் உடல் உறுப்புகளைக் கொன்று புசித்துவிடும்.

இது போன்ற நிலைகளில் எல்லாம் இருந்து நாம் மீள்வதற்கு நம் முன்னோர்கள் மூதாதையர்களை அவசியம் விண் செலுத்த வேண்டும். சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்தால் நாம் அங்கிருந்து எளிதில் சக்தி பெற முடியும்.

அதன் மூலம் நமக்குள் அறியாது வரக்கூடிய தீமைகளை எல்லாம் மாற்றி இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை என்ற நிலையை நாமும் அடைய வேண்டும்.

1.கோடிச் செல்வம் தேடினும் அந்தச் செல்வம் நம்முடன் வருவதில்லை
2.இந்த உடலும் நம்முடன் கூட வருவதில்லை

ஆகவே பேரருள் என்ற உணர்வின் தன்மையைக் கூட்டக் கூட்ட அந்த உணர்வின் ஒளியாக பிறவியில்லா நிலை நிச்சயம் அடையலாம்.

1.இதை விரும்புவோர் தான் இதைச் செயல்படுத்த முடியும்
2.உடலின் இச்சை கொண்டால் பலன் இல்லை…!

அருள் உணர்வின் தன்மை நம் உடலுக்குள் எடுத்தால் தீமைகளை அகற்றிச் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் தேடிய செல்வத்தைக் காக்கும் சக்தியும் கிடைக்கும்.

இந்த உடலையும் சீராக வைக்கும். சிந்தித்துச் செயல்படும் தன்மையையும் செல்வத்தை நாம் தேடாது செல்வமே நமக்குள் வந்து குவியும் தன்மையும் வரும்.
1.ஆனால் “செல்வம் குவிகிறது…” என்று செல்வத்தின் மீது ஆசை வைத்தால்
2.நம் உணர்வின் தன்மைகள் அனைத்தும் இந்த உடலின் பற்றுக்கே வந்துவிடுகிறது.

ஆகவே நாம் அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியில் சென்று இருளை அகற்றி அருள் வழியில் வளர்ந்து நாம் மெய்ப் பொருளைக் காண்போம்.

அவசரம்… வெறுப்பு… அதி ஆசை… கொண்டெல்லாம் தியானத்தின் மூலம் சக்தி கூட்ட முடியாது

சிறு சிறு மழைத் துளிகள் தான் பெரும் வெள்ளமாகச் செல்கிறது. நாற்று நட்டுப் பயிர் செய்து.. அந்தப் பயிரை விளைய வைத்து… அதை எடுத்து வந்து நாம் சமைத்துப் பக்குவப்படுத்திய பின் தான்… நாம் உணவை உட்கொள்ள முடிகின்றது.

அதே போல் தான் இந்தத் தியான முறையிலும் நம்மை நாம் சிறுகச் சிறுகப் பக்குவ நிலைக்குப் பதப்படுத்தித்தான் அந்த நிலைக்கு நாம் வழியமைத்து வந்திட முடியும்.
1.அவசரப்பட்டும்…
2.இருக்கும் நிலையில் கசப்புடனும்…
3.ஆவல் நிலையில் ஆசைப்பட்டும் வருவதல்ல தியான நிலை.

மெய் ஞானத்தைப் பெறும் தியான நிலையின் பக்குவம் என்ன…?

1.தன் வாழ்க்கையுடன் ஒன்றி உயர்ந்து
2.சிறு சிறு நிலைக்கும் நம் எண்ணத்தையும் செயலையும் பக்குவப்படுத்தி
3.நம் உடலிலுள்ள அணுக்களை எல்லாம் நம் நிலைக்குச் செயல்படும் தன்மைக்குக் கொண்டு வந்து
4.நாம் என்ற நிலையையே… இந்த உடல் என்னும் கூட்டை நாம் மறக்கும் நிலை கொண்டு
5.நம்மை நாம் பரிபக்குவப்படுத்தி நம்முள் இருக்கும் அந்த ஆத்மாவை நாம் கண்டு
6.அருள் வழியில் நாம் இதை இயக்கும் தன்மையைப் பெற்று
7.அந்த ஆத்மாவின் நிலை கொண்டு பெரும் உன்னத சக்தியை நாம் ஈர்த்து எடுக்கலாம்.

தியான நிலை என்றால் என்ன…?

இந்த உலகம் சுழலும் சுழற்சி நிலையில் நம் ஆன்மாவிற்கு விண்ணிலிருந்து வந்து கொண்டிருக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகளை நேரடியாக ஈர்க்கும் நிலையை ஏற்படுத்திக் கொண்டு அதிலிருந்து நம் நிலையை நாம் ஞான நிலைக்கும் அந்த ரிஷியின் நிலைக்கும் உயர்த்திக் கொள்ள முடியும்.

அன்றாட வாழ்க்கையில் நாம் எந்தக் கணக்கைப் பார்க்க வேண்டும்…!

 

உதாரணமாக வேதனைப்படுவோரை அதிகமாக நாம் உற்று நோக்கிப் பார்ப்போம் என்றால் வேதனை அணுக்கள் உடலிலே உருவாக்கி விடுகின்றது,

இதனின் அளவுகோல் அதிகமாகி விஷத் தன்மைகள் பெருக்கமாகும் பொழுது நம் உடலில் உள்ள நல்ல அணுக்கள் நலிவடையும் தன்மை ஏற்படுகிறது.

உதாரணமாக… சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பம் காந்தம் விஷம் என்ற புலனறிவுகள் நாம் சொல்லும் (வெளிப்படுத்தும்) உணர்வுகளை அது நுகர்கின்றது.

பின் அந்த உணர்வின் சத்து தன்னுடன் இணைந்து அதன் மணம் விஷத்தின் தன்மையால் வெளிப்படுத்துகின்றது. ஆகவே புலனறிவு ஐந்து.

ஒரு மனிதன் வேதனைப்பட்டால்…
1.வெப்பம் காந்தம் விஷம் என்ற நிலையில் அவன் வேதனையும் கூடும் பொழுது
2.நமக்குள் இருக்கும் விஷம் அந்த வேதனை உணர்வுடன் இணைந்து விடுகின்றது.

ஏனென்றால் நம் உடலில் நல்ல குணங்களை அதே புலனறிவு தான் (வெப்பம் காந்தம் விஷம்) இயக்குகின்றது.

ஆக அதன் வழி நல்ல குணங்களை நல்ல உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது நல்ல அணுக்களாக மாறுகின்றது. ஆனால் வேதனை வேதனை என்ற உணர்வுகள் அதிகரித்து விட்டால் விஷத்தின் அளவுகோல் அதிகமாகின்றது… கேன்சராக மாறுகின்றது.

அந்த விஷத்தின் தன்மை அதிகமானால் நம் நரம்பு மண்டலம் வழி கூடி உடல் முழுவதும் விழுதுகளைப் பாய்ச்சி நோயாக (நமக்குத் தெரியாமல்) உருவாகின்றது.

நீரே இல்லாத இடத்திலும்… ஒரு அரச மரம் காற்றில் உள்ள நீர் சத்தைக் கவர்ந்து தன் விழுதுகளைப் பரப்பி நீர் உள்ள பக்கம் விழுதுகளை அனுப்பித் தனக்குள் அந்தச் சக்திகளை எடுத்துக் கவர்ந்து ஓங்கி வளர்கின்றது.

இதைப் போன்று தான் விஷத்தின் தன்மை ஊடுருவி உடலுக்குள் வளர்கிறது. எல்லா அணுக்களிலும் இயக்கச் சக்தியாக இந்த விஷத் தன்மை உண்டு. அதை எடுத்து அது வளரத் தொடங்கும்.

உதாரணமாக…
1.நமக்கு வேண்டாதவர்களாக இருந்தால் “அவனுக்கு அப்படித்தான் வேண்டும்…” என்று
2.அந்த வேதனைப்படுவோரைப் பார்த்து நாம் ரசிக்கின்றோம்.
3.வேதனைப்படும்படியாக ஒரு சொல்லைச் சொல்வோம்… அதைக் கண்டு ரசிப்போம்.

இத்தகைய நிலைகள் நமக்குள் நுகர அந்த வேதனை என்ற உணர்வுகள் அதிகரித்து விட்டால் கேன்சர் என்ற நிலை வரும் போது அந்த அணுத் தன்மை இந்த உடல் முழுவதும் நரம்புகள் வழி பாய்ச்சி மற்ற அணுக்களுக்குச் செல்லும் விஷத்தை அது கவர்ந்து விடுகிறது.

அவ்வாறு அந்த விஷத்தின் தன்மை கவர்ந்தால் நல்ல அணுக்களுக்குச் செல்லும் விஷத் தன்மையை இது கவர்ந்து கொண்டால் நல்ல அணுக்கள் இயங்க விஷத்தின் தன்மை இல்லை என்றால் இயக்கம் இல்லாது பலவீனமான நிலைகள் அடைந்து விடுகின்றது.

தேவாங்கு போன்ற சில உயிரினங்களுக்கு விஷத்தின் துடிப்பு குறைவாக இருப்பதனால் அந்த உயிரினத்தின் வேகத் துடிப்பு குறைவாக இருக்கும்.

இதே மாதிரி சில உயிரினங்களுக்கு விஷத்தின் தன்மை குறைவாக இருக்கும் நிலைகள் அது வேகத்தின் நிலைகள் குறைவாக இருக்கும் சிந்திக்கும் தன்மைகளும் குறைவாகவே இருக்கும்.

இதைப் போன்று தான் வேதனை என்ற உணர்வுகள் நமக்குள் தூண்டும் போது நாம் சுவாசிக்கும் உணர்வே விஷம் கலந்ததாக மாறி நமக்குள் கேன்சர் நோய் பரவுகின்றது.

அந்தக் கேன்சரை நீக்க வேண்டும் என்றால் அதைக் கொல்ல கடுமையான மருந்துகளை அதாவது அதைக் காட்டிலும் விஷமான மருந்துகளைத் தான் அந்த மருந்துக்குள் விஷத்தைக் கூட்டி அதனின் வேகத்தைக் கூட்டுதல் வேண்டும்.

1.ஆனால் அந்த விஷத்தைக் கூட்டினால்
2.நம் உடலில் உள்ள நல்ல அணுக்களும் மடிந்துவிடும்

அதே போல் வைத்தியரீதியிலும் விஞ்ஞானரீதியிலும் அது செயலற்றதாக மாற்றிட உடலில் எந்தப் பாகத்தில் அந்த விஷத்தின் தன்மை கூடுகின்றதோ எலெக்ட்ரிக் எலெக்ட்ரான் (கரெண்ட் ஷாக்) என்ற முறை கொண்டு அந்தக் குறித்த பாகத்தில் வெப்பத்தின் தணல் கூடி அந்த அணுக்களை மடியும்படி செய்கின்றனர்.
1.அவ்வாறு மடியும்படி செய்தாலும் இந்தத் தசைகளில் உள்ள
2.மற்ற நல்ல செல்கள் அது வளரும் தன்மையைக் குறைத்து விடுகின்றது.

பின் அதற்குள் இந்த விஷத்தின் தன்மை பரவும் தன்மை தான் இருக்கின்றதே தவிர மாற்றும் தன்மை இல்லை.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு வேதனைகளை நமக்குள் வளர்க்காது பிறர் படும் வேதனைகளை ரசிக்காது அருள் ஒளி கொண்டு அகற்றி மற்றவர்களும் அந்த அருள் ஒளி பெற்று வேதனையிலிருந்து மீள வேண்டும் என்று எண்ணினால் இது போன்ற கொடுமையான விளைவுகளிலிருந்து தப்பலாம்…!

