தினசரி உபதேசம்

இங்கே இந்த உபதேசத்தைப் பார்த்து… படித்து… கேட்கும் அனைவரும் உங்கள் தாய் தந்தையரின் அருளால் எல்லா மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவீர்கள். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறுவீர்கள்.

 

உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீய வினைகள் சாப வினைகள் பாவ வினைகள் பூர்வ ஜென்ம வினைகள் அனைத்தும் நீங்கி உடல் நலம் பெற்று மன பலம் பெற்று மன மகிழ்ச்சியுடன் வாழ்வீர்கள்.

 

உயிருடன் ஒன்றும் உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறி சப்தரிஷி மண்டலத்தின் அருள் வட்டத்தில் என்றுமே ஒன்றி வாழ்வீர்கள். அழியா ஒளியின் சரீரம் பெறுவீர்கள்.

 

ஓ…ம் ஈஸ்வரா.. குருதேவா…! 

act of soul

நாம் இயங்குகிறோமா…? பிறிதொன்றால் நாம் இயக்கப்படுகின்றோமா…? என்பது பற்றி அறிந்து கொள்ளுங்கள்

கோலமாமகரிஷி “ரிஷி நிலையை” எப்படிப் பெற்றார் என்று உணர்வதற்காக மங்களூர் அருகில் உள்ள கொல்லூரில் யாம் (ஞானகுரு) ஆறு வருடம் தியானமிருந்து வந்தோம். மழைக் காலம் வரும் பொழுதெல்லாம் அங்கே செல்வோம்.

கோள்களின் இயக்கத்தைத் தெரிந்து கொண்டவர் அதனால் தான் அவரைக் கோலமாமகரிஷி என்பது. அவர் கண்டறிந்த உண்மைகளை அறிவதற்காக குருநாதர் அங்கே என்னை அனுப்பி வைத்தார்.

இரவும் பகலும் அந்தக் கோள்களின் இயக்கங்களை அங்கிருந்து தியானித்தேன்.

இதை எல்லாம் பார்த்து அறிந்து உணர்வதற்காக வேண்டி மங்களூரில் ஒரு நண்பர் வீட்டில் தங்கியிருப்பேன். அப்பொழுது, அங்கிருந்து இன்னொரு வீட்டிற்குப் போய் வருமாறு குருநாதர் கூறினார். அங்கு போனோம்.

அந்தக் குடும்பத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பையன் பிறந்த பின் சந்தர்ப்பத்தால் பையனுடைய அப்பாவும் அம்மாவும் இறந்து போனார்கள்.

இரண்டு பேரும் இறந்தவுடன் பையனுடைய பாட்டி என்ன செய்கிறது…? நீ பிறந்ததும் அப்பாவையும் அம்மாவையும் தூக்கி விழுங்கி விட்டாய்… நாசமாகப் போகிறவனே…! எங்கேயாவது தொலைந்து போடா…! என்று அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் திட்டிக் கொண்டே இருக்கிறது.

ஆனால் அந்தப் பையனுடைய அக்காவோ… ஏன் பாட்டி…! பிறந்ததிலிருந்து அவனுக்கு என்ன தெரியும்…? அதற்காக வேண்டி அவனைத் திட்டுகிறாயே,..! என்று சொல்கிறது.

உனக்கு ஒன்றும் தெரியாது. இவன் பிறந்த நேரத்தில் தான் எல்லோரையும் விழுங்கி விட்டான்… இந்தக் கழுதையை எங்கேயாவது குப்பையில் போடு..! என்று பாட்டி பேசிக் கொண்டே உள்ளது.

இதெல்லாம் நடக்கும் பொழுது நான் அவர்கள் வீட்டிலே போய் அவர்களுடன் இருந்து கொண்டிருக்கின்றேன். அங்கே என்ன… ஏது… அது எப்படி நடக்கின்றது…? என்பதை அறிந்து கொள்வதற்காக குருநாதர் சொன்ன வழியில் அங்கே சென்று கொண்டிருக்கின்றேன்.

அங்கே சென்று அவர்களுடன் பழகிக் கொண்டிருக்கும் பொழுது இந்தப் பையன் பேசுவதும்… அந்தப் பாட்டி பேசுவதும்… இப்படியே போராடிக் கொண்டே இருந்தார்கள்.

அந்தப் பாட்டி இறந்தது. ஆனால் தன் பேத்தி மீது பற்றாக இருந்தது. ஏனென்றால் அந்தப் பாட்டி தான் குடும்பத்தை முழுவதுமாக ஆதரித்து வந்தது.
1.தன் பேத்தி மீது மிகவும் பிரியமாக இருந்ததால்
2.இறந்த பின் பாட்டியின் உயிராத்மா பேத்தியின் உடலுக்குள் வந்து விட்டது.

பேத்தியின் உடலுக்குள் பாட்டியின் உயிராத்மா சென்றபின் பாட்டி பையனை எப்படித் திட்டிப் பேசினார்களோ அதே போன்று பையனின் அக்காவும் பேசத் தொடங்கினார்கள்.

தன்னுள் பாட்டியின் உயிராத்மா இணைந்துள்ள நிலையில் தம்பியைப் பார்த்து, “தொலைந்து போகிறவனே.. எல்லோரையும் தூக்கி வாரி விட்டாய்… நாசமாகப் போடா…!” என்று சொன்னாள். அதன்படியே தம்பியை விரட்டி விட்டாள்.

இது நடந்த நிகழ்ச்சி…!

1.ஒரு உடலில் வளர்த்துக் கொண்ட உணர்வுகள் மற்றொரு உடலுக்குள் சென்ற பின் அது எப்படி இயக்குகிறது…?
2.உடலுடன் இருக்கும் பொழுது இந்த உணர்வுகள் மாறியதும்
3.அவர்கள் எப்படி இயங்குகின்றனர்…? என்பதை அனுபவபூர்வமாக என்னால் அங்கே அறிய முடிந்தது.

இந்த மாதிரி குருநாதர் காட்டிய வழியில் மூன்று இலட்சம் பேரைச் சந்தித்து அனுபவங்கள் பெற்ற பின் தான் உங்களுக்கு இதை எல்லாம் சொல்கிறேன்.

ஒவ்வொரு வீட்டிற்கும் பிச்சை எடுப்பது மாதிரி வேஷ்டியும் துண்டும் மட்டும் தான் போட்டுக் கொண்டு போவேன்.
1.அங்கங்கே என்ன நடக்கிறது…
2.அந்த உணர்வுகள் எப்படிச் செயல்படுகிறது…?
3.சாப அலைகள் என்ன செய்கிறது…?
4.நோயின் உணர்வுகள் எப்படி வருகிறது…? இறக்கச் செய்கிறது…? என்று
5.எல்லாவற்றையும் அறிந்து கொள்வதற்குத்தான் காட்டிற்குள்ளும் நகரத்திற்குள்ளும் குருநாதர் அனுப்பினார்.

பாட்டி இறந்த பின் அந்தப் பெண் குழந்தையிடம் நான் சொன்னேன்…!

ஏம்மா…! பாட்டி தான் உன் தம்பியைத் திட்டிக் கொண்டிருந்தது. இப்பொழுது நீ உன் தம்பியைத் திட்டுகிறாயே…! என்றேன்.

அட… நீ… போய்யா….! என்று இப்படி என்னைச் சொல்கிறது.

அந்தப் பாட்டி எப்படிச் சொல்லுமோ அதே மாதிரி என்னிடமும் “அட போய்யா…!” என்கிறது.

கூட வந்த நண்பர் அந்தப் பெண்ணிடம் “சாமியை நீ இப்படிப் பேசலாமா…?” என்று கேட்டார்.

சாமியாவது… பூதமாவது…? என்று இப்படியே “வெடுக்..” என்று பேசுகிறது. அந்த உணர்வுகள் அதே மாதிரி வேலை செய்கிறது.

ஏனென்றால் ஒரு உடலுக்குள் இந்த உணர்வுகள் எதை வளர்த்ததோ அதே உணர்வின் செயலாக எப்படிச் செயலாக்குகிறது என்பதை யாம் அறிந்து கொள்ளவே குருநாதர் எம்மை அந்த வீட்டிற்கு அனுப்பினார்.

இன்னின்ன நிகழ்ச்சிகள் நடக்கும்… இதனுடைய நிலைகளை நீ பார்…! என்று சொல்லியிருந்தார் குருநாதர். அவர் சொன்னது போன்றே நடந்தது.

 

அருள்பாடல்கள் பாகம் 1 

அருள் பாடல்கள் பாகம் 2 

Spiritual light - Bliss

தூங்காமல் தூங்கும் நிலை பெறுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

எண்ணம் தான் செயல்.. எண்ணம் தான் கடவுள்…! என்ற நிலையை பல இடங்களில் திரும்பத் திரும்பச் சொல்லியுள்ளேன்.

தாவரங்கள் எல்லாம் ஒரே நிலையில் அதற்குகந்த ஒரே அமில குணத்தை ஈர்த்து வளர்ந்து வாழ்கின்றது. வெங்காயம் அதன் அமில குணமான அதிகப்படியான ஈர்ப்பு அமில இரசத்தை உறிஞ்சி ஒரு வகையான காரத்தை வளர்க்கின்றது. அதன் ஆவி பட்டவுடன் நம் கண்ணீர் சுரக்கிறது.

மிளகாயின் நெடி எரிச்சலையும் இன்னும் சில வகை காய்களினால் நமைச்சலும் நாம் பயிராக்கி வளர்க்கும் தாவரம் அல்லாமல் இயற்கையுடன் வளரும் பல கோடி இன வளர்ச்சியும் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு குண நிலை ஒத்த அமில சக்தி ஈர்ப்பில் வாழ்கின்றது.

ஒரு நிலையில் ஈர்த்து வளரும் தாவரங்களுக்கு மனிதனை ஒத்த செயல் உணவு முறைகள் வேண்டி இருப்பபதில்லை. ஆக.. உண்டு கழித்து உறங்கி வாழும் நிலை மனிதனுக்கு எப்படி ஏற்பட்டது…?

ஒன்றிலிருந்து மாறுபட்ட அமிலப் படைப்பில் பிம்பம் கொண்ட ஜீவராசிகளின் நிலையே ஒன்றுடன் ஒன்று கூடிக் கூடி வளர்ச்சி நிலை முற்றி கனம் கொண்ட பிம்ப ஜீவ நிலை எற்பட்ட பிறகு ஒவ்வொன்றிலிருந்தும் சேமிக்கப்பட்ட குண நிலைகளுக்கொப்ப ஈர்ப்பு நிலை அமையப் பெறுகிறது.

அப்படிப் பெற்றதனால்… ஜீவ பிம்ப உடல் பெற்ற பிறகு
1.எண்ணத்தின் செயலினால் தன் தேவையை உணரும் நிலையும்
2.தன் தேவைக்குகந்த செயலாற்றும் திறமையும்
3.ஒன்றின் பலவாகக் கூட்டிக் கொண்ட பல அமிலங்களின் ஈர்ப்பு சக்தி கொண்ட ஜீவன்களுக்க
4.தன் உணர்வின் எண்ண செயலுக்கெல்லாம் அதன் தேவையின் அடிப்படை உணவு தேவைப்படுகின்றது.

இதிலுள்ள உள் அர்த்தம் என்ன..?

1.இது நாள் வரை “எண்ணத்தின் செயல்” என்று உணர்த்தி வந்தேன்
2.இப்பொழுது “உணர்வின் எண்ணத் தேவை…” என்று உணர்த்துகின்றேன்.

நம் உடலுக்கு நீர் தேவைப்படும் பொழுது வாய் வறண்டு விட்ட பிறகு நீர் அருந்த எண்ணத்தைச் செலுத்துகின்றோம்.
1.உணர்வின் தேவையினால் எண்ணத்தைச் செலுத்தி
2.எண்ணத்தின் செயலால் நீரை அருந்துகின்றோம்.

அதே போன்று நம்மை அறியாமலே நாம் எந்தச் செயலில் இருந்தாலும்… அல்லது அதன் பால் எண்ணத்தைச் செலுத்தா விட்டாலும் நம்மை அறியாமல் நம் உடலில் உள்ள இவ்வெண்ணத்தின் மோதலின் செயல் நிலையினால்
1.நாள் முழுவதும் நம் செயல் இருக்கும் பொழுது
2.இந்த உடலின் உஷ்ண அலைகள் ஆவியாக கொட்டாவி வெளிப்பட்டு
3.உடல் உறுப்புகளுக்கு அமைதிப்படுத்தும் நிலையான உறக்கம் கொள்ள வேண்டியுள்ளது.

இப்படிப் “பல எண்ணத்தை எடுத்து… பல அமிலங்களின் செயல் தொடர்பில்…” வாழும் பிம்ப உடல்களுக்கு உணர்வின் எண்ண அலையும் வருகின்றது.

ஒரே நிலை கொண்ட தாவரங்களுக்கும்… மற்ற ஜீவன்களான ஜீவ சக்தி கொண்ட எல்லாக் கனிவளங்களுக்கும்… நம் பூமிக்கும்… மற்ற எல்லாவித மண்டலங்களுக்கும் ஜீவன் உள்ள பொழுது… தன் தேவை அறியும் உணர்வு… உறங்கும் நிலையும் இல்லை…? ஏன்…?

ஜீவன்கள் உறங்கி விடுகின்றன. பூமியும் மற்ற கோளங்களும் தாவரங்களும் உறங்குவதில்லை.
1.ஒரு நிலை கொண்ட அமிலப் படைப்புகள்
2.இவ்வெண்ண சக்தியின் பலவற்றை மோதுண்டு வாழும் ஜீவன்களைப் போல உறங்குவதில்லை.

அவை உறங்கிவிட்டால் உறங்கும் ஜீவன்களுக்கு ஜீவத் துடிப்பு எங்கிருந்து வரும்…?

இயற்கையின் ஜீவப் படைப்பில் சுகம் கண்டு வாழும் நிலை பெற்ற ஜீவன்கள் தனக்குக் கிடைத்த இந்த அபரிதமான உண்மைச் சக்தியை
1.உண்டு… கழித்து… உறங்கி… மங்கச் செய்யும் வாழ்க்கையிலிருந்து
2.இதே அடிப்படை எண்ண குணத்தில் செல்லாமல்
3.”ஒரு நிலை கொண்ட எண்ணச் சக்தி கொண்டு தான் ஞானத்தின் வளர்ச்சி பெறல் வேண்டும்
4.தூங்காமல் தூங்கும் நிலை…!

நீங்கள் ஒவ்வொருவரும் ஞானியாக மாறியே ஆக வேண்டும்

 

சாமி நன்றாகப் பேசுகிறார்…! அதை எல்லாம் கேட்டிருக்கின்றேன்…. நான் பெரிய உண்மைளை எல்லாம் சொல்கிறேன்.. ஆனால் நான் சொல்வதைக் கேட்க மாட்டேன் என்கிறான் என்று அடுத்தவரின் கோபத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டால் உங்களுக்குள் நல்லதை ஏற்க முடியவில்லை…! என்று தான் அர்த்தம்.

 

ஆகவே அந்த மாதிரி எல்லாம் ஆகாதபடி குருநாதர் ஆசைப்படி நீங்கள் ஒவ்வொருவரும் ஞானிகளாக மாறியே ஆக வேண்டும். இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலையை அடைய வேண்டும்.

 

அருளைப் பெருக்கினால் சிந்தித்துச் செயல்படும் ஆற்றல் கிடைக்கும். நாளை வரும் நஞ்சின் தன்மையிலிருந்து மீள முடியும்.

 

spiritual eye divine eye

நம் உயிராத்மாவுக்கு உணவாகக் கொடுக்க வேண்டிய ஜீவ சக்தியைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

எச்சக்தியும் செயல்பட ஜீவத் துடிப்பு காந்த ஒளி அலை வேண்டும். இச்சக்தி நிலை… ஜீவன் தரவல்ல “நீரிலிருந்து” கிடைக்கின்றது.

நீர் எப்படிக் கிடைத்தது…?

இயந்திரங்களைச் செயலாக்க அவ்வியந்திரங்களுக்கு ஆகார திரவங்களைச் செலுத்தி (FUELS) இயக்கினாலும்
1.அதற்கு ஜீவ நீரைச் செலுத்திச் சுழல விட்டு (COOLING) காந்த மின் அலையின் ஒளியைச் சுழல விட்டுத் தான்
2.அந்த ஒளிப் பொறியினால் இயந்திரங்களை இயக்குகின்றான் மனிதன்.

“காந்த மின் ஒளி” பிறக்கும் பொழுதே ஜீவன் தான் செயல்படுகின்றது. (முக்கியமானது) மின்சாரத்தை எடுக்கவும்… நீரிலிருந்து காந்த மின் அலையைப் பிரித்துத்தான் மின் அலையாக மனிதன் காண்கின்றான்.

இதில் உள்ள உண்மையை உணர்த்துவதன் நிலை என்ன…?

சூரியனிலிருந்து ஒளி அலைகள் வருகின்றது. உலகம் சுழன்று ஈர்த்து வெளிக் கக்கும் நிலையினால் ஒளியும்… இயற்கையும்… ஜீவ நீரும் பெறுகின்றோம்..! என்ற உண்மையை உணர்ந்து வாழும் மனிதன் இதிலுள்ள கருத்தில் ஏற்றுக் கொள்ளக்கூடிய “உண்மை இரகசியத்தை” அறியவில்லை.

சூரியனிலிருந்து வெளிப்படும் அமிலக் குண சக்தி நேராக நம் பூமியில் மட்டுமா வந்து படர்கிறது…? அப்படிப் படரும் ஒளி சக்தியானது பூமியின் மேல் செல்லச் செல்ல எந்த நிலையில் உள்ளது…?

இந்தப் பூமிக்குச் சீரான ஒளி அலை பெறக்கூடிய தன்மைக்கு நம் பூமிக்கு மனித ஆத்மாக்கள் கருத்தோன்றி வளர்ச்சி நிலை பெற உதவிய
1.வியாழனின் சக்தி அலையின் உதவி இல்லா விட்டால்
2.இன்றைய பூமியின் ஜீவத் துடிப்பான நீரின் அமிலத் தன்மையே இல்லை.

ஒலியும் ஒளியும் கலந்து ஆவியாகி… நீராகி.. நிலமாகி.. ஜீவ சக்தியைப் பெற்றுள்ள நம் பூமியின் ஜீவ குண நிலை பெறப் பல பல மண்டலங்களின் அமிலச் சக்தியும் துணை புரிகின்றது.

இஜ்ஜீவனுக்கு ஒளி அலைகளை ஈர்க்கும் தன்மையும் வேண்டும். காந்த மின் அலை (ELECTRO MAGNETIC WAVES) என்று பல நாட்களாக உணர்த்தி வருகின்றேன். இக்காந்த மின் அலைக்குத் துடிப்பு எங்கிருந்து வந்தது…?

காந்த மின் அலை எப்படி ஏற்பட்டது…?

ஒரு அமில குணம் படர்ந்த தன்மையில் மற்றொரு அமில குணம் அதிலே மோதும் பொழுது ஏற்படும் “ஒலியின் அதிர்வு ஈர்ப்பினால்…”
1.இக்காற்று மண்டலத்தில் படர்ந்துள்ள சூரியனின் குண அமில சக்தி மோதுண்டவுடன்
2.இழுக்கும் ஈர்ப்பு நிலை கொண்டு ஜீவ துடிப்பான ஆவி நீர் சுரந்து
3.இவ்விழுவையின் ஒளி ஏற்பட்ட பிறகு துடிப்பு நிலை கொள்கின்றது.

இத்துடிப்பின் ஈர்ப்பு கனம் கொண்டு பூமியின் ஈர்ப்பில் காற்று மண்டல முந்தைய பாடத்தில் உணர்த்தியதைப் போல்
1.இந்தப் பூமியின் சுழற்சி ஓட்டத்தில் வடிகட்டி ஈர்க்கும் நிலை என்று உணர்த்திய நிலையில் மோதுண்டு
2.இஜ்ஜீவ ஒளியைப் பூமி பெற்று
3.பூமியின் ஈர்ப்பில் உறிஞ்சி வெளிப்படுத்தும் ஒளி அலையைத் தான்
4.சூரியனின் ஒளி பிம்பமாக நாம் காண்கின்றோம்.

பனிரெண்டு மணி உச்சி வெயிலில்… நம் பூமி எந்த இடத்தில் சூரியனின் ஒளி அலையை எந்த டிகிரிக் கோணத்தில் பெறுகின்றதோ… அதன் நேர் கோட்டில் பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூர விகிதத்தில் “இதே அளவு உஷ்ண அலையும் வெளிச்சமும் இருக்காது…!”

விஞ்ஞானிகளும் இதைக் கண்டு ஆராயட்டும்…!

பூமியின் நிலைக்கும்… பூமிக்கு மேல் செல்லச் செல்ல குளிர்ந்த நிலை தான் அதிகமாகக் கூடியிருக்கும். பூமியின் சுழற்சி ஓட்டத்தில் தன்னைத் தானே பூமி சுழன்றோடும் சக்தி ஈர்ப்பினால் பூமியே தான் சூரியனின் ஒளி அலையைக் கிரகித்து ஒளி பெற்று ஓடுகின்றது.

விஞ்ஞானத்தில் திரவங்களைச் செலுத்தி வாகனங்களை எப்படி ஓட்டுகின்றார்களோ அதைப் போல் தான் நம் பூமியும் தன்னைத் தானே அமில குணத்தின் உணவை எடுத்து சூரியனின் சக்தி ஒளியை நுண்ணிய காந்த அலையாக ஈர்த்து வளர்த்து ஓடிக் கொண்டுள்ளது.

மற்ற ஒவ்வொரு மண்டலமும் இதன் இயற்கைக் கதியில் தான் செயல் கொள்ளுகிறதேயன்றி
1.அதனதன் ஈர்ப்பு இல்லா விட்டால் ஜீவன் இல்லை…!
2.சூரியனாக இருந்தாலும் சரி.. சூரியனுக்கே சக்தி தந்த வியாழனாக இருந்தாலும் சரி…
3.சூரியனைப் போன்று சூரியனைக் காட்டிலும் வளர்ந்த எக்கோளமாக இருந்தாலும் சரி…
அதனதன் ஈர்ப்பில் வளர்ச்சி கொண்டு வாழ்வது தான் ஒவ்வொரு நிலையும்.

இந்த உண்மையின் நிலையை மனித உணர்ந்திடல் வேண்டும்.

அறிவாற்றலில் செயல் கொள்ளும் மனிதன் தன் ஞானத்தின் ஈர்ப்பை… ஜீவத் துடிப்பு கொண்ட உயிராத்மாவின் ஈர்ப்புக்கு… தன் உயிராத்மாவிற்கு வேண்டிய நல்ல சக்தியாக… எவ்வமில குணம் உள்ளதுவோ… அதன் ஜீவ அலையை நுண்ணிய காந்த ஈர்ப்பை தான் எடுக்கும் சுவாசத்தினால் எடுத்துச் செயலாக்கிட முடியும்.

உடலுக்கு உணவு கொடுத்து வளர்த்தாலும் உடல் அழியக்கூடியது. ஆனால் உயிரான்மாவிற்கு உகந்த மின் காந்த ஒளியை நாம் பெற்றால் என்றுமே அழியாத நிலைகள் கொண்டு விண்ணிலே ஏகாந்தமாக வாழலாம்.

அப்படி வாழ்பவர்கள் தான் சப்தரிஷி மண்டலமும்… துருவ நட்சத்திரமும்…!

இறந்தவர்களைப் பாசத்துடன் எண்ணலாமா…?

குடும்பப் பாரம்பரியத்தில் நம் சந்ததிகளைக் காக்கும் வழி 

முன்னோர்களை விண் செலுத்துவதை உறுதிப்படுத்தும் முறை

ஆவி பிடித்த ஒரு அம்மாவைக் குணப்படுத்தியது

 

கடுமையான பேய் பிடித்த ஒரு அம்மாவை மந்திரவாதியிடமிருந்து மீட்டச் செய்தார் ஈஸ்வரபட்டர்.

 

பழனி முருகன் பேரைச் சொல்லி மந்திரம் செய்பவருக்குப் பக்கபலமாக இருந்து அரசு அதிகாரிகள் என்னை மிரட்டினார்கள். குரு காட்டிய வழியில் சில உண்மைகளைக் காட்டியதும் பின் அவர்களும் ஒடுங்கினார்கள்.

 

take naraimha avatar

கடுமையான வேதனையில் உள்ளவர் மீது இரக்கப்பட்டுப் பரிவுடன் உதவி செய்யலாமா…?

ஒரு சமயம் நான் (ஞானகுரு) இரயிலில் சென்னையிலிருந்து பம்பாய்க்குச் சென்று கொண்டிருக்கின்றேன். குருநாதரும் (ஈஸ்வரபட்டர்) அப்பொழுது என்னுடன் வருகின்றார்,

செல்லப்படும் பொழுது இரயிலில் ஒரு நோய்வய்ப்பட்ட பெண்மணியை அவர்களுடைய உறவினர்கள் வேலூர் ஆஸ்பத்திரியிலிருந்து பம்பாய்க்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்கள்.

நோய்வாய்ப்பட்ட பெண்மணி வேதனை தாளாமல் பதறிக் கொண்டிருக்கின்றது. உறவினர்களிடம் ஐயோ…! எனக்கு இப்படி இருக்கிறது… தண்ணீர் கொடு… அது கொடு.. இது கொடு..! என்று கேட்டுக் கொண்டே இருந்தார்.

ஆனால் உறவினர்களோ மருத்துவர் சொன்னபடி… “உணவோ தண்ணீரோ… ஒரு அளவிற்கு மேல் கொடுக்கக் கூடாது..” என்பதைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்..

ஆனால் நோய்வாய்ப்பட்ட பெண்மணியோ… அடப் பாவிகளா… எனக்கு நாக்கு இழுத்துக் கொண்டிருக்கின்றது… உண்ணுவதற்கு எதுவும் கொடுக்கமாட்டீர்களா..?” என்று சாபமிட்டுக் கொண்டிருந்தார்.

கூட வந்த உறவினர்கள் என்ன செய்கிறார்கள்…? டாக்டர் சொன்னதை எண்ணிக் கொண்டு நோயாளியைப் பார்த்து “நீ சும்மா இருக்க மாட்டாயா…?” என்று மிரட்டுகிறார்கள்.

அப்பொழுது இன்னொரு அம்மா அந்த இரயிலில் வந்து கொண்டிருந்தவர் இந்த அம்மாவைப் பார்த்து… பாவம் மிகவும் வயதானவர்கள்… கேட்டால் கொடுத்தால் என்ன..? அவஸ்தையயால் இப்படிச் சாபமிடுகிறார்கள்…! என்று அவர்கள் எண்ணிக் கேட்கிறார்கள்.

இதை நான் பார்த்துக் கொண்டேயிருக்கின்றேன்.

“உனக்கு என்ன வேண்டும் அம்மா…?” என்று இரக்கமாகக் கேட்டார்கள்.

அதற்கு உறவினர்கள்… அட எங்களுக்குத் தெரியாதா…? நீ என்னம்மா இதைக் கேட்கிறாய்…?” என்று சொல்கிறார்கள்.

இப்படிச் சொன்னவுடன் அந்த நோயான பெண்மணி “பார்…! உதவி செய்பவர்களைக் கூட இப்படித் திட்டுகிறார்களே…!” என்று எண்ணுகின்றார்.

ஏனென்றால் அந்தச் சந்தர்ப்பம் இது போன்ற உணர்வுகளை நுகரும் பொழுது உயிர் அதை ஜீவ அணுவாக அவர்களுக்குள் உருவாக்குகின்றது.

குருநாதர் இதைக் காண்பித்தார். ஆனால் அங்கு யாரும் தவறு செய்யவில்லை.

மருத்துவர்கள் கூறிய அறிவுரைப்படி “ஒரு அளவுக்கு மேல் உணவோ தண்ணீரோ கொடுத்தால் அந்த உயிருக்கு ஆபத்து வரும்…!” என்று உறவினர்கள் அதைக் கடைபிடிக்கிறார்கள். எதற்காக…? சிறிது நாளைக்காவது அந்த நோயான பெண்மணியைக் காப்பாற்ற வேண்டும் என்று..!

ஆனால் நோயான பெண்மணியோ “நான் இப்படி அவஸ்தைப்படுகிறேனே… கேட்டதைக் கொடுக்க மாட்டேன் என்கிறார்களே… கொஞ்சம் கூட இரக்கம் இல்லையே…!” என்று இந்த அம்மா பேசுகிறது.

இந்த உணர்வின் சொல்லைக் கேட்டவுடனே உறவினர்கள் வேகம் கொண்டு.. “நீ பேசாமல் இரு…!” என்கிறார்கள்.

இதனால் நோயான பெண்மணி “நாம் இவர்களுக்கு எத்தனை உதவிகளைச் செய்திருப்போம்… என்னுடைய நோயின் தன்மை தெரியாமல் இப்படிச் சீறிப் பாய்கிறார்களே… வேதனைப்படுத்துகிறார்களே..!” என்று அவர்களின் உணர்வுகள் மாறுகின்றது.

இதெல்லாம் சந்தர்ப்பங்கள்…!

இரயிலை விட்டு இறங்கியவுடன்.. நோயான பெண்மணியின் வீடு வரை எம்மைச் சென்று வரச் சொல்லிவிட்டு குருநாதர் ஒரு இடத்தில் இருந்து விட்டார்.

யாம் அவர்களைப் பின் தொடர்ந்து அவர்கள் வீடு வரை சென்றோம். இரண்டு நாள் அங்கே இருந்தோம். மூன்றாம் நாள் நோயான பெண்மணியின் உயிராத்மா பிரிந்தது.

அந்த ஆன்மா பிரியும் பொழுது… அவருடைய எண்ணம் எங்கே செல்கிறது…?

இரயிலில் வரும் பொழுது இந்த நோயான பெண்மணிக்காக யார் பரிந்து பேசினார்களோ அவர்கள் மேல் வருகிறது. “மகராசி எனக்கு உதவி செய்தாளே…!” என்ற அந்த எண்ணம் வந்தது.

ஆனால் உறவினர்களை நினைத்து “என்னுடைய எல்லாச் சொத்துக்களையும் வைத்துக் கொண்டு எனக்குத் துரோகம் செய்தார்கள்…” என்று இங்கே சாபமிட்டது.

1.இத்தகைய சாப அலைகளை அங்கே அந்த உறவினர்கள் நுகர்ந்தனர்
2.அவர்கள் உடலில் விளைந்து அவர்கள் தொழில் நசுங்கியது…
3.குடும்பத்தில் பல விதமான குழப்பங்கள் விளைந்தது.

ஏனென்றால் இதையெல்லாம் ஒரு 48 நாள்கள் பார்க்கும்படியாக அந்த வீட்டிற்கு அருகாமையில் இருந்து பார்க்கும்படி செய்தார் குருநாதர். ஒரு பக்கத்தில் அமர்ந்து இங்கே என்ன நடக்கிறது…? என்று பார்த்துக் கொண்டிருந்தோம்.

அதே சமயத்தில் நோயான பெண்மணி கூட வந்து பரிந்து பேசினார்களே அவர்கள் நோயான பெண்மணியின் வீட்டுப் பக்கம் வந்து இதைப் பார்த்தவுடனே…
1.நோயான பெண்மணியின் உடலை விட்டுப் பிரிந்த உயிராத்மா கடைசி நிமிடத்தில் எப்படி எல்லாம் அவஸ்தைப் பட்டதோ
2.இவருடைய உடலுக்குள் அந்த ஆன்மா வந்து
3.அதே வேதனையின் உணர்ச்சிகளை இவருடைய உடலுக்குள் ஊட்டுகின்றது.

குருநாதர் இதையும் பார்க்கச் சொன்னார்.

1.இரயிலில் போகும் பொழுது இந்தப் பற்று வந்த பின்
2.அது எப்படி ஆகிறது…? இந்த ஆன்மா இன்னொரு உடலுக்குள் எப்படிச் செல்கின்றது…?
3.இவரை எப்படிச் சிரமப்படுத்துகின்றது…? என்ற நிலைகளைக் காட்டுகின்றார் குருநாதர்.

ஆனால் இறந்த பின் நோயான பெண்மனியின் வீட்டில் ஒருவருக்கொருவர் குழப்பமாகின்றது. குழப்பத்தால் அவர்கள் வியாபாரம் மந்தமாகிறது.

தங்களை அறியாமலே குழந்தைகளை சீறிப் பேசுவது… தவறான நிலையில் பேசுவது.. என்ற இந்தச் சங்கடங்கள் எல்லாம் வந்து வீட்டுக்குள் குழப்பம் வருகிறது.

ஏனென்றால் இந்த இயற்கை நம்மை எபப்டி இயக்குகிறது என்ற நிலைகளைச்
1.சந்தர்ப்பம் மனிதர்களை எப்படிக் குற்றவாளியாக ஆக்குகின்றது…?
2.சந்தர்ப்பத்தால் நமக்குள் நோய் எப்படி விளைகின்றது..? என்பதையெல்லாம் குருநாதர் தெளிவாகக் காண்பித்தார்.

நாம் யாரும் தவறு செய்யவில்லை..! நாம் நுகர்ந்தறிந்து அன்புடன் பண்புடன் பரிவுடன் பேசும் பொழுது
1.இந்தச் சாந்த உணர்வுகள் மிக நன்மை செய்யும்
2.ஆனால் வேதனை என்ற உணர்வுகள் வலிமை பெற்றது.
3.அது இந்தச் சாந்தத்தை அடக்கிவிடும்.

அது தான் மூஷிகவாகனா…! விநாயகருக்கு முன்னாடி எலியைப் போட்டுக் காண்பித்து… “நாம் சுவாசித்த உணர்வே.. நம்மை வாகனமாக இருந்து அழைத்துச் செல்லும்…!” என்று காட்டுகிறார்கள் ஞானிகள்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து ஞானிகள் காட்டிய அருள் வழியில் வாழ்க்கையை வழி நடத்த வேண்டும்.

Astral light bodies

பூமி பிளந்து சீதா மண்ணுக்குள் போவதன் காரணம் என்ன…?

லவா குசா தன்னுடைய குழந்தைகள் தான் என்று தெரிந்ததும் இராமன் சீதாவிடம்… “நாம் இனிமேல் சேர்ந்து வாழ்வோம்..!” என்று சொல்கிறான்.

சேர்ந்து வாழ்வது என்பது என்ன…?

எதன் சுவையோ அதனின் உணர்ச்சி தான் இயக்கும். ஆக மீண்டும் அந்த உணர்ச்சியின் தன்மை கொண்டால் அதன் வழி வாழலாம்.

பல விதமான உணர்வுகள் ஆகி.. “இந்த வாழ்க்கையில் பட்டது போதும்…!” என்று இந்தப் பூமா தேவி என்ன செய்கின்றது…?

நெருப்பில் புகுந்து வந்த பின்… பூமா தேவி சீதாவிடம் “நீ பட்ட அவஸ்தை போதும்… என்னிடமே நீ வந்து ஐக்கியமாகிவிடு…!” என்று அழைப்பதாகக் காவியத்தில் கொடுத்துள்ளார்கள்.

மனித உடல் பெற்ற நிலையில் இந்த உணர்வின் தன்மை வந்து வாழ்க்கையில் பல பல நிலைகள் ஆகி
1.எந்தச் சுவையின் (குணங்கள்) தன்மை ஈர்ப்பாக ஆனதோ
2.அதிலே அந்த மகிழ்ச்சியின் உணர்வுகள் ஆன பின்
3.எத்தனை எதிர்ப்பு நிலைகள் வருகின்றது…?

