பூமி வலு இழந்ததற்கும் காற்று மண்டலம் நஞ்சாக மாறியதற்கும் காரணம் என்ன…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

chinese food

பூமி வலு இழந்ததற்கும் காற்று மண்டலம் நஞ்சாக மாறியதற்கும் காரணம் என்ன…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

செயற்கையின் பாவத்தினால் வந்த வினையான தாவரங்களின் நிலையின் குறைவினால் இன்று இவ்வுலக நிலையே மாறும் தன்மைக்கு வந்துள்ளது.

தாவரங்களின் நற்பயனை அறிந்து சுவையுள்ள காய் கனி வர்க்கங்களும் தானிய வர்க்கங்களும் நாம் பெற்று இயற்கையின் அமுதைப் புசித்திட்ட உன்னத கால நிலை மாறி இன்றைய மனிதனின் உணவில் தன் இனத்திலிருந்து மாறுபட்ட ஜென்மம் சென்ற மற்ற ஜெந்து வர்க்கங்களைச் சமைத்து உண்ணும் நாகரிக நிலைக்குத் தன்னையே அடிமைப்படுத்தி வாழ்கின்றான் இன்றைய மனிதன்.

இவ்வுலகம் ஒன்றின்ன் சக்தியிலிருந்து ஒன்று சக்தி பெற்றுத்தான் வாழ்கிறது. ஒன்றை ஒன்று அழித்து ஒன்றின் சக்தியை ஒன்று பெற்றுத்தான் வாழும் சக்தியையே சக்தி நிலை நமக்கு அளித்துள்ளது.

அந்நிலையில் இதன் நிலையில் மட்டும் என்ன பாவம்…? என்பீர்.

மற்ற ஜெந்து வர்க்கங்கள் எப்படி உருவாகி வந்தன…? என்பதைத்தான் பாட நிலையில் உணர்த்தியுள்ளோம்.

இன்று இருக்கும் இவ்வுலக நிலையில்…
1.இவ்வுலகிலுள்ள பூமியிலுள்ள கனி வர்க்கங்களையும் தாவர வர்க்கங்களையும் நாம் சிதறவிட்டதனால்
2.(நாம் சிதறவிடவில்லை அதை எடுத்துப் பயன்படுத்தித்தான் கொண்டோம் என்பீர்)
3.நம் செயற்கையின் ஆசையினால் இவ்வுலகின் பொக்கிஷங்கள் குறைந்ததின் நிலையில்
4.மற்ற ஜெந்துக்கள் மனித வர்க்கம் முதற்கொண்டு அனைத்து ஜீவ ராசிகளும் மிகத் துரிதமாகப் பெருகியதன் நிலையில்
5.இம்மனிதனும் மற்ற ஜெந்துக்களும் இப்பூமியின் சக்தியை ஈர்த்து வாழ்வதினால்
6.இப்பூமியிலிருந்து மற்ற கனிவர்க்கங்கள் வளரும் நிலை குறைந்துவிட்டது.

இஜ்ஜீவ ஜெந்துக்கள் பெருகப் பெருக இன்னும் இவ்வுலக நிலையிலுள்ள சத்துத் தன்மை குறையும் நிலையில்தான் உள்ளது.

ஒரு ஜீவனை அழிப்பதினால் பல ஜீவன்கள் உற்பத்தியாகின்றன.

உங்கள் நினைவில் மண்ணில் புதைத்தால்தான் அவ்வுடலிலிருந்து பல உயிரணுக்கள் தோன்றுவதாக எண்ணுவீர். அப்படி அல்ல..!

1.மற்ற ஜீவ ஜெந்துக்களை நாம் சமைத்து உண்டு அதன் சக்தியைப் பெற்று
2.அதைக் கழிவாக வெளிப்படுத்தும் அக்கழிவில் இருந்தும்
3.எந்நிலைகொண்ட ஜீவ ஜெந்துவை உண்டு கழித்தோமோ அதன் நிலையிலிருந்து
4.அந்நரகமான அவ்வாடையிலிருந்து பல ஜீவ ஜெந்துக்கள் உயிர் பெறுகின்றன.

ஒன்றை அழித்துத்தான் ஒன்று சக்தி பெறுகின்றது. இஜ்ஜீவ ஜெந்துவின் பெருக்கத்திற்குக் காரணம்… ஆறறிவு படைத்த இம்மனிதனாலேதான் அனைத்துப் பெருக்கங்களும் வந்துள்ளன.

இன்று இவ்வுலகில் மனித இனத்தைக் (மக்கள் தொகையை) குறைக்கப் பார்க்கின்றான். ஒரு மனிதன் வாழும் காலத்தில் அவன் வாழ்க்கையில் அவன் எத்தனை குழந்தை பெறுகின்றானோ அவைதாம் அவனது பெருக்கம்.

ஆனால் இவ்வுடலை விட்டு அவனது ஆத்மா சென்ற பிறகு அவன் வாழ்ந்ததில் ஆசை வைத்து அவன் வாழ்ந்த காலத்தில் “அவன் பெற்ற இரத்தபந்தத்துடன் உள்ள குழந்தை வாழும் நாள் வரை…” அவனது ஆத்மா மறு ஜென்மத்திற்குச் செல்வதில்லை.

ஆனால் அவனின் உடலை அடக்கம் செய்த இடத்தில் அவன் உடலில் இருந்து பல உயிரணுக்கள் உயிர் பெற்று ஜென்மத்திற்கு வருகின்றன.
1.இம் மனிதனே மனித வர்க்கத்திற்கும் மிருக வர்க்கத்திற்கும்
2.மிருகத்திலிருந்து பல ஜெந்து வர்க்கங்களுக்கும் அடிகோலியாகின்றான்.

தாவர வர்க்கங்களின் உன்னத பொக்கிஷத்தைச் சிதற விட்டவனும் இவ்வாறறிவு என்னும் அறிவைப் பெற்ற ஆண்டவனின் அடிகோலிகள் என்று செப்பிடும் இம்மனிதனேதான்…!

Leave a Reply