அரச மரத்தைப் போல் நம் நினைவுகளை விண்ணிலே ஊடுருவிப் பாய்ச்சி மெய் ஞானிகளின் உணர்வைக் கவர்தல் வேண்டும்

pipal-tree-vinayagar

அரச மரத்தைப் போல் நம் நினைவுகளை விண்ணிலே ஊடுருவிப் பாய்ச்சி மெய் ஞானிகளின் உணர்வைக் கவர்தல் வேண்டும்

 

நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக இந்த மனித உடல் பெற்றதை விநாயகன் என்றும் இந்த வினையெல்லாம் தீர்க்கும் தகுதி பெறுகின்றான் என்றும் ஞானிகள் காட்டுகின்றார்கள்.

வினையெல்லாம் தீர்ப்பவனே விநாயகனே… ஆதிமுதல்வனே…! என்றும் சொல்கிறோம். ஆதிமுதல்வன் என்றால் யார்…?

நம்முடைய இந்த மனித உடலை உருவாக்கிக் கொண்டு வருவதற்கு ஆதிமுதல்வனாக இருந்தது நமது உயிர். அதைத் தான் ஆதிமுதல்வன் என்றார்கள் ஞானிகள்.

ஆனால் நாம் என்ன செய்கின்றோம்…? விநாயகர் கடவுளுக்கு அப்பாற்பட்டவர். அவர்தான் முதல்…! என்ற நிலைகளை நாம் எண்ணுகின்றோம்.

நம் உடலுக்குள் நின்று இந்த மனிதனாக உருவாக்கிய இந்த நிலைகளை “ஆதிமுதல்வன் நம் உயிர் தான்…!” என்று தெளிவுற அன்று உணர்த்தியுள்ளார்கள்.

விநாயகருக்கு புல்லைக் காட்டித் தழை தாம்புகளை வைத்து அதை அரச மரத்தையும் வேப்ப மரத்தையும் ஸ்தல விருட்சமாக வைத்து இதை நமக்கு உணர்த்தியுள்ளார்கள்.

அரசு என்ன செய்கின்றது…? ஒரு குருவி அந்த அரசம் பழத்தைச் சாப்பிட்டுவிட்டு அது இட்ட மலம் ஒரு பாழடைந்த கட்டிடத்தின் மேல் பட்டுவிட்டால் அதற்குள் அந்த வித்து நீரேயற்ற இடத்தில் வளரத் தொடங்குகிறது.

இப்பொழுது நாமெல்லாம் ஒரு வீட்டில் குடியிருந்தோமென்றால் அங்கே நாம் நீரைச் சிந்துவோம். அதிலிருந்து வரக்கூடிய வாசனைகள் படும். இது அதனால் முளைத்தது என்று சொல்லலாம்.

ஆனால் குருவிகள் இட்ட அந்த மலத்தின் தன்மை கொண்டு அரச வித்து ஒரு பாழடைந்த கட்டிடத்தின் மேல் பட்டுவிட்டால்…
1.அந்த அரசு காற்றிலே இருக்கக்கூடிய வீரிய சக்தியும்
2.தன் இனமான சக்தியையும் எடுத்து ஓங்கி வளர்ந்து
3.தன் விழுதை நீர் இருக்கும் இடத்தில் பாய்ச்சித் தனக்கு வேண்டியதை நுகர்ந்து எடுத்துக் கொள்கின்றது.

அதனின் விழுதுகளில் உள்ளது போல இலைகளில் உள்ள நரம்பியல்கள் காற்றில் இருக்கும் ஈரப்பதைத் தனக்குள் அது உறிஞ்சி தன் உணர்வின் தன்மையை வலுப் பெறும் தன்மையை அது அடைகின்றது.

அன்று மனிதனாக வாழ்ந்தவர்கள் தங்கள் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றி இன்றும் சப்தரிஷி மண்டலமாக உள்ளார்கள்.

விண்வெளியிலே சப்தரிஷி மண்டலங்களாக இருக்கிறதென்றால் அங்கே எல்லை இல்லை. ஆனால் தனித்து நிற்கின்றது. நீரோ குளமோ அங்கே கிடையாது.

இருந்தாலும்…
1.மனிதனாக இருந்த போது தன் உடலில் உணர்வின் தன்மை ஒளியான வித்தாக மாற்றி
2.விண் சென்றபின் பேரண்டத்தில் வரும் விஷங்களை எல்லாம் முறித்து
3.உணர்வின் தன்மையை தனக்குள் ஒளியாக மாற்றி என்றும் நிலையான சரீரமாக
4.எந்த உழைப்பும் இல்லாமல்… தூங்காது…
5.தூங்காமல் தூங்குவது எக்காலம் என்பது போல ஓங்கி வளர்ந்து
6.இன்றும் நிலையான சரீரம் பெற்றுள்ளார்கள் என்ற நிலையைக் காட்டி
7.அந்த நிலையை நாம் அடைய வேண்டும் என்பதற்குத்தான் அரசையும் வேம்பையும் வைத்துக் காட்டுகின்றார்கள்.

வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நாம் உயர்ந்த எண்ணங்கள் கொண்டு வந்தாலும் இடைப்பட்ட நேரங்களில் கசப்பின் தன்மையான உணர்வுகள் நாம் நுகர நேருகின்றது. நம்மை மேலே எழுந்திரிக்காமல் செய்கின்றது.

அதே சமயம் நாம் விண்ணை நோக்கி அண்டத்திலே இருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் நுகர்ந்து… கசப்பான நிலைகளை இங்கே சிறுக்கப்பட்டு அந்தக் கசப்பின் தன்மையை நீக்கி நல் உணர்வின் தன்மை ஓங்கி வளரும் நிலையாக ஒளியின் சரீரம் பெற வேண்டுமென்பதற்காக அங்கே நினைவுப்படுத்தி ஸ்தல விருட்சமாக வேம்பையும் அரசையும் அங்கே வைத்தார்கள்.

ஆனால் இந்த வேம்பையும் அரசையும் நாம் வேடிக்கையாகத் தான் சுற்றி வருகின்றோமோ தவிர அதில் உணர்த்தப்ப்ட்ட உயர்ந்த சக்தியை நுகர்வோர் யாரும் இல்லை. அதை நினைப்பாரும் யாருமில்லை.

சுற்றி வந்தால்… விநாயகன் நமக்கு ஓடி ஓடி வந்து செய்வான் என்றும்… அவன் எங்கோ இருக்கின்றான்…! நமக்கு எப்படியோ வந்து செய்கின்றான் என்ற நிலையிலும் தான் நாம் இருக்கின்றோமே தவிர அந்த உண்மையின் தன்மையை நாம் உணர முடியல்லை.

இன்று இந்த உண்மையைச் சொன்னாலும் நம் உடலுக்குள் பதிவு செய்த இந்த உணர்வுகளோ எதிர்க்கும் நிலையாக வருகிறது.

இப்பொழுது யாம் (ஞானகுரு) இதைத் தெளிவுபடுத்தினாலும் கூட…
1.என்ன…? அன்றைக்கு எழுதி வைத்தவர்கள் எல்லாம் முட்டாளா..?
2.இவர் மட்டும் புதிதாகச் செய்கின்றார் என்றால் அது எப்படி…? என்ற நிலையில்
3.நாம் ஏற்கனவே எடுத்துக் கொண்டது அது வெறுக்கின்றது.

ஒரு கசப்பைச் சாப்பிட்ட பின் நாம் இனிப்பை கொடுத்தால் எப்படி இருக்கும்…! அந்த உணர்வின் தன்மை இனிப்பை ஏற்றுக் கொள்ளாது.

அதைப் போல இந்த உடலுக்குள் சேர்த்துக் கொண்ட இந்த உணர்வின் இயக்கங்கள் அந்த உணர்வின் வழிகளைத்தான்… “நாம் எண்ணியதை… இந்த உணர்வின் தன்மை… சேர்த்த மணத்தின் உணர்வின் எண்ணமாக…” நமக்குள் அது இயக்கிக் கொண்டிருக்கின்றது.

