உடலைக் காக்கும் மருத்துவர்கள் போல் தான் “உயிரான்மாவை ஞானிகளும் காத்தார்கள்…!” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

nadi chakkar cleanings

உடலைக் காக்கும் மருத்துவர்கள் போல் தான் “உயிரான்மாவை ஞானிகளும் காத்தார்கள்…!” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

எல்லாமில் எல்லாமாய் உள்ள “இறை சக்தி” பொதுவான சக்தியாய்ச் செயல் கொள்ளும் தன்மைக்கு அவரவர்களின் எண்ணச் செயலை ஒவ்வொரு சாராரும் தன் எண்ணத்திற்குகந்த செயலைச் செய்விக்கத் தெய்வத்தின் துணையை நாடுகின்றனர்.

தெய்வத்தின் துணையை எப்படி அவரவர்கள் பெறுகின்றனர்…?

மருத்துவர் தன் மருத்துவத்தில் கற்ற செயலுக்காகவும்… தன் ஜீவாதாரப் பொருளுக்காகவும்… தான் கற்ற மருத்துவத் தொழிலுக்காக வியாதியஸ்தன் வரவேண்டும் என்று எண்ணுபவனும் உண்டு.

தன் தொழில் நடக்க வேண்டும் என்று எண்ணுவதே தன் சுயநல வளர்ப்பிற்காகத்தான்…!

வியாதியஸ்தன் தன் வியாதியைக் குணமாக்க தெய்வத்திடம் எண்ணத்தைச் செலுத்துகின்றான்.
1.வைத்தியனும் இறைவனை வேண்டுகின்றான் (தன் வருவாய்க்காக)
2.வியாதியஸ்தனும் இறைவனை வேண்டுகின்றான் (தன் வியாதி நீங்க)

இந்த இரு சாரரில் யாருக்கு அந்த இறைவன் சொந்தம்…?

வைத்தியன் மற்றவர்களுக்கு வியாதி வந்து அவதிப்பட வேண்டுமென்று எண்ணவில்லை. ஆனாலும் தன் ஜீவாதார தேவைக்காகவும் தான் வளர்த்துக் கொண்ட… வழி முறை செயல் வளரவும் தெய்வத்தை வேண்டுகின்றான்.

வைத்தியனின் வைத்திய முறையில் அவன் கற்ற திறமை கொண்டு அந்தத் திறமைக்குகந்த ஜீவ ஆத்மாக்கள் அவனை நாடி வருகின்றன.

நோயாளியின் தன்மையிலும்…
1.தன் வியாதி குணமாக வேண்டுமென்ற உந்தலில் எடுக்கப்படும் எண்ணத்தால் ஆத்ம செயல் உருவாகி
2.அவனுள் உள்ள இறை சக்தியே அவனுக்கு அவன் வியாதியை சொஸ்தப்படுத்துகின்றது.

ஆகவே தெய்வத்தின் செயல்… நன்மை தீமை பார்த்துச் செயல்படவில்லை…!

உடலில் ஏற்படும் உபாதைகளுக்கு… சாதாரணத் தலைவலி போன்றவைகளுக்கு தலையில் மட்டும் மருந்தை தேய்க்கின்றோம்.

அதுவே நிற்காமல் அதிகப்படும் பொழுது… மாத்திரைகளாக உட்கொள்கின்றோம். அது ஆகாரமாகி… ஆவியாகி.. அதன் செயலைச் செய்கின்றது.

அதற்கும் முற்றிய நோய்களுக்கு… உதிரமுடன் கலக்கச் செய்யும் வீரிய மருந்துகளை ஊசியின் மூலம் ஏற்றுகின்றார்கள். அதற்கும் அடுத்தநிலை நரம்புகளிலேயே மருந்துகளை செலுத்துகின்றார்கள்.

அதற்கும் முற்றிய நிலையில்… எலும்புகளில் துவாரமிட்டு அதன் தொடரில் வைத்திய நிலை முற்றியுள்ள விஞ்ஞானச் செயலில் உடல் உபாதையை அகற்ற மருத்துவம் செயல்படுகின்றது. (இது எல்லோருக்கும் தெரிந்தது தான்…!)

இவைகளைப் போன்றே
1.இவ்வுடலில் நாமெடுக்கக் கூடிய மகரிஷிகளின் மின் அலைத் தொடர்பினால்
2.ஊடுருவல் நிலை கொண்டு அதைச் சுவாசமாக்கி
3.அதன் வளர்ச்சியில் உதிரமாகி… நரம்பு கோளங்கள் வலுப் பெற்று
4.உடலில் உள்ள எலும்புக்குள் இருக்கும் ஊன் நிலையில் வலுவாகும் வழி முறையில் தான்
5.உயிரத்மாவிற்கு நாம் வலுக் கூட்ட முடியும்…!

Leave a Reply