ஞானகுரு ஈஸ்வரபட்டர் உபதேசங்கள்

என் கடைசி எல்லை பிறவி இல்லா நிலை தான்..! என்ற உறுதி கொள்ளுங்கள்

 

சொர்க்கத்தை அடையும் தகுதி பெற்ற இந்த மனித உடலில் பிறருடைய குறை உணர்வுகளை நாம் நுகர்ந்து விட்டால் என்ன ஆகும்…?
1.நம் காரியங்கள் அனைத்தும் செயலற்றதாக ஆகிவிடுகிறது.
2.நமக்குள் குழப்ப நிலைகளை உருவாக்கி சிந்தித்துச் செயல்படுத்தும் சக்தியையும் இழக்கின்றோம்
3,நாம் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறும் தகுதியையும் இழந்து விடுகின்றோம்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும்.

அரும் பெரும் சக்தியை உங்களுக்குள் பதிவு செய்கிறேன் (ஞானகுரு) ஞான வித்தை உங்களுக்குள் உருவாக்குகிறேன். குரு காட்டிய அருள் வழியில் அந்த வித்தினை உங்களுக்குள் பெருக்க வேண்டும்.

1.இந்த வாழ்க்கையில் இனிப் பிறவி இல்லா நிலைகள் அடைவேன்.
2.அரும் பெரும் சக்தியான மகரிஷிகளின் அருள் சக்திகளை எனக்குள் சேர்ப்பேன்…
3.அருள் வழியில் இந்த வாழ்க்கையை வாழ்வேன்…
4.என் கடைசி எல்லை பிறவி இல்லா நிலை தான்..! என்ற
5.இந்த உறுதி கொண்ட உணர்வுடன் வாழ்ந்து பழகுங்கள்.
6.உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.

ஆனால் மற்ற எந்த ஆசை கொண்டு எண்ணி எடுத்தாலும் அத்தகைய ஆசைகளால் செல்வங்கள் நிலைப்பதில்லை.

செல்வம் இருப்பினும் இந்த உடல் உபாதையான காலங்களில் கூட அது செலவழிக்கப் போதுமானதாக இருப்பதில்லை. பணம் அதிகமாக இருப்பினும் உடல் நலிவுற்ற நேரங்களில் நல்ல உணவையும் உட்கொள்ள முடிவதில்லை.

இது போன்ற நிலைகளில் விடுபட்டு இந்தப் பிறவி நிலை என்ற கடனைக் கடந்து பிறவி இல்லா நிலை அடையும் நிலையைச் செயல்படுத்துதல் வேண்டும்.

கீதை சொல்வது… நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்.
1.நமது வாழ்க்கையில் அருள் ஒளியைப் பெற வேண்டும் என்று நினைத்தால்
2.அருள் ஒளியின் சக்திகளை வளர்க்கின்றோம்… அதுவாக ஒளியாகின்றோம்.

அது இல்லாது இவன் அப்படி… அவன் அப்படி… அவன் அப்படி… அவன் அப்படி…! என்ற நிலைகளில்
1.பார்க்கும் அனைவருக்குள் இருக்கும் குறைகளையும் கண்டு… அதையே கூறிக் கொண்டிருந்தால்
2.குறையின் உணர்வுகள் வளர்ச்சியாகி நோயின் தன்மையாகி இது நமக்குள் அதுவாகவே ஆகின்றது.

நமக்குள் சீர்படும் செயலை இழந்து செயலற்ற நிலைகள் படும் போது நம் தொழிலே குந்தகமாகின்றது. இது போன்ற எதிர்க்கும் உணர்வை வளர்த்து வளர்த்து… நமக்குள்ளேயே எதிரியை உருவாக்கி.. அடுத்து மனிதனல்லாத உருவை உருவாக்கும் தன்மை வந்துவிடுகின்றது. இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.

1.அருள் ஒளி பெற அனு தினமும் மறவாது இருத்தல் வேண்டும்.
2.அருள் ஞானம் பெற மறவாது இருக்க வேண்டும்.

அதற்குத் தகுதியான நேரம் இந்த அதிகால துருவ தியான நேரமே…! நான்கிலிருந்து ஆறுக்குள் விழித்த நேரத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை எடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

உங்கள் உடலில் உள்ள பல கோடி ஜீவ அணுக்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறச் தவறிவிடாதீர்கள்.

1.அருள் ஒளியைப் பரப்புங்கள்… அருள் வழியில் வாழ்க்கை வாழுங்கள்.
2.அருள் சொல்களையே சொல்லிப் பழகுங்கள்…. உங்கள் சொல்லைக் கேட்போரின் தீமைகள் அகலட்டும்.

ஆகவே… அருள் ஞான வழியில் நாம் வாழ்வோம்… வளர்வோம்…! நம் பார்வையில் அனைவரது தீமைகளையும் அகற்றுவோம். நம்மைப் பார்க்கும் அனைவரது தீமைகளும் அகலட்டும்.

அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்திலேயே என்றென்றும் மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்வோம்.

உண்மையான சீடர்கள் கிடைப்பது அரிதிலும் அரிது…! – ஈஸ்வரபட்டர்

 

குரு என்பவர் “தியானம் என்ற நற்பாதைகளைக் காட்டி அதன் வழியில் தெளிவு நிலை பெறுவதற்காகச் “சீடர்களைச் சோதனைக்கும் ஆட்படுத்துவதுண்டு…!”

தன்னிடம் வரும் சீடர்களுக்குப் போதனையுடன் தன் செயலை நிறுத்திக் கொள்வதுமில்லை. “தனக்கு மேல்…!” சிஷ்யன் சக்தி பெறச் செய்யும் செயலுக்கு… மருத்துவம் மனோதத்துவம் மனோவசியம் வீரக்கலைகளுக்கும் போதனைப்படுத்தி அந்த ஒவ்வொரு சீடரின் செயலையும் கண்காணித்து அவரவர் வழித் தொடர்புக்கும் வளர்ச்சிக்கும் செயல்களை நிகழ்த்தி அந்த வழியின் ஊக்கத்தையும் மேன்மைப்படுத்துவார் அந்தக் குரு.

அனைத்திலும் சூட்சமம் கொண்டே அன்றைய சித்தர்கள் புவியியல் உயிரியல் வானியல் என்ற செயலுக்கும் செயற்பட அந்தக் கலைகளையே மூலதனமாகப் புகட்டி ஆரம்ப வழி வகைகளை ஆராயப் புகத் தனது சீடர்களைத் தயார்படுத்தினார்கள்

காரணம்… உண்மையான சீடர்கள் கிடைக்க மாட்டார்கள்…!

குரு எனப்படுபவர் ஆயிரம் ஆயிரம் உருவாகலாம்…! நாற்பத்தி எட்டாயிரம் மகரிஷிகள் என்று கூறும் பொழுதே ஞானிகள் சித்தர்கள் மகரிஷிகள் என எண்ணிலடங்கா தொகையில் தொடர்ந்தாலும் “ஆரம்பச் சித்து நிலை பெற வரும் சீடர்கள்… மிகவும் குறைவே…!”

உண்மையான சீடர்களைக் காண்பது “அரிதிலும் அரிது…!” என்ற உண்மையின் சூட்சமம் அன்று கண்டு கொண்ட அன்றையச் சித்தர்களும்
1.தங்களுக்கு ஏற்பட்ட அனுபவ முறைகளினாலும் அதை உணர்ந்தே
2.தனக்கு உண்மையான சீடரைத் தேர்ந்தெடுக்கப் பல செயல் முறைகளைச் செய்வித்தனர்.

மருத்துவம் படிப்போர் அரைகுறை வைத்திய ஞானம் பெற்று விட்டால் “தன் வாழ்விற்கு வழி ஏற்பட்டு விட்டது…!” என்ற உலக ஆசைக்குத் தங்களை உட்படுத்தி அதன் வழி ஓடி விடும் சீடர்களூம் உண்டு.

மனோதத்துவ சாஸ்திர கலைகளில் நாட்டம் கொண்ட சீடனும் சொல்லாமல் கொள்ளாமல் நழுவிவிடுவார். அடுத்துப் பெறும் யாக நிலைகளில் மாந்திரீக ஏவல் செயலுக்கு நாட்டம் கொள்வோர் அந்த வழியில் சென்றுவிடுவர்.

இதில் எல்லாம் தெளிந்தவர்கள்…
1.நாம் குருவிடம் அறிந்து கொள்ள வந்தது இது அல்ல….!
2.உலக ஆசை நிலைப்படுத்தும் நிலைகள் தான் அவைகள் என்று உணர்ந்து
3.”உண்மைப் பொருளை நாடும் உண்மையான சீடர்கள் தான்…!” நிலையாகத் தங்கிச் செயல் கொள்வர்.

அவர்களே உண்மை ஞானம் உணரும் குருவிற்கு ஏற்ற உண்மையுள்ள சீடர்கள். அவர்களைத் தேர்ந்தெடுக்க குருவிற்கும் ஒரு சூட்சமம் உள்ளது…!

தன் நிலைக்குத் தன் சீடனை உயர்த்திவிடும் குருவிற்கு ஏற்படும் சில குறை நிலைகளை அந்தச் சீடர்களால் ஏற்படும் சில சக்தி குறைவுகளிலிருந்து குரு மீண்டெழ அந்தச் சீடர்களால் குரு பாதுகாக்கப்படுகின்றார்.

1.தனக்குச் சக்தி வேண்டியே…! தன் வழித் தோன்றல்களாகிய சிஷ்யர்களைக் குரு தேர்ந்தெடுக்கின்றார்.
2.தன் நிலையைத் தான் உயர்த்திக் கொள்ளவே “குருவைத் தேடி அலைகிறான் சீடனுமே…!”
2.அப்படிப்பட்ட ஆத்மார்த்த குருவும் உண்மைச் சீடனும் என்றுமே மாசுபடப் போவதில்லை.

அத்தகைய சீடர்களுக்குக் குரு போதிக்கும் போதனைகளைத் தங்களை உணர வேண்டிதற்காகக் குரு அளிக்கும் சந்தர்ப்பங்களில்
1.வெறும் சங்கட அலைகளைச் சிஷ்யர்கள் மனதில் பதிய வைத்துக் கொண்டால்
2.அதுவே மரமாக மீண்டும் வெட்டப்பட வேண்டிய செயலுக்குக் கொண்டு போய்விட்டுவிடும்.

சீடர்களைப் பாதுகாப்பது குருவின் தலையாயக் கடமையாகிவிடுகின்றது.

வாழ்க்கைச் சூழலில் சங்கட அலைகளில் அறியாமல் அகப்பட்டுக் கொள்ளும் குருவையும்… அறிந்தே அகப்பட்டுக் கொள்ளும் குருவையும்… காப்பது “உண்மையான சீடர்களின் பொறுப்பும் ஆகிவிடுகின்றது…!”

உண்மை உணரும் ஞானச் சீடர்களும் குரு காட்டிய வழியில் தன் சக்திகளை வலுக் கூட்டிக் கொள்ளத் தான் எண்ணி எடுக்கும் தியானத்தின் மூலம் ஒளி நிலையைக் கண்டாலும்
1.நாம் தேடிக் கொண்டிருப்பது இது அல்ல…!
2.இதற்கும் அடுத்த உயரிய நிலை எது…? என்று கண்ட காட்சிகளை எல்லாம் அறிந்துணர்ந்து
3.பின் விலக்கி விலக்கி… எந்த உண்மை ஜோதி தத்துவத்தில் மூழ்க நினைத்தானோ
4.தன் நல்லாக்கத்திற்குப் பயன்படும்படியாக ஊக்கம் கொண்டு மேலும் செயல்படச் செயல்பட
5.எந்த ஜோதித் தத்துவத்தை நாடிக் கலக்க மனம் கொண்டனோ அதையே ஈர்த்து ஈர்த்து…
6.தன் ஈர்ப்பினால் தானே ஜோதியாகி அந்த ஜோதி தத்துவத்தில் கலந்து விடுகின்றான்.

ஆகவே குரு சிஷ்ய மனோபாவனை என்பது மிகவும் உயரியது. அதை வெறும் உலக ஆசை நிலைகளுக்கு யாரும் அடகு வைத்துவிடக் கூடாது.
1.குருவும் உணர வேண்டும்…
2.அதே நேரத்தில் சீடர்களும் உண்மையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

ஒருவனுக்கு ஒருத்தி…! பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

உயிரையும் ஆன்மாவையும் இரண்டையும் ஒன்றாகக் கலக்கும் சக்தியின் வீரியத்தைக் காட்ட வந்த காவிய மகரிஷியே வான்மீகி ஆவார்.

தன்னுடைய காவியத்தில் அந்த உயிர் ஆன்ம சக்தியின் தொடருக்கு இராமன் சீதை என்று காட்டினாலும் வாழ்க்கைத் தத்துவத்திலும் கூட “ஒருவனுக்கு ஒருத்தி…!” என்றபடி வாழும் வாழ்க்கை நியதியைக் காட்டினார்.

அந்த வழியில் நடந்திடும் பரிபக்குவத்தை மனிதர்கள் தங்களுக்கு ஏற்படும் அனுபவ ஞான நிலைகளும் கூட…
1.தங்களுக்குத் தாங்களே விதித்துக் கொள்ளும் வாழ்க்கை நெறி முறையின் கோட்பாடு என்று காட்டி
2.”அது சக்திச் சுடரால் காக்கப் பெறும்…!” என்ற சூட்சமத்தையும் காட்டினார்.

அப்படிப்பட்ட வாழ்க்கை நெறி “கற்பு…” என்னும் சுடரால் ஒளி பெற்று விளங்குவதால் அந்தக் “கற்பு நெறி…” என்பது ஒழுக்கம் என்கிற தொடரில் பெறப்படும் உயர்ந்த பண்பு நிலை தான்.

நாம் கைக்கொள்ள வேண்டிய சாராம்சமாக அதையே வழிகாட்டியாக அமைத்து நடை முறைச் செயலாக அதனின் இயக்கம் கொண்டால்
1.அது நல் வினைப் பயனாகப் பெற்று
2.நம் உயிர் ஆன்ம சக்தி என்றும் பிரகாசித்து
3.ஜோதித் தத்துவத்தில் நிலையாக விளங்கும்.

அப்படிக் காக்கப் பெறாத வாழ்க்கைத் தொடர் என்பது காமத்தின் அடியாக எழும் மோகமாகி… வாழ்க்கை நெறியை அழித்து உயிர் ஆன்ம சக்தித் தொடரில் குலத்தையும் பூண்டோடு அழித்து மறைத்துவிடும்.

சாந்த குணம் பெற்ற உயிர் சக்தியான இராமன் அகன்றாலும்.. தைரிய குண சக்தியான லட்சுமணனால் காக்கப்படும் நிலை இருந்திருந்தாலும்…
1.சீதை என்ற ஆன்மாவில் பதியப் பெறும்
2.ஆசை என்னும் குண உந்துதல் சரீரத்துடன் ஊட்டப் பெற்றால் என்ன ஆகும்…?

நம் ஆன்மாவில் எதைப் பதிவு செய்து வழி நடத்துகின்றோமோ
1.அதுவே ஆன்ம சக்தியாக சரீரத்தையும்
2.ஊட்டப் பெற்ற சக்தியின் தொடரில்
3.ஊட்டப் பெற்ற சக்தியின் வாசனை சமைக்கப்பட்டு சரீர கதியில் வெளி வந்து
4.அந்தச் சமைப்பின் தொடரிலே உடலில் உள்ள எல்லா உயிரணுக்களையும் தன் செயலுக்கு (ஆசைக்கு) வழி நடத்துகின்றது.

ஆசை என்ற சிறு தொடரில் “இப்படி அறியாது அகப்படும் ஆத்ம சக்தியானது…” மோகம் என்னும் படு குழியில் வீழ்த்தப்படுவதைக் காட்டிடவே
1.இராவணனிடம் அகப்பட்டுத் தத்தளிக்கின்றது என்பதாக
2.இராவணேஸ்வரன் சீதையைக் கவர்ந்து சென்றான் என்பதில்
3.அவன் பூமியோடு பெயர்த்து எடுத்துத்தான் சீதையைக் கவர்ந்தான் என்று காட்டப்பட்டிருக்கும்.

ஏனென்றால்
1.ஆன்ம சக்தியை வலுவானப் பெற்றிருந்தால்
2.எத்தகைய தீய குண சக்தியின் வீரியமும் ஆன்ம சக்தியை நெருங்க முடியாது…! என்பதே அதனின் சூட்சமப் பொருள்.

அந்தத் தொடரில் சிந்திக்கத் தலைப்படும் ஞானி அறிய வேண்டிய உண்மையின் சாரம் ஒன்று உண்டு.

நம் ஆத்மாவைக் காக்கும்… காத்துக் கொண்டிருக்கும்.. ஜெப ஆகார அமில குண சூட்சமத்தைக் காட்டவே சீதையைக் காக்க வந்த “பக்ஷிராஜன்…! (ஜடாயு) என்ற ஓர் பாத்திரப் படைப்பில் விளக்கம் தந்தார் வான்மீகி.

ஒரு தந்தை தன் குழந்தையைப் பேணுவது போல் அது நம் ஆன்மாவை எப்பொழுதும் வட்டமிட்டுக் காக்கும் என்றெல்லாம் தொடர்புபடுத்திக் காட்டியுள்ளார்.

ஆனாலும்
1.நம் ஆன்ம சக்திக்குச் சக்தியூட்டும் உயிர்ச் சக்தி (இராமன்) இல்லாததால்
2.அசுர குணத் தன்மை வீரிய குணச் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டது என்று தெளிவாக்குகின்றார் வான்மீகி.

அந்த ஜாடாயு தன் சிறகை இழந்துவிட்டது என்பதே நம் சூட்சமச் சரீரத் தொடரில் சிறகு இழந்து விட்டால் உயிர்ச் சக்தி தன் பறக்கும் தன்மை இழந்து விடுகிறது.

மீண்டும் ஆன்ம சக்தியான சீதையை உயிர்ச் சக்தியான இராமன் அடைய எத்தனை கடும் சோதனைகளுக்கு ஆட்படுகிறான்.

1.பல உயர்ந்தோரின் ஞானத் தொடர்பு பெற்ற பின் உயர் சக்திகளைப் பெற்று
2.தன் எண்ணம் கொண்டு வழி வகுத்த பாதையிn உயர்வில் தான் சீதையை அடைய முடியும்.
3..அதைத் தவிர வேறு மார்க்கம் எதுவும் இல்லை என்ற சூசகப்படுத்தி
4..நம் உயிர் ஆன்ம சக்தி காக்கப் பெறும் தொடர்பை வலியுறுத்துகிறார் காவிய ரிஷியான வான்மீகி.

மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற “விதி…” என்று எதுவும் இல்லை

 

இன்றைய உலகில் மனித இனத்தையே பூண்டுடன் அழிக்கும் உணர்வுகளாக மனிதனுக்குள் விளையப்பட்டு சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு நஞ்சு கொண்ட உணர்வுகளாகச் சாக்கடையாக இருக்கின்றது.

இந்தச் சாக்கடைக்குள் பல ஆண்டுகளுக்கு முன் மறைந்திருந்த ஞானிகள் இத்தகையை தீமைகளை நீக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிய அரும் பெரும் சக்தி நமக்கு முன் உண்டு.

அருள் ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்து…
1.இந்தச் சாக்கடையான வாழ்க்கையில் சாக்கடையைப் பிளந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை நுகர்ந்து நுகர்ந்து
2.இந்தச் சாக்கடையான உலகில் வாழ்ந்த நம் உடலுக்குள் சாக்கடையைப் பிளந்து
3.உயிருடன் ஒன்றி என்றும் நிலை கொண்ட ஒளியின் சரீரத்தை நாம் அனைவரும் பெற முடியும்.

இதற்கென்று “விதி…” இல்லை.

இளம் பிள்ளை என்றோ
மற்றவர்கள் என்றோ
அறிந்தவன் என்றோ
அறியாதவன் என்றோ எதுவுமே இல்லை…!

1.அறியாதவன் அறிய முற்படுகின்றான்.
2.அறியாத நிலைகளில் இருக்கும் பொழுது நாம் அறிய முற்படுகின்றோம்.

ஆகவே.. அறிந்திடும் ஞானத்தைக் கொண்டு இருள் நீக்கிப் பொருள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை அறியும் பக்குவத்தை உங்களுக்குள் கூட்டிக் கொள்ளுங்கள்.

அப்படிக் கூட்டும்போது இதனின் உறுதுணை கொண்டு அறிந்திடும் நிலைகள் கொண்டு இருளைப் போக்கி ஒளி காணும் உணர்வினை உங்களுக்குள் விளைய வைக்க முடியும்.

உங்களை நீங்கள் நம்பிப் பழக வேண்டும்.

நாம் வீட்டில் இருக்கிறோம் என்றால் எவ்வளவு சுத்தப்படுத்தி வைத்தாலும் வீட்டிற்குள் அழுக்கு வரத்தான் செய்கின்றது. நாம் எவ்வளவு தூய்மையான ஆடையைப் போட்டாலும் அது அழுக்காகத்தான் செய்கின்றது. நம் உடலைத் தூய்மைப்படுத்திக் கொண்டிருந்தாலும் அழுக்கு வரத்தான் செய்கின்றது.

1.நாம் தூய்மையான எண்ணங்களை எண்ணிக் கொண்டிருந்தாலும்
2.தூய்மையற்ற நிலைகளைக் கேட்டு…
3.தூய்மையற்றதை நமக்குள் வளர்த்துக் கொண்டு தான் உள்ளோம்.

எவ்வாறு தூய்மையற்ற நிலைகளைத் தூய்மையாக்குவதற்குத் துடைக்கின்றோமோ… நல்ல நீரை விட்டு அதைக் கழுவுகின்றோமோ… இதைப் போல
1.மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் சேர்த்து
2.நம் உடலுக்குள் இருக்கும் தூய்மையற்றதைத் தூய்மையாக்கும் உணர்வுகளைச் சேர்ப்பிப்பதே
3.யாம் சொல்லும் இந்தத் தியானத்தின் வழி…!

 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வறுமையிலும் கஷ்டத்திலும் இன்று மாயாஜாலங்களில் சிக்குண்டு “இதிலிருந்து விடுபட மாட்டோமா…” என்று பிறர் மேல் தான் மனிதர்கள் நம்பிக்கை கொள்கின்றார்களே தவிர ஒவ்வொரு மனிதனும் தன் மீது நம்பிக்கை இல்லாது இருக்கின்றனர்.

ஜோதிடத்தாலும் மந்திரத்தாலும் யாகத்தாலும் ஜாதகத்தாலும் வேள்விகளாலும் தான் எதையும் நாம் செய்ய முடியும் என்று எண்ணிக் கொண்டுள்ளார்கள்.

மெய் ஞானிகள் காட்டிய அருள் வழியில் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி நாம் பெறவேண்டும் என்று இந்த உயிருடன் உராயச் செய்யும் பொழுதுதான் அது “உண்மையான வேள்வி” ஆகின்றது.

ஆகவே, இந்த வேள்விகளை எடுத்துக் கடமையாகச் செய்வோம் என்றால் நமக்குள் தீமைகள் அகற்றும் எண்ணங்கள் வரும்.

1.இந்த வாழ்க்கையில் நாம் ஒவொருவரும் நம் உயிரைக் கடவுளாக மதிப்போம்.
2.அவனால் உருவாக்கப்பட்ட இந்த உடலை ஆலயம் என்று மதிப்போம்.
3.அனைத்தையும் அறிந்திடும் அறிவாக இருக்கும் நம் உயிரை ஆண்டவனாக மதிப்போம்.
4.ஆறாவது அறிவு கொண்டு தீமைகளை அகற்ற முடியும் என்ற வலு கொண்டு தியானிப்போம்.
5.நம்மை உருவாக்கிய தாய் தந்தையரைக் கடவுளாக மதித்து நம்மைக் காத்தருளிய தெய்வமாக மதிப்போம்
6.நல் வழி போதித்த நம் அன்னை தந்தையரை குருவாக மதித்து அவர்கள் அருளால் நாம் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுவோம்.
7.நம்மை வளரச் செய்த முன்னோர்களையும் குலதெய்வங்களையும் விண்ணிலே செலுத்தி அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்வோம்.
8.அவர்களின் துணை கொண்டு இந்த வாழ்க்கையில் வரும் இருளைப் போக்க முடியும் என்றும் மனிதன் என்ற முழுமை அடைய முடியும் என்ற நிலைகளில் நாம் பிரார்த்திப்போம். தியானிப்போம் தவமிருப்போம்.

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் காட்டிய அருள் வழியில் அவர் அனுபவபூர்வமாக அறிவித்த இந்த உணர்வின் தன்மையை நீங்கள் எல்லோரும் பெறமுடியும்.

அதை எல்லாம் எளிதில் காண முடியும். உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்க முடியும். அந்த நம்பிக்கையுடன் நீங்கள் வாழ முடியும் என்று உறுதியாகக் கூறுகின்றோம்.

கார்த்திகேயா என்று தெளிந்திடும் ஆறாவது அறிவு கொண்ட நாம் ஞானிகள் காட்டிய அந்த அருள் வழியில் தெளிந்திட வேண்டும் தெளிவான வாழ்க்கை வாழ்ந்திட வேண்டும்.

சங்கடத்துடன் செய்யும் எந்தக் காரியமும் நிறைவு பெறாது – ஈஸ்வரபட்டர்

வான்மீகி ஆச்சா மரத்தை வாலியின் தொடர்பில் பதம் பார்த்த பொழுது “ஆத்ம சக்தி பெறும்…” சக்தி அலைத் தொடர்பில் குறைவுபட்டது.
1.அந்தக் காரணத்தை அறிந்து அதைச் செயல்படுத்தி
2.எண்ணத் தடையாகும் இராமபாணத்தை மீண்டும் எய்ததின் தொடரே வான்மீகி பெற்ற ஜடாக்கினி அனுபவ ஞானம்,

எடையிடும் பொருளே எடை காட்டும் கல்லாக ஆனதில் எடையிடும் எண்ண அளவீட்டில் தராசின் முனை முள் அளவீடு காட்டுவதைப் போல் தன்னுடைய அனுபவ ஞானம் நிறைவு காண (மீண்டும்) சபரியிடம் பதம் பார்த்தான் வான்மீகி.

மனைவியைப் பிரிந்த இராமன் சபரிக்கு மோட்சத்தை அளித்திட இயலவில்லை என்ற கதையின் தொடர்பிற்குச் “சூட்சம விளக்கம் உள்ளது…!”

இராம ஜெப ஏக்கமாக ஜெபத்தில் ஏங்கினாள் சபரி. அந்த ஏக்கத்தைப் பூர்த்தி செய்ய
1.சங்கடத்தின் அலைகளை ஈர்த்துக் கொண்ட வழி காட்டும் குருவானவர்
2.பூரணத்துவம் நிறைவு பெறாத தொடர் நிலையில் தன்னை உணர்ந்து மீண்டும் அதற்குண்டான வழியமைத்தான்.

மகரிஷிகளுடன் தொடர்பு கொண்டு அவர்களிடமிருந்து பெறும் உயர்ந்த சக்திகளைத் தன் ஈர்ப்பிற்குக் கொண்டு வர வேண்டும் என்றால் சங்கடமில்லாத சமமான பாவனையில் இருத்தல் வேண்டும்.

அந்த நிலை இல்லாத போது
1.உண்மைச் சீடர்களின் ஏக்கம் குருவிற்கே எற்பட்டு…
2.உண்மையை உணர்ந்து… தான் தெளிந்து..
3.சூரிய குலம் என்று குறிப்பிடும் வீரிய அமில முலாம் ஈர்ப்பின் தொடர்புகளில் தொடர்பு கொண்டு…
4.உயர்ந்த உணர்வுகளை மீண்டும் ஈர்க்கும் வலுக் கொண்டால் இராமபாணம் பாயும்… தன் இலட்சியத்தையும் எய்தும்.

அதாவது
1.இராமபாணம் எய்தால் மீண்டும் அது எய்தியவரிடமே திரும்ப வருவதைப் போல் செயல் கொண்டிடும் இந்தச் சக்தி
2.நாம் எடுக்கும் எண்ண ஈர்ப்பின் வலுவால் “வலுத்து…”
3.அதன் மூலம் தன் சக்தியை மீண்டும் வலுக் கூட்டிக் கொள்ள முடியும்.

“சபரி மோட்சம்…!” என்று சொல்கின்ற சூட்சமத்தில் சபரி பெற்ற சக்தியின் வலு ஐயப்ப மாமுனியின் தொடர்பால் தன் எண்ண இலட்சியத்தை அடைந்தது.

இந்தச் சக்தியின் தொடர்பால் அந்த ஐயப்ப மகான் தன் சக்தியின் குறைவுபடாத் தன்மையில் அந்தச் சபரியின் மூலத்தையே தாய் சக்தியாக ஆக்கிக் கொண்டார்.

ஐயப்பன் தன் அனுபவத்தில் பெற்றுக் கொண்ட எத்தனையோ சக்தித் தொடரில் சபரி சக்தியும் ஒன்று…!

நல்லதை நிலை நிறுத்த… நல்லதை நமக்குள் வலுவாக்க… நல்லதை நிலைக்கச் செய்ய… பக்குவம் தேவை

 

நம் குழந்தையைச் செல்வமாக வளர்க்கின்றோம். அப்படி அவன் வளரப்படும் பொழுது “அவன் சொன்னபடி கேட்கவில்லை…!” என்று வைத்துக் கொள்வோம்.

எல்லாம் செய்தேன்… இவன் இப்படிச் செய்கின்றான்…! என்றுதான் கடைசியில் சொல்கின்றோம். அவனுக்குப் பக்குவமாக எடுத்துச் சொல்லும் நல்ல மனது நமக்கு வருகின்றதா… என்றால் இல்லை.

1.நல்லதைச் செய்தேன் என்று சொல்லி வேதனையையும் ஆத்திரத்தையும் வளர்க்கும் நிலை தான் வருகின்றது.
2.நல்லதைச் சொல்ல முடியாது போய்விடுகின்றது.

அதே போல் நண்பராகப் பழகுகிறோம். தொழில் செய்யும் போது கடனைக் கொடுக்கின்றோம். இத்தனாவது தேதி பணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று சொல்கின்றோம்.

ஆனால் கொடுக்க வேண்டிய தேதி வந்தபின் பணம் வரவில்லை என்றால் என்ன செய்கிறோம்…?

சொன்ன நேரத்திற்குக் கொடுக்கவில்லையே என்று கேட்கின்றோம். ஒரு இரண்டு தடவை கேட்டு விட்டு மூன்றாவது தடவை கேட்கும் போது நம் சொல்லில் கடினம் வந்து விடுகின்றது. பக்குவமாகச் சொல்லிக் கேட்கும் நிலை இல்லை… அந்தப் பண்பை இழந்து விடுகின்றோம்.

அழுத்தமாகக் கேட்டு வெறுப்பின் தன்மை ஆகும் பொழுது பக்குவம் தவறி விடுகின்றோம்.

1.ஆனால் முதலிலே அவருக்கு நாம் உதவி தான் செய்தோம்.
2.இருந்தாலும் செய்த உதவியை நாம் காக்க முடியாதபடி வெறுப்பின் தன்மை வளர்கிறது.
3.இரண்டு பேருக்கும் இடையே பகைமை ஆகிவிடுகின்றது… உதவி செய்தும் பயனற்றுப் போகின்றது
4.உதவி செய்தோம்… நண்பருடன் மகிழ்ச்சியாக இருந்தோம்… என்று அந்தச் சந்தோஷத்தை எடுத்து வளர்க்க முடியவில்லை.

ஆனால் உங்களுக்கு வர வேண்டிய வரவு வரும், என் பணத்தை எப்படியும் நீங்கள் திருப்பிக் கொடுப்பீர்கள் என்று சொல்லி இருந்தால் அங்கே வெறுப்பாக வராது… பகைமையும் ஆகாது.

ஆகவே பக்குவம் தவறும் பொழுது அதனால் பின் விளைவுகள் எத்தனையோ வருகிறது.

உதாரணமாக நாம் பலகாரம் சுடுகின்றோம். அதைச் சுடும் போது பக்குவமாக எடுத்து வைத்தால் பரவாயில்லை. அப்படிப் போடும் பொழுது தட்டிலே நிறைந்து விட்டால் மேற்கொண்டு போட்டால் கீழே தான் விழுகும்.

கீழே விழுந்தால் மண் ஒட்டிக் கொள்கின்றது. ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் பக்குவம் தவறும் போது பலகாரம் மண்ணாகி விடுகின்றது.

சுடச்சுட எடுத்துப் போட வேண்டுமென்று தான் விரும்புகின்றோம். ஆனால் கீழே விழுந்த பிற்பாடுதான் எடுத்துப் போடும் நிலை வருவகிறது. சில நேரம் இப்படி ஆகிவிடுகிறது.

அதை நிதானித்துப் பொறுமையாகப் பக்குவமாக நிறுத்தி வைத்து மற்ற பாத்திரத்தில் எடுத்து வைத்திருந்தால் இது போன்று ஆகாது. கீழே தரையில் விழுந்த பின்பு தெரிகின்றது.

1.அதற்கப்புறம் எடுக்கின்றோம்… எடுத்தாலும் அதிலே மண் ஒட்டி இருக்கின்றது.
2.மற்ற நல்ல பலகாரத்துடன் இதைக் கொண்டு போட்டால் நன்றாக இருக்கும் அதிலேயும் மண் ஓட்டி விடுகின்றது.
3.சுட்டும் பலன் இல்லாது சுவை கெடும் நிலை ஆகின்றது.

இதைப் போன்றுதான் நமது வாழ்க்கையில் எந்தச் செயலை எடுத்தாலும்… எந்தச் சொல்களைப் பேசினாலும்… பக்குவம் தவறி விட்டால் நமது வாழ்க்கையில் மீண்டும் வேதனை வெறுப்பு கோபம் குரோதம் என்ற உணர்வு வளர்ந்து நம் நல்ல குணங்களை மாற்றி விடுகின்றது.

ஆகவே…
1.இந்த வாழ்க்கையில் நாம் எல்லாம் நல்லதைச் சொன்னாலும்
2.அந்த நல்லதை நிலை நிறுத்த… நல்லதை நமக்குள் வலுவாக்க… நல்லதை நிலைக்கச் செய்ய…
3.அந்த உணர்வுகள் நமக்குப் பக்குவம் தேவை.

ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்றுதான் மற்றவருக்கு உதவி செய்கின்றோம். ஆனால் உதவி செய்த நிலைகள் பக்குவம் தவறி விட்டால் பகைமையாகி விடுகின்றது.. வேதனை வெறுப்பு கோபம் என்று எத்தனையோ உணர்வுகள் வருகிறது.

ஒருவர் கஷ்டமாக இருக்கிறது என்று கேட்டால்… அந்த நேரத்தில் கொஞ்சம் பொறுமையுடன் செயல்பட்டு… இந்த நிலை இருக்கின்றது பார்த்துச் செய்கிறேன்…! என்று சொல்லிப் பழக வேண்டும்.

அப்படிப் பக்குவ நிலைகளைக் கடைபிடிக்கவில்லை என்றால் நம்மை எங்கேயோ கொண்டு போய்ச் செலுத்திவிடும். இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இரண்டு பேர் சண்டை போடுபவர்களைப் பார்க்கிறீர்கள். ஆனால் அந்த இரண்டு பேரும் உங்கள் நண்பர்கள் தான் என்று பார்த்தவுடனே “இப்படிச் சண்டை போடுகிறார்களே…!’ என்று அந்த உணர்ச்சிகள் உங்களுக்குள் வரும். அப்போது வெறுப்பும் வேதனையும் தோன்றும்.

அப்போது நீங்கள் நுகர்ந்த உணர்வை ஆட்சி புரிவது யார்…? உங்கள் உயிர் தான். இந்த உணர்வின் தன்மை அதிகமான நிலைகளில் வேதனை வேதனை என்று வெறுப்பும் வேதனையும் தனக்குள் உருவாகும் போது
1.இது விஷ உணர்வாக மாற்றப்பட்டு நமக்குள் எதிரியான நிலைகள் வருகிறது.
2.அடுத்து இந்த உணர்ச்சிகள் இரத்தத்தில் கலக்கப்பட்டு இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் கிட்னிக்குப் பாயும்.
3.அதிகமான உணர்ச்சிகளாகும் பொழுது இரத்தத்தைப் பரிசுத்தப்படுத்தும் நிலை இல்லாதபடி
4.கிட்னி அப்படியே திறந்து விட்டு விடும். அசுத்தம் உள்ளுக்குள் போகிறது.
5.அப்போது இதயம் படக்… படக்… படக்…! என்று அடிக்கும்.

சண்டை போடுபவர்களைக் கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தால் அந்த உணர்வின் தன்மைகள் தனக்குள் வந்த பின் எதிர்பாராது
1.எனக்குப் படக்… படக்… என்று அடிக்கிறது.
2.எனக்கு அப்படியே பட… பட… என்று வருகிறது.
3.வெட… வெட,,, என்று உடல் ஆடிவிட்டது…! என்றெல்லாம் சொல்வார்கள்.
4.இவையெல்லாம் நமக்குள் உள் புகுந்து போகும் நிலை தான்.

நண்பன் சண்டை போடுவதைப் பார்த்திருப்போம். இந்த உணர்வு இதயத்தின் பக்கம் வரும் போதெல்லாம் அந்தப் பட படப்பு வரும். ஆனால் என்ன என்றே தெரியவில்லை…! என்பார்கள்.

அதே மாதிரி நாம் சந்தோஷமாக இருப்போம். நமக்குச் சம்பந்தமில்லாதபடி இரண்டு பேர் சண்டை போடுவார்கள். வெறுப்பும் வேதனையும் கொண்ட நிலைகளில் பேசுவார்கள்.

அதை நாம் பார்க்க நேர்ந்ததும் நம்மை அறியாமலேயே நம் உணர்வின் இயக்கம் மாறும். நமக்குள் பய உணர்வை ஏற்படுத்தும். எனக்குப் பயமாக உள்ளதே…! ஏன் என்று தெரியவில்லையே…! இதயம் பலவீனமாக இருக்கிறது என்பார்கள். இது உலக இயல்போடு வரும்.

உதாரணமாக ஒரு பேட்டரியை இயக்குவதற்கு அதற்குள் சில விஷப் பொருள்களைச் சேர்க்கிறார்கள். அந்த பேட்டரியில் இருக்கக்கூடிய அந்த விஷங்களைக் கொண்டு நெகட்டிவ் பாசிட்டிவ் என்ற உணர்வின் தன்மையை இயக்கக்கூடிய நிலையில் கரண்டை உற்பத்தி செய்கின்றார்கள்.

மின்சாரத்தை அந்தப் பேட்டரிக்குள் (SOLAR CELLS AND BATTERY) முதலில் சேமித்து வைக்கின்றார்கள். எப்படி…? சூரியன் ஒளிக்கற்றையால் எடுக்கிறது. அதிலிருந்து வரக்கூடிய ஒளிக்கற்றையை இதில் இயக்கப்படும் போது இதிலே சேமிப்பு என்ற நிலைகள் வருகிறது.

ஒவ்வொரு அறையிலும் வைத்திருக்கக்கூடிய நிலைகளில் வடிகட்டி அதிலே அழுத்தத்தை அதிகமாகக் கூட்டி ஒரு இயக்கச் சக்தியின் நிலைகளுக்குக் கொண்டு வருகிறார்கள்.

அதிலே உள்ள செல்களில் நெகட்டிவ் பாசிடிவ் என்ற நிலைகளை வைத்து இயந்திரங்களையே ஓட்டச் செய்கிறார்கள். ஆனால் எதிலிருந்து உற்பத்தி ஆகிறது…?
1.இதிலிருக்கக்கூடிய ஆசிட் மற்றவைகளுக்கு எதிரியாகும் போது
2.பொறி கிளம்புகிறது… கரண்ட் உற்பத்தியாகிறது…!

இதைப் போல தான் முதலில் சொன்ன மாதிரி நம்முடைய சகஜ வாழ்க்கையில் எதிர் நிலையான உணர்வுகளைச் சந்தர்ப்பத்தால் நம் உடலிலே எடுக்கப்படும் போது அது உடலிலே வீரிய உணர்வுகளாக மோதப்படும் போது உணர்ச்சியின் வேகங்களைக் கூட்டுகிறது.

அதாவது பேட்டரியில் பாசிடிவ் நெகடிவ் என்ற் மோதலாகும் பொழுது அந்த உணர்வின் அழுத்தத்தால் அந்த ஆற்றல் மின்சாரமாக (இயக்கச் சக்தியாக) தோன்றுவது போலத் தான் நமக்குள்ளும் தோன்றுகிறது.

ஆகவே நம் உடலில் அத்தகைய எதிர்ப்பு நிலைகளை உருவாக்கும் சக்தி வரும் பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?

இதை அடக்க வேண்டும் என்று சொன்னால் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்துப் பழக வேண்டும். துருவ நட்சத்திரத்தைப் பற்றிப் பல முறை உபதேச வாயிலாக உங்களிடம் பதிவு செய்திருக்கின்றோம்.

“ஈஸ்வரா…!” என்று கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து உயிருடன் ஒன்றி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது இது முக்கண் ஆகிறது. இதன் வழி இழுத்துப் பழக வேண்டும்.

ஏனென்றால் புறக்கண்ணால் நாம் கவருவது நம் ஆன்மாவாக மாறுகிறது. சுவாசித்தவுடன் உயிரிலே படுகின்றது. சுவாசித்ததை உயிர் அகக்கண்ணாக இருந்து உணர்த்துகிறது.
1.அந்த உணர்ச்சியின் தன்மை தான் நம்மை இயக்குகின்றது.
2.அந்த உணர்ச்சிகொப்பத் தான் எண்ணங்கள் வருகிறது.
3.அந்த உணர்ச்சிகொப்பத் தான் நம்முடைய செயலும் வருகிறது.

ஆகவே மற்றவர்கள் செய்யும் தீமையின் உணர்ச்சிகள் நம் உடலில் சேரும் பொழுது
1.உடனே அந்த உணர்வின் வேகத்தைக் கூட்டாது
2.”ஈஸ்வரா…!” என்று நாம் கண்ணின் நினைவை உயிருடன் (புருவ மத்தியில்) இணைத்து முதலில் நிறுத்திப் பழக வேண்டும்.

(ஏனென்றால் உணர்வின் வேகத்தைக் கூட்டும் பொழுது தான் நமக்குப் பட படப்பும் இதயம் படக் படக் என்று அடிப்பதும் மற்ற உணர்ச்சி வசப்படும் நிலைகள் எல்லாமே வருகிறது – இது முக்கியம்)

அப்பொழுது அந்த அழுத்தம் வரும்போது துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று இதனுடன் இணைத்து இதன் வழி கவருதல் வேண்டும்.

ஏனென்றால் இந்த உணர்ச்சியின் உணர்வுகளை புருவ மத்தியில் செலுத்தும் போது அதன் வலு கூடும். வலு கூடிய பின் தீமைகள் தடுக்கப்படுகின்றது.

தீமைகள் உள் புகாது தடைப்படுத்திய பின் நாம் என்ன செய்ய வேண்டும்…?

யார் தவறு செய்கிறார்களோ அவர்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும். உண்மையின் உணர்வை அறியும் திறன் அவர்கள் பெற வேண்டும். அவர்கள் செயலெல்லாம் நல்ல நிலை பெற வேண்டும் என்று இவ்வாறு ஒவ்வொரு குணங்களுக்குத் தக்கவாறு நாம் தியானிக்க வேண்டும்.

தீய சக்திகளுடன் நேரடியாக நாம் மோதவே கூடாது -ஈஸ்வரபட்டர்

வாலியின் வீரிய குணத்தின் தன்மை எப்படிப்பட்டது என்றால்
1.ஆணவம் கொண்ட நிலையில்
2.எந்த எதிர் மோதல்களையும் தன் வசமாக்கித்
3.தன் சக்தியுடன் ஒன்றச் செய்யும் சூட்சமம் பெற்றது.

அதிலே நல்வினைப் பயனை எண்ணியிருந்தால் ஆச்சா மரம் வெட்டப்படத் தேவை இருந்திடாது. அது தான் மனித குல மனத்தின் வீரிய சக்தி…!

வாலி வதம் என்ற சம்பவம் சபரிமலைத் தொடர் அருகே ஒதுக்குப்புற வட பகுதியில் வாழ்ந்த ஓர் இன மக்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவம்.

தவத்தின் சக்தி பெற்றவன் பிற ஆன்மத் தொடருக்கு அனைவரும் அந்தச் சக்தி பெறவேண்டும் என்ற எண்ணம் கொண்டு ஜடாக்கினியின் செயல் இருந்திருந்தால் அவன் நிலை உயர்ந்திருக்கும்.
1.ஆனால் வான்மீகி பதம் பார்த்தான்… அந்த ஆச்சா மரம் வீழ்ந்தது.
2.ஜடாக்கினி மன திறத்தால் மற்றவர்கள் பெறும் சக்தித் தொடருக்கு
3.எண்ணத் தடை ஏற்படுத்தித் தீவினையால் விளையாடி விட்டான்.
4.அதன் பயன் இராமபாணம் வான்மீகியால் பாய்ச்சப்பட்டது.

ஜடாக்கினி உயர் எண்ண வீரிய சக்தி தீவினைப் பயனை விளைவிக்கும் மந்திர சக்தியுடன் மோதுண்ட பொழுது எந்தப் பிரம்மாஸ்திரம் வென்றிருக்கும் என்பதனை விளக்கிடவும் வேண்டுமோ…?

இராமன் மறைந்திருந்து அம்பெய்தான் என்பதன் சூட்சமம் என்ன…? அதிலே நீங்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய காரியம் ஒன்றுண்டு.

தியானத்தின் மூலம் ஞானச் செல்வங்கள் (மனிதர்கள்) இன்று பெற்றுக் கொண்டிருக்கும் உன்னத நிலைகளும் மற்ற செயல்களும் எதைக் காட்டும்…?

நீங்கள் பெற்றுக் கொண்டிருக்கும் ஞான சக்திகளை
1.பலர் பல எண்ணம் கொண்டு நோக்கிடும் செயலுக்கு உங்களை உற்றுப் பார்க்க ஆரம்பித்தால்
2.அவர்களின் பார்வை அலையை உங்களின் பார்வை அலையை நேர் கொண்டு மோதிடாமல் தவிர்த்திடவும் வேண்டும்.

மற்றவர்கள் மத்தியிலே உலக வாழ்க்கையைப் பற்றிப் பேச வேண்டிய நிலையில்
1.பிறரின் பார்வையைக் கூடுதலான நேரம் நம் பார்வையோடு சந்திக்காமல்
2.சிறிது தவிர்த்திடவும் வேண்டும்.

“தன் தவ சக்தியைக் குறைத்துக் கொண்டு…” வாலியின் தொடர் மீண்டும் பிறருக்குத் தீங்கிழைக்காதவண்ணம் தடுத்து ஆட்கொண்ட செயல் தான் வான்மீகியார் பெற்ற “அனுபவ நிலை” என்பது

அந்தக் காப்பிய ரிஷி மீண்டும் தன் ஈர்ப்பின் தொடரில் வெகு வேகமாகச் சக்தியைக் கூட்டிக் கொள்ளும் செயலில் பற்பல ரிஷிகளுடன் தொடர்பு கொண்டார். அதில் பரசுராமர் தொடரும் உண்டு.

ஜடாக்கினி அனுபவ ஞானம் என்பதே உயர் சக்தி வலுக்கூடும் வலுவின் வலுவாகும்,
1.தன்னுடைய அனுபவமே போதனையாகி
2.உயர் சக்தியை ஆட்கொள்ளும் நாத வித்தின் மூலம் பரிமளிக்கும் செயல் நிலைக்கு
3.மீண்டும் எண்ண வலுவின் திட வைராக்கிய சிந்தனையால்
4.எந்த மண்டலமோ அந்த மண்டலத்தின் சூட்சமும்
5.எந்தெந்த நட்சத்திரங்களோ அவைகளின் அமில குண ஈர்ப்பின் சேமிப்புமாக
6.இந்தச் சரீரத்தை வைத்து ஈர்க்கும் காந்த அமிலத் தொடர்பும்
7.பேரொளியாகச் சுடர்விட்டுப் பிரகாசித்திடும் நிலையாக
8.தன் உயிர் அமில மூல முலாமைத் தெளிந்து
9.அந்தச் சக்தியின் தொடரில் எண்ண வலுவை உயர்வாக்கிப் பெறும் ஜடாக்கினி ஒளி சக்தி கொண்டு
10.குறைவுபடா சேமிப்பாக்கிச் செயல் கொள்வதே பக்குவமான செயல் ஆகும்.

காப்பிய ரிஷி வான்மீகி ஆச்சா மரத்தை வாலியின் தொடர்பில் பதம் பார்த்து ஆத்ம சக்தி பெறும் சக்தி அலைத் தொடர்பில் குறைவுபடும் காரண மூலம் ஜடாக்கினி மந்திர விழி பிதுங்கும் செயல்படுத்தி எண்ணத் தடையாகும் இராமபாணத்தை எய்ததின் தொடர் தான் “ஜடாக்கினி அனுபவ ஞானம்,..!”

உபதேச வாயிலாகக் கொடுக்கும் சக்திகளை நீங்கள் பதிவாக்கியே ஆக வேண்டும்

 

நமது குருநாதர் கண்ட உண்மையின் உணர்வுகள் அது எப்படி உணர்வுகள் ஒளியாக ஆனது அதன் அறிவாக ஆனது என்ற அந்த உணர்வை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன் (ஞானகுரு).

நஞ்சு கொண்ட உணர்வினை அந்த அகஸ்தியன் எப்படி வென்றான் என்ற நிலையில் உங்கள் வாழ்க்கையில் கஷ்டம் வரும் பொழுது அந்தக் கஷ்டத்தை எண்ணாதபடி… அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருளைப் பெற வேண்டும் என்ற நினைவை நீங்கள் கூட்டினால் அவன் கண்ட உண்மை உங்களுக்குள் கிடைக்கும்.

மற்றவர்கள் சொல்லும் துயரத்தையும் வேதனைகளையும் உங்களுக்குள் வராதபடி தடுத்து நிறுத்தி
1.அந்த அகஸ்தியன் அருள் அவர்களுக்குக் கிடைக்கட்டும்
2.பிணிகளில் இருந்து விடுபடும் சக்தி அவர்களுக்குக் கிடைக்கட்டும் என்று நீங்கள் சொல்லலாம்.

இது தான் நல்லது…!

ஏனென்றால் இப்படிச் செய்யும் போது உங்களை நீங்கள் காத்துக் கொள்கிறீர்கள். பிறரையும் காக்கும் சக்தியாகச் செயல்படுத்துகின்றீர்கள். இந்த இரண்டும் அவசியம் வேண்டும்.

ஆனால் பொதுவாக மற்றவர்களைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் தான் எல்லோருக்குமே வருகிறது. இந்த உணர்வு வேகம் வந்தவுடன் கொஞ்ச நாளைக்கு உதவி செய்கிறீர்கள். பின்னாடி நிலைமை இங்கே தடுமாறும் போது…
1.எல்லாருக்கும் நான் உதவி செய்தேன்… ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றான்…
2.தெய்வம் சோதிக்கிறது…! என்று அந்த வேதனையைத் தான் வளர்த்துக் கொள்கின்றீர்கள்.

மற்றவர்களுக்கு உதவி செய்தாலும் அவர்கள் பட்ட துன்பம் உங்களில் வராது தடுக்க வேண்டுமல்லவா…!

ஆகவே இது போன்று நல்லது என்று செய்தாலும் அதற்குள் மறைந்து வரும் தீமைகள் என்ன செய்யும்…? என்று நாம் அறிந்து கொண்டபின் அதை நீக்கப் பழகிக் கொள்ள வேண்டும். அந்த ஞானம் வேண்டும்.

விஞ்ஞான அறிவுப்படி ஒரு உலோகத்தை வைத்து இயந்திரத்தை உருவாக்குகின்றனர். ஆனால் இயந்திரம் ஓடும் போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் அழுத்தம் ஜாஸ்தியாக இருக்கிறதது என்று அது தாங்கவில்லை என்றால் என்ன செய்கிறார்கள்…?

