“நீலவண்ண உயிராத்மாவாக…” எப்படி ஆகவேண்டும்…?

Image

om vinayakar

“நீலவண்ண உயிராத்மாவாக…” எப்படி ஆகவேண்டும் 

 

“மெய்யை மெய்யால் உணர்தலும் ஒன்று…
அறிவை அறிவால் அறிதலே நன்று…!
1.கோடாயுதம் கொண்டு மத்தகத்தால் தகர்க்கப்பட
2.மேலாம் அறிவு சித்தித்தது…! என்பது மெய்ப் பொருள் காணும் நிலை.

வழிவழியாக வந்த இந்தத் தத்துவங்கள் அனைத்தும் “குருவால் உபதேசிக்கப்பட வேண்டும்…!” என்று மறைபொருள் ஆக்கப்பட்டுவிட்டது. குரு என்பவன் மெய்ப் பொருளின் உண்மையை நாடிக் கோபம் சுடு சொல் தவிர்த்து மெய் ஞானம் உரைத்தலே நன்று.

ஆனால்
1.இனிய சொல்லால் வார்த்தைகள் ஆடி (ஏமாற்றும் நிலை)
2.நிலையற்ற பொருள் செல்வத்தை அடைவதிலும் அல்லது அதை அளிப்பதற்கும்
3.தான் ஒரு கருவியாகச் செயல்படும் எண்ணத்தையும் தவிர்த்திடல் வேண்டும்.

ஆக தான் பெற வேண்டியதைப் பெற்றே உயர்த்திடும் வழியாகப் பேரருள் செல்வத்தைப் பெற்றிடவே பூமியின் ஈர்ப்புப் பிடிப்பில் சிக்குண்டுவிடும் எண்ணச் செயல்களை எல்லாம் களைந்திடல் வேண்டும்.

குரு என்பவன் மெய்ப் பொருளை வாய்மையால் உபதேசிக்கும் நிலையில் நின்று அறிவின் அமைதிக்கு வழி காட்டிட வேண்டுமப்பா…!

ஆனால் இன்றைய குருமார்கள் செல்வத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். எந்தச் செல்வத்தைக் கண்டுபிடிக்கப் போகின்றார்கள்…?

வாழ்க்கை நிலையில் அருள் செல்வம் பெற்று உயர் நிலை பெறவேண்டியவன்…
1.செல்வச் செழிப்பை எண்ணத்தில் கொண்டு…
2.அதி ஆசைக்குத் தன்னையே அடகு வைத்து…
3.உயர் ஞானத்தால் ஆத்ம பலம் பெற்றிட வழிகாட்ட வந்த உபதேசியின் (குரு) நிலை எல்லாம்
4.குறி சொல்பவனின் நிலை ஆகிவிட்டது…!

அந்த நிலை நமக்கு வேண்டாம். “நான் தான்…!” என்ற நிலையே உயர் ஞான வளர்ப்பிற்குத் தடைக்கல் ஆகிவிடும்.

அறிவை அறிவால் அறிவது என்பதே தத்துவப் பொருள் காட்டப்பட்ட உண்மையின் சாரங்களைக் கைக் கொள்ள வேண்டும் என்பதே.

ஆகாரத்தை நாம் உண்ணும் நிலையில்… உண்ணும் ஆகாரங்களின் சுவை குணம் மணத்திற்கொப்ப கண்களால் பார்த்து எடுக்கும் சுவாசத்தின் எண்ணத்தால் ஜீரணத்தின் செயல்பாடு தொடங்கினாலும் “வாயின் கடைவாய்ப் பகுதியில் நடைபெறும் ஓர் சூட்சமம் உள்ளது…!”

ஓ…ம் என்ற வடிவத்தின் நாதமாக ஆகாயவெளி உயிரணுக்களின் கலப்பால் அந்த ஓங்கார நாதத்தையே ஒலி கொண்டு ஒளியாக்கும் தொடருக்கு வருதல் வேண்டும்.

மனிதச் சரீர அமைப்பில் சிரசையே ஓ…ம் என்ற வடிவமாகக் கண்ணுற்றுப் பார்க்கலாம். சிரசின் கீழ் தாடைப் பகுதி அசைவதிலும் ஓர் சூட்சமதைக் கண்டு கொண்டு வான இயல் தத்துவத்தையே எண்ணத்தால் உணர்ந்து தெளிந்தவர்கள் மெய் ஞானிகள்.

சிவசக்தியின் அணுக்கள் கலந்திடும் செயலில் கண்டப்பகுதியை (தொண்டை) ஆகாயம் என்றும் அங்கு கலந்திடும் அணுக்களுக்கு “{மஹேஸ்வரன் – லலிதை” என்று சூட்சமப்படுத்திக் காட்டினார்கள் ஞானிகள்.

அதாவது உணவாக உட்கொள்ளும் ஆகாரத்தையே அமில மூலங்களாக” மாற்றி… “பஞ்சேந்திரியங்கள் வழியாகச் செயல்படுத்திடும் நாடிகள் சரீரத்தின் கதியை இயக்குகிறது.

நாம் வழி காட்டிடும் தியானத்தின் தொடரில் உணர்வு (உணர்ச்சிகளாக) கொண்டு எடுத்திடும் ஒளிகாந்த சக்தியின் வீரியம் கொண்டு சரீரத்தில் சக்தியை ஈர்த்துப் பெற்று அதை விளைய வைத்து “நீல வண்ண ஒளி ஆத்மாவாக” ஒவ்வொருவரும் ஆக்கம் பெற வேண்டும்.

1.உடலுக்குள் பரப்பும் சக்திகள் அனைத்தும் மேலான அறிவெண்ணம் கொண்டு
2.உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் தியானமாக ஒன்று குவிக்கப்பட்டு
3.நீல வண்ண ஆத்மாவாக்கிடும் செயலுக்கு – “உந்திடும் விசைத் தன்மையாக”
4.கீழ் தாடைப் பகுதியினுள் அமைவு காட்டப்பட்ட மறை பொருளைத் தெளிவாக்கிவிட்டால்
5.அங்கு செயல்படும் உண்மை தெளிவுறும்…! (நீலகண்டா…! என்று கழுத்தளவில் நிறுத்தி விஷத்தையே ஆக்கச் சக்தியாக மாற்றிடும் பக்குவ நிலை கிடைக்கும்)

தீமை செய்பவர்களுக்கு நாம் பயத்தை ஊட்ட வேண்டும்…

Image

Lord velaudham

தீமை செய்பவர்களுக்கு நாம் பயத்தை ஊட்ட வேண்டும்…

 

தியான வழியில் அன்பர்கள் இருப்பது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உங்கள் வீட்டில் ஏதாவது செய்து கொண்டிருக்கும் போது அதிலே சில கஷ்டங்கள் வந்து விட்டது என்றால்
1.இவ்வளவு நாள் தியானம் இருந்து நீ என்னத்தைப் பார்த்தாய்…? என்று
2.அடுத்தவர்கள் நம்மிடம் உணர்ச்சியைத் தூண்டும்படி சொன்னால் போதும்.

அந்த உணர்வை அப்படியே எடுத்துக் கொண்ட பின்…
1.அட.. ஆமாம்… என்ன வந்தது…?
2.தியானம் செய்து ஒன்றும் கிடைக்கவில்லையே…! என்று
3.அடுத்தவர்கள் உணர்வைத் தான் நமக்குள் வளர்த்துக் கொள்கிறோமே தவிர
4.அவர்களுக்கு எடுத்துச் சொல்லக் கற்றுக் கொள்ளவில்லை.

யாம் (ஞானகுரு) உபதேச வாயிலாகப் பதிவாக்கும் அந்த மெய் ஞானிகளின் உணர்வு கொண்டு உங்களுக்குள் தீமைகள் எப்படி இயங்குகிறது…? இதை எப்படி மாற்ற வேண்டும்..! என்று நீங்கள் திருப்பிச் சொல்லிப் பாருங்கள். (செய்து பாருங்கள்)
1.இந்த உணர்வு நமக்குள் நல்லதை வளர்க்கச் செய்யும்.
2.அடுத்தவர்கள் உணர்வை மாற்றலாம்.

ஆனால் நீங்கள் சோர்வடைந்து உட்கார்ந்திருக்கும் போது ஒருவர் வந்து பற்ற வைத்தால் தீ அது பாட்டுக்க கிளம்பிவிடும். குறைகளைப் பேசிக் கொண்டு இருந்தால் என்ன ஆகும்…? தீமைகளின் இயக்கம் தான் அதிகமாகும்.

உதாரணமாக நீங்கள் நல்ல விஷயங்களையே பேசிக் கொண்டிருந்தாலும் கூட ஒருவர் வந்து நல்லதைச் சொல்லாதபடி “இது அப்படி… அது இப்படி…! அவன் இப்படியே தவறு செய்கிறான்…!” என்ற வகையில் உங்களிடம் சொல்ல ஆரம்பித்தால் உங்கள் நல்லது காணாமல் போய்விடும்.

