பூரண நிலவு போன்று நாம் முழுமை அடைந்து பிரகாசிக்க வேண்டும்

பூரண நிலவு போன்று நாம் முழுமை அடைந்து பிரகாசிக்க வேண்டும்

 

பிறர் வேதனைப்படுவதைப் பார்க்கும் போது உங்கள் மனம் இருண்டு விடுகின்றது. உங்களுடைய செயலாக்கங்கள் மாறுகின்றது. இது வளர்ந்து விட்டால் அந்த நல்லறிவின் செயலே முழுமையாக இழந்து விடுகின்றது.

அதை மாற்றுவதற்குத்தான் சப்தரிஷிகளின் அருளையும் துருவ மகரிஷியின் அருளையும் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வலைகளையும் இந்த உபதேசத்தின் வாயிலாக உங்களை நுகரச் செய்து உங்கள் கண்ணின் வாயிலாகப் பதியச் செய்கின்றேன் (ஞானகுரு).

1.உங்கள் ஆறாவது அறிவை…
2.எதனையுமே அறிந்து தெளிவாக்கிடும் அந்த ஞானத்தின் நிலையைக் காத்திடவே இதை உபதேசிப்பது.

உங்களை அறியாமலேயே பதியச் செய்கின்றோம்.

பதிவானதை மீண்டும் எண்ணும் போது உங்களை அறியாமலே பல அற்புதங்கள் நடக்கும். தீமைகளை நீக்கிடும் ஆற்றலை நீங்கள் பெறுகின்றீர்கள்.

அதைப் பெறச் செய்வதற்குத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் மெய் ஞானியின் உணர்வை நுகரும்படி செய்கிறோம். மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் அந்த உணர்ச்சியைத் தூண்டச் செய்கின்றோம்.

உங்களை அறியாது நல்ல குணங்களை மறைத்துக் கொண்டிருக்கும் சிறு திரையை நீக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களின் நல்ல குணங்களுக்குள் ஆழமாக இணைக்கச் செய்கின்றோம்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெறவேண்டும் என்று நீங்கள் நினைவு கொண்டால் ஒவ்வொரு நொடியிலும் உங்கள் நல்ல குணங்களை நீங்களே தெளிவாக்கிக் கொண்டுவர முடியும்.

அவ்வாறு நீங்கள் தெளிவாக்கிக் கொண்டு வந்தால் உங்கள் வாழ்க்கையில் இது முழுமை பெற்றால் சந்திரன் எப்படி பூரண நிலாவாகின்றதோ அதைப் போல இந்த உடலிலுள்ள உணர்வுகள் அனைத்தும் அந்த ஒளியின் சிகரமாக மாறும்.

ஒளியாக மாறிய பின் இந்த உடலை விட்டுச் சென்ற பின் இந்த உயிராத்மா பிறவியில்லா பெரு நிலைகள் அடையும்.
1.அத்தகைய நிலை பெறச் செய்வதற்கும்
2.இந்த வாழ்க்கையில் அறியாமல் வரும் தீமைகளை அகற்றிடவும்
3.தீமையற்ற செயலாக நம் உடலுக்குள் வளர்த்திடவும்
4.நம் எண்ணத்தால் நம்மைக் காத்துக கொள்வதற்கும் தான் இதை உபதேசிப்பது.

இப்போது பதிவு செய்ததை நீங்கள் ஒவ்வொரு நொடியிலேயும் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் ஈஸ்வரா…! என்ற நினைவினைச் செலுத்தினாலே போதும்…!

நம் எண்ணநிலை (சுவாச நிலை) ஒருநிலைப்பட்டு விட்டால் எந்தத் தீமையும் நம்மைத் தாக்காது – ஈஸ்வரபட்டர்

நம் எண்ணநிலை (சுவாச நிலை) ஒருநிலைப்பட்டு விட்டால் எந்தத் தீமையும் நம்மைத் தாக்காது – ஈஸ்வரபட்டர்

 

ஏவல்… குட்டிச்சாத்தான்… மையிட்டு மந்திரம் செய்வோரிடம் நாம் சிக்கிடாமல்… அவர்கள் செயல்கள் செயல்படாவண்ணம் “நம் ஆத்மாவை..” நம்மைக் காத்திடும் நிலையை அறிந்து வாழ்ந்திடல் வேண்டும். பல எண்ணங்களின் நிலையிலிருந்து நம்மைக் காத்திடல் வேண்டும்.

1.சோதனை கொண்ட காலங்களில் சோர்வு நிலை கொண்டு முடங்கிடலாகாது
2,இவ் ஏவல்களின் தன்மையெல்லாம் சோர்ந்தவர்களை அதி விரைவில் அண்டிக் கொள்ளும்.

இத்துர் ஆவிகள் நடமாட்டத்தைப் பல மிருக ஜெந்துக்கள் எப்படி உணர்கின்றன…?

ஏவலும் சூனியமும் மிருக ஜெந்திற்குச் செயல் கொள்ளாது…! அதன் உடலிலேயே உணரும் தன்மை கலந்துள்ளது. இச்சுவாச சக்தி நாய்க்கு அதிகம். புலிக்குத் தன் பார்வையிலேயே கண்டிடும் சக்தியுண்டு.

இவ் ஏவலின் நடமாட்டமுள்ள இடங்களையெல்லாம் இவற்றை அறியும் தன்மை கொண்ட மிருகங்கள் உணர்ந்துவிடும்.

முந்தைய காலங்களில்… வீடுகளில் நாய் பூனை இவற்றைத் திருடர்களிடமிருந்து காப்பதற்காக மட்டும் வளர்க்கவில்லை. துர் ஆவிகளிடமிருந்து அவற்றின் ஏவல் இல்லங்களில் உட்சென்று செயல்படாமல் காக்கவும் இம் மிருகங்களை வளர்த்தனர்.

1.ஏவல்காரனையும் குட்டிச்சாத்தான் செயல் உடையபனையும் கண்டால்
2.இந்நாய் நரி பூனைகள் குரைத்துச் சப்தமிட்டு உணர்த்திவிடும்.

