மனிதனுடைய ஆணிவேர் அவன் ஆன்மாவுமல்ல… உடலுமல்ல… நாசி தான்… அவன் எடுக்கும் சுவாசம் தான்…! – ஈஸ்வரபட்டர்

breathing tap root

மனிதனுடைய ஆணிவேர் அவன் ஆன்மாவுமல்ல… உடலுமல்ல… நாசி தான்… அவன் எடுக்கும் சுவாசம் தான்…! – ஈஸ்வரபட்டர்

 

இவ்வுடல் பசிக்கு நாம் எப்படி உண்ணுகின்றோம்…?

பசித்ததும் புசிக்கின்றோம். புசித்த பிறகு அதன் நிலையை இவ்வுடல் ஏற்றதும் மறுபடியும் பசி வந்து புசிக்கும் பொழுது நாம் தான் புசித்து விட்டோமே இப்பொழுது எதற்காக…? என்று எண்ணுவதில்லை.

மறுபடியும் மறுபடியும் பசி வந்தால் புசித்துக் கொண்டே உள்ளோம்.
1.இவ்வுடல் பசிக்கு நாம் எடுக்கும் உணவு
2.நம் எண்ணப் பசியில் இருந்து வருவதுதான்
3.இவ்வெண்ணப்பசியே நாம் எடுக்கும் சுவாசநிலை கொண்டுதான் வருகின்றது.

இவ்வுடல் நாம் புசிக்கும் ஆகாரத்தை எந்நிலையில் ஏற்று வளர்கிறது…? நாம் உண்ணும் ஆகாரம் இவ்வுடலில் எத்தன்மையில் செயல்படுகின்றது…?

நாம் எண்ணுகின்றோம்…! நாம் உண்ணும் உணவெல்லாம் இவ்வுடலுக்குள் சென்று இரைப்பை ஏற்று அந்நிலையிலிருந்து சிறு குடல் பெருங்குடலுக்குச் சென்று ஜீரணித்து அந்நிலையிலிருந்து அவை இரத்தமாகவும் சிறு நீராகவும் மலமாகவும் பிரித்து இவ்வுடல் நிலை உள்ளதென்று…!

இவ்வுடலின் நிலை எந்நிலையில் உள்ளதென்று உணர்த்துகின்றோம் இப்பாட நிலையில். இ

தைப் படிப்பவரின் எண்ணத்தில் இதன் உண்மையினை அறிய வேண்டுமென்றால் (வினா எழுப்பினால்) இந்நிலையில் வந்து அவர்கள் கேட்டிடலாம். நாம் ஏற்கும் உணவு இவ்வுடல் எந்நிலையில் ஏற்கிறது…?

நாம் எந்த ஆகாரத்தை உண்ணும் பொழுதும்…
1.இக் கையான காந்த சக்தி கொண்ட ஈர்ப்பு நிலை கொண்ட இக்கையினால் நாம் எடுத்துப் புசிக்கும் பொழுதே
2.அவ்வாகாரம் நம் வாய்க்குச் செலுத்துவதற்கு முன் நம் சுவாசத்திற்கு அதன் மணம் ஈர்க்கின்றது.

ஈர்க்கும் நிலையில்… நம் உடலுக்குள் சென்ற அவ்வாகரமும் நம் வாயில் உள்ள பொழுதே… நம் சுவாசம் ஈர்த்த நிலையில் “நம் வாயிலிருந்து உமிழ் நீர் சுரக்கிறது…!”

அவ்வுமிழ்நீர் அவ்வாகாரத்தில் பட்டு…
1.அவ்வாகரத்திலுள்ள சத்தையும் சேர்த்து ஆவியாகி
2.அவ்வாவியே அமிலமாகி நம் உடலில் எல்லாப் பாகங்களுக்கும் சென்று
3.அவ்வாகாரத்திலுள்ள ஆவியான சத்துள்ள அமிலம் நம் இரத்த நாளங்களில் கலக்கின்றது.