அவர் சொன்ன உணர்வு உங்களை இயக்கி அந்த விஷத்தின் இயக்கமாகத்தான் வரும். ஏனென்றால் அதற்கு வல்லமை அதிகம். இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் அதிகாலையில் எடுக்கும் துருவ தியானத்தை நீங்கள் மறக்கக் கூடாது.
1.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளி உணர்வுகளை
2.காலை நான்கிலிருந்து ஆறுக்குள் எடுப்பதே துருவ தியானம்.
3.காலையில் கண் விழித்ததுமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை எடுத்து
4.நம் உடலுக்குள் ஆற்றல் மிக்கதாக உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு இடத்தில் நாம் வேலை பார்க்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். தெரியாமல் கை தவறி ஒரு பொருளைக் கீழே விட்டு விடுகிறோம்…. உடைந்து விடுகிறது…!

நம்முடைய மேலதிகாரி ஏதாவது நினைப்பார்கள் என்ற உணர்வு வரப்படும் பொழுது இதை மறைக்கத் துணிவோம். மறைக்க முயற்சிக்கும் போது நம்மை முதலில் குற்றவாளியாகப் பதிவு செய்து வைத்துக் கொள்கிறார்.

ஆனால் அதற்குப் பதிலாக ஆத்ம சுத்தி செய்துவிட்டு மேலதிகாரியிடம் இந்த மாதிரிச் செய்தேன். என் கை தவறி விழுந்து விட்டது
1.இன்னென்ன மாதிரியான சூழ்நிலையில் தான்
2.இந்தத் தவறு ஏற்பட்டது என்று சொல்லி விட்டால் பரவாயில்லை.

அதே சமயத்தில் தவறி விழுந்து விட்டது…! இருந்தாலும் உண்மையைச் சொன்னால் என்ன சொல்வாரோ…? என்று தப்பை மறைக்கும் உணர்வு கொண்டு உடைந்ததைப் பற்றி சொல்லப் போனால் என்ன ஆகும்..?

கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ நீ அதுவாகின்றாய் என்று சொல்வது போல் நம்முடைய எண்ணமெல்லாம் அந்தச் சந்தேக உணர்வு கொண்டு மேலதிகாரியிடம் பயமானவுடனே
1.நாம் தப்புப் பண்ணி இருக்கிறோம் என்ற நம் உணர்வே அங்கே வேலை செய்யும்.
2.அது நம்மைக் குற்றவாளியாகவே ஆக்கும்.
3.இதைப் போன்ற நிலைகளை சில நேரங்களில் நீங்கள் அனுபவமாக நிச்சயம் பார்த்திருப்பீர்கள்.

அதே போல் நம்முடைய குழந்தையே ஒரு தவறு செய்கிறான். சுட்டித்தனம் செய்து எதையாவது உடைத்துவிட்டான் என்றால் உடனே நம்மை அறியாது கோபம் வருகிறது.

எவ்வளவு தான் செல்லமாக குழந்தையை வளர்த்தாலும் கூடக் குறும்புத்தனம் செய்தவுடனே அந்த உணர்வு நம்மை எதிர்த்துத் தாக்கும். அவனை உதைத்தால் தான் என்ன…? என்று உடனே அந்த வேக உணர்ச்சி வரும்.

(உடனே) நம் எண்ணத்தில் என்ன செய்ய வேண்டும் என்றால்
1.ஈஸ்வரா…! என்று ஒரு நிமிடத்திற்குள் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் கலந்து
2.அவனுக்கு நல்ல அறிவு வர வேண்டும் என்று சொல்லிவிட்டு நீங்கள் உதைத்துப் பாருங்கள்.
3.ஆனால் உதைக்க வராது…!

அவனிடம் இந்த உணர்வைச் சொல்லி நீ தவறு செய்ததற்கு நான் உன்னை அடிக்க வந்தேன் அல்லவா…! என்று இந்தப் பயத்தை ஊட்டி நீ தப்பு செய்யாமல் இருந்து நல்லவனாக வர வேண்டும் இந்த உணர்வைக் கொடுத்துப் பாருங்கள்.

நீ இனிமேல் நல்லவனாக வா. இந்த இந்தச் செயல்களை நீ இப்படிச் செய்தாய் என்றால் அது குற்றமாகத்தான் வரும் என்று சொல்லிவிட்டு அவன் குற்ற இயல்புகளிலிருந்து மீட்டுவதற்கு நாம் இப்படிச் சொல்ல வேண்டும்.

1.அப்போது அந்த பயத்தால் அவன் நல்ல உணர்வை நுகரும் வாய்ப்பாகின்றது
2.நாம் சொன்ன நல்ல உணர்வு அவனுக்குள் புகுந்து நன்மையைச் செய்யும்.
3.இப்படி… நாம் தப்பு செய்வதற்கு அந்த இடத்தில் பயத்தைக் கொடுக்க வேண்டும்.
4.தப்பு செய்ததற்குப் பயத்தை கொடுக்கவில்லை என்றால் இன்னும் கொஞ்சம் தைரியம் வரும்.
(இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது)

“ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி என்று நீங்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று குழந்தை குறும்புத்தனம் செய்யப் போகும் போது அதை எடுத்து நாமும் தணித்துக் கொள்ள வேண்டும். அருள் உணர்வுகளை நமக்குள் வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.

எவ்வளவு தான் இருந்தாலும் கூடத் தவறு செய்யும் பொழுது கோபம் வரத் தான் செய்யும். ஏனென்றால் அந்த உணர்ச்சி தூண்டவில்லை என்றால் நாம் அதை அறிய முடியாது.
1.ஆனால் குற்றத்தை அறியும் பொழுது அதைச் சொல்லும் பருவத்தில்
2.நல்லதாகச் சொன்னால் அவனைத் திருத்த முடியும்.

அவன் செய்யும் தவறு நமக்குள் வராதபடி மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று இதை நுகரப்போகும் போது அதை அடக்கி விடுகின்றது. ஞானிகளின் உணர்வின் அறிவாக நாம் சொல்லப்போகும் போது அவனுக்கு அந்த தெளிவாக்கும் உணர்வை ஊட்ட முடியும்.

உப்பு கைப்பாக இருக்கிறது. தனியாகச் சாப்பிட முடியுமா…? முடியாது. ஆனால் குழம்புடன் சேர்க்கும் போது சுவையாக வந்து விடுகிறது.

அதைப் போல் தான் இந்த வாழ்க்கையில் வரும் மற்ற உணர்வுகளுடன் (எதுவாக இருந்தாலும்) அந்த அருள் உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்துச் சுவை மிக்கதாக உருவாக்க வேண்டும். இது தான் கார்த்திகேயா.

பாதுகாப்பான உணர்வுகளைத் தான் நாம் கொடுக்க வேண்டும். மெய் உணர்வின் தன்மையை எடுத்து இப்படிச் சொன்னோம் என்றால் இந்த எண்ணம் மற்றவரை நிச்சயம் பாதுகாக்கும்.

“பிரம்மாவைச் சிறைபிடித்தான்…!” முருகன் என்கிற பொழுது ஆறாவது அறிவின் துணை கொண்டு பாதுகாக்கும் உணர்வின் எண்ணங்களை நமக்குள் உருவாக்கி அத்தகைய சொல்லாகச் சொல்லப்படப்போகும் போது அந்த உணர்ச்சிகள் அது தான் கூர்மை.

அதாவது அடி பெருத்து நுனி சிறுத்து இருக்க வேண்டும் – “வேலாயுதம்…!” அந்தக் கூர்மையின் தன்மைகள் கொண்டு தீமைகளைப் பிளக்கும் தன்மையாக அந்தச் சொல்லாக வரும் என்பதையே வேலாயுதம் என்று ஞானிகள் காட்டினார்கள்.

ஒரு உருவத்தைக் காட்டி அருவத்தின் செயலை நுகர்ந்து நமக்குள் அருவத்திற்குள் இருக்கும் தீமைகளை அடக்கும் வல்லமை பெறுவதைத்தான் ஞானிகள் இவ்வளவு தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்.

“தனுசு கோடி..!” என்ற நிலையில் முடிவான உணர்வு கொண்டு… அருளைப் பெருக்கி அதன் நிலையிலேயே நமது உயிரை இயக்க வேண்டும்…!

Image

dhanuskodi - rameswaram

“தனுசு கோடி..!” என்ற நிலையில் முடிவான உணர்வு கொண்டு… அருளைப் பெருக்கி அதன் நிலையிலேயே நமது உயிரை இயக்க வேண்டும்…!

 

செடி கொடி மரங்களை எடுத்துக் கொண்டால் மற்ற மரங்களின் அடர்த்தி அதிகமானால் இந்த மணம் பட்டபின் அதனின் வளர்ச்சி குன்றுகிறது. இதனுடைய அழுத்தத்தை மாற்றி விடுகிறது.

மேலை நாட்டில் உருவான சௌண்டால் மரத்தை இங்கு கொண்டு வந்து போட்டோமானால் இதனுடைய வளர்ச்சி ஆன பின் பக்கத்தில் இருக்கும் செடிகளின் வளர்ச்சியைக் குன்றச் செய்கின்றது.

ஏனென்றால் இதெல்லாம் இயற்கையின் நியதிகள்.