அக்கால இல்லங்களில் எல்லாம் இல்லத்தில் முன் வாயிலுக்கு மேல் நிலைக்கண்ணாடியைப் பதித்திருப்பார்கள். சாதாரண நிலையில் இருக்கும் நிலையில் நம் கண்ணிற்குத் துர் ஆவிகளின் நடமாட்டம் தெரிந்திடாது.

ஆனால் நிலைக்கண்ணாடியில் தெரியும் நிலையென்ன…?

நிலைக்கண்ணாடியில் பூசியுள்ள அவ்வமில சக்தி இத்துர் ஆவிகளின் சக்திக்கு எதிர் கொண்டது. நாயில் உடலிலுள்ள அமில சக்திக்கும் நிலைக்கண்ணாடியில் உள்ள அமிலத்திற்கும் தொடர்புண்டு.

இத் துர் ஆவியின் நிலையைப் பலர் காண்கின்றனர். பேயின் நடமாட்டத்தைக் கண்டேன் என்பவர் பலர். பேயல்ல அது குட்டிச்சாத்தானின் உருவ நிலை அது.

சிலருக்கு மட்டும் புலப்படும் நிலையென்ன…?

ஒவ்வோர் உடலுக்கும் அவரவர்களின் அமிலத்தன்மை ஒன்று உண்டு என்று உணர்த்தினேன் அல்லவா…! இவற்றைக் காணும் அமிலத்தன்மை கூடியவர்கள் உடல் இந்த நிலையை அறியலாம்.

சிலரின் நிலையில் அவர்களின் உடலிலுள்ள அமிலத் தன்மையே அபூர்வத் தன்மையில் இயற்கையிலேயே கூடிப் பிறந்திருப்பர். எண்ணத்தில் ஞானசக்தி நிறைவு கொண்ட அபூர்வப் பிறவியெடுத்தவர் பலர் உள்ளனரே. அவர்களுக்கு இயற்கையின் அமிலமே தன்னுள் கூடி பிறவியெடுத்து பிறந்து வளர்பவர்கள்.

1.பல பிறவியில் சேமித்த அமிலத்தின் கூட்டு நிலையினால்
2.பல ஞானிகள் மற்ற ஏவலின் சக்தியில்லாமல் வாழ்கின்றனர்.
3.ஆகவே நம்முள் உள்ள நிலையையே நல் நிலையில் வளரும் பக்குவத்தை நாம் பெறல் வேண்டும்.

நமக்காக ஏவாமல் பிறருக்காகச் செய்த மந்திர நிலையும் நம்மைத் தாக்கும் நிலையும் உண்டு. நம் நிலையில் ஒரு நிலைப்பட்டுவிட்டால் (சுவாச நிலை) எத்தகைய தீய தன்மைகளும் நம்மை வந்து தாக்காது.

நம் நல்ல அறிவைக் காக்கும் சக்தி…!

நம் நல்ல அறிவைக் காக்கும் சக்தி…!

 

பிற மண்டலங்களிலிருந்து வருவதை 27 நட்சத்திரங்கள் நவக்கோள்கள் கவர்ந்து வெளிப்படுத்துவதை சூரியன் கவர்ந்து தன் சுழற்சி வேகத்தால் அந்த அணுக்களில் உள்ள விஷத்தினைப் (அல்ட்ரா வயலட்) பிரித்து விடுகின்றது.

மனிதனுடைய ஆறாவது அறிவோ நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்த நஞ்சினை மலமாக மாற்றி அதை நீக்கிவிடுகின்றது.

இந்த மனித வாழ்க்கையில் எத்தனையோ பேருடன் நாம் பழகுகின்றோம்… பார்க்கின்றோம். ஆனால் சந்தர்ப்பத்தால் அவர்கள் படும் வேதனைகளைப் பார்த்தாலும் அந்த வேதனையான உணர்வுகள் நம் நல்ல எண்ணங்களில் இணைந்திடாது ஆறாவது அறிவு கொண்டு அதைத் தடுக்க வேண்டும்.

1.துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
2.அந்த அருள் உணர்வினை நம் நல்ல அறிவில் இணைத்து நல்ல அறிவு மங்கிடாது
3.எதனையுமே தெளிவாக்கிடும்… அந்த அறிந்திடும் தெளிந்திடும் அந்த அறிவை நாம் வளர்த்திடல் வேண்டும்.

ஆனால் வேதனை கொண்ட நிலைகள் கொண்டு விஷத்தின் தன்மையை இதிலே கலந்து விட்டால் இங்கே மற்றவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாலும் அதை உங்களால் நுகர முடியாது. நுகர்ந்தாலும் அதை வைத்து உங்கள் வேதனைகளை நிவர்த்தி செய்ய முடியாது.

1.அதாவது பிறிதொரு மனிதன் வேதனைப்பட்ட உணர்வு நம் நல்ல அறிவை மறைக்கும் போது
2.இன்னொரு சாதாரண மனிதன் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து அதை மாற்ற முடியாது.

மாற்ற வேண்டும் என்றால் “வேதனை என்ற நஞ்சினை நீக்கி… அதை ஒளியாக மாற்றிடும்…” அந்த மகரிஷிகளின் உணர்வை நீங்கள் ஏங்கிப் பெற்று உடலுக்குள் இணைக்க வேண்டும்.

மீண்டும் இதைத் தெளிவாக்குகின்றேன்…!

உங்கள் வாழ்க்கையில் நல்லது செய்வதாக எண்ணி ஒரு வேதனைப்படும் மனிதனை உற்றுப் பார்த்து நுகர்ந்து அவர்களுக்கு நீங்கள் நல்லது செய்கின்றீர்கள்… உதவி செய்கின்றீர்கள்…!

