புருவ மத்தியில் நிலை நிறுத்த வேண்டியது எதை…?

point to point north stars

புருவ மத்தியில் நிலை நிறுத்த வேண்டியது எதை…?

குழம்பு வைக்கத் தெரிந்தவரிடம் குழம்பிற்குண்டான சரக்குகளை எடுத்து மொத்தமாகக் கொடுத்தால் அதைப் பழகியவர் என்ன செய்வார்…? எதை எதை எந்தெந்த அளவு போட்டால் அது ருசியாக வரும் என்று அதைப் போட்டுச் சமைப்பார்.

ஆனால் தெரியாதவர் கையில் கொடுத்தால் என்ன செய்வார்…? இதிலேயும்… அதிலேயும்… என்று மொத்தமாக கொட்டி இப்படித்தான் குழம்பிலே போடச் சொன்னார்கள்…! என்று மொத்தமாகப் போட்டால் என்ன ஆகும்…? எது அதிகமோ அதன் சுவையாக மாற்றிவிடும்.

இதைப் போலத் தான் இன்றைய சகஜ வாழ்க்கையில்
1.தீமையை அகற்றும் நிலையோ…
2.பகைமை உணர்வு நமக்குள் வராது தடுக்கும் நிலையோ இல்லாது
3.அருள் ஞானியின் உணர்வை நமக்குள் பெருக்காத நிலையோ தான் வருகின்றது.

இப்பொழுது நாம் என்ன செய்கின்றோம்..?

ஈஸ்வரா… இப்படி நோய் வந்து விட்டதே… இவருக்கு இப்படி ஆகி விட்டதே…! என்று சொல்லிவிட்டு
1.துருவ நட்சத்திரத்தையும் எண்ணி விட்டு
2.இவரை எண்ணி வேதனைப்பட்ட்டு இந்த இரண்டையும் கலந்தால் என்ன செய்யும்…?

வேதனை என்ற உணர்வே வலுப் பெறுகிறது. அப்பொழுது அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் பெறாது தடைப்படுத்துகின்றது. ஆகவே இந்த வேதனை உணர்வு தான் வரும்.

இதைச் சீராக்கும் வழி என்ன…?

வேதனையை நுகர்ந்தால்..

அடுத்த கணமே கண்ணின் நினைவு கொண்டு
1.ஈஸ்வரா… என்று உங்கள் உயிரைப் புருவ மத்தியில் எண்ணுங்கள்
2.அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் ஈஸ்வரா.. என்று ஏங்கி அங்கே “நிலை நிறுத்துங்கள்…”
3.கண்கள் + துருவ நட்சத்திரம் + புருவ மத்தி.. இந்த மூன்றையும் சேர்த்து ஒரு இரண்டு நிமிடம் நிலை நிறுத்தினால்…
4.அந்த வேதனை என்ற உணர்வு உட்புகாது நின்றுவிடும்.

நாம் ஈர்க்கத் தவறிய வேதனைகளைச் சூரியனின் காந்த சக்தி இழுத்துக் கவர்ந்து சென்று விடும்.

நம் உடலுக்குள் போகவில்லை என்றால் அந்த வேதனை என்ற உணர்ச்சிகள் நமக்குள் வராது… வேதனை என்ற அணுவும் நமக்குள் உருவாகாது.;; வேதனையை உருவாக்கும் அணுவின் தன்மை கருவாகவும் ஆகாது…!

ஆகவே நாம் இதைத்தான் அந்த நேரத்தில் நாம் விழித்திருத்தல் வேண்டும் என்று சொல்வது.
1.எப்போதுமே பிறருக்கு நன்மை செய்தாலும்
2.அந்த தீமைகள் நமக்குள் புகாது பாதுகாத்தல் வேண்டும்…!

Leave a Reply