இராமனையும் கண்ணனையும் நீல வண்ணமாகக் காட்டியதன் உட் பொருள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Dazzling soul light - blue

இராமனையும் கண்ணனையும் நீல வண்ணமாகக் காட்டியதன் உட் பொருள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

சூரியனின் ஒளிக் கதிர்கள் பிரகாசிக்கும் தருணத்தில்… நம் பூமியில் மழை பெய்யும் தருணத்தில் மேகக் கூட்டங்கள் விலகி மப்பும் மந்தாரமுமாய் மழைத் துளிகள் விழும் தருணத்தில் சூரிய ஒளி பூமியின் ஈர்ப்பில் பட்டுப் பிரகாசிக்கும் சமைப்பு அலையினால் “வானவில்” ஒளியின் வண்ணத்தை நாம் காண்கின்றோம்.

இராமாவதார காலத்தில் வான்மீகி எழுதிய காவியத்தில் வண்ணத்தின் ஒளியில் வளரும் குண உருவ இராமனை “நீல உருவாய்க்” காவியத்தில் காட்டினார்.

சூரியனுக்கும் பூமிக்கும் வான மண்டலப் பால்வெளியில் சமைக்கப்படும்
1.பூமி எடுக்கும் சத்தின் வளர்ச்சி வண்ண ஒளியின் தொடர் வளர்ச்சியை
2.வான்மீகி மகரிஷி பெற்ற ஜெபத்தின் தத்துவக் காவியத்தில்
3.உருவக நிலை உருவாகும் வண்ணத்தின் சேர்க்கையின்… ஆத்ம குணத்தின்… வளர்க்க வேண்டிய ஜீவ சரீரத்தைப் பற்றி…
4.இராமாயணத்தின் மூலம் அன்றே நமக்குப் பல உண்மைகளை உணர்த்தியுள்ளார்.

வானவில்லில் எப்படி வண்ணங்களைக் காணுகின்றோமோ அதற்கொத்த வண்ணத் தன்மை ஆறு வண்ணங்கள்… வலுக்கூடிய ஏழாம் வண்ணமான உருவக வண்ணம் கொண்ட செயல் நிலையில் தான்… மனித ஜீவனும் பிறக்கின்றது.

இச்சரீரத்தை இயக்கும் ஆத்மாவின் வண்ணம் ஆறு. வானவில்லின் ஒத்த வண்ணத்தின் வலு ஒளி பெற வேண்டும் என்றால்…
1.ஆத்மாவின் இயக்கத்தால் ஜீவ சரீரத்தின் உருவகத்தின் மூலம்
2.பகுத்தறியும் ஞான மனிதனை ஒளிச் சரீரமாக (வெண்மை நிறம்) வளர்க்க முடியும்.

ஆறு வண்ணத்தின் திரு உருவாய் ஆறுகுணத்தின் அறுசுவை உண்டு செயல் நிலைக்கு மனிதக்கரு உரு வளர வளர்ச்சி பெற்ற அடுத்தநிலை தான் இராமனும்… கிருஷ்ணனும்…!

அதாவது… ஆத்ம வலுவின் ஒளியைப் பெற்ற… அடுத்த தெய்வ நிலை பெற்ற…
1.அடுத்த தெய்வ நிலை பெறும் ஒளியைக் குறிக்க
2.ஜீவ உடலின் ஆத்ம வலுவின் மனிதனுக்கடுத்த வளர்ச்சி ஒளி நிலையான
3.தெய்வ நிலை பெறும் வண்ணத்தைக் குறிக்கும் ஒளி தானப்பா “நீல ஜோதி ஒளி நிலை…!” (இராமனும்… கிருஷ்ணனும்)

இராமரையும் கிருஷ்ணரையும் நீல வண்ணத்தில் உருவகம் தந்து தெய்வங்களாகக் குறிப்பு காட்டிய வான்மீகியார் தந்த காவியத்தில் இப்படிப்பா பல உண்மைகள் உண்டு.
1.ஜீவ சரீரத்தின் அடுத்த நிலை பெறும் சூட்சும மார்க்கங்கள் அனைத்தையும் குறிப்புகளாக
2.காவிய உருவத்தில் ரூப கர்ண நாமங்களைச் சூட்டி வடித்துள்ளார் வான்மீகியார்.

மிளகாயின் விதையை விதைத்தால் அதிலுள்ள காரத் தன்மைக்கு ஜீவ நீர் சேர்த்து வளரும் தருணத்தில் அதன் உணர்வின் நிலைக்கொப்ப இக்காற்று மண்டலத்திலுள்ள தனக்குகந்த கார அமில உணவைத் தன் வளர்ப்பின் சத்திற்கு எடுத்து வளர்கிறது.

மிளகாய்ச் செடி அதன் ஊன் நிலை வெளிக்கக்கும் ஆவி உஷ்ணத்தினால் இலைகள் எல்லாம் முதிர்ச்சியுற்றுப் பூவாகிக் காயாகி முற்றிய பிறகுதான் மிளகாயாகவும் வித்தாகவும் பலனைத் தருகின்றது.

இப்படி அந்த வித்தின் தொடர் வளர்ச்சியில் மிளகாயின் பலனை எப்படிப் பெறுகின்றோமோ அதைப் போன்றுதான் நம் ஆத்ம உயிர் வித்தின் பலனும்.

இச்சரீரக் காலத்தின் முதிர்வில் சரீரத்திலுள்ள எலும்புகளின் ஊன் நிலை அது வெளிக்கக்கும் அலை உணர்வின் வளர்ப்பு நிலை வளரும் குழந்தைப் பிராயத்தில் பருவ நிலையில் சரீர மாற்று உணர்வு வளர்ச்சி முற்றுகின்றல்லவா..?

ஏனென்றால் உணர்வின் வளர்ச்சி முற்றல் ஜீவ வளர்ச்சி வளர்க்கும் பக்குவ காலமே… “பருவ காலம்…”

அதைப் போன்று எண்ணத்தின் உணர்வால் ஆத்மாவின் வளர்ச்சி முற்றும் வலு நிலை கூட வேண்டும் என்றால்…
1.ஆத்மா ஜெபத்தால் பெறும் வீரியத் தன்மையால்
2.சமமான குண வலுவைக் கொண்டு
3;ஆறு வண்ணங்களின் உரு வண்ணத்தைப் பெற்ற சரீரத்தை
4.ஒளி வண்ணத்தின் ஒரு வண்ணமாய் நீல வண்ண ஒளி ஆத்மாவாய்
5.இவ்வுயிராத்மா வலுப்பெறும் அந்த வளர்ச்சியின் உண்மையை
6.ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

(குறிப்பு:- சரீர ஜீவ உருவக வாழ்க்கையிலேயே சாதாரண பிறப்பு இறப்புக்கு… அடுத்து ஜென்மத் தொடர் பெறுவதற்கும்… ஆத்ம வலு நிலை கூடியிருந்தால் தான் பிறப்பிற்கு வர முடியும்)

 

Leave a Reply