1,அந்த இடத்தில் வரும் அதிகமான அழுத்தத்தையும் உராய்வையும் தாங்கக்கூடிய சக்தி கொண்ட
2.இன்னொரு உலோகத்தைச் சேர்த்தால் சரியாக வரும் என்று விஞ்ஞானி அதைக் கூட்டிக் கொள்கின்றான்.
3.அந்த உலோகத்தை மாற்றிய பின் இயந்திரம் சீராக இயங்குகிறது.

அதே மாதிரித் தான் மெய் ஞானிகள் கண்ட ஆற்றல்மிக்க சக்திகளை உங்களுக்குள் குருநாதர் காட்டிய வழிப்படி இந்த உபதேச வாயிலாகப் பதிவு செய்கிறோம்.

உங்கள் வாழ்க்கையில் கடினமான சூழ்நிலைகள் வரும் பொழுது அந்த ஞானிகளின் சக்திகளை எடுத்துப் பயன்படுத்திக் கொண்டால் அதை மாற்றிடும் சக்தியாக உங்களுக்குள் வரும்.

சில குடும்பங்களில் பார்த்தோம் என்றால் எப்பொழுது பார்த்தாலும் வீட்டில் சண்டை… சச்சரவு… வேதனை… என்றே சொல்வார்கள். நான் எத்தனையோ பேருக்கு உதவி செய்தேன். அவர்களை எல்லாம் எனக்கு எதிராக இப்பொழுது திருப்பி விடுகிறார்கள்… தொழிலையே செய்யவிடாது என்னைத் தடுக்கிறார்கள்…! என்றெல்லாம் சொல்வார்கள்.

ஆக… இத்தகைய தவறான உணர்வுகள் நம்மை இயக்காது நல்லதாக மாற்றிடும் வலுவான சக்திகளை நாம் கொண்டு வர வேண்டுமா… இல்லையா…! அதற்கெல்லாம் இந்தப் பதிவு (உபதேச உணர்வுகள்) இருந்தால் தான் உங்களுக்கு அந்த உதவி கிடைக்கும்.

யாம் உபதேசிப்பதை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் இந்த காற்றில் இருக்கும் மகரிஷிகளின் உணர்வுகளை எடுத்து நீங்கள் உங்களைக் காக்கலாம்.

பிறரைக் காத்தாலும் அவர்கள் கஷ்டம் உங்களைத் தாக்காது இருக்க ஒரு வலு உங்களுக்கு வேண்டுமா இல்லையா…! ஏனென்றால் எல்லோரும் நல்லவர்கள் தான் யாரும் கெட்டவர்கள் இல்லை…!

நல்லதை எண்ணிச் செய்து… செய்து அவர்கள் கஷ்டத்தை எல்லாம் கேட்டுக் கேட்டு இந்த உணர்வு உடலில் வரப்போகும் போது அது வளர்ந்து விடுகின்றது. நம் நல்ல குணம் மறைந்து விடுகின்றது.

அதை மாற்றுவதற்குத்தான் அகஸ்தியன் பெற்ற ஆற்றல்களை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன் (ஞானகுரு). அதை வளர்த்துக் கொண்டு வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றிக் கொள்ளுங்கள். மகிழ்ந்து வாழும் சக்தி பெறுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

படிக்காதவன்தான் நான் (ஞானகுரு) இதைச் சொல்கின்றேன். இயற்கையின் உண்மையின் உணர்வுகளை அறியும் ஆற்றலையும் ஞானிகள் மகரிஷிகள் பெற்ற ஆற்றலையும் பெறும் தகுதியை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குக் கொடுத்தார்.

நீங்கள் படித்திருந்தாலும் படிக்கவில்லை என்றாலும் யாம் சொல்லும் உணர்வின் தன்மையை ஆழமாகப் பதிவாக்கும்போது
1.உங்கள் நினைவாற்றல் “அண்டத்தையும் அளந்தறிந்த… அகஸ்தியன் பால் செல்லும்…!”
2.அந்த அகஸ்தியர் பெற்ற உணர்வை நீங்கள் பெற்று உங்களுக்குள் கருவாக உருவாக்க முடியும்
3.இருளை அகற்றி ஒளியாக மாற்றும் திறன் உங்களால் பெற முடியும் என்ற நம்பிக்கையில் தான் இதைச் சொல்கிறேன்.

மகரிஷிகள் பெற்ற சக்தியைப் பெறுவதற்காகவும் உலக அனுபவம் பெறுவதற்காகவும் ஈஸ்வரபட்டர் இட்ட கட்டளைப்படி காடு மேடெல்லாம் நான் அலைந்தேன்… தெரிந்தேன்.. அறிந்தேன்… துன்புறுத்தப்பட்டேன்…!

அந்தத் துன்பத்தில் இருந்து விடுபடும் உணர்வுகளை குருநாதர் உணர்த்தினார். அந்த உணர்வின் ஆற்றலைக் கவர்ந்தேன்.

துன்பத்தை அகற்றிடும் ஆற்றலை வளர்த்து அதன் வழியில் பெற்ற ஞானத்தைத் தான் இங்கே போதிக்கின்றேன். போதிக்கும் உணர்வுகளைப் பதிவாக்கி மீண்டும் நினைவு கொண்டு வளர்த்தால் உங்களை அறியாத இருளை போக்க முடியும்.

இந்த உடலில் நாம் நீடித்த நாள் இருப்பதில்லை, உடலில் இருக்கும் போது அந்த அருள் ஒளியை வளர்த்துக் கொள்ளுங்கள். அருளைப் பெருக்கி அதை அனைவரும் பெற வேண்டும்.. எல்லோரும் நலம் பெற வேண்டும் என்ற உணர்வை வளர்த்திட்டால் மற்றவர்களையும் நலம் பெறச் செய்ய முடியும்.

ஆகவே நீங்கள் அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற ஆசையில் தான் அருள் ஞானத்தைப் போதிக்கின்றேன்.
1.அருள் ஒளியின் உணர்வை நுகருங்கள்.
2.அருள் ஞான அணுக்களை உங்கள் உடலுக்குள் உருவாக்கும்.

நமது எல்லை எது…? என்று அறிந்து அதை அடைந்திட வேண்டும். அதை மையமாக வைத்து வாழ வேண்டும்.
1.இந்த மனித உடலுக்குப் பின் நாம் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும்
2.ஒளியின் சரீரமாக ஆவதே மனிதனுடைய கடைசி நிலை.
3.ஒளியாகி விட்டால் அகண்ட அண்டத்திலே நாம் என்றுமே ஜோதிச் சுடராக என்றும் பதினாறு என்ற நிலை அடையலாம்.

மனித உடல் பெற்ற நிலையில் ஆறாவது அறிவை (கார்த்திகேயா) வைத்து உயிரின் துணை கொண்டு அந்த நிலையை அடைய முடியும். ஏனென்றால் நம் உயிர் தான் எல்லாவற்றையும் (பார்ப்பது கேட்பது நுகர்வது) உருவாக்குகின்றது.

உயிர் அது எப்படி அறிவாக நமக்குத் தெளிவாக்குகின்றதோ அதே போல் நாம் நுகரும் உணர்வை எல்லாம் உயிருடன் ஒன்றச் செய்து ஒளியாக மாற்றும் திறன் ஆறாவது அறிவிற்கு உண்டு.

ஆனால் “என்னமோ போகட்டும்… நாளைக்கு நடப்பதை யார் அறிவார்…?” என்று எண்ணினால் இதற்குப் பின் நாம் நரகலோகம் தான்.

ஞானத்தை வளர்க்க உதவாத… நம் ஆத்ம பலத்தை வீரியப்படுத்த உதவாத எந்தச் செயலையும் செய்யக் கூடாது – ஈஸ்வரபட்டர்

“ஜடாக்கினி மன திறன்…!” என்னும் மூலச் சக்தி நாத விந்துவாக… மனிதனுக்குள் இரசமணியாகச் செயல்படும் அந்த வீரிய குண அமிலமே “இராமபாணம்…” என்று காட்டப்பட்டது.

இந்த மனிதப் பிறவியை எடுத்ததன் பலனாக… “எந்த இலட்சியம் தன் கருத்தோ” அந்த இலட்சியத்தை எய்தும் பாக்கிய நிலையைப் பெறுவது அதுவே தான்…! ஆனால் அந்தப் பாக்கிய நிலை பெற்று விட்டால் மட்டும் போதாது. அதை வளர்க்கவும் வேண்டும்.

இராமபாணத்தை எய்தினால் அது அப்படியே திரும்பி வரும்…! என்பதன் பொருள் என்ன…?

1.எண்ணம் கொண்டு செலுத்தப்படும் ஜடாக்கினி மூல சக்தியை
2.விண்ணை இலக்காகக் கொண்டு செலுத்தப்பட்டால்
3.அதையே நம் வாழ்வின் இலட்சியமாகக் கொண்டால்
4.அந்தச் சக்தி குறைவுபடாது மேன்மேலும் வளரும்…! என்பதே
5.இராமபாணம் திரும்ப வரும்…! என்று சொன்னதன் தொடர்.

ஜடாக்கினி அனுபவத்தில் வான்மீகி மாமகரிஷி மாத்திரம் தப்பித்துக் கொண்டாரா…? அவர் பெற்ற அனுபவப் பாட நிலை என்ன…?

1.ஜடாக்கினி செயல் சக்தியைச் செலுத்திக் கண்ட “ஓர் அனுபவமாக..”
2.வாலி வதம்…! என்ற பாங்கில்
3.இராமன் தலை குனிந்தான்…! (மறைந்திருந்து தாக்கியது) என்பதன் பொருள் என்ன…?

ஆச்சா மரத்தை வெட்டுபவனுக்கு அந்த வலுவான மரத்தை முறித்திட வலுவான சக்தி மாத்திரம் போதாது. அந்த ஆயுதம் கூர்படத் தீட்டப்பட்டிருக்க வேண்டும்.

“தான் பெற்ற தவ சக்தியை” வான்மீகி கூர்பார்த்த விதம்… ஆச்சா மரத்தை வெட்டும் செயல் போல் அவர் செயல் நிலை இருந்தாலும் சபரி அன்று அவரைக் கேட்டாள் “என்னையும் வானத்தில் இருத்த முடியுமா…? என்று…!”

அங்கே அந்த உபதேசத் தத்துவம் மழுங்கி விட்ட ஆயுதத்தால் ஆச்சா மரத்தை வெட்ட முடியுமா…?

உலக இயல் என்னும் பிடிப்பில் (உலகப் பற்று) “ஆச்சா மரம்…” என்பதெல்லாம் சொல் நாமம் பெயர் விளக்கத்திற்காகச் சூட்சமமாகக் கொடுக்கப்பட்டது தான்.

ஏனென்றால் நம் கவனம் ஞானத்தை வளர்த்திடும் எண்ணத்தில் நிலை பெற்றிருக்க வேண்டும்.

இது சொல் ஈர்க்கும் செயல் மாத்திரமல்ல…! இதிலே வலியுறுத்தும் காரியார்த்தம் (நுட்பம்) எது என்றால் “ஊசி முனைத் துவாரத்தில் நீர் குறைந்துவிடும்…” என்ற பொருளின் விளக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அதைப் புரிந்து கொண்டால் ஞானத்தை வளர்க்க உதவாத… நம் ஆத்ம பலத்தை வீரியப்படுத்த உதவாத எந்தச் செயலையும்…
1.உற்றுக் கேட்கவும் வேண்டாம்…!
2.அதிசயித்துப் பார்க்கவும் வேண்டாம்…!.
3.”பெருமாள் படியளந்தான்…” என்பது போல் இருக்க வேண்டுமே தவிர
4.நாம் எடுக்கும் வீரிய சக்தி நம்முடைய உயிராத்மாவிற்கு அழியாச் சொத்தாக இருக்க வேண்டும்.

மின்னலைப் பாருடா… என்றார் குருநாதர்

 

அகஸ்தியன் தாய் கருவில் சிசுவாக இருக்கப்படும் பொழுது அவனின் தாய் தந்தையர்கள் விஷத்தன்மை கொண்ட மிருகங்களிடமிருந்தும் மற்ற விஷ ஜெந்துக்களிடமிருந்தும் தப்பிக் கொள்ளவும் மின்னல்களில் இருந்து தப்பிக் கொள்ளவும் பல பல பச்சிலைகளையும் மூலிகைகளையும் உபயோகப்படுத்தினார்கள்.

குருநாதர் ஒரு சமயம் என்ன செய்தார்…? அவர் கையிலே பச்சிலையை வைத்து இருக்கின்றார். அது எனக்குத் (ஞானகுரு) தெரியாது.

நீ மின்னலைப் பார்…! என்று என்னிடம் சொன்னனார். அந்தச் சமயத்தில் அவருக்கும் எனக்கும் சண்டை வந்துவிட்டது. அவர் கையில் பச்சிலை வைத்திருந்தது எனக்குத் தெரியாது.

ஆனால் என் கையைத் தொடுகிறார். மின்னலைப் பாருடா…! என்று கட்டாயப்படுத்துகின்றார்.

சாமி…! நான் பிள்ளை குட்டிக்காரன். நீங்கள் கூப்பிட்டீர்கள் என்று உங்களுடன் வந்துவிட்டேன். மின்னலைப் பார்த்து என் கண்கள் இல்லாமல் போய் விட்டால் நான் என்ன செய்வது…? என்று சொல்கிறேன்.

நான் (ஈஸ்வரபட்டர்) சொல்வதைக் கேட்கிறேன் என்று சொல்லி வந்தாய் அல்லவா. “சரி” என்று சொல்லித் தானே வந்தாய். உன் மனைவியை உடல் நலம் பெறச் செய்தேன். அதன்படி நான் சொல்வதைக் கேட்கிறேன் என்று சொல்லி வந்தாய். அப்படியானால் நான் சொல்வதைக் கேட்க வேண்டுமா… இல்லையா…? என்று இப்படிக் கேட்கிறார்.

நான் என்ன செய்யட்டும்…? எனக்கு வேறு வழி இல்லை…!

குருநாதர் பச்சிலையை கையில் வைத்துக் கொண்டு என்னைத் தொடுகின்றார். மின்னல் தாக்கப்படும் பொழுது மின்னலைப் பார் என்று சொல்கின்றார்.

விண்ணிலே விஷத் தன்மைகள் தாக்கும் பொழுது தான் மோதலாகின்றது. அப்பொழுது பளீர்… என்று மின்னலாகப் பாய்கின்றது.

1.விஷம் தாக்கப்பட்டுத் தான் வெப்பம் ஆகின்றது…
2.விஷத்தின் தாக்குதலால் தான் நம் உயிரிலும் வெப்பம் உருவாகிறது… அதனுடைய இயக்கமும் ஆகின்றது
3.ஆனால் அதீத விஷம் தாக்கப்படும்போது இருளாகின்றது.

சாதாரணமாக நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விஷம் தேவை. விஷம் அதிகம் ஆனால் நம் செயலையே மறக்கச் செய்து விடுகின்றது.

உப்புப் போட்டால் ருசியாகத் தான் இருக்கின்றது. அதிகமாகப் போட்டால் ஓ…ய்ய்….! என்று வாந்தி வருகின்றது. சாப்பிட முடியாது..!

அளவை அறிந்து போட்டால் தான் சாப்பிட முடியும். ஆகவே அதன் உணர்வுக்கொப்ப மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்காக இதை எல்லாம் குருநாதர் அனுபவபூர்வமாகக் காட்டுகின்றார்.

அவர் இதை எல்லாம் விளக்கமாகச் சொன்ன பின்…
1.அவர் சொன்னபடி மின்னலைப் பார்த்தவுடன் மிகவும் ஆனந்தமாக இருந்தது
2.அறிவின் தன்மை எனக்குள் வருகின்றது,…
3.அறிந்து கொள்ளக் கூடிய உணர்வுகள் அந்த மின் கதிர்கள் என்னென்ன ஆகின்றதோ அது எல்லாம் தெரிகிறது
4.வான மண்டலத்தில் உள்ளதை எல்லாம் அறியும்படி செய்தார் குருநாதர்.

மின்னல் வரும் பொழுது அது எங்கெங்கெல்லாம் ஊடுருவுகிறது என்று அதையெல்லாம் அறியக்கூடிய சக்தி வந்தது. அதை அப்பொழுது தெரியப்படுத்துகின்றார்.

முதலில் அவர் பச்சிலையைக் காண்பிக்கவில்லை. கையில் வைத்துக் கொண்டு என்னைத் தொடுகின்றார். நான் மின்னலை பார்க்க மாட்டேன் என்று சொல்கின்றேன். பின் தான் விளக்கம் சொல்கிறார்.

ஏனென்றால்
1.உனக்குச் சக்தி கொடுக்கத்தான் நான் இதைச் செய்தேன்
2.இந்த பச்சிலைகளால் தான் அகஸ்தியன் அந்த ஆற்றலைப் பெற்றான்
3.அதன் உணர்வின் துணை கொண்டு தான் ஒளியாக மாறினான்

அதே பச்சிலையின் உணர்வுகளை எடுக்கப்படும்போது அவன் பெற்ற உணர்வை நீயும் பெறும் பொழுது உனக்குள்ளும் தீமைகள் வராது அந்த விஷத்தை முறிக்கும் சக்தி கிடைக்கின்றது என்று அங்கே தெளிவாக்குகிறார் குருநாதர்.

குருநாதர் பார்ப்பது போல நானும் மின்னலைப் பார்த்து அந்த மின்னல்களின் ஒளிக்கற்றைகளை நான் நுகரப்படும் பொழுது அது என்னுடைய இரத்தத்தில் கலக்கின்றது.

இரத்தத்தின் வழி உடலுக்குள் இருக்கும் எல்லா அணுக்களுக்கும் அந்தச் சக்தி கிடைக்கின்றது எல்லா அணுக்களுக்கும் கிடைக்கும் பொழுது ஒளியின் அணுக்களாக மாறுகின்றது.

இன்று எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று உபயோகப்படுத்தி எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இறந்த டைனோசர் (DINOSAUR) என்ற உயிரினங்கள் வாழ்ந்த இடங்களையும் அதன் உடல் புதைந்த இடங்களையும் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கின்றனர்.

அதைப் போன்று தான்
1.அகண்ட அண்டமும் அந்த உணர்வும் எப்படி விளைந்தது…? என்று அகஸ்தியன் ஆதியிலே கண்டான்
2.அவனைப் போல் நீயும் உனக்குள் அதை எல்லாம் அறிய வேண்டாமா…? என்று வினா எழுப்புகிறார்
3.அதற்காக வேண்டித்தான் உன்னை மின்னலைப் பார்க்கச் சொன்னேன் என்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

அவர் சொன்ன வழிப்படி அறிந்து கொண்ட பின் அந்த உணர்வு வருகின்றது. என்னுடைய எண்ணங்களில் அதைப் பதிவு செய்யப்படும் பொழுது
1.இந்த காற்றில் இருக்கும் அகஸ்தியரின் உணர்வை எடுத்து நானும் அறிய முடிகின்றது
2.அதன் உணர்வை வைத்து நானும் பேச முடிகின்றது
3.பேசும் உணர்வை செவி வழி நீங்கள் கேட்டீர்கள் என்றால்…
4.அகஸ்தியன் கண்ட உண்மைகளை எல்லாம் பெற வேண்டுமென்று ஆசைப்பட்டால்…
5.இந்த உணர்வின் தன்மை உயிரிலே பட்டபின் உங்களுக்குள் பிரம்மமாகி
6.அகஸ்தியன் கண்ட அந்த உண்மைகளை நீங்களும் நிச்சயம் அறிய முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யாகத்தைச் செய்து மந்திரங்களைச் சொல்லி பொருள்களையும் சோமபானத்தையும் தீயில் போட்டு அந்த உணர்வை எல்லாம் ஏற்றினால் தீமைகள் போய்விடும்… நோய் போய்விடும்…! என்று சொன்னால் எப்படிப் போகும்…?

இன்னும் கொஞ்சம் தீமையைச் சேர்த்துக் கொள்கின்றமே தவிர தீமை போகாது.

அந்த மந்திரத்தைச் சொல்லும் பொழுது இன்னொரு மனித உடலிலிருந்து விளைந்த உணர்வுகள் தான் நமக்குள் பதிவாகும். ஒரு ஆவியின் தொடர்பை நாம் வளர்த்துக் கொள்கின்றோம்.

மந்திரம் சொல்லி ஜெபித்து நோய் போய்விடும் என்று சொன்னால் கொஞ்ச நேரத்திற்கு வெயிலுக்குக் குடை பிடித்த மாதிரி தான் அந்த நிலை. அதனால் நமக்கு நல்ல பலன் இல்லை.

நோயை நீக்க வேண்டும் என்று மருத்துவரிடம் போகின்றோம். அவர் கொடுக்கும் (இங்கிலீஷ்) மருந்தைச் சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் மருந்து அதிகமாக அதிகமாக என்ன செய்கின்றது…?

நோயை நீக்கினாலும்… அதையே மடக்கிப் போட்டு அது முன்னாடி வந்துவிடுகிறது. பிறகு இது அதிகமாகிப் போனதென்றால் இதை மாற்றுவதற்கு வேறோரு மருந்தைச் சாப்பிட வேண்டும்.

எப்பொழுதுமே இந்த உடலை விட்டு போகத்தான் போகிறது நம் உயிர். ஆனால் இந்த உடலில் இருக்கும் போது தான் அந்த மகரிஷிகளின் சக்தியைப் பெறுகின்றோம் என்பதற்காக வேண்டித் தற்காலிகமாகச் சில மருந்துகளைச் சாப்பிடுவதனால் தவறில்லை.

நம்மால் எண்ணத்தால் எண்ண முடியவில்லை. அந்த நேரத்தில் சில மருந்துகளைச் சாப்பிட்டுக் கொஞ்சம் வலு கூட்டி நம் எண்ணத்தை மீண்டும் வலு கூட்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெருக்கிப் பழக வேண்டும்.

வாய்க்காலில் தண்ணீர் போகிறது. திடீரென ஒரு பக்கம் உடைப்பு எடுத்தால் என்ன செய்ய முடியும்…? மறுபடியும் மண்ணைப் போட்டீர்கள் என்றால் நிற்குமா…? மண்ணைப் போடப் போட மண்ணைக் கரைத்து கொண்டே போகும்.

அப்போது மண்ணை மூட்டையாகக் கட்டி அந்த மூட்டையுடன் ஒன்றோடு ஒன்று இணைத்துப் போட்டு விட்டோம் என்றால் நின்று விடுகிறது. பிறகு மண்ணைக் கொட்டிச் சீராக்க முடியும். அடைப்பை முழுவதும் நிறுத்த முடியும்.

ஆகவே நம் உயிரை ஈசன் என்ற நிலையில் மதிக்க வேண்டும். ஈசன் வீற்றிருக்கக்கூடிய ஆலயம் உடல் பரிசுத்தமாக வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். அதாவது
1.“உயிரால் தான் உருவாக்கப்பட்டது…!” என்று
2.அவனை முதன்மையாக் கருதி நாம் மதித்துப் பழக வேண்டும்.
3.நம் உடலையும் கோவிலாக மதிக்க வேண்டும்.
4.மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்களை நாம் காக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

மாய ஒலி கேட்டு அறிவினை இழக்காமல் இருக்க மெய் ஒலியை நாம் அவசியம் பெற வேண்டும் – ஈஸ்வரபட்டர்

ஒரு விலங்கினம் நீர் குடிக்கும் ஓசையைக் கேட்டே அம்பெய்து அதைக் கொல்லக்கூடியவன் தான் தசரதன். அப்படிப்பட்ட செயலாகத் தான் ஒரு சந்தர்ப்பத்தில் சிரவணனைத் தசரதன் கொல்ல நேர்கிறது.

அந்தச் செயலை வான்மீகியார் சுட்டிக் காட்டிய நிலைகளில் ஒரு “சூட்சமப் பொருள் உள்ளது…!” அது என்ன..?

கண் பார்வை இல்லாத பெற்றோரைச் சுமந்து செல்பவன் தான் சிரவணன். ஒரு சமயம் அவனுடைய தாய் தந்தையர் “தாகம்…” என்று தண்ணீர் கேட்டதும் அதற்காக நீரைத் தேடி அலைந்தான்.

ஆனாலும்
1.நீர் கிடைக்கும் வரை அவன் எடுத்த எண்ணம் என்ன…?
2.கடமை என்ற சொல்லும் உண்டு.
3.கடமையின் பால் தன் உணர்வுதனை மாற்றிக் கொண்ட செயலும் உண்டு.

விலங்கினங்கள் நீர் அருந்தும் ஓசையைக் கொண்டே அந்த மிருகங்களைப் பார்க்காமலேயே மறைந்திருந்து குறி தவறாது அம்பெய்யும் ஆற்றல் பெற்றவன் தான் தசரதன்.
1.அதை வீரத்தில் சேர்ப்பதா…?
2.கற்ற வித்தையின் ஞானத்தில் சேர்ப்பதா…?
3.அல்லது உணர்வுகள் கூட்டிக் கொண்ட மோகம் அறிவுக் கண்ணை மறைத்ததாகச் சொல்வதா..?

ஏனென்றால் தசரதன் அவன் இளமையின் ஆற்றலால் கற்றுக் கொண்டதுதான் அந்தக் கலை. அவனுடைய செவிப் புலன் அறிவாக ஓசையைக் கொண்டு குறிப்பறியும் ஆற்றலைக் காட்டியது ஞானம் தான்.

ஆகவே வான்மீகியார் கூற வந்த தெளிந்த பொருள் என்ன…?

காமத்தின் விளைவால் மோகத்தில் கிளர்ந்தெழுந்த உணர்வுகளின் செயல்பாடு… சரீர உணர்வின் இயக்கத்தால்… “கருத்தறிய முடியாத அலட்சிய மனோபாவனையக் காட்டியது தான்…” தசரதனின் அந்தச் செயல்.

தண்ணீருக்காகத் தேடிய சிரவணன் அவன் எடுத்த சஞ்சல உணர்வலைகள் பாசத்தின் அடியாக பதைபதைப்பாக அவன் அறிவின் பொறி கலக்கமுற்றது.

அதனால் குறிப்பறியாத ஈர்க்கும் செயலில்… எதிர் மோதல் குணங்கள் உணர்வுகளின் உந்துதலால்… குறிப்பறியாச் செயலுக்கு அறிவின் மயக்கமே ஒன்றை ஒன்று பற்றிக் கொண்டு… “வினைச் செயலின் விளையாட்டாக சிரவணன் நீர் மொள்ளும் சப்தம் அமைந்தது…!”

1.அப்படிப்பட்ட “சிரவணனின் அறிவின் மயக்கமும்”
2.ஒலி கொண்டு அறியும் ஆற்றலின் அலட்சியத்தால் விளைந்த “தசரதனின் அறிவின் மயக்கமும்”
3.சந்தர்ப்பத்தால் சந்தித்த சந்திப்பு…
4.அம்பாகச் சிரவணன் உடலில் பட்டுத் தைத்து அவன் உயிரைக் குடிக்க முனைந்தது.

ஆனால் ஞான வழிச் செயல் ஆக்கத்திற்குத் தனித் தன்மையான பொருளும் உண்டு.

எப்படி…?

செவிப்புலனால் ஒலி ஈர்க்கும் அறிவு செயல்படும் அந்த நேரத்தில்
1.ஒளி கொண்ட ஒலி நாதத்தைத் தனக்குள் நிறைத்துக் கொண்டால்
2.புற உலகின்கண் எழும் சப்தங்களை உணர்ந்திட முடியாத செயலுக்கு
3.நமக்குள் சேர்க்கும் மெய் ஒலியின் அந்த ஓங்கார நாதமே… அதிர்வுகளாக ஓசையைப் பெருக்கச் செய்து
4.அதே தொடரில் ஆத்ம வலுவைக் வலுக் கூட்டிக் கொள்ளும் உயிர் கலப்பால்
5.மெய்யை அறியும் உயர் ஞானமாக அது அமைந்து
6.தெளிவான ஆக்கபூர்வமான செயல்களைச் செய்விக்கச் செய்யும்.

ஆகவே…
1.ஒலி கொண்டு புலன்களால் அறிந்தாலும்
2.ஒளி கொண்டு ஒலியை ஊர்ஜிதப்படுத்திடும் மெய் ஞானம் பெற்றால் தான்
3.நம் செயல்கள் என்றுமே வளர்ப்பின் வளர்ப்பை வளர்க்கும் செயலாக நன்மை பயக்கும்.

இந்தப் பிரபஞ்சத்தின் உண்மைகளை நீங்களும் முழுமையாகக் காண முடியும்

1.இருபத்தியேழு நட்சத்திரங்கள் உமிழ்த்தக் கூடிய கதிரியக்கச் சக்திகள் அவை ஒவ்வொன்றும் கலவையாகும் போது எப்படி மாறுகின்றது…?”
2.அதிலிருந்து வரும் ஒளிக் கதிர்கள் தங்கமாக எப்படி மாறுகிறது..?
3.செவ்வாய்க் கோளை எடுத்துக் கொண்டால் அதிலே சிவப்பு நிறமான நிலைகள் எப்படி இருக்கின்றது…?
4.புதன் கோளை எடுத்துக் கொண்டால் மஞ்சள் நிறமாக எப்படி வருகின்றது…?
5.பல நட்சத்திரங்களின் கலவைகள் இதனுடன் (புதன்) கலக்கப்படும் பொழுது எத்தனையோ வகையான உலோகத் தன்மைகளாக அது எப்படி மாறிக் கொண்டிருக்கின்றது…?
6.வியாழன் கோள் அந்த 27 நட்சத்திரத்தின் சக்திகளை எடுக்கும் போது அந்தக் கதிர்வீச்சின் தன்மையைத் தனக்குள் அடக்கி ஒரு பொருளுக்குள் ஊடுருவி “அதை இணைக்கும் சக்தியாக” எப்படிக் கொடுக்கின்றது…?
7.இதிலிருந்து பிரிந்து செல்லும் ஆவித் தன்மையைச் சனிக்கோள் எடுத்து நீராக எப்படி மாற்றுகின்றது…? என்று நமது குருநாதர் இது அனைத்தையும் தெளிவாகக் கூறுகின்றார்

அதே சமயத்தில் ஒவ்வொரு கோளும் அது தனக்கென்று பல உபகோள்களை வளர்க்கின்றது. ஒவ்வொரு கோளுக்கும் எட்டு பத்து பனிரெண்டு என்ற எண்ணிக்கையில் உபகோள்கள் உண்டு. அது ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சக்திகளை எடுத்துச் சுழன்று வருகிறது.

வியாழன் கோளுக்கோ 27 உபகோள்கள் உண்டு. இந்த இருபத்தி ஏழும் 27 நட்சத்திரங்களுக்கு உண்டான நிலைகளை இது கவர்ந்து தனக்குள் எடுத்துப் பல கலவைகளாகச் சேர்க்கின்றது.
1.அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித்தியாசமாகச் சுழன்று வரும்.
2.அதிலே ஒன்று ஒரு பக்கம் சுற்றி வரும் மற்றோன்று எதிர் பக்கமாகச் சுழன்று வரும்.

இன்றைக்கும் விஞ்ஞானிகள் இதைக் கண்டு கொள்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். அது மாறி வரும் பொழுது வேறு ஒரு திசையில் வருகின்றதா… அது என்ன…? என்கிற வகையில் இன்னும் ஆராய்ச்சி செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

ஆனால் அந்த இருபத்தி ஏழு கோள்களும் அது சுழன்று கொண்டு இருக்கின்றது. 27 நட்சத்திரங்களின் சக்திகளை அது கவர்ந்து அதற்குள் ஒரு கலவையாக்கி இந்த உணர்வின் தன்மை ஒரு புதுவிதமான கதிரியக்கமாக மாற்றுகின்றது.

சனிக்கோள் எப்படித் தான் கவர்ந்ததை உறை பனியாக மாற்றுகின்றதோ இதைப் போல வியாழன் கோளிலும் உறையும் பனியாக மாற்றும் சக்தி அங்கு நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

இதையெல்லாம் உங்களிடம் ஏன் சொல்கிறேன் என்றால் நாளை எதிர்காலத்தில் இந்த உண்மைகளையெல்லாம் நீங்கள் அறிய வேண்டும் என்பதற்குத்தான்…!

1.நான் மட்டுமல்ல… உங்களாலும் அதைக் காண முடியும்.
2.இந்தப் பிரபஞ்சத்தின் உண்மைகளைக் கண்டுணர்ந்து நீங்களும் தெளிந்து
3.இந்த உலகில் வரும் இருளை மாய்க்க கூடிய சக்தியாக வரவேண்டும்.

ஏனென்றால் நீங்கள் அனைவரும் பேரின்பப் பெருவாழ்வு வாழ வேண்டும் என்பதற்காக குருநாதர் காட்டிய அருள் வழியில் இதை உணர்த்துகின்றோம் (ஞானகுரு).

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சாதாரணமாக மனிதர் பாம்பினைக் கண்டால் அஞ்சுகின்றார்.

ஆனால் பாம்பு பிடிப்பதில் தெளிந்த மனிதன் ஒருவன் ஒரு பாம்பைப் பிடிக்கச் சென்றால் பாம்பு “அவனைக் கண்டு” அஞ்சுகின்றது.

அவன் கையில் ஒரு குச்சி மட்டுமே இருக்கும். பாம்பைக் கண்டு நாம் பயப்பட்டோம் என்றால் பாம்பு இந்த உணர்வை நுகர்ந்து…, “சிர்…ர்ர்…” என்று சீறித் தாக்கும் “பயந்த மனிதன் தாக்குகின்றான்” என்று உணர்கின்றது.

தெளிந்த மனிதன் வலிமை கண்டு “இவன் நம்மைத் தாக்கிவிடுவான்” என்று பாம்பு அஞ்சி ஓடுகின்றது. ஆனால் பயந்தவன் தாக்கும் பொழுது பாம்பும் அஞ்சி இவனைத் தாக்குகின்றது.

வலிமையுள்ளதை நுகர்ந்துணரும் சக்தி பிற உயிரினங்களுக்கு உண்டு. மனிதருக்கும் இந்த அறிவு இருப்பினும் இந்த அறிவை சீராகப் பயன்படுத்துவதில்லை. ஆதலால் நாம் அறியும் தன்மை இழந்திருக்கின்றோம்.

பாம்பு பிடிப்பதில் தெளிந்த மனிதன் இந்தப் புற்றுக்குள் பாம்பு இருக்கிறது என்று அறிகின்றான். இவனின் மணத்தை நுகரும் பாம்பு புற்றுக்குள் அஞ்சி ஒடுங்குகின்றது.

இவன் தூண்டும்போது வெளிவரும் பாம்பு இவனைத் தாக்குவதில்லை. அஞ்சி ஓடுகின்றது. ஆனால் இவன் பாம்பை எளிதில் பிடித்து கவட்டையில் போட்டுப் பாம்பு உயிருடன் இருக்கும் பொழுதே பாம்பின் தோலை உரிக்கின்றான்.

இத்தகைய உணர்வுகள் பாம்பு பிடிப்பவனிடத்தில் இருப்பதால் “அவனிடமிருந்து வெளிப்படும் மணத்தை” பாம்பினம் காண்கிறது.

ஆகவே அவனைக் கண்டு அஞ்சி ஓடுகின்றது. சாதாரண மனிதனைக் கண்டால் சீறித் தாக்குகின்றது எதிர்த்து நிற்கின்றது.

இதைப் போன்றுதான் வாழ்க்கையில் பகைமை என்ற உணர்வுகள் எத்தனையோ நம்மிடத்தில் வருகின்றது.

நாம் அன்பும் பண்பும் பரிவும் கொண்டு பிறருடைய கஷ்டங்களை நோய்களைக் கேட்டறிந்து உபகாரம் செய்தாலும் நாம் கேட்டறிந்த உணர்வுகள் “ஓ…ம் நமசிவாய…” என்று நம் உடலாக மாற்றுகின்றது.

அதுவே வினையாகின்றது, வினைக்கு நாயகனாக அதன் வலுவைக் காண்பிக்கத் தொடங்கிவிடுகின்றது. இது போன்ற தீமைகளிலிருந்து எங்ஙனம் நாம் விடுபட வேண்டும்…? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

ஒரு இயந்திரத்தை உருவாக்கும் இஞ்சினியர்
1.அந்த இயந்திரத்தில் எங்கெங்கே “அழுத்தம்” அதிகமாக இருக்கும்?
2.எங்கெங்கே “வலிமை” தேவை? என்பதைக் கணக்கிட்டு
3.உலோகத் தன்மையின் வலிமையையும் இயந்திரத்தில் ஏற்படும் உராய்வையும் கணக்கிட்டு
4.ஒரு இயந்திரத்தை உருவாக்குகின்றார்.

ஆனால் இயந்திரத்தைச் சோதித்துப் பார்க்கும் பொழுது உலோகக் கலவையில் வலு சிறிது குறைவாக இருக்கும் பொழுது இயந்திரம் நொறுங்கி விடுகின்றது.

பின் “எதனால்… இப்படி நேர்ந்தது…?” என்று சிந்திக்கின்றார். “சிந்தித்து…” இயந்திரத்திற்குண்டான வலிமையைக் கூட்டுகின்றார் இதனைத் தொடர்ந்து சரியான ஒரு இயந்திரத்தை உருவாக்குகின்றார்.

இதைப் போன்று தான் ஞானத்தின் நிலைகள்.

1.தீமை என்று ஒன்று வரும் பொழுது
2.நாம் அருள் ஞானிகளின் உணர்வை நம்முள் பதிவாக்கினால்
3.உடனே சிந்தனை தூண்டப்பட்டு
4.தீமைகளை அகற்றும் தன்மை நம்மிடத்தில் உருவாகின்றது.
5.அருள் ஞானிகளின் உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது அது நம்முள் விஷத்தின் தன்மையை அடக்கி
6.நம்மிடத்தில் சிந்திக்கக்கூடிய மன வலிமையைக் கூட்டுகின்றது.

மகரிஷிகளால் சொல்லப்பட்ட முக்கியமான கலையைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

சமமான நிலை நிலைக்கச் சாந்த நிலை தந்திடுவாய் ஈஸ்வரா…! என்று தியானத்தில் வேண்டுகிறோம். அதனின் உண்மைப் பொருள் என்ன..?

சாந்த குணம் பெற வேண்டும் என்ற எண்ணம் கொள்கிறோம். முயற்சியும் செய்கிறோம்… ஆனால் நம் முயற்சி செயலுக்கு வரும் பொழுது
1.நமக்குள் வந்து மோதும் உணர்வுகளின் மோதல்களை
2.தன் எண்ணம் கொண்டு தனக்குத் தானே சமப்படுத்தும் செயலுக்கு
3.அதை யார் எப்படிச் செயலாக்கம் செய்வது…?

இதன் பொருள் புரிந்ததா,.?

1.ஒரு சுரக்குடுவை நீரில் அமிழ்த்தப்பட்டால் “பொட…பொட…!” என்று சப்தமிட்டுத் தான் நீரை நிறைத்துக் கொள்கிறது.
2.ஆனால் அதே குடுவைக்குள் நீர் மொள்ளும் பொழுது “சப்தமே வராமல்…!” பக்குவமாக நிறைத்துக் கொள்ளும் முறையும் உண்டு.
3.இந்த இரண்டு செயல்களுக்கும் பொதுவானதே – நமக்குள் வந்து மோதும் உணர்வுகள்.

உதாரணமாக ஒரு சஞ்சலமான உணர்வை ஊட்டி விட்டால் பரபரப்பாகின்றோம்.. பதட்டமாகின்றோம்…! அதன் பின் உணர்ச்சிவசப்பட்ட இயக்கமாகத் தான் வரும்.

அப்பொழுது அந்தச் செயலால் சாந்த குணத்தைக் கூட்ட முடியுமா…?

ஒரு ஞானவான் சுரக் குடுவைக்குள் (சப்தமில்லாது) பக்குவமாக நீரை நிறைத்துக் கொள்வது போல் சமமான உணர்வுகள் கொண்டு செயல்படும் செயலில் “நிதானம் என்ற பொறுமை குணம்…” நமக்கு அவசியம் தேவை.

உணர்வுகளை மாற்றிட நாம் முயலும் பொழுது
1.அந்த மாற்று அலைத் தாக்குதலால் நாம் எடுத்த உணர்வுகளின் ஈர்ப்பில்
2.வேகம் கொண்டு தாக்கிடும் செயலில்… நாம் “ஆத்ம சுத்தி” பாதிக்கப்படுவது நிச்சயம்.

அப்படியானால் பரபரப்பான இந்த உலக வாழ்க்கை நடை முறையில் வாழும் மனிதர்கள் ஒவ்வொரு நிமிடமும் தான் எடுக்கும் உணர்வுகள் கொண்டு
1.அந்த உணர்வுகளுக்கு ஒத்த தீமையான அணுக்கள் தன் ஈர்ப்பில் ஒட்டிக் கொள்ளும் பொழுது
2.அதை நல்லதாக்கிச் செயல்படுத்த வேண்டிய நடை முறைச் செயல் என்ன…?

நாம் எடுக்கும் உயரிய ஜெப எண்ணத்தில்
1.அவ்வப்பொழுது வந்து மோதும் மாற்று அலைகளைத் தவிர்த்து
2.தான் இருக்கும் வழியிலேயே தன்னைத் தான் தற்காத்துக் கொள்ளவே “ஆத்ம சுத்தி என்ற ஆயுதம்…!”

ஆத்மாவைப் புனிதப்படுத்திக் கொள்வது என்பது என்ன…? எப்படி…?

நம் வாழ்க்கை நடை முறையில் எதிர் நிலையான உணர்வுகள் நமக்குள் வந்து மோதும் சமயத்தில் எல்லாம்… அதனால் கிளர்ந்தெழும் செயலைத் தவிர்த்து
1.ஓ…ம் ஈஸ்வரா…! என்ற ஒலி நாதத்தைக் கூட்டி (ஒரு பிரேக்)
2.அவ்வாறு சொல்லும் பொழுதெல்லாம் புருவ மத்தியில் உயிரைப் பரிபூரணமாக எண்ணி
3.அந்த ஒலி நாத உள் நிறைவால்
4.தன் ஆத்மாவிற்குப் பாதுகாப்பான வளையமிட்டுக் கொள்வதே ஆத்ம சுத்தியின் சூட்சமம்.

தீமையான உணர்வுகள் வரும் பொழுது இப்படி ஆத்ம சுத்தி செய்து அதன் மூலமாக உயர்ந்த உணர்வுகளைக் கூட்டிக் கொள்ளும் செயலினால் மனித ஞானம் அடையப் பெறும் நிலை என்ன…?

இன்றைய மனித வாழ்க்கையில் விஞ்ஞானம் கண்டுபிடித்துள்ள வாகனங்கள் இயந்திரங்கள் உண்டாக்கிடும் ஓசைகளினாலும் இன்றுள்ள இசையின் சுவைக்கொப்ப மனதில் கூட்டிக் கொள்ளும் விகாரங்களினாலும் எழுந்திடும் ஓசைகளைத்தான் நாம் ஒவ்வொரு நாளும் கேட்கின்றோம்.

அவை எல்லாம் நம் செவிப்புலனில் பட்டு நமக்குள் எத்தனையோ மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

விநாயகன் உருவத்திற்கு “அகண்ட காதுகளையும்..” ஓ…ம் என்று போட்டு விநாயகரைப் “பிரணவத்திற்கு உரியவன்…!” என்றும் ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

1.ஓங்கார ஒலி நாதத்தைச் செவிமடுத்திடும் சூட்சமத்தைப் புரிந்து
2.அதன் வழியில் அருள் உணர்வுகளை நமக்குள் கூட்டிக் கொண்டே வந்தால்
3.அருள் உணர்வுகள் நமக்குள் ஜீவன் பெற்று அந்த நல்வினைகளாக நமக்குள் சேரும்.

இதனால் நடைமுறை வாழ்க்கையில் பரபரப்பான பதட்டமடையச் செய்யும் ஓசைகள் எத்தனை எத்தனையோ வந்து நம் மீது மோதினாலும் அதனை ஈர்க்காது மெய் ஒலியைக் கூட்டி மெய் ஒளியாக மாற்றிடும் செயலாக அமைந்துவிடும்.
1.இவை எல்லாம் மகரிஷிகளால் “கலைகள்…” என்று காட்டப்பட்ட
2.ஒளியான “உயிரணுக்களின் சங்கமம்” உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஆகவே சமமான நிலை நிலைக்க வேண்டும் என்று சொன்னபடி நாம் செயலில் செயல்பட வேண்டிய முறை இது தான்…!

செயற்கையாக உருவாக்கப்பட்ட அறிவுத் திறனைப் பற்றி (ARTIFICIAL INTELLIGENCE) அறிந்து கொள்ளுங்கள்

 

கடந்த கால மனிதர்கள் (பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்) அவர்கள் நம்மைப் போன்று வேலை செய்வதில்லை. மிருகங்களைப் போலத்தான் தன் உணவுக்காகத் தேடி அலைவதும்… உணவு உட்கொள்ளும் நிலையும் இருந்து வந்தது.

அவர்கள் சேமித்து வைத்திருக்கும் உணவும் சிறிதளவு தான் இருக்கும். ஆனால் அதுவும் சிறிது காலத்தில் இருக்காது… சேமித்து வைத்தால் நிற்காது (கெட்டுவிடும்) என்று அக்கால மனிதர்கள் சேமித்து வைப்பது இல்லை. “கெட்டுப் போய் விட்டது…” என்று விட்டு விட்டுச் சென்று விடுவார்கள்.
1.உயிரினங்களைப் போலத் தான் அன்றைய மனிதர்கள் இருந்தார்கள்
2.ஆனாலும் இயற்கையின் நிலைகளைத் தன் எண்ணத்தால் நுகர்ந்து அறியும் சக்தி பெற்றவர்கள்.

அவர்கள் எண்ணங்கள் அப்படி இருந்தாலும் இன்று இருக்கும் விஞ்ஞான அறிவு எப்படி வருகின்றது…?

முந்தி எல்லாம் பள்ளிக்கூடங்களில் “மாகாணி வாய்ப்பாடு” சொல்வார்கள். அந்த வாய்ப்பாடுகளைச் சொல்லப் போகும் போது பேசிக் கொண்டிருக்கும்போதே இத்தனைக்கு இத்தனை என்ன…? என்று கேட்டால் உடனே சொல்லிவிடுவார்கள்.

இப்பொழுது விஞ்ஞான அறிவில் வந்த மாணவர்களை எடுத்துக் கொண்டால் கால்குலேட்டர் வேண்டும். அதை வைத்துத் தட்டிப் பார்த்துத் தான் சொல்வார்கள். கால்குலேட்டர் இல்லாமல் அவர்களால் சொல்ல முடியாது.
1.மனிதனுடைய மூளை வளர்ச்சி அங்கே தான் (இயந்திரத்திற்கு) போகிறது
2.இன்னொன்றை நாடும் போது சுயமாக சிந்திக்கும் நிலை இழக்கப்படுகின்றது.
3.எந்த இயந்திரத்தால் மனிதன் செயல்பட்டானோ அந்த இயந்திரத்தின் துணை வேண்டித்தான் அவன் எண்ணம் செல்கின்றது.

இயந்திரத்தின் நிலையை வடிவமைத்த… அது எந்த இன்ஜினியரோ அல்லது விஞ்ஞானியோ… அவன் உணர்வுதான் தான் வருகின்றது. இந்த உடலின் இச்சைக்குத் தான் இது நடக்கின்றது

இதைப்போல செயற்கையில் செய்யப்பட்ட கெமிக்கல் கலந்த உணர்வு இயக்கப்பட்டு… எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலையில் இவனால் உருவாக்கப்பட்ட நிலைகள் அந்த அதிர்வுகளைக் கொடுக்கும் பொழுது அதன் செயலாக்கம் நடக்கின்றது.

கம்ப்யூட்டர் அல்லது டிவி.. ஃபோன் இதை எல்லாம் பார்த்தோம் என்றால் படமாகத் தெரிகிறது. அதை ஒவ்வொரு நாளும் பார்த்துப் பார்த்துப் பழகி விட்டால் அதே உணர்வின் சிந்தனை தான் நமக்குள் வரும். அதையே தான் பார்த்துக் கொண்டிருப்போம்.

உதாரணமாக ஒரு கம்ப்யூட்டர் இயக்கக்கூடியவர்கள் அதிலேயே உட்கார்ந்திருந்தால்…
1.ஒரு பிரமை பிடித்த மாதிரித் தான் இருப்பார்கள்.
2.சகஜ வாழ்க்கையில் அதற்கு மேற்கொண்டு என்ன செய்வது…? ஏது செய்வது…? என்று தெரிவதில்லை.
3.இயல்பான அறிவின் ஞானம் இல்லாது போகிறது.
4.மனிதனால் இயக்கப்பட்ட அந்தக் கெமிக்கல் தான் இவன் உணர்வுக்குள் வளர்க்கப்பட்டுக் கொண்டு வருகிறது.

மனிதனால் செயற்கையில் இயக்கப்பட்டு எந்த விஷத்தன்மை கொண்ட அதிர்வின் ஒலி/ஒளிகளைக் காணுகின்றானோ அதே உணர்வுதான் இன்று மனிதனுக்குள் வளர்ந்து கொண்டே வருகின்றது.

இப்படி அந்த விஷத்தின் அலைகளைத் தனக்குள் வளர்த்துக் கொண்டு சிந்தனை இழக்கும் தன்மையாகத் தான் மனிதன் மாறுகின்றானே தவிர மெய் ஞான வழிக்கு வர முற்படவில்லை.

இவன் உடலில் விளைந்த செயற்கை அலைகள் வெளிப்படுவதை சூரியன் கவர்ந்து காற்றிலே பரவச் செய்கிறது.
1.அந்த எலெக்ட்ரானிக் சாதனங்களை மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்தும் போது
2.அதே உணர்வு தான் வரும் அதே உணர்வின் இயக்கமாகத் தான் வரும் (ARTIFICIAL INTELLIGENCE).

மனிதனுக்கு அடுத்த நிலையான உயர் ஞான வழிக்குச் செல்லும் நிலை தடைப்படுகின்றது..!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நல்லதைப் பெறவேண்டும் என்று ஒருவர் ரொம்பவும் பிரியப்படுவார். நல்லதைச் செய்பவர் வேதனைப்படுக் கஷ்டப்பட்டவருக்கு ரொம்பவும் உதவி செய்கின்றார்.

ஆனால், இவர் உதவி செய்து கொண்டிருக்கும் பொழுது எல்லா உதவியும் வாங்கிக் கொண்ட அந்த ஆன்மா உடலில் பட்ட நோயின் தன்மை கொண்டு இறந்துவிட்டால் உடலை விட்டுப் பிரிந்து சென்றபின் எவர் உதவி செய்தாரோ அவர் உடலுக்குள் வரும்.

இவர் பக்தி கொண்ட ஆன்மாவாக இருப்பார். இருப்பினும் இந்த (உதவி செய்த) மனிதனை மட்டும் பக்தி கொண்டு இருப்பார். தெய்வத்தை எல்லாம் வேண்டினேன். எல்லாத் தெய்வமும் என்னைக் கைவிட்டது. தெய்வத்தின் மேல் அந்த நல்ல ஒழுக்கத்தின் மேல் வெறுப்பு உணர்வு இருக்கும்.

ஆனால், இவர் நல்லவர் எல்லோருக்கும் உதவி செய்திருப்பார். ஆனால், அந்த உதவியின் தன்மை கொண்டு பிறரிடம் நல்ல பேரும் புகழும் வாங்கியிருப்பார்.

கோவில்களுக்கு வேண்டிய நிலைகளை ஓடி ஓடியும் செய்திருப்பார். கோவிலில் காட்டிய பக்தியின் நிலைகள் கொண்டு ஒரு மனிதருக்கு ஓடிப் போய்.., அடடா.., முருகா இப்படிக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லிச் சொல்லி உதவி செய்வார்.

அவர் (உதவி பெற்றவர்) இந்த நல்லவர் செய்த உதவியை மட்டும் தான் எண்ணுவார். முருகனை இவர் சொல்லும் பொழுதெல்லாம் அவர் வெறுப்பார்.
1.அந்த முருகன் என்னைக் கைவிட்டுவிட்டான்
2.நீ தானப்பா என்னைக் காப்பாற்றுகின்றாய் என்பார்.

அப்பொழுது இந்த உணர்வுகளை அதிகமாக விளைய வைத்து இவர் மேல் எண்ணமாகி அவர் இறந்தால் இவர் நினைவாகவே யார் உதவி செய்தாரோ செய்த நன்றிக்கு அவரை எண்ணி இந்த ஆன்மா உதவி செய்தவர் உடலுக்குள் வந்து சேர்ந்து விடும்.