உழுது பயிரிட்டு அதிலே விளைந்ததை உணவாகச் சுவைமிக்க உணர்வின் தன்மை உட்கொண்டு மனித உடலில் வளர்த்த பின் எந்த மண்ணிலே விளைந்ததோ அந்த மண்ணின் உணர்வைப் பெற்று உடல் மண்ணுக்குள் தான் செல்கிறது.

ஆனால் அந்த உணர்வின் தன்மை ஒளியாகும் உணர்ச்சிகளை வளர்த்துக் கொண்ட பின் எங்கே செல்கிறது…?
1.உயிர் என்ற விஷ்ணுவின் தன்மை பெற்று
2.வெளியே வந்து பளீர்…! என்று “மின்னும் சக்தியாகப் பெறுகின்றது…”
3.அவனிடம் போய்ச் சொர்க்கம் அடைகின்றது.

இந்த உடலின் அமைப்பு உருவானதைத் தெளிந்து கொண்ட நிலையில் பூமா தேவி.. சீதா படும் அவஸ்தையைப் பார்த்து நீ என்னுடன் வா…! என்று பூமி பிளந்து தனக்குள் இழுத்துக் கொண்டு போகின்றது.

எவ்வளவு தெளிவாகக் கொடுத்துள்ளார்கள் காவியத்தை…! நன்றாக யோசனை செய்து பாருங்கள்…!

ஒரு உடலில் நோயின் தன்மையை பார்த்து அட பாவமே…! என்று அதனுடைய வலிமை பெறப்படும் பொழுது “சிவ தனுசு…”
1.நாம் அவனைக் காக்க எண்ணுகின்றோம்.
2.மீண்டும் உடலின் இச்சைக்கே செல்கின்றோம்.

சிவ தனுசை எடுத்தால் உடல் பெறும் உணர்வுகளே வளரும். நாம் பிறவி இல்லா நிலையை அடைய முடியாது…!

எத்தனையோ கோடிச் சரீரங்கள் பெற்றுத் தீமைகளை நீக்கிடும் உணர்வின் தன்மையை இருளை நீக்கி ஒளியின் தன்மையாகப் பெற்றது தான் துருவ நட்சத்திரம்.

உயிரின் இயக்கம் வெப்பம் “விஷ்ணு” என்ற நிலையில் அந்த உணர்வின் தன்மை வரப்படும் பொழுது
1.தீமையை நீக்கிடும் அந்த அருளைப் பெறுவேன்..! என்று
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எண்ணி எடுத்துக் கொண்டால் அது “விஷ்ணு தனுசு…”
3.நாம் அங்கே சொர்க்கம் அடைகின்றோம்.

விஷ்ணு இலட்சுமியிடம் கேட்கின்றது. நீ உலகை அறிய விரும்பினாயே..! நீ பார்… எத்தனை தொல்லைகள் வருகிறது என்று…?

நமது எண்ணத்தால் இந்த மனிதனின் வாழ்க்கையில் எத்தனை துயரங்கள் இருக்கிறது…? என்பதனைக் காட்டியுள்ளார்கள்.

இதிலிருந்து நாம் விடுபட்டு உயிருடன் ஒன்றி இனி பிறவியில்லா நிலை என்ற சொர்க்க நிலையை நாம் அடைய வேண்டும்.

1.இந்த உடல் வாழ்க்கையில் வந்த தீய வினைகள் மண்ணோடு மண்ணாகப் போகட்டும்…!
2.அதை விடுத்து விட்டு உயிரான விஷ்ணு என்ற உணர்வை நாம் எடுத்து வளர்க்கும்படி உணர்த்துகின்றார்கள்.

ஆகவே அந்த உணர்வின் அறிவாக நமக்குள் வளர்த்துக் கொண்டால் பிறவியில்லா நிலையை அடைய முடியும் என்பதனைத் தான் இராமாயணத்தில் தெளிவாக கூறப்படுகின்றது.

இந்த அர்த்தமே நாம் தெரியாதபடி வேறு விதமாக நாம் எங்கேயோ கொண்டு போகின்றோம். மக்களுக்கு இராமாயணத்தைப் பற்றி ஒவ்வொருவரும் நீங்கள் தெளிவாக்கிடல் வேண்டும்.

மரணம் அடைவதற்கு முன்னாடி அரிதாக சில பேர் சொல்லிவிட்டே போகிறார்கள்

உடலை விட்டுச் செல்லும் பொழுது யாருடன் செல்ல வேண்டும…?

மரணமில்லாப் பெரு வாழ்வு…!” வாழ வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

குடும்பத்தையே வறுமையில் சிக்க வைத்துத் தான் ஞானத்தைக் கொடுத்தார் குருநாதர்

 

நோயால் வாடிய என் (ஞானகுரு) மனைவியை குருநாதர் காத்தார். ஞானத்தை கொடுக்கும் நிலையாக என்னைக் கூட்டிச் சென்றார் குருநாதர். காடு மேடெல்லாம் அலையச் செய்து பல அனுபவங்களைப் பெறச் செய்தார்.

 

இருந்தாலும் வீட்டிலோ வறுமை பட்டினி…! என் மனைவி தன் தாலியையே அடமானம் வைத்துத்தான் குடும்பத்தைக் காத்தது.

 

ஒவ்வொரு குடும்பத்திலும் பல சிக்கல்கள் ஏற்படுகிறது. அதிலிருந்து எப்படி மக்களை மீட்க வேண்டும் என்று தான் எனக்கு அனுபவம். ஆக சுயநலத்திற்காகத் தான் நான் சக்தியைப் பெறுகின்றேனா..? என்பது தான் அவருடைய பரீட்சை…!

 

பின் பல சிரமங்களைத் தாண்டித்தான் அந்த ஞானத்தைப் பெற முடிந்தது.. சித்து நிலைகளையும் செயல்படுத்தும்படி செய்தார் குருநாதர்.  

 

light worlds

ஆண்டவனுக்கு நாம் தரும் காணிக்கை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

நம் பூமியில் பல காலங்களாகவும் இன்றைய காலங்களிலும் பலர் பல உண்மை ஆராய்ச்சி நிலையில் பல சாதனைகளை வெளிப்படுத்திக் கொண்ட தான் வந்துள்ளார்கள்… அதே வழித் தொடரிலும் வாழ்கின்றனர்.

ஆனால்..
1.மனிதன் பல புதிய புதிய நுண்ணலை ஈர்ப்பால் பல செயல்களைச் செய்கின்றான் என்றாலும்
2.அந்த மனிதன் தன் ஆத்ம உயிரணுவிற்கு.. அந்த ஒளியின் பால் செல்வதற்குகந்த வழி ஆற்றல் பெறவில்லை.

பல மேதைகள் உண்டு…! ஆனாலும் அந்த மேதைகளினால் எதன் அடிப்படை ஆராய்ச்சி ஈர்ப்பில் தன் எண்ண ஞானத்தைச் செலுத்தி வழி பெறுகின்றனரோ… அதன் தொடர் ஞானம் ஒன்றின் பால் மட்டும் அவர்களின் ஈர்ப்பில் சுவாசம் உள்ளதனால்… அதன் சுழற்சி வட்டத்தில் மட்டும் தான் உள்ளனர்.

ஆக… உடலை விட்டு ஜீவன் பிரிந்த பிறகும் அதே எண்ண செயலுக்காகப் பிறிதொரு ஜீவ ஆத்மாவுடன் தொடர்ச்சிப்படுத்திக் கொண்டும் அல்லது மீண்டும் ஒரு ஜென்மத்திற்கு வருகிறார்களேயன்றி தன் ஆத்ம ஜீவ உயிரணுவின் வளர்ச்சியில் ஒளி அலையுடன் கலக்கவிடும் நிலை எய்துவதில்லையப்பா.

இங்கே போதிக்கப்படும் நிலைகள் கொண்டு…
1.ஒவ்வொருவரும் எண்ணத்தால் எடுக்கும் சுவாசத்தில் நுண்ணிய ஈர்ப்பலையின் நினைவைச் செலுத்தி
2.சக்தி கொண்ட மகான்களின் ஒளியுடன் நம் எண்ண நுண்ணிய அலை பதியும் பொழுது
3.அதன் தொடரிலிருந்து அவர்களின் ஒளி அலையை நம் உயிராத்மா ஈர்க்கக்கூடிய வழித் தொடர் பெற்று
4.இந்த உடலில் உள்ள பல கோடி உயிரணுக்களும் அம்மகான்களின் தொடர் அலையுடன் கலக்கும் வழி நிலை பெற்றால்
5.இன்று இப்பிரபஞ்ச ஆதி சக்தியின் வளர்ச்சியில் வளர்ந்துள்ள பல கோடிக் கோளங்களின் வளர்ச்சி ஏற்படுத்திய
6.சப்தரிஷிகளின் ஒளி வட்டம் போல் நம் நிலையும் நிலைத்து நிற்கும்

எடுக்கும் எண்ணத்தைக் கொண்டு தான் ஒவ்வொரு வளர்ச்சியுமே. மனிதனுக்கு மட்டுமல்ல.. மற்ற எல்லா நிலைகளுக்குமே…!

1.மனிதனுக்கு எப்படித் தன் எண்ணத்தின் சுவாச ஈர்ப்பை இந்த உடல் பிம்பம் பலவாக உள்ள நரம்புகளில் ஈர்த்து
2.இந்த உடல் முழுமைக்குமே எண்ணத்தின் சக்தி பிம்பம் பரப்புகின்றதோ
3.அதைப் போன்று ஜீவன் கொண்ட தாவரங்களுக்கும் மற்ற மற்ற எல்லா இயற்கை வளங்களுக்குமே
4.இந்த ஈர்ப்பலையை உறிஞ்சக்கூடிய நரம்புகள் உண்டு.

அமிலத்தின் ஒளி சக்தியை ஈர்த்து ஜீவன் பெற்று துடிப்பு நிலை ஏற்படும் நிலையிலேயே “ஈர்க்கும் காந்த நரம்புகள்…!” வளர்ச்சி பெறுகின்றன.

ஆனால் மனிதச் சுவாச ஈர்ப்பினால் எந்த ஈர்ப்பின் நிலையில் மனிதன் உடல் பிம்பத்தில் நிறைந்துள்ள இரத்தத்தில் அவன் எடுக்கக்கூடிய எண்ணத்திற்கொப்ப எல்லாம் அவன் உடலில் உள்ள இரத்தத்தில் வளரும் ஜீவ அணுக்களின் நிலையும் கலந்து விடுகின்றது.

ஒரு நிலை கொண்ட சுவாசம் கொண்டவை தாவரங்கள்.
1.மனிதனையும் மற்ற மிருகத்தையும் ஒத்த இரத்த ஓட்டச் சுழற்சி இல்லாமல்
2.நரம்பின் ஈர்ப்பினாலேயே ஒரு நிலையில் காந்த சக்தியையே ஈர்க்க வல்லது தாவரம்.

பலவாக உள்ள எண்ணக் கலப்பில் பலவற்றையும் எண்ணி வாழும் மனிதன் தன் எண்ணத்தில் எடுக்கும் ஒவ்வொரு நிலையினாலும் அவன் பிம்ப உடலை அவனே பல நிலைகளுக்கு உட்படுத்திக் கொள்கின்றான்.

இந்த நிலையிலிருந்து எல்லாம் மீண்டு… பல நிலைகள் மோதிடும் நிலையை நம் எண்ணத்தில் பதிய விடாமல் “சமமான நிலையில்” நம் எண்ண ஈர்ப்பை வழிப்படுத்திடல் வேண்டும்.

ஆக வாழ்க்கைக்குகந்த செயலுடன் இந்த எண்ணத்தை ஒவ்வொரு ஆத்மாவும் தன் பிறப்பின் உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.

ஆண்டவனின் சக்தியில் அவதரித்த…
1.ஆண்டவன் என்ற உயிராத்மாவுடன் வாழும் நாம்
2.அந்த ஆண்டவனுக்கு உகந்த காணிக்கையாக நம்மை நாமே ஆண்டவனாக்கிக் கலப்பது தான்
3.மனித ஆத்மாவின் எண்ண வளர்ச்சியின் வழித் தொடர் இருந்திடல் வேண்டும்.

அது தான் ஆண்டவனுக்கு நாம் தரும் காணிக்கை.

ruby-eyes and snake

நாகம் தன் கண் ஓளியின் நுண்ணிய அலையின் ஈர்ப்பால் மாணிக்கக்கல்லை வளர்ப்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

அமில குணமான பிம்ப சிவனுக்கு… அதன் வளர்ச்சிக்கு… ஜீவ குணமான காந்த ஒளி சக்தி ஈர்ப்பிற்கு வந்த பிறகு தான் அவ்வமில குணத்திற்கே ஜீவனும் அதன் வளர்ச்சி நிலையும் ஏற்படுகின்றது.

அமில பிம்பத் திடப்பொருள் இல்லாவிட்டால் காந்த ஒளி சக்திக்குச் சக்தியில்லை. அச்சக்தி நிலை படர்ந்து பிம்ப அமிலம் ஜீவன் பெறாவிட்டால் இதன் ஜீவ வளர்ச்சியும் இல்லை.

இதன் குண அடிப்படை தான் நாமும்… எல்லாமில் எல்லாமுமே…!

இதன் வழித் தொடர் கொண்டு வளர்ந்து வாழும் நாம்…
1.நமக்கு இந்த மனித உடல் பெறக்கூடிய ஆற்றல் பெற எத்தனை கோடி ஆண்டுகள் ஆகின்றன…? என்ற உண்மையை உணராமலும்
2.உயர்வின் வழிக்குச் செல்லாமலும் நம்மை நாமே அழித்து வாழ்கின்றோம்.

மாங்கனி அதன் முற்றிய நிலை பெற்றவுடன் அதன் வண்ணமும்… வண்ணத்திற்கேற்ப மணமும் உள்ள கனியின் சுவை இனிமை எப்படி உள்ளது..?

குறுகிய கால வளர்ச்சி முற்றலிலே
1.முற்றிய நன்கு பழுத்த மாங்கனியின் வண்ணத்தையும் மணத்தையும் கண்டவுடன்
2.”சுவை நிறைந்த கனி…!” என்று எண்ணி உண்ணத் துடிக்கின்றோம்.

இதன் நிலை போல் மனிதனின் வளர்ச்சி நிலை இருந்து விட்டால் மனிதனின் உடல் பிம்ப அழகும்.. எண்ண மணமும்… இனிமையும் குண தேவனின் சக்தியாக சுடர்விடுமப்பா…!

பிஞ்சில் மாங்கனி துவர்ப்பாகவும் புளிப்பாகவும் தான் உள்ளது. அதைப் போன்று ஆரம்ப வளர்ச்சியில் அறியா மனிதனாக இருந்தாலும் தன் அறிவாற்றலை ஞானத்தின் மேம்பாட்டில் முற்றிப் பழுத்து இனிமை கொள்ள வேண்டும்.

அமில ஈர்ப்பின் வழித் தொடரினால் நம் பூமியின் எண்ணற்ற சக்திகள் நிறைந்துள்ளன. பல வண்ணங்களையும் மணங்களையும் சுவைகளையும் ஆரம்ப காலத்திலேயே பூமி வளர்ச்சி கொண்டு வழி வரவில்லை.

ஒவ்வொன்றின் வழித் தொடர் அமில குணத்தின் ஈர்ப்பு சக்தியின் “சிவ சக்தி என்ற சிங்காரக் கலவை ஈர்ப்பில் தான்..” இன்று பூமியில் நிறைந்துள்ள இயற்கை வண்ணமும் சுவையும் மணமும் உள்ளன.

பல வண்ணங்கள் புஷ்பங்களுக்கு எப்படி வந்தது..? கனிகளுக்கு சுவை எப்படி வந்தது…?

படர்ந்த அமில பிம்பம் அதன் ஈர்ப்பில் காந்த ஒளி சக்தி பெற்றவுடன் “வண்ணத்துப் பூச்சி” என்ற பல வண்ணங்கள் நிறைந்த அப்பூச்சி ஜீவன் பெறுகிறது.

இப்பொழுது உணர்த்துவது பூமி தாவர வளர்ச்சி ஏற்பட்ட நாட்களில் ஆரம்பத்தில் வந்ததன் நிலை.

இந்த வண்ணத்துப் பூச்சி சில தாவரங்களின் மேல் தன் அமிலத்தை… அமிலம் என்பது தன் கழிவின் முட்டையை இட்டதினால்.. அதிலிருந்து அதன் அமில சுவாசம் படர்ந்த பிறகு வண்ணப் புஷ்பங்கள் கிடைத்தன.

1.அந்த வண்ணத்தின் பூவிலிருந்துதான் தேனீக்கள் ஜீவன் கொண்டன.
2.தன் ஜீவனுக்குகந்த ஆகாரமாக அந்தப் பூவிலிருந்தே தன் ஆகாரத்தை உறிஞ்சி எடுத்துத் தேனீக்கள் வளர்ந்தன.

தேனீக்கள் இல்லாவிட்டால் “சுவை நிறைந்த கனி…” எதுவுமே இல்லை…!

இப்படி உலக இயற்கையே ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டு… ஒன்றெடுத்த அமிலம் ஜீவன் கொண்டு… அதன் ஜீவன் மாற்றம் கொண்டு பிறிதொரு ஜீவனும் வளர்ந்து நம் பூமி ஓடிக் கொண்டுள்ளது. இந்த அமிலத்தின் நிலையிலிருந்து தான் எல்லா சக்திகளும் ஜீவன் பெறுகின்றன.

ஆயிரம் காலங்கள் ஒரு நிலை கொண்ட நுண்ணிய ஈர்ப்பு அலையின் சக்தியினால் நாகம் மாணிக்கக்கல்லைத் தன்னுள் வளர்த்துக் கொள்கின்றது.

மாணிக்கக் கல்லை வளர்த்துக் கொள்ள நாகம் எப்படி வழிப் பெற்றது…? மற்ற ஜீவன்களைக் காட்டிலும்
1.நாகத்தின் கண் ஒளி ஈர்ப்பு
2.நுண்ணிய மின் அலையை ஈர்க்கவல்ல செயல் கொண்டது.
3.நாகம் ஒரு பொருளைப் பார்த்தால் அப்பொருளின் பிம்பம் அதன் கண்ணிலே
4.பல மணி நேரத்திற்குப் புகைப்படத்தில் பதிந்துள்ளதைப் போல் பதிந்திருக்கும்.

சிங்கத்தின் நிலையும் ஏறக்குறைய நாகத்தின் ஈர்ப்பலைக்கு ஒத்தது தான். ஆனாலும் அதன் வளர்ச்சி நிலையில் நாகத்தைப் போன்று நுண்ணிய ஈர்ப்பின் பதிப்பு இல்லாமல் சிங்கத்தின் துடிப்பு ஆக்ரோஷத்தின் நிலையால் வளர்ச்சி பெறவில்லை. காந்த ஈர்ப்பின் ரசமணியின் அபரிதமான ஒளி ஈர்க்கும் கண்கள் சிங்கத்தின் கண்கள்.

இதனை எல்லாம் உணர்த்தும் முறை எதற்கு..?

நுண்ணிய ஈர்ப்பலையின் சக்தி அமிலங்கள் நிறைந்துள்ள பல பிராணிகள் மிருகங்கள் இருந்தாலும்… மனிதனை ஒத்த அறிவாற்றலும் அங்க அவயங்களும் பெறாததினால் அவற்றின் நிலை புரியாமல் சென்று விட்டது.

மனிதனுக்குச் செயலாற்றும் திறமை கொண்ட அங்க அவயங்களும் அறிவின் வளர்ச்சியும் உள்ள பொழுது இந்நுண்ணிய ஈர்ப்பலையை
1.சூரியனின் ஒளி அலையிலிருந்து – பலவாக நிறைந்துள்ள இந்தப் பூமியின் அமில குணத்தின் உதவியினால்
2.மனிதன் பல எண்ணத்தில் தன் ஜெபத்தைச் சிதறவிடாமல்
3.நுண்ணிய ஈர்ப்பலையை தன் எண்ண ஈர்ப்பில் செலுத்தும் பொழுது அவ்வெண்ண ஈர்ப்பே சுவாசமாக
4.காற்றில் உள்ள தன் எண்ணத்திற்குகந்த ஈர்ப்பு குண நுண்ணிய அமில சக்தியைத் தன் உடல் முழுமைக்கும் பரப்பச் செய்கின்றது.

இவ்வெண்ணத்தை “ஒரு நிலைப்படுத்துங்கள்…!” என்பதன் பொருள் இது தான்.

“ஒரு நிலை…” என்பது ஒன்றின் பால் உயர் ஞான எண்ணத்தைச் செலுத்தி
1.அந்த ஒளி அமில குணத்தை நுண்ணிய ஈர்ப்பாக
2.நம் சுவாசம் எடுக்கும் வழி நிலை ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

அகஸ்தியன் நடந்து சென்ற இடங்களில் உள்ள சக்திகள்

பாபநாசம் இமயமலை வட துருவம் தென் துருவம் எல்லாம் சுழன்று வந்தவர் “அகஸ்தியர்…” அவருடைய ஆற்றல்களைப் பெறும்படி செய்தார் ஈஸ்வரபட்டர்.

 

அகஸ்தியர் தம் உணர்வுகளை ஒளியாக மாற்றி இன்றும் துருவ நட்சத்திரமாக உள்ளார். அவரைப் பின்பற்றியவர்கள் சப்தரிஷி மண்டலமாக உள்ளார்கள். 

சில கைக் குழந்தைகள் அழுது கொண்டே இருப்பது ஏன் 

மூளை வளர்ச்சி இல்லாமல் குழந்தைகள் பிறப்பது ஏன் 

கர்ப்பமான தாய் தெரிந்து கொள்ள வேண்டியது

Valmiki

கர்ப்பிணியான சீதாவை இராமன் காட்டிற்குள் விடச் சொல்கிறான்… வான்மீகியோ ஞானத்தைப் போதிக்கின்றான் ஏன்…?

இராமன் சீதாவை இராவணனிடமிருந்து மீட்டு அரண்மனைக்குக் கூட்டி வருகின்றான். சிறிது நாள் கழித்து சீதா கரப்பமாகிறது. மக்கள் எல்லாம் கூடி இராவணனிடம் இருந்து சீதா வந்ததால் அந்தக் கரு தான் உருவாகியிருக்கும் என்று சொல்கின்றனர்.

மக்களை ஆட்சி புரிகின்றான்.. இருந்தாலும் இதைக் கேள்விப்பட்டவுடன் மக்கள் எல்லாம் இப்படிப் பேசுகின்றார்களே..! என்று வேதனைப்படுகின்றான் இராமன்.

சுவை (சீதா) என்ற உணர்வுகள் இராமனை ஆட்சி புரிந்தாலும் அதே சமயத்தில் “மக்களின் வலு வரப்படும் பொழுது” உண்மையை அறிய முடியாதபடி… சீதாவைக் காட்டுக்கு அனுப்புகின்றான்.

கர்ப்பமாக இருக்கும் சீதாவைக் காட்டில் அனாதையாக விட்டு விடுகின்றான். அங்கே ஒரு பெண் இதைப் பார்த்து… “கர்ப்பமாக இருக்கிறது… தனியாக இருக்கிறதே…!” என்று அருகில் இருக்கும் வான்மீகியிடம் கொண்டு விடுகிறது.

வான்மீகி தான் இந்தக் காவியத்தைப் படைத்தவன். இயற்கையின் உணர்வுகள் உணர்ச்சிகள் எப்படி வருகிறது…? நாராயணன் திரேதாயுகத்தில் சீதாராமனாக எப்படித் தோன்றுகின்றான்…? என்ற மூலக் கூறுகளை எல்லாம் கூறியவன் இந்த வான்மீகி தான்.

அதன் உணர்வின் தன்மை
1.எது சுவையைக் கவர்ந்து கொள்கிறதோ சூரியன்
2.அது உடலுக்குள் சென்ற பின் அதனின் உணர்ச்சியின் இயக்கமாக
3.இந்தச் சுவை எதுவோ உணர்ச்சியின் எண்ணங்களாக இதே சூரியன் ஒரு உடலை இயக்குகின்றான் என்ற நிலையைத் தெளிவாகக் கூறுகின்றான் அந்த வான்மீகி.

நன்றாக யோசனை செய்து பாருங்கள். அவ்வளவு மூலங்களும் உங்களுக்குத் தெளிவாகத் தெரிய வரும். இவ்வளவு தெளிவாகக் கூறியிருந்தாலும் இன்று அவரவர்கள் இஷ்டத்திற்கு இராமாயணத்தை அப்படியே பகுந்து பார்க்கின்றார்கள்.

அனாதையாக இருக்கும் சீதா கர்ப்பமாக இருப்பதை அறிந்து கொள்கிறான் வான்மீகி.
1.வெறுக்கும் நிலை இங்கே வந்தால் – அதே உணர்வை இந்தத் தாய் நுகர்ந்தால்
2.இராமனைப் பழி தீர்க்கும் உணர்வாகத் தான் வரும் என்பதை வான்மீகி அறிந்து கொள்கின்றான்.

அன்றைய அரசர்கள் என்ன செய்வார்கள்…?

தன் மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது எதிரி நாட்டு அரசன் இந்த மாதிரிச் செய்கின்றான்..! என்று போதிப்பான். குருகுலம் என்ற நிலைகளை வைத்து அடுத்த அரசன் இப்படிச் செய்கிறான்.. நம் நாட்டுக்கு இதைச் செய்கிறான்… நம் மக்களுக்கு இதைச் செய்கிறான்… அவனை இப்படி அடக்க வேண்டும்…! என்று கர்ப்பிணியை உட்கார வைத்தத் தன் அரச சபையின் நிலைகளை எல்லாம் எடுத்து ஓதுவான்.

அந்தத் தாய் இதை எல்லாம் கேட்ட பின் கருவிலிருக்கக்கூடிய தன் குழந்தைக்கு
1.இந்த நாட்டை எப்படி ஆட்சி புரிவது…?
2.எதிரியை எப்படி வீழ்த்துவது..? என்று அந்த இளமைப் பருவம் வரும் பொழுதே
3.வில் வித்தைகளை எடுக்கும் பொழுதே எதிரியை வீழ்த்த வேண்டும் என்ற உணர்வை வளர்ப்பார்கள்.

இதனின் வலிமையின் தன்மை கொண்டு அவன் எதிரியை வீழ்த்தச் செல்வான். “சத்ரிய தர்மம்” என்பது அரசர்கள் பிறரை வீழ்த்தித் தான் வாழத் தன்னைப் பாதுகாத்துக் கொள்வது தான்.

நம் உடலுக்குள் ஒரு தீமை வந்துவிட்டால் அது அந்த உணர்வின் தன்மையை வீழ்த்தினால் தான் நல்ல குணங்கள் நிலைத்திருக்கும். எப்படியோ மருந்தைக் குடித்துத் தானே நம் நோய்களை எல்லாம் போக்குகின்றோம்.

இந்த உணர்வின் தன்மையை இயக்குவது யார்…? பத்தாவது நிலையை அடையக்கூடிய தசரதச் சக்கரவர்த்தி “நம் உயிர் தான்…!”

ஒரு கசப்பான உணவாக இருந்தாலும் சகித்துக் கொண்டு சாப்பிடுகின்றோம் அல்லவா..! அதே சமயத்தில் உடலில் வேதனை என்ற உணர்வுகள் நோயாக வந்த பின்
1.அடுத்து நம் உடலில் ஊசியைக் கொண்டு குத்தினாலும்
2.கசப்பான மருந்தை மருத்துவர் கொடுத்தாலும்
3.”எப்படியோ சாப்பிட்டு அந்த நோயைப் போக்க வேண்டும்…: என்று நினைக்கின்றோம் அல்லவா…!

இதைத் தான் அங்கே வான்மீகி காட்டுகின்றான்…!

கர்ப்பமாக இருக்கப்படும் பொழுது…
1.மக்களின் உணர்ச்சியால் உந்தப்பட்டு உண்மையின் உணர்வை அறியாதபடி
2.தனக்குள் சீதா என்ற சுவையைப் புண்படும்படிச் செய்து விட்டனர்.
3.ஆனால்… அதிலே வரும் கருவை அதை உருவாக்கிவிடக் கூடாது என்பதற்காக
4.சீதாவின் மனதை மாற்றி அருள் உணர்வைச் செவி வழி ஊட்டி அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் கூட்டி
4.கருவிலே வளரும் குழந்தைக்கு ஞானத்தை ஊட்டுகின்றான் வான்மீகி.

இந்த ஞானத்தை ஊட்டிய பின் லவா.. குசா.. என்று பிறக்கின்றனர். இராமனின் செயலும்… சீதாவின் செயலும்… இயற்கையின் செயலைப் பற்றியும்…! அவர்கள் இருவரும் பாடல்களாகப் பாட்டுகின்றனர்.

இராமன் இதைக் கேட்கின்றான்.

மக்களின் பேச்சைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்டு “இந்தத் தப்பைச் செய்தேனே…!” என்று உண்மையை உணர்கின்றான்.

ஆகவே சீதாராமா…!
1.எதன் உணர்வின் தன்மையை எடுக்கின்றோமோ
2.நம் வாயிலிருந்து சொல்லாக வந்தாலும் அதையும் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கிறது.
3.அதே உணர்வின் நினைவு வந்து… உணர்வின் தன்மை உயிரில் உணர்ச்சிகள் பட்டு
4.அந்தச் செயல்கள்தான் படுகின்றது..!

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

vibhoodi siva

சித்தர்களினால் மறைத்து வெளிப்படுத்தப்பட்ட “சிவசக்தி” ரூபத்தின் இரகசியம்

இன்னும் மனிதன்…
1.விதை முதலா…? செடி முதலா…?
2.கோழியிலிருந்து முட்டை வந்ததா…? முட்டையிலிருந்து கோழி வந்ததா…? என்ற தர்க்க வாதத்திலும்
3.புராணங்களில் படைத்த காவியங்களை அதன் மையக் கருவைப் பிரித்து உணரும் ஆற்றல் இல்லாதும் வாழ்கின்றனர்.

அறிவாற்றலும் செயல் அவயங்களும் வளர்த்துக் கொண்ட மனிதன் தன் வளர்ச்சியை உணராமலும்… வளர வேண்டும் என்ற நிலையற்றும்… இயற்கையின் உண்மை வளரும் வளர்ச்சியை அறியாமலும்… வாழ்கின்றான்.

குணத்திலும் பல நிலைகள் உண்டு. மனத்திலும் பல நிலைகள் உண்டு. ஒலியிலும் பல உண்டு. இதன் அடிப்படை வளர்ச்சி பல கோடிக் கோடி உண்டு.

நம் பூமியின் ஜீவ சக்தியே காற்றும்.. ஒலியும்… நீரும்… தான். இஜ்ஜீவ சக்தி இப்பூமியைச் சுற்றி இருக்கும் காற்று மண்டலத்திற்கு அப்பால் இல்லை.

இந்தப் பூமிக்கு ஜீவன் பூமியேதான் எடுத்துக் கொள்கின்றது. பால்வெளி மண்டலத்தில் அந்தந்த இடங்களில் உள்ள அமில குணங்களின் சுழற்சி கொண்ட சீதோஷ்ண நிலை படர்ந்துள்ளது.

நம் பூமியின் காற்று மண்டலத்திற்கப்பால் உள்ள பால்வெளி மண்டலத்திற்குச் சென்று விட்டால் நம் பூமியில் உள்ளதைப் போன்ற ஜீவ சக்தி மாறு கொள்கின்றது.

“ஜீவ சக்தி…” என்பது பூமியின் சுழற்சியில் பூமி ஈர்த்து வெளிக் கக்கும் ஆவியினால் – அந்தக் காற்று மண்டலத்தின் சுழற்சியில் பூமியின் சுழன்று ஓடும் ஓட்டத்தினால் இந்த ஜீவ சக்தி அமில குணம் கொண்டு ஓடுகின்றது.

பூமிக்குச் சொந்தமானது தான் பூமியைச் சுற்றிக் கொண்டுள்ள இந்தப் பத்துப் பதினைந்து மைல் நிலையில் உள்ள காற்று மண்டலம்.

முந்தைய வினா போன்று சக்தி பெரிதா… சிவன் பெரிதா…? என்ற வினாவும் மனிதரிடன் உண்டு. மனித ஆத்மாக்கள் உணராத முறையில்…
1.சில சித்தர்கள் தான் அறிந்ததை… உணர்ந்ததை… மறைமுகமாக்கி
2.சரி பாதி சிவனும்… சரி பாதி சக்தியுமாக…!
3.ஆண்டவனின் ரூபத்திற்கு மனித பிம்ப உருவைக் கல்லில் வடித்துக் காட்டினார்கள்.

எந்த ஒரு அமில பிம்பமும்… அமிலம் திடமாகி அந்தத் திடத்தில் எடுக்கும் ஒளி என்ற சக்தியினால் ஜீவன் கொண்டு…
1.அதன் சுழற்சியில் அமிலமும் கூடுகின்றது.
2.அமிலத்தின் வளர்ச்சியைக் கூட்டினால் அதன் ஈர்க்கும் சக்தி ஒளி அதிகப்படியாக வளர்ச்சிக்கு வருகின்றது.

நம் பூமியும் மற்ற எல்லா மண்டலங்களின் ஆரம்ப ஜீவன்… “சிவ சக்தி…” என் பிம்ப வளர்ச்சி கொண்டது தான்.
1.அமிலமான திடப் பொருள் தான் சிவனாகவும்
2.அமிலமுடன் ஈர்க்கப்பட்ட காந்த ஒளி நிலை தான் சக்தியாகவும் ஆனதப்பா…!

அமில பிம்ப சிவன் ஈர்க்கா விட்டால் சக்தியின் காந்த அலை பாய்ந்து அக்காந்த அலைக்கும் சக்தி இருக்காது. அதே போன்று அமில குண திட பிம்ப சிவத்தில் அச்சக்தி ஒளி பாயாவிட்டால் ஜீவன் பெற முடியாது.

இதன் வளர்ச்சி நிலை தான் எல்லாமில் எல்லாமாக வளர்ந்து… “வளர்ச்சி கொண்ட அண்ட சராசரங்களும் அனைத்து ஜீவ சக்திகளும்…” உருவாகி இயங்கிக் கொண்டுள்ளதப்பா…! இதில் சக்தி பெரிதா…! சிவன் பெரிதா…? என்ற கேள்விக்கு இடமில்லையப்பா…!

1.சக்தி இல்லாவிட்டால் சிவன் இல்லை.. சிவன் இல்லாவிட்டால் சக்தியும் இல்லை.
2.பிம்பம் தான் “சிவம்..” பிம்பத்தின் ஜீவன் தான் “சக்தி…”
3.சக்திக்கும் ஜீவனுக்கும் அப்பாற்பட்ட ஆதி சக்தியின் நிலையை உணர்ந்து வளர வேண்டுமப்பா..! (அனைத்திலுமே)

சிவன் ஆணுமல்ல… சக்தி பெண்ணுமல்ல…! ஒவ்வொரு ஜீவனிலும் சக்தியும் சிவனும் இருந்தால் தான் அஜ்ஜீவன் வாழ முடியும். சித்தர்களினால் மறைமுகமாக மறைத்து வெளிப்படுத்திய நிலை தான் இந்த ஜீவ சக்தி உருவ நிலை…!

விதை முதலில் வந்ததா..? செடி முதலில் வந்ததா…? என்ற வினாவிற்கு அறிவாற்றலின் மனிதன் தன் எண்ணத்தைச் செயல்படுத்தினால் ஆரம்ப வளர்ச்சியான செடியிலிருந்து விதை…! என்ற உண்மையை உணரலாம்.

கர்ப்பிணியான சீதாவை இராமன் காட்டிற்குள் விடச் சொல்கிறான்… ஏன்…?

