மகரிஷிகளின் அருளுடன்… மகரிஷிகளின் உணர்வை நமக்குள் புகுத்தி… மகரிஷிகளுடன் இணைந்து இருப்பதே மேல்…!

Sages world - agastyar

மகரிஷிகளின் அருளுடன்… மகரிஷிகளின் உணர்வை நமக்குள் புகுத்தி… மகரிஷிகளுடன் இணைந்து இருப்பதே மேல்…!

நம் உயிருடைய வேலை அது நெருப்பிற்குச் சமம் தான். அதிலே எப்பொருளைப் போட்டு நாம் கலக்கின்றோமோ அதிலே வேக வைத்த பொருளின் மணம்… சுவை… வருவது போல
1.நம் உயிரின் தன்மை நாம் நுகர்ந்தது எதுவோ
2.அதனின் உயிர் அணுக்களாக மாற்றி அது படைத்துவிடுகின்றது.

எதனின் உணர்வின் தன்மையோ அதை நாம் கண்ணால் பார்க்கும்போது உணர்வால் நுகரும் தன்மை வருகின்றது. எதனின் உணர்வைத் தனக்குள் எடுக்கின்றோமோ அந்த உணர்வின் நிலையாக உடலின் அமைப்பு வருகின்றது.

நாம் எதனின் நிலைகளை உற்று நோக்கி… அந்த உணர்வின் தன்மை பெற வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் சத்தை நமக்குள் பதிவாக்கி அதனின் கணக்கின் பிரகாரமே அடுத்த நிலை.

ஆகவ… அந்த மெய்ஞானியின் உணர்வு கொண்டு
1.நாம் என்றும் பிறவியில்லா நிலை என்னும் நிலையை
2.அவன் அருளுடன்… அவன் உணர்வை நமக்குள் புகுத்தி… அவனுடன் இணைந்து இருப்பதே மேல்…!

அவனுடன் இணைந்து இருக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்…?

உங்கள் வாழ்க்கையில் வரும் எத்தனையோ இடையூறுக்கு மத்தியில் அந்த மகரிஷிகளின் உனர்வை இணைத்து இணைத்து அந்த அருள் ஞானிகளின் உணர்வை யாம் கொடுக்கின்றோம்.

தாவர இனங்களுக்கு ஊட்டம் கொடுக்கும் பொழுது முதலில் ஒரு முறை கொடுக்கின்றோம். ஒரு முறை எடுத்துக் கொண்ட பின் அடுத்த முறை தாவர இனத்தைப் புதுப்பிக்கின்றோம்.

அப்படி… அதற்குத் தக்கவாறு அதனுடன் இணைத்துக் கொண்டு தான் புது வித்தின் தன்மையாக மாற்ற முடியும்.
1.ஏனென்றால் ஒரு வித்தின் தன்மை எடுத்த பின் நேரடியாக அதை மாற்றிக் கொண்டு வர முடியாது.
2.அதனைப் பல முறைகள் கொண்டு சிறுகச் சிறுக இணைத்து இணைத்து
3.அதை மாற்றுப் பொருளாக உருவாக்கி உருவாக்கி இதை சீராக ஒன்றிணைக்கும் நிலைகள் கொண்டுதான் மாற்ற முடியும்.

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால்…
1.நமக்குள் வேதனைப்படும் உணர்வுகள் ஏராளம் ஏராளம்.
2.பகைமையான உணர்வுகளை வளர்த்துக் கொண்ட வித்துகள் ஏராளம் ஏராளம்.
3.தன்னைக் காக்க தான் எடுத்துக் கொண்ட கோபத்தின் தன்மை ஏராளம் ஏராளம்.

இதைப்போல நமக்குள் வித்துகள் அதிகமாக பெருக்கி இருக்கும் வேலையில்… இவை அனைத்தும் ஒருக்கிணைந்து….. இதையெல்லாம் இணைத்து… அரவணைத்து… அதை அடக்கி…
1.உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிய… அருள் ஞானியின் உணர்வின் தன்மை கொண்டுதான்..
2.உங்களில் இணைந்து வரும் குணத்துடன் இணைத்து இணைத்து
3.அந்த உணர்வின் தன்மை இரண்டு முறை மூன்று முறை இதைப் போன்று பிணைத்து
4.இந்த உணர்வின் தன்மை உங்கள் குணத்துடன் ஒன்றச் செய்து
5.நினைவு கொண்டு நீங்கள் பெறும் ஆற்றல் பெற அந்தத் தகுதியைப் பெறச் செய்ய வேண்டும் (எம்முடைய வேலை)

அது அல்லாது செய்தோம் என்றால் வெறும் பாடப் புத்தகங்களை படித்துவிட்டு ஆகா…! நன்றாக இருக்கிறது என்ற நிலைகள் கொண்டு தூக்கி எறிவது போன்று ஆகிவிடும். அடுத்த நினைவுகள் வராது…!