எல்லாக் கோவிலுக்கும் பக்தியாகப் போய்ச் செய்து கொண்டிருந்தவர் இதற்கப்புறம் என்ன செய்வார் தெரியுமா…? கோவிலைக் கண்டாலே வெறுப்பு வரும்.

ஏனென்றால், “நோய்வாய்ப்பட்ட அந்த ஆன்மா.., இவருக்குள் வந்துவிட்டது அல்லவா…!” அவருக்குள் அது வெறுக்கச் செய்யும். இங்கே நல்ல உபதேசம் கேட்டுக் கொண்டிருந்தால் கூட உட்கார விடாமல் எழுப்பி வெளியில் இழுத்துக் கொண்டு போய்விடும்.

இது தான் பக்தி மார்க்கங்களில் நாம் செய்த நன்றியை நாம் பெற முடியாத நிலைகளில் நாம் செய்த நன்றியின் உணர்வுகள் அந்த எண்ண வலு எது பெற்றதோ அதன் உணர்வின் துணை கொண்டு நமக்குள் வந்துவிட்டால் இந்த மாதிரி ஆகிவிடுகின்றது.

நாம் அதற்கு நன்மை செய்தோம். ஆனால், யார் மீது அந்த வெறுப்புப்பட்டதோ அந்த வெறுக்கும் உணர்வு நமக்குள் வரும் பொழுது நல்ல ஒழுக்கத்தை இதுவே தடைப்படுத்தும்.

என்ன நல்லது செய்து… என்ன பிரயோஜணம்…? என் உடலில் நோயாகிவிட்டது…? அந்த உணர்வு கொண்ட ஆன்மா இவர் உடலுக்குள் வந்து விட்டால் இந்த வேலையைத்தான் செய்யும்.

நேற்றெல்லாம் கோவிலுக்கு ஓடி ஓடி எல்லாம் செய்தார். இன்று நல்லது சொன்னாலும் நிற்க மாட்டேன் என்கிறார். இப்பொழுது சதா வேதனையைப் பற்றியே சொல்லிக் கொண்டிருக்கின்றார் என்பார்கள்.

காரணம்… அவர் நல்லவர் தான். அவர் அறியாது வந்த தீமைகளிலிருந்து தான் துடைக்கும் மார்க்கத்தைத் தவறியதனால் அந்த உணர்வுகள் வந்து அந்த ஆன்மா நமக்குள் குடிகொள்கின்றது.

ஒரு மான் புலியின் நிலைகளைக் கண்டு கண்டு அது தன்னை இம்சிக்கும் என்ற உணர்வு கொண்டு அதனிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்ற நிலைகள் கொண்டு அந்த ஆன்மா வெளியில் சென்ற பின் புலியின் உணர்வை நுகர்ந்து புலியின் ஈர்ப்புக்குக்குள் சென்று மானின் உயிராத்மா புலியாக மாறுகின்றது.

இதைப் போன்று தான் இவர்கள் நல்ல உணர்வைக் கொண்டாலும் இந்த நஞ்சு கொண்ட உணர்வு வந்தபின் பாலுக்குள் நஞ்சைப் போட்டால் பாதாமிற்குள் நஞ்சைப் போட்டால் கொன்றுவிடுவது போல் இவர் பட்ட வேதனை இவர் உடலுக்குள் சென்று அந்த நல்லதைச் “செயலற்றதாக மாற்றிவிடும்…”

இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இதையெல்லாம் வென்றவன் மகரிஷி அவன் உணர்வின் வலுக் கொண்டு இதை அடக்கினோம் என்றால் நம்முடைய எண்ணம் அங்கே போய் அடங்கும்.

காற்றிலிருந்து ஆகாரம் எடுக்கும் சித்தர்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

சுவையில் பொதுவாக இரண்டு வகை உள்ளது.

1.நாவினால் உணர்ந்து சரீரத்திற்குத் தேவையான ஆகார நியமனங்களின் மூலமாக ஊட்டப் பெறும் நிலை “அறுசுவை…!” ஒன்று.
2.மற்றொன்று எண்ணத்தால் சுவைக்கும் தனித் தன்மையான “பேரின்பச் சுவை…!”

ஆனால் இரண்டுமே பொது நிலைகளில் “எண்ணத்தின் வழி தான்…” கிடைக்கின்றது.

எண்ணத்தின் வழியாக இருந்தாலும் அனுபவ அணுகு முறைச் செயல்களின் மாறுபாட்டை உணரப் பெறும் பொழுது… “தான் உணர்ந்து… அனுபவத் தன்மையால்… பதிவு செயல் நடைபெறுகிறது…!”

உலக வாழ்க்கையின் எண்ண நினைவோட்டங்களில் அந்த எண்ண ஓட்ட வலுவிற்கு வீரியச் சுவை ஊட்டிட
1.ஆகார வழிகளில் பெறப்படும் முறைகள் அத்தனையும்
2.எதன் எதன் சுவைகளில் இச்சைப்படுகின்றோமோ
3.நாவின் அதி சுவைக்கு அடிமையாகும் அத்தனை நிலையும்
4.நம்மை அறியாமல் இயக்கும் உணர்வுகளின் உந்துதல்களின் வேகத்திற்கு நம்மை நாமே அடகு வைத்து
5.மீள முடியாதபடி ஓர் கட்டுக்குள் அடங்கி விடுகின்றோம்.

காற்றில் இருக்கும் அமில குணத் தன்மைகளில் படர்ந்துள்ள ஆகார நிலைகளை (மணங்களை) நுகர்ந்து அதற்குகந்த திட உணவைப் பக்குவப்படுத்திச் சமைத்துப் புசிக்கும் பொழுது ஏற்படுத்தப்படும் ஜீரண சமைப்பு அதன் மற்ற காலங்களில் கிரியா ஊக்கியாகி (உணவைப் பார்த்ததும் உமிழ் நீர் ஊறுகிறது அல்லவா…!) மறை பொருளாக நிற்கும்.

பின் சரீரச் செயல் நிலைக்கு அதை மாற்றும் பொழுது உடல் உறுப்புகளுக்குள் சுரக்கும் அமிலங்களும் அதில் சரீரம் சக்தி பெறுவதாகவே இருந்தாலும்
1.காற்றில் கலந்துள்ள அமில குணங்களின் இயக்கமாகவே செயல்படும்..
2.“நம்மை அதன் வழியிலேயே இயக்கும்…!”

ஆனால் உயிர்த் தன்மையின் கட்டுக்குள் எண்ணமும் சரீரமும் செயல்படும் பொழுது
1.பேரின்ப நுகர்ச்சியை அனுபவிக்கும் ஆன்மா – தான் பெறும் நாவின் சுவையையே மாற்றி
2.நாசியின் வழி ஆகாரம் பெற்று
3.சரீர வளர்ப்புக்கும் உயிர்ச் சக்திக்கும் சக்தியூட்டி
4.புறக் கழிவுகளற்ற நியமனக் கட்டுப்பாடாக
5.மற்றொரு வழியை ஏற்படுத்திக் கொண்டு அனைத்துச் சக்தியையும் பெறும்.

இரகசியத் தன்மையாக ஒரே மரத்திற்கு இரு விதச் செயல் தன்மைகள் காட்டப்படுகிறது. அதாவது
1.உணர்வுகளின் உந்துதல் குணச் சுவை அமிலமே மரத்தின் மேல் நிலையும்
2.அது அடி மரமாகப் பக்குவமாக விளைந்த தன்மையே “மருந்தாவும்…” உபயோகப்படுத்தப்படும்.

ஒரு மரத்தின் அடி மரம் போன்ற விளைச்சலாக (மருந்தின் குணம் போல்) உள்ளடங்கி ஈர்க்கும் தியான முறைகளில் எல்லாம் எந்த எண்ணத்தை வழி நடத்துகின்றோமோ அந்த எண்ணத்திற்கொப்ப ஞான வளர்ச்சியின் வழி முறைக்கு அது வித்தாகும்.

ஆனால் அதுவே உணர்வின் உந்துதல் என்ற நிலையில் சரீரம் தொட்டு நீர்சக்தியாக அனுபோக முறைப்படுத்தப்படும் பொழுது எப்பொழுதோ உடலுக்குள் உணவு மூலமாக ஊட்டப்பட்ட நிலைகள் எல்லாம் தனக்குகந்த ஆகார நிலை அமிலம் (சுவாசத்தின் மூலம் உருவான உமிழ் நீர்) சூட்சமம் கிடைக்கப் பெற்றதும் நம் மனக் கட்டுப்பாட்டையும் மீறிச் செயல்கள் துரிதமாக நடைபெறுகின்றன.

சரீரத்திற்கு வலுக் கூட்டும் முறையாக சரீரத்திற்கு ஆகாரத்தை உட் கொண்டாலும்
1.காற்றின் வழி எடுக்கும் ஆகாரத்தையே (அந்தக் குணத்தையே)
2.முதன்மையாகக் கொடுத்துத் தன் ஞானத்தால் கூட்டிக் கொண்டான்
3.அன்றைய சித்தன் தனக்குகந்த வழித் தொடரில் எல்லாம்…!

சரீரத்திற்குக் கொடுக்கப்படும் திட உணவின் மூலம் உடலுக்குள் உருவாகும் அமிலங்களின் உணர்வின் உந்துதலை அடக்கிட காற்றிலிருந்து நேரடியாக ஆகாரத்தை எடுத்துத் தன் உயிரான்ம சக்தியை வலுப்படுத்திக் கொண்டார்கள் அன்றைய சித்தர்கள்…!

தனித்த நிலையில் நாம் இருந்தாலும் எல்லோரும் அருள் ஒளி பெற வேண்டும் என்ற உணர்விலும் செயலிலும் ஒன்றியே இருக்க வேண்டும்

 

மெய்யுடன் மெய்யாக நாம் வாழ வேண்டும். ஏனென்றால் உயிர் என்பது மெய்…! உணர்வுகள் அனைத்தும் மெய் ஆகி ஒளி என்ற உணர்வாகும் பொழுது உயிருடன் ஒன்றி வாழும் தன்மை வருகின்றது.

அதனால்தான் இங்கே இராமேஸ்வரத்தில் நேரமாகி விட்டது என்று உணர்வின் (மனதை) தன்மையைக் கூட்டி இராமன் பூஜிக்கத் தொடங்கினான்.

இதைப் போல நாமும்
1.நம் வாழ்க்கையில் சந்தித்தோர் அனைவரும் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்
2.அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் எல்லா வளமும் பெற வேண்டும்
3.பகைமை அற்ற வாழ்க்கை நாங்கள் வாழ வேண்டும் என்ற உணர்வை ஒன்று சேர்த்துக் கூட்டினால்
4.பேரருள் என்ற உணர்வுகள் பெருகி… பேரொளியாக மாற்றிடும் தன்மை வரும்.

ஆகவே அதைப் பெறுவதற்குத் தான் குருநாதர் காட்டிய அருள் வழியினை இங்கே உணர்த்துகின்றோம்.

உடல் என்று இருந்தாலும் அது நாளடைவில் கரையும் தன்மை தான் வளர்கின்றது.
1.உடல் கருகும்… ஆனால் உணர்வுகள் வளரும்
2.எதன் உணர்வை வளர்க்கின்றோமோ… அந்த அருள் ஒளியை வளர்த்தால் அது என்றும் வளர்ந்து கொண்டே இருக்கும்.
3.அந்த அருள் ஒளியைப் பெறுவதற்கே நாம் ஒவ்வொரு நிமிடமும் முயற்சிப்போம்.

உடல் வாழ்க்கையில் சேர்த்த எந்தச் செல்வமும்… இந்த உடலும் நம்முடன் வருவதில்லை.

ஆகவே அழியாச் செல்வமான அருள் உணர்வை நமக்குள் வளர்த்து அது வளர்த்திடும் பருவம் கொண்டு உயர்ந்த நிலையாக இருளை அகற்றி மெய்ப் பொருளைக் காணும் மெய் வழியாக நாம் செல்வோம்…! என்று வேண்டுகின்றேன் (ஞானகுரு).

ஒவ்வொரு குடும்பங்களிலும் இதைப் போலச் செயலாற்றிப் பழகுங்கள். பண்பட்டு வளரும் தன்மையாகக் குடும்பத்தில் ஒன்றுபட்டு வாழுங்கள்.

நாம் தனித்து இருந்தாலும்… அன்புடன் பண்புடன் தனித்திருக்கும் நிலை வர வேண்டும்… உணர்வுகள் ஒன்றி வாழ வேண்டும். அதாவது தனித் தனியாக என்ற நிலை இருந்தாலும் உணர்வுகள் ஒன்றி வாழலாம்.

நம் குரு காட்டிய அருள் வழியில் அன்புடன் அரவணைத்து வாழும் உணர்வுகளை உடலிலே வளர்த்து
1.உணர்வுகள் ஒன்றாக்கப்படும்போது செயல்கள் ஒன்றாக இணையும்.
2.செயல் ஒன்றானாலும் உடல் தனித்தனிதான்
3.உடல்கள்… உணர்வுகள்… தன் தன் நிலைகள் ஒன்றாக உருவாக்கும் பொழுது
4.பிறிதொரு உணர்வு நமக்குள் வந்தாலும் ஒன்றி வாழ்கின்றது… நமக்கு அது நன்மை பயக்கிறது.

ஆகவே ஒன்றி வாழும் உணர்வே என்றும் நிலையானதாக மாறுகின்றது. அந்த அருள் ஒளி எல்லோரும் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

அருள் ஞானம் பெருக வேண்டும் இந்த உடலிலேயே பிறவியில்லா நிலையை அடைய வேண்டும்.

வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ மகரிஷியின் அருள் உணர்வை நீங்கள் பெற்று பொருளறிந்து செயல்படும் திறன் பெற்று உங்கள் வாழ்க்கையில் பேரின்பப் பெருவாழ்வு பெற எமது ஆசியும் குரு அருளும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

அழியாச் செல்வமான பேரருளைப் பெற்று பேரின்பப் பெருவாழ்க்கை நீங்கள் வாழ வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன் (ஞானகுரு).

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உயர்ந்த குணங்கள் கொண்டு வந்தாலும் “சொந்தம்..,” என்ற நிலைகள் வரும் பொழுது “பந்தம்..,” என்று ஆகி பாசத்தால் வந்தவுடன் குடும்பத்திலோ மற்ற நிலைகளிலோ சிக்கல்கள் வந்தால் செய்வதறியாது தவிப்போர் உண்டு.

“பாசத்தால்.., இப்படி ஆகிவிட்டதே..,” என்ற நிலைகள் கொண்டு கற்றுணர்ந்த உணர்வை அறிய முடியாது செயல்படுத்த முடியாது அதைத் தவற விடும் நிலை வந்துவிடுகின்றது.

“நேசத்தால்..,” உயர்ந்த நிலைகள் கொண்டு மகரிஷிகளின் உணர்வுகள் பெறவேண்டும் என்று எண்ணினால் அந்த நேசம் உயர்வைக் காட்டும். அனைவரையும் நாம் நேசிக்க வேண்டும்.

“எதைக் கொண்டு..,” நேசிக்க வேண்டும்…?

“அருள் மகரிஷிகளின் உணர்வுகள் அனைவரும் பெறவேண்டும்…” என்று அந்த நேசத்தைக் கூட்ட வேண்டும். ஆகவே குரு காட்டிய வழியில் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவோம்.

ஏனென்றால் உங்களுக்கு யாம் “படிப்படியாக… சிறுகச் சிறுகச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்”. எல்லாம் “பூரணமாகச் சொல்ல வேண்டும்..,” என்றால் காலம் இல்லை.

ஏனென்றால், குருநாதர் எனக்குள் பதிவு செய்த பேருண்மைகள் “எண்ணிலடங்காதது..,” இந்த மனித உடலுக்கு ஆயுள் பத்தாது.

அவ்வளவு பெரிய அண்டத்தின் (பிரம்மாண்டத்தின்) உணர்வுகள் பதிவு செய்ததை “எல்லோருக்கும் கிடைக்கச் செய்யவேண்டும்” என்று அவ்வப்பொழுது துணுக்குத் துணுக்காக எடுத்துக் கொடுக்கின்றோம்.

ஆக, அந்த நினைவைக் கூட்டும் பொழுது உணர்வை ஒளியாக்கி உணர்வின் தன்மை எண்ணமாக்கி அதனின் நிலைகளைத்தான் செயல்படுத்துகின்றோம்.

ஒவ்வொரு நிலைகளிலும் ஒவ்வொரு ரூபத்திலும் குருநாதர் காட்டிய அருள் வழியை அவர் பதிய வைத்த உணர்வின் ஏட்டை நினைவு கொள்ளும் பொழுது எனக்குள் உணர்த்தி அந்த உணர்வின் தன்மையை அவரே தான் இங்கே வழி நடத்துகின்றார்.

ஏனென்றால் என்னுள் அவர் இருந்து அல்ல.

“அவர் பதிவு செய்த நாடாவாக…” (MEMORY DISC) நான் எண்ணும் பொழுது உணர்வுகள் இயக்கப்பட்டு அது பெறப்பட்டு “நீங்கள் பெறவேண்டும்.., என்று அவர் செய்த உணர்வைத் தான்..,” நான் செய்கின்றேன்.

அவருடைய உணர்வுகள் தான் என்னைச் செய்ய வைக்கின்றது.

ஆகவே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளை நாம் அனைவரும் பெறுவோம். குரு காட்டிய அருள் வழிகளில் நாம் செல்வோம்.

இந்த மனித வாழ்க்கையில் அருள் ஞானிகளின் உணர்வைப் பெறுவோம். மகிழ்ச்சி பெறும் நிலையை இந்த உடலுக்கு மகிழ்ச்சி பெறச் செய்வோம். நாம் பார்க்கும் அனைவரது உடல்களையும் மகிழச் செய்வோம்.

மகரிஷிகளின் அருள் உணர்வுடன் ஒன்றியே இந்த வாழ்க்கையை வாழ்வோம். என்றும் பேரானந்த நிலைகள் பெற்று பெரு வாழ்வாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளுடன் வாழும் நிலையை நாம் உருவாக்குவோம்.

நமது உயிருக்கும் அகஸ்தியன் உயிருக்கும் உண்டான இயக்க வித்தியாசம்

உயிரணு தோன்றி உலகின் நிலையில் பல பல பரிணாம வளர்ச்சி அடைந்திருந்தாலும் இருளை அகற்றி ஒளி என்ற உணர்வின் தன்மை மனிதனால் உருவாக்கப்பட்டது தான்.

அப்படி ஒளியாக உருவாக்கிய முதல் மனிதன் அகஸ்தியன் தான்…! அகஸ்தியன் இனமாகத் தான் நாமும் வளர்ந்து வந்துள்ளோம்.

மனிதனில் உயர்ந்தவன்… உயர்ந்த ஒளியின் உணர்வைப் பெற்றவன் அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக இன்றும் இருக்கின்றான்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் அலைகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது. மாற்றிய அந்த உணர்வுகளைத்தான்
1.குருநாதர் எனக்குள் இணைத்து அதை வளர்க்கும்படி செய்தார்
2.ஒளியின் உணர்வாக நீ மாற வேண்டும் என்றும் சொன்னார்.

அதன் துணை கொண்டு இருளை அகற்றிடும் உணர்வைப் பெற வேண்டும். இந்த உணர்வினை எல்லோருக்கும் ஓது…! என்றார்.

நீ உபதேசிக்கும் போது அதை உற்றுக் கேட்போர் உணர்வுகளில் அது பதிவாகி அவர்களும் அதைக் கவரும் சந்தர்ப்பம் வரும்.
1.ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்து அவர்களும் அருள் வழி செல்லட்டும்…
2.அதைக் கவரும் உணர்ச்சியை நீ தூண்டு… அவர்களுக்குள்ளும் இதைப் பதியச் செய்.
3.அருள் வாழ்க்கை வாழச் செய்… இருளை அகற்றச் செய்…!
4.உயிர் என்ற நிலை வரும் பொழுது ஈசன் என்ற நிலை வருகின்றது… ஈசனால் உருவாக்கப்பட்ட உடல் என்று நீ கருது…! என்றார் குருநாதர்.
5.மனிதன் என்று உருவாக்கிய நல்ல உணர்வுகள் உயர வேண்டும் என்று எண்ணு.

பிறரைக் காக்கும் உணர்வு கொண்டு அந்த உணர்வுகள் உனக்குள் விளைந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீ பெற்று அதன் உணர்வுகளை அவர்களும் பெற வேண்டும் என்று ஏங்கு.

ஏனென்றால் அவரால் வளர்க்கப்பட்ட அவர் உடலில் உருவான நோயின் தன்மையை நீ கேட்டறிந்து அந்த உணர்வுகள் உனக்குள் பதிந்தாலும்… அருள் உணர்வு என்ற நிலையை வைத்து உனக்குள் இதை மாற்றி…
1.அவர்களும் அதை பெற வேண்டும் என்று இவ்வாறு நீ எண்ணினால் அவர்களும் நலம் பெறுகின்றனர்
2.அவருடைய தீமையின் உணர்வுகள் உனக்குள் வராது தடுக்கப்படுகின்றது.

ஆகவே இம்முறையைக் கடைப்பிடித்து உனது வாழ்க்கையில் பிறிதொருவரின் நோய்களையோ தீமைகளையோ பார்த்தாலும் ஓ…ம் நமச்சிவாய…! என்று உன் உடலாக ஆனாலும் உடலில் வரும் அந்த அழுக்கினை நீக்க
1.நஞ்சினை வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நீ கவர்ந்து
2,அதனுடன் இணைத்து அந்த விஷத்தின் ஆற்றலை நீ பெருக்காது
3.அந்த அருள் என்ற உணர்வினை இணைத்து ஒளி என்ற உணர்வினை நுகரும் சக்தியாக
4.உன் உடலில் உள்ள அணுக்களை மாற்று… அதன் உணர்வு கொண்டு உயிருடன் ஒன்று…! என்றார் குருநாதர்.

வாழ் நாள் முழுவதும் இருளை அகற்றும் உணர்வுடன் வாழ்ந்தால் இது தான் விஷ்ணு தனுசு. ஆனால் பிறரின் நோயின் உணர்வை நுகர்ந்தால் அது சிவ தனுசு. அந்த உடலில் விளைந்த அதே நோய்கள் தான் வரும் எம்று எமக்குத் (ஞானகுரு) தெளிவாக்கினார் குருநாதர்.

மிருகத்தின் உணர்வுகளை நுகர்ந்து அதனால் தாக்கப்பட்டால் அதன் உணர்வின் தன்மை கொண்டு நாம் மிருகத்தின் நிலையை அடைகின்றோம்.

அப்படி அல்லாதபடி விஷ்ணு தனுசு என்ற நிலைகளில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து உயிருடன் ஒன்றினால் அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்.

ஏனென்றால் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் இருளை அகற்றிடும் சக்தியாக உலகெங்கிலும் இருளை அகற்றிடும் உணர்வுகள் பெற்றது.
1.நமது உயிரும் நுகர்ந்த உணர்வைத்தான் இயக்குகின்றது
2.ஆனால் அகஸ்தியனின் உயிரோ “இருளை அகற்றும் ஒளி என்ற உணர்வாக…” முழுமையான விஷ்ணுவாக மாறுகின்றது.

நாராயணனின் மறு அவதாரம் விஷ்ணு என்று உயிராக ஆனாலும் இருளை அகற்றி அந்த ஒளி கொடுக்கும் சூரியனைப் போன்று உயிர் ஒளியாக ஆகும் தகுதி பெற்றது. அப்படிச் சூரியனைப் போன்று ஆனது தான் துருவ நட்சத்திரம்…!

ஆகவே துருவ நட்சத்திரமாக ஆன அந்த உணர்வினை நாமும் பெற்றோம் என்றால் அந்த உணர்வின் தன்மை உண்டு பிறவியில்லா நிலையை அடைய முடியும்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்ததிந் உணர்வை நாம் நுகர்வோம்.
2.அருள் உணர்வை நமக்குள் பெருக்குவோம்
3.வாழ்க்கையில் வந்த இருளை அகற்றுவோம்
4.மெய்ப் பொருளைக் காண்போம் என்று நமது குரு காட்டிய அருள் வழியில் ஏங்கித் தியானிப்போம்.

“எல்லாம் என் தலை விதி” என்று சென்றால் பிறப்பின் பலனை யாரும் எடுக்க முடியாது…! – ஈஸ்வரபட்டர்

தந்தை சொல் தட்டாத தனயன் என்றும்… சகோதரப் பாசம் என்றும்… உலகுக்கு நீதியைப் பற்றியும் அநீதியைப் பற்றியும் போதனைகளை வலியுறுத்தி வாழ வழியைக் கூறும் இராமாயணக் காவியத்தை உலகினுக்குக் கொடுத்துள்ளார் வான்மீகி.

அதே சமயத்தில் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை நெறிகளையும் கட்டுப்பாட்டையும் புலப்படுத்தி அந்தந்தச் செயல் வழிகளிலும் “ஒரு சூட்சமத்தை உள்ளடக்கி…” உயிரான்ம ஆன்மத் தத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

“விதியின் பின் இராமன்…!” என்று காட்டுக்கு ஏகும் செயல் முறையை
1.ஆத்ம ஞானம் பெறக்கூடிய வழிகாட்டியாகவும் உணர்த்தினார்.
2.இராமன் என்ற உயிர்த் தத்துவமும் சீதை என்ற ஆன்ம தத்துவமும்
3.காட்டிற்குத் தவம் மேற்கொள்ளச் செல்லும் தன்மைகளில் ஆத்ம தத்துவப் படிப்பினையைக் காட்டுகிறார்.

இராமன் இருக்குமிடம் தான் அயோத்தி…! என்று குறிப்பிட்டுக் காட்டி நகர வாழ் மக்கள் எல்லோரும் இராமன் பின்னாடி செல்ல… விதி முன் செல்ல… இராமன் பின் செல்ல… பின் நகர மக்களும் உடன் சென்ற நிகழ்ச்சியாகவும் காட்டுகின்றார்.

அவ்வாறு காட்டியதன் உட்பொருள் என்ன…?

சரீர உயிரணுக்களின் செயலைத்தான் அவ்வாறு பொருள்படும்படியாகச் சூட்சமத்தில் காவியக் கதையாகத் தீட்டியுள்ளார் வான்மீகி.

உயிரான்மாவானது தனது எண்ண வழிச் செயல் முறைகளுக்கொப்ப விதி வழி செல்லும். விதி வழி செல்லும் பொழுது உயிரின் பின் செல்லும் சரீர உயிரணுக்கள் அடையும் துன்பத்தைக் காட்டுகின்றார்.

அதாவது…
1.உயிர் ஆன்மச் சக்தியானது சரீர உயிரணுக்களின் நற்கதிக்குச் செயல்படும் ஈர்ப்பின் நிலையை விட்டு விடும் பொழுது
2.இந்தச் சரீரத்தில் வாழும் அத்தனை உயிரணுக்களுமே துன்புறும் என்ற நிலையைத் தெளிவாக விளக்கியுள்ளார் வான்மீகி.

இராமன் என்றாலும் இராவணேஸ்வரன் என்றாலும் “இரா…” என்னும் சொல் இரண்டும் பொதுவாக உள்ளது. மாயை என்று பொருள்பட இராமன் என்றும் இராவணன் என்றால் மாயையை ஆடையாகப் போர்த்திக் கொண்டவன் என்றெல்லாம் சூட்சமப் பெயரிட்டுக் காட்டுகின்றார்.

உயிர் ஒன்று தான்…! அது இராமனானாலும் சரி… இராவணேஸ்வரன் ஆனாலும் சரி..!
1.அவைகள் செயல் கொள்ளும் எண்ணச் செயலில்
2.விதி என்று அழைக்கப் பெறும் விளைவைத் தானே உருவாக்கிக் கொள்கிறது.

தான் உண்டாக்கும் அந்த வினையின் பயனுக்குள் தானும் ஒடுங்கி… ஒன்றி… அந்த விதியின் செயல் நிகழ்த்தும் நிகழ்வுகளுக்குத் தான் உட்பட்டு விடுகின்றது.

ஒவ்வொரு உயிரும் தன் எண்ணச் செயலின் இராமனாக ஆகிறது. ஆனால் அதே உயிர் எண்ண நினைவிற்கொப்ப அந்த எண்ணமே செயல்பட்டு இராவணேஸ்வரன் ஆகித் தன் ஆத்ம சக்தியை இழக்கிறது.

அது மட்டுமல்ல…!

1.அதே உயிர்ச் சக்தி தன்னைத் தான் அழித்துக் கொள்வதோடு தன் குலத்தையும் அழிக்கும் என்பதையும்
2.தன் சரீரத்தில் உள்ள குணத்தின் வாசனைக்கொப்ப வந்து உருவாகும் அத்தனை உயிரணுக்களையும்
3.தன் விதி வழிச் செயலால் கீழான இழி நிலைக்குக் கொண்டு போய்விட்டு விடும்…! என்று தெளிவுபடுத்துகிறார் வான்மீகி.

தன் குலத்தையே அழிவு நிலைக்குக் கொண்டு சென்று அழியக் காரணமாக
1.“இராவணேஸ்வரன் கொண்ட காம அந்தகாரச் செயல்…! என்ற குணத் தன்மைக்கு
2.தானே – அவனே காரணம் ஆயினான்.

ஆகவே விதி வழி செல்வதா..? என்பதையும் மதி வழிச் செயல் எது…? என்பதையும் எண்ணி நீங்கள் ஒவ்வொருவரும் தெளிவு பெறுக…!

இந்த வாழ்க்கையில் வரும் துன்பத்தையும் துயரத்தையும் சொந்தமாக்க நாம் பிறவி எடுக்கவில்லை

 

நமது வாழ்க்கையில் இன்று இந்த உடல் பற்றுடன் தான் வாழ்கின்றோம்… எத்தனையோ ஆண்டுகள் வாழ்கிறோம் என்று…!

இந்த உடலுக்காகச் சேமித்து வைக்கும் சொத்தையும் நமது குடும்பத்தையும் பாதுகாக்கும் உணர்வே தான் வருகின்றது.
1.பாதுகாக்கும் உணர்வுகள் அது சிறிது தவறினால் வேதனை என்ற உணர்வுகளே வருகின்றது
2.வேதனை என்ற உணர்வுகள் வளர்ந்தால் தேடிய செல்வத்தையும் பாதுகாக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.

பாதுகாக்கும் தன்மைகள் இழந்து விட்டால் நம் உடலில் நோயின் தன்மை உருவாகின்றது
1.நோயின் தன்மை உருவானால்
2.இதுவே நாம் தேடிய செல்வம் ஆக மாறுகின்றது.

நோயின் உணர்வுகள் விளைந்தால்… “நம் உடலில் அந்தச் செல்வத்தின் வழியே…” உயிர் அடுத்த உடலை உருவாக்குகின்றது. ஆகவே தேடிய செல்வங்கள் நமக்கு சொந்தமல்ல… இந்த உடலும் நமக்குச் சொந்தமில்லை…!

நமக்குச் சொந்தமாக்க வேண்டியது எது…? என்று சிந்தியுங்கள்.

வேதனை வெறுப்பு என்பதைச் சொந்தமாக்கினால் அதன் உணர்வு கொண்டு அடுத்த உடலை உருவாக்குகின்றது உயிர். கோபம் குரோதம் என்ற நிலை ஆனால் அதன் வழி அடுத்த உடலைச் சொந்தமாக்கி அந்த உருவாக உயிர் மாற்றிவிடுகின்றது

ஒரு நிலம் சரியில்லை என்றால் அதனைப் பண்படுத்துகின்றோம். நிலத்தில் வீடு கட்டினால் சரியில்லை என்றால் மாற்று வீட்டை அதைக் காட்டிலும் நம் செல்வத்திற்குத் தக்க வீடுகளைக் கட்டுகிறோம்.

இதைப் போலத் தான் நாம் நுகர்ந்த உணர்வுக்கொப்ப அடுத்த உடலை உயிர் உருவாக்கி விடுகின்றது இதைப்போல அதிலே நரக வேதனையைத் தான் படுகின்றது

ஆகவே அத்தகைய வீடுகளை இந்த உடலில் மாற்றுவதற்கு மாறாக
1.உயிர் என்ற உணர்வின் தன்மை கொண்டு என்றும் நிலையான
2.பேரருள் பெறும் உணர்வினைச் சொந்தமாக்கி… பேரருள் என்ற உணர்வினை ஒளியாக்கி
3.இனி நாம் பிறவியில்லா நிலை அடைவதே கடைசி நிலை.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

செடியிலோ மரத்திலோ மலர் மலர்ந்து விட்டால் மீண்டும் மீண்டும் மலர்ந்து அதிலிருந்து அதனின் மணம் கமழ்கிறது.

மலராக உருவான பின்
1.அதில் மதுவான இனிமை கொண்ட மதுரத்தைத் தனக்குள் நுகர்ந்து
2.அந்தத் தேனினை இணைத்து அதற்குள் கருவுற்று
3.கருவுற்ற நிலைகள் கொண்டு தன் வித்தாக உருவாக்குகின்றது.

அதைப் போல நாம் எடுத்துக் கொண்ட மகரிஷிகளின் உணர்வின் தன்மை மலரின் மணம் போன்று அருள் மணமாகக் கமழ்கின்றது.

1.மகரிஷிகளின் மணத்தை நுகர்ந்தால் அது மதுரமாகி
2.மகிழ்ச்சியான அலைகளாக நம் ஆன்மாவாக மாறி
3.அந்த உணர்வின் தன்மையை நாம் சுவாசிக்கும்பொழுது
4.நமக்குள் வளர்ந்து அருள் ஞான ஒளியின் வித்தாக
5.முழுமை பெறும் தன்மையினை நாம் நிச்சயம் அடைய முடியும்.

ஆகவே என்னமோ ஏதோ என்ற நிலையில் யாம் உபதேசிக்கும் அருள் உணர்வுகளை அலட்சியப்படுத்தாது மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளை நீங்கள் பெற வேண்டும். குருவின் அருளால் நீங்கள் தெளிந்திடும் நிலை வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நீங்கள் பெற்று உங்களுக்குள் தெளிந்த மணம் பெற வேண்டும் என்று விரும்புகின்றேன். உங்களை நான் பார்க்கும் பொழுது எனது குருவின் அருளை உங்களிடம் பார்க்க விரும்புகின்றேன்.

உங்களை அறியாது வந்த இருள்களை நீங்கள் போக்கும் நிலை பெறவேண்டும். அப்பொழுது மகிழ்ந்திடும் பேரானந்த நிலையான அந்த மதுரம் உங்களுக்குள் வரும்.

அந்த உணர்வின் தன்மையை நான் நுகரும் போது எனக்குள்ளும் மதுரமாகின்றது. உயிரான ஒளியுடன் ஒன்றி என்றும் நிலையாக நிலைக்கும் நிலைகளை நாம் அனைவரும் பெறுகின்றோம்.

சூரியன் எவ்வாறு இந்தப் பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டு தனக்குள் கலந்து வரும் நஞ்சினைப் பிரித்து விட்டு உணர்வின் ஒளியாக மாறுகின்றதோ இதே போல
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பேரொளியாக மாற்றினார்.
2.அவர் வழியில் நான் பெற முடிகின்றது.
3.அதன் வழி நீங்கள் அனைவரும் பெறமுடியும்.
4.இதில் கடினம் எதுவும் இல்லை.

அனைவரும் இந்த முறைப்படுத்தி வாருங்கள். பிறர் தீமையான நிலைகளில் செயல்பட்டாலும் அதை நீங்கள் கேட்டறிந்தாலும் அடுத்த கணம் ஒரு 50 முறையாவது மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

இந்த உணர்வின் தன்மை கொண்டு உங்களை அறியாது வரும் அவர்களுக்குள் (பிறரின் இருளான உணர்வுகள்) பட்ட இருள் உங்களை மறைத்திடாது தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் உணர்வை ஒளியாக மாற்றுங்கள்.

அந்த வலுவின் துணை கொண்டு
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவீர்கள்.
2.உங்கள் பிணிகள் அகலும். உடல் நலம் பெறுவீர்கள்.
3.மகரிஷிகளின் அருள் ஒளியால் உங்கள் நோய்கள் நீங்கும்.
4.உங்கள் குடும்பம் நலமாக இருக்கும்.
5.உங்கள் தொழில்கள் வளரும்.
6.உங்கள் குடும்பங்களில் அனைவரும் ஒன்று சேர்ந்து இருப்பீர்கள் என்று
7.உங்கள் வாக்கை மற்றவர்களுக்குள் அருள் ஞான வித்தாகப் பதிவு செய்யுங்கள்.

இதன் வழி கொண்டு மெய் வழியில் தொடர்ந்து நீங்கள் செய்து வாருங்கள்.

1.தீமைகள் அகன்று தீமைகளை அகற்றும் உணர்வுகள் அனைவரது உடல்களிலும் விளைந்து
2.அந்த உணர்வலைகள் வெளி வரும்போது
3.சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு
4.இந்தப் பரமான பூமியில் பரமாத்மாவாகப் பரவச் செய்யும்.
5.இந்த அருள் உணர்வுகள் பரவப்படும் போது கடவுளாக – இந்தப் பரமாத்மாவுக்குள்
6.தீமையை அகற்றும் அலையின் தொடராக
7.யார் எண்ணி ஏங்கினாலும் அடுத்த கணம் அவர்கள் தீமைகளை அகற்றும்.
8.அந்தக் கடவுளாக மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் சிருஷ்டிக்கும் தன்மை வரும்.

ஆனால் இன்றைய மனித வாழ்க்கையில் நாம் எதை இந்தப் பரமாத்மாவில் கலந்து கொண்டிருக்கின்றோம்?

பஸ்சில் போனால் பயம்; வீட்டில் இருந்தால் பயம்; அதிகமான காசு கொண்டு போனால் பயம்; ஏதாவது வாய் திறந்து பேசினால் பயம் என்ற நிலையில் அஞ்சியே வாழ்ந்து கொண்டிருக்கும் உணர்வுகளை ஒவ்வொருவரும் வெளிப்படுத்துகின்றோம்.

இந்த உணர்வலைகள் படரப் படர அலைகளாக மலர மலர மகரிஷிகளின் அருள் ஒளியை அந்த மெய் ஒளியை இங்கே நாம் பெற முடியாது இருள் சூழும் நிலையே வருகின்றது.

அந்த இருளான உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்திகள் கவர்ந்து பரவச் செய்யும்போது அச்சுறுத்தும் உணர்வின் தன்மை கொண்ட கடவுளாக – அதைத்தான் பரமாத்மாவாக மாற்றுகின்றோம்.

அத்தகைய உணர்வுகளை நாம் நுகர்ந்தால் நமக்குள் வந்து அஞ்சி வாழும் நிலைகளைத்தான் நம்மை இயக்கச் செய்யும்.

இதைப் போன்ற நிலைகளை அகற்றுங்கள். உயர்ந்த நிலைகள் பெற அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நுகரப் பழகிக் கொள்ளுங்கள்.

“மதி வழி” கொண்டு நாம் முன்னாடி சென்றால்… ”விதி வழி” பின் செல்லும்…! – ஈஸ்வரபட்டர்

 

இராமன்… லட்சுமணன்… சீதை என்று அவர்களைச் சரீரமாக உருவமாகக் காட்டி வெளியிட்ட நிலையில் எல்லாம்
1.குணங்களாக நம் எண்ணங்கள் செயல்படும் விதத்தையும்
2.தன் ஆன்மாவின் செயலுக்குச் சக்தியூட்ட வேண்டிய காரியத்தை வலியுறுத்தியும்
3.போதனைகளாகக் கொடுத்துள்ளார் வான்மீகி மாமகரிஷி.

ஆனால் ஆசை என்ற உணர்வுகள் செயல்பாட்டிற்கு வரும்போது எந்த உணர்வுகள் அதைத் தூண்டியதோ அதே உணர்வுகளுக்கு வலுவூட்டிவிடும் அந்த ஆசை நிலையைச் சித்தரிப்பதே மாயமான்…!

அந்த மாயமான் மேல் சென்ற எண்ணமே வலுவாகி உயிர்ச் சக்தியான இராமனை அந்த மானைப் பிடித்துக் கொடுக்கச் செய்தது சீதையின் நிலை.

“ஆசை வழி உணர்வுகளின் உந்துதலின் செயல்” தான் அது.

உயிர் சக்தி (இராமன்) தடுத்தும் கேட்காமல் ஆன்மாவில் பதிவு செய்யப்பட்ட நிலை போல் திரும்பத் திரும்ப அதே எண்ண ஓட்டம் செயல் கொண்டு தனக்குகந்த வீரியத்தையே வலுக் கூட்டிக் கொள்வது போல் அந்த மானைப் பிடித்துத் தர வேண்டிக் கேட்டுக் கொண்டது. (சீதை)

ஆன்ம சக்தியின் மீதுள்ள பற்றுதலாலும் தடுக்கப்பட வேண்டிய நிலை மாறி ஆசை உணர்வுகளின் வேகம் அந்த மாயமானின் பால் ஈர்க்கப்படும் நிலைகளை “அந்த ஆன்ம விளக்கங்களை… சூட்சமமாக அங்கே பொருள்படுத்தியுள்ளார் வான்மீகி…!” எல்லாம் ஆன்மாக்களும் உணர்ந்து பெறுதலுக்கு ஒரு காரணமும்… வெளியிடக் கூடாத இரகசியமாக மற்றுமொரு காரணமும் ஆகும்…!.

1.ஆசை உணர்வுகளின் வழி ஏகிய உயிர்ச் சக்தி
2.இந்த உலக ஆசை என்ற மாயமானை இனம் கண்டு கொண்டதும்
3.எண்ணமாகிய இராமபாணத்தைச் செலுத்தி அதன் ஓட்ட வீரியத்தை வலுவிழக்கச் செய்தது.

ஆன்ம சக்திக்குத் துணையாக நிற்கும் தைரிய குணச் சக்தியையும் ஆன்மா இழந்து… பலம் குன்றுவதைக் காட்டவே… இலட்சுமணனை இராமர் பால் அனுப்பிய சீதையின் நிலையாகக் காட்டப்படுகிறது.

அதாவது மனித வாழ்க்கையில் மனக் குழப்பங்கள் ஏற்படுவதைக் காட்டி தெளிவற்ற நிலையில் உண்டாக்கப்படும் உணர்வுகள்
1.தன்னுடைய வீர குணத்தை அப்புறப்படுத்தி ஆன்மாவைச் சக்தி இழக்கச் செய்கின்றன.
2.உயிர்ச் சக்தியையும் ஆன்ம சக்தியையும் பிரித்து விடுகின்றன.
3.பிரிப்பதன் மூல காரணம் இந்த உலக வாழ்க்கையின் “அதி ஆசை நிலை…!”

இதற்கு மானைச் சுட்டிக் காட்டியது “சூட்சம நிலை…”

மீண்டும் உயிர்ச் சக்தி தன் சக்தியாக ஆன்ம சக்தியை அடைய வேண்டி “மாயமானாகிய அதி ஆசை நிலையைத்தான் தகர்க்கின்றது…!”

ஆன்மாவாகிய சக்தி நிலை ஏக்க உரு கொள்கிறது. அப்பொழுது தைரிய குண இலட்சுமணன் சாந்த குண இராமனை அணுகிச் சக்தி ஊட்டியதாகச் சொல்லப்படுகிறது.

எப்படி…?

1.உயர்ந்த சக்திகளை தைரிய குணத்தின் ஈர்ப்பில் சமைத்து
2.வீரமான அந்தக் குணத்தையே சாந்த குணத்திற்கு வலுவூட்டி
3.ஆன்மாவைச் சூழ்ந்துள்ள மாய இருளை அகற்றச் செய்கிறது.

ஆக இராவணன் என்ற அசுர குணத் தன்மைகளை சக்தி இழக்கச் செய்ய தன் எண்ணங்களான இராமபாணத்தைச் சக்தியாகச் செயல் கொண்டு போர் என்ற நிலையில்
1.எண்ணங்களின் எதிர் மோதல் போராட்டங்களாகவும்
2.குணச்சுவைகளுக்கொப்ப நிகழ்ந்த நிகழ்வுகளின் முடிவின் ஆக்கமே உயிராத்மாவுடன் கலந்த அல்லது கலக்கும் நிலை பெறுகின்றது.

அதாவது
1.உயிர் சக்தியினைப் பிரிந்தால் ஆன்மா தாக்கப் பெறும்..
2.அதுவே உயிருடன் கலக்கும் சிந்தனையாகக் காக்கப் பெறும்..! என்று வான்மீகியார் தெளிவாக்குகின்றார்.

அசுர குண எண்ணப் பிடிக்குள் சிக்கிக் கொள்ளும் ஆத்ம ஞானியையும் உலக ஆசை நிலையாகிய மாயமான் வடிவம் கொள்ளத் தூண்டுகின்றன…! ஏன்…?

காரணம் சரீரமும் அதற்குள் இருக்கும் சரீரத்தின் தனித்துவம் என்ற குணங்களும் தான்…!

அது மட்டுமல்ல…! பிற ஆன்மாக்களையும் அந்த ஆசை அலைக்குள் அகப்படுத்த போக்குக் காட்டி மயக்குகின்றன. அந்த மாய அலைக்குள் படும் உயிர்ச் சக்திகளையும் தன் வழிக்கே இழுக்க முயல்கிறது. (இது உலகில் ஒவ்வொருவருடைய அன்றாட வாழ்க்கையிலும் தினசரி நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சி…!)

உண்மைதனை உணர்ந்து கொண்ட உயிர்ச் சக்தியாகக் காவியத்தில் இராமனைக் காட்டுகின்றார். தன் ஆன்மாவைத் தன்னிடத்திலிருந்து (உயிர் சக்தியிடமிருந்து) பிரித்துவிட நடக்கும் நாடகத்தை வான்மீகியார் அங்கே சுட்டிக் காட்டுகிறார்.

மாரீசன் என்ற ஞானி (மாயமான்) அந்த ஆசைக்குத் துணை போக தானே அந்த ஆசை வலையில் பட்டு விட்டதையும் எண்ணமாகிய இராமபாணம் பட்ட பின் மாரீசன் மீண்டதாகவும் காட்டியுள்ளார்.

1.மனித உயிரான்மாக்கள் பெற வேண்டிய உயர் ஞான நிலைக்கு உயரிய வழி வகுத்து
2.”மதி வழி” கொண்டு நாம் முன்னாடி சென்றால்…
3.”விதி வழி” பின் செல்லும்… என்று தெளிவாக அருளியுள்ளார் வான்மீகி மாமகரிஷி…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அகஸ்தியன் தன் தாயின் கருவிலே சிசுவாக இருக்கும்போது பல பச்சிலைகளின் வாசனைகளையும் மூலிகைகளின் மணங்களையும் அவன் நுகர்ந்ததால் நஞ்சினை வென்றிடும் சக்தி பெற்றான்.

அவ்வாறு அவன் நுகர்ந்தறிந்த உணர்வின் அணுவாக விளைய வைத்த உணர்வலைகள் இந்தப் பூமியிலே உண்டு. அதை நாம் பெற முடியும்.

1,அகஸ்தியன் தாய் கருவிலிருக்கும் பொழுது அவனுக்குள் விளைந்த சக்திகளை
2.நம் உடலில் வளரும் அணுக்கருக்களின் கருவில் அருள் ஞானத்தை இப்பொழுது உருவாக்குவோம்.

அகஸ்தியன் பெற்ற மூலிகைகளின் வாசனைகளை எண்ணித் தியானிக்கும் பொழுது “எவர் எவருக்குக் கிடைக்கின்றதோ அவர்கள் அருள் ஒளியின் சக்தியைப் பெற்றவர்கள் ஆவார்கள்…”

கிடைக்கவில்லை என்றால் விரக்தி அடைய வேண்டாம்.

அகஸ்தியன் பெற்ற மூலிகைகளின் மணங்களைப் பெறவேண்டும் என்ற ஏக்கத்தை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள். நிச்சயம் அதைப் பெற்று வளர்த்துக் கொள்ள முடியும். அதை உருவாக்கிட முடியும்.

இப்பொழுது யாம் சொல்லக்கூடியதை எல்லாம் ஏங்கிப் பெற வேண்டும் என்ற அந்த ஈர்ப்புடன் தான் இருத்தல் வேண்டும்.

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் உயிருடன் தொடர்பு கொண்டு ஏங்கித் தியானியுங்கள்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் அவன் வாழ்ந்த காலங்களில் அவனின்றி வெளிப்பட்ட உணர்வுகளை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியன் அவன் கருவில் வளரும் பொழுது நுகர்ந்ததும் பிறந்தபின் அவன் நுகர்ந்தறிந்த ஆற்றல்மிக்க சக்திகளும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

இதையே திரும்பத் திரும்ப ஏங்கி அந்த உணர்வுகளை உங்கள் உடலுக்குள் பரப்புங்கள்.

நல்லது நடக்கவில்லை என்று எண்ணி “நல்லதைப் பெறும் முயற்சியை விட்டு விடக்கூடாது” – ஈஸ்வரபட்டர்

வாழ்க்கையில் எந்த ஒரு நல்லதையும் பெற வேண்டி ஆசைப்பட்டாலும் (ஆர்வம், விருப்பம்) நம் மனம் அதைப் பெற நல்ல நிலையாக எண்ணிச் செயல்படும் காலங்களில் நல்லதைப் பெறும் உத்வேகம் எப்படி இருக்க வேண்டும்…?

அதைத் தான் “முயற்சி செய்வது…” என்று சொல்வது…! இருந்தாலும் அந்த முயற்சி எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்…?

அதாவது
1.செயல்படுத்த வேண்டியது எந்தப் பொருளோ அதிலேயே கருத்தாகவும்
2.அந்தக் கருத்தின் கருப்பொருளையே வீரியமாக வளர்க்கவும்
3.அப்படிச் செயல்படுத்தும் முறை எதுவோ அதுவே “முயற்சி…!”

கடலில் உருவாகின்ற சிப்பி தனக்குள் முத்தை வளர்ப்பாக்க எடுக்கும் முயற்சி எப்படிப்பட்டதாக இருக்கிறது…?

சரியான காலமறிந்து அந்தக் காலத்தைப் பயன்படுத்தும் விதமாக
1.மழை நீர் தன்னுள் விழும் நேரத்தை அறிகிறது
2.அந்த நேரம் வாய் திறந்த நிலையில் அது எடுக்கும் உணர்வின் ஞானம்
3.தன்னுள் விழும் நிலையை அந்தக் கருத்தை அறிந்து உயிரணுவின் கருக்கொள்கிறது.

பின்… வாய் மூடி ஒரிடத்தே அமைத்துத் தன் கருவின் கருவையே முத்தாக்கும் செயல் நிலைக்குக் கொண்டு வருகிறது.

இருந்தாலும்… சில மாறுபாட்டின் தன்மையால் முத்து விளையாமலும் போகலாம்.
1.ஆனால் ஆக்கத்தின் ஆக்கம்… “ஊக்கம்” என்பது போல்
2.முயற்சி இருந்தால் நல்ல முத்தாக விளைவிக்கும்…
2.முத்தாக விளையவில்லை என்றால் என்ன செய்வது…? என்று
3.சிப்பி மழை நீரைக் கவர முயற்சிக்காமல் இருப்பதில்லை…!
(இது மிகவும் முக்கியம்..!)

அதைப் போல் தான் உயர் தெய்வீக உயிர்ச் சக்தி (நீல வண்ணராமன்) இந்த உலக… உடல் வாழ்க்கை மோதல்கள்… நடை பெறும் கால கட்டத்தில்… விதி என்ற எண்ணச் செயல் வழி முறை வலுப் பெற்று… வேறு வேறு திசைக்குத் தள்ளினாலும்… தன் உணர்வுகளின் செயல்பாட்டைத் தன் ஞானக் கட்டுக்குள் அடக்கும் முறைப்படுத்தினான். (முயற்சி செய்து தான்…!)

