செடியில் பிஞ்சு காயாகிக் கனி வித்தாவது போல் உயிரைப் போன்று ஒளியின் வித்தாக நாம் ஆக வேண்டும்

செடியில் பிஞ்சு காயாகிக் கனி வித்தாவது போல் உயிரைப் போன்று ஒளியின் வித்தாக நாம் ஆக வேண்டும்

 

உதாரணமாக ஒரு மாமரத்தின் வித்தை நிலத்தில் ஊன்றினால் அந்த வித்திற்குள் மறைந்த சத்துக்கள் அனைத்தும் பூமியின் துடிப்பின் நிலைகள் கொண்டு பூமியின் காந்த ஈர்ப்பின் துணை கொண்டு முளைக்கத் தொடங்குகிறது.

அந்த வித்திற்குள் எடுத்துக் கொண்ட காந்த உணர்வுகள் அது மீண்டும் ஜீவன் பெற்று… காற்றிலே சூரியனின் காந்த சக்தியால் தாய் மரத்தின் உணர்வலைகள் கவர்ந்து அலைகளாகச் சுழன்று கொண்டிருப்பதை இழுத்துக் கவர்ந்து செடியாக அது வளரச் செய்கின்றது.

ஆனால் அந்த வித்திற்குள் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் அது ஈர்த்துக் கவரும் பொழுது தழைகளாகச் செடியாக மாறுகின்றது.

1.பின் தன் உணர்வின் சத்தை அது வளர்த்து மரமாகிப் பிஞ்சு ஆகும் பொழுது துவர்க்கின்றது.
2.காயாகும் பொழுது புளிக்கின்றது
3.புளித்தபின் இனிக்கின்றது
4.இனிக்கும் போது வித்தின் சத்து அனைத்தும் அந்த வித்திற்குள் ஒடுங்குகின்றது.
5.அந்தப் பழம் சுவையாக இருக்கின்றது.

ஒரு மாங்கனி எப்படித் தன் உணர்வின் சத்தை அது வித்தாக மாற்றியதோ இதைப்போல ஜீவராசிகளின் “உயிரின் தன்மை என்பது ஒரு வித்து…”

ஆனால் மனிதனாக வளர்ச்சி பெற்று வரும் பொழுது காயிலிருந்து கனியாகும் பருவம். மனித உடலில் இருக்கக்கூடிய அனைத்தும் கனியின் தன்மை அடைந்து விட்டால்
1.இந்த உயிருடன் ஒன்றிய உணர்வின் சத்து
2.மாவித்திற்குள் எப்படி இந்த உணர்வின் தன்மை அடைந்ததோ
3.இதைப்போல நம் உயிர் எப்படி ஒளியானதோ இந்த உணர்வின் தன்மை அனைத்தும் மாற்றி
4.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக மாறி விண் செல்ல முடியும்.

ஒளியான பின் விண் செல்வதே முழுமை. அப்படிக் கனியாக்கி விண் சென்றவர்களே மாமகரிஷிகள். அவர்கள் அடைந்த முழுமையை நாமும் அடைய வேண்டும்.

Leave a Reply