மின்மினிப் பூச்சிகள் உருவாகும் விதமும் அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆன விதமும்

மின்மினிப் பூச்சிகள் உருவாகும் விதமும் அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆன விதமும்

 

சில வண்டுகள் முட்டை இடுகின்றது. அது முட்டை இடும் பொழுது
1.அந்த முட்டைகள் மீது மின்னல் பாய்ந்தால் அந்த மின் கதிர்கள் நேரடியாகத் தாக்கினால்
2.அந்த உணர்வுகளை எடுத்துக் கவர்ந்து மின் மினிப்பூச்சியாக மாறுகின்றது.
3.அதாவது முட்டைக்குள் மின்னல் பாய்ந்தபின் மின்னட்டாம் பூச்சியாக மாறுகின்றது.

குருநாதர் இதையெல்லாம் காட்டுகின்றார்.

மின்னல்கள் கடலிலே தாக்கும் பொழுது மணலாக மாறுகின்றது. அதனுடைய வீரியம் குறைந்து விடுகின்றது. ஆனால் அதற்குக் கீழே ஏதாவது ஒரு மீனினம் இருந்தது என்றால் இந்த மின்னல் தாக்கிய உடனே அந்த உடலில் ஊடுருவி அது சாகின்றது.

அது இறந்த பிற்பாடு இந்த உணர்வுகள் பாய்ந்த நிலைகள் கொண்டு அடுத்த சரீரம் அது எலக்ட்ரிக் மீனாக மாறுகின்றது.

முதலிலே மின்னல் பாய்ந்த பின் இந்த உணர்வின் வலுவான பின் மீன் அழிகின்றது. ஆனால்
1.இந்த உயிரோடு சேர்த்து அந்த மின்னலின் தன்மை கருவாகின்றது
2.அடுத்த கணமே அது எலக்ட்ரிக் மீனாகின்றது.

பொதுவாக மின்னல்கள் தாக்கும் சந்தர்ப்பங்கள் எல்லாம் கடலில் அதிகமாக இருக்கின்றது. மீன் இனங்கள் மீது அது பட்டால் அதற்குள் கலந்து விடுகின்றது… எலெக்ட்ரிக் மீனாக மாறுகின்றது.

உதாரணமாக நீர் உயரத்தில் இருந்து கீழே வேகமாக விழுந்தாலும் (நீர் வீழ்ச்சி) நாம் அதன் வழி சென்றால் அது நம்மைக் கீழே அழுத்தி விடும்.

ஆனால் இந்த எலக்ட்ரிக் மீன்கள் அதில் வரக்கூடிய காந்தப்புலனை எதிர்த்து மேலே செல்கின்றது.
1.அதிலுள்ள மேக்னட் வரப்படும் போது மீனுக்குள் காந்தம் அடைகின்றது.
2.அதை எடுத்து மேலே செல்லுகின்றது.
3.அதனுடைய காந்தப் புலனறிவு எப்படி இருக்கின்றது…? என்று பார்க்கலாம்.

அந்த மீனுக்குக் கையும் இல்லை கால்களும் இல்லை. ஆனால் எதிர்த்து நீந்திக் கொண்டு மேலே போகின்றது. அந்தக் காந்தப் புலனறிவு அதற்குள் ஈர்த்துப் போகின்றது.. இது எப்படி…? என்று காட்டுகின்றார் குருநாதர்.

சூரியனிலிருந்து வரக்கூடிய உணர்வுகள் செடியில் தாக்கப்பட்ட உடன் அது எந்த உணர்வோ தாய்ச் செடியின் சத்தை எடுத்து அது வளர்கின்றது.

அதைப் போன்று தான் அக்காலத்தில் வாழ்ந்த மனிதன் வான் வீதியின் உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்துக் கொண்டான். அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி இப்படித்தான் துருவ நட்சத்திரமாக ஆனான்.

அகஸ்தியனால் கண்டுணர்ந்து அவன் அறிந்து கொண்டது தான் மேலே சொன்ன அத்தனை நிலைகளும். இதை எல்லாம் அகஸ்தியன் அறிந்து கொண்ட பின் என்ன செய்கின்றான்…?

அந்த மின்னலின் உணர்வுகள் வான்வீதியிலே வரும் பொழுது அந்த ஒளிக்கற்றைகளை நுகரகின்றான். துருவ நட்சத்திரமாக ஆனான்.

அவனுக்கு இந்தச் சக்தி எப்படி வந்தது…? தாய் கருவிலிருக்கும் போது அவன் பெற்ற சக்தி தான் அது.

தாயின் கருவில் இருக்கும் பொழுது அவனுடைய தாய் தங்களைப் பாதுக்காத்துக் கொள்வதற்காக
1.விஷத் தன்மைகள் எதுவும் தன்னைத் தாக்கி விடாதபடியும்
2.உயிரினங்களுக்கு எதிரான மூலிகைகளையும் பச்சிலைகளையும் போட்டு வைத்து இருக்கின்றார்கள்.
3.உடலிலே அரைத்துப் பூசிக் கொள்கின்றார்கள்.

அதே சமயத்தில் அந்த மணங்களை அந்தத் தாய்மார்கள் சுவாசிக்கிறார்கள். கணவன் மனைவி ஒன்றி வாழும் போது சந்தர்ப்பத்தில் கர்ப்பம் ஆகின்றார்கள்.

அந்த சமயத்தில் கர்ப்பிணியாக இருக்கும் தாய் மின்னலைப் பார்த்தாலும் அது அடங்குகிறது. கருவிலிருக்கும் குழந்தைக்கும் அந்த ஆற்றல் கிடைக்கின்றது.

ஏனென்றால் கர்ப்பமான அந்தத் தாய் சுவாசிக்கும் நஞ்சை வென்றிடும் உணர்வுகள் எல்லாம் இரத்தத்தின் வழியாக கருவிலிருக்கும் குழந்தைக்கும் உணவாகப் போகின்றது.

1.அப்போது அந்த மின் கதிரின் உணர்வுகள் அதற்குள் அடங்கி வளரக்கூடிய தன்மை வருகின்றது.
2.இப்படிப் பத்து மாதங்களும் வளர்ச்சி அடைந்து பிறந்த பின்
3.எத்தகைய விஷங்களையும் முறிக்கக் கூடிய சக்தி பெற்றவனாக அகஸ்தியன் வளர்கின்றான்.

Leave a Reply