வெளி மோதல் எண்ணங்களின் செயலுக்கு… “தான் ஏகும் முறை என்பது…”
1.விதி முன்னாடி செல்ல இராமன் பின்ன்னாடியே சென்றான்…! என்ற சொற்றொடரில்
2.நடந்த நிகழ்ச்சிகளின் செயலே விதி வழி முறையானாலும்
3.தன் வாழ்க்கையில் அப்படி வந்த அந்த மோதல் காலங்களில்
4.தன் சூழலில் தனக்கு எந்த வித மாற்றத்தையும்.. உயிர்ச் சக்தியின் சக்திக்கு எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை…! என்ற
5.சம நோக்குப் பெறும் நிலையை வான்மீகி மகரிஷி வற்புறுத்தி
6.பாசம் என்ற நிலையில் தனக்குள் வகுத்த சட்ட திட்டங்களுக்கும்… ஒழுங்கு வரை முறை நியமனங்களுக்கும் கட்டுப்பட்டே… உலக நியதி இயங்குகிறது…! என்று சொல்லி
7.இராமன் அதற்குக் கட்டுப்பட்டே அந்த “விதியின் வழி ஏகினான்…!” என்பதில்
8.உயர் சக்தி “மதியின் பால் இயங்க வேண்டிய அவசியத்தை… மாயமான் படலம்..!” மூலமாக வான்மீகியார் அருளியுள்ளார்.

ஆக வாழ்க்கையில் அன்றாடக் கடமைகளைச் செயல்படுத்திக் கொண்டு வந்தாலும்
1.விதி என்ற நிலையில் அது வீரியமாக இயக்கும் கால கட்டங்களில்
2.தன் உயிராத்மாவிற்குப் பாதிப்பு உண்டாக்கும் நிலைகளைத் தன் எண்ண வலு கொண்டு தவிர்த்த இராமன்
3.தியானம் செய்வதற்காகக் காட்டுக்குச் சென்றான்…! என்று காட்டும் நோக்கில் (சூட்சம உணர்வு)
4.உயிர் தன்மையின் உயர்வைக் காட்டுகின்றார் வான்மீகியார்.

உயிரின் உயர்வைக் காட்டும் வான்மீகி மாமகரிஷி “விதி வழி செல்லும்…” செயல் வாழ்க்கையில் அதிலே காட்டிலே பட்ட துன்பங்களாகவும் கூறவும் தவறவில்லை.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்டால் நாம் செல்லும் ஞானப் பாதையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் சலிப்போ சோர்வோ சங்கடமோ சஞ்சலமோ நம்மை அண்டாது…!

அதை எல்லாம் நாம் ஒரு பொருட்டாக எண்ணவே மாட்டோம்…!

தாயை நாம் மதித்து நடக்க வேண்டும்… அவர்களை மகிழச் செய்ய வேண்டும்

 

தாய் எத்தனையோ வேதனைப்பட்டுத் தன் குழந்தைகள் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணுகின்றது. அந்தத் தாய்க்கு நாம் உபகாரம் செய்யும் நிலை எது…?

உயர்ந்த உணர்வுகளை எடுத்துத் தாய் விரும்புவது போல் நாம் உயர்ந்தவராக வேண்டும்… நம் சொல்லிலே இனிமை பெற வேண்டும்… நம் செயல் அனைத்தையும் பிறர் மதிக்கும் தன்மையாக இருக்க வேண்டும்.

இப்படிப் பிறரை நாம் மகிழச் செய்யும் சக்தியாக நாம் மாறினால் அதைக் காணும் நம் தாய் பேரானந்த நிலை பெற்று நமக்காகப் பட்ட துயரத்தை எல்லாம் மாற்றலாம்… அகமகிழ்ந்து தன் துயரத்தை மாற்றிக் கொள்ளும் உணர்வும் தாய்க்கு வரும்.

ஆண்களானாலும் பெண்களானாலும் இதைப் போன்று தாயை மதித்தல் வேண்டும்.
1.நம்மை உருவாக்கிய கடவுள் என்று தாயை மதித்தல் வேண்டும்
2.தன்னைக் காத்த தெய்வம் என்று தாயை மதித்தல் வேண்டும்
3.நமக்கு நல் உணர்வு ஊட்டிய குரு என்று மதித்தல் வேண்டும்

சந்தர்ப்பத்தால் பல உணர்வுகளை நாம் பெற்றாலும் தாய் நமக்கு என்ன செய்தது…? என்று குறைப்பட்டுத் தாய் மனது புண்படும்படி எவரும் செய்யாதீர்கள். தாயைப் போற்றும் நிலையும் மகிழ்ந்து வாழும் செயலையும் தான் நாம் செயல்படுத்த வேண்டும்

நாம் எத்தனை குற்றத்தைச் செய்தாலும் தாய் தாங்கிக் கொள்ளும். ஆக… தன் பிள்ளைகள் உயர வேண்டும் என்று மனதைக் கூட்டுகின்றது. ஆகவே அதன் உணர்வின் தன்மை நம்மை மகிழச் செய்யும் சக்தியாகச் செயல்படுத்தும்.

ஆனால் அப்படி நம்மை மகிழ்ச் செய்யும் மனம் கொண்டு நம்மை வளர்ச்சியின் தன்மைக்குச் செயல்படுத்தும் தாய்க்கு நாம் வேதனைப்படும் செயலைச் செலுத்தினால் நாம் எங்கே செல்வோம்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

இதைப் போன்ற உணர்வில் இருந்து விடுபடுங்கள். அருள் உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்… அருள் ஞானத்தைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.

1.தாயன்பைப் பெற முயற்சி எடுங்கள்
2.தாயை மகிழச் செய்ய உங்கள் வாழ்க்கையின் செயல்களைப் புனிதமாக்குங்கள்
3.உங்கள் சொல்லை இனிமையாக்குங்கள்… செயலைப் புனிதம் பெறச் செய்யுங்கள்…!

தாய்க்கு செய்யும் சேவையும் கடமையும் அவர்களை நாம் மகிழச் செய்வது தான். எத்தனையோ இன்னல்களைக் கடந்து நம்மை மனிதனாக உருவாக்கியது. இந்த உண்மையின் உணர்ந்து செயல்பட்டுத் தாய் தந்தையரை மகிழச் செய்வோர் எவரோ அவரே சொர்க்கம் அடைகின்றார்…!

அத்த்கைய பண்புடன் தாயின் உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது நாம் எண்ணிய உயர்ந்த உணர்வுகள் கவரப்பட்டு எத்தகைய இன்னல்கள் வந்தாலும் மாற்றி அமைக்கும் திறனை நாம் பெற முடியும்.
1.தாயின் உணர்வுகளை நாம் எடுக்கப்படும் பொழுது தான்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் பெறும் தகுதியும் பெறுகின்றோம்
3.நம்மை அறியாது ஆட்டிப்படைக்கும் நிலைகளிலிருந்து விடுபடவும் முடியும்.

கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று நீங்கள் கவர்ந்து கொண்ட உணர்வுகள் ஒன்றென இணைந்து பகைமை உணர்வை மாற்றிடும் சக்தி பெறுங்கள்.

நளாயினியைப் போன்று கணவன் மனைவியை மதித்து மனைவி கணவனை மதித்து இரு உணர்வும் ஒன்றான பின் சாவித்திரி என்ற நிலையில் என்றுமே இணைந்து வாழும் சக்தியைப் பெற முயற்சி எடுங்கள்.

நாம் கவர்ந்து கொண்ட அந்த உணர்வுகள் தான் வசிஷ்டர் என்பது. அதாவது தசரதச் சக்கரவர்த்திக்கு வசிஷ்டர் பிரம்மகுரு என்பார்கள். பத்தாவது நிலையை அடைய கூடிய நாம் இந்த உயர்ந்த உணர்வினை நாம் நுகரப்படும் பொழுது அது வசிஷ்டர் ஆகின்றது.

1.கவர்ந்து கொண்ட பேரருள் உணர்வுகள் நம்முடன் இணைகின்றது.
2.இணைந்து கொண்ட உணர்வுகள் பிரம்மமாக உருவாகிறது
3.பிரம்மகுரு என்ற நிலையில் அந்த அருள் சக்தி நம் உடலுக்குள் உருவாகி அது இணைந்தே வாழும் அருந்ததியாக…!

ஆகவே நமது வாழ்க்கையில் நாம் எதை வெல்ல வேண்டும்…? எதை வளர்க்க வேண்டும்…? என்பதை உணர்தல் வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்து அதை உடலுக்குள் ஆழமாகப் பதித்து அதன் உணர்வுகளை உங்களுக்குள் இந்த ஆறாவது அறிவு கொண்டு தீமையை நீக்கும் உணர்வாக வளர்த்துக் கொள்ளுங்கள்.

அதே வசிஸ்டர் நீங்கள் கவரும் உணர்வுகள் கவர்ந்து கொண்ட உணர்வுகள் நீங்கள் நுகர்ந்த உணர்வுகள் உடலிலே பிரம்மமாகின்றது. அருள் சக்தி கொண்ட இருளை நீக்கி அந்த உணர்வுதான் பத்தாவது நிலை அடைந்து நஞ்சினை வென்று ஒளியாக்கி இந்த உணர்வினை உங்கள் உடலில் இணைந்தால் அருந்ததி இருளை நீக்கும் அந்த உணர்வுகள் இணைந்து வாழும் என்ற நிலையில் உங்கள் வாழ்க்கையில் அதை பெற வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன்,

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில்
1.உங்கள் உயிரைக் கடவுளாக எண்ணி… உங்கள் உயிரை ஈசனாக மதித்து… விஷ்ணுவாக வணங்குகின்றேன்.
2.உங்கள் உடலைச் சிவமாக மதித்து நீங்கள் உயர்ந்த உணர்வுகள் பெற வேண்டுமென்று ஆசைப்படுகின்றேன்.
3.அருள் உணர்வுகளை உங்களுக்குள் வினையாக்க வேண்டுமென்றும்
4.துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கணங்களுக்கு அதிபதி கணபதியாக்கி
5.தீமைகளை நீக்கும் உணர்வாக உங்கள் உடலைச் சிவமாக்கி
6.பேரொளி என்ற உணர்வாக உங்களில் வளர்க்கும் தன்மை பெற வேண்டும் என்று தான் குரு அருள் எனக்கு உபதேசித்தது…!

அதன் வழி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் பெற்றால் உங்களிலே இருள் சூழா நிலையும் அருள் ஒளி பெருகும் நிலையும் இந்த வாழ்க்கையில் மகிழ்ந்து வாழவும் முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மனிதர்களான நாம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தீமைகளை அகற்றும் வல்லமை பெற்றவர்கள். எதனையுமே நமக்குள் எளிதில் உருவாக்கக்கூடிய சக்தி பெற்றவர்கள்.

விஞ்ஞானி விண்ணிலே அண்டத்தின் நிலைகளையும் பூமிக்கடியில் உள்ள நிலைகளையும் ஊடுருவிப் பார்த்துப் பல பொருகளை அறிகின்றான். அதை எல்லாம் இணைத்து எத்தனையோ புதுப் புது இயந்திரங்களை உருவாக்குகின்றான்.

“ஒலி.., ஒளி..,” அலைகளைப் பெருக்கப்படும் பொழுது இந்த உணர்வின் தன்மை அங்கே விஞ்ஞானத்தின் நிலைகளில் இயக்குகின்றது.

கடந்த காலத்தில் ஞானிகள் இதைப் போன்று சப்தமிடுவதில்லை. மனதிற்குள் ஒடுக்கி வைத்துள்ளார்கள்.

“தான் பெற்ற ஆற்றல்கள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்” என்ற உணர்வுகளை உள் நின்று பாய்ச்சப்படும் பொழுது மற்றவர்கள் ஏங்கி நிற்கும் பொழுது அந்த உணர்வலைகளை நுகர நேர்கின்றது,

இவன் எண்ணி வெளிவிடும் உணர்வுகளை “மௌனமாக இருந்து..,” உணர்வினை நுகர்ந்து இந்த ஞானியின் உணர்வுகளை அவர்கள் சீடர்களும் உருவாக்கும் தன்மை பெற்றார்கள்.

இப்படித்தான், “அகஸ்தியன் தான் கண்டுணர்ந்த உணர்வுகளை..,” சொல் என்ற நிலைகள் வராதபடி.., “உணர்வென்ற நிலையில்” தான் நுகர்ந்த உணர்வுகளைத் தன் இன மக்கள் பெறவேண்டும் என்று உணர்வுகளை “மூச்சலைகளாக” வெளியிட்டுள்ளான்.

அதே மாதிரி அகஸ்தியனை உயர்ந்த நிலைகள் கொண்டு எண்ணும் பொழுது இந்த உணர்வுகள் அகஸ்தியனின் சகாக்களுக்குள்ளும் வளரப்பட்டு தீமைகளை அகற்றும் நிலை பெற்றார்கள்.

அருள் உணர்வை அவன் பெற்றது இந்த வழியில் தான். ஆகவே, நாம் ஒவ்வொருவரும் அருள் ஞானத்தில் வளர்ந்திட வேண்டும்,

விஞ்ஞான அறிவால் வரும் பேரழிவுகள்.., “சூறாவளி புயல்” போன்ற நிலைகள் வரும் பொழுதெல்லாம் இந்த உடலும் நமக்குச் சொந்தமல்ல.., நாம் தேடிய செல்வமும் நமக்குச் சொந்தமல்ல.., என்பதை நாம் உணர்தல் வேண்டும்.

நாம் சொந்தமாக்கப்பட வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். ஒவ்வொரு மனிதனும் உயர்ந்த நிலைகளில் வாழவேண்டும்.., என்ற “இந்த உணர்வை” நமக்குள் சொந்தமாக்க வேண்டும்.

உயர்ந்த நிலைகளில் வாழ வேண்டும் என்றால் அந்த அருள் உணர்வைத் தான் பெற்று ஒவ்வொருவரும் தெளிந்த மனம் பெறவேண்டும் என்று எண்ணினால் அதனுடன் கலந்து நமக்குள் தெளிவான நிலையும் பெறுதல் வேண்டும்.

பேரன்பைப் பெருக்கிப் பழகுதல் வேண்டும்.

சிலர் தவறு செய்தாலும் அந்த உணர்வு நம்மை இயக்காத நிலையும் அருள் உணர்வை நமக்குள் பெருக்கி வாழ்தல் வேண்டும். ஏனென்றால், குறுகிய காலமே நாம் வாழ்கின்றோம்.

இனி எதிர்காலம் மிகவும் சிந்தனையற்ற காலமாகவே மனிதனின் செயல்கள் இருக்கும். மனிதன் மனிதனாகத்தான் இருப்பான்.

ஆனால், மனிதன் பல கொடூரமான செயல்கள் செய்வதும், கொள்ளையடிப்பதும், கொலை செய்வதும் ஏமாற்றும் நிலைகளில் செல்வம் வைத்திருந்தாலும் வீடு புகுந்து அடித்துக் கொன்று விட்டு பொருளை அபகரித்துச் செல்லும் நிலை வந்துவிடுகின்றது.

அப்பொழுது நாம் தேடிய செல்வம் எங்கே இருக்கின்றது…?

நாம் எடுக்கும் மூச்சின் அலைகள் கொண்டு எந்தத் தீமையான உணர்வுகளும் நமக்குள் புகாது பாதுகாத்தல் வேண்டும். இதைப் போன்ற நிலைகளில் நீங்கள் செயல்படுத்த வேண்டும் என்று தான் வேண்டுகின்றோம்.

மோகத்தை (சபல புத்தி) நல்லதாக மாற்றும் வழி முறை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

காமத்தின் வழியில் பிறக்கும் “மோகம்…” என்பது சரீர உணர்வு அலைகளின் நாதத்தில் கலந்து தனக்குத் தேவையான ஆகார அமில குணத் தன்மைகளைத் தனதாக்கிக் கொள்ளும் தன்மை பெற்றது.

1.புலனறிவு கொண்டு ஈர்க்கப்படும் செயல் எண்ணத்திற்கும்
2.ஆகார நியமனங்கள் இல்லாது சரீரம் உணர்வு கொண்டு இயக்கப்படும் எண்ணத்திற்கும்
3.தனக்குத் தானே சில கட்டுப்பாடுகள் அமைத்துக் கொண்டு
4.மனோ தைரிய வீரிய குணத்தை… வீரமான செயல் தன்மை கொண்டு செயல்பட்டால்
5.சபலம் என்ற மோகம் அதன் வழியில் நம்மை இயக்காது மறைந்து விடும்.

இது போன்ற சபலத்தின் வழியில் சிக்காதபடி குரு தன் சிஷ்யனை உயர்த்தும் மார்க்கத்தில் பயிற்சி வழி முறைகளைக காட்டிப் பக்குவப்படுத்துவார். அந்தப் பக்குவத்தில் நற்குணங்களின் உயர் தன்மையின் வீரிய குணச் செயல்பாட்டையும் போதிப்பார்.

அப்படிப்பட்ட ஒரு உயர்வின் சிறப்பைக் குரு வழியாகக் காட்டும் இராமாயணக் காவியத்தில் “பூவினும் மெல்லிய மனம் கொண்ட பெண் கல்லானாள்…!” என்று அகலிகையைக் காட்டுகிறார்கள். அந்தக் கல்லே பின் “பெண்ணாக ஆனாள்…!” என்றும் காட்டுகிறார்கள்.

அதனின் உட்கருத்து என்ன…?

ரிஷித் தன்மை பெற வழி காட்டப் போதனைப்படுத்திய வான்மீகி மாமகரிஷி ரிஷிபத்தினியின் சக்தியும் பெற வேண்டும் என்ற சூட்சமத்தைக் காட்டுகிறார்.

விசுவாமித்திரர் பெற்ற உபதேசத்தில் அவர் பெற்ற சக்தியின் செயலையே கல்லான அகலிகை தன் நிலை உயர்த்தப் பெண் ஆனாள் என்று “அகலிகை சாப நீக்கப் படலத்தில்” காட்டுகின்றார்.

1.ஏனென்றால் காம குணத்தையே அடக்கி ஆட்சி செய்யப்படும் பொழுது அது “தெய்வீகம்…”
2.அதைக் “காமாட்சி…” என்று காட்டுவதும் ஈஸ்வரத் தத்துவமே…!

ஆனால் மோகத்தின் வேகத்தைக் காட்டினால் என்ன ஆகும்…?

அங்கே தெய்வீகத் தன்மைகள் மாறி சிருஷ்டி அல்லாத தன்மைக்கு அந்தக் குணங்கள் தனக்கொத்த வீரியம் கொள்ளும் பொழுது… காமம் அந்த மோகத்தின் சபலமாகி விடுகின்றது.

அந்த மோக மயக்கம் நீக்கும் தத்துவத்தைத் தான் “சாப நீக்குப் படலம்…” என்று செயல்படுத்திக் காட்டினார். ரிஷிபத்தினி சக்தியின் உயர்வைத் தன் காப்பியத்தில் பாசம் என்ற வழிச் செயலுக்கு ஆக்கம் தந்தார் அந்த வான்மீகி மாமகரிஷி.

கௌதம முனிவருக்குத் தன் நிலையை உயர்த்த ரிஷிபத்தினி வேண்டும். அந்தச் சக்தியின் தொடர் அகலிகையின் எண்ணத்தின் பால் செலுத்திப் பெற அகலிகையின் சிறு சலன சபலம் தடையாகிப் போனது.

1.கௌதம முனிவன் பெற்ற சஞ்சல சபல நிலை நிறைவேறாத எண்ணத்தால்
2.தனக்குள் எழுந்த கோபமும் அந்தக் கோபத்தின் பின் எழுந்த விரக்தியும்
3.விரக்தியின் பின் எழுந்த மனோதிடமும் வைராக்கியமும்
4.இந்தக் கூட்டு முறை வழித் தொடரில் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு
5.தானும் தனித்த சுயப்பிரகாசத்தை எட்ட மண்டலமாவேன்…! என்ற சுய வீரிய குணத்தைக் காட்டவே “அகலிகை கல்லானாள்…!” என்று காட்டப்பட்டது.

சபல குணத்தின் தன்மையை உருவகப்படுத்திக் காட்டவே இந்திரன் என்ற பாத்திரப் படைப்பாக்கிக் காட்டினார் வான்மீகி.

சபல குண வலையில் விழுந்ததால்… தன் மனது சபல குணத்தின் பால் திருப்பிய குணத் தன்மையால்… இந்திரனால்… “அகலிகை தன் நிலையில் மாசு கொண்டாள்…” என்பது இது அந்த மோக குணத்தால் தான்…!

1.இந்திரன் என்ற சரீர உருவகத்தை யாரும் மனத்தினாலும் எண்ண வேண்டியதில்லை…!
2.இந்திரன் என்று மகரிஷி காட்டியது மோகத்தால் எழும் சபல குணத்தைத்தான்…!

அகலிகையின் சக்தி கௌதம முனிவனின் சக்தியுடன் ஒன்றும் பொழுதுதான் அது ரிஷிபத்தினி என்ற சிறப்பை அடைகிறது… அப்போது தான் அளவிடுவதற்கரிய சிறப்பைப் பெறும் என்று காட்டுகின்றனர்.

ஆக… சிவ சக்தி என்ற ஐக்கிய நிலையில் தான் வானஇயலில் மண்டலமாக வளரும் சக்திக்கு வலுக் கொள்ள முடியும் என்பதையும் நன்கு புலப்படுத்தி உலகிற்கு நீதியைப் போதனைப்படுத்தும் தன்மைக்கு அதை அருளியிருக்கின்றார்.

இதை விசுவாமித்திரர் வாயிலாகவே வான்மீகியார் காட்டி உபதேசிக்க வைக்கின்றார்.

அதாவது அகலிகை தன் நிலை உணர்ந்து.. தன் உயர்வைத் தான் தேடிக் கொண்டு… தன்னுடைய பதியான கௌதம முனிவனுக்குச் சக்தியை ஊட்டித் தானும் அந்த ரிஷியின் சக்தியுடன் ஒன்றினாள்…! அதாவது
1.பால்வெளிச் சூட்சமத்தில் கலக்கும் தொடர்பைக் காட்டி
2.ரிஷியின் சக்தியுடன் ரிஷிபத்தினிச் சக்தியையும் கலக்கும் ஆத்ம கலப்பே
3.ஆத்ம ஜோதிக் கலப்பாக முழுமை பெறும்…! என்று காட்டுகின்றார்.

இப்படிப்பட்ட பூரணத் தன்மையைப் புரிந்து கொள்ளக் கூடிய காவியத்தை.. சூட்சமமாகக் காட்டப்பட்ட அந்தத் தத்துவத்தையே… பலர் “சபல குணத்தை இந்திரன்…” என்று உருவகப்படுத்தி தங்களுக்குள் உள்ள அறிவின் ஞானத்தால் அறிந்தோ அறியாமலோ மாசுபடுத்தி விட்டார்கள்.

இராமன் கால் பட்டு அகலிகைக்கு விமோசனம் என்பதன் பொருள் என்ன…?

அகலிகைக்குக் குருவாகி உபதேசிக்கும் தன்மையில்
1.அவள் கல்லான மனத்தின் பால் நின்று
2.தியானம் என்ற வழி முறையை… எண்ணத்தால் அந்த உயர்வைப் பெறும் வழியை… (இராமன் என்றால் எண்ணம்)
3.விசுவாமித்திரர் புரிய வைத்தார் என்பதே அதன் பொருள்.

திருமணத்திற்குத் தேவை மனப் பொருத்தமே…!

 

அந்தந்த மனிதனுக்குகந்த அமைப்பின் நிலைகள் கொண்டு தான் இன்றைய “மணப் பொருத்தங்கள்” பார்க்கும் நிலைகள் இருக்கின்றது.

பெண் நல்ல குணமாக இருக்கும்… இவர் வெறுப்படையும் உணர்வு கொண்டு இருப்பார். ஆனால் இவருடைய நிலைக்கும் இந்த நல்ல மனம் கொண்\டவர்களைப் பொருந்தாது என்று சொல்வார்கள்…!

அப்படிச் சொன்னாலும் கூடப் பரவாயில்லை. வேதனைப்படுத்தும் உணர்வின் வலிமை பெற்றவரைப் “பொருந்தும்’…” என்று சொல்லிவிடுவார்கள். நல்ல குணம் கொண்ட பெண் இங்கே வந்தபின் இவருக்குள் அடங்கும்.

சில குடும்பங்களில் பார்க்கலாம்…! விஷத்தின் தன்மை ஒன்றை அடக்குவது போல் அத்தகைய ஆணின் தன்மை வரப்படும் பொழுது
1.எல்லாவற்றிலும் வல்லமை பெற்றவன் என்ற நிலையில்
2.நல்ல பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்தால் அதை அடக்கிச் சதா இம்சிப்பான்.

ஜாதகப் பொருத்தம் எல்லாம் பார்த்துச் சரி என்று திருமணம் செய்த சில குடும்பங்களில் பார்த்தோமென்றால் பெண்ணை உதைத்துக் கொண்டே இருப்பான்.

இதே போல் தான் நல்ல மாப்பிள்ளையாக வருவான். அந்த நல்ல மாப்பிள்ளைக்கு விஷம் கொண்ட நிலைக்கு அத்தகைய பெண் தான் பொருந்தும் என்று சொல்லிவிடுவார்கள்.

திருமணம் செய்து அந்தப் பெண் புகுந்த வீட்டிற்குச் சென்றால் எல்லோரையும் அடக்கி ஆட்சி புரியும்… பயமில்லாது வாழும்…! மாமனார் மாமியார் எல்லோரையும் அடக்கும்.

புருஷன் சொன்னபடி கேட்க வேண்டும் என்று இப்படித் தான் இவர்கள் பொருத்தம் பார்க்கின்றான்ர். இருந்தாலும் திருமணமான பின் வீட்டிற்குள் வந்த பின் பார்த்தால்… பெரிய ரகளையாகத் தான் இருக்கும்.
1.ஏதாவது ஒன்று சேர்ந்து வாழ்கின்றார்களா…?
2.ஜாதகம் பார்க்காது திருமணம் செய்கின்றோமோ…?
3.நேரம் பார்க்காது திருமணம் செய்கின்றோமா…?
4.நல்ல நேரம் பார்க்காது தொழில்கள் செய்கின்றோமா…?

சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

இயற்கையின் இயக்கத்தின் நிலைகளைத் தான் அன்று அது எப்படி உருவாகிறது என்று ஜாதகத்தின் உண்மைகள் என்று தெளிவாகக் காட்டினார்கள். ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும் பொழுது இரண்டும் மாற்றம் அடைகிறது… இது அதர்வண…!

கணவன் உடல் வலிமை கொண்டு மனைவியை வேதனைப்படுத்தும் நிலையாக இருந்தால் அந்த விஷத்தின் உணர்வாக இயங்கி… பார்…! நான் தற்கொலை செய்து கொள்வேன்…! என்றால் கணவன் உடனே பயந்து கொள்வான்.

வீட்டில் மாமனாரோ மாமியாரோ அல்லது மற்ற உறவு முறை உள்ளவர்களோ ஏதாவது சொன்னால்…
1.என்னைக் கொடுமைப்படுத்துகின்றீர்கள்.. இம்சிக்கின்றீர்கள் என்று
2.போலீஸில் புகார் செய்வேன் என்று பெண் மிரட்டும்..! சொன்னால்

இப்படிச் சொன்னால் அவர்களும் பயந்து விடுவார்கள். பின் அந்தப் பெண் எப்படி இங்கே அடங்குவது…?

ஜாதகம் பார்த்துத் தான் எல்லாம் செய்தார்கள்… அதற்கு என்ன செய்வது..? இப்படிப்பட்ட பெண்களைத் தான் அங்கே பொருத்தமாகப் பார்ப்பார்கள்.

ஒரு சில குடும்பங்களில் பெண் மிகவும் அமைதி கொண்டதாக இருக்கும். ஆனால் கணவனிடமும் மற்றவர்களிடமும் நரக வேதனைப்பட்டுக் கொண்டிருப்பதையும் காணலாம்.

ஒவ்வொரு நாளும் நான் படும் இம்சை வெளியில் சொல்ல முடியாது… எனக்கு ஒரே மன உளைச்சலாக இருக்கிறது… நரக வேதனைப்படுகின்றேன்…! என்றெல்லாம் சில பெண்கள் சொல்வதைப் பார்க்கலாம்.

1.ஜாதகத்தைப் பார்த்து… பொருத்தமும் பார்த்துத்தான் எல்லாம் செய்கிறோம்
2.நல்ல முறையில் வாழ்வார்கள் என்று தான் நாமும் எண்ணுகின்றோம்.

ஆனால் அப்படி நடக்கின்றதா…? என்றால் இல்லை…! மனிதனுக்குகந்த அந்த ஆசையின் நிலைகள் கொண்டு இந்த ஜாதகக் கணிப்பை உருவாக்கிக் கொண்டுவிட்டார்கள்.

பொருத்தம் எப்படிப் பார்க்க வேண்டும்…?

1.குணச் சிறப்பின் தன்மையை நாம் உணர்ந்து
2.அவர்களுடைய பண்பையும் மனதையும் இரண்டையும் கலந்தபின்
3.திருமணம் செய்தால் அந்தக் கணவனும் மனைவியும் என்றுமே ஒத்து வாழ்வார்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இருபத்தேழு நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று மோதும் போது அந்த இயல்பால் மின் கதிர்களை அது விலக்கிச் செல்லும் உணர்வுகளைச்
1.சில தாவர இனங்கள் கவர்ந்து கொள்கின்றது,
2.இத்தகைய உணர்வுகள் விளைந்த செடிகளின் விழுதுகளைக் கையில் வைத்துக்கொண்டால்
3.மின்னலின் ஆக்கங்கள் அது நம்மைத் தாக்காது.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன் தாய் தந்தையர் அத்தகைய செடிகளை அறிந்திருந்தார்கள்.

அகஸ்தியன் கருவில் இருக்கும் பொழுது அந்தத் தாய் அந்த மின்னலைத் தணிக்கும் அத்தகைய விழுதுகளின் மணங்களை நுகர்ந்தது. கர்ப்பிணி அதை நுகரப்படும் போது கருவிலிருக்கும் சிசுவுக்கும் (அகஸ்தியன்) அந்த விழுதுகளின் மணங்கள் இரத்தத்தின் வழி கிடைக்கின்றது.

1.மின்னல் பாயும் பொழுது
2.மின் கதிர்கள் எவ்வளவு தூரம் செல்லுகின்றதோ…
3.அந்த ஆற்றல்களைக் கருவிலிருக்கும் சிசு (அகஸ்தியன்) பெறுகின்றது.
4.ஒவ்வொரு தாவர இனங்களின் இயல்புகளையும்
5.வானஇயல் இயல்புகளையும் பூமி உருவான நிலையும்
6.பூமி உருவாவதற்கு முன் சூரியன் எப்படி உருவானது என்ற நிலையும்
7.வான்வீதி முதலில் எப்படி இருந்தது என்ற நிலையும்
8.கண்டறியக்கூடிய சக்தி அகஸ்தியன் பெற்றதற்குக் காரணமே
9.அவருடைய மூதாதையர் கண்டுணர்ந்த உணர்வுகள் அனைத்தும்
10.தாய் கருவிலேயே அவன் பெற்று வளர்ந்தது தான்.

அகஸ்தியனால் காட்டப்பட்ட உண்மையால் தான் மற்ற சூரியக் குடும்பங்களைப் பற்றியும் நம்முடைய சூரிய குடும்பத்தைப் பற்றியும் இப்படி “எத்தனையோ வகையான எண்ணிலடங்காத சூரிய குடும்பங்கள் இருக்கின்றது…!’ என்று விஞ்ஞான அறிவில் இன்று கண்டு கொண்டுள்ளார்கள்.

அந்த மெய்ஞானியான அகஸ்தியன் ஓர் சூரியன் உருவானதும் அந்த சூரியக் குடும்பத்திற்குள் 27 நட்சத்திரம் உருவானதையும் கண்டுணர்ந்தான்.

அதே சமயத்தில் அந்த 27 நட்சத்திரங்களும் ஒரு காலம் சூரியனாக மாறுகின்றது. அப்பொழுது முதலில் உருவான சூரியன் செயல் இழக்கின்றது என்பதையும் அகஸ்தியன் கண்டுணர்ந்தான்.

ஏனென்றால் 27 நட்சத்திரங்கள் பிற மண்டலத்தின் சக்திகளைக் கவரும் பொழுது தான் சூரியனும் சீராக இயங்க முடியும். பிற மண்டலங்களிலிருந்து வரவில்லை என்றால் சூரியனுக்கு உணவில்லை… மடிந்துவிடும்.

1.ஆக சூரியனுக்கு உபகாரமாக இருக்கும் 27 நட்சத்திரங்களும் 27 பிரபஞ்சங்களாக மாறுவதையும்
2.இதைப் போல பல பல சூரிய பிரபஞ்சங்களாக எப்படி மாறி வந்தது என்ற நிலையையும்
3.அகஸ்தியன் தெளிவாகக் கண்டுணர்ந்து வெளிப்படுத்தி இருக்கின்றான்.
4.அவனில் விளைந்த உணர்வுகள்… அவன் வெளிவிட்ட அந்த மூச்சலைகளை நீங்களும் நுகர முடியும்.

இன்று அவன் ஒளியின் உடலாகத் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான். அவன் மனிதனாக வாழ்ந்த காலத்தில் தாய் கருவிலிருக்கும் பொழுது பெற்ற உணர்வுகளும் நம் பூமியில் பரவிக் கிடக்கின்றது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குள் இதைப் பதிவாக்கி அந்த அகஸ்தியன் மூச்சலைகளைக் கவரும் சந்தர்ப்பத்தை உருவாக்கினார்.

குருநாதர் எனக்குப் பதிவாக்கிய அதே உணர்வுப்படி தான் உங்களுக்கும் பதிவாக்கிக் கொண்டுள்ளேன். உங்கள் சந்தர்ப்பத்தால் அதை நீங்கள் கவரும் தகுதி பெறுகின்றீர்கள். அண்டத்தை அறியும் ஆற்றலும் பகைமை உணர்வுகளை அகற்றும் சக்தியும் நீங்கள் பெறுவீர்கள்.
1.நான் (ஞானகுரு) ஒருவன் கண்டேன் என்றால் அது பத்தாது.
2.என் ஒருவனால் ஒன்றும் செய்ய முடியாது.
3.நீங்கள் எல்லோரும் செயல்படுத்த வேண்டும்.

“சக்கர வியூகம்…” அமைத்துத் தீமைகளைத் தடுக்க வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

இந்த மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் எந்த நிலையை எண்ணி அதை நமக்குள் அதைப் பதிவு செய்கின்றோமோ…
1.அதனால் ஈர்க்கப்படும் சுவாசத்தின் சமைப்பில்
2.தன் ஆன்மாவைச் சுற்றி ஓடும் அந்த சப்த நாத ஒளி வட்டத்தில் “எது வீரியமாக இருக்கின்றதோ…”
3.அதனின் தொடர் நிகழ்வாகத்தான் உடலுக்குள் அணுக்கள் உருவாகிக் கொண்டே உள்ளது… ஒவ்வொரு நாளுமே…!

பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் அலைத் தொடரில் நாம் சிக்காது உயர் ஞானத் தொடருக்கு நம் எண்ணம் செயல் கொண்டால் ஞானிகள் கண்ட மூலத்தை நாமும் காண முடியும்.

1.நம் உயிரான்மாவின் சக்தியை வலுக்கூட்டும் அத்தகைய பொக்கிஷத்தை
2.நன்னெறியில் நற்செயலுக்கு வினைப்பயனாக உருவாக்கி
3.பேரருள் பேரொளியாக மாற்றிடும் அந்த அரிய செயலுக்கு
4.தடைக் கல்லாக வரும் உலக உணர்வுகளின் எதிர் மோதல் தன்மைகளை
5.பக்குவமாக விலக்கிச் செல்லும் ஆற்றலை நாம் முதலில் பெறவேண்டும்.

வான இயலின் ஆற்றலைத் தன் வாழ்க்கைத் தொடரில் இருந்தே… இந்த உடலிலிருந்தே முழுமை பெற வேண்டும் என்றாலும்
1.தன் எண்ணங்களில் மோதும் மாறுபட்ட நிலைகளில்
2.”பிடர்தல்…” என்ற நுண்ணிய நிலைகள் கொண்டு பிரித்தாளும் நிலைகள் வரவில்லை என்றால்
3.அதனால் ஏற்படும் சங்கட அலைகளால் முதலில் தாக்கப்படுவது நம் சரீரம் தான்.

சங்கடமும் சலிப்பும் வேதனையும் அதிகமாகப் பட்டால் அந்த உணர்வின் சத்து (அமிலங்கள்) நம் சரீரத்தில் உறைந்து தங்கி விட்டால் அது சரீரத்தில் உள்ள அனைத்து அணுக்களுக்குள்ளும் எதிர் மோதலாகி நோயாக மாறிவிடும்…! என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்றால் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துத்தான் நல்லதாக்க முடியும்.

1.எதிர் மோதலாக வரும் தீமையான உணர்வுகளை
2.அது உடலுக்குள் பதிவாகும் முன்பே நீக்கிட.. “சக்கர வியூகத்தை அமைத்து…”
3.பஞ்சேந்திரியங்களைக் காத்திடும் செயலுக்கு நாம் வர வேண்டும்.

“சக்கர வியூகம்…!” என்றால் நம் நினைவுகளைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து அங்கே விழிப்பு நிலை ஏற்படுத்தி அதன் வழியாக விண்ணிலிருந்து வரும் மெய் ஞானிகளின் உணர்வை ஈர்க்கும் பழக்கம் வருதல் வேண்டும்.

அப்பொழுது புலனறிவால் ஈர்க்கப்படும் அனைத்தும் தன்னிச்சையாகச் செயல்படும் செயல் மாறி “புருவ மத்தியின் வழியாக…” ஈர்க்கும் பக்குவம் வருகின்றது.

இல்லறத்திலும் தொழிலிலும் மற்றும் உலகக் கடமைகள் அனைத்திலுமே இந்த விழிப்புணர்வு அவசியம் தேவை.

இத்தகைய விழிப்புணர்வைப் பழக்கப்படுத்திக் கொண்டால் “பேரின்ப இரகசியத்தை அறிந்திடும் தொடரில்…!” அணுவளவும் கால விரயம் ஆகாமல் நல் வினைப் பயனின் பலனை நிச்சயம் பெற முடியும்.

கோப உணர்வின் இயக்கங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

 

இன்றைய சகஜ வாழ்க்கையில் கோபப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த நேரத்தில் நமக்குள் உணர்வுகள் அழுத்தமாகி அதிகமான சப்தமும் போடுகின்றோம். ஏன்…?

நாம் நுகரும் உணர்வுகள் எல்லாம் நம் உயிரிலே மோதிய பின் அது டிரன்சாக்சன் செய்து நம் உடலுக்குள் பரவச் செய்கிறது.

விஞ்ஞான ரீதியாக மைக்கின் மூலமாக… ஒரு டிரான்ஸிஸ்டர் ஒலிகளைக் கவர்ந்து அந்த உணர்வுக்கொப்ப ஒலிக்கற்றைகளை ஒலி பெருக்கிக்கு அனுப்பி அதன் மூலம் தான் அந்தச் சப்தங்களை நாம் கேட்கின்றோம்.

1.இதைப் போல தான் எதிர்மறையான அலைகள் நம் மீது மோதும் போது
2.நாம் சுவாசித்த அந்தக் கார உணர்வின் ஒலிக்கற்றைகள் உடலுக்குள் பரப்பப்படும் பொழுது
3.அந்தக் கோபத்தின் உணர்ச்சிகளை நாமே அடக்க முடியாத நிலைகளாகி
4.ஓங்கிச் சப்தமிடுவது… சப்தமான பேச்சுக்களைப் பேசுவது… கொடூர உணர்ச்சிகளை தூண்டும் செயல்களைச் செய்வது…
5.இப்படித் தான் நாம் அந்த இடத்தில் செயல்படுகின்றோம்.

அந்தக் கொடூர செயலைச் செயல்படுத்தும்போது கேட்போர் உணர்வுகளிலும் அது பாய்ந்து நம்மைக் கண்ட பின் அவர்களும் வெறுக்கும் தன்மை வருகின்றது.

அந்த வெறுக்கும் தன்மை அதிகரிக்க அதிகரிக்க… நமக்குள் கோபத்தின் தன்மை அடுத்து எல்லை கடந்தே செல்லும்.
1.யார் மேல் கோபம் படுகின்றோமோ… யாரை வெறுக்கின்றோமோ…
2.அவர் உணர்வுகளை நினைத்து நினைத்துக் கோபத்தின் உணர்வுகள் எல்லை கடந்து செல்கின்றது.

அதனால் நமது உடலில் கடுமையான நோயாக இரத்தக் கொதிப்பாக உருவாகி விடுகின்றது. அப்படிப்பட்ட நிலைகள் வரும் பொழுது சிந்திக்கும் நிலைகள் அழுத்தம் அதிகமாகி விட்டால்… அதன் உணர்வு இரத்த அழுத்தம் (PRESSURE) அதிகமாகும்போது கண்ணிற்குக் கவரும் உணர்வுகள் அந்த இரத்தத்தின் வழி அந்த உணர்வின் தன்மையாக இயக்கும்.

ஆனால் கண்ணிலே இந்த இரத்தத்தின் தன்மை அதிகரித்து விட்டால் கண்கள் சிவந்து விடும். கண்கள் சிவந்து விட்டால் கொடூர உணர்வுடன் காட்சி தரும்.

சில பேர் கோபப்பட்டால் பார்க்கலாம்… வெளியில் தெரியவில்லை என்றாலும்… கோபத்தின் கனலை அவர்கள் கண்களிலே கண்டுவிடலாம். சிவப்பு நிறமாக அதன் உணர்வு இயக்கும்.

அந்த நேரத்தில் எதைப் படித்தாலும்… எதைப் பார்த்தாலும்… வெறுத்திடும் தன்மையே வரும். அனைத்தையும் அழிக்கும் உணர்வே வரும்.

1.கோபம் வந்து விட்டால் தன் பிள்ளையானாலும் அடித்துத் தாக்கும் உணர்ச்சி வந்துவிடும்
2.கோபம் வந்தால் நல்ல பொருட்களைக் கண்டாலும் தட்டி எறியச் செய்யும்
3.கோபம் வந்துவிட்டால் நல்ல பொருளைத் தூக்கி (கனமாக இருந்தாலும்) உடைக்கச் செய்யும்
4.புலி எப்படி இரக்கமற்று மற்றதைத் தாக்குகின்றதோ அத்தகைய உணர்ச்சி தான் இயக்கும்.

உதாரணமாக ஒரு நல்ல உணர்வுடன் ஏதாவது தென்பட்டாலோ அல்லது யாராவது அந்த நேரத்தில் மகிழ்ச்சியாகச் சிரித்தாலோ அவர்களைப் பார்க்கும் பொழுது வெறுக்கும் உணர்வுகளைத் தான் தோற்றுவிக்கும்.

இதற்கெல்லாம் காரணம் யார்…? நமது உயிரே…! நுகர்ந்த உணர்வுக்கொப்ப அதன் உணர்ச்சிகளாகத் தான் நம்மை இயக்குகின்றது.

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதிலே எப்பொருளைப் போடுகின்றோமோ… அது அந்த வெப்பத்தால் அதன் உணர்வின் மணங்களை வெளிப்படுத்துகின்றது. அந்த மணத்திற்கொப்ப நுகர்ந்தோர் உணர்வுகளையும் இயக்கச் செய்கின்றது.

இதைப் போலத் தான் இந்த உயிரின் இயக்கங்கள் என்பது அது நெருப்புக்கு ஒப்பானது தான்…!
1.நாம் எண்ணியதைத் தான்… நாம் நுகர்ந்ததைத்தான் அது இயக்கிக் காட்டுகின்றது.
2.அந்த உணர்வைத்தான் கண் கொண்டு பார்க்கவும் செய்கின்றோம்.

கோபம் வந்துவிட்டால் சிந்திக்கும் தன்மையும் இழக்கப்படுகின்றது. அதே சமயத்தில் நமது செயல்களும் சீராக இருப்பதில்லை.

ஒரு கணக்குப் பார்த்தால் சரியாகப் பார்க்க முடிவதில்லை. ஒரு பொருளைச் சீராக பார்த்து… அதனின் தரத்தைப் பார்த்துத் தேர்ந்தெடுக்கும் தன்மையும் இழந்து விடுகின்றது.

1.ஆனால் தரமாக சரக்காக இருப்பினும்
2.நம் உணர்வுடன் அந்த தரமிழந்த உணர்வுகள் இயக்கப்பட்டு நல்ல பொருளைப் பார்க்கும்போது வெறுப்பாகின்றது.
3.நல்லவைகளைத் தேர்ந்தெடுக்கும் தன்மையும் இழக்கப்படுகின்றது
4.வியாபாரத்தில் இத்தகைய நிலைகள் பெற்றால் வியாபாரம் மந்தமாகும்.

வியாபாரம் மந்தமாகும் பொழுது வேதனை என்ற உணர்வு கூடி கோபமும் வேதனையும் மீண்டும் அதிகமாக அதை நமக்குள் வளர்க்க வளர்க்கச் சிந்தனை குறைவாகி விஷத்தின் தன்மை ஆற்றல் அதிகமாகி இந்த உடலில் கடுமையான நோய்கள் உருவாகி விடுகின்றது.

பின் மனித உடலை உருவாக்கிய நல்ல அணுக்களின் செயலாக்கங்களை அது மாற்றி விடுகின்றது.

உதாரணமாக குளவி ஒரு புழுவைக் கொட்டிய பின் அந்த உணர்வுகள் கலந்து கொண்ட பின் புழுவின் உடலே குளவியாக மாற்றமடைகின்றது.

அதைப்போல் தான் நம் உடலிலும் அத்தகைய மாற்றம் ஆகும் பொழுது…
1.இந்த உடலை விட்டு உயிராத்மா சென்றபின்
2.எந்தக் காரமான உணர்வை இந்த உடலில் அதிகமாக எடுத்தோமோ
3.அதற்கொப்ப மற்றொரு உடலின் ஈர்ப்புக்குள் சென்று
4.அங்கே இதன் உணர்வை முழுமையாக்கி அந்த உடலையும் வீழ்த்திவிட்டு வெளி வரும்போது
5.அடுத்துப் புலியாகத் தான் நாம் பிறக்க முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் எண்ணும் உணர்வுகள் அனைத்தையும் நம் உயிர் ஓ…ம் நமச்சிவாய.. ஓ…ம் நமச்சிவாய.. ஓ…ம் நமச்சிவாய.. என்று உடலாக மாற்றிக் கொண்டேயுள்ளது.

அதைத் தான் “பார்வதி பஜே… நமச்சிவாய” என்பது.

நாம் நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்டு இந்த உணர்ச்சிகள் நம் இரத்தத்துடன் கலந்து நம் உடலாக உருவாக்கும் கருத்தன்மை அடைகின்றது.

இது தான் “ஓ…” பிரணவம் “ம்…” பிரம்மம் என்று நம் சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது. அதன் வழியில்
1.நாம் எண்ணும் பார்க்கும் நுகர்ந்து அறியும் அனைத்தையும்
2.சதாசிவமாக ஆக்கிக் கொண்டேயுள்ளது நம் உயிர்.
3.அதாவது சதா நம் உடலாக மாற்றிக் கொண்டேயுள்ளது என்று பொருள்படும்படி நம் ஞானியர்கள் கூறியுள்ளார்கள்.

ஆகவே நாம் சதா சிவமாக்க வேண்டியது எது?

இருளை அகற்றி அருள் ஒளி பெறும் அருள் ஞானத்தை நாம் நுகர்ந்தறிந்து நம் உடலில் “இருளை அகற்றிடும் அருள் ஞானத்தைச் சதா சிவமாக்கிக் கொண்டேயிருத்தல்” வேண்டும்.

நமது உணர்வுகள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து நம் வாழ்க்கையில் என்றும் ஏகாந்த நிலை என பேரருள் பேரொளி என ஆகி என்றும் பிறவியில்லா நிலை அடைய இது உதவும்.

அகஸ்தியன் துருவனாகி திருமணமாகி இரு மனமும் ஒன்றாகி அகண்ட அண்டத்தையும் அறிந்துணர்ந்து இருண்ட உலகை அகற்றிப் பேரருள் பேரொளி என ஆன அந்த அருள் சக்திகளைப் பெறவேண்டும் என்று நாம் ஏங்கித் தியானிப்போம்.

1.அகஸ்தியர் அவர் வாழ்ந்த காலங்களில் எதை எதையெல்லாம் நுகர்ந்தாரோ
2.அந்தத் தாவர இனங்களின் நறுமணங்களும்
3.தீமைகளை நீக்கிடும் பச்சிலைகளின் மணங்களும் இங்கே வரும்.

நீங்கள் தியானிக்கும் பொழுது பல விஷத் தன்மைகளும் விஷமான உணர்ச்சிகளையும் தீமைகளை நீக்கிடும் அல்லது அடக்கிடும் “அருள் மணங்கள்” உங்களுக்குள் வரும்.

இவை அனைத்தும் உங்கள் உடலுக்குள் சென்று தீமையை அடக்கி அருள் ஞானத்தைப் பெருக்க உதவி செய்யும்.

உங்கள் மனைதை அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான “அந்தப் பேரருளுடன் இணைத்து…” அந்தப் பேரருளைப் பெறவேண்டும் என்ற ஏக்கத்துடன் தியானியுங்கள்.

1.சர்வ பிணிகளையும் அகற்றிடும் அருள் சக்தியாக
2.அகஸ்தியன் கண்ட பல மூலிகைகளின் மணங்கள்
3.இப்பொழுது உங்களுக்குள் வரும்.

அதை ஏங்கிப் பெற்று நமக்குள் சர்வ பிணிகளையும் சர்வ தோஷங்களை அகற்றிடும் அருள் ஞான சக்தியைப் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானிப்போம்.

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று நம் உயிரை வேண்டி கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உங்கள் நினைவனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதனின்று வெளிப்படும் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

அவ்வாறு துருவ நட்சத்திரத்தை எண்ணி ஏங்கித் தியானித்துப் பேரருளை உங்கள் உடலில் உருவாக்குங்கள். பேரருளைப் பெருக்குங்கள்.

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தாய் தந்தையர் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளை ஏங்கித் தியானித்து அன்னை தந்தையர் உடல் முழுவதும் படரச் செய்து நமக்காகப் பட்ட துயரினை அகற்றச் செய்து பேரருள் பெறவேண்டும் என்று அன்னை தந்தையரை ஏங்கித் தியானியுங்கள்.

உங்கள் அன்னை தந்தையர் உடல் முழுவதும் படர்ந்திட வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியன் பெற்ற அற்புத சக்திகளைப் பெற நாம் தியானிக்க வேண்டிய முறை இது. தொடர்ந்து செய்து வந்தால் எத்தகையை தீமைகளையும் பிணிகளையும் போக்க முடியும்.

நம் பார்வையால் பேச்சால் மூச்சால் மற்றவர்கள் தீமைகளும் பிணிகளும் தோஷங்களும் அகலும். செய்து பாருங்கள்.

கஜலக்ஷ்மியின் சிறப்பு பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

1.சுவாசத்தின் வீரியத்தைக் காட்ட நாசியாக யானைகளையும்
2.சுவாசத்தில் நறுமணத்தை எடுக்க வேண்டியதைக் காட்ட துதிக்கையில் அமுதக் கலசத்துடன் மலர்களையும்
3.மன எண்ண வீரியத்தின் தூய்மையைக் காட்ட ஏழு எண்ணங்கள் கலந்த (தூய்மையான எண்ணமாக) வெண்மையான யானையின் நிறத்தையும்
4.சுவாச நிலை முக்தி பெறும் தொடருக்கு ஆதி மூல நீர் சக்தியைக் காட்டி
5.நீரடி மூல வித்து நீர் மண் தொடர்பில் (மண் வளத்தில் வளரும் தாவரம் போல்) சித்தன் நிலை பெறும் சித்துக்கள் என்பதைக் காட்ட
6.நீரின் சுவாசத்தை ஈர்த்துச் சமைத்திடும் ஆகார நியதியைக் கொண்டு முளைத்து… நீர் மேல் கிளைத்தெழும் தாமரை இதழ்களைக் காட்டி
6.பரிபூரணத்தை ஒவ்வொருவரும் பெற்றிடும் வழியாக வண்ண மலரில் அமர்ந்துள்ளாள் “கஜலக்ஷ்மி…!” என்று அன்று உணர்த்தினார்கள் ரிஷிகள்.