ஆனால் உங்களிடமிருக்கும் நல்லது செய்யும் எண்ணத்திற்குள் அவரின் வேதனைப்பட்ட அந்த விஷமான உணர்வு இணைந்து உங்கள் நல்ல அறிவை மறக்கச் செய்கின்றது… மறைத்து விடுகின்றது. இதுதான் சிறு திரை – “சித்திரை…” என்பது.

அந்தச் சிறு திரையை உடனே நீக்க வேண்டும். அதை நீக்க வேண்டும் என்பதற்குத்தான் ஞானிகளின் உணர்வைப் பதிவாக்குகின்றோம்.

உங்கள் நினைவாற்றலை அங்கே ஞானிகளின் பால் ஒன்றச் செய்து இங்கே நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும்போதே அந்தத் துருவ மகரிஷியின் உணர்வுகளை உங்களுக்குள் இணைக்கின்றோம்.

உங்கள் நினைவாற்றலை அந்த மகரிஷிகளுடன் இணைத்து விட்டால் அந்த வேதனையான உணர்வினை நுகர்வதைத் தவிர்த்து அருள் உணர்வுகளை வலுப் பெறச் செய்யும்.

அப்படி அந்த மகரிஷிகளின் உணர்வை வலுப்பெறச் செய்யும் நிலைக்குத்தான் உங்களுக்குத் தெரியாமலேயே இந்த உபதேசத்தின் வாயிலாக அதைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன் (ஞானகுரு).

உங்கள் நல்ல அறிவைக் காக்க இது உதவும்…!

குட்டிச்சாத்தானை வைத்துச் செயல்படுபவர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

குட்டிச்சாத்தானை வைத்துச் செயல்படுபவர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

கிளி… எலி… அணில்… ஜோதிடம் இப்படிப் பல நிலைகளைச் செய்வது எந்த நிலை கொண்டு…?

இவை எல்லாமே கரு வித்தையின் செயல்தான். அந்தந்தப் பிராணிகளின் உடலில் கருவின் மையை ஏற்றிவிடுவார்கள். அவரின் பழக்கப்பட்ட பரிபாஷைகள் இப்பிராணிகளுக்குத் தெரிந்திடும்.

இவர்கள் சொல்லும் பெயர் நாமத்தைக் கேட்டு அந்தப் பிராணிகள் ஜோதிடம் செப்பிடும் நிலையாக வரும். அதாவது…
1.அந்தப் பிராணியின் உடலிலுள்ள குட்டிச்சாத்தான்தான்
2.அவன் சொல்லும் நாமகரணத்திற்குகந்த செயல் கொண்ட
3.எந்த நிலை பெற்ற குண நிலைக்குகந்த ஏடுகளை ஓதிட வேண்டுமோ அதனையே சரியாக எடுத்துத் தரும்
4.இவர்கள் மன நிலைக்குகந்த சொல்வாக்கே அதிலும் காணப்படும்.

அவ்வெண்ணமுடனே இவர்கள் செயல்பட்டால் அதன் தொடர்ச்சி நிலையில்தான் அவர்களின் வாழ்க்கை நிலையும் இருந்திடும். இவ் உலகினில் பல பாகங்களில் இச்சூனிய வேலை நடக்கின்றது.

பிறரைத் தன் வசியப்படுத்தவே இக்கரு வித்தை வேலையெல்லாம் செய்யப்படுகின்றன. ஆவியின் தொடர்புப்படுத்தி தன் உடலிலேயே பல ஆவிகள் துர் ஆவிகளை ஏற்றிக்கொண்டு அதனை ஏவி சூனியம் செய்வார்கள்.
1.சூனியத்திற்கு அடிமைப்பட்டவன்
2.அச்சூனியத்தினாலேதான் அதனுடைய ஆத்மாவும் பிரியும்.

பிற இடத்தில் ஜெபம் செய்து பல பொருட்களை வைத்துவிட்டு இக்குட்டிச்சாத்தானின் தொடர்புடைய நாமத்தை இவர்கள் இருக்கும் இடத்திலிருந்து ஜெபித்தால்…
1.அவ்வாவியான குட்டிச்சாத்தானே அப்பொருளை இவர்கள் “வா…!” என்றவுடன்
2.இவர்களின் கையில் அப்பொருள் கிடைக்கும் நிலையில் செய்து தரும்.
3.இவர்கள் வைத்த பொருள்தான் அங்கிருந்து வருமே ஒழிய
4.ஆகாயத்தில் இருந்து ஆண்டவனால் செய்விக்கப் பெற்ற உருவச் சிலையோ விபூதியோ புஷ்பமோ
5.எவையுமே இவர்களிடத்திற்கு மாறுபட்டு வராது.

இந்த நிலையிலுள்ள எந்தெந்தச் சாமியார்கள் ஆகட்டும்… அல்லது மந்திரவாதிக ஆகட்டும்… அவர்களால் மக்களை ஏமாற்றிடும் செயலுக்குத் தன் புகழ் உயர.. தன் நாமத்தினால் பொருளீட்டி… இச்செயலையெல்லாம் செய்வித்து
1.மக்களை மட்டும் அவர்கள் ஏமாற்றவில்லை
2.தன் ஆத்மாவையே… தானே ஏமாற்றி வாழ்கின்றார்கள்.

சொந்தமில்லா இவ்வுடலின் வாழ்க்கை எத்தனை நாட்களுக்குச் சொந்தமப்பா…?

“இருக்கும் ஒரே சொந்தம்” நம் ஆத்ம சக்தியை இயற்கை என்னும் சொந்தமுடன் சொந்தமாக்கி நம் ஆத்மாண்டவனை நல்வழியில் செயலாக்குவதை விட்டு சாமியார்கள் என்ற நாமத்தில் ஏன் ஆண்டவனின் நாமத்தையே அடிமைப்படுத்திடல் வேண்டும்…?

இன்று மக்களுக்கு ஏற்பட்டுள்ள மூட நம்பிக்கையின் வித்தே இத்தகைய சூனியக்காரர்களினால் வந்த நிலைதான். நம் பூமியில் நாம் வாழும் இக்கண்டத்தில் தன்னை றியாமலே நம்மில் பலர் இதற்கு அடிமை கொண்டு வாழ்கின்றனர்.

