நம்மை உணர்ச்சிவசப்படச் (TENSION) செய்துவிட்டுச் செல்பவர்களிடமிருந்து விடுபடுங்கள்

Sage Agastiyar.jpg

நம்மை உணர்ச்சிவசப்படச் (TENSION) செய்துவிட்டுச் செல்பவர்களிடமிருந்து விடுபடுங்கள் 

இன்றைய நிலைகளில் பல அருள் ஞான உபதேசங்களை எளிதாக உங்களுக்குக் கொடுக்கின்றேன். இதை வழி நடத்துவதற்குண்டான “சிக்கல்” எனக்குத் தான் தெரியும்.

பண்பு பரிவு கொண்டு நீங்கள் உயர வேண்டும் என்று எத்தனையோ இன்னல்களைக் கண்டுணர்ந்த நான் (ஞானகுரு) ஒவ்வொரு மக்கள் மத்தியிலும் அருஞானத்தைப் பெறவேண்டும் என்று உணர்வுப் பூர்வமாக ஊட்டிகொண்டிருக்கின்றேன்.

ஆனாலும் இந்த உணர்வுகள் பதிவானவர்களுக்கும் சிலருடைய சந்தர்ப்பங்கள் அவரை அந்த உணர்வுகளை வளரவிடாது தடுக்கின்றது.

நல்லது உருப் பெறவேண்டும் என்ற உணர்வுகளைப் பாய்ச்சிய பின்னும்
1.“சிரமத்தின் எல்லை கடந்து செல்லும்போது”
2.அவரை அறியாது தவறுகள் செய்யும் நிலைக்குத் துணிவாகி
3.அவர்களை இருள் சூழ்ந்த நிலைகளுக்கு அழைத்துச் சென்றுவிடுகின்றது.

அந்த உணர்வைக் கண்டு எனது மனமும் வேதனைப்படுகின்றது. அதனால் நானும் இருள் சூழ்ந்த நிலைக்கே அழைத்துச் செல்லும் நிலையையே அது உருவாக்கி விடுன்றது.

இதைப் போன்ற நிலைகளை “அன்றே குருநாதர்.., எம்மிடம் தெளிவாகக் கூறினார்”.

நீ உருவாக்கும் நல்ல உணர்வுகளை மற்றவர்களுக்குப் பாய்ச்சும் நிலை பெற்றிருந்தாலும் தீமையின் விளைவுகள் அவரின் சிந்தனைகளைச் செயலற்றதாக மாற்றும் வேளையில்
1.நீ எதைச் செய்யப் போகின்றாய்…?
2.உன்னை நீ எவ்வாறு காத்துக் கொள்ளப் போகின்றாய்…? என்று இந்த உணர்வைத் தெளிவாகக் காட்டுகின்றார்.

“இன்று” உங்களுக்குள்ளும் இந்தத் தியான வழிகளில் நீங்கள் அமைதியும் பண்பும் கொண்டு நீங்கள் வழி நடத்தினாலும்
1.உங்களைச் சீண்டிப் பார்ப்போரும் தூண்டிப் பார்ப்போரும்
2.துன்புறுத்தி வேடிக்கை பார்ப்போரும் இன்று இதிலும் பலர் பெருகுவர்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நீங்கள் மீள்தல் வேண்டும் என்பதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் இந்த உணர்வின் சக்தியைப் பரப்பப்பட்டு அருள் உணர்வின் வலிமையை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளச் செய்கிறோம்.

குருநாதர் இத்தகையை தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வினை ஊட்டினார். அதைத்தான் உங்களுக்குள்ளும் அருள் ஒளியைப் பாய்ச்சுகின்றோம்.

உங்களையறியாது இந்த வாழ்க்கையில் வரும் நஞ்சினை வென்றிடும் வலிமை பெறவேண்டும், அருள் ஞானியின் உணர்வை நுகரும் வலிமை பெறவேண்டும் என்பதற்கே
1.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும்
2.குரு எமக்குக் காட்டிய அருள் உணர்வுகளை உபதேசிக்கின்றோம்.

உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராது தீமையின் உணர்வுகள் உருவாக்கிவிட்டால் உங்களின் நினைவாற்றல் அந்தத் தீமையிலிருந்து அகற்றி உங்களைக் காத்திடும் நிலையாக வர வேண்டும் என்று திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்துகின்றோம்.

இன்று தியானத்தின் மூலமாக நாம் பக்குவம் பெற்று அமைதி கொண்ட நிலைகளில் இருப்பினும்1.தவறு செய்வோர்கள் இதனை ஏளனப்படுத்தி2.நம்மைத் தவறுக்கே அழைத்துச் செல்வார்.

“அவர் தவறு செய்கிறார்…,” என்ற உணர்வை நமக்குள் தூண்டப்படும் பொழுது
1.அந்தத் தவறின் உணர்வுகளை நமக்குள் வளர்ப்போம்…
2.நாம் தாக்கும் நிலைகளுக்குச் செல்வோம்…
3.அதனால் நமது பண்புகள் கெட்டுவிடும்… என்பதை அவர்கள் தெளிவாக அறிந்தவர்கள்.

மேலும்.., அவர்கள் தீமையின் உணர்வின் தன்மை கொண்டு

1.நம்மை தீமை செய்யத் தூண்டச் செய்துவிட்டு
2.தவறும் செய்யும் இயக்கத்தையும் நமக்குள் உருவாக்கிவிட்டு விலகிச் சென்றுவிடுவார்கள்.

இவ்வாறு.., தியானத்தைச் சீராகக் கடைப்படிப்பவர்களைச் சில தவறான நிலைகளில் உணர்ச்சி பூர்வமாகக் கோபிக்கும் நிலைகளையும் உருவாக்கிவிடுவார்கள்.

இதைப் போன்ற கடும் தீமைகளிலிருந்து விடுபடுவதற்குத்தான் குருநாதர் அன்றே நமக்குத் தெளிவாக்கியுள்ளார்.

1.“எவ்வாறெல்லாம்” தீமைகள் நம்மை அணுகுகின்றது…?
2.தீமைகளிலிருந்து எவ்வாறு விடுபடவேண்டும்…? என்ற “மெய் உணர்வைத் தெளிவாக எடுத்துக் காட்டினார்”.

இதன் வழி கொண்டுதான் உங்களுக்குள் பரப்பிப் பதிவாக்கிய இந்த அருள் உணர்வினை உங்கள் வாழ்க்கையில் தீமைகளை அகற்றும் நிலைக்கு உங்கள் எண்ணங்களைக் கூர்மையாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலுடன் இணையச் செய்கின்றோம்.

இந்த உணர்வை உங்களுக்குள் வலிமையாக்கிக் கொள்ளுங்கள். இந்த உடலைவிட்டுச் சென்றால் கூர்மை அவதாரமாக அடுத்த நிலையாக நாம் அனைவரும் ஒளியின் சரீரம் பெறவேண்டும்.

அன்று அகஸ்தியன் எவ்வாறு ஒளிச் சரீரம் பெற்றானோ அதே வழியில் நாமும் ஒளியின் சரீரமாகப் பெறமுடியும் என்பதனை உங்களுக்குள் “அழுத்தம் திருத்தமாக” இதை உணர்த்துகின்றேன்.

Leave a Reply