ஆகையினால்… எந்த மெய் ஞானிகளின் உணர்வின் தன்மையை உங்களுக்குள் பதிவு செய்கின்றோமோ அந்தப் பதிவின் நினைவாற்றல் உங்களுக்குள் ஓங்கி வளர வேண்டும்

இதைப் படிப்பவர் அனைவரும் இதை மனதில் பதிவு செய்யுங்கள்….!

உங்களுக்கு எது சொந்தம்…? அருள் மகரிஷிகளின் உணர்வை உங்களுக்குள் பெருக்குங்கள். இந்த வாழ்க்கையில் அதைச் சொந்தமாக்குங்கள்.

1.அதே சமயத்தில் இந்த வாழ்க்கையில் வந்த பிறருடைய குறைகளைச சொந்தமாக்க வேண்டாம்.
2.அந்தச் சொந்தத்தை நீங்கள் கொண்டாடவும் வேண்டாம்.

அந்தச் சொந்தத்தைக் கொண்டாடி விட்டால் பகைமை உணர்வு கொண்டு எந்தக் கூட்டத்திற்குச் சென்றாலும். அதனின் இனப் பெருக்கமாக மாறிவிடும்.

நமக்குள் இருக்கும் உணர்வுகள் அனைத்தும் எதனை எடுக்கின்றோமோ உணர்வின் செல்களாகத் தான் பெருகும்.

மான் அதனின் கூட்டமைப்பாக வாழ்கின்றது. அதே சமயம் மற்ற மான்களின் குணங்களுக்கொப்ப வகை வகையான மான்கள் வருகின்றது. பல வகைகள் இருந்தாலும் அதனதன் கூட்டம் அதோடு சேர்ந்து விடுகின்றது.

இதைப் போலத்தான் இந்த உடலுக்குள் எந்தக் குணத்தின் பெருக்கத்தை அதிகமாகக் கொண்டாருகின்றோமோ நம் உடலுக்குள் இருக்கும் உணர்வுகள் அனைத்தும் அந்த உணர்வின் தன்மையாக மாறிவிடும்.

அப்படி மாறினால்… அதனுடைய கூட்டமைப்பான நிலைகள் கொண்டு அதனுடைய கூட்டமைப்பு எங்கே வாழுகின்றதோ…
1.அங்கே நம் உயிரான்மா சென்று
2.அந்தக் கூட்டமைப்புக்குள் சுற்றி
3.அதனின் உணர்வுக்குள் நுழைந்து
4.அந்த உணர்வின் ஆற்றலாக உடலை மாற்றிவிடும்.

ஆகவே இதையெல்லாம் தெரிந்தே சொல்கின்றேன். பாடப் புத்தகத்தைப் படித்து விட்டு உங்களிடம் பாடவில்லை.. எனக்குக் கூடுவிட்டு கூடு பாயும் வித்தைகளையும் சொல்லிக் கொடுத்தார் குருநாதர்.

ஏனென்றால் குருநாதர் எம்மை மாட்டுக்குள்ளும் புகுரச் செய்தார்… பாம்புக்குள்ளும் போகச் சொன்னார்… யானைக்குள்ளும் போகச் சொன்னார்… அதை எவ்வாறெல்லாம் பெற வேண்டுமென்று…!

இதை எல்லாம் உங்களிடம் எளிதில் சொல்லவில்லை…! முன்னாடி சொல்லியிருக்க மாட்டேன்…!

வித்தை எல்லாம் தெரிந்து கொண்டு தான் அதற்குள் போகின்றேன். அப்பொழுது அந்த உணர்வின் தன்மை பெருகி விட்டால் ஆன்மாவின் தன்மை எப்படி ஆகும்…?
1.அதற்கு முன்னாடியே குருநாதர் என்னை கைவல்யம் செய்து
2.எப்பொழுதுமே கைப் பிடித்து வைத்திருந்தார்.

ஆகவே இதைப்போல அந்த உணர்வை இயக்கச் செய்து உணர்வின் தன்மை கவர்ந்து கொண்ட பின் இந்த உணர்வின் ஆன்மா இந்த உடலை விட்டுச் சென்ற பின்
1.அதிலே எது பெருகுகின்றது…?
2.எதனின் உடலில் ஆன்மாவை அழைக்கின்றது…?
3.மனித உடலில் பெருகிய பின் அந்த உடலுக்குள் போய் எப்படி இயக்குகின்றது..?
4.மீண்டும் நீ வெளிவர வேண்டும் என்றால் என்ன செய்வது…?

மனிதனின் உடலில் இது உருவாக்கப்படும் பொழுது இந்த உணர்வின் தன்மை கொண்டு அடுத்த பிறவி எப்படி வருகின்றது…?.என்று தெளிவாக்கினார் குருநாடதர்

இதுதான் கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை…!

 

Leave a Reply