எந்த உணர்வு ஆனாலும் நம் உயிர் அந்த மணத்தை நுகர்ந்தால் அதை எண்ணமாக மாற்றுகின்றது.
1.ஆனால் அதற்குள் மறைந்த இந்த உணர்வின் சக்தி
2,இந்த உடலைத் தனக்குள் அதனின் இயக்கமாகச் செயல்படுகின்றது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு ஞானிகள் நமக்குக் காட்டிய வழியில் செல்வதே நல்லது.

வாழ்க்கையில் வரும் கசந்த நிலைகளை எப்படி நீக்க வேண்டும்..?

Deep meditation

வாழ்க்கையில் வரும் கசந்த நிலைகளை எப்படி நீக்க வேண்டும்..?

 

ஞானிகள் காட்டிய வழியில் ஆலயத்தில் வழிபட்டால் வாழ்க்கையில் வரும் குறைகளை நாம் எண்ணுவதில்லை. “எல்லோருக்கும் நல்லதாக வேண்டும்…” என்ற எண்ணங்களைச் செலுத்துகின்றோம்.

இதற்குத் தான் தத்துவஞானிகள் ஆலயங்களை வைத்தனர்.

முதலில் விநாயகரை வணங்கும் போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று அதன் பின் அங்கே வரும் எல்லோருக்கும் இந்த நல்ல நிலைகள் பெற வேண்டும் என்ற நம் எல்லோருக்குள்ளும் ஐக்கிய உணர்வை கொண்டு வரச் சொன்னது தான் கோவில்.

அபிஷேகங்களோ ஆராதனைகளோ காணிக்கைகளையோ போட்டால் அந்தத் தெய்வம் நமக்குச் செய்வதல்ல. அங்கே காட்டப்பட்ட நல்ல உணர்வுகளை நமக்குள் சேர்த்து நம்மை தெய்வமாக்கச் சொன்ன நிலைகள் தான் அது.

ஆகவே இப்படிச் செய்தால்…
1.நாம் எந்த ஆலயங்களுக்குப் போனாலும் இந்தத் தெய்வீக பண்புகள் நமக்குள் வளரும்.
2.அந்த உணர்வுகள் தான் மக்களை காக்கும் நிலைகளாக வரும்
3.நம்மை காக்கும் நிலைகளாகவும் வரும்.

கருப்பணசாமியோ மாடசாமியோ போன்ற தெய்வங்களையும் காட்டி உள்ளார்கள் ஞானிகள். இந்த வாழ்க்கையில் கோபமோ ஆத்திரமோ வெறுப்போ சாபமோ இதைப் போன்ற எண்ணங்களை எடுத்துவிட்டால் நமக்குள் அது நோயாக விளைகின்றது.

அப்படி வளர்க்கும் உணர்வுகள் நமக்குள்ளும் சாபமிட்டுக் கொண்டே இருக்கும். நம்மைச் சார்ந்தோரையும் வளராமல் செய்துவிடும்.

இதைப்போன்ற நிலைகளைக் காட்டுவதற்குத்தான்
1.அந்தத் தீமை செய்யும் உணர்வுகள் நமக்குள் என்ன செய்கின்றது என்றும்
2.நமக்குள் அறியாது சேர்ந்த தீய வினைகள் எப்படிச் செய்கிறது என்றும்
3.இதை எல்லாம் உருவமாக்கித் தீமையான உணர்வின் இயக்கங்களை நமக்குத் தெளிவுற உணர்த்துகின்றார்கள்.

ஆனால் நாம் என்ன செய்கின்றோம்…?

கருப்பணசாமிக்கு ஆட்டையும் கோழியையும் பலி கொடுத்து “என்னைக் காக்க வேண்டும்” என்று எண்ணுகின்றோம்.

இப்படி அந்தத் தீமைகளைத்தான் நாம் வளர்க்க முடிகிறதே தவிர நமக்குள் அறியாது வந்த தீமைகளை அகற்ற முடியவில்லை.

ஏனென்றால் ஆட்டையும் கோழியையும் தெய்வத்திடம் கொடுத்துவிட்டு அந்தத் தெய்வம் செய்ய வேண்டும் என்று எண்ணும் போழுது
1.நமக்குள் வந்த தவறை உணராது…
2.தவறை வளர்ப்பது… என்று தான் பொருள்.

இதைப் போன்ற நிலைகள் எல்லாம் நமக்குள் வளர்ந்தால் நாம் இறந்தபின் அதே செயலைச் செய்யும். அந்த உணர்வுகள் நாம் இதனின் ஈர்ப்பில் செய்யும்போது கொடூர நிலைகளாக நமக்குள் வளர்த்து விடுவோம். இதிலிருந்தெல்லாம் நாம் மீள வேண்டும்…!

கருப்பணசாமி அல்லது மாடசாமி தெய்வங்களைப் பார்த்தாலும்
1.நாம் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.நற்குணங்கள் அங்கே வளர வேண்டும்
3.நாடு நன்மை பெற வேண்டும்
4.மக்கள் நன்மை பெறவேண்டும்… நல்ல உணர்வுகள் பெற வேண்டும் என்று நாம் இப்படி எண்ணுதலே நல்லது.

இதைப் போன்ற எண்ணங்களை நாம் எண்ணினால் தான் நமக்குள்ளும் நல் உணர்வாக வலுப் பெறுகின்றது. நாம் அதை பற்றுடன் பற்றுகின்றோம். தீமைகளைப் பற்றற்றதாக மாற்றுகின்றோம்.

இதைக் காட்டுவதற்காகத்தான் விநாயகரின் அருகில் வேம்பை வைத்துள்ளார்கள் ஞானிகள்.

வாழ்க்கையில் வரும் கசந்த நிலைகளையும் வெறுப்பின் உணர்வுகளும் நமக்குள் வளராது அதை மறைக்க அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்தோமென்றால் இது பற்றற்றதாகும்…! மெய் உணர்வைப் பற்றுகின்றோம். அழியா ஒளிச் சரீரம் பெறுவோம்.

உயிரிலே பட்டால் குருக்ஷேத்திரப் போர்… உடலுக்குள் போனால் மகாபாரதப் போர் – விளக்கம்

Inner peace

உயிரிலே பட்டால் குருக்ஷேத்திரப் போர்… உடலுக்குள் போனால் மகாபாரதப் போர் – விளக்கம்

 

ஒவ்வொரு நிமிடமும் நாம் நல்ல குணங்கள் கொண்டு மகிழ்ச்சியாக இருக்கின்றோம். இருந்தாலும் நம் நண்பர் வேதனைப்படுகின்றார் என்றால் அதை நுகர்ந்தால் குருஷேத்திரப்போர் ஆகின்றது.

1.நம் உடலுக்குள் குருவாக இருக்கின்றது உயிர்.
2.உயிரிலே (சுவாசித்தது புருவ மத்தியில்) பட்டபின் குருஷேத்திரப்போர் நடக்கின்றது.

என் நண்பனுக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்று ஏங்கிப் பெற்றால் நம் உடலுக்குள் போனால் நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களுக்கும் அதற்கும் போர் நடக்கின்றது மகாபாரதப் போர்.

இப்படி ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் அன்றாடம் போர்கள் நடந்து கொண்டே இருக்கின்றது.

அதாவது கண்ணன் சங்கநாதம் ஊதியபின் குருஷேத்திரப் போர்…
1.வேதனைப்படும் உணர்வைக் கண்கள் கவர்ந்து உயிரிலே மோதும் போது
2.அந்த வேதனை என்ற உணர்வுகளைச் சங்கநாதம் ஊதுகின்றது.

ஆனாலும்… வேதனைப்படுகின்றான் என்ற இந்த உணர்வுகள் நம் நல்ல உணர்வுகளுடன் கலக்கப்படும்போது இங்கே குருஷேத்திரப் போர் நடக்கின்றது. ஏனென்றால் உடலுக்குள் இருக்கும் அனைத்து நல்ல குணங்களுக்கும் உயிரே குருவாக இருக்கின்றது.

அதே சமயத்தில்… வேதனை என்ற உணர்வு வரப்படும்போது அந்த உணர்ச்சிகள் உடலுக்குள் சென்ற பின்…
1.உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்களுக்குள் இது தாக்கப்படும் போது
2.பதட்டமும் பயமும் ஏற்பட்டு மகாபாரதப் போர் ஆகின்றது.