 

இராமாயணத்தில் உள்ள மூலங்களை அறியாதபடி பல புத்தகங்களைப் படித்து அதற்குள் உள்ளதை ஒத்துப் பார்த்து வியாக்கியானங்களைச் சொல்கிறார்கள்.

 

ஆனால் ஈஸ்வரபட்டர் எனக்குத் தெளிவாக்கினார். நம்மைப் புண்படுத்தும் நேரத்தில் வெறுப்பாகின்றோம். அதனால் பழி தீர்க்கும் உணர்வே வளரும்.

 

அதைப் போன்ற நிலைகள் உருவாகாதபடி அந்த நேரத்தில் நல்ல உணர்வுகளைக் கருவிற்குள் ஜீவன் பெறச் செய்து தன்னையும் மற்றவரையும் பண்படுத்தும் தன்மைக்கே அங்கே சீதாவை வான்மீகி ஆசிரமத்திற்குக் கூட்டிக் கொண்டு போய் கருவில் இருக்கும் சிசுக்களை ஞானக் குழந்தைகளாக உருவாகிட உபதேசித்தான்.

 

சமுதாயம் பண்பட ஞானிகள் இவ்வளவு தெளிவாகக் காவியத்தைப் படைத்துள்ளார்கள்.

 

ஜாதகத்தின் உண்மை நிலைகள் 

வாஸ்து சாஸ்திரம் பிரமிட் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

ஜாதகம் திருமணமானவர்களை ஒற்றுமையாக… மகிழ்ச்சியாக வாழச் செய்கிறதா…?

gate of heaven

சொர்க்கவாசலைப் பற்றி நாம் அறிந்திருக்கின்றோமா…?

இந்த வாழ்க்கையில் வாழும் நாம் நம் குழந்தையை எண்ணி.. நான் சம்பாரித்து வைத்திருக்கின்றேன்… அவன் எனக்குப் பின்னாடி அதை என்ன செய்யப் போகின்றானோ…? சொத்தை எல்லாம் காப்பாற்றுவானா..? என்ற நிலைகளில் எடுத்துக் கொண்டால் என்ன ஆகும்…?

அவன் உணர்வை நமக்குள் வளர்த்து நாம் மடிந்த பின் அவன் நினைவாகவே வெளி வந்தால் அவன் உடலுக்குள் தான் செல்வோம்.

அங்கே சென்ற பின் உடலுடன் இருக்கும் பொழுது நாம் எப்படிக் கலக்கப்பட்டோமோ இந்த உணர்வு அவனுக்குள் இயக்கப்பட்டு
1.நாம் தேடிச் சம்பாரித்த சொத்தையும் அவன் கலக்கத்துடன் அழித்திடும் நிலை தான் வருமே தவிர
2.அவனைக் காத்திடும் நிலை வருவதில்லை.

ஆகவே கடைசியில் நாம் என்ன ஆகின்றோம்..? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். குழந்தை மேல் இந்த மாதிரிப் பாசமாக இருந்தால் இப்படி ஒரு நிலை வந்துவிடுகின்றது.

ஆக அந்த உணர்வுக்குள் பட்ட பின் இந்த உடலில் எந்தெந்த நோய் வந்ததோ அந்த நோய் அங்கே விளையும். அந்த நோய் விளைந்த பின் அந்த உடலையும் வீழ்த்தி விடுகின்றது.

ஆனால் பத்தாவது நிலை என்றால் என்ன…?
முதலிலே சூரியன்…
இரண்டாவது உயிர் விஷ்ணு..
மூன்றாவது எண்ணங்கள் இராமன்…
நான்காவது கண்கள் கண்ணன்.

துவாராகயுகத்தில் கூர்மையாகப் பார்த்து உடலின் அமைப்பு அவதாரம் ஆகி இப்படிப் பல தீமைகளை நீக்கி நீக்கி அவதாரங்களாக மாற்றி தீமைகளை நீக்கிடும் தன்மை பெற்றவன்.

கண்கள் தோன்றிய பின் கூர்மையாகப் பார்க்கின்றது ஐந்தாவது நிலை இந்தக் கூர்மை அவதாரம்

ஆறாவது நிலை – வராகன் அந்த வலிமை மிக்க நற்சக்தி பெற்றுப் பன்றி என்ன செய்கிறது…?

1.சாக்கடைக்குள் இருக்கக்கூடிய நாற்றத்தைப் பிளக்கின்றது.
2.அதற்குள் மறைந்த நல்ல உணர்வுகளை நுகர்கின்றது.
3.பின் பன்றியின் உடலில் தொக்கியுள்ள நஞ்சினை நீக்கிவிட்டு நஞ்சினை நீக்கிடும் உணர்வுகள் விளைகின்றது.
4.அடுத்து மனிதனாகப் பிறக்கச் செய்கின்றது… பரசுராம்…! ஏழாவது நிலை. பல தீமைகளைச் சமப்படுத்தும் நிலை வருகின்றது.

பின் பலராம் (எட்டாவது நிலை) பலருடைய எண்ணங்களை நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

அடுத்து நரசிம்மா… (ஒன்பதாவது நிலை). தீமை என்ற நிலை வந்த பின் நம் உடலுக்கு:ள் புகாது தடுத்து நிறுத்தும் நிலை தான் நரசிம்மா.

தீமைகள் நமக்குள் புகாது நாம் தடுக்கவில்லை என்றால் அதனால் நாம் எண்ணும் வேதனை என்ற உணர்வுகள் உடலுக்குள் இரண்யனாகின்றது,

ஆக இரண்யனான பின்
1.மற்றதைக் கொல்லும் நிலைகளை நாம் மாற்றி விட்டால் கல்கி.
2.இந்த உயிர் ஒளியானது. அதே ஒளியின் உணர்வின் தன்மை அந்தப் பத்தாவது நிலை ஆகும் பொழுது தான் கல்கி.
3.இந்தப் பூமியின் ஈர்ப்பை விடுத்து அது விண்ணுலகம் செல்கிறது… பறந்து செல்கிறது…
4.தன்னை எதுவும் தடுக்காது குதிரை மீது சென்று வாளை வீசித் தப்பித்துச் செல்வதாக உருவ அமைப்பைக் கொடுத்து
5.அந்த அருவத்தின் சக்திகளை நாம் எப்படிப் பெறுவது…? என்று தெளிவாக்கியுள்ளார்கள் ஞானிகள்.

வான்வீதியில் தோன்றிய உயிர் மனிதனாக ஆன பின் இனிப் பிறவியில்லாத நிலைகள் அடைவதே கடைசி நிலை. அப்படி அடைந்தவன் தான் அகஸ்தியன் துருவ நட்சத்திரம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தை நாம் பற்றுடன் பற்றி இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றி நம் வாழ்க்கையில் அதைப் பற்றுடன் பற்றும் பொழுது அங்கே செல்கின்றோம்.

இப்படி நமக்குள்
1.மகிழ்ச்சி என்ற உணர்வு வரும் பொழுது சொர்க்கலோகம்…!
2.இதை உருவாக்குவது யார்..? உயிர்.
3.நமக்கு வாசல் எது…? உயிர்.
4.ஆகவே இது சொர்க்கவாசல்.

இந்த உடலிலே உணர்வை எல்லாம் ஒளியாக மாற்றினால் அந்த ஒளியின் தன்மை கொண்டு இந்த வாசல் வழி கொண்டு நாம் என்றும் ஏகாந்த நிலை என்ற ஏகாதசி… பத்தாவது நிலை எதுவுமே எதிர்ப்பில்லாத நிலைகள் கொண்டு ஒளியின் சரீரமாக நாம் பெற முடியும்.

இது தான் ஏகாதசி பத்தாவது நிலை என்பது.

core of life

மனித வாழ்க்கையின் பொருள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

நம் பூமியின் ஈர்ப்பிற்கு சக்தி தரும் காந்த மின் அலையின் வளர்ச்சிக்கு ஊற்றாக அமையப் பெற்றது தான்
1.உலகின் மூன்று இடங்களில் உள்ள “காந்த மின் கிணறுகள்…!”
2.கடலுக்கடியில் ஒன்று.. பாலைவனத்தில் ஒன்று… மலைப் பகுதியில் ஒன்று…! என்று ஏற்கனவே சொல்லியுள்ளேன்
3.இக்காந்த மின் கிணறுகளின் ஈர்ப்பு அதிகப்பட்டுப் பட்டு வளர்ச்சிப்படுமேயானால்
4.நம் பூமிக்கு… பூமியின் ஈர்ப்பு சக்தி அதிகப்படும்.
5.அதனால் அதிகப்படியான ஜீவ இன வளர்ச்சிக்குகந்த சத்து அமில நிலையைத் தர வல்ல தாவரங்களின் இயற்கை வளம் பெருகியிருக்கும்.

நம் பூமியைக் காட்டிலும் வியாழனும் சூரியனும் வளர்ந்துள்ளது. அவைகள் நம் பூமியை விட அதிக ஈர்ப்புக் குணமுடையதாக வளர்ந்து மற்ற எல்லா மண்டலங்களுக்கும் அதன் சக்திக் குணத்தைத் தருகின்றது.

1.அந்த வியாழனைப் போன்று வளர்ந்து பெருக்கும் நிலை நம் பூமிக்கு இப்பொழுது குறைவுபட்டுள்ளது.
2.நம் பூமியும் கன விகிதத்தில் வளர்ந்து தான் வருகிறதேயன்றி
3.தன் ஈர்ப்பின் சக்தியை வளர்க்க முடியாத நிலை ஆகிவிட்டது.

காரணம் இன்றைய கலி மனிதன் தன் விஞ்ஞான செயற்கை மின் அலையைக் காண சூரியனின் சக்தி அலையை
1.நம் பூமி ஈர்க்கும்… பூமியின் இயற்கை வளர்ச்சியைத் தடைப்படுத்தி
2.அதைச் செயற்கை மின்சாரமாகக் கண்டு எடுத்து விட்டான்,

பூமியின் ஈர்ப்புக் காந்த சக்திக்குக் கிடைக்க வேண்டிய ஆகார நிலையை… அது எடுத்து… உண்டு… வளர்ந்து… பலன் காணும் முன்… இன்றைய கலி அறிவு மனிதனால் துரித நிலையில் மின்சாரம் கண்டு பூமியின் வளர்ச்சிக்கும் வருங்கால உயிரினங்களின் வளர்ச்சி நிலைக்கு மாற்றம் தரவல்லவனாகி விட்டான் “இன்றையக் கலி மனிதன் தான்…!”

இக்கலி மனிதனால்… “அவன் அறிவாற்றல்” என்ற மேம்பாட்டில் கண்ட “செயற்கையினால்…!” பல கோடி உயிரணுக்களின் சக்திக் கலவையாகக் கலந்து வாழ்ந்து… தான் வாழ்வதோடு மட்டுமல்லாமல்
1.வளர்ந்து கொண்டே சுழன்றோடும் இந்தப் பூமியின் நிலையைத் தன் செயலுக்காக
2.மின் அலையைப் பாழ்படுத்தியதனால் பூமியின் இயற்கையையே பாழ்படுத்திவிட்டான்.

இதனின் நிலையை மாற்றி நம் பூமி வளரத்தான்… இக்கலி மாறி கல்கியாக வருவதற்குத்தான் பல கோடிச் சித்தர்களும் சப்தரிஷிகளும் செயல் கொள்கின்றனர்.

இக்கலி மாறும் தருணத்திற்குள் இந்தப் பூமியின் அமிலக் குணத்துடன் ஒன்றி வாழ்ந்த மனித இனக் குண சக்தி இருந்தால் தான் மீண்டும் மீண்டும் மண்டல சக்திகளும்… எந்த ஒரு புதிய படைப்பு நிலையும் வளர்க்க முடியும்.

எண்ண சக்தியின் வளர்ச்சி நிலை கொண்ட அமில… குண ஜீவன்.. மனிதனிலிருந்து தான் இந்நிலை வளர முடியும் என்ற உண்மையில் தான் சப்தரிஷிகளும் அவர்களின் ஆசி பெற்ற சித்தர்களும் செயல்படுகின்றனரப்பா…!

கூரை அமைக்கத் தூணோ சுவரோ தேவை, அது போல் இம்மனித ஆத்மாக்களின் எண்ண வளர்ச்சியின் மேம்பாட்டில் தான் மண்டல வளர்ச்சி உண்டு… மற்றெல்லா வளர்ச்சியும் உண்டு.

இதன் நிலையை உணர்ந்து ஒவ்வொரு மனித ஆத்மாவும் இஜ்ஜீவ உடல் பிம்ப நிலையிலிருந்து தன் உயிரணுவான காந்த உயிர் சக்தியை நல்ல நிலையில் எடுக்கும் எண்ணம் கொண்டு இந்த உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களையும் வீரிய சக்தி பெறும் வழித் தொடர்படுத்திடல் வேண்டும்.

தான் எடுக்கும் ஜெப நிலையால் தன் உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களும் ஒளி பெற்று தானாக ஓர் உயிரணு ஆத்மாவுடன் பல கோடி அணுக்களும் ஒன்றுபட்டுச் செயல்படுமானால்
1.அதன் சக்தி ஜெபத்தினால் எடுக்கும் நுண் அலையின் தொடர்பைக் கொண்டு
2.பலவாகப் படர்ந்துள்ள சப்தரிஷிகளின் ஒளி அலையைப் பெற்று
3.அவர்களின் தொடர்பின் மூலம் பல செயல்களை இந்த உயிராத்மாவினால் வளர்க்க முடியும்.

ஏனென்றால் வாழ்க்கையின் பொருள் என்பது வாழும் காலங்களில் பிறர் போற்றித் துதித்து… “மடிந்த பிறகு…. புகழாஞ்சலி பெறுவதல்ல…!”

இம்மனிதப் பிம்ப வாழ்க்கையில் எடுக்கும் ஒளி அலையின் நிலையின் வளர்ச்சி தான் எல்லாவித இயற்கைக் குண வளர்ச்சி மண்டலங்களின் சக்தியும் என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள்.

இப்பொழுது வாழும் குறுகிய கால வாழ்க்கையில்
1.இந்தச் சந்தர்ப்பத்தைக் குறுகிய நிலைப் புகழுடன் மங்க விடாமல்
2.பேரண்டப் பெரு நிலை என்ற உயர்ந்த அண்டமாகும் சக்தி நிலையைப் பெறும் தகுதிக்குத் தான்
3.யாம் இங்கே தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கும் பாட நிலையின் உண்மை நிலை.

விஷ்ணு தனுசை எடுத்தான் இராமன்… ஜெயித்தான்…!

 

இராமாயணத்தில் உள்ள சில முக்கியமான உண்மைகளை குருநாதர் எனக்கு உணர்த்திக் காட்டினார். அதில் மனிதன் அடைய வேண்டிய மார்க்கங்கள் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது என்று சொன்னார்.

 

நாம் இயங்குகிறோமா… நம்மைப் பிறிதொன்று இயக்குகிறதா..? எண்ணங்களும் உணர்வுகளும் உணர்ச்சிகளும் எப்படி உருவாகிறது…! எப்படி நம்மை இயக்குகிறது..? என்றும் காட்டப்பட்டுள்ளது.

 

தீமைகளை அடக்கிய உணர்வின் தன்மையை பெற்றது விஷ்ணு தனுசு. பரசுராமன் சிவ தனுசை எடுக்கின்றான்.. இராமனோ விஷ்ணு தனுசை எடுக்கின்றான் ஜெயிக்கின்றான்.

 

குடுகுடுப்புக்காரன் மண்ணையும் முடியையும் பழைய துணியையும் ஏன் கேட்கின்றான்…?

வாஸ்து சாஸ்திரம் எவ்வளவு நாள் பலனளிக்கும்…?

செய்வினை தோஷம் என்பதெல்லாம் உண்மை 

sivalingeswarans

நமக்குள் ஈசன் இருக்கின்றான்..! என்று ஒவ்வொரு நிமிடமும் நாம் நினைக்கின்றோமா…?

நான் நல்லதைச் செய்வேன்… அதைச் செய்வேன்.. இதைச் செய்வேன்…! என்று சொல்லி நாம் நல்லதையே எண்ணுவோம்…! இருந்தாலும்
1.ஒருவர் வேதனைப்படும் பொழுது அந்த ரெக்கத்தில் நாம் பரிபக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.
2.நம் சொல்லைச் சொல்லும் பொழுது பிறரை வேதனைப்படும் நிலைக்கு உருவாக்காதபடி அதிலே பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.

நோயுடன் ஒருவர் மிகவும் சிரமப்படுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது அந்தப் பேரருள் என்ற உணர்வை நமக்குள் வலுக் கூட்டி எடுத்துக் கொண்டு
1.அந்த அருள் ஒளி அவர் பெறவேண்டும்
2.அவர் உடலில் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
3.அவர் உடல் நலம் பெறவேண்டும் என்று எண்ணினால் இது “பரிபக்குவம்…!”

வடையைச் சுடுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். எண்ணெய் சரியாகச் சூடு ஆகாதபடி மாவைத் தட்டிப் போட்டால் என்ன ஆகும்..? எண்ணையைப் பூராம் குடித்துவிட்டு வடையின் ருசி கெட்டுப் போகும்.

இதைப் போல் தான் நாம் நல்ல மனம் கொண்டு ஒரு மனிதன் நோயால் வாடுகின்றான் என்று உதவி செய்தாலும் அவரின் வேதனையைப் பக்குவம் தவறி நாம் கேட்டுணர்ந்தால்
1,அந்த உணர்வுகள் நமக்குள் சென்று நம் உடலுக்குள்ளும் நோயைத் தான் உருவாக்கும்.
2.நம் நல்ல மனமும் சுவை கெட்டுப் போகும்.
3.நல்ல குணத்தின் இயக்கமும் கெட்டுவிடும்.

ஆகவே நாம் என்ன செய்ய வேண்டும்..?

காலை துருவ தியானத்தில் எடுத்துக் கொண்ட துருவ நட்சத்திரத்தின் வலு கொண்டு உயிரான ஈசனைப் புருவ மத்தியில் ஈஸ்வரா…! என்று வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று இந்த உணர்வைக் கூட்டி அதைச் சுவாசித்து நம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

ஏனென்றால் அவருடைய வேதனையை நாம் முதலில் கேட்டறிந்தோம். இந்த உணர்வுகள் நமக்குள் போகாதபடி தடுத்து நிறுத்த வேண்டும்.

இந்த வலுவின் தன்மை கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அவர் உடலில் படர வேண்டும்… அவர் நோய் நீங்கி உடல் நலம் பெறவேண்டும்…! என்றால் இது பக்குவ நிலை கொண்டு அவருடைய மனதைத் திருத்தவும் நமக்குள் அந்தச் சுவை மிக்க உணர்வை நமக்குள் உருவாக்கவும் உதவும்.

வாழ்க்கையில் அதைச் (நல்லதை எல்லாம்) செய்வேன்…! சொல்லி விட்டுத் திடீரென்று என்ன செய்வார்கள்…? எல்லாம் செய்து கொண்டே இருப்பார்கள். கடைசியில்…
1.நான் எல்லா நன்மையும் அவனுக்குச் செய்தேன்…
2.ஆனால் பதிலுக்கு இப்படிச் செய்கிறான் பார்…! என்று நாம் கோபமாக மாறும் பொழுது
3.இது எல்லாமே போய்விடுகின்றது… இருள் சூழ்ந்துவிடுகிறது.

ஆகவே இதைப் போன்ற நிலைகளை வராதபடி இந்த வாழ்க்கையிலே நாம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.

அதாவது “நல்லதைத் தான் செய்வேன்…!” என்ற பாட்டைப் பாடிவிட்டு மற்றவர்களின் குறைகளையும் வேதனைகளையும் நமக்குள் புகாதபடி தடுத்துக் கொள்ளும் அந்தப் பரிபக்குவ நிலையை எனக்கு அருள் செய்வாய் ஈஸ்வரா…! என்று உயிரிடம் வேண்டிக் கேட்க வேண்டும்… அந்த அருளைப் பெற்றுப் பழக வேண்டும்.

என் நினைவை எங்கெங்கோ அலைய விட்டு என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடாமல்… என்னுள்ளே என்றும் நீ இருந்துவிடு ஈஸ்வரா…!

அதாவது…
1.நாம் இந்த வாழ்க்கையில் அதைச் செய்ய வேண்டும்… இதைச் செய்ய வேண்டும்… அப்படிச் செய்ய வேண்டும்… என்றெல்லாம் விரும்புவோம்
2.அந்த ஆசையினால் நாம் என்ன செய்கிறோம்..?
3.நமக்குள் தீமை என்ற உணர்வுகளும் வந்து சேர்ந்து விடுகின்றது.

தீமை என்ற உணர்வுகள் வரப்படும் பொழுது நம்மை நாம் மறந்து விடுகின்றோம்…
1.இந்த உடலின் ஆசை தான் நமக்குள் வருகின்றது.
2.நமக்குள் உயிரான ஈசன் இருக்கின்றான்..! என்ற நிலையையே மறந்து விடுகின்றோம்.

வேதனை என்ற உணர்வை எடுக்கும் பொழுது அந்தச் சிவனாக உருவாக்கிய இந்த உடலில் கடும் வேதனையை உருவாக்குகின்றது.

ஈசனால் உருவாக்கப்பட்ட உடல் என்ற கோவிலில் அசுத்தத்தைத் தான் நிரப்புகின்றோமே தவிர
1.அந்த ஈசனான நிலைகளை நாம் வணங்க மறுக்கின்றோம்.
2.அவன் அறிவை எடுத்து நாம் தெளிவாகும் நிலையை இழந்து விடுகின்றோம்.

ஆகவே நாம் இந்த உடலின் இச்சைக்கு வாழாதபடி
1.இருளை அகற்றும் அருள் சக்தி பெறவேண்டும் என்றும்
2.எனக்குள் இருக்கும் அணுக்கள் அனைத்தும் ஒளி நிலை பெற வேண்டும் என்றும்
3.உயிர் எவ்வாறோ… நீ எப்படி ஒளியாக இருக்கின்றாயோ… என் உணர்வுகள் அனைத்தும் அந்த ஒளிமயமாக மாறுதல் வேண்டும் என்றும்
4.உயிருடன் ஒன்றிடும் நிலையாக நம்முடைய வாழ்க்கையை அமைத்து
5.என்னுள்ளே என்றும் நீ இருந்துவிடு ஈஸ்வரா…! என்று உயிரான ஈசனிடம் வேண்டிக் கேட்க வேண்டும்.

Birth and death

உலக சக்தியையே தனக்குச் சொந்தமாக்கினாலும் தன்னை உணரும் நிலையில் மனிதன் இல்லை…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

காட்சி:-
உணர்ச்சி மிகுந்த மனிதன் ஒருவன் உணர்ச்சி குறைந்த எருமையில் அமர்ந்து அதனை அடித்துத் துன்புறுத்தி வண்டியில் கட்டிப் பாறாங்கற்களை ஏற்றிச் செல்கின்றான் அவ்வண்டியில்…!

விளக்கம்:-
மனிதன் தன் செயலுக்காகப் பலவற்றையும் மிருகங்களையும் மற்ற செயலுக்குகந்த பொருள்களையும் உலோகங்களையும் தன் ஜீவித வாழ் நாட்களில் சுகம் காணச் செயல்படுத்துகின்றான்.

உணர்ச்சி குறைந்த எருமை இவனைக் காட்டிலும் இவனுக்கு உபயோகமாக இருக்கின்றது. அதனால் இவன் பலன் காண்கின்றான்.

உணர்ச்சி குறைந்த எருமை தான் உணர்ச்சி மிகுந்த மனிதனுக்குப் பயன்படுகின்றது. இதைப் போன்று மனிதன் இந்தப் பூமியில் உள்ள பிற இன வஸ்துக்களையும் உயிரினங்களையும் தனக்கு உகந்ததாகப் பயன்படுத்தி வாழ்கின்றான்

1.உலக சக்தியையே மனிதனுக்குச் சொந்தமாக்கி வாழுகின்றான்… இன்றைய மனிதன் தன் அறிவின் விஞ்ஞான வளர்ச்சியினால்…!
2.ஆனால்… தன்னை உணர்ந்து தனக்குள் உள்ள உண்மை சக்தியை உணராமல் வாழ்கின்றனப்பா ஒவ்வொரு மனிதனும் இக் கலியின் கடைசிக் காலத்தில்.

காட்சி:-
ஒரு மனிதன் ஆற்றங்கரையில் அமர்ந்து இரை வைத்துத் தூண்டில் போட்டு பெரிய மீனாகப் பிடித்துச் செல்கின்றான்.

விளக்கம்:-
இன்றைய உலக நிலையும் இதன் அடிப்படை குணத்தில் தான் மனித ஆத்மாக்களின் வளர்ச்சி எண்ண வாழ்க்கை நடந்து வருகிறது.

தன் சாதகம் காண மீணுக்கு உணவு வைத்து அதனைப் பிடித்துத் தான் மனிதன் உண்ணுகின்றான். அதைப் போன்று
1.தன் வசதியான சோம்பல் மிக்க வாழ்க்கையின் சாதனைக்கு
2.சூரியனிலிருந்து பூமி ஈர்க்கும் மின் அலையையும் பூமி ஈர்த்து வளர்ந்த கனி வளங்களையும்
3.அறிவின் மேம்பட்ட கலி மனிதன் உண்டு விடுகின்றான்.

இது நாள் வரை வெளிப்படுத்தாத சில நிலைகளையும் வெளிப்படுத்துகின்றேன்.

எரிமலையையும் பனி மலையையும் பாலைவனங்களையும் ஏன் ஆழ் கடலையும் கூடக் கண்டு ஆராய்ந்து வருகின்றார்கள்.

இருந்தாலும் நம் பூமியில் மூன்று இடங்களில் இது வரை மனிதன் சென்று ஆராயாத இடங்களில் அதிகமாக காந்த ஈர்ப்புக் கிணறுகள் உள்ளனவே. இவர்கள் ஆராய்ச்சியில் ஏன் அதன் நிலைக்குச் செல்லவில்லை…?

1.பூமத்தியின் ரேகையின் மையப் பகுதியில் இக்காந்த ஈர்ப்பு ஆழ் கிணறுகள் நிறைந்துள்ளன.
2.கடல் மட்டத்தில் கீழ் இவ்வீர்ப்பு மிக அதிகப்படியாக உள்ளன.
3.மனிதன் மட்டுமல்ல…! இயற்கைக்கு மாறி எந்த நிலைகளும் அங்கு சென்றால் அதன் ஈர்ப்பில் அப்படியே ஈர்த்துக் கொள்ளும்.

பூமியின் ஈர்ப்புக் காந்த அலைக்குச் சக்தி தருவது பூமத்திய ரேகையின் மையப் பகுதி தான், ஆராயும் நிலைக்குச் செல்வதாக இன்றைய விஞ்ஞானம் உள்ளது.

இவர்கள் செலுத்திச் செயல்படும் எக்கருவியையும் தன் ஈர்ப்புடன் அவை இழுத்துக் கொள்ளும்.
1.படர்ந்து மைல் கணக்கில் இல்லை… அந்தக் காந்த ஈர்ப்பு ஆழ் கிணறுகள்.
2.இந்தப் பூமியில் குறிப்பிட்ட மூன்று இடங்களில் ஐந்து ஆறு அடி விஸ்தீரணச் சுற்றளவு கொண்டதாக அது உள்ளது.

இவர்கள் ஆராய்ச்சியில் பிடிபடுவதும் கடினம்…! கடல் மட்டத்தில் ஒன்றும் மலை மேட்டில் ஒன்றும் பாலைவனத்தில் ஒன்றும் உள்ளது.

பூமத்திய ரேகையின் மையப் பகுதியிலும் கர்நாடக மாநிலத்தில் மலைப் பிரதேசத்திலும் சகார பாலைவனப் பிரதேசத்திலும் உள்ளது. அதன் பக்கங்கள் உள்ள இடங்களிலும் அதன் ஈர்ப்பின் செயல்கள் அந்தந்த இடங்களில் படர்ந்துள்ளது.

இதை எல்லாம் உணர்ந்து தன் உயிராத்மாவை வலுவாக்கி ஒளியாக்கி விண் சென்றவர்கள் அனைவரும் என்றுமே அழியாது வாழ்கிறார்கள்.

ஆனால் இந்த உடலுக்காக என்று வாழும் நிலையில் உள்ளவர்கள் உண்மையையும் உணராது தன்னையும் உணராது மீண்டும் மீண்டும் இதிலே சக்கரம் சுழல்வது போல் சுழன்று கொண்டுள்ளார்கள்.

மனிதப் பிறவி எடுத்தது சுழன்று கொண்டே இருப்பதற்கா…?

துன்பம் வந்தால் அதை உடனடியாக நீக்கும் சக்தி கொடுக்கின்றோம்

திரும்பத் திரும்ப உங்களுக்குள் மகரிஷிகளின் அருள் உணர்வை ஆழமாகப் பதிவு செய்து கொண்டேயிருக்கின்றோம்.

 

துன்பத்தை மாற்றி இன்பமாக்கும் சக்தியைத்தான் உங்களுக்குள் பதிவு செய்கிறோம். ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணினாலே உங்களுக்கு அந்தச் சக்தி கிடைக்கும்படி செய்கிறோம்ஞானகுரு

 

வான்மீகி அன்று எழுதினான் எண்ணங்களைப் பற்றி…! எப்படி…?

கூட்டிப் பெருக்கும் உணர்வுடன் வாழ்க்கையில் நாம் வளர வழி காட்டும் பல்லாங்குழி விளையாட்டு 

மனிதன் அடைய வேண்டிய எல்லையை உணர்த்திடும் ஞானிகளால் காட்டப்பட்ட விளையாட்டு 

சந்தோஷத்தை உருவாக்கித் தரும் இடத்தில் நாம் குறைகளை முறையிட்டுக் கொண்டிருந்தால் எப்படிச் சரியாகும்…?

SIMPLE YOGA EXCERCISE

எளிதான பயிற்சி மூலம் “சிறு மூளையிலிருந்து கால் பெரு விரல் வரை நரம்புகளை உற்சாகப்படுத்தி…” முழுமையான உடல் நலம் பெறலாம்

உதாரணமாக உட்கார்ந்தே வேலை செய்கிறோம் உட்கார்ந்தே இருக்கின்றோம் என்று சொன்னால் உடலை உற்சாகப்படுத்த அதற்கு ஒரு பயிற்சியைச் செய்யுங்கள்.

ஓய்வு கிடைக்கும் பொழுது ஒரு ஐந்து நிமிடமாவது இந்தப் பயிற்சியைச் செய்யலாம்.
1.ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உங்கள் உயிருடன் தொடர்பு கொண்டு
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் மேல் நோக்கிப் பார்த்து உங்கள் நினைவைச் செலுத்துங்கள்.
3.அந்த அருள் பெறவேண்டும் என்று ஏங்கிச் சுவாசியுங்கள்.
4.மேல் நோக்கி ஏங்கும் பொழுது நாம் சுவாசிக்கும் உணர்வுகள் நம் நுரையீரலிலும் மற்ற உறுப்புகளிலும் அதிகமாகப் பெருக நேருகிறது.

எனக்குக் கழுத்து பிடித்துவிட்டது…! என்று சிலர் சொல்வார்கள். டாக்டரிடம் போனேன். என் எலும்பு தேய்ந்து விட்டது… என்று சொல்லி விட்டார்…! என்பார்கள்.

இது எல்லாம் நம் நரம்பு மண்டலங்களில் ஏற்படும் சில நிலைகள்…
1.அதனுடைய வலுத் தன்மை இல்லாததால்
2.இந்த அழுத்தம் (பிடிப்பு) நமக்குள் அதிகமாக வருகின்றது.
3.அதாவது சுண்ணாம்புச் சத்து (CALCIUM) குறைவு… அல்லது நரம்பு மண்டலங்களில் அந்த வீரியத் தன்மை குறைந்திருந்தால்..!

அதற்கு உற்சாகம் ஊட்ட வேண்டும் என்றால் காலை நேராக நீட்டிக் கொள்ளுங்கள். அப்படியே உங்கள் கைகள் இரண்டையும் மேலே உயர்த்துங்கள் காதை ஒட்டி (படத்தில் காட்டியபடி).

அப்படியே மெதுவாக கைகளை முன்னாடிக் கொண்டு போங்கள் (காலை நோக்கி). உடனே செய்ய வேண்டும்… காலைத் தொட வேண்டும் என்று அவசரப்படாதீர்கள்.
1.அந்த மெதுவாகக் கொண்டு போகும் நிலையில்
2.எவ்வளவு தூரம் கொண்டு போய் வளைய முடியுமோ.. வளையுங்கள்.

வளையும் பொழுது ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து எங்கள் உடலில் படர வேண்டும் என்ற நினைவினைச் செலுத்தி அந்த மூச்சினை இழுங்கள்.

இப்படி மெதுவாக இரு ஐந்து அல்லது ஆறு தடவை செய்யுங்கள். இப்பொழுது…
1.உங்களுக்குள் சிறு மூளையிலிருந்து இந்தப் பெருவிரல் வரையிலும் அந்த நரம்புகளை ஓரளவுக்குச் சீராக இயக்க முடியும்.
2.முதுகை வளைத்து முன்னாடி வளையும் பொழுது…!
3.உடலில் உள்ள பிடிப்பெல்லாம் போய்விடும்.

இதெல்லாம் சுலபமான பயிற்சி.

உங்களுக்கு வாக்குக் கொடுத்ததை நீங்கள் சீராகப் பயன்படுத்தினால் உடலில் உள்ள சலிப்பு சோர்வு நோவு எல்லாம் நீங்கிப் போகும்.

சிலர் அடிக்கடி வேதனைப்பட்டு சலிப்புப்பட்டு கோபப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். அந்த உணர்வுகளைப் பார்த்த பின் இதே உணர்ச்சிகள் கண்ணின் கருவிழியான படமாக்கும் உணர்வுகளில் பட்டு
1.அதனின் இயக்கமாக அதை ஒட்டி உள்ள நிலைகளில் பலவீனமடைந்திருக்கும்…
2.கண் எரிச்சல்… கண் மங்கல் எல்லாம் இருக்கும்.
3.அப்படிப் பலவீனம் அடைந்தால் நாம் எதையுமே சீக்கிரம் கிரகித்து இழுக்கும் சக்தி அங்கே குறையும்.

அதற்கும் இதே போல் காலை நீட்டிச் சிறிது நேரம்
1.“தம் அடக்கி… தம் பிடித்து…”
2.இரண்டு கைகளையும் அப்படியே கொண்டு வந்து கால் பெரு விரலைத் தொட்டு
3.கொஞ்ச நேரம் அப்படியே அந்த மூச்சை விட்டு மூச்சை வாங்குங்கள்…!

அந்த நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்.. அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று ஏங்குங்கள். அந்த உணர்வுகள் உங்கள் உடலுக்குள் பாய்ந்து சிறு மூளையிலிருந்து எல்லாப் பாகங்களுக்கும் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும்.

கை கால் குடைச்சலாக இருந்தால் எழுந்து நின்று கையை மேலே தூக்கிக் கொள்ளுங்கள். குடைச்சல் இருந்தது என்றால் இந்தப் பயிற்சியைச் செய்யுங்கள். ஏனென்றால் சில நேரங்களில் உடல் பாகங்களில் சில வாயுத் தன்மை அடைத்திருந்தால் ஒரு விதமான வலி ஏற்படும்.

மருத்துவரிடம் சென்றால் ஹார்ட் அட்டாக்… இரத்தக் குழாய் அடைத்திருக்கிறது…! என்று கூடச் சொல்லி விடுவார்கள்,

அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி மூச்சை ஒரு ஐந்து தடவை இழுத்து விடுங்கள். அப்படிச் செய்யும் பொழுது இந்த இருதய வாயிலுனுடைய நிலைகள் இழுக்கப்படும்.