ஆகவே உங்களுக்கு மீண்டும் மீண்டும் யாம் (ஞானகுரு) ஞாபகப்படுத்துவது இது தான். சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை.
1.நாம் எந்தெந்தக் குணங்களைச் சுவாசிக்கின்றோமோ அந்தக் கணக்கின் பிரகாரம் தான்
2.நம் உடலில் நோய்கள் வருவதோ துன்பங்கள் வருவதோ நம்மை அறியாது கஷ்டங்கள் வருவதோ எல்லாமே அதனால் தான்…!

உயிருக்கு டெலிஃபோன் செய்ய வேண்டும்…!

 

மனிதனான பின் இந்த உடலை நாம் எப்படிக் காக்க வேண்டும்…? உயிரான ஈசன் துணை கொண்டு நாம் எதனை உருவாக்க வேண்டும்…? என்று அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நம் ஆறாவது அறிவால் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நுகர்ந்து அதை நமக்குள் உருவாக்குதல் வேண்டும். அந்த அருள் ஒளி பெறும் தன்மையே உணர்த்துவதற்கே ஆலயம்.

நம் உடலே ஆலயம். நம் உணர்வே தெய்வம்…! எந்த உணர்வின் தன்மையை எடுக்கின்றோமோ அந்த உணர்வுக்கொப்ப செயலாகின்றது.

கோபமாக இருந்தால் காளி… சலிப்பும் சஞ்சலம் கொண்டால் வெறுப்பும் வேதனையும் கொண்டு இதைப் போல் ஒவ்வொன்றுக்கும் காரணப் பெயரை வைத்து ஆலயத்தில் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

நாம் நுகர்ந்த அந்தந்த உணர்வே உடலை இயக்கினாலும் அதில் தீமை என்று வந்தால் அதை நீக்க அருள் ஞானியின் உணர்வை நாம் பெறுவதற்கு
1.நாம் பார்ப்போர் குடும்பமெல்லாம் நலமாக இருக்க வேண்டும் என்று
2.ஆலயத்திலே ஒவ்வொருவரையும் இப்படி எண்ணி எடுக்கும்படி செய்கிறார்கள்.

ஏனென்றால் இந்த உடலுக்குள் (அதாவது) உடலான குடும்பத்திற்குள் எல்லோரும் ஒன்றியே வாழுகின்றனர். எல்லோர் உணர்வுகளும் இங்கே உண்டு.

ஒரு பிச்சைக்காரனாக இருந்தாலும் ஐயா… என்று கேட்கும் பொழுது அந்த உணர்வு உடலுக்குள் அது ஒன்றிவிடுகின்றது.
1.ஒருவனுக்குக் காசு கொடுத்தாலும் அடுத்து ஒருவன் மீண்டும் ஐயா… என்பான்.
2.அவனுக்கும் காசைக் கொடுப்போம்
3.இந்த உணர்வின் தன்மை பெற்ற பின் அவர்கள் உடலில் எந்தத் தரித்திரம் ஆனதோ
4.அது எல்லாம் உங்களுக்குள் வளர்ந்து கொண்டே இருக்கும்.

நான் எல்லோருக்கும் தர்மத்தைக் கொடுத்தேன்… கடைசியில் ஆண்டவன் என்னை ஓட்டாண்டியாக ஆக்கிவிட்டான்…! நான் இல்லை என்று யாருக்குமே சொல்லவில்லை… ஆனால் என்னை ஆண்டவன் இப்படிச் செய்துவிட்டானே…! என்று தான் வேதனைப்படுகின்றோம்.

எல்லா ஆலயங்களுக்குச் செல்வோரும்… எல்லா மதத்திலேயும்… இப்படித்தான் “ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றான்…!” என்று புலம்புகின்றனர்.

ஆகவே ஆண்டவன் யார்…?

1.நாம் எண்ணியதை எல்லாம் உருவாக்குவது நம் உயிரே. அதை ஆள்பவனும் உயிரே.
2.எண்ணியதை இறையாக்குகின்றான்… உணர்வின் செயலாக உடலாக்குகின்றான்.
3.அந்த உணர்வுகளை மீண்டும் நினைவுபடுத்தும் பொழுது அதே வழியிலே நம்மை நடத்துகின்றான் என்ற நிலைகளை மறந்து விட்டோம்.

ஆக… ஒருவன் வேதனைப்படுகின்றான் என்று பார்த்து நாம் உதவி செய்தாலும் அவனின் வேதனை உணர்வுகள் நமக்குள் வராது தடுக்க என்ன வழி…?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று முந்தியே டெலிஃபோன் செய்துவிட வேண்டும்.

எப்படி…?

1.தீமை என்ற உணர்வு வராது…
2.அதை நுகர்ந்து விடாதே…! என்று நம் உயிரான ஈசனிடம் சொல்லி விட வேண்டும்.

பின் மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் வலுவாக்கிக் கொண்டு அந்த வேதனைப்பட்டோர் உடல் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும் அவர்கள் எதிர்காலம் சிந்தித்துச் செயல்படும் அருள் ஞானம் பெற வேண்டும் அவர்கள் வாழ்க்கை உயர்ந்திட வேண்டும் அந்த அருள் வழி அவர்கள் பெற வேண்டும் என்று இந்த மாதிரி எண்ணி விட்டு அதற்ப்புறம் காசைக் கொடுத்தோ அல்லது மற்ற உதவிகளைச் செய்தால் அவர்களுக்கும் நல்லதாகிறது… அவர்கள் வேதனை நமக்குள்ளும் வராது தடுத்துக் கொள்கிறோம்.

இப்படி எண்ணச் செய்வதற்குத்தான் ஆலயங்கள்…!

இன்றைய மனிதர்கள்… தனக்குள் இருக்கும் உன்னத சக்தியை அறிய முற்படவில்லை

 

ஒரு உடலை விட்டு ஆன்மா பிரிந்தது என்றால் அந்த உடலில் உள்ள பொழுது எந்தெந்த நிலையை அந்த ஆத்மா பெற்றதோ… எந்த நிலை கொண்ட அறிவாற்றல் அந்த ஆன்மாவிலே இருந்ததோ… அதே நிலையில் தான் அந்த ஆத்மா சுற்றிக் கொண்டேயிருக்கும்.

1.இந்த உலகையும்..
2.தான் எந்தெந்த நிலையில் வாழ்ந்ததோ அந்த நிலை கொண்ட மனிதர்களையும்..
3.அதே நிலை கொண்ட இடத்திலும்தான்.. அந்த ஆன்மா மறு ஜென்மம் பெற்று
4.“தன் தேவையை எப்படிப் பூர்த்தி செய்து கொள்ளலாம்…!” என்ற ஆவலுடன் பல ஆண்டுகள் சுற்றிக் கொண்டே இருக்க முடியும்.

ஆனால் மறு ஜென்மம் பெற்று இன்று இந்த உலகில் வாழ்ந்திடும் உடலுடன் கூடிய ஆத்மாக்கள் எல்லாம் தன் நிலை உணர்ந்து வாழும் நிலையும் ஈர்க்கும் நிலையும் இல்லாமல் பிறரின் நிலை கொண்டே தன் எண்ண சக்தியை விரயமாக்கிக் கொண்டுள்ளார்கள்.

ஏனென்றால் நாம் வாழும் இந்த உலகம்.. மற்ற மண்டலங்கள்… அண்டசராசரங்கள்… எல்லாவற்றையுமே அறிந்து கொள்ள மனிதர்களால் மட்டும் தான் முடிந்திடும்.
1.இன்று ஆத்ம உடலுடன் உள்ள மனிதனால் மட்டும் தான்
2.எல்லா நிலையையும் ஈர்த்து
3.எல்லா உண்மைகளையும் கண்டுணர முடியும்.

அத்தகைய சக்தியைப் பெறும் தகுதி என்பது ஆண்… பெண்… குழந்தைகள்… முதியவர்கள்… என்ற நிலை கொண்டு வயது வரம்பில்லாமல் எல்லோருக்குமே அந்தச் சக்தியுள்ளது. நாம் ஈர்த்து எடுக்கும் நிலை கொண்டு தான் அந்தச் சக்தி நமக்கு உதவுகின்றது.

மின்சாரத்தை உபயோகித்து ஒரு கடுகளவு வெளிச்சத்தையும் அதி தீவிர வெளிச்சத்தையும் உண்டாக்குகின்றோம். அந்தந்தச் சாதனத்திற்குள் எந்த அளவிற்கு மின்சாரத்தைப் பாய்ச்சுகின்றோமோ அந்த நிலையில் நாம் அதனின் ஒளியைப் பெறுகின்றோம். அதைப் போல
1.மனிதனின் சக்தி என்பது
2.அந்த மின்சாரத்தின் சக்தியைவிட அதி விரைவு கொண்ட சக்தியாக உள்ளது.
3.ஆனால் இன்றைய மனிதர்கள் தன் சக்தியைத் தானே உணர்ந்து எடுக்கும் நிலை இல்லை.

படிப்பு என்ற நிலையில் பல நூல்களையும் பல கல்வி ஸ்தாபனங்களுக்குச் சென்று படிப்பதுவும் தன் அறிவை மென்மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

இருந்தாலும் அறிவு வளர வேண்டும்…
1.தன் எண்ணத்தில் வீரிய சக்தி பெற வேண்டும்
2.தன் நிலையில் பல உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற
3.இப்படிப்பட்ட எண்ணத்தில் படிப்பை வளர்த்துக் கொள்பவர்கள் மிகவும் குறைவு.

படிப்பதனால் தன் வாழ்க்கை நிலைக்குகந்த செல்வம் பெற்றுச் செல்வச் செழிப்புடன் வாழலாம்.
1.உயர்ந்த உத்தியோகம் கிடைக்கும்
2.உன்னத நிலை பெற்று புகழ்ந்த நிலையில் வாழலாம் என்ற
3.இந்த ஆசாபாசத்துடன் தான் இன்றைய பாட நிலையும் படிக்கும் நிலையும்
4.கல்வி கற்பவருக்கும்… கல்வி புகட்டுபவருக்குமே… உள்ளது.

அப்படி வாழ்ந்திடாமல் அச்சக்தியின் அருளை ஏற்று வாழும் வாழ்க்கையைப் பெற்று வாழ்ந்திடுங்கள்.

இந்த உடல் என்னும் கூட்டை… ஆத்மாவின் நிலை கொண்டு… நம் எண்ணம் என்ற செயலினால்…! இந்த உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களை ஆற்றல் மிக்கதாக ஆக்கி
1.இந்த உலகம் அனைத்திலும் உள்ள சக்தியைக் கண்டறியும் ஆற்றலும்
2.இந்த உடலையே நாம் பறக்கும் நிலைப்படுத்திடவும்
3.எந்த நிலைக்கும் இந்த உடலை நாம் ஈர்த்து அச்சக்தியின் அருளைப் பெற்று
4.இந்த உலகில் உள்ள மக்களுக்குப் பல உண்மைகளை உணர்த்திட முடியும்.

உங்களை நீங்கள் நம்புங்கள்…!

புண்ணியவான்கள் யார்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

நம்மைப் போன்றே பூமியில் தோன்றிய மனிதர்கள் உயர்ந்த நிலை பெற்று இன்றும் அவர்கள் பெயர்கள் நிலைத்திருக்கும்படி வாழ்ந்த நிலையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

1.நம்முடைய ஆணிவேரான சுவாச நிலையிலிருந்து
2.நாம் பெறும் பாக்கியங்களை… நாம் பெறும் செல்வங்களை
3.உயிராத்மாவிற்குத் தேவையான அழியாத பொக்கிஷத்தை… அந்தச் செல்வத்தை நாம் புரிந்து வாழ்ந்திட
4.பல நிலைகளை நமக்கு அளித்துச் சென்றவர்கள் தான் புண்ணியவான்களான அந்த ஞானிகளும் மகரிஷிகளும்…!