நமக்கும் மேல் சீனாவிலும் ஜப்பானிலும் இன்னும் சில ஆப்பிரிக்கக் கண்டங்களிலும் அரேபிய நாடுகளிலும் இந்த நிலை அதிகம். ஒவ்வோர் இடத்திலும் வாழும் மனிதர்களின் எண்ண நிலைக்கொப்ப அங்கு வாழும் கருவித்தை வேலைகளும் நடக்கின்றன.

நம் பூமியில் இங்கே இந்த இந்திய தேசத்தில்தான் பல ரிஷிகளும் சப்தரிஷிகளும் உரு பெற்று… “உயர்ந்த நிலை எய்தியவர்கள் அதிகம் வாழ்ந்த பூமி இது…”

அவர்களின் எண்ண ஓட்டமும் (சப்த அலைகள்) அவர்கள் விட்ட சுவாசத்தின் சப்த அலையையும் தாங்கி வாழும் நிலைதான் இப்பூமியின் நிலை.

கரு வித்தையின் குட்டிச்சாத்தான் ஏவலில் உள்ளவர்கள் இதை உணர்ந்து நல் ஆத்மாவாய் இப்பொருள் என்னும் பேய்க்கு அடிமைப்படாமல் வாழ்ந்திட வேண்டும்.

அதற்குத் தான் இதை எல்லாம் உணர்த்துகின்றேன்…!

உயிருக்கும் நமக்கும் சொந்தமில்லாத நிலைகளில் தான் நாம் இன்று இருக்கின்றோம்

உயிருக்கும் நமக்கும் சொந்தமில்லாத நிலைகளில் தான் நாம் இன்று இருக்கின்றோம்

 

அருள் மகரிஷிகளின் அருளால் நாம் நம்முடைய மூதாதையர்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து அவர்களைப் பிறவியில்லா நிலை அடையச் செய்வோம்.

அவர்கள் அந்த ஒளி நிலை பெற்றால் அதனுடைய துணை கொண்டு நாம் இந்தப் புவியில் வரும் தீமைகளை அகற்றிவிட்டு அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்திட முடியும்.

உடலுக்குள் வரும் தீமைகளில் இருந்து விடுபட்டு நம் உணர்வின் தன்மை என்றும் நாம் மகிழ்ந்து வாழ முடியும்.

1.இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல… உயிரே நமக்குச் சொந்தம்.
2.உயிரின் தன்மை சொந்தமாக்க வேண்டுமென்றாலும்
3.இப்பொழுது உயிருக்கும் நமக்கும் சொந்தமில்லாத நிலைகளில் தான் இருக்கின்றோம்.

நாம் எதை எண்ணுகின்றோமோ உயிரிலே பட்டவுடன் உயிர் இந்த உடலை இயக்குகின்றது. உயிர் தான் இயக்குகிறது என்று யாரும் எண்ணவே இல்லை. “நான்…” என்று இந்த உடலைத் தான் எண்ணுகின்றோம்.

ஆனால் அவனால் உருவாக்கப்பட்டதுதான் இந்த உடல் என்ற நிலையை உணர்ந்து கொள்ள வேண்டும். உயிரை வேண்டி நாம் எதை எண்ணி எடுக்கின்றோமோ அதையே உருவாக்குகின்றது.

1.ஒருவருக்குக் நாம் கடுமையான தீங்கு செய்ய வேண்டுமென்று எண்ணுகின்றோம்
2.அதை உயிர் உருவாக்குகின்றது… அந்த உணர்வை உடலுக்குள் பரப்புகின்றது.
3.அதனின் செயலாகவே அந்தத் தீமை செய்யும்படி நம்மைச் செய்கின்றது.

அதே சமயத்தில் ஒருவருக்கு நன்மை செய்ய வேண்டுமென்று எண்ணுகின்றோம். அந்த நல் உணர்வின் தன்மையை உயிர் அதை இயக்கிக் காட்டுகின்றது.

ஆனாலும்…
1.நாம் தீமையின் உணர்வைப் பெற வேண்டுமென்று எண்ணினால்
2.அந்தத் தீமை செய்யும் உணர்வின் அணுக்கள் நமக்குள் விளைந்து
3.இந்த உடல் அழுகுகின்றது… வேதனைப்படுகின்றது….!

எவரை வேதனைப்படச் செய்ய வேண்டுமென்று எண்ணுகின்றோமோ அந்த வேதனைப்படும் உணர்வுகள் அணுக்கள் நமக்குள் விளைந்து அதே வேதனையை உருவாக்குகின்றது.

கீதையிலே சொன்னபடி “நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…!” என்று அதனின் வளர்ச்சியாகத் தான் நாம் அடைகின்றோம்.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் மீள வேண்டும்.

1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று
2.தீமையை அகற்றிய அருள் ஞானிகளின் உணர்வை நீங்கள் நுகர்ந்தால்
3.தீமையை அகற்றும் உணர்வுகள் நமக்குள் பெருகி
4.தீமையற்ற உணர்வாக நமக்குள் ஆகி… “நாம் அதுவாகின்றோம்…”

ஆகவே முதலில் மூதாதையருடைய உயிரான்மாக்களை விண் செலுத்துங்கள். ஒவ்வொரு நொடியிலும் இதைப் போல செய்யுங்கள்… மறவாதீர்கள்…!

மை… தாயத்துக்கள்…! உருவாக்கும் மந்திரவாதிகளின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

மை… தாயத்துக்கள்…! உருவாக்கும் மந்திரவாதிகளின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

மலைப் பிரதேசங்களில் வாழ்ந்திடும் மந்திரவாதிகள் பல மண்டை ஓடுகளை வைத்துப் பூஜிப்பர். அதுவும் அல்லாமல் அம்மண்டை ஓட்டின் சொந்தம் கொண்ட உடலின் நிலையிலிருந்து மை எடுத்து அதனையும் இம்மண்டை ஓட்டையும் வைத்துப் பூஜிப்பார்கள்.