மண்டலமாக உருக்கோலம் பூண்ட நம் பூமித் தாய் பெற்று வளர்த்திட்ட… இன்னும் வளர்ச்சியின் வலுக்கொள்ளும் ஈர்ப்பின் செயலில்… தன்னை மேன் மேலும் வளர்த்துக் கொள்கின்றது.

அதைப் போல் பூமித் தாயின் செல்வங்களான ஒவ்வொரு உயிரான்மாவும் ஆதிமூலச் சக்தியின் தொடர் கொண்டு தன்னை வளர்ச்சி நிலைப்படுத்த வேண்டிய தொடருக்கு “கஜலக்ஷ்மியாக அமர்ந்துள்ளாள் பூமித்தாய்…! என்று காட்டினார்கள் அன்றைய சித்தர்கள்.

மனிதனுக்கு ஜாதகம் இல்லை… எண்ணியதை உருவாக்கக் கற்றுக் கொண்டவன் தான் மனிதன்…!

 

எத்தகைய தீமை வந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் பெறவேண்டும் என்ற இந்த உணர்வினைக் காலை துருவ தியானத்தில் கணவனும் மனைவியும் எடுத்துக் கொண்டால்
1.அந்த அருள் ஒளி இங்கே இருளை மாய்க்கும்
2.உணர்வின் தன்மை இரண்டற இணைக்கும்… அருள் ஒளி பெருகும்.

திருமணம் ஆகும் போது மணமக்களை ஆசீர்வதிக்க வருபவர்கள் எப்படி வாழ்த்த வேண்டும்…?

அதாவது திருமணத்திற்கு வரும் அனைவரும் அந்த ஞானிகளையும் மகரிஷிகளையும் எண்ணித் தியானித்து அந்த உணர்வினைப் பெற்ற பின் தன் பார்வையும் செயலும் கொண்டு மணமக்கள் வசிஷ்டரும் அருந்ததியும் போல வாழ வேண்டும் என்று இந்த உணர்வின் ஒலிகளை எழுப்ப வேண்டும்.

1.திருமணமாகும் பொழுது எல்லோரும் சேர்ந்து மணமக்களுக்கு இத்தகைய வாழ்த்தினைப் பாய்ச்சப்படும் போது
2.திருமண நாளை அவர்கள் எண்ணும் பொழுதெல்லாம்
3.அவர்கள் வாழ்க்கையில் அது தீமையை அகற்றும் நாளாக வருகின்றது.

ஒவ்வொரு நாளும் காலை துருவ தியானத்தில் கணவனுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் மனைவிக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று கணவன் மனவி இருவரும் எண்ணும் போது இரு மனமும் ஒன்றுகின்றது.

இருள் சூழாத நிலைகளும் பேரருளை இருவருக்குள்ளும் உருவாக்கும் கருவின் தன்மையும் உருவாகின்றது.

வெளியில் சென்று விட்டு வரும் கணவன்… எத்தகைய தீமைகளைப் பார்த்து அல்லது நுகர்ந்து வந்தாலும்… அந்தத் தீமையின் சொல்லை மனைவியும் கேட்க நேர்ந்தாலும்…
1.அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகள் பெற வேண்டுமென்று
2.இருவரும் ஒன்றாக எண்ணப்படும் பொழுது தீமைகள் வளரவிடாது தடுக்கும்…!

இதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

இன்று ஜாதகம் பார்ப்போரும் சரி கேட்போரும் சரி எந்த நிலையில் இருக்கின்றனர்…?

குடும்பத்திலோ தொழிலோ கஷ்டம் என்று அங்கே சென்றால் காசுக்காக வேண்டி தோஷங்கள் இருக்கிறது… ஏழரை நாட்டான் சனி பிடித்திருக்கிறது… சனி இங்கே பார்க்கின்றது…! என்று சொல்லி அதற்குப் பரிகாரமாக இன்னென்ன உபசாந்திகளையும் சாங்கியங்களையும் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்வார்கள்.

கணித்துச் சொல்லும் போழுது… கூட கொஞ்சம் இரண்டு எட்டு வைத்து அதை கூட்டிச் சொல்லி இருப்பான். ஜாதகம் தெரிந்தவர்களே வந்தாலும் கூட…
1.சனி வக்கிரமத்தில் இருக்கின்றது
2.இதனுடன் சேர்க்கப்படும் பொழுது இன்னென்ன முறிவுகளைச் செய்ய வேண்டும் என்று சொன்னால்
3.ஆமாம்… ஆமாம்… செய்தால்தான் சரியாக வரும்… நன்றாக இருக்கும்…! என்பார்கள்.

இவரும் ஜாதகம் பார்ப்பவர் அவரும் ஜாதகம் பார்ப்பவர்…! இவன் சொன்ன தவறை மறைப்பதற்கு காசு கொடுத்து மறைக்கச் செய்கின்றான்.

ஆனாலும் ஜாதகக்காரன் சொன்ன உணர்வு… இவருக்குள் பதிந்த அந்த விஷத்தின் தன்மை கொண்டு
1.கஷ்டம் என்று வரும் பொழுது… “அன்னைக்கு அந்த ஜோசியக்காரன் சொன்னான் அல்லவா…” என்ற எண்ணம் தான் வரும்
2.அந்த ஜாதகம் சொன்னபடிதான் நடக்கின்றது… அந்த விதிப்படிதானே நடக்கும்…! என்று சொல்வார்கள்.

விதிப்படிதான் நடக்கும் சென்று சொன்னாலும் ஏன் இந்த விதியை மதி கொண்டு வெல்லும் சக்தியை நாம் ஏன் பெற முடியாது…? என்று சிந்திப்பதில்லை.

பிறந்ததிலிருந்து ஜாதகத்தைப் பார்த்து நல்ல காலம் வரும் கெட்ட நேரம் வரும் என்று எல்லாம் செய்கிறார்கள். தொழிலையும் நல்ல நேரம் பார்த்துதான் வைக்கின்றார்கள்.
ஆனால் நஷ்டம் ஆகிவிட்டால்…
1.விதி…! இப்படி நடக்கின்றது என்ன செய்வது…? என்று
2.இதை அவர்கள் சமாதானப்படுத்திக் கொள்கின்றார்கள்.

ஜாதகம் ஜோதிடத்துடன் பார்த்து எல்லாம் செய்து… அடுத்து கோவிலுக்குச் சென்று அங்கே நஷ்டமானதையும் குடும்பத்தையும் எண்ணி வேதனைப் பட்டுக் கொண்டிருக்கும் பொழுது
1.என்னமோ தெய்வம் என்னைக் கைவிட்டுவிட்டது
2.என் விதி என்னிடம் விளையாடுகிறது…
3.என் விதியினால் தெய்வமே என்னை விட்டு விலகிச் சென்று விட்டது…! என்று இப்படித் தான் எண்ணுகின்றார்கள்.

மதி கொண்டு விதியை மாற்ற வேண்டும் என்ற நிலை இருக்கப்படும் பொழுது அதை மாற்றும் திறனைத் தான் நாம் கடைப்பிடிக்க வேண்டும். அதற்குத்தான் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும்படி உங்களுக்கு அடிக்கடி உபதேசிக்கின்றோம்.

அந்த மதி கொண்டு விதியை மாற்ற முடியும். ஆலயத்தின் பண்புகளும் அது தான். மனிதனுக்கு ஜாதகம் இல்லை…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் உங்கள் உயிரை எல்லாம் “கடவுளாக…” மதிக்கச் சொன்னார். உங்கள் உடலைக் கோயிலாக மதிக்கச் சொன்னார். உயர்ந்த சக்திகளை எடுத்து ஒவ்வொரு உயிருக்கும் “நீ அபிஷேகம் செய்…!” என்றார்.

கோயிலில் போய் பால் அபிஷேகம் தேன் அபிஷேகம் சந்தான அபிஷேகம் எல்லாம் நீங்கள் செய்கிறீர்கள் அல்லவா…?

அதே போல் அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தியை எடுத்து நான் (ஞானகுரு) உங்களிடம் உபதேசித்துக் கொண்டிருக்கின்றேன். அப்பொழுது “உம்…” கொடுத்துக் நீங்கள் கேட்கும் பொழுது உங்கள் ஈசனுக்கு அபிஷேகம் நடக்கின்றது.

அப்போது அந்த மகிழ்ச்சியான உணர்வுகளைத் தனக்குள் வடித்துப் பிரம்மமாக வடித்து வைக்கின்றது.

அவ்வாறு அந்தச் சக்தியாக வடித்ததை
1.இதையே உங்கள் உயிரை ஈசனாக நினைத்து
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணினீர்கள் என்றால்
3.அப்போது உங்கள் உயிரான ஈசனுக்கு நீங்கள் அபிஷேகம் செய்கிறீர்கள்.

அந்த உயர்வான சக்திகள் உங்கள் உடலுக்குள் உள்ள நல்ல குணங்களான தெய்வங்களுக்குக் கிடைக்கின்றது. உடலான சிவம் சந்தோஷமாகி நாம் என்னென்ன நினைக்கின்றோமோ அந்தந்த வேலையெல்லாம் செய்ய வைக்கும்.

அதே சமயத்தில் உங்கள் சொல்லுக்குள் மகரிஷிகள் உணர்வுகள் கலந்தவுடனே “சரஸ்வதி… ஞானம்…” சரஸ்வதி என்பது மணம்.

நீங்கள் பேசக்கூடிய உணர்வுகள் நாதம். மற்றவர்களுக்குச் சொல்லும் பொழுது அங்கே நமக்குத் தகுந்த மாதிரி இனிமையாகப் பேச வைத்து “நமக்கு உதவி செய்ய வைக்கும்.”

ஒரு அணு வேப்பமரத்தின் கசப்பை எடுத்துக் கொண்டால் அதை நாம் நுகரும் பொழுது “ஐய்யய்யோ…” என்று வாந்தி வரவழைக்கும்.
1.கசப்பின் தன்மை வரும் பொழுது உயிரான ஈசனுக்கு நெளிவாகின்றது.
2.உடலுக்குள்ளும் நெளிவாகச் செய்கின்றது.
3.நெளியும் உணர்வை அதிகமாகச் சுவாசித்தால்
4.நெளிந்து திரியும் உணர்வின் உடலாக (உயிரினமாக) அது மாற்றி விடுகின்றது.

ஆனால் ஒரு ரோஜாப்பூவின் சக்தியை அதே மாதிரி ஒரு அணு எடுத்து வந்தால் அதை நுகர்ந்தவுடன் “ஆஹாஹா…” என்று சொல்லுகின்றோம்.

இதே போல மகரிஷிகளின் அருள் மணத்தை நாம் எடுத்துச் சுவாசிக்கும் பொழுது எல்லாவற்றிலும் இனிமையான நிலையை உருவாக்கி விடுகின்றது.

ஆகவே நம் உயிரான அந்த ஈசனிடம் இந்த உணர்வுகள் படும் பொழுது அந்த நறுமணத்தைச் சுவாசிக்கும் பொழுது நம்மை மகிழச் செய்கின்றது.

நாம் சுவாசிப்பது அனைத்தையும் உயிர் பிரம்மமாக இருந்து நம் உடலாகச் சிருஷ்டித்துக் கொண்டே இருக்கின்றான்.

ஞானிகள் சொன்னது… “பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் முருகன்…!” சிருஷ்டிக்கும் ஆற்றல் நம் ஆறாவது அறிவுக்குள் உண்டு. நமக்குள் படைக்கும் சக்தி உண்டு. இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

வலம்புரிச் சங்கில் உள்ள விசேஷ குணம் என்ன…? – ஈஸ்வரபட்டர்

உயிரணுக்கள் தன் எண்ணச் செயலுக்கொப்ப வீரியம் கொள்ளும் நிலையே நீர் சக்தியில் (கடல் நீரில்) பல வித உயிர் சக்திகள் உருவாகும் செயலில் எல்லாம் தனித்துவம் ஒன்று உண்டு.

1.ஆயிரம் ஆண்டுகள் நீர் சக்தியின் தொடரில்
2.சுவாசத்தின் சக்தி கொண்டு பெறப்படும் அந்த அரிய அமில குணங்கள்
3.சூரிய சக்தியின் பலனையே ஈர்க்கும் “சங்காக…!” கடலிலே உருப்பெறுகின்றது.

“சங்கு சுட்டாலும் வெண்மை தரும்…!” என்பார்கள்.

அதி உஷ்ணத்திலும் அதி உஷ்ண அக்கினி ஜுவாலையிலும் தன் குணம் மாறாமல் (தன்னையே) தன் அமில குணத்தையே காத்துக் கொள்ளும் திட வீரிய அமில குண அணுக்களின் சேர்க்கை அத்தகைய சங்கிலே உண்டு.

அத்தகைய சங்கின் குணத்தைப் போல் நம்முடய குணம் இருக்க வேண்டும். நீரானாலும் சரி நெருப்பானாலும் சரி சங்கின் அமில குணம் மாற்றமடையாத சிறப்புடையது.

1.ஆயிரம் காலங்களுக்கு மேல் வாழும் பொக்கிஷமாம் அந்த உயிர்ச் சக்தி
2.தன் நிலையில் பரிபூரணத்துவம் பெற்று விட்டு வெளிக் கிளம்பும் சூட்சமத்தில்
3.அந்தச் சங்கு – நீர் மேல் மிதக்கும் முக்கியமான ஈர்ப்பின் செயலை அறிந்துணர வேண்டும்.

நக்கீரனைக் கேட்டால் சொல்வார்…!

சங்கறுக்கும் குலத்தில் பிறந்து வாழ்ந்து புலமை பெற்ற அவரது திட எண்ணம் வீரியத்தின் குணம் எங்கிருந்து வந்தது..? வலம்புரிச் சங்கின் நீரை அவர் அருந்தினார்.

வலம்புரிச் சங்கில் உள்ள விசேஷ குணம் என்ன…?

வாக்தேவி நட்சத்திரத்தின் அமில குணம் உயரிய நாதமாகி… ஓங்காரமாகச் சக்தியாக உயிர் சக்தியுடன் ஒன்றி… நாபிக் கமலம் தொட்டு ஓங்கி உயர் சக்தியாகப் பிசிரற்று வெளிப்பட… சங்கு நீர் அமிலக் குணம் நாம் விண்ணுலகம் செல்ல வழி காட்டும்…! சூட்சமப் பொருளை மனதில் கொள்க…!
1.நக்கீரனை எண்ணி சங்கின் குணத்தைப் பெற வேண்டும்.
2.அந்தச் சங்கு அமில குணத்துடன் ஒன்ற வேண்டும்.
3.நெற்றிப் பொட்டில் உயிர் இருக்கும் இடத்தில் குறுகுறுப்பை உண்டாக்கும்.

ஆலயத்தையும் கோபுரத்தையும் நிர்மாணித்த “ஸ்தபதியர்கள்”

 

1.ஒரு உணர்வின் தன்மை கொண்டு ஒரு கோளின் உணர்வை அதிகரித்து இந்த மனித உடலில் வாழ்ந்தால்
2.அந்தக் கோளுக்கு மாற்றாக நல்ல உணர்வின் தன்மையை இணைந்து வாழும் உணர்வின் கணக்கிற்கொப்ப
3.நட்சத்திரங்களின் திசை நோக்கி எந்தக் கோள்களுக்கும் சிக்காது அதனின் உணர்வின் நேர்பார்வையில்
4.சூரியனின் ஒளிக்கதிர்கள் துருவ நட்சத்திரத்துடன் இணைப்பு வரும் பகுதியை இணைத்து வைத்தார்கள்.

அந்த இணைப்பின் தன்மை கொண்டு… துருவ நட்சத்திரத்தின் இணைப்பும் மற்ற கோள்களின் இணைப்பும்… துருவப் பகுதியில் கவரும் அதற்கு நேராக ஆலயத்தை அமைத்து தெய்வீகப் பண்பை நாம் ஒவ்வொருவரும் பெறவேண்டும் என்று எண்ணும்படி அன்றைய ஞானியர்கள் செய்தார்கள்.

ஏனென்றால்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பையும்…
2.மற்ற வெள்ளிக் கோளின் உணர்வுகளையும் கார்த்திகை நட்சத்திரத்தின் உணர்வுகளையும் இரண்டாகச் சேர்க்கும் நிலை வரும்போது
3.இதன் உணர்வின் ஒளிக்கற்றைகள் அது பிரிவடைந்து
4.அந்த ஆலயத்தின் அமைப்பிற்குள் சூரியனுடைய ஒளி நேர் பார்வைக்கு வரும் பொழுது அதனை மாற்றி அமைத்து
5.அது எதனைக் கவர்கிறது என்பதை அளவுகோலிட்டுக் கால் மாகாணி என்று முந்தைய கணக்கிடும் தன்மைகள் வந்தது.

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு கால்குலேட்டர் போன்ற சாதனங்களை அமைத்து மனிதன் சிந்தித்து நுகரும் தன்மைக்கு இல்லாது கொண்டு வந்து விட்டனர்.

கால்குலேட்டர் என்ற உணர்வைப் பதிவு செய்து இதன் மேல் ஞாபகப்படுத்தும் நிலையில் அது எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற உணர்வின் கதிர் கொண்டு ஒன்று ஒன்றுடன் மோதும் பொழுது ஒன்றின் உணர்வுகள் எப்படிக் கணக்கிடுகிறது… என்ற நிலையில் இன்று கணக்கிடுகின்றார்கள்.

இந்த உணர்வின் தன்மை சென்றவன் அதிலேதான் நாட்டம் கொண்டு செல்கின்றானே தவிர மெய் ஞானிகள் உணர்வின் நிலையும் பிரபஞ்சத்தின் உணர்வின் ஆற்றலையோ கணக்கிடும் முறைப்படுத்தி அவன் உலகப் பிரபஞ்சத்துடன் இயக்கும் நிலை காலத்தால் மறைந்து விட்டது… விஞ்ஞான அறிவு ஓங்கி விட்டது…!

நம் உயிர் எலக்ட்ரிக்… சுவாசித்ததை நம் உடலுக்குள் எலக்ட்ரானிக்காக மாற்றுகிறது. மாற்றிய உணர்வின் தன்மை கொண்டு அதை நாம் மீண்டும் எண்ணுவோம் என்றால்
1.நமது உணர்வுக்கும் நுகர்ந்த உணர்வுக்கும் எதிர்நிலை வரப்படும் பொழுது
2.அதன் உணர்வின் அறிவைப் பிரித்துக் காட்டும் நிலைகள் வருகின்றது.

அதே சமயத்தில் கம்ப்யூட்டரில் எதிர் அலைகளைப் பதிவாக்கினால் அதனை உடனே மாற்றி அமைக்கும் சக்தி கொண்டு வருகின்றனர்… கணக்கை மாற்றி விடுகின்றனர் (COMPUTER PROTECTION).

அதே போலத் தான் நமது உயிரின் தன்மை எலெக்ட்ரிக் எலெக்ட்ரான் என்ற நிலை வரப்படும் பொழுது துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு அதை நாம் சீராக்கி நல்லதாக மாற்றிட முடியும்.

இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கங்கள் மாற்றம் ஆகும் பொழுது அதற்குத்தக்க ஒரு நல்ல குணத்தின் உணர்வுகள் பிறிதொரு எதிர் நிலையில் இருந்து உருவாக்கப்பட்ட நிலைகளை ஒரு தெய்வத்திற்குக் காரணப் பெயராக வைத்து… அந்தத் திசையை நோக்கி நாம் எண்ணும் பொழுது… வெள்ளி கோளின் உணர்வுகளும் கார்த்திகை நட்சத்திரத்தின் உணர்வுகளும் இதைப் போன்ற மற்ற கோள்களின் நிலைகளை இணைந்து அந்த அந்த உணர்வின் தன்மை மூன்றும் ஒன்றாகச் சேர்க்கும் அத்தகைய நல்ல உணர்வுகளாக உருவாகிப் பரவும் போது அந்தத் திசை வழியாக நம்மை நுகரும்படி வைப்பார்கள் அந்த ஆலயத்திலே.

1.அந்த உணர்வுகள் சூரியனால் கவரப்பட்டுப் பரவி வரும் திசையில் நாம் உற்று நோக்கும் பொழுது
2.அந்த உயர்ந்த குணத்தின் உணர்வுகளை நமக்குள் கிடைக்கும்படி வைத்தார்கள் ஞானிகள்.

இதுகள் எல்லாம் வானியல் சாஸ்திரம் என்ற நிலையில் கடந்த காலத்தில் இயற்கையின் உண்மைகளை அறிந்து அந்த உணர்வைத் தனக்குள் பதிவு செய்து கொண்டு மனக்கணக்காக வைத்துக் கணக்கிட்டனர்.

அந்த மனக்கணக்கு கொண்டு தெளிவாக்கி… தெளிந்த உணர்வு கொண்டு செயலாக்கி… அதன் வழி அந்த வான இயலின் உணர்வின் தன்மைக்கொப்ப ஆலயங்களையும் கோபுரங்களையும் அமைத்தனர்.

1.அவர்களை “ஸ்தபதியர்கள்…” என்று சொல்வார்கள்.
2.இப்படிக் கணக்கிட்டுச் செயல்படுத்திய உலக நிலைகளில் பெருங்கொண்ட மெய் ஞானிகளாக அன்று இருந்தனர்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று கல்விக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம். கல்வியை வளர்க்கின்றோம். கல்வியை வளர்த்துக் கொண்டாலும் இந்த உடல் இச்சைக்குச் செயல்படுவோர் சிலர் செய்யும் தவறோ ஏராளமானது..!

டாக்டர் படிப்போ மற்றதற்கோ மேற் படிப்புக்குச் செல்லும் போது கல்லூரி நுழை வாயிலிலேயே (கல்லூரிக்குள்) உள்ளே வந்த பிறகு கெட்ட வழியில் எப்படியெல்லாம் தவறு செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்கிறார்கள்

“RAGGING…” என்ற முறை கேடான நிலை நடக்கிறது.

அரசாங்கமும் பார்த்துக் கொண்டு தான் உள்ளது. அந்தப் பள்ளியோ.., கல்லூரியோ… அதை நடத்துபவர்களும் பார்த்துக் கொண்டு தான் உள்ளனர்.

உயர்ந்த படிப்புக்குச் செல்பவரையும் தவறு செய்யும் உணர்ச்சியை ஊட்டி அந்தத் தவறு செய்பவனாக மாற்றி நாட்டைக் காக்கும் நிலையில் இல்லாமல் தவறு செய்து வாழும் உணர்வாக முறை கேடான நிலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

கல்வி கற்றுத் தர வேண்டிய இடத்தில் தவறு செய்வதை உருவாக்கும் நிலையாக நடப்பதைப் பற்றிச் சிந்திப்பார் யாரும் இல்லை.

இந்த உணர்வின் தன்மை பெருகி வரும் இந்த காலத்தில் நாம் சிந்திப்பது எப்போது..? சிந்தனையுடன் தீமைகளை அகற்றுவது எப்போது…?

இப்படிப்பட்ட தீமையான உணர்வுகள் பரவிக் கொண்டு வருகிறது. இந்தக் காற்று மண்டலமும் நச்சுத் தன்மையாக ஆகிக் கொண்டே வருகிறது. இதிலிருந்து நாம் மீள வேண்டுமா… இல்லையா…?

எப்படி மீட்பது..?

ஆயிரம் தான் யாம் சொன்னாலும் கேட்கும் போது…, சாமி (ஞானகுரு) நன்றாகச் சொல்கிறார் என்கிறார்கள். நன்றாக இருந்தது என்று தான் சொல்கிறார்கள்.

அடுத்தாற் போல் வாழ்க்கையில் சந்திக்கும் போது யாராவது வெறுப்பாகப் பேசினால் போதும்.
1.பார்… சாமி நல்லதைச் சொல்கிறார்… ஆனால் இவனைப் பார்..!
2.நான் ஒன்றுமே செய்யவில்லை…! என்னை எப்படித் திட்டுகிறான்…! என்று
3.நல்லதை விட்டு விட்டு அதைப் பிடித்துக் கொள்வார்கள்.

கடையில் கடனுக்காகச் சரக்கைக் கேட்பார். அவர் கொடுக்கவில்லை என்றால் உடனே அவர் அந்தச் சரக்கெல்லாம் “மோசம்…” என்பார்…!

“கடன் இல்லை…” என்று சொன்னதற்காக இப்படி எல்லாம் நடக்கிறது.

இதைப் போன்று எத்தனையோ நடக்கின்றது. பிறர் செய்யும் தீமையை நுகரும் போது தீமையான நினைவுகளே நமக்குள் வருகிறது.

1.எந்தச் சாமியைப் பார்த்து… நாம் என்ன செய்வது…?
2.என்ன தியானம் பண்ணி… என்ன செய்வது…?
3.எந்தக் கடவுளைப் பார்த்து… என்ன பண்ணுவது…? என்று சொல்ல ஆரம்பித்து விடுகின்றார்கள்.

அதனால் தான் கோவிலில் மனித உடலைப் போல் சிலைகளை வைத்து அந்தத் தெய்வத்திற்குப்
1.பாலாபிஷேகம் செய்கிறார்கள்
2.தேனாபிஷேகம் செய்கிறார்கள்
3.சந்தன அபிஷேகம் செய்கிறார்கள்
4.நன்னீர் விட்டுச் சுத்தப்படுத்துகிறார்கள்
5.பன்னீரை விட்டுச் சுத்தப்படுத்துகிறார்கள்

எதற்காக அந்தச் சிலைக்கு இதையெல்லாம் செய்கிறார்கள்…?

பாலாபிஷேகம் செய்கிறர்கள். நாம் அதை வேடிக்கை பார்க்கிறோம் அவ்வளவுதான். ஏன்…? ஏதற்கு…! என்று எண்ணுவதில்லை.

பாலாபிஷேகம் தேனாபிஷேகம் செய்வதைக் கண்களால் பார்க்கும் போது எதை எண்ண வேண்டும்…? என்று ஞானிகள் காட்டியதை நாம் அறிய வேண்டும்.

1.பாலைப் போன்ற மணம் நாங்கள் பெற வேண்டும்.
2.மகிழந்து வாழும் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
3.தேனைப் போன்று சுவையான நிலைகள் பெற வேண்டும்.
4.கனியைப் போன்று சுவையான சொல்லும் செயலும் பெற வேண்டும்.
5.அந்த அருள் சக்திகள் எங்கள் உடலில் படர வேண்டும்,
6.எங்கள் குடும்பத்தில் படர வேண்டும்,
7.கோவிலுக்கு வரம் குடும்பமெல்லாம் அந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணி அந்த உணர்வுகளைச் சுவாசிக்க வேண்டும்

எத்தனை பேர் நாம் இப்படி நினைக்கிறோம்…?

பாலபிஷேகம் தேனாபிஷேகம் செய்து நல்ல ஒழுக்கத்தை நமக்குள் சுவாசிக்கச் செய்வதற்காக அவ்வாறு வைத்துள்ளார்கள் ஞானிகள். கோவிலுக்குச் சென்றால் இவ்வாறு நாம் நினைக்கிறோமா…?

எலும்புக்கூடு(ம்) ஔஷதம் – ஈஸ்வரபட்டர்

பெண்கள் அணியும் கால் சிலம்பு ஆடவர் கற்பு நெறி காக்கும் கவசம். பெண்கள் பூப்படையும் பிராயத்தில் கால் சிலம்பை அணிவித்துப் பெண்களின் கற்புக்குப் பாதுகாப்பு வளையமிட்ட செயல் எல்லாம் பண்டைய காலம் முதல் வழி வந்த நற் குண நிலைகள்.

ஆண்களின் கற்புக்குப் பாதுகாப்பு அரண் அது தான்..!
1.பூப்படைந்த பெண்மணிகள் வீதி வழி செல்லும் பொழுது – எதிர்படும் வீரமகன்
2.சிலம்பொலியைக் கேட்டதுமே விலகிடுவான்
3.அங்கே கற்பு நெறி காக்கின்றது.

ஆனால் வீரத்தில் விவேகத்தைக் கலந்து வாழ்ந்த மக்கள் மனம் இன்று அனைத்துமே மாறிவிட்டது.

திருமணம் முடிவுற்று நல்லறத்தின் நல்வழியில் கால் சிலம்பு கழன்றுவிடும். பூப்படைந்த பெண்கள் அணியும் நகை கணவனால் காவலனாகக் காக்கும் நிலை வந்துவிட்டால் விலக்கிடுவான் சிலம்பணிய.

கண்ணகின் வாழ்க்கையில் சிலம்பை அணிவித்தான் மாசாத்துவான். பெண்களுக்கு அணிவிப்பதோ பொன்.. வெள்ளி நகை தானே. காலத்தின் செயல் இன்று போல் இருந்திடுமோ…? என்றெல்லாம் எண்ணிட்ட மாசாத்துவான் மாணிக்கமாக அளித்துவிட்டான்.

இல்லறத்தில் இரு மனங்கள் கலக்கும் வைபோகமாகக் கோவலனும் கண்ணகியும் நறுமணங்கள் கலந்தது போல் வாழ்வாங்கு அங்கே வாழ்ந்து சிறப்பித்தனர்.

ஆனால் அதன் பின் ஊர் விட்டு ஊர் மாறிப் பெயர் மாற்றிச் செல்லும் பொழுது “தலை போகும்…!” என்றெல்லாம் மெய்யறிவு பெற்றிருந்தால் கோவலன் விதி வழி செல்வானா…?

உடல் வேறு தலை வேறு ஆன நிலையைக் கண்டதுமே எலும்புக்கூடு மூலிகை அகப்பட்டால் எலும்பின் குணம் கூடிவிடுமே. கண்ணகிதான் அதைப் பெற்றாளா..?

1.கண்ணகியின் கற்பு நிலை கொதித்தெழுந்த செயற்திறத்தால் எலும்புக்கூடு கிடைத்ததா…?
2.சூட்சமப் பொருள் பல உண்டு…!

கண்ணகியின் சாபமுண்டு எலும்புக்கூட்டு மூலிகைக்கு…! எலும்புக்கூட்டின் சாறுபட்டவுடன் அறுபட்ட உடல் கூடிவிடும். அந்த மூலிகை கிடைக்குமா…?

பாறை மேல் படர்ந்து வரும். நீரில்லாமல் உயிர் வாழும். தண்டு அதன் நிறம் சிவந்து கணுவிலோர் இலையும் பசுமை காட்டும். அந்த எலும்புக்கூடு (ஔஷதங்கள்) கிடைத்து விட்டால் எண்ணிடுவார்கள் பணம் காசை…!
1.எலும்புக்கூடு எதற்கு என்ற சூட்சமம் பின் சொல்கிறேன். (ஈஸ்வரபட்டர்)
2.எலும்புக்கூடு கிடைக்க வேண்டும் என்று மனதில் எண்ணிக் கொள்ளுங்கள்…!

ஆலயத்திற்குள் நுழைந்தாலே உயர்ந்த பண்புகளைப் பெறும் வண்ணம் தான் ஆலயங்களை நம் முன்னோர் அமைத்துள்ளனர்

 

மனிதனாக உருப்பெற்ற நிலையில் நாம் எத்தகைய தீமைகளையும் தடுத்து நிறுத்தும் சக்தி பெற்றவர்கள் என்பதை அக்கால ஞானிகள் காட்டிய அருள் வழியில்உணர்தல் வேண்டும்.

ஏனென்றால்… இந்த உயிர் இந்த உடலை வளர்த்த பின்
1.பல கோடித் தீமைகளிலிருந்து விடுபட்டுத் தீமையிலிருந்து விடுபடும் உணர்வுகளை வளர்த்து
2.அதற்கொப்ப உறுப்புகள் உருவாகி… உணர்வுகள் உருவாகி… உணர்ச்சிகள் உருவாகி… எண்ணங்கள் உருவாகி…
3.அதன் வழி நாம் நம்மைக் காக்கும் உணர்வுகள் ஆற்றல் பெற்றது.

ஆனாலும் இன்றைய காலகட்டத்தில் விஞ்ஞான அறிவால் நமது பிரபஞ்சத்தில் சிந்திக்கும் தன்மை இழக்கப்பட்டுக் கொண்டிருகின்றது. இதிலிருந்து தப்ப வேண்டும் என்பதற்குத்தான் இதை உணர்த்துகின்றோம் (ஞானகுரு).

முந்தைய நிலைகளில் வாழ்ந்த நம் முன்னோர்கள் இயற்கையின் உணர்வை நுகர்ந்து அதன் செயலாக்கங்கள் எவ்வாறு…? என்று உணர்ந்தவர்கள். அவர்கள் தான் பெருக்கல் வாய்ப்பாடு கழித்தல் வாய்ப்பாடு எல்லாம் கொண்டு வந்தனர்.
1.அந்தப் பதிவால்… தன் நினைவு கொண்டு
2.ஒரு நொடிக்குள் கூட கணக்குப் பார்க்கும் திறன் அவர்களிடம் இருந்தது.

ஆனால் இன்று எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலை கொண்டு ஒன்றை மாற்றி ஒன்றுடன் ஒன்று இணைத்து ஒரு நொடிக்குள் அதை அறிந்திடும் அறிவாகக் கம்ப்யூட்டர் என்றும் கால்குலேட்டர் என்றும் வருகின்றது.

முந்தைய கணக்கின் நிலைகளை எடுத்துக் கொண்டால் கால்… மாகாணி என்றெல்லாம் கொடுத்தார்கள் அத்தகைய மெய் ஞானிகள்
1.ஒரு கோயிலின் தன்மையையோ அல்லது ஒரு கோபுரத்தின் தன்மையையோ ஒரு கட்டிடத்தின் தன்மையோ அமைக்க வேண்டும் என்றால்
2.துரித நிலை கொண்டு அந்தக் கோபுர கட்டிட அமைப்பையும் (PLAN) அதன் உண்மையை அறிந்துணர்ந்து
3.அவருடைய மெய் ஞான அறிவு கொண்டு அழகாக வடிவமைத்து நிர்மாணித்தனர்.

வான இயல் சாஸ்திரத்தை உணர்ந்து சூரியனும் மற்ற கோள்களும் மற்ற மண்டலங்களும் எவ்வாறு வானிலே இயக்குகிறது…? என்றும் அதிலே சில கோள்களின் தீமைகள் இங்கே இவர்கள் அமைத்த அந்த ஆலயத்தில் புகாத வண்ணம் அமைத்து… உயர்ந்த குணங்களுக்குத் தக்க தெய்வ ஆலயங்களை அமைத்தனர்.

அந்த ஆலயத்தில்… நல்ல உணர்வுகளை எடுக்கும் நல்ல குணங்களின் தன்மையை தெய்வச் சிலைகளை வைத்து உருவகப்படுத்தினார்கள்
1.தீமையை நீக்கும் உணர்வு கொண்டு.. அந்த எண்ணத்துடன் நாம் அங்கே சென்றோம் என்றால்
2.தீமைகளை நுகராது அந்தத் தெய்வீக உணர்வை நுகர்ந்து நமக்குள் வளர்த்துக் கொள்ள முடியும்.

அதன் மூலம் பிறிதொரு கோளின் தன்மையோ மற்ற எதிர் நிலையான நட்சத்திரங்களின் உணர்வுகளையோ கவராத வண்ணம் அந்தத் திசையை நோக்கி ஆலய அமைப்பை (கோபுரம்) ஏற்படுத்தினார்கள். சூரியனின் ஒளிக்கதிர்கள் இதன் மேல் படும்படி செய்து (சந்துகள் விட்டிருப்பார்கள்) உயர்ந்த உணர்வின் தன்மையை நாம் எப்படிப் பெற வேண்டும் என்றும் காட்டினார்கள்.

1.27 நட்சத்திரங்களின் உணர்வையும் 12 ராசிகளாகப் பிரிக்கப்பட்டு
2.அந்த ராசியின் திசை கொண்டு மற்ற மூன்றின் தன்மை எந்தெந்தக் கோள்கள் சேர்கின்றதோ
3.அதன் வழி ஒரு குணத்தின் தன்மை – இணைந்து வாழும் தன்மையாக அந்த அமைப்பின் தன்மை கொண்டு தான்
4.அன்று மாகாணி என்று வைத்து அதிலே கூட்டல் கழித்தல் என்று கணக்கின் நிலைகள் கொண்டு
5.தெளிவாக எடுத்தனர் கணக்கிட்டனர்… அதன் வழி அமைத்தனர்.

அவர்கள் ஆலயங்களில் உணர்த்தப்பட்ட உயர்ந்த சக்திகளை நாம் நுகரப்படும் பொழுது நம் வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்கிட முடியும்.

ஒவ்வொரு ஆலயங்களுக்கும் இந்த எண்ணத்தின் அடிப்படையில் நீங்கள் சென்றால் அந்த ஆலய அமைப்பில் சித்தரிக்கப்படுள்ள தெய்வ குணங்களை வளர்த்துப் பகைமை உணர்வுகளை அகற்ற முடியும்.

1.மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்த நிலையில்
2.மகிழ்ந்து வாழும் சக்திகளை அதன் மூலம் ஒவ்வொருவரும் பெற வேண்டும் பெற முடியும் என்ற
3.மெய் வழிகளை உணர்த்தினார்கள் அக்கால மெய் ஞானிகள்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பால் இருக்கிறது என்றால் அதில் ஒரு துளி பட்டால் நஞ்சாக மாறுகின்றது. அந்தப் பாலில் ஆயிரம் குடம் பாலை விட்டால் நஞ்சின் தன்மை குறைந்து அந்தப் பாலுக்கே ஊட்டச் சக்தி கொடுக்கின்றது.

அருள் ஞானிகள் என்பவர்கள் பல ஆயிரம் குடம் பாலைச் (அந்த ஆற்றல்மிக்க சக்திகளை) சம்பாரித்தவர்கள். எத்தகைய கடுமையான நஞ்சினையும் நீக்கிடும் நிலை பெற்றவர்கள்.

எங்கே சென்றாலும் அங்கே மகரிஷிகளின் அருள் சக்தியால் எல்லாம் நலமாக இருக்க வேண்டும் என்று தியானியுங்கள். இதைத்தான் வாழ்க்கையே தியானம் என்பது.

இதை நீங்கள் கடைப்பிடித்தீர்கள் என்றால் எல்லாமே உங்களுக்கு நன்றாக இருக்கும்.

எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் இதே மாதிரி எண்ணிப் பழகுங்கள். விநாயகரைப் பார்த்தவுடன் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா பெறவேண்டும் என்று எண்ணுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பம் முழுவதும் படரவேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தொழில் வளம் பெருக வேண்டும் என்று எண்ணுங்கள்.

வெளியிலே ஏதாவது சலசலப்போ சங்கடமோ இருந்தாலும் யார் மீது வெறுப்பாக இருந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெறவேண்டும் என்று எண்ணி எடுத்து அந்த உணர்வை அவர்களுக்குப் பாய்ச்சுங்கள்.
1.அவர்கள் அறியாத இருளிலிருந்து விடுபட வேண்டும்.
2.எங்களுக்குள் அந்தச் சகோதர ஒற்றுமை வளர வேண்டும் என்று எண்ணுங்கள்.
3.பகைமைகள் நீங்கும்.
4.நமக்குள் அந்தத் தீய வினை ரொம்ப நாளைக்கு நீடிக்காது.
5.பகைமை ஊட்டும் உணர்வுகள் நமக்குள் குறைந்து கொண்டே வரும்.

இதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

பகைமை நீக்க வேண்டும் என்று அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைக் கூட்டும் பொழுது அந்த அருள் ஞானிகளின் மேல் பற்று அதிகமாகின்றது.

அருள் ஞானிகளின் மேல் நாம் பற்றை வளர்த்துக் கொண்டால் அதனின் ஆற்றலாக அந்த ஞானிகளின் வழிகளிலேயே நம்மை அழைத்துச் செல்லும்.

ஆனால் இந்த உலக வாழ்க்கையில் ஏற்படும் நிலைகளில் அவன் இப்படிச் செய்கிறான். இவன் எனக்குத் தொல்லை கொடுக்கின்றான். என் பையன் சொன்னபடியே கேட்க மாட்டேன் என்கிறான் என்று இந்தப் பற்றை நாம் எடுத்துக் கொண்டால் இங்கே இன்னொரு உடலுக்குள் தான் போக முடியும்.

அங்கே சென்று அவர்கள் படும் கஷ்டங்களையும் வேதனைகளை நாமும் எடுத்து அந்த உடலிலும் வேதனையை வளர்த்து அடுத்தாற்போல் ஆடாகவோ மாடாகவோ தான் பிறக்க நேரும்.

அதனால் இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபடுவதற்காக உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் அந்த அருள் ஞானிகளின் ஆற்றல்களைப் பெறவேண்டும் என்று தான் விநாயகர் தத்துவத்தில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

மனிதர்கள் உயர்ந்த நிலை பெறவே காவியங்கள் படைக்கப்பட்டது – ஈஸ்வரபட்டர்

மனிதனின் வாழ்க்கையில் வரும் சங்கட குணங்களை விலக்கி மனப் பக்குவம் பெற அறிய வேண்டிய ஞானத்தின் செயல் திறத்தைத் தான் இராமாயணக் காவியத்தின் மூலம் வான்மீகி மாமகரிஷி காட்டினார்.

இதைக் கம்பனும் அறிந்தாலும் மூலத்தின் பொருள் விளக்கக் கம்பரசம் (கம்பராமாயணம்) செய்தாலும் அதிலே நவரசத்தின் பொருளைக் காட்டி நர்த்தனமாக விளையாடிய கவிச் சொல்லின் சிறப்பில் இன்றைய மனிதன் சுவைத்திட்ட சுவை என்ன..?
1.வெறும் சிருங்கார ரசத்தைத்தான் சுவைத்தான்…!
2.சிறப்பின் ரசம் அறிந்தானா…?

காரணத்தில் காரியத்தை அறிய வைத்த கம்பனும் அறியவொண்ணா மறை பொருள் உண்டு.

அனுபவம் என்ற பாதையிலே வான்மீகி மகரிஷி அறிந்து சொன்ன சொல் “ஒளி காந்தம்…” உருவாக்கிய காவியம் தான் அந்த இராமாயணம்.

மனிதனின் வாழ்க்கையில் எண்ணங்களின் எதிர் மோதல்களினால் ஏற்படும் துன்பத்திலிருந்து விடுபடும் பக்குவ மனப்பாங்கைப் பெறுவதற்காக நிகழப் பெற்ற “அனுபவ ஔஷத நெறியின் செயல் விளக்கம் தான் இராமாயணக் காவியம்…!”

1.மனிதன் பெறும் பெற வேண்டிய உயர் நிலை என்ன…? என்பது பற்றி
2.அவன் மனதில் தோன்றும் எண்ணங்களை எல்லாம் சலிக்கும் (அலசி எடுக்கும்) தன்மையாக
3.ஓர் சல்லடையை வைத்துச் சலிப்பது போல் – மனிதன் பெற வேண்டிய வழி வகைகளை அறிந்திடச் செய்யும் “சூட்சம காவியமே இராமாயணம்…!”

எண்ணங்களின் அலை ஈர்ப்புச் சமைப்பில் காந்தமாகிக் காத்திட்ட சக்தியில் வான்மீகி அதைக் கொடுத்ததிலும் ஓர் பக்குவம் உண்டு.

வானை நோக்கி ஏ(ங்)கி உயர்ந்த சக்திகளை எடுதத அந்த வான்மீகி மாமகரிஷி கண்டுணர்ந்த வான இயல் சூட்சமத்தின் தெளிவை நாமும் கண்டுணர்ந்து நம் மனம் தெளிதல் வேண்டும்.

உயிரின செல்களைக் கலந்து விஞ்ஞானி ரூபமாற்றம் செய்வது போல் மெய் ஞானியின் உணர்வை எடுத்து நாம் ஒளியின் ரூபமாக முடியும்

 

உதாரணமாக… ஒரு தீமையான உணர்வை நுகரும் பொழுது அதனால் வெறுப்பும் வேதனையும் படுகின்றோம். அத்தகைய உணர்வுகள் நமக்குள் அணுவின் தன்மையாக உடலுக்குள் உருவாகாது தடைப்படுத்த வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்ற உணர்வை நம் இரத்தங்களில் கலந்து விட்டால் அதைத் தடைப்படுத்த முடியும்.
1.சமையல் செய்யும் போது பல பொருள்களைச் சேர்த்து
2.நாம் எப்படிச் சுவைமிக்கதாக அதை உருவாக்குகின்றோமோ
3.அதைப் போல அருள் உணர்வைக் கலந்து சுவையாக ஆக்க முடியும்.

ஏனென்றால் ஒவ்வொரு நாளும் நம் வாழ்க்கையில் பலருடைய எண்ணங்களையும்… பலருடைய செயல்களையும்… பலருடைய வேதனைகளையும்… நோயாளிகளையும் மற்றவர்களையும்… சந்திக்க நேர்கின்றது. அந்த உணர்வுகளை எல்லாம் நுகர்ந்து தான் (சுவாசித்து) அறிகின்றோம்.

ஆனாலும் காரம் புளிப்பு உப்பு கசப்பு துவர்ப்பு என்று பல சுவைகளை ஒன்றாக்கிச் சுவைமிக்கதாக எப்படி உருவாக்குகின்றோமோ அதைப் போல வெறுப்படையும் நிலையோ சலிப்படையும் நிலையோ சங்கடப்படும் நிலையோ வேதனைப்படும் நிலையோ வந்தாலும்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று இதனை அதிகரித்து
2.அந்த வெறுப்படையும் உணர்வுகள் வளராது தடுத்து
3.சமப்படுத்தும் உணர்வாக மகிழ்ச்சியூட்டும் உணர்வாக ஒளியான அணுவாக நமக்குள் உருவாக்குதல் வேண்டும்.

விஞ்ஞான அறிவு கொண்டு இன்று பல உயிரினங்களின் ரூபங்களை மாற்றுகின்றார்கள். உயிரினங்களின் செல்களை எடுத்து அதை மற்றொன்றுடன் இணைத்துப் புதுவிதமாக உருமாற்றுகின்றார்கள்.

உதாரணமாக மூன்று விதமான ஆட்டினங்களை… அந்த மூன்று விதமான உணர்வின் செல்களை எடுத்துப் புது விதமான உருவின் தன்மை கொண்ட ஒரு ஆடாக உருவாக்குகின்றார்கள்.

இதைப் போல தான் ஒவ்வொரு மனிதனின் உடலில் விளையும் தீமையின் உணர்வுகளும்… அவர்கள் சொல்லால் வெளிப்படும் அந்த உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது அவரின் தீமையின் தன்மைகள் நமக்குள்ளும் உருவாகின்றது.

ஆனால் மகரிஷிகளோ தீமைகளை வென்று உணர்வினை ஒளியாகப் பெற்றவர்கள்.

முதலில் சொன்ன மாதிரி… பலருடைய எண்ணங்களையும் பல பல தீமை உருவாக்கும் உணர்வின் தன்மைகளை நாம் நுகர்ந்தறிந்தாலும் தீமையை வென்ற அருள் மகரிஷிகளின் உணர்வை அதனுடன் இணைத்தோம் என்றால் அதை எல்லாம் நல்லதாக மாற்றிக் கொள்ள முடியும்.

ஆகவே…
1.இந்த வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நமக்குள் தீமைகள் வராது
2.அந்த அருள் மகரிஷி உணர்வை நம் உடலில் இணைத்து இணைத்து இணைத்து
3.அந்த ஒளியின் சரீரமாக மாற்றுதல் வேண்டும்.

பல விதமான உயிரினங்கள் அது இயற்கையில் விளைந்ததை விஞ்ஞானிகள் ஒன்றுடன் ஒன்று கலக்கப்பட்டுச் செயற்கையில் உருவாக்கச் செய்த எத்தனையோ நாய் வகைகளையும் மாடு வகைகளையும் இன்று பார்க்கின்றோம்.

நாய்களை எடுத்துக் கொண்டால் மனித உருக்கொண்ட நிலைகளாகக் கூட மாற்றுகின்றார்கள்.

மனிதனை உருவாக்கும் விந்தின் செல்களை எடுத்து மற்ற நாய்களின் செல்களுடன் சேர்த்து பல பல உணர்வுடன் இணைக்கப்படும் போது இதனின் அளவுகோல் வரப்படும் போது மனித முகத்தைப் போன்றே நாய்கள் வருகின்றது.

குரங்குகளின் அணு செல்களைப் பிரித்து எடுத்து அதை மற்ற நாய் இனங்களின் உணர்வுகளிலும் கலந்து… குரங்கு எப்படித் தன்னுடைய விடாப்பிடியாக அடம் பிடிக்கின்றதோ அது போன்ற உணர்வின் குணங்களைப் பெருக்கும் ரூபமாகவும் நாய்களை மாற்றும் தன்மையை மனிதன் செய்கின்றான் தன் ஆறாவது அறிவால்…!

ஆனால் அன்று வாழ்ந்த அகஸ்தியனோ விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் வலுப்படுத்தி வாழ்க்கையில் வரும் நஞ்சினை வென்றான். அந்த உணர்வினை அகஸ்தியனும் அவன் மனைவியும் இருவரும் எடுத்து ஒருவருக்கொருவர் அந்த உயர்ந்த மனதைப் பெற வேண்டும் என்று இணைத்து வாழ்ந்தனர்.

இவர் கண்ட உண்மையும் அவர் கண்ட உண்மையும் அங்கே இரு மனமும் ஒன்றாகி ஒன்றின் நிலைபெறும் போது
1.கணவன் உயர்ந்த நிலை பெறவேண்டும் என்றும்
2.மனைவி உயர்ந்த நிலை பெற வேண்டும் என்றும்
3.விண்ணின் ஆற்றலை நுகர்ந்து அந்த நஞ்சினை ஒடுக்கிடும் உணர்வுகளைப் பெற்று
4.இரு உணர்வும் ஒன்றென இணைந்து உடலில் ஒளியான அணுக்களைப் பெருக்கிப் பெருக்கி
5.எதனை உற்றுப் பார்த்தனரோ அந்த உணர்வின் தன்மையை வளர்த்து
6.உடலை விட்டுச் சென்றபின் பூமியின் துருவப் பகுதியில் இன்றும் அவர்கள் துருவ நட்சத்திரமாக
7.நமது பூமிக்குள் வரும் நஞ்சினை ஒடுக்கி ஒளிச் சுடராக மாற்றிக் கொண்டே வருகின்றனர்
8.அதனின்று வரும் நிலையை நாம் நுகர்ந்து பழக வேண்டும்…!

இந்த மனித வாழ்க்கையில் நஞ்சான செயல்களையும் வெறுக்கும் உணர்வுகளையும் வேதனைப்படும் உணர்வுகளையும் எப்பொழுது நுகர்ந்தாலும் அடுத்த கணம் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை அதனுடன் இணைத்து மாற்றி அமைத்திட வேண்டும்…!

உங்களால் முடியும்… உங்களை நீங்கள் நம்புங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஆலயங்களில் தெய்வச் சிலைக்கு முன் படைத்திருக்கும் மலரோ மற்ற உணவாகப் படைத்திருக்கும் பொருள்களோ நல்ல நறுமணங்களைக் கமழச் செய்கின்றது
1.நறுமணமான நற்சுவையின் சத்துக்களை அங்கே படைத்து
2.அந்தத் தெய்வத்திற்கு அபிஷேகிக்கச் செய்து
3.அந்த உணர்வின் நிலைகளை அங்கே பொருதிக் காட்டி
4.அபிஷேகிக்கும் போது நம்மைக் கண்ணுற்றுப் பார்க்கச் செய்கின்றார்கள் ஞானிகள்.

சந்தனத்தை போன்ற மணம் பெறவேண்டும் என்று நாம் ஏங்கினால் அந்த மணத்தின் உணர்வலைகள் நம் உயிருக்குள் அபிஷேகம் ஆகின்றது.

மலரின் மணம் பெறவேண்டும் என்று எண்ணும் பொழுது இந்த உணர்வின் தன்மை நம் உயிருக்குள் அபிஷேகம் ஆகின்றது.

பன்னீரைப் போன்ற நறுமணம் பெறவேண்டும் என்று எண்ணும் பொழுது அந்த உணர்வுகள் உயிருக்குக் கிடைக்கின்றது.

கனியைப் பார்க்கும் பொழுது கனியைப் போன்ற சுவையான நிலைகள் பெறவேண்டும் என்று வேண்டினால் நற்சுவையின் சத்து நம் உயிருக்குக் கிடைக்கின்றது.

அங்கே காட்டும் பொருள்கள் அனைத்தையும் கண்ணுற்றுப் பார்க்கப்படும் பொழுது அது அனைத்தும் “துவைதம்”. பொருளுக்குள் மறைந்த உணர்வின் சத்துகள் அனைத்தும் “அத்வைதம்.”

