தியானத்தின் மூலம் நாம் எடுத்துப் பாய்ச்சும் மகரிஷிகள் அருள் சக்தியின் வலு எப்படிப்பட்டது…? நடந்த நிகழ்ச்சி

Gnanaguru Blessings

தியானத்தின் மூலம் நாம் எடுத்துப் பாய்ச்சும் மகரிஷிகள் அருள் சக்தியின் வலு எப்படிப்பட்டது…? நடந்த நிகழ்ச்சி

வட இந்தியாவில் ஒரு சமயம் நானும் (ஞானகுரு) குருநாதரும் (ஈஸ்வரபட்டரும்) போய்க் கொண்டிருக்கின்றோம். அப்பொழுது குருநாதர் என்னிடம் காண்பிக்கின்றார்.

ஒரு கூனி இப்படி நடந்து போகின்றான் பார். அவன் கூனியாக (முதுகு வளைந்து) இருக்கின்றான். அவனுடைய சந்தர்ப்பத்தை இப்பொழுது பார்..! என்கின்றார்.

வெகு காலமாக இவன் இப்படிக் கூனிக் கொண்டே போய்க் கொண்டிருக்கின்றான். சிறு பிள்ளையிலேயே இவனுக்கு இப்படி ஏற்பட்டு விட்டது. அதிலிருந்து வளர்ச்சியாகி… வளர்ச்சியாகி… அது அவனை வளர விடாமல்… நிமிர முடியாமல்.. இந்த நிலையில் இருக்கின்றது

அவன் குனிந்து கொண்டே போகின்றான். அவனுடைய சந்தர்ப்பம் நீயும் நானும் அவனைப் பார்க்க வேண்டிய சந்தர்ப்பம் கிடைத்தது. அவனுக்கு ஒரு அதிர்ஷ்டம் வந்திருக்கின்றது.. இப்பொழுது பார்…! என்று சொல்கிறார் குருநாதர்.

என்ன சாமி அதிர்ஷ்டம்…? அவன் வேதனைப்பட்டுக் கொண்டல்லவா போகின்றான்…! என்றேன் நான்.

அவன் முதுகுத் தண்டிலே இங்கே உன் கண்ணிலிருந்து நீ அலைகளைப் பாய்ச்சுடா…! என்கின்றார். குருநாதரும் அவனப் பார்க்கின்றார்

உடனே அவனுக்கு அங்கே முதுகிலே அரிப்பு ஆகின்றது. அரிப்பு ஆனவுடனே அவன் என்ன செய்கின்றான்…?

அங்கே ஒரு தூணிலே போய்ச் சாய்ந்து கொண்டு முதுகை வைத்துத் தேய்.. தேய்… என்று தேய்க்கின்றான். தேய்த்ததும் நெடு…நெடு.. என்று நிமிர்ந்து விட்டான்.

ஏனென்றால் இந்த உணர்வுகள் அங்கே பரிட்சைக்குப் பார்க்கப்படும்போது அவன் முதுகுத் தண்டில் பார்த்தவுடனே அவனுக்கு அரிக்கின்றது. அப்பொழுது அதைத் தாங்க முடியவில்லை என்று தூணிலே போய்த் தேய்க்கின்றான்.

அதைப் பார்த்ததும் அங்கே இருக்கின்றவர்கள் ஏனப்பா இப்படி…? என்று கேட்கிறார்கள்.

இல்லைங்க… என்னால் அரிப்பு தாங்க முடியவில்லை… என்று சொல்லிவிட்டுத் தூணிலே சொறிந்து கொள்கிறான். நெடு…நெடு.. என்று நிமிர்ந்து விடுகின்றான். இது நடந்த நிகழ்ச்சி…. அவனுடைய சந்தர்ப்பம்…!

1.ஏனென்றால்… அவனை உற்றுப் பார்த்து
2.இந்த உணர்வின் தன்மையை அவன் பெற வேண்டுமென்ற உணர்வைப் பார்க்கப்படும்போது…
3.முதுகு தண்டில் அரிப்புக் கொடுக்கும்போது…
4.இந்தச் சந்தர்ப்பம் அது புற நிலைகளில் இருந்து தாக்கப்படுகின்றது.

