“ஹேமப் பறவை” என்ற விண்ணின் ஆற்றல் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

“ஹேமப் பறவை” என்ற விண்ணின் ஆற்றல் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

“காமதேனு பாலை ஊட்டிடுவாள்…!” என்று சொன்ன சொல்லில் அது எப்படி..? என்ற வினா எழும்பும். அன்றைய சித்தன் இந்த அரிய உயிரணுக்களின் சக்தியை “ஹேமம்” என்ற நாமப்படுத்தி பறவையாகக் காட்டினார்கள்.

பூமியின் தொடர்பிற்கே வந்திடாத வண்ணம் பூமியின் காற்று மண்டல ஈர்ப்பு வட்டத்திற்கு மேல் ஹேமப் பறவைகள் பல்கிப் பெருகி உள்ளன…! என்று சுட்டிக் காட்டினர்.
1.அதைப் பற்றிய சூட்சமத்தை அறிய வேண்டும் என்றால்
2.ரிஷித் தன்மைக்குத் தன் சக்தியை உயர்த்திடும் எண்ணம் கொண்டு செயல்பட வேண்டும்.

“மறைக்கப்பட்ட விஷயமாக” இது இருந்தாலும் அந்த மகரிஷிகளின் ஆசியுடனே இப்பொழுது அதைப் பற்றிய உண்மையை வெளிப்படுத்துகின்றோம்.

பூமியைச் சுற்றி ஓடும் அந்த அரிய உயிரணுக்களின் தொடர் வட்டமே அனைத்தின் கூட்டுத் தொகுப்பில் “காமதேனு…” என்று அழைக்கப்படுகிறது.

அவைகளின் சுவாசத்தில் ஈர்த்து வெளியிடும் சக்திப் பிரவாகம் பால் அமுதமாக வருவதை
1.ஒளி காந்த சக்தியாக ஈர்த்திடும் பக்குவத்தில்
2.அந்த ஈர்ப்பின் வலுச் செயலுக்கு நாம் அந்த ஆகாரத்தைப் பெற வேண்டும்.

அகண்ட அண்டத்தில் (UNIVERSE) உள்ள ஒவ்வொரு மண்டலத்திலும் செயல்படும் விரிவாக்க மூல சூட்சமத்தை அறிந்துணர்ந்து தெளிந்த பின் தனித்தன்மை வாய்ந்த செயல் நிகழ்வாக ஒளி நட்சத்திரங்களாக நாம் சுழன்று ஓடும் செயல் வளர்ப்பிற்குண்டான சகல சக்திகள் நம்முள்ளும் உண்டு.

யோகிகளுக்கு ஆத்மனும்… ஞானியர்களுக்குப் பரப்பிரம்மமும்… சொல் நாம வேறுபாடே தவிர அனைத்தும் ஒன்று தான்.
1.தன் எண்ணத்தின் வலுவால்
2.நல் வினைப்பயனால் சகலத்தையும் அறியும் சக்தியால்
3.ஆத்மாவாக உணர்ந்தறியும் உயிர் சக்தியின் கலப்பால்
4.சூட்சமச் சரீரமே சூட்சமத்தில் வாழும்
5.ஒளி காந்த உயிரோட்டமாக நிலை நின்று ஒளிரும் வளர்ப்பே
6.ஆதிசக்தியின் மூலசக்தியாகக் கலந்திடும் செயலுக்கு வாயிலாகின்றது.

பரப்பிரம்ம ஆத்ம சூட்சமம் பதியும் ஒவ்வொரு செயலையும் இந்தச் சரீர உணர்வுடன் ஒன்றி வளர்க்க அறிந்து கொள்ள வேண்டும்.

அன்றைய சித்தர்களும் மெய் ஞானிகளும் பூமியின் தொடர்பில் சூரியக் குடும்ப வீரிய அலையின் சக்தி பரவிப் பாய்வதையும் அது ஒன்றாகக் குவிந்து வருவதையும் அறிந்தனர்,

1.தங்களுடைய உயர் ஞான அறிவின் வளர்ப்பால்
2.உள் நுணுக்கு… நுண் சூத்திரம்… என்ற கணித முறைச் சூத்திரங்கள் பலவற்றைக் கையாண்டு
3.அவைகளை எல்லாம் ஆக்கச் சக்திக்காகப் பயன்படுத்தும் வகைப்படுத்தினார்கள்.

ஒவ்வொரு மண்டலங்களின் சுவாசத் தன்மைகளில் அந்த மண்டலங்கள் ஈர்த்துச் சமைத்து வெளிவிடும் சுவாச அலைகளை ஈர்த்திடும் செயலில் பல குண அமிலத் தன்மை கொண்ட அலைகள் உண்டு.

அவைகள் எல்லாம் ஒன்றாகக் குவிதலும் குவிந்த பின் விரிந்திடும் நிலைகளையும் அதற்கென்ற கருவிகளை வைத்து இன்றைய விஞ்ஞானம் விளக்கமாக அறிவின் தொடரில் அறிந்து கொண்டது.
1.அறிந்தாலும் அதை அழிவுக்கே பயன்படுத்துகின்றார்கள்.
2.வளர்க்கும் ஆக்கச் சக்தி இல்லை.

மண்டல இயக்கங்களின் மோதலினால் உருவாகும் அந்த நுண்ணிய “மின் காந்த அலைகளை… ஒளி காந்த சக்திகளை…” எல்லாம் அழிவின் சக்திக்கே கொண்டு செல்கிறார்கள் இன்றைய மனிதர்கள்.

ஆனால் அன்றைய சித்தர்களும் மெய் ஞானிகளும் படைப்பின் படைப்பை ஒளி சக்தியின் வளர்ப்புக்காக அதைக் காத்திட்டார்கள்.

Leave a Reply