என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடாமல் என்னுள்ளே என்றும் நீ இருந்துவிடு ஈஸ்வரா

Prayer.jpg

என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடாமல்.., “என்னுள்ளே என்றும் நீ இருந்துவிடு ஈஸ்வரா”

அன்றாட வாழ்க்கையில் நம் ஆசைகள் எங்கெல்லாம் செல்கிறது?

உதாரணமாக நாம் கோபமான உணர்வுடன் இருந்தால் நம்முடைய செயலாக்கங்கள் எப்படியெல்லாம் மாறுகிறது?

1.சமையல் செய்தால் குழம்பைச் சீராக வைப்பீர்களா?

2.ஒரு கணக்கைச் சரியாகப் பார்க்க முடிகிறதா?

3.கோபத்துடன் இருந்தால் ஒரு இயந்திரத்தைச் சீராக இயக்குவீர்களா?

4.கோப உணர்ச்சியோடு ஒரு காரைச் சீராக ஓட்டுவீர்களா?

அந்தக் கோப உணர்ச்சியுடன் ஓட்டும்போது யாராவது குறுக்கே வந்தால் “அடிடா.. அவனை..,” என்று வீட்டில் இருக்கும் கோபத்தை அவனிடம் காட்டினால் ஆக்சிடெண்ட் ஆகிவிடும்.

பிரேக் போடுவதற்கே மனது வராது.

எவனைப் பார்த்தாலும் “இப்படிச் செய்கிறார்களே” என்று அவனை அடித்துவிடுவோம். அல்லது அதே மாதிரி ஒருவன் குறுக்கே வந்தான் என்றால் கோபத்துடன் படக்.., என்று திருப்பினால் பக்கத்தில் எங்காவது மோதி இடித்துவிடுவோம்.

பிரேக் போட மாட்டோம்.

ஆக அந்தக் கோபத்துடன்தான் இயங்குவோமே தவிர பிரேக் போட்டு சமப்படுத்தி சீரான நிலைகளில் கொண்டு போகவேண்டும் என்ற நிலைகள் வராது. சீரான நிலைகள் கொண்டு செயல்படும் நிலைகள் அங்கே இழக்கப்படுகிறது.

வீட்டில் கணவன் மனைவி மேல் ஒருவருக்கொருவர் கோபம் வந்தாலும் சரி, குழந்தை மேல் கோபம் வந்தாலும் சரி அல்லது எதிரி மீது கோபம் வந்தாலும் சரி

1.நாம் நுகரும் உணர்வுகள் நம்மை இயக்கி

2.நாம் வாழ்வதற்கு “இடையூறாக இருக்கிறார்கள்” என்று

3.இந்த ஆசைதான் வருகிறதே தவிர

4.”நம்மைக் காக்கும் ஆசைகள்” அங்கே இழக்கப்படுகிறது.

கையில் விளக்கு இருந்தால் பாதையைச் சீராகத் தெரிந்து மேடு பள்ளங்களைத் தெரிந்து செல்ல முடியும். விளக்கை அணைத்து விட்டால் தெரியுமோ…?

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபடவேண்டும். என்றால் “நம் ஆசை…, எதன் மேல் இருக்க வேண்டும்?”

ஆகவே தான்

1.என் நினைவை எங்கெங்கோ அலைவிட்டு

2.என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடாமல்

3.என்னுள்ளே என்றும் நீ இருந்துவிடு ஈஸ்வரா என்று ஏங்குகிறோம்.

தீமைகளையெல்லாம் நீக்கி நீ ஒளியாக இருக்கின்றாய். அதை எனக்குள் ஒளியாக உருவாக்க வேண்டும் என்று நம் உயிரான ஈசனிடம் வேண்டுதல் வேண்டும்.

நாம் நம் உயிருடன் ஒன்றிட வேண்டும். அந்த ஒளியாக மாறவேண்டும் என்றுதான் நாம் ஓம் ஈஸ்வரா.., ஓம் ஈஸ்வரா.., என்று அவனிடமே நாம் வேண்டுகிறோம்.

அவனுடன்…, அவனாகி.., “அவனாகவே” நாம் ஆகவேண்டும்.

இந்த உணர்வெல்லாம் ஒளியாக மாறும் போது துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து பிறவியில்லா நிலை அடைந்து சிருஷ்டிக்கும் உணர்வு பெற்று நாம் “ம்கரிஷிகளாக” ஆகின்றோம்.

Leave a Reply