“இது இவருடைய குணாதிசயம்…” என்று சொல்கிறோம்… அது எப்படி அமைகிறது…?

THOUGHT POWER AND FUNCTION

“இது இவருடைய குணாதிசயம்…” என்று சொல்கிறோம்.. அது எப்படி அமைகிறது…?

 

ஒரு மனிதன் நமக்குத் தீங்கு செய்கின்றான்.. தீங்கு செய்கின்றான்.. என்ற உணர்வை நுகர்ந்தால் அதை நம் உயிர் ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றி எந்த உணர்வின் சத்தை நுகர்ந்தோமோ அந்த உணர்வின் அணுக்கருவாக அது நம் இரத்தநாளங்களில் உருப்பெறுகின்றது.

நாம் உற்று நோக்கிய உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்தாக நம் எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள் பதிவாகின்றது. இப்படி நமக்குள் பதிவான உணர்வுகள் என்ன செய்யும்..?

1.வெறுப்பை ஊட்டிய அந்த மனிதனை அடிக்கடி நாம் எண்ணி அந்த உணர்வை நுகர்வோம் என்றால்
2.நம் உடலுக்குள் அது அணுக்கருக்களாகின்றது.. முட்டையாகின்றது
3.அதை மீண்டும் நினைவாக்கப்படும் பொழுது அதை அடைகாத்தது போல் ஆகி அணுவாக உருப்பெறச் செய்கின்றோம் நாம் முதலிலே.

அணுவாக உருவாக்கிவிட்டால் அந்த அணு வெறுப்படையச் செய்யும் உணர்வையே அது நுகர்கின்றது.
1.அந்த உணர்ச்சிகளை ஊட்டுகின்றது
2.அந்த உணர்ச்சிகள் நம் இரத்தநாளங்களில் பரவுகின்றது.

இரத்தம் எல்லா இடங்களுக்கும் செல்லப்படும் பொழுது அங்கே சிறு மூளை பாகமும் செல்கிறது.
1.சிறு மூளைக்கும் உயிருக்கும் இருக்கும் தொடர்பு வழியில் (கவன ஈர்ப்பு நரம்பு)
2.இந்த உணர்ச்சிகளை உயிர் கவர்ந்து நம் கண் காது மூக்கு செவி உடல் என்ற இந்த உறுப்புகளுக்கு ஆணையிடுகின்றது.

அந்த ஆணைப்படி இவை அனைத்தும் கவர்ந்து நுகரச் செய்கின்றது.

நுகர்ந்த உணர்வை நம் உயிர் உடலுக்குள் பரவச் செய்கின்றது. அப்படிப் பரவச் செய்யும் பொழுது இந்த இரத்தநாளங்களில் வழி உடல் முழுவதும் பரவச் செய்கின்றது.

இதை நாம் உணர்ந்து கொள்வதற்காக ஞானிகள் காவியத் தொகுப்புகளைக் காட்டியுள்ளார்கள்.

அதாவது நாம் எதை எல்லாம் எண்ணுகின்றோமோ மகா விஷ்ணு (உயிர்) வரம் கொடுக்கின்றான்… காக்கின்றான்…! என்று தெளிவாக்குகின்றார்கள்.

சுவாசித்து நம் உடலில் இப்படிச் சுழலப்படும் பொழுது அதன் வழி உணர்வை நுகரப்படும் பொழுது அதன் வழி உருவான அணு
1.யார் வெறுப்படையும் செயலைச் செய்தனரோ
2.அதே வெறுப்பின் தன்மை கொண்டு குருவாக நமக்குள் அடைகின்றது.

இதே போல் ஒரு கோபப்படும் உணர்வு வரப்படும் பொழுது ஒருவன் கோபப்படும் பொழுது எந்தெந்த வழிகளில் செயல்பட்டானோ… அதன் வழிப்படி அது குருவாக இயக்கத் தொடங்கிவிடும்.

ஒவ்வொரு குணங்களும் இப்படித்தான் நம்மை இயக்குகிறது…!

நமக்குள் எந்தெந்த குணங்கள் கொண்டோமோ அந்தக் குணங்களின் தன்மை கொண்டு குருவாக இயக்கப்படும் பொழுது
1.அதிலே எந்தக் குணத்தை நாம் அதிகமாக நேசிக்கின்றோமோ
2.அந்தக் குணத்தின் செயல்கள் நமக்குள் அதிகமான பின்
3.அது நம்மை ஆட்சி புரியும் சக்தியாக மாறிவிடுகின்றது.

இதனை உணர்த்துவதற்குத்தான் மூஷிகவாகனா என்றார்கள். அதாவது நாம் சுவாசித்த உணர்வுகள் அது வாகனமாக அமைந்து வாழ்க்கை நடத்தச் செய்கிறது.

உதாரணமாக நாம் கோப குணத்தை அதிகமாக எண்ணினால்… அதையே அடிக்கடி பட்டால்.. அதுவே குரு வழியில் கணங்களுக்கு அதிபதியாகி நம் நல்ல குணங்களை எல்லாம் அடக்கி ஆட்சி புரியத் தொடங்கிவிடும்.

1.ஆட்சி புரியத் தொடங்கிவிட்டால் அதன் உணர்வு எதுவோ
2.அதன் வழி மற்றதைத் தனக்குள் இயக்கும்படிச் செய்யும்.
3.இயங்கவில்லை என்றால் அதை இது அடித்து மாய்த்துவிடும்.

இதைப் போன்று தான் நம் நாட்டில் மட்டுமல்ல… உலகம் முழுமைக்குமே நல் ஒழுக்கம் கொண்டு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதைப் பற்றியும் நாம் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதையும் ஞானிகள் காவியங்கள் மூலமாகத் தான் கண்டுணர்ந்த உணர்வுகளைக் காட்டியுள்ளார்கள்.

அந்த ஞானிகள் காட்டிய வழிப்படி ஒவ்வொரு குணங்களும் நமக்குள் குருவாக இருந்து எப்படி இயங்குகிறது…? என்பதைத் தெரிந்து கொள்ளவே இதை உங்களுக்கு உணர்த்துகின்றோம்.

“உயிர் வழி” உயர்ந்த சக்திகளை நமக்குள் பெறுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

eswara's third eye

“உயிர் வழி” உயர்ந்த சக்திகளை நமக்குள் பெறுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

அன்ன பிண்ட உடலாக இஜ்ஜீவ உடலை வளர்த்துள்ள மனித இனச் சக்தியின் ஞானமும் அதன் செயற்கைப் பிடிப்புடனே சமைத்துண்டு இயற்கையின் பிடிப்பின்றி காற்று மழை வெயில் எதுவுமே தன்னைத் தாக்காமல் காத்துக் கொள்ள உறைவிடம் அமைத்து வாழத்தக்க வளர்ச்சி நிலையில் தான் இன்றைய (விஞ்ஞானம்) மனிதச் செயலே இருக்கின்றது.

ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதனுக்குகந்த பகுத்தறியும் ஞானத்தில் வளர்ந்து வந்ததையே
1.செயற்கையின் செயலின் வழியில் சில நூறு ஆண்டுகளாக வார்ப்புப் படுத்திவிட்டதனால்
2.இயற்கை உணர்வின் தன்மையைத் தன் ஞான உணர்வால் ஈர்க்க முடியவில்லையப்பா “இன்றைய மனிதனுக்கு…!”

சேவலிலிருந்து சில பட்சிகளும் நாய் நரி பூனை அனைத்துமே உலகச் சுழற்சியின் தன்மையைத் தன் சுவாச உணர்வில் அறிந்து கொள்ளும் திறன் கொண்டது தான். ஜாமக் கோழி கூவுகின்றது. அதே போல் அதிகாலையில் துயில் எழுந்து இரை தேடச் செல்கின்றன பறவை இனங்கள்.

சூரிய ஒளி உதயமாவதற்குள்ளேயே ஒளியின் தன்மையை மழை மேகம் மறைத்திருந்தாலும் இந்தப் பட்சிகள் எப்படி விடியலை அறிகின்றன…?

ஏனென்றால்…
1.இந்தப் பூமி சுழலும் சுழற்சித் தன்மையை மனிதனைக் காட்டிலும்
2.தன் உணர்வின் சுவாசத்தாலேயே அறியவல்ல தன்மை
3.சில தாவரங்களுக்கும் பட்சிகளுக்கும் பிராணிகளுக்கும் உண்டு.

