நஞ்சு சாகாக்கலை கொண்டது என்று சொல்வதன் பொருள் என்ன…?

Soul lights

நஞ்சு சாகாக்கலை கொண்டது என்று சொல்வதன் பொருள் என்ன…?

 

பாம்பு ஒரு தவளையைக் கொத்தி அதிலே தன் விஷத்தைப் பாய்ச்சி விழுங்கி அதனை உணவாக உட்கொள்கின்றது.

இதே போன்று தான் வலுக்கொண்ட நிலைகள் கொண்டோர் பிறர் துன்பப்படுவதைக் கண்டு சிலர் ரசிப்பார்கள். யாரொருவர் பிறர் வேதனைப்படுவதைக் கண்டு ரசிக்கின்றார்களோ அது எல்லாம் பாம்பு நஞ்சைப் பாய்ச்சி மற்ற உயிரினங்களை விழுங்குவது போன்றது தான்.

ஏனென்றால் நஞ்சின் தன்மை கொண்டு அதை விழுங்கி இருந்தாலும் நஞ்சு என்பது சாகாக்கலை கொண்டது.
1.அதாவது எதிலே எப்படிச் சென்றாலும் அந்த நஞ்சை வீழ்த்திட உங்களால் ஆகாது
2.எதனுடன் கலந்தாலும் நஞ்சின் தன்மை அது அடக்கும் சக்தியாகத் தான் வரும்.

உதாரணமாக ஒரு குடம் பாலுக்குள் ஒரு துளி விஷம் பட்டால் அதைப் பிரித்திட முடியாது. அந்த ஒரு குடம் பாலையும் தன் இனத்தால் நஞ்சாக மாற்றி அதைச் சாகாக்கலையாக ஆக்கிவிடும். ஆனால் அதே சமயம்
1.நஞ்சு கலந்த அந்த ஒரு குடம் பாலுக்குள் பல ஆயிரம் குடம் பாலை விடும்போது
2.இதனின் சக்தி ஓங்கி நஞ்சின் தன்மை சிறுத்து அது ஆக்கச் சக்தியான வலுவை ஊட்டும்.

நோய்களை நீக்க மருந்தை உட்கொண்டாலும் அதற்குள் வீரியத் துடிப்பான நஞ்சைக் கலக்கித் தான் உங்களுக்குள் நோயினை நீக்கக் கொடுப்பார்கள்.

ஓர் உணர்வின் சக்தி கொண்டு நமக்குள் நோயாக ஆனாலும் அந்த நோயினை நீக்கிட அந்த மருந்துக்குள் நஞ்சினைப் பாய்ச்சி
1.நோயை எதிர்த்திடும் இந்த உணர்வின் மணத்தால்
2.நஞ்சு வீரிய உணர்வு கொண்டு செல்லும்போது “அது ஊடுருவி”
3.எங்கே வேதனை உணர்வு இருக்கின்றதோ அதனின் செயலை இந்த மணம் ஊடுருவி வேகமாகச் சென்று அதை அடக்கும்.

வைத்திய ரீதியிலே விஞ்ஞான அறிவு கொண்டாலும் இப்படித்தான் செயல்படுத்துகின்றார்கள்.

உதாரணமாக சர்க்கரை வியாதி அதிகமாக இருக்கின்றது என்றால் இன்சுலினை இஞ்செக்ஷன் செய்து அந்தச் சர்க்கரைச் சத்தை அடக்கிடும் உணர்வாகச் செய்வார்கள்.

சிறுகச் சிறுக இது ஒரு பழக்கமாக்கி விட்டால் இந்த இன்சுலின் இல்லையென்றால் அடுத்து நீங்கள் எந்த மருந்து போட்டாலும் அது ஆகாது.

பின்… நமக்குள் அது மாற்ற முடியாத நிலைகளும் ஒவ்வொரு நாளும் நரக வேதனையில் நமக்கு நாமே குத்திக் கொண்டு அதைக் குறைத்திடும் நிலைகள் வரும்.

முதலில் சிறுகச் சர்க்கரைச் சத்தாகத் தான் வரும். அதை அடக்க சிறிதளவு மருந்தைக் கொடுப்பார்கள். இதை உட்கொண்டாலும் சிறுகச் சிறுகச் சேர்க்க சர்க்கரை மருந்தின் அளவு கூடும்.

கடைசியில் முடியாத நிலைகளில் எல்லாம் சேர்ந்து நரம்புகள் தளர்ச்சி ஆகும். நாம் எடுக்கும் உணர்வின் நிலையில் சர்க்கரையை ஜீரணிக்க முடியாத நிலைகள் ஆகும்.

தளர்ச்சியானபின் இதனுடைய நிலைகள் துவண்டு விடும். இந்த நிலை வரும் போது தான் இன்சுலினை இஞ்செக்சனாகக் கொடுப்பார்கள்.

அதுவும் நாளடைவில் கூடிக் கூடி வீரிய உணர்வு கொண்டு நம் உடலில் இரத்தத்தில் வரும் அசுத்தங்களை வடிகட்டும் கிட்னி… கல்லீரல் போன்ற உறுப்புகளைப் பாதிக்கும் தன்மை வருகின்றது

ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

மனிதனாக நல்ல முறையில் வாழ வேண்டுமென்று தான் எல்லாம் செய்கின்றோம். இத்தகைய நோய் வந்த பின் நம்மிடம் இருக்கும் பணத்தைக் கொண்டு நோயின் வீரியத்தை மாற்றிக் கொள்கின்றோம்.

இருந்தாலும் உடலில் சேர்த்துக் கொண்ட நஞ்சின் தன்மை நமக்குள் சிறுகச் சிறுகச் சேர்ந்து விடுகின்றது.
1.நான் நல்லதைச் செய்தேன்… எனக்கு இப்படி வந்துவிட்டதே
2.இவ்வளவு செல்வத்தைச் சேர்த்தேன்… இப்படி ஆகிவிட்டதே என்ற நிலை வருகின்றது.

அதுமட்டுமல்ல.. உடல் மிகவும் நலிவடைந்து வரப்படும்போது நம்மிடம் கடன் வாங்கியன் பணத்தைச் சரியாகத் திருப்பிக் கொடுக்கவில்லை என்றால்… அடப்பாவி…! என்று அவன் மேல் எண்ணத்தை பதிவு செய்து
1.நான் இவ்வளவு சிரமப்பட்டு கொண்டிருக்கின்றேன்..
2.எனக்குப் பணம் தரமாட்டேன் என்கின்றானே என்ற நிலையில் அவன் உணர்வை வளர்த்துக் கொண்டால்
3.இந்த உடலைவிட்டு சென்றபின் அவன் உடலுக்குள் நாம் செல்வதற்குத் தயாராகி விடுகின்றோம்.

இதே வேதனை உணர்வுகள் வீரியமாகி இந்த உடலை விட்டு நாம் அங்கே சென்றபின் அந்த உடலுக்குள் போனபின் இதே இன்சுலினை அங்கே குத்தும்படியாக அங்கேயும் இதே சர்க்கரை நோயாகி விடும்.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு இந்த உடலுக்குப் பின் நம் நிலை என்ன…? என்று சிந்தித்து அதன் வழி மெய் ஞானிகள் காட்டிய அருள் வழி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

Leave a Reply