இருதய பாகத்தை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை அங்கே செலுத்தப்படும் பொழுது இந்த உணர்வுகள் நுரையீரலில் இருதயத்திலும் ஓரளவுக்குப் பரவும்.

அங்கே அடைப்பாகித் திகைப்பாகி இருதயத்தில் வலி இருந்தால் இதே மாதிரி எண்ணிக் கொஞ்சம் மெதுவாக இந்தப் பயிற்சியைச் செய்ய வேண்டும்.
1.மேலே கையைத் தூக்கிக் கீழே வளைகின்றீர்கள்…! என்று சாதாரணமாக நினைக்கின்றீர்கள்.
2.ஆனால் அந்த இருதய வாயிலில் அந்தப் பாகத்தில் இருக்கக் கூடிய அடைப்புகளை அகற்றி
3.இருதயத்தைத் தெளிவாக்கி உங்கள் உடலைச் சீராக்க இது உதவும்.

power of gods

கசப்பிலிருந்து தான் இனிமை காண முடியும்…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

1.கடவுள் எல்லாவற்றிலும் உள்ளார்… எல்லாமாகவும் உள்ளார்..!
2.நல்ல சக்தி மட்டும் கடவுள் அல்ல. தீயவையும் கடவுளின் படைப்புதான்.
2.கடவுளின் பிம்பம் நன்மையிலும் தீமையிலும் கலந்தே உள்ளது.

நற்குணம் கொண்ட மனிதனும் கடவுளுக்குச் சொந்தம். தீய குணத்தில் உள்ளவனும் கடவுளின் படைப்பு தான்.
1.இதில் உள்ள உண்மை நிலையை உணர்ந்தால்
2.தெய்வத்தின் சக்தியை மனித ஆன்மாக்கள் உணர்ந்து நடக்க ஏதுவாகும்.

எல்லாப் படைப்பும் தெய்வத்தின் படைப்பே…!

படைக்கப்பட்டவன்…
1.படைப்பின் பொருள் கண்டு மகிழ்ந்து
2.தன் பொருளான தான் படைத்ததன் பலன்தான்
3.தெய்வ சக்தியின் அருள் வளர்ச்சியும்.. நற்குண வளர்ச்சியும்…!
4.சப்தரிஷிகளின் நிலை பெற்றோரின் வளர்ச்சியினால் தன் படைப்பின் பலனைப் பெற்றான் – “படைத்தவன்”

மனிதன் உருவாக்கும் செயல்களில் இருந்து எப்படி தன் எண்ணத்திற்குகந்த நிலை பெற்றவுடன் மகிழ்ச்சி கொள்கின்றானோ அதைப் போன்ற மகிழ்ச்சிதான் தெய்வ சக்தியின் வளரும் நற்குண வளர்ச்சியும்…!

நன்மை தீமை கொண்டு தெய்வப் படைப்பு இல்லை. எல்லாமே தெய்வப் படைப்புத் தான். பல சுவையும் இயற்கையில் கலந்து தான் வளர்கின்றது. கசப்பின் சுவை இல்லாவிட்டால் இனிப்பை அறிய முடியாது.

மனித வாழ்க்கையில் ஏற்படும் சோதனை நாட்களை கசப்பாக எண்ணி… அக்கசப்பின் நிலையில் விரக்தி பூணும் மனிதனின் சுவாச அலையின் தொடரினால்… அதே சுழற்சியில் இருந்து சலிப்பின் உந்தலினால்.. பல மனித ஆத்மாக்கள் தன் நிலை உணராமல்… இக்கசப்பான நிலையிலிருந்து மீள முடியாத சிக்கலில் சிக்கி…
1.அதன் உணர்வு அலையின் உந்தலில் ஏற்படும் ஆவேச எண்ண நிலையிலிருந்து மீளாத மனிதன்தான்…
2.தீய வழிகளுக்கும் தீய செயலில் நிலைக்கும் தன் நிலை உணராமல் சென்று விடுகின்றான்.

தனக்கு ஏற்படும் இன்னலில் இருந்து கசப்பான வாழ்க்கையை இனிய செயலாக்குவது இம்மனிதனின் எண்ணம் தான்…! என்று உணர்ந்து
1.கசப்பைத் துவர்ப்பாக்கி
2.துவர்ப்பை இனிமையாக்கும் வாழ்க்கைச் செயலுக்குக் கொண்டு வரலாம்.

அதே சுழற்சி ஓட்டத்தில் செல்லும் மனிதன்… மீண்டும் சோதனையான கசப்பான நிலை தன் வாழ்க்கையில் ஏற்பட்டாலும் அதனை இனிமைப்படுத்திடும் வழித் தொடர் அறியத் தன் எண்ணத்தை அவ்வீர்ப்பின் நிலையுடன் தன் உணர்வு பெறுகின்றான்.

1.இனிமையிலிருந்து வருவதல்ல நல் உணர்வு எதுவுமே…! (இது மிகவும் முக்கியமானது)
2.சுவையான மாங்கனி பிஞ்சில் கசப்பாகவும்.. பிறகு வளர வளர
3.துவர்ப்பு புளிப்புமாகி பிறகு தான் முற்றிப் பழுத்து இனிப்பாகின்றது அல்லவா…!

உள்ளிருக்கும் துவர்ப்பான அக்கொட்டையுடன் ஆரம்ப ஈர்ப்புக் குணத்திலுள்ள அமிலப் படிவம் கொட்டையுடன் உள்ள பொழுதும் அத்துவர்ப்பான கொட்டையின் மேல் சுவையான மாங்கனி வளர்கின்றது அல்லவா…!

1.அதைப் போன்று கசப்பான வாழ் நாட்களை இனிமையாக்கப் பழகிடுங்கள்.
2.கசப்பிலிருந்து தான் இனிமை காண முடியும்.

பல சித்தர்களும் சப்தரிஷிகளும் மற்றும் இன்றைய காலங்களில் உள்ள நீங்கள் அறிந்த வளர்ச்சி கொண்ட எந்த மேதைகளையும் அவர்களின் வாழ்க்கையின் ஆரம்பக் காலங்களில் நடந்த உண்மை நிகழ்ச்சியின் உண்மையை ஆராய்ந்தோமானால் “இதன் நிலை புரியும்…!”

அரசனாக இருந்தாலும் மாமேதையாக இருந்தாலும் எந்த ஆண்டவனும் அவர்களுக்கு அந்தச் சக்தி தரவில்லை. அவரவர்கள் எடுக்கும் எண்ணச் சுவாசத்தினால் அவர்கள் அடையும் பெரு நிலை எல்லாம் இறைவனின் படைப்பு ஒன்றே…! இயற்கையின் சக்தியும் அதுவே…!

வளர்ந்த செயலில்தான் அதனதன் அடிப்படைக் குணமெல்லாம் உள்ளன. இக்குணத்தின் வழி பெற்றது தான் ஆண்டவன் கண்ட பொருள் மகசூலான சந்திரனும்.. சூரியனும்… நம் பூமியும்… நாமும்… எல்லாமே…!

1.நன்மை தீமை கொண்டு படைக்காத ஆண்டவன்
2.தன் படைப்பின் பலனான நல்லதுவும் தீயதுவும் சுழன்றுள்ள நிலையில்
3.தன் வளர்ச்சிக்குத் துணையாக நல்லவற்றைக் காண்கின்றான்.

இப்படி இருக்க ஆண்டவன் படைப்பை எப்படிப் பிரித்துக் காண்பது…? 

நாம் யாரையும் குற்றவாளியாக எண்ணவே கூடாது…!

 

மற்றவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்க நேர்ந்தால் நம்மைப் பற்றித் தான் பேசுகிறார்கள் என்று கற்பனை செய்து கொண்டே இருப்போம். ரோட்டில் போகிற தண்ணீரை என் மீது ஊற்று என்று சொல்கிற மாதிரி நமக்குக் கோபம் ஜிர்ர்..ர் என்று ஏறும்.

 

நம் உடலில் புண்கள் வருவது போல் சில எதிர் மறையான உணர்வுகளால் மரத்திலும் புடைப்பாக ஏற்படுவதுண்டு. இயற்கை எப்படி இயங்குகிறது என்பதை குருநாதர் தெளிவாக்கினார்.

 

தீமை செய்யும் உணர்வைப் பற்றி அறியவில்லை என்றால் தீமையை நீக்கும் தன்மையை எடுக்கும் தன்மை வராது. தீமையை நீக்க என்ன மருந்து என்று அறிய வேண்டும்.

 

எதிர் மறையாக இயக்கும் உணர்வுகளைப் பற்றி நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். வட துருவம் தென் துருவம் போல் நல்ல குணங்களும் தீய குணங்களும் ஒன்றை ஒன்று உந்தித் தான் இயக்கும்.

 

இராவணனை-தசப்பிரியன்-என்று-ஏன்-சொல்கிறோம்

இஷ்வாகு-வம்சத்தைச்-சேர்ந்தவன்-தசரதன்

தீங்கு-செய்யாது-அனைவரையும்-அரவணைத்துச்-செல்லும்-சக்தியே-கல்யாணராமா

கிரந்த மொழி

third eye unity

தானாக இருந்து நானாக இயங்குகின்றோம் என்பதை மாற்றி “உயிருடன் ஒன்றிய நானாக… இயங்க வேண்டும்…!”

நான் இல்லை நீ இல்லா இவ்வுலகில்… எல்லா நினைவையும் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா…! என்று நம் உயிரை வேண்டிப் பாடுகின்றோம்.

இந்த உடலில் “உயிர் இல்லை…!” என்றால் நான் இருக்க முடியுமோ…?

அதைத் தான் “நான் இல்லை… நீ இல்லா இவ்வுலகில்…!” இந்த உயிர் இல்லை என்றால் இந்த உடலான உலகில் நான் இருக்க முடியாது.

நான் இல்லை நீ இல்லா இவ்வுலகில் எல்லா நினைவையும் பெற்றிடவே எனக்கருள் செய்வாய் ஈஸ்வரா..! “எல்லா நினைவு…!” என்றால் அதனுடைய பொருள் என்ன…?

இந்த உயிர் தான் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் எத்தனயோ கோடிச் சரீரங்களைப் பெற்று
1.எத்தனையோ கொடுமையிலிருந்து நீக்கிட வேண்டும்…
2.வேதனைகளிலிருந்து விடுபட வேண்டும்… தப்ப வேண்டும்…! என்று
3.தீமைகளை அகற்றி… அகற்றி… இன்று தீமைகளை அகற்றிடும் நம்மை மனிதனாக உருவாக்கிய இந்த நிலையில்
4.எதை எல்லாம் நீக்கிட வேண்டும் என்று நாம் எண்ணினோமோ..
5.இந்த மனித வாழ்க்கையில் வரும் “தீமை என்ற நிலைகளை நீக்கிடும் அருள் சக்தி பெறவேண்டும்….!”

ஏனென்றால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் ஒவ்வொரு உடலிலேயும் ஒவ்வொரு விதமான உணர்வுகளிலிருந்து நான் தப்பித்தேன்…!
1.அதைப் போன்று இந்த மனித வாழ்க்கையிலும் வரும் தீமைகளிலிருந்து நான் விடுபட வேண்டும்
2.அந்த அருள் சக்தி நான் பெறவேண்டும்…! என்று
3.உயிரான ஈசனிடம் வேண்டுவது தான் இந்தப் பாடலின் உட்பொருள்.

புழு பூச்சிகளிலிருந்து பல கோடிச் சரீரங்களைக் கடந்து… தீமைகளைக் கடந்து… தீமைகளை நீக்கிடும் மனித உடல் பெற்றோம், இந்த மனித உடலோ நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்து வரும் நஞ்சினை மலமாக மாற்றுகின்றது.

உணவில் மறைந்த நஞ்சை உடல் மாற்றுவது போல்…
1.நஞ்சென்ற உணர்வுகள் (தீமைகள்) தெரிந்த பின் நஞ்சை நீக்கிடும் அந்த அருள் சக்தி…
1.என் நினைவில் வர வேண்டும் ஈஸ்வரா
2.எல்லாவற்றையும் உருவாக்கியது நீயே…!
3.நான் எண்ணியதை இயக்குவதும் நீயே…!
4.நான் எண்ணியதை உடலாக்குவதும் நீயே…!
5.எண்ணியதை உடலாக்கிய பின் இந்த உடலை ஆள்பவனும்… ஆண்டவனாக இருப்பதும் நீயே…!

ஆகவே இந்த உணர்வின் சக்தியை… நாம் நமக்குள் எப்படி இயங்குகின்றோம்…? என்பதையும் நான் என்பது யார்..! என்ற சிந்தனைக்குரிய நிலைகளை நாம் எண்ணி எடுத்தால் நமது உயிரின் தன்மை அதை இயக்குகின்றது

1.”நான்…” எண்ணும் செயல்கள் நான் ஆகின்றது.
2.உயிருடன் ஒன்றி… அந்த உணர்வின் தன்மை அது இயக்கப்படும் பொழுது – உயிருடன் ஒன்றிய “நான்” ஆகின்றது.
3.ஆனால் (மற்ற நேரங்களில்) நாம் எடுக்கும் உணர்வு தானாகின்றது.
4.அந்தத் தான்… நான் (உயிருடன் ஒன்றிய) ஆக வேண்டும்.

உதாரணமாக கோபமாக நாம் எடுத்தால்.. தான் இயங்குகின்றேன்… இயக்குகிறேன்…! என்று தான் வருகின்றது.

இருந்தாலும்… உயிரோ ஒளி என்ற உணர்வை ஊட்டுகின்றது.
1.அந்த ஒளி என்ற நிலைகளை ஊட்டப்படும் பொழுது அதை நுகர்ந்து
2.இருளை நீக்கிய பின்… தான் – நான் (ஒளியாக) ஆகின்றேன்..!
(சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

ஆகவே இந்த உயிருடன் ஒன்றி அந்த ஒளியின் சரீரமாக ஆகும் அந்தச் சக்தி நாம் பெறுகின்றோம்…! என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

spiritual intelligence

நுணுக்கமான அறிவை எல்லோரும் எப்படிப் பெறுவது..? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

நாம் எடுக்கும் தியானத்தின் மூலம் பலவாக உள்ள நினைவின் ஓட்டத்தை ஒரு நிலைப்படுத்திப் பல நிலை கொண்ட அமில குணத்தையெல்லாம் ஒரு வழிக்கு வர பழக்கப்படுத்தித் “திசை திருப்பும் ஞான வழி பெறுதல் வேண்டும்…!”

அப்படிப் பெற்றால்…
1.தான் எடுக்கும் சுவாச ஈர்ப்பினால் எந்த ஒரு நற்சக்தியின் பால் தன் எண்ணத்தைச் செலுத்துகின்றோமோ
2.அதே நினைவில் சுவாசம் எடுத்து… அதன் வழித் தொடர் நினைவில்…
3.அத்தொடரில் உள்ள உண்மையின் வளர்ச்சியை நிச்சயமாகப் பெற முடியும்.

ஞானத்தின் பால் செலுத்தப்படும் இந்த ஈர்ப்பு குண நலம் அமையப் பெறும் வழித் தொடரில் சென்றால் “எந்த ஒரு நுண்ணிய அலைத் தொடரையும்…” வளர்ச்சி ஞானத்தினால் பெற முடியும்.

அத்தகைய நுண்ணிய அலைத் தொடரிலிருந்து…
1.நம் உடலிலுள்ள அனைத்து அணுக்களுடனும் இந்த நுண்ணிய ஈர்ப்பு அலையின் சக்தி எடுக்கும் பழக்கம் ஏற்பட்டு
2.இப்பிம்ப உடலிலிருந்து உயிர் ஜீவ சக்தியைத் தனித்துப் பிரித்துச் சென்று எல்லாவற்றையும் அறிய முடியும்.

அதாவது…
1.ஒவ்வொரு அமில குணங்களின் சேர்க்கையையும் அதன் வட்டத்திலிருந்து உயிர் பெறும் ஜீவ நிலையையும்
2.ஒன்றுடன் ஒன்று கலவைப் பட்டு வளரும் நிலையையும்
3.இப்பூமியில் உள்ள கனி வளங்களின் நிலை அறியவும்
4.கனி வளத்திலிருந்து கசிந்து உருகி வரும் திரவ நிலைகளை அறியவும்
5.இப்ப்பூமியின் பூமத்திய ரேகையில் உள்ள உண்மை நிலைகளையும் அறிய முடியும்.

விஞ்ஞான சாதனை கொண்டு செயற்கை மின் அலையின் தொடரினால் செயற்கை மின் அலையிலிருந்து விஞ்ஞானத்தில் கண்டறியும் ஆற்றலைக் காட்டிலும்
1.இஜ்ஜீவ மின் அலையின் சக்தியை வளர்த்துக் கொள்ளும் மனிதனால்
2.தன் உயிராத்மாவை எந்த இடத்திற்கும் சென்று..
3.பூமியின் மேல் மட்டத்தில் உள்ள நிலைகளை அறிவது போல்
4.இந்தப் பூமியின் உட்கோளங்களில் வளர்ந்து வரும் நிலைகளையும் அறியலாம்.

அது மட்டுமல்ல…!

இந்தப் பூமியின் காற்று மண்டலத்தையும் காற்று மண்டலத்திற்கு அப்பால் உள்ள பால்வெளி மண்டலத்தையும் இந்த நுண்ணிய அலையின் சக்தியை வளர்த்துக் கொண்ட மனிதனால் காண முடியும்.

இந்த உடல் அப்படியே ஒரு இடத்தில் இருந்தாலும்… விட்டுச் சென்ற உடலில் அனைத்து உயிரணுக்களும் இந்த நுண்ணிய மின் அலையின் சக்தியின் ஈர்ப்புடன் இயங்கிடும்.

உடலில் உள்ள தசைகளும் மற்ற எல்லா உறுப்புகளும் அதே நிலையில்… அதாவது…
1.உண்டு கழிக்க வேண்டும் என்ற நிலை இல்லாமல்
2.சுவாசம் எடுத்துச் சுவாசம் விட்டு இருக்கக்கூடிய நிலையும் இல்லாமல்
3.இந்த உடல் பிம்பம் எந்த வகைப் பின்னமும் படாமல் அதே நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும்.

இதை எல்லோராலும் பெற முடியும்…!

ஆனால்
1.மந்திரமும்… மாயமும்…
2.தெய்வீகப் பெரும் சக்தி என்றும்…
3.சாதாரண மனிதனால் முடியாத நிலை என்றும்
4.மனிதன் பெற வேண்டிய உயர் சக்தியை மனிதன் எடுக்க முடியாமல்…
5.எட்டாத நிலைப்படுத்தி மறைக்கப்பட்டு விட்ட நிலை தான்…! இன்று நடப்பில் உள்ளது.

செயற்கையின் மின் அலையை விஞ்ஞானப்படுத்திச் செயலாக்கும் மனிதனால்… தன் அலையின் தொடர்பிலிருந்தே அச்சூரியனின் ஒளி அலையின் ஈர்ப்பினால்… தன் உயிராத்மாவால்… எந்த ஒரு நுண்ணிய அலையின் வளர்ச்சியையும் ஜீவ உடல் கொண்டு மனிதனால் எடுக்க முடியும். இது சாத்தியமே…!

மனித உடலில் பல கோடிக் கோடி உயிரணுக்கள் ஜீவ சக்தியுடன் இயங்கும் பொழுது…
1.உயிராத்மாவின் நிலையுடன் நிறைந்துள்ள பல கோடி உயிரணுக்களும்
2.இந்த அலையின் ஈர்ப்பை எடுக்கும் நிலையினால்
3.மனிதனின் சக்தித் திறன் பலவாக உயரும்.

ஆனால் உடலை விட்டுச் சென்ற ஆவி ஆத்மாக்களுக்கு ஜீவ அணுக்களின் ஜீவ சக்தி இல்லாததினால் மனித ஞானத்தில் செயல்படும் திறனில்லாமல் ஆவி உலக வாழ்க்கை இருந்துவிடுகின்றது.

ஜீவ சக்தியில் ஈர்க்கப்படும் ஞானங்களும் இந்த உயர் மின் அலையின் தொடர்பும் ஜீவனற்ற ஆவி ஆத்மாக்களுக்கு முடியாதப்பா…!

சூரியனின் மின் அலையின் சுவாசத்தை ஒவ்வொரு நொடிப் பொழுதும் எடுத்து வாழும் நம் வாழ்க்கை அலையில் நாம் உண்டு… கழித்து.. உறங்கி.. நமக்குக் கிடைத்த பல காலமாக நாம் வளர்த்து வந்த இந்த ஜீவ உடல் வாழ்க்கையில் பெற்ற உன்னத சக்தியை அறியாமல்… விரயப்படுத்தித்தான் வாழ்கின்றோம்.

மூல நோய் இருதய நோய் சிறுநீரக நோய்கள் வரக் காரணம் என்ன…?

 

உடலில் வெப்பம் அதீதமாகும் நிலை வரும் பொழுது மூல நோய் வருகிறது. அதனின் வளர்ச்சியில் ஆணிமூலம் மூல பௌத்திரம் வருகிறது. அதைத் தணிப்பதற்கு ஜவ்வரிசியை வைத்துச் சாப்பிடலாம்.

 

பித்தம் அதிகமாகி தலை சுற்றல் இரத்தக் கொதிப்பு போன்ற நிலைகள் எல்லாம் எப்படி வருகிறது..? அதை எப்படி மாற்றுவது…?

 

இருதயம் சிலருக்குப் பலவீனமாக இருக்கும். இரத்தம் போகும் பாதைகளிலும் அடைப்பு இருக்கும். சலிப்பு போன்ற குணங்கள் அதிகமாக இருந்தால் உப்புச் சத்து அதிகமாகி இரத்தத்தில் அது உறைந்தால் இரத்தம் போகும் பாதையில் அடைப்பு வரும்.

 

தொழில் நிமித்தம் மற்றவரை ஏமாற்றும் நிலையும் குறை கூறும் நிலைகளும் இருந்தால் அடுத்தவரை அடக்கிடும் உணர்வுகள் வருகிறது. அப்படி அடக்கும் பொழுது நம் உடலிலுள்ள நல்ல குணங்களும் தீமைகளால் அடக்கப்படும் நிலை ஆகின்றது, இரத்தம் கெட்ட இரத்தமாகின்றது.

 

கல்லீரல் வீக்கம் நுரையீரலில் சளித் தொல்லை கிட்னி சரியாக இயங்காத நிலை எல்லாம் வருகின்றது,

 

இதை எல்லாம் மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று ஈஸ்வரபட்டர் எனக்குத் தெளிவாகக் காட்டினார். இதை எல்லாம் நேரடியாகப் பார்த்துத் தான் உங்களுக்குச் சொல்கிறேன். (ஞானகுரு)

 

பழிச் சொல்கள் எப்படி வருகின்றது…?

நம் உடலே சொந்தமில்லை கௌரவம் நிற்குமா…?

மனப்போராட்டத்தினால் வரும் சிக்கல்கள்

மரண பயம் வருவதன் காரணம் என்ன…? வெல்வது எப்படி…?

meditational food

“அகஸ்தியமாமகரிஷியின் அருள் சக்திகளை உணவாக உட்கொள்ளும் பயிற்சி தியானம்…”

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் பொழுதெல்லாம் உங்கள் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உங்கள் உயிரான ஈசனை வேண்டித் தியானியுங்கள்.

உயிர் ஓ… என்று இயங்கிக் கொண்டேயுள்ளது. நாம் எண்ணியதை உருவாக்கிக் கொண்டுள்ளது. ஆகவே உயிரை ஈசனாக எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியன் மனிதனான பின்…
1.இந்த இயற்கையின் உண்மைகளை வானஇயல் புவியியல் உயிரியல் தத்துவப்படி அறிந்தான்.
2.நஞ்சினை வென்றான்.. இருளை அகற்றினான்… மெய் உணர்வைக் காணும் அருள் சக்தி பெற்றான்…!
3.அவனில் விளைந்த உணர்வுகள் அனைத்தும் நம் பூமியில் படர்ந்துள்ளது.
4.அந்த அகஸ்தியன் உணர்வைத் தான் உங்களுக்குள் இப்பொழுது பதிவு செய்கின்றோம்.

அந்த அகஸ்தியன் நஞ்கினை வென்று இருளை அகற்றி மெய்ப் பொருள் கண்ட அந்த உணர்வுகளை நாம் பெற இப்பொழுது தியானிப்போம்.

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டிக் கண்ணை மூடி ஏங்கித் தியானியுங்கள்.

அந்த அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று உங்கள் உயிரிடம் வேண்டி ஏங்கிக் கேளுங்கள். இப்பொழுது அந்த உணர்வின் சத்தை நீங்கள் நுகர்கின்றீர்கள்.

அப்படி நுகரும் உணர்வுகளை…
1.அந்த அகஸ்தியன் பெற்ற அரும் பெரும் உணர்வை உங்கள் உயிர்
2.உணவாக உட்கொள்ளும் அணுவாக உங்கள் உடலுக்குள் உருவாக்கும்.
4.“ஓ…” என்று ஜீவ அணுவாக உருவாகும் கருத் தன்மை அடையச் செய்யும்,

நம் உடலிலே அந்தக் கருக்கள் பெருகி அணுவாக ஆன பின் அந்த அகஸ்தியன் உணர்வை உணவாக உட்கொள்ளும் அந்த உணர்ச்சியை உந்தும்.

அப்படி உந்தி அந்த உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது பகைமை உணர்வுகளையும்… மற்ற நஞ்சுகளையும் நீக்கிடும் ஆற்றலையும்… மெய்ப் பொருளைக் காணும் அருள் சக்தியைப் பெறும் தகுதியையும் நீங்கள் பெறுகின்றீர்கள்.

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று திரும்பத் திரும்ப எண்ணித் தியானியுங்கள்.

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து… எங்கள் இரத்த நாளங்களில் கலந்து… எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்களில் கலந்திட அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள்.

கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி உயிரான ஈசனிடம் வேண்டி உடல் முழுவதும் அந்த அகஸ்தியமாமகரிஷிகளின் அருளைப் பரவச் செய்யுங்கள்.
1.அகஸ்தியன் பெற்ற அந்தப் பேரருள் உங்கள் இரத்தங்களிலே கலந்து உங்கள் உடல் முழுவதும் இப்பொழுது பரவுகிறது
2.அதை நீங்களும் உணரலாம்… மகிழ்ச்சியூட்டும் உணர்வாக அது வரும்.

திருமணமான பின் அகஸ்தியரும் அவர் மனைவியும் இரு மனமும் ஒன்றென இணைந்து பேரருள் பெற்றுத் துருவ மகரிஷியாக ஆனார்கள். அந்தத் துருவ மகரிஷியின் உடலிலிருந்து வெளிப்படுத்திய அந்த அரும்பெரும் சக்தியைப் பெறவேண்டும் என்று ஏங்குங்கள்.

துருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானியுங்கள்.

துருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! துருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா..! என்று திரும்பத் திரும்ப எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

1.இவை அனைத்தும் புருவ மத்தியிலேயே எண்ணி ஏங்குங்கள்.
2.துருவ மகரிஷிகளின் அருள் சக்தி இப்பொழுது உங்கள் இரத்த நாளங்களில் சுழன்று வரும்.
3.உடல் முழுவதும் புதுவிதமான உணர்ச்சிளைத் தோற்றுவிக்கும்.

துருவ மகரிஷியின் உணர்வுகள் உங்கள் ஆன்மாவில் பெருகியிருப்பதனால் நீங்கள் சுவாசிக்கும் பொழுது…
1.பேரின்பம் பெறும் அருள் மணங்கள் கலக்கப்பட்டு
2.பெரும் மகிழ்ச்சியின் உணர்வின் தன்மையாக உங்கள் உடலில் அந்த உணர்ச்சிகள் வரும்.
3.பற்பலவிதமான நறுமணங்கள் வரும்.
4.நஞ்சினை வென்றிடும் அருள் மணங்கள் கிடைக்கும்.
5.அருளானந்தம் பெறும் அருள் சக்தியும் உங்கள் சுவாசத்தில் கிடைக்கும்.

அகஸ்தியரும் அவர் மனைவியும் இரு உயிரும் ஒன்றென இணைந்து துருவ நட்சத்திரமாக ஆனார்கள். அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும் ஈஸ்வரா…! என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரிடம் வேண்டுங்கள்.

உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள். அதிலிருந்து வந்து கொண்டிருக்கும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா..! என்று ஏங்குங்கள்.

இப்பொழுது…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உங்கள் புருவ மத்தியில் மோதி
2.பேரொளி என்ற நிலைகளக உங்கள் உடல் முழுவதும் பரவும்
3.உங்கள் உடலில் உள்ள ஆன்மாவும் இதைப் போல இருளை வென்றிடும் அருள் ஒளியாகப் பெருகும்.

உங்கள் உயிருடன் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் மோதும் பொழுது.. அருள் ஒளி உங்கள் புருவ மத்தியில் தோன்றும். நீங்கள் இதற்கு முன் சுவாசித்த தீமை என்ற நிலைகளைப் புக விடாது அதை வெளிக் கடத்தும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று உங்கள் நினைவை உயிரான ஈசனிடம் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

அந்த பேரருளைப் பெறும் அருள் உலகமாக…
1.உங்கள் புருவ மத்தியில் அந்த அருள் உலகமாக
2.அணுக் கருக்களை உருவாக்கும் உணர்ச்சிகளை உங்கள் புருவ மத்தியில் உணரலாம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் ஈஸ்வரா…! என்று திரும்பத் திரும்ப ஏங்கித் தியானியுங்கள்.

1.நட்சத்திரத்திற்கு நட்சத்திரம் மோதும் பொழுது
2.மின்னல்கள் எப்படி மின்கற்றைகளாக வருகின்றதோ
3.இதைப் போல் உங்கள் உடலுக்குள் அந்த உணர்வலைகள் பரவி
3.இருளை அகற்றி உங்கள் உடலுக்குள் ஒளியாக உருவாகும்.

உங்கள் உடலிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் தீமைகள் புகாது தடுத்து இருளை அகற்றிடும் அருள் ஒளி என்ற உணர்வுகளாக உங்கள் ஆன்மாவில் பெருக்கும்.

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் கணவன் தன் மனைவி உடல் முழுவதும் படர்ந்து மனைவியின் இரத்த நாளங்களிலே கலந்து ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள்.

இதே போல அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் மனைவி தன் கணவன் உடல் முழுவதும் படர்ந்து கணவனின் இரத்த நாளங்களிலே கலந்து ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்படி ஒருவருக்கொருவர் எண்ணி இரு மனமும் ஒன்றி அந்தப் பேரருள் உணர்வினை உருவாக்குங்கள்.

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தாய் தந்தையர் உடல் முழுவதும் படர்ந்து தாய் தந்தையர் இரத்த நாளங்களிலே கலந்து ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிப்படும் பேரருளையும் பேரொளியையும் பெறவேண்டும் என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டி
1.உங்கள் நினைவு அனைத்தும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து
2.அந்தச் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
3.சப்தரிஷி மண்டல அருள் உணர்வுகளை உங்களுக்குள் வலுவாக்கிக் கொள்ளுங்கள்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற உங்கள் மூதாதையர்களின் உயிரான்மாக்கள்…
1.உங்கள் நினைவுக்கு எத்தனை பேர் வருகின்றனரோ…
2.அந்த ஆன்மாக்கள் அனைத்தும் அந்தச் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து
3.உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து… பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்து
4.அழியா ஒளிச் சரீரம் பெற்றுப் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று உந்தித் தள்ளுங்கள்.

உங்கள் குலதெய்வங்களின் உணர்வுகள் உங்கள் உடலிலே இருப்பதனால்… நீங்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றதனால்… அதனின் வலுவின் துணை கொண்டு உங்கள் மூதாதையர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் எளிதில் இணையச் செய்ய முடியும்.

இதற்கு முன் இதைச் செய்யத் தவறியிருந்தாலும்… இன்னொரு உடலுக்குள் அவர்கள் ஆன்மாக்கள் சென்றிருந்தாலும்… இந்த உணர்வுகளை நாம் பாய்ச்சப் பாய்ச்ச… அந்த உடலுக்குள்ளும் இந்த உணர்வுகள் ஊடுருவி.. அந்த உடல் மடிந்த பின் உடலை விட்டு வெளியில் வரும் ஆன்மாவை.. தினமும் செய்யும் துருவ தியானத்தின் மூலம் விண் செலுத்தி விடலாம்… அவர்கள் பிறவி இல்லா நிலை அடைவார்கள்…!

நாம் இந்த மாதிரிச் செய்தோம் என்றால் மூதாதைகள் ஒருவருக்கொருவர் சந்தர்ப்பத்தால் சாப அலைகளோ மற்றதுகள் விடுத்திருந்தாலும்
1.அந்த மரபு அணுக்கள் நம்மை அறியாது நம் உடலுக்குள் இருந்தாலும்
2.அந்த மரபு அணுக்களை மாற்றிப் பேரருள் என்ற உணர்வை நமக்குள் பெருக்க முடியும்
3.பரம்பரை நோயை அகற்ற முடியும்.

இருளை அகற்றி விட்டுப் பேரருள் என்ற… அருள் ஒளி என்றுமே வளர்ந்து கொண்டே இருக்கும் அந்த உணர்வை அவர்களையும் பெறச் செய்யலாம்.

இவ்வாறு செய்து வந்தால்…
1.உங்கள் குடும்பத்தில் சமீப காலத்தில் உடலை விட்டு யார் பிரிந்திருந்தாலும்…
2.அந்த ஆன்மா ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலத்தில் இருப்பதை நீங்கள் உணரலாம்.

growth in meditation

ஞான வளர்ச்சி படிப்படியாக வளர்ந்து வரும் நிலையை நாம் எப்படி அறிவது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

தியானத்தின் முறை கொண்டு நம் எண்ணம் ஞானத்தின் ஈர்ப்பு நிலைக்கு வழி பெறும் காலங்களில் வளர்ச்சி நிலை எப்படி இருக்கும்…?

குழந்தைப் பிராயத்தில் குழந்தையின் உடல் மற்றும் அங்க அவயங்கள் உறுப்புகள் எல்லாம் மிருதுத் தன்மையுடன் இருக்கின்றது. பிறகு வளர வளர உடல் உறுப்புகளும் தசை நார்களும் வலுப் பெற்று வளர்கின்றது.

அதைப் போன்று நம் ஆரம்பத் தியானத்தில் நம் எண்ண நிலை எல்லாம் வளர்ச்சி பெற்று.. ஒரு நிலை பெற்று… பக்குவம் எய்தி… அதன் ஈர்ப்பின் வழித் தொடருக்குப் பிறகு பல நிலைகளை நாம் காணலாம்.

நம் எண்ணத்தினாலேயே நாம் எடுக்கும் சுவாசத்தினால்…
1.பல மணங்களை உணரும் பக்குவமும்
2.பல சுவையின் ஈர்ப்பில் உண்ட களிப்பு நிலையும்
3.பல ஒளி அலைகளைக் கண்டுணர்ந்து மகிழும் நிலையும்
4.நம்மின் உருவின் உருவ நிலையைக் காணும் நிலையும்
5.இந்த உலகின் சுழற்சி ஓசையான “ஓ…ம்” என்ற ஒலி ஈர்ப்பின் அலைதனை ஈர்த்துக் கேட்கும் வழித் தொடரின் நிலையும்
6.இதன் வளர்ச்சியில் பல சித்தர்களின் நிலையுடன் தொடர் கொள்ளும் நிலையும்
7.இப்படி ஒன்றின் வளர்ச்சி கொண்டு ஒன்றின் மேம்பாட்டில் தியானத்தின் ஈர்ப்பு வளர்ச்சி நிலை பெற்ற பிறகு
8.சித்தன் நிலையை நாம் அடைய முடியும்.