ஐந்தறிவு கொண்ட மற்ற இனங்கள் சொல்லாற்றலும் செயலாற்றலும் இன்றி… இயற்கையுடன் ஒயற்கையாக ஒன்றி… இயற்கை உணர்வை அறிந்து கொள்கின்றன.

ஆறறிவு கொண்ட மனிதன் என்றுரைக்கப்படுபவன்.. செயலாற்றும் திறமை கொண்டவன்… சொல்லாற்றல் உடையவன்… விஞ்ஞான் சக்தியைக் கொண்டு மனிதக் கருவையே தாயின்றி வளர்க்கச் செய்பவன்…
1.என்றெல்லாம் சொல்லப்படும் இன்றைய கலி மனிதன்
2.இந்த இயற்கைச் சுழற்சியைச் செயற்கைக் கருவிகள் கொண்டு தான் உணர்கின்றான்.

ஆனால் ஞானத்தால் உயர்ந்த அன்றைய சித்தர்கள் அணுவுக்குள் அணுவாகச் சித்து நிலை பெறத் தன் பிம்ப உடலின் ஆத்ம உயிரைப் பல மிருகங்களின் பல பட்சிகளின் ஆத்மாவுடன் இவ்வாத்மாவைக் கவசம் போல் அதன் ஈர்ப்பில் சென்று அதன் உடல் அமிலக் கூட்டின் முலாமையும் தன் உயிராத்மாவிற்குச் சேமிதம் செய்து வைத்துக் கொண்டார்கள்.

இதை உணர்த்தும் விதமாகத் தான் அந்தத் தெய்வீகக் குணத்திற்காகச் சிலை உருவிற்கு நாமகரணமிட்டு பல பல சிலையின் வடிவங்களைக் காட்டினார்கள்.

1.குண சக்தியின் வழியில் தெய்வ ஞானத்தை வளர்த்துக் கொள்ளும் பொருட்டு
2.அந்த அவதார மூர்த்திகளுக்குப் பாம்பையும் மயிலையும் சேவலையும் பசு பன்றி சிங்கம் புலி இவைகளையும்
3.இன்னும் பல பிராணிகளையும் வாகனமாகக் காட்டினார்கள்.

தன் உடலுக்குள் விளைந்த அமில முலாம் குண வளர்ச்சியின் ஈர்ப்பு விகித எண்ணச் செயலைக் காட்டிலும் இந்தப் புவி ஈர்ப்பின் வளர்ச்சி பெற்ற பல உயர்ந்த அமிலத் தன்மையின் வார்ப்புடன் தன் செயலைச் செய்விக்க
1.தன் ஆத்ம உயிரை அணுவுக்குள் அணுவாகச் சென்று
2.பிற வார்ப்பில் உள்ள அமிலச் சுவை முலாமையும் எடுத்து
3.தன் உயிராத்மாவிற்கு வலுவாக்கிக் கொள்கின்றான் ஞானத்தில் வளர்ந்த சித்தன்.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இது நாள் வரை உணர்த்தியதெல்லாம் ஜெப முறையும் தியான வளர்ச்சிக்குகந்த ஞான வளர்ச்சி முறையும் தான்.

ஞானத்தால் உயர் ஞானம் கொள்ள இந்த உடல் முழுமைக்கும் உள்ள ஒவ்வொரு அணுவையுமே தன் ஞான வளர்ச்சியின் வழி செயல் வளர்க்க “ஆத்ம உயிரின் துணை கொண்டு தான்…” செயல்படுத்த வேண்டும்.

இவ்வாத்ம உயிரின் உயர் காந்த மின் அலை ஈர்ப்பு வளர்ச்சிக்கு
1.துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் வரும் அலைகளை
2.நேரடியாக உயிராத்மாவிற்குப் பாயத்தக்க செயலாக வழியமைத்தால்
3.அதன் மூலம் இந்தப் பிம்ப உடல் அணு வளர்ச்சியின் செயலாத்மாவாக இந்த உயிராத்மா உட்கொள்கின்றது.

நம்மைச் சார்ந்தவர்களுக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணச் சொல்வதன் இரகசியம் என்ன…?

Mystic meditation

நம்மைச் சார்ந்தவர்களுக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணச் சொல்வதன் இரகசியம் என்ன…?

 

நீங்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணி ஏங்கினால்
1.இந்த அருள் உணர்வுகள் உங்கள் உடலுக்குள் செல்கின்றது… .தீமைகளை அகற்றுகின்றது
2..நீங்கள் எண்ணிய உணர்வுகளை உங்கள் உயிர் உடலுக்குள் ஒளியான அணுக்களாக மாற்றுகின்றது
3.ஒளியான அணுக்களாக மாற மாற அது தீமைகளை அகற்றுகின்றது.

இப்படி நம் வாழ்க்கையில் நற்குணங்களை நாம் நுகர்ந்து நமக்குள் வளர்த்திடும் சக்தியைப் பெறவேண்டும். ஆகையினால் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நுகர்ந்து தீமைகளை வென்றிட வேண்டும் என்பதற்கே இதைச் செய்யச் சொல்வது.

இதை எல்லாம் ஏன் உங்களிடம் சொல்கிறேன் என்றால் நமக்குள் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை வளர்க்க வேண்டும். அந்த உயர்ந்த சக்திகளைக் கூட்ட வேண்டும்.

அருள் உணர்வுகளைக் கூட்டிய நிலையில் சிரமங்கள் பட்டுக் கொண்டுள்ளோருக்கு இதை நாம் எடுத்துச் சொல்தல் வேண்டும்.

ஆனாலும் இதை அடுத்தவர்களுக்கு நீங்கள் சொன்னாலும்…
1.நீங்கள் அந்த அருள் மகரிஷிகளின் அருள் உணர்வை நுகர்ந்தே சொல்கின்றீர்கள்
2.அவர்கள் உடலிலிருந்து தீமைகள் அகல வேண்டும் என்ற உண்மை உணர்வுடன் நீங்கள் சொல்லப்படும் பொழுது நீங்களும் வளர்கின்றீர்கள்.
3.அதே சமயத்தில் அவர்களைத் தீமையிலிருந்து விடுபடவும் செய்கின்றோம்.

ஆகவே மற்றவர்களை நாம் அணுகும் முறைகள் இப்படித்தான் செயல்படுத்த வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று எண்ணினால் இது தியானம். மகரிஷிகளின் அருள் சக்தி எல்லோரும் பெறவேண்டும் என்று எண்ணினால் இது தவமாகின்றது.

1.தவத்தை மேற்கொண்டால் நாம் மகரிஷிகளின் செயலாக ஒன்றுகின்றோம்
2.மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் நாம் இணைகின்றோம்
3.அவர்கள் செயலாக நாமும் ஒன்றுகின்றோம்
4.அவர்கள் வேறல்ல நாம் வேறல்ல என்ற நிலையை எய்துகின்றோம்.

அவரவர்களுக்கு… அவர்கள் எடுக்கும் குணமே நல்லெண்ணமாக இருக்கும்… அது ஏன்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Tap root for Spirituality

அவரவர்களுக்கு… அவர்கள் எடுக்கும் குணமே நல்லெண்ணமாக இருக்கும்… அது ஏன்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஆரம்பப் பாட நிலையிலிருந்து உணர்த்தி வந்த முறையில் உயிரணுத் தோன்றி உயர் நிலை பெறும் வழித் தொடரிலெல்லாம்… எந்த உயிரணு எச்சுவை கொண்டு வளர்ச்சி பெற்றதோ… அதன் தொடர் நிலை கொண்டு ஒவ்வொரு வளர்ச்சி நிலையுடன் மோதுண்டு… அந்த உயிரணுவின் பலம் கூடி ஆதம நிலை கொண்டாலும்… “அதன் ஆரம்ப உணர்வின் சுவை கொண்ட எண்ண வழித் தொடரில் தான் அதனதன் குண நிலை அமைகிறது…” என்று உணர்த்தி வந்தேன்.

