தினசரி உபதேசம்

அகஸ்தியனின் ஆற்றல்களும் அவனின் தாய் தந்தையரின் ஆற்றல்களும்

 

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் காடுகளில் வாழ்ந்த அகஸ்தியனின் தாய் தந்தையர்கள்… சூரியன் பால் நினைவினைச் செலுத்தும் போது அதன் அருகில்… விளிம்பில் வரும் விஷத்தன்மைகளை இவர்கள் உற்றுப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கின்றது.

சூரியனின் இயக்கத்தின் தன்மையை அந்தக் காட்டுவாசிகள் காண முடிந்தது. அவர்கள் கண்டுணர்ந்த உணர்வுகள் அனைத்தும் கருவிலே விளையும் அந்தச் சிசுவிற்கும் (அகஸ்தியன்) படர்கின்றது.

அதன் தொடர் வரிசையாக நட்சத்திரங்கள் பிற மண்டலங்களில் இருந்து எவ்வாறு அதனதன் சக்திகளைக் கவர்கிறது…? என்ற நிலையைக் காண்கின்றார்கள்.

1.ஒரு விஷம் எவ்வளவு தூரம் வேகமாக ஊடுருவிச் செல்கின்றதோ
2.அதைப்போல அவர்கள் தன் எண்ணங்களை விண்ணை நோக்கிச் செலுத்தப்படும் பொழுது
3.கண் ஒளியால் மற்றதை ஈர்க்கும் தன்மையை அவர்கள் பெறுகின்றார்கள்
4.வெகு தொலைவில் இருப்பதையும் காணும் சக்தி பெறுகின்றார்கள்.

அவ்வாறு கண்டுணர்ந்த உணர்வின் தன்மை தான்
1.நட்சத்திரங்கள் எவ்வாறு இயங்குகின்றது…?
2.நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து தனக்கு உணவை எப்படி எடுத்துக் கொள்கின்றது..?
3.அதை நம் பிரபஞ்சத்திற்குள் எப்படிச் செலுத்துகிறது…?
4.மற்ற கோள்கள் தனக்குள் அதை எடுத்து எப்படி வளர்கின்றது…?
5.அது உமிழ்த்தி வெளிப்படுத்தும் சக்தியை சூரியன் எவ்வாறு கவர்ந்து கொள்கிறது…? என்ற பேருண்மைகளை
6.அகஸ்தியனின் தாய் தந்தையர்கள் காணுகின்றார்கள்… கருவில் இருக்கும் அந்தச் சிசுவிற்கும் அது பதிவாகின்றது.

தாய் தந்தையர் கொஞ்சம்தான் கண்டார்கள். ஆனால் கருவிலே வளரும் அகஸ்தியனுக்கோ இது வீரிய சத்தாக உருவாகின்றது.

மற்ற மிருகங்களிடமிருந்தும் விஷ ஜெந்துக்களிடமிருந்தும் தங்களைக் காத்திட அகஸ்தியன் தாய் தந்தையர்கள் அவர்கள் தங்கள் உடலிலே விஷம் கொண்ட பல தாவர இனங்களை மேலே பூசும் பொழுது அது உடலில் உள்ள நல்ல அணுக்களைக் கொல்கிறது… கொல்லும் ஆற்றல் அந்த உடலிலே வளர்கின்றது. ஆனால்…
1.அந்தக் கருவிலே விளையும் சிசுவிற்கோ விஷத்தை அடக்கும் ஆற்றல் மிக்க சக்தியாக வளர்கின்றது.
2.இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் இது தான்.

பத்து மாதம் ஆன பின் குழந்தை (அகஸ்தியன்) பிறக்கின்றது. குழந்தைகள் பிறந்தால் பொதுவாக மேலே தான் பார்க்கும். காடுகளில் படுத்திருக்கும்போது வானை நோக்கிப் பார்க்கும் பொழுது சூரியனை உற்று பார்க்கின்றது.

தாய் தந்தையர்கள் எதைப் பெற்று அவர்களுக்குள் பதிவாக்கினார்களோ அந்த நினைவாற்றல் குழந்தையை விண்ணை உற்றுப் பார்க்கவும் வைக்கின்றது.
1.அவர்கள் கண்ட நட்சத்திரங்களை அவன் காண்கின்றான்
2.நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து வரக்கூடியதைக் கவர்ந்து பால்வெளி மண்டலங்களாக மாற்றுவதும்… துகள்களாக மாற்றுவதையும்
3.கோள்கள் அதைக் கவர்வதையும் அது வெளிப்படுத்துவதைச் சூரியன் கவர்வதையும் இவன் காணுகின்றான்.

அந்த இளம் வயதில் அகஸ்தியனுக்குத் தெரியாது. ஆனாலும் அந்த உணர்வுகளை எல்லாம் காட்சியாகக் காணுகின்றான். அவனுக்குள் அந்த ஆற்றல்கள் வளர்கின்றது.

குருநாதர் இதை எல்லாம் காட்டிற்குள் அழைத்துச் சென்று எமக்குக் காட்டினார். அதை எல்லாம் நீங்களும் காண வேண்டும் என்பதற்கே இதைப் பதிவாக்குகின்றேன் (ஞானகுரு).

எல்லாவற்றையும் அறிய வேண்டும் என்று விரும்பும் மனிதன் “உடலுக்குப் பின் எங்கே செல்கிறோம்…!” என்பதை ஏன் அறிய முற்படவில்லை – ஈஸ்வரபட்டர்

 

பக்தி மார்க்கத்தில்… ஜெப நிலையில்… மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே எத்தனையோ காலங்களாகத் தெய்வ சக்தி கிட்டும்… என்ற எண்ணத் தொடரில் சுழற்சி வட்டத் தொடரில் ஜெப மந்திரங்களை ஓதி யோக நிலை பக்தி நிலை என்ற நிலையில் எல்லாம் கால நிலையைக் கடத்தி… ஆழ் நிலையில் இச்சரீரத்தையே பயிற்சி செயலில் ஆரோக்கிய நிலையில் செயலாக்கி இருந்தாலும் காணப் போகும் பலன் என்ன…?

1.எண்ண நிலையைக் கொண்டு அறியும் ஞான வழியின்
2.காந்த மின் நுண் அலை கூடிய வலுவாகிய உடல் சமைப்பின் ஆத்ம உயிரின் வலு நிலை பெற்றால் தான்
3.பக்தி மார்க்கத்திலும் யோக மார்க்கத்திலும் மற்ற எந்த விஞ்ஞான மார்க்கமானாலும்
4.இத்தொடர் நிலையை மனித ஆத்மா பெற்றதென்றால் தான்
5.மனித சக்தியின் தெய்வ சக்தியை இவ்வுடல் சமைக்கும் உணர்வின் எண்ணத்தை – அறியும் ஞான ஆற்றலை
6.அறிந்தோரின் ரிஷி சமைப்பின் அலைத் தொடரை உணர்வின் எண்ணத்தில் அறிந்து உயர்வு நிலையை நாம் பெற முடியும்.

இப்பூமி சமைக்கும் வழித் தொடரில் சுழலும் எண்ண நிலையை… இப்பூமியையே இயக்கவல்ல உயர் வழியை அறிய… இவ்வண்ணத்தைக் கொண்டு அறியும் நிலை கொண்டு செயல்படுத்த வேண்டும்.

அதற்காக வேண்டி இச்சரீரக் கோளத்தின் அணுக் கோடிகளுக்கெல்லாம் “ரிஷித் தொடர்பை ஏற்படுத்தி” உயர் ஞானம் அறிந்த அந்தச் சமைப்பு நிலை கொண்டு
1.இச்சரீரத்தைக் கொண்டே உயர்வு நிலை பெறவல்ல செயலுக்கு
2.நம் உணர்வின் எண்ணம் அறியும் தன்மை கொண்டு
3.நம் தியான நிலை செயல்பட வேண்டும்.

பொருள் சேர்க்கையும்… சரீர பிம்பத்தைக் காக்கும் வழி முறையும்… இத்தொடரில் வாழ்க்கை நிலையில் மோதப்படும் வழி முறைக்கு மட்டும்… எண்ணத்தின் உணர்வைச் செலுத்திச் சுழல் வட்டத்தில் சுழலும் வாழ்க்கையில்…
1.பிறப்பும் இறப்பும் இயற்கை நிலை…! என்று எண்ணத்தைச் செலுத்தி விடாமல்
2.எண்ணத்தின் ஞானத்தைக் கொண்டுதான் இயற்கை நிலையே உருப்பெறுகின்றது…! என்பதை மனிதன் உணரல் வேண்டும்.

ஆதிசக்தியின் அமில சக்தி உருவாகிப் பல கோடி மாற்றங்களில் சுழலுகின்ற சுழல் வட்டத்தில்… மனித எண்ணத்தைக் கொண்டு அறியும் வழித் தொடரில் உருவாகும் உயர்வு நிலை சமைப்புத் தன்மை மாறவே… ஒன்றில் இருந்து ஒன்று மாற “இவ்வெண்ண நிலையின் தொடர் நிலை உருவாக்கித் தந்த உரு நிலை தான் இப்பூமியின் நிலை…!”

பிறப்பு இறப்பு இயற்கை என்றால்…!
1.இயற்கையாக வாழ்க்கை நிலையை மனிதன் ஏன் ஒன்றி விடாமல்
2.ஒவ்வொரு செயலையும் பக்குவம் கொண்டு பகுத்தறிவினால் செயல்படுத்துகின்றான்…?

விஞ்ஞானம்… மருத்துவம்… விவசாயம்… போன்ற எல்லா துறைகளையும் மனிதனின் எண்ணம் பகுத்தறியும் நிலைக்குச் செல்லும் பொழுது
1.மனித சரீரத்திற்கு அடுத்த உயர்வு நிலைக்கு
2.தன் பகுத்தறிவின் ஞானத்தை ஏன் செலுத்தவில்லை…?!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

ஒரு சமயம் ஒரு பெண்ணுக்குச் சோக நீர் போன்று உடலில் வந்ததும் வயிறு உப்புசமாகிவிட்டது. உடலில் எந்த நோயும் இல்லை.

ஒரு ஆன்மா அந்த உடலுக்குள் ஆனபின் அந்த உடலில் எப்படி வயிற்றுக்குள் பொறுமலானதோ அதே உணர்வுகள் இந்தப் பெண்ணுக்கு இங்கே வருகின்றது.

ஆனால், அவர்கள் எல்லா வைத்தியமும் பார்த்துவிட்டு “ஒன்றும் முடியவில்லை…” என்று கைவிட்டார்கள்.

என்னிடம் (ஞானகுரு) வந்து கேட்டார்கள்.

1.இன்னொரு ஆன்மா இங்கே இருக்கின்றது.
2.அந்த ஆன்மாவின் வலுவைக் குறைக்க வேண்டுமென்றால்
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் அனைவரும் எண்ணி
4.அதன் உடலுக்குள் அந்தச் சக்திகளைச் சேர்ப்பிக்க வேண்டும் என்ற உணர்வுகளை ஊட்டும்படிச் செய்தேன்.

குணமாகி நல்ல நிலைகள் வந்தது.

ஓரளவிற்கு வலிமை பெறும் பொழுது குடும்ப வாழ்க்கையில் “எனக்கு இப்படி ஆகிவிட்டதே…! நான் என்ன பாவம் செய்தேன்..?” என்ற உணர்வை “மீண்டும்” அந்தப் பெண் நினைவாக்குகின்றது.

குணமாகி வந்த நிலைகளில் “எனக்கெல்லாம்… இப்படிப்பட்ட அவஸ்தைகள் வந்துவிட்டதே…” என்ற உணர்வை எண்ணும் பொழுது மறுபடியும் பதிந்த உணர்வுகள் கிளர்ந்துவிட்டது.

1.மண்ணுக்கள் மறைந்த வித்து மழை நீரைக் கண்டபின் கிளர்ந்தெழுவது போல்
2.இந்த உணர்வின் எண்ணங்கள் வரும்பொழுது உணர்வைக் குவித்தபின்
3.தன் செயலே இல்லாதபடி அந்தப் பெண் மயங்கிவிட்டது.

டாக்டர்களிடம் சென்று பார்க்கப்படும் பொழுது “இது.., விசித்திர நோயாக இருக்கின்றது..! என்ன செய்வது…?” என்று தெரியவில்லை என்கிறார்கள்.

தன்னுடைய நிலைகளில் செயலிழந்து பேச்சு மூச்சோ எழுந்து நடக்கும் நிலைகளோ அங்கங்கள் அனைத்தும் விரிந்த நிலையில் கிடக்கின்றது. “என்ன செய்வது…?” என்று மற்றவர்கள் துடிக்கின்றனர்.

டாக்டர்கள் கைவிட்டபின் அங்கிருந்து கொண்டே எனக்குப் ஃபோன் செய்தார்கள்.

ஃபோனை அந்தப் பெண்ணின் செவிகளில் வையுங்கள் என்று சொன்னேன். அருள் மகரிஷிகளின் உணர்வைச் சொல்லும் பொழுது அந்த உணர்ச்சிகள் செவிகளில் விழுந்தபின் அந்த உணர்வு கொண்டு “ஓ…ம்…” என்று சொல்லத் தொடங்கியது.

அங்கே அந்த டாக்டரும் இருக்கின்றார்.

இதுவரையிலும் பேச வைக்க முடியவில்லை. ஆனால், (ஃபோன் மூலம்) இந்த ஒலியைக் கேட்டபின் பேசுகின்றது, என்ன… விசித்திரமாக இருக்கின்றது…! என்கிறார்.

பிறகு சிறிது நேரம் பொறுத்திருங்கள். அதற்கு முழுச் சுய நினைவு வரட்டும். வந்தபின் அந்தப் பெண்ணையே ஃபோன் செய்யச் சொல்லுங்கள் என்று சொன்னேன்.

அதே மாதிரி அந்தப் பெண் எழுந்து வந்து பேசுகின்றது.

என் நினைவினை இழக்கும் நிலைகள் எது…? என்றே எனக்குத் தெரியவில்லை என்னை இயக்கிவிட்டது. ஆக “நான் மரணமடைவேன்…” என்ற உணர்வு மட்டும் தோன்றுகின்றது.

ஏனென்றால்…
1.மடிந்த உணர்வின் தன்மை இது மடியச் செய்யும் உணர்ச்சிகளை
2.அந்தப் பெண்ணுக்குள் தூண்டுகின்றது என்ற நிலையை அங்கே தெளிவுபடுத்தினேன்.

பின் இதிலிருந்தது விடுபடும் என்ற நிலையை எல்லோருக்கும் சொல்லி அந்த மகரிஷிகளின் உணர்வைப் பெறும்படிச் செய்தபின் அந்தப் பெண் தப்பித்தது.

இது நடந்த நிகழ்ச்சி.

இவ்வாறு தவறு நாம் செய்யாமலேயே பண்பால் அன்பால் நாம் மனித வாழ்க்கையில் அன்பு கொண்டு வாழ்ந்தாலும் மற்றவர்கள் உடலில் சில நோய்கள் உருவாக்கப்படும் பொழுது நம்மை அறியாமலே நமக்குள் பதிவாகிவிடுகின்றது.

நாம் அவர்களுக்கு உதவி செய்தாலும் நல்லதானதும், அடுத்து “மகராசி… எனக்கு நல்ல உதவி செய்தாள்…!” என்ற இந்த எண்ணம் வரும் பொழுது அந்த ஆன்மா இந்த உடலுக்குள் வந்துவிடுகின்றது.

அந்த உடலில் “எந்த நோய்” இருந்ததோ அந்த நோயின் தன்மை இந்த உடலிலும் உருவாகின்றது.

இதைப் போன்று மனிதன் தவறு செய்யாமலேயே நமக்குள் இன்னொரு ஆன்மாவின் உணர்ச்சிகள் வளர்ச்சி பெறும் பொழுது அந்த ஆன்மாவை அழைத்து நமக்குள் நல்ல அணுக்களின் தன்மையை இழக்கச் செய்து விடுகின்றது.

அதை மாற்றிட… மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒரு இரண்டு நிமிடம் உங்களுக்குள் வலுவாக்கிக் கொள்ளுங்கள்.

பின் யாரைப் பற்றிக் கேட்டுணர்ந்தீர்களோ அவர்களும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். அவர்கள் வேதனைகளிலிருந்து விடுபடும் அருள் சக்தி பெற வேண்டும் என்று உங்கள் உணர்வைப் பாய்ச்சுங்கள்.

“மகரிஷிகளின் அருள் சக்தியை எண்ணுங்கள்… உங்கள் உடல் நலமாகும்…!” என்று சொல்லுங்கள்.

அதைப் போல அவர்கள் எண்ணினார்கள் என்றால் அவர்கள் வேதனைகளும் அகலும். அவர்களும் உடல் நலம் பெறுவார்கள்.

அதே சமயத்தில் அவர்கள் வேதனை உணர்வுகள் உங்களுக்குள் வராது… உங்களை இயக்காது. உங்கள் ஆன்மாவும் உடலும் தூய்மை ஆகும்.

அன்றாட வாழ்க்கையில் நம் ஆசையின் செயலாக்கங்கள் எப்படி இருக்கிறது…!

 

இந்த வாழ்க்கை என்ற குறியைத் தான் வைக்கின்றோமே தவிர சந்தர்ப்பத்தில் நம்மைத் தாக்கும் உணர்வுகளை மறந்துவிட்டோம்.

நாம் ரோட்டில் செல்லும்போது ரோட்டின் அந்தப் பக்கம் தெரியும் ஒரு நல்ல பொருளின் மீது ஆசைப்படுகின்றோம். எடுக்க வேண்டுமென்ற ஆசை தூண்டப்படுகின்றது. ஆனால் இடையிலே வரும் நிலைகளை… அறிய வேண்டும் என்ற சிந்தனையை மறைத்து விடுகின்றது.

1.நினைவை நாம் அங்கே செலுத்தி அந்தப் பொருளை எடுக்கத் தாவப்படும் பொழுது
2.குறுக்கே வரும் வாகனத்தைப் பற்றிச் சிந்திக்காமல் திரும்பிப் பார்க்காதபடி எடுக்கச் சென்றால்
3.வாகனம் மோதி விட்டால் என்ன ஆகும்… பொருளைப் பெற முடியாது.

ஆசையின் உணர்வுதான் வருகிறது. இந்த உணர்வினை அறியப்படும் பொழுது “கிடைக்கவில்லை…” என்கிற போது அந்த உணர்வினை வளர்த்து விட்டால்… மடிந்து விட்டால் அதே உணர்வுடன் தான் அந்த ஆன்மா அங்கே சுழன்று கொண்டிருக்கும்.

இதே ஆசை கொண்ட மனிதர்கள் அங்கே நடமாடும் போது அவருக்குள் இந்த ஆன்மா புகுந்து… தன் ஆசையைத் தூண்டி “அதைப் பெற வேண்டும்… இதைப் பெற வேண்டும்…” என்ற உணர்ச்சிகளையே தான் தூண்டும்.

இப்படிப் பல மனிதர்கள் இருப்பதையும் இன்று காணலாம். ஆனால் யாரும் தவறு செய்யவில்லை. இருந்தாலும்
1.நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை எதுவோ அந்த வலிமையைத் தனக்குள் எடுத்து
2.அதே ஆசை கொண்ட மனிதர்களிடம் விளைந்த உணர்வுகள் காற்றிலே இருக்கிறது.
3.அதன் வழிகளிலே நம்மை அழைத்துச் செல்கின்றது.

இத்தகைய தீமைகளிலிருந்து மனிதன் விடுபடுதல் வேண்டும். உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீவினைகளை நீங்கள் நிறுத்துதல் வேண்டும். அது தான் விநாயகர் சதுர்த்தி.

உங்கள் உடலுக்குள் ஊடுருவிய தீமை என்ற நிலைகளை நிறுத்துவதற்கு குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் ஞானியின் உணர்வை அருள் ஞான வித்தாக ஆழமாகப் பதியச் செய்கின்றோம்.

பதிவாக்கியதை நீங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் உங்களுக்கு முன் காற்றில் இருக்கும் அருள் மகரிஷிகள் உணர்வை நுகர்ந்து தீமைகளை அகற்றும் ஆற்றல் பெறுகின்றீர்கள்.

என்றென்றும் அதன் வழிகளிலே மெய்ப் பொருளாக இருக்கும் உயிருடன் ஒன்றி நீங்கள் வாழ முடியும்.
1.மெய் என்பது உயிர்… எல்லாவற்றையும் அந்த உண்மையின் உணர்வை நமக்கு அறிவிப்பது மெய் உயிர்.
2.உயிருடன் ஒன்றி எல்லாவற்றையும் மெய்யாக மாற்றும் ஆற்றல் பெற முடியும்.

குருநாதர் எனக்கு இதையெல்லாம் காட்டினார். காட்சிகளாகவும் காண்பித்தார். அதைத் தெளிவாகத் தெரிய முடிந்தது… அதை நுகரவும் முடிந்தது.

எனக்குள் பதிவான அந்த உணர்வின் தன்மையை நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது… கடந்த கால நிலைகளை நினைவுபடுத்தி எண்ணங்களாக (உபதேசமாக) வெளி வரப்படும் பொழுது… அந்த உணர்வுகளை நீங்கள் பதிவாக்கப்படும் பொழுது
1.இதே எண்ணம் உங்களைத் தீமைகளிலிருந்து அகற்றச் செய்யும்
2.மெய்ப்பொருள் காணும் நிலைகளுக்கு உங்களை அழைத்துச் செல்லும்.

மனிதன் பெற வேண்டியது மெய் ஞானத்தின் வளர்ச்சி தான் – ஈஸ்வரபட்டர்

 

விஞ்ஞானி ஓர் பொருளை அறிந்து உருவாக்குகின்ற செயலில் அப்பொருளின் தேவை நிலையில் “சிக்கல்கள் ஏற்படும் போது…”
1.மாற்று நிலை என்ன செய்யலாம்…? என்ற அறிவின் ஞானத்தைக் கூட்டி
2.தன் தேவைக்குகந்த செயலைச் செயலாக்கிட
3.மீண்டும் வளர்ந்த புதுப்பிக்கும் அறிவு ஞானத்தைக் கொண்டு
4.வளர்த்துக் கொண்டே செல்கின்றான் – விஞ்ஞானத்தில்.

காட்சி:-
ஆதிகாலத்தில் இருந்த இரண்டு சக்கரமுடன் கூடிய வண்டியைப் போன்றும்… அவ்வண்டியே அடுத்த நிலையில் பெரிய சக்கரமாக அமையப் பெற்றதைப் போன்றும்… அச்சக்கரத்தில் டயர் வைத்து உருள்வதைப் போன்ற வண்டியும் தெரிகின்றது.
1.ஆரம்பக் காலத்தில் இருந்த வண்டியும் இன்று நூதனத்தில் அமைக்கப்படும் வண்டியும்
2.அதைப் போன்றே ஆரம்பக் காலத்தில் ஓடிய நான்கு சக்கரங்கள் கொண்ட குதிரைகள் பூட்டிய ரதத்தையும் அதற்குப் பின் உருவான மோட்டார் வாகனத்தையும்
3.அதன் தொடரில் இன்றைய நூதன வசதியுடன் கூடிய மோட்டார் வாகனமும் காட்சியில் மாறி மாறித் தெரிகின்றன.

மெய் ஞான வழித் தொடரிலும்… மனித ஆத்மா தன் ஞானத்தைக் கூட்டி மனித ஆத்மாவின் உயர்வு நிலைக்கு வழிகாட்டிய பக்தி மார்க்க நெறி முறைகளை நம் அறிவின் ஞானத்தைக் கொண்டு உயர்த்திப் பார்ப்போமானால் “அதிலுள்ள உண்மை விளக்கங்களையும்… அதன் தொடரில் அறியக்கூடிய ஞானச் சித்துவையும்…” மனிதன் பெற முடியும்.

எண்ணத்தின் பகுத்தறியும் அறிவு நிலையினால் மனிதன் ஒன்றின் உருவகத்தில் பிறிதொன்றைச் சேர்த்து வாழ்க்கை வசதிக்கு அறிவின் ஞானச் செயலினால் முற்படுத்துகின்றான்.

காட்சி:-.
ஓர் ஓவியன் ஓவியம் வரைவதைப் போன்றும் பிறகு ஒரு பெண் தலையில் மல்லிகைப் புஷ்பத்தைச் செண்டாக்கி வைப்பதைப் போலவும் காட்சி தெரிகின்றது.

இதன் பொருள் யாது…?

போதனையில் புகட்டப்படும் பாட முறைக் கல்வியை… செயல் முறையில் செயல்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். ஆனால் ஆரம்பக் காலம் தொட்டு வெறும் போதனையை ஒத்த செயலுடன் நின்றிருந்தால்… எந்த மனிதனின் அறிவுத் திறனும் வளர முடியாது.

ஓவியன் தன் எண்ணத்தைக் குவித்து ஓவியம் எழுதும் பொழுது…
1.தன் ஞானத்தில் அந்தந்த இடங்களுக்குகந்த பகுத்தறிவைக் கொண்டு வண்ணங்களைச் செலுத்தினால் தான்
2.அந்த ஓவியத்தின் அழகே பொலிவு பெறுகின்றது.

பெண்ணிற்குத் தலையில் பூச்சூடும் வழி நிலையே நம் முன்னோர்கள் தான் வழிகாட்டியுள்ளார்கள். அதில் பல ஜீவ சக்தியுடன் கூடிய உண்மை நிலைகள் அதில் பொருந்தியுள்ளன.

இயற்கைத் தாவரத்தில் மலருடன் தன் சக்தியை வெளிப்படுத்தும் தாவரமும்… பூவாகிக் காயாகிக் கனி தரும் தாவர இனமும் இப்படி பல உண்டு.

மணமுடன் கூடிய மல்லிகையின் அமில குணமானது பெண் இன ஜீவ சக்திக்கு ஈர்ப்பு சக்தியை தரவல்லது.

மல்லிகை மலரைத் தலையில் சூடும் பொழுது
1.மனித இயக்கத்தின் அறிவு ஞானத்தை வளர்க்கும்
2.கவன நரம்பின் சிறு மூளை இயக்கத்தில் ஏற்படும் உஷ்ன அலையை
3.மல்லிகையின் மணமுடன் கூடிய அமிலத் தன்மை… பின் தலையில் இருந்து வெளிப்படும் உஷ்ண அலையில் மோதும் பொழுது
4.அதனுடைய குண நிலை – பெண்களின் அறிவின் ஞான வளர்ச்சியில் ஏற்படும் உயர்வு நிலைக்கு “வித்தாகின்றது…”

முன்னோர்கள் உணர்த்திய இத்தகைய வழியிலும் நாம் அறியாத பல உண்மைகள் உண்டு. ஆகவே எண்ணத்தின் உணர்வை அறியும் ஞானம் கொண்டு வளர்க்கும் ஜெப நிலையில்…
1.வளர்ந்தோரின் தொடருடன் செலுத்தி
2.மேல் நோக்கிய எண்ணமுடன்
3.அவர்களிடமிருந்து உயர்வு ஞானத்தை நம் ஆத்மாவில் பதித்துக் கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

ஆலயங்களில் சாமி மேல் மலரைப் போடுகின்றார்கள். சாமிக்கு மேல் அது ஆடையாகின்றது.

நாம் எண்ணும் உணர்வுகள் நம் உடலிலே அந்தக் குணங்களானால் அந்த மலரைப் போல மணம் பெறும்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். நாங்கள் பார்ப்போரெல்லாம் மலரைப் போல மணம் பெற வேண்டும், மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் நாம் அனைவரும் அந்த நிலை அடைகின்றோம்.

நாங்கள் பார்க்கும் குடும்பமெல்லாம் மலரைப் போல மணம் பெற வேண்டும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். நாங்கள் தொழில் செய்யும் இடங்களிலெல்லாம் மலரைப் போல மணம் பெற வேண்டும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்.

இப்படி எண்ணி நமக்குள் இத்தகைய உணர்வுகளைச் சேர்க்க வேண்டும். சேர்த்து நமக்குள் வரும் பகைமை உணர்வுகளை அழித்திடல் வேண்டும்.

நாம் அனைவரும் கல்யாணராமனாக மாற வேண்டும்.

சூரியன் எவ்வாறு பிரபஞ்சத்தில் உருவாகும் “நஞ்சினை அரவணைத்து… ஒளியின் சுடராக மாற்றுகின்றதோ…” இதைப் போல
1.மனிதன் மற்றவர்களுடைய உணர்வுகளை மாற்றி
2.தீமைகளயும் பகைமைகளையும் மாற்றி
3.அந்த உணர்வுகளை ஒளியாக்கும் பொழுது அருள் ஒளி பெற்று
4.“உயிருடன் ஒன்றி… ஒளியின் சரீரம் பெறுவது திண்ணம்…”

இது நமது சாஸ்திரங்களில் மிகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நாம் யாரும் இதைச் சிந்திக்கின்றோமா..,?

தெய்வத்திற்கு மலர்களையும் மாலைகளையும் அணிவிக்கும் பொழுது அந்த அருள் உணர்வுகளை நாம் பெற வேண்டும் என்று சாஸ்திரப்படி எண்ணிச் சுவாசிக்கின்றோமா..,?

அன்றைய ஞானிகள் சொன்ன பேருண்மைகளைத்தான் இங்கே சொல்லி வருகின்றோம். ஆனால் யாம் (ஞானகுரு) இப்பொழுது சொன்னாலும் கேட்பவர்கள்…
1.“சாமி… அற்புதமாகப் பேசுகின்றார், நம்மால் இது முடியுமா..,?” என்ற வினாக்களை எழுப்பி
2.தன்னைச் சோர்வடையும் நிலைக்குத்தான் கொண்டு செல்கின்றார்கள்.

“நீங்கள் எல்லோரும் அருள் உணர்வைப் பெற வேண்டும், அருள் ஞானிகளாக வேண்டும்” என்ற ஆசையில் தான் யாம் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

1.“என்னால் முடியுமா..,?” “நானே..,” (சாமிகள் சொல்வதை) இதைப் பெற முடியவில்லை
2.“ஒன்றும் தெரியாத மற்றவர்கள்..,” எப்படி பெறப் போகின்றார்கள்..,? என்று
3.தானும் பெறாது மற்றவர்களையும் பெறவிடாதபடி செய்து கொண்டிருப்பார்கள்.

சாமி உயர்ந்த உணர்வுகளைச் சொல்கிறார். அதை “என்னாலேயே..,” பெற முடியவில்லை. “நீங்கள் எப்படிப் பெறப் போகின்றீர்கள்..,?” என்று சொல்லி இதைப் பெறுபவர்களையும் கெடுத்து விடுகின்றார்கள்.

ஏனென்றால் ஒரு சாக்கடைக்குள் நல்ல நீரை ஊற்றினால் உடனே என்ன ஆகும்..,?

அதுவும் நாற்றமாகும்.

ஆனால் நல்ல நீர் அதிகரித்து விட்டால் அது ஓடிவிடும்.

ஆகவே இந்த வாழ்க்கையில் அருள் ஒளியை நமக்குள் “கூட்டினால்…” நம்மையறியாது இயக்கும் இருளை அகற்றிடும் ஆற்றல் பெறுவோம்.

இதைக் காட்டுவதற்குத்தான்…
அந்த அருள் சக்திகளைப் பெறத்தான்;
அனைத்து மக்களும் அந்த அருள் சக்தியைப் பெறுவதற்காகத்தான்;
பெற்று மகிழ்ந்து வாழச் செய்வற்காகத்தான்;
“ஆலயத்தை” உருவாக்கினார்கள் ஞானிகள்

நம் உயிரை “ஈசனாகவும்”, கண்களைக் “கண்ணனாகவும்”, உடலைச் “சிவமாகவும்” நாம் எடுத்துக் கொண்ட எண்ணங்களை வினையாகவும் வினைக்கு நாயகனாக (“விநாயகனாக”) மனித உடலும் பல கோடிச் சரீரங்களில் சேர்த்துக் கொண்ட வினைகள் ஆறாவது அறிவை “முருகு” மாற்றியமைக்கும் சக்தி பெற்றது என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றது.

இந்த மனித வாழ்க்கையில் “நாம் எதைப் பெற வேண்டும்..,?” என்று தெளிவாக்கப்பட்டது. அன்றைய மெய்ஞானி சாமானிய மனிதனும் அருள் வழியில் நடந்து அருள் ஞானம் பெறுவதற்குத்தான் ஆலயத்தைக் கட்டினான்.

விஞ்ஞானம் எப்படி வளர்ந்தது… ஆதியிலே மெய் ஞானம் எப்படி வந்தது…?

 

ஒரு எருக்கண் செடி இருக்கிறது என்றால் இரவில் அல்லது இருட்டிலே பார்த்தோம் என்றால் அதில் இருக்கக்கூடிய தோடுகள் பளீர்.. பளீர்… என்று மின்னும்.

அப்படி மின்னுவதைப் பார்க்கும் போது நான் பேயைப் பார்த்தேன்…! என்று ஒருவன் சொல்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனிலே அதைப் பதிவு செய்கின்றான்… அடுத்தவனுக்கும் இதைச் சொல்கிறான்.