நாம் உண்ணும் உணவு எல்லாமே நம் சுவாசம் ஏற்றுத்தான் அவ்வுமிழ்நீர் என்னும் நீர் சுரந்து அதிலிருந்து செயல்படுவதுதான் இவ்வுடலமைப்பே…!

மரம்… செடி… கொடி… இவ்வுலகம்… இவ்வுலகைப்போல் பல உலகங்கள் எல்லாவற்றுக்குமே “ஆணிவேர்…” உண்டு. அதைப்போல் இம் மனிதனுக்கு எது ஆணிவேர்…? இம்மனிதனுக்கு மற்றுமல்ல மற்ற ஜெந்துகளுக்கும் எது ஆணிவேர்…?

1.இம்மனிதனின் ஆணிவேர் அவன் ஆத்மாவுமல்ல… அவன் உடலுமல்ல.
2.அவன் எடுக்கும் சுவாசம் தான்… இந்நாசி தான் மனிதனுக்கு ஆணிவேர்
3.இவ்வாணிவேரில் மாற்றம் வந்தால்… அனைத்து நிலையுமே மனிதனுக்கு மாற்றம்தான்.
எடுக்கும் சுவாச நிலைகொண்டு அவ்வெண்ணத்தில் எண்ணுவதின் நிலை கொண்டுதான் அவன் உடல் நிலையே உள்ளது.., வாழ்க்கை நிலையும்தான்…!

உடல் பசிக்கு உண்டதை நினைத்திடாமல் “பசி வரும் பொழுதெல்லாம் எப்படி உண்ணுகின்றோமோ…” அதைப்போல்
1.இவ்வெண்ணத்தை நடத்தவற்றை நினைவுகூர்ந்தே பின் நோக்கிச் செலுத்திடாமல்
2.இவ்வெண்ணப் பசியை நடப்பவற்றைச் செயலாக்கும் நிலையிலேயே நல் நிலைப்படுத்தி வாழுங்கள்.

பசிக்கும் பொழுது புசிக்கும் நிறைவைப் போல் எப்படிப் பசிக்கும் பொழுது அந்த நேரத்தில் நாம் புசிக்கும் நிலை மட்டும்தான் அந்நிலையில் செயலாக்குகின்றோம்.

அதாஅது இப்பொழுது பசிக்கும் பொழுது அந்த நேரத்தில் நாம் புசிக்கும் நிலையை மட்டும்தான் அந்நிலையில் செயலாக்குகின்றோம். இப்பொழுது பசிக்கும் பொழுது இப்பொழுதே சாப்பிடாமல் பிறகு வரும் பசிக்கு என்ன செய்வது…? என்று இவ்வுடல் எண்ணுவதில்லை.

அதைப்போல் நடந்தவற்றையும் நடக்கப் போவதையும் கனவான கற்பனைப்படுத்தி கால நிலையை விரயம் செய்திடாமல்… ஆண்டவன் தந்த கால நிலையில் இவ்வுடல் என்னும் பொக்கிஷத்தை உயர்ந்த தெய்வமான இவ்வாத்மாவின் செயலினால் இக்காலத்தை விரயமாக்கிடாமல்…
1.ஒவ்வொரு நொடியையும் அத்தெய்வத்தின் சேவகனாய் நம் எண்ணத்தைச் செயல்படுத்தி
2.தெய்வமுடன் தெய்வமாக… தெய்வீக வாழ்க்கையில் தேவனாய் வாழ்கின்றோம்…! என்ற நிலைப்படுத்தி ஒவ்வொருவரும் வாழ்ந்திடுங்கள்.

இக்காற்றினில்தான் அனைத்து சக்தியும் கலந்துள்ளன. அனைத்து சக்திகளின் கலவைதான் நம் உடலும்.

இவ்வுடலின் உண்மை மகத்துவத்தை உணர்ந்து… நாமும் தெய்வத்துடன் தெய்வமாக சூட்சுமம் கொண்டு வாழ்பவர்களுடன் “இவ்வுடலில் நாம் உள்ள நிலையிலேயே கலந்து வாழ்வதற்குத்தான்…” இப்பாட நிலையின் உண்மை நிலை.

Leave a Reply