நம் உடலில் உள்ள இரத்தத்தை அடிக்கடி தூய்மைப்படுத்திக் கொண்டே வர வேண்டும்

நம் உடலில் உள்ள இரத்தத்தை அடிக்கடி தூய்மைப்படுத்திக் கொண்டே வர வேண்டும்

 

அந்த ஒளியின் சுடராக எல்லோரும் ஆக வேண்டும் என்று நாம் எண்ணுகின்றோம். இந்த உணர்வுகள் சூரியனால் கவரப்பட்டுப் பரமான இந்தப் பூமியில் பரமாத்மாவாகப் பரவுகின்றது.

நம் கண் கருவிழி பதிவாக்கியதைக் மீண்டும் நினைவாக்கப்படும் போது கருவிழியுடன் சேர்ந்த காந்தப் புலனறிவு அதனைப் பரமாத்மாவில் இருந்து கவர்ந்து நமது ஆன்மாவாக மாற்றிக் கொள்கின்றது.

1.நம் ஆன்மாவாக மாற்றி இங்கே சேர்த்தபின்
2.உணர்ச்சியைத் தூண்டுவதற்கொப்ப உயிர் அதை உள்ளே இழுத்து
3.உடலுக்குள் இருக்கும் அதனதன் அணுக்களுக்கு உணவு கொடுக்கின்றது.
4.உடலில் இருக்கும் ஜீவன்மாக்களுக்குச் சேருகின்றது.

இரத்தத்தின் வழி கொண்டு உடல் முழுவதும் அந்த அருள் உணர்வுகளைப் பாய்ச்சுகின்றது. ஜீவான்மாக்களுக்குள் அப்பொழுது செல்கின்றது.

அதனால்தான் இராமன் முதலில் குகனைத் தன் சகோதரன் ஆக்கிக் கொள்கின்றான் என்று இராமாயணத்தில் காட்டுகின்றனர்.

குகன் என்பவன் ஆற்றிலே படகை ஓட்டிச் செல்கின்றான். அதாவது நம் உடலில் இருக்கும் இரத்தங்கள்தான் ஆறாகவும் ஓடையாகவும் ஓடுகின்றது.

இந்த உடலான குகைக்குள் அருள் ஒளியின் சுடரை எடுத்துப் பெருக்கப்படும் பொழுது பகைமையற்ற உணர்வாக நம் உடலில் இருக்கக்கூடிய எல்லா உறுப்புகளுக்கும் இந்த இரத்தத்தின் வழியாகச் செல்கிறது.

1.இந்த உணர்வுகள் தன்மை நம் உடலுக்குள் நட்பின் தன்மையை உருவாக்குகின்றது
2.அதற்காக வேண்டித் தான் இராமன் குகனை நட்பாக்கிக் கொள்கின்றான்.

சீதா…! என்று நம் இரத்தத்தில் உயர்ந்த குணங்களை எடுத்து வளர்த்துக் கொண்டால் நம் உடலுக்குள் எல்லாவற்றிலுமே நல்லதைச் செய்யும் என்பதுதான் பொருள்.

காடு வனாந்தரங்களுக்குள் சென்றாலும் பகைமையற்ற உணர்வை நமக்குள் வளர்க்கும் தன்மை வருகின்றது. ஆகவே அடிக்கடி நம் இரத்தநாளங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

எதைக் கொண்டு…?

அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். எங்கள் இரத்தநாளங்களில் அது கலக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது நம் உடலில் இருக்கக்கூடிய எல்லா இடங்களுக்கும் அந்த இரத்தம் செல்கின்றது.

1.உடல் உறுப்புகளுக்குள் எங்கெங்கெல்லாம் தீங்கு விளைவிக்கும் தன்மைகள் வருகின்றதோ அதை எல்லாம் இது அடக்குகின்றது.
2.நம் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்களைத் தூய்மைப்படுத்த இந்த முறையைக் கையாள வேண்டும்.

அந்த மகரிஷிகளின் உணர்வுகளை எடுத்து அடிக்கடி நம் இரத்தத்தைப் பரிசுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். எதிர்மறையான உணர்வின் இயக்கங்கள் வராது சமப்படுத்தும் சக்தியாக வரும்.

மன அமைதியும் சாந்தமும் ஞானமும் கிடைக்கும்…!

Leave a Reply