அது இன்ன உருவமாகக் காட்சி தெரிந்தது என்றால் அங்கே போன பின் இவன் காண்பித்த அந்தக் கற்பனை இவன் உடலிலே உருவாக்கப்பட்டு
1.அந்த எருக்கண் செடி மின்னிக் கொண்டிருப்பதைப் பார்த்தவுடனே
2.இங்கே பேய் இருக்கிறது பார்… ஆடுகிறது பார்…! என்று இவனுக்கு அவன் சொன்ன ரூபமே தெரியும்.

அவனுக்குள் பதிவு செய்த உணர்வுகள் இவன் பார்க்கப்படும் பொழுது அவன் பார்த்தது எருக்கண் செடி… ஆனால் இவனுக்குள் கற்பனை செய்து கொண்டது இந்த நிலை.

அதைப் பார்க்கப்படும் போது அதை இவன் சொல்லி அஞ்சி வருகின்றான். இயக்கினாலும் வேறு பக்கம் சென்று விடுகின்றான். ஆனால் அஞ்சிய உணர்வு இவனுக்குள் வளர்த்ததைத் தன் நண்பனுக்கும் சொல்கின்றான்.

அந்த நண்பனும் அந்தப் பக்கம் செல்லும் பொழுது “அவன் சொன்னது உண்மை…” என்று அந்த உணர்வுகள் அவனுக்குள் பதிந்தது… இயக்கத் தொடங்குகிறது.

இதைப் போன்றுதான்…
1.எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் தன்மை அங்கே பதிவாகின்றது
2.அந்த உணர்வின் தன்மை இவனுக்குள் ரூபமாகச் சிருஷ்டிக்கின்றது.

கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்றால் நாம் எண்ணும் எண்ணங்கள் அந்தப் பயத்தின் உணர்வுகள் எண்ணும் பொழுது அதே பயத்தை உருவாக்குகிறது.
1.அதுவாக அவன் மாறுகின்றான்
2.பயத்தின் நிலைகளையே அடைகின்றான்.

அன்று அகஸ்தியன் தனது நிலைகளில் அணுவின் ஆற்றலை அவனுக்குள் பெருக்கினாலும் துருவப் பகுதியிலிருந்து புவிக்குள் வரும் உண்மையின் நிலைகளை அறிகின்றான்.

ஏனென்றால் தாயின் கருவிலே இருக்கப்படும் பொழுது உண்மை எது…? என்று அறியப்படும் பொழுது அதை அறிய வேண்டுமென்ற நிலையில் பிறந்த பின் விண்ணுலக ஆற்றலை அறிகின்றான்.

ஆனால் நாம் சாதாரணமாக இந்தப் பயத்தின் நிலைகள் வரும் போது இப்படி எண்ணுகின்றோம்.

விஞ்ஞானிகள் அவர்கள் கணக்கின் பிரகாரம் ஆரம்பத்தில் பூமி தட்டை என்று தான் சொன்னார்கள். இதுதான் உண்மை என்று அக்காலத்தில் உள்ளோர் ஏற்றுக் கொண்டார்கள் மறுப்பு கொடுக்கும் பொழுது பின்னாடி வந்தவர்களைப் பைத்தியம் என்றார்கள்

அடுத்து உருண்டை வடிவம் என்று சொன்னார்கள் அதற்குப் பின் வந்தவர்கள் முட்டை வடிவம் என்று சொன்னார்கள். அவனின் கணக்கின் பிரகாரம் இவன் பதிவு செய்து இவன் கணக்கிற்குள் கொண்டு செல்கின்றான்.

ஆனால் இதே ஆராய்ச்சியில் இருக்கப்படும் போது ஒவ்வொன்றாகத் தெளிவாக்கி அந்த உணர்வின் தன்மையை அவன் கூர்மையாகக் கவனிக்கப்படும் பொழுது
1.பூமியின் இயற்கையின் உண்மைகளை இவன் அறியும் தன்மை வருகின்றது
2.அந்த நுண்ணிய அலைகளின் தன்மை கொண்டு விஞ்ஞான அறிவே வளர்கிறது.
3.இப்படித் தான் விஞ்ஞான அறிவு வளர்ந்தது.

மெய் ஞானியான அகஸ்தியனின் நிலைகளோ இளமைப் பருவத்திலே வளர்ந்து அந்த மெய் உணர்வினைக் காணும் நிலைகள் வருகிறது.

ஆனால் தான் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை கொண்டு மனிதனுக்குள் எப்படி இயக்க வேண்டும்…? என்ற விஞ்ஞான அறிவைக் காணுகின்றான். மெய் ஞானியோ அவன் மெய் ஞான அறிவினைக் கொண்டு செல்கிறான்.

ஆகவே மெய்யின் உணர்வின் நிலைகள்
1.எப்படி அணுவாக உருவானது…
2.கோளாக எப்படி ஆனது…? நட்சத்திரமாக எப்படி ஆனது…? சூரியனாக ஏப்படி ஆனது…? என்று
3.மெய் உணர்வின் ஆற்றலைக் கண்டான் அகஸ்தியன்.

சூரியன் ஆன பின் அதன் உணர்வின் இயக்கத்தில் அணுக்களின் தன்மை மற்ற பாறைகளிலும் கற்களிலும் தாவர இனங்களையும் உருவாக்க உதவியது.

ஆனால் இதற்குள் மோதுண்டு வரப்படும் பொழுது உயிரணுக்கள் எப்படித் தோன்றுகின்றது…? என்ற நிலையை அன்று அகஸ்தியன் காண்கின்றான்.

அவன் உணர்வை நாம் பெற்றால் படைக்கும் சக்தி கொண்ட மெய் ஞானியாக நாம் உருவாக முடியும்.

ஆழ்நிலை தியானத்தால் அமைதி கிடைத்தாலும் “உயர் நிலைக்குச் செல்ல முடியாது” – ஈஸ்வரபட்டர்

 

உதாரணமாக நத்தையை ஒத்த பல பிராணிகள் உருவ நிலைக்குகந்த உணர்வு நிலையிலேயே அதன் உருவத்திலேயே “பாதுகாப்பபு நிலை கொண்டு” (ஓடு) அறிவின் எண்ண நிலை பெறுகின்றது.

எப்படிப் பாலை உஷ்ணப்படுத்திய பின் அதன் ஆவி நிலை வெளிப்பட்டு ஏடு (ஆடை) நிலை அடைகின்றதோ அந்நிலையின் தொடர் போன்று
1.தாய் எடுக்கும் சுவாசத்தில்
2.தாயின் உடல் நிலையின் உதிரத் தொடர்புடன் உருக்கொள்ளும் கர்ப்ப சிசு
3.உதிரத்தின் தொடர்பு உஷ்ண நிலை பெற்று
4.அதனுடைய அமில நிலைக்கொப்ப உராய்வு நிலை கொண்டு உருவ நிலை (மனித உடல்) பெறுகிறது.

அதனின் வளர்ச்சி நிலை முற்றிய தன்மையில் உணரும் நிலையும் எண்ண நிலையும் பெறுகின்றது. “எண்ண நிலை” என்பது அதனுடைய ஆவி (ஆத்ம) நிலையிலேயே அதற்குத்தக்க எண்ண நிலையில் தான் தாய் உடலில் புகுந்து பிறப்பிற்கே வருகின்றது.

பிறப்புத் தொடரில்… ஜீவ சக்தி கொண்ட சரீர நிலை முற்றிய நிலையின் பிறப்பு நிலை கொண்ட பிறகு தான் சரீர மனித நிலை செயல் நிலை யாவும் “பகுத்தறிந்து…” செயல் கொள்கின்றன.

1.இதற்குப் பின் வளரும் நிலைக்கும்…
2.வழி கொள்ளும் வளர்ச்சி நிலைக்கு வழி காட்டும் நிலைக்காகவும் தான்
3.இயற்கை நிலையையும் இயற்கைத் தொடர்பு நிலையையும்
4.அதில் வளர்ச்சி கொண்டு மாற்றப்படும் தொடர் நிலையையும் உணர்த்தி வந்தேன் (ஈஸ்வரபட்டர்).

ஆனால் தான் வளர்ந்த தொடரிலேயே பகுத்தறியும் அறிவு நிலை கொண்ட மனித ஆத்மாவும் “இயற்கை” என்ற பிடிப்பிலேயே சிக்குண்டு வாழ்ந்து விட்டால் “பிறப்பின் பலன்” இல்லாது போகின்றது.

ஏனென்றால் எண்ணத்தின் தொடர்பைக் கொண்டு உருவாக்கும் ஆதி சக்தியின் அகில சக்தியுடன் தெய்வ சக்தி கொண்டு படைப்பு நிலையைப் படைக்கவல்ல சக்தி கொண்ட பகுத்தறியும் எண்ணத்தால் உயரவல்ல நிலையை அடைய வேண்டும்.

இயற்கை என்ற சுழற்சியிலேயே சுழன்று… தன் சக்தியை உணராமல்… முக்தி நிலை பெறும் மார்க்க நிலைக்குச் சிலரின் உபதேச நிலைகளைக் கேட்டு… ஐம்புலனை அடக்கி ஆழ்நிலையில் உயர்வு நிலை பெறலாம்…! என்ற வழி காட்டும் தொடரில் சென்றால்… சரீர வாழ்க்கை நிலையில் மட்டும் தான் ஆரோக்கிய நிலையும் அமைதியும் கிட்டும்.

உயர்வு நிலைக்குச் செல்ல வேண்டும் என்றால்
1.உணர்வின் எண்ணம் பகுத்தறியும் எண்ணத்தால்
2.அறியும் ஞான வழியில் தான் உயர்வு நிலை கொள்ள முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

ஞானிகள் அனைவரும் மக்கள் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்று தான் வழி காட்டினார்கள். ஆனால் அரசர்கள் அதைத் தன் சுகபோகங்களுக்காக மாற்றிவிட்டனர்.

அந்த அரசர்களுக்குக் கீழ் வந்த மக்கள் தன்னை அறியாமலே அந்த அரசன் வழியில் சென்று அதன் வழியிலே தான் இன்று வரையிலும் செயல்படுத்துகின்றனர்.

ஒவ்வொரு அரசனுக்கும் அவனுக்கென்று மத குருவை வைத்து அந்த மதத்தைக் காக்க அவன் இடும் சட்டத்தை அதன் கீழ் மக்களை ஒழுங்குபடுத்தச் செய்தனர்.

அந்த மத குரு சொன்ன நிலைதான் அங்கே ஆண்டது. எல்லா நாடுகளிலும் எல்லா மதங்களிலும் அந்த மத குருவின் தன்மையே வருகின்றது.

இன்று நம் நாட்டிலும் எடுத்துக் கொண்டால் ஞானிகள் காட்டிய உணர்வின் தன்மை வரும் பொழுது ஒவ்வொரு நிலைக்கும் மத குருவை உருவாக்குகின்றனர்.

எந்த மதத்தை உருவாக்கி அந்த அரசியல் சட்டத்தை வகுத்தார்களோ அதன்படி மத குரு மக்களுக்கு எடுத்துக் கூறினார்கள். அதன் வழியில் அரசனுக்குக் கீழ் நடக்க வேண்டும் என்று சட்டங்களை இயக்கினார்கள்.

அப்படித்தான் உலகம் முழுவதும் இயங்கி வந்தது.

ஆக அந்த மத குருக்கள் காட்டும் கடவுள் தான் “கடவுள்…”

ஒரு மதத்தைக் காட்டினாலும் அதில் கடவுள் என்ற நிலையைக் காட்டினாலும் மனிதனுக்கு மனிதன் கொன்று குவிக்கும் தன்மை தான் மனிதனுக்குள் வளர்கின்றது.

ஆனால்
1.“மனிதனை உயர்ந்த பண்புள்ளவனாக்கு…
2.இந்தப் பூமியைப் பண்புள்ள பூமியாக மாற்று..!” என்று தான் ஞானிகள் உணர்த்தினார்கள்.

மனிதர்கள் தங்கள் உடலின் இச்சைக்காக வாழும் உணர்வின் தன்மை பட்டதும் அந்த உணர்வின் தன்மை கொண்டுதான் இந்த உலகம் முழுவதும் இன்று மடிந்து கொண்டுள்ளது.

மனித இனமே மடிந்து சிதைந்து கொண்டுள்ளது. மனித உரு இருப்பினும் மனித உருவையே சீர்குலைக்கும் உணர்வே வளர்ந்து கொண்டுள்ளது.

இத்தகைய நிலையை நம் பூமியில் வாழ்ந்த மகான்கள் இயேசு கிருஸ்துவோ, நபிகள் நாயகமோ சொல்லவில்லை. அதே போல நம் நாட்டில் தோன்றிய அகஸ்தியமாமகரிஷியோ வியாசக பகவானோ சொல்லவில்லை.

1. “உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு தோன்றுகின்றது..?”
2.கவர்ந்த உணர்வுகள் நுகர்ந்தவுடன் எண்ணங்கள் எப்படி உருவாகின்றது…?
3. உணர்வின் தன்மை உடலை எப்படி இயக்குகின்றது…?
4. நீ எதை நுகர வேண்டும்…?
5.நீ எதனைச் செயலாக்க வேண்டும்…? என்று
6.இராமாயணக் காவியம் மூலம் வான்மீகி மகரிஷி தெளிவாக உணர்த்தியுள்ளார்.

ஆனால்… தான் செய்யும் பாவச் செயல்களை எல்லாம் செய்துவிட்டு ஞானிகளை எண்ணி விட்டால் பாவங்களைப் போக்க முடியுமா…! என்றால் முடியாது.

நான் தவறு செய்துவிட்டேன். ஆகையினால், “என்னை மன்னித்துக்கொள்.., என்றால் அவன் மன்னிப்பானா..?” மன்னிக்க மாட்டான்.

ஏனென்றால் தீமை செய்யும் உணர்வினை நாம் நுகர்ந்து விட்டால் நம் “உயிரே” அதை உருவாக்குகின்றது. அந்த உணர்வின் தன்மைகளை அணுவாக வளர்த்து உடலுக்குள் விளையச் செய்துவிடுகின்றது.

அவன் எப்படிப் பாவ மன்னிப்புக் கொடுப்பான்…?

எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மையை “நீ அனுபவித்துப் பார்…” என்று தான் நம் உயிர் இயக்கிக் காட்டும்.

இதைத்தான் கீதையிலே “நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்” என்று தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது.

ஆகவே தீமைகளை மாற்றிட, பகைமைகளை மாற்றிட, நம்மை அறியாமல் இருள் சூழச் செய்யும் நிலைகளிலிருந்து முழுவதும் விடுபட வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?

மக்கள் அனைவரையும் இணைத்து உணர்வின் தன்மை ஒளி பெற வேண்டும் என்று உணர்த்திய அந்த ஞானிகள் அனைவருமே விண்ணிலே இன்றும் ஒளியின் சரீரமாகச் சப்தரிஷி மண்டலமாக.. வாழ்கின்றார்கள்.

அந்த ஞானிகள் காட்டிய அருள் வழியில் செல்ல வேண்டும். தீமைகளை வென்று ஒளியாக மாற்றிய அருள் உணர்வை எடுத்து பாவம் செய்யும் உணர்வுகளைத் தடுத்துப் பழக வேண்டும்.

ஒவ்வொரு நொடிப் பொழுதும் புருவ மத்தியில் நம் உயிரில் மோதும் உணர்வுகளை அருள் ஒளியின் சுடராக மாற்றிடல் வேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் ஒளியினை உயிர் வழியாகச் சுவாசித்துப் பழக வேண்டும்.

அப்பொழுது, நம் உயிர் “நீ எதை எண்ணுகின்றாயோ… அதுவாகின்றாய்” என்ற நிலைக்கொப்ப நமக்குள் அருள் ஒளியின் அணுக்களாக வளர்த்து அருள் சக்திகளை நமக்குள் விளையச் செய்யும்.

குருநாதர் எனக்குக் கொடுத்த ஞானத்தின் விளக்கவுரைகள்

 

குருநாதர் காட்டிய வழியில் இயற்கையின் உண்மை நிலைகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத் தான் மீண்டும் மீண்டும் இங்கே உபதேசிப்பது.
1.ஒவ்வொரு முறை சொல்லும் போதும் ஒவ்வொரு விளக்கவுரையைக் கொடுத்து
2.உங்களுக்குத் தெளிவாக்கிக் கொண்டே வருகின்றோம் (ஞானகுரு)

குருநாதர் முதலிலே இப்படித்தான் எனக்கும் சொல்வார். பின் ஒவ்வொன்றும் விளக்கவுரையாகக் கொடுத்து என்னைத் தெளிவாக்கிக் கொண்டு வருவார்.

எதையோ ஒன்றைச் சொல்வார். நான் அவர் சொன்ன இடத்திற்குப் போவேன். என்ன…? என்று எனக்கு அர்த்தம் தெரியாது. நான் அவர் சொன்னதைப் பார்த்துவிட்டு நான் திரும்ப வந்தவுடன்…
1.நீ பார்த்தது எல்லாம் என்ன…? என்ற நிலையில் கேள்விகளைக் கேட்பார்
2.அவர் கேட்டதற்குண்டான விடைகளைச் சொல்லத் தெரியவில்லை என்றால்
3.அதன் உணர்வுகளை நீ இவ்வாறு பார்…! இண்னென்னெ வழிகளிலே அது தெரியும்…! என்பார்.

இப்படித்தான் நான் கண்டுணர்ந்தது. குருநாதர் என்னைக் காட்டிற்குள் செல்லச் செய்ததும் இதற்குத் தான். ஆனால் நீங்கள் இங்கே அமர்ந்துள்ள நிலையிலே இதைக் கேட்டுக் கொண்டுள்ளீர்கள்.

அருள் ஞான வித்தாக குருநாதர் எமக்குள் விளைவித்ததை உங்களுக்குள் பதிவு செய்யப்படும் போது இந்த உணர்வினைப் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டால் அதை நீங்கள் கவர முடியும்.

1.விண்ணுலக ஆற்றலை அறிய முடியும்.
2.அந்த அருள் ஞானிகள் பெற்றதை நீங்களும் பார்க்க முடியும்.

ஒரு வெளிச்சத்தைப் போட்டால் அங்கே இருக்கும் பொருள்கள் நீங்குகிறது. இதைப் போல் இந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் கவரப்படும் போது உங்களை அறியாது வந்த இருளை மாய்க்க முடிகிறது…. “உங்களை நீங்கள் அறியும் ஆற்றல்கள் பெருகுகின்றது…” அதனின் உணர்வின் வலிமை கொண்டு இந்தக் காற்று மண்டலத்திற்குள் மறைந்துள்ள தீமைகளை அகற்றவும் முடியும்.

உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியின் சிகரமாக மாற்றிய அந்த அகஸ்தியனின் உணர்வுகளை நீங்கள் நுகர்ந்து கவரும்படிச் செய்வதற்கு அந்த அருள் ஞான வித்தாக இந்த உபதேச வாயிலாகப் பதியச் செய்கிறேன்.

குருநாதர் எனக்குள் எவ்வாறு அந்த ஞான வித்தைப் பதிவு செய்தாரோ… அந்த அருள் ஞானிகளின் வித்தை விளைவித்தாரோ… அதை நினைவு கொண்டு வளர்க்கப்படும் போது அதை நான் காண முடிந்தது.

1.முதலில் வெறும் வித்தாக இருக்கும் போது புரியவில்லை
2.பின்னால் அவர் உபதேசித்த உணர்வுகள் சந்தர்ப்பத்தில் உருவாக்கப்பட்டு அதை நானும் காண முடிகின்றது.
3.கண்ட உணர்வுகளை எனக்குள்ளும் விளைவிக்க முடிகிறது.
4.அதைச் சொல்லாகச் சொல்லும் போது அந்தச் சொல்லின் தன்மை வினையாகிறது.
5.அதை நீங்கள் நுகர்ந்து வரப்படும் போது வினையாக உங்களுக்குள் பதிவாகிறது.
6.மீண்டும் அதை நீங்கள் நினைக்கப்படும் போது வினைக்கு நாயகனாகவும்
7.உங்களுக்குள் இருக்கும் இருளைப் போக்கிடும் நிலையாகவும் ஆற்றலும் பெருகுகிறது.

உதாரணமாக வைத்தீய ரீதியில் ஒரு மருந்தினைச் செய்தால் இந்த நோயைப் போக்கும் என்று எப்படிச் செய்கிறோமோ இதைப் போல் மெய்ப் பொருளை உணர்ந்த அந்த மகரிஷிகள் வெளிப்படுத்திய உணர்வலைகள் அலைகளாகப் படர்ந்திருப்பதை எம்மைக் கவரச் செய்தார் குருநாதர்.

அவருக்குள் அருள் ஞான வித்தாக விளைவித்தார். அதே வித்தினை எனக்குள் பதியச் செய்தார். அந்த மெய்ப் பொருளைக் குருநாதர் வழிகளில் காண முடிகிறது.

அதே போன்று குருநாதர் கொடுத்த அந்த அருள் ஞான வித்தினை உங்களுக்குள் பதியச் செய்யப்படும் போது உங்கள் வாழ்க்கையில் அறியாது வந்த இருளைப் போக்க முடியும்… என்றுமே ஒளியாக வாழ முடியும்.

மாறி மாறி ஏற்படும் வெப்ப நிலையால் தான் சிருஷ்டியே நடக்கின்றது – ஈஸ்வரபட்டர்

 

அண்ட கோளத்தில் அமில சுழற்சியில் சுழன்று கொண்டே மிதந்து கொண்டுள்ள அமில நிலைகள் அவை அவை சுழற்சி ஓட்டத்தில் சந்திக்கின்ற சீதோஷ்ண நிலையின் தொடர்பு நிலைக்கொப்ப மாற்றத் தன்மைகளை ஏற்படுத்தி சீதோஷ்ண நிலை மோதலின் தொடரைக் கொண்டு அதனுடைய குணத் தன்மையில் வலுத்தன்மை பெறுகின்றது.

உதாரணமாக நாம் பால்… காபி… கஞ்சி… போன்ற வஸ்துக்களைச் சமைத்து வைத்துள்ள நிலையில் அதைக் காய்ச்சி வைத்துள்ள பாத்திரத்தில் அதைக் காய்ச்சி அப்படியே வைத்தவுடன்
1.அதிலுள்ள ஆவி நிலை வெளிப்பட்டு மேல் நிலையில் “ஆடையாக” திடம் கொண்டு படிந்து விடுகின்றது.
2.உஷ்ணம் உள்ள வரை பாலில் ஆடை கட்டுவதில்லை
3.குளிர்ந்த நிலையிலும் அதே தன்மையில் அது உள்ளது.

ஆனால் உஷ்ணப்படுத்தி ஆறிய நிலையில் அதன் குறிப்பிட்ட கால நிலைக்குப் பிறகு அதன் நிலையில் புளிப்பு நிலை கொண்டு மாற்று நிலை ஏற்பட்டு அதை எடுக்காமல் அப்ப்டியே வைத்து விட்டால் என்ன நடக்கின்றது…?

அதில் இரண்டு மூன்று நாட்களில் பூமியின் உஷ்ண நிலைக்கொப்ப புழுக்கள் வளர்கின்றன. அந்தப் புழுக்கள் வளரும் நிலையில் அதையும் அப்படியே விட்டு விட்டால் மேலும் என்ன நடக்கின்றது…?

அதுவே பாலில் அதிகமாக வளர்ந்த புழு ஒன்றை ஒன்று உட்கொண்டு… அதற்குகந்த ஆகாரம் வேண்டி நிலையில் ஒன்றுக்கொன்று உட்கொண்ட நிலையில் பெரும் புழுக்களாகின்றது.

1.பின் ஆகாரம் கிடைக்காத நிலையில் அதனுடைய ஜீவ நிலை பிரிந்து
2.நீர் சக்தி வெளியாகி படிம நிலைக்கு அந்தப் புழு உட்படுகின்றது.
3.இதற்குப் பிறகும் அத்தொடரில் பல நிலைகள் மாறு கொள்கின்றன.

இத்தொடரைப் போன்றே அண்டத்தின் அமிலத் தொடரும் உஷ்ண நிலைக்கொப்பவும் குளிர் நிலைக்கொப்பவும் அமில நிலைச் சேர்க்கைக்குச் சமைப்பு நிலையில் “பல பல உருக்கள்…” உருப்பெறுகின்றன.

சூரியன் சமைத்த ஆறு வகைக் குணத்தின் வண்ண நிலை பூமி சமைக்கும் ஏழாம் வண்ணமாகி மோதலுடன் தொடர்பெடுத்து பூமியின் ஈர்ப்பு நிலைக்கு பூமித் தொடர்பு கொண்ட பூமி சுழற்சியுடன் சுழலுகின்ற அமிலச் சமைப்பில் தொடர் வளர்ச்சியின் தன்மையைத்தான் “இயற்கை” என்றுணர்த்துகிறோம்.

1.இதிலே மாற்ற நிலைகள் பலவாக உருப்பெற்று மாறி மாறித் தொடர்கின்ற நிலையினில்
2.ஜீவ சக்தி கொண்டு உயிரணுத் தன்மை உருவான நிலையில்
3.உணர்வுத் தன்மை வளர்கின்ற இயற்கைத் தாவர நிலை மாறி
4.சரீர நிலை உணர்வு கொள்ளும் பொழுது அறிவு நிலை கொண்ட எண்ண நிலையும் உருவாகிறது.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நமது வாழ்க்கையில் பிறருடைய தீமைகளைக் கேட்டுணர்ந்து அவர்களுக்கு நாம் நன்மை செய்திருப்போம். ஆனால்
1.அவர்கள் நாம் செய்த நன்மையைக் கூட மறந்து
2.நமக்கே தீமை செய்யக்கூடிய நிலைக்கு வருவார்கள்.

அப்பொழுது நாம்… “இவ்வளவு உதவிகள் செய்தேனே… என்னை இப்படித் துன்புறுத்துகின்றார்களே… எனக்கு இடைஞ்சல் செய்கின்றார்களே…!” என்ற உணர்வுகளை எண்ணினால் அந்த உணர்வுகள் வளரப்படும் பொழுது அதைப் “பிடிவாதமாகப் பிடித்துக் கொள்வோம்…”

அவன் செயலை நமக்குள் உருவாக்கினால் அவன் தீமையின் உணர்வே நமக்குள் வந்து “உடலுக்குள் தீமைகள் விளைந்து விடுகின்றது” என்பதை நாம் மறந்திருக்கின்றோம்.

“அவன் தீமை செய்கின்றான்…” என்பதை உணர்கின்றோம்.

ஆனால் “இப்படிச் செய்கின்றானே…” என்று தொடர் வரிசையில் அதைச் செயல்படும் பொழுது அவன் உணர்வுகள் நமக்குள் வந்து தீமையின் அணுக்களை நமக்குள் உருவாக்கி நம் உடலையே நசியச் செய்துவிடுகின்றது.

இதைப் போன்ற தீமைகளிலிருந்து விடுபடும் மார்க்கம் என்ன…?

வியாசக பகவான் காட்டிய நிலைகளில்
1.“அதோ வருகின்றான் நாரதன்…” என்ற நிலையில் கண்ணன் கூறியடி
2.கண்கள் கூறிய நிலைகள் கொண்டு “நாம் உற்று நோக்கி…” வானை நோக்கி நினைவினைச் செலுத்துதல் வேண்டும்.

ரிஷியின் மகன் நாரதன் “நாராயணனின் அபிமானப் புத்திரன்” அவன். அவனிடம் கேட்டால் “பிடிவாதமாக… நமக்குள் இயக்கும்” நிலைகளிலிருந்து விடுபடும் உபாயத்தை விளக்கிச் சொல்வான்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் “ஈஸ்வரா…” என்று நம் உயிரை வேண்டி இந்த உணர்வை நம் உடலுக்குள் பரப்ப வேண்டும்.

ஏனென்றால் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிவரும் உணர்வலைகளைச் சூரியன் காந்த சக்தி கவர்ந்து வருவதைத்தான் நாரதனாகக் காட்டினார்கள்.

அவனோ “கலகப்பிரியன்…” கலகமோ நன்மையில் முடியும். நாம் பிடிவாதமாகப் பிடித்திருக்கும் தீமையின் அணுக்களுக்குள் கலகமாகி அதை நமக்குள் நன்மை பயக்கும் சக்தியாக மாற்றும் என்பதை வியாசக பகவான் தெளிவாக உணர்த்தினார்.

ஆகவே அருள் ஒளியின் சுடராக நாம் மாற்றிட ஒளியின் சரீரமாக மாற நம் உயிரே சொர்க்கவாசலாக அமைகின்றது.

எதனைக் கூர்மையாக எண்ணி வளர்க்கின்றோமோ அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து “சொர்க்கலோகம்” அடைகின்றோம்.

இதையெல்லாம் தெளிவாக்குகின்றது நம் சாஸ்திரங்கள்.

ஞானத்தை வளர்க்க வேண்டும் என்றால் அதற்கு ஆதாரமான விழுதுகள் தேவை

 

நம் குருநாதர் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தின் தன்மையைத் தன்னுள் கண்டுணர்ந்தார்.
1.இந்த மண்ணுலகை வென்று எப்படி விண்ணுலகிற்குச் செல்ல வேண்டும்…? என்று முழுமை பெற்றார்.
2.தான் முழுமை பெறுவதற்குண்டான பாதையைக் கற்றார்.
3.முழுமை பெறுவதற்குத் தனக்குத் துணை வேண்டுமென்று எண்ணினார்.

விண்ணுலகம் செல்ல வேண்டும் என்றால் உயிராத்மாவை விண்ணிற்கு உந்தி தள்ளத் தனக்குகந்த ஆதாரங்கள் தேவை.

1.விழுதுகள் இல்லாது எந்த மரமும் வளர்ந்திடாது.
2.ஆகவே தனக்கென்று விழுதுகளை உருவாக்குகின்றார்.

தான் பெற்ற சக்திகளை “ஒவ்வொரு உயிரும் பெற வேண்டும்” என்ற நிலையினை அவர் தான் இங்கே செயல்படுத்திக் கொண்டிருக்கின்றார்.

யாம் (ஞானகுரு) உபதேசிக்கும் இந்த உணர்வலைகள் கொண்டு எல்லோரும் ஏகோபித்த நிலைகளில் நமது குரு காட்டிய வழியில் தியானத்து அதைச் செயல்படுத்துவோம்.

1.உங்களுக்கு நான் விழுது… எனக்கு நீங்கள் விழுது…! என்ற இந்த உணர்வுகள் வளர வேண்டும்.
2.ஒன்றின் துணை கொண்டு தான் ஒன்று வளர முடியும். ஒன்றில்லாது ஒன்று விளையாது

அனைத்தையும் வெறுத்தேன்… நான் தனித்துச் சக்தி பெறுவேன் என்றால் அது சாத்தியம் இல்லை

அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியனும் தனக்குள் அனைத்தையும் இணைத்துத் தான் ஒளியாக்கினான். தனக்குள் அரவணைத்தான்… எதற்கும் தீங்கு செய்யாது அடக்கினான்.

ஆகவே தான் எதனையும் ஒளியாக மாற்றும் திறன் பெற்றான். அவன் பெற்ற அந்த உணர்வுகளைத் தியானத்தின் மூலம் நமக்குள் கவரப்படும்போது நிச்சயம் நாமும் அதைப் பெறலாம்.

துணுக்குத் துணுக்காகச் சொல்கின்றேன் என்று எண்ண வேண்டாம். இதை இப்போது உங்களுக்குள் பதிவு செய்கிறேன். சந்தர்ப்பத்தில் நினைவாக்கித் தீமைகளை அகற்றும் சக்தியாக உங்களுக்குள் விளையும்… அப்படி விளைய வேண்டும் என்பதற்குத்தான் இதைத் தெளிவாக்குகின்றேன்.

குருநாதர் எனக்கு எப்படி கற்றுக் கொடுத்தாரோ… பெறும்படி செய்தாரோ… அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நீங்களும் பெற வேண்டும்… உங்களால் அதைப் பெற முடியும் என்ற முழு நம்பிக்கையில் சொல்கின்றேன்.

ஆகவே… உங்களுடைய நினைவுகள் கூர்மையாக இருத்தல் வேண்டும்.யாம் உபதேசிப்பதை ஆழமாகப் பதிவு செய்தல் வேண்டும். பதிந்ததை மீண்டும் நினைவிற்குக் கொண்டு வர வேண்டும். அந்த நினைவின் ஆற்றல்… அதுவே உங்களை வளர்க்கும். அதாவது
1.முதலில் அதனை நீங்கள் எடுத்து வளர்க்க வேண்டும்
2.பின் அது உங்களை வளர்க்கும்
3.இந்த அருள் ஞானத்தை உங்களுக்குள் போதிக்கும்
4.உங்களை அருள் வழியிலே என்றுமே அழைத்துச் செல்லும்.

உள் மனம்… வெளி மனம்… என்ற இரு நிலையால் வரும் போராட்டம் நல்லதா கெட்டதா…? – ஈஸ்வரபட்டர்

பிறப்பெடுத்த நாளிலிருந்து நாம் இறக்கும் காலம் வரை… “நினைவின் ஓட்ட நிலை” சுழன்று கொண்டே தான் உள்ளது.