அது போல் காலையிலிருந்து இரவு வரையிலும் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகளில் “நல்லது…!” என்று நினைத்தாலும் பிறர் படும் தீமையான நிலையும் பத்திரிக்கை டி.வி வாயிலாகப் படிக்கும் எத்தனையோ சம்பவங்களையும் நண்பர்களுடன் கலந்து உறவாடும் உணர்வுகளையும் நுகர நேருகிறது.

பகைமை உணர்வுகளுடனோ பகைமையற்ற நிலையிலோ நாம் பேசினாலும்
1.நுகர்ந்த உணர்வுகள் நம் உயிரிலே பட்டு அந்த உணர்வுகள் உணர்ச்சிகளைத் தூண்டும் போது
2.இரத்தங்களில் கலந்தால் உடலில் உள்ள எல்லாப் பாகங்களுக்கும் அது செல்கிறது.

இந்த உணர்ச்சிகள் நம் இரத்த நாளங்களில் கலந்து கலந்து அதற்குத் தக்க இந்த உணர்வு இரத்த ஓட்டங்களில் ஓடும்போது இது அடங்குகிற வரையிலும்
1.நாம் நிறுத்தினாலும் அல்லது வேறொருவருடய நிலையில் எண்ணத்தைச் செலுத்த்னாலும்
2.இது இரத்தங்களில் சேர்த்து எல்லா அணுக்களுக்கும் எதிர்ப்பான உணர்வு வருகிறது.
3.நல்ல அணுக்களுக்கு எதிர்நிலை ஆகிவிட்டால் அந்த அணுக்களின் வளர்ச்சி குன்றுகிறது.
4.வலியோ வேதனையோ அல்லது நோயாக வந்துவிடுகிறது.

அதை எல்லாம் மாற்றி அமைப்பதற்காகத்தான் உங்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து அதை எல்லாம் நல்லதாக்கும்படி சொல்கிறேன்.

ஆகவே அந்த அருளைப் பெருக்கி இருளைப் போக்கும் சக்தியாக நாம் மாற வேண்டும். இதைத்தான் “நேரமாகி விட்டது…! அதனால் இராமேஸ்வரத்தில் இராமன் மனதைக் (மணலைக்) குவித்துச் சிவலிங்கத்தைப் பூஜித்தான்…!” என்று காட்டியிருப்பார்கள்.

அதாவது எல்லா உணர்வுகளையும் ஒன்றாகக் குவித்தான் என்று பொருள்.
1.ஒரே நாளில் அல்ல.
2.நம் ஆயுள் முடிவதற்கு முன்னாடி ஒவ்வொரு நிமிடத்திலும் இணைந்து வாழும் உணர்வுகளை அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்து
3.வாழ்க்கையில் வரும் கார உணர்வுகளை மாற்றித் “தனுசு கோடி..!” என்ற நிலையில்
4.”முடிவான உணர்வு கொண்டு… அந்த அருள் உணர்வின் தன்மையைப் பெருக்க வேண்டும்…!”
5.அதன் நிலையிலேயே நமது உயிரை இயக்க வேண்டும். அந்த ஒளியான உணர்வின் தன்மையை நாம் அடைய வேண்டும்.

எந்த நாட்டிலிருந்து வந்திருந்தாலும் இங்கே இராமேஸ்வரம் வந்து விடுகிறார்கள். ஆனால் உண்மையின் நிலைகள் தெரியாதபடி எத்தனையோ வகையான நிலைகளில் பிரித்து விட்டார்கள்.

துளசி இராமாயணம் வால்மீகி இராமாயணம் கம்ப இராமாயணம் என்று இன்னும் எத்தனையோ வகையான இராமாயணங்களாக அவரவர்கள் உணர்வுக்குத் தக்க எழுதி அந்தந்த நாட்டிற்குப் பயன்படுத்தி அவர்கள் அரசுக்கு பயன்படுத்தி விட்டார்கள்.

மனித உடலுக்குப் பின் விண் செல்லும் மார்க்கத்தை மக்களுக்கு யாரும் உணர்த்தவில்லை.

இராமாயணத்தைப் படித்தவர்கள் வீட்டிலெல்லாம் பாருங்கள் சண்டை நிறைய இருக்கும். இதைச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்குள் வெறுப்பும் வேதனையும்தான் அதிகமாகும்.

1.ஏனென்றால் சாந்தமும் ஞானமும் கொண்ட பின்
2.நான் எல்லாமும் சொன்னேன்…@ என்ற நிலையில் பிறருடைய உணர்வு அதிகரிக்கும் பொழுது அந்த உணர்வின் இயக்கம் மாற்றிவிடும்.

நாம் பிறருடைய நிலைகளை நுகர்ந்து அறிகிறோம். இல்லை என்றால் அறிய முடியாது. ஆனால் அப்படி அறிந்தாலும் தீமைகள் என்று அறிந்த உடனே உடலுக்குள் தீமைகள் புகுந்து விடாதபடி முதலில் தடுத்து நிறுத்த வேண்டும்.

தங்கத்தில் திராவகத்தை ஊற்றினால் எப்படிச் செம்பும் பித்தளையும் ஆவியாக மாறுகிறதோ அது போல “ஈஸ்வரா…!” என்று உங்கள் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உயிருடன் ஒன்ற வேண்டும்.

ஒரு நிமிடம் ஏங்கிய பின் லேசாகக் கண்களை மூடி எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும். எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் பாய்ச்சிப் பழக வேண்டும்.

நாம் ரசம் வைக்கிறோம் என்றால் வெறும் தண்ணீராகத் தான் இருக்கிறது. அதில் காரம் புளிப்பு எல்லாம் சேர்க்கிறோம். எந்த உணர்வைச் சேர்க்கிறோமோ அந்த உணர்ச்சியை ஊட்டுகிறது.

அது போல நாம் நுகரும் எல்லா உணர்வுக்குள்ளும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக் கலந்து சேர்க்கப்படும் போது அருள் உணர்வின் உணர்ச்சிகள் கலந்த அலைகளாக நம் இரத்தங்களில் கலக்கிறது. ஆகவே
1.அந்தப் பேரருளைப் பெற வேண்டும்.
2.என் உடலிலுள்ள அனைத்தும் பேரொளியாக மாற வேண்டும் என்றால் நாம் அதுவாகின்றோம்.

நம் சுவாசநிலையின் முக்கியத்துவம் – பிராணாயாமம்

Image

“பிராணன்…” (சுவாசம்) பற்றி ஞானிகள் சொன்னதன் உண்மை நிலைகள்

சூரிய கலை சந்திரகலை பிராணாயாமம்

காற்றை இழுத்துப் பிராணாயாமம் செய்பவர்களின் நிலைகள்

நாம் சுவாசிக்கும் உணர்வின் சூட்சம இயக்கங்கள்

நாம் சுவாசிக்கும் பய உணர்வுகளைப் பற்றிய தெளிவான விளக்கம்

நுகரும் உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகிறது..? – 1

நுகரும் உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகிறது..? – 2

நுகரும் உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகிறது..? – 3

சுவாச நிலை – நந்தீஸ்வரன் கணக்குப்பிள்ளை

நல்ல நேரமும் கெட்ட நேரமும்

சுவாசிப்பது எப்படி உமிழ்நீராக மாறி நம்மை இயக்குகிறது..?

சுவாசம் சீரானால் நம் எண்ணம் நம்மைக் காக்கும்

விவசாயி எதைச் சுவாசித்துக் கடுமையாக உழைக்கின்றார்…? இதே காற்றை ஒரு ஆபீஸர் சுவாசித்தாலும் விவசாயி செய்யும் வேலையை  ஏன் செய்ய முடியவில்லை…?

காற்று மண்டலத்திலுள்ள மனித உணர்வின் அலை வரிசைகளின் இயக்கம்

சாக்கடை அருகே இருந்தால் தியானமிருப்பவர்களை அது இயக்காது

சுவாசித்த உணர்வு அமிலமாக உடலுக்குள் இயக்கும் நிலை – நண்டுக்கு நரம்பில்லை

நாம் சுவாசிக்கும் உணர்வு உடலுக்குள் எப்படி விளைகின்றது…?

ஒருவருக்கொருவர் தொடர்பு இல்லாமல் யாரும் இல்லை – புரை உணர்வு

கண் திருஷ்டி கழித்தபின் மிளகாயை நெருப்பில் போட்டால் நெடி வராது

அடக்கி ஆளும் உணர்வுகளின் இயக்கங்கள் – அரசர்கள் வழி வழி வந்தது

ஆன்மாவில் பதிவான உணர்வின் இயக்கங்கள் – வாத்தியார் மாணவன்

இசை, சுருதி, அழுத்தம் உணர்வின் இயக்க நிலைகள்

இயல்பாகவும் இயல்புக்கு மாறாக விக்கல் வருவதன் காரணம்

காரம் குறைவாகச் சாப்பிட்டால் வலு இருக்காது ஜீரண சக்தியும் குறையும்

நாசமாகப் போகவேண்டும் என்று எண்ணும் உணர்வுகளின் இயக்கம்

பிறரின் தீமையான உணர்வுகள் நமக்குள் பதிவாகாதபடி அது இயக்காதபடி தடுத்தல் வேண்டும்

பூனை எலியைத் தன் மணத்தால் காதைத் திருப்பி எப்படிப் பிடிக்கின்றது

சந்தர்ப்பத்தால் நாம் நுகரும் உணர்வுகள் நம்மை எப்படி மாற்றுகின்றது

தன் கஷ்டத்தையெல்லாம் நண்பரிடம் சொன்னால் பாரம் குறையுமா… கூடுமா…?