அந்தச் சூட்சும நிலையில் இருந்து (கண்களுக்குப் புலப்படாத சக்திகளிலிருந்து தான்) தான் இந்த மனித உடலைப் பெற்றோம். சுவைத்துப் பார்க்கும் பொழுது அந்தச் சுவையை அறிகின்றோம். நுகர்ந்து பார்க்கும் பொழுது அந்த மணத்தை அறிகின்றோம்.

நல்ல மணத்தைச் சுவாசிக்கும் பொழுதும் சுவையான பதார்த்தத்தை உட்கொள்ளும் பொழுதும் அந்தச் சுவையான நிலைகளும் நறுமணங்களும் உடலான சிவனுக்குள் சேர்கின்றது. அந்த மணமும் சுவையும் உயிரான ஈசனுக்கும் சேர்கின்றது.

சூட்சும நிலைகள் கொண்டு உடலின் தன்மை பெற்றதைத் துவைதம் என்று காட்டினாலும் “அத்வைதம் தான் துவைதம்…!” என்று ஆதிசங்கரர் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

சூட்சும நிலையில் உள்ள சக்திகளை உடலாக எவ்வாறு ஆக்கவேண்டும் என்ற நிலையைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

பாலாபிஷேகமும் தேன் அபிஷேகமும் கனி அபிஷேகமும் சிலைகளுக்குச் செய்தால் அது ஒரு பலனும் தராது.

1.அங்கே அபிஷேகமாகக் காட்டும் பொருளில் நீ பொருளைக் கண்டுணர்ந்து
2.எண்ணத்தால் (சூட்சுமம்) அந்த நறுமணங்களை நுகர்ந்து
3.உடலுக்குள் செலுத்தும் பொழுது உணர்வின் அலையாக உயிர் இயக்குகின்றது.
4.உயிரான ஈசனுக்கும் உடலான சிவனுக்கும் அப்பொழுது அபிஷேகம் ஆகின்றது.

அப்பொழுது அந்த உணர்வின் சத்துக்கள் அனைத்தும் உடலாகச் சிவமாக அமிர்தமாகச் சேர்கின்றது. நம் உடலுக்குள் மகிழ்ச்சியூட்டும் செயலாக அதை நாம் ஆக்கவேண்டும்.

இந்த மகிழ்ச்சி ஊட்டும் உணர்வு உடலாகும் பொழுது அந்த உணர்வின் எண்ணங்கள் நமக்குள் தோன்றி மகிழ்ச்சியூட்டும் செயலை நமக்குள் உருவாக்கும்.

ஒரு கனியை எடுத்துக் கொண்டால் அது நற் சுவையான மணங்களைக் கவர்ந்து… உறைந்து… அது இனிப்பான கனியாக உருவாகின்றது.

ஒரு மலரை எடுத்துக் கொண்டால் அது பல நறுமணங்களின் சத்தை நுகர்ந்து… உறைந்து… நற்பூவாக மலர்கின்றது.

பூக்களிலும் கனிகளிலும் வரும் உணர்வின் சத்தைத் தான் உயிரினங்கள் உணவாக எடுத்து அந்த மணத்தின் எண்ணத்தால் நறுமணத்தையே சுவாசிக்க வேண்டும் என்று எண்ணத்தைத் தனக்குள் வளர்த்து வளர்த்து அந்த உணர்வின் சத்துக்கள் தசையாகி உடலாக விளைகின்றது.

இப்படிப்பட்ட உணர்வின் சத்துக்களை வினையாகச் சேர்த்து வினைக்கு நாயகனாக மனிதனாக வந்துள்ளோம் என்ற நிலைகளை அறிவதற்குத் தான் எழுத்தறிவு இல்லாத அக்காலங்களில் மகா மகரிஷிகள் தான் கண்டுணர்ந்ததைக் காவியமாக வடித்து ஆலயங்களாக உருவாக்கினார்கள்.

1.உயர்ந்த குணங்களைக் கொண்டு நற்பணிகளைச் செய்யும் நிலையும்
2.கெட்டதை நீக்கி நல்லதை உருவாக்கும் நிலையும்
3.மனித உடலிலிருந்து வெளிப்படும் இந்த மணத்திற்குள்
4.(சூட்சுமத்தில்) அனைத்தும் அமைந்திருக்கின்றது என்று உரைத்தார்கள் ஞானிகள்.

காமதேனுவிடமிருந்து சக்தி பெறப் பழகிக் கொள்ள வேண்டும் – ஈஸ்வரபட்டர்

1.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்றுத் தன் உயிராத்மாவின் சக்தியை வலுக் கூட்ட வேண்டும் என்றால்
2.அந்த வீரிய எண்ணச் செயல் வளர்வதற்கே
2.வளர்ப்பின் வளர்ச்சியின் ஆகார அமில குணம் தேவை..!

ஒருமித்த எண்ணம் கொண்டு நம் உயிருடன் அதை ஒன்றச் செய்து இந்தத் தியான முறை வலுவினால் வளர்ச்சிப்படுத்தப் பெற்றுக் கொள்ள வேண்டிய ஆகாரம்…
1.அதாவது காமதேனு என்று மகரிஷிகள் சூட்சமமாக உணர்த்திய
2.அந்த “ஆகார நியமனம்” பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.

சூரிய மண்டலத்தின் சமைப்பின் ஒளிக் கதிர்களை வானுலகில் வரும் ஆகாய உயிரணுக்கள் எடுத்து அந்தப் பரவெளி சூட்சமத்தில் தங்களை வளர்த்துக் கொள்ளும் நிலையில் அந்த வீரிய உயிரணுக்களின் சக்தியை நாம் எடுக்கும் தியானத்தின் மூலம் ஈர்த்துப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நம் உயிரான்மாவின் சக்தியை மேன்மேலும் வளர்ச்சி கொள்ள வேண்டும் என்றால் பரவெளியில் உலவிக் கொண்டிருக்கும் இந்த உயிரணுவாகிய காமதேனுவின் பாலை ஆகாரமாகப் பெற்றிட வேண்டும் என்று சூட்சமப்படுத்தினார்கள் அன்றைய மகரிஷிகள்.
1.அந்த அமில ஆகாரத்தைப் பரிபூரணமாகப் பெற்று விட்டால்
2.சிருஷ்டியின் இரகசியம் தெரிந்துவிடும்…! என்றும் காட்டினார்கள்.

இதையே தான் உலக வழக்கப்படி… நினைத்த மாத்திரத்தில் இந்தச் சரீர வளர்ப்பிற்குக் காமதேனு திட ஆகாரத்தைப் படைத்து அளித்தது…! என்று அன்று சித்தர்கள் காவியங்களில் மறைமுகமாகச் சொன்னார்கள்.

விசுவாமித்திர மாமகரிஷிக்கு
1.இரசமணி சக்தியின் மூல முலாமையும்
2.காமதேனு சக்தியையும் உணர்த்தி
3.அதை அவர் பெறும் பக்குவத்திற்கு உருவாக்கித் தந்தவர் வசிஷ்ட மாமகரிஷி.

தான் பெற்றது காமதேனுவின் குழந்தை நந்தினியின் சக்தி தான் என்றும் உணர்த்துகின்றார் வசிஷ்டர். ஆக இதெல்லாம் சூட்சமப்படுத்திக் காட்டப்பட்ட பேருண்மைகள்.

1.பரவெளியில் உலவிக் கொண்டிருக்கும் காமதேனு என்றிட்ட
2.(உயிரணுக்களின்) பசுக்களின் வீரிய ஆகாரத்தை ஒவ்வொருவரும் பெற்று விட்டால்
3.மண்டலங்களையே உருவாக்கிடும் சிருஷ்டியின் பரிபூரணத்துவத்தைப் பெற்றிடலாம்…! என்ற
4.ஞானிகளால் கொடுக்கப்பட்ட போதனை காட்டிய வழி முறையை அறிந்து கொள்ள வேண்டும்.

பரவெளியில் தோன்றிப் பல்கிப் பெருகி அந்தக் காமதேனு – நந்தினி என்ற உயிரணுக்கள் சிவ சக்தியின் கலப்பாகப் பிறிதொன்றைத் தன் சக்தியை உள் நிறைத்து உருவாக்கிடும் ஓர் பொருளே அந்த உயிரணுக்களின் முட்டைகள் எனச் சித்தர்களால் காட்டப்பட்டது.

சூரிய வெப்ப ஒளியில் அந்த முட்டைகள் உடைந்து பரவெளியில் சுழன்று ஓடும் பூமியின் ஈர்ப்பின் அருகாமையில் அந்த உயிரணுக்கள் வந்தாலும் பூமியின் ஈர்ப்பில் சிக்கிடாமல் உந்து விசையால் புறப்படும் பாணம் போல் அந்த உயிரணுக்கள் பரவெளியில் உலவிடும் சூட்சமத்தைச் செப்பிடத்தான் முடியுமோ…?

1.பூமியின் வட திசையில் விழிப்பார்வையை விண்ணிலே செலுத்தி
2.ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் எண்ணி ஏக்கத்துடன் அந்தப் பேரொளியை ஈர்த்துக் கொண்டால்
3.காமதேனு தன் ஆகாரத்தை நமக்கு ஊட்டிடுவாள்.

இதை நீ அறிவாய்… உணர்வாய்… தெளிவாய்…!

தொழில் செய்யும் இடத்தில் (டென்சன்) பகைமை வளராது இருக்க எப்படித் தியானிக்க வேண்டும்…?

 

ஒரு தொழிற்சாலையில் நாம் வேலை பார்க்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். நம்முடைய மேலதிகாரி வேலைக்கு வரும் நேரத்தில்… அவர் குடும்பத்திலேயோ அல்லது வரும் பாதையிலேயோ அவருடைய சந்தர்ப்பம்… தவறான செயல்களை உற்றுப் பார்த்து விட்டால் அந்த உணர்வுகளை அவர் நுகர்கின்றார். அதனால் அவருக்குள் வெறுப்படையும் உணர்வுகள் வந்து விடுகின்றது.

அந்த வெறுப்பான உணர்வுடன் தொழிற்சாலைக்குள் வந்தால் அந்த வெறுப்பான உணர்வு கொண்டே அவர் பார்வைகள் வரும்.

1.இங்கே தொழில் செய்வோர் சீராகச் செய்தாலும்
2.அவருடைய உணர்வுகள் அந்த வெறுப்படையும் உணர்வுடன் இவர்களை உற்றுப் பார்க்கும் பொழுது
3.இவர்கள் செயலைக் கண்டு குறை கூறும் உணர்வுகளாக… அந்த உணர்ச்சிகளை அங்கே அவருக்குள் தூண்டும்.

அவர்கள் நல்லதைச் செய்தாலும் அவர் எடுத்துக் கொண்ட உணர்வால் அவர்களையும் வெறுக்கும் உணர்வைத்தான் உருவாக்கும். அவ்வாறு உருவாக்கி விட்டால் அந்த மேலதிகாரியின் சொல்லும் கடுமையாகும். (இதை எல்லாம் கண்கூடாகப் பார்க்கலாம்…!)

அப்படிப்பட்ட வெறுக்கும் உணர்வுடன் உற்றுப் பார்க்கப்படும் பொழுது அவர் சொல் (கடுமையான) நமக்குள் பதிவாகி விட்டால் அவர் மீது வெறுப்படையும் சக்தியும்… அதே நினைவும் நமக்குள் வருகின்றது.
1.அவரைப் பார்க்கும் போதெல்லாம் நமக்கு வெறுப்பும்
2.அவர் நம்மைப் பார்க்கும் பொழுது அவருக்கும் வெறுப்பு வருகின்றது.

ஆக… ஒரு தொழிற்சாலையில் ஒரு முறை இப்படித் தவறு என்ற உணர்வுகள் பதிவாகி விட்டால் இது வழி தொடர்ந்து இருவருடைய உணர்வுகளும் வெறுப்படையும் அணுக்கள் விளைந்து அவரவர்கள் உடலிலுள்ள நல்ல அணுக்களை வளரவிடாது தடுக்கும் நிலையே வருகின்றது.

1.இத்தகைய நிலைகள நமக்குள் வளர்க்கப்படும் பொழுது
2.தொழிற்சாலைக்குள் வந்தபின் மன நோய் போன்று உருப் பெறுகின்றது
3.சிந்தனை இழக்கச் செய்கின்றது… செயல்களைச் சீராக இயக்க முடியாத நிலைகள் இருவருக்குமே வருகின்றது.

இதைப் போன்ற உணர்வுகள் சந்தர்ப்பத்தால் ஏற்படும் நிலைகளைத் தடுக்க வேண்டுமென்றால் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் இருக்கும் உயிரின் பால் நினைவைச் செலுத்த வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று சிறிது நேரம் ஏங்கித் தியானிக்க வேண்டும்.

அதற்கு அடுத்து…
1.நாங்கள் பார்ப்போர் அனைவரும் நலம் பெற வேண்டும்
2.எங்களைப் பார்ப்போருக்கு நல்ல எண்ணங்கள் வர வேண்டும்
3.எங்கள் செயல் அனைத்தும் புனிதம் பெறவேண்டும்
4.எங்கள் சொல் அனைவருக்கும் நன்மை பயக்க வேண்டும் என்று நமக்குள் வலுப்படுத்த வேண்டும்.

மேலதிகாரியை நினைக்க வேண்டியதில்லை…! உங்கள் உணர்வுகள் இவ்வாறு தான் வர வேண்டும் என்று எண்ணங்களைச் செலுத்திவிடுங்கள்.

ஏனென்றால் இந்த உணர்வின் வலு நமக்குள் ஏற்பட்டால்…
1.அவர் செய்த தீமையின் உணர்வுகளால் நமக்குள் விளைந்த அணுக்களுக்கு உணவு கிடைக்காது தடைப்படும்
2.அல்லது முதலில் பார்த்தபின் கருவின் தன்மை (வெறுப்பான அணு) அடைந்திருந்தால் அது மீண்டும் வளராது தடையாகிவிடும்.

விவசாயம் செய்கிறோம் என்றால் நிலத்தின் மேலே விதைகளைத் தூவும் பொழுது மண்ணுக்குள் பதிந்தால் அந்த விதை முளைத்து விடும் மண்ணை விட்டு வெளிப்பட்டால் அந்த வித்து முளைப்பதில்லை. ஆனால் அதை நாம் எல்லாச் சமயங்களில் கவனிப்பதும் இல்லை.

இதைப் போன்று தான்… ஒருவர் சொல்லும் உணர்வின் தன்மை நமக்குள் பதிவாகி விட்டால்… அந்தப் பதிவின் தன்மையை நமக்குள் மீண்டும் மீண்டும் நினைவு கொண்டால் அவர் செய்த தீமையின் உணர்வுகள் நமக்குள் நிச்சயம் வளரத் தொடங்கும்.

ஆனால் அது வளராது தடுக்க வேண்டுமென்றால்…
1.அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்
3.எங்கள் பார்வை அனைவரையும் நலமாக்க வேண்டும்
4.என் மேலதிகாரி என்னைப் பார்க்கும் பொழுது அவருக்கு நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்ற உணர்வினை நாம் செலுத்தி விட்டால்
5.நமக்குள் இருக்கும் அந்த வெறுப்பின் உணர்வால் வளர்ந்த அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காது அது நசிந்துவிடும்.

ஒரு வித்திற்கு நாம் மீண்டும் மீண்டும் நீரை ஊற்றும் பொழுது தான் அது வளர்ச்சி அடைகின்றது. நீரை ஊற்றாது விட்டுவிட்டால் அதனின் வளர்ச்சி தடைப்படும்.

அதே போல் அந்த மேலதிகாரிக்கு நல்ல எண்ணங்களும் நல்ல உணர்வுகளும் வளர வேண்டும்… அவர் குடும்பம் நலம் பெற வேண்டும்… அவர் சொல்லிலே இனிமை பெற வேண்டும்… அவர் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும்…! என்று இப்படி நீங்கள் எண்ணி மாற்றிவிடுங்கள்.

அவர் பெற்ற அந்தத் தீமையின் உணர்வுகள் அவர் உடலில் விளைந்தது தான்…
1.இருப்பினும் நமக்குள் அது வளராது தடுக்க இது உதவும்
2.மேலே சொன்ன முறைப்படி செய்தால் அவரைப் பார்க்கும் போது அந்த வெறுப்பின் தன்மை நமக்குள் வராது
3.தொழில் செய்யும் இடங்களில் பகைமைகள் நிச்சயம் மறையும்.

செய்து பாருங்கள்..!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள்
1.நாங்கள் அருள் ஞானம் பெற வேண்டும்
2.மெய்ப் பொருள் காணும் சக்தி நாங்கள் பெற வேண்டும்
3.எங்கள் பார்வை அனைவரையும் நலமாக்க வேண்டும் என்ற உணர்வுடன் இருத்தல் வேண்டும்.
4.தீமையான உணர்வுகளை மாற்றி அமைக்கும் பழக்கத்திற்குக் கொண்டு வருதல் வேண்டும்.

கூட்டுத் தியானங்கள் மூலம் அருள் ஞானத்தைப் பெருக்கி உங்கள் பார்வையால் பிறரின் நோய்களைப் போக்கும் தன்மையும் தீமைகளைப் போக்கும் நிலைகளையும் நீங்கள் வழிப்படுத்தி வருதல் வேண்டும்.

இது உங்கள் தலையாயக் கடமையாக இருத்தல் வேண்டும்.

அருள் வழியைப் பெற வேண்டும் என்று நீங்கள் ஏங்கிப் பெற்றுப் பிறருடைய தீமைகளைப் போக்கும் தன்மைக்கு வர வேண்டும். இருள் சூழ்ந்த நிலைகளை நீக்கிடும் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும்.

சந்தர்ப்பத்தால் ஒரு சிலர் உடலில் ஆவி புகுந்துவிடும். ஆவியின் தன்மை ஒரு உடலுக்குள் வந்து விட்டால் அந்தக் குடும்பத்தில் உள்ளோருக்கும் அதனால் பல தொல்லைகள் வரும்.

அந்தத் தொல்லைகள் வரும் போது நீங்கள் அனைவரும் கூட்டுத் தியானம் இருந்து
1.மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடல் முழுவதும் படர வேண்டும்,
2.அவர் உடலில் உள்ள அந்த ஆன்மா மகரிஷியின் அருள் சக்தி பெற்று
3.அது பிறவி இல்லா நிலை அடைய வேண்டும்,
4.அந்த உடலிலே நன்மை பெறும் சக்தியாக அதை மாற்றுதல் வேண்டும்.
5.அந்த உடலை வாட்டி வதைக்கும் தன்மையிலிருந்து அவர்களை மீட்கலாம்.

மாறாக “இப்படி இருக்கிறதே…!” என்று ஆவிகள் ஓட்டுவோரிடம் சென்றால் அதை ஓட்ட முடியாது.

விரட்ட வேண்டும் என்று அதிகாரத்தில் செயல்பட்டால் எதிர் மறைகள் அதிகமாகி எதன் வேகத்தில் அந்த அணுக்கள் இருக்கின்றதோ அது தான் பெருகும்.

ஆகவே தியானம் செய்பவர்கள் மகரிஷிகளின் அருள் சக்தியை அவருக்குள் பாய்ச்சி
1.உள்ளிருந்து அந்தத் தீவினையைத் தடுத்தல் வேண்டும்.
2.அருள் சக்தியை நமக்குள் கூட்டும் போது
3.அது இதை உணவாக உட் கொண்டு அதன் வீரியத்தைக் குறைக்கும்.
4.அதற்கும் நன்மையாகிறது நமக்கும் நன்மையாகிறது.

வாழ்க்கையில் நம் மீது வந்து மோதும் எத்தகைய நிலையையும் நறுமணமாக… அமுதமாக… பேரொளியாக மாற்ற முடியும்

பால்வெளி மண்டல சூட்சம சக்திகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

அதாவது ஆதிசக்தியின் “நீர் அமில ஒளி காந்த மூலம்…” உள்ளடங்கி ஓர் வண்ணமாக மூலத்திலிருந்து வெளிப்படும் ஏழு வண்ண அமில குணங்களாக வெளி வருகிறது.

1.நிறம்
2.குணம்
3.உள்மூல நீர் அமிலம் என்ற
4.மூன்று சக்திகளின் தொடரின் கலப்பில் பால்வெளியில் படர்ந்து கொண்டே உள்ளது.

வான இயலை உன்னிப்பாகப் பார்த்தால் பல விதமான வர்ணங்களையும்… எண்ணிலடங்கா வாயுக்களையும்… உருவாக்கும் ஜீவ சக்தியையும் காண முடியும்.

அதிலே தான் ஒன்றுடன் ஒன்று கலந்து பிறிதொன்றை உருவாக்கும் உயிரணுக்கள் தோன்றுகிறது.

அத்தகைய வினைச் செயலின் படைப்பில் அனைத்துச் சக்திகளையும் காத்திடும் பக்குவத்தில் உயிரணுவிலே முலாமாகும் வீரிய அமிலம் தன் வளர்ச்சியின் வளர்ப்பாக்க மற்ற அமில குணங்களைத் தன் வளர்ப்பிற்குத் துணை சக்திகளாக எடுத்துக் கொள்கிறது.

அவ்வாறு வளரும் பக்குவத்தில் கோடானு கோடி உயிரணுக்கள் பால்வெளியின் பரமாத்மாவின் தத்துவத்தில் ஒன்றுடன் ஒன்று ஈர்த்துப் பிறிதொரு சக்தியாகவும் வளர்ச்சி கொள்கிறது.

அந்த வளர்ச்சியில் எந்த அமில முலாம் வீரியமாக வளர்ச்சி நிலை பெற்றதோ அதுவே வினையின் கதியால் வினையின் செயலுக்குத் தொடர் நிகழ்வாக நடைபெற்றுக் கொண்டேயுள்ளது.

இந்தத் தொடர் “காலம் காலமாக…” நடக்கின்றது.

நீர் நிலையின் ஊடே பாய்கின்ற ஒளிக் கதிர் (வானவில் – RAINBOW) ஏழு வண்ணங்களைக் காட்டுவது எட்டாவது வண்ண மூலத்திலிருந்து தான்.

அந்த ஏழு வண்ணங்களின் அமிலங்களுக்குள் நீர் சக்தியின் மூலம் சக்திகள் பாய்ந்து அது செயல் கொண்டிட்ட விதங்களை சித்தர்கள் காட்டியுள்ளார்கள்.

நீர் சக்தியின் குளிர்விப்பால் தான் (உறையும் போது தான்) உயிரணுக்களின் இயக்கத் தொடர்பில் சரீரங்களாக… பிம்பங்களாக உருப்பெறுகின்றது. ஜீவனுள்ள உருவங்களாக ஆனதைத் தான் சீவலிங்கம் (சிவலிங்கம்) என்று சொல்வது.

சரீரம் என்ற குகைக்குள்…
1.உயிரணுவின் காந்த அமில ஈர்ப்பின் குணம்
2.சக்தியாகச் செயல் கொள்வது என்பது
3.சரீரத்தின் மூலம் பெறும் வளர்ச்சி பெறும் நிலை.

அதாவது “ஆன்மா வலு கொண்டிடும் தற்காப்புப் பணி…!” என்று விளங்கிக் கொள்ள வேண்டும். அந்த ஆன்மாவைச் சுற்றி ஓடும் ஒளி வட்டத்தின் ஊடே உயிர் சக்தி சூட்சமத்தில் செயல் கொள்கிறது என்பதையும் அறிந்திடல் வேண்டும்.

பால்வெளியில் பரந்துள்ள நீர் சக்தி அது வளர்ச்சி கொள்ளும் பக்குவத்தில்
1.மனக் குகையினூடே பாதுகாப்பு வளையமிட்டு
2.ஆத்ம லிங்கத்தைப் பூஜிக்கும் உயிர் சக்தி
3.மகரிஷிகளின் அருள் சக்தியின் துணை கொண்டு
4.தன் சுய சக்தியை வளர்ச்சிப்படுத்தும் செயல் நிகழ்வில் எழுவதே “உயர் ஞான ஜோதி மலர்…!”

தாமரை மலரை உவமை காட்டுவது எதற்கு…?

சூரியனின் தொடர்பு கொண்டு நீர் சக்தியின் மூலமாக உயிரணுக்கள் உடல் பெற்று உருவாகும் நிலையை உணர்த்துவதற்காகத்தான்.

ஏனென்றால் இரு வித சுவாசத்தின் அலைகளாக…
1.பூமி தனக்குள் ஈர்க்கும் அலையும்
2.பூமி அதை ஈர்த்துச் சமைத்து வெளிக்கக்கும் சுவாச அலையும்
3.பரவெளியில் மோதுண்ட நிலையில் அதை ஈர்த்து உருவாகும் மலரே “தாமரை மலர்…!”

தாமரை தான் ஈர்த்திடும் அமில குணத்தின் மூலம் அமுதத்தை மலரும் மலராக மலர்கிறது. தன்னுள் பாய்ந்திடும் விஷ அமில சக்தியைத் தன் இலைப்பரப்பில் பதிய வைத்துக் கொள்கிறது.

அந்த விஷ அமிலத்தையே இலையின் மூலம் தன் சக்தி குறைவு படாமல் ஏழு வண்ணத்தில் ஓர் வண்ணமாக மலராக மலர்ந்திட தனக்குகந்த ஆகாரத்தைச் சமைத்துச் சூரிய சக்தியின் தொடர்பில் தன்னை வளர்ச்சி நிலைப்படுத்துகின்றது.

இந்தத் தத்துவத்தைத் தெரிந்து கொண்டால்…
1.வாழ்க்கையில் நம் மீது வந்து மோதும் எத்தகைய நிலையையும்
2.நறுமணமாக அமுதமாக பேரொளியாக நாம் மாற்றிக் கொள்ள முடியும்.

உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்களை விண் செலுத்தும் பழக்கம் வளர்ந்து விட்டால் “உந்துவிசை இல்லாமல் நாம் விண் செல்ல முடியும்…!”

 

தெளிந்த மனமும் தெளிந்திட்ட உணர்வும் கொண்டு…
1ஒளியின் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அந்த மாமகரிஷிகள் கண்டுணர்ந்த உணர்வினைத் தான்
2.குருநாதர் காட்டிய அருள் வழியில் உபதேசித்துக் கொண்டு வருகின்றோம் (ஞானகுரு).

இந்த உபதேசத்தைப் படிக்கும் போதும் அல்லது கேட்கும் போதும் நீங்கள் நுகர்ந்த உணர்வுகள் உங்களுக்குள் ஊழ்வினை என்ற அருள் ஞான வித்தாக ஊன்றச் செய்து கொண்டிருக்கின்றோம்.

அதனை நீங்கள் மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றிட முடியும். ஏனென்றால் அருள் ஒளிச் சுடராக உங்கள் உணர்வுகளை வளர்த்துப் பிறவியில்லா நிலை அடையச் செய்யும் நிலைக்குத் தான் இந்த உபதேசமே…!

அருள் ஞானியின் உணர்வுகளை வலுப் பெறச் செய்து அதன் துணை கொண்டு ஏங்கித் தியானித்து… நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்த உணர்வின் வலுக் கொண்டு அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கச் செய்ய வேண்டும். உடல் பெறும் உணர்வுகளை அங்கே கரைக்க வேண்டும்.

உதாரணமாக ஒரு தேரை இழுக்க வேண்டும் என்றால் அது கடினமானது. பலரும் சேர்ந்து அந்தத் தேரை இழுத்தால் தான் அது எல்லைக்கு வரும்.

அதைப் போன்று தான்…
1.பலரும் நாம் ஒன்று கூடி மனிதனின் கடைசி எல்லையான
2.அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வை நமக்குள் வலுப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

அந்த உணர்வின் துணை கொண்டு நாம் அனைவரும் கூடி நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற குலதெய்வங்களின் ஆன்மாக்களை சப்தரிஷி மண்டல எல்லையை அடையச் செய்தல் வேண்டும்.

உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்த பின்… அறிவின் தெளிவாக நம்முடன் வாழ்ந்த அந்த உணர்வின் ஒளியாக நிலைபெறச் செய்வதே… “நம் குருநாதர் காட்டிய உயிரான்மாக்களை விண் செலுத்தும் முறை…”

ஒவ்வொரு நாளும் காலை துருவ தியானத்தில் அந்தந்தக் குடும்பத்தில் உள்ளோர் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மூதாதையர்களை மேலே சொன்ன முறைப்படி அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யும் நிலை வரும் பொழுது அவருடைய எண்ணங்களும் அவர்களுடன் தொடர் கொள்கின்றது.

அதே சமயம் முன்னோர்கள் சப்தரிஷிகள் ஆன பின் அந்த மண்டலத்துடன் இணைந்த பின் “எண்ணும் பொழுதெல்லாம்” அங்கிருந்து எளிதில் அந்தச் சக்திகளைப் பெற முடிகின்றது.

அதன் மூலம்…
1.வாழ்க்கையில் வரும் சலிப்போ சங்கடமோ வெறுப்போ கோபமோ குரோதமோ போன்ற உணர்வுகளை அகற்றவும்
2.அறியாது உட்புகுந்து செயலாக்கும் தீமைகளை அகற்றவும்
3.தொழிலின் நிமித்தம் வரும் குறைகளை அகற்றவும்
4.சந்தர்ப்பத்தால் நம்மைப் பலவீனமடையச் செய்யும் இருளை அகற்றவும்
5.அந்த மாமகரிஷிகளின் அருள் உணர்வுகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகர நுகர… உங்கள் எண்ணங்கள் வலு பெற்று மன பலம் பெறுவீர்கள். உங்கள் தொழிலும் முன்னேற்றம் அடையும். அருள் ஒளியின் உணர்வாகக் கார்த்திகேயா என்று அறிந்துணர்ந்து செயல்படும் சக்தியும் பெறத் தகுதி பெறுகின்றீர்கள்.

முன்னோர்கள் முன் செல்ல அவர்களின் உணர்வை நமக்குள் பின்பற்ற இங்கே அவ்வப்போது வரும் இருளை அகற்றி உணர்வின் ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.
1.இதன் வழியில் தொடர்ந்து சென்றோம் என்றால்…
2.நாம் விண் செல்ல உந்து விசை தேவையில்லை.

ஏனென்றால் அந்தச் சப்தரிஷி மண்டலத்தின் உணவின் தன்மை வலுவாக்கிக் கொண்டால்
1.கடைசி எண்ணம் நமக்குள் அது தான் வரும்…
2.சப்தரிஷி மண்டலத்தை நாம் எளிதில் அடைய முடியும்.

ஆனால் முந்தி வாழ்ந்தவர்களுக்கு அத்தகைய எண்ணங்கள் இல்லை. அதை வளர்க்கவும் இல்லை. அந்த வலுவும் இல்லை.

இன்று உடலுடன் இருக்கும் நாம் நமக்குள் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வை வலுப் பெறச் செய்து அந்த ஆன்மாக்களை விண்ணிலே உந்தித் தள்ளினால் உடல் பெறும் உணர்வுகள் கரைந்து ஒளியின் உணர்வாக வளர்ச்சியாகி சப்தரிஷி மண்டலங்களின் உருவாக ஆகிவிடுகிறார்கள்.

நம் வாழ்க்கையில் அறியாது சேரும் குறைகளையும் நோய்களையும் சலிப்பையும் நாம் மறக்க… அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாங்கள் பெற வேண்டும் என்று அடிக்கடி எண்ணுதல் வேண்டும்.

1.மகரிஷிகளீன் அருள் சக்தியால் எங்கள் உடல் நலம் பெற வேண்டும்… மன நோய் நீங்க வேண்டும்
2.எங்கள் தொழில் வளம் பெருக வேண்டும்
3.எங்கள் செயல் அனைத்தும் வைரத்தைப் போல ஜொலிக்க வேண்டும்
4.எங்கள் வாழ்க்கை வைரத்தைப் போல் பிரகாசிக்க வேண்டும் என்று உணர்வினை எடுத்து வலுவாக்கிக் கொண்டால்
5.பிறவியில்லா நிலை அடைந்திட்ட அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்திற்குள்
6.நம்மை நிச்சயம் அழைத்துச் செல்லும் நமது உயிர்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மற்றவர்களின் நோய்களை நீக்கும் கூட்டுத் தியானப் பயிற்சி:

நோய்களைப் போக்க வேண்டும் என்றால்
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.எங்கள் உடலிலுள்ள அது எந்த நோயோ அது நீங்க வேண்டும் என்று
4.அதே எண்ணத்தில் தியானம் செய்ய வேண்டும்.

நோய் உள்ளவர்கள் கண்ணைத் திறந்து துருவ நட்சத்திரத்தை எண்ணி ஏங்கி அந்த அருள் சக்தி என் உடலில் படர வேண்டும். என் நோய் நீங்க வேண்டும் என்று எண்ணினால் உடல் நலமாகும்.

உதாரணமாக ஒருவரால் முடியவில்லை என்றால் பத்து பேர் சேர்ந்து கூட்டுத் தியானமிருந்து அவர் நோயைக் குணப்படுத்த முடியும்.

அவரை எழுந்து நிற்கச் சொல்லி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என் உடலில் உள்ள நோய் நீங்க வேண்டும் என்று ஏங்கி இருக்கும்படி சொல்லுங்கள்.

மற்றவர்கள் தியானத்தில் இருந்து மகரிஷிகளின் அருள் அவர் உடலில் படர வேண்டும். அவர் உடலில் உள்ள நோய் நீங்க வேண்டும், அவர் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும், அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

அப்போது அவரின் உடலில் ஒரு விதமான கரண்ட் பாய்வது போல் இருக்கும். அப்போது அவர் உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
1.அவரால் முடியாததை நீங்கள் எல்லோரும் சேர்ந்து சொல்லி
2அவரின் நோய்களை இவ்வாறு மாற்றிப் பழக வேண்டும்
3..இதில் பல அற்புதங்களைப் பார்க்கலாம்.
நீங்கள் இதைச் செய்து நல்லதாக்க வேண்டும்.

உங்கள் எண்ணத்தால் மற்றவர்களில் நோய்களைப் போக்கச் செய்து ஒருவருக்கொருவர் உதவும் நிலையாக இந்தப் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

ஒருவருக்கு நோய் இருக்கிறதென்றால் முதலில் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்ற வலுவை நமக்குள் ஏற்றிக் கொண்ட பிற்பாடு தான் நோயாளியின் உடலில் மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து நோய் நீங்கி உடல் நலமாக வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

உடல் நலமாக வேண்டும் என்று முதலிலேயே தியானிக்கக் கூடாது. அருள் சக்தியை எடுத்துத் தியானித்து விட்டுத்தான் செய்ய வேண்டும்.

கடையில் வாங்கிய காய்கறிகளை அப்படியே நறுக்கிவிட்டுப் பறிமாறினால் ருசி வருமோ? வேகாத நிலையில் தான் இருக்கும்.

அதைச் சமைத்து ருசியாக ஆக்கிய பின் தான் மற்றவருக்குக் கொடுக்க முடியும். ஆகவே அருள் ஞானத்தை நமக்குள் படைத்து அந்த வலுவின் தன்மை கொண்டு மற்றவர்களுக்கு அந்தச் சக்திகள் கிடைக்க வேண்டும் என்று ஒரு மனதோடு ஏங்கி இணைக்க வேண்டும்.

மகரிஷிகளி அருளை அப்படி இணைக்கப் போகும் போது மற்றவர்களும் ஏங்கிப் பெற்றார்கள் என்றால் நாம் பாய்ச்சும் உணர்வுகள் அங்கே அவர்களின் நோயை நீக்க உதவும்.

ஆனால் சில நோய்களுக்கு உடனடியாக மருந்து கொடுக்க வேண்டியதிருக்கின்றது. மருத்துவர்களிடம் வாங்கிச் சாப்பிடுகிறார்கள் என்றால் மகரிஷிகளின் அருள் சக்தியால் மருந்து உங்களுக்கு வேலை செய்து நன்றாக ஆகும் என்று சொல்லலாம். விரைவில் நல்லதாக்கவும் உதவும்.

துன்பங்களால் அவதிப்படும் நேரத்தில்… நல்லதை (அந்தச் சந்தர்ப்பத்தில்) எப்படிக் கொண்டு வர முடியும்…? என்று தெரிந்து கொள்ளுங்கள்

உதாரணமாக உங்கள் காலில் அடிபட்டு வலியுடன் இருக்கும் பொழுது யாராவது உங்களிடம் வந்து “சந்தோஷமாக இருக்க வேண்டும்…” என்று சொல்லட்டும். உங்கள் வலி இன்னும் கொஞ்சம் அதிகமாகும்…!

அதே சமயத்தில் படுக்கையில் நோயுடன் இருக்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் ஒருவர் வந்து உங்கள் பையன் இன்ன இடத்திற்குப் போனான்… அங்கே போய் வீரமான ஒரு செயலைச் செய்தான்…! என்று சொன்னால் போதும்.

அதைக் கேட்டவுடன் ஆஹா… என் பையைன் அப்படிச் செய்தானா..! என்று கேட்டவுடனே படுக்கையிலிருந்து எழவில்லை என்றாலும் தன் உடலில் உள்ள வலிகளை எல்லாம் மறந்து விடுவார்கள்.

அல்லது உங்கள் பையன் படிப்பில் நூற்றுக்கு நூறு மார்க் வாங்கி இருக்கின்றான். மிகவும் கெட்டிக்காரனாக இருக்கின்றான்…! என்று திடீரென்று உங்களிடம் யாராவது சொல்லட்டும்.
1.உங்கள் வலி எல்லாம் போய்விடும்
2.ஒரு இனம் புரியாத ஆனந்த நிலை வரும்
3.உற்சாகத்துடன் எழுந்து நிற்கச் சொல்லும்.

இதைப் போன்று தான் உங்கள் உணர்வின் தன்மை கொண்டு அருள் மகரிஷிகளின் சக்தி பெறவேண்டும் என்று எண்ணி விட்டு நீங்கள் பார்த்தோர் உணர்வுகளில் வைரத்தைப் போன்று வாழ்க்கை ஜொலிக்க வேண்டும் அவர்கள் சொல்லும் செயலும் ஜொலிக்க வேண்டும் நாங்கள் பார்க்கும் குடும்பங்கள் எல்லாம் வாழ்க்கை வைரத்தைப் போன்ற ஜொலிக்க வேண்டும் என்று எண்ணச் சொல்கிறோம்..

அந்தச் சமயத்தில் தீமை செய்யும் உணர்வுகளை நாம் நேரடியாக நுகர்வதில்லை. மாறாக நாம் உயர்ந்த உணர்வுகளைத் தான் (மறைமுகமாக) எடுக்கின்றோம். அப்பொழுது வாலி என்ற விஷத் தன்மையான உணர்வு நம்மை இயக்குவதில்லை.

ஆக… மனிதனின் வாழ்க்கையில் அறியாது வரும் இடையூறுகளிலிருந்து மீட்டிக் கொள்வதற்கு ஞானிகள் இந்தத் தத்துவத்தைக் கொடுத்துள்ளனர்.

ஆனால் படித்தவர்கள் என்ன செய்கிறார்கள்…?

ஞானிகள் கொடுத்த தத்துவங்களை வைத்து வாதிடும் திறமைகளைக் காட்டுகின்றார்களே தவிர ஞானிகள் கொடுத்த மூலக் கூறுகளை மக்களுக்கு எடுத்துக் கூறுவதில்லை.

இராமாயணத்தில் காட்டப்பட்ட குகன் என்பது நம் உடலில் உள்ள இரத்தநாளங்கள் தான்…!

வைரத்தைப் போல் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும் எங்கள் சொல் ஜொலிக்க வேண்டும் நாம் பார்ப்போர் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும் என்று எண்ணினால் நம் இரத்தங்களில் இது எல்லாம் கலக்கின்றது.

நம் இரத்தநாளங்களில் நாம் கவர்ந்த உணர்வுகள் உடல் முழுவதும் படரப்படும் போது ஒரு அமைதிப்படுத்தும் உணர்வாக… புதிய உணர்வாக அமைகின்றது.

இதைத் தான் காட்டிற்குள் செல்லும் போது இராமன் முதலில் குகனை நண்பனாக்கிக் கொண்டான் என்று காட்டுகின்றனர்.

காவியத்திலே குகனைக் காட்டும் பொழுது காடு மலை வனாந்திரம் அனைத்திலும் மிருகங்களிடமிருந்தும் காப்பாற்றும் நிலைகள் கொண்டு பாதுகாப்பாகச் செல்கிறான்… இராமனுக்கு உதவி செய்கின்றான்…! என்று காட்டுகின்றனர்.

1.அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்தி உடலுக்குள் செல்லப்படும் போது இரத்தத்திலே கலந்து…
2.நம் உடல் முழுவதும் அந்த இரத்தங்கள் சுழன்று வரப்படும் போது
3.ஏற்கனவே இருக்கும் பகைமை கொண்ட அணுக்கள் இதை உட்கொண்டால்
4.அதனின் வீரியத் தன்மை அந்த வலுவை இழக்கின்றது.

ஆகவே நாம் எண்ணும் எண்ணங்கள் நமக்குள் (உடலுக்குள்) எந்த வழியில் செயல்படுகின்றது என்பதை இராமனைக் காட்டுக்குள் போகின்ற மாதிரி காவியங்களைப் படைத்துக் காட்டினார் வான்மீகி.

இராமன் காட்டுக்குள் சென்றாலும்…
1.பகைமைகளை எப்படி மாற்றுகின்றான் என்று குகனைக் காட்டி
2.அந்தக் குகனை வைத்து மற்றவர்களை இராமன் எப்படி நட்பாக்குகின்றான்..? என்ற நிலையில்
3.எண்ணங்களின் குவியலும்… இந்த எண்ணத்தின் செயலும்…
4.வாலி என்ற நிலைகள் எவ்வாறெல்லாம் இயக்குகின்றது என்ற நிலையையும்
5.உணர்வின் செயலாக்கங்களைத் தெளிவாக்குவதற்குக் காவியமாகப் படைத்து
6.மனிதன் வாழ்க்கைக்குத் தீமையான உணர்வின் செயலாக்கங்களிலிருந்து நாம் எப்படி விடுபட வேண்டும் என்ற நிலையும்
7.அதை அருள் ஒளிச் சுடராக மாற்றும் நிலை அது எவ்வாறு…? என்றும் இராமாயணத்தில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

ஆகவே வான்மீகி காட்டிய அருள் வழியில் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நம் இரத்தங்களில் கலக்கச் செய்வோம்… அருள் ஞானம் பெறுவோம்… மகிழ்ந்து வாழும் அருள் சக்தியைப் பெறுவோம்.

வராகிமிகி மகரிஷி பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

வான இயலின் தத்துவத்தை “முத்தொழில்” (ஆக்கல் காத்தல் அழித்தல்) என்ற வகைகளை அறிந்து கொண்டவர் வராகிமிகிரர். பேரண்டங்களின் சூட்சமச் செயல் நிகழ்வாக ஒவ்வொரு சூரியக் குடும்பங்களின் வளர்ச்சியின் ஆக்கத்தையும் அவர் உணர்ந்தார்.

ஒவ்வொரு சூரியக் குடும்பமும் மற்ற குடும்பத்துடன் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டே வளர்ச்சியின் சக்திப் பிரவாகமாகச் சுழன்று கொண்டிருப்பது அனைத்தையும்
1.தன் உயிராத்ம வலு கொண்டு
2.ஞானதிருஷ்டி கொண்டு அறிந்து உணர்ந்து தெளிந்தவர் வராகிமிக மகரிஷி…!

நம் சூரியக் குடும்பத்தில் பூமித் தாய் ஈர்த்து அளித்திடும் சக்தியின் தொடருக்கு தன் வினையின் செயலுக்கு நாற்பத்தி எட்டு கோளங்களே முக்கிய காரணமாகின்றது.

அந்த ஆற்றல்களை ஒவ்வொரு உயிராத்மாவும் ஜீவ சரீரம் கொண்டு வலு பெற்று வளர்த்திடவும் நல் வினையின் ஆக்கம் அறிந்து தெளிவு பெற்றிடவும் “மண்டலம்…” என்ற வகைப்படுத்திக் கர்ம வினைச் செயலாகக் காட்டினார்.

1.சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த நவக் கோள்களும்
2.வியாழனைப் பிரகாசப்படுத்திடும் எட்டு உப சந்திரக் கோள்களும்
3.புதனைச் சுற்றி ஓடும் ஐந்து சந்திரக் கோள்களில் நான்கு ஜீவன் கோள்களும்
4.பூமித் தாய் ஈர்ப்பின் தொடர்பு கொண்ட மாமகரிஷிகளின் அருள் பார்வை கொண்ட இருபத்தியேழு ஜீவ நட்சத்திரத் தொகுதியும்
5.நாள் கணக்கு வைத்து 48 என்ற வகையே மண்டலம் என்ற வகைப்படுத்தினார்.

ஒவ்வொரு நாளும் பரவெளியில் நடக்கும் கோடிக்கணக்கான சூட்சமச் செயல்களில்… நிறம் மணம் குணம் என்ற அமிலக் கூறுகள் நீர் காந்த சக்தியுடன் கலந்து சிறப்புறும் அந்த விளையாடல் செயலை யாரும் எடுத்துரைக்க இயலுமோ..?

பொதுவான பால்வெளி மண்டலமாகிய சூட்சமப் பேரண்டத்திற்குள் இருளினுள் ஊடே உலவி இரண்டாயிரம் சூரியக் குடும்பங்களும் சுற்றிச் சுழன்று ஓடுகிறது.

இதைப் போல எத்தனையோ சூரியக் குடும்பங்கள் ஆயிரமாகவும் இரண்டாயிரமாகவும் ஒன்றை ஒன்று தழுவிய நிலையில் சுழன்று வருகிறது.

அப்படிப்பட்ட சுழல் கதியில் ஒவ்வொரு சூரியக் குடும்பமும் மற்ற சூரியக் குடும்பங்களைச் சுற்றி வரும் நிலையில் நீர் சக்தியின் தொடர் மூலம் காந்த சக்தியின் ஈர்ப்பால் உள் நிகழ்வுகள் எத்தனையோ நடைபெறுகிறது.

சூரியக் குடும்பத்தைக் கடந்து செல்லும் சுழல் ஓட்டக் கதியில் ஒரு சூரியன் மற்ற சூரியனைச் சந்திக்கும் பொழுது அந்தச் சந்திப்பினால் ஒளிக் கதிர்வீச்சு எதிர் மோதல்களும் ஏற்படுகின்றது.

அவ்வாறு நடைபெறும் காலகட்டத்தில் அந்தந்தச் சூரியனைச் சார்ந்த மண்டலங்கள் அந்தக் கதிர்வீச்சின் ஈர்ப்பில் இயற்கையாக ஈர்ப்பின் தொடரில்
1.தனக்குத் தானே சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு
2.சுழன்று ஓடிக் கொண்டே இருக்கின்றன.

மூன்று சூரியக் குடும்பங்களின் சந்திப்பு நிகழ்வால் அதிலிருந்து வெளிப்படும் கழிவுகள் வால் நட்சத்திரமாக உருவாகின்றது. அதே போல பஞ்சமுக சந்திப்பு…! என்ற வட்டப்பகுதி ஏற்படும் கால நிகழ்வு ஒன்றும் உண்டு.

பஞ்சமுக சந்திப்பின் கதிர்வீச்சு ஏற்படும் கால கட்டத்தில்
1.சக்தி இழந்து வரும் கோளங்கள் அந்த வெப்பக் கதிர்வீச்சில் ஆவியாக மாறுவதும்
2.பிரளயம் ஆகிச் சக்தி குறைவுபட்ட மண்டலங்கள் மீண்டும் தன் சக்தியின் வலுவைக் கூட்டுவதும் போன்ற நிகழ்வுகள்
3.சூரிய மண்டலங்களின் தொடர்பில் நடைபெறும் செயல் வருகின்ற காலத் தொடரில் உண்டு.

நம் சூரியக் குடும்பத்தில் உள்ள கோளங்களில் சூரியன் முதற் கொண்டு அனைத்துக் கோளங்களும் தங்களைச் சுற்றி வளையமிட்டுக் காத்திடும் தொடர்களும் உண்டு.

இவ்வாறு மனித குல வளர்ச்சியின் மேம்பாட்டிற்கான தியான வழித் தொடரைக் காட்டி ஆதி சக்தியுடன் கலந்து வாழும் சூட்சமம் பற்றிக் கூறிய சூத்திரதாரியே வராகமிகி.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வாழ்க்கையில் நாம் எதிர்பாராத நிலைகள் வரும் போதும் பத்திரிக்கைகளைப் பார்க்கும் போதும் மற்ற அரசியல் வாழ்க்கையில் கடும் தீமை என்ற நிலை வரும் போதும் மத பேதம் இன பேதம் என்ற போர்களில் பல நிலைகளைக் கேட்டறியும் போதும் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில்

1.ஒவ்வொரு உடலில் இருக்கும் உயிரை ஆண்டவனாக மதித்து
2.அந்த ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயத்தில் அமைதி பெற வேண்டும்
3.ஒன்று சேர்ந்து வாழும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
4.அப்பொழுது பிறிதொரு தீமையான உணர்வு நம்மை ஆட்டிப் படைக்காது.

இன்றைய மனிதனின் வாழ்க்கையில் மதத்திற்குள் இனமென்று இனத்திற்குள் இனமென்று இனத்திற்குள் இனமென்று பிரிந்து ஒருவருக்கொருவர் போர் முறை கொண்டு தாக்கி வாழும் நிலைகள் தான் வருகிறது.

என் இனத்தைத் தாழ்த்திப் பேசுகிறான் என்ற உணர்வுகளால் பகைமை உணர்வுகளை வளர்த்து மனிதனை அழித்திடும் நிலையாக மாறி விடுகிறது. நம் நல்ல குணங்களை மறைத்திடும் இந்த நிலைகளை நாம் நீக்கிடல் வேண்டும்.

இந்தத் தியானங்களை எடுத்து கணவன் மனைவி ஒன்று சேர்த்து வாழக்கூடிய பக்குவத்தையும் குடும்பத்தில் ஒற்றுமையாக இருக்கக் கூடிய நிலைகளையும் குழந்தைகளை நாம் எப்படி வளர்க்க வேண்டும் என்ற நிலைகளையும் நீங்கள் அனைவருக்கும் எடுத்துச் சொல்லுதல் வேண்டும்.

ஆனால் கேட்காதவர்களுக்குச் சொன்னால் எதிர்ப்பு தான் வரும்.

உங்களை அணுகி வருபவர்களுக்குத் தான் சொல்லிப் பழக வேண்டுமே தவிர அணுகாதவர்களுக்குச் சொன்னால் அவர்கள் உங்களை அசுத்தமான நிலைகளில் பேசத் தொடங்கி விடுவர்.

அந்த மாதிரி இருந்தாலும் அவர்களும் அந்த நல்ல நிலைகளைப் பெற வேண்டும் என்று நாம் தியானித்து அவர்கள் பொருளறியும் சக்தி பெற வேண்டும் என்ற எண்ணத்தை நாம் வளர்த்துக் கொண்டால் நாளடைவில் வேறொரு சந்தர்ப்பத்தில் அவர் நம்மைத் தொடர்பு கொண்டால் அவர் திருந்தி வாழும் அல்லது சிந்திக்கும் தன்மை ஏற்படும்.

இதையெல்லாம் மனிதனின் வாழ்க்கையில் நாம் தெளிவாக்கிடல் வேண்டும். ஆகவே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியைக் கடைப்பிடிப்பவர்கள் அனைவரும் எப்பொழுதுமே உங்கள் கஷ்டத்தைச் சொல்லிக் கேட்காதீர்கள்.

1.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் வியாபாரம் பெருக வேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தியால் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும்
4.நோயிலிருந்து விடுபட வேண்டும் என்று சொல்லிவிட்டு
5.மகரிஷிகளின் அருள் சக்தியால் குடும்பத்தில் எல்லோரும் நலம் பெற வேண்டும்.
6.எங்கள் குழந்தைகள் சிந்தித்துச் செயல்படும் தன்மை வேண்டும்
7.என் குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று
8.இது ஒரு பழக்கமாக வைத்து நீங்கள் தியானிக்க வேண்டும்.

நீங்கள் கண்ணைத் திறந்தே இவ்வாறு தியானியுங்கள். கண்ணை மூடித் தியானிக்க வேண்டாம்.