அவர்கள் ஒவ்வொருவரும் தன்னுடைய நிலையினிலே பல பல ஆற்றல்களையும் சக்திகளையும் பெற்று இன்றும் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் நிலைத்திருக்கின்றார்கள்.

அவர்கள் பிறந்த அதே பூமியில் வாழும் நமக்கு நம் நிலை நிலைத்திருக்கப் பல நிலைகளை உணர்த்திச் சென்றுள்ளார்கள்.

அத்தகைய சக்தி (அஷ்டமாசித்து) பெற்றவர்கள்…
1.தன் உடலை ஒரு கூடாக வைத்துத்தான் தன் ஆத்மாவை
2.உலகெங்கும் பிற மண்டலங்கள் எங்கும் சென்று வரும் நிலைக்குப் பல அருளைப் பெற்றார்கள்.

இந்த உலகில் கலந்துள்ள அத்தகைய மெய் ஞானிகள் மகரிஷிகளின் நிலையை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
1.நாம் எந்த நிலை கொண்டு எண்ணுகின்றோமோ அந்த நிலைக்கெல்லாம் வந்து உதவி
2.நம் எண்ணத்தையும் செயலையும் நல்லதாக்க
3.நமக்குப் பல நன்மைகளைச் செய்திடப் அப்படிப்பட்ட பல பெரியோர்கள் உள்ள பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?

நம் எண்ணமும் செயலும் பல ஆசை கொண்ட சுகபோகங்களுக்குச் சென்றிடாமல் அதற்கு அடிமைப்பட்டு வாழும் நிலையை மாற்றிட வேண்டும். அன்பென்னும் ஆசை தான் நமக்கு வேண்டும்.

ஆகவே
1.அழியாச் செல்வமான நம்முடைய ஆத்மாவை நாம் அழித்தே வாழ்ந்திடாமல்
2.நம் எண்ணத்தையும் நம் சுவாசத்தையும் நம் ஆத்மாவிற்கு அடிமையாக்கி
3.அந்த ஆத்மாவிற்கு அடிபணிந்து வாழ்வதற்கு
4.நம்முள் இருக்கும் உயிரான ஈசனின் சக்தியைக் கொண்டு
5.நமக்கு முன் தோன்றிய பல பெரியோர்களின் ஆசியைப் பெற்று வாழ்வதுவே மனிதனின் வாழ்க்கை.

ஞானிகள் மகரிஷிகளின் அருளாசி பெற்று வாழ்ந்திடுங்கள்…
அன்புடன் வாழ்ந்திடுங்கள்… ஆண்டவனாக வாழ்ந்திடுங்கள்…!

உடல் நோய் நீக்கி உடல் நலம் பெறச் செய்யுங்கள்

 

ஈஸ்வரா…! என்று புருவ மத்தியிலிருக்கும் அவரவர்கள் உயிரான ஈசனை வேண்டி… தியானத்தில் அமர்ந்திருப்பவர்கள் எல்லோருக்கும் சர்வ தோஷங்களும் நீங்கி அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் படர்ந்து அவர்கள் உடல்களில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் பெற்று அவர்கள் உடல்களில் உள்ள சர்வ நோய்களும் சர்வ தோஷங்களும் நீங்கிட வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது அவரவர்கள் உடலில் இடுப்பு வலியோ தலை வலியோ கை கால் வலியோ வயிற்று வலியோ இருதய நோயோ கிட்னி கோளாரோ மூல நோயோ இருந்தது என்றால் எங்கள் உடலில் உள்ள அந்த நோய்கள் நீங்க வேண்டும் என்று தியானியுங்கள்.
1.உங்கள் உடலில் உள்ள சர்வ நோய்களும் நீங்கும்
2.எல்லோரும் இந்த நோய் நீக்கும் சக்தி பெற வேண்டும் என்று எண்ணியபின் இந்த உணர்வை ஏங்குங்கள்.
3.நோயை நீக்கும் அரும் பெரும் சக்தி இப்பொழுது பெறுவீர்கள்.
4.உங்கள் உடல் முழுவதுமே “ஒரு கரெண்ட்…” பாய்கிற மாதிரி இருக்கும்.

உங்கள் உடலில் உள்ள சர்க்கரைச் சத்தோ இரத்தக் கொதிப்போ வாத நோயோ ஆஸ்த்மாவோ முல நோயோ இருதய நோயோ இதைப் போன்றிருந்தால் அந்த உறுப்புகளில் எல்லாம் மின்சாரம் பாய்ந்தது போல் அந்த அருள் சக்திகள் பாயும்.

1.அந்த உடல் உறுப்புகள் எல்லாம் சீராக இயங்கத் தொடங்கும்
2.உங்கள் உடலில் உள்ள வலிகளும் வேதனையும் குறையும்.
3.அனைத்து நோயிலிருந்தும் விடுபடும் சக்தி பெறுகின்றீர்கள்.
4.கேன்சர் டி.பி. போன்ற கடுமையான நோய்களும் குறையத் தொடங்கும்
5.அது குறைந்து உங்கள் உடலிலிருந்து இறங்கும் தன்மையையும் நீங்கள் உணரலாம்.

எங்கெல்லாம் உங்கள் உடல்களில் குறைபாடுகள் இருக்கின்றதோ அதில் எல்லாம் இப்பொழுது அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகள் படரப்பட்டு உங்கள் உடல் நலம் பெறும் உணர்ச்சிகள் உங்களிலே தோன்றும்.

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ் நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் படர்ந்து அவர்கள் இரத்த நாளங்களில் கலந்து அவர்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் அனைத்தும் பெற்று
1.அவர்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த
2.தீய வினைகளால் விளைந்த
2.பாவ வினைகளால் விளைந்த
3.சாப வினைகளால் விளைந்த
4.பூர்வ ஜென்ம வினைகளால் விளைந்த
5.சர்வ தோஷங்களும் சர்வ ரோகங்களும் நீக்கிடும் அருள் சக்தி பெற்று
6.சர்வ நோய்களும் நீங்கி உடல் நலம் பெற்று மன பலம் மன நலம் பெற்று
7.அருள் ஞானம் பெற்று அருள் வாழ்க்கை வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

கணவன் மனைவியாக வாழ்பவர்கள் இல்லற வாழ்க்கையில் இருளினை அகற்றி நஞ்சினை வென்று பேரருள் பெற்று பேரொளி என ஆகி மகரிஷிகளின் அருள் வட்டத்தில் மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

தீமை செய்யும் வினைகளை ஆன்மாவிலிருந்து அறுத்தெறிய வேண்டிய சரியான முறை

காலையிலிருந்து இரவு வரை நாம் பார்த்தது கேட்டது நுகர்ந்தது அனைத்தும் ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய என்று நம் உடலுக்குள் எத்தனையோ உணர்வுகளாக உருவாகிக் கொண்டே இருக்கின்றது. சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்ததில் தீமை செய்யும் உணர்வுகளும் உண்டு.

அப்படி உருவான அணுக்களுக்கு உணவு தேவை. நாம் நுகரப்படும் பொழுது அந்தந்த எண்ணத்தின் நினைவே வருகின்றது.

இதிலிருந்து நாம் எவ்வாறு மீள வேண்டும்…? என்பதற்காகத்தான் அதிகாலையில் துருவ தியானத்தின் மூலம் விண்ணிலிருந்து வரும் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்று சொல்கிறோம்.

ஈஸ்வரா… என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி… அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும்… எங்கள் இரத்தநாளங்களில் அது கலக்க வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வை உடலுக்குள் செலுத்த வேண்டும்.

1.துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கவர கண்ணின் நினைவு கொண்டு அங்கே செலுத்தும் பொழுது
2.நம் கண் ஈர்ப்பின் தன்மை இங்கே வருவதை (தீமை செய்யும் உணர்வுகளை) ஈர்ப்பதில்லை.
3.நினைவின் தன்மை விண்ணிலே செல்லும் பொழுது மேல் நோக்கிய சுவாசம் இங்கே உருவாகின்றது.

அதே சமயத்தில் அந்த அருள் சக்திகளை நம் உடலுக்குள் செலுத்தி அது வலு பெறும் பொழுது நமக்குள் இருக்கும் எத்தனையோ கொடிய உணர்வுகளை அது வலு இழக்கச் செய்கிறது.

கொடிய உணர்வுகள் என்றால்… பத்திரிக்கை வாயிலாகவோ டி.வி மூலமாகவோ பிறர் செய்த கொடிய செயல்களைப் பார்த்துப் படித்திருந்தாலும்.. வேடிக்கையாக அல்லது பொழுது போக்காக என்று எண்ணினாலும்… அது எல்லாம் நமக்குள் பதிவாகி விடும்.

அப்படிப் பதிவான உணர்வுகள் விளைந்த பின் நம் உடலில் உள்ள நல்ல அணுக்களைக் கொன்று புசித்திடும் நிலையாக வளர்ந்து விடும்.

1.அதை எல்லாம் மாற்றிடும் சக்தி நாம் பெற வேண்டும்
2.அந்தத் தீமைகள் நமக்குள் விளையாது தடுத்துப் பழக வேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் பெற்றுப் பேரொளியாக மாறும் திறன் நாம் பெறவேண்டும்.

அந்த அருள் உணர்வின் தன்மையை நுகர்ந்து நமக்குள் அறியாது வந்து சேரும் தீய வினைகளையும் பகைமைகளையும் அகற்றிட வேண்டும்.

அதை அகற்றிடும் மார்க்கத்தைத்தான்… உடல் அழுக்கைப் போக்குவது போல்
1.தன் வாழ்க்கையில் கவர்ந்து வந்த தன் ஆன்மாவில் பட்ட அழுக்கைப் போக்க
2.அதிகாலை துருவ தியான நேரத்தில் அந்த அருள் ஒளியைப் பெருக்க
3.அந்த அழுக்கினை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து மேலே சென்று விடுகிறது.

நமக்குள் தெளிந்த மனம் வருகிறது. இதை மீண்டும் மீண்டும் நாம் நினைவில் கொண்டால் அந்த ஒளியான அணுக்கள் நமக்குள் பெருகுகின்றது.

எந்த சந்தர்ப்பத்திலும் தீமை என்று நுகர்ந்தாலே ஈஸ்வரா என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உடலிலே வலுவாக்கிக் கொண்டு நமக்குள் அருள் ஞானத்தை வளர்க்கும் பேரருளைப் பெருக்கும் உணர்வுகளைப் பெறவேண்டும்.

அப்பொழுது தான் அந்தத் தீய உணர்வின் வித்து வளராது. அதற்குண்டான சத்து இல்லை என்பதால்…!

இதை ஏன் சொல்கிறோம் என்றால் இன்றைய விஞ்ஞான உலகில் எத்தனையோ அசம்பாவிதங்கள் நடக்கின்றது. உடனுக்குடன் நாம் பார்க்கின்றோம். அது எல்லாம் தீய வினைகளாக உருவாகிக் கடும் விளைவுகளாக நமக்கு வந்து கொண்டிருக்கின்றது. காற்று மண்டலத்தில் இத்தகைய தீய வித்துக்களே அதிகமாகப் பரவி உள்ளது. அதை நாம் வாழும் இடத்திலிருந்து அகற்ற வேண்டும்.

உதாரணமாக விவசாயத்தில் பயிர்களை வளர்க்கப்படும் பொழுது
1.அந்த இன வித்துக்களை மீண்டும் மீண்டும் ஊன்றவில்லை (மகசூல்) என்றால்
2.ஈர்க்கும் சக்தி இழந்தால் அந்தச் செடியின் சத்துகளே மறைந்துவிடும்
3.ஏனென்றால் சூரியன் அழைத்துச் சென்றுவிடும்.
4.பூமியிலே ஈர்க்கும் வன்மை இல்லை என்றால் அது கரைந்துவிடும்.
5.பின் அந்த இனத்தை உருவாக்கும் அந்த உணர்வின் தன்மையை இழந்துவிடும்.