காரத்தின் சுவை… இனிப்பின் சுவை… புளிப்பின் சுவை… பல சுவை கொண்ட அதனதன் வளர்ப்பு உயிரணு மாறி வரும் ஈர்ப்பு வட்டத்திலும் தன் உணர்வின் வட்டத் தொடர்ச்சியிலே தான் வளர்ச்சி பெறுவதைப் போல் இவ்வடிமைத்த வளர்ப்புத் தொடரின் உணர்வெண்ண ஜீவ சக்தியிலும் குணத்தைக் கொண்ட வழித் தொடர் முலாமுடைய தன் தன் உணர்வின் எண்ண நிலை எந்தக் குணம் கொண்ட ஆத்மாவானாலும் “தன் வளர்ப்பின் உணர்வெண்ண குணம் தான்…”
1.அவரவர்களுக்கு அவர்கள் எடுக்கும் குணமே நல்லெண்ணமாக இருக்கும்.
2.எந்த ஆத்மாவும் தன் குண எண்ணத்தைத் தீயது என்றும் நியாயமற்றது என்றும் எண்ணுவதில்லை.
3.அவ்வார்ப்பின் ஜீவ உடல் உணர்வு குணம் தான் அவ்வுயிரணுவின் ஆத்ம வலுவால்
4..ஆரம்ப ஈர்ப்பு வழி முதல் கொண்டே வலுப் பெறுகின்றதப்பா…!
5..அவர் குணத்தை அவர் நன்மையாகக் கருதிச் செயல்படுகின்றார்.
6.ஒவ்வொரு ஆத்மாவின் தன்மையும் இதுவே தான்…!

ஈர்ப்பலையின் உணர்வு சுவை கொண்ட தாவரமானது எண்ணப் பரிமாற்றம் அற்றது. ஒலி ஈர்ப்பு.. மற்றும் நடமாட்ட நிலை அற்றது.

மிருகங்களின் நிலையில் ஒலி பரிமாற்றச் செயல் இருந்தாலும் மனிதனின் நிலையை ஒத்த எண்ணப் பரிமாற்ற உணர்வு ஞான வளர்ச்சி செயல் முறை தாவரத்திற்கும் பிராணிகள் தன்மைக்கும் இல்லை.

தன் தன் உணர்வின் எண்ண குண நிலைக்கொப்ப பிறப்பிற்கு வந்தாலும் குழந்தைப் பருவம் முதல் கொண்டே தாய் காட்டும் பரிவும் தந்தை காட்டும் அன்பும் உடன் பிறப்புகளின் பாச உணர்வின் ஊட்டமுடன் ஆத்ம எண்ணத்திற்கு முந்தைய கால முன் ஜென்ம உணர்வு எண்ணமானது பிறப்பிற்கு வந்தவுடனே மனிதனுக்கு மறைந்து விடுகிறது.

அதனால் எப்பிறப்பு எடுத்து எத்தாய் தந்தை உணர்த்தி உருவாக்குகின்றார்களோ அதன் கூட்டு எண்ண உறவின் வழித் தொடரினால் பிறப்பெடுத்த நாள் கொண்டு வளர்ச்சிக் காலமெல்லாம் படிக்கும் பருவமும் விளையாடும் காலமும் தொழில் அறியும் முறையிலும் மண வாழ்க்கை உறவிலும் பெற்றெடுக்கும் செல்வங்களின் வளர்ப்பிலும் ஒவ்வொரு மனித ஆத்மாவும் இவ்வெண்ணப் பரிமாற்ற வளர்ச்சியுடன் ஒன்றியே வருகிறது.

இப்படி வருவதனால் தன் வார்ப்பின் குணத்தையே பிற எண்ணத்தின் வார்ப்புக் குணமுடன் பகுத்தறியும் செயலுடைய மனிதன்… தன் குணத்தில் தன் எண்ணத்தால் நன்மை என்று செய்வதையும் பிற எண்ணமுடன் தன் எண்ணம் மோதுண்டு தன் உணர்வின் ஈர்ப்பைச் செலுத்தித்தான் தன் வாழ்க்கையை நடத்திச் செல்கிறான்.

மனித வாழ்க்கையின் நிலை உள்ளதோடு மட்டுமல்லாமல் வழி வழியாக வந்த சமுதாய இனப் பிணைப்புகளும்… அதன் வழித் தொடர் கட்டுப்பாடுகளும்… அரசியல் சட்ட திட்டங்களின் ஒழுங்கு முறை விகிதப்பிடியிலும் தான்… மனிதனின் எண்ணப் பரிமாற்ற உணர்வு ஒன்றியுள்ளது.

இத்தர்ம நியாய சத்திய முறைகளை உயர்ந்த குணமாக்கி உணவு உடை உறவு ஒவ்வொன்றிலுமே ஒழுக்க முறை வழித் தொடர் கொண்டுள்ள சமுதாயத்துடன் ஒன்றிய வாழ்க்கை கொண்ட மனிதன்
1.தன் குண முறையையே நற்குண வழியில் செலுத்தினால் தான்
2.நற்குணம் என்று சமுதாயத்தினால் வழிகாட்டப்பட்ட முறை வழித் தொடரின் வழி வந்த மனிதன்
3.குண முறையில் அவன் குண நிலைக்கொப்ப எண்ணத்தைச் செலுத்தினால் சமுதாயமே ஏற்பதில்லை.

இதை ஒத்த நிலையில் தான் அன்றைய காலத்திலேயே ஒவ்வொரு சித்தனும்… தன் உணர்வின் எண்ணத்தை ஞான வழி பூண்டு… சித்து நிலை பெறும் தன்மை கொண்டான்.

சித்து நிலையின் செயல் முறை எது…?

ஞான வழியில் எப்படி எண்ணத்தின் வளர்ச்சியால் ஞான வளர்ச்சி மோதலில்… எண்ணத்தைப் பலவற்றின் வாழ்க்கைச் செயல் ஒன்றி தன் உணர்வின் ஈர்ப்பின் எண்ணத்திற்கு நற்குண வழித் தொடரினால்… ஞான ஈர்ப்பு எண்ண வளர்ச்சியில் செலுத்துகின்றோமோ அதைப் போன்று
1.சித்துத் தன்மையில் அணுவுக்குள் அணுவாக அணு ஈர்ப்புக் கலவைக் கூட்டுடன்
2.தன் உயிர் ஆத்மக் கலவையைப் பிற அணுக்களின் நிலையுடன் ஊடுருவி
3.அவற்றின் சக்தி வீரிய குண முலாமைத் தன் வலுவுக்கும் ஏற்றிக் கொள்கின்றான் சித்தன்.

அக்னி குண்டம் எதற்காக இறங்க வேண்டும்…?

Energy boosts

அக்னி குண்டம் எதற்காக இறங்க வேண்டும்…? 

 

குருநாதர் (ஈஸ்வரபட்டர்) எத்தனை கஷ்டப்பட்டிருப்பார்…? எத்தனை வேலைகளைச் செய்திருப்பார்…! அவருக்குள் விளைந்த உணர்வின் உணர்ச்சிகளைக் கவரும் ஞான வித்தாக எனக்குள் (ஞானகுரு) பதிவு செய்தார்.

அவர் வழியில் அதைச் செய்யப்படும் பொழுது அனுபவபூர்வமாகத்தான் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டேன். அதைத் தான் இப்பொழுது உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

துருவ நட்சத்திரத்தின் பேரளும் பேரொளியும் நீங்கள் பெறுவீர்கள் என்றால் அது உங்களுக்குள் சென்று தீமையின் உணர்வுகளை அது கருக்கிவிடும்.

இதை உணர்த்துவதற்குத்தான் மாரியம்மன் கோவில்… காளியம்மன் கோவில்… அங்களேஸ்வரி கோவில்.. துஷ்ட தேவதைகள் ஆலயங்களில் எல்லாம் “அக்னி குண்டம்…” இறங்குவதற்கு வைத்திருப்பார்கள்.

கொடூரமான நிலைகளில் நாம்…
1.பயந்தோ
2.வெறுப்படைந்தோ
3.கோபப்பட்டுக் கொதித்தெழுந்தோ
4.அஞ்சி வேதனைப்பட்டோ நாம் சுவாசித்த உணர்வுகள் எல்லாம் நம் உடலுக்குள் அந்தச் சக்தியாக வளரப்படும் பொழுது
5.நம் நல்ல குணங்களை அது கொன்று கொண்டேயிருக்கும்.