1.நீங்கள் ஆயுட்கால மெம்பராகச் சேர்ந்து அங்கத்தினராக இருந்திடல் வேண்டும்.
2.நாம் வேறல்ல… நீங்கள் வேறல்ல என்ற நிலைகளும்
3.இந்த உலகம் நலம் பெற வேண்டும்
4.உலகம் இருட்டிலிருந்து அனைவரையும் மீட்டிடும் சக்தியாக நாம் கொண்டு வருதல் வேண்டும்.
5.குறைகள் நமக்குள் வராது பாதுகாத்தல் வேண்டும்.
உயர்ந்த மனிதர்களாக இருப்பார்கள். எல்லாருக்கும் உதவியும் செய்திருப்பார்கள். ஆனால் உதவி பெற்றவர் இறந்து விட்டால் “நான் உதவி செய்தேன்… அவர் இறந்துவிட்டாரே…!” என்று எண்ணுவார்கள்.

அன்று மக்கள் மகிழ்ச்சியாக வாழ ஏற்படுத்தப்பட்ட சமூக அமைப்பான மதம்… இன்று கடவுள் என்ற பேரால் போர் முறைக்கு வந்து விட்டது – ஈஸ்வரபட்டர்

“மதம்…” என்ற சொல்லோ முந்தைய நிலைகளில் மனித இனம் மகிழ்ச்சியாக வாழ ஏற்படுத்தப்பட்ட “சமூக அமைப்பு…!” ஆனால் இன்றோ மதம் என்ற சமூக அமைப்பே… “கடவுள்” என்ற பெயரால் ஒன்றுக்கொன்று ஏற்காது போர் முறையாகி ஆகிவிட்டது.

1.மனிதர்கள் உலக ஆசைப் பிடிப்பில் சிக்குண்டு
2.இந்த உடல் வாழ்க்கையையே பிரதானமாகக் கருதி
3.ஆன்மாவை உயர்த்தும் அறிவின் ஆற்றல் குறைவுபட்டு
4.மனிதனின் எண்ணமே மீளாப் பிடிக்குள் ஆட்பட்டு
5.மீளும் வழி அறியும் செயலையே அறிய முடியாத காலங்களில் எல்லாம்
6.மனித குலம் காக்கப்பட அவதார புருஷர்கள் அவதரித்த பூமி தான் நாம் வாழும் இந்தப் பூமி.

மனிதன் தன்னிலை உயர்த்துவதற்காக என்று… அன்று மகான்களால் காட்டப்பட்ட நெறி முறைகளையும் சுட்டிக் காட்டப்பட்ட அறிவின் ஆற்றல்களையும்… அந்த மகான்களுக்குப் பின் வழி வந்த சீடர்கள் மதம் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு விட்டார்கள்.

1.நாபிமனு முதல் வர்த்தமான மகாவீரர் வரை என்று சொல்லும் வரைமுறைகள் (பாரம்பரியம்) எல்லாம் எதற்கப்பா..?
2.வரையறையின்றிக் காட்டுவதே மதங்களின் பிடியில் அகப்படச் செய்வதற்குத்தானா…?
3.அந்த வரைமுறையை இன்று காட்டுபவன் அன்றைய நிலையைச் சிந்தித்தானா..?

மனித வாழ்க்கை மேம்பட வேண்டும் என்று சிந்தித்த நாபிமனு அதைச் செயல்படுத்த முனைந்து…
1.ஞானப் பாதையை காட்டிய ரிஷப தேவர் (ஆதிநாதர்) வழியில் வந்த
2.தம் ஆன்மாவைப் பிறவிக் கடலிலிருந்து கரையேற்றிக் கொண்ட எத்தனையோ மகான்கள்…
3.ஜீவ காருண்யம் நல்லொழுக்கம் நற்செயல் என்று போதித்த வழி முறைகள் எல்லாம்
4.“மதம் கொண்ட…!” மதத்தினை வளர்க்கத்தானா…?

வர்த்தமானர் பெற்றதும் ஓர் நல் நிலை தான்…! அவர் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்ட கடமை.. விதி… சரீரம் தொட்டுச் செயல்படுத்த முனையும் வாய்ப்பு… இன்றைய பரபரப்பான உலகியல் வாழ்க்கை நெறியில் இல்லையப்பா…!

1.சன்னியாசிக்கு என்று ஒரு வழி முறையும்
2.சம்சாரிக்கு என்று ஒரு வழி முறையும் அன்று காட்டியவற்றில்
3.உணர்ந்து கொண்டார்களா அனைத்தையும்…? அவைகளிலும் மாற்றம் ஏற்பட்டு விட்டது.

வர்த்தமானன் கடவுளையா சொன்னான்..? இல்லயே…! மதம் என்ற பெயர்படுத்த மனித ஆத்மாவின் வளர்ச்சியை அல்லவோ கூறினான்.

நாம் சுட்டிக் காட்டும் இந்தத் தியானத்தின் வழி முறையில் காக்கப்பட வேண்டியது ஆன்மா தான் என்று கூறினாலும் காக்கப்பட வேண்டியது சரீரமும் தான்,

அன்று சமுதாய அமைப்பில் மனித இனத்தின் எண்ணிக்கை குறைவுபட்ட காலச் சூழலில்… மகான்கள் நடைமுறைக்குக் காட்டிய செயல்களைச் செயல் முறைக்குக் கொண்டு வரும் வழி வகைகள் இருந்தன.

ஆனால் இந்தக் கலியில் உடலை வருத்திடும் செயல்கள் தேவை தானா…?

உன் கண்ணிலிருந்து நீர் வழிகின்றது. மனம் வேதனைச் சூழலில் ஆட்படுகின்றது, மனம் சங்கட அலைகளில் சிக்குண்டிருக்கும் பொழுது ஆத்மா வேதனையுறாவிட்டால் உடல் வருந்திட நீர் வரக் காரணம் என்ன..? துக்கம் சந்தோஷம் அனைத்துமே ஆன்மாவில் பதிவு நிலைகள் தான்.

1.மனித மன நடை முறைச் செயலுக்கு
2.நல் வாழ்வு நற்கதிக்கு இதை விட வேறு ஆக்கமில்லை என்ற நிலையில்
3.இந்தத் தியான வழி கொண்டு உண்மையை உன்னுள்ளே ஊன்றிப் பார்.

வாழ்க்கையில் நேரும் சந்தர்ப்பங்களை எல்லாம் நல்லதற்காகப் பயன்படுத்தப்படும் பொழுது அதிலே நிறைவு காணும் மனம் பெற்று விட்டால் தன் ஆன்மாவை உயர்த்தும் மெய் வழியை நிச்சயம் ஒவ்வொருவரும் உணரலாம்.

உச்சியில் ஏற்றும் அண்ணாமலையார் தீபம்

 

என்னை வேதனப்படுத்தினான்… துன்பப்படுத்தினான்… என்று ஒரு புறம் நாம் மற்றவர்களை எண்ணினாலும் அன்புடன் பாசத்துடன் ஒருவருடன் பழக்கப்படும் பொழுது “அவர் நோயால் வேதனைப்படுகின்றார்…” என்றால் அந்த வேதனையை நாம் நுகர்ந்தால் வாலியாகி விடுகின்றது.

அந்தச் சமயத்தில் நமக்குள் இருள் தான் சூழ்கிறதே தவிர நல்லதை எண்ண முடியவில்லை. இந்த நஞ்சின் தன்மை நமக்குள் ஆன பின் உணர்வின் ஒளியின் (வெளிச்சத்தை) நிலையை நாம் காணும் நிலைகள் மறைக்கப்படுகின்றது.

1.இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் எதைப் பெற வேண்டும்…?
2.எந்த வழியில் நாம் வாழ வேண்டும்…?
3.எதன் வழிகளில் இந்த வாழ்க்கை வழி நடத்த வேண்டும்…? என்ற நிலையைத் தெளிவுபடுத்தும் நன்னாள் தான் திரு அண்ணாமலை தீபம்.

நாங்கள் பார்க்கும் அனைவரும் நலம் பெறவேண்டும் என்று நம் உயிரின் தன்மை கொண்டு வேண்டும் போதெல்லாம் மலையின் உச்சியில்… அதாவது உடலின் உச்சியில்… உயிரான அண்ணாமலையிடம் தான் வேண்டுகின்றோம். அவன் புருவ மத்தியில் தான் அமைந்துள்ளான்.

ஆகவே இந்த உணர்வின் தன்மை கொண்டு நாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்றும் நாம் பார்ப்போர் அனைவரும் அந்த நிலை பெற வேண்டும் என்றும்
1.நம் நினைவாற்றலை இங்கே கொடுக்கப்படும் போது
2.நமக்குள் பகைமையூட்டும் உணர்வின் தன்மைகளை அது மறைத்து விடுகின்றது… அதை அடக்கிவிடுகிறது.
3.இப்படித்தான் நமக்குள் ஒளியின் சுடராக… வளர்க்கும் ஜோதியாக… நாம் தீபமாக முடியும்.

ஆனால் அங்கே (உச்சியிலே) வெறும் ஜோதியைப் பார்த்து அருள் ஒளியாக நாம் மாற முடியாது…!

ஆகவே அனைவரது குடும்பங்களிலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்… அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்… வைரத்தைப் போன்று அவர்கள் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும்… வைரத்தைப் போன்று அவர் செயல்கள் ஜொலிக்க வேண்டும்… வைரத்தைப் போன்று அவர்கள் எண்ணம் ஜொலிக்க வேண்டும்… அவர்கள் சொல்லில் இனிமை பெற வேண்டும்… என்று
1.அனைவருக்காகவும் நாம் இப்படி எண்ணும் போது
2.;அனைவரின் உணர்வுகளையும் நமக்குள் ஒன்றாக ஒளியாக இணைத்துக் கொள்கின்றோம்.

சாதாரணமாக காரம் உப்பு கசப்பு துவர்ப்பு இவை எல்லாமே ஒன்றுக்கொன்று மாறுபட்ட சுவைகள் தான் ஆனால் அதே சமயத்தில் சாதமோ ஒன்றாக வெண்மையாக இருக்கின்றது.

மாறுபட்ட சுவை கொண்ட பலசரக்குகளை ஒன்றாக இணைத்து அவைகளைச் சுவையின் உணர்ச்சியாகத் தூண்டி சப்… என்று இருக்கும் பொருளுடன் கலக்கப்படும் போது அது உணர்ச்சியின் தன்மை கொண்டு நாம் உணவாக ஏற்றுக் கொள்ளும் தன்மை வருகின்றது.

இதைப் போன்று தான்…
1.நம் வாழ்க்கையில் பிறருடைய தீமையின் உணர்வுகள் நமக்குள் வந்தாலும்
2.அந்த அருள் ஒளியின் சுடரைக் கொண்டு பகைமை உணர்வை மாற்றி
3.நமக்குள் சுவை கொண்ட உணர்வாக மாற்றியமைத்தல் வேண்டும்.

இவை அனைத்தும் ஒருங்கிணைந்து உணர்வின் தன்மை நம் உடலுக்குள் பரப்பப்படும் பொழுது… உடலில் உள்ள முந்திய நிலைகள் பகைமை உணர்ச்சிகளைத் தூண்டும் அந்த அணுக்களை… நமக்குள் நோயாக மாற்றி நல்ல அணுக்களைச் செயலற்றதாக ஆக்கும் அத்தகைய நிலைகளிலிருந்து மாற்றிட முடியும். அத்தகைய நன்னாள் தான் கார்த்திகை தீபம்.

ஏனென்றால் ஒருவருக்கொருவர் கலந்த நிலையில் அது பகைமை ஊட்டும் உணர்வின் அணுக்களாக விளைந்ததனால் தான் நமக்கும் நோய் வருகிறது.

இதை போன்று நீங்கள் ஒவ்வொருவரும் நாம் பார்த்த அனைவரும் அவர்கள் வாழ்க்கையில் வைரத்தைப் போன்று ஜொலிக்க வேண்டும் என்ற எண்ணங்களைச் சொன்னால் போதும்…!

1.அவர்கள் வாழ்க்கையில் வைரத்தைப் போல ஜொலிக்க வேண்டும்… அவர்கள் செயலும் ஜொலிக்க வேண்டும்…
2.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும்
3.எங்கள் செயல் ஜொலிக்க வேண்டும் சொல் ஜொலிக்க வேண்டும்
4.எங்கள் சொல்லைக் கேட்போர் ஜொலிக்க வேண்டும் என்று இந்த உணர்வினைக் கலந்து பாருங்கள்..

வாலி என்ற வேதனைப்படுத்தும் இந்த விஷத் தன்மை கொண்ட உணர்வுகள் தான் உங்கள் உடலில் உள்ள நல்ல அணுக்களை அழிக்கின்றது… நல்ல செயலையும் ஓடுக்கின்றது.

ஆனால் மேலே சொன்னபடி அனைவரது வாழ்க்கையிலும் ஜொலிக்கும் தன்மை பெற வேண்டும் என்று எண்ணப்படும் பொழுது அந்த வாலியை நாம் நேரடியாகப் பார்ப்பதில்லை.

அருள் ஒளியின் உணர்வை நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுதும்… அனைவரும் ஜொலிப்பின் தன்மை பெற வேண்டும் என்று எண்ணும் பொழுதும்… அதே சமயத்தில் அவர்கள் உடலிலிருந்து வெளிப்படும் இதே உணர்வுகள் அவர்களும் இதைப் போல அருள் ஒளியின் சுடரை எண்ணும் போது நமக்குள் அறியாது வரும் நோயைத் துரித நிலைகள் கொண்டு மாற்றும்.

1.ஏனென்றால் தீமைகளை நாம் நேரடியாகப் பார்ப்பதில்லை
2.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுடன் எண்ணும் பொழுது எல்லாம் சரியாக இருக்கும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பிறருக்கு உதவி செய்பவர்களுக்கு வரும் சிக்கல்கள்:

உயர்ந்த மனிதர்களாக இருப்பார்கள். எல்லாருக்கும் உதவியும் செய்திருப்பார்கள். ஆனால் உதவி பெற்றவர் இறந்து விட்டால் “நான் உதவி செய்தேன்… அவர் இறந்துவிட்டாரே…!” என்று எண்ணுவார்கள்.

அதே சமயத்தில் உதவி பெற்றவரோ இறக்கும் பொழுது “மகராசன்…! தக்க சமயத்தில் எனக்கு உதவி செய்தார்… நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்…! என்ற எண்ணத்தில் ஆன்மா பிரிந்து விட்டால் உதவி செய்தவரின் உடலுக்குள்ளே நேராக வந்து விடுகிறது.

ஆனால் உதவி செய்தவர் தப்பு செய்யவில்லை. உதவி தான் செய்தார். அப்படி உதவிகள் செய்தாலும் பிறிதொரு ஆன்மா உடலுக்குள் வராது தடுக்க வேண்டும்.

வேதனை என்பது விஷம். அவர் வேதனையான உணர்வை நாம் எடுத்துக் கொண்டு உதவி செய்தோம் என்றால் அந்த நிலை ஆகிவிடும்.

ஆனால் அதை அடக்கியவன் மகரிஷி. அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி இதைச் சொல்லித் தான் அடுத்தவர்களுக்கு நாம் உதவி செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும்.

துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். அவர் உடலில் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். அவர் குடும்பங்கள் நலம் பெற வேண்டும். அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று சொல்லி மற்றவர்களுக்கு உதவி செய்தால் அவர்கள் உணர்வு நமக்குள் வராது.

துன்பங்களைப் பெரிதாக எண்ண வேண்டியதில்லை… சகலத்திற்கும் தீர்வு உண்டு – ஈஸ்வரபட்டர்

மனித குல மேன்மையின் சிறப்புக்கு வழி காட்டிய மகான்கள் பலரும் உண்டு.

மனிதர்கள் வாழும் வாழ்க்கை நெறி முறைக்கு அன்பின் வழியாக ஜீவகாருண்யத்தையும் இல்வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறியும் நல் நடத்தையும் பல வகைகளிலும் எடுத்துக் காட்டியுள்ளார்கள்.

அதைச் செவ்வெனச் செய்யத் தியான முறைகளையும் அதன் மூலம் தெளிந்து கையாள வேண்டிய வழி வகைகள் இன்னென்னெது தான்…! என்று
1.தன்னைத் தான் உணரும் பக்குவத்திற்கு
2.இவைகளே ஏணியாக நின்று உயிரான்மாவின் சக்தியை உயர்த்தும் என்ற போதனா முறைகளையும் கொடுத்தார்கள்.

ஆனால் தன் வாழ்க்கையையே தியானமாக்கும் நிலைக்கு அந்த எண்ண வலுவை கூட்டிக் கொள்ளும் ஆத்மாக்கள் எத்தனை பேர்களப்பா…?

உலக வாழ்க்கை நடைமுறை இல்லற நெறிகளில் வாழ்ந்திடுபவர்கள் “தன்னைத் தாக்கிடும்…” எதிர் மோதல்களையே எண்ணி… தனக்குள்ளேயே குமைந்து கொண்டிருந்தால் வரும் துன்பங்கள் விலகிவிடுமாப்பா…?

1.வாழ்க்கைத் துன்பங்களிலிருந்து மீளவே “தியானம்…!” என்பதை உணர்ந்து கொண்டு
2.நன் நெறிகளைக் கடைப்பிடிப்போன் – வரும் துன்பங்களைப் பெரிதாக எண்ணிடாமல்
3.அவைகளை விலக்கித் தன் ஆத்மாவையும் காத்துக் கொண்டு
4.வாழ்க்கைச் சுவைதனைச் சுவைத்து வாழும் வாழ்க்கையில் முழுமையை (பேரானந்தத்தை) அடைகின்றான்.

அப்படி இல்லாது துன்பங்களை எண்ணிக் கலக்கமுறும் செயலால் உயிரையே மாய்த்திட வேண்டும் என்ற தற்கொலையின் எண்ணச் செயலில் எதை உன்னால் அளித்திட முடிந்திடும்…?
1.ஒன்றிலிருந்து ஒன்று இயற்கையின் வளர்ச்சியில்
2.ஒன்று தன் செயலில் மற்றொன்றாக உருவெடுக்குமே அல்லாது
3.எதை அழித்திட முடியும்…?

நீ எடுத்த துக்க அலைகள் உன் உடலுக்குள் வலுவாக வீரியமாகச் செயல் கொண்டு ஆவிகளின் பிடியில் (இறந்த மனிதர்கள்) சிக்குண்டு அல்லலுறும் நிலையே வேண்டாமப்பா…!
1.சகலத்திற்குமே தீர்வு உண்டு…!
2.வாழ்க்கைத் துன்பங்களிலிருந்து மீளவே இந்த முறைகளை உணர்த்துகின்றோம்.

மகான்கள் அளித்திட்ட நல் நிலையான அந்தப் பேறுகளைக் கடைப்பிடித்து ஒழுக்கத்தின் வழியில் நின்று அன்பு கொண்ட வாழ்க்கை வாழ வேண்டும் என்ற வைராக்கியமான சிந்தனையைக் கொண்டால் தான் ஆக்கம் அளிக்கும்.

மகாவீரர் காட்டிய உயிரின் பரி நிர்வாண நிலை என்ன…?

உலக பேராசைகள் என்ற மாயப் பிடிப்பில் இருந்து விடுபட்டு உயிராத்மாவின் சக்தியை வலுக்கூட்டி வைராக்கிய சிந்தனையை வலுக்கூட்டவும் ஜீவகாருண்ய வழியில் ஒழுகும் முறை ஏற்படுத்திக் கொண்டதும் “தன் உயிராத்மாவின் சக்தியை உயர்த்தவே…!”
1.மகாவீரர் பட்டினி கிடந்தது
2.தன் ஆத்மாவில் எத்தகைய தீதும் சேராது… எண்ணம் கடந்த செயல் நிலையே.

ஆனால் இந்தக் கலியில் புறச் செயல்களின் (வேலைப் பளு) ஆதிக்கம் மிகுந்துள்ள சூழலில் உடலை வருத்திடும் செயலில் (விரதம்… நேர்த்திக் கடன்) எண்ணம் கூடி விட்டால் நல் ஆக்கம் பெறுவதில் தேக்கம் தான்.

மனிதச் சரீர உடல் உறுப்புக்கள் இல்லற ஒழுக்க நெறியில் கடமைகளும் ஆற்றிடச் செயல் கொள்ளும் பொழுது
1.உடல் உழைப்பு கொள்ளும் பொழுது
2.அந்தச் சரீரத்தில் குறைவுபட்ட சக்தியின் சேமிப்பிற்கு ஆகாரமும் தேவைதான்.
3.நாவின் சுவைக்காக அல்ல…!

ஆகாரம் புசித்தலில் அதிக அளவும் விஷம் தான். ஆகவே ஆகாரத்தை அமுதமாக உட்கொண்டே நல் நிலை பெற்றிடுங்கள்.

“காற்றிலிருந்து ஆகாரம் பெற்றிடும் செயலுக்கு…” ஆத்ம வலு கூட்டிக் கொள்ளும் முறையும்… யாம் காட்டிடும் தியான வழியில் வழி உண்டு…!

தீமைகளை நேர்முகமாக எதிர்த்து மாற்ற முடியாது… மறைந்திருந்து தான் மாற்ற வேண்டும்

 

1.இந்த உலகில் எத்தனையோ பேரை நாம் சந்தித்திருந்தாலும்
2.அதன் வழி அவர்கள் உணர்வை நுகர்ந்தறிந்தாலும்
3.நுகர்ந்த உணர்வை நம் உயிர் அணுவாக மாற்றி நம் உடலுக்குள் இணைத்து விடுகின்றது.
4.அதிலே தீங்கு விளைவிக்கும் நிலையாக இருந்தால்
5.அந்தத் தீமை செய்யும் அணுக்களிலிருந்து நாம் விடுபட்டே ஆகவேண்டும்.

அதைத் தான் வாலி என்று சொல்வது.

இப்படி அனைவரின் உணர்வுகளும் நமக்குள் வரப்படும் போது நம்மை அறியாது விளையும் அந்த அணுக்களை அருள் மகரிஷிகளின் உணர்வக் கொண்டு அந்த இருளை அகற்றிடும் சக்தியாக அந்த வாலியை வென்றிடும் தன்மை பெற வேண்டும்.

ஏனென்றால் “ஒரு நோயாளியின் உணர்வை” மீண்டும் மீண்டும் பதிவாக்கிக் கொண்டால்… அல்லது “ஒருவன் எனக்குத் தீமை செய்தான்…” என்று அவனை அடிக்கடி நினைவு கொண்டால் அது வாலியாகின்றது…! நம் நல்ல உணர்வின் வலுவைச் சரி பகுதி அது எடுத்துக் கொள்கிறது. அதனால் வேதனப்படுகிறோம் அல்லது ஆத்திரப்படுகின்றோம்.

இந்த வகையில் பிறருடைய எண்ணங்களை நாம் நேரடியாக எண்ணப்படும் பொழுது அந்த உணர்வு வருகின்றது. தீமையோ கஷ்டமோ தொழிலில் நஷ்டமோ உடல் நோயோ நாம் எடுத்துக் கொண்ட நிலைகள் இப்படி எத்தனையோ வருகிறது.

இதை எல்லாம் மாற்றியமைக்க வேண்டும் என்றால் அடுத்த கணமே நம் நினைவினை வானை நோக்கிச் செலுத்தி… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி… இருளை அகற்றிய அருள் ஒளியை நாம் நுகர்ந்து நம் உடலுக்குள் சேர்க்க வேண்டும்.
1.வாலியை இராமன் நேரடியாகப் பார்க்கவில்லை…
2.மறைந்திருந்தே வாலியைத் தாக்கினான் என்று இராமாயணத்தில் இதைக் காட்டுகின்றார்கள்.

மறைந்திருந்து என்றால் அருள் மகரிஷிகளின் ஒளியை நமக்குள் சேர்த்து அந்தத் தீமை செய்யும் உணர்வை… அந்த வாலியை நாம் வலுவிழக்கச் செய்ய வேண்டும்.

இராமன் என்றால் எண்ணம். நாம் எடுக்கும் எண்ணங்கள் அந்தச் சுவையின் உணர்வு எதுவோ உயிரிலே பட்ட பின் உணர்வின் ஒலியாக பல பல எண்ணங்கள் நமக்குள் வருவதும்… அதற்குத்தக்க இந்த உணர்ச்சிகள் நம் உடலை இயக்குவதும்… எந்தெந்த உணர்வை எடுக்கின்றோமோ அவை ஒன்றுடன் ஒன்று கலக்கப்படும் பொழுது நல்ல குணங்களை மாற்றுகின்றது.

சாயப் பட்டறைகளை எடுத்துக் கொண்டால் பல கலவைகளை (நிறங்கள்) உருவாக்கப்படும் பொழுது அதனதன் சக்திகளை இழக்கின்றது. எதனின் உணர்வு மாறுகின்றதோ அந்த நிறமாக மாறுகின்றது.

சமையல் செய்யும் போது சுவையாகச் செய்ய வேண்டும் என்றால் அதிலே பல சரக்குகளைப் போடுகின்றோம். அது ஒவ்வொன்றும் பல பல சுவை கொண்டது… தனியாகச் சாப்பிட்டால் பல உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது. இருந்தாலும் அந்த உணர்வுகளை எல்லாம் சமப்படுத்தித் தான் சுவை மிக்கதாக உருமாற்றுகின்றோம்.

இதைப் போல் தான்…
1.நமக்குள் பலருடைய எண்ணங்களும் குவிந்திருப்பினும்
2.அதனதன் எண்ணத்தை உருவாக்கும் அணுக்கள் நமக்குள் உருவாகி இருந்தாலும்
3.அருள் ஒளிச் சுடர் கொண்ட அருள் ஞானத்தின் நிலையை நமக்குள் எடுத்து
4.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை அனைவரும் பெறவேண்டும் என்ற உணர்வைக் கலந்து விட்டால்
5.நமக்குள் தீமை செய்யும் உணர்வின் அணுக்கள் பலவீனம் அடைகின்றது.

அப்பொழுது அது வாலி என்ற நிலைகளை வீழ்த்துகின்றது. இதைத் தான் இராமன் மறைந்திருந்து வாலியை வீழ்த்தினான் என்று சொல்கிறார்கள்.

ஆனால் இராமாயணக் காவியங்களைப் பார்க்கப்படும் போது இராமன் கடவுள் என்றால்… அவன் ஏன் வாலியை மறைந்திருந்து தாக்க வேண்டும்…? என்று சில படித்த வர்க்கத்தினர் வாதம் செய்கிறார்கள்.

ஏனென்றால் தீமை செய்யும் உணர்வை நேரடியாகப் பார்க்கும் பொழுது அந்தத் தீமையின் உணர்ச்சிகள் தான் நமக்குள் தூண்டப்படுகின்றது.

ஆனால் அருள் ஒளி என்ற உணர்வை எடுக்கப்படும் பொழுது அதை மறைத்து விடுகின்றது. அதனின் செயலாக்கங்களைக் குறைத்துவிடுகின்றது.

ஆகவே
1.மனிதன் வாழ்க்கையில் எண்ணங்கள் எப்படி உருவாகின்றது…?
2.எது வலிமை பெறுகின்றது…? எதன் வலிமையில் மனிதன் இயங்குகின்றான்…?
3.மனிதன் என்ற நிலையில் எந்த வலிமை மனிதனை மாற்றுகின்றது…? என்பதை எல்லாம்
4.காவியத் தொகுப்பின் மூலம் தெளிவாக உணர்த்தியுள்ளனர் ஞானியர்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் பார்ப்போர் அனைவரும் என்னைப் பார்ப்போர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அந்தப் பேரானந்த நிலை பெற வேண்டும் என்ற உணர்வைத் துருவ தியானத்தில் அனுதினமும் எடுக்க வேண்டும். எடுத்தால் பிறரின் உணர்வுகள் நமக்குள் வாலியாக இயக்காது…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் எம்மைக் காட்டுக்குள் அழைத்துச் செல்லப்படும் பொழுது ஒரு கீரியும் நல்ல பாம்பும் போர் செய்து கொண்டிருக்கின்றது.

இது அதைத் தாக்க எண்ணுகின்றது. ஆனால், அது இதைத் தாக்க எண்ணுகின்றது.

பாம்பு சீறித் தாக்கினாலும் கீரி அதனிடம் சிக்குவதில்லை. கீரி தாவிச் சென்று அந்தப் பாம்பைத் தான் கவ்விப் பிடிக்க வேண்டும் என்று அதனின் விஷத்தன்மையைப் பாய்ச்சுகின்றது.

ஒரு மணி நேரம் போர் முறையாக இருக்கின்றது. நின்று பார்க்கும்படிச் சொல்கின்றார் குருநாதர். ஆனால், மனிதன் அருகே நிற்கின்றான்.., “தன்னைத் தாக்கிவிடுவான்” என்று இல்லை.

“எதிரியை வீழ்த்திவிட வேண்டும்..,” என்ற உணர்வுகளில் தான் இரண்டும் போர் செய்கின்றது.

அங்கே நின்று வேடிக்கை பார்க்கின்றேன். பாம்பு மனிதனைக் கண்டால் சீறித் தாக்கும் அல்லவா..,? இல்லை. எதனின் நிலைகளில் தன் எதிரியைத் தாக்க வேண்டும் என்று இருக்கின்றதோ அதிலேயே தான் இருக்கின்றது.

“அருகில் சென்று நில்..,” என்கிறார் குருநாதர். அதனுடைய போர் முறையில் தான் இருக்குமே தவிர உன்னைத் தாக்காது.., என்று அருகில் சென்றே பார்க்கும்படி செய்கின்றார் குருநாதர்.

போர் செய்யும் பொழுது தவறி அந்தப் பாம்பின் விஷத்தன்மை கீரியின் உடலில் தாக்கிவிடுகின்றது.

விஷத்தின் தன்மை ஆனபின்.., “கிறு..கிறு..,” என்று சுழல்கின்றது.

சுழன்று சுற்றி வரப்படும் பொழுது விஷத்திலிருந்து விடுபடும் அந்த மணத்தை எப்படி நுகர்கின்றது? என்று உணர்த்துகின்றார் குரு.

அந்த மணத்தை நுகரப்படும் பொழுது விஷத்தை முறிக்கும் தாவர இனங்கள் இருக்கும் பக்கம் இருக்கும் அந்தத் திசையை நோக்கிப் போகின்றது.

கீரியின் மேல் விஷம் தாக்கப்பட்ட பின்.., “முதலில் முடியாது” இருக்கின்றது. அந்த மணத்தை நுகர்ந்து.., “போகப் போக.., வேகம்..,” அதிகமாகின்றது.

அதைப் பின் தொடர்ந்து “போய்ப் பார்..,” என்று சொன்னார் குருநாதர்.

கீரியின் பின்னால் நான் சென்றேன்.

முதலில் மெதுவாகப் போனது. அந்தச் செடியின் அருகிலே செல்லும் பொழுது ரொம்பவும் வேகமாகப் போனது. போய் அந்தச் செடியின் மீது பிரள்கின்றது.

பிரன்டபின் அதற்குள் இருக்கும் நஞ்சின் உணர்வுகள் மாறுகின்றது. நான் கீரி எந்தச் செடியின் மீது பிரள்கின்றது என்று பார்ப்பதற்கு முன்னாடி “திருப்பி ஓடி வருகின்றது”.

ஓடி வந்த பின் மீண்டும் அந்தப் பாம்பைத் துரத்தி இரண்டும் சண்டையிடுகின்றது. பழி தீர்க்கும் உணர்வாக அது செயல்படுத்துகின்றது. பாம்பை இரண்டாகக் கத்திரித்து விட்டது.

பாம்பு சீறித் தாக்கினாலும் எப்படித் தன்னைப் பாதுகாத்து இந்த உயிரினங்கள் எப்படி உருவாகின்றது? அதிலிருந்து ஒவ்வொன்றும் எப்படி படிப்படியாகத் தன் வளர்ச்சியில் வருகின்றது? விஷத்தை முறிக்கும் அந்த ஞானம் எப்படி வந்தது? இதைக் காட்டுகின்றார் குருநாதர்.

அந்த விஷத்தின் தன்மை அதன் உணர்வுக்குள் பட்டபின் அதிலிருந்து தப்பிக்கும் அந்த உணர்வின் ஞானம் கீரிக்கு வருகின்றது.

இப்படித்தான் ஒவ்வொன்றிலும் ஒவ்வொன்றும் நுகர்ந்து கொண்ட பின் தீமைகளைப் போக்கி தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வுகள் வளர்ந்து வளர்ந்து “இன்று நம்மை மனிதனாக உருவாக்கியது..,” என்பதை அங்கே காட்டுகின்றார் குருநாதர்.

அதே சமயத்தில் இத்தகையை விஷத் தன்மை கொண்ட நிலைகளிலிருந்து மீட்டிடும் உணர்வுகள் அதனுடன் இணைந்து அத்தகைய “விஷத்தை முறித்திடும் தாவர இனங்கள்.., எப்படி உருவானது..,?” என்ற நிலையையும் காட்டுகின்றார்.

குருநாதர் அனுபவபூர்வமாகக் காட்டி இப்படி அறிந்து வந்த உண்மையைத்தான் உங்களுக்குள்ளும் இதை உருவாக்குகின்றோம்.

சந்தர்ப்பத்தில் நீங்கள் செல்லப்படும் பொழுது மணத்தால் நுகர்ந்து இந்தச் செடியின் தன்மையை அறியும் பருவம் உங்களுக்குள்ளும் வரும்.

இதைப் போல உணர்வுகளை நீங்கள் தெரிந்து கொள்ளும் ஆற்றல் உங்களுக்குள் பெருகும். நீங்கள் வைத்தியமாகவும் பார்க்கலாம்.

இப்பொழுது உபதேச வாயிலாக உங்களுக்குள் பதிவான பின் இந்த உணர்வின் தன்மையை நுகர்ந்து நீங்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இணைத்துப் பெருக்கிக் கொள்ளுங்கள்.

பெருக்கிக் கொண்டால் ஒரு விஷத் தன்மை கொண்ட உணர்வுகளை “உங்கள் பார்வையால் அது போக வேண்டும்..,” என்றால் அந்த விஷத்தின் தன்மை இறங்குவதையும் பார்க்கலாம்.

அதே சமயத்தில் நீங்கள் நண்பர்களுக்குள் பழகுகின்றீர்கள். “வெகு தொலைவில்..,” இருந்தாலும் நண்பருக்கு நோய் என்று சொன்னால் அந்த நோய் நீங்க வேண்டும் என்று “உணர்வைச் செலுத்தினால்” அங்கே விஷத்தன்மைகள் குறைவதைப் பார்க்கலாம்.

இதைப் பரீட்சித்துப் பாருங்கள்.

உங்களுக்குள் இதனின் ஞானத்தின் வழி கொண்டு “தீமைகளை அடக்கிடும்.., தீமைகளைப் போக்கிடும்.., மெய்ப்பொருளை உணர்ந்திடும் அந்த ஆற்றலை..,” உங்களுக்குள் பெருக்க முடியும்.

உங்களை நம்புங்கள்.

சாமியை நம்புகின்றோம் சாமியாரை நம்புகின்றோம். ஜோசியத்தை நம்புகின்றோம் மந்திரத்தை நம்புகின்றோம் நல்ல நேரம் வருகின்றதா..,? கெட்ட நேரம் வருகின்றதா..,? ஜாதகம் பார்த்துத் திருப்பூடுகின்றோம்.

ஆக, ஜாதகம் பார்த்துத் திருமணம் செய்த எத்தனை பேர் ஒன்றி வாழ்கின்றனர்..,? எத்தனை பேர் மரணமடைகின்றனர்?

சாமிக்கு அபிஷேகமும் ஆராதனையும் அதே சமயத்தில் பாவத்தைப் போக்க எத்தனையோ யாகங்களைச் செய்கின்றார்கள். அவர்கள் எல்லாம் மடியாமல் இருக்கின்றார்களா..,?

துன்பங்கள் போய்விட்டதா.,? சற்றுச் சிந்தியுங்கள்.

ஆக, நம் எண்ணங்கள் எங்கெங்கோ செல்கின்றது? இந்த உடலில் இச்சைக்குத்தான் நாம் செயலாக்கிக் கொண்டுள்ளோம்.

துன்பம் வரும் பொழுதெல்லாம் உபதேச வாயிலாகக் கேட்டுணர்ந்த உணர்வுகள் கொண்டு உங்கள் எண்ணத்தை “விண்ணிலே செலுத்துங்கள்”.

அந்த மகரிஷிகளின் ஆற்றலை நுகருங்கள். துன்பங்கள் புகாது தடுத்துக் கொள்ளுங்கள். அதன் வலிமையைக் குறைக்கச் செய்யுங்கள்.

வலிமையைப் பேருக்கிய அந்த அணுவின் தன்மை வளரத் தொடங்கினால் நாளடைவில் தீமைகள் வந்தால் அந்த விஷத் தன்மைகளை வலுவிழக்கச் செய்யும்.

நம் உடல் எவ்வாறு உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்துள்ள நஞ்சினை மலமாக மாற்றுகின்றதோ அதைப் போல நஞ்சின் தன்மை மாற்றி உணர்வினை ஒளியாக மாற்றும் ஆற்றலை நீங்கள் பெறவேண்டும்.

அதை “எல்லோரும் பெறுவீர்கள்…” என்ற நம்பிக்கையில் தான் இதைப் பாய்ச்சுகின்றேன். குரு அருளைத் திரு அருளாக மாற்றி “அனைவரும் அருள் பெறும் மக்களாக” நீங்கள் உருவாக வேண்டும்.

உயிருடன் ஒன்றும் தியானமே உண்மையான சரணம் என்று உணர்த்தியவரே “காண்டீப முனிவர்…” என்ற ஐயப்பன் – ஈஸ்வரபட்டர்

விண்ணிலே தோன்றும் உயிர்த் தன்மை அணுக்களாகப் புவிக்குள் வந்து உடல் பெற்றாலும் இந்தச் சரீர வாழ்க்கையில் மெய்யை உணரத் தலைப்பட்டால்
1.தன்னுள்ளே ஒளி நாதத்தைக் கூட்டி ஒளியாகக் கலக்க
2.ஒலி நாத வித்துக்களே தேவை.

ஒலி நாத வித்துக்களைப் பெறும் வழியை அறிந்து… அதன் வழி நடந்து… அதற்குரிய இடம் சேரும் தன்மைகளில் வீரியத்தைக் கூட்டித்
1.தனக்குகந்த ஒலி நாதத்தைத் தானே ஈர்த்துத் தேடிக் கொள்ளும்
2.அந்த ஒலி நாதத்தைப் பெறும் அந்தந்த உயிர்த் தன்மை அணுக்களையும் தன் வழியில் வழி நடத்தி ஒலி நாத வித்துக்களாக மாற்றி
3.அதனதன் அமில குண நிலைக்கொப்ப வீரிய நிலை கொண்டு ஒளி நிலையாக
4.நட்சத்திரங்களாக கோளங்களாகப் படைக்கும் சக்தியை வளர்த்தால் அது ஆதி சக்தியின் சக்தியாக அந்தச் சக்தியில் தான் கலக்கும்.

இதன் உண்மை வழிதனில் செயல்பட்டுத் தனக்குகந்த அமில குண வழி வீரியம் கொண்டவரே “காண்டீப முனிவர் என்ற மகான்…!”

பௌருஷம் என்ற என்ற புருஷார்த்த தன்மை வீர குணமாகச் செயல் கொண்டாலும் கோப நிலையை வளர்த்துக் கொண்ட நிலையில் ஆத்மாவின் அமில முலாமாக வளர்த்த பிறகு அதன் வித்தியாசத்தை உணர்ந்து கொண்டார்.

கோபத்தை மாற்றிச் சமப்படுத்தும் “சாந்தமான வீர குணமே ஒளி நிலை பெறும் மார்க்கம்…!” என்றும் அந்த ரிஷிகளின் சக்தியில் தன்னைச் சேர்க்கும் என்றும் தெளிவாக உணர்ந்து கொண்டார் காண்டீபர்.

தாய் சக்தியின் கூட்டு அமில சக்தியோ அல்லது ரிஷி பத்தினி என்ற (மனைவி) சக்தியின் ஆத்ம கலப்போ தான் மாமகரிஷியாக நம்மை ஆக்கும் என்ற உண்மையை உணர்ந்தார்.

அதனின் உந்துதலாக மகரிஷி என்ற நிலையை அடைந்தே தீர வேண்டும் என்ற எண்ண உறுதியே பின் ஐயப்பனாக… ஐயப்ப முனிவராக…! வளர்ந்து அந்த ரிஷித் தன்மை அடையும் நிலை பெற்றுவிட்டார்.

அன்று காண்டீப முனிவராக இருந்து பெற்ற ஞானத்தின் தத்துவத்தில் தன் வளர்ப்பைத் தான் வளர்த்து அதற்காகக் கண்டு கொண்டதே சரணகோஷ நாதத்தின் ஒலி (சரணம் ஐயப்பா…!).

1.மனித உடலே ஒரு காண்டீபம்.
2.அதில் இயக்கும் சக்தியான உயிரே நான் (நாண்).
3.உயிர் இல்லை என்றால் உடல் ஏது..? இயக்கம் ஏது..? நான் ஏது..?
4.இந்தத் தத்துவத்தைக் காட்டி நான்(ண்) ஏற்றுதல் என்ற இணைப்புச் செயலில்
5.உயிருடன் ஆன்மாவைத் தொடர்புபடுத்தும் பக்குவத்தைக் காட்டினார் காண்டீப முனிவர்.

நான்.. நான்…! என்று எல்லோரும் சொல்கிறோம். அந்த நானே இந்த நாணிலிருந்து வந்தது தான். ஆனால் நான் என்று சொல்லி உள் நின்று இயக்கும் உயிரை மறந்த நிலையில் “உடலைத்தான் நான்…!” என்று நம்பி கடைசியில் உயிரையும் ஆன்மாவையும் அறியாது அதைக் காக்காது மீண்டும் மீண்டும் உடல் பெறும் நிலைக்கே இருளுக்குள் சென்று விடுகின்றோம்.

உயிரையும் ஆன்மாவையும் நெருங்கிச் சேர்த்து உயிரான்மாவை (தன்னை) மீட்டிடும் ஒலி நாத ஒளியாகக் காண்டீபம் என்ற கூட்டு இயக்கமாக வீரிய எண்ண உயர் நிலைக்குத் “தன்னைத் தயாராக்க வேண்டும்…” என்றார்.

1.உயிரினை மீட்டும் ஒலி நாதத்தையே “நாணின் ஒலி” என்றும்
2.அதையே உயிர் நாத கீதமாக்கி அந்த வழியின் தொடர்பில் தொடர்ந்து மீட்டும் பொழுது
3.எழும் ஒலி நாதம் “சரணம்…!” என்று உயிர்ப்பிப்பதாகக் கூறி
4.நம் உயிருடன் ஒன்றிடும் ஜெபத்தையே “சரணம்…” என்ற சரணாகதித் தத்துவத்தை வெளிக்காட்டினார் காண்டீப மகரிஷி.

ஐயப்பன் பெற்ற பேரின்ப இரகசியம் இந்த ஜோதித் தத்துவம் தான்.

அதாவது உடலில் உள்ள அத்தனை உயிரணுக்களையுமே ஒளி நிலைப்படுத்திச் சரீரத்தையே ஒளியாக்கி உயிர் ஆன்மக் கலப்பின் ஜோதி ஸ்வரூபமாக்கிக் கொண்டார் ஐயப்பன்.

தனக்குள் எப்படிப் பேரொளியாக மாற்றிக் கொண்டாரோ அந்த அத்தனை உயிரணுக்களையுமே
1.ஆத்ம பிம்ப ஒளிக் கதிர்களாகப் பிரித்து வானில் ஒன்றுபடுத்தி
2.தன் ஆத்ம ஜோதியை எல்லோருக்கும் காட்டினார் ஐயப்பன்
3.அந்த ஐயப்ப ஜோதியே நாம் காணும் “ஆகாய ஜோதி…!”

கண்ணன் கீதா உபதேசம் செய்கின்றான் என்று வியாசகர் சொன்னதன் மூலக் கருத்து என்ன…?

 

1.நம் கண்கள் எப்படி இயக்குகிறது…? என்ற நிலையும்
2.நாம் நுகர்ந்த உணர்வுகள் அணுக்களாக எப்படி உருவாகிறது…? என்றும்
3.உருவான அணு தன் உணர்ச்சிகளைத் தூண்டும் பொழுது உயிருக்கு எட்டி
4.உயிரின் தன்மை ஆணையிடும் போது சிறுமூளையின் பாகம் செல்லப்படும் பொழுது
5.உயிரிலே இந்த உணர்வின் ஒலிகளை எழுப்பி… கண்ணுக்கும் உடலுக்கும் செவிக்கும் நம் மனதிற்கும்
6.அதே உணர்வுகளை ஈர்த்து நமக்குள் எப்படி அறிவிக்கச் செய்கிறது…? என்ற நிலையை
7.வியாசகர் இதைத் தெளிவாக உணர்த்தி உள்ளார்.

மகாபாரதப் போர் என்றும் குருக்ஷேத்திரப் போர் என்றும் அந்த குருக்ஷேத்திரப் போரைக் கண்ணன் தான் வழி நடத்திச் செல்கின்றான் என்றும் காட்டியுள்ளார்.

ஒருவர் செய்யும் தீமையான உணர்வுகளை ஒரு தரம் நாம் உற்றுப் பார்த்து உணர்வின் தன்மையைப் பதிவாக்கி விட்டால் மீண்டும் அதனின் நினைவை எடுக்கப்படும் பொழுது… நம் உயிருடன் சேர்ந்து அந்த உணர்வுகள் சங்கநாதமாக அந்த ஒலிகளை எழுப்புகின்றது… குருக்ஷேத்திரப் போராகின்றது.

அதாவது கண்களால் அவர்களை நினைத்து நாம் சுவாசித்தபின்
1.உயிரிலே படும்பொழுது அந்த உணர்வுகளை இயக்குகின்றது.
2.ஒலி அலைகள் கிளம்பிய பின் நம்மைக் காத்திடும் உணர்வுகள் எழும்பி
3.நாம் எதை எண்ணினோமோ அந்த வலுவின் தன்மை கொண்டு எதிர்த்து உள்ளே போராடச் சென்று விடுகின்றது.

வேதனைப்படுத்தும் உணர்வுகளை நுகர்ந்து விட்டால் நம்மைப் பலவீனப்படுத்தச் செய்கின்றது. நம்முடைய செயல்களைச் சீராகச் செயல்படுத்த முடியாதபடி போகின்றது.

உதாரணமாக நம் பையன் மீது ஒரு கடுமையான வெறுப்பு வந்து விட்டால்… பையனுக்காக வேண்டி சேர்த்த சொத்தையும் அல்லது நாம் சேமித்து வைத்த சொத்தையும் கூட… அந்தப் பொருள்களை எல்லாம் எடுத்து அடித்து நொறுக்கும் உணர்வு தான் வரும்.

இந்த நொறுக்கும் உணர்வுகள் வரும் பொழுது நாம் எதை எண்ணினோமோ அதுவாகவே நாம் மாறுகிறோம். அதைத்தான் கீதையிலே கண்ணன் கூறுவது போன்று வியாசகர் அதைத் தெளிவாகச் சொல்கின்றார்.

வியாசகர் என்றால் அவன் மூடனாக இருக்கும் பொழுது
1.வியாபித்திருக்கும் உணர்வுகளை எல்லாம் தனக்குள் அந்த உணர்வின் தன்மையை அறிந்துணரும் சந்தர்ப்பம் பெற்றான்
2.அனைத்தையும் அறியும் நிலை வந்ததால் அவனுக்கு வியாசகன் என்று காரணப் பெயரை வைத்து அழைத்தார்கள் அக்காலங்களில்…!

பகவான்… தனக்குள் இருக்கும் எல்லாவற்றையும் அந்த உணர்வை நுகர்ந்தறிந்தான். அதைப் பரமாத்மா என்று ஒரு பெயரை வைத்தான் அதாவது தனக்கு முன் பரத்தில் (பரவி) இருக்கக்கூடிய ஆன்மாவைத் தனக்குள் எடுத்தான். அந்த உணர்வின் தன்மை வளர்த்தான் என்பதற்குத்தான் அவருக்கு வியாசக பகவான் என்று இப்படி ஒரு பெயரை வைத்தார்கள்.

1.இந்த மனித வாழ்க்கையில் நம்மையறியாமல் மறைமுகமாக எப்படித் தீங்குகள் விளைகின்றது…?
2.நம்மை அறியாது எப்படித் தீமைகளை விளைவிக்கச் செய்கின்றது…?
3.நம்மை அறியாமலே நமக்குள் உணர்ச்சிகள் எப்படி தோன்றுகின்றது…?
4.நம்மை அறியாமலே நமக்குள் ஏற்படும் இந்த உணர்ச்சிகள் நம் எதிரிக்கும் தூண்டப்பட்டு அந்த உணர்வுகள் என்ன செய்கிறது…? என்று உணர்த்தினார் வியாசகர்

உதாரணமாக ஒருவர் அடிக்கடி நமக்குத் தொந்தரவு செய்கிறார் என்று எண்ணினால் இந்த உணர்வுகள் நம் உடலுக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது. அதே சமயத்தில் எதிரியினுடைய உடல்களிலும் இதே உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.

1.தொந்தரகாகும் போது நாம் வெறுக்கும் உணர்வுகளைத் தூண்டுகின்றோம்
2.அப்போது அந்த வெறுக்கும் உணர்ச்சிகளை அங்கேயும் தோற்றுவிக்கின்றது.

ஆக… நமக்குள் அந்த உணர்வு அது தன் உணவுக்கு அது போராடுகின்றது. அதே போல் அதனதன் உணவுக்கு அங்கேயும் (எதிரியிடமும்) போராடும்.

எதிரிகளை நமக்குள்ளும் வளர்க்கின்றோம்… அங்கேயும் எதிரிகளை வளர்க்கும் சக்தி வருகின்றது.

ஆனால் இதைத் தடைப்படுத்தும் உணர்வுகளை எடுத்து வளர்த்து… அந்தப் பகைமைகளை வென்றவன் துருவ மகரிஷி துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.

துருவ நட்சத்திரமாக இருக்கும் அதிலிருந்து வெளிப்படும் உணர்வை சூரியனின் காந்த சக்தி கவர்ந்தது என்றால் நாரதன் என்று காரணப் பெயர் என்று வைக்கின்றார்கள்.

1.அந்த அலைகளை நாம் நுகர்வோம் என்றால் நமக்குள் அது நாரதனாக இயக்கத் தொடங்குகின்றது
2.நாரதராக நமக்குள் சென்றபின் நாம் எதைப் பிடிவாதமாக வைத்தோமோ அந்த உணர்வைத் தணிக்கச் செய்து விடுகின்றது.

நாம் யார் மேல் வெறுப்பு அடைந்தோமோ அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெற வேண்டும் என்ற உணர்வை வலுப்படுத்தி நம் கண்களை அங்கே செலுத்தப்படும் பொழுது
1.நமது கண்கள் நாரதனுக்குண்டான செயல்களை இங்கே (நமக்குள்ளும்) சொல்லி
2.இந்த உணர்வின் தன்மை கண் கொண்டு பாய்ச்சப்படும் பொழுது எதிரியின் உடலுக்குள்ளும் அந்த உணர்வின் தன்மை பாய்ந்து
3.அந்த நாரதன் வேலையைச் செய்வான்.

நம்முடைய உணர்வுகள் பகைமையாக்கும் உணர்வை மாற்றிடும் தன்மையாக இந்த அருள் ஞான உணர்வுகள் அங்கே ஊடுருவி… சற்று சிந்திக்கச் செய்யும் சக்தியாகவும் வருகின்றது.

அது தான் நாரதன் கண்ணனிடம் சென்றபின்…
1.இவர்கள் இரண்டு பேருடைய உணர்வுகளுக்கும்
2.இந்த கண்களுக்கும் நுகர்ந்த உணர்வுகளுக்கும் எவ்வாறு இயக்கச் செய்கிறது…? ஒன்று சேர்ந்து வாழச் செய்கிறது…? என்று
3.இவ்வளவு தெளிவாக வியாசகர் உணர்த்தி இருக்கிறார் என்ற நிலையை நாம் தெரிந்து கொண்டால் போதும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்றிருக்கக்கூடிய காற்று மண்டலத்தை..,
1.யார்.., எந்த நிலையில் நச்சுத் தன்மையாக ஆக்கியிருந்தாலும்..,
2.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்து
3.நம் உடலுக்குள் அருள் ஞானத்தை உருவாக்கும் சக்தி பெறுகின்றோம்.
4.அந்த நச்சுத் தன்மை நம்மைப் பாதிக்காது தப்ப முடியும்.