முந்தைய காலங்களில் நெல் வகைகளில் “தலைவிரித்தான்” என்று ஒரு வகை உண்டு. அதற்குப் பெயர் தொப்பி என்றும் வைப்பார்கள். அந்த ரக அரிசியே காலத்தால் மறைந்தது. இணை சேர்த்து அது மாறியது.

அந்த வித்தே இன்று இல்லை… அதை வளர்த்த உணர்வின் சத்துகளை சூரியன் கவர்ந்து சென்று விட்டது. இப்பொழுது அத்தகைய நெல்லும் இல்லை.

இருந்தாலும் அத்தகைய வித்து ஒன்றை ஊன்றினாலும் அது இழுத்துக் கொண்டு போகிறது. விளையாது… மண்ணுடன் மடிந்தே விடும்.
1.இத்தகைய உணர்வின் சத்து தாவர இனங்களுக்கும் அதுவே
2.நம் உடலில் உள்ள உணர்வுகளுக்கும் அதுவே.

இது போன்று இந்த இயற்கையின் நிலைகளை நாம் உணர்ந்தறிந்து இந்த வாழ்க்கையில் நாம் எவ்வாறு வாழ வேண்டும்…? என்று உண்மையை உணர்த்துவது தான் விநாயகர் தத்துவம்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் அதைத் தான் உங்களுக்குப் போதிக்கின்றோம் (ஞானகுரு).

நம் வாழ்க்கையையே துன்பங்கள் நுகராது… அருள் வழியின் உணர்வை நுகரச் செய்யும் பண்பாக (பழக்கமாக) உருவாக்க முடியும்

தியானம் என்பது… உட்கார்ந்து தியானிப்பது மட்டும் தியானமல்ல. வாழ்க்கையையே தியானமாக்க வேண்டும்.

எப்படி…?

நமக்குள் பெற்ற சக்தியின் தன்மையை நமது நண்பர்களோ மற்றவர்களோ நம்மை அணுகி தொழில் செய்யும் நிலைகள் வரப்படும் பொழுது “நாங்கள் பெற்ற சக்தி அவர்கள் பெற வேண்டும்…” என்ற எண்ணத்தை எடுங்கள்.

உதாரணமாக… ஒரு கஷ்டமோ நஷ்டமோ அவர்கள் படுகின்றார்களென்றால் அப்பொழுது நம்மை அணுகி வருவார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் நீங்கள் கற்றுணர்ந்த உணர்வை உபதேசமாகச் சொல்லுங்கள்.
1.அப்பொழுது நீங்கள் அதை தியானிக்கின்றீர்கள்
2.அருள் ஒளியை அவர்களுக்குக் கொடுக்கின்றீர்கள்.

ஏனென்றால் அவருடைய கஷ்டத்தையோ துன்பத்தையோ உங்களுக்குள் பதிவாகாதபடி
1.அருள் ஞானத்தின் சக்தியை அவர்களுக்குக் கொடுத்து
2.நீங்கள் இதைச் செய்யுங்கள்… நலமாக இருப்பீர்கள் என்று
3.இந்த அருளைப் பெறவதற்குண்டான வழியைச் சொல்லுங்கள்.

இதைப் படிப்போர் ஒவ்வொருவரும் ஒன்றுபட்டு உங்களுக்குள் கண்டுணர்ந்த இந்த நல் உணர்வின் தன்மை கொண்டு ஒருவருக்கொருவர் இதைப் பரிமாற்றம் செய்து எல்லோரையும் வளர்ச்சி பெறச் செய்யுங்கள்.

இந்த வாழ்க்கையையே… “துன்பங்கள் நுகராது… அருள் வழியின் உணர்வை நுகரச் செய்யும் பண்பாக உருவாக்குங்கள்…!”

நாம் நண்பர்களுடன் பழகும்போது அவர்களின் துன்பத்தைப் பற்றிக் கேட்டுணர்ந்தாலும் அதைப் பக்குவமாக்கிட வேண்டும். இப்பொழுது இருவர் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்றால் “இப்படியெல்லாம் பேசுகின்றார்கள் நியாயமா…?” என்று நம்மிடம் சொல்ல வருவார்கள்.

அந்த மாதிரி நேரங்களில் எல்லாம் சண்டை போடுபவர்களிடம் சென்று… கட்டாயப்படுத்தி அந்த நல்லதைச் சொல்லப் போனால் அதற்கு எதிர்ப்பு உணர்வுகள் தான் வரும்.

இப்படிச் சொல்கின்றார்கள் என்று நண்பர் உங்களிடம் அணுகி வரப்படும் பொழுது இந்தத் தத்துவத்தை அந்த நண்பருக்குச் சொல்லுங்கள்.

1.அவருடைய உணர்வை உங்களுக்குள் வளர்க்க வேண்டாம்.
2.எதிரியை உங்களுக்குள் ஒதுங்கிச் செல்ல வழி விடுங்கள்.
3.எதிர்த்துக் கொண்டே இருந்தால் அது உங்கள் நல்ல செயலை எல்லாம் குறைத்துவிடும்…! என்று
4.நண்பரிடம் தெளிவாக இதை எல்லாம் எடுத்துச் சொல்லுங்கள்.

சண்டை போட்டவர் உடலில் விளைந்த தீமையை உங்கள் உடலில் விளையாதபடி தடுக்க
1.“மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்…” என்று எண்ணுங்கள்.
2.உங்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவர்களுக்கு நல்ல எண்ணம் வர வேண்டும் என்று எண்ணுங்கள்
3.இந்த எண்ணங்களை நீங்கள் ஒரு பாதுகாப்புக் கவசமாக வளர்த்துக் கொள்ளுங்கள்…! என்று உங்கள் நண்பரிடம் சொல்லுங்கள்.

இதை எல்லாம் அவர் கடைப்பிடிக்க நேர்ந்தால் அவர்களது எதிரியின் உணர்வுகள்… “இந்த எதிரியான அணுக்கள்” நண்பர் உடலுக்குள் விளையாதபடி தடுக்க இது உதவும்.

அதே சமயத்தில் நண்பர் மூலமாகக் கேட்டறிந்த அந்த உணர்வுகள் நம்முள்ளும் வளராது தடுக்கப்படுகிறது. நண்பருக்குச் சொல்லும் நிலையில் அந்த அருள் ஞானத்தை நாம் நினைத்துச் சுவாசிக்கும் பொழுது இதுவே நமக்குத் தியானமாகி விடுகின்றது.
1.பிறருக்கு நாம் எடுத்துச் சொல்லும் பொழுது
2.நம் நினைவுகள் வேறு எங்கும் (தீமைகளுக்கு) போவதில்லை.

இதைப் போல வாழ்க்கையில் எப்பொழுது எங்கே எதனின் நிலைகளில் தீமைகள் ஏற்பட்டாலும் அப்பொழுது நீங்கள் ஒரு ஐந்து நிமிடம் ஆத்ம சுத்தி செய்துவிட்டு இந்தத் தத்துவத்தைச் சொல்லுங்கள்.

1.தீமைகள் எதனால் வருகின்றது..?
2.நாம் எண்ணியதை நம் உயிர் எப்படி உருவாக்குகின்றது…?
3.அதனால் நம் உடலில் தீமைகள் எப்படி உருவாகின்றது…?
4.தீமையை நாம் எந்த வழியில் அடக்க வேண்டும்…? என்று சிந்திக்கும்படி செய்து
5.ஆத்ம சுத்தி செய்யும் உணர்வுகளை அவர்களுக்குக் கொடுத்து
6.சிறிது நேரம் அந்த மகரிஷிகளின் ஆற்றலை எடுத்துச் சொல்ல முற்படுங்கள்.

இதன் மூலம் தீமைகளை அகற்றிய அருள் மகரிஷிகளின் உணர்வை நீங்கள் சுவாசித்து உங்கள் உடலில் சேர்த்துக் கொண்டால் அவர்கள் செய்த தீமைகள் நமக்குள் வருவதில்லை.

இவ்வாறு நாம் தடுக்கும் சமயத்தில் அருள் மகரிஷிகளின் உணர்வு நமக்குள் அதிகமாக இணைகின்றது. அதை நீங்கள் நினைவுபடுத்தும் பொழுது உங்கள் உடலிலுள்ள உணர்வுகளிலும் அணுக்களிலும் அது வளரத் தொடங்கி அதற்கு நல்ல ஆகாரமாகக் கிடைக்கின்றது.

ஆனால் சண்டை போடுபவர்களை நாம் உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தால் போதும். அந்த உணர்வுகள் நமக்குள் வளர்ந்து சண்டை போடும் அணுக்களுக்கு (அந்த உணர்ச்சியைத் தூண்டும் அணுக்களுக்கு) ஆகாரமாகக் கிடைக்கும்.

அடுத்த நிமிடமே… மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டும் என்று நமக்குள் எடுக்க வேண்டும். வேடிக்கை பார்த்தாலும்… அவர்களுக்குள் சகோதரத்துவம் வளரவேண்டும்.. எங்கள் பார்வை வைரத்தைப் போல் ஜொலிக்க வேண்டும்.. அவர்கள் வாழ்க்கையை ஜொலிக்கச் செய்யும் ஆற்றல் எங்களுக்குள் வளரவேண்டும்… என்று இப்படி உங்களுக்குள் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.

எங்கள் செயல் அனைத்தும் எல்லோரையும் நல்லவராக்கும் செயலாக எங்களுக்குள் உருவாக வேண்டும்.

எங்கள் சொல்லைக் கேட்போர் வாழ்வில் மகிழும் சக்தி பெறவேண்டும் என்று இப்படி இதை ஒவ்வொரு நாளும் கூட்டிக் கொள்ளுங்கள்.

1.உங்களை உங்கள் எண்ணமே காக்கும்
2.அதுவே கடவுள் ஆகின்றது.

எண்ணியதை உயிர் ஈசனாக இருந்து உருவாக்குகின்றது. உங்கள் உணர்வின் தன்மையை இப்படி உருவாக்கப்படும் பொழுது அதுவே உங்களுக்குள் அதிகமாக உருவாகும் சக்தி பெறுகின்றது.

இப்படி அந்த உருவாக்கும் ஆற்றலை நமக்குள் பெருக்கிக் கொண்டே வந்தால் என்றும் அருள் ஒளியின் சுடராக இந்த வாழ்க்கையை நாம் நிச்சயமாக வாழலாம்.

இன்றைய மனிதர்களின் (மாய) வாழ்க்கை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

 

இந்த உலகம் என்ற மாயையே எண்ணி மயங்கி வாழும் வாழ்க்கை தான் நாம் வாழ்கின்றோம்.

அப்படிப்பட்ட இந்த உலக வாழ்க்கையிலே
1.நமக்கு எஞ்சி இருப்பது எதுவப்பா…?
2.வாழும் வாழ்க்கையில் மிஞ்சுவது என்னப்பா…?
3.சொத்தையும் சுகத்தையும் ஆள்வது யாரப்பா…?
4.இந்த உலகில் பிறந்து வாழ்ந்து இறந்த பின் நிலைத்து இருப்பது என்னப்பா…?

நம் உடலா…? சம்பாரித்த பணமா…? சொத்தா…? சுகமா…?

நாம் இந்த உலகை விட்டுச் செல்லும் பொழுது நம்முடைய மக்கள் (பிள்ளைகள்) இருக்கின்றார்களே…! என்ற எண்ணம் பலருக்குண்டு.

ஆனால் நம் பெயர் சொல்ல அந்த மக்கள் எத்தனை காலங்களுக்கு…? பேரன்… கொள்ளுப் பேரன்….! என்று இப்படிச் சுற்றிக் கொண்டேயுள்ள நிலையிலே நம் பெயர் மறைய எத்தனை காலங்கள்…? என்று சிந்திக்கின்றோமா…?