மையை யார் யாருக்கெல்லாம் தாயத்துகளாய்த் தருகின்றார்களோ அவர்களின் நிலையும் மந்திரவாதியின் நிலைக்கும் தொடர்பு பட்டு சில நிலைகளை அறிந்திடத்தான் இவர்கள் பூஜையில் அம்மண்டை ஓட்டை வைப்பது.

இவர்கள் மை தயாரிப்பது எந்நிலையில்…?

மயானத்தில் அர்த்த ஜாமத்தில் சில உடல்களை கூடிய வரை கருச் சிசுக்களைத்தான் (இறந்த சிசுக்களை) இவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். வளர்ந்து ஆசைப்பட்டு குடும்பப் பற்றுடன் நீத்தாரின் உடல்கள் இவர்கள் செயலுக்கு செயல்பட்டு வராது.

அவர்களின் ஆத்ம எண்ணமே தன் குடும்ப நிலையில் சுற்றிக் கொண்டிருக்கும். அதனால்தான் இக்கரு வித்தை மந்திரவாதிகள் எல்லாரும் தாயின் கர்ப்பத்தில் தோன்றும் முதல் சிசுவை அது இறந்துவிட்டால் (தலைச்சன்) அதனுடைய உடலை புதைத்துச் சென்ற பிறகு அதைத் தோண்டியெடுத்து இவர்களின் செயலுக்காக அவ்வுடலை ஈடுபடுத்துகின்றனர்.

நம் மூதாதையர் காலத்தில் முதல் தலைச்சன் சிசு காலமானால் அதன் உடலை சிறிது பின்னப்படுத்தித்தான் அடக்கம் செய்வார்கள். பின்னப்படுத்திய அச்சிறு சதையை இவர்கள் தாயத்தாக்கி பூஜிப்பார்கள். அந்நிலையில் அச்சிசுவின் ஆவி இங்கு செயல்கொள்ளும் ஏவலின் நிலைக்கு ஒத்து வராது.

இப்பின்னப்ப்டா இறந்த சிசுவை எடுத்துச் சென்று பெரிய மண் பானையில் அச்சிசுவின் உடலை இட்டு அப்பானைக்கும் கீழ் இரண்டொரு பானைகளை வைத்து பெரும் நெருப்பிட்டு எரியவிட்டு கீழ் எரியும் நிலையிலிருந்து மேல் பானைக்கு அவ்வுஷ்ணம் பட்டு அச்சிசுவின் உடலில் இருந்து கசியும் அதன் அமில நீர் சக்தி எல்லாம் எரிய எரிய வடிந்து இக்கீழ்ப் பானையில் மெழுகு போன்ற மை பதத்தில் ஒட்டிக் கொள்ளும்.

சிசுவை இட்டுள்ள பானைகளில் துவாரம் வைத்திருப்பார்கள். இச்சிசுவின் மைக்கு வேண்டிய அமில நீர் சக்தியெல்லாம் ஈர்த்த பிறகு அச்சிசுவின் சக்கை உடலை அதே நெருப்பிலிட்டு அதன் அவயங்களையும் சேகரித்து அதன் அவயவத்தை வெந்த நிலையில் வைத்து மண்டை ஓடுகளுடன் அங்கங்களையும் சேர்த்துப் பூஜிப்பார்கள்.

இவ்வமில நீரில் அவ்வுடலின் வெந்த சாம்பலையும் சேர்த்து மைபோல் மசிய வைத்து பூஜித்து பில்லி சூனியம் ஏவல் மையிடுதல் போன்ற நிலைக்கெல்லாம் இச்சிசுவின் நிலையை ஏவுவார்கள்.

கருப்பு நிறம் கொண்ட இந்த மையையே தன் நெற்றியில் இட்டுக் கொண்டும் தாயத்துக்கள் செய்து மையை அதனில் வைத்துத் தன் உடலிலும் அணிந்து கொள்வார்கள்.

இவர்களின் பொருளாசைக்குகந்த நிலைப்படுத்திட இக்குட்டிச்சாத்தானை ஏவுவார்கள். ஒவ்வொரு மந்திரவாதியும் ஒரு சிசுவிலிருந்து மட்டும் தன் ஏவலைச் செயல்படுத்துவதில்லை. பல சிசுக்களையும் இந்நிலையில் செயல்படுத்துகின்றார்கள்.

இவர்கள் ஏவிய நிலைக்கெல்லாம் அக்குட்டிச்சாத்தான்கள் ஆவி உருவில் சென்று பல உண்மைகளை அறிந்து வரும்.

1.“மாரியம்மாள் காளியம்மாள்…” என்று மனிதர்கள் மத்தியில் இச்சக்தியின் நாமத்தைச் செப்பியே பேய் ஓட்டுவதைப் போலவும்
2.“மாரியாத்தா ஆடு கேட்கிறாள்… கோழி முட்டை கேட்கின்றாள்…!” என்றெல்லாம் சொல்லி
3.அவர்கள் வைத்திருக்கும் குட்டிச்சாத்தான்களின் ஆசைக்கு உகந்த உணவுகளைப் படைத்து
4.இவர்கள் தங்களுக்குகந்த செயலை முடித்துக் கொள்கின்றனர்.

எந்த மாரியம்மனும் காளியம்மனும் உயிரைப் பலி கேட்பதில்லை…! மனிதன் தன் ஆசைக்குத் தான் இது போன்ற செயலைச் செய்கின்றான்.

மனித வாழ்க்கையில் வந்த தீமைகளை ஒடுக்கி ஒளியாக மாற்றியவர்கள் அனைவரும் சப்தரிஷி மண்டலத்தில் உள்ளார்கள்

மனித வாழ்க்கையில் வந்த தீமைகளை ஒடுக்கி ஒளியாக மாற்றியவர்கள் அனைவரும் சப்தரிஷி மண்டலத்தில் உள்ளார்கள்

 

உதாரணமாக கோழி விஷமான உணவுகளை (ஜெந்துக்களை) உணவாக உட்கொண்டாலும் அந்த விஷத்தின் தன்மையை ஒடுக்கி தன் தசையாக மாற்றித் தன்னிலை அடைகின்றது. அதே போல் மயில் போன்ற பெரும்பகுதி பறவை இனங்களும் விஷத்தை ஜீரணிக்கக்கூடிய சக்தி கொண்டவைகள்.

