மனித வாழ்க்கையில் இன்று கேள்விக்குறியாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்

மனித வாழ்க்கையில் இன்று கேள்விக்குறியாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்

 

இன்றைய சூழ்நிலையில் காலையிலிருந்து இரவு வரையிலும் பண்பு கொண்ட மனிதன்… அன்பு கொண்ட மனிதன்… பரிவு கொண்ட மனிதன்… ஈகை கொண்ட மனிதன்… பிறருடைய துயர்களைக் கேட்கப்படும்போது அதை நுகரப்படும்போது உயிரிலே அந்த உணர்வுகள் உராய்ந்து அந்த உணர்ச்சிகள் தான் உடல் முழுவதும் சுழல்கின்றது.

அதனால் துயரப்படும் உணர்ச்சிகளே இயக்குகின்றது. ஆக.. மனிதன் தனது வாழ் நாளில் கேள்விக்குறியாகவே இன்று வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளோம்.

ஏனென்றால் இன்று உலக நிலைகளில் அரசியல் நிலைகள் பூராமே மனிதனை முழுமையாக அறவே அழிக்கச் செய்து அரக்க உணர்வுகள் பெறும் சக்தியே விஞ்ஞான அறிவால் உருவாக்கப்பட்டு விட்டது.

நாம் செல்வத்தைத் தேடினாலும்…
1.அந்தச் செல்வத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறோம் என்று சொன்னாலும்
2.அதற்கு வேண்டிய உத்திரவாதமும் இன்று இல்லை.

அதே சமயத்தில் உயர்ந்த குணங்கள் கொண்டு நாம் வாழ்ந்தாலும் நமது நல்ல பண்புகள் நமக்குள் நிலைத்திருக்குமா…? என்று பார்த்தால் “அதுவும் இல்லை…” என்ற நிலை தான் உள்ளது.

பண்பு கொண்டு வாழ வேண்டும் அன்புடன் வாழ வேண்டும் அரவணைத்து வாழவேண்டும் என்ற எண்ணங்களை மக்கள் எண்ணினாலும் வேதனை வேதனை என்று அதைத்தான் அதிகம் சுவாசிக்க நேருகின்றது.

சீரிய பண்பு கொண்டு வாழவேண்டுமென்று இருப்பினும் இன்று அத்தகைய பண்பு கொண்ட மனிதர்கள் அனைவரும் வேதனை வேதனை வேதனை என்ற உணர்வினையே சுவாசிக்க நேருகின்றது.

அந்தப் பண்பும் பரிவும் பாசமும் தன்னுடன் நிலைத்து இருப்பதில்லை…! அன்புடன் பண்புடன் பரிவுடன் பேசுபவர்கள் என்றால் ஏதோ கொஞ்சம் ஓரளவுக்கு வசதியாக இருப்பவர்கள் தான் அவ்வாறு பேசிக் கொள்வார்கள்.

ஆனாலு அப்படி வசதியாக இருப்பவர்கள் மற்றவர்கள் நன்றாக இருக்க வேண்டுமென்று எண்ணத்தில் உதவி செய்தாலும் அவர்கள் படும் வேதனை வேதனை என்ற சொல்லைக் கேட்டுக் கேட்டு அதை நுகர்ந்து அறியக்கூடிய நிலைகள் வருகின்றது.

ஆக… வேதனைப்படுத்துவோரைப் பார்த்து “இப்படி நடக்கின்றதே…!” என்று அந்த வேதனை உணர்வைத்தான் சுவாசிக்க நேருகின்றது. அதைத்தான் அதிகமாக நேசிக்க முடிகின்றது.

பத்திரிக்கைகளைப் படித்தாலே “உலகம் எங்கேயோ போய்க் கொண்டிருக்கின்றது…” நாம் எப்படி நாளை இங்கே வாழ முடியும்…? என்ற நிலைகள் வருகின்றது.

1.பத்திரிக்கையைப் பார்த்தாலே மனிதன் வேதனைப்படும் உணர்வே வருகின்றது
1.இந்த சகஜ வாழ்க்கையில் அன்பு கொண்ட உள்ளங்கள் அனைத்தும்
2.அரவணைக்கப்பட வேண்டுமென்ற உள்ளங்கள் அனைத்தும்
3.கடும் வேதனையைத்தான் அவர்கள் நுகர நேருகின்றது.
4.அந்த வேதனையைத்தான் அவர்கள் உடல்களில் உருவாக்க முடிகின்றது.

இதிலிருந்து விடுபட வேண்டாமா…? என்று சற்று சிந்தியுங்கள்.

Leave a Reply