அதனால் தான் காளிக்கு முன்னாடி புலியும் அங்களேஸ்வரி கோவிலில் ஒரு குழந்தையை மடியில் வைத்து தன் குழந்தையையே பிளந்து மாலையாகப் போட்டுக் கொண்டிருப்பதாகவும் காட்டியிருப்பார்கள்.

நல்ல குழந்தைகளைக் கருவுறும் இந்தத் தன்மையை அதாவது நல்ல அணுக்களாக உடலுக்குள் விளைவதைப் பிளந்து விடுவதை அப்படிக் காட்டுகின்றார்கள்.

சிலர் மற்றவர்கள் நன்றாக இருப்பதைப் பார்த்து அங்கலாய்வார்கள்…! அவன் அப்படி வந்திருக்கின்றான்… இவன் இப்படி வந்திருக்கின்றான்.. என்ற இதைப் போன்ற உணர்வுகளை நுகரப்படும் பொழுது அது அங்களேஸ்வரி…!

அந்த அங்கலாய்ப்பு தான் வருகின்றதே தவிர…
1.நமக்குள் அந்த உயர்ந்த சக்திகளை
2.அவர்கள் வளர்ந்த முறையில் நாமும் வளர வேண்டும் என்ற இந்த எண்ணமே இங்கே வருவதில்லை.

அப்பொழுது நமக்குள் வளரும் அந்தச் சக்தியை நாமே பிளந்து அதனின் வளர்ச்சியைக் குன்றச் செய்து நாம் மாலையாகப் போடுவது போன்று ஆகின்றது. மாலை என்றால் நாம் வெளியிலே தான் போடுகின்றோம்.
1.இந்தத் தீமையை உருவாக்கும் உணர்வுகளைத்தான் நம்மால் வளர்க்க முடிகின்றதே தவிர
2.அந்த நல்லதைப் பெற முடியவில்லை.
3.அந்தத் தீமைகளை அகற்ற என்ன வேண்டும்…?

ஒரு தீமையைக் காண நேர்ந்தால்… உதாரணமாக ஒருவர் வேதனைப்படுகின்றார் பார்க்கின்றோம் அது மாறி அந்த வேதனையின் அணுக்கள் நம் உடலில் விளைகின்றது. ஏனென்றால் வேதனைப்படுவோரைக் கேட்டுணர்ந்த பின் தான் உதவி செய்கின்றோம்.

அந்த உணர்வை நாம் நுகர்ந்தால் அதே அணு நமக்குள் உருவாகின்றது. அந்த வேதனை அணுக்கள் உருவாகி விட்டால் அதே தன் தாயாக அந்த வேதனயை உருவாக்கும் அணுக்களைப் பெருக்குகின்றது.

அதைக் குறைக்க வேண்டும் என்பதைக் காட்டுவதற்குத்தான் விநாயகர் அருகில் அரச மரத்தை வைத்திருக்கின்றார்கள். பிரபஞ்சத்தில் ஏற்படும் நச்சுத் தன்மைகளை ஒடுக்கிய உணர்வை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக (அரசாக – அரச மரம்) இருக்கும் அதனின்று வரும் சக்திகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது.

துருவ தியானத்தின் மூலம் உங்களுக்குக் கொடுக்கும் அந்தச் சக்தியின் துணை கொண்டு எப்பொழுது தீமைகளைப் பார்க்கின்றீர்களோ ஈஸ்வரா என்று உங்கள் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி உயிருடன் தொடர்பு கொள்ளுங்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்றும் அந்த அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று சிறிது நேரம் கண்களைத் திறந்து ஏங்கி நினைவை மறுபடியும் உங்கள் உயிருடன் ஒன்றுங்கள்.

அந்த அருள் சக்திகள் அனைத்தும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்களில் படர வேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்துங்கள்.

மாரியம்மன் கோவிலில் அக்னி குணடம் இறங்குவது போல் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை உடலுக்குள் செலுத்திவிட்டால் அந்தத் தீமை என்ற நிலை வராது கருக்கி விடும்… அதன் வலுவை இழக்கச் செய்யும்…!

தீமை செய்யும் சக்திகள் நமக்குள் ஜீவன் பெறாது தடுக்கப்படுகின்றது. அருள் ஒளியின் உணர்வுகள் நமக்குள் விளையத் தொடங்கும்.

உங்களால் மகரிஷிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியும்

sages direct links

மகரிஷிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள்… உங்களால் முடியும்

நம் குருநாதர் காட்டிய அருள்வழியில் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நீங்கள் எல்லோருமே பெருக்கிக் கொண்டு வருகின்றீர்கள்.

குருநாதர் கொடுத்த சக்திகளை குருநாதர் காட்டிய அருள் வழியில் அதைத் தெரியப்படுத்த வேண்டுமென்று யாம் விரும்புகின்றோம்.

ஆனால், சில சக்திகளைக் கொடுத்த பின் என்ன ஆகின்றது. ஆசைப்படுவதை எல்லாம் பெறவேண்டும் என்ற நிலைக்கு வந்துவிடுகின்றார்கள்.

அதற்குப் பதில் உங்கள் ஆசை எதன் வழிகளில் இருக்க வேண்டும்?

அந்தச் சப்தரிஷி மண்டல அலைகளைப் பெறவேண்டும். எங்களுக்குள் அது வளரவேண்டும் என்ற நிலைக்கு வரவேண்டும்.

அதை வளர்க்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்யவேண்டும்?

யாரும் கஷ்டப்பட்டார்கள் என்று கேள்விப்பட்டால் அவர்களுக்கு அந்த சப்தரிஷி மண்டலத்தின் அருள் சக்தி கிடைக்க வேண்டும், அவர்கள் மகிழ்ந்து வாழ வேண்டும் என்று இந்த உணர்வை இங்கே எடுத்துச் சமைத்து இதிலே நீங்கள் மகிழ்ச்சியைத் தெரிந்து கொள்ள ஆசைப்படவேண்டும்.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றதல்லவா.

இதை நாம் நமக்குள் பெருக்க வேண்டும்.

உடலுக்குள் ஆன்மா இயங்குகிறது என்று சொல்லிக் கொண்டு திடீரென்று வருகின்றார்கள்.

நான்கு பேர் சேர்ந்து கூட்டுத் தியானமிருக்க வேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று நமக்குள் சக்தியைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் வலுக்கூட்டிக் கொண்டு அந்த “உடலிலுள்ள ஆன்மாவிற்கு” மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். அதற்கு (அவருக்கு) நல்லதைச் செய்ய வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்ச வேண்டும்.

அவர்களிடமும் (ஆன்மா உள்ளவரிடமும்) சொல்லி நீ இதைச் செய்தாய் என்றால் சீக்கிரம் உனக்கு நன்றாகிவிடும் என்று சொல்ல வேண்டும். அவர்கள் எடுத்துக் கொண்டார்கள் என்றால் அவருக்கு இலாபம்.

இப்படி இதைப் பெருக்கப் பழகவேண்டும். இந்தப் பேருண்மைகளைப் பார்க்கப் பார்க்க உங்களை அறியாமலேயே மகரிஷிகளின் உணர்வுகளை உங்களால் தெரிந்து கொள்ள முடியும்.

அந்த உணர்வலைக்குள் சென்றவுடன் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் உங்கள் உணர்வுகள் சுழல்வதைக் காண முடியும், சப்தரிஷி மண்டலத்துடன் அது தொடர்பு கொள்ளும்.

சிலருக்கு அது தெரியும். தன்னிச்சையாகவே அந்த உணர்வுகள் சப்தரிஷி மண்டல உணர்வலைகளை உணவாக எடுக்கும்.

ஒரு பாழடைந்த கட்டிடத்தில் ஒரு அரச மரத்தின் வித்து பட்டாலும் அங்கே தண்ணீரே இல்லை என்றாலும் கூட காற்றிலுள்ள ஈர்ப்பதத்தை அதனின் விழுதுகள் எடுத்து மரம் வளர்ந்துவிடும்.

அதைப் போன்று உங்கள் நினைவின் ஆற்றலெல்லாம் அங்கே விண்ணுக்குச் சென்று பழக வேண்டும்.

பாதை தெரியாதபடி (லோக்கலில்) சென்றால் பல அற்புதங்கள் தெரியலாம். பல அதிசயங்களைப் பார்க்கலாம் ஆனால், “கீழே” நம்மை இழுத்துவிடும்.