இப்படி உடலுக்குள் வேதனை என்ற உணர்வு புகுந்து விட்டால் விஷத்தின் தன்மை நமக்குள் வளர்ச்சியாகின்றது. அதனால் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒவ்வொரு நொடிக்கு நொடி குருக்ஷேத்திரப் போரும் மகாபாரதப் போரும் நடந்து கொண்டேதான் உள்ளது.

“சந்தோஷம்…” என்ற சீதா ராமனாக.. அதாவது சந்தோஷம் என்ற எண்ணங்கள் (ராமன் எண்ணம்… சீதா மகிழ்ச்சி) கொண்டு வாழ்ந்தாலும் வேதனைப்படும் உணர்வுகளை நுகர்ந்தால் வாலி ஆகின்றது.

அந்த வாலி என்ற உணர்வுகள் நமக்குள் வந்த பின் நம் நல்ல குணங்களைக் கொல்லத் தொடங்குகின்றது…இரண்யன்.

நாம் மகிழ்ச்சி என்ற உணர்வைத் தான் தோற்றுவிக்க எண்ணுகின்றோம்.

ஆனால் நண்பனைப் பார்த்து வேதனைப்படும்போது அதை நுகர்ந்தால் வாலியாகி… நமது நல்ல குணங்களை எப்படி அழித்து மாற்றிவிடுகின்றது…? என்று
1.சுவையின் உணர்வுகள் அந்த உணர்ச்சிகள்
2.நமக்குள் எப்படி இயக்குகின்றது…? என்று இராமயாணத்தில் தெளிவாகக் கூறப்படுகின்றது.

அதை யாராவது நாம் மதிக்கின்றோமா…?.

நம் எண்ணங்கள் எப்படிச் செயல் படுகின்றது…? வேதனை என்ற உணர்வை நுகர்ந்த அது நம் நல்ல குணங்களைக் கொன்றிடும் இரண்யனாகின்றது என்பதை ஞானிகள் காட்டுகின்றனர்.

தசரத சக்கரவர்த்தி என்பது பத்தாவது நிலை அடையக்கூடிய உயிர். நாம் எண்ணும் உணர்வுகள் நமக்குள் இரையானாலும் வேதனை என்ற உணர்வு வரும்போது
1.அந்த வேதனையை உருவாக்கும் அணுக்கள் நமக்குள் உருவாகி
2.மனித உடலை உருவாக்கிய நல்ல அணுக்களை அது கொன்று விடுகின்றது “தசப்பிரியன்…”

அதன் மூலம் நாம் அடிக்கடி வேதனைப்பட்டு இந்த உடலை வளர்ப்பதற்கும்… மற்றொருவரைக் கொன்று புசிப்பதற்கும்… மற்றவருக்குத் தொல்லை கொடுக்கும் நிலையே நமக்குள் வருகின்றது. ஆனால் இதே தொல்லை கொடுக்கும் உணர்வை நுகரும்போது தசப்பிரியன் ஆகின்றது.

பத்தாவது நிலை அடையக் கூடிய உயிரில் நாம் எடுக்கப்படும்போது இதே உயிர்தான் அதையும் வளர்க்கின்றது. அந்தக் கோபம் என்ற உணர்வு உயிரிலே பட்டபின் அசுர உணர்வை வளர்க்கின்றது. நம் நல்ல குணங்களை கொல்கின்றது.

சீதா – சுவை மகிழ்ச்சி… என்ற நிலை வரப்படும் பொழுது உடலான இந்திரலோகம் நம்மை மகிழச் செய்கிறது. ஆனால் சந்தர்ப்பத்தால் வந்த வேதனை என்ற உணர்வுகள் இந்த இந்திரலோகத்தில் வந்தால் நல்லதை உருவாக்காதபடி தடையாகின்றது.

அதாவது மகிழச் செய்யும் இந்திரலோகத்தைச் சிறைப் பிடித்து விடுகின்றான் இரண்யன். நம் ஆறாவது அறிவு இயக்கமற்ற நிலைகள் மாற்றும் போது அசுர உணர்வுகள் நமக்குள் வரப்படும்பொழுது இந்த உடலில் எப்படி விளைகின்றது…? என்பதனைத் தெளிவாக்குகின்றார்கள்.

ஏனென்றால் அந்தத் தசப்பிரியன் என்ற நிலை வரும்போது அவன் எண்ணும் உணர்வுகள்.. அவனும் விஷ்ணுவை (உயிரை) நோக்கித் தான் தவமிருக்கின்றான்.

1.நான் சொன்னபடிதான் இந்த உயிர் கேட்க வேண்டும்…! என்று
2.விஷ்ணுவை அடிமைப்படுத்தக் கடும் யாகங்களைச் செய்கின்றான்…!
3.என் வழிக்குத் தான் நீ வரவேண்டுமே தவிர உன் வழிக்கு நான் வர முடியாது என்று
4.நம் உணர்வின் தன்மை உயிர் பத்தாவது நிலை அடைந்தாலும் வேதனை என்ற உணர்வு வரப்படும் பொழுது
5.நம் உயிரான ஈசனை நமக்குள் நல்லதை உருவாக்காதபடி எப்படித் தடையாகிறது என்று காட்டுகின்றார்கள்.

நெருப்பிலே நீங்கள் எந்தப் பொருளைப் போடுகின்றனரோ அந்த மணம் தான் அதிலிருந்து வரும். நம் உயிர் ஒரு நெருப்பு. அதிலே வேதனை என்ற விஷத்தின் தன்மையைப் போட்டால் விஷத்தின் தன்மைதான் இயக்கும்.

உயிருடைய வேலை அதுதான்…! என்பதனை இங்கு தெளிவாகக் காட்டப்படுகின்றது

இந்த உடலில் விஷத்தின் தன்மை அதிகமானால் விஷத்தை உடலாக்கிக் கொண்ட மற்ற உயிரினங்கள் எப்படியோ அந்த நிலை அடையச் செய்கின்றது.

இந்த ஐந்தாவது அறிவிலிருந்து ஆறாவது அறிவு வரும்போது பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்.
1.தீமைகளை நீக்கி நல்லதை உருவாக்கும் சக்தி பெற்ற மனிதனுக்குள்
2.விஷத்தின் தன்மை தோயப்படும்போது அது மனிதனை எப்படி மாற்றுகின்றது…?
3.இதிலிருந்து எப்படி மனிதன் மீள்தல் வேண்டும்…? என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது இராமயாணம்.

ஆகவே தான் கோவில்களிலே நம் மனதைக் குவித்து… பகைமையற்ற நிலைகள் கொண்டு எல்லோரும் பேரின்பம் பெற வேண்டுமென்று காட்டப்பட்டுள்ளது.

1.நல்ல குணத்தை வளர்க்க…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் இணைத்து
2.எப்படி வளர்க்க வேண்டுமென்று கோவில்களில் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

நெற்றியில் திலகமிடும் பழக்கத்தை ஞானிகள் நமக்கு ஏற்படுத்தியதன் சூட்சமம் என்ன…?

Thilagam

நெற்றியில் திலகமிடும் பழக்கத்தை ஞானிகள் நமக்கு ஏற்படுத்தியதன் சூட்சமம் என்ன…?

 

நெற்றியில் திலகம் வைத்தாலும் அந்தத் திலகத்தின் தன்மை எதுவாக இருக்க வேண்டும்…? என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் குறித்துக் கொள்ளுங்கள்

வீட்டில் எந்தக் குறையாக இருந்தாலும் அதை மாற்றிவிட்டு
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.எனக்குள் மன பலம் பெற வேண்டும்… மன வளம் பெற வேண்டும்.
3.எங்கள் குடும்பத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ்ந்திடும் நிலைகள் வேண்டும்.
4.குடும்பத்தில் யாராவது நோய்வாய்ப் பட்டிருந்தாலும் அவர்கள் மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்.
5.அவர்கள் நோய்கள் நீங்க வேண்டும்… அவர்கள் அறியாத இருள் நீங்க வேண்டும் என்று
6.விரலால் தொட்டு அந்தத் திலகம் இடுவதற்கு முன் இந்த நினைவலைகள எண்ணுங்கள்.
7.நீங்கள் எண்ணிய அந்த உணர்வின் நிலைகள் உங்கள் உடலுக்குள் அலை அலையாகப் பரவிப் படர்கின்றது.