இதைப் போலத்தான் மனித வாழ்க்கையில் வந்த கடும் தீமையினுடைய நிலைகளையும் அதனுடைய செயலாக்கங்களை ஒடுக்கித் தன் இணைப்பின் நிலையாகச் செயல்படுகின்றார்கள் மகரிஷிகள்.

அப்படி செயல்பட்டவர்கள்… தன் உடலில் உள்ள உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொண்டு இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டுள்ளனர்.

துருவ நட்சத்திரத்தில் இருந்து வெளிப்பட்ட பேரருள் உணர்வுகளை அதன் பின் வந்த மனிதர்கள் கவர்ந்து தன் உடலில் அது ஒவ்வொன்றிலும் இணைக்கப்படும்போது மீண்டும் இன்னொரு உடல் பெறும் நிலைகளை மாற்றி அமைத்தனர்.

அவ்வாறு உயிருடன் ஒன்றி ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக மாற்றிச் சென்றவர்கள் தான் சப்தரிஷி மண்டலம் என்பது. துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திலே சுழன்று கொண்டுள்ளார்கள்.

அதாவது உணர்வின் தன்மை ஏழாவது நிலை அடைவதுதான் சப்தரிஷி என்பது. மனிதன் தன் ஆறாவது அறிவு கொண்டு தீமைகளைத் தனக்குள் செயலாக்காது தடுத்து ஒவ்வொரு உணர்வின் தன்மையையும் அடக்கி ஒளியின் உணர்வாகத் தன் உடலிலே வளர்த்துக் கொண்டால்
1.இந்த உடலைவிட்டுச் சென்ற பின்
2.எந்த மகரிஷிகளின் உணர்வை நாம் நுகர்ந்தோமோ
3.அதன் உணர்வுகள் நமக்குள் வலுப்பெறப்பட்டு
4.துருவ மகரிஷி எப்படித் துருவ நட்சத்திரமாகி வளர்ந்து கொண்டுள்ளோரோ
5.அந்த ஈர்ப்பு வட்டத்திற்கு நம்மை அழைத்துச் சென்றுவிடும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சென்றால் அடுத்து உடல் பெறும் விஷத்தன்மைகளை ஒடுக்கிவிடும். பின் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக மாற்றி விடுகின்றது. அதன்பின் நமக்குப் பிறவி இல்லை.

விண்ணுலகில் உருவாகும் உணர்வின் சத்தை ஒளியாக மாற்றி இன்றும் சப்தரிஷி மண்டலங்கள் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் பெரும் கூட்டமைப்பாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளனர். அதைத் தான் முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்பார்கள்.

1.அந்தக் கூட்டமைப்புக்குள் மனிதனாகச் சென்றவர்கள் அனைத்தும்
2.சாதாரண கண்ணுக்குப் புலப்படாத அளவுகளுக்கு ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலமாக
3.வாழ்ந்தும் வளர்ந்தும் கொண்டு உள்ளார்கள்… துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில்…!

ஆகாய கங்கை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

ஆகாய கங்கை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஒன்றின் ஈர்ப்பில் ஒன்று சிக்குண்டு ஓடும் நிலையில் ஒவ்வொன்றும் அதற்குகந்த ஈர்ப்புத் தன்மையுடன் ஓடுகின்றது.

சூரியனை மையம் கொண்டு ஏழு பெரிய கோளங்கள் உள்ளன. இவ் ஏழின் ஈர்ப்பில் இவ் ஏழிற்கும் தாண்டிய நிலையில் இவ் ஏழிற்கும் சிறிய கோளங்கள் 48 மண்டலத்தில் சூரியனும் நம் பூமியைச் சேர்த்து ஏழு கோளமும் இவ் எட்டும் போக பாக்கி நாற்பது கோளங்களும் இவ் ஏழின் ஈர்ப்புடனே சுழலுகின்றன.

ஒவ்வொன்றின் அமில சக்தியும் மாறு கொண்டுள்ளது. சூரியனை மையப்படுத்தி அதன் ஈர்ப்பின் வட்டத்துக்குள் வந்துள்ள மண்டலங்கள்தான் இந்த நாற்பத்தி ஏழும்.

அவற்றில் சிறிய கோளங்களுக்கு இன்றைய விஞ்ஞானிகள் நாமகரணம் சூட்டவில்லை. தெய்வீக அருள் நெறியில் சித்தர்களினால் உணரப் பெற்று அவர்கள் இட்ட நாமகரணங்கள் இவற்றுக்கு உண்டு.

ராகுவும் கேதுவும் சுக்கிரனும் சனியும் குருவும் இவர்கள் பிடியில் சிக்குண்ட மண்டலங்கள். மற்ற மண்டலங்களை நட்சத்திர மண்டலமாக்கி அதன் நாமகரணத்தைச் சூட்டினார்கள்.

1.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்…
2.நம் சித்தர்களால் இயற்றப்பட்ட எண்ணத்தில் பதிவு செய்த இக்கோளங்களின் நிலையே அற்றுவிட்டது.
3.ஏனென்றால் அக்காலத்தில் எழுத்து வடிவங்களோ கற்பாறையில் ஓலைகளில் உணர்த்தச் செய்யும் வழி முறையோ இல்லை.

சித்தர்களால் மனித ஆத்மாவுக்கு வளர்ச்சியூட்டி அவ்வளர்ச்சியின் தொடரில் இவ்வுலக மனித ஆத்மாக்கள் வளர்ந்த நிலையில் சிறுகச் சிறுகத்தான் இவ்வாத்மாக்களின் அறிவு வளர்ச்சியைப் பெருகச் செய்து அதன் வழித்தொடரில் எண்ணத்தைப் பதித்திடும் நிலை வந்தது.