அதனால் தான் ஆரம்பத்தில் ஒவ்வொருவரிடம் “உங்களுக்கு என்ன காட்சி கிடைத்தது..,?” என்று கேட்பேன். ஏனென்றால் அப்பொழுது காட்சிகள் எல்லோருக்கும் கிடைக்கும், எல்லோருமே காட்சி சொல்வார்கள்.

அப்படிச் சொன்னவர்கள் எல்லாம் இப்பொழுது என்னாகி விட்டார்கள்? அந்த ஆசையில் மூழ்கிவிட்டார்களே தவிர அதிலிருந்து மீள்வதற்கு வழி இல்லாமல் போய்விட்டது.

ஆகவே எப்படிப் பார்க்க வேண்டும்?

அந்தப் பேரண்டக் காட்சிகளை, விண்ணுலக ஆற்றலை, அந்த மகரிஷிகளின் உணர்வுகளைப் பார்க்க வேண்டும். அந்த உணர்வைப் பெறவேண்டும் என்ற இந்த ஆசையை நாம் அங்கே வைக்க வேண்டும்.

அதை நாம் வளர்க்கப் பழக வேண்டும்.

திடீரென்று, “அதைப் பார்க்க வேண்டும்…,” என்று வரக்கூடாது.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் பெறவேண்டும் என்ற நிலைக்கு வரவேண்டும். பார்க்க வேண்டும் என்றால் முதலில் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று அந்தச் சக்திகளை நம் உடலுக்குள் ஏற்றவேண்டும்.

ஏற்றியபின் என்ன செய்யவேண்டும்?

யார் கஷ்டப்பட்டாலும் மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெறவேண்டும் அவர்கள் உடலில் உள்ள தீமைகள் எல்லாம அகல வேண்டும் என்று நம் பார்வையால் இந்தச் சக்தியைப் பாய்ச்சுதல் வேண்டும்.

அப்பொழுது அந்த உண்மையான சக்தியை இதிலே பார்க்கலாம்.

தீமைகள் அவர்களிடமிருந்து அகலும் பொழுது மகிழ்ச்சியின் நிலைகள் வரும். அந்த மகிழ்ச்சியின் உணர்வுகள் வரும் பொழுதுதான் உங்களுக்குள் பெருக்கமாகின்றது.

அப்பொழுது உங்களுக்குள் அந்த எண்ணம் மகரிஷிகளின் பால் வேகமாகக் கொண்டு போகின்றது.

இதன் ரூபத்தில்தான் நீங்கள் பார்க்க வேண்டுமே தவிர “எனக்குச் சப்தரிஷி மண்டலம் தெரியவில்லையே.., அது எப்படிப் போவது..,?” என்ற இந்த வினாக்களை எழுப்பவே கூடாது.

ஏனென்றால், நாம் படிப்படியாகத் தான் போக வேண்டும்.

ஒரு திரையிலே சினிமா காட்டுகின்றார்கள் என்றால் அங்கே இருக்கும் பொழுது வெறும் ஒளியாகத் தான் படுகின்றது.

அதைத் தடுத்து நிறுத்தும் பொழுதுதான் திரையில் உருவம் தெரிகின்றது. நாம் குறுக்கே பார்த்தால் தெரிவதில்லை (ஒளி அலைகள் தான் தெரியும்). அதிலே தடுத்து நிற்கும் பொழுதுதான் அந்த உணர்வுகள் தெரிகின்றது.

அதே மாதிரித் தான் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் முதலில் நமக்குத் தெரியாது. வெறும் அணுக்களாகத் தான் தெரியும்.

அந்த உணர்வின் தன்மை தனக்குள் அதை நிறுத்தி வைக்கப்படும் பொழுதுதான் அந்த உருவத்தின் தன்மை யார்? யார்? என்ற உணர்வுகளே நமக்குத் தெரியும்.

இதுவெல்லாம் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு நேரடியாகக் காட்டிய நிலைகள். அதை நீங்களும் பெற முயற்சி செய்யுங்கள். அந்த மகரிஷிகள் யார் யார் என்று நிச்சயம் உங்களால் அறிய முடியும்.

மகரிஷிகளுடன் உங்களால் நேரடித் தொடர்பு கொள்ள முடியும். பெற்று உங்கள் வாழ்க்கையில் வரும் எத்தகையை தீமைகளையும் பல கொடுமையான நிலைகளிலிருந்தும் மீண்டிடும் ஆற்றல் பெற முடியும். உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்.

மகரிஷிகள் அருள் வட்டத்தில் நீங்கள் வாழுங்கள். பேரின்பப் பெருவாழ்வாகப் பெற்றிடுவீர்கள். அழியா ஒளியின் சரீரம் பெறுவீர்கள்.

எமது அருளும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளும் எல்லா மகரிஷிகளின் அருளும் உங்களுக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்கும்.

ஓம் ஈஸ்வரா குருதேவா.

உடல் வேறு ஆத்மா வேறு…! ஆத்ம தியானத்தால் தான் மனித ஆத்மா வளச்சிக்குச் செல்ல முடியும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

soul and body

உடல் வேறு ஆத்மா வேறு…! ஆத்ம தியானத்தால் தான் மனித ஆத்மா வளச்சிக்குச் செல்ல முடியும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

எண்ணத்தால் எடுக்கும் ஜெபம் கொண்டு… உணர்வின் எண்ணத்தையே ஞான வளர்ச்சி எண்ணமுடன் செயல் கொள்ளும் உயர் காந்த மின் சக்தியை… நாம் எடுக்கும் எண்ணச் சுவாசத்தால் வலுப் பெறும் தன்மை கொள்வதினால்… வளர்ச்சி பெறும் தொடர் நிலை யாது…?

இந்த உடல் என்ற பிம்பமானது ஒரு அடுப்பைப் போன்றது.
1.அடுப்பில் எதைப் போட்டுச் சமைக்கின்றோமோ அதனை வேக வைப்பது தான் அடுப்பின் வேலை.
2.சேர்க்கப்படும் பொருளின் சேர்க்கையின் சுவை கொண்டு சுவை கொள்வது ஆத்மாவின் வேலை.

மோதுண்டு மோதுண்டு எந்தச் சுவையிலெல்லாம் தன் வலுவைக் கூட்டி இந்த உயிராத்மா வலுப் பெற்று வலுக் கொண்டதோ அந்த ஒவ்வொரு சேர்க்கையிலும் தன் வளர்ச்சி முலாமின் சக்தியை எடுப்பது உடலாக இருக்கின்றது.

அதே சமயத்தில் இஜ்ஜீவ பிம்ப உடலின்… “அணுச் சேர்க்கை சமைத்தனுப்பும் வலுவைத்தான்” இவ்வுயிராத்மா தனக்கு வலுவாக்கிக் கொள்கின்றது,

1.உண்ணும் உணவையும்
2.எண்ணும் எண்ணத்தையும்
3.செய்யும் செயலையும் இந்த உடலானது எடுத்து
4.அவை வளர்க்கும் அணுக்களின் வளர்ச்சியிலிருந்து
5.தன் வலுவை இந்த உயிராத்மா வளர்த்துக் கொள்கின்றது.

இந்த உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்களின் தன்மையை நாம் எப்படி உணர்வது…? அதன் செயலை அறிய நம் ஆத்ம பலம் கூடியிருந்தால் தான் உணர முடியும்.

ஏனென்றால் மற்ற (ஒவ்வொரு) உயிராத்மாவின் வலுவைக் காட்டிலும் “ஜீவன் கொண்ட உயிராத்மாவின் சுழற்சி நிலை… ஜீவ சக்தியின் ஈர்ப்புடன் செயல்படுகிறது…”

அந்த வலுக் கொண்டு…
1.இந்த உடலையே காந்த மின் அலை ஈர்க்கக்கூடிய ஆத்மாவின் சுழற்சியாக
2.இந்த உடல் முழுமைக்கும் கவசம் போல் இந்த உடலைச் சுற்றிக் கொண்டுள்ளது.

இந்த உடல் பிம்பமானது இயந்திரச் செயலைத்தான் செய்விக்கின்றதேயன்றி இவ் இயந்திரத்தில் எதை எதைப் போட்டுச் சமைக்கின்றோமோ அதிலுள்ள சக்தியைப் பெறுவது இந்தக் கவசம் போல் அமைந்துள்ள உயிராத்மா தான்.