இந்த எண்ணத்துடன் திலகத்தை இடுங்கள்.

அதைப் போல யார் யாரெல்லாம் நலம் பெற வேண்டுமோ திலகம் இடும் பொழுது எண்ணி அவர்களை எல்லாம் நலம் பெறச் செய்யுங்கள்

யார் யாரெல்லாம் நம் மேல் வெறுப்பு அடைந்தனரோ… அந்த வெறுப்பை அகற்ற அவர்களுக்கும் தெளிந்த மணங்கள் வர வேண்டும்…! என்று எண்ணத்தை எண்ணி நீங்கள் திலகமிடுங்கள்

ஏனென்றால் “தொட்டுக் காட்டுவது” (பொட்டில்) என்று சொல்லும் பொழுது
1.பிறர் தொட்டுக் காட்டுகிறார்… என்றால்
2.அவருடைய எண்ணங்களைத் தொட்டுக் காட்டும் பொழுது
3.அவருடைய நிலைகளைத் தான் நமக்குள் நாம் எண்ணிச் சுழலச் செய்கின்றோம்.

ஆகையால் அதைப் போன்று இல்லாது நீங்கள் உயர்ந்த எண்ணங்களை எண்ணி “அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்” என்று ஐம்பது முறையாவது எண்ணி அந்த உணர்வுகளை வெளிப்படுத்துங்கள்.

உங்கள் குடும்பத்தில் யார் யாருக்கெல்லாம் எந்தெந்த வகையில் அவர்கள் நன்மை பெற வேண்டுமோ அவர்களுக்கு எல்லாம் எண்ணத்தால் எண்ணிப் “புருவ மத்தியில்” திலகத்தை வையுங்கள்.

அப்போது இந்த உணர்வுகள் அங்கு ஆழப் பதியும்… நினைவலைகளாகத் தெளிவாக வரும்…. உங்கள் சிந்தனைகள் சீர்குலையாது. வெறுப்பின் அலைகள் உங்களுக்குள் புகாது அதைத் தடுக்க இந்த முறைப்படி நீங்கள் திலகமிட வேண்டும்.

இன்று நீங்கள் உடைக்குத்தக்க பல அணிகலன்கள் அணிகின்றீர்கள். அது எத்தனையோ ஃபேஷனாக இன்று வந்துவிட்டது.

ஆக… நாம் எப்படி ஒருவருடைய நிலைகளை மகிழ்ந்திடும் நிலைகள் செய்கின்றோமோ அதைப் போல “நம் எண்ணங்களை உயர்ந்ததாக்கி” அதையே நாம் ஆபரணங்களாக அமைக்க வேண்டும்.

என்னைப் பார்க்கும் ஒவ்வொருவரும்… எப்போதும் மகிழ்ச்சி பெற வேண்டும்…! என்று இந்த முறையைச் சிறிது காலம் சொல்லிப் பாருங்கள். அது உங்களுக்குள் தெளிவான நிலைகளாக வரும்.

இப்படி அந்த ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி நாம் செயல்படுத்துதல் வேண்டும். இவ்வாறு செயல்படுத்தினால் நமது பற்று அந்த மகரிஷியின் பால் செல்கின்றது. அந்த மகரிஷியின் உணர்வு ஓங்கி வளருகின்றது.

அத்தகைய பற்றின் தன்மை
1.அந்த மகரிஷிகளின் சக்திகள் கணக்கு எந்த அளவுக்குக் கூடுகின்றதோ
2.அதன் வழிப்படி நாம் பிறவியில்லா நிலை அடைகின்றோம்.

அதே சமயம் நம் குடும்பத்தில் வரும் எத்தகைய தீமையும் நம்மை அணுகாது பார்த்துக் கொள்ளுகின்றோம். நம் நினைவின் ஆற்றல் விண்ணை நோக்கிச் செல்லுகின்றது.

விண்ணை நோக்கி செல்லும் நிலையை நமக்குள் ஆழமாகப் பதிவு செய்ய வேண்டும். ஏனென்றால்
1.“சித்திர புத்திரன்” கணக்கின் பிரகாரம் தான் உடலுக்குப் பின் அடுத்த நிலை என்பது போல்
2.எந்த விண்ணின் பற்றை நாம் அதிகமாகக் கூட்டுகின்றோமோ
3.அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் நாம் அனைவரும் ஐக்கியமாகின்றோம்.

உண்மையான பக்தியும் உண்மையான தியானமும்

Prayer Bhakti

உண்மையான பக்தியும் உண்மையான தியானமும்

 

கோவிலுக்குச் செல்வோர் சிலர் வழக்கத்தில் என்ன செய்கிறார்கள்…?

தாய் தன் பிள்ளை மேல் மிகுந்த பாசமாக இருக்கும். கோவிலுக்குள் போனவுடனே… “ஆண்டவனே என் பிள்ளை இப்படிச் செய்கின்றானே…? நான் பிள்ளையக் கஷ்டபட்டு வளர்த்தேனே… ஊரெல்லாம் அவனை இப்படிச் பேசுகிறதே…! அவன் என்றைக்குத் தான் திருந்துவானோ…?

பையன் தன் சொன்னபடி கேட்கவில்லை என்றால் விநாயகனிடம் போய் “ஊரெல்லாம் பேசுகிறதே… திமிராகப் பேசிக் கொண்டிருக்கின்றானே… என்றைக்குத் தான் திருந்துவானோ…? நீ என்றைக்குத் தான் பார்க்கப் போகின்றாயோ…? என்று இத்தகைய இந்த வினைகளைத் தான் சேர்த்துக் கொள்கின்றோம்.

நல்ல ஒழுக்கங்களை எப்படி நமக்குள் வினையாகச் சேர்க்க வேண்டும் என்று ஞானிகள் காட்டியிருந்தாலும் இந்த நிலைகள் இப்படித்தான் இருக்கின்றது.

முதியவர்களை எடுத்துக் கொண்டால் தெய்வத்தின் மேல் நல்ல பக்தி இருந்தாலும்.. தெய்வத்தின்மேல் நல்ல ஒழுக்கம் நம்பிக்கை இருந்தாலும்… ஞானிகள் காட்டிய வழிப்படி
1.நாம் தெய்வமாக வேண்டும் என்று சொல்லியிருந்தாலும்
2.அந்தத் தெய்வமாக யாரும் ஆகுவதில்லை.

நாம் எண்ணிய எண்ணங்கள் எதுவோ சுவாசித்தது எதுவோ… அதை எல்லாம் நம் உயிர் “ஓ…” என்று ஜீவனாக்கி அந்த உணர்வின் சத்தை “ம்…” என்று உடலாக்கி… நினைவின் ஆற்றலை தெய்வமாக நமக்குள் இயங்க வைக்கின்றது. அதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தத் தியானத்தில் இருப்பவர்கள் நீங்கள் பிறருக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் தியானமும் செய்கின்றார்கள்… ஆனால் அங்கே கோவிலுக்கும் போகின்றார்கள்…! என்று இப்படிச் சொல்லாதீர்கள்.

கோவிலுக்குப் போக வேண்டும். ஞானிகள் காட்டிய அருள் வழியை மற்றவர்களைக் கடைப்பிடிக்க வைக்க வேண்டும். ஏனென்ரால் கோவில் நம்மைப் புனிதப்படுத்தக் கூடிய இடம்தான். அதனால் அதை முறைப்படுத்திக் காட்ட வேண்டும். ஆகவே யாம் சொல்லக்கூடியதை நினைவுபடுத்துங்கள்

நீங்கள் செய்வதைக் கண்டால் மற்றவர்களும் என்ன..? என்று பார்ப்பார்கள். கோவிலுக்குச் சென்றால் இந்த மாதிரி கும்பிடச் சொன்னார்… குருநாதர்.

ஆகவே இவ்வாறு கும்பிட்டால் நாம் தெய்வமாக மாறுவோம்…! என்று நீங்கள் சொல்லுங்கள் இது தான் பக்தி.
1.நல்லதைப் போற்ற வேண்டும்…
2,எல்லாரும் போற்றும் நிலைக்கு வளர வேண்டும்…
3.எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்று
4.விநாயகரை வணங்கும் போதெல்லாம் இப்படி எண்ணுதல் வேண்டும்.