இந்தக் குறுகிய காலத்திற்குள் இந்த உடலில் இத்தகைய நிலையை உருவாக்கினால் என்றும் ஏகாந்த நிலை கல்கி ஒளியின் உடலாக மாற்றும்.

இதில் சிரமம் ஒன்றும் இல்லை. உங்களுக்குள் யாம் பதிவு செய்ததை எண்ணினால் காற்றிலிருந்து எளிதில் பெற முடியும்.

விஞ்ஞான அறிவு கொண்டு டி.வி க்களில் இன்னென்ன அலைவரிசை என்கிற பொழுது ஒவ்வொரு இடத்திலிருந்தும் வெளிப்படும் உணர்வைக் கவர்கின்றது.

இன்ன அலைவரிசை என்கிற பொழுது இந்த இடம்.., இந்த நாடு.., என்று அறிந்து அதை எடுத்துக் கொள்கிறோம்.

இதைப் போன்று தான் மக்கள் பேசும் தவறான உணர்வுகள் நமக்குள் பதிவு உண்டு அவர்களை எண்ணினால் அந்த அலை\வரிசைப்படி நமக்குள் கோபம் வரும்.., சங்கடம் வரும்.., வேதனை வரும்.

இத்தனையும் வருகின்றது.

ஆனால், “இத்தனை தீமைகளையும் நீக்கிய..,” உணர்வின் அறிவு கொண்ட அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம் குருவின் துணை கொண்டு அதைக் கவர்ந்தால் “அந்த அலைவரிசை” நமக்குள் வந்து
1.தீமைகளை நீக்கும்.
2.சிந்தித்துச் செயல்படும்
3.நம் வாழ்க்கையை உயர்த்தும்.

இந்த உயர்ந்த உணர்வு வரும் பொழுது இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை என்ற நிலையை நாம் அனைவரும் அடைய முடியும்.

அருள் ஞானிகளாக நீங்கள் மாறி உங்கள் பார்வையில் சர்வ தோஷங்களும் நீங்க வேண்டும். உங்கள் பார்வை சர்வ பிணிகளையும் போக்க வேண்டும். உங்கள் பார்வை எல்லோரையும் ஞானியாக்க வேண்டும்.

இத்தகையை.., “கூட்டங்கள்” அமைந்தால் தான் பேதங்களை மாற்ற முடியும். குருவின் அருளை நிச்சயம் நீங்கள் பெறுகின்றீர்க்ள்.

இதைப் படிப்போர்.., உபதேசத்தைக் கேட்போர்.., அனைவரும் இதன்படி செய்தால்
1.பல ஆயிரம் பேராக மாற்றலாம்.
2.பல ஆயிரம் பேர் பல இலட்சக்கணக்கான பேரை மாற்றலாம்.
3.இந்தப் பூமியைப் பரிசுத்தப்படுத்தலாம்.

ஒரு வேப்ப மரத்திலிருந்து வெளிப்படும் கசப்பான உணர்வைக் கண்டதும் மற்ற உணர்வலைகள் “எப்படி ஓடுகின்றதோ..,” இதைப் போல அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் சேர்க்கப்படும் பொழுது பூமியில் படர்ந்துள்ள
1.“சர்வ தீமையான உணர்வலைகளையும்.., ஓடச் செய்யலாம்”.
2.அல்லது அந்த உணர்வுகள் இயங்காது தடைப்படுத்தலாம்.

ஏனென்றால் அன்றாட வாழ்க்கையில் நாம் எல்லோருடனும் பழகுகின்றோம். பார்க்க நேர்கின்றது, கேட்க நேர்கின்றது.

இப்படி நமக்குள் பலருடைய உணர்வுகளும் பதிவாகி இருப்பதால் அதை இழுக்கக்கூடிய சக்தி வருகின்றது. அதனால் நம் உடலில் கெட்ட அணுக்கள் வளரக் காரணமாகின்றது.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் ஏங்கி எடுத்து தீமைகள் புகாது தடுத்தால் “காலையில் ஆறு மணிக்கெல்லாம்.., நாம் இழுக்க மறுத்த அந்தத் தீமையான உணர்வுகளை” சூரியன் மேலே கவர்ந்து சென்றுவிடுகின்றது.

நம்முடைய ஆன்மா சுத்தமாகின்றது.

திருமூலர் உரைத்த திருமந்திரம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

சிவகாமி என்ற பெண்மணி நடனக் கலையில் சிறந்து விளங்கினாள். இருந்தாலும் தன்னை யாராலும் வெல்ல முடியாத என்ற நிலையில் கர்வப்பட்டு ஆக்ரோஷ குணம் கொண்டு தன்னிடம் தோற்பவவர்களைத் தண்டிக்கும் குணம் படைத்த காளி போல் காட்சியாகின்றாள்.

பதஞ்சலியோ நடனக்கலையின் நுட்பத்தில் தான் உருவாக்கிய யோக சூத்திர மார்க்கத்தைப் புகுத்திக் கர்ண வித்தைகளை உருவாக்கி அவளுடன் போட்டியிடுகின்றார்.

1.அவர் காட்டும் அத்தனை கர்ண வித்தைகளையும் அம்மாது காட்டிக் கொண்டே வருகின்றாள்.
2.பதஞ்சலி வலது காலை ஆகாயத்தை நோக்கி உயர்த்தும் முத்திரையைக் காட்ட
3.அதைத் தான் காட்ட முடியாது என்ற நிலையில் பெண் குணத்தின் இயல்பான நாணம் வந்து தடுக்க
4.தான் தோற்றுவிட்டதாக ஒப்புக் கொண்டு சிவகாமி அடிபணிகின்றாள்… அவள் கர்வம் ஒடுக்கப்பட்டது.

பதஞ்சலியின் நடன ஞான மார்க்கம் மற்ற பக்தி நெறிக்கு இடையூறு விளைவிக்கின்றது என்ற கருத்தில் தில்லை அன்பர்கள் சிலர் பதஞ்சலியை மரணப்படுத்தும் காலத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

அந்த நேரத்தில் தானாக வந்தமைந்த விதமே திருமூலர். மாடு மேய்க்கும் மூலன் இறந்தவுடன் மூலன் உடலில் கூடு விட்டுக் கூடு பாயும் தன்மையால் பதஞ்சலி உள்ளே நுழைகின்றார்.

சரியான தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பதஞ்சலியின் உடலை அப்புறப்படுத்தி எரித்து விட்டனர்.

எரித்த பின் அந்த எலும்புகளைக் கொண்டு சென்று அந்த எலும்புகளைப் பூஜித்தால் அவருடைய உயர்ந்த சக்திகளைத் தாங்கள் பெறலாம். அந்தப் பலனை நாம் பெறவேண்டும் என்று ஒருவருகொருவர் சத்தியமும் செய்து யாரும் வெளியிடாதபடி தாம் செய்த செயலை நியாயப்படுத்தினர்.

திருமூலர் உடலில் புகுந்த பதஞ்சலி திருமூலர் உடலுடன் வந்து தேடும் பொழுது
1.சாட்சாத் பரமேஸ்வரனே உங்கள் திரு உடலை மறைத்து அருளியுள்ளார்.
2.இந்தத் திருமூலரின் உடலுடன் இருப்பதே எம்பெருமான் சித்தம் என்று
3.பதஞ்சலியினால் தங்களுக்குத் தங்கள் பக்தி வழிக்கு எந்த இடையூறு ஏற்படாத வண்ணம் சாதுரியமாக மாற்றினார்கள்.

ஆனாலும் திருமூலர் திருமந்திரம் வெளிப்பட்டவுடன் மீண்டும் தங்களுக்கு வந்த இடையூற்றினை உணர்ந்து என்ன செய்தார்கள்…?

1.பதஞ்சலியால் இயற்றப்பட்ட திருமந்திரத்தில் “ஞான விளக்கமாகும் செயல் முறையும்”
2.தங்களின் “ஆச்சார அனுஷ்டானங்களை உடைக்கும் வைத்திய முறையும்” இருப்பதால்
3.அந்தத் திருமந்திரத்தை மறைத்தனர்… பல அழிக்கப்பட்டன… பல காலமாக…!

ஆனாலும் திருமூலர் வெளிப்படுத்திய மூச்சலைகள் இந்தக் காற்றிலே தான் நமக்கு முன்னாடி உண்டு. காற்றிலே ஓடும் அந்த நிலைகளைத் தன் ஈர்ப்பில் கொண்டு வந்து நிச்சயம் இந்த உலகுக்கு அளிக்க முடியும்… ஞானத்தை உணரும் ஞானிகளால்…!

திருமூலர் உடலும் ஜெபத்தின் பொழுது மண்ணிட்டுப் புதைக்கப்பட்டு ஓர் நன்னாளில் சிதம்பரம் கோவில் நிலையில் ஓரிடத்தில் ஜீவ சமாதி போல் மறைக்கப்பட்டுப் பூசி அடைக்கப்பட்டு விட்டது.

சிதம்பரம் கோவிலுக்குள் அவர் செயல் நிலை இன்றும் பதஞ்சலியாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

நம் எண்ணத்தைத் தான் நிறைவேற்றுகின்றோம்… ஆனால் கடைசியில் தெய்வம் சோதிக்கிறது என்று சொல்லி விடுகின்றோம்…!

 

வீட்டில் ஒரு நல்ல காரியமோ அல்லது திருமணமோ நடக்க வேண்டும் என்றால் சாமி மேல் மலரை வைத்து ஜோதிடம் கேட்கப் போவார்கள்.

சாமி வரம் கொடுத்தால் மனதுக்கு மகிழ்ச்சியாகும்…! என்று உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இந்த உணர்வு என்ன செய்யும்..? இது தாக்கப்பட்டுச் சிவப்புப் பூ வந்தது என்றால் ஆகாது…!

பூ போட்டுக் கேட்கும் அந்த நேரத்தில் மாப்பிள்ளையைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பார்கள். மோசமான ஆளாக இருக்கின்றான்… என்று அவர்கள் சொன்னார்கள் இவர்கள் சொன்னார்கள்… என்ற மனதில் ஓடிக்கொண்டிருந்தால்
1.எனக்கு நீ சிவப்புப் பூவைக் கொடுத்துவிடு
2.நான் என் பெண்ணைக் கொடுக்கவில்லை என்று வேண்டிக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் முதலிலே ஜோதிடத்தையும் பார்ப்பார்கள்… ஜாதகத்தையும் பார்ப்பார்கள்.. கடைசியில் “சாமி மீது பூ போட்டுப் பார்க்கும்…” இந்த ஜோதிடத்தையும் பார்ப்பார்கள்.

ஜாதகம் பார்த்துச் செய்தால் தான் எல்லாம் நல்லது என்று சொல்வார்கள். இருந்தாலும் இங்கே பார்க்கும் போது பூ விழுந்து விட்டது என்றால் “நான் நினைத்தேன் நடந்து விட்டது…!” என்பார்கள்.

அதே போல் இந்த மாப்பிள்ளையை எப்படியும் முடிக்க வேண்டும்… வெண்மை நிறப் பூ விழுந்தால் மனதுக்கு நல்லது…! என்று நினைப்பார்கள்.

இவர்கள் மாப்பிள்ளையை நல்லவன் என்று கருதிக் கொண்டு போனால் இந்த உணர்ச்சிகளுக்குத் தக்கவாறு கண்ணிலிருந்து பாயும் அலைகள் கீழே விழுத்தாட்டும்.

இது தான் நாம் பார்க்கும் ஜோதிடங்கள். நாம் எல்லோரும் தான் இதை எல்லாம் செய்து பார்க்கின்றோம்.

வெள்ளைப் பூ விழுகின்றது.

ஆனால் மாப்பிள்ளையிடம் அழுக்கு இருக்கும். இருந்தாலும் அவர்கள் மீது பற்றிருக்கும். இந்த எண்ணத்துடன் வரும் போது கண்ணில் பார்க்கும் போது இந்தப் பூ தான் விழுக வேண்டும் என்று நினைபபார்கள். அதன்படி அங்கே இயக்குகிறது.

எல்லாம் ஒத்துக் கொண்டு இவர்கள் விருப்பத்திற்குத் தகுந்த மாதிரி திருமணம் ஆன பின் கடைசியில் என்ன ஆகிறது…?

என் பெண்ணைக் கட்டிக் கொடுத்ததிலிருந்து ஒரே தொல்லையாக இருக்கின்றது… சங்கடமாக இருக்கிறது… வேதனையாக இருக்கின்றது…! தெய்வம் வரம் கொடுத்த பின் கூட இந்த மாதிரிச் சோதிக்கின்றது என்பார்கள்.

1.ஆக மொத்தம் இவர்கள் எண்ணத்தைத் தான் அங்கே நிறைவேற்றிக் கொள்கிறார்கள்
2.இருந்தாலும் “சாமி சோதிக்கின்றது…” என்று சொல்லும் இந்த நிலை தான் வருகிறது.

மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் ஆலயத்தில் வழி நடந்து அதை மதித்து நாம் நடத்தல் வேண்டும்.

ஏனென்றால் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அறியாது சேர்ந்த இருளைப் போக்கும் இடம் தான் அந்த ஆலயம். உயர்ந்த உணர்வுகளையும் தெய்வீகப் பண்புகளையும் பெறச் செய்வதற்குத்தான் ஆலயம்.

1.நாம் கண்ணுற்றுச் சிலையைப் பார்க்கும் போது துவைதம்…
2.அதில் காட்டிய தெய்வ குணத்தை எண்ணி எடுத்தால் அத்வைதம்…
3.தெய்வ குணத்தை நுகர்ந்தறிந்து தனக்குள் அது உருவாக வேண்டும் என்றால் விசிஷ்டாத்வைதம்…
4.அங்கே காட்டப்பட்ட தெய்வ குணங்கள் உடலுக்குள் உறைந்தால் துவைதம்
5.நாம் தெய்வமாகின்றோம்…!

அதைப் போல் அங்கே அபிஷேகம் செய்யும் பாலையும் கனிகளையும் சந்தனத்தையும் பார்க்கும் போதும் துவைதம். அந்த நறுமணங்களை எண்ணி எடுத்தால் அத்வைதம் நுகர்ந்து உயிரிலே படும் பொழுது விசிஷ்டாத்வைதம். உணர்வின் தன்மை உடலாகும் பொழுது துவைதம்.

உயர்ந்த குணங்களை உன் உடலில் நறுமணங்களாக்கும் சக்தியாக நற்குணங்களை உருவாக்கும் அந்த உணர்வை நீ பயன்படுத்து… என்று தான் ஞானிகள் ஆலயத்தை அமைத்தனர்.

மலரைப் போல் மணம் நாங்கள் பெறவேண்டும்… மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெற வேண்டும்.. அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.. இந்த ஆலயம் வருவோர் அனைவருக்கும் இந்த அருள் சக்தி கிடைத்து அவர்கள் நலமும் வளமும் பெற வேண்டும்…! என்று எண்ணினால் இது தான் உண்மையான பக்தி…!

ஆகவே அருள் உணர்வை நமக்குள் பெருக்கிப் பேரருளைக் கூட்டிக் கொள்ளும் பழக்கம் வர வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யாம் உபதேசித்த உணர்வின் எண்ணம் கொண்டு கண்களை மூடி “ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் எண்ணித் தியானிக்கும் பொழுது அந்த மகரிஷிகளின் உணர்வின் ஈர்ப்பின் அலைகள் உங்களுக்குள் வரும்.

அந்த அலைகள் வரும் போது புருவ மத்தியில் “குறு…குறு….” அந்த உணர்ச்சிகள் தெரியும். சிலருக்கு ஒளி அலைகள் வருவதையும் பார்க்கலாம்.

தியானித்து முடிந்த பின் கண்களைத் திறந்து மகரிஷிகளின் அருள் சக்தி தியானத்தில் அமர்ந்துள்ள அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்று எண்ண வேண்டும், எல்லோரும் சேர்ந்து சொல்ல வேண்டும்.

இந்த உணர்வின் தன்மை ஏகோபித்த நிலைகள் வரப்படும் பொழுது இந்த உணர்வுகள் சக்தி வாய்ந்ததாக மாறி “செவிப் புலனறிவில்…” தாக்கப்படுகின்றது.

1.அந்த உணர்வின் நிலைகள் உந்தப்பட்டு
2.உணர்வின் தன்மைகள் சுவாசிக்கப்பட்டு
3.சுவாசித்த உணர்வுகள் தன் ஊழ்வினையாகப் பதிவாகின்றது.

அந்தப் பதிந்த வலுவின் தன்மையைச் சேர்ப்பிக்கும் நிலை தான் “தியானம்” என்பது.

ஒரு நூல் அது எத்தகைய நூலாக இருந்தாலும் அது பலவும் ஒன்றாகச் சேர்த்து ஒன்றாகும் பொழுது வலுப்பெறுவது போல் அனைவரும் சேர்த்து உணர்வின் ஒலி அலைகளைப் பரப்பபடும் பொழுது ஆற்றல்மிக்க சக்தியாகின்றது.

பல (100) இசைக்கருவிகளை ஒன்றாக இணைத்து அது இசையாக வெளிப்படுத்தும் பொழுது… ஒரு காந்தப் புலன் அதற்குள் கவர்ந்து அனைவரும் சேர்ந்து அந்த அனைத்து வாத்தியங்களும் வாசித்த உணர்வுகள் ஒரு அணுவிற்குள் சிக்கி… அந்த அணுவின் தொடர் வரிசை செல்லும் பொழுது அந்த நாதத்தின் இனிமையை நாம் நுகர முடிகின்றது.

இதைப் போலத்தான் வலு கொண்ட உணர்வின் எண்ணத்தின் துணை கொண்டு
1.நாம் அனைவரும் அந்த ஞானிகளின் உணர்வைத் தனக்குள் ஏற்றி
2.அதனைப் பருக வேண்டும் என்று ஏங்கித் தியானிக்கும் பொழுது அதைக் கவரும் ஆற்றல் நாம் பெற்றாலும்
3.கவர்ந்த உணர்வுகள் நமக்குள் பங்கிட்ட நிலைகள் கொண்டு நமக்குள் வலுவாக ஏறுகின்றது.

ஆயிரக்கணக்கோர் கூடி உணர்வின் தன்மை இதைத் தூண்டச் செய்து கூட்டுத் தியானமாக அமைத்து அதனின் வலுவைச் சேர்க்கும் “அருள் ஞான வித்தாகப் பதியச் செய்கின்றோம்”.

1.அனைவருக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்
2.அவர்கள் வாழ்க்கையில் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்கள் வாழ்க்கையில் மன பலமும் மன வளமும் பெறவேண்டும்
4.தியானமிருக்கும் குடும்பங்களில் உள்ளோர் தொழில் வளமும் செல்வமும் செல்வாக்கும் பெற்று செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வளர்ந்திட வேண்டும் என்று ஒவ்வொருவருமே இதை எண்ண வேண்டும்.

ஒருவர் சொல்ல எல்லோரும் இதைச் சொல்ல வேண்டும்.

திருக்கோவில் இரகசியத்தை உணர்த்திய “சூத்திரதாரியான பதஞ்சலி…” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

ஆகாயலிங்கம் என்பது ஆகாய உயிரணு… விண்ணுள் ஒடுங்கி விண்ணில் படைத்து விண்ணுள் வாழ்வது.
1.அதன் ஈர்ப்பு சுழற்சியின் சக்தியாக
2.தன்னுள் கலந்து வாழ்வாகும் (வாழ்க்கை) தன்மையின் செயல்பாடே “நடனம்…!”

அதன் ஒலி நாத அசைவுகளின் தன்மை முதற்கொண்டே வானியலின் உயிரணுக்கள் தான் காரண காரியங்களாகச் செயலாக்குகின்றன.

அதே சுழற்சித் தன்மைகள் தான் புவியியலிலும் உயிரணுக்கள் தன் தன் வளர்ச்சியின் செயல் கொண்டு அதே பரிணாம வளர்ச்சியின் முடிவில் மனிதன் வரையிலும் செயலுக்குக் கொண்டு வருகின்றது.

அத்தகைய தன்மையையே ஆனந்தக் களி நடனம் செய்வதாக.. அசைவதாகக் காட்டிய “உயிரியல் தத்துவ மகரிஷிகள்…” தன் செயல்பாட்டைக் கொண்டே மனித சரீரத்தில் சக்தி பெறச் செய்விக்கும் முறைகளை யோக மார்க்கமாகவும் தியான வழி மார்க்கமாகவும் வழிகாட்டினார்கள்.

யோக மார்க்கம் என்பது நாம் சுட்டிக் காட்டும் இந்தத் தியான நடை முறையில் உள்ளடங்கிச் செயல்படுவதையும் இந்தச் செயலின் தொடரினால்
1.விண்ணுக்குச் செல்லும் தத்துவ மூலகாரண அடவுகளை (மறைந்த பொருள் தன்மை)
2.முத்திரையாகக் (காரியார்த்த விளக்கத் தன்மை) கொண்டு சிவ நடனமாகக் காட்டினார்கள்.

நடனத்தின் ராஜா (நடராஜர்) என்று காட்டிய உயிரியல் தத்துவமே பதஞ்சலி யோக சூத்திர விளக்கமாகவும் அதைக் கண்டு கொண்டு தன் உயிராத்மா பெறும் ஞானத் தன்மைக்கு
1.சுவாசத்தினால் பெறும் சக்திள் அனைத்தையும் சுட்டிக் காட்டி
2.அவைகளை முத்திரைகளாகக் (யோக – நாட்டிய) காட்டினார் பதஞ்சலி.

சுவாசத்தில் வரும் உணர்வுகளின் அதி தீவிர முரண்பாட்டுத் தன்மைகளை முயலகனாகக் காட்டி அதை மிதித்துத் துவம்சம் செய்வதாகவும் காட்டுகின்றார்.

கிளர்ந்தெழும் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் அந்தக் கட்டுப்பாட்டுத் தன்மைகளுக்கே முதலிடம் தந்து அதன் பிண்ணனியின் தத்துவத்தை விளக்கிக் காட்டும் சூத்திரதாரியே பதஞ்சலி முனிவர் ஆவார்.

பதஞ்சலி முனிவர் தன் அனுபவ ஞான வளர்ச்சியில் பெற்ற தனித் தன்மைத் தத்துவத்தை… விளக்கவொண்ணா அந்த அதி அற்புதமான உயிரியல் தத்துவத்தை… “நடராஜராக…” உருவகப்படுத்தியிருந்தாலும் அதை எல்லாம் மாற்றி விட்டார்கள்.

எந்த மெய் ஞானத்தின் தத்துவத்தை உலகிற்கு மகா மகான்கள் தந்தனரோ…
1.அதைக் கடைப்பிடிப்பதிலும் செயல்பாட்டிலும் சூனியத்தைக் கடைப்பிடித்து.. வியாபாரப்படுத்தி…
2.வெறும் வாயளவு மந்திரச் சொற்களைச் சொல்லிக் கொண்டு…
3.பக்தி என்ற வழிக்கு முதலிடம் தந்து இன்று செயல்படுவதுவும் “நடராஜரின் விந்தையே…!”

பதஞ்சலியால் உருவாக்கப்பட்ட நடராஜரின் உருவத்தைப் பார்த்தால்
1.ஆகாய கங்கை என்று தலையில் ஆதி சக்தியை உயிரியல் புவியியல் தத்துவமாகக் காட்டி அவைகளின் மூலத்தை “வெட்ட வெளியான ஆகாயமாகக் காட்டினார் – சிதம்பர இரகசியம்…!”
2.உயிரணுவிற்குள் இயங்கும் உயிர் என்பதை நாகமாகக் காட்டி அதன் விஷம் கண்டத்திலும் (கழுத்திலும்) அமுதமாகிய பிறைச் சந்திரன் நெற்றியிலும் காட்டி இருவிதத் தன்மைகளும் செயல்படும் என்று உட்பொருள் படுத்தியுள்ளார்.
3.உயர்த்திய கரத்தில் அக்கினி என்றும் ஜோதித் தத்துவம் என்றும்
4.அணுவின் சுழற்சியின் அசைவின் ஒலி நாதத்தைக் காட்ட உடுக்கையையும்
5.சரீர கதியில் செயல்படும் உயிரணுவின் செயல்பாடு பெறவேண்டிய குணம் சாந்தம் என்பதைக் காட்ட ஒரு கையில் மானையும்
6.சம்ஹரிக்க வேண்டிய துர்குணங்களை அதன் உணர்வுகளை அன்று காட்ட இன்னொரு கையில் மழுவாயுதத்தையும்
7.உடல் செருக்காகிய மதத்தை நீக்க வேண்டும் என்று யானைத் தோலைப் போட்டும்
8.துர்க் குணமான கோபத்தை நீக்க வேண்டும் என்று புலித் தோலையும் அணிந்தவன் என்று உருவகப்படுத்தினார் பதஞ்சலி.

அதே போல் உணர்வுகளின் (உணர்ச்சிகளின்) அதிவேகமான தன்மையை முயலகன் என்று காட்டி அதைத் தன் காலடியில் வைத்துத் துவம்சம் செய்யப்படுவதாகக் காட்டுகின்றார்.

இடக்கரம் யானையின் துதிக்கை போல் நீண்டு “ஹஸ்த முத்திரை” என்ற பாங்குபடுத்தி
1.சுவாசத்தால் தீமைகளை நீக்க வேண்டும்.. தியானத்தால் ஞானத்தைப் பெறவேண்டும் என்பதை ஹஸ்த முத்திரையின் மேல் அபய முத்திரையாகக் காட்டி
2.இடது காலைத் தூக்கி நாட்டியமாடும் பாவனைப்படுத்தி வலது நாசித் துவாரமாகிய “சூரிய கலை…” என்ற சுவாசம் பெறவேண்டிய ஓட்டகதியை நிச்சயப்படுத்திக் காட்டினார் பதஞ்சலி.

சுவாச அலையால் பெற வேண்டிய வீரியத்தையும் ஒருமித்த சுவாசத்தையும் சுட்டிக் காட்டிடவே ஹஸ்த முத்திரையாகக் காட்டி அதன் வழியில் சக்தி பெறும் உயிரான்மா “ஆனந்தக் களி நடனம் புரியும்… ஜோதியில் ஒடுங்கும்…!” என்று ஆகாய லிங்கமாகக் காட்டினார்.

சிதம்பரம் (சிற்றம்பலம்) என்ற சரீரத்தில் செயல்படும் அத்தனை உயிரணுக்களும் உயிரான்மாவின் சக்தியைப் பெற்று ஜோதிக்குள் கலக்கும்… சிவமாகிய சக்திக்குள் ஒடுங்கும் என்பதே “திருக்கோவில் ரகசியம்…!” (சரீர ரகசியம்).

இவ்வாறு
1.உயிரியலின் சூட்சம ரகசியத்தை அறியும் உயிராத்மா
2.”களி நடனம் கொண்டு சக்தி பெறும்…!” என்பதையே நடராஜர் நடனமாகக் காட்டினார்.

நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் ஒளிக்கற்றைகளை நுகர்ந்து நுகர்ந்து தான் அகஸ்தியன் சகலத்தையும் அறிந்துணர்ந்தான்

 

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதனாகப் பிறந்த அகஸ்தியன் தாய் கருவிலிருக்கப்படும் போதே உயர்ந்த சக்திகளைப் பெற்றான்.

அகஸ்தியனின் தாய் மிருகங்களிடமிருந்தும் விஷ ஜெந்துக்களிடமிருந்தும் மின்னல்களிலிருந்தும் தப்ப வேண்டும் என்ற நிலையில் விஷத்தை முறிக்கும் பல பல பச்சிலை மணங்களை நுகர்ந்தது… உடலிலே பூசிக் கொண்டது.

நஞ்சினை வென்றிடும் தாவர இனத்தின் மணங்களை நுகரும்போது அது தாயின் இரத்தத்திலும் அது கலந்து கலந்து கருவிலிருக்கும் குழந்தைக்கும் (அகஸ்தியனுக்கும்) அதே விஷத்தின் தன்மை முறிக்கும் சக்தி கிடைக்கின்றது.

மின்னல்கள் தாக்கினாலும் அவைகளிலும் கடும் விஷம் உண்டு. அந்த விஷமான சக்தி மனிதன் மீது தாக்கினால் நல்ல அணுக்கள் மடியும் அல்லது மயக்கம் அடையும்.

1.ஆனால் அந்த விஷத்தை முறிக்கக்கூடிய பச்சிலைகளை அகஸ்தியன் தாய் நுகர்ந்ததனால்
2.அந்த மின்னலையும் அடக்கி இவனைக் காக்கும் உணர்வுகளை அந்த உணர்ச்சிகள் அங்கே தோற்றுவிக்கின்றது.

இப்படித் தாய் கருவிலே பெற்ற பூர்வ புண்ணியத்தால் அவன் பிறந்த பின் இவனைக் கண்டாலே விஷ ஜெந்துக்கள் அருகிலே வருவதில்லை. மின்னல் பாய்ந்தாலும் அந்த விஷங்கள் இவனைத் தாக்குவதில்லை.

நட்சத்திரங்களின் கதிரியக்கங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மின்னலாக எப்படி உருவானது…? என்றும் அந்த மின்னல்கள் எவ்வளவு தூரத்திற்கு ஊடுருவிப் போகின்றது…? என்றும் அறியும் தன்மை அப்பொழுது அவன் பெறுகின்றான்.

1.அந்த மின்னலின் உணர்வுகளை வைத்து ஒரு செடியை இவன் உற்றுப் பார்க்கும் போது
2.அதனின் உணர்ச்சியின் மணங்களைப் பற்றியும்… உணர்வின் இயக்கங்களைப் பற்றியும் அறிகின்றான்.
3.இப்படி எல்லாம் கண்டுணர்ந்ததால் தான் அவனுக்கு அகஸ்தியன் என்று காரணப் பெயர் வந்தது.

ஏனென்றால் தாயின் கருவிலே பெற்ற உணர்வுகள் வளர்ச்சியாகி இந்தப் பிரபஞ்சத்தையே கண்டுணர்ந்து நஞ்சினை நீக்கக் கற்றுக் கொண்ட முதல் மனிதன் தான் அந்த அகஸ்தியன்.

வான இயலைப் பற்றித் தெரிந்து கொண்ட பின் திருமணமாகும் போது தான் பார்த்த உண்மைகளை எல்லாம் தன் மனைவிக்கும் எடுத்துச் சொல்கின்றான்.

மனைவியும் கணவன் சொன்னதை ஏற்றுக் கொண்டு அதை எல்லாம் தானும் பெறவேண்டும் என்று எண்ணி ஏங்குகின்றது. அப்பொழுது இரண்டு மனதும் ஒன்றாகின்றது.
1.ஒன்றான பின் கணவன் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று மனைவியும்
2.மனைவி உயர வேண்டும் என்று கணவனும் இருவரும் எண்ணுகின்றனர்.

இப்படி இருவரும் ஒரு மனமாக எண்ணி எடுத்த உணர்வுகள் தான்
1.அந்தத் துருவத்தின் வழியாக வரக்கூடிய சக்தியை எடுத்து இரு உயிரும் ஒன்றாகி
2.உயிரைப் போல் உணர்வின் ஒளிக் கற்றைகளை உருவாக்கும் அணுக்களாக விளைந்து
3.இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்கின்றனர்.
4.பிரபஞ்சத்தில் எது வந்தாலும் அதை ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

மனிதனாக உருவான நிலையில் கணவன் மனைவி ஒன்று சேர்ந்தால் அந்தக் கருத் தன்மைகள் கொண்டு குழந்தையாக உருவாகின்றது.

குழந்தையை உருவாக்கினாலும் பிறந்த பின் தன் பிள்ளைக்கு உடல் நலம் இல்லை என்றால் வேதனைப்பட நேர்கின்றது. “பிள்ளை நோயால் அவதிப்படுகின்றானே…” என்ற அந்த உணர்வினை தாய் நுகர்ந்தால் அந்தப் பையனுக்குள்ளும் இதே உணர்வுகள் சேர்கின்றது.

அதே போல் குடும்பத்தில் யாராவது வேதனையை எடுத்து வளர்த்துக் கொண்டால் வேதனைப்பட்டே கடைசியில் இறந்தால் அவர்களுடன் பற்றுடன் வாழ்ந்த நிலையில் அதே உணர்வை நாம் எண்ணினால் அந்த இறந்தவரின் ஆன்மா நம் உடலுக்குள் வந்துவிடுகின்றது.

அதே போல் ஒரு நோயாளியாக இருப்பவனின் உடலிலிருந்து வரக்கூடிய உணர்வைச் சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது. அந்த நோயாளியின் உணர்வுகளைப் பதிவாக்கி விட்டால் அதே வேதனை மீண்டும் நமக்குள் வந்து அவனில் விளைந்த நோய் நமக்குள்ளும் விளைகிறது.

இதைப் போல் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ நிகழ்ச்சிகள் நம்மை அறியாமல் நமக்குள் நடக்கின்றது.

இதிலிருந்தெல்லாம் மீண்டிட வேண்டும் என்பதற்குத்தான்…
1.அந்த அகஸ்தியன் தாய் கருவிலே பெற்ற நஞ்சினை வென்ற ஆற்றலையும்
3.துருவ நட்சத்திரமான ஆற்றலையும் உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்கின்றோம்.

அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வைச் சூரியன் கவர்ந்து பிரபஞ்சத்தில் பரவச் செய்கின்றது. துருவத்தின் வழி கவர்ந்து நம் பூமி நமக்கு முன் பரவச் செய்கின்றது.

அந்த நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றுப் பழக வேண்டும். உடலில் உள்ள எல்லா அணுக்களுக்குள்ளும் அந்த அரும் பெரும் சக்திகளை இணைத்து வலுவாக்க வேண்டும்.

ஆகவே கஷ்டம் என்ற நிலை எப்பொழுது வருகின்றதோ அடுத்த கணமே அதைத் துடைக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துப் பழக வேண்டும்.

இதை எல்லாம் மனிதன் ஒருவனால் தான் செய்ய முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வேதங்கள் என்று சொல்வது அன்று சாஸ்திரங்களில் தமிழ் சித்தாந்தம் வழி சைவ சித்தாந்தத்தின் தன்மை தான் அங்கே உருவாக்கப்பட்டது. பின் வேதங்கள் என்ற நிலைகள் உருமாற்றப்பட்டது.

1.ஏனென்றால் சைவ சித்தாந்தம் என்பது
2.அகஸ்தியனால் வெளியிடப்பட்டது.

அந்த உணர்வின் தன்மை வெளிப்பட்டதை இவர்கள் வேதங்களாக இதே தமிழ் மொழியைத்தான் வடிவமைக்கும் தன்மைகள் மாற்றி ஒலியின் தன்மையை மாற்றி வேறு ஒரு ரூபத்தில் அலைகளாக மாற்றினார்கள்,

இதைப் போன்ற நிலைகள் அகஸ்தியனால் வெளிப்படுத்தப்பட்ட சைவ சித்தாந்தத்தின் பேருண்மைகள் இன்றும் அழியாதவண்னம் நம் பூமியில் படர்ந்திருக்கின்றது… பிரபஞ்சத்திலும் படர்ந்துள்ளது.

அகஸ்திய மாமகரிஷி காட்டிய அருள் வழியில் நமக்குள் சேர்த்து நாம் அந்த விண்ணில் உருப்பெறும் உணர்வின் தன்மையை நமக்குள் கவர்ந்து ஒளிக் கதிராக மாற்றிடல் வேண்டும்.

1.சப்தரிஷி மண்டலங்களும் துருவ நட்சத்திரமும்
2.அகண்ட அண்டத்தில் வருவதை எப்படி ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளதோ
3.அதைப் போல அந்த உணர்வினை நமக்குள் இணைத்துவிட்டால்
4.ஒளியின் தன்மையாக நாம் உயிருடன் ஒன்றி
5.என்றும் பேரின்பப் பெரு வாழ்வாக வாழ முடியும்.

இதைச் சுருங்கச் சொல்கிறேன், விரிவாகச் சொன்னால் இன்னும் எத்தனையோ வகைகளில் சொல்லலாம். ஆனால் ஏதோ இது மிகவும் எளிதில் கிடைக்கிறது என்று யாரும் அலட்சியப்படுத்திவிட வேண்டாம்.

குருநாதர் எனக்குள் பதிவு செய்த உணர்வின் தன்மை அறியும் தன்மையாக 20 வருடங்கள் தனித்து அனுபவம் பெறும்படி செய்தார்.

ஞானிகள் கண்ட பேருண்மையை அறிவதற்காகக் குடும்பத்தைப் பிரிந்து காடு மேடெல்லாம் அலைந்து உண்மையை உணர்ந்து அதைப் பெறும் தகுதியைப் பெற்றேன்.

1.அதை அனைவரும் பெறச் செய்ய முடியும்
2.அனைவரும் பெற முடியும் என்ற இந்த உண்மையைக் குருநாதர் காட்டியதால்
3.உங்களுக்கும் இதைப் பெறச் செய்து கொண்டிருக்கின்றேன்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வேறு வேறு விதமாக நான் சொல்வேன். காரணம்…
1.அந்தச் சந்தர்ப்பத்தில் கிட்டும் அந்த மெய் உணர்வின் சக்தியை
2.உங்களுக்குள் எப்படியும் அதைப் பாய்ச்சிட வேண்டும்
3.அதை நீங்கள் பெறும் தகுதியை உருவாக்கிட வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்வது.

பசுக்களுக்காக வசுவா… வசுக்களுக்காகப் பசுவா…? – ஈஸ்வரபட்டர்

தன் உயிர் சக்தியை வலுக்கூட்ட… மனிதச் சரீரம் கிடைக்கப் பெற்ற இன்றைய கால கட்டத்தில் நாம் உண்மையை உணர்ந்து
1.“உலகோதய நான்…” என்ற நிலையை விடுத்து
2.“பரப்பிரம்மமாகிய நான்…!” என்ற நிலையைப் பெறும் வழி அறிந்திட வேண்டும்.

தன் உயிர் சக்திக்கு ஒத்த ஆகார நிலையை வழி அமைத்து சரீரத்தில் இருக்கும் அத்தனை உயிரணுக்களையுமே ஒளியான சக்திகளை பெறச் செய்யும் மார்க்கம் அறிய வேண்டும்.

அந்த மார்க்கத்தை அறிந்திடும் நிலையாக…
1.பசுக்களுக்காக வசுவா…? வசுவிற்காகப் பசுக்களா..? என்ற கேள்வி எழுந்து
2.அதன் மூலம் பெறப்பட்ட ஞான வழித் தொடர் தான்
3.“கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்தான் கோபாலன்…!” என்ற தத்துவமே.

கண்ணன் என்ற உயிர் சக்தியின் வலுவைக் காட்டி வசுவாகிய ஒளிச் சக்தியை அதனுள்ளே காட்டிக் “கோபாலன்…!” என்ற பசுக்களைப் பராமரிக்கும் வித்தகனாக அதை உணர்த்தினார் வியாசகர்.

அதாவது…
1.தனது சரீரத்தையே அண்டமாகவும்
2.உடலில் உள்ள உயிரணுக்கள் எல்லாவற்றையும் பசுக்களாகவும்
3.கண்ணனாகிய உயிர் சரீர உயிரணுக்களுக்கும் தனக்கும் ஆகாரம் ஊட்டுவிக்கும் தன்மையில்
4.நாதத்தைக் காட்டக் கண்ணன் கையில் வேய்குழலும் (புல்லாங்குழல்)
5.“காற்றே தான் ஆகார சக்தி…!” என்பதை மறை பொருளாக வைத்து
6. தியான வழித் தொடர் மூலமாக அத்தகைய வலுப் பெற்றுவிட்டால்
7.தனக்குகந்த பக்குவத்திற்கு உயர்ந்த ஒளிக் காந்த சக்தியினை வலுக் கூட்டி
8.அதே தொடரில் கால மாற்றமாகிய இயற்கையின் சீற்றத்தையும் கலியில் காட்டி
9.இந்த உண்மைகளை எல்லாம் காவியமாக்கி… சொல்லாமல் சொல்லி
10.நம் உயிர் ஒளி சக்தியைப் பெற்று சரீரத்தின் மூலமாக அதை வளர்த்துக் கொள்ள வேண்டிய உயர்வைக் காட்டினார் மாமகரிஷி வியாசகர்…!”

ஆதார சுருதி நாதத்தில் செயல்பட்டு நம் தியானமாகிய அந்நாத ஜெபமே எண்ணத்தின் வலுவாகி உயிர் சக்தி அதன் மூலமாக வளரும் சக்தி பெற “கோவர்த்தனைகிரியைச் சுட்டு விரலால் தூக்கியதாகக் காட்டுகின்றார் வியாசகர்…!”

அதாவது…
1.கரத்தை ஆகாயத்தை நோக்கி உயர்த்தி
2.நம் உயிர் பெறவேண்டிய உயர்வைக் காட்டி
3.அதன் சக்தி வலுவை (கோவர்த்தன) மலையாகக் காட்டி
4.அதன் பாதுகாப்பில் உடலில் உள்ள (பசுக்களாகிய) உயிரணுக்கள் கூடிக் காக்கப் பெற்றன என்பதே அதன் தத்துவம்…!

தன் உயிர் சக்தியை உயர் மின் ஒளி காந்த சக்தியாக உயர்த்துவது மட்டுமல்லாமல்… முத்தொழில் தத்துவத்தில் காத்தல் என்பது சரீரத்தில் இருக்கும் அத்தனை உயிரணுக்களையுமே என்பது மறை பொருள்.

திட ஆகாரத்தின் மூலம் பெறப்படும் வீரியச் சுவை குணங்களில் எந்தச் சுவை வீரியக் கூட்டப்படுகின்றதோ அந்தக் குணங்களின் வழித் தன்மைக்கு ஒப்ப உணர்வுகளின் உந்துதல் ஏற்பட்டு அதே வழி தான் நம் வாழ்க்கையும் நடக்கின்றது.

அப்படி இல்லாதபடி உயர்ந்த எண்ணங்களின் வழியில்… தான் கட்டுக்குள் அடங்கிச் செயல்புரிய வேண்டிய உணர்வுகள் என்பது நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய செயல் முறை. ஞானம் என்பது அனைத்து உயிர்களுக்கும் பொது மறை.

உணர்வுகளின் வழிக்கெல்லாம் நம் புலன்கள் போவது என்பது உயிரின் ஆதார வித்தையே.
1.கொள்ளை கொண்டு போய்விடக்கூடிய செயலுக்கு உட்படாதபடி
2.உயரிய எண்ணத்தின் வழி எடுக்கப்படும் வீரிய உயர் ஞான சக்தி கொண்டு
3.தன் உயர்வைத் தானே தேடிக் கொள்ளும் சுயப் பரப்பிரம்மமாக நாம் வளர்தல் வேண்டும்… இதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

ஆகவே
1.உயிர் பெறும் அந்த ஒளி காந்த சக்தியுடன்
2.சரீரத்தில் உள்ள அத்தனை உயிரணுக்களையுமே ஒளி சக்தியான ஆகாரத்தை உண்ண வைத்து
3.ஒளி நாத தத்துவத்தில் அழியா ஒளிச் சரீரம் பெறும் வழி முறை செயலுக்கு நாம் ஒவ்வொருவரும் வரவேண்டும்.

ஒரு சிலரிடம் பேசினாலோ… அல்லது அவர்களை எண்ணினாலோ… நெஞ்சிலே படபடப்பும் இதயத் துடிப்பும் அதிகரிக்கின்றது… ஏன்…?

 

விஞ்ஞான அறிவு கொண்டு ரேடியோ நிலையங்களிலிருந்தும் டி.வி. நிலையங்களிலிருந்தும் ஒளி… ஒலிபரப்பு செய்கின்றனர்.

வீட்டிலிருக்கும் ஆண்டென்னா மூலம் அந்த அலைகளை நாம் கவர்ந்த பின் ரேடியோ பெட்டிக்குள் அல்லது டி.வி. பெட்டிக்குள் அது ஒவ்வொரு பாகங்களுக்கும் அது அனுப்பச் செய்கின்றது. ஒலி பெருக்கிக்கு வருகின்றது.

அங்கே அந்த அலைகள் வரும் போது அதிலே அதிகமான அழுத்தம் இருந்தல் கிர்….ர்ர்.. என்று சப்தத்துடன் இரைய ஆரம்பித்து விடுகின்றது. நாம் இதை எல்லாம் பார்த்திருக்கின்றோம்.

அதைப் போன்று தான் மெய் ஞானிகள் கண்டுணர்ந்த வழிப்படி பார்த்தோம் என்றால்…
1.உதாரணமாக ஒரு கோபப்படுவோரின் உணர்வுகளையோ
2.கோபத்தைத் தூண்டும் உணர்ச்சிகளை உண்டாக்குவோரை
3.நாம் வேடிக்கையாகப் பார்த்தாலும் அதை நாம் நுகராமல் இருக்க முடியாது.
4.நம் கண் கரு விழி அந்த மனிதனை நம் உடலில் பதிவாக்கி விடுகின்றது.

இதற்கு முன்னாடி அவன் சந்தோஷமாகப் பேசி இருந்தாலும் அவன் உடலிலிருந்து வரும் அந்த உணர்வினையும் உடலுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவு செய்துவிடுகின்றது.

ஆக நண்பன் கோபமான நிலையில் இருக்கும் போது நண்பன் என்று நெருங்கிப் பார்த்தால் அந்தக் கோபத்தின் உணர்ச்சிகளை நம் கண்ணில் உள்ள கரு விழி பதிவாக்குகின்றது.

அது பதிவான பின்பு தான் அந்தக் கோபப்படும் உணர்வுகளை கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலன் கவர்ந்து நம் ஆன்மாவாக மாற்றுகின்றது.

நம் ஆன்மாவாக மாற்றிய பின்… உயிரின் காந்தப்புலன் அதைக் கவர்ந்து உயிரிலே மோதச் செய்கின்றது. அப்பொழுது அவன் பட்ட கார உணர்ச்சிகள் நம் உயிரிலே பட்ட பின் அந்த உணர்ச்சிகள் உடல் முழுவதும் பரவத் தொடங்குகிறது.

1.ஏனென்றால் எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலைகள் போன்று
2.இந்த உடலில் உணர்ச்சிகள் பட்ட பின் வாயு வேகத்தில் உடல் முழுவதும் பரவுகின்றது.

நெருப்பில் ஒரு மிளகாயைப் போட்ட பின் அந்தக் காரமான நெடி குறைந்தது 100 அடி வரையிலும் கூட காற்றிலே பரவும். இதே மாதிரித் தான் நம் உடலுக்குள் இந்த உணர்ச்சிகள் வேகமாகப் பரவத் தொடங்கும்.

அப்படிப் பரவும் போது நம் இரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் சுற்றப்படும் போது…
1.நம் உடலில் உள்ள நல்ல அணுக்கள் அந்தக் காரத்தை ஏற்றுக் கொள்ளாதபடி சில அணுக்கள் படபடக்கின்றது.
2.ஒரு சில அணுக்கள் மயக்கம் அடைகின்றது

அதைப் போன்ற அணுக்கள் எந்தெந்த உறுப்பில் இருக்கின்றதோ… நுரையீரலிலோ இதயத்திலோ உள்ள சாந்தத்தையும் நல்ல நிலையைக் கிரகிக்ககூடிய அணுக்களுக்கு… இந்தக் கார உணர்ச்சிகள் பட்ட பின் ஒரு படபடப்பும்… வேகமாகத் துடிக்கும் நிலைகளும் வருகின்றது.

நாம் துடிக்கின்றோமா…? நாம் நுகர்ந்த உணர்வுகள் இதயத்தைத் துடிக்கச் செய்கின்றதா…? என்று நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

இப்படித் துடிக்கும் உணர்வுகள் இதயத்தில் ஏற்படும் போது நம் சிந்தனைகள் குறைகின்றது. நம்முடைய அன்றைய செயல்களும் தடைபடுகின்றது.

சிந்தனை குறைந்திருக்கும் சமயம் நம் குழந்தைகள் என்று பாசமாக இருந்தாலும் கூட அந்த நேரத்தில் நம்மிடம் வந்து ஏதாவது கேட்டால்… “கிரகம்… தொலைந்து போ…!” என்று வெறுத்துத் தள்ளும் நிலைகளே வருகின்றது.

இது எதனால் வருகின்றது…? நாம் கோபப்படுகின்றோமா…? நாம் நுகர்ந்த உணர்வு நம்மை இயக்குகின்றதா…? என்பதை இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு மனிதனும் அவன் நுகர்ந்த உணர்வுக்கொப்ப அந்தந்த உணர்வுகள் தான் அவனை இயக்குகின்றது.

1.இருந்தாலும் ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி நடந்து
2.அந்தத் துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் பேரருள் பேரொளி உணர்வுகளை நுகர்ந்தால்
3.மனிதன் அதை இயக்க முடியும்… நல்லதாக்க முடியும் என்பதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் தீமைகள் என்று எது வந்தாலும் அந்தத் தீமைகளை அகற்றக்கூடிய வாக்காக ஞானிகளின் உணர்வைப் பதிவு செய்கின்றோம்.

திரும்பத் திரும்ப ஞானிகளின் உணர்வுகளை உரமாகக் கொடுத்து அந்த வித்தை உங்களுக்குள் விளையச் செய்கின்றோம்.

அப்படி இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்வோர் எத்தனை பேர் இருக்கின்றார்கள்…!

1.உங்கள் நோய்கள் அகலும்
2.உங்கள் தொழில் சீராகும்
3.குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட்டு மகிழ்ச்சி ஏற்படும்
4.எல்லா நலமும் வளமும் பெறுவீர்கள்
5.நீங்கள் நன்றாக இருப்பீர்கள் என்று தான்
6.யாம் (ஞானகுரு) வாக்கைக் கொடுக்கின்றோம்

இவ்வளவும் சொன்ன பிற்பாடு “எங்கெங்க…! குடும்பத்தில் அல்லது தொழிலில் ஒரே கஷ்டமாக இருக்கிறது…” என்று இதைத்தான் சொல்கிறார்கள்.

அதெல்லாம் நீங்கிப் போகும் நன்றாக இருப்பீர்கள் என்று மறுபடியும் யாம் சொன்னாலும்
1.நீங்கள் சொல்கிறீர்கள்…!
2.ஆனால் என் பையன் எப்போது பார்த்தாலும் என்னிடம் முரண்டு செய்து கொண்டே இருக்கின்றான்
3.வேலை பார்க்கும் இடத்தில் ஒரே பிரச்னையாக வந்து கொண்டே இருக்கின்றது என்று
4.யாம் கொடுக்கும் வாக்கின் வித்தை அப்பொழுதே ஜீவனற்றதாக மாற்றி விடுகின்றீர்கள்.

எத்தனையோ சிரமப்பட்டு தந்திரமாக உங்கள் உடலில் இதெல்லாம் பாய்ச்சி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அருள் ஞான வித்தை தங்க வைக்க வேண்டும் என்று யாம் முயற்சி எடுக்கின்றோம். ஆனால்
1.மண்ணிலே விதைத்த விதைகளை எறும்பு எடுத்துப் பொறுக்கிக் கொண்டு போய்
2.எப்படி முளைக்காது செய்து விடுகின்றதோ இதைப்போல
3.உங்கள் உடலில் ஏற்கனவே பதிவான சாப அலைகள்
4.யாம் பதிய வைக்கும் வித்தை உங்களுக்குள் ஆழப் பதியாமல்
5.அதை முளைக்கவிடாது மாற்றிவிடுகின்றது.

ஏனென்றால் இதை எல்லாம் அனுபவரீதியில் தான் குருநாதர் எமக்குக் கொடுத்தார். ஆகையினால் நான் உங்களைக் குறையாக எண்ணவில்லை…! குறையாகச் சொல்லவில்லை…!

முந்திய உணர்வுகள் உங்களுக்குள் விளைந்தது அது உங்களை அறியாது எப்படி இயக்குகின்றது, அதிலிருந்து எப்படியும் நீங்கள் மீள வேண்டும் என்பதற்காகத் தான் இதை விளக்கமாகக் கொடுத்துக் கொண்டு வருகின்றோம்.