பசி தூக்கம் தாகம் இவற்றின் உந்தலின் எண்ணமும் இந்த ஆத்மாவின் செயலுக்குகந்த சக்தி நிலைக்கு (வளர்ப்பு நிலைக்கு) தேவைக்குகந்த செயலுக்கொப்பத்தான் பிம்ப உடலின் உணர்வை ஏற்படுத்திக் கொள்கிறது.

அந்தந்த உணர்வைக் கொண்டு எண்ணத் தோன்றல் உந்தப்பட்டு இவ்வெண்ணத்தால் செயல்படுத்துவது தான் இந்தப் பிம்ப உடலின் உடலுக்குகந்த நிலையை இவ்வுடல் எடுக்கும் முறை.

ஜீவாதாரத் தேவை என்பது இந்த உடலின் உந்தலின் செயல் உயிராத்மாவின் உந்தலுக்குகந்த செயல் தான். அதனால் தான் பல பெரியோர்கள்
1.இந்த உடலை வாடகை வீடு என்றும்
2.இந்த உடல் என்பது வெறும் சக்கைதான்… என்றும்
3.இந்த உடல் வேறு ஆத்மா வேறு என்றும்
4.ஆத்ம தியானத்தால் தான் இந்த மனித ஆத்மா வளர முடியும்…! என்று பகர்ந்ததன் பொருளும் இதுவே.

பல மோதலில் வலுக் கொண்ட உயிராத்மா ஜீவாத்மாவின் தன்மைக்கு வந்து வார்ப்பாகி… வார்ப்பில் வலுவைப் பெறும் செயலுக்குத்தான்… ஒவ்வொரு உயிராத்மாவும் “பல பிறப்பிற்கு…” வருகின்றது.

இச்சுழற்சி ஈர்ப்பின் பிடியிலேயே மோதுண்டு மோதுண்டு… வலுப் பெற்ற தன்மை கொண்டு… வலுவான காந்த சக்தி கொண்ட தன்மை கூடிய பிறகுதான்… இந்த உடல் பிம்பம் கொண்ட மனித ஆத்மாவின் எண்ண ஞான வளர்ச்சி செயல் நிலைக்கு இந்த ஆத்மா வலுப் பெறுகின்றது.

1.வலுக் கொண்ட உயிராத்மாவின் கவசம் பூண்ட ஜீவ பிம்ப மனிதன்
2.இந்த ஆத்ம உயிருக்கு மேலும் வலுத் தரக்கூடிய தன்மையை
3.தன் எண்ணத்தால் எடுக்கும் “உயிர் ஞானத்தை” வளர்க்கக்கூடிய தன்மை கொண்டு தான் வளர்க்க முடியும்.

மிருகங்களின் நிலைக்கு எண்ணம் இருந்தாலும்… ஞானம் இருந்தாலும்… பகுத்தறிந்து செயல்படக்கூடிய உயர் ஞானத்தை வளர்க்கும் ஆற்றல் வலு ஈர்ப்புச் செயல் அற்றதனால்… மனிதனை ஒத்த ஆத்ம வளர்ச்சியைப் பெருக்கக்கூடிய சக்தி அதற்கில்லை.

ஆனாலும் ஒவ்வொரு மிருகத்திற்கும் ஒவ்வொரு தனித் தன்மை வாய்ந்த உயர்ந்த குண வார்ப்பு அமில ஜீவ சக்தித் தன்மை உண்டு.

மனிதன் தன்னுடைய சாதாரண வாழ்க்கை முறைக்கு மிருகங்களை உணவாகவும் தன் செயலுக்குகந்த நிலைக்கும் அதனைப் பயன்படுத்துகின்றான்.

ஆனால் உயர் ஞானம் கொண்ட சப்தரிஷிகள்…
1.தான் உடலுடன் உள்ள பொழுதே தன் உயிராத்மாவின் பலத்திற்கு தன் வலுவைக் கூட்டிக் கொள்ள
2.எந்தப் புவியின் ஈர்ப்பில் தன் உயிராத்மாவானது வலுக் கொண்டு வலுப்பெற்றதோ
3.அந்த வலுவுக்குகந்த வலுத் தன்மை கொள்ள
4.இந்தப் புவியில் வளர்ந்த வளர்ச்சி நிலை ஒவ்வொன்றிலுமே
5.அணுவுக்குள் அணுவாக ஊடுருவி அணுவின் தன்மையிலெல்லாம் மோதுண்டு
6.இந்தப் புவி ஈர்ப்பில் அணு அமிலத் தன்மையின் பலவற்றின் நிலையையும்
7.தன் எண்ண ஞானத்தால் தன் உயிராத்மாவிற்கு வலுக் கொண்டனரப்பா…!

ஆத்ம வலுவின் சக்தி எப்படிக் கூடுகின்றது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

human-thoughts

ஆத்ம வலுவின் சக்தி எப்படிக் கூடுகின்றது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

உயிரானது சிரசின் மேலிருந்தும் ஆத்மாவானது இந்த உடலைச் சுற்றியும் அமைந்துள்ளது. இந்த உடல் பிம்பத்தைக் கவசம் போல் சுற்றியுள்ளது இவ்வாத்மா.

உயிர் பிரியும் பொழுது இந்த உடல் தன்மை ஆரோக்கியம் அற்று செயலிழந்து உடல் மடியும் பொழுது இந்த உடலுடன் கூடிய உயிர் ஆத்மா
1.இந்த உடலிலிருந்து எப்படிப் பிரிகின்றது…?
2.இந்த உடலுடனே சுற்றிக் கொண்டுள்ளதா…?
3.பிம்பத்தை எரித்த பிறகு வெளிப்படுகின்றதா…?
4.புதையுண்ட பிறகு உடல் அழுகி வெளிப்படுகின்றதா…?

சாதாரண அமைதி கொண்ட வாழ்க்கையுள்ள அன்பு நெறியில்
1.வயது முதிர்ந்து உடல் உறுப்புகள் செயலிழந்து ஆத்மா பிரியும் உயிரணுவின் தன்மைக்கும்
2.பல இன்னல்களிலிருந்து வாழ்ந்து முடியும் உயிராத்மாவின் தன்மைக்கும்
3.தற்கொலையின் உயிராத்மா தன்மைக்கும்
4.கொலையுண்டு மடிந்த ஆத்மாவின் தன்மைக்கும்
5.விபத்துக்களில் இறந்த ஆத்மாக்களின் தன்மைக்கும்
6.சில ஈர்ப்பலையில் தன் ஆத்ம பலத்தால் விஞ்ஞானத்தாலோ மருத்துவத்தாலோ கலை உணர்வாலோ வளர்ந்த உயிராத்மாவிற்கும்
7.அவ்வுடல் பிம்ப உயிராத்மாவின் தன்மையில் வலுத் தன்மை ஒவ்வொன்றுக்கும் மாறுபடுகின்றது.

காந்த சக்தியினால் வளர்ச்சி கொண்டத் தான் இந்த உயிராத்மாவின் நிலை.

எப்படி மின்சார சக்தி (POWER) பாயும் பொழுது அதை எந்தெந்த அலை கொண்டு எந்நிலை கொண்ட மின் அலை சாதனைத்தைச் செயல்படுத்தி எவ்விகித ஒளிக்குகந்த காந்த மின் சக்தி கொண்ட விளக்கைப் பொருத்துகின்றோமோ அதற்குகந்த வெளிச்சத்தைத்தான் அவை அவை எடுத்து வெளிப்படுத்துகின்றது.

அதைப் போன்றது தான்… இவ்வாத்ம உயிர்…
1.அவ்வுடலில் உள்ள அணு வளர்ப்பின் வலுக் கொண்ட சேமிப்பு வலுவை
2.அவ்வுயிராத்மா உடலில் உள்ள பொழுதே வலுக்கூட்டிக் கொண்ட நிலைக்கொப்ப
3.இந்த ஆத்மா பிரிந்த பிறகு இந்தக் காற்றலையின் இந்தப் புவி ஈர்ப்பில் சுழன்று கொண்டிருந்தாலும்
4.சேமித்த வலுத் தன்மையைக் கொண்டு தன் வலுவை மற்றொரு ஈர்ப்பலைக்குச் சிக்காமல்
5.தன்னைத்தானே பாதுகாத்து தனக்குகந்த வளர்ப்புப் பிடியில் தான் பிறிதொரு வார்ப்பு நிலைக்கு வாழ முடியும்,

உதாரணமாக காற்றடிக்கும் பொழுது காற்றடிக்கும் வேகத்திற்கொப்ப லேசான காகிதங்களும் இலைச் சருகுகளும் கனமற்ற தன்மை கொண்ட பொருள்கள் பறக்கின்றன.