எண்ணத்தின் சரீர உணர்வின் நினைவு நிலை இச்சரீர வாழ்க்கையில் மட்டும் தானா…? ஆவி நிலையில்… கர்ப்பக் காலத்தில்… இதன் ஓட்ட நிலை யாது…? என்ற நிலையை உணரல் வேண்டும்.

ஆத்ம பிம்பத்தில் இந்நினைவலைகளின் சுழற்சி ஓட்ட எண்ண உணர்வு ஒவ்வொரு நொடிப் பொழுதும் ஓடக்கூடிய நிலைக்கொப்ப எண்ணத்தின் நினைவின் ஆணைக்கொப்ப சரீரச் செயல் சொல்லாகவும் செயலாகவும் நடைபெறுகின்றது.

எண்ணத்தின் ஓட்ட இயக்க நிலைக்கொப்பச் சரீரச் செயல் நடக்கவும்… உண்ணவும்… எழுதவும்… சரீரத்தால் இயங்கத்தக்க அவய நிலைகள் எண்ணத்தின் உணர்வு உந்தியவுடன்… தன் தன் செயலைப் புரிகின்றது.

எண்ணத்தின் நினைவோட்டத்தை
1.செய்த நிலை… செய்யப் போகும் நிலை… செய்யும் நிலை என்ற தொடரில் எண்ணத்தைச் செலுத்தும் நிலையிலும்
2.சரீர அங்கத்தின் செயல் நிலை செயல் கொள்ளா எண்ண நிலையிலும்
3.எதில் எதிலெல்லாம் எண்ணத்தின் உணர்வுகள் உருள்கின்றதோ அத்தொடரில் எல்லாம்
4.ஜீவ சக்தியுடன் கூடிய உஷ்ண அலை கொண்ட இச்சரீர ஓட்ட இயக்கத் தன்மையிலேயே
5.சுவாசத்தின் மோதலில் – நடக்கப் போகும் நினைவின் எண்ண உணர்வு செலுத்தக் கூடிய தருணத்திலும்
6.சுவாச அலையின் துடிப்பு நிலை அணு வளர்ப்பைக் கொண்டு
7.நினைவலையின் எண்ண உணர்வை இச்சரீர பிம்ப வாழ்க்கையில்
8.ஆத்மா தன் பதிவு நிலைக்குப் பதித்துக் கொள்கின்றது.

ஆனால் நடை முறையில் அவரவர்கள் உடல் அமைப்பு நிலைக்கொப்ப நினைவின் எண்ண ஓட்டம் சுழன்று கொண்டேயுள்ள நிலையில் “ஒரே சமயத்தில்” இரண்டு நிலையான போராட்ட நிலையும் இச்சரீரத்திற்கு உண்டு.

நினைவின் எண்ணத்தால் ஆத்மாவில் பதியப் பெற்ற எண்ண நிலையும்… எண்ணத்தின் உணர்வை ஆத்மா சமைக்கும் தருண நிலை மோதலில்
1.“பதிவு பெற்ற நிலை… பதிவாக்கும் நிலை…!” இந்த இரண்டு நிலையில்
2.ஒன்றை நாம் முடிவெடுக்க எண்ணத்தைச் செலுத்தும் தருணத்தில் போராட்டமாகின்றது.

எச்செயலுக்காக எண்ணத்தைச் செலுத்திச் செயல் கொள்ள விழைகின்றோமோ அதே செயலைச் செய்விக்க வேண்டிய நிலைக்காக
1.ஆத்மாவின் பதிவு நிலையில் ஏற்கனவே பதியப் பெற்ற நிலையில் எண்ணங்கள் மோதும் பொழுது
2.:உள் மனம் வெளி மனம்” என்ற இரண்டு நிலையான ஓட்ட நிலையில் மோதும் எண்ணச் செயலை
3.இச்சரீர பிம்ப வாழ்க்கையில் காண்கின்றோம்.

அதில் சில போராட்ட நிலைகளும் எண்ணத்தில் ஏற்பட்டு அதன் வழியிலும் சில முடிவுகள் ஏடுக்கின்றோம்.

சரீர அங்கத்தில்… ஆத்மாவின் செயல் இயக்கும் பிறப்பு இறப்பு கால ஓட்டத்தில்… எண்ணத்தின் நினைவோட்ட நிலை “இரண்டு நிலையில்” செயல் கொள்ளும்.
1.இத்தகைய இரண்டு நிலையே
2.மனிதனின் அறிவு… பகுத்தறியக் கூடிய உயர் ஞானத்திற்கு வித்தாக அமைந்துள்ளது.

மிருகங்களின் செயலில் இத்தகைய இரண்டு நிலை கொண்ட எண்ண ஓட்ட அறிவின் பகுத்தறியும் தன்மை நிலை குறைவாக உள்ளது. மேலும் சரீர அங்கத்தின் செயல் தன்மையும் மனிதனை ஒத்த சொல்லாற்றல் நிலையும் குறைவு.

ஆகையினால்… சரீர உணர்வின் நிலைக்கொப்ப ஆத்மாவின் பதிவு நிலை செயலை “எண்ண உணர்வின் மோதாத சரீர எண்ண நிலைக்கொப்ப… ஒரு நிலையில் தான்” மிருகத்தின் செயல் உள்ளது.

ஆனால் மனித ஞானத்தில் உயர்ந்த சக்தி நிலையாக ஆத்மாவின் பதிவு நிலை செயல் ஞானம் அமைந்துள்ளது.

உடலுடன் உள்ள சரீர ஜீவ சக்தியின் செயலினால் மனித ஆத்மாவின் உயர்வு நிலையே “உள் மனம்… வெளி மனம்…” என்ற நினைவின் எண்ண உணர்வு செயல் கொள்ளும் செயலினால்…
1.அறிவின் பகுத்தறிவு நிலை கொண்டு
2.ஞானத்தின் வளர்ச்சியை எந்நிலைக்கும் வளர்த்துக் கொள்ள முடியும்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆத்மாக்கள்… சரீரத்தில் உள்ள பொழுது பதித்துக் கொண்ட அதனின் நினைவோட்டங்கள் ஆத்மாவுடன் பதிவாகி… ஆவி நிலையில் சுழன்று ஓடினாலும் எவ் எண்ண அலையாக இந்த ஆத்மா பதித்துக் கொண்டதோ அதே எண்ண நிலைக்கொப்பத்தான் சுழல முடியும்.

அவ்வாறு சுழலும் நிலையில் தான் பெற்ற சுவை குண எண்ண நிலைக்கொப்பச் சரீரங்கள் கிடைக்கும் பொழுது அவ் ஈர்ப்பில் இவை சிக்கி ஆவி நிலையில் உள்ள ஆத்மா சரீர ஈர்ப்பில் உட்புகுந்து விடுகின்றது.

அதாவது…
1.ஜீவ சக்தி கொண்ட அலை கிடைத்தவுடன்
2.தன் ஆத்மாவின் வலுவை வளர்க்க நீர் சத்தின் உஷ்ண நிலை கிட்டியவுடன்
3.அதனுடைய வளர்ப்பு நிலை வளர்ச்சி கொண்டு பிறப்பு நிலைக்கு வருகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

இன்று நாம் ஆலயத்திற்குச் செல்லும் நிலையில் என்ன செய்கின்றோம்…? பழனியில் முருகன் கோவிலில் பார்க்கலாம்.

உள்ளே வரிசைப்படுத்திச் செல்லும் பொழுது அங்கே மணியடித்துத் தீபாரதனை காட்டினால் போதும். உடனே என்ன நடக்கும்…? இவர் அவரைத் தள்ளுவார்,.. அவர் இவரைத் தள்ளுவார்.

அப்படித் தள்ளும்போது, “ஏனய்யா… எருமை மாதிரி இப்படித் தள்ளுகின்றாய்…?” என்று இந்தப் பக்கம் திரும்புவார்.

உடனே அவர் “நீ ஏனய்யா… எனக்கு மறைக்கின்றாய்…?” என்ற இந்த உணர்வு வரும்.
1.இங்கே மறைக்கப்படும்…
2.ஆனால்… இந்தப் பக்கம் காசைக் கொடுத்துச் சாமியைத் தரிசனம் செய்ய வருவோரைப் பார்த்தபின் என்ன செய்வார்கள்…?

“ஐயா…! வாங்க வாங்க…” என்று வாட்ச்மேன் இவர்களைக் கூப்பிடுவார். ஏனென்றால், அவர் 50 அல்லது 100 ரூபாய் பணம் கொடுக்கின்றார். “ஐயரே…, நீ சீக்கிரம் மணி அடி ஐயா…” என்று இவர் அவருக்குக் கட்டளை இடுவார்.

கோவிலின் இன்றையப் பண்புகள் இப்படித்தான் இருக்கின்றது.

நான் (ஞானகுரு) பழனியில் வாழ்ந்தவன். இதையெல்லாம் அடிக்கடி பார்த்தவன்.

உயர்ந்த பண்பு கொண்டு அன்று போகன் மனிதனுக்குள் அறியாது சேர்ந்த தீமைகளை அகற்றிடும் நிலைக்காக இந்த முருகன் சிலையை அமைத்தான்.
1.அந்தச் சிலையை உற்றுப் பார்த்து நம் எண்ணத்தால் அந்தச் சக்தியைக் கவரப்படும் பொழுது
2.நம்மையறியாது வந்த தீமைகளை அகற்றும்படிச் செய்தான்.

ஆனால் நாம் யாரும் அதைச் சிந்திக்கவில்லை.

இன்று முருகனைப் பற்றிய பக்திப் பாடல்களும் பல நிலைகள் கொண்டு எங்கிருந்தோ கால்நடையாக நடந்து சென்று அந்த முருகன் சிலைக்கு அபிஷேகம் செய்தால் நமக்குப் பண்பு கொண்டு செய்வான். அவன் நமக்கு அருள்பாலிப்பான் என்ற நம்பிக்கையைத்தான் அங்கே காட்டுகின்றார்கள்.

1.ஆசையையும் ஆர்வத்தையும் தூண்டுகின்றார்களே தவிர
2.எதனை ஆசைப்பட வேண்டும்…? எதன் மேல் நாம் ஆர்வத்தைக் காட்ட வேண்டும்…? என்ற நிலைகள் அங்கே இல்லை.

ஆகவே இதை போலப் பண்புகளை மறந்து நல்ல ஒழுக்கங்களை மாற்றிவிட்டு நம்மையறியாமலே நமக்குள் தண்டனை கொடுக்கும் அணுக்களை நமக்குள் வளர்த்துக் கொண்டுள்ளோம்.

ஒருவர் மேல் பகைமையாகி விட்டால் அந்தப் பகைமையை ஊட்டும் சக்தியாக எனக்குள் வந்துவிடும். பின் அவர்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவருக்கு எதையாவது இடைஞ்சல் செய்ய வேண்டும்… என்ற எண்ணங்கள் வரும்.

நண்பர்களுக்குள் பகைமை ஆகிவிட்டால் அவர் தொழிலில் முன்னேற்றம் அடைந்து வந்தால் போதும்.

அடுத்து இதைத் தலைகீழாக எப்படி மாற்றிட வேண்டும் என்றும்… பகைமை உணர்வு கொண்டு அடுத்து வியாபாரத்திற்குச் சென்றால் அவரைப் பற்றித் தவறாகச் சொல்லி அவரைக் கீழே வீழ்த்திவிடும் உணர்வுகள்தான் அங்கே தோன்றுகின்றது.

1.அவருக்குக் கெடுதல் செய்து விட்டால் அவர் வாழ மாட்டார்…! என்று எண்ணுகின்றோம்.
2.அதே உணர்வுகள் நமக்குள் வளர்ந்து விட்டால்
3.நமக்குள் உள்ள நல்ல குணங்கள அது செயலற்றதாக மாற்றுகின்றது என்று எண்ணுவதில்லை.

இதைப் போன்ற நிலைகளை மாற்றியமைப்பதற்குத்தான் பக்தி என்ற பெயரால் உருவங்களை அமைத்து உயர்ந்த குணங்களைக் காவியமாக்கியுள்ளனர்.

1.அந்தக் காவியத்தின் தன்மையை நாம் எண்ணத்தால் எடுத்தோம் என்றால் “அத்வைதம்…”
2.இந்த உருவத்தைப் பார்க்கும் பொழுது “துவைதம்…”
3.அந்த உயர்ந்த குணங்களை நாம் நுகர்ந்தால் நம் உயிரிலே பட்டால் “விசிஷ்டாத்வைதம்…” உணர்ச்சிகள் நம்மைத் தூண்டுகின்றது.

அந்த உணர்வின் தன்மை உயிரிலே பட்டபின் உணர்வின் அணுவாக மாறும் பொழுது நம் உடலாக மாறுகின்றது… துவைதம்.

இவ்வாறு நம் உடலை ஆக்கவேண்டும் என்று நல்ல பண்பு கொண்டு ஆலயங்களைக் காட்டியுள்ளார்கள். இதை நாம் இப்படி வணங்கி வந்தாலும் அடுத்த கணம் ஒருவர் நம்மிடம் கேட்கின்றார்.

இந்தக் கல்லை வணங்கி உனக்கு என்ன கிடைத்தது என்று கேட்கின்றார். இந்தக் கல் உனக்குத் தருமா..,? என்று எண்ணுகின்றார்கள்.

ஆனால்…
1.அந்தக் கல்லிலே காட்டப்பட்ட காவியக் கருத்துக்களை
2.நாம் எண்ணத்தால் எடுக்கப்படும் பொழுது இது அத்வைதமாகி
3.நம் உயிரிலே படப்பட்டு அந்த உணர்வின் அணுவாகி
4.அந்த அணுவான பின் அதற்கு இரையாகத் தேவைப்படுகின்றது.

அந்த நல்ல குணங்களைத்தான் அது உணவாக உட்கொள்ளும்.

அந்த நல்ல குணங்களை உணவாக உட்கொள்ளும் அதை ஈர்க்கப்படும் பொழுது நாம் சுவாசித்து நம் உயிரிலே படும் பொழுது அந்த நல்ல செயல்களைச் செயல்படும் நிலைகளும் மகிழ்ச்சி பெறும் நிலைகளும் நமக்குள் உருவாகின்றது.

அதே சமயத்தில் அந்த அணுவின் தன்மை வளர்ச்சி பெற்றால் உடல் ஆரோக்கிய நிலையும் பெறுகின்றது. இதையெல்லாம் தத்துவ ஞானிகள் சாதாரண மக்களும் இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள இவ்வழியைக் காட்டினார்கள்.

தெய்வங்களுக்குப் பல பல வாகனங்களை ஏன் போட்டுள்ளார்கள் ஞானிகள்…?

 

கருப்பணசாமிக்கு முன் மோப்ப நாயை வைத்திருப்பார்கள். ஞானிகள் காட்டிய வழியில் அதனின் உட்பொருளை நாம் அறிந்து கொள்ள வேண்டும்,

உதாரணமாக ஒரு நாயை யார் வளர்க்கின்றாரோ அவருக்குச் சாதகமாகத்தான் அந்த நாயும் இருக்கும்.
1.அவர் நல்லவராக இருந்தால் அவர் சொன்னபடி எல்லாம் அது செய்யும்.
2.அவர் போக்கிரித்தனம் செய்தால் மற்றவர்கள் தாக்க வந்தால் அவர் மீது உள்ள விசுவாசத்தின் நிலை கொண்டு
3.அவரைக் காக்க அந்தப் போக்கிரித்தனமான நிலைகளில் நல்லவரைத் தாக்க அந்த நாய் வருகின்றது.

இதைப் போன்றுதான் நாம் எடுக்கும் மோப்பங்கள் (சுவாசம்) சந்தர்ப்பத்திலே தீமையான உணர்வுகளைச் சுவாசித்து விட்டால் அந்த உணர்வுகள் அனைத்தும் நம்மை இருள் சூழச் செய்து…
1.நம்மை அறியாமலேயே தவறு செய்யும் நிலைகளுக்கு அழைத்துச் செல்லும்
2.கொடூர நிலைகளுக்குப் பழி தீர்க்கும் உணர்வினை உருவாக்கும்.

ஆகவே… இருண்ட நிலைகள் வரும்போது மனிதனுக்குள் சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது… நல்ல உணர்வுகளைக் கொன்று விடுகிறது… என்ற இந்த உணர்வினைக் காட்டுவதற்குத்தான் கருப்பணச்சாமிக்கு முன் வாகனமாக நாயை வைத்துக் காட்டியுள்ளனர் ஞானிகள்… கையிலே அரிவாளையும் வைத்துக் காட்டி இருப்பார்கள்.

நமக்குள் இயங்கும் ஒவ்வொரு குணத்தின் இயக்கத்தையும் உணர்த்துவதற்காக ஒவ்வொரு நிலைகளிலும் தெய்வத்திற்கு உருவங்கள் அமைத்து அதற்கு முன் வாகனங்களையும் ஞானிகள் அமைத்துள்ளனர்.

1.கடவுளின் அவதாரம் பத்து என்றாலும்
2.ஒவ்வொரு ஊரிலும் அமைக்கப்பட்டுள்ள தெய்வங்களுக்குப் பத்து நாள் திருவிழா என்றாலும்
3.ஒவ்வொரு கோயில்களிலும் புலி வாகனம் அன்ன வாகனம் மயில் வாகனம் பரி வாகனம் சிம்ம வாகனம் என்று வாகனங்களை வைத்திருப்பார்கள்.

மாரியம்மனோ அல்லது காமாட்சியோ மற்ற தெய்வங்களோ அந்தந்த உணர்வின் குணங்களுக்கு
1.ஒவ்வொன்றும் தன் உணர்வின் தன்மை கொண்டு எடுத்து
2.அந்த உணர்வின் சக்தியை இணைத்து… அது ஒரு எண்ணமாக உருவாகி… அந்த எண்ணமே காக்கும் நிலையாகி
3.அது இப்படி ஒவ்வொன்றும் இணை சேர்த்து 1008 குணங்களாக மாறி
4/மனிதனாக உருவாக்கக் காரணமாக இருந்தது.

நாய் நரி பூனை இதைப் போன்று பல உயிரினங்கள் அது ஒன்றை ஒன்று விழுங்கினாலும் வலுவானவற்றிலிருந்து தன்னைக் காத்திடும் உணர்வு கொண்டு ஒரு அணுவின் தன்மையாக விளைந்து அடுத்த உடல் பெறுகின்றது.

1.அதன் வழிகளில் ஒவ்வொரு குணங்களையும் சிருஷ்டித்து
2.இப்படி மனித உடலுக்குள் 1008 குணங்களாக உருவானது என்று
3.1008 தெய்வங்களை வைத்துக் காட்டுகின்றார்கள்.

இத்தகைய இயற்கையின் நிலைகளை உணர்ந்து நமக்குத் தெளிவாக வகுத்துக் கொடுத்தவன் அன்றைய மகா ஞானியான அகஸ்தியன் தான்

எண்ணத்தின் கூர்மை எது…! அதைப் பயன்படுத்த வேண்டிய முறை எது…? – ஈஸ்வரபட்டர்

 

1.நம் செவியில் படும் ஒலி நாதத்தின் ஈர்ப்பிற்கொப்ப…
2.எண்ண உணர்வு சமைக்கப்படும் அணு வளர்ச்சி கொண்டு தான்
3.“உடல் வாழ்க்கை” நடக்கின்றது.

உடலின் இயக்கத்தால் எடுக்கக்கூடிய நம் எண்ண நிலையின் செயல் உணர்வு நிலைக்கொப்ப அணு வளர்ப்பின் முலாமைத் தான் (ஆத்மாவில்) நாம் பெறுகின்றோம்.

அதனால் வாழ்க்கையுடன் ஒன்றிய ஈர்ப்பு வட்டத்தில் ஒலி கொண்டு ஒலி பெறும் இச் சரீர இயக்கத்தை
1.உயர் நாத விந்து வளர்ப்பு நிலை பெறத்தக்க
2.ஒலி நிலை கொண்ட ஒளி பெறும் (மகரிஷிகளின்)
3.காந்த மின் அலைத்தொடர் வளர்ச்சிக்குக் கொண்டு செல்லுதல் வேண்டும்.

உயர் ஞான சக்திகளின் வளர்ப்பாக உடலில் ஒளியான அணுக்களை உருவாக்கி… அதன் மூலம் உடலின் எலும்புகளின் ஊன்களை உறுதியாக்கும் தன்மை பெற்றால் நம் ஆத்மாவே ஒளி நிலை கொண்ட “ஜோதி நிலை” அடைகின்றது.

1.எதனின் ஈர்ப்புப் பிடியிலும் சிக்காத இந்த ஆத்மாவின் ஒளிப் படர்வின் செயலினால்
2.ஒளி பெற்ற ஆத்ம சரீர அலையிலிருந்து வெளிப்படும் ஒலி அலைகள்
3.ஒளி கொண்டு திக்கெட்டும் பாயும் உயர் ஞான ஒலிகளாக…!

ஒலி பாய்ச்சி ஒளி கொண்டு எத்தொடரில் உயர் ஞான சக்தியினால் எடுக்கப்பட்ட சொல் நாதம் ஒலிக்கின்றதோ அச்சொல்லின் செயல் “வாக்காகச் செயல் கொள்ளும்…”

“சொல் வாக்குப் பெற்ற சக்தி நிலை” என்பது விழி கொண்டு பாய்ச்சப்படும் ஒளியின் கூர்மை கொண்டு… ஒளி வழித் தொடர் அலையின் உயர்வு நிலை… “ஒளி பட்ட இடத்திலேயே செயலாக்கம் ஆகும்…”

அதாவது…
1.எரியும் பொருள்களில் சிறு நெருப்புப் பொறி பட்டவுடன்…
2.சிறு நெருப்புப் பொறியானது பெரும் நெருப்பாகச் சகலத்தையும் பஸ்பமாக்குகின்றது.

அதைப் போன்று இவ்வொளியைப் பாய்ச்சி உயரக்கூடிய வழி நிலைக்கும்
1.ஒலி கொண்டு ஒளி பெற்ற “விழி ஒளியின் கூர்மை கொண்டு”
2.எந்த அலைத் தொடரையும் மாற்றவல்ல “ஒளி நிலை பெறலாம்…” இந்த ஒளி நிலை ஞானத்தால்.

சரீரத்தின் எண்ண உணர்வைச் செலுத்தப்படும் செயல் கொண்டு
1.செயலின் வழி ஞானம் மிகவும் கூர் பாய்ச்சிய தன்மையில்
2.வாழ்க்கை வழி முறையில் அதை மிகவும் சாந்தத் தன்மையில் செயல்படுத்த வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நமது வாழ்க்கையில் எப்பொழுது துன்பத்தைக் காணுகின்றோமோ அந்த உணர்வுகள் நமக்குள் விளையாது அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஒருவர் நம்மைத் துன்பப்படுத்தினாலும்…
1.எங்கள் பார்வை அவரை நல்லவராக்க வேண்டும்
2.எங்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அவர் தீங்கின் உணர்வுகள் நமக்குள் பதிவாகி அவரின் உணர்வு நமக்குள் வளர்ந்து விட்டால் “நமக்குத் தீமை செய்யவேண்டும்…” என்று அவர் எண்ணிய உணர்வுகள்
1.அவரை எண்ணும் பொழுதெல்லாம்
2.இந்த உணர்வுகள் நமக்குள்ளே தீமையை விளைய வைக்கும்.

அப்பொழுது அந்தத் தீமை செய்தவன் நம்மைப் பார்த்துச் சொல்வான். “பார்…! அவன் செய்த வினைக்குத்தான் அனுபவிக்கின்றான்…” என்று அவன் அதைக் கண்டு இரசிப்பான்.

அப்படி இரசிக்கப்படும் பொழுது அதே உணர்வின் தன்மை வருகின்றது.

தீமைகள் விளைந்த இவன் இறந்தபின்
1.அவன் (தீமையை ரசித்தவன்) உடலுக்குள்ளே சென்று
2.அந்தத் தீமையை விளைய வைத்து அவனை வீழ்த்திவிடுவான்…! என்பதை மறந்து விடுகின்றான்.

இயற்கையின் நியதியாக இவ்வாறு இயக்கும் நிலைகளிலிருந்து யாரும் தப்ப முடியாது.

நம்மை உருவாக்கிய ஈசனின் துணை கொண்டு ஒளியின் சரீரமான அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் பெருக்கி அந்த உணர்வுகளை நம் உடலுக்குள் கணங்களுக்கு அதிபதியாக்க வேண்டும்.

மனிதனின் வாழ்க்கையில் எதைச் சுவாசிக்கின்றோமோ விநாயகர் தத்துவத்தில் மூஷிகவாகனா என்று காட்டியுள்ளார்கள்.

கசந்த வாழ்க்கையை நடத்தி அப்படிக் கசந்த வாழ்க்கையே கணங்களுக்கு அதிபதியானால் இந்த மனிதப் பிறவியில் எதன் நிலைகளை எடுத்தாயோ அதற்குத்தக்கவாறு பரிணாம வளர்ச்சியில் தேய்பிறையாகக் கீழே போவாய்…! என்று காட்டுகின்றார்கள்.

உதாரணமாக பௌர்ணமி அன்று முழு நிலாவாக இருக்கின்றது. ஆனால் அடுத்த நாள் பார்த்தால் மற்ற கோள்கள் மறைக்கின்றது. சூரியனின் கதிரியக்கங்கள் இதற்கு வராது தடுக்கப்படும் பொழுது ஒரு பக்கம் இருள் சூழ்ந்த நிலையாக வருகின்றது.

இப்படி நாளுக்கு நாள் இதன் ஒளிக்கதிர்கள் மங்க மங்க சந்திரனே நம் கண்ணுக்குப் புலப்படாமல் இருள் சூழ்ந்த நிலை ஆகிவிடுகின்றது. பின்… சூரியனின் ஒளிக்கதிர்களை அது எடுக்கப்படும் பொழுது சிறுகச் சிறுக மீண்டும் ஒளியாகின்றது.

இதைப் போன்று தான்
1.நம் உயிர் மற்றவர்களுடைய துன்பங்களை எடுக்கபப்படும் பொழுது
2.மனிதனாக வளர்த்த இந்த அணுக்கள் சிறுகச் சிறுக மறைகின்றது.
3.இந்த உணர்வின் தன்மை வரும் பொழுது நோயாகின்றது.
4.இந்த உடலை விட்டுச் சென்றபின் மனிதனல்லாத உணர்வின் உருக்களாக அது உருப்பெறச் செய்கின்றது.

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்காக அன்று ஞானிகள் காவியங்களைத் தீட்டியுள்ளார்கள். இதைப் போன்ற கொடுமைகளிலிருந்து நாம் மீள்தல் வேண்டும்.

மீள வேண்டும் என்றால் அந்த விநாயகர் தத்துவத்தில் காட்டியபடி நம்முடன் வாழ்ந்த வளர்ந்த முன்னோர்களை விண் செலுத்த வேண்டும்.

எங்கள் குலதெய்வங்களான பாட்டன் பாட்டி உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் அந்தச் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து என்றும் பேரின்பப் பெருவாழ்வு வாழ வேண்டும் என்று குடும்பத்திலுள்ளோர் அனைவரும் ஒன்று சேர்ந்து அதிகாலையில் துருவ தியானத்தில் விண் செலுத்த வேண்டும்.

அப்பொழுது உடலை விட்டுப் பிரிந்த அந்த ஆன்மாக்கள் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திலுள்ள சப்தரிஷி மண்டலங்களுடன் இணைகின்றது.

மனிதனின் வாழ்க்கையில் தெளிந்திட வேண்டும் என்ற எண்ணத்தின் ஒளிகள் அங்கே மிஞ்சுகின்றது. அதன் வழி நாமும் விண் செல்லலாம்.

அதை நாம் பெற்று இந்த வாழ்க்கையில் அறியாது வரும் தீமைகளிலிருந்து விடுபட முடியும். உடலை விட்டுச் செல்லும் பொழுது நாமும் அவர்கள் சென்ற எல்லையை எளிதில் அடைய முடியும்.

சகுணம் பார்க்க வேண்டுமா…? எப்படிப் பார்க்க வேண்டும்…? ஈஸ்வரபட்டர்

 

கழுதையின் சரீரச் செயலே பல சுமைகளைச் சுமக்கவல்ல ஜட உணர்வு கொண்ட அமைப்பில் உள்ளது. கழுதை அதன் கூட்டமைப்பு உருவம் பெற்ற ஜெனிப்புத் தன்மைக்கொப்ப அதனுடைய ஒலித் தன்மை “விகார நிலையில் ஒலிக்கின்றது…!”

இதனை நம் முன்னோர்கள் ஒலியின் விகாரத்தை மனித உணர்வு பெற்றால் என்ன நடக்கும்…? என்று உணர்த்தினார்கள்.

ஒரு விகாரமான ஒலித் தன்மையை செவி நிலை பெற்று அதன் மூலம் அமையும் சுவாசத்தின் அணு வளர்ப்பு வளர்க்கும் நிலைக்கொப்ப எண்ணத்தின் உணர்வு செயல்படுவதை “அன்றே” நம் முன்னோர்கள் காட்டினார்கள்.

அதாவது மனித வாழ்க்கைக்கு… பூமி சுழற்சியில் பிறப்பெடுத்த ஜீவ ஜெந்துக்களின் தொடர்புடன் வாழ்க்கை நிலை ஒன்றியதனை
1.ஒலியின் நாதத்தால் மனித உணர்வு ஞானம் வழித் தொடர் அமையவல்ல நிலையை
2.நன்மை தீமை என்ற சகுணங்களை அடிப்படைக் குணமாகக் காட்டி
3.கழுதை கத்தும் ஒலியையே நன்மை என்ற சகுண நிலையைக் காட்டி
4.நல்லது நடக்க கழுதையின் கத்தல் உகந்தது…! என்று உணர்த்தினார்கள்.

மனித வாழ்க்கை அமைப்பில் மோதுண்டு சுழலுகின்ற ஜீவ ஜெந்துக்களின் தொடர்பில் இருந்தெல்லாம் மனித ஒலி ஒளி சமைப்பு நிலைக்கொப்பத் தான் மனிதனின் எண்ண உணர்வு செயல்முறை எண்ண வளர்ச்சி ஆகியன வளர்கிறது என்ற உண்மையை உணர்ந்த நம் முன்னோர்கள் தான் இதை இப்படி வழிப்படுத்தினர்.

இன்றல்ல நேற்றல்ல…! பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே
1.ஒளியின் ஒலி நாதம் கொண்டு
2.உயருகின்ற உயர்வு நிலைக்காக வழியமைத்துக் காட்டினார்கள்.

ஒலி கொண்டு சேமிக்கப்பட்ட அமில உணர்வு எண்ண நிலைக்கொப்ப அதனதன் அணு வளர்ந்து… அந்த அணுவிற்குகந்த அமில முலாமின் கரைசலை ஜீவ சரீரங்கள் பெற்று… வளருகின்ற வளர்ச்சி நிலை ஒவ்வொன்றின் தொடரும் “ஒலி கொண்டு ஒளிரும் நிலை பெற்றது தான்…!”

அந்தந்தச் சரீரக்கூறின் அமிலச் சேர்க்கைக்கு ஒப்பத்தான் ஒலித் தன்மை ஒலிக்கின்றது.

கழுதை கத்தும் தருணத்தில்… அதனுடைய உணர்வின் சந்தோஷ மிகுதி உந்தும் வேளையில் அதன் கத்தும் ஒலியானது ஜீவ உணர்வுடன் தான் வெளிப்படுகிறது. அதை நாம் கேட்கும் பொழுது
1.அதனுடைய (சந்தோஷ) இனிமை உணர்வுக்கொப்ப இனிமை பெற்று
2.இனிய நற்காரியங்கள் நடைபெறுவதை உணர்த்தியது
3.நம் முன்னோர் காலத்திலிருந்தே வழி வழியாக வந்தது தான்.

ஒலிக்கும் ஒலியைக் கொண்டு… அவ்வொலியை நாம் ஈர்க்கும் நிலைக்கொப்ப…
1.நம் எண்ணத்தின் உணர்வு எடுக்கும் அலைத் தொடரைக் கொண்டு
2.மனித வாழ்க்கையில் செயல் கொள்ளகூடிய செயல் முறை உந்தல் நடைபெறுகின்றது என்று தெளிவாக்கினார்கள் முன்னோர்கள்…!

இன்று நாம் எல்லாவற்றையுமே பார்த்தாலும் நல்லதை நுகர்கின்றோமா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நாம் பிறருடைய கஷ்டங்களைப் பார்த்து விட்டால் அது நமக்குள் மாறி கணங்களுக்கு அதிபதியாகி விட்டால் தீய வினைகளே நமக்குள் உருவாகின்றது.

ஏனென்றால் நாம் வாழ்க்கையில் எத்தனையோ கசந்த நிலைகளைப் பார்க்க நேருகின்றது, கேட்க நேருகின்றது, நுகர நேருகின்றது. அதைத்தான் அங்கே “வேம்பாக…” வைத்துக் காட்டுகின்றார்கள்.