அம்மா…அப்பா… பற்றி சிறிது காலத்திற்கு எண்ணுகிறோம். அவர்கள் அம்மா அப்பா… அதற்கு முன்னாடி வாழ்ந்தவர்கள்…! என்று யாரையாவது நாம் நினைக்கின்றோமா…?

எல்லாம் போய் விட்டார்கள்… என்று “சாதாரணமாகத்தானே சொல்கிறோம்…!”

அவர்கள் எதையுமே கொண்டு போகவில்லை என்கிற பொழுது நாம் மட்டும் எதைக் கொண்டு போக முடியும்…?

ஆக மொத்தம் பிறப்பு…உடல்…இறப்பு…! மீண்டும் பிறப்பு… உடல்…இறப்பு…! என்று இராட்டினம் மாதிரித் தான் சுற்றிக் கொண்டே இருக்கின்றோம்.

இந்தப் பூமியில் பிறந்த நாம் அனைவரும்
1.பிறவிப் பயன்… பிறவிப் பயன்… என்பதையே புரிந்து வாழ்ந்திடாமல்
2.இருக்கும் வரை (உடலுடன்) அனுபவிக்க வேண்டும் என்று இப்படித்தான் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.

எண்ணக் கடலில் செல்லும் நாம்…
எண்ணிய இடத்திற்குச் செல்வதற்கே…
எண்ணிய எண்ணத்தில் தான்…
ஏற்றமும் தாழ்வும் அமைவதுவே…!

இரத்தக் காட்டேறிகள் என்று சொல்வதன் உண்மை நிலை என்ன…? – ஈஸ்வரபட்டர்

 

ஞானத்தின் சக்தி பெற்று சித்து நிலை பெற்றிடவே…
1.நம்முள் உள்ள அமில சக்தியை எல்லாம் நம் நிலைக்குகந்த அமில குணத்தை
2.ஞானத்தின் ஈர்ப்புக்குச் செல்லும் குண அமிலமாக நாம் செயல்படுத்தி விட்டால்
3.எந்த அமிலத்தை நாம் எந்த வழித் தொடருக்கு அதிகப்படுத்தி அதன் ஈர்ப்பில் வளர விடுகின்றோமோ
4.அதன் தன்மையின் ஆணைக்குட்பட்டு மற்ற அமில குணங்களும் அதன் கட்டுப்பாட்டிற்கே அடங்கிச் செயல்படுத்திட வைத்திடலாம்.

அதனதன் குணம் என்றுமே மாறாது… ஆனால் அதனை இதனின் கட்டுபாட்டிற்குள் அடக்கி வைத்திட முடியும். (இது முக்கியம்)

நல்ல அமிலத்தின் செயலைப் போன்றே தீய அமில குணத்தின் செயல் நிலையும் அதன் செயலிலேயே வழி கொண்டிடும்.

நமக்குள் உள்ள இந்தப் பன்னிரெண்டு வகை அமிலத்தையும் அதன் போக்கில் நாம் செல்ல விட்டால் என்ன ஆகும்…?

அதனதன் தொடரில் எதன் குணம் அதிகப்படுகின்றதோ
1.அதற்குகந்த ஆவி குண அமிலங்களும்…
2.இதன் ஈர்ப்பில் அந்தக் குணத்திற்குரிய இந்தக் காற்றில் சுற்றிக் கொண்டிருக்கும்
2.உடலை விட்டுப் பிரிந்த மனித ஆத்மா மிருக ஆத்மா என்ற பாகுபாடில்லாமல் எல்லாமே
3.இந்தக் குண அமிலத்துடன் வந்து சேர்ந்து கொண்டே இருக்கும்.

இப்படிச் சேரும் அவி அமிலங்களீல் சில சக்தி வாய்ந்த ஆவி அமிலங்கள் உடலில் ஏறிவிட்டால் அதன் செயல் நிலை அந்த உடலில் உள்ள உயிராத்மாவைக் காட்டிலும் இதன் தூண்டுதலின் வெறிக்கு உட்பட்டு மென்மேலும் “அதன் நிலைக்கே தான்…” இழுத்துச் சென்று கொண்டிருக்கும்.

பக்தி… ஞானம்… சித்து… என்ற நல் உணர்வு அமில சக்தியின் கூட்டு நிலையும் இப்படித்தான். அதே போல் சலிப்பு கோபம் வெறி குரோதம் இப்படிச் செயல்படும் நிலையின் அமில குணமும் அதன் ஈர்ப்பில் தான் இழுத்துச் செல்லும்.

இப்படி இத் தீய அணுவின் அமில குணத்திற்குக் கட்டுப்பட்ட ஆத்மாக்களை “அந்தத் தீய அமில சக்தி” மென்மேலும் அதனை இழுத்துச் சென்று கொண்டே தான் இருக்கும்.

வாழ்ந்த காலத்தில் வஞ்சனை குரோதம் கொலை கொள்ளை இப்படிச் செல்லும் அமில உயிராத்மாக்கள் அதன் வெறி உணர்வினால் உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்றாலும் இந்த வெறி உணர்வு அடங்காமல் அதே நிலை கொண்ட உடல்களில் ஏறி தன் வெறிக்குகந்த செயலை மென்மேலும் தூண்டி “மனித ஆத்மாவைப் பேயாக்கி விடுகின்றது…!”

இந்த வெறி கொண்ட ஆவி உலக ஆவி… மனித ஜீவ உடல் கொண்ட அதே குண நிலையில் உள்ள ஆத்மாவின் உடலில் ஏறி… மென்மேலும் இந்த வெறி உணர்வு அதிகப்பட்டு…
1.உடலில் உள்ள பொழுதே மாமிச உணவுகளை மிக அதிகமாக உண்டு
2.அதன் வெறியிலேயே உடல் பிரிந்து சென்றாலும் அந்த ஆவிகள் தான் தன் வெறிக்குகந்த உணவைப் பெற
3.இரத்தக் காட்டேறிகளாக அந்த உதிரத்தின் சுவாசத்தை எடுக்க ஆவி உலகில் இருந்து கொண்டு வெறியாட்டம் நடத்துகின்றன.

இன்று உலகில் எலலாப் பாகங்களிலுமே அதிகமாக விபத்துக்கள் ஏற்படுகின்றன என்றால் அது எந்த நிலையில்…?

இரத்தக் காட்டேறிகளாக ஆவி உலகில் சூழ்ந்துள்ள இந்த ஆத்மாக்களுக்கு அதற்குகந்த ஆகாரத்தை எடுத்துக் கொள்ளத் தான்… அவைகள் செய்யும் வெறிச் செயலினால் “இன்றைய உலக ஆத்மாக்கள் மாளுகின்றன…”

மனிதன் தான் தெய்வமும் ஆகின்றான். இரத்தக் காட்டேறியாகவும் ஆகின்றான். எமனாகவும் செயல்படுகின்றான். தேவனாகவும் செயல்படுகின்றான்.

1.எண்ணும் எண்ணத்தைக் கொண்டு நல் அமிலத்தை ஈர்த்து வாழ்பவன் தெய்வமாகின்றான்
2.தீய அமிலத்தை ஈர்த்து வாழ்பவன் பேயாகின்றான்.

நமக்கெல்லாம் மீறிய அப்பாற்பட்ட சக்தியான அந்த ஆதிசக்தி அவள் விதைத்த விதையில் வளரும் நிலை கொண்டு… “பலனைக் கண்டு அவளே நகைக்கின்றாள்…!”

எல்லா விதையும் ஒன்று போல் விதைத்து அந்த விதையின் பயனைக் கண்டு மென்மேலும் விதைத்துக் கொண்டே உள்ளாள்.
1.விதையின் நற்பயனைத் தன்னுள் எடுத்துக் கொண்டு வேண்டாத பயனை ஒரு கால கட்டத்தில் மாற்றி அமைத்து விடுகின்றாள்.
2.இந்தக் கலியில் பொறுக்கி எடுக்கின்றாள் தான் விதைத்ததன் பயனை எல்லாம்…!
3.தனக்குகந்தது எது…? என்று அவளுக்குத் தெரியும்.
4.மற்றவற்றைத் திரும்பவும் உழுது பயிருக்கு அனுப்புவாள்.

மாற்றி மாற்றிப் பலனை எடுத்துக் கொண்டே தான் இருக்கிறாள்… என்பதனை உணர்ந்து இரத்தக் காட்டேறிகளாக அலையும் ஈர்ப்பில் நாம் போய்ச் சிக்காமல்… “அன்பென்னும் அருள் நெறியில் நம்முள் உள்ள அமில குணங்களை வழி நடத்தி… அந்த ஞானத்தின் சித்தை அடைவோம்…”

இந்தப் பிறவியே கடைசியாக இருக்கட்டும்… அடுத்து இன்னொரு உடலுக்குள் செல்ல வேண்டாம் – ஈஸ்வரபட்டர்

இந்த உலகில் மனிதர்கள் மிருகங்கள் மட்டும் வாழவில்லை. நம்மைச் சுற்றிப் பல கோடி ஆத்மாக்கள் உடலில்லாமல் ஆத்மாவுடன் (ஆவிகள்) இந்தக் காற்று மண்டலத்தில் உள்ளது.

1.உலகில் நடக்கும் நிலைகளை எல்லாம் தெரிந்து கொண்டு தன் நிலைகளுக்கு ஏற்ப உடல்களையும்
2.தன் ஆத்மா வந்து (தான்) பிறந்து வாழ்ந்திடும் நிலைக்காகவும்
3.எந்த உடலில் ஏறினால் அந்த உடலின் மூலமாகத் தான் விட்டுச் சென்ற
4.தன் எண்ணத்தை – நன்மையையோ துவேஷத்தையோ பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்ற நிலை கொண்டும்
5.இப்படித் தன் நிலையை ஈடேற்றிக் கொள்ள இன்று உடலுடன் வாழும் மனிதர்களை
6.உடலில்லா ஆத்மாக்கள் பல கோடி கோடியாகத் தன் எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ளச் சுற்றிக் கொண்டேயுள்ளன.

நாம் நினைக்கின்றோம்…!
நம் எண்ணம்…
நம் உடல்…
நம் ஆன்மா என்று…!

ஆனால் நம் உடலில் நாம் மட்டும் வாழவில்லையப்பா. (நாம் எண்ணுவதைப் போல் நாம் மட்டும் வாழவில்லை – இது மிகவும் முக்கியமானது)

அன்றாட வாழ்க்கையில் நம் மன நிலை எந்தெந்த நிலை கொண்டு மாறுகின்றதோ
1.அந்தந்த நிலை கொண்ட ஆவி அணுக்கள் நம் உடலில் வந்து எந்தத் திசையிலும் ஏறிக் கொண்டு
2.நம்மையே ஆட்டிப் படைத்து நம்மை ஆண்டு வாழ்ந்து
3.தன் எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ள நம் உடலை ஒரு கூண்டாக
4.தான் குடியிருக்கும் கூண்டாக வைத்து ஆண்டு வாழ்கிறது.

உடலில் ஆவிகள் இல்லாத மனிதரே இல்லை… என்று சொல்லலாம்…!

நம் நிலையைக் கொஞ்சம் போல மாற்றிக் கொண்டாலே (உணர்ச்சி வசப்பட்டாலே) நம் நிலையில் இருந்து வாழ்ந்திடப் பல அணுக்கள் நம்மைச் சுற்றிக் கொண்டுதான் உள்ளன…! என்பதை இப்பொழுதாவது ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளுங்கள்.