நம்மால் உதவி பெற்றவர் ஆன்மா நன்றி கடன் தீர்க்க நம் உடலுக்குள் வருவதால் வரும் தீமைகள்

பிறிதொரு தீமை வந்தாலும் அது நமக்குள் தனித்து விளையாது ஞானிகளின் உணர்வை வைத்து உள் அடக்க வேண்டும்

.ரோட்டில் உடைந்த கண்ணாடியைப் பார்த்து கோபப்படுவதால் வரும் தீமைகள்

வெளியிலிருந்து தான் தீமை வருகின்றது – நீ தடுக்க வேண்டுமல்லாவா என்றார் குருநாதர்

பொருளைத் திருடிச் சென்றவன் பிடிபட வேண்டும் என்று எண்ணினால் அவன் பிடிபடுவான்

ஆக்சிடென்ட் ஏற்படக் காரணம் என்ன…?

கடுமையாக ஒருவர் நம்மைத் திட்டி இடைஞ்சல் செய்தால் என்ன செய்ய வேண்டும்…?

சந்தர்ப்பத்தால் வரும் தீமைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

சாது மிரண்டால் காடு கொள்ளாது – மரண பயத்தின் இயக்க உணர்வுகள்

திருடும் நோக்கத்துடன் வருபவர்களிடமிருந்து தப்பும் வழி

தீமை செய்வோரின் உணர்வும், வேதனைப்பட்டோரின் உணர்வும் நமக்குள் வந்தால் என்ன ஆகும்…?

பணத்திற்காகவும், பொருளுக்காகவும் வேதனைப்படுத்தும் மாமியாரின் நிலை என்ன ஆகின்றது…!

பிச்சைக்காரனிடம் இல்லை என்று சொன்னாலும் அவன் மூச்சலையை நுகர்ந்தால் வரும் தீமைகள்

பிச்சைக்காரன் மேல் ஏற்படும் வெறுப்பு நம்மை எங்கே கொண்டு செல்லும்..?

உங்களால் அணுகுண்டையும் செயலிழக்கச் செய்ய முடியும்

உங்கள் கஷ்டத்தை மாற்ற நீங்கள் எண்ணினால் தான் மாறும்

ஒரே எண்ணத்தில் நாம் இருக்க முடியுமா – ஆன்மாவில் பதிவானதன் இயக்கங்கள்

காணாமல் போகும் பொருளைக் கண்டுபிடிக்கும் வழி

பழனியில் ஒரு சர்க்கஸில் யானையின் உடல் வலு, அதை அடக்கிய மனிதனின் எண்ண வலு

வாழ்க்கையின் எல்லை – உங்களை உங்கள் எண்ணம் தான் காக்கும்

Electronic Card மூலம் பரிவர்த்தனை செய்வது போல் நம் உணர்வுகளின் இயக்க நிலைகள்

அதிகம் கோபப்படுபவர்களின் செயலும் முடிவும்

ஒரு இலட்சம் லாட்டரியில் கிடைத்தால் உணர்வின் இயக்கம் எப்படி இருக்கும்…?

கோப உணர்வு நம் உடலுக்குள் எப்படிப் பரவுகின்றது…?

சுவை, நுகரும் உணர்வு, அதற்குத்தக்க சமைக்கும் நிலை

செடியில் உருவாகும் அணு மனிதனின் உணர்வு பட்டால் ஏற்படும் மாற்றம்

நடனக் கலையின் முக்கியத்துவம் என்ன…?

நாம் இயங்கவில்லை நுகரும் உணர்வுதான் நம்மை இயக்குகிறது – மங்களூர் அனுபவம்

நாம் நுகரும் உணர்வுகளால் வரும் தீமைகள்

பதிவாகும் உணர்வின் இயக்கங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

பயம் அதிர்ச்சி ஹிஸ்டீரியா 

CIRCUS செய்பவர்களின் உடல் எலும்புகள் எப்படி வளைந்து கொடுக்கின்றது…?

எதை நுகர்கின்றோமோ அதை வைத்துத்தான் உயிர் நம்மை இயக்குகிறது ஆள்கிறது

சுவாசித்தது நம்மை இயக்கினாலும் நாம் எதை இயக்க வேண்டும்

நம் மூச்சுக் காற்று வழியாக உருவாகும் நோய்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

ஞானிகள் உணர்வைக் கவர்வதற்கும் சாதாரண மனிதன் உணர்வைக் கவர்வதற்கும் உள்ள வித்தியாசம்

சுவாசம் உயர்ந்ததாக இருந்தால் தான் மோட்சத்தை அடைய முடியும் என்று மகாபாரதம் காட்டுகின்றது

நாம் சுவாசிப்பது எது…? நாம் சுவாசிக்க வேண்டியது எது…?

நாம் வெளிப்படுத்தும் சுவாசம் (மூச்சலைகள்) எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்…?

இந்தப் பூமியில் மீண்டும் மீண்டும் நாம் பிறவி எடுத்துச் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டுமா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

Image

Ultimate destination

இந்தப் பூமியில் மீண்டும் மீண்டும் நாம் பிறவி எடுத்துச் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டுமா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

 

புத்தனும் ஏசுவும் முகமது நபியும் அகத்தியரும் போகரும் கொங்கணவரும் ஐயப்பனும் பெற்ற அருளையெல்லாம் இம்மானிட உடலில் பிறந்த எல்லோருமே பெற்றிடலாம்.

இந்நிலையை ஏன் பெற வேண்டும்…! என்ற எண்ணத்தை இனி எண்ணிடாதீர்கள். இப்பொழுது சொல்வது மிகவும் முக்கியம்.
1.சுழன்று கொண்டே உள்ள உலகத்தின் சுழற்சியில் சிக்கிப் பல பல அவதாரங்களை எடுத்து பல உடல்களை எடுத்து
2.உலக ஆரம்ப நிலையில் அல்ல கல்கியில் ஆரம்பித்து கலியில் முடிந்து…
3.திரும்பவும் கல்கிக்கு வந்து திரும்பவும் கலியில் முடிந்து பல பல உடல்களை எடுத்து
4.ஏனப்பா இவ்வுலகத்தில் சுழன்று கொண்டே இருக்க வேண்டும்.

ஜென்மங்கள் வருவது எதனால் என்பது தெரிந்து விட்டது முதலிலேயே உங்களுக்கு…!

இப்பொழுது பெற்றிருக்கும் இவ்வுடலைக் “கடைசி உடல்…!” என்ற எண்ணம் வைத்து இவ்வுடலிலேயே உன்னுள் இருக்கும் ஆண்டவனை நீ புரிந்து கொண்டு
1.மறு ஜென்மம் எடுத்திடும் நிலைக்கு வந்திடாமல்
2.இக்கலியிலேயே உன் நிலையை ஒரு நிலைப்படுத்தி அவ்வாண்டவனின் அருளைப் பெற்று
3.சூட்சும உலகத்திற்கு வந்துவிட்டால் அடுத்த கல்கி பிறந்து கலி வந்து முடியும் வரை பல ஜென்மங்கள் எடுத்து அவதிப்பட வேண்டியதில்லை.

சூட்சும உலகத்தில் இருந்து கொண்டே எவ்வுடலையும் உன் நிலைக்கு எடுத்துக் கொள்ளலாம். அவ்வுடலில் உன் நிலைக்குச் செய்யும் சேவையை முடித்துக் கொண்டு மறு உடலையும் எடுத்துக் கொள்ளலாம்.
1.பிறந்து வளர்ந்து பல நிலைகளில் மாறுபட வேண்டியதில்லை.
2.அந்நிலைக்கு வந்து வாழ்வது… “என்ன சோம்பேறி வாழ்க்கையா…?” என்று எண்ணிவிடாதே…!

அந்த வாழ்க்கை நிலையில் இம்மனித உடலுக்கு… இம்மானிட மக்களுக்கு… நல் வழி புகட்டி நல்லாசியை அளித்திடத்தான்
1.அவ்வாண்டவனின் அருளைப் பெற்று
2.நீ ஆண்டவனாக இருந்திடு…! என்று சொல்வதெல்லாம்.

திரும்பவும் சொல்கின்றேன்……! இக்கலியில் இப்பொழுது பெற்றிருக்கும் கடைசி உடல் தான் உங்களுடைய உடல்கள். இந்நிலையில் இருந்து நீங்கள் மாறுபட்டால்
1.வந்திடும் எதிர்ப்பையும் எண்ணத்தின் மாற்றத்தையும் வைத்து மாறுபட்டால்
2.அடுத்த மானிட உடல் இல்லையப்பா… மனித உடல் இல்லையப்பா…!
3.மிருக உடலுக்குத்தான் செல்ல முடியும்.

உமக்கு ஆண்டவர் எடுத்து கொடுத்த சந்தர்ப்பத்தில் கடைசிச் சந்தர்ப்பம். இது இந்நிலையை மாற்றி விடாதீர்கள்.