கடை வைத்திருக்கின்றோம் என்றால் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் வாழ்க்கையில் நலமும் வளமும் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

அதே சமயத்தில் நம் பிள்ளைகளிடம் சொல்லும் பொழுது.. விநாயகரிடம் போய்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.
2.எங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லப்பா…!
3.இது போல் நீ வேண்டிக் கொண்டு வந்தால் உனக்கு நன்றாக இருக்கும் என்று நாம் போதிக்க வேண்டும்.

இது பக்தி… இதையே நீங்கள் திரும்பத் திரும்ப எண்ணினால் அது தான் தியானம். நாம் அந்த உயர்ந்த எண்ணங்களைத் திருப்பி எண்ணும்போது நூறு முறை சொல்ல வேண்டும்

ஏனென்றால் இதை எல்லாம் குருநாதரிடம் அடிபட்டு உதைபட்டுத்தான் நான் (ஞானகுரு) தெரிந்து கொண்டேன். அடி உதை எதுவும் இல்லாமல்… சொல்லால் நீங்கள் இருந்த இடத்திலிருந்தே தெரிந்து கொள்கின்றீர்கள்.

இதை நீங்கள் சீராகத் தெரிந்து கொண்டால் உங்களுக்கு நல்லது நடக்கும் பக்தி கொண்டு கோவிலுக்குச் செல்வது நல்லது தான். ஆனால் கோவிலுக்குப் போனால் எப்படிச் சாமி கும்பிட வேண்டும்…? என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

எங்கள் வீடு நன்றாக இருக்க வேண்டும். எங்கள் வீட்டில் உள்ளோர் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்த ஆலயத்திற்கு வருவோர் குடும்பங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஆகவே கோவிலுக்குச் சென்று விநாயகரை வணங்கும்போதெல்லாம்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் பெற வேண்டும்
3.எங்கள் ஜீவாத்மா ஜீவ அணுக்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இதை வினையாகச் சேருங்கள்.
4.இதைக் கணங்களுக்கு அதிபதியாக ஆக்குங்கள்.
5.இதையே பக்தியாகக் கொண்டு வாருங்கள்.
6.இதையே தியானியுங்கள்…. இந்தத் தியானமே உங்களுக்குக் கைகொடுக்கும்.

அந்த நிலை பெறுங்கள்… எமது அருளாசிகள்…!

இந்த உண்மையான யாகத்தை ஒவ்வொரு நாளும் நடத்த வேண்டும்

real yaga

இந்த உண்மையான யாகத்தை ஒவ்வொரு நாளும் நடத்த வேண்டும்

 

சாமி (ஞானகுரு) கஷ்டத்தை எல்லாம் நீக்குகின்றார் என்று சொன்னால் போதும் சாமி…! என் குடும்பத்தில் இப்படி எல்லாம் கஷ்டம் இருக்கின்றது…! என்று வேகமாக வந்து சொல்ல ஆரம்பிக்கின்றார்கள்.

1.என் பையன் நன்றாக இருக்க வேண்டும்
2,நாங்கள் நல்லபடியாக வாழ வேண்டும்
3.அந்த அருளை எங்களுக்குக் கொடுங்கள்..! என்று கேட்பதற்கு வாயே வர மாட்டேன்…! என்கிறது.

ஏனென்றால் கோவிலில் போய்ச் “சரணாகதி” (அடிபணிந்து) தத்துவத்தைச் சொன்னதனால் அந்த நிலை வருகின்றது.

1.கஷ்டத்தை எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான் போ…!
2.மிகவும் மீறி விட்டது என்றால் அவன் பேரில் அர்ச்சனை செய் போ…!
3.அதிலேயும் மீறி அவன் அடங்கவில்லை என்றால் யாகத்தைச் செய் போ…!
4.சண்டாள யோகம் என்று கூட இருக்கின்றது…. அந்த யாகத்தை வளர்த்துக் கொண்டு போ…!
5.இப்படிக் காசைக் கொடுத்துப் போகும் நிலை தான்…! இன்று உள்ளது.

உண்மையான யாகம் எது…? என்பது அறியவில்லை. உண்மையான நெருப்பு எது…? நம் உயிர் தான்.

இன்று யாகக் குண்டத்தில் பலவிதமான பொருள்களைப் போடுகின்றனர். மயக்க நிலையை உருவாக்கும் பொருள் ஒன்றையும் போடுவார்கள்.

அதாவது போடும் பொருளில் அந்த மரக்குச்சிகளிலேயே விஷத் தன்மை வாய்ந்த மயக்கத்தைக் கொடுக்கும் நிலையும்… சிந்தனையை ஒரு நிலைப்படுத்தும் தன்மையும்… உண்டு.

சோமபானம் என்ற மருந்தும் உண்டு. அதையும் ஊற்றுவார்கள். அதை ஊற்றி வெளி வரும் புகையைச் சுவாசித்தால் மயக்கத்தை ஊட்டும்.

உதாரணமாக ஒருவன் கஞ்சா அடிக்கின்றான் என்று பார்த்தால் நமக்கும் தலையைச் சுற்றும். ஏனென்றால் அவன் அடிக்கின்றான்… நாம் நுகர்கின்றோம்… அதனால் அப்படி ஆகின்றது.

இதே மாதிரித்தான் சோமபானத்தை நெருப்பிலே போடப்படும் பொழுது உற்றுப் பார்த்தால் நம் உணர்வின் தன்மை அதைப் பதிவாக்கி விடுகின்றது.

ஆகவே…
1.உண்மையான நெருப்பில் (உயிரில்)
2.அந்த அருள் ஞானிகளின் உணர்வு பெறவேண்டும் என்ற உணர்வைச் செலுத்துங்கள்.

மற்றவர்கள் தீமைகளையோ… குறைகளையோ… துன்பங்களையோ… எண்ணாது அதிலிருந்து “அவர்கள் விடுபட வேண்டும்…” என்ற உணர்வைச் செலுத்துங்கள். உங்கள் உயிரிலே (புருவ மத்தியிலே) செலுத்துங்கள்.

1.அவர்கள் அனைவரும் தெளிவானவர்களாகவும்
2.இந்த உலகுக்கே நன்மைச் செய்பவர்களாகவும் வர வேண்டும் என்று எண்ணுங்கள்.

ரோட்டிலே போகும் பொழுது இனம் தெரியாதபடி இரண்டு பேர் சண்டை போடுகின்றார்கள் என்று உற்றுப் பார்த்தால் அடுத்த கணமே ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்றுத் தீமைகள் புகாது முதலிலே தடுத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து அவர்கள் ஒன்றுபட்டு வாழும் அந்த நிலை வர வேண்டும் என்று எண்ணுங்கள். உலக மக்கள் அனைவரும் சகோதர உணர்வுடன் வாழ வேண்டும் என்ற உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

இப்படிச் செய்தால்…
1.மற்றவர்கள் உணர்வு நம்மை இயக்காது
2.நமக்குள் பக்குவப்படுத்திக் கொள்ள முடியும்.
3.தீமையான உணர்வுகள் வந்தாலும் அதை நமக்கு வேண்டியதாக மாற்றிக் கொள்ளலாம்
4.நம் உயிரான நெருப்பிலே…!

ஏனென்றால் நெருப்பிலே நாம் எந்தப் பொருளைப் போடுகின்றோமோ அந்த மணம் தான் வரும். ஆகவே ஒவ்வொருவரும் உங்கள் வாழ்க்கையில் இந்த உண்மையான யாகத்தை நடத்துங்கள்.

1.உங்கள் உயிர் நெருப்பு
2.அதிலே நல்ல உணர்வுகளைச் செலுத்துங்கள்.
3.அந்த உணர்வு உங்கள் எண்ணம் சொல் செயல்களை நல்லதாக மாற்றும்.

இதைப் பெறச் செய்வதற்குத் தான் ஞானிகள் இந்த யாகத்தைக் காட்டினார்கள்.

கல்லைக் கடவுளாக்கி விட்டோம்… நம் மனதைக் கல்லாக்கிக் கொண்டே வருகின்றோம்…!

1000 Pillar

கல்லைக் கடவுளாக்கி விட்டோம்… நம் மனதைக் கல்லாக்கிக் கொண்டே வருகின்றோம்…!