புகைப்படம் எடுப்பவன் ஓர் பிம்பத்தைப் பலவாக மறு பிம்பங்களை எப்படி எடுத்துத் தருகின்றான்…? ஒரே பிம்பத்தை நிலைக் கண்ணாடியைப் பல கோணத்தில் வைத்துக் காணும் பொழுது நம் பிம்பத்தைப் பலவாகக் (எண்ணிக்கையில்) காணுகின்றோம்.

இதைப் போல் சித்து நிலை பெற்றவர்கள் இந்த உடல் என்னும் கூட்டை…
1.இந்த உடலில் உள்ள உயிரணுவை ஜீவ உயிரை இந்த உடலிலிருந்து பிரித்து
2.இந்த உடலுக்குகந்த பிம்ப உடலின் பிம்பத் தன்மையையும்
3.இந்தக் காற்றிலுள்ள அமில சக்தியை அந்த ஜீவனுடன் கூட்டிக் கொண்டு பல இடத்தில் ஒரே சமயத்தில் செயல் புரிகின்றனர்.

இருந்த நிலையிலிருந்தே ஜீவ உயிரணுவுடன் எந்த மண்டலத்திற்கும் எந்த இடங்களுக்கும் நினைத்த மாத்திரத்தில் சென்றறிந்து வருவதோடு மட்டுமல்லாமல் பல சக்தி அமிலங்களையும் எடுத்து வருகின்றனர்.

விட்டுச் சென்ற உடல் கூட்டின் அவயங்களெல்லாம் அந்த ஜீவ உயிர் இல்லாமலே உடலில் உள்ள பல கோடி உயிரணுக்களுக்கும் அந்த உயிரைப் போன்று அனைத்து அணுக்களும் தாமாகச் சுவாசமெடுத்து இயங்கக்கூடிய சக்தி பெற்று விடுகின்றன.

எல்லா உயிரணுக்களுமே அந்த உடலின் ஜீவனைப் போன்று தானாக இயங்கிக் கொண்டிருக்கும். ஆனால் அந்த உடல் பிம்பத்திற்குச் செயலாற்றவோ… எண்ணத்தின் ஈர்ப்பின் நிலையோ… அந்த ஜீவ உயிர் வரும் வரை இருக்காது.

“கூடு விட்டுக் கூடு பாயும் நிலை…!” என்று உணர்த்துகிறார்களே அன்றி உண்மைச் சித்தன் இந்த உயிர் ஜீவனுக்கு எத்தனை பிம்ப நிழலையும் அவனால் எடுக்க முடியும்.

அமில குணத்தைச் சேர்ந்த புகைப்படத்தை நம்புகின்றான் மனிதன். பாதரசத்தின் துணையுடன் நிலைக் கண்ணாடியில் தன் உருவத்தை நம்புகின்றான்.

அதே நிலை நம் கண்ணின் கருமணியிலும் உள்ளது… நீரிலும் உள்ளது. தெளிந்த நீரில் நம் பிம்பத்தைக் காண்கின்றோம்.

அதைப் போன்று தான் சித்தனுக்கு உடல் விட்டுப் பிரிந்த தன் உயிர் ஜீவனுடன் எந்நிழல் பிம்பத்தையும் இந்தக் காற்றுடன் கலந்துள்ள அமில குணத்திலிருந்து பிரித்தெடுத்து ஒரே இடத்திலிருந்து பல இடங்களுக்கும் செல்கின்றான்.

இந்த நிலையை உணர்த்தினால் மனிதன் உடலிலிருந்து உயிரை எப்படிப் பிரித்தெடுப்பது…? என்று வினா எழுப்புவான்.

ஒவ்வொரு மனிதனும் தான் எடுக்கும் சுவாச அலையின் ஈர்ப்பினால்
1.உடலின் அனைத்து அணுக்களும் தன் வசப்பட்டு
2.ஒவ்வொரு அணுவும் உயிர் ஜீவனின் சக்தி கொண்ட நிலை பெற்று
3.வாழ்க்கையில் எந்த ஒரு நிலையிலும் மற்ற ஈர்ப்பின் நிலைக்கு அடிமைப்படாமல்
4.எந்த எண்ணமும் தன் எண்ணமாக எண்ணும் முறை பெற்று
5.தியான வளர்ச்சியுடன் எடுக்கும் சுவாச அலையின் ஈர்ப்பில் ஒவ்வொரு நிலையும் வழித் தொடர் பெற்ற பிறகு
6.அந்தச் சித்தனின் நிலை பெறத் தக்க உயிர் ஜீவனின் எப்பிம்பமும் காணும் நிலையை எய்தலாம்.

இரவிலே நல்ல தூக்கம் இல்லாமல் போவதன் காரணம் என்ன…?

 

பகலில் வந்த தீமைகளை நாம் நீக்கத் தவறினால் இரவு தூக்கத்திலும் கெட்ட கனவுகள் வரும். காலையில் எழுந்தவுடனும் அதே நினைவுகள் தொடர்ந்து வந்து நம் வாழ்க்கையின் அன்றாட செயல்களைக் கெடுக்கும்.

 

சிலருக்கு இறந்தவர்களும் கனவில் வந்தார்கள்… பயமுறுத்தக்கூடிய சில உருவங்களும் வந்தது…! என்றும் சொல்வார்கள்.

 

அதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால் படுக்கப் போகும் முன் அவசியம் துருவ நட்சத்திரத்தையும் சப்தரிஷி மண்டலத்தையும் குறைந்த பட்சம் அரை மணி நேரமாவது எண்ண வேண்டும்.

 

அந்த எண்ணத்துடனே தூங்கினால் இரவு முழுவதும் வான மண்டலத்தில் மிதப்பது போல் ஆனந்தமாக இருக்கும். காலையில் எழும் பொழுதும் ஒரு மகிழ்ந்த உணர்வு வரும். அன்றாடக் காரியங்கள் சீராக இருக்கும்.

 

விமான விபத்திலிருந்து காத்த அனுபவம் நடந்த நிக்ழச்சி 

உடல் பறறினால் வரும் விளைவுகளை இமயமலையில் வைத்துக் காட்டினார் குரு 

எல்லாவற்றிலிருந்தும் தப்பும் சக்தி மனிதனுக்குண்டு 

நம் புருவ மத்தியிலிருக்கும் உயிரின் முக்கியமான வேலை – நடந்த நிகழ்ச்சி

meditation force

எந்தத் தீமையும் நமக்குள் ஒட்டாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்…?

இன்றைய மனிதனின் வாழ்க்கையில் ஆசை என்று வரும் பொழுது “ஒன்றைப் பெறவேண்டும்…!” என்று எத்தனையோ வழிகளில் நாம் எப்படி எப்படியோ செல்கின்றோம்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் தப்புவதற்காக குருநாதர் எனக்கு அனுபவரீதியில் தான் எல்லாமே கொடுத்தார்.

குருநாதர் காட்டிய வழியில் நான் (ஞானகுரு) காட்டுக்குள்ளும் மலைக்குள்ளும் சுற்றும் பொழுது எனக்கு ஒரு கஷ்டமும் தெரியவில்லை. அப்பொழுது ஒவ்வொரு நிமிடமும் குருநாதர் அந்தச் சக்தியைக் கொடுத்தார்.

ஆனால் இங்கே நாட்டுக்குள்ளும் நகருக்குள்ளும் வந்து நீங்கள் ஒவ்வொருவரும் இந்த அருள் சக்திகளைப் பெறவேண்டும் என்று நான் சொல்லும் பொழுது என்ன நடக்கின்றது…?

எல்லோரும் பெறவேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். அப்பொழுது ஏற்றுக் கொள்ளாத நிலைகளில் அவர்கள் அந்தப் பண்பினைப் பெற முடியாத நிலை ஆகும் பொழுது “வருத்தமாகின்றது…!”

தியானத்திற்கு வந்து எல்லாமும் பெற்றுக் கொண்டிருப்பார்கள்.
1.திடீரென்று அந்த உணர்வை மாற்றிக் கொண்ட பின்னாடி
2.அதைக் கேள்விப்பட்டவுடன் நமக்கு மனக் கஷ்டமாக இருக்கும்.
3.ஏனென்றால் அந்த உணர்வு நாம் எண்ணிய ஆசைகள்…
4.அங்கே அவர்களுக்குள் விளைந்த வேறு விதமான உணர்வு நம்மைத் தாக்கும் பொழுது நமக்கு இந்த நிலை மாறுகின்றது.

அதனால் தான் இதை எல்லாம்
1.சந்தர்ப்பத்திலே எப்படி வரும்…?
2.அதை நீ எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும்…? என்று
3.குருநாதர் ஒவ்வொரு நிமிடமும் எனக்கு உணர்த்திக் கொண்டே இருப்பார்.
4.அவர்கள் எல்லோரும் அந்த அருள் சக்தி பெறவேண்டும் என்று நீ எண்ணு.
5.அவர்களை அறியாது இயக்கும் அந்தத் தீமை உனக்குள் ஒட்டக் கூடாது என்பார்.

உதாரணமாக நாம் தோசை சுடுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அடுப்பிலே தணல் அதிகமாகி விட்டால் என்ன ஆகின்றது…? ஒரு பக்கம் தோசை கருகிவிடுகின்றது.

கருகியவுடன் நாம் தோசையை எடுக்க வேண்டும் என்றாலும் கைக்கு வராது.
1.மறுபடியும் எண்ணையையும் தண்ணீரையும் போட்டு சமமாக்கிய பின்
2.அடுத்து மாவை ஊற்றினால் சட்டியில் தோசை ஒட்டாமல் சீராக வரும்.
3.இதை நாம் ஒரு முயற்சியாக எடுத்துச் செய்கின்றோம் அல்லவா…!

இதே மாதிரித் தான் பல தீமையின் உணர்வுகள் வந்தாலும் அது நம்மிடம் ஒட்டாமல் இருப்பதற்காக நமக்கு ஒரு பாதுகாப்பு வேண்டுமல்லவா…!

ஆகவே ஒவ்வொரு நிமிடமும் கஷ்டமோ நஷ்டமோ துன்பமோ துயரமோ வேதனையோ இதைப் போன்ற நிலைகளை நாம் பார்க்கப்படும் பொழுதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து அந்த உணர்வினை வலுப் பெறச் செய்து கொள்ள வேண்டும்.

நம் பையனோ பிள்ளையோ சொன்னபடி கேட்கவில்லை என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அவர்கள் பெற வேண்டும். கல்வியில் ஞானமும் கருத்தறிந்து செயல்படும் அருள் ஆற்றலும் பெறவேண்டும் என்று எண்ணி எடுத்துக் கொள்ள வேண்டும்.

குடும்பத்தில் ஒருவருக்கு நோய் வந்தாலும் அந்த அருள் சக்தியை எடுத்து நமக்குள் பெருக்கி அவர்களுக்குள் அந்தச் சக்தியைப் பாய்ச்ச வேண்டும். இப்படிப் பெருகி வந்தால் அந்த நோயோ வேதனையோ நமக்குள் வளராது.

இதை எல்லாம் நாம் பழகிக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது…!

begging and praying

மனிதப் பிறவியின் உண்மையான வளர்ச்சி பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இந்த மனிதப் பிறப்பை எடுக்கவே நம் வாழ்க்கையில் காணும் முறைப்படி கர்ப்பத்தில் பத்து மாதம் இருந்து பிறப்பெடுத்து வாழ்ந்து மடிந்து மீண்டும் இதே நிலை என்ற உணர்வுகளும் இது நாள் தொட்டு மனித ஆத்மாவின் உயிர்ப் பிறப்பின் வளர்ச்சி நிலையின் தத்துவ நிலைகளும் உண்மையை உணர்த்தி மனிதனுக்கு நல் வழி காட்டவில்லை.

தாவர வர்க்கமாகி அத்தாவர குண ஈர்ப்பில் வளர்ந்த நிலையில் வளர்ந்த நிலை என்பது…
1.தாவரங்களிலேயே எண்ணிலடங்கா பல கோடி இன வளர்ச்சியுண்டு.
2.ஒன்றிலிருந்து மாறுபட்டு மாறுபட்டு மீண்டும் அந்தத் தாவர இனமே மற்றொன்றாகின்றது… வளர்ந்து கொண்டேயுள்ளது.

இந்தத் தாவரங்களில் பல அபூர்வ உன்னத அமிலக் குணத்தின் ஈர்ப்பில் அது வளர்ந்து வாழ்ந்து அது மடிந்த பிறகு மீண்டும் இம்மண்ணில் அத்தாவர இனத்துடன் இம்மண்ணின் ஈர்ப்புக் குணமும் சேர்ந்து மற்றொரு குணமும் பெறுகின்றது.

இது மடிந்த நிலையில் இதிலிருந்து வெளியாகும் ஆவி அமிலம் தன் இனத்துடன் இனமாகச் சேரும் பொழுது… ஒன்றின் மேல் ஒன்று பட்டு கன நிலை ஏற்பட்ட பிறகு… பூமியின் ஈர்ப்பில் அதற்கு மேல் கனத் தன்மை கொண்ட தன் இன உலோகமுடன் அது கலந்து விடுகின்றது.

இப்படியே பூமியின் காந்த ஈர்ப்பின் ஆவி நிலையான இவ்வெட்கையின் வளர்ச்சி தாவர நிலையிலிருந்து பிரிந்த அமில குணத்தில் சக்தி கொண்ட வலுவாக மனித வர்க்கங்கள் ஆரம்பக் கதியில் தோன்றியது.

அப்படித் தோன்றியிருந்தாலும்… இன்றைய மனிதன் ஒன்றிலிருந்து ஒன்றாக மனிதனிலிருந்து மனிதன் பிறக்கும் இன்றைய உலகில்…
1.தாவரங்களை எப்படி நாமாகப் பயிர் செய்து
2.அதன் மகசூலிலிருந்து மீண்டும் மீண்டும் அதன் மகசூலை எடுக்கின்றோமோ
3.அதன் நிலை போன்ற வழி நிலையில் மனிதக் கருக்கள் தோன்றி வந்தன. (மக்கள் தொகைப் பெருக்கம்)

இன்றைய நாளில் நாம் பயிர் செய்யும் நிலங்களில் பல காலங்களுக்கு ஒரே இனப் பயிரைப் பயிர் செய்யும் பொழுது அந்தப் பூமியின் ஈர்ப்பில் உள்ள சக்தி குறைந்து அந்த நிலத்தின் பலன் நிலை குறைவுபடுகிறது அல்லவா…!

அதைப் போன்று ஆரம்பக் கதியில் உயர்ந்த உயிரணுவாகப் பல சக்தி அமிலத்தைக் கூட்டிக் கூட்டி மனிதனாகிப் பிறப்பு மாறி மாறி… அவன் எடுக்கக்கூடிய எண்ணத்தின் ஈர்ப்பின் நிலையினால்
1.மனித அமில குணமுள்ள நாள் வரை மனிதக் கருவில் உதித்து வாழ்ந்து மனிதனாக உள்ள நிலையில்
2.மிருகக் குணத்தில் வாழும் மனிதன் நிச்சயம் அடுத்த பிறப்பில் மிருகமாகின்றான்.

மிருகமாகி… அதன் சுழற்சி வட்டத்தில் ஓடி மீண்டும் மிகவும் ஈன நிலையான புழு பூச்சியாகி… அந்த இனத்தின் சுவாச நிலையில் மீண்டும் பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் மனிதனாக வரக்கூடிய தன்மை ஒரு சாரருக்கும் மிருக நிலையிலிருந்து அதன் சுவாச குணத்தில் மனிதனாகும் சில அபூர்வ சக்திகளின் மனிதனாகும் வழித் தொடரும் சிலருக்கு உண்டு.

இதற்கெல்லாம் அப்பாற்பட்ட சக்தியான புதிய உயிரணுவே… அத்தாயின் கருவிற்குத் தோன்றக்கூடிய வாய்ப்பு நிலையும் பல உயிராத்மாக்களுக்கு வந்து வாய்க்கின்றன. இந்த நிலையைப் பெறுவது என்பது பல கோடியில் ஒன்றாகத் தான் இருக்குமே அன்றி எல்லா உயிரணுக்களும் அப்படி வளர்வதில்லை.

மனிதனாக உள்ள காலங்களில் ஒவ்வொரு சாராரும் ஒவ்வொரு ஊர்… நாடு… தேசம்… என்ற நிலையிலும் அங்குள்ள மனிதர்களின் எண்ண வளர்ச்சியிலும் உடல் உருவம் அனைத்திலுமே அங்குள்ள பூமியின் ஈர்ப்பின் சுவாசத்தினால் மாறு கொள்கின்றனர்.

1.ஒரு சாரார் பிறந்து வளர்ந்து தன் ஜீவித வாழ்நாள் எல்லாம் கிடைக்கப் பெற்று அதே சுழற்சியில் மடிகின்றனர்.
2.இன்னும் சில சாரார் தன் ஜீவிதத்துடன் அறிவாற்றலின் வளர்ச்சி மேம்பாட்டில் பலவற்றை அறிய எண்ணி வாழ்கின்றனர்.
3.இன்னும் சில சாரார் தன் சக்தியின் அறிவைக் கொண்டு புதிய ஆற்றல் படைப்புகளை ஆராய்ந்து செயலாக்கிக் காட்டுகின்றனர்.

இப்படி மனித ஆத்மாக்களின் எண்ணமே அதன் எடுக்கும் வளர்ச்சியில் மேன்மை கொண்டு அந்த மேன்மையின் சக்தியை ஈர்க்கும் பக்குவத்தில் செலுத்தினால் தான் அது வளர்ச்சியின் பாதையாகின்றது,

ஏனென்றால் மனிதனின் உடலிலுள்ள உயர் காந்த அலையின் சக்தியான ஜீவ உயிர் உள்ளதினால் நாம் எந்த சக்தியை ஈர்த்து எடுக்கின்றோமோ அதன் பலனை நம் உயிராத்மா ஈர்க்கக்கூடிய நிலை உண்டு. ஆக.. காந்த மின் அலை கொண்ட உடலப்பா மனிதனின் ஜீவ உடல்.

விஞ்ஞானத்திற்குச் செயலாக்கக் காந்த மின் அலையுடன் உலோகங்களின் சக்தி அமிலத்தைப் பூசி அதிலிருந்து சூரியனின் ஒளி அலைகளில் வரும் மின் அலைகளைத் தன் ஆராய்ச்சிக்குகந்த நிலைக்கும் தான் செயலாக்கும் விஞ்ஞானக் கருவிகளின் நுட்ப வேலைகளுக்கும் எடுத்துக் கொள்கின்றனர்.

இன்றைய விஞ்ஞான மனிதன்…
1.சூரியனின் ஒளி அலையில் உள்ள சக்தி அலைகளைப் பிரித்தெடுத்து
2.அதன் தொடர் அலையிலிருந்து தான் பல விஞ்ஞானச் சாதனைகளைப் புரிகின்றான்.
3.இதை யாரும் மறுக்க முடியாது…!

அதே மின் அலையுடன் காந்த சக்தியின் ஈர்ப்பின் ஜீவ உயிராத்மாவான உடலைக் கொண்ட நாம்… நம் எண்ண அலையை எதெனெதன் பால் செலுத்தி அதீத ஈர்ப்பின் எண்ணத்தை நம் உயிராத்மா ஈர்க்கும் வழித் தொடர் பெற்றால் விஞ்ஞான சாதனையில் கண்டு மகிழும் அனைத்துச் சக்தியும் நம் உயிராத்மாவினால் காண முடியும். அந்தச் சக்தி நம் உயிருக்கு உண்டு.

இதன் வழித் தொடரில் தான் சித்து நிலையும்… சப்தரிஷியின் நிலையும் எற்பட்டதேயன்றி இன்றையக் காலத்தில் பிரித்து இருக்கும் பக்தி முறையின் நெறிப்பாட்டில் இல்லை.

1.மனிதனையும் தெய்வத்தையும் வேறுபடுத்திக் காட்டி
2.மனிதனின் எண்ணத்தையே குன்றச் செய்துவிட்டனர்…
3.தெய்வத்தின் பக்தி பூண்ட “அருள் நெறித் தொண்டர்கள் என்பவர்கள்…!”

சத்ரிய தர்மம்

நாம் நுகரும் உணர்வுகளே நம்மை ஆள்கிறது. ஒரு கக்கரவர்த்தி தன் ஆசைக்குகந்ததைத் தான் செயல்படுத்த விரும்புவான். ஒரு நாட்டின் மீது படையெடுக்க வேண்டாம்.. தனக்குக் கீழ் இருப்பவன் சொன்னால் அதை ஏற்க மாட்டான்.

 

எவன் அதைச் சொன்னானோ அவனை அகற்ற வேண்டும் என்று தான் ஆணையிடுவான். ஆக மொத்தம் சத்ரிய தர்மம் என்றால் மற்றதை அடக்கி ஆட்சி புரியும் நிலையே வருகிறது.

 

நம் உயிரும் பத்தாவது நிலையை அடையக்கூடிய தகுதி பெற்றது தான். தசரதச் சக்கரவர்த்தி என்று இராமாயணத்தில் காட்டியுள்ளார்கள்.

 

இருந்தாலும் நமக்குள் நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் அதனதன் நிலைக்கே நம்மை ஆளத் தொடங்கினால் தீமைகளே விளைந்து விடும். அதை நாம் மாற்றிடல் வேண்டும் அல்லவா…!

 

ஆஸ்த்மா நோய் எப்படி வருகிறது…?

உடல் உறுப்புகள் எப்படிப் பாழாகின்றது…?

பரம்பைரை நோயை மாற்றி ஒளியான பரம்பரையாக எப்படி உருவாக்குவது…?

டி.பி. கேன்சர் நோயை நீக்கும் வழி 

Self Trust

மறைக்கப்பட்ட… மறைந்த உண்மைகளை… வெளிப்படுத்தினாலும் இன்று ஏற்றுக் கொள்வாரில்லை…!

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியில் தோன்றிய அகஸ்தியன் தான் இன்றும் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.

நம் பிரபஞ்சம் மற்ற நிலைகளை எடுத்தாலும் உயிரணுவாகத் தோன்றிய பின் இந்த 27 நட்சத்திரத்தின் உணர்வுகளை உணவாக உட்கொண்டு அந்த உணர்வின் ஒளியாக மாற்றும் தன்மை வருகின்றது. மற்றதைக் கருக்கி விடுகின்றது.

நட்சத்திரங்கள் தன் உணர்வின் அலைகள் வரப்படும் போழுது மின் கதிர்களாக வரும் பொழுது எப்படி மாற்றுகின்றதோ இதைப் போல் தான் இந்த உயிரணுவின் தோற்றங்கள் இப்படி உருவாகித் துருவ நட்சத்திரமாக இருக்கின்றது.
1.உயிரணுவாகத் தோன்றி மனிதனாக ஆன பின்
2.கணவனும் மனைவியும் இரு உயிரும் ஒன்றாக ஆன பின் அந்தத் துருவ நட்சத்திரமாக மாறுகின்றது,

அதன் உணர்வை நுகர்ந்தவர்கள் அனைவரும் இந்த உடலை விட்டுச் சென்ற பின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்கின்றார்கள். ஆறாவது அறிவு கொண்டவன் ஏழாவது ஒளி என்ற நிலையை அடைந்தால் சப்தரிஷியாகின்றது,

சிருஷ்டித்துக் கொண்ட உணர்வு அந்தச் சப்தரிஷி மண்டலங்களாகத் துருவ நட்சத்திரத்துடன் இயங்குகிறது. இது எல்லாம் மகாபாரதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
1.காலத்தால் இதை எல்லாம் மறைத்து விட்டனர்.
2.இந்த உண்மைகளை எல்லாம் மறந்தே போய்விட்டோம்.

அரசர்கள் தனக்குத் தெரிந்த இரகசியம் மற்றவருக்குத் தெரியக் கூடாது…! என்ற நிலையில் வேதங்களில் மாற்றப்பட்டு விட்டது.

இந்த உண்மையின் இயக்கங்களை மறைக்கப்பட்டு மறைந்த உணர்வுகளை நாம் எடுத்து உண்மைகளை நாம் தேடிக் கொண்டேயிருக்கின்றோம்… இன்னும் கிடைத்தபாடில்லை.

ஆனால் இப்பொழுது நீங்கள் தேடிக் கொள்ள வேண்டாம்..!

1.உங்கள் உடலுக்குள்ளேயே எல்லாச் சக்திகளும் உண்டு…!
2.இதை நீங்கள் எப்படி மாற்ற வேண்டும்…? என்று யாம் சொன்னாலும்
3.இப்பொழுது இதை ஏற்றுக் கொள்வாரில்லை.
4.ஏற்றுக் கொள்வதே மிகவும் கடினமாக இருக்கின்றது.

அந்த அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமான அதிலிருந்து வரக்கூடிய அந்தப் பேரருளை அந்த இயக்கச் சக்தியை இந்தத் துருவ தியானத்தில் உங்களுக்குள் உருவாக்கச் செய்து அதன் வழியில் இயங்கிப் பேரொளியாக மாற்றும் பருவத்தை ஏற்படுத்துகின்றோம்.

உயிர் எப்படி ஒளியானதோ உங்கள் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் ஒளிமயமாக மாறி அதற்கப்புறம் எத்தகைய தீமையும் தனக்குள் வராதபடி வேகா நிலை என்ற நிலையை அடைய முடியும்.

பேரருள் பேரொளியாக இயங்கிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் என்றுமே நாம் இணைந்து வாழக் கற்றுக் கொள்வது தான் இந்தத் துருவ தியானப் பயிற்சியின் நிலைகள்.

ஆகவே இதை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்…!

இந்த உணர்வினை மீண்டும் மீண்டும் நினைவு கொண்டு இந்த வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி நாம் இனிப் பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும் என்று இதை அடிப்படை ஆதாரமாக வைத்து உங்கள் வாழ்க்கையை வழி நடத்துங்கள்.

இந்த மனித வாழ்க்கையில் சலிப்போ சஞ்சலமோ வெறுப்போ பகைமை உணர்வோ இதைப் போன்ற நிலைகளை எல்லாம் மாற்றியமைத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பெறவேண்டும் என்று அதைப் பற்றுடன் பற்றுங்கள்.

1.இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளைக் கேட்டறிந்தாலும்
2.அந்த அருள் உணர்வுகள் அதனுடன் கலக்கப்படும் பொழுது அதன் வலிமையை இழக்கச் செய்து
3.நம் உடலில் நுகர்ந்த உணர்வுகளை ஒளியான அணுத் தன்மையாக மாற்றும் தன்மை பெற வேண்டும் என்பதற்குத் தான்
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுவதற்கு இந்தத் துருவ தியானத்தையே ஏற்படுத்துகின்றோம்.

ஏதோ துருவ தியானம் என்றால் நீங்கள் இலேசாக நினைக்கின்றீர்கள். ஏனென்றால் இந்த உடல் நீடித்த நாள் இல்லை… இருக்கப் போவதில்லை…! என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

அதற்குள் அருள் ஒளியை வளர்த்துக் கொள்ளுங்கள்… மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழும் தகுதியைப் பெறுங்கள். எமது அருளாசிகள்.

human family tree

“இக்காலத்தில் பிறந்த நிலை… எக்காலத்தில் பெற்ற நிலையோ…!” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

முந்தைய பாடங்களில் “அவரவர்கள் எடுக்கும் எண்ண நிலைக்கொப்ப…” உடலில் அமிலங்கள் வளர்கின்றன என்று உணர்த்தியுள்ளேன்.

இவ்வெண்ண நிலையில்
1.அதிகப்படியான குண நிலை கொண்டு அதே குண எண்ணத்தைக் கொண்ட உடலை விட்டுப் பிரிந்த ஜீவ ஆத்மாக்களும்
2.இன்னும் தன் மகன்… தன் மகள்… என்ற குடும்பப் பாசத்தில் இருந்து பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிராத்மாக்களும்…
3.முந்தைய காலங்களில் பல ஜென்மங்களாக விட்ட குறையிலிருக்கும் உயிராத்மாக்களும்
4.ஒரு தாயின் கருவில் தான் பிறக்க வேண்டும் என்ற பிறப்புத் தொடரில்
5.ஆண் பெண் (உடலுடன் இருப்பவர்கள்) இரு பாலரின் பருவ மாற்ற உடல் வளர்ச்சி ஏற்படும் காலம் தொட்டே
6.அவர்களின் சுவாச அலையுடன் “இவ்வாவிகளின் ஈர்ப்பு” அவ்வுடலுடன் ஏறிக் கொள்கிறது.

“பருவம் எய்திய பெண்களை” நம் முன்னோர்கள் அதிகமாக வெளியில் செல்லாமல் வைத்திருந்ததற்கு இதுவும் ஒரு காரணம்…!

ஏனென்றால்… “தன் மண வாழ்க்கையில் தோல்வி கண்ட ஆவிகள்” தன் எண்ணத்தை ஈடேற்ற அதே வயதுக்குகந்த அப்பருவ நிலை கொண்டோரின் உடலில் ஏறிக் கொள்வதற்குச் “சந்தர்ப்பம்” எதிர் நோக்கிப் பல நிலைகளைச் செய்கிறது.

இதன் சக்தியின் நிலை சூரியன் ஒளி அலை அதிகமாகப் பாயும் நேரத்தைக் கொண்டு உச்சி வெயிலில்… இதன் செயல் நடக்கும்.

அதுவும் அல்லாமல் இந்த ஆவிகள் மற்ற இடங்களில் சுற்றிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் நீர் நிலைகள் உள்ள இடங்களில் தான் அதனின் சுழற்சி அதிகப்பட்டிருக்கும்.

“ஜீவனுக்கு வரவேண்டும்…!” என்ற ஆசையிருப்பதனால் தன் உயிரணுவுடன் கூடிய ஆத்ம நிலை சிதறிவிடாமல் இருக்க… நீரிலிருந்து சூரிய ஒளி பட்டு அதிகமாக அவ்வொளி அலை உள்ள இடங்களில் இருந்தால் இந்த ஆவிகளுக்கு அதனுடைய ஆத்ம அமிலம் சிதறுபடாமல் காத்திருக்க முடியும்.
1.முன்னோர்களை நாம் வணங்க…
2.ஜீவ நதி உள்ள இடத்திற்கு ஏன் செல்கிறோம்…? என்பதன் பொருள் புரிந்ததா…?

இப்படிப் பலவாக உள்ள ஆத்ம உயிரும் (ஆவிகள்) ஜீவ உடல் கொண்ட ஆத்ம உயிருமான மனிதர்களின் நிலையும் கலந்து வாழ்வதனால் “தன் பிறப்பின் ஆசைக்காக…” பிறப்பெடுக்கப் பல உடல்களில் முன் கூட்டியே இந்த ஆவி ஆத்மாக்கள் ஏறிக் கொள்கின்றன.

ஏறிக் கொள்வதோடு மட்டும் அல்லாமல் அந்த உடலிலிருந்து தன் சாதகக நிலைக்காக அந்த மனிதனின் எண்ணத்தையே இந்த ஆவி ஆத்மாக்கள் இயக்கிச் செயல் புரிகின்றன.

இப்படி உள்ள ஆவி ஆத்மாக்கள் தான் பிறப்பில் வரும் நிலையில் சிலருக்கு ஒன்றுக்கு இரண்டாகவும் பலவாகவும் கருவுக்கு வருகின்றது.

மனிதனைக் காட்டிலும் மிருகத்தின் சுவாசத்திற்கு மிருக உடலில் பல உயிராத்மாக்கள் ஏறிவிடுவதனால் ஒரே சூலில் பல குட்டிகளை ஈணுகிறது.

அதே சமயத்தில் மிருகங்களிலேயே ஒரு நிலை கொண்ட சாந்த குணமுள்ள சில பிராணிகளுக்கு ஒரு சூலில் ஒரு கன்று ஈணும் நிலை வழி உள்ளது.

இந்தப் பிறப்பில் நடைபெறும் இச்செயல்களும்… “எண்ணத்திலிருந்து தான் வழித் தொடர் பெற்று…!” அதனதன் இன நிலையின் அமில குணம் தொட்டுப் பிறப்பிற்கு வருகின்றது.

ஆனால் இதன் தன்மையில் உடலில் ஏறிய அத்தனை உயிராத்மாக்களுமே கடைசியில் பிறப்பிற்கு வர முடியாமல்
1.அந்த உடலிலிருந்து ஆவி பிரிந்த பிறகு அதற்கும் விடுதலை கிடைத்து
2.மீண்டும் தன் பிறப்புக்குகந்த இடம் எடுத்து வருவதற்குள்
3.”பல ஆண்டுகள் ஆகிவிடுகின்றன…” இந்த உடலை விட்ட ஆவி ஆத்மாக்களுக்கு…!

இந்த ஆவி ஆத்மாக்களின் வழித் தொடரில் தான் பிறப்பு வருகிறதா என்ற வினா எழும்பலாம். ஒவ்வொன்றின் நிலை மனிதனிலேயே பலவாக வருகின்றது.

ஆகவே… இப்பொழுது உடலுடன் இருக்கும் நாம்
1.இந்த உடலையே கடைசி உடலாக எண்ணி
2.இதிலிருந்தே மெய் ஒளி காணும் மெய் ஒளி பெறும் நிலைக்கு நம் எண்ணத்தை உயர்த்தி
3.சித்தர்களுடனும் ஞானிகளுடன் இணைந்து வாழும் உன்னத நிலையைப் பெறுதல் வேண்டும்.

நல்லவரா கெட்டவரா என்று அடுத்தவரை உற்றுப் பார்க்கலாமா…?

 

தினசரி வாழ்க்கையில் நாம் எத்தனையோ பேருடன் பழக நேர்கிறது. நல்லவரா கெட்டவரா என்று பார்க்கும் சந்தர்ப்பமும் உருவாகிறது. இருந்தாலும் அந்த உணர்வை அதிகமாக வளர்க்கத் தொடங்கினால் அவர்களுக்குள் எந்தத் தீமை இயக்குகிறதோ அது நமக்குள்ளும் இயக்கத் தொடங்கும்.

 

ஜோதிடம் பார்ப்பவர்களும் இதை வைத்துத் தான் அடுத்தவர் உணர்வைக் கவர்ந்து நடந்தவைகளை எல்லாம் சொல்வார்கள் ஆனால் நமக்கு அது தேவையில்லை.

 

தீமையை நீக்கும் சக்தி தான் நமக்குத் தேவை. மற்றவர்களிடம் இருக்கும் குற்றங்களை அறிவதற்குப் பதில் அவர்கள் அதிலிருந்து விடுபடும் சக்தியை நாம் எடுத்துக் கொண்டால் நமக்குள் அந்தத் தீமைகள் வரவே வராது.

 

தீமைகளையோ குற்றங்களையோ குறைகளையோ அறிந்து விலகிச் செல்லலாம். அதை வளர்க்கவே கூடாது. நல்லதாக வேண்டும் என்று உடனே அதைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஓ…ம் நமச்சிவாய…! என்று நம் உடலாக மாற்றவேண்டும்

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர்வதால் கிடைக்கும் பேறுகள்

அகஸ்தியன் கண்டுணர்ந்த நட்சத்திரத்தின் ஆற்றல்கள்

அகஸ்தியன் நுகர்ந்த பச்சிலை வாசனைகளும் மலர்களின் மணங்களும் கனிகளின் வாசனைகளையும் நுகரும் பயிற்சி

Kundalini yoga

ஆக்கினை என்றால் என்ன…?