இதிலிருந்தெல்லாம் தப்ப வேண்டும் என்றால் நம்முள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி ஒன்றைத்தான் ஈர்த்து வாழ்ந்திட முடியும் என்ற உண்மையை உணர்ந்து பல ஆவி உலக ஆன்மாக்களுக்கு நாம் அடிமையாகாமல் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இது வரை இந்த உலக வாழ்க்கையில் பெற்ற சந்தர்ப்பங்கள் (பல பிறவிகள்) எல்லாவற்றையுமே நழுவ விட்டு விட்டோம்.
1,இந்தக் கடைசி நிலை கொண்ட இந்த மனித உடலிலிருந்தாவது
2.நம் உயிரணுவைச் சமமாக நிலை நிறுத்தி
3.அந்த மகரிஷிகளிடம் ஐக்கியப்படுத்துங்களப்பா…!

பாட்டன் பாட்டிகளை மதிக்க வேண்டியதன் அவசியமும்… அவர்களை விண் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவமும்…!

 

நம் தாய் தந்தையரை வளர்த்தவர் யார்..? அவர்களுடைய தாய் தந்தையர். அவர்கள் குலவழியில் தான் நாம் மனிதனாக இன்று வந்திருக்கின்றோம்.

நம் குலதெய்வங்களாக… நம்மை உருவாக்கிக் கொடுத்தவர்களும் நம்மைக் காத்தவர்களும் நம் பாட்டன் பாட்டி தான்…!
1.அவர்கள் தன் பேரக் குழந்தைகள் சுட்டித்தனம் செய்வதைப் பார்த்தால் “கீழே விழுந்துவிடாதே…” என்று பதறுவார்கள்.
2.மண்ணில் விளையாண்டு கொண்டிருந்தாலோ.. விளையாடதடா…! என்று
3.தாங்கள் கண்ட அனுபவங்களை எல்லாம் சேர்த்து நல் உணர்வுகளை ஊட்டிக் கொண்டே இருப்பார்கள்.

தாய் தந்தைக்குக்கூட அவ்வளவு பாசம் இருக்காது. பாட்டன் பாட்டிக்குப் பார்த்தால் தன் பேரக் குழந்தைகள் மீது பாசம் அதிகமாக வந்துவிடும்.

குழந்தைகளாகிய நாம் ஏதாவது சேஷ்டை செய்தால் “இப்படிச் செய்கின்றானே செய்தால் உடம்புக்கு என்னாவது…?” என்று இந்த மாதிரி உணர்வுகளை எடுத்து அதை வளர்த்துக் கொள்கின்றனர்.

நம்மை அறியாமலே பாட்டன் பாட்டிக்கும் நாம் தீமையைத் தான் செய்கின்றோம்.

இதைப் போன்ற நிலை இல்லாது.. இதற்கு முன் செய்யத் தவறி இருந்தாலும் இனியாவது
1.எங்கள் அன்னை தந்தையரை ஈன்ற எங்கள் குலதெய்வமான பாட்டன் பாட்டிகள்
2.அந்தச் சப்தரிஷிகளின் அருளும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்.
3.எங்களுக்காகப் பட்ட அந்த வேதனை உணர்வுகள் அனைத்தும் நீங்கிட வேண்டும்
4.பேரருள் உணர்வுகள் எங்கள் அன்னை தந்தையரை ஈன்ற பாட்டன் பாட்டிக்குக் கிடைக்க வேண்டும் என்று
5.இப்படி உயர்ந்த சக்திகளை அவர்களுக்கு இணைத்து வாழ்தல் வேண்டும்.
6.இந்த உணர்வுகளை அவர்களுக்குச் செலுத்தினால் உடலை விட்டு அவர்கள் அகன்றாலும் விண் செல்ல ஏதுவாகிறது.

எப்படி…?

அவர்களின் உடல் தான் நாம். ஆக அந்த அருள் ஒளி பெற்ற உணர்வை நமக்குள் வலுவேற்றிக் கொண்ட பின் அந்தச் சூட்சம சரீரமாகும் பொழுது (உடலை விட்டுப் பிரிந்த ஆன்மா) நம் உணர்வின் தன்மை அதிலே பதிவாகின்றது.

ஆகவே அவர்கள் உடலை விட்டுப் பிரிந்து சென்றால்… எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் குலதெய்வங்களான உயிரான்மாக்கள் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பேரருள் பேரொளியுடன் ஒன்றி என்றும் பிறவியில்லா நிலை என்னும் நிலை அடைய வேண்டும்.
1.இந்த உணர்வுடன் அவர்கள் உயிரான்மாக்கள் அனைத்தையும்
2.வானிலே சப்தரிஷி மண்டலத்தின் பால் உந்தித் தள்ள வேண்டும்.

சப்தரிஷி மண்டல ஒளியுடன் கலந்த பின் உடல் பெறும் உணர்வுகளைக் கருக்கிவிடுகிறது. வாழ்ந்த அந்த அறிவின் தெளிவை அங்கே நிலைக்கச் செய்கின்றது.

காலை ஆறு மணிக்கெல்லாம் சூரிய உதய நேரத்தில் உடல் பெறும் உணர்வுகளை எல்லாம் சூரியன் கவர்ந்து சென்று விடுகிறது. இங்கே பரமாத்மாவும் தூய்மை அடைகிறது.

விநாயகர் தத்துவத்தில் ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி நம் முன்னோர்களின் உயிரான்மாக்கள் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று
1.இந்த உணர்வு வலு பெற்ற பின் எதனை நமக்குள் எடுத்தோமோ
2.அதே உணர்வின் தன்மை நம்மையும் அங்கே (சப்தரிஷி மண்டலத்திற்கு) அழைத்துச் செல்கிறது.

ஆண்டவனை வணங்கும் முறையை முன்னோர்கள் ஏன் வழிப்படுத்தினார்கள்…? – ஈஸ்வரபட்டர்

ஒவ்வொரு ஆத்மாவும் தனக்கு வேண்டிய ஒரே ஆசையான அன்பென்னும் ஆசையைத்தான் நாடி ஏங்கி வாழ்கிறது. எல்லா ஆன்மாக்களுமே அன்பை வேண்டித்தான் இந்த உடலுடன் வாழ்கின்றது.

அந்த அன்பிற்காகத்தான்… …
1.அந்த அன்பு கிடைக்காத நிலையில் சோர்வாகி
2.மன நிறைவைப் பெற்றிடாமல் பல தவறுகளும் பல இன்னல்களும் ஒவ்வொரு ஆத்மாவிற்கும் வந்து
3.அந்த மனம் என்னும் அன்பு கொண்ட ஒரே லோகத்தைப் பல லோகங்களாக்கி வாழ்ந்திடுகிறார்கள் மனிதர்கள்.

பரலோகம்.. எமலோகம்… நரக லோகம்… பூலோகம்… சொர்க்கலோகம்… இப்படிப் பல லோகங்களைச் சொல்கிறார்கள்…! அல்லவா. இவைகள் எல்லாம் என்னப்பா…?

மனம் என்னும் அந்த அன்பு லோகத்தை அந்த அன்பையே ஏங்கி அன்புக்காக வாழும் அந்த ஆத்மலோகத்திற்காக நம்மைச் சுற்றியுள்ள பல லோகங்களைத்தான் நாம் அழிக்கின்றோம்.

அன்பு ஒன்றினால் மட்டுமே இந்த உலகை உன்னதமாக ஆக்கிட முடியுமப்பா. ஆகவே எந்த நிலை கொண்டும் இன்று இருக்கும் இந்த விஷமான விஞ்ஞான உலகில்
1.பல இன்னல்களுடன் வாழ்ந்திடும் இம்மனமென்னும் ஆத்மாவிற்கு
2.அன்பென்னும் பொக்கிஷத்தை அவ்வுயிர் ஆத்மாவிற்கு ஊட்டம் தந்தே வாழ்ந்திடுங்கள்.

ஏனென்றால் அன்பினால் தான் நம் உடலும் நம் மனதும் நம் ஆத்மாவும் புத்தொளிர் பெற்று வாழ்கிறது என்ற உண்மையை அறிந்து ஒவ்வொருவரும் அன்பு கொண்டு வாழ்ந்திடுங்கள்.

ஆண்டவனை வணங்கிடும் முறையை நமக்கு முன் வாழ்ந்த முன்னோர்கள் ஏன் உணர்த்தினார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

சஞ்சலக்கூடு நிறைந்த இந்த மனத்தை அன்பு என்னும் நிலையில் தான் அவ்வாத்மாவை அமைதிப்படுத்த முடியும் என்ற நிலைக்காகத்தான் ஆண்டவன் என்னும் ரூபத்தை ஏற்படுத்தினார்கள் முன்னோர்கள்.

மனமென்னும் நிலையைச் சஞ்சல நிலையிலிருந்து மீட்டிட அவ்வாண்டவனைப் பல ரூபத்தில் எண்ணி மகிழ்ந்து நம் ஆண்டவன் என்னும் அன்பு ரூபத்தை நாம் அன்பு கொண்டு வணங்கிட நம் முன்னோர்கள் வழி காட்டி வந்தார்கள்.

அவர்கள் காட்டிய மெய் வழியில் ஆண்டவனை வணங்குகின்றோமா…?

அகஸ்தியரில் விளைந்த மூச்சலைகளை நுகரவும் கவரவும் பழகிக் கொள்ளுங்கள்

 

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி புருவ மத்தியில் எண்ணி ஏங்குங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் நினைவை இப்பொழுது கண்ணுக்கே கொண்டு வாருங்கள். அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் மீண்டும் ஏங்கித் தியானியுங்கள்.

1.உங்கள் நினைவை அகஸ்தியன் வாழ்ந்த காலத்திற்குச் செலுத்துங்கள்.
2.அவன் உடலில் விளைந்த நஞ்சினை வென்ற உணர்வுகளையும்
3.அருள் ஞானத்தைப் பெற்ற அருள் உணர்வுகளையும் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்திய மாமகரிஷியின் பேரருளை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி அகஸ்தியன் வாழ்ந்த காலமான அந்தக் காலத்திற்கு உங்கள் நினைவாற்றலை அழைத்துச் செல்லுங்கள்.

அகஸ்தியன் பெற்ற பேரருள் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியன் அவன் வாழ்ந்த காலத்தில் அவன் இட்ட மூச்சலைகள்
1.காடு மலைகளிலும் அந்த வனாந்திரங்களிலும் பரவி உள்ளது
2.நாடு நகரங்களிலும் படர்ந்திருக்கின்றது
3.அந்த உணர்வை நுகரும் போது அதைக் காட்சியாகவும் அறிய முடியும்.

அகஸ்திய மாமகரிஷிகளின் பேரருள் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை உங்கள் உடல் முழுவதும் படரச் செய்யுங்கள்.

உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி எங்கித் தியானியுங்கள்.

“கண்ணன் கருவிலிருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான்…” என்பது போல் அகஸ்தியன் நஞ்சினை வென்று பேரருள் பெற்றுப் பேரொளியான அந்த அருள் சக்தி பெறவேண்டும் என்று உயிரான ஈசனிடம் வேண்டி அந்த உணர்வை நுகர்ந்து
1.கண்ணின் நினைவு கொண்டே உடல் முழுவதும் பரவச் செய்து
2.உடலில் உள்ள ஜீவ அணுக்களும் ஜீவான்மாக்களும் அந்த அருள் சக்தியைப் பெறச் செய்யுங்கள்.

திருமணமானவர்கள்… மனைவி கணவனை எண்ணி அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி கணவர் உடல் முழுவதும் படர்ந்து அவர் இரத்த நாளங்களில் கலந்து அதில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள்.

அதே போல் கணவன் மனைவியை எண்ணி அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி மனைவி உடல் முழுவதும் படர்ந்து அவர் இரத்த நாளங்களில் கலந்து அதில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.இப்பொழுது உங்கள் இரு மனமும் ஒன்றென இணைகிறது.
2.இரு உயிரும் ஒன்றென இணையும் சந்தர்ப்பம் உருவாகிறது
3.அருள் ஒளி என்ற உணர்வை உருவாக்க இது உதவும்.