உன் பார்வை அவன் மீது பட்டதும் அரிப்பு ஆகி உடனே தேய்க்க ஆரம்பித்து விடுகிறான்… அப்படியே அந்தப் பிடிப்பு விடுகின்றது…! என்று என்னிடம் உணர்த்துகின்றார் குருநாதர்

அவன் சிறு குழந்தையாக இருக்கும் போது “அச்…ச்..” என்று தும்முகின்றான் இரண்டு நரம்பு பிடித்துக் கொள்கின்றது. முதுகை வளைய விடாதபடி செய்கிறது. நிமிர்ந்தால் வலிக்கின்றது.

இப்படியே அந்தக் குழந்தையிலிருந்து வளர்த்து வளர்த்து யாரும் ஒன்றும் செய்யாததனால் அவன் முதுகுத் தண்டு அப்படியே இறுகிப் போய் விட்டது.

அவன் சந்தர்ப்பம் இப்பொழுது அரிக்கப்படும்போது…
1.உணர்வுகள் வேகம் அந்த வாடிய உணர்வுகள் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
2.அந்தப் பிடிப்பு அகன்றது. அவன் முதுகு நேராகி விட்டது.

ஆனால் இதை எல்லாம் அவனிடம் சொல்லாமல் நானும் குருநாதரும் அப்படியே சென்று விட்டோம். குருநாதருடன் யாம் இப்படிச் சுற்றி வரப்படும் பொழுது சந்தர்ப்பம்… சில பேருக்கு ஆச்சரியப்படும் அளவிற்கு இப்படி நல்லதாகின்றது.

ஆகவே… ஒவ்வொரு நிமிடமும் நாம் வலுவைக் ஊட்டிக் கொள்ள வேண்டும். நாம் எண்ணியது எதுவோ அதைத் தான் நம் உயிர் உருவாக்குகின்றது.

குழந்தைகளுக்கு இது மாதிரியான குறைகள் வந்தால் உடனே நாம் மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெற வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சிப் பழகுதல் வேண்டும்.

அதாவது சில குழந்தைகளுக்கு ஊனக் குறைவோ… சிந்தனை இல்லாதோ.. மூளை வளர்ச்சி இல்லாமலோ… இருக்கும். மேலே சொன்ன மாதிரி எண்ணி அந்த மகரிஷிகளின் சக்தியை நமக்குள் வளர்த்துக் கொண்டபின் அதை அவர்களுக்குப் பாச்சுதல் வேண்டும்.

நம்மில் கரு உண்டானதுதான் அந்தக் குழந்தைகள். இதைப்போல அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டுமென்ற உணர்வினைக் கூட்டி
1.எங்கள் குழந்தை மகரிஷிகள் உணர்வுகள் பெற வேண்டும்.
2.அது சிந்தனையை வளர்ச்சி பெற வேண்டும்.
3.ஞானத்தின் தன்மை குழந்தையிடம் வளர வேண்டும் என்ற இந்த எண்ணத்தை வலுவாக்கிவிட வேண்டும்.

வலுவாக்கிய சக்திகளை குழந்தைகளுக்கு ஒவ்வொரு நொடியும் உணவு கொடுக்கும் போது இது மாதிரிச் செய்யலாம். அதை தலை வாறும்போது இதைப் போலச் செய்யலாம். அதை பார்க்கும் போதெல்லாம் இந்த நிலை வளர வேண்டும் என்று இந்த உணர்வைப் பாய்ச்சிப் பாருங்கள்.

இதைப் போன்று எண்ணும்போது இந்த உணர்வுகள் நம் குழந்தையைப் பற்றி நமக்குள் மன வலுப் பெறச் செய்வதும் நாம் பாய்ச்சும் அலைகள் குழந்தையின் மேல் படரப் போகும்போது நலமாகும் சந்தர்ப்பத்தை அது உருவாக்கும்.

ஏனென்றால் இவ்வாறு எண்ணிய உணர்வுகள் செயல்படும்போது இது கடவுளாகின்றது. செய்து பாருங்கள்…!

 

Leave a Reply