மூலாதாரம் என்றால் நமக்குள் வரும் (நாம் சுவாசிக்கும்) இந்த உணர்வின் தன்மை எலும்பும்… இரத்தங்களும்… நரம்பு மண்டலமும்.. இந்த மூன்றும் சேர்த்து அங்கே அணுத் தன்மை ஜீவன் பெறச் செய்யக்கூடிய நிலைகளாகக் கவர்ந்து “விந்துடன் கலக்கும்…” ஜீவ அணுக்களாக மாற்றுகின்றது.
1.இது தான் மூலம் என்பது… மூலாதாரம் என்பது…!
2.அங்கே உயிரணுக்கள் தோற்றுவிக்கும் நிலைகள் வருகிறது என்றால்
3.இது வைத்தியரீதியில் அகஸ்தியன் கண்டது.

ஆக்கினை என்றால் நாம் எதை நுகர்கின்றோமோ இந்த உயிரின் தன்மை அங்கே ஆன பின் இந்த உணர்வுகள் நமக்குள் இயக்குகின்றது. இதையாவது குறைந்தபட்சம் தெரிந்து கொண்டால் பரவாயில்லை.

ஆக்கினை என்றால் நம் உணர்வின் தன்மை இதிலிருந்து (உயிரிலிருந்து) தான் ஆணையிடுகின்றது. இங்கே மூலாதாரத்தில் மாற்றுகின்றது என்று இந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் கொண்டு வரும் பொழுது அவர்கள் வித்தியாசமான நிலைகளில் கீழிருந்து என்று மாற்றிக் கொண்டு போகிறார்கள்.

1.மூலாதாரம் என்றால் நம் உயிர் மூலம்.
2.நாம் நுகரும் உணர்வுகளே ஆதாரம்.
3.ஆக எந்த உணர்வின் தன்மையோ அந்த ஆதாரத்தின் வழி கொண்டு தான்
4.இந்த உணர்வுகள் இயக்குகிறது என்று சாஸ்திரங்களும் வேதங்களும் கூறும் நிலைகள்.

இதிலே கண்ணன் மூலாதாரத்தைப் பற்றிக் கூறுகின்றான் என்று சொல்வார்கள். அவன் கூறிய மூலாதாரம் வேறு..! நுகர்ந்த உணர்வின் தன்மை எதனை.. எப்படி இயக்குகிறது…? என்பதை
1.எண்ணம் கொண்டு இந்தக் கண்கள் உண்டானது
2.கண்கள் கொண்டு எண்ணங்கள் உண்டானது
3.இப்படி ஒன்றுடன் ஒன்று எப்படி இணைந்தது என்று கீதையிலே இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த உணர்வுகளை இவர்கள் வேறு விதமாக அவரவர்களுக்குத் தக்கவாறு மாறி “குண்டலினி யோகா… இராஜயோகா…” என்று பேர்களை மாற்றிக் கொண்டு ஆசனத்தை எடுத்துக் கொண்டாலும் இப்படிப் பல நிலைகளைக் கொண்டு வருகின்றனர்.

இதிலே வேதங்களில் மந்திரங்கள் கூறப்பட்டிருக்கும். மறைமுகமான மந்திரங்களை இவர்கள் சொல்லி விட்டால் இன்னொரு உடலில் பெற்ற உணர்வுகள் இவருக்குள் பதிந்து இந்த மந்திரத்தின் உணர்வும் அதே நிலைக்குப் பதிவு செய்தால் அதே உணர்வு கொண்டு அங்கே இயக்கும்.

ஏனென்றால்…
1.மந்திரங்கள் என்பது மனிதன் உணர்வை மீண்டும் தனக்குள் கவர்வது என்று பொருள்.
2.ஒரு மனிதன் உணர்வைப் பாய்ச்சப்பட்டு அதை அடக்கித் தனக்குள் கவர்ந்து கொள்வது என்பது அதர்வண வேதம்.

கோவில்களிலும் மற்றவைகளிலும் யாகங்கள் செய்வார்கள். அங்கே பல புகை மண்டலங்களை எழுப்பி அவன் சொல்லும் சொல்களை நாம் கூர்ந்து கவனிப்போம். ஆனால் கல்லுக்குச் சக்தி ஏற்றுவதாக நாம் நினைக்கின்றோம்.

ஆனால் நாம் கேட்டுணர்ந்து… நம் செவிகளில் பட்டு… அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்து… நமக்குள் ஒரு அணுத் தன்மையாக ஆகும் நிலையைக் கொண்டு வருகின்றனர்.

ஆகவே அவன் சொல்லும் உணர்வை நாம் அதிகமாகப் பெருக்கப்படும் பொழுது இந்த அணுக்களின் தன்மை வந்துவிடுகின்றது.
1.இப்படித்தான் அதர்வண வேதத்தில் ஒரு மனிதனின் உணர்வை மயக்கி அதாவது வசியம் செய்வார்கள்.
2.அடுத்து அந்த மனிதன் இறந்த பின் அதே மந்திரத்தைச் சொன்னால் கைவல்யம்.
3.பின் இந்த உணர்வின் தன்மை சொல்லாக வெளியிடப்படும் பொழுது ஏவல்..!

இப்படித்தான் மூலாதாரத்தில் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் தொட்டவுடனே இதை ஏவல் பண்ணிவிடுவார்கள். நாம் கூர்ந்து கவனித்து அதன் மேல் நாட்டத்தைச் செலுத்தும் பொழுது செய்து விடுகின்றனர்.

ஆனால் யாம் இப்பொழுது இங்கே சொல்லப்படுவது உங்கள் நினைவு அனைத்துமே இயற்கையாக விளையும் தன்மைகளில் அங்கே சென்றடைகின்றது.
1.அந்த ஞானிகளின் அருள் உணர்வின் தன்மை அங்கே (உயிரிலே) ஆக்கினையாக மாறி
2.உடலுக்குள்அது கருத்தன்மை அடைகின்றது.

அந்த ஒளியின் உணர்வாக உயிர் எப்படி ஆனதோ அந்த உணர்வின் தன்மை பெறுவதற்காக வேண்டி இதைச் செய்கிறோம். ஏனென்றால் உங்களை அந்தத் துருவ நட்சத்திரத்திற்கே அழைத்துச் செல்கிறேன்.

அதிலிருந்து வரும் உணர்வுகள் ஒன்றி வரும் இந்த நேரத்தில் அதன் உணர்வுகள் அந்த அகஸ்தியன் எப்படித் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமானானோ அதன் உணர்வை உங்களைப் பெறச் செய்வதற்கே உங்கள் நினைவாற்றலை இங்கே பரவப்படும் பொழுது அந்த உணர்ச்சிகளைத் தூண்டியவுடன்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்கள் ஆன்மாவாக மாறுகின்றது.
2.பின் அந்த நுகர்ந்த உணர்வுகள் அணுத் தன்மை அடைகின்றது.

இந்த அணுத் தன்மை உங்கள் உடல்களில் பெருகி விட்டால் உங்கள் ஆன்மாவில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் பெருகுகின்றது. அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் பெருகிவிட்டால் பகைமை என்ற நிலைகளைத் தடுத்து நிறுத்தும்.

இந்த உடலுக்குப் பின் ஏகாந்த நிலை கொண்டு… அண்டத்திலே என்றுமே ஒளியின் சுடராக.. “அழியாத நிலைகளில் வாழத் தொடங்கும்…!

Spiritual Realities

முற்றும் துறந்தவன் முனிவன் என்றால் என்ன என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

முற்றும் துறந்தவன் முனிவன்…! பற்றற்ற வாழ்க்கை வாழ்ந்தால்தான் தெய்வத்தின் ஒளி… மோட்சம் அவனுக்குக் கிட்டும்…! என்ற சொல் நடை முறையில் உள்ளது.

1.முற்றும் துறந்தவன் தான் முனிவன்…! என்றால் அது எதன் அடிப்படை கொண்டு பகர்ந்த பொருள்..?
2.முந்தைய நாட்களில் நம் முன்னோர்களால் வெளியிடப்பட்ட கருத்துக்களின் உண்மைக் கோவையை உணர்ந்தோமா நாம்…?

முற்றும் துறந்த நிலை என்பது வாழ்க்கையில் பற்று… பாசம்… கடமை… இவற்றிலிருந்து விலகித் “தன் நலம் காணத் துறவறம் பூண்டு மெய் அருள் பெறும் நிலை…!” அல்ல.

ஒவ்வொரு ஆத்மாவுக்குள்ளும் நிறைந்துள்ள பல கோடி அணுக்களின் எண்ணத்தின் வளர்ச்சியில் வாழ்ந்திடும் மனிதன்
1.தன் எண்ணத்திற்குள் உந்தப்படும் உணர்ச்சியிலிருந்து
2.அந்த உந்தலுக்கு அடிபடிணியாமல்… “அந்த உந்தலைத் துறக்க வேண்டும்…!”

பயம்… என்ற உணர்வினால் உருளப்படும் கோளம் இந்த மனிதக் கோளம்.

மனிதனின் எண்ணமே முற் பிறவியில் பிறப்பாசை கொண்டு இந்தப் பிறப்பில் கருவிற்கு வருவதனால் பயம் என்ற அச்ச உணர்வு குழந்தைப் பிராயம் முதல் கொண்டே மனித ஆத்மாவுக்கு வருகின்றது.

மனிதனைக் காட்டிலும் அதிகமான இந்தப் பயம் என்ற அச்ச உணர்வு மிருகங்களுக்கும் பட்சிகளுக்கும் அதிகமாக உண்டு. தற்காத்துக் கொள்ளும் சுவாச அலையின் சக்தியும் அதிகமாக உண்டு.

“மனிதனிலிருந்து வந்த மிருகத்திற்கு” அந்த உணர்வின் அலை அதிகமாக… ஒவ்வொரு பிறவியும் எடுத்து மிருகப் பிறவிக்கு வந்த பிறகு அதன் சுவாச அலையின் ஜீவன் கொண்ட உடல் அமைப்பு வளரத் தக்க நிலையிலேயே…
1.இந்தத் தற்காத்துக் கொள்ளும் அமிலத்தின் சக்தி குணம் வீரியப்பட்டு
2.இயற்கையாக அதனுடைய உருவத்திலேயே சில உணர்வுடன் மிருக ஜெந்துக்களும் பறவைகளும் பிறப்பெடுத்து வருகின்றன.

மனிதனின் நிலையுடன் அதிகப்படியான எண்ண அலையின் மோதலினால்
1.தன் எண்ணத்திற்குகந்த… தன் உடலில் ஏற்றிக் கொண்டுள்ள…
2.பல உயிராத்மாக்களின் (ஆவிகளின்) நிலையும் கலந்துள்ளன.

அதுவும் அல்லாமல் ஒவ்வொரு தாய் தந்தையரின் ஆண் பெண் உடலுடன் பிறப்பிற்கு வரக்கூடிய பல உயிரணுக்கள் கர்ப்பம் தரிக்கும் நாட்களுக்கு முதலிலேயே ஏறிவிடுகின்றன.

இப்படிப் பல உயிரணுக்கள் நம் (மனிதனின்) ஆத்மாவுக்குள் உடலில் கலந்துள்ள நிலையில் இந்தப் பயம் என்ற உணர்வின் நிலை அதிகப்பட்டு விடுகிறது.

மனிதனின் உணர்வின் எண்ணத்தைக் காட்டிலும்… மனிதனின் உடலில் உள்ள அணுக்களும் உயிராத்ம அணுக்களும்…
1.தன் செயலுக்கந்த நிலை அந்த உடலில் ஏற்படாத குணம் கண்டவுடன்
2.தன் விடுதலையை எண்ணி அதனுடைய எண்ண வேகங்கள் வரும் பொழுது
3.அதனுடைய உந்தலுக்கு மனிதன் ஆட்பட்டு விடுகின்றான்.

மனிதனுக்குப் பயம் என்ற உணர்வு அற்ற நிலை ஏற்பட்ட பிறகுதான் முனிவன் என்ற நிலையை எய்துகின்றான். மனித ஆத்மாவில் “பயம்” என்ற அச்ச உணர்வுக்கு இடம் தராத சுவாச அலையுடன் ஒவ்வொரு மனிதனும் வாழ வேண்டும்.

1.எந்நிலை கொண்ட இக்கட்டான சூழ்நிலை ஏற்படும் தன்மையிலும்…
2.இந்த மரண பயம் ஏற்படாவிட்டால் அந்த இடத்தில் தெளிவின் வழி கிடைக்கும்.

ஒர் அறையில் ஜீவன் பிரிந்த உடலுடன் நாம் தனித்திருந்தாலும் பயம் என்ற உணர்வை அண்டவிடாமல்… “அதை ஒரு ஜீவனற்ற வஸ்து… பொருள்…!” போன்று நம் எண்ண நிலை இருந்திடல் வேண்டும்.

ஒவ்வொரு மனித ஆத்மாவின் உடலும் உயிரணுக்களும் உயிர் ஆத்ம அணுக்களும் பல உள்ள பொழுது மனிதனுக்கு
1.இந்த மரண பயம் என்ற பயம் ஏற்படாவிட்டால்
2.மனிதனுக்குள் உள்ள இந்த ஆத்மாவே
3.ஓர் மனிதனின் செயலைப் பல கோடி மனிதர்கள் செய்யத்தக்க உணர்வு சக்திகளை
4.மனிதனின் உடலில் உள்ள உயிரணுக்களே உதவி செய்யும்.

தன் நிலை பெற வேண்டும் என்பதின் உட்பொருளின் உண்மை நிலை…
1.தன் நிலை பெறும் மனிதனின் எண்ணத்திற்கு
2.தன் நிலைக்கொப்ப அனைத்து உயிரணுக்களும் ஒன்று போல் சக்தியை
3.அந்த (அவனின்) வலுவின் வலுவுடன் கூட்டச் செய்யும்.

பல நினைவுடைய மனித ஆத்மாவின் உடலில் உள்ள உயிரணுக்களும் அதனதன் நினைவின் வளர்ச்சியின் செயலுக்குத் தான் “பல நினைவுடன்…” உள்ள மனிதனுக்கு உதவி புரியும்.

மிருகங்களைக் காட்டிலும் மனிதனின் எண்ணம் வளர்ச்சி பெற முடியும் என்ற அடிப்படையில் தான்
1.சம நிலை கொள்ளும் மனிதனுக்கும் சாந்த குணம் கொண்ட
2.பசுவைப் போன்ற சில பிராணிகளுக்கும் அதனின் சூலில் ஒவ்வொரு சிசு பிறக்கின்றது.

ஆனால் பல பல எண்ணங்கள் கொண்ட உணர்வின் இயக்கத்தால் மனிதனுக்கு ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளும் அதற்கு மேற்பட்ட மூன்று நான்கு ஐந்து என்ற எண்ணிக்கையில் குழந்தைகளும் உருவாகக் காரணமாகின்றது.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

முன்னோர்களை விண் செலுத்தும் தியானப் பயிற்சியும் விளக்கமும்

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் சப்தரிஷி மண்டலத்தின் அருள் சக்தியையும் அதிகாலை துருவ தியானத்தில் வலுவாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 

பின் நம் முன்னோர்கள் மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும்.

 

அவர்கள் பிற மனித உடலில் இருந்தாலும் அங்கிருந்து வெளியே வந்தவுடன் முன்னோர்கள் விபத்தில் இறந்திருந்தாலும் தற்கொலை செய்திருந்தாலும் கூட அவர்களை விண் செலுத்த முடியும். குடும்பத்தில் வரும் பரம்பரை நோயை அறவே அகற்ற முடியும். “முழுமையான விளக்கம்…”

பொருளறிந்து செயல்படும் சிந்தித்துச் செயல்படும் அருள் வழி

தீமைகளை வென்றிடும் சூட்சமங்களை அறிந்து கொண்டால் உணர்வுகளை ஒளியாக்கிட முடியும்

மனிதன் இராமலிங்கமாக மாறும் வழி

Divine blessings

ஞானத்தின் சக்திகளை யாம் உங்களுக்குள் எப்படித் தொட்டுக் காட்டுகிறோம்…? என்பதை அறிந்து கொள்ளுங்கள்

ஒரு பயந்தவரின் உணர்வை நமக்குள் பதிவாக்கி விட்டால் என்ன ஆகும்…? அதாவது இந்த இடத்தில் தான் கோரமான விபத்து ஆனது… அதை நான் நேரடியாகப் பார்த்தேன்… பயந்து விட்டேன்…! என்று அவர் சொன்னால் போதும்.

நீங்கள் அந்த இடத்திற்குப் போனால் தன்னாலே அந்தப் பய உணர்வுகள் தூண்டும். அந்த உணர்வு வந்தவுடனே உங்களை அறியமலே கிடு..கிடு…கிடு…! என்று நடுங்கச் செய்யும்.

இந்த உணர்வுகள் இயங்குவதைப் போல் தான் உங்கள் உடலுக்குள் உங்களுக்குத் தெரியாமலே அருள் உணர்வுகளைப் பாய்ச்சுகின்றேன். ஏனென்றால்
1.குருநாதர் எனக்குத் தெரியாமல் தான்
2.எனக்குள் (ஞானகுரு) அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அறிமுகப்படுத்தினார்
3.அதைப் போல் தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அரும் பெரும் சகதிகளை “நீங்களும் பெறவேண்டும்…” என்ற ஆசையில்
4.தொடர்ந்து இதைக் கொடுத்துக் கொண்டே வருகின்றேன்.

ஆக… இனம் இனத்தைத் தான் பெருக்கும். அருள் ஒளி பெற்றவர்கள் அதன் வழிகளிலே எல்லோரும் பெறவேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.

ஆகையினால் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) எமக்கு ஊட்டிய அருள் உணர்வுகளை எல்லாம் உங்கள் உடலில் உள்ள அணுக்களில் ஒன்றாக இணைய வேண்டும் என்று
1.அவர் காட்டிய அருள் வழியில் உங்கள் உயிரை ஈசனாக மதித்து
2.உங்களுக்குள்… உங்கள் உணர்வுக்குள் தொட்டுக் காட்டுகின்றோம்.

இந்தக் குண்டலினி யோகக்காரர்கள் சொல்வார்கள்…. தன் ஆசையின் நிலை கொண்டு என்ன செய்கிறார்கள்…? இங்கே “தட்டி” அதை எண்ணியவுடன் அவர்கள் உணர்வுகள் எல்லாம் இங்கே வந்துவிடும்.

அந்த ஆசையின் உணர்வுகள் வரப்படும் பொழுது அவர்கள் சில மந்திரங்களைக் கற்றுக் கொள்வார்கள். அந்த மந்திரத்தின் உணர்வுகள் வந்த பின்
1.இங்கே பார் வந்துவிட்டது… என்று
2.ஆக்கினையைத் தொடு…! என்று காட்டுவார்கள்.

அவர் ஆசையின் உணர்வுகள் இந்த உடலிலும் இயக்கும். இதே போல் சில மனிதரின் உணர்வுகளும் இயக்கத் தொடங்கிவிடும். தொட்டவுடன் அவர்களுக்குக் “கிர்…ர்ர்ர்…!” என்று வரும்.

இபப்டித் தொட்டுக் காட்டிவிட்டால் அவர்களுக்கு அந்த உணர்வே தான் பழக்கம் வரும். “கிர்…ர்ர்ர்…!” என்று நெற்றி வலிக்க ஆரம்பித்துவிடும். பல நிலைகள் எல்லாம் ஆரம்பித்துவிடும். இது அல்ல..!

சாதாரணமாக ஒரு சிறிய பையனைத் தொட்டு “உனக்குள் இப்பொழுது மின்சாரம் பாய்கிறதா பார்…!” என்றால் அந்த உடலில் இருப்பதெல்லாம் இங்கே வரும்.

இது எல்லாம் ஒரு மனித உடலில் இருக்கக்கூடிய எண்ணமும் அந்த உணர்வின் தன்மையை மாற்றும் நிலையும் ஆகும். அதைப் போன்ற நிலைகளில் எல்லாம் யாரும் சிக்காதீர்கள்…!

ஆனால் நான் (ஞானகுரு) இப்பொழுது தொட்டுக் காண்பிப்பது என்பது எப்படி…?

உங்கள் உடலுக்குள் இருக்கக்கூடிய அணுக்களுக்குள் சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் துருவ நட்சத்திரத்திலிருந்தும் வரும் அந்த உணர்வுகளை இணைக்கும் நிலையாக
1.இந்த உபதேசத்தின் வாயிலாகக் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது (படிக்கும் போது)
2.அது எப்படி ஆனது என்ற உணர்வுகள் வரப்படும் பொழுது உங்கள் உடல் அணுக்கள் அனைத்துக்கும் இது தொட்டுக் காட்டுவதாகும்.

நான் பேசுவது இந்த உணர்வுகள் உங்களுக்குள் பாய்கிறது. அந்த உணர்வுகள் வளர்ந்து விட்டால் “உங்கள் எண்ணத்தாலேயே…” நீங்கள் அந்தத் துருவ நடசத்திரத்தின் அருள் உணர்வுகளையும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரும் சக்திகளைப் பெறக்கூடிய தகுதியைப் பெறுகின்றீர்கள்.

அதை நீங்கள் எண்ணி வளர்க்க வளர்க்க உங்களுக்குள் பேரொளியாக மாறும். நீங்களே அதை உணர முடியும்,

Inner god

கடவுளைப் பார்க்க முடியுமா…? உணர முடியுமா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

ஆதிசக்தியின் சக்திக் குழந்தைகளான எல்லாமின் எல்லாமாக இறை சக்தி நிறைந்துள்ளது. ஒவ்வொரு சாராரும் இறைவனை அவரவர்கள் ஒவ்வொரு வழி கொண்டு வணங்குகின்றனர்.

நாஸ்தீகம் பேசுபவர்கள் (கடவுள் இல்லை என்பவர்கள்) இறை சக்தியைக் காட்டச் சொல்கின்றனர். எல்லா ஜீவராசிகளும்.. எல்லாமும் இறைவன் தான்…! என்றாலும் இறைவனை நாம் காண முடிகின்றதா…?

காட்சி:-

முதுகில் அரிப்பெடுத்த ஒருவர் அரிப்பெடுத்த இடத்தைத் தன் கையால் கீற முடியாமல் மற்ற உபகரணத்தை எடுத்துக் கீறுவதைப் போன்றும்… முதுகைச் சுவற்றில் தேய்ப்பது போன்றும் காட்சி தருகின்றார்.

விளக்கம்:-

தன் முதுகு தான்… ஆனால் தன் முதுகைத் தானே சொறிவதற்கு முடிவதில்லை. அந்த இடத்தில் என்ன உள்ளது…? என்று பார்க்கவும் முடிவதில்லை.

ஆனால் தனக்குச் சொந்தமான முதுகு தான். அதில் ஏற்படும் நமைச்சலையும் உணர்ச்சிகளையும் உணர முடிகின்றது.

அதைப் போன்று ஒவ்வொரு உயிரினத்திலும் அவ்வுயிரணு தோன்றிடவே
1.ஆண்டவனின் சக்தி ஆவியாக… உயிர் கொண்டு இருந்து தான்
2.அனைத்து ஜீவன்களுமே வாழுகின்றன.
3.இப்படி இருக்க… ஆண்டவன் என்ற தனித்த பிம்பத்தைக் காட்டினால் தான் ஆண்டவன் என்று உணர முடியுமா…?

ஆகவே ஆண்டவனின் அருள் சக்திக்குகந்த செயல்படும் ஜீவன்களாகத் தான் ஒவ்வொரு ஜீவனும் ஜீவித்து வாழ்கின்றது.

இதை உணராமல்… தனக்கு எந்த அளவு சக்தி நிலை உள்ளதோ அந்த நிலையில் எடுக்கும் செயல் வாழ்க்கை தான் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும்… “அவன் எடுக்கும் சுவாச எண்ணம் கொண்டு செயல்படுகின்றது…”

1.நுண்ணிய சிறு கருவிகளை…
2.நுண்ணிய சிறு உறுப்பின் துணை கொண்டு தான் அதன் வேலைப்பாடு செய்ய முடிகின்றது.
3.கனம் கொண்ட பெரிய உறுப்புகளின் செயலுக்கு
4.அதன் செயலுக்குகந்த வலுவான சாதனப் பொருள் கொண்டு தான் அந்தப் பொருளை உருவாக்க முடிகின்றது.

அதைப் போன்றுதான் நாம் எடுக்கும் குறுகிய எண்ணத்தின் வளர்ச்சி கொண்ட சுவாசமாக இருந்தால்… அதன் தன்மைக்குகந்த குறுகிய ஞானம் கொண்ட வாழ்க்கை தான் நமக்கு அமையும்.

1.எண்ணத்தின் வலு…
2.எதன் அடிப்படையில் எதன் சக்தித் திறன் கூடுகின்றதோ
3.அதன் செயல் ஞானம் தான் நமக்கும் கிட்டும்.

எண்ணத்தின் உயர்வை இந்த உடல் என்ற ஆவியுடன் கூடிய ஆத்ம உயிர் இந்தப் பிம்பத்தில் உள்ள பொழுதே நம் சுவாச அலையை உயர்ந்த ஞான எண்ணமுடன் செலுத்தி எடுப்போமானால்… இப்பொழுதுள்ள ஜீவ சக்தி கொண்ட இந்த உடலில் எடுக்கும் ஞான அலையைக் காட்டிலும் “உயர்ந்த ஞான அலையை நாம் பெற முடியும்…”

இந்த மனிதப் பிறவியில் (உடலில்) இருக்கும் பொழுது தான் அதைச் செயல்படுத்த முடியும். ஆவி நிலையிலிருந்து பெற முடியாது.. மிருகங்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் அந்தத் தகுதி கிடையாது.

காட்சி:-

ஒரு பந்து நீரில் மிதந்து ஓடிக் கொண்டே உள்ளது. அந்தப் பந்தில் சிறு துவாரம் ஏற்பட்டவுடன் பந்தில் உள்ள காற்று பிரிந்து அந்தப் பந்தானது நீரின் உள் பாகத்திற்கு நிலத்திற்குச் சென்று விடுகிறது.

விளக்கம்:-

ஆக… இந்த உடல் என்ற காற்றடைத்த இந்தப் பந்து இந்த உடலில் உள்ள உயிர் ஆவி பிரிந்தவுடன்… நடக்கவோ நிற்கவோ முடியாமால் ஜீவனற்று… இந்தக் காற்று பிரிந்தவுடன் நிலத்துடன் கனத்து ஐக்கியப்பட்டு விடுகின்றது.

அதைப் போன்று இந்தக் காற்றின் அலை சக்தியை
1.நம் சுவாச நிலை கொண்டு நம் உடல் ஆத்மா மட்டும் வாழ்வதோடு அல்லாமல்
2.நம் எண்ணத்தின் ஆத்ம வலுவின் சக்தியும் வாழுகின்றது.
3.அதன் சக்தித் திறனை வழிப்படுத்தித் தருவது தான்
4.இங்கே ஈஸ்வரபட்டனாகிய யான் வெளிப்படுத்தும் இந்தத் தத்துவத்தின் உண்மை ஞான வழித் தொடர்…!

விதியின் இயக்கங்களைப் பற்றி அறிய குருநாதர் கொடுத்த நேரடி அனுபவம்

என் ஒருவனால் ஒன்றும் செய்ய முடியாது

பிள்ளையைச் சுமக்கும் தாயைப் போல் ஞானத்தைச் சுமந்து ஞானக் குழந்தைகளை நமக்குள் உருவாக்குவோம்

agastyan and lightning

“மின்னல்களை எல்லாம் ஆனந்தமான நிலைகளில் கவர்ந்து…” உயிரைப் போல ஒளியாக ஆக்கித் துருவ நட்சத்திரமானவன் தான் அகஸ்தியன்..!

நம் உயிர் ஒரு தனி நட்சத்திரம் அல்ல…!

ஜோதிடம் பார்ப்பவர்கள்… உதாரணமாக நீ கார்த்திகை நட்சத்திரக்காரர்…! என்று “ஒரு” நட்சத்திரத்தைச் சொல்வார்கள். அது பிழை.

ரேவதி நட்சத்திரத்துடன் கார்த்திகை நட்சத்திரத்தின் சக்தியும் ஆண் பெண் என்ற நிலைகளில் கலந்தால் தான் உயிரணு தனக்குள் ஒன்றை நுகர்ந்து உருவாக்க முடியும்.

நட்சத்திரங்கள் ஆண் பெண் என்று ஒன்றுடன் ஒன்று மோதித் துகள்களாக மாறும் பொழுது நம் பூமிக்குள் அவைகள் வரும் பொழுது அதிலே
1.ஆண் நட்சத்திரத்தின் சக்தி அதிகமாக இருந்தால் பாறைகள் அங்கே ஜாஸ்தி “வலுப் பெற்றதாக…!” இருக்கும்.
2.பெண் பால் நட்சத்திரத்தின் சக்தி அதிகமாக இருந்தால் அந்தப் பாறை அங்கே வேகமாக வளரும்… அது “தன் இனத்தைப் பெருக்கும்…!”

இதைப் போல் தான் செடிகளிலும் ஆண் செடி பெண் செடி என்று உண்டு. ஆண் செடிகள் இல்லை என்றால் பெண் செடிகளில் இராசி பலன் இல்லை.

நெற் பயிர்களில் பார்த்தோம் என்றால் ஆண் பெண் விகிதாச்சாரம் குறைவாக இருந்தால் அங்கே பலன் இருக்காது… நல்ல மகசூல் காண முடியாது.

மரங்களிலும் அதே போல் தான். பனை மரங்களிலும் ஆண் பெண் என்று உண்டு. பப்பாளி மரத்திலும் ஆண் பெண் உண்டு. ஆண் பப்பாளி மரம் இல்லை என்றால் பெண் பப்பாளியில் கருவுறாது… பலன் கிடைக்காது.

ஆகவே இதைப் போல் ஆண் பெண் என்ற நிலையில் தான் எல்லாமே வருகின்றது. இந்த உண்மைகளை எல்லாம் உணர்ந்தவன் அகஸ்தியன்.

1.கணவனும் மனைவி இருவரும் தனித்து இருந்தாலும் ஒன்றாக இணைக்கும் பருவம்
2.மனிதனான பின் இதைச் செயல்படுத்த முடியும் என்று உணர்ந்தவன் அகஸ்தியன்.

மற்ற மிருகங்கள் தன்னத் தப்பி வாழத் தன்னைக் காட்டிலும் வலு கொண்ட உணர்வைச் சுவாசித்துப் பரிணாம வளர்ச்சியில் வருகின்றது,

மனிதனாக ஆனபின் கணவன் மனைவி இரண்டு உயிரின் நட்சத்திரங்களும் வேறு வேறு ஆக இருந்தாலும்… இந்த நட்சத்திரங்கள் சேர்க்கப்படும் பொழுது ஒரு உருப்பெறும் தன்மை வருகின்றது.

ஆண்பால் என்ற கார்த்திகை நட்சத்திரத்திற்கு ரேவதி நட்சத்திரம் என்ற பெண் பால் நட்சத்திரம் இருந்தாலும் இதே மாதிரிப் பெண்களுக்கு ஆண் பால் நட்சத்திரத்தின் உணர்வும்
1.இப்படி நான்கு நிலை வரப்படும் பொழுது தான் பிரம்மம் என்ற நிலையே உருவாகின்றது.
2.இந்த நான்கு நட்சத்திரங்களும் இரண்டு உயிருடன் சேர்த்து இணைக்கப்படும் பொழுது தான்
3.எதைக் கவர்ந்தனரோ அந்த ஒளியின் கற்றையாக வளர்கின்றது.

இப்படி வளர்ச்சி அடைந்த நிலைகளில் தான் நட்சத்திரங்களின் விஷத் தன்மைகளை முறிக்கும் தன்மை பெற்ற அகஸ்தியன்
1.மின்னல்களைக் கண்ட பின் ஆனந்தமான நிலைகளில் அதைக் கவர்ந்து கொண்டான்
2.அந்த உணர்வின் தன்மையை எடுத்து உடலிலுள்ள அணுக்கள் அனைத்தும் மாற்றிக் கொண்டான்
3.அதாவது உயிரைப் போலவே (நட்சத்திரத்தின் ஒளிக் கற்றைகளாக) மாற்றினான்.

இதை வைத்துத் தான் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) என்னிடம் சொன்னார். ஏய்.. மின்னல் பாய்வதைப் பாருடா…! என்பார். அப்பொழுது எங்கள் இரண்டு பேருக்கும் சண்டை வரும்.

நான் (ஞானகுரு) மின்னலைப் பார்க்கும் பொழுது என் கண்கள் போனால் யார் சாமி கொடுக்கிறது..? நாம் பிள்ளை குட்டிக்காரன்..! என்பேன்.

அவர் என்ன சொல்வார்…? நான் சொல்வதை எல்லாம் செய்கிறேன் என்று சொன்னாய் அல்லவா…!

சாமி… நான் கண் இல்லாமல் போனால் என்ன செய்வேன்…? என்று எனக்கும் அவருக்கும் சண்டை வரும்.

அந்த மின்னலின் இயக்கங்கள் வரப்படும் பொழுது அந்தத் துகள் என்ன ஆகின்றது..?
1.நான் இருக்கிறேன் அல்லவா…
2.நான் உன்னைத் தொடுகிறேன் அல்லவா…! என்பார் குருநாதர்.

அதாவது.. அவர் கையால் என்னைத் தொட்டு எர்த் செய்து (ELECTRICAL WIRE EARTH போல) “இப்பொழுது மின்னலைப் பாருடா…!” என்கிறார் குருநாதர்.

அந்த உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதியவுடன் இது எந்த நட்சத்திரத்திலிருந்து வந்தது…? இது எதனுடன் மோதும் பொழுது இந்த மின் கதிர்கள் மாறுகிறது எப்படி என்பதையெல்லாம் காட்டுகின்றார்.

அதற்குப் பின் தான் நான் துணிந்து பார்க்க ஆரம்பித்தேன்…!

குருநாதர் என்னைத் தொட்டுக் காண்பித்தது போல் தான் அந்த உணர்வுகளை எல்லாம் உங்கள் எல்லோரிடமும் உணர்வால் தொட்டுக் காண்பிக்கின்றேன்.

இந்த உணர்வுகள் தொடும் பொழுது உங்கள் உடலுக்குள் என்ன செய்கிறது…? ஊடுருவுகிறது…! ஒளியாக மாற்றும் பருவம் பெறுகின்றீர்கள்,
1.நீங்களும் அந்த உணர்வினைக் கவர்ந்து ஒவ்வொரு அணுக்களையும்
2.இந்த உயிரைப் போல ஆகும் அந்தத் திறன் பெறவேண்டும் என்பதற்குத்தான் இதை உங்களிடம் சொல்கிறேன்.

 

eswarapattaya-namaha

ஞானத்தில் வளர்ச்சி பெற்ற மனித உயிரான்மாக்களின் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

காட்சி:-
தூளியில் குழந்தையைப் போட்டுத் தாலாட்டித் தாய் தூங்க வைக்கின்றாள். அந்தக் குழந்தை இன்பமாகத் தாயின் தாலாட்டுடன் மகிழ்ந்து உறங்குகிறது நிம்மதியாக…!

தாய் தன் குழந்தையை அன்பாகத் தாலாட்டி உறங்க வைத்தாலும் அந்தத் தூளி உறுதியாக இருக்கிறதா…? அதில் கட்டியுள்ள துணி கெட்டியாக இருக்கின்றதா,,,? குழந்தையின் மேல் பூச்சி புழுக்கள் விழாமல் உள்ளதா…? என்றெல்லாம் பல தற்காப்புகளைப் பார்த்துத்தான்… அந்தக் குழந்தையைத் தாலாட்டும் இன்ப நிலையில் மகிழ்ந்து… குழந்தையின் நிம்மதியான உறக்கத்திற்கு உகந்த பாதுகாப்பைச் செய்கிறாள் அந்தத் தாய்.