குழந்தைகள் தங்கள் தாய் தந்தையரை எண்ணி அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் பேரருள் எங்கள் தாய் தந்தையர் உடல் முழுவதும் படர்ந்து இரத்த நாளங்களில் கலந்து அவர்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள். அவர்கள் பெறும் பேரருளை நீங்களும் பெறலாம்…!

1.அகஸ்தியன் அவன் வாழ்ந்த காலத்தில் அவன் நுகர்ந்தறிந்த
2.பல விதமான மூலிகைகளின் உணர்வுகள் அந்த அருள் உணர்வின் மணங்களை
3.நஞ்சினை வென்றிட்ட அந்த அருள் மணங்களை நீங்களும் நுகரலாம்.
4.உங்கள் ஆன்மாவில் அது அதிகமாக இப்பொழுது பரவும்… அதை உணரலாம்.

அகஸ்தியனுக்குள் விளைந்த நஞ்சினை வென்ற உணர்வை நாமும் கவர இப்படிப் பழகிக் கொள்ள வேண்டும். அதற்குத் தான் இந்தப் பயிற்சியைக் கொடுக்கின்றோம் (ஞானகுரு).

அன்றைய ஞானிகள் எந்தப் பள்ளியில் படித்துப் பட்டம் பெற்றார்கள்…! ஞானத்தைப் பெற்றார்கள்…? – ஈஸ்வரபட்டர்

1.அறியாதவர்கள் அறிந்து வாழ வேண்டும் என்ற நிலையை எண்ணிடாமலேயே வாழ்கின்றார்கள்
2.அறிந்தவர்களோ அந்தமும் ஆதியும் அறிய வேண்டும் என்ற ஆசையுடன் வாழ்கிறார்கள்.

கற்றவர்… கல்லாதவர்… அறிந்தவர்… அறியாதவர்… எழை… செல்வந்தன்… இப்படிப் பல பல தரப்புள்ள மேடு பள்ளம் கொண்ட உயர்வு தாழ்வு என்ற எண்ணம் கொண்டு இந்த உலகமே சுழல்கின்றது.

1.கற்றவருக்குத் தான் கற்ற வித்தையும் கர்வமும்
2.கல்லாதவருக்குத் தான் கல்லாத நிலை கொண்டு தாழ்வு மனப்பான்மையும்
3.தன் மனதிலுள்ளே ஏற்றம் தாழ்வு என்ற இரு நிலை படைத்த
4.மாய ரூபத்தையே மனதினில் கலக்கவிட்டு உலக மக்கள் இன்று வாழ்கிறார்கள்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு…! என்ற உண்மையைத் திருவள்ளுவர் ஆதி காலத்திலேயே உணர்த்தியுள்ளார். இன்றுள்ள மக்களின் மனதில் ஏட்டுப் படிப்பின் எண்ணம் தான் அதிகமாக உள்ளது. அதையே பெரிய படிப்பாக எண்ணி வாழ்கின்றார்கள்.

1.ஏட்டுப் படிப்பிற்குப் பதவி பணம் என்ற போர்வையைப் போர்த்தியுள்ளதால்
2.அந்த நிலைக்காக ஏங்குவோர் பலர் உள்ளனர்.

படிப்பும் பட்டமும் அளித்த மாய ரூபங்கள் தாம் இவை…!

தன் எண்ணத்தினால் தன் ஜெபத்தினால் தன்னுள்ளேயே உலக உண்மைகளை ஈர்க்கும் சக்தியைப் பெற்ற திருவள்ளுவர் எழுதிய திருக்குறளுக்கு
1.எந்தப் பள்ளியில் படித்து யாரால் பட்டமளிக்கப்பட்டதப்பா…?
2,அன்று கம்பர் எழுதிய கவிதையெல்லாம் எந்தப் பட்டிமன்றத்தில் ஏற்றுப் படிக்கப்பட்டதப்பா..?

கம்பரும் திருவள்ளுவரும் வியாசகரும் வான்மீகியும் இப்படி எண்ணிலடங்கா ஞானிகளும் சித்தர்களும் ரிஷிகளும் எழுதிய நூல்கள் எல்லாம் எந்தப் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்துப் பட்டம் பெற்று எழுதினார்களப்பா…?

அன்று நமக்குத் தம் சக்தியை உபயோகப்படுத்தி உன்னத நூல்களை அவர்கள் அளித்த நிலை கொண்டுதான் இன்றும் பல போதனா மொழிகளில் பள்ளிகளிலும் கல்லூரியிலும் கல்வி என்ற பெயரில் சொல்லிக் கொடுத்து வருகிறார்கள்.

அந்தப் படிப்பைப் படித்தற்கு இன்றுள்ள உபாத்தியாயர்கள் மதிப்பெண்களும் தருகிறார்கள். மதிப்பெண் பெறுவதில் தான் இருக்கின்றார்கள்.
1.ஆக இன்றுள்ள இக்கலியுகமே
2.தானாக உணர்ந்து செயல்படும் நிலையை முழுவதுமாக மாற்றி வருகிறது.

உலகின் ஒவ்வொரு நிலையிலும் புதிய புதிய சக்தி நிலை தோன்றிக் கொண்டே வரும் பொழுது இம்மனிதனின் எண்ணத்தில் மட்டும்
1.தான் உணர்ந்து செயல்படும் நிலையை மாற்றிக் கொண்டு
2.பெரும் பேராசையின் நிலைக்குத் தன்னை அடிமையாக்கிக் கொண்டு வாழ்கின்றான் இன்றுள்ள மனிதன்.
3.மனிதர்களின் எண்ணமெல்லாம் ஏட்டுப் படிப்புடனும்
4.பிறர் சொல்லிய உண்மைகளையே ஆராய்ந்து பார்க்கும் நிலையுடனும்
5.அந்த நிலையைக் கொண்டு விவாத நிலைக்கும் கொண்டு வந்து விட்டார்கள்.

இன்று மனிதர்கள் உயிர் வாழும் நிலையே செயற்கையினால் தான் நடந்து வருகின்றது. இந்தச் செயற்கையின் சொரூபத்திற்குத் தன்னை அடிமையாக்கிக் கொள்ளாமல் இனியாவது இயற்கையைப் போற்றி வணங்கிடுங்களப்பா…!

ஒவ்வொரு மனிதரும் தன் நிலைக்கும் அந்தச் சக்தியின் நிலை உண்டு. தன்னாலும் இயற்கையின் உண்மையை உணர்ந்து நடந்திட முடியும்.

நஞ்சைப் பிரிக்கும் சிறுநீரகத்திற்கு (கிட்னி) நாம் செருகேற்ற வேண்டிய துருவ நட்சத்திரத்தின் சக்தி

 

நமக்கு வேண்டியவர் உடல் நலக் குறைவானால் அந்த நோயாளியை நாம் கண் கொண்டு உற்றுப் பார்க்கின்றோம். அவன் வேதனைப்படுகின்றான் என்ற உணர்வை நாம் சுவாசிக்கும் பொழுது அந்த உணர்வுகள் நம் உயிருடன் ஒன்றுகிறது.

அவனைக் காக்க வேண்டும் என்ற ஆறாவது அறிவு கொண்டு நாம் செயல்படுகின்றோம்.
1.ஆனால் அந்த உணர்வின் தன்மை நமக்குள் வந்த பின்
2.நம் உடலுக்குள் அவர் உடலில் விளைந்த நோயின் தன்மை புகாது தடுக்க வேண்டும்.

அப்படித் தடுக்க வேண்டும் என்றால்
1.கண்ணின் நினைவினை ஈஸ்வரா… என்று உயிருடன் ஒன்றி
2.துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எடுத்து அந்த உணர்வினை உடலுக்குள் செலுத்தி
3.உடலிலுள்ள இரத்த நாளங்களில் கலக்கச் செய்து
4.உடலில் இருக்கும் எல்லா அணுக்களுக்கும் நம் கண்ணின் நினைவு கொண்டு உபதேசித்தல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தி எல்லா அணுக்களிலும் உருக் கொண்டு வலுக் கொண்ட பின்
1.இரத்தங்களில் கலந்து வந்தாலும் அந்தத் தீமைகளை ஏற்றுக் கொள்ளாது
2.அதனின் உணர்வுகள் நம் உடல் உறுப்புகளில் சுழலப்படும் பொழுது கிட்னி (சிறுநீரகங்கள்) இந்த விஷத்தைப் பிரித்து விடுகின்றது.
3.ஏற்றுக் கொள்ள முடியாத நிலை வரப்படும் பொழுது அதைப் பிரித்து விடுகின்றது.

ஏனென்றால் சந்தர்ப்பத்தால் நாம் எண்ணி எடுத்துக் கொண்ட அந்த நோயாளியின் உணர்வுகள்… நம் உடல் உறுப்புகளில் கலந்து அங்கே வலுப் பெற்று… நம் கிட்னி விஷத் தன்மை கொண்டு செயலற்றதாக மாறுவதற்கு முன்…
1.அந்தக் கிட்னியை உருவாக்கிய அணுக்களுக்குள்
2.நாம் எடுத்துத் தூய்மைப்படுத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் ஒளி அங்கே படர்கின்றது.
3.பின் அந்த விஷத்தின் தன்மையை வடிக்கும் தன்மை கொண்டு அதை வெளியேற்றி விடுகின்றது.

ஆனால் வேதனைப்படுவோர் உணர்வுகளை நுகர்ந்தால் அந்த உணர்வுகள் உடலில் அணுக்களாக விளைந்து கிட்னி அந்த விஷத்தைக் கண்ட பின் அதைச் சிறுநீராகச் சரியாகப் பிரிக்காதபடி… இரத்தத்தைச் சுத்திகரிக்கவில்லை என்றால் விஷத்தின் தன்மை மற்ற உறுப்புகளிலும் சேர்கின்றது.

அந்த விஷங்களை வடிக்கத் தவறினால் நமக்குள் கடும் நோயின் தன்மை உருவாகி மடியும் தன்மையே வருகின்றது.

ஆகவே நம் ஞானிகள் காட்டிய அருள் வழியில் இந்த வாழ்க்கையில் எவ்வாறு வாழ வேண்டும்…? என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்தல் வேண்டும்.

நான் (ஞானகுரு) சொல்வது உங்களுக்கு எளிதாக இருக்கலாம். இதை எல்லாம் கண்டுணர்வதற்கு எவ்வளவோ கடுமையான வேதனைகளை அனுபவித்தேன்.
1.வேதனையான உணர்வுகள் எப்படி வருகிறது…? என்று உணரும்படிச் செய்தார் குருநாதர்.
2.அந்த வேதனை தாக்கப்படும் பொழுது அதை எவ்வாறு நீ மாற்ற வேண்டும்…?
3.இதற்கு நீ என்னென்ன உபாயங்களைக் கையாள வேண்டும்…? என்று தெளிவாக்கினார்.

அதனின் உணர்வு கொண்ட வித்தினை உருவாக்கித் தான் “ஞான வித்தாக” உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டே வருகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் சக்திகளை உங்கள் கிட்னிக்குள் வலு சேர்க்கப்படும் பொழுது நஞ்சான உணர்வுகளை நீக்கிடும் ஆற்றல் பெறுகின்றீர்கள்.

வாழ்க்கையில் தீமை என்ற உணர்வு வரும் பொழுதெல்லாம்…
1.உங்கள் எண்ணத்தால் அதை அகற்றிடும் வலிமை
2.நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் இதை எல்லாம் உபதேசிக்கின்றோம்.

ஆண்டவனின் ஆசியை எப்படிப் பெறுவது…? – ஈஸ்வரபட்டர்

 

அன்புக்காக ஏங்கும் நிலையும் ஆசை நிலை தான்…!