வலுவான காற்றும் வரும் பொழுது அதனைத் தாங்க முடியாமல் இன்னும் சில கனம் கொண்ட பொருள்கள் பறக்கின்றன.

ஆனால் பெரும் சூறாவளி வந்தால் இந்தப் புவியின் ஈர்ப்புடன் வளர்ந்த வளர்ப்புக்கள் அனைத்தையும் அந்தச் சூறாவளி பறக்கச் செய்கின்றது.

அதைப் போல் எந்தெந்த வலுத் தன்மை கொண்டு இந்த உயிராத்ம வலுச் சக்தி கூடுகின்றதோ… அதற்குகந்த வலுத் தன்மையை… இஜ்ஜீவ சக்தி கொண்ட உடல் உறுப்புக்களின் அணுக்களின் வளர்ப்பிலிருந்து… தன் உயிராத்மாவின் வளர்ப்பணுவிலிருந்தே… தன் வலுவை வலுப் பெறச் செய்து கொள்கின்றது இந்த உயிராத்மா.

எண்ணத்தின் நிலைக்கொப்ப நாம் எடுக்கும் சுவாசம் கொண்ட அணுக்களின் வலுவைத்தான் உயிராத்மா சேமித்துக் கொள்ள முடிகின்றது. சேமித்த நிலைக்கொப்பத்தான் ஜீவன் பிரிகின்றது.

1.எந்த முலாமின் வளர்ப்பில் இந்த உயிராத்மா வலுக் கொண்டு வெளிப்பட்டதோ
2.அதன் வலு வித்து வளர்ச்சியில் தான் மீண்டும் சிக்க முடியும்.

நம்முடைய உயிராத்மாவில் எந்த முலாம் வலுவாக இருக்க வேண்டும்…? என்பதை முடிவு செய்து கொள்ளுங்களப்பா…!

தியானத்தில் எனக்கு ஒன்றும் தெரியவில்லை… ஒன்றும் கிடைக்கவில்லை…! என்று சொல்வதன் காரணம் என்ன…?

spiritual seed

தியானத்தில் எனக்கு ஒன்றும் தெரியவில்லை… ஒன்றும் கிடைக்கவில்லை…! என்று சொல்வதன் காரணம் என்ன…?

 

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்… மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்… எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்திகள் படர வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் தியானம் செய்கின்றோம்…!

சிலருக்கு அந்த அணுக்கருவின் தன்மை வலுவாக வளர்ந்திருக்கும். ஆகவே அந்த வளரும் பருவத்தில் இருக்கும் பொழுது அவர்களால் துருவ நட்சத்திர ஒளி அலைகளைக் காண முடிகின்றது. நுகரும் பொழுது அபூர்வ மணங்களையும் சுவாசிக்க முடிகின்றது.

இருந்தாலும் சிலரால் இதை உணர முடியாத நிலைகள் இருக்கும். அப்படிப்பட்டவர்கள்
1.தியானத்தில் நமக்கு ஒன்றும் தெரியவில்லையே… கிடைக்கவில்லையே…! என்ற எண்ணத்தையே விட்டுவிடுங்கள்.
2.நாம் நிச்சயம் பெறுகின்றோம்… பெற்றுக் கொண்டிருக்கின்றோம்…!

ஒரு தோசையைச் சுடுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அடியில் தணல் அதிகமாகிவிட்டால் ஒரு பக்கம் தோசை கருகி விடுகின்றது. கருகிய பக்கம் நாம் தோசையைப் பிரட்டினால் சட்டியில் ஒட்டிக் கொள்கிறது.. சீராக நாம் தோசையை எடுக்க முடிவதில்லை.

அதற்கு நாம் என்ன செய்கின்றோம்…? நீரைத் தெளிக்கின்றோம். ஒட்டிய இடங்களில் எண்ணையைப் போட்டுத் தேய்த்து எண்ணைய் பசையைக் கொண்டு வருகின்றோம்.

அப்பொழுது அந்தச் சூட்டின் தன்மையை அங்கே சமப்படும் பொழுது அடுத்து தோசையைச் சுடும் பொழுது கருகாதபடி சட்டியில் ஒட்டாதபடி சீராக வருகின்றது.

இதைப் போன்று தான் வாழ்க்கையில் சிலருக்கு எத்தனையோ விதமான கொதித்தெழும் உணர்வுகள் உடலிலே வளர்ந்திருக்கும்.

1.என்னை மோசம் செய்தார்கள்…
2.என்னை எப்படியெல்லாம் சங்கடப்படுத்தினார்கள்…? கேவலப்படுத்தினார்கள்..?
3.இன்றும் எப்படி எப்படி தொல்லைப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்…? என்ற
4.ஆவேச உணர்வுகள் தொடர்ந்து உள்ள அவர்கள் உடல்களில்
5.தியானத்தில் ஒளி அலைகளையோ… மணங்களையோ… அறிவது கொஞ்சம் கடினம்.

ஏனென்றால் தியானம் இருக்கும் பொழுதே அந்தத் தியான நினைவே இருக்காது. டக்… என்று வேறு வேறு பக்கம் நினைவுகள் சென்றுவிடும்.

இரண்டு வார்த்தை மூன்று வார்த்தை சொல்லும் பொழுது இருக்கும் நினைவுகள் அடுத்து… அதற்கப்புறம் தொடர்ந்து… அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நுகரவிடாதபடி அசையாது நிறுத்திவிடும்.

இல்லை என்றால் தியான நினைவு வரப்படும் பொழுது ஏற்கனவே பட்ட சங்கட அலைகளோ வெறுப்பு அலைகளோ ஊடுருவும்.

தியானமிருக்கும் பொழுது
1.அடுத்து அங்கே போக வேண்டும்…
2.இதைப் பார்க்க வேண்டும்… அதைச் செய்ய வேண்டும்… தொழிலைச் சீராக்க வேண்டும்…
3.குடும்பத்தில் பையனோ பிள்ளையோ இப்படி இருக்க வேண்டும் என்ற இந்த அலைகள் வந்தால்
4.அந்த மகரிஷிகளின் உணர்வை நமக்குள் வராது தடுத்துக் கொண்டே இருக்கின்றது என்று பொருள்…!

தியானத்தில் இப்படி ஒன்றும் தெரியவில்லை என்றாலும் கூட அடுத்து நாம் தியானிக்கும் பொழுது மீண்டும் கண்களைத் திறந்து கண்ணின் நினைவு கொண்டு அந்த அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று இந்த நினைவை மறக்காது எடுத்துப் பழக வேண்டும்.

மீண்டும் மீண்டும் அந்த உணர்வுகளை உங்களுக்குள் வளர்த்துக் கொள்தல் வேண்டும்.

உங்கள் அனைவருக்குமே அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியையும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியையும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் கிடைக்க வேண்டும் என்ற நிலையில் தான் யாம் (ஞானகுரு) தொடர்ந்து உபதேசிக்கின்றோம்.. தவமிருக்கின்றோம்.

உபதேசிக்கும் இந்த உணர்வுகளை யாரெல்லாம் உற்று நோக்கி உணர்வைக் கூர்மையாக எண்ணுகின்றார்களோ அவர்கள் உடலில் உள்ள ஊன்களில் ஞான வித்தாகப் பதிவாகிவிடுகின்றது.

1.“பதிவானதை மீண்டும் மீண்டும் எண்ணினால்…”
2.உங்கள் நினைவாற்றல் அங்கே துருவ நட்சத்திரத்திற்கே செல்லும்.
3.அந்த ஒளி அலைகளையும் மணங்களையும் நுகர முடியும்… காண முடியும்.

ஆகவே ஞானிகளைப் பற்றிய பதிவுகள் என்பது மிகவும் முக்கியம்…! “ஞான வித்து நம் உடலிலே ஊனிலே பதிந்திருந்தால் தான்…” அந்தச் சக்திகளைக் கவர முடியும்.