ஆலயங்களில் ஞானிகள் சிலையை உருவாக்கி வைத்துள்ளனர். நாம் அந்தச் சிலையைக் கல்லாகத்தான் மதிக்கின்றோமே தவிர சிலைக்குள் மறைந்துள்ள உண்மையை அறிவதில்லை.

1.நீ இந்தத் தெய்வீகக் குணத்தைப் பின்பற்றினால்
2.உன் குடும்பம் நலமாக இருக்கும்
3.உன் குணங்கள் நன்றாக இருக்கும் என்று ஸ்தல புராணங்களை வடித்து வைத்திருக்கின்றார்கள்.
4.வடித்து வைத்திருந்தாலும் மகரிஷிகள் காட்டிய அருள் வழியினைப் பின்பற்ற வேண்டும்…! என்றும் சொல்லியுள்ளார்கள்.

ஆனால் அந்தச் சிலை தான் நமக்குச் செய்கின்றது…! என்ற எண்ணத்தில்… அதற்கு அபிஷேகம்… ஆராதனை… செய்து விட்டால் அவன் செய்து தருவான்…! என்று எண்ணுகின்றனர்.

அந்த எண்ணத்தில் தன்னுடைய துயரத்தை எல்லாம் அங்கே கொட்டுகின்றனர்.
1.எனக்கு இந்தப் பாவிப் பயல் மோசம் செய்தான்…
2.என் பையன் சுட்டித்தனம் செய்கின்றான்… அவன் என்றைக்குத்தான் திருந்துவானோ…?
3.கடன் வாங்கிச் சென்றவர்கள் பணத்தைத் தரவே மாட்டேன் என்கிறார்கள்…! என்று
4.மீண்டும் மீண்டும் வேதனயைத் தான் சுவாசிக்கின்றனர்.

இதுகள் எல்லாம் நம்முடைய அறியாமை…! ஆசையின் நிமித்தம் இந்த உணர்வின் தன்மை பெற்று
1.உடல் இச்சைக்குத்தான் மாற்றுகின்றோம்
2.இந்த உடலைக் காக்கும் இச்சை வரவில்லை.
3.தீமைகளை அகற்றத் தெரியாத வாழ்க்கை தான் நாம் வாழ்கின்றோம்.

தீமைகளை எப்படிப் போக்க வேண்டும்…? என்பதற்குத்தான் அந்த அருள் ஞானிகள் ஒவ்வொரு குணங்களுக்கும் சிலைகளை அமைத்துத் “துவைதம்” என்று காட்டினார்கள். (துவைதம் என்றால் கண்ணுக்குத் தெரிவது)

அந்தத் தெய்வத்திற்கு அவன் எழுதிய காவியம் “அத்வைதம்” (அத்வைதம் என்றால் கண்ணுக்குப் புலப்படாதது) அதை உற்றுப் பார்த்து நுகர்ந்து அந்த உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது உயிரிலே பட்டால் “விசிஷ்டாத்வைதம்”

1.இந்தக் கோவிலுக்கு வருகின்றவர்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்
2.அவர்கள் குடும்பம் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும்
3.அவர்கள் தொழில் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கப்படும் பொழுது
4.நமக்குத் தொழிலில் நஷ்டம் வந்தாலும்… மற்ற கஷ்டம் வந்தாலும்…! “அதை எல்லாம் மறந்து விடுகின்றோம்….”

மலரைப் போன்ற மனம் நாங்கள் பெறவேண்டும் இந்தக் கோவிலுக்கு வருகின்றவர்கள் எல்லாம் மலரைப் போன்ற மனம் பெறவேண்டும் அவர்கள் குடும்பத்தார் அனைவரும் மலரைப் போன்ற மனம் பெறவேண்டும் என்று கோவிலுக்கு வரும் ஒவ்வொருவரையுமே எண்ணும்படி வைக்கின்றார்கள்.

ஆனால் இன்று கோவிலுக்கு முன்னாடி என்ன நடக்கின்றது…?

கடையில் மாலையை வாங்கினால் அவன் அதிக விலை சொல்கிறான். மற்ற இடங்களில் இருபது அல்லது முப்பது என்றால் கோவிலில் உள்ள கடையில் ஐம்பது ரூபாய் என்பான்.

ஏன் அதிக விலை சொல்கிறாய்…? என்று கேட்டால் கோவிலில் கடைக்கு வாடகை எக்கச்சக்கமாகக் கேட்கின்றார்கள், வெளியிலே கடை வாடகை 3000, 4000 என்றால் இங்கே பத்தாயிரம் ரூபாய் கேட்கின்றார்கள்.

நாங்கள் இங்கே வாங்கித்தானே கொடுக்க வேண்டும்.. நாங்களும் பிழைக்க வேண்டும் அல்லவா…! என்கிறார்கள்.

கோவிலுக்குச் சென்று யாகத்தைச் செய்தால் பாவத்தைப் போக்கலாம். என்று ஞானிகள் சொன்ன உண்மையின் உணர்வை நுகரும் தன்மையையே இழக்கச் செய்து விட்டார்கள்.

ஞானிகள் கொடுத்த ஆலயப் பண்புகளை மறந்து தான் இன்று இருக்கின்றோம்.

ஞானிகள் காட்டிய வழியில் ஆலயத்தை நாம் மதித்து நடத்தல் வேண்டும். கோவிலுக்கு வரும அனைவரும் நலமும் வளமும் பெறவேண்டும் என்று எண்ணுவதே “உண்மையான பக்தி…!”

 

 

ஆறு அறிவு கொண்ட மனிதன் தன் வளர்ச்சியில் பத்தாவது நிலையான கல்கியை அடைய வேண்டும்…! என்று தான் சாஸ்திரங்கள் கூறுகிறது

Astathik paalaka

ஆறு அறிவு கொண்ட மனிதன் தன் வளர்ச்சியில் பத்தாவது நிலையான கல்கியை அடைய வேண்டும்…! என்று தான் சாஸ்திரங்கள் கூறுகிறது

 

நம் ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக மாற்றிய பின் அப்புறம் எட்டாவது நிலை… அதாவது நமக்குள் எடுத்துக் கொண்ட சக்தி “அஷ்டதிக்கு பாலகர்கள்..”

ஏழாவது அறிவைக் கொண்டு கெட்டதை நீக்கி மெய் ஒளியின் தன்மையைத் தனக்குள் எடுக்கப்படும் பொழுது எட்டாவது நிலையை அடைகின்றது.

எந்தத் திசையிலிருந்தும் எத்தகைய நிலை இருந்தாலும் தன்னை அறியாதபடி வரும் தீமைகளை அகற்றும் தன்மை தான்..
1.அந்த அஷ்டதிக்கு பாலகர்கள் என்று சொல்லும் பொழுது
2.கோவிலிலே தெய்வத்தைக் காட்டும் பொழுது அந்தப் பாலகர்கள் தான்…
3.எட்டுத் திக்கிலிருந்தும் தெய்வத்தைக் காக்கின்றார்கள் என்று சொல்கிறார்கள்.

நமக்குள் இந்த எட்டாவது அறிவான நிலைகள் எட்டுத் திக்கிலிருந்து வரக்கூடிய கெட்டதுகளை நீக்கித் தன் உணர்வின் சத்தைக் காத்துக் கொள்கின்றது.

எப்படித் தங்கத்திற்குள் திரவகத்தை ஊற்றிய பின் அதிலே கலந்துள்ள செம்பும் பித்தளையும் அது நீக்கி விடுகின்றதோ இதைப் போல் நாம் அடிக்கடி அந்த மெய் ஞானிகளின் அருள் ஒளிகளை எடுத்துச் சேர்க்கப்படும் பொழுது
1.நம் உணர்வின் மணம் தீயதை நாடாது
2.தனக்குள் அந்த ஒளியின் சரீரமாகக் காத்தருளும் சக்தி பெறுகின்றது.

அடுத்து ஒன்பதாவது நிலை உயிருடன் ஒன்றி “நவமி” நம் எண்ணத்தின் நிலைகள் இந்த உணர்வுகள் அனைத்தும் சொல்லின் தன்மையாக வரும் பொழுது ஒன்பதாவது நிலை அடைகின்றது.

