தீமைகளை வென்றிடும் உணர்வுகளாக நம் உடலுக்குள் விளைந்த நல்ல குணங்களை நாம் பாதுகாத்தல் வேண்டும்

lord-velaudha murugan

தீமைகளை வென்றிடும் உணர்வுகளாக நம் உடலுக்குள் விளைந்த நல்ல குணங்களை நாம் பாதுகாத்தல் வேண்டும்

 

ஏனென்றால் நாம் தவறு செய்யவில்லை என்றாலும் மனித வாழ்க்கையில் பண்பும் அன்பும் பரிவு கொண்டு மனிதனுக்கு மனிதன் காத்திட வேண்டுமென்று நாம் செயல்படுகின்றோம்.

தீமைகளினால் மற்றவர்கள் சிரமப்படும்போது பண்பு கொண்ட நாம் அவர்களை அணுகி அவர்கள் படும் துயரத்தைக் கேட்டறிந்து அவருக்கு நன்மையும் செய்கின்றோம்.

இது மனிதனின் நற்குணங்களைக் காட்டுகின்றது.

மனிதனானபின் இப்படிப் பண்பும் பரிவும் கொண்டு பாசத்துடன் நாம் வாழ்ந்தாலும் பிறர் படும் துயரத்தையோ அல்லது பிறரைத் துயரப்படுத்தும் செயலைச் செயல்படுத்துவோரையோ அல்லது பிறரைத் துன்பப்படுத்தி மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்போரையோ நாம் உற்றுப் பார்க்க நேருகின்றது.

அப்பொழுது அதை நாம் நுகர்ந்து “பிறருக்குத் துன்பத்தைக் கொடுக்கின்றார்கள்…” என்பதை நாம் அறிந்தாலும் அந்த உணர்வுகள் நம் நல்ல குணத்துடன் இணைந்து விடுகின்றது.

ஆக அவர்கள் செய்யும் தவறுகள் நம் நல்ல குணத்தில் பட்டபின் என்ன ஆகிறது…?

உதாரணமாக நாம் கீழே விழுந்து விட்டால் நம்மை எழுந்திருக்க விடாது நம்மை ஒருவன் அடித்துக் கொண்டே இருப்பான் என்றால் எப்படி இருக்கும்…?

அதைப் போல் மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்களில் ஒரு மனிதன் வேதனைப்படுகின்றான் என்று பண்புடன் அன்புடன் பரிவுடன் நாம் பார்த்தோமென்றால்
1.நாம் இந்த இரண்டு குணங்களுடன் நுகரப்படும்போது
2.அவனுக்கு ஒருவன் தீமை செய்து கொண்டிருக்கின்றான் என்ற நிலை வந்தாலும்
3.நம் நல்ல அணுக்களில் இது பட்டபின் அது பலவீனமடைகின்றது.

ஒருவனைக் கீழே தள்ளி விட்டு நாம் மேலே ஏறி உட்கார்ந்தால் எப்படிப்பட்ட துன்பமோ இதைப்போல மனிதனை உருவாக்கிய இந்த நல்ல அணுக்கள் அது வேதனையுடன் துடிக்கத் தொடங்கிவிடும்.

1.இவ்வாறு நாம் வேதனையுடன் துடிக்கப்படும் போது
2.எழுந்திருக்க வேண்டும் என்று எண்ணினாலும் கீழே தள்ளும் நிலை போன்று தான் வரும்.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குத் தீங்கு செய்கின்றான் என்றால் அந்தத் தீங்கு செய்வோனை உற்றுப் பார்க்கின்றோம். அதனால் பாதிக்கப்படுபவன் பதறி அழுவதையும் பார்க்கின்றோம்.

அப்பொழுது அவனின் நல்ல குணங்களின் தன்மை கொண்டு நம் நல்ல குணங்களில் இணைக்கின்றது.

ஆனால் அதே சமயம் அந்த தீமை செய்வோன் தாக்கும் உணர்வுகளும்.. அதனால் அவன் பதறும் உணர்வுகளும்… இந்த இரண்டும் கலந்து இந்த உணர்வுகள் வெளிப்படுவதை நாம் நுகர்ந்து அறியும் போது நம் நல்ல குணங்களுடன் இந்த இரண்டுமே இணைந்து விடுகின்றது.

இது ஒரு சந்தர்ப்பமாக இருந்தாலும் அடுத்து ஒரு தரம் இதே போல் நடந்தால்…
1.நம்மை அறியாமலேயே என்ன உலகம்..? என்போம்…
2.எந்த நன்மையைச் செய்தாலும் இப்படி ஒரு உலகம் இருக்கின்றதே…! என்ற அந்த உணர்வுகள்
3.நல்லதைப் பேச விடாது தவறு செய்யும் உணர்வுகளையே நம்மைப் பேசவைத்து விடுகின்றது.

விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு டேப்பில் இனிமையான பாடலை ரெக்கார்டிங் செய்கிறோம் என்றால் அதிலே எதிர்மறையான ஒலிகளும் இடையிலே சேர்ந்து பதிவாகி விட்டால் நல்ல பாடலை இடைமறித்து அந்த இனிமையையே மாற்றி விடுகின்றது.

இதைப்போலத் தான் நாம் நுகரும் சந்தர்ப்பத்தில்… நமது உயிர் ஜீவ அணுவாக மாற்றிக் கொண்டிருக்கும் இவ்வேளையில்…
1.தீமை செய்வோனையும் தீமையில் சிக்குண்டவனையும் இந்த இரண்டு உணர்வையும் நாம் நுகரப்படும்போது
2.அவன் பதறுவதை இந்த உணர்வு வலு கொண்ட அணுவாக மாற்றுகின்றது.

அதே சமயத்தில் நல்ல குணம் கொண்டு நாம் உற்றுப் பார்க்கப்படும்போது அந்த நல்லவனுக்காக நம் எண்ணங்கள் பரிவுடன் சென்றாலும்… அவன் வேதனையாகப் பேசும் போது அவன் வேதனைப்படும் உணர்வுகள் எல்லாம் நம் நல்ல அணுக்களில் பதிந்து விடுகின்றது.

நாம் தவறு செய்யவில்லை. ஆனால்
1.நம் உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்கள்
2.நல்ல உணர்வுகளை உருவாக்கும் அந்த அணுக்கள் செயலிழக்கத் தொடங்கி விடுன்றது.

நம் நல்ல குணங்களுடன் இதைப் போன்ற தீமைகள் இணைந்து நமக்குள் பதிவாகாமல் தடுக்க வேண்டுமல்லவா…! தடுக்கவில்லை என்றால் நம் நல்ல குணங்கள் பலவீனமாகும்… நம்மை அறியாமல் பதட்டம் வரத் தான் செய்யும்.

Leave a Reply