அதே சமயத்தில் கசந்த நிலைகள் வந்தாலும் அதைத் துடைப்பதற்காக விநாயகருக்கு அந்தப் பக்கம் அரசை வைத்தது. “அரசு…” என்றால் துருவ நட்சத்திரம்

இந்தச் சூரியக் குடும்பத்திற்குள் தீமைகளை அடக்கி ஆட்சி புரிந்து கொண்டிருப்பது துருவ நட்சத்திரம். அதன் வழிகளில் சென்றவர்கள் சப்தரிஷி மண்டலம்.

துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிப்படும் உணர்வுகளை நாம் நுகர்ந்து நமக்குள் வரும் தீமைகளை அடக்கும் வல்லமை பெறவேண்டும்.

எதன் துணை கொண்டு…?

1.ஆறாவது அறிவால் தான் உருவாக்க முடியும்.
2.இதைத்தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் என்று காவியங்களில் காட்டப்பட்டுள்ளது.

“நாம் நுகரும் உணர்வுகள்…” உயிருடன் இணைக்கும் பொழுது அது உருவாக்கும்.

இல்லை என்றால் சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்த உணர்வுகள் கோபம் வேதனை ஆத்திரம் பயம் இதைப் போன்ற தீமையான குணங்களை நம் உயிர் நமக்குள் உருவாக்கிவிடுகின்றது.

அவை அனைத்தும் கருவாகி விட்டால் உடலுக்குள் அணுவாக்கி விடுகின்றது நம் உயிர்.

இதை மாற்ற வேண்டுமல்லவா…!

தீமையான அணுக்கள் நமக்குள் விளையாமல் தடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

அதிகாலையில் 4 மணிக்கெல்லாம் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வலைகள் பிரபஞ்சத்தில் படர்ந்து வருகின்றது. பிரபஞ்சத்திலிருந்து வரும் அந்த உணர்வுகளைத் துருவப் பகுதி வழியாக நம் பூமி கவர்கின்றது.

நம் பூமிக்குள் வருவதற்கு முன் நம் நினைவாற்றலைப் பெருக்கி விண்ணை நோக்கிச் செலுத்துதல் வேண்டும்.

1.அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும்
2.துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும்
3.துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருளும் பேரொளியும்
4.சப்தரிஷி மண்டலத்திலிருந்து வரும் பேரருளும் பேரொளியும்
5.நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி அதை நாம் கவர்தல் வேண்டும்.

அகஸ்தியன் துருவனான்.. துருவ மகரிஷி ஆனான்.. துருவ நட்சத்திரமானான்…! அதனின்று உருவானவர்கள் அனைத்தும் சப்தரிஷி மண்டலமாக ஆனார்கள்.

ஆகவே நஞ்சினை வென்ற துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து நம் உடலுக்குள் அணுவாக்கி விட்டால் நமக்குள் அறியாது உட்புகுந்த இருளை மாய்த்துவிடும்.

ஓமுக்குள் ஓம் நாம்…! ஒ..ம் ஆக… ஓமை… நாம் வளர்க்க வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

சப்த கோடிகளே….!
சகல நாத விந்துக்களே…!
மணமாகி ஒளியாகி நீராகி நிகழுகின்ற உருக்கோல ஜீவ திட சக்தி தொடர் நிலைகளே…!
“கல்கி நிலை உருவாக உருத்தாருங்கள்…!”

ஒலி கொண்டு ஒளி பெற்று… ஒலிக்கின்ற “ஓ…ம்” என்ற இப்பூமியின் நாத சுழற்சியில்… ஓ…ம்ம்ம்ம்… என்ற நாதத்தில் தான் நம் பூமி ஜெனித்து ஓடிக் கொண்டுள்ளது.

பூமியின் நாதத்தில் வளர்கின்ற பல கோடி நாதத் தொடர்பால் ஒலி கொண்டு ஒளி பெற்ற இச்சரீர (நம் உடல்) கோள நாதமாக
1.ஓமுக்குள் ஒமாக… நாதத்திலிருந்து நாதமாக
2.நம் நாத ஒலி சுழற்சியில் ஓம் என்ற கோளமாக
3.பிறிதொரு கோளத்தை உருவாக்கும் நாத விந்து வளர்ச்சியை நாம் பெற வேண்டும். (அது தான் மண்டலப் படைப்பு)

அதைப் பெற்றோமானால் ஓ…ம் என்ற நாதத்துடன் உருளுகின்ற உலகைப் போல் இம்மனித சரீர பிம்பத்தில் ஒலி கொண்டு ஒளி பாய்ச்சி சுவாச நாதம் வளர்க்கும் விந்துவின் இந்திரிய வலுவைக் கொண்டு உடலை இயக்கும் ஆத்மாவின் ஈர்ப்பு வட்டத்தில் ஜோதி நிலை (ஓளி நிலை) அடையலாம்.

சூரியன் தன் ஒளியின் நாத சுழற்சியைக் கொண்டு சூரிய வட்டத்தில் உள்ள பல கோள்களுக்கும் “ஒளி தந்து…” ஒலி பெற்று… தன் சுழற்சியின் கூட்டமைப்பின் சக்தியுடன் ஒன்றித் தானும் வளர்கின்றது.

அதே போல் நம் பூமியும் ஓ…ம் என்ற நாதத்துடன் “ஒளி பெற்று” ஒளியாக்கிச் சுழலும் தொடர்பைப் போன்று தான் மனித சரீரம் பல கோடி ஒலித் தொடர்புடன் ஒளி பெற்றுள்ளது.

அவ்வாறு உருவான இந்த ஆத்மாவிற்கு வலு கூட்டிக் கொள்ள சூரியனின் நிலையை ஒத்த குண சமைப்பைப் போன்று சரீர உணர்வின் எண்ண சமைப்பு பிறிதொரு ஆத்மாவின் மேல் “ஒளி பாய்ச்சி” ஒலி பெற்று வலுக் கூட்ட வேண்டும்.

“ஒளி பாய்ச்சி” என்பது என்ன…?

இந்தப் பூமியின் சுழற்சியில் திடம் பெற்ற பல கோடிச் சரீரங்களும் ஒன்றை ஒத்து ஒன்று இல்லை. ஒருந்தாலும்… ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சக்தி நிலை “உயர்வு” கொண்டு இயங்குகிறது.

அவ்வாறு இயங்கக்கூடிய ஒலி… ஒளி… ஞானம்… செயல் திறன்… பொருந்திய சரீர உணர்வு கொண்ட எண்ண உணர்வுடன் தான் நாம் மனிதர்கள் செயல் கொள்கிறோம்.

சரீரத் தொடர்புடன் நம்முடைய உணர்வின் எண்ணம் செலுத்தும் வழிதனில்…
1.ஒருவரை நாம் பார்க்கும்… ஒளி பாய்ச்சும் நிலையிலேயே…
2.விழி படமெடுத்து…
3.நாசி சுவாசம் எடுத்து
4.ஒளியின் ஒலியாக நாத விந்துக்கள் உடலின் இந்திரிய அணு வளர்ப்பாக வளர்ந்து விடுகிறது.

இப்படி… “ஒளி பாய்ச்சி” ஒலி பெறும் ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் சரீர சமைப்பு சுழற்சி சுழன்று கொண்டேயுள்ள இத்தொடரில்
1.நம்முடைய உணர்வின் எண்ணத்தைப் பிறிதொரு ஈர்ப்பில் சிக்காமல்
2.நம் ஆன்ம வளர்ப்பு நிலையின் வலுத்தன்மை கொண்டு
3.ஞான குண ஒளி பாய்ச்சும் தன்மையினால்
4.எந்த உயர்ந்த எண்ணத்தைக் கொண்டு பிறிதொருவரின் மேல் நாம் ஒளி பாய்ச்சுகின்றோமோ
5.அதன் தொடர் காந்த மின் அலை ஒளி ஈர்ப்புடன்
6.இச்சரீர ஈர்ப்பிற்கு சுவாச ஒலி எடுத்து வித்துக்கள் வளர்ந்து
7.”ஆத்மாவின் வலு” ஒலி “ஒளியாகப் பதிவு கொள்கின்றது…”

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

ஆட்டை வெட்டிக் கருப்பணச் சாமிக்குக் கொடுத்து விட்டால் நம்மைக் காப்பாற்றுவான் என்ற நிலையில் ஆட்டை வெட்டி ஆட்டின் உயிரை மனிதனாக ஆக்குகின்றோம்.

ஆட்டின் கறியை ருசித்துச் சாப்பிட்டு மனிதனாக இருக்கும் நாம் அடுத்து ஆடாகப் பிறக்கின்றோம். இதைப் போன்ற அசுர உணர்வின் தன்மையைத்தான் நமக்குள் வளர்க்க முடிகின்றது.

இன்றைய உலகில் விஞ்ஞான அறிவு கொண்டிருந்தாலும் மன பேதம் இன பேதம் மொழி பேதங்களை உருவாக்கிவிட்டார்கள்.

இன்று மனிதன் வெளியிலே செல்ல முடியவில்லை. இன்று ஒவ்வொரு நிமிடமும் மரண பயம் கொண்டு வாழ்கின்றோம். ஆகவே, தீமையான உணர்வுகளை நாம் எண்ணப்படும் பொழுது மனிதனல்லாத உருவை உருவாக்கிவிடும் நம் உயிர்.

பாம்பு எப்படித் அதனைத் தாக்கிவிடுவோம் என்று அது முந்தித் தாக்குகின்றதோ அது போன்றே
1.“சாந்த மனம் கொண்டவன் கூட…”
2.அவனுக்குமுன் எதிரிகள் வந்தார்கள் என்றால்
3.அவர்களுக்கு முந்தி இவன் தாக்கும் நிலைக்கு வருகின்றான்.

தீமைச் செய்வோனைக் காட்டிலும் தீமையற்ற நிலையில் இருப்பவர் “சாது மிரண்டால் காடு கொள்ளாது..,” என்ற நிலைகளில் சாந்த உணர்வு கொண்டோர் இத்தகையை தீமைகளைக் கண்டால் வேகமாக எதிர்த்துத் தாக்கும் நிலைக்கு வந்துவிடுகின்றார்கள்.

ஆக மனிதன் என்ற உருவையே இன்று அழித்திடும் நிலை வந்துவிட்டது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள வேண்டும். மீண்டிடும் நிலைக்குத் தான் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி நாம் அந்த அருள் ஞானிகள் கண்ட உணர்வினை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

விண்வெளியில் இன்றும் சஞ்சரித்துக் கொண்டிருக்கும்…
1.சப்தரிஷி மண்டலங்கள் துருவ நட்சத்திரம் அவைகளிலிருந்து வெளிப்படும் உணர்வின் தன்மையை
2.உங்களுடைய நினைவினை அங்கே செலுத்தச் செய்து அந்த உணர்வினை ஈர்க்கும்படிச் செய்கின்றோம்.

இன்று நாட்டில் விஞ்ஞானத் தன்மை கொண்டு காற்றில் கலந்து வரும் நஞ்சின் தன்மையிலிருந்து வராக அவதாரத்தில் காட்டியபடி தீமைககள நீக்கி நாற்றத்தைப் பிளந்து நல்லதை நுகர்ந்ததோ அதைப் போன்று இந்தக் காற்று மண்டலத்தில் மிதந்து கொண்டிருக்கும் அருள் மகரிஷிகளின் உணர்வைப் பதிவாக்கி அந்த எண்ணத்தை வலுவாக்கி அருள் உணர்வை நுகர்வோம்.

மெய்ஞானிகளின் அருள் ஒளியைப் பெறுவோம். அதன் தொடர்பு கொண்டு நம் முன்னோர்கள் இன்னொரு உடலுக்குள் சென்றிருந்தாலும் அவர்கள் வெளி வரும் பொழுது இந்த உணர்வின் துணை கொண்டு அவர்களையும் நாம் விண் செலுத்துவோம்.

ஏனென்றால் இதற்கு முன் நாம் நமது முன்னோர்களை விண் செலுத்தத் தவறிவிட்டோம். அவர்கள் இந்தக் காற்று மண்டலத்தில் தான் சுழன்று கொண்டுள்ளார்கள்.

நம் முன்னோர்களின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும்.

அதன் துணை கொண்டு அந்த அருள் ஒளிகளை நமக்குள் பாய்ச்ச வேண்டும். நம்மை அறியாது வரும் இருளை நீக்க வேண்டும் என்று நாம் தியானிக்க வேண்டும்.

எங்கோ இருக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை… நினைத்தவுடன் உங்களுக்குக் கிடைக்கும்படி செய்கின்றோம்

 

அன்புடன் பண்புடன் மற்றவர்களுக்கு உதவி செய்து நாம் வாழக் கூடியவர்களாக இருந்தாலும் அவர்கள் பட்ட வேதனை நமக்குள்ளும் பதிவாகிறது.

அந்த வேதனையை உருவாக்கும் உணர்வுகள் நமக்குள் வலுப் பெற்று விட்டால்
1.அதனின் உணர்வு நம் ஆன்மாவாக மாறும் பொழுது
2.அதிலிருந்து இழுத்து நாம் சுவாசிக்கும் போது
3.அந்த வேதனையான எண்ணங்கள் தான் மீண்டும் மீண்டும் வரும்.

இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் விடுபட இங்கே உபதேசத்தின் வாயிலாகக் காட்டும் வழிகளைச் சீராகக் கடைப்பிடித்து வாருங்கள். ஞானிகளின் உணர்வுகளை ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்,
1.சந்தர்ப்பத்தில் இது உங்கள் நினைவுக்கு வரும்
2.உங்களைக் காக்க உங்கள் எண்ணம் உதவும்.

பள்ளிக்கூடத்திற்குச் சென்று முதலில் படிக்கச் செல்லும் பொழுது எல்லாவற்றையும் உடனடியாக நாம் தெரிந்து கொள்வதில்லை. திரும்பத் திரும்பப் படிக்கும்போதுதான் அந்த நினைவாற்றல் நமக்குள் பெருகுகிறது.

அது போல் தான் இங்கே உபதேச வாயிலாகக் கொடுக்கும் அருள் உரைகளை…
1.ஒரு தடவையோ அல்லது இரண்டு தடவையோ பதிவு செய்து விட்டாலும்
2.அதைப் பெற வேண்டும் என்ற எண்ணம் வலுவாக இருந்தால் தான்
3.திரும்பத் திரும்ப அதை மனதில் பதியச் செய்வோம்… அதை வளர்க்கவும் செய்வோம்.
4.திட்டியவர்களை மீண்டும்…மீண்டும்… மீண்டும்…மீண்டும் எண்ணுவது போல்…!

ஆனால் நாம் எல்லாம் ஆரம்பத்தில் பக்தியிலே ஆலயத்திற்குச் சென்று… விநாயகருக்கு அருகம்புல்லை வைத்துச் சூட தீபாராதனை காட்டி… தேங்காய் பழம் வைத்துக் கும்பிட்டுப் பழகியவர்கள்.

இருந்தாலும்…
1.எங்கோ இருக்கக்கூடிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை
2.ஒரு நிமிடத்திற்குள் எண்ணி எடுக்கும் சக்தியை… அந்த ஆற்றலை இப்பொழுது பெறுகின்றோம்.

இதைச் சொல்லும் போது முதலிலே சிறிது கடினமாக தோன்றும். ஆனால் உடனே பெறக்கூடிய தகுதிக்குத் தான் இந்த உபதேசமே கொடுக்கின்றோம். ஞான வித்தாக உங்களுக்குள் கொடுக்கின்றோம்.

அதை நீங்கள் வளர்த்துக் கொள்வதில் தான் உங்களுடைய வளர்ச்சி இருக்கின்றது. அதற்குண்டான நீரான அருள் சக்தியை எடுக்கும்போது தான் உங்களுக்குள் அந்த ஞான வித்து ஓங்கி வளரும்.

யாம் (ஞானகுரு) சொன்ன முறைப்படி காலையில் நான்கு மணிக்கெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் சக்திகளை எடுத்துக் கொள்ளலாம்.
1.அந்த நேரத்தில் வேறு ஒன்றும் செய்ய வேண்டாம்.
2.எழுத்து உட்கார்வதற்குச் சோம்பேறித்தனமாக இருந்தாலும் கூட
3.உங்கள் எண்ணத்தை நேரடியாகத் துருவ நட்சத்திரத்திற்கு அனுப்புங்கள்.
4.துருவ நட்சத்திரத்திலிருந்து ஒளிக் கதிராக வருவதைத் தியானித்து எடுத்துக் கொள்ளலாம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி இந்த உணர்வை உங்கள் உடலுக்குள் வலிமையாக்குங்கள்.

எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை விண்ணில் செலுத்தி… உடல் முழுவதும் படர வேண்டும் என்ற மீண்டும் உடலுக்குள் செலுத்துங்கள். உள்ளுக்குள் செலுத்தச் செலுத்த தீமைகள் எல்லாம் கரைந்து விடும்

உடல் அழுக்கைப் போக்கத் தினசரி தண்ணீரை விட்டுக் குளிக்கின்றீர்களோ அதை போல் அருள் ஞானிகளின் உணர்வை உங்கள் உடலுக்குள் சேர்த்து உங்கள் ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும்.

குறிக்கோளுடன் தான் தியானம் செய்ய வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

இன்றைய மனித வாழ்க்கையில் பக்தி வழியில் நந்நெறியில் வாழ வேண்டும் என்று எண்ணி நடந்தாலும் நம் வாழ்க்கை நாம் எண்ணியபடி அமைவதில்லை.
1.அதற்கு ஊழ்வினை காரணம் என்று சொல்லப்படுகின்றது.
2,அதாவது விதி வழித்தான் எல்லாமே நடக்கும்…! என நம்புகின்றோம்.

துன்பங்களிலிருந்து மீள தெய்வ வழிபாடு முதலியன செய்கின்றோம். இருந்தாலும் முழுப் பயன் எவருக்கும் கிட்டுவதில்லை.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்களும் மகரிஷிகளும் மனிதன் மெய் ஞானம் கொண்டு “விதியை மதியால் வெல்லலாம்” என்று சொல்லியுள்ளார்கள்.

“அந்த வழியில் மனித இனம் இது வரையிலும் கவனம் செலுத்தவில்லை…!” ஆனால்…
1.இன்றைய நிலை முழுக்க முழுக்க விஞ்ஞானத்தைப் போற்றும் நிலைக்கும்
2.விGnaaGnaagaaaaஞ்ஞான வாழ்க்கைக்கு நம்மை அடிமையாக்கும் நிலைக்கும் வந்துள்ளோம்.

ஏனென்றால் விஞ்ஞான முன்னேற்ற வசதிகள் எல்லாம் இந்த உடல் வாழ்க்கைக்குத் தான் பயன்படும். இன்னும் சொல்லப் போனால் இன்று இந்த விஞ்ஞானத்தின் அபரிதமான வளர்ச்சி காரணமாக “சகல ஜீவராசிகளும் மடிந்து போகும் தருணம்” வந்து விட்டது. உலகமே நடுங்கும் நிலைக்கு வந்து விட்டது.

இங்கே பாரத புண்ணிய பூமியில் ஞானிகள் சொன்னதெல்லாம் மறந்து விட்டோம். ஆனால் விஞ்ஞானியால் எதைச் செய்ய முடியுமோ அதை விட அதி அற்புத சக்தி வாய்ந்த எந்தச் செயலையும் மெய் ஞானிகளால் செய்ய முடியும்… அடைய முடியும்.

இப்படி இந்த உலகமே கேள்விக்குறியில் நிற்கும் இத்தருணத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன…?

மாமகரிஷிகள் மனித இனம் உய்ய மெய் வழியைக் காட்டுகின்றார்கள். அதன் வழியில் நடந்திட வேண்டும்.

1.முதலில் தாய் தந்தையரை தெய்வமாக வணங்கி
2.உயிரான ஈஸ்வரனைப் புருவ மத்தியில் எண்ணி வணங்கி
3.உணர்வுடன் கூடிய தியானத்தில் மகரிஷிகளை எண்ணி
4.அனு தினமும் தியானிப்பதன் மூலம் நம் உடலில் உயர் காந்த மின் நுண் அலைகள் பதிவாகும்
5.அதன் வளர்ச்சியைப் பொருத்து நம் ஊழ்வினையான தீய வினைகளைச் சக்தி இழக்கச் செய்ய முடியும்.

முருக குணங்களான அன்பு… பரிவு… பாசம்… வீரம்… ஞானம்… சாந்தம்.. மூலம் உயரிய சக்திகளைப் பெற்று… அதன் மூலம் நம் உயிராத்மாவிற்கு வலுக் கூட்டி… நாம் எண்ணியபடி வாழ்வை அமைத்துக் கொள்ள “மகரிஷிகள் தியானம்” ஒன்றே வழி.

ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரும் தியானிப்பதன் மூலம்
1.நம்மை விட மேம்பட்ட சக்திகளான
2.மாமகரிஷிகளின் நேரடித் தொடர்பு கிடைக்கும்
3.அவர்கள் துணையும் கிடைக்கும்.

ஆனால் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய சூட்சமம் எந்தக் குறிக்கோளுடன் தியானம் செய்வது என்பது தான். நம் ஆத்மாவுக்கு வலுக்கூட்டிப் பிறவா நிலை என்னும் “தெய்வ சக்தி” நிலையைப் பெறுவது தான் நம் குறிகோள்.

அதற்கு நம் எண்ணம் பரிசுத்தமாக வேண்டும். தியானத்தின் மூலம் எண்ணத்தைப் பரிசுத்தப்படுத்த முடியும். இத்தகைய முறைகளைக் கடைப்பிடிப்பவர்களுக்கு மகரிஷிகளின் துணை எளிதில் கிடைக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

இந்த உலகில் நஞ்சினை வென்ற அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை உணர்த்துவதற்குத்தான் அதை நினைவாக்குவதற்காக விநாயகருக்கு அருகில் அரச மரத்தை வைத்தார்கள்.

நம் வாழ்க்கையில் எப்பொழுது தீமைகளைப் பார்க்கின்றோமோ உடனே நாம் வானை நோக்கி அந்தத் துருவ நட்சத்திரத்தின்பால் நினைவினைச் செலுத்த வேண்டும்.

1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நம் உடலுக்குள் உள் செலுத்தினால்
2.அது அரசாக இருந்து அதன் கீழ் உள்ளதை அடக்கும் வல்லமையாக
3.தீமைகளை வென்றிடும் சக்தியாக நமக்குள் உருப்பெறும்.

அதைத்தான் “அங்குசபாசவா…” என்று விநயகர் தத்துவத்தில் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

ஏனென்றால், குருநாதர் காட்டிய அருள் வழியில் ஆழமாகவும் அழுத்தமாகவும் அந்த ஞானிகளின் அருள் வித்துக்களை உங்களுக்குள் இந்த உபதேசத்தின் வாயிலாகப் பதியச் செய்கின்றோம்.

இதை எவரொருவர் கூர்மையாக உற்று நோக்கிப் பதிவு செய்து கொள்கின்றார்களோ அவர் உடலில் இது பெருகும். அதன் நினைவு கொண்டு நீங்கள் தீமைகளை அகற்றும் வல்லமை பெறுகின்றீர்கள்.

1.யாம் சொல்வது “ஒன்றும் புரியவில்லை…” என்று எண்ணினால்
2.புரியவில்லை என்ற உணர்வைக் கலக்கப்படும் பொழுது புரியாத நிலைதான் ஆகும்.

ஒரு கம்ப்யூட்டரை இயக்கப்படும் பொழுது எலெக்ட்ரிக்கை வைத்து… எலெக்ட்ரானிக்காக… மாற்றுகின்றார்கள்.

ஒரு தகட்டில் அல்லது நாடாவில் முலாமைப் பூசி உயர் அழுத்தத்தில் இணைக்கப்படும் பொழுது இந்த உணர்வின் ஒலிகள் அதிலுள்ள அதிர்வுகள் எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றது.

அதன் ஒலி அதிர்வுகளை இந்த எலெக்ட்ரிக் தன்னுடைய ஒலிப்பேழைகளில் (MEMORY CONTROL) மாற்றியமைத்து உள்முகமாகக் கூட்டுகின்றது.

ஆகவே இதிலே இடைமறித்து ஏதாவது தவறுதலாக (COMMAND) ஒலி ஓசை மாறிவிட்டால் உடனே அதன் அழுத்தங்கள் மாறிவிடுகின்றது.

ஏனென்றால் ஒரு இயந்திரத்தை இயக்க வேண்டும் என்றால் அதைத் தடைப்படுத்தவில்லை. இடைமறித்து இது தாக்கப்படும் பொழுது அது குறித்த நேரத்தில் (ALARM CONTROL) தாக்கி நிறுத்திவிடும்.

இப்படித்தான்…
1.இயந்திரங்களை இயக்குவதும்
2.விமானங்களை ஓட்டுவதும்
3.இராக்கெட்டுகளை இயக்குவதும்
4.எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்று பேழைகளில் வைத்து அதன் செயலாக்கங்கள் மூலம் இயக்குகின்றார்கள்.

பின் அதனில் ஒலி அதிர்வின் கதிர்களை இயக்கப்படும் பொழுது அந்த இராக்கெட்டையே இயக்கச் செய்கின்றது.

அதே சமயத்தில் இராக்கெட்டில் குறைகள் இருந்தாலும் இந்த ஒலி அதிர்வுகளை ஏவி அது கட்டளையிடப்பட்டு அதைச் சீராக்குகின்றான் மனிதன். ஆக, விஞ்ஞான அறிவு கொண்டு எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் முறையில் இதை இவ்வாறு இயக்கச் செய்கின்றார்கள்.

இன்று விஞ்ஞான அறிவில் வளர்ந்த நாம் இந்த விஞ்ஞானத்தை நம்புகின்றோம். ஆனால்… மெய்ஞானத்தை இழந்துவிட்டோம்.

மெய்ஞானத்தின் மூலக் கூறுகளை நாம் அறிந்து கொண்டால் மனிதன் பிறவியில்லா நிலை அடையவும்… அழியா ஒளிச் சரீரம் பெறவும் இது உதவும்.

ஆனால் அதற்கு மாறாக மனித ஆசையின் உணர்வுகளை ஒவ்வொரு நிலைகளிலும் வளர்க்கப்படும் பொழுது இந்த உடலையே அழிக்கும் நிலையாகிவிடுகின்றது. உடல் அழிந்து விட்டால் இதிலே சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப அடுத்த உடலை மாற்றிவிடும் நம் உயிர்.

ஆகவே அந்த மெய்ஞானியின் உணர்வை நமக்குள் அவ்வப்போது சேர்த்து அதை அதிகமாக வளர்த்து விட்டால் இந்த உடலை விட்டு அகன்றபின் அந்த மெய் ஞானியின் உணர்வுடன் நம்மை ஒன்றச் செய்யும்.

ஆறாவது அறிவினை ஏழாவது நிலையாக ஒளியின் நிலை பெறச் செய்யும்.

கண்களை மூடி இருந்தாலும் சரி… அல்லது திறந்திருந்தாலும் சரி… நம் நினைவுகள் துருவ நட்சத்திரத்தின் பால் செல்ல வேண்டும்

 

காலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் எப்பொழுது விழிப்பு வருகிறதோ அப்போதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று குறைந்தபட்சம் பத்து நிமிடத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரையாவது எடுக்க வேண்டும்.
1.கண் விழித்து இருந்தாலும் சரி… கண்களை மூடி இருந்தாலும் சரி…
2.கண்ணின் நினைவலைகள் புருவ மத்தியில் வரவேண்டும் (முக்கியம்)
3.உயிர் வழி தான் நாம் உடலுக்குள் அனுப்ப வேண்டும்.

காரணம்… நாம் வெளியிலே பார்த்துணர்ந்த… கேட்டுணர்ந்த… உணர்வுகள் அனைத்தும் ஆன்மாவாக இருக்கின்றது… நல்ல எண்ணங்களை எண்ண விடாது. ஏனென்றால் நாம் எத்தனை பேருடைய தீமைகளைப் பார்த்தோமோ அதற்கெல்லாம் வலு அதிகம்.

பாலிலே பாதாமைப் போட்டாலும் மற்ற பொருள்களைப் போட்டாலும்… சிறிதளவு விஷத்தைப் போட்டு விட்டால் பாதாமிற்கும் சக்தி இல்லை… பாலுக்கும் சக்தி இல்லை.

அதே போல் அதில் சிறிதளவு காரத்தைப் போட்டுவிட்டால் அதனுடைய சுவைகளை அறிய முடியாது. காரத்தின் சுவை தான் முன்னணியில் இருக்கும். உப்பின் தன்மை இணைத்து விட்டால் அந்த உப்பின் தன்மை முன்னணியில் வந்து விடும்.

இதைப் போன்று தான் நமது வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரையிலும் நாம் பிறரிடம் கோபப்பட்டது ஆத்திரப்பட்டது வேதனைப்பட்டது சலிப்புப்பட்டது எல்லாமே நம் ஆன்மாவில் வந்துவிடுகிறது.

அதையெல்லாம் மாற்றி அமைக்க அதிகாலையில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்ற உணர்வினை நம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் கூட்டிக் கொள்ள வேண்டும். அந்தச் சக்திகள் கூடிய பின் உடலிலிருந்து வரக்கூடிய மணம் நம் கேட்டறிந்த தீமைகளை ஆன்மாவிலிருந்து அப்புறப்படுத்தும் நிலையாக வரும்.

1.காரணம் மகரிஷிகள் அருள் சக்தியை உடலுக்குள் கூட்டும் போது
2.ஆன்மாவில் இருக்கும் தீமை செய்யும் உணர்வுகளின் பிடிப்பு அற்றுப் போய்விடும்… ஆன்மாவிலே நிற்காது.
3.அப்போது கஷ்டமான எண்ணங்கள் நமக்குள் வராது

இதை நாம் பழகிக் கொண்டால் மிகவும் நல்லது.

வாழ்க்கையில் பிறருடைய கஷ்டங்களைக் கேட்கப்படும் போதோ அல்லது விபத்தைப் பற்றி அறிய நேரும் பொழுதோ வேதனைப்பட்டுக் கொண்டிருப்போரை அவர்களைக் கண் கொண்டு பார்க்கும் பொழுதோ அது எல்லாம் பதிவாகி விடுகிறது.

அது எல்லாம் ஒரு வித்தாக மாறிவிடுகிறது. மீண்டும் அதை நுகரப்படும் பொழுது அணுவாக மாறுகின்றது. உடலிலே உருவான அந்த அணுக்கள் தன் இரைக்காக அதே (விபத்து வேதனை) உணர்வலைகளைத் தனக்குள் கவர்ந்து தன் இனத்தை வளர்க்கத் தொடங்குகிறது.

அது வளரத் தொடங்கி விட்டால் நம் ஆன்மாவாக மாறுகின்றது
1.எத்தகைய உணர்வாக இருந்தாலும் அது நம் உயிரிலே படும் போது தான் நம்மை இயக்கும்.
2.நல்லவனாக்குவதும்… கெட்டவனாக்குவதும்… அல்லது நோயாக மாறுவதும் இது போன்று தான்.

இதைப் போன்ற நிலைகளை நாம் தூய்மைப்படுத்த அதிகாலையில் விழித்தவுடனே துருவ நட்சத்திரத்தின் சக்தியை எண்ணி எடுக்க வேண்டும்.

1.உட்கார்ந்து தான் இதைச் செயல்படுத்த வேண்டும் என்று இல்லை
2.எழுந்து உட்கார வசதியாக உள்ளவர்கள் அப்படிச் செய்யலாம்.
3.படுக்கையில் விழிப்பு வந்த பின்… நேராகத் துருவ நட்சத்திரத்தை எண்ணி
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று
5.புருவ மத்தியில் எண்ணி உடலுக்குள் உள்முகமாக உடல் முழுமைக்கும் செலுத்துங்கள்.
6.உள்முகமாகச் செலுத்தச் செலுத்த ஆன்மாவில் இருக்கும் தீமைகளை அதை நீக்கிக் கொண்டே இருக்கும்.

தினசரி நீரை ஊற்றி உடல் அழுக்கை எப்படிப் போக்குகின்றோமோ அதைப் போல நம் ஆன்மாவில் பட்ட தீமைகளை நீக்க அந்த மகரிஷியின் அருள் சக்தியை நம் உடலுக்குள் அவ்வப்போது செலுத்த வேண்டும்.

அது வலுப் பெற்றால் தான்… உடலுக்குள் வலுவானால் தான்… தீமைகளை நீக்க முடியும். எப்படியும் உங்களுக்குள் அதை வலுவாக்க வேண்டும் என்பதற்குத் தான் மீண்டும் மீண்டும் பதிவு செய்கின்றேன் (ஞானகுரு).

நம்மை அறியாமலே “செயற்கை அறிவு” கொண்ட மனிதர்களாக மாறிக் கொண்டிருக்கின்றோம் – ஈஸ்வரபட்டர்

 

இக்கலியின் கடைசிக் காலத்தில் மனித ஆத்மா உயரும் ஞான போதனை வழித் தொடர் அற்று மனித எண்ணங்களும் ஆவி உலகில் உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்களும் செயற்கை விஞ்ஞான ஒலி ஈர்ப்பில் உணர்வைச் செலுத்தியே இன்று இயங்கி வருகின்றது.

ஆகையினால் இன்றைய மனித உணர்வின் சுவாசமே இயந்திர கதியின் ஒளி ஈர்ப்பில் உணர்வெடுக்கும் எண்ண சுவாச அணுக் கதிர்களாகத் தான் சுவாசத்திலிருந்து வெளி வந்து கொண்டுள்ளது.

