நிலையில்லாத இந்த மனித சரீரத்தைக் காக்கத் தான் விஞ்ஞானம் போராடுகிறது…!

நிலையில்லாத இந்த மனித சரீரத்தைக் காக்கத் தான் விஞ்ஞானம் போராடுகிறது…!

 

ஒன்றை ஒன்று புசித்துத் தான் எல்லாமே வாழ்கிறது. ஆடு சாந்தமான உணர்வுடன் வந்தாலும் புலி அதைக் கொன்று புசிக்கத்தான் செய்யும்.

இதைப் போல் நமக்குள் நல்ல உணர்வுகள் இருப்பினும் நாம் எடுத்துக் கொண்ட வேதனையான உணர்வு உடலுக்குள் அணுக்களாக விளைந்தால் டி.பி. வந்துவிடுகிறது.
1.உடலில் உள்ள நல்ல அணுக்களை அது கொன்று புசிக்கத்தான் செய்கிறது
2.எலும்புகள் இருக்காது… காணாமலே போய்விடும்.

ஆக நாம் சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட வேதனை என்ற உணர்வுகள் நல்ல அணுக்களைக் கொன்று புசிக்கிறது.

அதே போன்று தான் மனிதனில் விளைந்த மூச்சின் அலைகள் அங்கே தாவர இனங்களில் விளைந்து (பூச்சிகளாகவும் புழுக்களாகவும்) எதைப் புசித்தோமோ அதைக் கொன்று புசித்து நமக்கு உணவில்லாதபடி இங்கே கொல்கிறது.

இங்கே மட்டுமல்ல…! தாவர இனத்திலும் இதே தான் கொல்கிறது.

தென்னை மரத்தில் கருக்கல் நோய் என்று வரும். விவசாய ஆராய்ச்சி மையங்களில் அதில் கருவுறும் நிலைகளை எடுத்து அதனின் உணர்வின் சாறை எடுத்து அதிலே தீமையை விளைய வைக்கும் அதாவது “ஒலைக் கருக்கல்” என்ற நிலைகளில் அதனின் சத்துகளை உறிஞ்சிச் சாப்பிடும் கொசுக்களை மற்ற இனங்களைக் கொல்ல என்ன செய்கிறார்கள்..?

அதற்குண்டான எதிர்மறையான மற்ற உணர்வைச் சேர்ந்து அதிலேயே கருவை உண்டாக்குகின்றான். விஞ்ஞான அறிவு கொண்டு போடுகின்றான். அதிலே படர்ந்தவுடனே அந்த ஓலையின் சத்தை எடுக்கும்.

அதே சமயத்தில் அந்த ஓலைச் சத்தைத் தின்று கொண்டிருக்கும் கிருமிகளையோ பூச்சிகளையோ இது கொன்று புசிக்கும். அவை முழுவதும் செத்த பின் இதுவும் மடிந்து விடும்.

அதே மாதிரித்தான் உங்களுக்குள் அந்த மகரிஷியின் அருள் சக்திகளையும் மெய் ஞானிகளின் உணர்வுகளையும் எடுத்துக் கொள்ளும்படி செய்கிறோம்.

ஏனென்றால் தீமைகளை வென்றவன் அருள் ஞானி. அதை வைத்துத் தீமைகள் செய்யும் உணர்வுகளை அடக்க வேண்டும்.

1.மனிதனாக உருவாக்கிய நல்ல உணர்வுகளை எது கொன்று புசிக்கின்றதோ
2.அது இருக்கும் வரை அந்த உணர்வுகளை இந்த அருள் உணர்வுகள் கொன்று புசித்துக் கொண்டே இருக்கும்.
3.பின் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலைத்தே இருக்கும்.

விஞ்ஞானத்திற்கும் மெய் ஞானத்திற்கும் உண்டான வேறுபாடைத் தெரிந்து கொள்ளுங்கள்.

உணவுக்காக விஞ்ஞானி அவன் கண்டுபிடிப்புகளை எடுக்கின்றான்
1.ஆனால் என்றும் நிலையான சரீரத்தை (வேகா நிலை)
2.ஒளியாக நிலைக்கச் செய்கின்றான் அந்த மெய் ஞானி.

Leave a Reply