இதிலிருந்து எதனைப் புரிந்து கொண்டீர்கள்..?

இன்று அந்தக் குழந்தைக்குத் தாயாகத் தன் சுயநலத்தை மட்டும் எண்ணாது அந்தக் குழந்தையைப் பேணிக் காத்து அதிலே தன் நிறைவைக் காணும் தாய்
1.அதே குழந்தையை வளர்த்து…
2.அது ஒரு குழந்தையை ஈன்று பேணி வளர்க்கும் முறைக்கு
3.அத்தாயே அக்குழந்தையை வழி நடத்திச் செல்கிறாள்.

இதன் தொடர் வழிக் காலங்கள் உருண்டு கொண்டே வருவதைப் போன்று
1.நம் சப்தரிஷிகளால்… அவர்கள் பெற்றெடுத்த உயர் ஞானக் குழந்தைகளை
2.அவர்களின் வழித் தொடர் ஞானங்கள் வழி நடந்தே செயல் கொள்ள
3.அவர்கள் செயல் உலகெங்கும் வழிபட்டுக் கொண்டுள்ளது.

இந்தப் பூமியிலுள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் இன்றுள்ள ஜென்ம நிலை இந்தக் கலியில் கடைசியாக முடிவுற்று இதன் நிலை முற்றுப் பெறாமல் இருக்கத்தான் நம் சப்தரிஷிகளின் செயல் ஞானத் தொடர் இன்று உள்ளது.

தன் ஆத்மக் குழந்தைகளை இந்தப் பூமியின் ஈர்ப்பு அமிலத்துடன் சூட்சமம் கொள்ள அவர்கள் வழிப்படுத்தினால் தான் கலியில் ஞானம் பெருகும்.

1.கலியின் வட்டத்தில்… ஞான ஜெந்துக்கள் ஜீவன் கொண்டு
2.அஜ்ஜீவ சக்தியிலிருந்து எடுக்கும் ஜெகத்தின் ஜோதி சக்தியிலிருந்து தான்
3.எந்தச் சக்தியும்… எந்தச் சக்தி என்பது… எந்த ஒரு வளர்ச்சி பெறும் அமில குணங்களின் மண்டல சக்திகளே வளர முடியும்.

இன்றுள்ள இந்தக் கலியில் வாழும் மக்களின் நலனை உயர்வாக்கி ஞானத்தின் பால் அவர்களின் எண்ண ஒளியைச் செயலாக்குவது உலக வளர்ச்சி மட்டுமல்லாமல்
1.எம்மண்டலங்களையும் வளர வைக்கும் சக்திக்கு
2.மனித ஞான வழியில் வந்த செயல் ஞானம் வேண்டுமப்பா…!

இது நாள் வரை தந்து வந்த பாடத்தின் பொருள் புரிந்ததா…?

இன்றுள்ள நம் பூமியில் உள்ள மனித ஆத்மாக்களுக்கு எந்த நிமிடத்தில் எந்த ஆத்மா பிரிகிறது…! என்பது தெரியாத ஓர் சூழ்நிலை உலகெங்கும் உருவாகி… உலக மாற்றத்திற்கு நாள் நெருங்க நெருங்க மனித ஆத்மாக்களின் எண்ணங்களும் சிதறிவிட்டன…!

சிதறியுள்ள ஆத்மாக்களின் ஜெபத்தின் ஈர்ப்பால் நாமும் பொறுக்கி எடுக்கின்றோம். ஆகவே மண்டல உரு வளர்ச்சிக்கு உரு தாருங்கள்…!

இராமலிங்க அடிகள் சொன்ன தத்துவம்

அருள் பெரும் ஜோதி தனிப் பெரும் கருணை என்ற நிலையில் பிறரை இம்சிக்காத நிலை நான் பெறவேண்டும். தீமையை நான் பார்க்கக் கூடாது தீமைகள் எனக்குள் வரக்கூடாது என்பதே அவருடைய பிரார்த்தனை.

 

வேகா நிலை பெற்றுப் போகாப்புனல் அதாவது மீண்டும் இன்னொரு உடலுக்குள் சென்று பிறக்கக்கூடாது என்றார்.

 

அன்று ஓட்டல் கிடையாது. ஆகவே தர்மசாலையை அமைத்து மக்களுக்கு உணவைக் கொடுத்து ஞானத்தைப் போதிக்கும் நிலையை ஏற்படுத்தினார். அதற்காகத்தான் அன்னமிட்டாரே தவிர அன்னதானம் செய்தால் புண்ணியம் என்று சொல்லவில்லை.

 

மக்களுக்கு மெய் ஞானத்தைக் கொடுப்பதே உண்மையான தர்மம் என்றார்.

 

தாயின் சக்தியைப் பற்றி நாம் அறிந்திருக்கின்றோமா…? 

 

தாயின் அருளால் தான் நாம் எந்த நல்லதயுமே பெற முடியும் 

 anger of nature

“சூறாவளி.. சுழிக்காற்று…” இவைகள் எல்லாம் எதிர்பாராமல் வருவதன் காரணம் என்ன…?

இருபத்தியேழு நட்சத்திரங்களும் அதனதன் துகள்களை (கதிரியக்கங்களை) வெளிப்படுத்துகின்றது. பூமிக்கு வெளிப்புறத்தில் பிரபஞ்சத்தில் பரவினால் அதனதன் உணர்வுகளுக்கொப்பக் கோள்கள் எடுத்துக் கொள்கிறது.

இதைக் கடந்து வரும் துகள்கள் நம் பூமியின் துருவப் பகுதியின் எல்லைக்குள் வந்தால்
1.அதாவது நம் பூமிக்குள் மோதிவிட்டால் அது மின்னலாக மாறுகின்றது.
2.கடும் விஷத் தன்மைகள் பரவுகின்றது.. மின் கதிர்களாக மாறுகின்றது.

இப்படிப் பல மின்னல்கள் கடலிலே தாக்கினால் மணலாக மாறுகின்றது. அதை யுரேனியமாக மாற்றுகின்றான் விஞ்ஞானி. மின்னல் மரத்தில் தாக்கினால் மரங்கள் கருகிவிடுகிறது.

அதே சமயத்தில் மின்னல்கள் பூமிக்குள் ஊடுருவி அதீத வேகத்தின் தன்மை கொண்டால் இதைப் போல் எதிர்நிலையான நட்சத்திரங்கள் பூமிக்குள் ஒன்றுக்கொன்று எதிர்மறை ஆகிக் கொதிகலனாக மாறிப் பாறைகளை எல்லாம் உருக்குகின்றது.

உள்ளுக்குள் ஒன்றாகக் குழம்பாக மாற்றுகின்றது. ஆவியாக மாற்றுகின்றது. பூமிக்குள் கடும் உலோகத் தன்மையாக மாற்றுகின்றது. பல நிலைகள் மாறுகின்றது.

அந்த 27 நட்சத்திரங்களின் துகள்களும் நம் பூமிக்குள் வரும் சமயம் மற்ற நட்சத்திரத்தின் துகள் அதாவது ஒன்று அதிகமாக நம் பூமிக்குள் கவரப்பட்டு இதே மாதிரி மின்னலாக மாறித் தூசிகளாகப் படர்ந்தால் இதனுடைய அழுத்தம் அதிகமாகிறது.

அதாவது இந்தப் பக்கம் மின்னலாகிறது என்றால் இந்தப் புவியில் அதிர்வுகள் ஆகி இதற்கு எதிர்நிலையான தூசிகள் படர்ந்திருக்கின்ற பக்கம் மோதப்பட்டுப் பளீர்…ர்ர்…! என்று மின்னல் வருவதைப் பார்க்கலாம்.
1.மின்னல் இலேசாக இருந்தால் அதற்குத்தக்க காற்று வேகமாக வரும்.
2.ஆனால் அதிகமான மோதலானால் இந்தக் காற்றழுத்தம் அதிகமாகிச் சூறாவளியாக மாறி
3.மரத்தையும் வீட்டையும் எல்லாவற்றையும் தூக்கிக் கொண்டு ஓடிப் போகும்.

மின்னல்கள் கடலிலே தாக்கினால் மணலாக மாறியதை மனிதன் செயற்கையில் யுரேனியமாகப் பிரித்து அணு உலைகளுக்கும் மற்றதுக்கும் பயன்படுத்துகின்றான்.

அதிலிருந்த கசிவுகள் இங்கே துகள்களாக மாற்றப்படும் பொழுது இதே போல் 27 நட்சத்திரங்களின் ஓட்டங்கள் அங்கே வந்தால் மோதி சுழிக்காற்றாகவும் சூறாவளியாகவும் வரத் தொடங்கும்.

எங்கெங்கே இந்த அணுக் கதிரியக்கங்களின் கசிந்த கசிவுகள் இருக்கின்றதோ அதனுடன் மோதப்படும் பொழுது பெரிய பெரிய கட்டிடங்களைக் கூடத் தூக்கி அபேஷ் செய்து கொண்டு போகிறது. கார் பஸ் எல்லாவற்றையும் தூக்கிக் கொண்டு போகிறது.

ஒரு சமயம் என்னை (ஞானகுரு) டெல்லிப் பக்கமாகப் போகச் சொன்னார் குருநாதர். ரோட்டிலே நடந்து வந்து கொண்டிருக்கின்றேன். ரோடு இந்தப் பக்கம் அந்தப் பக்கம் ஒரு காம்பவுண்டுச் சுவர்.

வந்து கொண்டிருந்த ஒரு கார் என்ன செய்தது என்றால்.. அந்தக் கட்டிடத்தில் நான்காவது மாடி மேல் கிர்..ர்ர்ர்…! என்று சுற்றிக் கொண்டு போய் நிற்கிறது.

ஒரு பஸ் என்ன ஆனது…? நான் நகர்ந்து கொண்டேன். அந்தப் பஸ் என்னைத் தாண்டிக் கொண்டுபோய் காம்பவுண்டுச் சுவருக்கு அந்தப் பக்கம் போட்டுவிட்டது. அங்கே விழுந்து விட்டது.
1.நான் இதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றேன்.
2.அந்தச் சுழிக் காற்று என் பக்கம் வரவில்லை. ஆனால் எனக்குப் பயமும் வரவில்லை.
3.ஏனென்றால் குருநாதர் அங்கே போய் இதை எல்லாம் பார்க்கச் சொல்லிச் சொன்னதால் பார்க்கிறேன்.
4.எப்படி.. எதனால்… இந்த மாதிரிச் சூழ்நிலைகள் எல்லாம் உருவாகிறது…? என்று காட்டுகிறார்.

ஒரு ஆட்டைப் (ஆடு) பார்த்தோம் என்றால் அதைப் பம்பரம் போல் சுற்ற வைக்கிறது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்கள் எல்லோரும் விழுந்தடித்துக் கொண்டு ஓடினார்கள்.

ஆகவே எதிர் நிலையாகும் பொழுது இயற்கையில் இந்த மாதிரி சீற்றங்கள் ஆகிறது.

27 நட்சத்திரங்கள் தான் இந்தப் பிரபஞ்சத்திற்கே மூலம். 27 நட்சத்திரங்களும் சூரியனாக மாறிவிட்டால் இந்தச் சூரியனுக்கு வேலை இல்லை. 27 நட்சத்திரங்களும் தனித் தனி பிரபஞ்சமாக இப்பொழுது மாறிக் கொண்டுள்ளது.

1.ஆக… நம்முடைய பிரபஞ்சம் முழுமையாக அழியும் தருணம் வந்துவிட்டது.
2.அதற்குள் ஏ.. மனிதா…! நீ அதற்குள் என்ன செய்ய வேண்டும்…?
2.இந்த உடலுக்குப் பின் நீ என்னவாக ஆக வேண்டும்..? என்பதைத் தெளிவாகக் கூறுகின்றார் குருநாதர்.

ஒவ்வொன்றையும் நேரடி அனுபவமாகக் காட்டித் தான் குருநாதர் எனக்குச் சொன்னார். பார்க்கலாம்… அமெரிக்காவில்… சீனாவில்… சூறாவளி என்று…! பத்திரிக்கைகளிலும் டி.வி.யிலும்.

எங்கெங்கெல்லாம் அணுக்கதிரியக்கங்களை உற்பத்தி செய்கின்றார்களோ அந்த அணுக் கசிவுகளால் சூறாவளி… சுழிக்காற்று எல்லாம் உருவாகும்.

இயற்கையை மனிதன் கைப்பற்றினாலும் அதனின் வீரியங்கள் மீண்டும் இப்படிதான் வரும்…!

இந்தப் பிரபஞ்சத்திலும் இதே போல் இராக்கெட்டுகளையும் செயற்கைக் கோள்களையும் அனுப்பியதால் நம் பிரபஞ்சத்திலும் சூறாவளி உண்டு.

இந்த எதிர்நிலைகள் சூரியனின் ஈர்ப்புக்குள் செல்லும் பொழுது அந்தப் பாதையிலும் சூறாவளிகள் உருவாகிறது. அதனால் பல மாற்றங்களும் திசைகளும் மாறுகிறது.

ஆக மொத்தம் நாம் மனிதனாக வாழும் காலம் மிகவும் குறுகியதே…!

1.இந்தக் காலத்திற்குள் கார்த்திகேயா என்று தெரிந்து கொண்ட அறிவை வைத்து
2.அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் சேர்த்துப் பதிவாக்கி
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஆத்ம சுத்தி மூலம் அவ்வப் பொழுது நமக்குள் வலிமையாக்கி
4.நம் ஆன்மாவிலும் உயிரிலும் பரப்பி விட்டால்
5.எந்த நிமிடம் இந்த உடலை விட்டுச் சென்றாலும்… “நாம் பிறவி இல்லா நிலை அடைவது திண்ணம்…!”

 

thoughts concentrating

தங்கத்தைப் பழுக்கக் காய்ச்சி அதைத் தட்டத் தட்டத் தான் அதனின் தரம் உயர்கிறது…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இங்கு வந்து எங்களின் (மகரிஷிகளின்) செயல் நடப்பின் உண்மைகளை உணர்ந்து மனித ஆத்மாக்கள் அவரவர்கள் உணர்ந்து பக்குவம் பெறும் பாட முறைகளை உணர்த்திக் கொண்டே வந்துள்ளோம்.

பள்ளியில் பயிலும் மாணவனுக்கு… அவன் ஆசிரியரின் போதனையை ஏற்கும் நிலை கொண்டு… அவனுக்கு வைக்கும் தேர்வில் அவன் பெறும் மதிப்பெண்படித்தான்… அவன் அறிவு நிலை கூடிய மதிப்பெண் பெறுகின்றான்.

அந்த மதிப்பெண் உயர்ந்திருந்தால் உயர் ஞானக் கல்விக்குச் செல்கிறான். அறிவு ஞானம் பெறாத மாணவனை உயர் வகுப்பிற்குத் தேர்ந்தெடுக்க மாட்டார்…! அந்த உபாத்தியாயர்.

அதைப் போல் ஆண்டவனின்… ஆண்டவன் என்பது…
1.உயர் சக்தி ஞான ரிஷியின் அருள் உலகளவுக்கும் பரப்பப்பட்டு
2.அந்த ஞானத்தின் பால் ஈர்ப்பு கொண்ட அவர்களின் பலனில் கண்டெடுத்துக் கொள்கின்றனர் சப்தரிஷிகள்.

அந்தப் பலம் பெற்ற ஆத்மாக்களின் செயலுக்கும் “பல தேர்வுகள் வைத்துப் பொறுக்கித்தான்…” அவர்களின் வட்டச் சுழற்சிக்கே செல்ல முடிகிறது.

கல்விக்கூடம் செல்லும் மாணவர்கள் எல்லொருமே பள்ளியில் இறுதிப் படிப்பு வரையும் செல்வதில்லை. சிலர் மேல் ஞானக்கல்வி பெறச் செல்ல முடியாமலும்… அந்தப் படிப்பை ஏற்க முடியாமல் பள்ளியிலிருந்து நின்று விடுகின்றார்கள் அல்லவா…!

அதைப் போன்று… இந்தச் சக்தி நிலையுணர்ந்து “பேரின்ப நிலை எய்திடல் வேண்டும்…!” என்ற செயலில் உள்ளவர்களும் தான் எடுக்கக்கூடிய முயற்சி ஜெபத்தில் பின்தங்கி விடுவதுண்டு…!

1.தங்கத்தைப் பழுக்கக் காய்ச்சித் தட்டத் தட்டத் தான் அதன் தரம் உயர்கின்றது
2.அது போல் எண்ணத்தில் ஏற்படும் பலவற்றிலிருந்தும்
3.ஒன்றான இறை ஞான சக்தியை ஈர்க்கும் நிலை பெற ஏற்படும் சோதனையில் எல்லாம்
4.எந்தச் சோதனையிலிருந்தும் நாம் மீண்டும் அந்த ஜெப நிலை பெறுகின்றோமோ…
5.“அது தானப்பா இறை ஞானம் பெறும் ஜெபம் முறை…!”

Prtecting force Polaris north star

நாம் விழித்திருக்க வேண்டும்..! என்று ஞானிகள் சொன்னதன் மூலக் கருத்து என்ன…?

உதாரணமாக நம்மிடம் ஒருவர் சண்டையிடுகிறார்… திட்டுகிறார்..! என்றால் அதற்குப் பின் நாம் தியானத்தில் அமர்ந்தால் “அந்த எண்ணங்கள் ஓடிக் கொண்டே இருக்கும்…!” அதை மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள். அதைச் சுவாசியுங்கள்.

இந்த உணர்வுகளைச் சுவாசித்துக் கண்களை மூடுங்கள். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணுங்கள்.

இப்பொழுது எவரால் நமக்குள் அந்தத் தீமையான உணர்வுகள் உந்தப்பட்டு நாம் தியானிக்க முடியாமல் இருக்கின்றதோ அவர்களுக்கும் அறியாத இருள் நீங்கி அவர்களும் பொருள் கண்டுணரும் சக்தி பெறவேண்டும் என்று எண்ணிவிடுங்கள்.

அப்பொழுது அவருடைய உணர்வுகள் நமக்குள் வருவது தணிந்து விடும். அதாவது எப்படிச் செடிகளுக்கு உரம் கொடுக்கின்றோமோ இதைப் போல நமக்குள் இருக்கும் நல்ல அணுக்களுக்கு இவ்வாறு சக்தி ஏற்றிக் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு மாற்றவில்லை என்றால்..
1.அவர்கள் உணர்வுகள் நமக்குள் விளைந்து..
2.அந்த அணுக்கள் – சண்டையிட்ட அவர் திட்டிய அந்த உணர்ச்சியை உந்தித் தனக்கு உணவாக எடுத்துக் கொள்கிறது.

மேலும் நீங்கள் தியானத்தில் அமர்ந்தாலே அவர்கள் அப்படிச் செய்கிறார்கள்… இப்படிச் செய்தார்கள்…! என்ற எண்ணங்கள் அதிகமாகி குறையாகப் பேசிய அணுக்கள் அதிகமாகி நம் நல்ல அணுக்களுடன் போர் செய்யத் தொடங்கும்.

1.அப்பொழுது நமக்குள் மனக் கலக்கம்… மன நோய்… போன்ற நிலைகள் எல்லாம் வரும்.
2.பின் உடல் நோய் அதிகரிக்கத் தொடங்கிவிடும்.
3.ஆக நமக்குள் மனிதன் என்ற ஆறாவது அறிவின் நிலைக்கே எட்டாதபடி நாம் ஐந்தாவது அறிவுக்கே திருப்பிக் கொண்டு போவோம்.

இதை எல்லாம் நாம் மாற்றியமைத்துப் பழக வேண்டும். நம் வாழ்க்கையே இப்படித் தியானமாக்க வேண்டும்.

அதை விட்டுவிட்டு முதலில் ஒரு பத்து நிமிடம் உட்கார்ந்து பழகிய பின் அடுத்து மணிக்கணக்கில் உட்கார்ந்து தியானத்தில் நான் சக்தி பெறுவேன் என்றால் அடுத்த கணம் நாம் வாழ்க்கையில் செல்லும் பொழுது முதலில் சொன்ன மாதிரி வரும்.

ஏனென்றால் இன்றைய மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் அதிர்ச்சியான செய்திகளையோ பிறர்படும் கஷ்டங்களையோ இப்படி எத்தனையோ நாம் கேட்கிறோம். காணாததற்கு பத்திரிக்கையும் டி.வி.யும் பார்க்கின்றோம்.

அதைப் பார்க்கும் பொழுது அரசியலில் பற்று இருந்தால் இப்படிச் செய்கிறார்கள்..! என்று வெறுப்படைவோம்.

இதை எல்லாம் பேசிக் கலந்து உரையாடினாலும் அடுத்த கணம் இந்த உணர்வுகள் மாறாதபடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று ஏங்கிச் சுவாசியுங்கள்.

1.நாம் எதைக் கேட்டோமோ அதெல்லாம் நலம் பெறவேண்டும்…
2.நாடு நலம் பெறவேண்டும்…
3.அவர்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும்…
4.தெளிந்த மனம் பெறவேண்டும்…! என்ற உணர்வுகளை நமக்குள் வளர்க்க வேண்டும்.

பிறருடைய உணர்வுகள் இப்படி வந்தாலும் நமக்குள் அது வளராது மாற்றியமைத்து இப்படி நல்ல அணுக்களை நாம் பெருக்கலாம்.

அந்த அருளைப் பெறவேண்டும் என்ற எண்ணங்கள் வரும் பொழுது இது சிறுத்து விடுகிறது… துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் பெருகி விடுகிறது…! அப்பொழுது அது நமக்குள் அடங்கி வந்து விடுகிறது.

அதே போல் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் நாம் தவறு செய்யாமலேயே சில தவறுகள் வந்துவிடும். ஒரு விபத்து நடந்து விட்டது…! என்று ஓடி வந்து ஒருவர் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். உடனே ஆ…! என்று கேட்டுக் கொண்டே இருப்போம்.

1.இந்த உணர்வுகள் நமக்குள் பட்ட பின்
2.அவர் எந்த வகையில் விபத்தில் சிக்கினார்…! என்று சொன்னாரோ அதே உணர்வுகள் நமக்குள் தூண்டப்பட்டு
3.நாம் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தால் ஓரத்தில் போகவிடாமல்
4.நம்மை அறியாமலே நடு ரோட்டுக்கு அழைத்துச் செல்லும்.

ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வு நம்மை அறியாமலே இவ்வாறு அழைத்துச் செல்லும். ஆகவே இந்த மாதிரி “விபத்து மற்ற அதிர்ச்சியான விஷயங்களைக் கேள்விப்பட்டால்…” அடுத்த கணமே துருவ நட்சத்திரத்தை எண்ணி ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்,

அவர்கள் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் அவர்கள் உடல் நலம் பெறும் சக்தியும் அது பெறவேண்டும் என்ற எண்ணங்களை நாம் நமக்குள் அதை உருவாக்கிப் பழக வேண்டும்.

ஏனென்றால் அதை எல்லாம் நாம் நல்ல குணங்களுடன் பார்க்கும் பொழுது… பிறருடைய தீமைகளை நாம் நுகர்ந்து நுகர்ந்து அந்த அணுக்கள் நமக்குள் பெருகிப் பெருகி… நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றிக் கொண்டேயுள்ளது.

மனக் கவலையும் மனக் குழப்பமும் ஆகி… எப்படி வாழ்வது…? என்ற நம் நிலையாகிப் பல திசைகளுக்கும் ஆளாக்கி விடுகின்றது.

ஆனால் யாம் சொன்ன முறைப்படி ஆத்ம சுத்தி செய்து அந்தத் துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டு அதன் ஈர்ப்பிலேயே இருக்க வேண்டும். அப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தினைப் பற்றுடன் பற்றுகின்றோம்.

இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை எல்லாம் நாம் பற்றற்றதாக மாற்றுகின்றோம். இது ஒரு பழக்கத்திற்கு வந்து… அந்த அணுக்கள் நமக்குள் பெருகி விட்டது என்றால் நம்மை அறியாமலே அந்த நல்ல சொல்கள் வந்துவிடும்.

ஒரு பாடலைப் பாடுகிறோம் என்றால் அது பதிவாகி விட்டது என்றால் அந்தப் பாடல் சீராக வரிசையாக வரும்.

ஆனால் பாடல் முழுவதுமாகப் பாடுகின்றார்கள் என்றாலும் இடைமறித்து ஒரு வரியை மட்டும் தனித்துச் சொல்ல வேண்டும் என்றால் இரண்டாவது தரம் அந்தப் பாடல் நமக்கு நினைவுக்கு வராது. மறுபடியும் முதலிலிருந்து பாடிக் கொண்டே வர வேண்டும்.
1.அந்த வரிசைப்படுத்தி வரப்படும் பொழுது நமக்குள் அதனின் தொடர் வரிசை வருகின்றது.
2.இடையிலே சிக்கி விட்டால் நமக்கு அந்த நினைவு வராது.
3.ஏனென்றால் அந்த உணர்வின் தன்மை நமக்குள் இயங்கி அதன் அடுத்தடுத்து அடுக்குகளில் வருகின்றது.

இதனால் தான் நமது வாழ்க்கையில் எப்பொழுதுமே விழித்திருத்தல் வேண்டும்… தீமைகள் புகாதபடி விழித்திருந்து பழக வேண்டும்…! என்று சொல்வது.

சிவன் இராத்திரி அன்று விழித்திரு…! என்று ஞானிகள் சொன்னதன் மூலக் கருத்தே இது தான்.

குரு அருள் உங்களுக்கு என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதற்கே இந்தப் பிரசாதத்தைக் கொடுக்கின்றேன். அருள் மணங்கள் கமழும். 

எல்லோரும் அந்த அருள் ஞானப் பிரசாதத்தைப் பெறவேண்டும் என்று நீங்கள் வேண்டுங்கள். 

கோவிலில் போனால் நாம் எப்படி வணங்க வேண்டும் என்பதையும் நாம் முறைப்படுத்திடல் வேண்டும். 

எல்லோருக்கும் நாம் வழிகாட்டியாக இருக்க வேண்டும். மற்றவரைத் தள்ளிவிட்டு நாம் மட்டும் அருளைப் பெறவேண்டும் என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள். 

எல்லோரும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று ஆசைப்படுங்கள். அதையே தியானியுங்கள்… தவமாக இருங்கள். 

அப்பொழுது நீங்கள் இருந்த இடத்திலிருந்தே எல்லா ஆற்றலையும் பெறும் தகுதி பெறுவீர்கள். 

hearing excercise

செவி வழி உணர்ச்சிகளை உந்தச் செய்து.. சக்தி வாய்ந்த ஆற்றல்களை நுகர்ந்து… “உடல் நோய்களைப் போக்கும் வழி”

தீமைகள் இருந்தால் நமக்குள் அந்தத் தீமைகள் புகாது தடுத்துப் பழகுதல் வேண்டும். ஆகவே பிறருடைய கஷ்டங்களையோ நஷ்டங்களையோ துயரங்களையோ பார்த்தோம் என்றால் நாம் எப்படிச் செயல்படுத்த வேண்டும்…?

படத்தில் காட்டியபடி உங்கள் காதிலே இப்படிக் கையை வைத்துக் கொள்ளுங்கள்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று
3.இந்த உணர்வு அனைத்தையும் உங்கள் வாயிலே சொல்லிக் கொண்டேயிருங்கள்.
4.அதாவது இங்கே பாய்ச்சி… உங்கள் செவிக்குள் கொடுத்து உடலுக்குள் உணர்வலைகளைப் பரப்புங்கள்.

நீங்கள் இப்பொழுது உங்கள் காதில் வைத்து இந்த மாதிரிச் சொல்லிப் பாருங்கள். அந்த உணர்வலைகள் வரும்.

உங்கள் உடலில் எந்த இடத்தில் வலி இருக்கின்றதோ அங்கே எல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று நினைவைச் செலுத்தினால் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும்.

உங்கள் இருதயத்தில் படபடப்பு வந்தால்… இதே மாதிரி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் எங்கள் இருதயம் முழுவதும் படர வேண்டும்… எங்கள் இருதயத் துடிப்பு சீராக அமைய வேண்டும்…! என்ற இந்த உணர்வை எடுத்துக் கொள்ளுங்கள்.

இதே போல் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி ஒவ்வொரு நிமிடமும்
1.“ஓ…ம் ஓ…ம் ஓ…ம்” என்று இந்த உணர்வின் ஒலிகளை எழுப்பப்படும் பொழுது (முதலில் சொன்ன மாதிரி)
2.இந்த உணர்வலைகள் நமக்குள் அந்த ஒலி அலைகளை எழுப்பிக் கொண்டேயிருக்கும்.

இதை எல்லாம் உங்கள் வாழ்க்கையில் அனுபவித்துப் பார்க்கலாம்.

இப்பொழுது இருக்கும் இந்த விஞ்ஞான உலகில் பெரும் தொல்லைகளும் துயரங்களும் வந்து கொண்டிருக்கும் பொழுது
1.உங்கள் உணர்வுக்குள்… உங்கள் பேச்சே… செவிகளைக் கொண்டு இந்த உணர்வுகளை உந்தச் செய்து
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வின் அணுக்களின் வீரிய சக்தியைப் பெருக்க இது உதவும்.

உடலிலே எந்த வலி வந்தாலும் சரி… உங்கள் உயிரைப் புருவ மத்தியில் ஈஸ்வரா…! என்று எண்ணி உடலில் வலி இருக்கும் பக்கம் உங்கள் கண்ணின் நினைவை இங்கிருந்து செலுத்தி… அதை “உங்கள் உடலில் அந்த வலி நீங்க வேண்டும்…!” என்று சொல்லுங்கள். வலி குறையும்.

எங்கள் உடலில் உள்ள வாத நீர் பித்த நீர் விஷ நீர் இறங்க வேண்டும் தரையில் இறங்க வேண்டும் எங்கள் உடல் நலம் பெறவேண்டும் என்று நீங்கள் எண்ணுங்கள். உடலில் உள்ள பித்தம் சம்பந்தப்பட்ட வியாதிகளும் நரம்புத் தளர்ச்சி போன்ற நிலைகளும் குறையும்.

ஏனென்றால்…
1.வெகு தூரம் உங்கள் நினைவுகளை அங்கே துருவ நட்சத்திரத்தில் செலுத்த
2.அந்த உணர்வுகளை நுகர… உங்கள் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்த…
3.அது துரித நிலைகள் கொண்டு இந்தத் தீமையின் உணர்வுகளை நீங்கள் மாற்றியமைக்க முடியும்.

அருள் வாக்குப்படி உங்களுக்குள் இதை இப்படிச் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டேன். அதைச் செய்தால் உங்கள் உணர்வுகள் உங்கள் உடலுக்குள் பாய்ந்து நல்லதாகும்.

ஏனென்றால் இது எல்லாம் வாக்குப் பிரசித்தம் தான்…!

இந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவான பின் இதைச் செய்தால் அதன் வழி உங்களுக்குள் இந்தத் தீமைகளை அகற்றும் வல்லமையை நீங்களே பெறுகின்றீர்கள்.

எல்லாம் ஒவ்வொரு நொடிகளிலும் இதை எடுத்துப் பழகுங்கள்.

world of sages

சப்தரிஷிகளின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இன்று உடலுடன் ஜீவன் பெற்று வாழும் நிலையில் நம் உடலின் எடையை ஒரு பாரமாக… அதாவது சுமக்க முடியாமல் இருப்பது போன்ற உணர்வு நமக்கு ஏற்படுவதில்லை.

நாம் எடுக்கும் சுவாச அலையில் நம் உயிரணு என்ற இயந்திரத்தின் ஓட்டத்தினால் நம் உடலிலுள்ள பல கோடி உயிரணுக்களும் அந்தச் சுவாசத்தின் அலையை இந்தப் பூமியின் ஈர்ப்பில் காற்றாகக் கலந்து தான் வாழுகின்றோம்.

ஆனால் இப்பொழுதுள்ள நம் உடலின் எடையே ஜீவனற்ற உடலாக ஆன பின்பு அதன் கனம் கூடி விடுகிறது.

இந்தப் பூயின் ஈர்ப்பு சக்தி குணத்துடன் ஜீவனற்ற பிம்பங்கள் உள்ள நிலையைப் போல்… ஜீவன் பிரிந்த உடல்களும்… அந்த ஈர்ப்பின் அதிகப்படியான இழுவையுடன்… “சுவாச அலையை எடுக்காத உடல் ஆனவுடன்…” கனம் பொருந்திய ஈர்ப்புடன் அந்த உடல் ஐக்கியப்பட்டு விடுகிறது.

இந்தச் சுவாச அலையின் சக்தியினால் தான் ஜீவன் கொண்ட ஜீவன்களின் நிலைக்கும் ஜீவன்ற்ற பிம்பங்களின் நிலைக்கும் கனத்தில் (எடையில்) வேறுபாடு ஏற்படுகின்றது.

இருந்தாலும் ஜீவன் பிரிந்த உடல்கள் அந்த உடலிலுள்ள மற்ற ஜீவ அணுக்களின் ஈர்ப்பின் அமில குணத்தால் அந்த உடல் உயிர் பிரிந்த பிறகு அதன் உடல் பெருகுகிறதே…! அதன் நிலை எப்படி…?

நாம் சில வகை உணவுப் பொருட்களை ஒன்றுடன் ஒன்று கலந்து அதில் நீரை ஊற்றி வைத்தால் அதிலிருந்து சில அமிலங்கள் வளர்ந்து புளிப்பு நிலை ஏற்படுகிறது அல்லவா…!

அது போல் இந்த ஜீவனற்ற உடலும் அந்தப் புளிப்பு நிலையான அமிலங்கள் ஏற்பட்ட பிறகு அதன் நீர் சக்தி வடிந்து இந்த உடல் பிம்பம் நாற்றத் தன்மை இழந்து இந்தப் பூமியுடன் அந்த உடலும் கலக்கின்றது.

அதன் பிறகுதான்… உடலிலுள்ள அந்த உடலுக்குச் சொந்தமான ஜீவ அணுவுடன் அந்த ஜீவ ஆத்மாவும் முதலிலேயே உடலை விட்டுப் பிரிந்த உயிருடனும் இந்தச் சப்த அலையுடனும் இவ்வாத்மாவும் கலந்து இவ்வாத்ம ஜீவன் அதற்குகந்த செயல் வட்டத்திற்குள் செல்கிறது.

1.உடலுடன் உள்ள பொழுது ஒரு நிலையும்…
2.உடலை விட்டு ஜீவன் பிரிந்த பிறகு ஒரு நிலையும்
3.அவ்வுடல் பிம்பமே மாறி அவ்வாத்மா ஜீவனுடன் சேர்ந்த பிறகு ஒரு நிலையும்
4.இப்படி மூன்று நிலைகளில் மனிதனின் நிலைகள் உள்ளன.

ஆனால் சப்தரிஷிகளும் சித்தர்களும் இந்த உடல் என்ற பிம்பத்தையே பிரித்துக் கூட்டும் செயலுடையதாக்குகின்றார்கள். அவர்கள் எடுத்த எண்ணத்தின் சுவாச ஜெபத்தால் இக்காற்றில் உள்ள அமில குணங்களையே பிரித்துக் கூட்டி வழிப்படுத்திச் செயல்படும் முறையைச் செயல்படுத்துபவரே நம் சப்தரிஷிகள்.

காற்றாகவும் நீராகவும் ஒளியாகவும் ஐக்கியப்பட்டுள்ள நம் சப்தரிஷிகளின் செயலினால் தான் இன்று இந்தப் பூமியின் ஆன்மாக்கள் பிறந்து வாழச் செயலாக்கி வருகின்றார்கள்.