அதற்குப் பிற்பட்ட பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு தான் “பதிவு செய்யும் எழுத்து நிலையே…” உதயம் பெற்றுச் செயலாக்கிட முடிந்தது.

இந்த நிலை வளர்வதற்குள் மனித ஆத்மாவின் அறிவு நிலை வளர்வதற்குள் மண்டலங்களின் வளர்ச்சி நிலை பெருகிவிட்டது.
1.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அன்றுணர்த்திய சித்தர்களின் சக்தி நிலைக்கும்
2.இன்றைய இயற்கையின் சக்தி நிலைக்குமே பெரும் மாற்றம் உள்ளது.

ஒவ்வொரு கோளமுமே அதன் ஈர்ப்பில் பல சக்திகளைச் சேர்த்துக் கொள்கின்றது.

சில நாட்களில் சந்திர மண்டலத்திற்கு அருகாமையில் நட்சத்திர மண்டலங்களைக் காண்பீர்கள். ஒரு நாள் காணும் நிலை மற்றொரு நாளில் காண முடிந்திடாது.
1.அதன் ஈர்ப்பில் சிக்குண்டு அதன் செயலுடன் ஆவியான அமிலமாய்ச் செயல் கொண்டாலும்
2.செயல் கொண்டிடும் இதன் ஓட்டத்தினால்… இதன் வேக நிலை கொண்டு
3.சந்திரனின் ஈர்ப்பில் சிக்காமலும் தப்பிவிடும்.

நம் பூமியே ஒவ்வொரு நாளும் பல நட்சத்திர மண்டலத்தைத் தன்னுள் ஈர்த்தே சுழன்று ஓடுகின்றது. அதை எல்லாம் சில நாட்களில் வானத்தில் எரிநட்சத்திரமாய் எரிந்து விழுவதைப்போல் காண்பீர்கள்.

சுழற்சியில் சிக்கி ஆவியான அமிலமாய் நம் பூமியின் ஈர்ப்பில் பல நட்சத்திர மண்டலங்கள் கலப்பதைப் போல் ஒவ்வொரு மண்டலத்திலும் அதற்குகந்த அமில சக்தியுடைய மண்டலங்கள் கலக்கின்றன. வளர்ச்சியும் பல கொள்கின்றன…!

1.சில நாளில் வான மண்டலத்தில் பார்வைக்கு மிக அதிகமான நட்சத்திர மண்டலங்கள் தெரிவதைக் காண்பீர்கள்
2.சில நாட்களில் ஒன்றிரண்டு காண்பது கூட அரிதாக இருந்திடும்.

இம் மண்டலங்களின் ஈர்ப்பிலும்… நம் பூமி ஓடும் நிலையில் நாம் சந்திக்கும் நிலை கொண்டு நிகழ்பவைதான் இவையெல்லாம்.
1.எந்த மண்டலமும் ஓர் இடத்தில் இருந்து சுழல்வதில்லை.
2.ஓடிக் கொண்டே உள்ள நிலையில் நம் பூமி காணும் நிலை கொண்டு தெரிபவைதான் இந்த நட்சத்திர மண்டலங்களெல்லாம்.

நம் பூமி ஓடும் நிலையில் நம் பூமியின் ஈர்ப்புடனும் பூமியில் சிக்காமலும் நம் பூமியுடனே ஓடி வரும் நட்சத்திர மண்டலங்களும் பல உள்ளன.

அங்கங்கு நம் பூமியின் ஓட்டத் துரித நிலையுடன் ஓட முடியாத… குறுகிய ஓட்ட நிலை கொண்ட நட்சத்திர மண்டலங்களும் பல உள்ளன.

1.அந்த எண்ணிலடங்கா இயற்கையின் பொக்கிஷ ஆதி மூலத்தை அறிந்திட
2.அவ்வாதி சக்தியின் சக்திக்குத் தானப்பா செயல் சக்தியுண்டு.
3.சக்தியின் செயல் வேண்டியே… நாம் அறிந்தே… இங்கே எழுத்தின் வடிவிற்கு வருவோம்…!

உயிரின் துடிப்பால் உடலில் உண்டாகும் உஷ்ண நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

உயிரின் துடிப்பால் உடலில் உண்டாகும் உஷ்ண நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

வான் வீதியில் வட்டமிட்டுக் கொண்டே உள்ள மண்டலங்களும் நட்சத்திர மண்டலங்களும் இந்தப் பால்வெளி மண்டலத்தில் வளர்ச்சி கொண்டுள்ள சில நிலைகளும் ஒன்றைத் தாண்டி ஒன்று ஓடும் நிலைக்கும் ஜீவன் வேண்டும்.

உஷ்ண அலைகளைக் கொண்ட நிலையில்தான் அததற்கு உயிர்த் துடிப்பே வருகின்றது.
1.அதி உஷ்ணத்தை எதுவும் ஏற்பதில்லை.
2.அதி குளிர்ச்சி பனிக்கட்டியாக உறைந்த நிலையிலும் தாவர இன வளர்ச்சி வளர்வதில்லை.

இன்று நம் பூமியின் நிலை எந்த நிலையில் அது சுழலும் தன்மை கொண்டு காற்று மண்டல வட்டத்திற்கு மேல் உஷ்ண அலைகளை நம் பூமி வெளிப்படுத்துகின்றதோ அந்த நிலையில்தான் ஒவ்வொரு கோளங்களுக்கும் அதன் சுழற்சியில் காற்று மண்டலமும் அம்மண்டலம் கக்கும் உஷ்ண நிலையும் செயல் கொள்கின்றது.

மனித உடலுக்கும் சரி ஒவ்வொரு ஜீவனுக்கும் சரி…
1.அதனைச் சுற்றி சப்த அலை உண்டு
2.சப்த அலைக்குச் சிறிது தள்ளி உஷ்ண அலை உண்டு.
3.இந்த மனிதனின் உடல் வெப்ப நிலையும் அம்மனிதனைச் சப்த அலையின் வெப்பக் காற்றும் ஒன்றாய்த்தான் இருந்திடும்.

