நாம் அடிபணியச் செய்ய வேண்டியது எதை…? தலை நிமிர்ந்து பார்த்துப் பெற வேண்டியது எதை…?

நாம் அடிபணியச் செய்ய வேண்டியது எதை…? தலை நிமிர்ந்து பார்த்துப் பெற வேண்டியது எதை…?

 

யாம் (ஞானகுரு) உங்களுக்கு ஆசீர்வாதம் கொடுக்கும் பொழுது
1.மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும்
2.உங்கள் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற வேண்டும்
3.அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நீங்கள் செல்ல வேண்டும்
4.இந்த மெய் வழி உங்களுக்குள் வளர வேண்டும் என்று ஆசீர்வதிக்கிறேன்

அந்த நேரத்தில் அந்த உணர்வின் சக்தியைப் பெற வேண்டும் என்று அதையே நீங்களும் ஏங்கிப் பெற வேண்டும்.

உதாரணமாக மைக்குக்கு முன்னாடி வந்து நேராகப் பேசினால் தான் அந்த ஒலி அதன் மூலம் பதிவாகின்றது. மைக்கைத் திருப்பி வைத்து விட்டால் எந்தச் சப்தமும் வராது.

அதைப் போலத் தான்
1.உங்களுடைய ஏக்க உணர்வுகள்
2.நான் கொடுக்கும் ஆசியுடன் அதே எண்ணத்துடன் ஏங்கி இருந்தால்தான் அது பதிவாகும்.
3.ஆகவே மகரிஷிகளின் ஆற்றலைப் பதிவு செய்வதற்குத் தான் உங்களுக்கு அந்த ஆசிர்வாதமாகக் கொடுப்பது.

ஆனால் உங்கள் தாய் தந்தையரிடம் மட்டும் நீங்கள் பாதம் பணிந்து ஆசிர்வாதம் பெற வேண்டும்.

பள்ளிக்குச் சென்றாலும் இங்கே குருவிடம் வரும் பொழுதும் அது எல்லாம் குருவின் தன்மை தான். நல்வழி செல்வதற்கும் ஞானிகளின் அருள் சக்திகளைப் பெறுவதற்கும் வழி காட்டுகின்றோம்.

1.ஞானிகளைப் பற்றி யாம் உங்களுக்கு ஆசி கொடுக்கும் போது
2.ஏக்க உணர்வுடன் நேர்முகமாகப் பார்த்து நீங்கள் பதிவு செய்து கொள்வதுதான் முறை.

ஆனால் பெரியவர் என்று ஒருவரை நாம் வணங்குகிறோம் என்று சொன்னால் அந்தப் பெரியவரின் உணர்வுகளை நமக்குள் பதிந்து கொண்டால் தான்… அது பெரிதாக நமக்குள் வேலை செய்யும். பெரியவருக்கு வணக்கம் செய்கிறேன் என்று நாம் தலை குனிந்து செயல்படுத்துவது அல்ல.

1.தலை நிமிர்ந்து நேராகப் பார்த்து…
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று நுகர்ந்து அதை உடலுக்குள் செலுத்தி
3.தீமை பயக்கும் உணர்வுகளை அடிபணியச் செய்வதற்குத்தான் யாம் ஆசி கொடுக்கின்றோம்
4.இதை நீங்கள் பழகிக் கொண்டால் அந்த அருள் சக்திகள் உங்களுக்குள் சுலபமாக வரும்.
5.குருவின் ஆசி என்றுமே உறுதுணையாக இருக்கும்.

நல்வழி பெறும் மார்க்கத்தை உங்களுக்குள் பதிவு செய்வதற்குத் தான் இதைப் பதிவாக்குகின்றேன். பதிவானதை நீங்கள் திரும்ப எண்ணி அதை ஏங்கிப் பெற்றால் அது நல்வழி காட்டுகின்றது.

ரேடியோ பேட்டியில் எந்த அலை வரிசையைப் பதிவு செய்கிறோமோ அதைத்தான் அது இயக்கும்.

அதைப்போல உங்களுக்குள் உயர்ந்த கருத்துக்களை பதிவு செய்யும்போது அதை நீங்கள் திருப்பி எண்ணினால்
1.அந்த உணர்வின் சக்தி உங்களுக்குள் வழிகாட்டியாக வரும்… உங்கள் செயலின் தன்மையும் நல்லதாகும்.
2.உங்கள் உடலுக்குள் அது மகிழ்ச்சி பெற செய்யும் சக்தியாக வளரும்.

அதை எல்லாம் நீங்கள் பெற வேண்டும் என்று சதா தியானிப்பது தான் என்னுடைய வேலை. மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று யாம் தியானிக்கும் பொழுது… எந்தெந்த உயர்ந்த எண்ணங்களை எந்தெந்த உயர்ந்த சக்திகளைப் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணுகின்றீர்களோ அது எல்லாம் எனக்குள் விளைகின்றது.

நீங்களும் அதைப் போல எண்ணி
1.உங்கள் குழந்தைகள் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்
2.என் அம்மா அப்பா ஆரோக்கிய நிலை பெற வேண்டும்
3.என் மூதாதையர்கள் உயர்ந்த நிலை பெற வேண்டும்
4.எங்களை பார்க்கும் பொழுது மகிழ்ச்சி அடைய வேண்டும் என்று எண்ணுங்கள்.

எந்தக் குறைகளையும் காணாதபடி இதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்… குறை என்பதே நம்மை விட்டு அகன்றுவிடும். குறைந்தபட்சம் உங்கள் குடும்பத்திலாவது இதைப் பழகிக் கொள்ளுங்கள்.

நான் எதை எல்லாம் எண்ணுகின்றோமோ நம் உயிர் அதைத் தான் படைக்கின்றது எதை எண்ணுகின்றோமோ அதை உடலாக மாற்றுகின்றது. அது போல்
1.இங்கே கொடுக்கும் ஞானிகளின் உணர்வுகளைப் பதிவாக்கினால்
2.மீண்டும் நினைக்கும் பொழுதெல்லாம் அதுவே நம்மை இயக்கத் தொடங்கும்.

Leave a Reply