நான் பயமுறுத்துகிறேன்…! என்று எண்ணிடாதீர்கள். உங்கள் சுவாச நிலையை ஒரு நிலைப்படுத்துங்கள் நல் வழியில். அழியாத நிலை பெற்றுக் கல்கியில் கலந்திடுங்கள்…!

கடவுளைக் காண்பது பற்றி ஒவ்வொரு ஞானியும் சொன்னது…!

Image

God exists

கடவுளைக் காண்பது பற்றி ஒவ்வொரு ஞானியும் சொன்னது…!

 

இன்று சினிமாக்களில் காட்சிப் பொருளாக வேஷமிட்டு அதன் உணர்வை நிஜமாக நடப்பது போல் காட்டுகின்றார்கள். நாமும் பார்க்கின்றோம். அந்த உணர்வை வளர்க்கவும் செய்கின்றோம்.

அதைப் பெறுவது போல மதங்களின் அடிப்படையில் தெய்வங்களை வணங்கி அதற்குண்டான சாங்கியங்கள் சாஸ்திரங்கள் செய்து அதை வளர்த்துக் கொண்ட பின் மனிதன் மடிந்தால் என்ன ஆகின்றது…?

மனித உணர்விற்குள் மதத்தால் இனத்தால் உருவாக்கப்பட்ட உணர்வின் தன்மைகள் கொண்டு
1.உருவமாகத் தெரிவதைக் கவரப்படும் பொழுது
2.அது அருவ நிலைகளாக மனிதனுக்குள் விளைந்து
3.அதே உணர்வின் இயக்கமாகக் கடவுளாகக் காட்டுகின்றது.

எந்தெந்த குணத்தின் உருவமாக அவரவர்கள் வாழ்ந்த காலத்தில் பூஜித்து வணங்கினார்களோ அந்த உணர்வின் செயலாகவே செயல்படுகின்றது. மற்றவர்களுக்குள் அந்த உணர்வின் அலைகள் வந்து காட்சியாகவும் தெரிகின்றது. அது உண்மையான கடவுள் அல்ல.

ஆகவே மனிதனைப் பேணிக் காக்கும் உணர்வின் தன்மையை அந்த உயர்ந்த குணங்களை எடுத்து அவன் உயர வேண்டும் என்ற உணர்வை நீ எடுத்தால் அதன் உணர்வே உன்னைத் தெளிவாக்கும் என்று இராமகிருஷ்ண பரமகம்சர் சொன்னார்.

அவர் சீடரான விவேகானந்தரும் அதைத் தான் செய்தார். நீ தெய்வமாக வேண்டும் என்றால் உயர்ந்த உணர்வின் தன்மை கொண்டு மற்றவர்கள் – அவர்கள் உயர்ந்து வாழ வேண்டும் என்று நீ எப்பொழுது எண்ணுகின்றாயோ அன்று நீ மனிதன் என்ற நிலையை அடைகின்றாய்.

அதுவே உன்னை உயர்வாக்கும் உணர்வின் நற்குணங்களாக உனக்குள் வளரும். உன் சொல்லும் பிறரை உயர்வாக்கும் நிலைகள் பெறும். ஆகவே
1.ஒவ்வொரு மனிதனின் உயிரையும் கடவுளாக நீ மதி
2.கடவுள் வீற்றிருக்கும் அந்த உடலில் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்ற எண்ணத்தை நீ எடுத்து வளர்த்துக் கொள்
3.அந்த எண்ணமே உனக்குள் தெய்வ சக்தியாகச் செயல்படும்
4.அப்பொழுது அங்கே கடவுளாகின்றாய்…! என்ற உணர்வினை விவேகானந்தர் தெளிவாக்கியுள்ளார்.

ஒருவருக்கொருவர் பண்புடன் ஈகையுடன் மற்றவர்களுக்கும் உணவருந்தச் செய். அந்தப் பண்பினை வளர்த்தால் அதுவே உயர்ந்த நிலைகளாக உனக்குள் கடவுளாக வளர்கின்றது. அப்பொழுது நீயே அவனைக் காப்பவனாக ஆகின்றாய்.

அன்பு கொண்டு பிறரை உயர்த்தும் மார்க்கத்தில் ஒருவருக்கு இல்லை என்றால் “கொடுத்து உதவு…!” என்று தான் இயேசுவோ நபிகளோ ஏனைய மகான்கள் அனைவரும் சொல்லியுள்ளார்கள்.

உயர்ந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் வளர்த்து பகைமையிலிருந்து மீள வேண்டும். எல்லோருக்கும் சேவை செய்யும் பண்புகள் வர வேண்டும். உயர்ந்த எண்ணங்கள் கொண்டு ஏழ்மையில் வாடுகின்றவர்களுக்கு உபகாரம் செய்ய வேண்டும். அவர்களையும் உயர்த்திடும் நிலைகள் கொண்டு வளர்க்க வேண்டும்.

இந்த உணர்வின் தன்மையை உனக்குள் உருவாக்கி விட்டால் அதுவே கடவுளாக நின்று செயல்படும்…! என்று குருநானக் சொன்னார்.

ஆனால் இவை எல்லாமே பின்னாடி மதமாக்கப்பட்டு மதத்தின் நிலைமை கொண்டு பகைமைகளை உணர்த்தி அதற்குள் மதப் பித்து கொண்டு அந்த மகான்களின் தத்துவத்தையே மாற்றிவிட்டு மதப்போர் இனப்போர் என்று நடந்து கொண்டுள்ளது.

ஆனால்
1.உயர்ந்த குணங்களே மனிதர்களை ஆளுகின்றது.
2.அதை நீ ஆண்டவனாக வணங்கு…! என்று தான்
3.அன்று தோன்றிய மகான்கள் அனைவருமே சொல்லியுள்ளார்கள்.
4.யாரும் மதத்தை உருவாக்கவில்லை.

உயர்ந்த குணம் கொண்டு ஒருவொருக்கொருவர் காக்கும் நிலையைத்தான் “கடவுள்…!” என்று அந்த நிலையை உருவாக்கினார்களே தவிர அதை அரசியலாகவோ மதமாகவோ இனமாகவோ ஆக்கவில்லை.

இதை நாம் ஒவ்வொருவரும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்…!

தியானிக்க வேண்டிய முறை – Meditating Method

Image

1. துருவ நட்சத்திரத்தின் இயல்பு

சிறிதளவு விஷத்தைக் கண்டாலும் அதனுடைய செயலாக்கத்தை அடக்கி, எரித்துப் பொசுக்கி ஒளியாக மாற்றும் திறன் பெற்றது துருவ நட்சத்திரம்.
துருவ நட்சத்திரத்தின் அருகில் இன்றைய அணுகுண்டுகளோ, அணுக் கதிரியக்கங்களோ செல்ல முடியாது. அதை அடக்கிவிடும். அதன் செயலாக்கத்தைத் தணித்துவிடும். தனக்குள் ஒளிச் சுடராக மாற்றிவிடும்.
சூரியனே அழிந்தாலும், துருவ நட்சத்திரம் தன் செயலாக்கங்களை இழக்காது. அந்த துருவ நட்சத்திரம், அகண்ட அண்டத்தில் வரும் எத்தகைய நஞ்சினையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது.
ஆசைகளையும், குரோதங்களையும் வளர்க்கின்றவரிடத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அணுகாது.
துருவ நட்சத்திரத்தின் பேரருளின் உணர்வுகளை வளர்த்தவரிடத்தில் ஆசைகளும் குரோதங்களும் அணுகாது.

2.“முதல் தெய்வங்களின்” (குரு) அருள் பெறவேண்டும்

உங்கள் தாய் தந்தையரை முதல் தெய்வங்களாக வணங்கி, அவர்கள் அருளாசி பெறவேண்டும் என்று முதலில் ஏங்குங்கள். அவர்களுடைய அருளால் குருவின் அருள் பெறவேண்டும் என்று ஏங்குங்கள்.
குரு அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று ஏங்குங்கள்.

3. துருவ நட்சத்திரத்திற்குள் ஊடுருவிச் செல்லவேண்டிய முறை (METHOD)

ஓ..ம் ஈஸ்வரா குருதேவா என்று உங்கள் உயிரை எண்ணி, கண்ணின் நினைவை புருவ மத்திக்குக் கொண்டு வாருங்கள்.
உங்கள் உடலில் உள்ள எல்லா எண்ணங்களையும் உணர்வுகளையும் குணங்களையும் ஒன்றாகத் திரட்டி (அழுத்தமாக) துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று ஏங்குங்கள்.
அவ்வாறு திரட்டிய உணர்வுகளை ஒன்றாகக் குவித்து ஒரு வில்லில் (தனுசு) அம்பை ஏற்றுவது போன்று நாணை நிதானமாக இழுத்து, பூமியின் வடகிழக்கு திசையில் விண்ணிலே இருக்கும் துருவ நட்சத்திரத்தை இலக்காகக் குறிவைத்து புருவ மத்தியிலிருந்து இழுத்து விடுங்கள்.
புருவ மத்தியிலிருந்து ஏக்கத்துடன் வீசும் நம்முடைய உணர்வுகள் துருவ நட்சத்திரத்திற்குள் நேரடியாக அம்பாகத் தைக்கின்றது.