இப்படி…
1.அன்றைய இயற்கைத் தாவர நறுமண மூலிகைகளின் தொடர்பற்ற நிலையில்
2.இயந்திர ஓட்டச் செயற்கை மனித நிலையில் வெளிப்படும் சுவாச அலையின் அணுக் கதிர்களிலிருந்து
3.அதிலிருந்து வளரவல்ல உயிரணுக்களே கலி மனிதன் வெளிப்படுத்தும் அலைக்குகந்த
4.புதிய புதிய குறுகிய எண்ண ஆசைகள் கொண்ட ஞானச் செயலற்ற ஜீவ ஜெந்துக்கள் தான்
5.தற்பொழுது வளரும் ஜீவ அணு உயிர் வளர்ப்புகளும் தாவர இன வளர்ப்புகளும்…!

இந்தத் தொடரிலேயே செல்லும் நிலை தான் இன்றைய காலமும் இனி வரும் காலமும்…!

பல நூறாண்டுகளுக்கு முன்… மனித உருவங்களும் மனிதனைக் காட்டிலும் மிருக உருவங்களும் இன்றுள்ள நிலையைக் காட்டிலும் உருவத்தில் வளர்ந்து வண்ணமும் பொலிவும் மிக்க ஒளியுடன் மிளிர்ந்தன.

இராமாயணக் காவியத்தில் வான்மீகியார் எழுதிய குணத்தின் அடிப்படைக் கதாபாத்திரமே அந்தந்தக் குணத்திற்கொப்ப எண்ணத்தில் குறுகியவருக்குக் “கூனி” என்றும் “சகுனி” என்றும் (வியாசர்) காட்டினார்கள்.

எண்ணத்தில் உயர்ந்தவருக்கு அவரின் உருவ அழகை இராமனாகச் சித்தரித்துக் காட்டினார் வான்மீகியார்.

ஆனால் இன்றைய கலி ஓட்டத்தில் “இயந்திரத் தொடர்பு கொண்ட… செயற்கை ஒலி ஈர்ப்பில்…” வாழக்கூடிய மனித எண்ணங்களின் உணர்வுகள் தான் அதிகமாகச் சுழன்று கொண்டுள்ளது.

இதன் தொடர்பில் செலுத்தப்படும் வழித் தொடர் வளர்ச்சியின் வழி முறையில் எந்தச் செயற்கை ஒலியை அதிகமாகக் கேட்டு அவ் ஒலி ஈர்ப்பின் சுழற்சியில் சுழல் கொண்டு மீண்டும் பிறப்பிற்கு வரும் பொழுது…
1.ஞானத்தின் வளர்ச்சி கொண்ட மக்கள் பிறப்பதைக் காட்டிலும்
2.தன் ஞானமற்று விஞ்ஞான வேட்கை வழி தந்த உணர்வு ஈர்ப்பில் கர்ப்பம் கொள்ளும் சிசு நிலையிலேயே
3.விஞ்ஞான செயற்கை நிலைக்கொத்த கலி மக்கள் தான்
4.இனி வரும் காலப் பிறப்புகளும் கலி மாற்றப் பிறப்புத் தொடர்புகளும்.

அன்றைய காலங்களில் “ஆயகலைகள் அறுபத்தி நான்கு” என்று பிறக்கும் மக்களுக்குப் பயில்விக்கும் பயிற்சி ஞான போதனைகள் இருந்தது.

இன்றைய செயற்கைப் போதனையோ… தன்னைத் தான் நம்பாமல் செயற்கைப் பிடியில் நம்பிக்கை கொண்டு அந்தச் சுழற்சி ஓட்ட கதியுடன் மனிதனின் எண்ணம் சென்று கொண்டுள்ளது.

இதிலே சிக்குண்டு அந்த ஏக்கமுடனே இன்பத்தின் எல்லை எது…? என்று அறியாதபடி… வாழ்க்கையின் வேட்கையில் சுழன்றிடும் தன்மையை மாற்றி
1.ஆத்ம பலத்தின் உயர்வைக் கொண்டு
2.ஜீவ மனித எண்ண உணர்வின் ஞானம் கொண்டு அடையும் இன்ப நிலையின் வழித் தொடரை
3.இங்கே உபதேச போதனையாக உயரும் வழியைக் காட்டி
4.ஒவ்வொரு ஆத்மாவும் மனிதனுக்கடுத்த நிலையான “தெய்வ நிலை” பெறவல்ல வழித் தொடருக்கு வழி காட்டுகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

அகஸ்தியன் தன் தாயின் கருவிலே சிசுவாக இருக்கும்போது பல பச்சிலைகளின் வாசனைகளையும் மூலிகைகளின் மணங்களையும் அவன் நுகர்ந்ததால் நஞ்சினை வென்றிடும் சக்தி பெற்றான்.

அவ்வாறு அவன் நுகர்ந்தறிந்த உணர்வின் அணுவாக விளைய வைத்த உணர்வலைகள் இந்தப் பூமியிலே உண்டு. அதை நாம் பெற முடியும்.

அகஸ்தியன் தாய் கருவிலிருக்கும் பொழுது அவனுக்குள் விளைந்த சக்திகளை நம் உடலில் வளரும் அணுக்கருக்களின் கருவில் அருள் ஞானத்தை இப்பொழுது உருவாக்குவோம்.

அகஸ்தியன் பெற்ற மூலிகைகளின் வாசனைகளை எண்ணித் தியானிக்கும் பொழுது எவர் எவருக்குக் கிடைக்கின்றதோ அவர்கள் அருள் ஒளியின் சக்தியைப் பெற்றவர்கள் ஆவார்கள்.

கிடைக்கவில்லை என்றால் விரக்தி அடைய வேண்டாம்.

அகஸ்தியன் பெற்ற மூலிகைகளின் மணங்களைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள். நிச்சயம் அதைப் பெற்று வளர்த்துக் கொள்ள முடியும். அதை உருவாக்கிட முடியும்.

இப்பொழுது யாம் (ஞானகுரு) சொல்லக்கூடியதை எல்லாம் ஏங்கிப் பெற வேண்டும் என்ற அந்த ஈர்ப்புடன் தான் இருத்தல் வேண்டும்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் உயிருடன் தொடர்பு கொண்டு ஏங்கித் தியானியுங்கள்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்
1.அகஸ்தியன் அவன் வாழ்ந்த காலங்களில் அவனிடமிருந்து வெளிப்பட்ட உணர்வுகளை
2.நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
3.அகஸ்தியன் அவன் கருவில் வளரும் பொழுது நுகர்ந்ததும்
4.பிறந்தபின் அவன் நுகர்ந்தறிந்த ஆற்றல்மிக்க சக்திகளும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

இதையே திரும்பத் திரும்ப ஏங்கி அந்த உணர்வுகளை உங்கள் உடலுக்குள் பரப்புங்கள். உங்கள் உடலில் உள்ள அணுக்களின் நிலைகளில் அகஸ்தியன் பெற்ற பச்சிலை மணங்களையும் மூலிகை வாசனைகளையும் பெருக்குங்கள்.

அவன் நுகர்ந்தறிந்த நறுமணங்கள் உங்கள் உடலுக்குள் புகுவதை நீங்கள் அறியலாம்.

இதை நுகரப்படும் பொழுது அந்த நறுமணங்கள் உங்களுக்குக் கிடைக்கும். நஞ்சினை வென்றிடும் ஆனந்த நிலைகளான அந்தச் சக்திகள் தியானிக்கும் பொழுது உங்களுக்குள் இணையும்.

உடலை இயக்கும் நரம்பு மண்டலங்களில் ஏற்படும் சில நுண்ணிய மாற்றங்களும் அதனின் விளைவுகளும்

 

ஆதியிலே உருவான விஷம்…
1.மற்ற விஷமற்றதைத் தாக்கும் போது அது நகர்ந்து ஓடுகிறது.
2.தாக்கும் போது வெப்பமும்… நகர்ந்து ஓடும் போது ஈர்க்கும் காந்தமும் உருவாகிறது.

அந்த உணர்வின் சக்தியால் அது எதைத் தனக்குள் இணைத்ததோ அதை உருவாக்கச் செய்கின்றது. இதற்கெல்லாம் மூலம் ஆதியிலே உருவான விஷம் தான்.

அந்த விஷத்தின் அளவுகோல் எதுவோ அதனின் இயக்கமாக இயக்கும். அதற்குக் காரணப் பெயர் ஆதிசக்தி. ஆகவே ஆதிசக்தி என்பது கடுமையான விஷம்.

ஆரம்பத்திலே ஈர்க்கும் சக்தியாக வந்தது ஆதிலட்சுமி. ஆதியிலே உருவான அந்த வெப்பம் ஆதிபராசக்தி. சர்வத்தையும் உருவாக்கும் வெப்பமாகின்றது.
1.ஒன்று இயக்கும் சக்தி
2.ஒன்று உருவாக்கும் சக்தி
3,ஒன்று கவரும் சக்தி

விஷத்தின் தாக்குதலால் தான் வெப்பம் உருவாகிறது. அதைப் போன்று தான் நாம் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் எதிர்நிலையான உணர்வுகள் மோதலானால் உடலிலே வெப்பமாகிறது.

அடுத்தவர் செய்யும் தவறான உணர்வுகளைக் கூர்மையாக உற்று நோக்கி அதை எடுத்துக் கொண்டால் நமக்குள் கோப உணர்வின் தன்மை அதிகமாகிறது. அவர்கள் செயல்படுத்தும் வேதனை என்ற நஞ்சான உணர்வுகள் நம் மீது மோதுகிறது.

அப்படி மோதும்போது நமக்குள் அந்த உணர்வின் தன்மை கொதிப்பாகி அணுவின் தன்மை நம் உடலிலே பெருக்கம் ஆகின்றது… இரத்தக் கொதிப்பு என்று சொல்வார்கள்.

1.நம் உணர்வை இயக்கும் அந்தக் கொதிகலனான சுடு நீர் உடலுக்குள் சென்று
2.கவன நரம்புகளில் தாக்கப்பட்ட பின் அது தாங்காது வெப்பம் அதிகமாகின்றது.

உதாரணமாக ஒரு குக்கரில் கேஸ் அதிகமாக உருவானால் அந்தப் பாத்திரம் எப்படி வெடிக்கின்றதோ அதைப் போன்றுதான் இந்தக் கொதிகலனாகும் விஷத்தின் அழுத்தத்தின் தன்மைகள் நாம் கவன நரம்புகளிலே ஊடுருவுகிறது.

எந்த உணர்வாக இருந்தாலும் சிறு மூளை வழியாகச் சென்றுதான் நம் உடல் உறுப்புகளை இயக்கும். நரம்புகளுக்குள் அமிலமாக (ACID) மாற்றும் தன்மைகளும் வரும்.

1.எந்தப் பாகத்தின் தன்மையிலே இந்தக் கோபமும் விஷமும் கலந்து அதிகமாகச் செல்கிறதோ…
2.அந்த அழுத்த நிலைகள் அங்கே ஏற்படும் பொழுது அந்த இடம் விரிந்துவிடும்.
3.விரியும் தன்மை வரப்படும் போது மனிதனுக்கு மயக்க நிலை (தலை சுற்றல்) வருகின்றது.

ஆனாலும் மயக்கம் வருவதற்கு முன் சிறிதளவு நினைவு இருக்கும் போது எனக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்ற எண்ணம் வந்தால் வெடித்துவிடும்.

அதே போன்று
1.“மயக்க நிலைகள் வருகிறதே…!” என்ற எண்ணத்தை மீண்டும் அதிகரித்து விட்டாலும்
2.இந்த உணர்வின் தன்மை கொதிப்பாகி சிறு நாளங்கள் வெடித்து இரத்தங்கள் கசிவாகிவிடும்…
3.அடுத்த கணம் மரணம் தான்.

ஏனென்றால் இதை போன்ற உணர்வின் இயக்கங்கள் நம் உடலுக்குள் மோதலாகும் போது போராட்டங்கள் அதிகமாகிக் கொதிகலனாக எப்படி வருகிறது…? என்று ஞானிகள் அன்றே அதைச் சொல்லியுள்ளார்கள்.

சாதாரண மனிதனும் இதை அறிவதற்காக வேண்டி தெய்வச் சிலைகளை உருவம் அமைத்து 1008 குணங்களையும் தனித் தனியாகக் காட்டியுள்ளார்கள்.

பரிணாம வளர்ச்சியில் பல கோடிச் சரீரங்களில் வளர் பிறையாகி மனிதனாக வளர்வதற்கு மூலம் எது…? என்றும்… மனிதனாக ஆன பின் அவன் எடுத்துக் கொண்ட குணநலன்களின் இயக்கத்தையும்… அதனின் பின் விளைவுகளையும் உணர்த்துவதற்குத் தெய்வச்சிலைகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தனி வாகனத்தையும் கொடுத்துள்ளார்கள்.

எதனின்று நல்ல உணர்வுகளைச் சுவாசித்து… அதுவே வாகனமாக அமைந்து வளர்பிறையாக மனிதனாக எப்படி வந்தோம் என்றும்… மனிதனான பின்
1.கோபம் வேதனை ஆத்திரம் போன்ற குணங்களச் சுவாசிக்கும் பொழுது தேய் பிறையாகி
2.மனிதனல்லாத உடல்களுக்கு எப்படிச் செல்கிறோம்…? என்றும் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியில் நம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் நாம் மீண்டும் இன்னொரு பிறவிக்கு வர மாட்டோம்… அழியாத ஒளி உடல் பெறலாம்.

சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

தெய்வ சக்திகளாக நீங்கள் உருவாக வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

சொந்தபந்தம்…
தொழில்…
சுற்றுப்புறம்…
விஞ்ஞானம்…
வியாபாரம்…
மருத்துவம்…
இதிலே ஏதாவது ஒன்றிலே இன்றைய மனித வாழ்க்கை அமைந்திருக்கின்றது.

இந்த வாழ்க்கைத் தொடர் சுழற்சியுடனேயே நம் வளர்ச்சியின் வலுவைக் கூட்டிக் கொண்டு இந்த வாழ்க்கைப் பிடிப்பைத் தான்
1.மனிதனின் முற்றிய நிலை என்று இன்பத்தைக் கொள்ளாமல்
2.மனித ஆத்மாவின் உயர்வு வழிக்கு வழிகாட்டி வருகின்றேன் (ஈஸ்வரபட்டர்)

இதைத் தொடர்ந்து படிப்போர் பதிவாக்கி அதைச் செயலாக்கி வரும் நிலையில்
1.இதில் உணர்த்தபப்டாத பல உண்மைகளும் உண்டு…!
2.நேரடியாக உணர்த்தப்படாதவைகளைத் தங்களின் ஞானத்தைக் கொண்டு உணர்ந்து
3.உயரக் கூடிய நிலைகளுக்குத் தான் அவ்வாறு விடப்பட்டுள்ளது.

இனி வரப் போகும் கால நிலையில் துர்மார்க்க… அச்சம் கொள்ளும் அலை உணர்வு தான்… காற்றலையில் நச்சுத் தன்மையாக வளர்ந்தோங்கிச் சுழலும் தருணமாக உள்ளது.

இதிலே மனிதன் தன்னைத் தான் உணர்ந்து
1.தன் ஆத்ம வலுவைக் கூட்டி
2.பிற ஈர்ப்பின் பிடிப்பில் சிக்காமல்
3.உயர் ஞான வழித் தொடரின் தொடர்பைக் கொண்டு
4.வளர்ந்த பல கோடி தேவாதி தேவர்களான சகல சக்திகளையும் சமைக்கவல்ல
5.பேராற்றல் கொண்ட சப்தரிஷிகளின் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

ஆகவே… உயர்ந்தோரின் உயர்வுடன் உயரும் எண்ணத்தில் உள்ள ஒவ்வொரு ஆன்மாவும் உயர்ந்தே செல்லும் வழி முறைக்காக
1.இங்கே வழி காட்டும் உண்மையை ஏற்று
2.ஞான விளக்கப் போதனைகளை ஒவ்வொரு ஆத்மாவும் பெற்று
3.மனித சக்திகளைத் “தெய்வச் சக்தியாக” உருவாக்குங்கள் ஒவ்வொருவருமே.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நாம் பெற வேண்டியது எது…? பெறக் கூடியது எது…? பெறப்படாதது எது…? என்ற நிலைகளைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

ஒருவன் தீமை செய்கிறான் என்று பதிய வைத்துக் கொண்டால் “அவன் தீமை செய்தான்… ஆகவே அவனை விடுவேனா பார்…?” என்று எண்ணினால் என்ன ஆகும்…?

இந்தக் கணக்கின் பிரகாரம் நாம் சிந்தனை இழந்த நிலையாகச் செயல்படுவோம்.

எந்த எண்ணத்தால் அடுத்தவனை அழித்திட வேண்டும் என்ற எண்ணம் ஓங்கி வளர்கின்றதோ அதன் மேல் நாம் கொள்ளும் பாசம் அவனுக்குள் விளைந்த தீயவினைகள் நமக்குள் விளையத் தொடங்குகின்றது.

அதே சமயத்தில் ஒரு நோயாளியை நாம் உற்றுப் பார்த்துப் பதிவாக்கி விட்டால் பாசத்தால் “இப்படி வேதனைப்படுகின்றாரே…” என்று எண்ணினால் அவர் நோயின் உணர்வுகள் நமக்குள் வருகிறது.

அப்படி நோயாளியை உற்றுப் பார்த்த அந்தக் கணக்கின் பிரகாரம் அவரையே நாம் எண்ணிக் கொண்டிருந்தால் அந்த நோயின் தன்மை நமக்குள் வளர்ந்துவிடுகிறது. அடுத்து நாமும் வேதனைப்படுவோம்.

ஆகவே இந்த மனித வாழ்க்கையில் நாம் கண்ணுற்றுப் பார்க்கப்படும்போது அவர்களைப் படமெடுத்து அவர்களில் உருவான உணர்வுகள் அவருடைய நிலைகளை
1.“எவ்வளவு நேரம் எண்ணுகின்றோமோ…
2.எவ்வளவு நேரம் அறிகின்றோமோ… அந்தக் கணக்குகள் கூடிவிடும்.
3.ஆகவே “இந்த மனித வாழ்க்கையில் பெறப்படாதது… பெறக் கூடாதது.. மனிதனின் ஆசை”.

ஆலயங்களில் இது தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. சிவன் ஆலயத்தில் “நந்தீஸ்வரா…” என்று காட்டுகின்றார்கள்.

ஆகவே நந்தீஸ்வரன் எதுவாக இருக்க வேண்டும்…?

நம்மைப் போன்று இந்தப் பூமியில் வாழ்ந்தவர்கள் தன் மனித வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பங்களை வென்று நஞ்சினை ஒளியாக மாற்றினார்கள்.

உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை ஒளியின் சரீரமாகப் பெற்று கணவனும் மனைவியும் ஒன்றாக இணைந்து அந்த உணர்வின் தன்மை கொண்டு அவர்கள் விண்ணிலே துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று நந்தி நமக்குள் சென்று அவன் எப்படித் தீமைகளை நீக்கினானோ அதைப் போல நாமும் நமக்குள் தீமைகளை நீக்க வேண்டும்.

அப்படி நீக்குவதற்கு நாம் எப்படிச் சுவாசிக்க வேண்டும்…?

அதிகாலை 4 மணிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களில் கலந்து, எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்த சக்தியைப் பெறவேண்டும் என்று நம் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு இப்படிச் சாப்பாடு கொடுக்க வேண்டும்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அவரின் துணை கொண்டு அதனை நாம் பெறுதல் வேண்டும். ஆகவே நாம் பெற வேண்டியது இதைத் தான்…!

சாமி இருக்கிறார்… எல்லாவற்றையும் அவர் பார்த்துக் கொள்வார்…! என்ற எண்ணத்தில் நிறையப் பேர் இருக்கின்றார்கள்

 

குருநாதர் காட்டிய அருள் வழியில் நீங்கள் உயர்ந்த சக்திகளைப் பெற வேண்டுமென்பதற்காகச் சுலபமாகக் கொடுக்கிறோம். அதை நீங்கள் நல்ல முறையிலே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

எந்தச் சங்கடமான உணர்வு வந்தாலும் சரி… உடனே ஆத்மசுத்தி செய்யுங்கள். உங்களிடம் அந்த அழுக்குச் சேராது.

உங்களிடம் அவ்வளவு பவரைக் கொடுக்கிறோம் என்றால் யாம் அனுபவித்து வந்தது.
1.நொடிக்கு நொடி… எம்மை இம்சை பண்ணியே குருநாதர் சக்திகளைக் கொடுத்தார்.
2.உங்களுக்கு இம்சை வரும்போதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து
3.ஆத்ம சுத்தி மூலம் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறோம்.

ஆனால்… சாமியை எண்ணிக் கொண்டிருந்தோம்… எனக்கு இப்படி இருக்கிறதே…! என்று (சாமியை) நினைத்துக் கொண்டே ஏங்கிக் கொண்டிருப்பார்கள்.

ஏதாவது உடலிலே வலித்தால் போதும். எம்மைத் திட்டத்தான் செய்கிறார்கள். சாமி… இப்படி இருக்கிறதே…! தலை வலிக்கிறதே… மேல் வலிக்கிறதே… என்றுதான் எண்ணுகிறார்களே தவிர ஆத்ம சுத்தி செய்யுங்கள் என்றால் எத்தனையோ பேர் விட்டுவிடுகிறார்கள்.

யாம் (ஞானகுரு) உங்களுக்கு லேசாகச் சொல்கிறோம். ஆனால் கஷ்டப்பட்டுத் தான் எல்லாவற்றையும் பார்த்து வந்தோம்.

உங்களுக்குள் வரக்கூடிய துன்பத்தைப் போக்க ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைப் பயன்படுத்துங்கள்..! என்று அடிக்கடி சொல்லிக் கொண்டு வருகின்றேன். லேசாகச் சொன்னால் சொன்னால் பெரும்பகுதியானோர் அதைச் செய்வதில்லை.

சாமி மீது ரொம்பப் பற்று இருந்தால் போதும்…!
1.அவர்கள் என்ன தவறு செய்தாலும் சரி…
2.“சாமி இருக்கிறார்…” அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்…! என்ற எண்ணத்தில்
3.தன்னைத் திருத்திக் கொள்ள மாட்டார்கள்.
4.சாமி இருக்கிறார்…! என்ற எண்ணம் தான் வருகிறதே தவிர
5.சாமி சொன்னதை எடுத்துத் தன்னிடம் வரக்கூடிய தீமைகளைத் தடுப்பதற்கு இல்லை.

கோபத்தையும் ஆத்திரத்தையும் மற்றதையும் தான் எடுத்துக் கொள்கிறார்கள். சாமியிடம் ரொம்ப நெருங்கிப் பழகியவர்கள் இப்படிச் செய்கிறார்கள். நல்லதை எடுப்பதற்கு அவர்கள் எண்ணமே தடையாகிப் போகிறது.

ஐயா இப்படி இருங்கள்… உங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு ஞானிகளின் அருள் சக்தியை எடுங்கள் என்று சொன்னால் “சாமி தான் இருக்கிறாரே… சாமி செய்வார்…” என்றே சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

சாமி என்ன செய்வார்…?

ஒவ்வொருவர் உயிரையும் கடவுளாக மதித்து உங்களை அறியாது ஆட்டிப்படைக்கும் தீமையான உணர்வுகள் மாற வேண்டும் என்று யாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.

அந்த அடிப்படையிலே நீங்கள் எண்ணினால் தான் உங்களுக்குள் அந்த ஆற்றல்கள் பெருகும். ஆகவே…
1.சாமி சொன்ன உயர்ந்த சக்தியைத் தனக்குள் ஊன்றி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பற்றிப் பேச வேண்டும்… அதை எடுத்துத் தனக்குள் வளர்க்க வேண்டும்.

தியானத்தின் மூலம் நம் கேள்விகளுக்கு விடையை எப்படிப் பெறுவது…? – ஈஸ்வரபட்டர்

 

ஆண் பெண் ஆத்மக் கூட்டு ஐக்கியத் தொடருடன் பிறக்கும்… ஒளியின் உயர்வு வட்ட வளர் தொடர் சக்தியான “ஆதிமூலம்” என்று உணர்த்தும் மூலத்தையே
1.ரிஷி பத்தினி மூலத்தால் உருவாகும் வழியில் செல்லும் வழி முறைகளையும்
2.மனித ஆத்மாவின் உணர்வு எண்ண மோதலைக் கொண்டு தெய்வ குண சக்திகளைப் பெறும் நிலைக்கு
3.மனிதனின் எண்ண ஓட்டச் சமைப்பினால் செல்லும் வளர் முறைகளை இது நாள் வரை வழிப்படுத்தி வந்துள்ளேன்.

இதைப் படிக்கும் ஒவ்வொரு ஆத்மாவும் இங்கே காட்டியதைச் செயல் முறைப்படுத்தி வளர்ந்து வரும் தொடரில் தங்களுக்கு ஏற்படும் வினாக்களைத் தெளிவு முறை பெறும் மார்க்கத்திற்கு வழி உண்டு.

அதாவது இதைப் படிக்கும் போது ஏற்படக்கூடிய எண்ண மாற்ற நிலைகளைத் தெளிவு காணும் அறியும் நிலைக்கு… நீங்கள் எதை அறிய விரும்புகின்றீர்களோ
1.அறியும் எண்ணத்துடன் புருவ மத்தியில் நினைவைக் கூர் பாய்ச்சிச் செலுத்துங்கள்..
2.பின்… மேல் நோக்கிய சுவாசத் தொடர்பினால் உயர்ந்தோரின் நிலையுடன் எண்ணத்தைச் செலுத்துங்கள்…
3.வளர்ந்த ரிஷிகளுடன் நம் அறியும் எண்ண ஞானத்தைச் செலுத்துங்கள்.

அறிந்து கொள்ளும் உயர் ஞான அறிவாற்றலினால் இவ் எண்ணத்தைச் செலுத்தும் பொழுது
1.உயர் ஞானம் பெற்ற அலை சக்தியின் தொடர் நமக்குக் கிடைத்து
2.நம் உடலின் காந்த நுண் அலை ஈர்ப்பில்
3.நாம் அறிய விரும்பிய அனைத்திற்கும் விடைகள் கிடைக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

அன்பும் பரிவும் பாசமும் கொண்ட நாம் இன்று சாதாரண வாழ்க்கையில் நாம் எப்படி எண்ணுகின்றோம்…?

அவர்கள் செல்வச் செழிப்புடன் நன்றாக இருந்தார்கள். எல்லோருக்கும் அவர்கள் பல உபகாரங்களைச் செய்தார்கள். ஆனால், “பாவம்… இன்று இப்படி வேதனைப்படுகின்றார்கள்”.

அவர்கள் குடும்பமெல்லாம் “இப்படி வேதனைப்படுகின்றது…” என்று பரிவும் பண்பும் கொண்டு “பயன்படுத்தும் முறையைத் தவறி…” நாம் பாசத்தால் அவர்கள் படும் வேதனையை நுகரப்படும் பொழுது நம்முள் உள்ள நல்ல குணங்களை இழக்கச் செய்துவிடுகின்றது.

1.நல்ல குணங்களை விலுவிழக்கச் செய்துவிடுகின்றது.
2.இதை மாற்றுவதற்கு என்ன வைத்திருக்கின்றோம்…?
3.ஏதாவது வழி இருக்கின்றதா..,?

மனிதன் ஒன்று சேர்ந்து வாழ்வதற்கும் தன்னை அறியாது வரும் பகைமைகளை நீக்குவதற்கும் சந்தர்ப்ப பேதத்தால் நமக்குள் பகைமை உருவாக்கும் அணுக்கள் விளைவதைத் தடைப்படுத்துவதற்கும் பல உபாயங்களைக் கண்டுபிடித்து “ஆலயங்களை அமைத்தார்கள்… அன்றைய மெய்ஞானிகள்”.

ஆனால், அந்த ஞானிகள் காட்டிய வழியில் இன்று யாராவது ஆலயத்திற்குச் செல்கின்றோமா…? என்றால் எவரும் இல்லை.

வைகுண்ட ஏகாதசி – சொர்க்க வாசல் அன்று சொர்க்கத்திற்குப் போகும் பாதை…! என்று விடிய விடிய உட்கார்ந்து கொண்டு பேசுவார்கள்.

அப்போது அங்கே எதைப் பேசுவோம் என்றால் அமைதி கொண்டு இருக்கும் பொழுது “அவர் குடும்பத்தில் இப்படி… இவர் குடும்பத்தில் இப்படி… இவர்கள் இப்படி இருந்தார்கள்..!” என்று அந்த இரவு முழித்திருக்கும் பொழுது பேசுவார்கள்.

ஏனென்றால்…
1.சோர்வடையும் பொழுது அந்தச் சோர்வில் கிளம்பும் இத்தகைய உணர்வுகளைப் பேசிக் கொண்டிருப்பதுதான்
2.சொர்க்க வாசல் அன்றைக்கு வேலை.

பெரும்பகுதியானவர்களைப் பார்த்தோம் என்றால் இரவு முழுவதும் அடுத்தவர்களைப் பற்றிய குறைகளை விடிய விடியப் பேசுவார்கள்.

காலையில் சொர்க்க வாசலைத் திறந்தபின் “திபு திபு…” என்று தள்ளுவார்கள். ஆக தன்னை மறந்து இவ்வாறு செய்வார்கள்.

காரண அங்கே மோட்சத்திற்குப் போகக்கூடிய… “பாதை..” திறந்துவிட்டது. தான் முண்டியடித்துக் கொண்டு போய் அங்கே அபிஷேகத்தைச் சாற்றிவிடலாம் என்று செல்வார்கள்.

உடனே ஆண்டவன் மெச்சி…
1.“எல்லோரையும் தள்ளிவிட்டு..,” என்னை வந்து தரிசிக்க வந்தான்
2.அதனால் அவனுக்கு “அருளைப் பாலிக்கலாம்..,” என்று கடவுள் கொடுப்பான் என்று
3.இப்படித்தான் நம்பிக்கையை நாம் வளர்த்துக் கொண்டு நம்மை அறியாமலே தவறுகள் செய்கின்றோம்.

இதைப் போன்ற நிலைகளை நாம் மாற்ற வேண்டும்.

ஒரு மனிதன் துயரப்படுவதைக் கண்டபின் நாம் மகிழ்ச்சி அடையக் கூடாது. அவர்கள் துயரத்திலிருந்து மீள வேண்டும். மகரிஷிகளின் அருள் ஒளி அவர் பெறவேண்டும். அவர்கள் குடும்பத்தில் உள்ளோர் நலமும் வளமும் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இந்த உணர்வுகளை நமக்குள் சேர்த்து விட்டால் “இந்தப் பாதை…” நாம் உயர வேண்டும் என்ற உணர்வுகள் நமக்குள் விளைகின்றது.

எதன் வழிகளில் இதை எண்ணுகின்றோம்..?

1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதன் வழிகளில்தான் எண்ணுகின்றோம்.
2.அந்த அருளை முதலில் நாம் எண்ணுகின்றோம்.
3.அடுத்துத் துன்பப்படுவோர்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணுகின்றோம்.

அப்பொழுது அவர்கள் துன்பத்தை நாம் நுகர்வதில்லை.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற கடமை உணர்வு நமக்கு எப்பொழுதும் இருக்க வேண்டும்

 

வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி மெய்ப் பொருளைக் காணும் நிலைகளுக்குச் சூரியனைப் போன்று நாம் ஒவ்வொருவரும் பிரகாசிக்க வேண்டும்.

நம் உடலுக்குள் இருக்கும் அனைத்திற்கும் நம் உயிரே சூரியனாக இருந்து இயக்குகின்றது. அதே மாதிரி நாமும் பிறருடைய நிலைகளுக்குப் பிரகாசிக்கும் நிலையாக ஒளியின் சுடராக சூரியனாக மாற வேண்டும்.

அதாவது… சூரியனைப் போன்று
1.துருவ மகரிஷி ஒளியின் சுடராகத் துருவ நட்சத்திரமாக அறிவின் ஞானமாக எப்படி வளர்கின்றதோ
2.நாம் ஒவ்வொருவரும் அந்தத் துருவ மகரிஷியாக மலர வேண்டும்.
3.அந்த மகரிஷி காட்டிய நிலைகளை நாம் பின்பற்ற வேண்டும்.

விநாயகர் சதுர்த்தி என்ற நிலையில் தீமைகளை அடக்கித் தீமைகளை அகற்றிடும் உணர்வாக உடலான பிரபஞ்சத்திற்குள் நாம் வளர்த்தல் வேண்டும்.

ஆகவே நீங்கள் அனைவரும் தீமைகளை அகற்றி விடுவீர்கள் என்று நம்புகின்றேன்.

1.குரு பக்தி என்ற நிலையில்… குரு என்று நாம் எதைச் சொல்கின்றோமோ
2.நமது குருநாதர் எதைச் சொன்னாரோ அதன் வழிகளிலே நாம் கடைப்பிடித்து
3.ஒருங்கிணைந்த நிலைகளில் வழிப்படுவோம்.

