சாந்த குணம் கொண்டோருக்கு எப்படி இரத்தக் கொதிப்பு வருகிறது…?

சாந்த குணம் கொண்டோருக்கு எப்படி இரத்தக் கொதிப்பு வருகிறது…?

சாந்த குணங்கள் கொண்ட நாம் பிறரின் கோபிக்கும் உண்ர்வுகளைச் சந்தர்ப்பத்தால் காண நேர்கின்றது. அப்பொழுது அவர் வெளிப்படுத்தும் அந்தக் காரமான உணர்வை நுகர்கின்றோம் (சுவாசிக்கின்றோம்).

அவர் வெளிப்படுத்தும் கோப உணர்வைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றினாலும் நாம் உற்றுப் பார்த்து அதை நுகரும் போது நம் சுவாசத்திற்குள் வந்து… உயிரிலே பட்டு அந்தக் காரமான உணர்வின் சத்தாக உமிழ் நீராக மாறி… ஆகாரத்துடன் கலந்து உடலுக்குள் இணைகிறது.

இணைந்து இரத்தத்துடன் கலந்து உடலிலே சுழன்று வரும் பொழுது முட்டையாக மாறி அந்தக் கார உணர்ச்சியைத் தூண்டும் அணுவின் கருவாகின்றது.

இது எல்லாம் சந்தர்ப்பம் தான்.

சாந்தமான உணர்வு கொண்டு நாம் இருக்கப்படும் போது அந்த வேகத் துடிப்பு வருவதில்லை. ஆனால் அந்தக் கோபித்தோரின் உணர்வை நுகர்ந்த பின் அது ஓமுக்குள் ஓம் ஆகி சாந்த உணர்வுகளுக்குள் எதிர்மறையாகத் தாக்குகின்றது. துடிப்பு அதிகமாகின்றது… உணர்ச்சி வசப்படுகின்றோம்.

1.இயல்பாக ஒரு கடினமான பொருளை வைத்து மற்றொன்றோடு தாக்கப்படும் பொழுது
2.அங்கே அந்த வெப்பம் உருவாகின்றது
3.அந்த உணர்ச்சியின் வேகத்தினால் வலியும் வேதனையும் அதிகரிக்கின்றது.

இதைப் போன்று தான்
1.அந்த வேகத்தின் உணர்வுகள் (கோபம்) நம் சாந்த உணர்வில் தாக்கப்படும்பொழுது
2.இந்த அணுவிற்குள் ஊடுருவி இது அணுவின் தன்மை அடைந்து
3.அந்தச் சாந்தத்தை அடக்கும் வல்லமை பெறுகின்றது.
4.ஓமுக்குள் ஓமாகி மாறி அதனை இது அடக்கும்
5.அதற்குள் இது அடங்கி சாந்தத்தின் செயலாக்கத்தைக் குறைக்கின்றது.

ஏற்கனவே இருக்கும் சாந்த குணமும் சாந்த எண்ணங்களும்… “தன்னை வளர்க்கும் தன்மை இழந்து…” இந்தக் காரத்தின் உணர்வை இதற்குள் வளர்க்கப்படும் போது அதற்குள் நாம் பார்க்கும் இனத்தை எல்லாம் (மற்ற குணங்களை) அது அடக்கிவிடும்.

ஓமுக்குள் ஓ…ம்… ஓமுக்குள் ஓ..ம்… ஓமுக்குள் ஓ..ம்…! என்ற நிலைகளில் இந்தக் கார உணர்வுகள் இதற்குள் ஒடுங்கி ஒடுங்கி ஒடுங்கி வருகின்றது. நல்ல உணர்வுகளைச் செயலற்றதாக மாற்றுகின்றது.

இப்படி நல்ல மணத்தை உருவாக்காத நிலைகள் கொண்டு வரப்படும்பொழுது தான் மனிதனுக்கு இரத்தக் கொதிப்பே வருகின்றது.

இரத்தக் கொதிப்பு வந்தோரை டாக்டர் பரிசோதித்தால் அவரின் துடிப்பின் நிலையும் கொதிக்கும் நிலையும் இரத்தத்தில் அதிகரித்திருப்பதைப் பார்க்கலாம்.

நேரடியாகச் சுவாசித்திருந்தாலும் சரி அல்லது வேடிக்கை பார்த்திருந்தாலும் சரி அதை நுகர்ந்தால் இது போன்று ஆகிவிடுகின்றது. இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

1.அதைத் தூய்மைப்படுத்துவதற்குத் தான் ஆத்ம சுத்தி என்ற பயிற்சியைக் கொடுத்து
2.அடிக்கடி உங்கள் இரத்தங்களில் அருள் மகரிஷிகளின் உணர்வைச் சேர்த்துத் தூய்மைப்படுத்தும்படி சொல்கிறோம்.

Leave a Reply