4. துருவ நட்சத்திரத்தின் எதிர் அலை (“ECHO”) நீல நிற ஒளி நம் மீது மோதும்

ஒரு இசைக் கருவியை உதாரணமாக வீணையை நாம் தட்டினோம் என்றால் நாதம் எழும்பும். அதே சமயத்தில், அதனுடைய அதிர்வுகள் அலை அலையாக வரும்.
இதைப் போன்று, துருவ நட்சத்திரத்தில் மோதும் நம் உணர்வுகள் பாய்ந்து அதிர்வாகி, (ECHO) அங்கிருந்து துருவ நட்சத்திரத்தின் அலைகள் உயிரில் உள்ள காந்தம் ஈர்ப்பதால், திரும்ப வந்து புருவ மத்தியில் மோதுகின்றது.
ஆக, திரும்பத் திரும்ப நாம் நம் உணர்வுகளைக் குவித்து புருவ மத்தியிலிருந்து அம்பாக துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்த செலுத்த, அப்படி மோதும் உணர்வின் அதிர்வுகள் அலை அலையாக மாறி, அலைத் தொடர்பாக மாறி அலை வரிசையாகின்றது. (FREQUENCY).
இது தொடர் வரிசையாகி, துருவ நட்சத்திரத்துடன் நேரடித் தொடர்பு (LINK) நம் உயிருக்கு நமக்குக் கிடைக்கின்றது.
ஒரு வெல்டிங்கை (WELDING) தட்டினால் எப்படி “பளீர்” என்று வெளிச்சமாகின்றதோ, அதைப் போன்று துருவ நட்சத்திரத்துடன் நாம் மோதும் இத்தகைய உணர்வுகள் நம் உயிரிலே இளம் நீல நிறத்தில் ஒளி வீசும்.
அந்த சமயத்தில் புருவ மத்தி சிறிது கனமாகவும் இருக்கும். நாம் புருவ மத்தியிலிருந்து இழுத்து சுவாசிக்கும் பொழுது அலைகள் நமக்குள் “ஜிவ்., ஜிவ்.,” என்று இழுப்பதைப் பார்க்கலாம், உணரலாம்.
துருவ நட்சத்திரத்தின் பேரொளி இப்பொழுது உயிர் வழி சுவாசமாகி, அந்த உணர்வுகள் வாயிலே உமிழ்நீராகக் கரைகின்றது.

5. துருவ நட்சத்திரத்தின் பேரருளை உடலில் உள்ள அணுக்களின் முகப்பில் இணைக்க வேண்டும்

இவ்வாறு வரும் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியினை கண்ணின் நினைவு கொண்டு எங்கள் ரத்தங்கள் முழுவதும் படர வேண்டும் என்று ஏங்குங்கள்.
இப்பொழுது நம் உடலில் இருக்கும் சுமார் 5 அல்லது 6 லிட்டர் ரத்தம் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் அலைகள் படர்கின்றது.
அடுத்து, ரத்தத்தில் இருக்கும் பல கோடி ஜீவ அணுக்களிலும், அறியாது உட்புகுந்த ஜீவ ஆன்மாக்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படரவேண்டும் ஈஸ்வரா என்று புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.
இப்பொழுது, ரத்தத்தில் இருக்கும் பல கோடி ஜீவ அணுக்களின் முகப்புகளிலும் அந்த சக்தி இணைகின்றது.
அதே சமயத்தில் ஜீவ ஆன்மாக்களின் முகப்பிலும் அந்த சக்தி இணைகின்றது.
திரும்பவும், புருவ மத்தியிலிருந்து துருவ நட்சத்திரத்திற்கு அம்பு போன்று நினைவைச் செலுத்துங்கள். துருவ நட்சத்திரத்தில் மோதி, அங்கிருந்து வரும் எதிரலை (ECHO) அதை உயிரின் வழியாக இழுத்து சுவாசியுங்கள்.
கண்ணின் நினைவு கொண்டு உடல் முழுவதும் பரவச் செய்து, உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பாகச் செலுத்தி, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.

6. துருவ நட்சத்திரத்தின் பேரொளியை நம் ஆன்மாவிற்குள் கொண்டுவரும் முறை

திரும்பத் திரும்ப “நினைவு”
  1. புருவ மத்தியிலிருந்து துருவ நட்சத்திரத்திற்குச் செல்லவும்,
  2. துருவ நட்சத்திரத்திலிருந்து உயிர் வழி இழுத்து சுவாசிக்கவும்,
  3. கண்ணின் நினைவு கொண்டு அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உடலில் உள்ள அணுக்களில் இணைக்கச் செய்யவும்,
  4. அந்த சக்தி பெறவேண்டும் என்று மறுபடி புருவ மத்திக்குக் கொண்டு வந்து உயிரான ஈசனிடம் வேண்டுவதும்தான்

தியானம் செய்யவேண்டிய முறை:-

அதாவது வட்டம் போன்று (CIRCULATION) புருவ மத்தியில் ஆரம்பித்து புருவ மத்தியிலே முடிக்கும்போது அலை அலையாக இழுக்கும் பொழுது, துருவ நட்சத்திர சுவாசமானது உடல் முழுவதும் சுழன்று வருகிறது.
இப்படி சுழல சுழல, உடலின் வெப்பத்தால் கொதித்து அந்த துருவ நட்சத்திர அலைகள் உடலிருந்து மணங்களாக வெளிப்படத் தொடங்குகின்றது.
உடலிலிருந்து வெளிப்படும் துருவ நட்சத்திரத்தின் மணம் ஏற்கனவே நம் உடலைச் சுற்றியிருக்கும் ஆன்மாவில் உள்ள தீமை செய்யும் அலைகளைப் பிளந்து, நம் ஈர்ப்பு வட்டத்திலிருந்து கழற்றி வெளியே தள்ளிவிடுகின்றது.
நம் உடலைச் சுற்றியிருக்கும் காற்று மண்டலம், அதாவது நம் ஈர்ப்பு வட்டம் தான் “ஆன்மா”.
நாம் கண் வழி உற்றுப் பார்த்த உணர்வுகள் எலும்புக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகி, கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் அந்த உணர்வலைகளைக் கவரும் பொழுது நம் ஈர்ப்புக்கு வரும் உணர்வலைகள் நமது ஆன்மாவாக மாறுகின்றது.
நம் ஆன்மாவில், அதாவது நம் ஈர்ப்பு வட்டத்திற்குள் எதைக் கவர்கின்றோமோ அதைத்தான் நாம் மூக்கின் வழியாகச் சுவாசிக்கின்றோம். அது புருவமத்தியில் உயிரில் பட்டவுடன் நாதமாகி, எண்ணங்களாகி, சொல்லாகவும், செயலாகவும் இயக்கச் செய்கின்றது.
இப்படி உருவான அணுக்களின் மலம்தான் நம் உடலாக உருவாகியுள்ளது. அந்த உருவான அணுக்களுக்கு நம் உயிர் இந்த பூமியின் காற்று மண்டலத்திலிருந்து உணவை எடுத்து நம் ஆன்மாவாக மாற்றி தொடர்ந்து அதைச் சுவாசிக்கச் செய்கின்றது.
ஆக, எத்தனையோ விதமான இந்த உணர்வுகள் அனைத்தும் நம் ஆன்மாவாக மாறிவிடுகின்றது. அந்த ஆன்மாவில் உள்ளவற்றைத் தூய்மைப்படுத்தும் நிலைதான் உயிர் வழி சுவாசமான மேலே குறிப்பிட்டுள்ள தியானம் செய்யும் முறை.
இப்படி தியானிக்கும் பொழுது நம் ஆன்மாவில் துருவ நட்சத்திர அலைகள்தான் இருக்கும். பிற உணர்வுகள் நம் ஆன்மாவிக்குள் வர முடியாது. நம் ஆன்மா பரிசுத்தமாகின்றது.

7. துருவ நட்சத்திர ஈர்ப்பு வட்டத்திற்குள் நாம் வாழத் தொடங்குகின்றோம்

ஆகவே, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நம்முள் சேர்க்கும் பொழுது, நம்மிடமிருந்து வெளிப்படும் மணம் அனைத்து விஷங்களையும் வெல்லக் கூடியதாக இருக்கும்.
உயிர் வழி அதாவது புருவ மத்தியின் வழி விண்ணின் ஆற்றலைச் சுவாசித்துப் பழகிக் கொண்டால் நம் உணர்வுகள் அனைத்தும் உயிருடன் ஒன்றி ஒளியின் தன்மை அடைகின்றது.
நாம் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து வாழத் தொடங்குகின்றோம். நமக்கு இன்னொரு பிறவி (உடல்) இல்லை.
எந்தத் துருவ நட்சத்திரத்தைக் குறி வைத்து இழுத்து சுவாசிக்கின்றோமோ, அந்த மணம் நம் ஆன்மாவில் பெருகி, அதன் முலாமாக உயிரிலே சேர்ந்து யாருடைய ஈர்ப்பிலும் சிக்காது துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கே நம்மை அழைத்துச் செல்லும் நமது உயிர்.
அங்கே சென்று பேரின்ப பெருவாழ்வு பெற்று, ஏகாந்தநிலை அடைந்து எத்தகைய இன்னலும் இல்லாது எதிர்ப்பும் இல்லாது, என்றும் பதினாறு என்ற அழியா ஒளி சரீரம் பெறமுடியும்.
இது இறுதியானதும், உறுதியானதும், மனிதன் நாம் எல்லோராலும் சாத்தியமாகக்கூடிய ஒன்றாகும்.
எமது அருளும், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளும், எல்லா மகரிஷிகளின் அருளும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கப் பிரார்த்திக்கின்றேன்.
ஓ..ம் ஈஸ்வரா குருதேவா

 

அதர்மத்திற்குத் துணையாகப் போனால் அதனின் பின் விளைவுகள் எப்படி இருக்கும்…? என்று தெரிந்து கொள்ளுங்கள்…!