நம்மைக் காப்போம்… நம்மைச் சார்ந்தவரைக் காப்போம்… உலகைக் காப்போம்…! என்ற நிலைகளில் அந்த உயர்ந்த எண்ணங்களை வளர்ப்போம்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் “அந்தச் சப்தரிஷி மண்டலமே நமக்கு எல்லை…!” என்ற நிலையினை வகுத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியாகத் தியானிப்போம்.

சப்தரிஷிகளின் அருள் சக்தி நாம் பார்க்கும் அனைவரும் பெற்று அவர்கள் வாழ்க்கையில் மன பலமும் மன வளமும் பெற்று தொழில் வளம் பெருகி செல்வம் செல்வாக்கு பெற்று மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தை ஒவ்வொரு நாளும் எடுத்து நாம் வளர்க்க வேண்டும்.

குரு வழியில் நாம் அனைவரும் அந்த ஞானத்தின் தொடர்பில் வளர வேண்டும். அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஏககத்துடன் நாம் தியானிக்க வேண்டும்.

1.குரு நமக்கு எதை உபதேசித்தாரோ நமக்குள் ஒவ்வொரு நாளும் அதை வளர்க்க வேண்டும்
2.நம் பார்வையால் பிறருடைய தீமைகள் நீக்கப்பட வேண்டும்
3.நம் சொல்லால் பிறருடைய கஷ்டங்கள் நீக்கப்பட வேண்டும்.
4.குரு அருளால் அந்தச் சக்தியைப் பெற்று எல்லோரும் நலம் பெற வேண்டும் என்று நாம் தவமிருக்க வேண்டும்.

எல்லோருடைய குடும்பத்திலும் மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து அவர்கள் மனமகிழ்ந்து வாழ வேண்டும் என்று நாம் தவமிருக்க வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்ற கடமை உணர்வுடன் நாம் செயல்பட வேண்டும்.

மற்றவர்களுக்கு அந்த அருள் உணர்வினை எடுத்துப் போதிக்கும் தன்மைகள் பெற வேண்டும். அவர்களுக்கு எடுத்துக்காட்டாக நம்முடைய வாழ்க்கைத் தரம் அமைதல் வேண்டும்.

1.அவர்களை நல்வழிப்படுத்தும்… மன பலம் பெறச் செய்யும்… நிலையான வளர்ச்சியாக நீங்கள் பெற வேண்டும்…
2.அந்த நிலையை நீங்கள் அடைய வேண்டும் என்று நான் (ஞானகுரு) பிரார்த்திக்கிறேன்.

ஆண் பாதி பெண் பாதி… என்ற அகில உலகங்களையும் படைக்கும் சக்தி – ஈஸ்வரபட்டர்

 

ஆண் பெண் இன விருத்தியில் ஆணின் அமில சக்தியின் பெண் ஈர்ப்பு ஜீவ நிலையில் சரீர வாழ்க்கை திருமண பந்த சொந்தத்தால் மனிதனின் வம்சத் தொடர் மக்கள் செல்வ நிலை பெற்று வாழும் வழித் தொடர் பூமிப் பிடிப்புச் செயலுடன் ஒன்றிய வாழ்க்கையாக உள்ளது.

இதனை ஒத்த பிறப்பு வளர்ப்பு இறப்புடன் ஒன்றிய சுழற்சியையே எப்படி இரண்டு இரண்டு உறுப்புகளின் உருவ உடல் ஞான ஒன்றிச் செயல்படுகின்றதோ அதற்கொத்த தன்மை போன்றே
1.ஆண் இன அமில ஆத்ம அலையும்
2.பெண் இன ஜீவ வளர்ப்புக்குகந்த ஆத்ம அலையும் ஒன்றாக
3.இரண்டு ஜீவ சரீர பிம்ப ஆத்மாக்களின் தொடர்பு பிறப்பு சிசு பிறப்பதைப் போன்று
4.வலுக் கொண்ட ஆத்ம இணைப்பின் தொடரில் பிறக்கும் நிலைதான் “அர்த்தநாரீஸ்வரர்” என்று காட்டினார்கள்.

ஆண் பாதி… பெண் பாதி… “சிவ சக்தி…” என்றுணர்த்திய தெய்வ நிலையில் வழிகாட்டிய உண்மைத் தத்துவ விளக்க நிலைக்கொத்த ஆத்ம ஐக்கியத்தில் பிறக்கப்படும் வளர்ச்சி நிலையுடன் சுழற்சியுடன் இச்சுழற்சியுடன் ஒத்த ஆத்ம தொடர் கொண்டோரின் ஈர்ப்பு நிலை மகவுகளை சரீரப் பிறப்பில் சரீர சிசு வளர்வதைப் போன்று
1.ஆண் பெண் இன ஆத்ம உயர் சக்தியைக் கொண்டு கூட்டமைப்பின் ஞான சித்தால்
2.“ரிஷி பத்தினி..” என்ற ஒளி நிலை பெறும் ஆத்ம சக்தியைக் கொண்டு
3.இந்தப் பூமி மட்டுமல்லாமல் மற்ற ஏனைய மண்டலங்களுக்கும் உயர்வைக் காட்டிட முடியும்.

ஞானச் சித்து கொண்டு “இரண்டு ஆத்ம ஐக்கியத்தில் ஒன்றானவர்கள்…”
1.உயர்வு கொள்ளாத் தனித்த நிலையில்
2.சித்து நிலையுடன் வளர்ச்சி பெற முடியா உயர் சக்தி கொண்ட தொடர்புகளும்
3.ஆத்ம இணக்க ஆண் பெண் சரீர இயக்கமுடன் ஒத்த நிலையில்
4.சித்து நிலை கொள்ளக்கூடிய ஜீவ சக்தித் தொடர்புடன் வளரும் ஆத்ம ஐக்கிய வளர் சக்தியின் கூட்டமைப்பில்
5.அந்த வலுவாகும் சக்திகள் ஐக்கியம் கொள்ளும்… தன் வளர்ப்பின் நிலைக்காக…!

பல கோடி உண்மைத் தத்துவ உயர் வளர்ச்சி “இன்பத்தின் கோடி…” என்று உணர்த்துகின்றார்களே அத் தொடருக்கும் உயர்ந்த சக்தி நிலைகளை இச்சரீர வாழ்க்கை பந்த ஆண் பெண் ஆத்ம வலுவைக் கொண்டு உயர முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நம்மைப் பண்படுத்துவதற்காக வைக்கப்பட்ட ஆலயங்களில் நாம் எப்படி வழிபட வேண்டும் என்று ஞானிகள் முறைப்படுத்திக் காட்டியுள்ளார்கள்.

தன் அருகிலே இருப்போரை நல்ல பண்புகள் கொண்டு நல்வழிப்படுத்துவதும்… உயர வேண்டும் என்ற பண்பினை வளர்த்துக் கொள்வதற்கும்… பகைமை உணர்வுகள் தனக்குள் வளராது அந்த நிலையைச் சீர்படுத்துவதற்குத்தான் ஆலயம்.

நாம் எல்லோரும் ஏகாந்த நிலைகள் கொண்டு மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டும். நாங்கள் பார்க்கும் குடும்பங்கள் எல்லாம் நலம் பெற வேண்டும். அவர்கள் தொழில்கள் அனைத்தும் வளம் பெற வேண்டும் என்ற இந்த உணர்வுடன் ஆலயத்திற்குள் செல்ல வேண்டும்.

ஒரு நூலால் கடினமான ஒரு பொருளைத் தூக்க முடியவில்லை என்றாலும் பல நூலை ஒன்றாக இணைத்து ஒரு கனமான பொருளைத் தூக்க முடியும்.

இதைப் போல எல்லோரும் எல்லோருக்குள்ளும் உள்ள பகைமை என்ற உணர்வை மறந்துவிட்டு அருள் ஞானியின் உணர்வைத் தனக்குள் வலு சேர்த்துக் கொள்தல் வேண்டும்.

பின்பு…
1.இந்த ஆலயத்திற்கு வருவோர் அனைவரும் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று அமைதி கொண்டு…
2.இந்த உணர்வின் தன்மையை எண்ணியவாறு…. ஆலயத்தை வலம் வந்தால் போதும்.

“எவ்வளவு தூரம் நடக்கின்றீர்களோ..” அந்தத் தூரம் வரையிலும் இந்த எண்ணத்தைக் கொண்டு
1.“ஆலயத்தை ஒரு சுற்று சுற்றி வந்து…”
2.நேராக உங்கள் வீட்டிற்குள் சென்றால் போதும்.

இந்த நல்ல உணர்வுடனே வீட்டிற்குச் செல்லப்படும் பொழுது நீங்கள் எண்ணிய உணர்வுகள் உங்கள் உயிரிலே (புருவ மத்தியில்) படும் பொழுது… அங்கே அபிஷேகம் ஆகின்றது.

அந்த அருள் உணர்வின் அலைகள் உடலுக்குள் பரவப்படும் பொழுது எந்த நல்ல குணங்களோ அந்த நல்ல குணங்களுக்கெல்லாம் அமுதாகின்றது.

நல்ல குணங்கள் அனைத்திற்கும் அமுதின் தன்மையைப் பெறச் செய்யும் பொழுது அவைகள் நல்ல உற்சாகம் பெறுகின்றது.

அப்பொழுது. தீமையான உணர்வுகள் நமக்குள் வளராது.., அதற்கு “ஆகாரம் கொடுக்காது” தடைப்படுத்துகின்றோம். இதைத்தான் “விரதம்” என்பது.

ஒரு நிலைப்படுத்தும் வழி – ஈஸ்வரபட்டர்

 

உலக வாழ்க்கை… பந்த… கர்ம… காரியங்கள் நடத்திட…
1.உலகச் சுழற்சியுடன் ஒன்றி வாழும் வாழ்க்கையையே
2.நாம் வளரும் வாழ்க்கைக்கு வலுவாக்கிக் கொள்ளும் சத்தாக
3.அவற்றின் நிலையை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

எப்படி ஒரு மரமானது பல விழுதுகளிட்டு வேர் ஓடி… விழுதின் மூலம் சத்தை எடுத்து அம்மரமானது வளருகின்றதோ அதைப் போன்றே வாழ்க்கை கர்ம காரியங்கள் யாவையும் “நம் உயர்வின் வளர்ச்சிக்குச் சத்தெடுக்கும் விழுதுகளாக” அமைக்க வேண்டும்.

1.தீயது என்று எதனையும் ஒதுக்காமல
2.தீயதில் இருந்து தான் “நல் முத்தை” எடுக்கும் வழி முறை போன்று
3.எண்ணத்தின் உணர்வைச் செலுத்தும் ஒவ்வொரு செயலையுமே
4.ஞானிகள் காட்டிய வழியில் வழி நடந்து பக்குவப்படுத்திடல் வேண்டும்.

மனித எண்ணமுடன் பலருடன் கலந்துறவாடும் நிலையிலும் அவர்கள் எந்தக் குண எந்த வளர்ச்சியில் ஒன்றியிருந்தாலும்… நம் உணர்வின் எண்ணம் செலுத்தும் அலைக்குகந்த… அலை உணர்வின் எதிர் அலை சக்தியை நாம் பெறும் நிலை தான் உண்டு.

ஆகவே ஒவ்வொரு காலங்களிலும்
1.பூமியின் சுழற்சியில் இருந்து தான் – இருட்டில் இருந்து தான் ஒளி பெறும் நிலையாக
2.உணர்வின் எண்ணம் செயல்படும் வலுவைக் கொண்டு தான்
3.ஆத்மாவின் வலுக்கூடிய நிலையில் ஆத்மாவின் இயக்க நிலை ரிஷித் தொடர்புடன் ஒன்றிய உயர் நிலைக்குச் செல்லும்.

இத்தகைய நிலை பெற வேண்டும் என்றால் நாம் எப்படி முயற்சிக்க வேண்டும்…?

அதாவது சரீர அவயங்களில் இரண்டு நிலை கொண்ட உறுப்புகள்
1.இரண்டு கால்களைக் கொண்டு ஒத்த நிலையில் “நடை” போடும் இயக்க நிலை போன்றும்
2.இரண்டு கைகளைக் கொண்டு (“இணைந்த கைகளாக”) ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல் கொள்ளும் இயக்க நிலை போன்றும்
3.ஒளி ஈர்க்கும் கண்களை… ஒத்த நிலை ஒன்று போல் கூர் பாய்ச்சிக் காணும் நிலை போன்றும் இருத்தல் வேண்டும்.

ஏனென்றால் கண்களின் விழிகளின் அமைப்புச் சிறிது மாறினாலும் இரண்டு உருவ நிலையைத்தான் காண முடியும். ஒரு உருவமாகக் காண முடியாது.

ஆக.. ஏற்றத்தாழ்வு நிலையின்றி…
1.இரண்டு விழியைக் கொண்டு ஒன்றாக காணும் ஒளி நிலையைப் போன்றும்
2.செவி… சுவாசம்… “இவற்றின் இணைப்பு” இந்த இரண்டின்
3.ஒரு நிலை கூடும் செயலை ஒத்தும் அமைத்தல் வேண்டும்.

அது மட்டுமல்ல…!

1.“சிவம்” என்ற அமிலமும்..
2.“சக்தி” என்ற ஈர்ப்பும்…
3.பூமியாக உருப்பெற்ற தொடரில்
4.சிவசக்தி விநாயகனாக உருவம் பெற்ற ஆத்ம சரீர பிம்ப வளர்ப்பானது
5.எப்படி அந்த “ஆண் பெண் அமில உணர்வு” வளர்ச்சியில் வலுக் கொண்ட ஜீவ நிலை (ஜீவனுள்ள உடலை) பெற்றதுவோ
6.அதைப் போன்று இவ்வாத்ம வழித் தொடர் நிலையிலும்
7.ஆண் பெண் என்ற இணைப்பால் தொடர் கொள்ளும் வழி முறையில் ஆத்மீக வளர்ச்சி கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்துடன் என்னை ஆயுள் மெம்பராக இணைத்தார் குருநாதர்… உங்களையும் இணைக்கின்றோம்

 

சாதாரணமாக மனிதனானவன் தீமையை அதிகமாக அவன் செயல்படுத்த வேண்டும் என்று எண்ணுவதில்லை. நன்மை செய்யவே முற்படுகின்றான். ஆனால்
1.நன்மை செய்ய முற்பட்டாலும்
பிறருடைய துயரப்படுத்தும் நிலையோ வேதனைப்படுத்தும் உணர்வோ அவன் நுகர்ந்து விட்டால்
3.அவன் நல்ல குணங்களை மறைத்து செயலற்றவனாக மாறி
4.இவனும் தீயவனாகத்தான் மாறுகின்றான்.

ஒருவர் நம்மை அடிக்க வருகிறான் என்று வைத்துக் கொண்டால் அவன் நம்மை அடித்து விடுவான் என்று பயந்து ஓடுகின்றோம்.

அப்படி ஓடினாலும் ஒரு சமயம்… “ஏன் இப்படி…?” என்று திரும்பினால் அவன் செய்வதற்கு முன் நாம் தவறு செய்பவனாக மாறுகின்றோம். இப்படித் தான் மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறு அறியாத நிலைகளில் மக்கள் வாழ்ந்து கொண்டு வருகின்றனர். அதிலிருந்து அவர்களை மீட்க “மெய் ஞானிகளின் உணர்வினை நீ பதிவு செய்…” என்றார் குருநாதர்.

ஒவ்வொரு உயிரும் கடவுள். உயிரால் உருவாக்கப்பட்ட அந்த உடல் ஆலயம். மனிதனை உருவாக்கிய நல்ல குணங்களைத் தெய்வமாக மதித்து அதைப் பாதுகாக்கும் உணர்வுடன் நீ செயல்பட வேண்டும் என்றார்.

தீமைகளை நீ பார்க்க நேர்ந்தால்… கேட்க நேர்ந்தால்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற வேண்டும் என்று எண்ணி அந்தச் சக்திகளை நீ எடுத்துக் கொள்.

அவர்கள் நலம் பெற வேண்டும் என்றும்… அந்த ஈசன் வீற்றிருக்கும் ஆலயம் பரி்சுத்தம் ஆக வேண்டும் என்றும்…
1.நீ அந்த உயிரைக் கடவுளாக மதி. அவர் உடலை நீ கோயிலாக மதி.
2.மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்கள் அங்கே வளர வேண்டும் என்று நீ எண்ணு.

அதன் வழி நீ செயல்பட வேண்டும், அதற்கேதான் துருவ நட்சத்திரத்துடன் உன்னை (ஞானகுரு) ஆயுள் கால மெம்பராக இணைக்கிறேன் என்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

1.நான் (ஈஸ்வரபட்டர்) அதிலே இணைந்தேன்.
2.நான் அங்கே செல்கின்றேன்.
3.நான் சென்ற பின்பும் இதன் உணர்வை நீ தொடர்பு கொண்டால்
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வை நீ பெற முடியும்.
5.அதை நீ எளிதில் பெற்று அனைவருக்கும் கொடுக்க முடியும்.
6.இருளிலிருந்து அனைவரையும் மீட்க முடியும் என்று உணர்த்தினார் குருநாதர்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

அடிக்கடி இடைஞ்சல் செய்கிறார் என்று ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் அவர்கள் குடும்பம் நாசமாகப் போக வேண்டும், உங்கள் குடும்பம் மண்ணில் போகும் என்ற இந்த நிலைக்குச் சிலர் எண்ணத் தொடங்கிவிடுகின்றார்கள்.

இந்த உணர்வுகளை அவர்கள் எடுக்கப்படும் போது இதே உணர்வு அவர் உயிரால் இயக்கப்பட்டு அந்த உணர்வுகள் உடல் முழுவதும் பெருக்கப்படுகின்றது.

இவ்வாறு எடுத்த உணர்வையே உயிர் உடலாக உருவாக்கி அவர்களுக்கேதான் அது பாதகமாக்கும்.

ஏனென்றால் ஒரு வித்தினை உருவாக்கினால் மீண்டும் அதை நிலத்தில் ஊன்றும்போது அதனின் வித்துக்களாக விளையத் தொடங்குகின்றது.

கெடுதல் செய்தவர் “நாசமாகப்போக வேண்டும்…” என்ற உணர்வினை முதலில் இவர்கள் எண்ணுகின்றனர்.

அந்த உணர்வின் தன்மை ஊழ்வினை என்ற வித்தாக இவருக்குள் உருவாகின்றது. அதைக் கெடுதல் செய்தவரிடம் சொல்லாகச் சொல்லப்படும் போது இங்கே விளைந்த சொல்கள்
1.அந்த ஆகாத எதிரியின் செவிகளில் படுகிறது.
2.அந்த உணர்ச்சிகள் கண் வழி கவருகின்றது.

ஆகா… என்னை இவ்வாறு சொல்லத் தொடங்கிவிட்டாயா…? என்று எதிர் பதிலாக இரண்டு பேருமே இந்த உணர்வுகளைப் பேசுகின்றனர்.

இப்படிப் பேசும் உணர்வுகள் என்ன செய்கின்றது…?

இருவரையுமே அது கொல்லுகின்றதே தவிர அவர்களுக்குள் நல்ல குணங்களை எண்ணுவதற்கு வழியில்லை. இருவரிடத்திலும் உள்ள நல்ல குணங்கள் அனைத்தும் மடிகின்றது.

மனிதனுக்கு மனிதன் நாம் எப்படி வாழ வேண்டும் என்று அறியாதபடி நாம் என்ன செய்கிறோம்…?
ஆலயங்களுக்குச் சென்று
1.என் எதிரி வீழ வேண்டும்
2.என் வாழ்க்கை நல்லதாக அமைய வேண்டும் என்று
3.தவறான வழியில் வரம் கேட்கின்றார்கள்.

இப்படி சந்தர்ப்பத்தால் மோதிய உணர்வுகள் அந்த வெறுப்பின் அலைகளுக்குத்தான் செல்லச் செய்கின்றது…! என்று குருநாதர் இதைத் தெளிவாகக் காட்டுகின்றார்.

கருப்பணச்சாமி – இதைப் போலக் கொடூர தெய்வங்களைக் காட்டும் போது ஆட்டையோ கோழியையோ பலி கொடுக்கின்றோம்…! என்று வேண்டுகிறார்கள்.

ஆக சிந்திக்கும் தன்மை இழந்தால் அப்பொழுது அதற்குத்தக்க பிறிதொன்றைக் கொல்லும் உணர்ச்சிகளைத் தான் நமக்குள் ஊட்டுகின்றது.

நல்ல சிந்திக்கும் தன்மையை நமக்குள் மாற்றும் அத்தகைய நிலைகளில் இருந்து மீள்வதற்குத்தான் கருப்பணச்சாமி போன்ற உருவங்களைக் காட்டினார்கள் ஞானிகள்.

நம்மை மறைக்கும் தீமைகளிலிருந்து மீள
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்.
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா பெற வேண்டும்.
4.எங்கள் ஜீவ அணுக்கள் பெற வேண்டும்.
5.எங்கள் சொல்லும் செயலும் புனிதம் பெற வேண்டும்.
6.நாங்கள் பார்ப்போர் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று இப்படி மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் நாம் என்ன செய்கிறோம்…?

கருப்பணச்சாமியை எண்ணி
1.என் எதிரி வீழ்ந்தால் என் தொழில் விருத்தியானால்
2.உனக்கு ஆட்டைக் கொடுக்கிறேன் பலி கொடுக்கிறேன் என்ற உணர்வுகளில் தான்
3.நாம் பக்தியில் செல்லுகின்றோம்.

நமக்குள் தீமை வருகிறது என்று அறியவில்லை.

நாம் வேதனைப்படும் உணர்வினை நுகர்ந்தால் வேதனைப்படுவோர் உணர்வினை நுகர்ந்தால் பாசத்துடன் இருக்கும்போது குழந்தைக்கு நோய் என்று உணர்வானால் நாம் சிந்திக்கும் தன்மை இழந்துவிடுகின்றோம்.

அவனைப் பாதுகாப்பதற்கு மாறாக… அவசரத்தில் இந்த வைத்தியரிடம் போவோமா… அந்த வைத்தியரிடம் போவோமா… என்று அதில் முழுமை பெறாதபடி இந்த “ஆவேச உணர்வுகள் தான்” வருகின்றது.

தீமையின் உணர்வை நமக்குள் வளர்த்து அந்த ஆவேசத்தால் காக்கும் உணர்வை இழந்து அவனையும் காக்க முடியாது. கடைசியில் அவனால் எடுத்துக் கொண்ட வேதனைகள் கடும் நோயாகவும் மாறுகின்றது.

இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால் அந்த மெய் ஞானிகள் காட்டிய வழியில் பகைமைகளை மறந்து சகோதர உணர்வை வளர்த்து அன்பைப் பெருக்கி பண்புகளை வளர்த்துத் தெய்வீக நிலையாக நாம் பெற வேண்டும்.

அந்த நிலையை ஒவ்வொருவரும் வளர்த்து உடல் நலம் பெற்று மன நலம் பெற்று மன பலம் பெற்று மன வளம் பெற்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நீங்கள் என்றென்றும் இணைந்து வாழ வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

நல்லதைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் வருவோருக்கு என்றுமே நாம் தடையாக இருக்கக் கூடாது

 

அருள் ஞானத்தைப் பெற வேண்டும் என்று எவ்வளவோ ஆர்வத்தில் இங்கே வருகின்றார்கள். ஆனால் இங்கே நானா… நீயா…? என்ற நிலைகளில் ஒரு சிலர் செயல்படுகின்றனர்.

ஞானம் பெற வேண்டும் என்று இங்கே எந்தப் பக்குவத்துடன் வருகின்றார்களோ அவர்கள் மனம் புண்பட்டால் அதனுடைய விளைவுகள் நம்முடைய வளர்ச்சியைக் குன்றச் செய்ததுவிடும்.

ஒரு மனிதன் எந்த ஏக்கத்துடன் வருகின்றானோ… அந்த உயர்ந்த நிலை பெற வேண்டும் என்ற ஆர்வத்தில் வரும் பொழுது… அதற்குத் தடையாக நாம் இருந்தால் அவன் எண்ணங்கள் எவ்வளவு பெரிய நிலையை நமக்கு உருவாக்கும்…! என்று உங்களுக்கே தெரியாது.

இதையெல்லாம் நாம் நம்மிடம் இருந்து அப்புறப்படுத்துதல் வேண்டும். பிறரை நாம் வாழ்த்த வேண்டும்.
1.பிறரை மதித்துத் தான் பழக வேண்டுமே தவிர
2.அவர்களை நாம் தாழ்த்திப் பழகவே கூடாது

குருநாதர் இதைத்தான் எனக்குக் கற்றுக் கொடுத்தார். தாயாகவும் நீ இரு… சேயாகவும் நீ இரு…! என்றார்.

1.குழந்தை தாயை ஏசிவிட்டாலும் அந்தத் தாய் “தன் குழந்தை” என்று அரவணைத்துத் தான் செயல்படும்
2.அதே சமயத்தில் குழந்தையைத் தாய் அடித்து விட்டாலும் மீண்டும் அந்தக் குழந்தை தாயை அணுகியே தான் வரும்.

தாயாகவும் சேயாகவும் நாம் ஒருங்கிணைந்த நிலையில் கொண்டு வாழ வேண்டும் என்று குருநாதர் எனக்கு இதைத்தான் முதலில் கொடுத்தார்.

எத்தனையோ பேர் உன்னை ஏசுவார்கள் பேசுவார்கள். ஆனால் தாயாக இருந்து அதை நீ ஏற்று… அவர்களுக்கு… சேய்க்கு உபதேசிப்பது போன்று ஒவ்வொரு நிலைகளிலும் நீ காத்தருள வேண்டும். தாய் தன் குழந்தையை எப்படிக் காக்கின்றதோ அதைப் போல நீ வரவேண்டும்.

ஆகவே நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் அனைவரும் தாயாக மாற வேண்டும். சேயை எப்படி வளர்க்கின்றோமோ அது போலச் செயல்பட வேண்டும்.

குழந்தையிடம் யார் எதைப் பேசினாலும் அல்லது குழந்தையைத் திட்டிவிட்டு அடுத்து ஒரு பிஸ்கட்டைக் கையில் கொடுத்தால் அது வாங்கிக் கொள்ளும்.
1.அந்தக் குழந்தையின் செயலைப் போல
2.நாமும் பகைமையை மறத்தல் வேண்டும்

அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பார்க்கும் அனைவரும் பெற வேண்டும் என்ற எண்ணத்தை நமக்குள் உயர்த்த வேண்டும். இதைப் போன்ற நிலைகளை நாம் பின்பற்றுதலே நலம்.

அதற்குத்தான் இந்தக் கூட்டமைப்பை… ஸ்தாபனத்தை அமைத்திருக்கின்றோம். குருவின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்துள்ள நாம் அனைவரும் அதைச் செம்மையான முறையில் கடைப்பிடித்து வழி நடத்துதல் வேண்டும்.

பல்லாயிரக் கணக்கானோர் நல்வழியினை விரும்ப… இதற்குள் இரு நூறு பேர் தடைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்ற நிலையில் நானும் (ஞானகுரு) காட்டிற்குள் சென்று இதைச் செயல்படுத்த முடியும்.

ஏனென்றால் அந்த இடைஞ்சலான இடத்தில் போய் உட்கார்ந்தாலும் அங்கே வருபவர்கள் எத்தனையோ கஷ்டம் என்று ஒரு நான்கு பேர் அந்த “நல்லதைப் பெற வேண்டும்…” என்ற எண்ணத்தில் வருவார்கள்.

அவர்களுக்கு மட்டும் நான் அருள் ஞானத்தைப் பெறச் செய்ய முடியும். கஷ்டப்பட்டு எபப்டியும் நல்லதைப் பெற வேண்டும் என்ற நிலைகளில் வருவோர் நிச்சயம் அதைப் பெறுவார்கள்.

ஆனால் கஷ்டமில்லாமல் நல்லதைப் பெற வேண்டும் என்ற நிலைக்கு வரும் பொழுது எப்படி இருக்கும்…? அது இலேசாகத் தான் தெரியும்.

அது போன்று நீங்கள் ஆகிவிடக் கூடாது என்பதற்குத் தான் இதைச் சொல்லி எச்சரிக்கை செய்கிறேன் (ஞானகுரு).

உயிராத்மாவைப் பாதுகாக்க வேண்டிய முறை – ஈஸ்வரபட்டர்

 

நீர்ச் சத்து நிறைந்த பொருளை உஷ்ணப்படுத்தி வேக விடும் தருணத்தில் நீர் சத்து சுண்டி அப்பொருளும் வெந்து விடுகின்றது.

அதையே இன்னும் அதிக உஷ்ணமுடன் வேக விட.. வேக விட… உஷ்ணத்தினால் எரிசக்தியின் காந்தலுக்குகந்த கருகும் நிலை கொண்டு எந்தப் பாத்திரத்தில் வேக விடுகின்றோமோ கருகிய நிலையுடன் அதிலே ஒட்டி உலர்ந்த பக்குவம் பெற்று விடுகின்றது.

அதுவே நீர் சக்தி இல்லாத எண்ணை வித்தை ஓர் வாணலியில் எண்ணை விட்டு அதைக் காய்ச்சும் பொழுது
1.எவ்வளவு நேரம் அந்த எண்ணை காய்ந்தாலும்
2.மெழுகு போல் திடம் கொண்டு… பிசின் போன்ற நிலை பெறுகின்றது.
3.உலர்ந்த தன்மை பெறுவது இல்லை.

இதைப் போன்றுதான் நம் உடலில்… ஜீவ உணர்வு எண்ண பூமி சமைப்பின்…
1.நீர் சக்தியுடன் நாம் எடுக்கும் சுவாச அலையானது…
2.பூமி ஈர்ப்புப் பிடியுடன் ஒன்றிய சரீர இயக்க வலுத் தன்மையாக
3.இந்தப் பூமி சமைக்கும் நிலைக்கொப்ப ஒன்றிய உடல் வாழ்க்கையாக நிலை அமைகின்றது.

ஆனால் வலுக் கூடிய வளர்ச்சி கொண்ட… இந்தப் பூமியின் வலுப் பெற்ற… பிற மண்டலத்தில் இருந்து அகிலத்தையும் அறியவல்ல ஆற்றல் கொண்ட ரிஷிக் கோடிகளான தேவாதி தேவர்களின் சக்தியை நாம் பெற வேண்டும்.

அத்தகைய வலுக் கொண்டோரிடம் எண்ணத்தின் உணர்வைச் செலுத்தி நாம் எடுக்கும் சுவாச வலுவால்
1.சரீர இயக்க வலுத்தன்மையும்
2.எலும்புகளின் உறுதி ஊட்டச் சத்தும்
3.உண்ணும் உணவைக் காட்டிலும் சத்தாக
4.எலும்புகளின் வளர்ச்சி முற்றி ஆத்ம வலு நிலை கொள்கின்றது.

நீரின் சத்தை எடுத்துத்தான் வித்தாகின்றன எண்ணைச் சத்து தரும் வித்துக்கள். அதைப் போன்று நம் ஆத்மாவை “சரீர ஜீவ நீர் சத்தைக் கொண்டு”
1.எலும்புகளை எல்லாம் எண்ணை வித்தின் வளர்ப்பு நிலை போன்று வலுவாக்கி
2.அந்த வலுவின் தொடரைக் கொண்டு ஆத்ம இயக்கம் செயல் கொள்ள வேண்டும்.

உதாரணமாக நீர் சத்தால் துருப்பிடிக்கும் இரும்பு உலோகத்தை எண்ணைச் சத்தை இட்டு அதைத் துருப்பிடிக்காமல் செய்கின்றோம் அல்லவா…!

அந்த இரும்பைப் பாதுகாக்கும் செயல் தன்மை போன்று நம் ஆன்மாவைப் பாதுகாக்க வேண்டும்.

அதாவது…
1.ஜீவ இயக்க எண்ண உணர்வானது இந்தப் பூமி சமைப்பின் உணர்வு எண்ண
2.கர்ம காரிய வாழ்க்கையுடன் சிக்கித் துருப்பிடிக்கும் கரையும் நிலை போன்ற நிலைப்படுத்தாமல்
3.எண்ணை வித்தைப் போன்று
4.சத்து நிலை பூண்ட… சத்து குண வலுக் கொண்டோரின் வலுவைப் பூசி
5.ஆத்ம உடலைப் பாதுகாத்திடல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

வடை சுடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். நெருப்பில் நாம் என்ன செய்கிறோம்..? பொருளைப் போடுகின்றோம். எண்ணெய் சூடாகுவதற்கு முன் வடையைத் தட்டிப் போட்டால் என்ன செய்யும்…?

வடை சீராக வேகாது. எண்ணெய் வெளியில் வரும். பின் அது சூடாகச் சூடாக வடையின் ருசியே மாறிவிடும்.

எண்ணெயின் நிலையை அதிகமாகக் காய்ச்சி வடையின் தன்மை போட்டால் மேல் பாகம் கருகி விடுகின்றது. ஆனால் உள்ளே வேகாமல் மாவாகவே இருந்து விடுகிறது.