இராமன் நவமியிலே பிறந்தான்… கண்ணன் அஷ்டமியிலே பிறந்தான்… என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அஷ்டமி என்பது கோள்கள் அது இருள் சூழ்ந்த நிலைகள்.

அதாவது இருளான இந்த உடல் கொண்டு
1.எண்ணத்தால் கண்களின் தன்மை வளர்ந்தது.
2.எண்ணத்தைக் கொண்டு தான் ஒவ்வொன்றையும் தெரிந்து கொள்ளும் நிலை.
3.பின் உயிரின் நிலைகள் கொண்டு இந்த உணர்வுகள் எல்லாம் ஒளியாக மாறுகின்றது.

உதாரணமாக விண்வெளியின் நிலைகள் மையமாக இருந்தாலும் அதிலிருந்து தோன்றிய நட்சத்திரங்கள் பேரண்டத்திலிருந்து வரக்கூடிய விஷத்தின் தன்மையை மாய்த்துவிட்டு தனக்குகந்த நிலைகளை உணவாக எடுத்துக் கொண்டு பிரபஞ்சத்திற்குள் ஈர்க்கப்பட்டு வருகின்றது.

அந்த உணர்வின் சக்தியைக் கோள்கள் நுகர்ந்து கொள்கிறது. கோள்கள் கவர்ந்ததைச் சூரியன் கவர்ந்து அந்த உணர்வின் சக்தியை இந்தப் பிரபஞ்சத்தையே இயக்கும் சக்தியாக மாற்றுகின்றது.

எட்டுக் கோளின் தன்மை கொண்டு தான் சூரியன் ஒளியாக மாறுகின்றது. அதைப் போல் நாம் எடுத்துக் கொண்ட எண்ணங்கள் அனைத்தும் நம் உடல் கோளாக மாறுகின்றது.

ஆக… ஒவ்வொரு உணர்வின் இயக்கமாகத் தனக்குள் எடுத்து அந்த உணர்வின் சத்தை நம் உடலாக வளர்த்துத் தன் நிலை அடைகின்றது என்பதைக் காட்டிய பின் எண்ணத்தின் நிலைகள் ஒன்பதாவது நிலை அடைய வேண்டும்.

உயிருடன் ஒன்றிய நிலைகள் ஒன்பதாவதாக ஆகப்படும் பொழுது உடலை விட்டுச் சென்ற பின் எந்த ஆன்மாவும் நம்மை இழுக்காது.

1.எட்டு… தீயதின் நிலைகளை நீக்கி
2.உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றிய ஒன்பதாவது… நிலையை அடையப்படும் பொழுது
3.உடலை விட்டுச் சென்ற பின் பத்தாவது… கல்கி அவதாரம் என்பது.

இந்த உடலிலிருந்து எட்டுத் திக்கில் இருந்து வருவதையும் காத்தது போல் இந்த உயிராத்மா உடலை விட்டு வெளியே போன பின் “கல்கி…!” இன்னோரு உடல் நம்மை இழுத்திடாதவண்ணம் தடுக்கும் நிலை தான் பத்து – தசாவதாரம்.

பத்தாவது அவதாரமாக உயிர் ஒளியாகச் செல்வதை அவ்வாறு காட்டினார்கள். நாம் பிறவி இல்லா நிலை அடைகின்றோம்.

விளக்கு பூஜையின் தத்துவம் என்ன…?

பொதுவாக நமது பெண்கள் மாலை ஆனதும் தீபம் ஏற்றி விளக்கு பூஜை செய்கிறார்கள். இதை தவிர, மாதந்தோறும் கோயில்களிலே 108 விளக்கு பூஜை 1008 விளக்கு பூஜை என்று கூட்டு தியானம் செய்கிறார்கள். இந்த விளக்கு பூஜையின் தத்துவம் என்ன?.

விளக்கைப் பொருத்தியபின் அங்கிருக்கக்கூடிய பொருள்கள் அனைத்தும் தெரிகின்றது.

விளக்கை வைத்தால் எப்படிப் பொருள் தெரிகின்றதோ அந்தச் சுடரைப் போல எல்லாவற்றையும் அறிந்திடும் அருள் உணர்வுகள் நாங்கள் பெறவேண்டும் எங்களை அறியாது வரும் இருள்களை நீக்கிடும் அருள்சக்தி பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இப்பொழுது கோவிலில் போய் விளக்கை ஏற்றி வைத்து இதை வணங்குகின்றார்கள் ஆனாலும், அதே சமயத்தில் இவர்கள் வீட்டில் என்னென்ன கஷ்டங்கள் இருக்கின்றதோ இதை எல்லாம் போக்க வேண்டும் என்ற உணர்வை வைத்து,

1.விளக்கை வைத்து

2.அந்த ஆண்டவனுக்கு இப்படி ஜெபித்து வந்தால்

3.நன்றாக இருக்கும் என்று செய்கிறார்கள்.

நாம் பாலில் பாதாமைப் போட்டு அதிலே ஒரு துளி விஷத்தைக் கலந்து அந்த உணவைச் சாப்பிட்டால் நம்மை இறக்கச் செய்கின்றது.

இதைப்போலத் தான் விஷத்தன்மை கொண்ட உணர்வுகளில் இருந்து நாம் இதை விடுபடவேண்டும் என்றால்

1.விஷத்தன்மையை வென்ற

2.மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறவேண்டும்.

வழக்கமாக விளக்கு பூஜை செய்யும்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள்? புஷ்பத்தை எடுத்து அங்கே போட்டுக்கொண்டே இருப்பீர்கள்.

அந்த நேரத்தில் இதற்காக சில பேர் மந்திரத்தைச் சொல்லிக் கொண்டு போடுவார்கள். இதனால் பலன் ஏதுமில்லை.

இதெல்லாம் பக்தி மார்க்கங்களில் ஒன்று சேர்த்து வாழ்வதற்கு ஒர் இணைப்புப் பாலமாகத்தான் அமைகின்றனரே தவிர அவர்கள் இந்த விளக்கு பூஜையினால் பலன் இல்லை. ஒன்று சேர்த்து வாழ முடியும்.

இந்த விளக்கு பூஜை நடந்து முடிந்த பிற்பாடு பாருங்கள் ஒருத்தருக்கொருத்தர் இந்த குறைபாடுகள் தான் வரும்.

ஆக குறைபாடுகளை நிவர்த்திப்பதற்கு ஏதாவது வழி இருக்கின்றதா?இல்லை. நாம் புற நிலைக்காக விளக்கை வைத்துச் சென்றால் சரியில்லை. 

 

சாதாரணமாக கோயில்களில் விளக்கைக் காட்டுகிறார்கள் என்றால் எதற்காகக் காட்டுகிறார்கள்?

அங்கே இருட்டறைக்குள் மறைக்கப்பட்டு சிலைக்கு பல அலங்காரம் செய்து கனிகளும் பொருள்களும் வைத்துள்ளார்கள். அப்பொழுது அங்கே விளக்கைக் காட்டும்போது என்ன தெரிகின்றது? மறைந்த நிலைகள் அனைத்தும் அந்த வெளிச்சத்தில் தெரிகின்றது.

 அப்பொழுது என்ன எண்ண வேண்டும்? பொருளறிந்து செயல்படும் இச்சக்தி நாங்கள் பெறவேண்டும் எங்கள் குடும்பத்தில் அனைவரும் பொருளறிந்து செயல்படும் இச்சக்தி பெறவேண்டும்.

நாங்கள் பார்ப்போர் குடும்பங்களில் உள்ள அனைவரும் பொருளறிந்து செயல்படும் இச்சக்தி பெறவேண்டும். இந்த ஆலயம் வருவோருக்க்கெல்லாம் பொருளறிந்து செயல்படும் இச்சக்தி பெறவேண்டும் என்று இப்படி எண்ண வேண்டும்.

இப்படி எண்ணும்போது இந்த விளக்கு பூஜை எப்படி இருக்கும்? கோவிலில் இப்படிக் காட்டப்படுகின்றது.

ஆகவே, அந்த விளக்கு என்பது என்ன…?