நம் பூமி மட்டும் தான் சுழன்று ஓடுகிறதா…? மற்ற மண்டலங்கள் இல்லயா…? என்ற வினா எழும்பலாம். ஜீவன் கொண்ட ஜீவாதாரமுடன் வாழும் பூமி நம் பூமி.

அதற்குகந்த அமில சக்தியைக் கூட்டி வழிப்படுத்தியவர்கள் கோடிக்கணக்கான ஆண்டுகளாகப் பெற்ற தவத்தின் வலிமை நிலையில்
1.இந்தப் பூமியின் அமிலங்கள் கூடப் பெற்று… அந்தக் கூட்டின் வளர்ப்பில் மனித பிம்பங்கள் வளரச் செய்து
2.அந்த மனித பிம்பங்களுக்கு அறிவாற்றலின் வழியைப் பல வழிகளில் வளரச் செய்து
3.மனிதர்களின் ஞானத்தின் வளர்ச்சிக் கூட்டின் வலு சக்தியைத் தன் வலுவுக்கு அதிகப்படி எடுத்து
4.மேன்மேலும் இந்தக் காற்று மண்டலத்திலுள்ள இப்பேரண்டம் பெரு நிலை என்ற
5.பரந்த நிலையைக் கூட்டிப் பிம்பம் செய்கிறார்கள் நம் சப்தரிஷிகள்.

மண் மண்ணாக உள்ள பொழுது அதன் பிம்பத்தைக் காண முடிகிறதா…? மண்ணை எடுத்துக் குயவன் பானையும் சட்டியும் பல பொருள்களாக்கிக் காட்டினால்தான் அம்மண்ணின் பிம்பத்தை நாம் காணுகின்றோம்.

1.ஆதி சக்தியின் அருள் தான் குயவனும் மண்ணும்.
2.அந்தக் குயவன் மண்ணைத் தோண்டி எடுத்துத்தான் செய்து பொருளாகக் காட்டுகின்றான்.

அதைப் போன்று…
1.பூமியைப் பொருளாக்கி மனித சக்தி படைத்துத் தன் சக்திக்குகந்த பொருளான ஞானப் பொருட்களை
2.சப்தரிஷிகள் ஞானியாகவும் சித்தனாகவும் பொருள்படுத்தி எடுத்துக் கொள்கின்றான்.

சப்தரிஷியின் பொருளான நம் பூமியின் தொழிற்சாலையில்… அந்தத் தொழிலுக்குகந்த மூலப் பொருளின் தரம் குறைந்ததனால்
1.மேலும் தரமான பொருளைப் போட்டு கல்கியைக் காண

2.சப்தரிஷிகளின் செயல்கள் இன்று நடந்து வருகின்றன.

இந்த உலக மக்கள் யாரும் தவறு செய்யவில்லை. அறியாத நிலைகளில்… சந்தர்ப்பத்தால் அவர்கள் உயர்ந்த பண்புகள் இழக்கப்பட்டு ஒளி நிலை பெறாதபடி ஆக்கி விடுகிறது.

விஞ்ஞான நிலைகளும் இன்று இழி நிலைக்கே மனிதனை அழைத்துச் செல்கிறது. அதற்கு என்ன செய்ய வேண்டும்…? என்று உணர்த்தினார் ஈஸ்வரபட்டர்.

அதைச் செயல்படுத்தும் முன் உன் தாய் தந்தையரின் ஆசியை நீ பெற்று வா என்றார் குரு. அவர்கள் அருளால் தான் நீ அந்த மெய் ஞானத்தின் சக்தியைப் பெற முடியும் என்றார்.

soul and body

இந்த உலகில் வைக்கப்பட்டுள்ள பொக்கிஷங்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இந்த உலகில் உள்ள பொருள் பொக்கிஷங்கள் அன்றாண்ட அரசர்களாலும் முன்னோர்களாலும் சில முக்கியமான கோவில்களிலும்… அகழிகளிலும்… சுரங்கப் பாதைகளிலும்…. மற்றும் சில பெயர் குறிப்பிட வேண்டாத சிலைகளுக்குள்ளும்… பீடங்களுக்குள்ளும்… பல பொருள்களை மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

அப்படி வைத்தவர்கள்…
1.தன் ஆத்மா இன்றளவும் உயர முடியாமல்
2.தான் பதுக்கி வைத்த அந்த பொருள் என்ற பேராசைப் பொக்கிஷ சுழற்சியில்
3.அந்த ஆவிகள் இன்றளவும் அங்கேயே சுழன்று வாழ்கின்றன.

நம் எண்ணத்தினால் அதனை அடைய வேண்டும் என்ற தெய்வ சக்தியுடன் செயல்பட்டுச் சித்து நிலை கொண்டு அறிந்திடலாம். அதை எடுக்கவும் செய்திடலாம்.

ஆனால் அதனால் அடையக்கூடிய பொருள் என்ன…?

பிம்பப் பொருளை அடைந்தால் நாம் பெறவேண்டிய ஞானப் பொருளின் வழித் தொடர் அற்றுப் போய்… மேன்மேலும் இந்தப் பேராசையின் சுழற்சியில் சுற்றிக் கொண்டே வாழ்ந்து.. இதே நிலையில் பொருளைப் பதுக்கியவனின் ஆன்மா போல் சுழலத் தான் முடியும். “நல்ல நிலை அடையும் வழி இல்லை…!”

இந்தப் பொருள் மட்டுமல்லாமல் இந்தப் பூமிக்கடியில் இயற்கை வளமுடன் வளர்ந்திட்ட பல அபூர்வ கனி வளங்கள்… படிவக் குவியல்கள்… எங்கெங்கு உள்ளன…? என்பதனை எல்லாம் நாம் அடையும் சித்து நிலையால் உணரலாம்.

அதன் நிலையை வெளிப்படுத்தி இந்த உலக ஆன்மாக்களை மேன்மேலும் இந்தப் பேராசையின் செயற்கைச் செயலுக்குத்தான் அது முன்னோடியாக நிற்குமேயன்றி…
1.எப்பொருளை அடைய வேண்டும்…? என்ற
2.பரம்பொருளின் நிலை பெற வழியாகாது.

சித்தர்களின் சப்தரிஷிகளின் செயலால் தான் இந்த உலக ஆத்மாக்கள் இன்று வரையிலும் வாழ முடிகிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

பல கோடி உயிரணுக்களைக் கொண்ட இந்த உடலின் பிம்பத்திற்கு
1.இந்த உயிர் என்ற பொக்கிஷத்தினைப் போன்ற
2.பலவாக உள்ள உலகத்தில் ஒன்றாகிய தெய்வச் சக்தியைப் பெறும் பொக்கிஷத்தை நாம் பெறும் ஞான அருளைப் பெற வேண்டும்.

ஆகவே உலகத்திலுள்ள “பொருள் பொக்கிஷத்தை..” நாடி நாம் செல்லக்கூடாது.

eye and optic nerve cleaning

சந்தர்ப்பத்தால் வரும் தீமைகளும் துன்பங்களும் உடலில் நோயாக உருவாகமல் தடுத்து நிறுத்தும் பயிற்சி

ரோட்டிலே போகிறோம். நம் சந்தர்ப்பம் ஒரு தீமையான உணர்வை உற்றுப் பார்க்க நேர்கிறது…! என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது என்ன செய்ய வேண்டும்..?

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எடுத்துப் புருவ மத்தியில் நிறுத்தி எங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களில் அந்தச் சக்தி கலக்க வேண்டும் என்று உள்ளுக்குள் அந்தச் சக்தியைப் பாய்ச்ச வேண்டும்.

அப்படிப் பாய்ச்சிய இரத்தம் நம் உடல் முழுவதும் படர்கின்றது. எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று முன்னாடியே அந்த வலுவைப் பாய்ச்சி விடுகிறோம்.

அதாவது அந்த முகப்பில் இருக்கக்கூடிய காந்தப் புலன் எப்படி அந்தத் தீமை செய்பவரை உற்றுப் பார்த்து எண்ணினோமோ அவரால் வந்த உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகி இருக்கிறது.

இதன் துணை கொண்டு…
1.அநதத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எண்ணப்படும் பொழுது
2.அந்த இரத்தத்தின் வழி எல்லா அணுக்களும் உள்ளுக்குள் அந்த அருள் உணர்வுகள் சாப்பாடாகக் கிடைக்கிறது.

அதாவது… இந்தக் காற்றிலிருந்து செடி கொடிகள் அதனதன் சத்தை எப்படி எடுத்துக் கொள்கிறதோ இதே மாதிரி நம் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் அந்த இரத்தமாக மாறுவதிலிருந்து… இரத்தத்திலிருந்து தான் சாப்பாடு எடுத்துக் கொள்கிறது.

ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இதே மாதிரி எடுத்து உடலுக்குள் செலுத்த வேண்டும். இப்படி முன்னக்கூடியே (முதலில்) செலுத்திவிட வேண்டும்.

முதலில் சிறிதளவு தான் நாம் பார்த்த அந்தத் தீமை போயிருக்கும்.

ஆனால் யாம் இப்பொழுது சொன்ன முறைப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்த பின் அந்த் இரத்தம் இந்த மாதிரி எல்லா இடங்களுக்கும் போனவுடனே என்ன ஆகிறது…?
1.அந்தச் சிறிதளவு போன தீமையை இங்கேயே தடுத்து விடுகிறோம்…!
2.சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

அதே சமயத்தில் நம் கண்ணில் இருக்கக்கூடிய கருவிழியில் இருக்கக்கூடிய அந்த கண்மணி… அந்த கண்ணின் மணியிலிருந்து தான் நாம் பார்க்கும் படங்களை எல்லாம் தெரிந்து கொள்கிறோம்.

அதிலே அந்தக் கண் மணிகளிலே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும் என்று சுத்தப்படுத்த வேண்டும். ஏனென்றால்…
1.அந்தக் கருமணி வழிக்கூடித் தான்…
2.கண்ணுடன் சேர்ந்த நரம்பு மண்டலம் வழியாக
3.உடலில் உள்ள எல்லா இடங்களுக்கும் நாம் பார்த்த… கேட்ட.. நுகர்ந்த… உணர்வுகளைப் பரவச் செய்கிறது.

அந்தக் கண்ணை இணைத்த நரம்பு மண்டலம் வழி உடல் முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும் என்று செல்கிறது.

நம் உடல் முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் படர்கிறது. நல்ல உணர்வுகள் வலிமையாகின்றது. தீமைகள் சிறுத்துவிடுகிறது.

இந்த முறைப்படி எல்லோரும் இதை எடுத்து உடனுக்குடன் தூய்மைப்படுத்தலாம்… இதில் ஒன்றும் சிரமமில்லை…!

திட்டியவனைத் திரும்ப எண்ணுகிறோம்… அடுத்த கணம் அந்தது நமக்குள் வராமல் இப்படித் தடுத்துக் கொள்கிறோம். இதை நீங்கள் செய்து பழக வேண்டும்.

எங்கள் உடலில் உள்ள நரம்பு மண்டலம் முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும்… நரம்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும் என்று நினைவைக் கொண்டு வர வேண்டும்.

1.ஆக… ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் வினையாகிறது.
2.அந்தத் தீய வினைகள் நமக்குள் சேராதபடி இப்படித் தடுக்க வேண்டும்.
3.தீமைகளைத் தடுத்து அதை நிறுத்திப் பழக வேண்டும்.

அதற்குத்தான் இந்தப் பயிற்சி…!

யாரையும் குறை காண வேண்டாம். அருள் உணர்வைப் பெருக்கினாலே போதும். மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கின்றார்கள் என்பது தேவை இல்லை.

அன்று வியாசர் வெளிப்படுத்திய கருத்துக்களை மந்திர ஒலிகளாக வேதங்களாக மாற்றி விட்டனர்.

ஆதிசங்கரர் கொடுத்த அத்வைதத் தத்துவத்தை ஏற்காத துவைதவாதிகள் அவருக்கு ஏவல் செய்தனர். ஆனால் அதிலிருந்து விடுபட்டார். இதே போல் தான் அப்பருக்கும் ஏவல் செய்தார்கள்.

agastya-rishi-pindam

அகஸ்தியன் பெற்ற பச்சிலை மணங்களையும்… மலர்களின் மணங்களையும்… கனிவர்க்கங்களின் வாசனகளையும்… நுகரும் தியானப் பயிற்சி

ஒருவன் வேதனைப்படுகின்றான் என்று வைத்துக் கொள்வோம். ஒரு பண்புள்ள மனிதன் அதைப் பார்க்கும் நிலையில் அந்த வேதனைப்படும் உணர்வை நுகர்ந்த பின் இவனுடைய உணர்வுகளும் இருன்டுவிடுகிறது. 1.அவனைக் காக்க எண்ணுகின்றான் 2.ஆனால் அதே உணர்வு இங்கே இருண்டு விடுகின்றது. 3.அந்த உண்மையை அறிய முடியாத நிலைகளில் இவன் உடலுக்குள்ளும் அந்த உணர்வுகள் ஊடுருவி விடுகின்றது.

ஆனால் பலருக்கும் இதைப் போல உதவி செய்யும் நிலையில் பிறருடைய துயரங்களை எண்ணி ஏங்கும் பொழுது அவர்கள் படும் துயரமெல்லாம் இங்கே வந்து இவன் சிந்திக்கும் தன்மையும் குறையத் தொடங்குகிறது.

ஏற்கனவே நல்லது செய்திருந்தாலும் அதைச் செய்ய முடியாத நிலைகளில் “எல்லோருக்கும் நல்லது செய்தேன்… என்னை ஆண்டவன் சோதிக்கின்றானே…!” என்று சொல்லிக் கொண்டு அவன் நல்லதையே செய்வதையே மறக்கின்றான்.

எதைச் செய்து என்ன புண்ணியம்..? அப்படியே நாசமாகப் போகட்டும்..! அவன் கடைசி உணர்வாக இதை எடுத்துக் கொள்கின்றான்.

ஆகவே இதைப் போன்ற உணர்வு வரப்படும் பொழுது எந்த நல்லதைச் செய்ய வேண்டும் என்று எண்ணினார்களோ பிறருடைய வேதனைப்படும் உணர்வை நுகரப்படும் பொழுது நல்ல குணங்கள் அனைத்தும் மடிந்து விடுகின்றது.

பின் அவனைப் போல் வேதனைப்பட்ட உணர்வை நுகர்ந்து நமக்குள் நோயாகும் நிலையும் தவறு செய்பவனாகவும் மாற்றிக் கொண்டே இருக்கும்.

இதை எல்லாம் மாற்ற வேண்டுமல்லவா..!

இதை எல்லாம் மாற்றி அமைத்தவன் அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆன அந்த உணர்வை எடுத்து நம் உடலிலே அடிக்கடி பெருக்குதல் வேண்டும்.

கடும நோயாக இருந்தாலும் இப்பொழுது பதிவு செய்த இந்த உணர்வின் வலு கொண்டு இந்தக் காற்றிலுள்ள நல்ல மணத்தை நுகரலாம்.

செடி கொடிகள் எந்த உணர்வின் சத்தைப் பெற்றதோ அந்த உணர்வின் துணை கொண்டு அந்தத் தாய்ச் செடியின் மணத்தைக் காற்றில் கலந்திருப்பதனால் அதிலே விளைந்த வித்து புவியின் துணை கொண்டு அது கவர்ந்து அதே உணர்வுகள் அதே மணம் அதே குணமாக வளர்க்கின்றது.

இதைப் போல… 1.அன்று வாழ்ந்த அகஸ்தியன் தன் உடலிலே பல பச்சிலை மூலிகைகளை எடுத்து 2.அவன் உடலிலே விளைய வைத்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து இந்தப் பூமியில் அலைகளாகப் படர்ந்துள்ளது 3.அதை எல்லோரும் பெற முடியும்… அதைப் பெறக்கூடிய தகுதியாகத் தான் இப்பொழுது உபதேசிக்கின்றோம்.

இந்த உணர்வின் தன்மையைப் பதிவாக்கிக் கொண்டு உங்கள் நினைவைக் கூட்டினால் அகஸ்தியன் பல நோய்களைப் போக்கிய உணர்வை இந்தக் காற்றிலிருந்து நீங்களும் பெற முடியும். 1.அந்த அகஸ்தியன் உணர்வை நுகர்ந்தால் 2.அதிசயக்கத் தக்க நிலைகளில் உடல் உறுப்புகளை மாற்றமடையச் செய்யும்… 3.அறியாது வந்த நோய்களையும் மாற்றியமைக்கலாம். 4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெருக்கி இந்த உடலுக்குப் பின் ஒளியின் சரீரமும் பெறலாம்.

அதே சமயத்தில் உடலில் சில உபாதைகள் இருக்கும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ண முடியாது போய்விடுகின்றது. அப்பொழுது அந்த வேதனை உணர்வுகள் வரும் பொழுது தீய அணுக்களைத் தான் நமக்குள் வளர்க்க முடியும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் விடுபட இப்பொழுது அந்த அகஸ்தியனின் உணர்வைப் பதிவாக்குகின்றோம்… பயிற்சியும் கொடுக்கின்றோம்.

இங்கே சொல்லும் நிலைகளில் நீங்கள் பெற்றதை 1.ஞானகுரு நமக்குச் சொன்ன வழியில் நாம் இதைப் பெற்றோம்… 2.தீமைகளையும் நோய்களையும் நீக்கிடும் அந்த வலிமை பெற்றோம்… 3.அருளைப் பெற்றோம் இருளை நீக்க முடியும்… 4.பிறவியில்லா நிலையை அடைய முடியும்…! என்று உங்கள் ஊக்கமான உணர்வுகளை 5.உங்கள் நண்பர்களிடத்திலேயோ சொந்தபந்தங்களிடத்திலோ அவர்களுக்குள்ளும் பதிவு செய்யுங்கள். 6.அந்த நினைவு அவர்களுக்கும் வரட்டும்… அவர்களும் அந்த உயர்ந்த நிலைகளை பெறட்டும்.

இதை எல்லாம் நீங்கள் பழக வேண்டும். ஏனென்றால் இன்று உலகம் முழுவதுமே விஷத் தன்மைகள் பரவிக் கொண்டிருக்கிறது.

இந்த விஷத் தன்மைக்குள் மறைந்து தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வும் இருக்கின்றது. அதைப் பிரித்து எடுப்பதற்குத்தான் உங்களுக்கு இந்தப் பயிற்சியைக் கொடுக்கின்றேன் (ஞானகுரு).

எத்தனை விதமான உணர்வுகள் இருந்தாலும் ரோஜாப்பூ தன் நறுமணத்தை எடுத்துக் கொள்கின்றது. எத்தனை விதமாக இருந்தாலும் கருகப்பிள்ளைச் செடி தான் கவர்ந்து கொண்ட உணர்வின் சத்துக்கொப்ப அது காற்றிலிருந்து பிரித்து எடுத்துக் கருகப்பிள்ளைச் செடியாக மாறுகிறது.

இப்படி ஒவ்வொரு தாவர இனங்களும் அது அது தன் தன் சத்தைப் பெறுவது போல உங்களுக்குள் அந்தத் துருவ நட்சத்ததிரத்தின் அருள் உணர்வைப் பெருக்கப்படும் பொழுது விஷத்தின் தன்மையைத் தடுக்கும் தன்மை உங்களுக்குள் வரும்.

நீங்கள் இதைப் பழகிக் கொண்டால் உங்கள் ஆன்மாவில் இதைப் பெருக்கப்படும் பொழுது “ரிமோட்…!” உள்ளுக்குள் புகாதபடி செய்யும்.

ஈஸ்வரா…! என்று எண்ணினால் இதன் வழி உள்ளுக்குள் போகாதபடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு வலுக் கொண்டதாக நிற்கும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணினால் சுத்தப்படுத்திக் கொண்டேயிருக்கும். நமக்குள் நல்ல உணர்வை நாம் பெருக்க முடியும்.

கொஞ்ச நாள் இந்தப் பழக்கத்திற்கு வந்துவிட்டால் அந்த இயற்கையின் உண்மையின் உணர்வை நாம் பெறலாம். இந்த உடல் வாழ்க்கைக்குப் பின் பிறவியில்லா நிலையும் அடையலாம்.

இந்த அருள் சக்தி பெறவேண்டும் என்று உங்களுக்கு உபதேசித்த உணர்வை நீங்கள் பெறுவதற்குத்தான் உங்களுக்கு அனுபவரீதியில் கொண்டு வந்தது.

இதை ஒவ்வொரு நாளும் அதிகாலையில் கண்களை விழித்தவுடனே (குளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை) உங்கள் ஆன்மாவில் உள்ள நாற்றத்தை நீக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உடலிலே சேர்த்தால் உங்கள் ஆன்மா தூய்மையாகின்றது. நல்ல நறுமணங்களும் மகிழ்ச்சியும் வரும்.

இப்பொழுது அகஸ்தியன் பெற்ற அந்தப் “பச்சிலை மூலிகைகள்” அவனில் விளைந்து அந்த அருள் சக்தி படர்ந்து கொண்டிருப்பதை நீங்கள் நுகர்கின்றீர்கள். அந்த அகஸ்தியன் பெற்ற பேரருளை நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கி இருங்கள்.

அகஸ்தியன் பெற்ற விஷத்தை நீக்கிய அந்தப் “பச்சிலைகளின் மணங்கள்” நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று ஏங்கிச் சிறிது நேரம் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிருடன் ஒன்றி ஈஸ்வரா… என்று ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியன் பெற்ற அவன் அறிந்துணர்ந்த அந்தப் “பச்சிலை மணங்கள்” நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் இரத்த நாளங்களிலே கலக்க வேண்டும் என்று எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது… 1.அந்தப் பச்சிலையின் மணங்கள் வரும்… 2.உங்களால் நுகர முடியும்… நுகர முடிகிறது என்றால் 3.உங்கள் வாயிலே உமிழ் நீராக மாறும் பொழுது உணர முடியும்…!

அகஸ்தியன் கண்டுணர்ந்த உணர்வுகள் இந்தக் காற்று மண்டலத்தில் நமக்கு முன் படர்ந்துள்ளது. அவன் பெற்ற உண்மையின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்துள்ளோம். அதனின் நினைவு கொண்டு இதனைப் பிரித்து எடுங்கள்.

ரேடியோ டி.வி அலைகள் எந்த ஸ்டேசனை வைக்கின்றோமோ… அதைப் பிரித்து எடுக்கிறது. அதைப் போல் அகஸ்தியனின் உணர்வைப் பெறும் தகுதியை உங்களுக்குள் ஊழ்வினை என்ற வித்தாக ஊன்றப்பட்டுள்ளது.

அந்த அகஸ்தியன் பெற்ற அருளை நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கிப் பெறுங்கள். அவன் நுகர்ந்த பச்சிலையின் மணங்களை நுகர்ந்து எப்படி இருளை அகற்றினானோ அந்த உணர்வை நீங்கள் பெறுவதற்கு மீண்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றேன்.

1.அகஸ்தியன் கண்டுணர்ந்த பல பச்சிலைகள் மூலிகைகளின் மணங்கள்… அந்த அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் 2.அகஸ்தியன் தனக்குள் இருளை அகற்றிடும் உணர்வை விளைய வைத்து… அவனின்று வெளிப்பட்ட அந்த உணர்வுகளையும் 3,நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள். 4.இப்பொழுது அந்தப் பச்சிலையின் மணங்கள் உங்களுக்குள் வரும். நுகர்ந்த அந்த மணங்கள் உங்களுக்குள் உமிழ் நீராக மாறும்… வாயிலே அந்தச் சுவைகளை உணரலாம்.

எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்கே இந்தப் பயிற்சியைக் கொடுக்கின்றேன் (ஞானகுரு). எல்லோரும் பெற வேண்டும் என்று உங்களுக்குள் அந்த ஆசையைத் தூண்டுகின்றேன்.

நம் பூமியிலே எத்தனையோ வகையான மலர்கள் உண்டு. மனிதர்களின் பிணியைப் போக்கக்கூடிய மலர்களும்… மகிழ்ந்து வாழச் செய்யும் மலர்களும் உண்டு.

அதிலிருந்து வளர்ந்த உணர்வினை நறுமணங்களை சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது. ஆகவே அந்த மலர்களின் மணங்களை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியிலிருக்கும் ஈசனிடம் ஏங்கிக் கண்களை மூடித் தியானியுங்கள்.

இப்பொழுது உங்களுக்கு… 1.மல்லிகை மணமோ 2.மனோரஞ்சித மணமோ 3.ரோஜாவின் மணமோ 4.தாமரையின் மணமோ கிடைக்கும்.

மலரைப் போல் மணம் பெறவேண்டும்… அந்த மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா..! என்று ஏங்கித் தியானியுங்கள். இப்பொழுது… 1.மருக்கொழுந்தின் வாசனையும் சந்தனத்தின் நறுமணமும் கிடைக்கும். 2.அதே சமயத்தில் நுகர்ந்த உணர்வுகள் உங்கள் வாயிலே உமிழ் நீராகவும் 3.அந்தந்த மலரின் சத்தும் சுவையாகக் கிடைக்கும்.

இதை எல்லாம் இந்தக் காற்றிலிருப்பதை நாம் ஈர்க்கும் தன்மை அது கிடைக்கின்றது. இதை எல்லாம் பழகிக் கொண்டால் உங்கள் வாழ்க்கையில் 1.அவ்வப்பொழுது நறுமணங்கள் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானித்தால் 2.அந்த நேரத்தில் எல்லாம் உடனே கிடைக்கும்.

சிலருக்குச் சங்கடமும் சலிப்பும் இருந்தால் அவர்களுக்கு இதைத் தடைப்படுத்தும். அதை எல்லாம் மாற்றி அமைக்க என்ன செய்ய வேண்டும்…?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாங்கள் பெறவேண்டும் அகஸ்தியன் பெற்ற பேரருளை நாங்கள் பெறவேண்டும் அந்த மலர்களின் மணம் பெற வேண்டும் மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெறவேண்டும் என்று இதனின் உணர்வை அடிக்கடி பெருக்கிப் பழக வேண்டும். 1.காற்றில் இருப்பதை நாம் நுகர்ந்து 2.நம் உடலிலுள்ள இரத்த நாளங்களிலே கலந்து பழக வேண்டும்.

கனி வகைகளில் வெளிப்பட்ட மணங்கள் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது. கனியின் மணங்கள் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது உங்களுக்குள் 1,மாம்பழங்களின் மணமும் 2.கொய்யாவின் மணமும் 3.பலாப்பழத்தின் மணமும் வந்து கொண்டே இருக்கும்.

இந்தக் காற்றிலே பலவிதமான கனிகளின் மணங்கள் படர்ந்துள்ளது. அந்தக் கனிகளின் மணங்கள் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள். இதன் மூலம் கனிகளின் மணங்களையும் நாம் நுகர முடியும்.

ஏனென்றால் இந்தக் கனி வர்க்கங்களையும் நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் உணவாக உட்கொண்டு வளர்ந்து வந்தவர்கள் தான் பல நிலைகளில். அதனால் வந்த அணுக்களும் நமக்குள் உண்டு.

அதனின் உணர்வின் தன்மை பெறப்படும் பொழுது இப்பொழுது மனிதனாக ஆன பின் அந்த உணர்வை நுகர்ந்தறிய முடியும். இந்தப் பிறபஞ்சத்தின் உண்மையையும் உணர முடியும்.. அகஸ்தியன் கண்ட அகண்ட அண்டத்தின் ஆற்றலையும் அறிய முடியும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு இப்படித்தான் காட்டினார். அதன் வழிகளிலேயே தான் உங்களுக்கும் பெறச் செய்கின்றோம்.

North and south pole changes

நம் பூமியின் துருவங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

ஆவியாகி… நீராகி… பிம்பமாகி.. மீண்டும் ஆவியாகி… நீராகி.. பிம்பமாகி…! முடிவில்லா மூன்று நிலைகளின் வட்டம் தான் இன்றுள்ள நிலை.

அன்று சித்தர்களினால் பண்டைய இராமாயணக் காவியங்களிலும் இன்னும் பல புராணங்களிலும் உள்ள உள் கருத்தை ஊன்றி நாம் அறிந்தோமானால் கதையாகப் படைக்கப்பட்டு உள் ஞானத்தின் சத்தை எடுத்து ஆய்ந்து பார்த்தோம் என்றால் “அதன் வடிகாலிலிருந்து பல உண்மைகளை நாம் அறியலாம்…”

இந்த உலகில் வட துருவ தென் துருவ நீர் நிலையினால் தான் இந்த உலகமே சுழன்று ஓடிக் கொண்டுள்ளது… வளர்ந்து கொண்டுள்ளது.

இந்தப் பூமியில் உள்ள விஷ அமில குணங்களைத் தன்னுள் ஈர்த்து இன்றைய மனிதனுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் வாழ வைக்கக்கூடிய திசை தான் வடதிசையும் தென் திசையும். 1.ஆனால் வட திசையை எதற்கும் ஆகாததாகச் சகுணம் பார்க்கின்றான் 2.தீயவை தீயவையுமல்ல… நல்லவை எல்லாம் நல்லவையுமல்ல…!

“சிவன் விஷத்தை உண்டு…” தன் கழுத்திற்குக் கீழ் அது செல்லாமல்… தன் கழுத்திலேயே பாம்பாக வைத்துள்ளார்…! என்ற தத்துவத்தின் உண்மை என்னப்பா…? 1.வட துருவம் விஷக் காற்றுக்களை ஈர்த்து வைத்துக் கொண்டு மற்ற பாகங்களில் அதைப் பரவாமல் 2.விஷ குண அமிலத்தையே நன்மையாகச் செயல்புரிகிறது வட துருவ தென் துருவ திசைகள்.

வட துருவத்தையே ஈஸ்வரனாக்கிப் பாற்கடலில் பள்ளி கொண்டு அவரின் செயல் சிலாக்கிய முறைகளை எல்லாம் தத்துவக் கதைகளில் பிம்பத்தை உணர்த்திப் பிம்ப நாம காவியம் படைத்தார்கள் நம் முன்னோர்கள்.

நம் பூமியில் இந்தக் கோடிக்கணக்கான ஆண்டு சுழற்சி வட்டத்தில் பூமியின் சத்துப் பலனை இதற்கு முன்னாடி நம் பூமி பெற்றது. ஆனல் இப்பொழுது உள்ள காலகட்டத்தில் அறிவின் வளர்ச்சி கொண்ட மனிதனால் நம் பூமியின் நிலையே பட்டுப் போன மரத்தைப் போல் உள்ளது. 1.பல ஆண்டுகள் பலன் தந்து தன் சக்தி வலுவிழந்து நிற்கும் 2.பட்டுப் போன மரத்தைப் போன்ற நிலையில் தான் நம் பூமியின் உள் ஜீவ நிலை உள்ளது.

பலனை எல்லாம் தந்தது. அந்தப் பலனை நாம் பலவாகப் பிரித்து எடுத்துவிட்டோம். பின் இன்றைய நிலை எப்படியப்பா இருக்கும்..?

நம் பூமியின் வட துருவ தென் துருவ திசைகளிலும் அதிகப்படியான விஷத் தன்மையின் நிலையினால் அதை வடிகட்டி இது நாள் வரை நம் பூமிக்குச் சுத்தமாக்கித் தந்த காற்றின் நிலையே இன்று மாறி விட்டது.

வட துருவமும் தென் துருவமும் எப்படிக் விஷக் காற்றைத் தன்னுள் எடுத்துச் சுத்தப்படுத்தித் தருகிறது என்பீர்…?

மாம்பழத்திலும் இன்னும் சில வகைப் பழங்களில் அதன் உள் கொட்டை எப்படிக் கசப்பாகவும் பழங்கள் இனிப்பாகவும் உள்ளன…?

அதைப் போல் நம் பூமியின் இயற்கையே இந்தக் கரியமில வாயுவான விஷ அமிலக் காற்றைச் சுத்தப்படுத்தி வெளிப்படுத்தும் மையக் கோளங்களாக இந்த வட துருவ தென் துருவ நிலையுள்ளது. அதன் அமிலப் படிவமே மீண்டும் உறைந்து பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.

மாற்றங்களின் வழித் தொடரிலும் நம் பூமியின் விஷ அமில குணத்திலும் அதிகப்படியான வளர்ச்சி நிலை ஏற்பட்டுள்ளதினால் வட துருவ தென் துருவ செயல் நிலையிலும் “இந்த விஷத் தன்மை அதிகப்பட்டு விட்டது…!”

எதுவுமே… அதனதன் வளர்ச்சி நிலைக்கொப்ப தன் இயற்கையுடன் தானாக வளர்ந்து “ஒரு நிலையான வழி முறையுடன் வழி நடந்தால் தான்…” அதன் நிலையில் ஒன்று போல் இருக்க முடியும்.

குழந்தைப் பருவத்தில் அந்தந்த வயதுக்குகந்த அறிவு ஞான வளர்ச்சியை எப்படி வளர்த்துக் கொண்டு எந்த அறிவு செயல் முறை மனிதனாக வழி பெற்று அவன் வாழ்கின்றானோ அதன் தொடர் வாழ்க்கை தான் அவனால் வாழ முடியும்.

1.எண்ணத்திற்கு மேல் செயலை ஏற்றினால் செயல் முறையில் நிறைவைக் காண முடியுமா…? 2.அதிகப்படியான எண்ணச் சுமையை ஏற்றப்படும் பொழுது பைத்தியம் தான் பிடிக்கும் அந்த மனிதனுக்கு…! 3.அதைப் போன்ற நிலை தான் நம் பூமியில் வட துருவ தென் துருவ திசைகளுக்கு ஏற்பட்டுள்ளது.

அதனின் விளைவுகள் தான் சீதோஷ்ண நிலை மாற்றம்… பருவ நிலை மாற்றம்… அதிக வெயில் அதிக மழை அதிகக் குளிர்… எல்லாமே..!

ஒரு சமயம் ரிக் வேதம் கற்றுக் கொடுக்கும் வாத்தியார் நடந்து வந்து கொண்டிருக்கும் பொழுது அவர் குடுமியைப் பிடித்துத் தூக்கி அடிக்கத் தொடங்கினார் ஈஸ்வரபட்டர். 

ஏண்டா தப்புத் தப்பாக வேதத்தைச் சொல்கிறாய் என்று அவரை வாயில் வராத வார்த்தையைச் சொல்லித் திட்டினார். 

பின் ரிக் வேதத்தைச் சுருதி மாறாமல் மேலிருந்து கீழேயும் திருப்பிக் கீழிருந்து மேலேயும் அப்படியே பாடிக் காட்டினார் ஈஸ்வரபட்டர். மேலும் ஒவ்வொன்றும் எப்படி உருவாகிறது என்பதை ஆதியிலிருந்து விளக்கிக் கூறினார். 

அந்த வாத்தியார் அடியை வாங்கிக் கொண்டு பின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு சென்றார். மறு நாள் என்னிடம் (ஞானகுரு) வந்து “இவர் ஒரு ரிஷிப் பிண்டம்… குருநாதராக நீங்கள் பெற்றது உங்கள் பாக்கியம்..” என்றார்.

அதிகாலை துருவ தியானத்தில் கவர வேண்டிய அபூர்வ கக்திகள் - VIDEO

Play Video
என்னைப் போல் நீங்களும் பூமியைச் சமப்படுத்த வேண்டும்
நீங்கள்

எல்லோரும் பல கோடி அகஸ்தியராக

வளர்ந்து காட்டிட வேண்டும்

நீங்கள் ஒவ்வொருவரும் உலகுக்கு எடுத்துக் காட்டாக வர வேண்டும்