1.சமப்படுத்தும் உணர்வின் தன்மை கொண்டு
2.அதைப் பக்குவப்படுத்தும் நிலை கொண்டு தான் நாம் பதார்த்தங்களை உருவாக்குவோம்
3.அப்பொழுது தான் அவைகள் சுவையாக இருக்கும்.

பக்குவம் இல்லாது பதார்த்தங்களைச் செய்தால் ருசி இருக்காது.

இதைப் போலத் தான் குடும்பத்தில் நம் குழந்தை ஒரு தவறு செய்கிறான் என்றால் அந்தப் பருவம் பார்த்து அந்த உணர்வின் தன்மையச் சொல்லுதல் வேண்டும்.

பருவம் பார்த்து அந்த உணர்ச்சிகளை ஊட்டும் நிலை வரும் போது ஏற்றுக் கொள்ளும் பருவம் அங்கே வர வேண்டும்.. வரும்.

ஏற்றுக் கொள்ளும் பருவம் அங்கே இல்லை என்றால் நாம் கூறிய உணர்வுகளும் அங்கே விளையாது. அது விளையும் பருவம் அங்கே இழக்கப்படுகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் ஒவ்வொரு நொடிகளிலேயும்
1.நம்மை எப்படிக் காக்க வேண்டும்…?
2.நமக்குள் சுவை மிக்க உணர்வை எப்படி உருவாக்க வேண்டும்…?
3.நம் சிந்தனை எப்படி இருக்க வேண்டும்…? என்ற நிலைகளுக்குத் தான் அருள் ஞானிகளைப் பற்றி உபதேசிக்கின்றோம்.

ஏனென்றால் இந்த உலகில் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ வகையில் தீமைகள் வருகிறது. வந்தாலும் தீமை செய்தார்கள்… தீமை செய்து கொண்டேயிருக்கின்றார்கள்… என்று அறிகின்றோம்.

அறிந்து கொண்டாலும் அந்தத் தீமையான உணர்வுகள் நமக்குள் வளராது தடுத்தல் வேண்டும்.

அவ்வாறு தடுத்தல் வேண்டும் என்றால் “ஓ…ம் ஈஸ்வரா…” என்று நம் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் உயிரின் பால் செலுத்துதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உயிர் வழி சுவாசிக்க வேண்டும். அப்பொழுது அந்தத் தீமை என்ற உணர்வின் தன்மையத் தடைப்படுத்திக் கொள்ள முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை இவ்வாறு சேர்க்கப்படும்போது தீமையின் வீரியம் குறைகின்றது. அருள் ஞானிகள் வளர்த்துக் கொண்ட உயர்ந்த குணங்களை நமக்குள் சமைத்தல் வேண்டும்.

“மிளகாய்” தனித்துக் காரமாகத் தான் இருக்கின்றது. மற்ற பொருளுடன் இணைக்கும் போது சுவையாக மாறுகின்றது.

ஒருவன் தவறு செய்கிறான் என்ற உணர்வை நாம் உற்றுப் பார்த்து நுகர்ந்தாலும் அடுத்த கணம் அருள் ஒளி என்ற உணர்வை நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

அருள் சக்திகளை நமக்குள் சேர்த்து வலுவாக்கிய பின்
1.தவறு செய்தவன் அறியாமையிலிருந்து விடுபட வேண்டும்
2.அருள் ஞானம் அவனில் பெருக வேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் சக்தி அவன் பெற வேண்டும்.
4.அவன் அறியாத இருளில் இருந்து விடுபட வேண்டும்.
5.தெளிந்த மனம் பெற வேண்டும்
6.தெளிவான உணர்வுகள் பெற வேண்டும் என்று எண்ணும் போது
7.அவன் உணர்வு நமக்குள் வந்தாலும்
8.அவனை அந்தத் இயக்குவது போல நமக்குள் தீமைகள் விளையாது.

நம்மைப் பாதுகாக்க இது உதவுகிறது. அதே சமயத்தில் “அவன் வேகத் துடிப்பு… நமக்குள் வளராமல் தடுக்கப்படுகின்றது…”

அவனிடம் சொல்லும் போது அப்போது உடனுக்குடன் சொன்னால் கேட்க மாட்டான். சில நிமிடம் கழித்து
1.அவன் சாந்தமாக இருக்கப்படும் போது
2.”நீ இப்படிச் செய்தால்… உனக்கு நல்லது…” என்று சொன்னால்
3.ஏற்றுக் கொள்ளும் பருவம் அவனுக்கு வரும்.

ஆகவே இப்படிப் “பருவம் அறிந்து தான்” நாம் சொல்ல வேண்டும்.

கடல் நீர் உப்பாக இருந்தாலும் ஆவியாகி மேகமாகி மழையாகப் பெய்யும் போது மழை நீர் “உயிர் நீராக” மாறுவதன் சூட்சமம்

 

கடல் நீர் உப்பாக உள்ளது. காரணம் அதில் உள்ள ஹைட்ரஜன். கடலில் சூரிய வெப்பம் பட்டபின் நீர் ஆவியாகப் போகின்றது. ஆவியாகச் செல்லும் பொழுது அதில் உள்ள ஹைட்ரஜன்… உப்பு தனியாகப் பிரிந்து விடுகிறது.

ஆவி மேகங்களாக மாறுகிறது. அதிலே உப்புச் சத்து (ஹைட்ரஜன்) மறுபடியும் பட்டபின் நந்நீராக மழையாகப் பொழிகின்றது.

1.முதலில் ஆவியாக மாறும் போது உப்பைப் பிரிக்கின்றது.
2.இருந்தாலும் மழையாகக் கொட்டும் பொழுது கணம் தாங்காதபடி
3.உப்புசத்திற்கு மூல காரணமான ஹைட்ரஜன் இதற்குள் சேர்கிறது.

ஹைட்ரஜன் ஆக மாறும் போது அதற்குள் இருக்கும் தீமைகளை முறித்துவிட்டு நல்ல தண்ணீராக மழையாகப் பெய்கின்றது.

1.அந்த ஹைட்ரஜன் கலந்து வரப்படும் போது செடி கொடிகள் எல்லாம் ஜோராக இருக்கும்.
2.மழை பெய்யும் போது பார்த்தோமென்றால் செடி கொடி தாவரங்கள் எல்லாம் அப்படியே ஒடுங்கும்.
3.மழையினால் தள…தள… என்று செழித்து வளர்வதையும் காணலாம்.

மனிதர்களான நமக்கும் மழை பெய்யும் அந்த நேரம் உஹ்குகு..உஹ்குகுகு… என்று அந்தக் குளிரின் நடுக்கம் நம் உடலில் வருவதைப் பார்க்கலாம். அது இனிமையாக இருப்பதையும் பார்க்கலாம்.

நம்மை அறியாமலே அந்த உணர்வு என்ன செய்கிறது…? என்று அனுபவத்தில் நீங்களே தெரிந்து கொள்ளலாம். குருநாதர் எனக்குக் கொடுத்தார். அதையேதான் உங்களுக்கும் சொல்கிறேன்.

உங்கள் வாழ்க்கையில் கஷ்டம் என்ற சொல் வரும் பொழுது யாம் (ஞானகுரு) சொன்ன மெய் ஞானிகள் அருள் உணர்வுகளை நினைவுபடுத்தி எடுத்தால் கஷ்டங்களிலிருந்து விடுபடலாம்.

ஒவ்வொரு நொடியிலும் சந்தர்ப்பங்களால் நாம் சந்தித்த உணர்வுகள் நம்மை என்ன செய்கின்றது…? என்பதை நீங்களே தெரிந்து கொள்ளலாம்

அன்றாட வாழ்க்கையில் நம் உடலில் சேர்த்துக் கொண்ட அந்தந்தக் குணங்கள் வினைக்கு நாயகனாக நோயாகவும் வெறுப்பாகவும் இருக்கின்றது.
1.அதை எல்லாம் நமக்குள் வளராதபடி தடுப்பதற்குத் தான் “விநாயகர் சதுர்த்தி…” அதாவது நிறுத்த வேண்டும்.
2.தீய உணர்வுகளைக் கடலில் கொண்டு போய்க் கரைக்க வேண்டும்

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான உணர்வுகளை எடுத்திருந்தாலும் ஏகோபித்த நிலைகளில் மகரிஷிகளின் அருள் சக்தியின் துணை கொண்டு தீமைகளைக் கரைக்க முடியும்.

நாம் ஈர்க்க மறுத்த அந்தக் கெட்டதை எல்லாம் கடல் நீர் இழுத்துக் கொள்கிறது. விநாயகர் சதுர்த்தியன்று அங்கே கரைத்து விடுகின்றோம்.

1.கடலில் கரைக்கும்படியான இத்தகைய சாஸ்திரங்கள் நமது மெய் ஞானிகள் கொடுத்தது.
2.யார் மீது எந்தப் பகைமை இருந்தாலும் அதை எல்லாம் நம் உடலை விட்டு நீக்கப் பழகிக் கொள்ள வேண்டும்…
3.அவர்கள் மீது பகைமையே வரக்கூடாது.

மற்றவர்கள் யாருக்கும் நாம் எண்ண முடியவில்லை என்றாலும் குறைந்தபட்சம் கூட்டாக இருக்கும் நம்மைச் சார்ந்தவர்களிடமாவது பகைமை இல்லாது நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

இதனைப் பழகிக் கொண்டால் மிகச் சக்தி வாய்ந்ததாக மாறும். அடுத்து பகைமை வந்தாலும் அதை எதிர்த்து நமக்குள் புகாதபடி பாதுகாத்துக் கொள்ளும் உயர்ந்த சக்தியாக வளரும். நமக்குள் நல்ல குணங்கள் ஓங்கி வளரும். நம் உணர்வுகள் எல்லாம் உயிருடன் ஒன்றி ஒளியாக மாறும்.

உள் மனமும் வெளி மனமும் – ஈஸ்வரபட்டர்

 

சில நேரங்களில் மனித உணர்வின் எண்ணம் செயல் கொள்ளும் காலங்களிலேயே “உள் மனம்… வெளி மனம்…” என்ற இரண்டு நிலை கொண்ட எண்ண ஓட்டங்கள் உருவாவதை அறிகின்றோம்.

1.ஆத்ம இயக்கத்தின் சரீர உந்தலில் சரீரம் சமைக்கும் எண்ண உணர்வு
2.ஆத்மாவின் பதிவு – சரீர மோதலின் எண்ண உணர்வு என்ற
3.இந்த இரண்டு வகையான போராட்டக் காலங்களில் தான்
4.மனிதன் சொல்லும் உள் மனம் வெளி மனம் என்ற இரண்டு நிலை கொண்ட எண்ணங்களே ஓடுகிறது.

சில ஆத்மாக்களுக்குச் சபல நிலையின் இரண்டு குண மோதலில்… வாழ்க்கை நிலை நடைபெறும் நிலையும் நிகழ்கின்றன.

1.உள் மனது என்பது ஆழமாகப் பதிவாகும் வித்து போன்றது
2.வெளி மனது என்பது சாதாரணமாக மண் மீது போட்ட வித்து போன்றது.

நம்முடைய உள் மனதில் எண்ணும் எண்ணங்களும் உணர்வுகளும் சக்தி வாய்ந்தது. ஆத்ம உயிர் அதற்குத்தான் அதிகமாகச் சக்தி கொடுத்து வளர்க்கும்… அதைக் காக்கும்…!

வெளி மனதில் இருப்பது சிறிது நேரமோ அல்லது காலமோ இருக்கும். பின் மறந்து போகும்…. அல்லது வலிமை இருக்காது.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்று அறிந்து கொண்ட நிலையில்.. மேல் நோக்கிய சுவாசமாக எடுக்கும் ஞானியரின் உணர்வுகளை ஆழமாக நமக்குள் பதிவாக்கிடல் வேண்டும். அதை வலுக் கொண்ட பதிவாக நம் ஆத்மாவில் ஏற்றிடல் வேண்டும்.

1.ஆத்மாவின் அத்தகைய வலுவைக் கொண்டு சரீரத்தை மட்டுமல்ல…!
2.சகல சித்துக்களையும்… சகல நிலைகளையுமே… அந்த ஆத்ம வளர்ச்சியினால் மட்டும் தான் வலுப்படுத்திட முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

அனுபவம் பெறுவதற்கு என்னை (ஞானகுரு) காட்டுக்குள்ளும் அழைத்துச் சென்றார்… நாட்டுக்குள்ளும் அழைத்துச் சென்றார் குருநாதர்.

காட்டுக்குள் அழைத்துச் செல்லப்படும் போது மனிதனைக் கண்டு அஞ்சி ஓடுகின்றது புலி. மனிதனைக் கண்டு அஞ்சி ஓடுகின்றது நரி. மனிதனைக் கண்டு விஷம் கொண்ட பாம்பும் தன்னைக் காக்க அஞ்சி ஓடுகின்றது.

ஏனென்றால் அதைப் போன்ற மிருகங்களாக இருந்துதான் மனிதனாக வந்தது. அனைத்தையும் வென்றிடும் சக்தி பெற்றது மனித உடலின் உணர்வுகள் (மனிதனின் மணம்).

1.எந்தெந்த உடல்களிலிருந்து
2.தன்னைக் காத்திடும் உணர்வு ஒவ்வொன்றிலும் விளைந்ததோ அதன் வழிப்படி
3.மனிதனைக் கண்ட பின் (மனிதனின்) மணத்தைக் கண்ட பின்
4.மற்ற உயிரினங்கள் அஞ்சி ஓடுகிறது.

யானை உடலில் பெரிது. வலிமையிலும் பெரிது. ஆனால் தனித்து வரும் யானை மனிதனைக் கண்டு விட்டால் ஆள் கூட்டம் இல்லை என்று அவனை விரட்டிச் சென்று அடிக்கப் பார்க்கும்.

யானைகள் கூட்டமாக இருக்கும் போது நம்மை ஒன்றும் செய்ய மாட்டான் என்று எட்டிப் பார்த்து விட்டு ஒதுங்கிச் செல்கிறது.

காட்டுக்குள் அழைத்துச் சென்று இதையும் காட்டுகின்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர். குருநாதர் ஒரு பக்கம் அமர்ந்து கொண்டு “நீ இந்தப் பக்கமாகப் போடா…” என்கிறார்.

புலி கொடூரமானது தான். அங்கே புலி மேலே இருக்கின்றது. அந்தப் புலி தலையை எட்டி எட்டிப் பார்க்கிறது. (அந்த இடத்தில்) இரண்டு நாள் அங்கே இருந்தோம்.

அப்படி இருக்கும் போது “கேளை ஆடுகள்” கூட்டம் அங்கே வருகின்றது. அந்தக் குகைக்குள் புலி பம்மி இருக்கின்றது.

கேளை ஆடுகள் அங்கே வரப்படும் போது புலி என்ன செய்கிறது…? புலி தன் மணத்தைச் “சாந்த உணர்வாக” வெளிப்படுத்துகின்றது.

கேளை ஆடுகள் எல்லாம் மெதுவாக அதுவாக மேய்ச்சலுக்கு வருகின்றது. அது வரையிலும் புலி சாந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றது. கேளை ஆடுகளும் இதைப் பார்க்கின்றது.

அந்த மாதிரி நேரத்தில் இதை… “நீ போய்ப் பாருடா…!” என்கிறார் குருநாதர். என்னைத் “தனித்துப் போடா…” என்று சொன்னவுடனே அப்பொழுது அங்கே என்ன நடக்கிறது “சமாச்சாரம்…?”

நான் எட்டிப் பார்க்கப்படும் போது ஒரு உடும்பு என்ன செய்கிறது? கல்லுக்கு கீழே அடியிலிருந்து வெளியே வந்தது. வெளியே வந்ததும் என்ன ஆனது..?

“புலி என்ன செய்கிறது…?” என்று நான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். கேளை ஆடுகள் பக்கத்தில் புலி இருக்கிறது. ஆனால் அதை அடித்துச் சாப்பிடவில்லை.

நான் இருந்த இடத்தில் பார்த்தால் உடும்பு கல்லுக்கு இடையில் உள்ளே இருக்கின்றது.

புலியைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த உடும்பு என் பக்கத்திலிருந்து திடீரென வந்தவுடன் எனக்குப் பயமாகிவிட்டது. அது கல்லுக்கிடையில் இருந்து “தலையை… வெளியே நீட்டுகின்றது”.

அந்தக் கல் “படார்…” என்று கீழே விழுந்தது. “ஊஹ்…ம்…” என்று சப்தம் போட்டேன். அவ்வளவு தான். புலி எனக்கு மேலே தவ்வி ஓடுகிறது.

கேளை ஆடுகள் எல்லாம் என்ன செய்கிறது…?

“வரையாடு” (மலையிலிருக்கும் ஆட்டு இனம்) என்று சொல்வார்கள். அப்படியே “சப்…சப்…” என்று பாறையில் ஒட்டி அப்படியே ஓடுகிறது. புலி அதை ஒன்றும் செய்யவில்லை.

1.திடீரென்று உடும்பு தலையை நீட்டியதைப் பார்த்து நான் பயந்துவிட்டேன்.
2.நான் பயந்ததைப் பார்த்துப் புலி பயந்தது.
3.பயந்த வேகத்தில் நான் உருண்டு ஒரு மரத்தில் விழுகிறேன்.

நடந்த நிகழ்ச்சி.

இதெல்லாம் அனுபவத்தில் தெரிய வைக்கிறார் குருநாதர்.

இவையெல்லாம் நீ கடந்து நீ வந்தாய். இருந்தாலும் இந்தக் கல் உருண்டவுடனே இந்தச் சப்தத்தை கேட்டவுடன் புலி மனிதனை (உன்னை) அடிக்கவில்லை. அஞ்சி ஓடுகிறது.

அது வருவதைக் கண்டு ஆடுகள் அஞ்சி ஓடுகிறது. அஞ்சிய நிலைகள் கொண்டு உருண்டு நீ விழுந்து விட்டாய்.

அதனதன் நிலைகள் இப்படி ஆகின்றது “பார்…” என்கிறார் குருநாதர்.

புலியின் வேகத்தை நுகர்ந்த பின் என் செயலாக்கங்கள் – நான் எப்படி உருண்டு விழுந்தேன்…? அனுபவத்தில் இந்த உணர்வின் செயலாக்கங்கள் இது எப்படி இருந்தது…? என்று காண்பிக்கின்றார்.

புலி அடித்துவிடுமோ…! என்ற உணர்வில் முதலில் புலியையே பார்த்துக் கொண்டிருந்தேன். நான் இருந்த இடத்தில் ஒரு கல்லுக்கு அடியில் இருந்த உடும்பைக் கண்டவுடனே அது எனக்குப் “பாம்பு மாதிரி… தலை தெரிகிறது”.

இரண்டு பயமும் சேர்த்து வருகிறது. கல் விழுந்து சப்தம் போட்டவுடன் புலி தாவுகிறது.

கடைசியில் நான் மரத்தில் விழுந்தது தான் மிச்சம். அந்த மரம் இல்லை என்றால் நேராகப் பாதாளத்திற்குள் போய் விழுந்து… “சுக்குநூறாகப் போயிருப்பேன்”.

ஏனென்றால் அதற்குத் தகுந்த இடத்தில் வைத்துத் தான் அங்கே என்னைப் பார்க்கச் சொல்கிறார். “இந்த இடத்தில் இருந்து பாருடா…” என்று (முதலில்) சொல்கிறார் குருநாதர்.

கடைசியில் “இப்படி நடக்கும்… என்று எனக்கு என்ன தெரியும்…!” தெரியாது.

ஆனால் அதற்குத் தகுந்தாற்போல் மரமும் இருக்கின்றது. நான் காப்பாற்றப்படுகிறேன். இதெல்லாம் என் அனுபவத்தில் கண்ட உண்மைகளை உங்களிடத்தில் சொல்கிறேன்.

இப்படியெல்லாம் நாம் வளர்ந்து வந்தவர்கள் தான். மனிதனைக் கண்டால் எல்லா உயிரினங்களும் அஞ்சும். இதை அனுபபூர்வமாக அங்கே வைத்துக் காட்டுகின்றார் குருநாதர்.

ஒரு தேன் கூடு இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஒரு குச்சியை எடுத்து அதைத் தட்டுங்கள். உங்களைத் “துரத்து…துரத்து…” என்று துரத்தும்.

அல்லது குச்சி கொண்டு கூடத் தட்ட வேண்டாம். “உற்றுப் பார்த்து… அந்தத் தேனை எடுக்க வேண்டும்…” என்று உணர்வைப் பாய்ச்சினால் போதும்.

அப்பொழுதே கூட்டிலிருந்து களைந்து வெளியே வரும். எல்லாம் தலையைத் தூக்கி நம்மைப் பார்க்கும்.

“தேனை எடுக்க வந்தோம்” என்ற நிலையில் வந்து நம்மைக் கொட்டும். ஏனென்றால்
1.அது உணர்வால் அறிந்து தன்னைக் காக்கும் நிலை
2.உணர்வால் நுகர்ந்து உணர்வால் தனக்குள் உணவாக எடுத்து வாழும் சக்தி பெற்றது.
3.அது நுகர்ந்த உணர்வே அதற்கு அறிவாகின்றது.
4.அதுவே அதைக் காக்கின்றது. அதுவே அதற்குச் செயலாகின்றது.
5,இது தெளிவாக்கப்பட்ட உண்மைகள்.

இது போலத் தான் பல கோடிச் சரீரங்களில் நுகர்ந்து வந்த உணர்வுகள் மனிதனான பின் புலியைக் கண்டு நான் அஞ்சினேன்.

அந்த அஞ்சிடும் உணர்வுகள் எனக்குள் பதிவான பிற்பாடு… ஏதாவது வந்தால்… சப்தம் கேட்டால்…. அந்தப் “புலியின் நினைவே” எனக்கு வருகிறது.

திடீர் என்று உடும்பைப் பார்த்தவுடனே பயந்தேன். ஆனால் புலி தாவிய போது “நம்மை தாக்கிடுமோ…?” என்ற வேகமான உணர்வுகள் பதிவான பின் இரவு படுத்தாலும் பயம் தான் எனக்கு வருகிறது.

குருநாதர் என் கூடவே தான் படுத்து இருக்கிறார்கள்.

புலி வருகிறது…! புலி வருகிறது…! புலி வருகிறது…! என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.

“எங்கடா… புலி வருகிறது…?” என்று கேட்கிறார் குருநாதர்.

என்னைத் தனியாக ஒரு பக்கத்தில் படுக்கச் சொன்னார். அவர் ஒரு பக்கம் படுத்திருக்கிறார்.

“நான் புலி வருகிறது… புலி வருகிறது..!” என்று சொல்லி பயந்து எழுந்து விடுகிறேன்.

அப்பொழுது ஒரு தரம் நான் பார்த்த உணர்வுகள் நுகர்ந்து எனக்குள் கருவாகி உருவாகி விட்டது.

1.அந்தப் புலியின் உருவங்கள் அலைகளாக வரப்படும்போது
2.நினைவு வருகின்றது. புலியின் உருவத்தையே (கனவாக) பார்க்கிறேன்.

இதைக் கனவாகக் காண்கிறாய். அந்த உணர்வின் தன்மை கருவாக்கி விட்டால் இதுவே அதிகமாகப் பெருகிவிட்டால் புலி எப்படி மற்றதைக் கொன்று சாப்பிட்டதோ இந்த உணர்வின் தன்மை அதிகமாகிவிட்டால் புலியின் நினைவே உனக்குள் உருவாகிவிடும்.

1.இந்த உடலை விட்டுப் போனவுடன் நீ எங்கே போவாய்…?
2.நீ… “புலி உடலுக்குத்தான் போவாய்” என்று தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.

நுகர்ந்த உணர்வுகள் உடலுக்குள் அணுக்களாக விளைந்து உயிராத்மாவில் சேர்ந்த பின் எது வலுவோ அங்கே (அத்தகைய உடல்களுக்கு) உயிர் அழைத்துச் செல்லும் என்பதை அங்கே உணர்த்துகின்றார் குருநாதர்.

நம்மைச் சுற்றி ஆன்மாவில் இருக்கும் வட்டங்கள்

 

உதாரணமாக ஒரு வேப்பமரத்தின் கசப்பான உணர்வலைகள் அதிகரித்து விட்டால் அதனருகே ரோஜாச் செடியின் மணங்கள் சிறிதாக இருப்பினும் அதை விரட்டிக் கொண்டே போகும்.

அதே போல் ரோஜாச் செடியின் மணங்கள் அதிகரித்து விட்டால் அதனருகே வேப்பமரத்தின் கசப்பான உணர்வலைகள் சிறிதாக இருந்தால் அதை இது துரத்திக் கொண்டே போகும். ஏனென்றால் ரோஜாவின் மணம் வலு கூடிவிடுகிறது.

இதே மாதிரித் தான் ஒரு விஷச் செடியின் மணங்கள் அதிகரித்து விட்டால் அருகே ரோஜாச் செடியின் மணம் இருந்தால் அதை விரட்டிக்கொண்டு போகும்.

ரோஜாச் செடியின் என்று சத்து அதிகரித்து விட்டால் விஷச் செடியின் மணங்கள் தன்னாலே ஓடிவிடும்.

1.தாவர இனத்தின் மணங்கள் வலு கூடிக் குறையும் போது ஏற்படும் இத்தகைய இயக்கம் போல் தான்
2.மனிதருக்குள் எடுத்துக் கொண்ட அந்தந்த குணங்கள் கொண்ட உணர்வுகளின் இயக்கமும் இருக்கும்.

உதாரணமாக பகைமை ஊட்டக்கூடிய உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்திருக்கின்றது. அது நமக்குள் பதிவாகி விட்டால் அந்த உணர்வை இழுத்து இழுத்து நம் ஆன்மாவாகப் பெருக்கிக் கொண்டே இருக்கும்.

அதாவது நம் ஆன்மாவில்…
1.முதல் வட்டம்
2.இரண்டாவது வட்டம்
3.மூன்றாவது வட்டம் என்று
4.அந்தந்தக் குணத்தின் உணர்வலைகளாக வரும்.

முதல் வட்டம் நல்லதாக இருக்கின்றது. இரண்டாவது வட்டம் ஒரு வேதனை என்ற கசப்பான உணர்வாக இருக்கின்றது. மூன்றாவது வட்டம் வெறுப்பான உணர்வுகளாக இருக்கிறது.

1.அப்போது வேதனை கோபம் என்று அது தான் முன்னாடி வருகின்றது.
2.அதைக் கடந்துதான் அந்த நல்ல உணர்வு நமக்குள் வரவேண்டும்.
3.இரண்டாவது வட்டம்… மூன்றாவது வட்டத்திற்குள் இருக்கும் வேதனை வெறுப்பு அவைகளுடன் கலந்து நாம் சுவாசித்தோம் என்றால்
4.நல்லதை நம்மால் சீராக இயக்க முடிவதில்லை.

அந்த வெறுப்பும் வேதனையும் கலந்தே பேசத் தொடங்குவோம். யாரிடம் பேசினாலும் என்னத்தைச் சொல்லி… யாருக்கு நல்லதைச் செய்து… என்ன பலன்…? என்ற இந்த உணர்வு முன்னாடி வரும்.

காரணம் நமக்குள் நல்ல குணங்கள் இருந்தாலும்… உள்ளே பதிந்திருந்தாலும்… நம் ஆன்மாவிலிருந்து இழுத்துச் சுவாசிக்கும் போது இடையில் இருக்கும் உணர்வுகளுடன் கலந்து வந்துவிடுகிறது.

1.நம் ஆன்மாவில் இருக்கும் உணர்வலைகளில் ஒரு அடி வித்தியாசத்தில் இபபடி வந்து கொண்டே இருக்கும்.
2.இந்த உணர்வுகள் வரப்படும் பொழுது வேதனையும் கோபம் தான் அதிகமாக வரும்.
3.எவ்வளவு நல்ல குணங்கள் இருந்தாலும் அவைகளைக் கடந்துதான் வர முடியும்.
4.அதைக் கடந்து வரும் பொழுது அதுதான் இயக்குகின்றது.

சூரியன் பல விஷத்தன்மையுள்ள உணர்வுகளை எடுக்கின்றது. அதையெல்லாம் தன் முகப்பிலே மோதி ஒளியாக மாறுகின்றது… காந்தப் புலனாக மாற்றுகின்றது.

சூரியன் அல்ட்ரா வயலட் என்ற நஞ்சைப் பிரித்து விடுகின்றது. ஆனாலும் சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்ப காந்தங்கள் அந்த அல்ட்ரா வயலட் என்ற நஞ்சுக்குள் புகுந்து தான் வெளியிலே வருகின்றது.

அந்த உணர்வின் சத்து எதுவோ எந்த மணத்தை இது தாங்கியதோ எதனுடன் தாங்குகிரதோ அந்த உணர்வின் குணம் கொண்டு தான் அதை இயக்கும்.

இதைப் போல தான் நாம் உயர்ந்த குணங்கள் கொண்டு உள்ளுக்குள் இருந்தாலும் வேதனை வெறுப்பு கோபம் என்ற இந்த குணங்களை எடுத்தால் இது முன்னாடி வந்து விடுகின்றது.

அடுத்து நாம் நல்லதை எண்ணி வந்தாலும் ஆன்மாவில் பட்டு அதனுடன் சேர்த்து அந்த தான் வரும். இது உள்ளே நுழைந்து நமக்குள் எண்ணங்களாக வருவதற்கு முன்னாடி நல்ல குணங்கள் கார குணமாகவே வரும்.

அந்த மாதிரி நேரத்தில் யாராவது நல்லவர்கள் வரட்டும். கொஞ்சம் இனிமையாக அவர் சொன்னால் போதும்.
1.இன்றைக்கு இவர் நல்லது செய்ய வந்து விட்டாராக்கும்…!
2.எந்த எண்ணத்துடன் வந்திருப்பாரோ… யாருக்குத் தெரியும்…? என்ற அந்தக் குறையான எண்ணமே வரும்.

அதே போல் பிரசாதம் கொடுக்கும் இடங்களில் பார்க்கலாம். கொஞ்சம் வெறுப்பாக இருந்தால்… டக்கென்று கையிலே இடித்துத் தான் கொடுக்க வைக்கும். இந்த உணர்வுகளைப் பார்க்கலாம்.

ஒரு பொருளைக் கொடுக்கும் பொழுதே
1.இந்தா…! என்று அழுத்தமாகச் சொல்ல வரும். கொடுக்கும் பொழுதே பார்க்கலாம்.
2.அந்த உணர்வுகள் எப்படி… அது என்ன எல்லாம் செய்கிறது…? என்று…!
3.நல்ல குணம் நமக்குள் இருந்தாலும் மற்ற உணர்வுடன் சேர்ந்து நம் உடலையே இப்படி இயக்கிக் காட்டும்.

அனுபவத்தில் பார்க்கலாம்.

இதை எல்லாம் நிறுத்துவதற்குத் தான் “சதுர்த்தி…” என்று வைத்தார்கள். தீமைகளை நாம் நிறுத்த வேண்டும்.

யார் மீதெல்லாம் நாம் வெறுப்பைப் பதிவு செய்து வைத்திருந்தோமோ அவர்களுக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்… நாங்கள் அனைவரும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்று நாம் வலுவாகத் தியானிக்க வேண்டும்.

1.அப்போது அந்த வெறுப்பான அணுக்களுக்கு நாம் சாப்பாடு கொடுப்பதில்லை.
2.வெறுப்பான எண்ணங்களை நீக்கி விடுகிறோம்.
3.எல்லோரும் ஒன்று சேர வேண்டும் என்ற எண்ணத்தைக் கொடுக்கின்றோம்.

நாம் எண்ணிய இந்த உயர்ந்த உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் பரவச் செய்கின்றது. இந்தக் காற்று மண்டலத்தில்
1.நமக்கு முன்பு இருக்கும் தீமைகளை விரட்டிச் செல்கிறது.
2.நம் ஆன்மாவும் தூய்மை அடைகிறது… பரமாத்மாவும் தூய்மை அடைகிறது.

தெய்வீக சக்தியை வளர்த்து அதன் துணை கொண்டே இந்த உடலை இயக்க வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

பூமியின் ஈர்ப்புக்குள் சரீர வாழ்க்கை உணர்வின் எண்ணத்திற்கு உட்பட்ட ஒரு உயிரணு அதன் வளர்ச்சியில் “வித்தாக… முற்றிய தன்மை” எத்தருணத்தில் அதற்கு ஏற்படுகின்றது…?

மனித உடல் பெற்ற பின்… ஆண் பெண் அமில ஜீவனின் கூட்டுடன் வளர்ச்சி கொள்ளும் அணு வளர்ப்பின் வலு நிலையானது கர்ப்பக் காலத்தில் தாயின் உதிரத்தில் சிசுவாக உருப் பெறுகின்றது.

பிறந்த பின்… உண்டு… உறங்கி… சுவாசித்து… மனித ஓட்ட நடைமுறை யாவையும் வளர்ச்சி கொண்டு பார்த்து… கேட்டு… சுவைத்து… வளரும் அந்தந்தக் கால வளர்ச்சி முற்றிய முதிர்வுக்குகந்த தவழ்ந்து… நடந்து… ஓடி.. பேசி… வளர்ச்சியுற்றுத் தன் அறிவின் ஞானத்தை உயர்த்திக் கொள்கின்றது.