அகஸ்திய மாமகரிஷி.. துருவ மகரிஷி… துருவ நட்சத்திரம்… என்று படிப்படியாக நமக்குள் சக்தியைக் கூட்டும் முக்கியமான பயிற்சி

POLARIS BLUE POWER

அகஸ்திய மாமகரிஷி.. துருவ மகரிஷி… துருவ நட்சத்திரம்… என்று படிப்படியாக நமக்குள் சக்தியைக் கூட்டும் முக்கியமான பயிற்சி

 

(A) அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் இருக்கும் உங்கள் உயிருடன் ஒன்றி உங்கள் கண்களின் நினைவினை அகஸ்தியன் வாழ்ந்த காலத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
1.உங்கள் உயிருடன் தொடர்பு கொண்டு
2.குருநாதர் காட்டிய அந்த உணர்வின் நிலையை
3.உங்களுக்குள் குருவாக வேண்டும் என்று ஏக்கத்துடன் ஏங்கியே தியானியுங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று நினைவினை உடலுக்குள் செலுத்தி அதை இரத்தநாளங்களில் கருவுறச் செய்து உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்களும் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் சக்தி பெறவேண்டும் என்று ஏக்கத்துடன் தியானியுங்கள்.

இப்பொழுது…
1.அந்த அகஸ்தியன் பெற்ற சக்தியும்
2.நம் குருநாதர் பெற்ற அந்தச் சக்தியும் கலந்து நீங்கள் நுகரும் பொழுது
3.அருள் சக்தியாக… புதுப் புது தாவர இனங்களின் மணங்களை
4.நஞ்சினை வென்றிடும் அருள் சக்தியாக நீங்கள் பெறுவீர்கள்.
5.உங்கள் உடலுக்குள் நஞ்சினை வென்றிடும் அணுக்கருக்கள் இப்பொழுது உருப்பெறும்.
6.நஞ்சினை வென்றிடும் அபூர்வ மணங்கள் வரும்… அதை நீங்கள் நுகர்வீர்கள்
7.அதை உங்கள் உடலுக்குள் அணுக்கருவாக மாற்றுவீர்கள்.
8.உடல் முழுவதும் அந்தச் சக்தி பரவுவதை உங்களால் உணர முடியும். மணத்தை நுகர்ந்தறிய முடியும்…!

(B) துருவ மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.அகஸ்தியரும் அவர் மனைவியும் தியானத்தால் அன்று எடுத்துக் கொண்ட அந்தச் சக்திகள்
2.அவர்கள் உடலிலே “மின் அணுக்களாக… ஒளியின் உணர்வாகப் பெற்ற உணர்வுகளை…” நீங்கள் இப்பொழுது நுகர்வீர்கள்
3.அது உங்கள் உடலுக்குள் செல்லும் பொழுது உங்கள் உடல் அணுக்களையும் “மின் அணுக்களைப் போன்று பெறும்…”

(C) உங்கள் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் அந்தச் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

அதனின்று வரும் அந்தச் சக்தி வாய்ந்த உணர்வுகளை உங்கள் உடல் முழுவதும் பெறச் செய்யுங்கள்.

தியானத்தின் மூலம் நீங்கள் பெறும் சக்திகள்
(1) அகஸ்தியர்
அகஸ்திய மாமகரிஷிகளை எண்ணி ஏங்கித் தியானிக்கும் பொழுது உங்கள் உணர்வுகளில்
1.“பச்சிலை மணங்களும்…
2.அபூர்வ மூலிகைகளின் வாசனைகளும் கிடைத்திருக்கும்.

அந்தப் பச்சிலைகளின் மணங்கள் உங்கள் உடலுக்குள் சென்ற பின் உங்கள் உடலில் ஏற்கனவே இருந்த கை கால் குடைச்சல் அல்லது மேல் வலி அசதி மனச் சோர்வு இருந்தால் அது எல்லாம் குறைந்திருக்கும்.

உங்கள் உடலில் மற்ற ஏதேனும் குறையான உணர்வுகள் இருந்தால் அது இப்பொழுது குறைந்திருக்கும்.

(2) துருவ மகரிஷி
துருவ மகரிஷியின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானிக்கும் பொழுது
1.ஒரு வெல்டிங்கைத் தட்டினால் எப்படி அந்தப் பளீர்…ர்ர் பளீர்…ர்ர்…! என்று அந்த ஒளிக் கற்றைகள் வருமோ
2.அதாவது மின்னலைப் போன்று ஒளி தெரிவதைப் போன்று
3.உங்கள் புருவ மத்தியில் இளம் நீலமாக நீலக் கலரில் அந்த ஒளிகள் உங்களுக்குள் கிளம்பியிருக்கும்.

அதே உணர்வுகளை உங்கள் உடலுக்குள் ஈர்க்கும் நிலைகள் கொண்டு உடலுக்குள் சென்ற பின் உடலிலிருந்து வெளிச்சமாகத் தெரியும். வெல்டிங் அடிக்கும் பொழுது வெளிச்சம் எப்படி வருகின்றதோ அதே போல் தெரிந்திருக்கும்.

சிலருக்கு இரவிலே உறங்கும் போது கெட்ட கனவுகள் அடிக்கடி வரும். ஏனென்றால் பகலிலோ அல்லது மற்ற நேரங்களில் உடலில் தீய உணர்வுகள் பதிந்திருந்தால் இரவிலே கெட்ட கனவுகள் வரும்.

கெட்ட கனவுகள் என்பது நாம் பதிவு செய்த உணர்வுகள் இரவிலே புலனடங்கித் தூங்கும் பொழுது சோர்வடையும் பொழுது அந்த உணர்வுகளை நாம் சுவாசித்த பின் நம் உயிரிலே அந்த உணர்வுகள் படும் பொழுது எது எது வந்ததோ அந்த உணர்வின் ரூபங்களைக் காட்டும். அப்பொழுது நம்மை அறியாமலே பய உணர்ச்சிகளைக் காட்டும்.

துருவ மகரிஷிகளை எண்ணித் தியானித்து அதன் வலுவைக் கூட்டும் பொழுது கெட்ட கனவுகள் வராது தடுக்கப்படும்.

(3) துருவ நட்சத்திரம்
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று உங்கள் நினைவினைத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்து எண்ணும் பொழுது
1.உங்கள் புருவ மத்தியில் குறு குறு என்று உணர்ச்சிகளை ஊட்டி
2.இளம் நீலமாகத் தெரிந்திருக்கும்.

சிலருக்கு வெளிச்சமாகத் தெரியவில்லை என்றாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி உடலுக்குள் செல்லும் பொழுது “ஒரு சக்கரம் போல்…” சுழன்று வரும் உணர்ச்சிகளைத் தூண்டியிருக்கும்.

அதாவது ஒரு ஈரமான துணியிலோ மற்றதுகளிலோ லேசாக மின்சாரம் (EARTH) பாய்ந்தால் எப்படி மினு..மினு… என்று இழுக்குமோ அந்த மாதிரித் தெரிந்திருக்கும்.

இவை எல்லாம் நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள் நமக்குள் ஏற்கனவே பயத்தால்… அவசரத்தால்… ஆத்திரத்தால்… வெறுப்பால்… வேதனையால்… சோர்வால்… சங்கடத்தால்… இதைப் போன்ற அணுக்கள் உருவாகியிருந்தால்
1.நாம் நுகரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் பட்ட பின் அந்த அணுக்கள் அஞ்சி நடுங்கும்.
2.அதனால் அந்த உணர்வுகள் ஈரக் கையில் மின்சாரம் ஓடுவதைப் போன்று தெரிந்திருக்கும்.

அதே சமயத்தில் துருவ நட்சத்திரத்தை எண்ணி நாம் தியானிக்கும் பொழுது
1.புவி ஈர்ப்பின் பிடிப்பற்று மேலே மிதப்பது போல் தெரிந்திருக்கும்.
2.அதாவது இந்தப் பூமியின் பிடிப்பில்லாது (காற்று போல்) பறப்பது போல் தெரிந்திருக்கும்.

தியானத்தைச் சீராகக் கடைப்பிடிப்பவர்கள் மேலே சொன்ன அனைத்தையும் நிச்சயம் காண முடியும்.. உணர முடியும்… நுகர முடியும்…!