தாவரங்களுக்கும் இந்த நிலையுண்டு. இதைப் போல் இவ்வுலகம் மற்ற எல்லா மண்டலங்களுக்குமே இப்படிப்பட்ட உஷ்ண அலைகள் உண்டு.

சந்திரனின் நிலை குளிர்ந்த நிலை என்று முன்னர் உணர்த்தினேன். ஒவ்வொன்றிற்கும் அதனதன் சுழலும் வேகம் கொண்டு இவ்வுஷ்ண அலைகள் மாறுபடுகின்றன.

இவ்வுஷ்ண அலை கக்கும் நிலையே எந்த மண்டலத்திற்கும் ஓர் இடத்தில் இருக்கும் நிலை மற்றொரு இடத்தில் இருந்திடாது. எல்லா ஜீவராசிகள் தாவரங்களின் நிலைக்கும் இத்தகைய நிலை உண்டு.

அது போல் சூரிய மண்டலத்திற்குச் சென்றிட முடியாது… “அது உஷ்ணமான கோளம்…” என்று விஞ்ஞானத்தில் உணர்த்துகின்றனர். ஆனால் அங்கே அப்படி இல்லை…!

இன்றைய பிழைப்புக்கு என்ன வழியோ அது கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில் தான் உள்ளனர்

இன்றைய பிழைப்புக்கு என்ன வழியோ அது கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில் தான் உள்ளனர்

 

இனம் இனத்தை வளர்க்கும் என்று சொல்வார்கள். ஆனால் இனத்துக்குள் ஒன்றுடன் ஒன்று தன் இரைக்காக மோதுவதும் உண்டு.

அதே சமயத்தில் தன் இனத்தின் தன்மை பெருக்கும் நிலைகள் கொண்டு வருவதும் உண்டு. ஞானிகள் அப்படித்தான் இயங்கிக் கொண்டுள்ளனர்.

இதைப்போன்று உயர்ந்த ஞானிகள் 27 நட்சத்திரங்களின் உணர்வின் தன்மைளை உடலிலிருக்கும் ஒவ்வொரு அணுக்களுக்கும் செலுத்தப்பட்டு உணர்வினை ஒளியாக மாற்றி தன் அறிவின் ஞானத்தை வளர்த்து விண் சென்றுள்ளார்கள்.

அதிலே விண்ணுலக ஆற்றலைக் கண்டுணர்ந்த முதல் மனிதனான அகஸ்தியன் ஒளியின் சுடராக மாற்றித் துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.

அதிலிருந்து உணர்வின் அலைகள் வெளிப்படுவதை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமது பூமியின் ஈர்ப்பு வட்டத்தில் அது பரவச் செய்து கொண்டுள்ளது.

இதைப்போல் 27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களின் உணர்வின் சத்தைத் தனக்குள் கவர்ந்து துகள்களாக மாற்றப்படும்போது அதைச் சூரியன் கவர்ந்து தனது உணவாக உட்கொண்டு வெப்ப காந்தங்களாக அதன் அலைகளைப் பரப்பிக் கொண்டுதான் இருக்கின்றது.

சிலருக்கு இதை எல்லாம் (ஞானகுருவின் உபதேசங்களை) படிக்கும் போதும் கேட்கும் போதும் சில வித்தியாசமான நிலைகள் ஏற்படலாம்.
1.நமக்கு இது எல்லாம் எதற்கு…?
2.ஏனென்றால் நாளைக்கு விடிந்தால் சோறு இருந்தால் போதும்.
3.குருடனுக்குக் கண் தானே தேவை…
4.நாளைக்கு என்ன ஆகப்போகின்றதோ…? ஏது ஆகப்போகின்றதோ…! இன்றைக்கு எனக்கு இரண்டு சோறு கிடைத்தால் போதும்
5.ஞானகுரு ஆசீர்வாதம் இருந்தால் போதும்
6.தொழில் கிடைத்தால் போதும். தொழில் நல்ல முறையில் நடந்தால் போதும்.
7.என் உடல் நோய் தீர்ந்தால் போதும் என்ற இந்த உணர்வில் தான் நாம் இருக்கின்றோமே தவிர
8.நம்மை அறியாது இயக்கும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணம் இல்லை.

ஏனென்றால் சந்தர்ப்பத்தால் நுகர்ந்து கொண்ட உணர்வுகள் நம் உடலிலுள்ள அணுக்களில் சேர்க்கப்பட்டு
1.“நம்மை அறியாமல் வேதனையை உருவாக்கி… நல்லவைகளை எண்ண விடாதபடி
2.நமக்குள் வேதனையை உருவாக்கிக் கொண்டே உள்ளது.

இதை நாம் மீட்கவில்லை என்றால் நஞ்சின் தன்மை அடைந்து மீண்டும் நாம் உயிரணுக்களின் தோற்றங்களில் ஆரம்பத்தில் விஷ அணுக்களாகத் தோன்றியது போல் நம்மை இந்த உணர்வுகள் அனைத்தும் விஷ அணுக்களாக மாற்றப்பட்டுவிடும்.

மீண்டும் புழுவாக பூச்சியாக பாம்பாக தேளாகத்தான் மீண்டும் பிறக்க வேண்டிய நிலை வரும். எனென்றால் இந்த இயற்கை மாற்றங்களில் அதனுடைய இயக்கம் எது…? என்ற நிலைகளில்
1.எதனுடைய கலவைகள் அதிகமாகின்றதோ
2.அதற்குத்தக்கவாறு தான் மாறுகின்றது… மாற்றம் அடையச் செய்கிறது.

இன்று மனிதனாக இருக்கின்றோம் விஷத் தன்மைகள் பரவிக் கொண்டுள்ளது. அதிலிருந்து தப்ப வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்கிறோம்.