நாம் வேதனைப்படும்போது நமக்குள் மனம் இருண்டுவிடுகின்றது. அப்பொழுது, 

1.நம் மனம் இருளாது அருள் ஜோதியாக இருக்க வேண்டும், 

2.தெளிந்த மனம் பெறவேண்டும் என்ற உணர்வை எண்ணி,

3.அந்த உணர்வை நாம் நுகர்ந்தோமென்றால்

4.அது உண்மையான விளக்கு பூஜை ஆகும்.

சிவனைச் சக்தி ஆட்டிப் படைக்கின்றது… என்று காட்டியதன் உண்மை நிலை என்ன…?

kali and shiva

சிவனைச் சக்தி ஆட்டிப் படைக்கின்றது… என்று காட்டியதன் உண்மை நிலை என்ன…?

 

மீன்களை ரசித்துச் சாப்பிடுவார்கள். சில மீன்களை வாங்கிச் சமையல் செய்யும் பொழுது பெண்கள் அதை அப்படியே உயிருடன் உராய்வார்கள்… போட்டுச் சுரண்டி அதை நரக வேதனைப்படுத்தி பின் வேக வைத்துச் சாப்பிடுவார்கள்.

1.எவ்வளவு தூரம் மீனை உராய்ந்து அதை இம்சை செய்தோமோ
2.உற்றுப் பார்த்துச் சுவாசித்ததை நம் உயிர் சும்மா விடுவதில்லை…!
3.அதன் உணர்வின் கருவாக நம் இரத்தத்தில் முட்டையாகி அது நாளடைவில் அணுவின் தன்மை அடைந்தால்
4.உராயும் பொழுது அதற்கு (மீனுக்கு) எப்படி எரிச்சலானதோ அந்த எரிச்சல் பெண்களுக்கு நிச்சயம் வரும்.

மீன் குழம்பை வைத்தவர்களுக்கு எல்லாம் பெரும்பகுதி மீனை உயிருடன் உராய்ந்திருந்தால் உடலில் எரிச்சல்… கை காலிலும் எரிச்சல் வரும்.

எம்மா… எரியுதே…எரியுதே…! என்று சொல்லிக் கொண்டு டாக்டரிடம் சென்றாலும் அதற்கு வேண்டிய மருந்துகளைக் கொடுத்துச் சரி செய்ய முயன்றாலும் மீனை உயிருடன் போட்டுச் சுரண்டி உராய்ந்தவர்களுக்கு வரும் எரிச்சலை எந்த மருத்துவத்தாலும் நிறுத்த முடியாது.

நான் இந்த டாக்டரிடம் சென்றேன்… கேட்கவில்லை.. அடுத்த டாக்டரிடம் போனேன்…! அதுவும் கேட்கவில்லை.. என்று தான் சொல்வீர்கள்.

ஆக நம்மை அறியாமலே எரிச்சல் ஊட்டும் நிலைகள் கொண்டு நாம் ரசித்ததை இந்த உடலில் நாம் அனுபவித்துத்தான் தீர வேண்டும்.

அத்தகைய உணர்வின் அணுக்கள் உடலிலே பிறந்து விட்டால் இதன் வழி உடலை விட்டு நாம் வெளியிலே சென்ற பின் அதற்குத் தகுந்த உடலைத் தேடி நம் உயிர் அழைத்துச் சென்று அதன் படியே அங்கே வளரும். அந்த உருவாகத் தான் உயிர் நம்மை உருவாக்கும்.

நாம் நினைக்கின்றோம்… கடவுள்… எங்கே இருக்கின்றான்..? நாம் திருட்டுத்தனமாகச் செய்வதை அவன் எப்படிப் பார்ப்பான்…? அவனுக்கு என்ன தெரியப் போகிறதா என்று…!

ஆனால் நமக்குள் இருந்து ஆண்டவனாக ஆண்டு கொண்டிருப்பவன் உயிரே…!

நாம் எண்ணியதை எல்லாம் உருவாக்குவதும் அதை ஆண்டு கொண்டிருப்பதும்
1.நாம் எண்ணிபடி இந்த உடலை இயக்குவதும்
2.நாம் எதை வளர்க்கின்றோமோ அதன் வழி நீ அனுபவி…! என்று தான் நம்மைச் செலுத்துவான்.

அதே சமயத்தில் ஆறாவது அறிவு பெற்று வளர்ந்த நாம் இதைப் போன்ற கொடிய தீமைகளை எல்லாம் அப்புறப்படுத்தி அருள் ஒளியின் உணர்வை நமக்குள் சேர்ப்பித்தால் அதையும் நம் உயிரே உருவாக்குகின்றான்.

நாம் எண்ணியது எதுவோ அந்த அருள் ஒளிகளை உருவாக்கி நமக்குள் சொர்க்கலோகத்தையே அமைக்கின்றான். இந்த உடலிலேயே சொர்க்கலோகத்தை உருவாக்குகின்றான்.

இந்த உடலை உருவாக்கிய பின்…
1.பழைய உடலைப் பிளந்து விட்டு
2.என்றும் பதினாறு என்ற நிலையை ஒளியின் சரீரமாக உருவாக்குகின்றான்.

இதை யார் உருவாக்குவது…? நம் உயிர் தான்,

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான நோய்கள் வரும். அது எல்லாமே நாம் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் விளைவதனால் வருவது தான்…!.

1.தெரிந்து செயல்படும் உணர்வுகளும் நமக்குள் அணுக்கருவாக மாறுகின்றது.
2.நம்மை அறியாமல் சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்ததும் அணுக்கருவாக மாற்றுகின்றது நம் உடலில்.
3.இப்படி நுகர்ந்தது (சுவாசித்தது) அனைத்தையும் உருவாக்கும் திறன் பெற்றது தான் நம் உயிர்.

ஆகையினால் “விஷ்ணு…” வரம் கொடுக்கின்றான் என்று இதைக் காட்டுகின்றார்கள். நுகர்ந்த உணர்வின் தன்மை கருவாகி விட்டால் அணுவாகின்றது.

அணுவாகி விட்டால் அது தன் உணவுக்காக உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது. அது தன் உணவை எடுக்கின்றது. பின் தன் இனத்தைப் பெருக்குகின்றது. இது தான் “பிரம்மா…” உருவாக்குகின்றான்.

அதே சமயத்தில் உடலான “சிவன்..” அரவணைத்துக் கொள்கின்றான். உடலுக்குள் எது எல்லாம் வருகின்றதோ அந்த உணர்வுகள் அனைத்தையும் அது அரவணைத்துக் கொள்கின்றது.

1.எக்குணத்தின் செயலாக நாம் எடுத்தோமோ அந்த அணுவின் சக்தியாக நமக்குள் இயக்குகின்றது.
2.ஆகவே இந்த சக்தியின் தொடர் கொண்டு தான் சிவனின் இயக்கமே இருக்கின்றது.

உடலில் வலி ஏற்பட்டால் அம்மம்மா… அப்பப்பா..! என்று நாம் துடிக்கின்றோம் அல்லவா…! அப்பொழுது சக்தி சிவனை ஆட்டிப் படைக்கின்றது என்று சிவ நடனத்தைக் காட்டுகின்றனர்.

நாம் நுகர்ந்த உணர்வுகள் எதுவோ அதன் வழி உணர்ச்சிகளைத் தூண்டப்படும் பொழுது
1.சக்தியின் கீழ் தான் சிவன் அடிமையாகி இருக்கின்றான் என்ற நிலையைத் தெளிவாக்குகின்றனர்.
2.சிவனைச் சக்தி தன் திரிசூலத்தால் தாக்குகின்றாள் என்றெல்லாம் உருவாக்கிக் கொடுத்திருப்பார்கள்.

நாம் ஒருவரைத் தாக்கும் உணர்வு (எண்ணம்) கொண்டு நுகர்ந்தால்.. நம் உயிரின் தன்மை அதை உருவாக்கும் அந்தச் சக்தியாக உருவாகி நம் உடலான சிவமாக அது மாறியே விடும்.

பின் அதனின் கடுமையான வேகங்கள் கூடப்படும் பொழுது.. இந்த உடலைச் செயலற்றதாக மாற்றி… அதன் கீழ் தாக்கும்..! என்ற நிலையையும் “படமாக்கிச் சித்தரித்து…” அதன் காவியத் தொகுப்பையும் தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்.