அதே சமயத்தில் உடலின் உருவக வளர்ச்சியும்… உணர்வின் எண்ண அணு வளர்ப்பினால் எடுக்கவல்ல… வலுவின் முற்றிய தன்மையின்… ஆண் பெண் இரு பாலரின் எண்ணத்தின் வலு நிலைக்குகந்த உணர்வின் எண்ணத்தின் சமைப்பு நிலையில் “மாற்று வளர்ச்சி நிலையும்” பெறுகின்றது.

மாற்று நிலையின் காலம் என்பது… பருவ கால வளர்ச்சியே ஆகும்.

1.மனித இனம்.. வளர்ச்சியின் நிலையை அடையும்
2.அந்தப் பருவ காலங்களில் எடுக்கும்
3.உணர்வின் எண்ண குண உந்தலின் அணு வளர்ப்பு அமிலச் சேர்க்கையால்
4.மனித வாழ்க்கையின் ஆயுட்காலம் அமைந்து
5.அதுவே மனிதப் பிறப்பின் “பிறப்புப் பலன் தரவல்ல” காலமாகின்றது.

பிறப்பின் பலன் தரவல்ல காலம் என்பது உடலில் அணு வளர்ச்சியின் வலுக்கூடிய நிலையில்… பிறப்பின் பிறப்பு நிலையை வளர்க்கவல்ல அமிலக் கூறுகள் வளர்ச்சியுற்ற நிலையில்… ஜீவ சக்தியை ஜீவிக்கச் செய்யும் அந்த வளர்ச்சிப் பருவம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் “பதினான்கிலிருந்து பதினெட்டு வயதிற்குள் தான்…!”

இரு சாராரின் ஞானத்தை எடுத்துச் செயல்படும் காலமும் அதே காலம் தான்…! அந்த வயதில் மனித உணர்வின் எண்ண வேட்கை (ஆசை) செலுத்தும் நிலைக்கொப்ப
1.உடலின் வலுத் தன்மையும்
2.ஆத்மாவின் வலுத் தன்மையும் கூடப் பெறும் தருணத்தில்
3.உணர்வின் எண்ணம் கொண்டு செயலாக்கும் ஆத்மாவின் பதிவு நிலை வலுத் தன்மை எல்லாமே அமையப் பெறுகின்றன.

அணுவின்… அணு வளர்ப்பின் வளர் தொடர் அணு சமைப்பு… சரீர மலம் தான் இந்த உடல் பிம்பக்கூறு. இக்கூறின் வலுவை எடுத்துக் கொள்வது ஆத்மா தான்.

1.ஆத்மாவின் உண்மை வலுவைக் கூட்டிக் கொள்ள
2.உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் பதிவு நிலை தான் “மனித வாழ்க்கை…!”

ஆகவே வாழ்க்கைக்கடுத்த மனிதச் சக்தியின் உயர் தெய்வ சக்தியான ஆத்மாவைக் கொண்டு உடலை இயக்கும் வழித் தொடர் ஞான அலையை வளர்க்கும் பக்குவத்தை ஒவ்வொருவரும் பெற வேண்டும்.

ஆனால் ஆரம்ப கால உணர்வின் உந்தலால் உட்படும் உயிரணு… தன் வளர்ச்சியின் வளர் நிலையின் சரீர எண்ண ஓட்ட உணர்வுப் பிடியில் வாழும் வாழ்க்கை கதியின் பிடிப்பிலேயே வாழ்ந்தால்… பாடத்தில் இது நாள் வரை உணர்த்திய படி…
1.உணர்வின் எண்ன வேட்கை (ஆசை உணர்வுகள்) சமைப்பில் எத்தனை காலங்கள் வாழ்ந்தாலும்
2.கண் காது மூக்கு வாய் இவற்றின் செயல் உணர்வு அணு வளர்ச்சி வார்ப்பாகச்
3.இந்தச் சரீர இயந்திர ஓட்டத்தின் இச்சையின் எண்ண ஓட்டத்திற்கு அடிமைப்பட்டே தான் வாழ்ந்திட முடியும்.

அதை மாற்றி அமைக்கும் நிலையாக… வாழ்க்கையின் வழித் தொடரிலேயே “சமமாக ஏற்கும் எண்ண உணர்வுடன்… மேல் நோக்கிய சுவாச ஈர்ப்பால்… உயர் ஞானிகளின் அலை ஈர்ப்பில் எண்ணத்தைச் செலுத்தி…” அதைப் பெறும் பழக்கம் வர வேண்டும்.

இந்தப் பூமி சமைக்கும் அலையுடன் ஒன்றி வாழும் இந்தப் பூமி வளர்த்த வளர்ப்பான நாம் வளர்ப்புடன் ஒன்றிய நிலையிலிருந்து காந்த மின் அலை ஒளித் தன்மையை ஆத்மாவின் வலுவாக வலுப்படுத்தும் வளர்ச்சி ஞானத்தைக் கொண்டிடல் வேண்டும்.

ஆகவே…
1.சரீர உணர்வு எண்ணத்தில் வாழும் வழி முறையிலிருந்து
2.ஆத்மாவின் இயக்க வலுவாகச் இச்சரீரத்தை இயக்கவல்ல வாழ்க்கை நிலைக்கு
3.வாழ்க்கை நிலை மட்டுமல்ல…! வளர்ச்சியின் வளர்ப்பான ஆதிசக்தியின் நிலைக்கே உயரலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

ஒரு வேதனைப்படுவோரின் உணர்வை நாம் நுகர்ந்தால் எவை இயக்குகின்றது…?

உற்றுப் பார்த்த உணர்வுகள் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் வேதனை உணர்ச்சிகளைத் தூண்டி நமது உடலையும் வலு இழக்கச் செய்கின்றது.

ஆகவே நாம் நுகர்ந்த உணர்வே நம்மை இயக்குகின்றது. அதன் வழி அன்றைய வாழ்க்கையும் அமைகின்றது.

ஒரு குடம் பாலில் நீங்கள் பாதாமைப் போட்டாலும் அதைக் காட்டிலும் பல உயர்ந்த சரக்குகளைப் போட்டாலும்
1,ஒரு துளி விஷம் பட்டால் பால் அனைத்தும் நஞ்சாகி விடுகின்றது.
2.அதில் ஆயிரம் குடம் பாலை விட்டால் நஞ்சின் தன்மை சிறுத்துப் பாலின் தன்மை வீரியத்தன்மை அடைகின்றது.

ஒரு சமயம் 100 தரம் நாம் நல்லதைச் செய்தாலும் ஒரு நொடி அந்த வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால் அந்த வேதனை தான் நம்மை இயக்குகின்றது.

100 மணி நேரம் நாம் நல்லதை நுகர்ந்தாலும் அந்த 100 மணி நேரமும் நல்லவைகளை உருவாக்குகின்றது நமது உயிர்.
1.ஆனால் ஒரு நொடி வேதனை என்ற உணர்வை நுகரப்படும்போது
2.அது நம் நல்ல குணங்கள் அனைத்தையும் செயலற்றதாக மாற்றி விடுகின்றது.

இது இயற்கையின் நியதிகள். இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பண்புடன் அன்புடன் பரிவுடன் நாம் நடந்தாலும் சந்தர்ப்பத்தால் நாம் நுகர நேரும் அந்தத் தீமையான உணர்வுகளை அகற்றியே ஆக வேண்டும்.

அன்றாடம் உடலையும் உடைமைகளையும் நாம் எப்படித்தான் தூய்மைபடுத்தினாலும் அழுக்கு படியத்தான் செய்யும். அதைத் தூய்மையாக்கவில்லை என்றால் அழுக்குகள் கூடிவிடும். அதற்குத்தக்க நமக்குக் கெடுதலும் ஏற்படும்.

அதைப் போன்று தான் நாம் அவ்வப்போது நம் மனதைத் தூய்மைப்படுத்த வேண்டும். மனதைத் தூய்மை செய்தால்
1.நம் உடலிலுள்ள அணுத் தன்மைகள் தூய்மை ஆகும்.
2.நம் உணர்வுகள் தூய்மை ஆகும்.
3.நம்முடைய எண்ணங்கள் தூய்மை ஆகும்.

இப்படி அடிக்கடி நாம் தூய்மைப்படுத்தும் உணர்வினை நுகர்தல் வேண்டும்.

அதற்காகத்தான் உங்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அடிக்கடி சொல்லி அதை வலுவாக உங்களுக்குள் நினைவு படுத்திக் கொண்டே வருகின்றோம்.

கடல் நீரிலே இருக்கும் தீமைகளைக் கரைக்கும் சக்தி பற்றித் தெரிந்திருக்கின்றோமா…!

 

ஒருவரைப் பார்க்கப்படும் பொழுது வெறுப்பின் தன்மையை நாம் அதிகமாக வளர்த்து விட்டால் அது நம் உடலுக்குள் வந்து எத்தனையோ கெடுதலான வேலைகளைச் செய்யும்.

அதை எல்லாம் முழுவதுமாக நான் (ஞானகுரு) உணர்வதற்காக வேண்டி மூன்று இலட்சம் பேருடைய (அந்தக் குடும்பங்கள்) உணர்வுகளை ஏககாலத்தில் ஒவ்வொன்றாகப் படிப்படியாகக் குருநாதர் காண்பித்தார்.

அவர்களையும்… அந்தக் குடும்பத்தின் உணர்வுகளை எல்லாம் நுகர்ந்தபின் அங்கிருக்கும் கெட்டது எல்லாம் உன்னை என்ன செய்கின்றது… உன் உடலில் என்ன செய்கிறது என்று பார்…! என்று சொன்னார் குருநாதர்.

அந்தக் குடும்பங்களில் நடந்ததை எல்லாம் நீ ஜோதிடம் பார்ப்பது போல் பார்த்து விடாதே… ஆனால் நீ தெரிந்து கொள்கின்றாய்.

யாராவது வந்து கேட்டால்… உன்னிடம் கஷ்டத்தைச் சொன்னால் நீ கேட்பாய். கேட்ட பின்…
1.ஐயா…! நீங்கள் இன்ன மாதிரியான காரணத்தினால் கஷ்டப்படுகிறீர்கள்
2.உங்கள் வீட்டில் உள்ள சண்டையெல்லாம் போய்விடும் என்று கண்டறிந்து நீ சொன்னால்
3.கடவுளே நீ தான்…! என்று உன்னைப் போற்றுவார்கள்
4.ஆனால் அவன் கஷ்டம் எல்லாம் உன்னிடம் வந்துவிடும் “ஜாக்கிரதை…!” என்று சொல்லி விட்டார்.

காரணம் எல்லாவற்றையும் நீ தெளிவாகத் தெரிந்து கொள்கின்றாய் தெரிந்து கொண்ட பின் “உனக்குக் கஷ்டம் இப்படி இருக்கின்றது… தொழில் நஷ்டமாகி விட்டது…!” என்று நீ அவரிடம் சொல்வாய்.

அந்தக் கஷ்டத்தை எல்லாம் நீ வாங்கிய பின் தான் “நல்லதாகும்” என்று நீ சொல்ல முடியும். ஆக… கஷ்டத்தை நுகர்ந்து அவர்களுக்கு மீண்டும் கஷ்டத்தை தான் கொடுக்க முடியுமே தவிர நல்லதைக் கொடுக்க முடியாது.

ஆனால் உன்னைக் கடவுளாக அவன் போற்றுவான். இவரிடம் போனேன்… என் குடும்பத்தைப் பற்றி எல்லாமே சொன்னார்… இவர் கடவுள்…! என்பான்.

1.ஆனால் அவருடைய நோய் எல்லாம் உன்னிடம் வந்து வடும்
2.அவனுடைய இந்த கஷ்டமெல்லாம் உன்னிடம் வந்துவிடும் “ஜாக்கிரதை…!” என்று சொல்லிவிட்டார் குருநாதர்.

அதையும் சொல்வார்… இதையும் சொல்வார்… நான் தெரிந்து கொள்ளவும் செய்வேன் (ஞானகுரு).

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால்
1.அவர்களுடைய அந்தக் கஷ்டமான உணர்வுகள் உனக்குள் வராதபடி நீ நிறுத்த வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
4.எங்கள் ஜீவாத்மாவிலே அந்த அருள் சக்திகள் பெற வேண்டும் என்று இதை முதலில் நீ எடுக்க வேண்டும்.

எடுத்துக் கொண்ட பின் அவரிடம் என்ன சொல்ல வேண்டும்…?

மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவீர்கள்… உங்கள் கஷ்டம் எல்லாம் நீங்கும்…! என்று வாக்கினைப் பதிவு செய்து அந்தக் கஷ்டத்தை நிறுத்த “அவரைப் பழக்கச் செய்ய வேண்டும்…”

கஷ்டம்…! என்று அவர் சொன்னால் ஐயோ… உனக்கு இப்படி ஆகிவிட்டதா…? என்று கேட்டு அதை இழுத்துக் கொள்கிறோம்.

அவருக்குள் நடக்கும் விஷயங்களைத் தெரிந்து கொண்ட பின் “உனக்கு நல்லதாகும்…” என்று நியாயத்தைச் சொல்வாய். ஆனால் அவர்கள் கஷ்டம் எல்லாம் இங்கே வந்துவிடும்.

ரொம்பப் பேர் என்ன செய்வார்கள்…?
1.இரக்க மனமாகப் போய் எல்லோருக்கும் நியாயத்தைச் சொல்வார்கள்
2.ஆனால் தனக்குள் பிறருடைய அந்தக் கஷ்டமான உணர்வுகள் தனக்குள் உட்புகுவதை நிறுத்தத் தெரியாமல் இருப்பார்கள்.

அதை நிறுத்த வேண்டும் என்பது தான் சதுர்த்தி…!

ஏகக்காலத்தில் எல்லோரும் சேர்ந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

ஒருவருக்கொருவர் இருக்கும் பகைமை நீங்க வேண்டும் என்று எண்ணிய பின் இந்த அலைகள் போனபின் என்ன செய்கிறது…?
1.மனிதனான நானும் எனக்குள் அந்தப் பிடிப்பை அறுத்து விடுகிறேன்.
2.என் மீது பகைமை கொண்டிருப்பவர்களும் என் மீது வெறுப்பில்லாதபடி அதை அறுத்து விடுகின்றார்கள்.

அப்போது அந்தத் தீமை செய்யும் அலைகள் அனாதையாகப் படர்ந்து கொண்டிருக்கின்றது.

ஆனால் முதலிலே ஒருவருக்கொருவர் சண்டை போட்டதெல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்திருக்கின்றது. இருந்தாலும்
1.நாம் இப்போது எண்ணும் இந்த வலுவான உணர்வுகள் என்ன செய்கிறது…?
2.அதைத் துரத்திக் கொண்டு போகிறது.

துரத்திக் கொண்டு சென்றாலும் செடிகள் மரங்கள் இருக்கும் பக்கம் அவைகள் போகாது. நேராகக் கடல் பக்கம் தான் போகும்.

ஏனென்றால் கடல் பக்கம் யாரும் அதிகம் (நடமாட்டம்) போவதில்லை. அங்கே அலைகள் தொடர்ந்து வீசிக் கொண்டிருக்கும்.
1.கடல் அலைகள் மாறி மாறி வரும் பொழுது
2.நாம் ஈர்க்க மறுத்த தீய வினைகளை எல்லாம் இழுத்து இழுத்து உள்ளே கொண்டு போய் அமிழ்த்திவிடும்
3.அந்த உப்பு நீர் (ஹைட்ரஜன்) அவைகளைக் கரைத்துவிடும்.

இது எல்லாம் அக்கால மெய் ஞானிகள் கண்டுணர்ந்து நமக்கு வழி காட்டிய பேருண்மைகள். ஞானிகள் காட்டிய வழிப்படி நாம் நடக்க வேண்டும்.

கண் வழி கவர்வதையும் செவி வழி கேட்பதையும் நம்மை அப்படியே இயக்கும்படி விட்டுவிடலாமா…? – ஈஸ்வரபட்டர்

 

ஒவ்வொரு நொடிப்பொழுதும்
1.ஒளி… ஒலி… மணம்… இவற்றின் மோதலின் உணர்வு கொண்ட…
2.எண்ண ஓட்டச் சரீர வாழ்க்கை வழி முறையில் தான் நாம் வாழுகின்றோம்.

இத்தகைய தொடர் நிலைக்கொப்ப வாழும் சுழற்சித் தொடர்பில் ஒன்றி அந்தந்த உணர்வைத் தான் வளர்த்துக் கொண்டுள்ளோம்.

இதனின் பிடிப்புச் சுழலில் சிக்குண்டு அந்த வழி நிலையிலேயே வாழுகின்றோமே அன்றி அதை மாற்றும் நிலையை நாம் மேற்கொள்வதில்லை.

ஒன்றைப் பார்த்தவுடன் ஒளியின் விழி நிலையின் உணர்வு நிலை செயல் கொள்கிறது. ஒளி கொண்டு காணக்கூடிய விழி நிலையின் ஒளி உணர்வு ஒவ்வொரு நொடிப் பொழுதும் எண்ணத்தின் உணர்வுடன் மோதிய அலை அணுக்களையே வளர்த்துக் கொள்கின்றது.

ஆனால் பார்வையில் எதிர்ப்படும் செயலில் ஏற்படும் நிலைக்கொப்ப “மாற்றி அமைக்க வேண்டும்…” என்ற நிலை வருவதில்லை.

இப்படி… சாதாரண நடைமுறையில் பழக்கப்பட்ட விழி நிலையில் காணும் ஒளி அலை உணர்வு எண்ண வேட்கைக்கொப்ப அணு வளர்க்கும் வளர் தன்மை மிக அழுத்தமான இயக்கம் வந்தால் மாற்றமாகின்றது. எப்படி…?

அதிர்வு…
ஆனந்தம்…
இனிமை…
கடுமை…
இதைப் போன்ற குணம் கொண்ட ஒளியின் விழி ஊடுருவல் செயல்படும் தன்மையால் அதற்குகந்த உணர்வின் எண்ண நிலைக்கொப்ப அணுத்தன்மை இச்சரீரத்தின் (இயந்திர) செயல் மாறிச் செயல்படுகின்றது.

அதாவது ஒளியினால் காணும் விழி நிலையின் உணர்வுக்கொப்ப பல பல ஒலிகளை வெளிப்படுத்துகின்றோம்..

1.அதிர்வு நிலை ஏற்படத்தக்க காட்சிகளைக் காணும் பொழுது
2.நம்மை அறியாமலேயே காணும் காட்சிக்கொப்ப
3.ஆ… ஓ… இச்.. இச்…! என்ற ஒலிகளை எழுப்புகின்றோம்.
4.இனிமை கலந்த காட்சி நிலையைக் காணும் பொழுது அதற்குகந்த ஆனந்த ஒலியை
5.நம்மை அறியாமலே ஆஹா… ஓஹோ…! என்று இனிமையுடன் கூடிய ஒலியைச் சிரிப்பலையுடன் வெளிப்படுத்துகின்றோம்.

இதன் தொடரிலேயே ஒலி அலையை ஈர்க்கவல்ல… செவி ஈர்ப்பு.. ஒலி கேட்கும் மோதலின் ஈர்ப்புக்கொப்ப… எண்ணத்தின் உணர்வு செயல்படுகின்றது.

ஆக… தான் கேட்கும் ஒலி ஈர்ப்புக்கொப்ப உணர்வின் எண்ணச் சுவாசத்தால் உடலின் அணு வளர்ப்பு நிலையும் ஏற்றத் தாழ்வு பெறுகின்றது.

இதன் தொடர்பைப் போன்றே…
1.சுவாசத்தில் மோதும் மணமும்
2.சுவையில் உண்ணும் உணவும்
3.மனித உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் அந்தந்த குண நிலைக்கொப்ப
4.அமில உணர்வின்… அணு வளர்ப்பின்… இந்திரிய ஆவி நிலையின் உதிர ஓட்டமாக சரீரத்தின் செயல் நடைபெறுகிறது.

இத்தகைய வாழ்க்கைச் செயலில் வாழும் நாம் இவ்வாழ்க்கையின் ஜீவாதார குறுகிய ஆண்டுகளில் பிம்ப உடலில் சமைக்கும் அணு வளர்ப்பின் ஆவி நிலையின்… “ஆத்ம உயிரின் உண்மை நிலை” புரியாமலேயே வாழ்கின்றோம்.

ஏனென்றால் இந்த மனிதத் திட பிம்பத்தின் இயந்திர ஓட்டச் செயல் சமைப்பின் வலுவைக் கொண்டு தான் மனிதனின் ஆரோக்கிய நிலையும்… ஞானத்தின் வழியில் செல்லும் குணச் செயல் முறையும்… அமைகின்றன.

உணர்வின் இந்திரிய ஓட்டத்திற்கொப்ப ஒருவரின் செயல் திறன் ஞானம் வெளிப்படுகின்றது. அந்த ஞானத்திற்கொப்பத்தான் வாழ்க்கையின் மேம்பாட்டு நிலையும் செயல் கொள்கின்றது.

இத்தொடரின் வழி நிலை வாழ்க்கையில் எப்படி ஒன்றியுள்ளதோ அத்தொடரைக் காட்டிலும் மிகத் துரித நிலையில் உயர்வு நிலைக்குச் செல்லக்கூடிய ஞான மார்க்கம்… சித்து மார்க்கம்…! இவ்வழியில் எண்ணத்தின் உணர்வைச் செலுத்திடல் வேண்டும்.

1.விழி ஒளி
2.செவி ஒலி
3.சுவாச மணம்
4.வாயின் சுவை
5.இவ் அலை உணர்வு எண்ணத்தில்
6.உயர்வு வழித் தொடர் நிலையில் செல்லும் செயல் முறைக்கு
7.இவற்றின் செயலால் உந்தப்படும் வேட்கையின் வழி முறையை வழியமைக்கும்
8.ஞான ஒளியை நாம் அறிதல் வேண்டுமப்பா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

இன்று நாம் பத்திரிகை வாயிலாகப் படிக்கின்றோம். பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. அந்த இடத்திலேயே இத்தனை பேர் இறந்தனர். பலர் அவஸ்தைப்பட்டனர் என்று பார்க்கின்றோம்.

இன்றைய விஞ்ஞான உலகில் இந்தப் பூமிக்குள் அது எங்கே சம்பவங்கள் நடந்தாலும் அடுத்த “பதினைந்து நிமிடத்திற்குள்” நாம் இங்கே அதைக் கண்டுணர முடிகின்றது.

இத்தகைய துரித நிலைகள் கொண்டு விஞ்ஞான அறிவால் நாம் கண்டுணர்கின்றோம். உலகில் எங்கே நடந்தாலும் உடனடியாக டி.வி. மூலமாகவோ அல்லது ரேடியோ மூலமாகவோ நாம் இதை அறிந்து கொள்ள முடிகின்றது.

அடுத்து பத்திரிகை வாயிலாகவும் அறிந்து கொள்ள முடிகின்றது.

நமக்கு அனைத்தையும் அறிந்து கொள்ளக்கூடிய திறன் இருந்தாலும் ஆக்ஸிடென்ட் ஆனதை நாம் கூர்ந்து படிக்கும் போது நமக்குள் அது பதிவாகிவிடுகின்றது.

டி.வி.க்களில் ஒளி பரப்புச் செய்வதை அதே உணர்வின் இயக்கமாக நாம் வீட்டிலே டி.வி.யை இயக்கப்படும் போது எங்கேயோ ஒளிபரப்பு செய்யக் கூடியதை நாம் இங்கு வீட்டிலே இயந்திரம் மூலமாகப் பார்க்கின்றோம்.

இதே போல் எங்கேயோ நடக்கும் சம்பவங்களைப் படமாக்கி விஞ்ஞான அறிவு கொண்டு பத்திரிகையில் அவர்கள் வெளியிடுகின்றார்கள்.

அங்கே நடந்த சம்பவங்களயும் அசம்பாவிதங்களையும் அதனால் வேதனைப்பட்ட செயல்களை விரிவாக்கி அது எழுத்து வடிவில் கொடுக்கின்றார்கள்.

எழுத்து வடிவில் எழுதியதைக் கூர்ந்து கவனித்து
1.அங்கே நடக்கும் அந்த விஷயங்களை ஆர்வமாகப் படிக்கின்றோம்.
2.கூர்ந்து கவனித்து அந்தப் படத்தையும் பார்க்கின்றோம்
3.அதற்குக் கீழ்… “நடந்த சம்பவங்களையும்” கூர்ந்து படிக்கின்றோம்.

எந்த மனிதன் அங்கே அடிபட்டு வேதனைப்பட்டு வேதனையான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றானோ அந்த உணர்வுகள் அனைத்தும் சூரியன் காந்த சக்தியால் கவரப்பட்டு அலை அலைகளாக நம் பூமியில் படர்ந்து கொண்டிருக்கின்றது.

இன்று ஒரு மனிதன் பேசியதை அல்லது படம் எடுத்ததை அதைத் தனக்குள் கவர்ந்து அது மீண்டும் படச் சுருளாக்கி அதனை மீண்டும் ஒளி பரப்புச் செய்யப்படும் போது அந்தப் பேழைகள் (PLAYER மூலம்) ஒளி அலைகளை வெளிப்படுத்தும் போது அதையும் இதே சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலை அலைகளாக வெளிப்படுத்துகின்றது.

எதனின் துணை கொண்டு ஒளி பரப்புச் செய்தனரோ அதே துணை கொண்டு டி.வி.யோ ரேடியோவோ இயக்கப்படும் போது இந்தக் காற்றிலே அலை அலைகளாக வருவதைக் கவர்ந்து அந்த உணர்வின் நிலைகளைப் படமாகவும் பார்க்கின்றோம். ஒலி நாதங்களாகவும் நாம் கேட்கின்றோம்.

இதைப்போல தான்
1.இங்கே ஒரு மனிதனுக்கு மனிதன் நாம் அதைக் கூர்ந்து கவனிக்கும் போது
2.அந்த மனிதன் வேதனைப்பட்ட உணர்ச்சிகள் நமக்குள்ளும் வந்துவிடுகின்றது.

இயற்கையின் நியதிகள் இது.

மனிதன் வேதனைப்பட்டு வெளிப்படுத்திய உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி அலைகளாகப் பரப்பும் போது
1.பத்திரிக்கை வாயிலாகக் கூர்ந்து படிப்போம் என்றால்
2.எப்படி டி.வி.யைச் சுவிட்சைப் போட்டு எந்த ஸ்டேஷன் என்று எண்ணுகின்றமோ
3.அந்த ஸ்டேஷனிலிருந்து வரும் ஒலி அலைகளை கவர்ந்து படமாகக் காட்டுவது போல
4.நமது உணர்வுக்குள் ஆழமாகப் பதிந்தவுடனே அதனின் நினைவலைகளாக மாறுகின்றது.

ஆனாலும் அவர்கள் பட்ட இந்த உணர்வுகள் நம் நினைவலைகளாக மாற்றினாலும் அவர்கள் வேதனைப்பட்ட உணர்வுகளும் நமக்குள் அது பதிவாகி விடுகின்றது.

நாம் உலக நடப்புகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றோம்.

இருந்தாலும் அடிபட்டவர்கள் வாழ்க்கை இருண்ட உலகமாக உடலை இழந்து… இப்படி ஆகிவிட்டோமே…! என்று மறைக்கும் உணர்வாக வெளிப்படுவதை நாம் கூர்ந்து கவனித்தவுடனே
1.நம் அறிந்து கொள்ளும் உணர்வுடன் அது கலந்து
2.நாம் அறிந்திடும் நிலையைத் தடைபடுத்தும் நிலை வந்து விடுகின்றது.

இப்படி ஆக்ஸிடென்ட் ஆனதை நாம் அதிகமாகக் கவர்ந்து வைத்திருந்தோம் என்றால் நாம் பஸ்ஸிலே செல்லப்படும் போது இதே உணர்வுகளின் வேகங்கள் நமக்குள் வருவது உண்டு.

உதாரணமாக பஸ் வேகமாகப் போகும் போது நாம் ஏற்கனவே பத்திரிக்கையில் படித்துப் பதிவான உணர்வுகள் அந்த நினைவலைகள் மீண்டும் நமக்குள் உந்தப்பட்டு… “ஆக்ஸிடென்ட் ஆகி விடுமோ…!” என்ற உணர்வைத் தூண்டும்.

அந்த உணர்வைத் தூண்டப்படும் போது வேகமாகப் பஸ் போகிறதே என்று எண்ணினாலும் அடுத்து பஸ்ஸை எங்கேயாவது நிறுத்தினால் பாதுகாப்பாக ஒதுங்கி உட்காரலாம் என்று வேறு இடத்தில் உட்காருவார்கள்.

எந்த பஸ்ஸின் ஆக்ஸிடென்ட்டை இவர்கள் உணர்வாகப் பதிவு செய்தனரோ அதே உணர்வின் அலைகள் நினைவாகி
1.யார் ஓட்டுநரோ அவர்பால் இந்த எண்ணங்கள் செல்லும்.
2.நம் எண்ணங்கள் அவர் மீது மோதும்

அவ்வாறு எண்ணங்களைச் செலுத்தப்படும் போது என்ன நடக்கும் என்று நினைக்கின்றீர்கள்…?

விமானங்களை வெகு தொலைவில் பறந்து கொண்டிருப்பதை அது ரிமோட் கண்ட்ரோல் (RADAR மூலம்) கொண்டு சீர் படுத்தி இயக்குகின்றனர்.

இதைப் போல பயந்த உணர்வும் ஆக்ஸிடென்ட் ஆன நிலைகளையும் படித்துணர்ந்த நாம் அந்தப் பஸ்ஸிலே செல்லும்போது பய உணர்வுடன் எண்ணினால் ஓட்டுநர் பால் நம்முடைய எண்ணம் ரிமோட் கண்ட்ரோல் போல இயக்கி விபத்துக்கு அழைத்துச் செல்லும்.

1.பாதுகாப்பான இடத்தில் ஓரத்தில் கடைசியில் உட்கார்ந்திருப்போம் என்று எண்ணுவோம்.
2.அல்லது ஏதாவது நடு மையத்தில் உட்கார்ந்தாலும் கூட அந்தப் பய உணர்வு கொண்டு நாம் ஓரத்தில் ஒதுங்கினாலும்
3.ஆக்ஸிடென்ட் ஆனால் இங்கிருந்து அடித்து முன்னாலே தூக்கிக் கொண்டு எறியும்.

ஏனென்றால் நாம் எடுத்துக் கொண்ட எண்ண உணர்வுகள் நம்மை அது இயக்கச் செய்யும். நாம் தவறு செய்யவில்லை.

எங்கேயோ மனிதன் ஆக்ஸிடென்ட்டில் இறந்தான், விஞ்ஞான அறிவு கொண்டு நாம் கண்டுணர்ந்தாலும் இந்த நினைவலைகள் நமக்குள் இவ்வாறு அது செயல்படுகின்றது.

நம்மை அறியாமலே அந்த விபத்தான உணர்வுகளுக்கு நமக்குள் பதிவான உணர்வுகள் அழைத்துச் செல்லுகின்றது.

இதிலிருந்து தப்பிக்க என்ன வைத்திருக்கின்றோம்…?

சாமி காப்பாற்றுமா? சாமியார் காப்பாற்றுவாரா…? ஜாதகம் காப்பாற்றுமா…? ஒன்றும் காப்பாற்றாது…!

பத்திரிகை வாயிலாகவோ அல்லது டி.வி மற்ற இன்டெர்னெட் மூலமாக அசம்பாவிதங்களக் கண்டாலோ படிக்க நேர்ந்தாலோ அடுத்த கணம் நமக்குள் அது பதிவாகாதபடி தடுத்துப் பழக வேண்டும்.

“ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும். அது எங்கள் உடலிலுள்ள இரத்தங்கள் முழுவதும் படர வேண்டும்.

எங்கள் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும் என்று உடல் முழுவதும் “சர்குலேசன்” செய்ய வேண்டும். இது தான் ஆத்ம சுத்தி.

பின் மகரிஷிகளின் அருள் சக்தி இந்த உலகம் முழுவதும் படர வேண்டும். உலக மக்கள் அனைவரும் பெறவேண்டும் ஈஸ்வரா என்று எண்ண வேண்டும்.

அடுத்து மகரிஷிகளின் அருள் சக்தியால் நாளை நடப்பதெல்லாம் இந்த உலகிற்கும் உலக மக்களுக்கும் நன்மை பயப்பனவாக இருக்க வேண்டும் என்று எண்ணி அந்த உணர்வைப் பாய்ச்சுதல் வேண்டும்.

அதே சமயத்தில் நாம் பார்த்த உணர்வுகள் நமக்குள் பயத்தையோ அல்லது அதிர்ச்சியையோ ஊட்டியது என்றால்
1.துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று
2.நம் உடலுக்குள் செலுத்திப் பழக வேண்டும்.

இவ்வாறு செய்தால் பயமுறுத்தும் உணர்வுகளுக்கு “இது அச்சுறுத்தலாக அமையும்…” அடுத்து நமக்கு அந்தப் பயம் தொடராது.

மேலும் எங்கே செல்வதாக இருந்தாலும் ஆத்ம சுத்தி செய்து விட்டு வெளியில் செல்லுங்கள்… அவசியம் இதைச் செய்ய வேண்டும்.