Image

Soul Alive

அதர்மத்திற்குத் துணையாகப் போனால் அதனின் பின் விளைவுகள் எப்படி இருக்கும்…? என்று தெரிந்து கொள்ளுங்கள்…!

 

சட்டம் படித்தவர்கள் தங்களுக்குள் உயர்ந்த பண்புகளை வளர்த்திட வேண்டும் என்ற நிலை இல்லாதபடி தீமைகளுக்குத் துணை போகின்றார்கள்.

“படித்துக் கொண்டேன்…!” என்ற நிலைகள் இருந்தாலும் தர்மத்திற்காக வாதிடவில்லை. அதர்மத்திற்காக வாதிடுகின்றார்கள். இது போன்ற நிலைகளில் எந்த அதர்மத்திற்காக வாதிடுகின்றோமோ
1.நியாயத்தை அழித்து வாதிடும் உணர்வுகளை நாம் சுவாசித்தால்
2.அந்தத் தீமையின் விளைவாக சாபமிடுவோரின் உணர்வுகள் நம்மைச் சாடும்.
3.தீமை செய்வோனை நியாயப்படுத்தியும்
4.தீமை செய்யாதவனை தர்மமற்றவன் என்று காட்டப்படும் பொழுது
5.அதிலே பாதிப்படுவோரின் ஆன்மாக்கள் (அவர்கள் இறந்தபின்) உடலுக்குள் வரத்தான் செய்யும்.

இந்தப் பாவி தான்… எனக்குத் துரோகம் செய்தான்…! இவனால் தான் நான் எல்லாமே அநியாயமானது…! என்ற எண்ணங்கள் கொண்டு குறி வைக்கின்றது கூர்மையாக…! வாதிட்டவரின் உருவைத் தன் உடலுக்குள் எடுத்து வளர்த்துக் கொண்ட பின் அவர்கள் மடிந்த பின்
1.வாதிட்டவர் எவ்வளவு பெரிய தைரியசாலியாக இருந்தாலும் சரி
2.அவருக்குள் புகுந்து அவரையும் துன்பத்திற்குள்ளாக்கும்.
3.தான் அனுபவித்த அதே வேதனையை அங்கே உருவாக்கி அந்த உடலையும் நிச்சயம் வீழ்த்தும்.

இப்படி அவனால் வேதனைப்பட்ட வேதனை அணுக்கள் வளர்ந்து இந்த உடலை விட்டு வெளி வந்த பின் இது பாம்பாகவும் தேளாகவும் தான் பிறக்கும்.

இன்று அதர்மத்திற்காக வாதிடலாம். பொருளும் சம்பாரிக்கலாம். புகழும் அடையலாம். ஆனால் சாப அலைகளின் பின் விளைவால் மறு பிறவியின் தன்மை விஷ ஜெந்துக்களாகத்தான் அமையும். இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்..!

வக்கீலுக்குப் படித்த காந்திஜி இதைத் தெளிவாக உணர்ந்து கொண்டவர்.
1.ஒவ்வொருவரும் உயர வேண்டும் என்று நீ எண்ணு
2.உனக்குள் அந்த உயர்வின் தன்மை வரும்.

குடும்பத்தில் குறைகள் வந்தால் குறையை நீக்கும் மெய் ஞானிகளின் உணர்வை அந்த மகரிஷிகளின் உணர்வை நீ சுவாசி…
1.உனக்குள் ஞானங்கள் தோன்றும்.
2.பாசத்தின் நிலைகள் வளரும்.
3.உனக்குள் பண்பை வளர்க்கச் செய்யும்.
4.பகைமையை அகற்றச் செய்யும்…! என்ற பேருண்மையினுடைய நிலைகளைத் தெளிவாக்கினார் நம் காலத்தில் வாழ்ந்த காந்திஜி.

அவர் அரசியல்வாதி அல்ல. அவர் ஒரு அருள் ஞானி. உலக மக்கள் அனைவரும் ஒன்றே…! என்ற நிலையைப் பறை சாற்றியவர்.

இதை எல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து இந்த வாழ்க்கையில் அருள் உணர்வுகளை வளர்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். அருள் வாழ்க்கை வாழுங்கள். அருளானந்தம் பெறுங்கள். அதுவே அழியாத செல்வம்.

உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடைந்து அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அழியாத நிலைகள் கொண்டு மகிழ்ந்து வாழுங்கள்.

தூசி வராமல் இருக்கக் கதவை அடைப்பது போல் தீமைகள் நமக்குள் புகாதிருக்கப் புருவ மத்தியில் அடைத்துப் பழக வேண்டும்…!

Image

Vali vadam - sukreevan

தூசி வராமல் இருக்கக் கதவை அடைப்பது போல் தீமைகள் நமக்குள் புகாதிருக்கப் புருவ மத்தியில் அடைத்துப் பழக வேண்டும்…!

 

1.அகஸ்தியன் துருவனாகி தன் பதினாறாவது வயதில் திருமணமான பின்
2.கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததி போன்று வாழ்ந்து
3.நளாயினி போன்று ஒருவரையொருவர் மதித்து நடந்து
4.சாவித்திரி போன்று இரு உயிரும் ஒன்றி இரு உணர்வும் ஒன்றி
5.இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றி நஞ்சினை வென்று
6.பேரருள் பெற்று பேரொளியாகித் துருவ நட்சத்திரமாக இன்றும் பூமியின் வடதிசையில்
7.விண்ணிலே ஒளியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
8.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று இதை வரிசைப்படுத்தி
9.நம் உடலிள்ள பல கோடி உணர்வுகளுக்கெல்லாம் ரெகார்டு (RECORD) செய்ய வேண்டும். அதாவது பதிவாக்கிக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக ஒரு இயந்திரத்தை உருவாக்குகின்றோம் என்றால் அதிலிருக்கும் ஒவ்வொரு பொருளையும் வரிசைப்படுத்தி இணைத்து மாட்டினால் தான் அந்த இயந்திரமே சீராக இயங்கும். மற்றதையும் இயக்கும்.

வரிசைப்படுத்தி மாட்டாமல் முன்னால் போடுவதை பின்னாடியும் பின்னால் போடுவதை முன்னாடி போட்டால் இடைஞ்சல் ஆகும் அல்லவா…! ஒன்றுடன் ஒன்றைப் பொருத்தி அதை இயக்க முடியாது.

அதைப் போலத்தான் வரிசைப்படுத்தி நாம் அந்த மெய் உணர்வின் தன்மையை நுகரச் செய்து அந்த உயர்ந்த சக்திகளை ஒவ்வொரு மனிதனும் பெறும் மார்க்கத்தை அன்று காட்டினார்கள். வாழ்க்கையில் அறியாது வரும் துன்பங்களிலிருந்து விடுபட வழி காட்டினார்கள் ஞானிகள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் படர வேண்டும். எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உயிரை வேண்டித் தன் உடலுக்குள் கண்ணின் நினைவைச் செலுத்த வேண்டும்.

ஏனென்றால் காலையில் இருந்து இரவு வரையிலும் பிறருடைய கஷ்டங்களையும் துயரங்களையும் எத்தனையோ கேட்டுணர்ந்துள்ளோம். அந்த உணர்வின் தன்மை நமக்குள் பதிவாகி உள்ளது.

அதை இழுக்காதபடி நம் உடலுக்குள் உட்புகாதபடி தடுக்க ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணி
1.இங்கே புருவ மத்திக்குக் கொண்டு வந்து
2.அந்தக் கதவை அடைத்தல் வேண்டும்.

புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு அடைத்து விட்டு அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி
1.எங்கள் இரத்த நாளங்களிலே கலக்க வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதற்கும் அந்தத் நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று சொல்லி
3.இப்படி அடைத்தவுடனே உள்ளுக்குள் வலுவாகிவிடும்.

உடலுக்குள் வலுவான பின் என்ன செய்யும்…?

கஷ்டப்பட்டதையோ துயரப்பட்டதையோ வேதனைப்பட்டதையோ இழுக்கக்கூடிய சக்தி இல்லை என்றால்
1.எதிலும் பிடிப்பு இல்லாத அந்தத் துன்பமான உணர்வின் அலைகளை
2.சூரியன் கவர்ந்து எடுத்துக் கொண்டு போய்விடும்.
3.நம் உடல்… நம் எண்ணங்கள்… நம் ஆன்மா… அனைத்தும் தூய்மையாகும்.