நம்மையே நாம் உணராத நிலையில்… பிறரின் அன்பை நாம் வேண்டும் பொழுது பிறரின் அன்புக்கும் நம் ஆன்மாவை நாம் அடிமையாக்கிக் கொள்கிறோம்.

அதே போல் ஆண்டவனின் அன்பை வேண்டி வேண்டுகின்றோம். ஆனால் அந்த ஆண்டவன் நமக்கு எப்படி அன்பைப் பொழிவான்…?

நம்முள் அதிக ஆசையை வளரவிட்டு அதனால் வரும் கஷ்டங்களை நம் உடலும் நம் எண்ணமும் படும் வேதனையை
1.நம்முள்ளே அந்தச் சங்கடத்தை ஏற்றுக் கொள்ளாமல்
2.நம்மையே நாம் வெறுக்காமல்
3.நம்முள் இருக்கும் தவறை நாம் மாற்றிக் கொண்டு
4.நம்மையே நாம் எண்ணிப் பார்த்து
5.நம் வேதனையும் நம் ஆசைகளும் நம்முள்ளேயே தான் வருகின்றன என்ற உண்மையைப் புரிந்து
6.நம்மையே நாம் அமைதிப்படுத்திக் கொண்டு நாம் எண்ணும் பொழுது
7.நம்முள் இருக்கும் அவ்வாத்மா அமைதியுற்று அந்த ஆண்டவனின் சக்தியே
8.நமக்கு அன்பு கொண்டதாக வந்திடும் நிலையை ஏற்றுத் தருகிறது.

நம் மன நிலையில் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு நாமே தான் அந்த நிலையை அனுபவிக்க முடியும். பிறரை எந்த நிலை கொண்டும் எண்ணிப் பார்த்திடலாகாது.

நம்மால் வரும் கஷ்ட நஷ்டங்களுக்கு அந்த ஆண்டவனா பொறுப்பாளி…? நம்மில் இருக்கும் ஆண்டவனைக் கண்டிட நம்மை நாமே நம் சுவாசத்திலும் எண்ணத்திலும் பரிசுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
1.அப்பொழுது தான் அந்த ஆண்டவனின் ஜெபத்திற்கும்
2.ஆண்டவனின் ஆசியைப் பெறுவதற்கும் உகந்தவர்களாகின்றோம்.

கோப குணத்தால் நம் உடலுக்குள் ஏற்படும் மாற்றங்கள்

 

உதாரணமாக கோப உணர்வின் தன்மையை மீண்டும் மீண்டும் எண்ணி நாம் சுவாசித்தால் உடலுக்குள் அத்தகைய அணுக்கள் உருவாகி தன் இனத்தை விருத்தி செய்து கொண்டே இருக்கும்.

இரத்தத்தில் முதலில் ஒரு அணுவாக இருந்து அந்த உணர்ச்சியின் தன்மை வரும் பொழுது பல அணுக்களாகப் பெருகி விடுகின்றது. இப்படி உருவாகி விட்டால் பல அணுக்களும் அந்தக் கார உணர்வை உணவாக உட்கொள்ளும் தன்மை வரும். அப்பொழுது என்ன செய்யும்…?

1.இந்த மாதிரிக் கோபம் வருவோரை எல்லாம் பாருங்கள். நரம்பெல்லாம் விடைத்துவிடும்.
2.அவர்கள் நரம்பை விடைக்க வைக்கின்றார்களா…? இல்லை…!
3.ஆனால்… அந்த உணர்ச்சிகள் இரத்த நாளங்களிலே அழுத்தம் அதிகமான பின் விடைக்கச் செய்கிறது.

கண்கள் எல்லாம் சிவந்துவிடும். நெற்றியிலே பார்த்தோம் என்றால் கண்ணுக்கு வரும் ஓட்டங்களில் அதனுடைய உணர்வுகள் வேகமாக இருப்பதைக் காணலாம்.

ஆனால் தவறு யார் செய்தது…?

கோபப்படுவோரை வேடிக்கை பார்த்தோம். அந்த உணர்வுகள் நமக்குள் அணுவாக விளைகிறது, அந்த உணர்வின் அணுக்கள் பெருகப்படும் பொழுது அதனின் மலம் இரத்தத்தில் கலக்கின்றது.

இரத்தத்தில் கலந்து நம் உடல் முழுவதும் சுற்றி வரப்படும் பொழுது இந்த உணர்வின் வேகம் உணர்ச்சிகள் உச்சகட்டம் அடைகின்றது.

அதாவது ரேடியோக்களில் ட்ரான்சாக்சன் என்று சொல்வார்கள்…! நம் உயிரிலே இந்த உணர்வின் தன்மை இயக்கப்படும் பொழுது
1.அது எந்த உணர்ச்சியோ அது ட்ரான்சாக்சன்… இழுத்து இந்த உணர்வுகளை மூளை வரையும் சிந்திக்கச் செய்து
2.அந்த உணர்வின் அலைகள் உடல் முழுவதும் பரவப்படும் பொழுது
3.நுண்ணிய நரம்புகளுக்குள் இந்தக் கார உணர்ச்சிகளானால் அப்படியே பலூன் மாதிரி உப்பிவிடும்.
4.அப்பொழுது நம்மை அறியாதபடி தலை கிண்… என்று இருக்கும்.
5.கண்களிலும் இதே போல் இருக்கும்.

குழந்தை மீது பாசமாக இருந்தாலும் இந்த மாதிரி நேரத்தில் ஒரு சாமானை அந்தக் குழந்தை கீழே போட்டான் என்றால் “அறிவு கெட்டதனமாகப் போடுகிறான் பார்…!” என்று உடனே இந்த வேகம் வரும்.

அதே போல் தன் மனைவியையே கூப்பிட்டு ஒரு பொருளை எடுக்கச் சொன்னாலும் அவர்கள் அதை எடுக்கச் சென்றாலும் சரி…
1.சொன்னார்கள்… சரி மெதுவாக எடுப்போம் என்று மனைவி கொஞ்சம் சாதாரண நிலைகளிலிருந்தால்
2.“நடப்பதைப் பார்…!” நான் என்ன சொல்கிறேன்..? நீ எப்படி வேலை செய்கிறாய்…? என்று மனைவி மீது வெறுப்பான பேச்சு வரும்.

அதே சமயத்தில் தொழில் செய்யும் இடங்களில் நம்மிடம் வேலை செய்யும் பையனைக் கூப்பிட்டு வேலை சொல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

அவன் சரிங்க சார்…! என்று கொஞ்சம் சாந்தமாகப் போனால் அவன் போகும் பொழுதே
1.நடையைப் பார்… இவன் போகும் வேகத்தைப் பார்…! இவனெல்லாம் உருப்படுவானா..?
2.நான் சொல்கிறேன்… இவன் எப்படி வேலை செய்கிறான்..? என்று
3.நம்மை அறியாமலே அவனை இப்படி எல்லாம் திட்டுவோம்.

ஆக ஓ…ம் நமச்சிவாய..! சிவாய நம ஓ…ம்…! நாம் திட்டிய உணர்வுகள் அவனிடம் இதைச் சொன்ன பின் அவன் காதிலேயும் இது கேட்கிறது.

இதைக் கேட்ட பின் அவனுக்குள்ளும் இதே உணர்ச்சிகள் தூண்டப்பட்டு என்ன…? சார்… நம் மீது இப்படிக் கோபிக்கிறாரே…? என்று அவனுக்குள்ளும் இதே கோபம் தூண்டும்.

அவன் போகும் பொழுதே இந்த உணர்வின் தன்மை வரப்படும் பொழுது அந்த ஒரு ஃபைலை யாரிடம் கொடுக்க வேண்டுமோ அவரிடம் கொடுக்காதபடி வேறு ஒருவரிடம் கொண்டு கொடுத்து விடுவான்.

நான் கொடுத்து விட்டேன் என்பான். ஆனால் நாம் சொன்னவரிடம் அது போய்ச் சேர்ந்திருக்காது.

அந்த நபரிடம் ஃபைல் வந்து சேர்ந்ததா பார்த்து விட்டீர்களா…? கணக்கு பார்த்தாகியதா…? என்று கேட்கிறோம் என்றால் அவர் வரவில்லையே என்பார்.

அந்தப் பையனை மீண்டும் கூப்பிட்டு… ஏண்டா உன்னை எங்கே கொடுக்கச் சொன்னேன்…? எங்கேயடா கொடுத்தாய்..? என்று கேட்போம்.

1.ஏனென்றால் இந்த உணர்வுகள் நாம் வெளிப்படுத்தியது தான் அந்தப் பையனுக்குள் சென்று இயக்குகிறது.
2.அதன் வழி அந்தப் பையன் வேலையைச் சரியாகச் செய்ய முடியாமல் போய்விடுகிறது.

குற்றம் யார் செய்தது…?

இது தான் ஓம் நமச் சிவாய… சிவாய நம ஓம். நம் உணர்வுகள் இப்படி மாற்றிக் கொண்டே உள்ளது. நாம் நுகர்ந்த உணர்வுகளே அந்தந்த உணர்ச்சிகளை ஊட்டச் செய்கிறது.

அதே சமயத்தில் நாம் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் கருவாகி அந்த கார உணர்வின் அணுக்களின் தன்மை பெருகுகின்றது.

உதாரணமாக வீட்டிலே பெண்கள் கணவருக்குச் சாப்பாடு எடுத்துக் கொண்டு வருகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதைப் பார்த்ததுமே அந்த ஆவேசம் வரும்.

வைக்கும் பொழுது கொஞ்சம் சும்மா நின்றால் போதும். போட்டு விட்டுப் போக வேண்டியது தானே… என்று அங்கேயும் இந்த அளவுக்கு கோபம் பாய்ந்து வரும்… அடுத்து சண்டையும் வரும்.

ஆனால் உடலைப் பரிசோதித்தால் இரத்தக் கொதிப்பு இருக்கும். எதைப் பார்த்தாலும் அந்தத் துடிப்பின் வேகம் தான் வரும்.

இந்த வேகம் எல்லாம் என்ன செய்யும்..?

1.சிறு மூளையில் போய் ட்ரான்சாக்சன் செய்யக்கூடிய இடத்தில் அதிர்வுகளை உருவாக்கும்
2.பலூன் மாதிரி உப்பிவிடும்…!

அது எந்த இடத்தில் இந்த மாதிரி உருவானதோ அதன் மூலம் உடலில் இயக்கக்கூடிய எந்த பாகமோ உதாரணமாக நுரையீரல் பாகமாக இருந்தால் அது விரிவடைந்து விடும். மூச்சுத் திணறல் அதிகமாகும்.

மூச்சுத் திணறல் அதிகமானால் சிறிது நேரத்தில் சிந்திக்கும் தன்மை இல்லாது போகும். இயக்கம் சீராக இல்லை என்கிற பொழுது அது மனிதனை ஆபத்தில் கொண்டு போய் விட்டுவிடும்.

அதே போல் கையோ கால் பாகமோ இருந்தால்.. ஒரு வேலை செய்ய வேண்டும் என்ற உணர்ச்சியின் வேகம் வரும். அப்பொழுது இதனின் அழுத்தமானால் அதைச் செயலிழக்கச் செய்துவிடும்.

கையோ காலோ இயக்கமில்லாது போகும். டபக்.. என்று சுண்டி இழுத்துப் பிடித்துவிடும்.

ஏனென்றால் அந்தச் சிறு மூளையிலிருந்து ஆணைகள் போகக் கூடிய உணர்ச்சிகளை (நரம்புகளுக்குள்) தடைப்படுத்திவிடுகின்றது. இது எல்லாம் பலூன் மாதிரி உருவான நிலையால் ஏற்படும் விளைவுகள்.

கைகளையோ கால்களையோ சுருக்கி விட்டால் அபுறம் அதற்கு வேண்டிய மருத்துவங்களைப் பார்க்க வேண்டியதிருக்கும்.

அதே சமயத்தில் அ