காற்றடிக்கும் பொழுது தூசி வீட்டுக்குள் வராமல் எப்படிக் கதவை அடைக்கின்றோமோ… அதைப் போல தீமைகள் நமக்குள் புகாதபடி நாம் புருவ மத்தியில் அடைத்துப் பழக வேண்டும்…! அவ்வளவு தான்…!

சாந்த குணத்தின் வலிமையப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் – “PEACE…!”

Image

Spiritual wisdom

சாந்த குணத்தின் வலிமையப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் – “PEACE…!”

 

பிரிட்டனிடம் அடிமைப்பட்டிருந்த காலத்தில் நம் நாட்டுக்குச் சுதந்திரத்தைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள் அவர்களுக்கு வந்ததற்குக் காரணம்
1.காந்திஜியின் நினைவாற்றல் தானே தவிர
போர் முறை செய்து அல்ல…!

ஆனால் இவருடைய நினைவாற்றலுக்கு எப்படி அந்த வலிமை வந்தது…?

இரு பட்சிகள் மகிழ்ந்து இருக்கும் வேளையில் ஒன்றை வீழ்த்தினான் அன்று வான்மீகி. அது துடிதுடித்துக் கீழே விழுகின்றது. அடுத்து அதனுடன் வந்த இன்னொரு பட்சியையும் அவன் வீழ்த்த அம்பை எய்கின்றான்.

ஆனால் அவன் குறிகள் அனைத்தும் தவறுகின்றது. அந்த இன்னொரு பட்சியை அவனால் வீழ்த்த முடியவில்லை.

ஏனென்றால் அந்த பட்சியின் உணர்வுகளோ தன்னை இவன் வீழ்த்துவான் என்று எண்ணவில்லை. தன் கூட வந்த பட்சி துடித்துக் கீழே விழுந்ததன் மேல் பாசம் கொண்டு அதை அணுகிச் செல்ல வேண்டும் என்றே விரும்புகின்றது.

பாசத்தின் எல்லை கடந்த உணர்வுகளை அந்தப் பட்சி வெளிப்படுத்தும் பொழுது வான்மீகி சுவாசிக்கும் உணர்வுக்குள் இது தாக்கப்பட்டு அவனுடைய குறிகள் அனைத்தும் தவறுகிறது.

இப்படி ஒரு மணி நேரம் ஆன பின் அவன் உடல் கைகள் எல்லாம் சோர்வடைகின்றது. அதன் பின் தான் வான்மீகி அந்தப் பட்சியை உற்றுப் பார்க்கின்றான்.

1.அந்தப் பட்சியின் கண்களிலிருந்து வெளிப்படும் பாச அலைகளை அவன் சுவாசித்த பின்
2.தான் செய்த தவறை உணர்கின்றான்.
3.வில்லையும் அம்பையும் கீழே போட்டுவிட்டு வானை நோக்கி ஏகுகின்றான்.

பட்சிக்கு இருக்கும் அந்தப் பாசம் தன்னிடம் இல்லையே என்ற அந்த ஏக்கத்தில் விண்ணிலே நினைவைச் செலுத்தும் பொழுது துருவ நட்சத்திரத்தின் அலைகள் அவன் ஈர்ப்புக்குள் சிக்கப்பட்டுத் தன்னை அறிகின்றான். மெய்யை உணர்கின்றான்.

ஒரு கொலைகாரனாக இருந்த வான்மீகியின் செயலாக்கங்களை அந்தப் பட்சியின் பாச உணர்வு எப்படி ஒடுக்கியதோ அதைப் போலத்தான் காந்திஜிக்கும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.

தென்னாப்பிரிக்காவில் வக்கீல் தொழில் செய்யும் பொழுது ஆங்கிலேயர்கள் அவருக்குப் பல தொல்லைகள் கொடுக்கும் பொழுதும் அங்கிருக்கும் கருப்பின மக்களை ஆங்கிலேயர்கள் துன்புறுத்தும் பொழுதும் அதிலிருந்து விடுபட வான்மீகியின் இராமாயணக் காவியத்தைப் படித்தார்.

அதன் வாயிலாக வான்மீகி பெற்ற மெய் உணர்வைக் காந்திஜி நுகரப்படும் போதுதான் தன்னுடைய இளமைப் பருவத்தில் தான் செய்த தவறுகளையும் அதனால் மற்றவருக்கு ஏற்பட்ட துன்பங்களையும் உணர்ந்தார்.

உணர்ந்தபின் தீமையிலிருந்து “மக்களை மீட்ட வேண்டும்…!” என்ற எண்ணம் வலுப் பெற்று சாந்தம் கொண்ட உணர்வுகள் கொண்டு தன் எண்ணத்தை மக்களுக்கு பதியச் செய்து மன வலிமை ஊட்டியை ஞானத்தின் அன்பு கொண்டு ஒருக்கிணைந்த நிலையில் ஒன்று சேர்த்தார்.

எதிரி என்ற நிலையில் வேடுவன் (வான்மீகி) அம்பு கொண்டு எய்யப்படும் போது அவன் தாக்கி விடுவான் என்ற நிலை இருப்பினும் பட்சி எவ்வாறு தன் பாசத்தைக் குறிக்கோளாக வைதது அதிலிருந்து காக்கப்பட வேண்டும் என்ற உணர்வுகள் கொண்டு வந்ததோ அதைப் போல்
1.காந்திஜியும் ஆங்கிலேயர்களிடம் அடிபட்டு மடிந்து விடுவேன் என்ற எண்ணவில்லை.
2.மக்களைக் காக்க வேண்டும் என்ற உணர்வு கொண்டு வந்தார்.
3.இதைத் தான் வலிமை என்று சொல்வது.

சாந்தத்திற்கு எத்தகைய வலிமை உள்ளது என்று செயல்படுத்திக் காட்டியர் காந்திஜி. இராமயாணக் காவியத்தின் தொடர் வரிசையில் தான் படித்துணர்ந்த தன்மையின் உணர்வு கொண்டுதான் அந்த மகான் செயல்பட்டார்.

நம்முடைய வாழ்க்கையில் ஆவேசமும் ஆத்திரமும் இருப்பினும் தன் குடும்பத்தில் சில சிலை குறைகள் இருந்தாலும் அதை எல்லாம் மாற்றிட காந்திஜி செயல்பட்ட வழியில் சாந்த உணர்வின் வலிமை கொண்டு எதனையும் சாதிக்கும் வல்லமையாக மற்றவர்களுக்கு நல் உணர்வுகளை எடுத்துரைக்கும் நிலைகளுக்கு நாம் வர வேண்டும்.

1.மெய் ஞானிகளின் உணர்வை எடுத்து வளர்த்து
2.அந்த ஞானத்தால் சாந்தத்தைக் கடைப்பிடித்து
3.அதன் வழியில் குறைகளை எடுத்து எடுத்துச் சொல்வதும்
4.அந்த வலிமை கொண்டு குறைகளால் வரும் வினைகளை எப்படி நீக்குவது என்றும்
5.இந்த உணர்வின் வேகத்தைப் பதிவு செய்தால் ஒவ்வொரு குடும்பத்திலும் நிச்சயம் ஒற்றுமை வரும்.
6.ஏனென்றால் நாம் எடுத்து கொண்ட அந்த உணர்வின் எண்ணங்களே நம்மை இயக்குகின்றது.

சாந்த உணர்வின் வலிமை கொண்டு மற்றவர்களை எல்லாம் தன்னுடன் அரவணைத்து இருந்தால்தான் பகைமை உணர்வுகளே மாறுகின்றது என்ற நிலையைத் தெளிவாக எடுத்து அந்த வலுவின் நிலைகள் கொண்டே செயல்பட்டவர் காந்திஜி.

ஒவ்வொரு நிலையிலும் அப்படிச் செயல்பட்டதால் தான் உலக நாடுகள் எல்லாம் அவரைப் பற்றிச் சிந்திக்கின்றது. அவரைக் குருவாக ஏற்றுக் கொண்டு காந்திஜியின் உயர்ந்த பண்பு கொண்ட உணர்வுகள் அனைவருக்கும் தேவை என்று (இன்றும்) உணர்த்துகின்றனர்.

1.பகைமை உணர்வு கொண்டு மற்றவர்களை அழித்து நம்மை நாம் காத்துக் கொள்வதைக் காட்டிலும்
2.மனிதன் உடலிலும் சரி நாட்டிலும் சரி அந்தத் தீமையை விளைவிக்கும் எண்ணங்களை மாற்றி
3.நமக்குள் ஒன்று சேர்ந்து வாழ்ந்தால் அந்த பகைமையின் நிலைகள் மாறும்.
4.மனிதன் மகிழ்ச்சி நிலை பெறுவான் என்ற உணர்வை உலகுக்கே ஊட்டினார் காந்திஜி.
5.இதன் துணை கொண்டு தான் உலகம் அனைத்துக்கும் சுதந்திரம் கிடைத்தது இந்தியாவிற்கு மட்டுமல்ல…!

நாம் ஒவ்வொருவரும் சாந்த குணத்தின் வலிமையை அவசியம் பெற வேண்டும்.