“ஆத்ம ஜோதி – ஜொலிக்கும் நிலை” பெறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

sparkling souls power

“ஆத்ம ஜோதி – ஜொலிக்கும் நிலை” பெறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

கர்ம காரிய இருளிலிருந்து ஒளியான ஞானம் பெற உணர்வின் எண்ணத்தைக் கர்ம காரிய வாழ்க்கை இருளிலிருந்து உண்மையை… “ஒளி பாய்ச்சி” அறிதல் வேண்டும்.

சூரியனின் மோதல் பூமியின் மேல் நேர் பார்வையில் மோதும் பொழுது தான் இருளான இப்பூமியின் ஒளி வெளிப்படுகின்றது. அதைப் போன்று…
1.உணர்வின் எண்ணத்தை… “அறிவோம்” என்ற ஞான வழிக்கு இவ்வெண்ணத்தைக் கூட்டும் பொழுதுதான்
2.வாழ்க்கையில் ஏற்படும் கர்ம காரியச் செயலில் இருந்தெல்லாம்
3.நம் ஆத்ம ஒளிக்கு ஒளி பெற முடியும்.

பூமியின் நீர் நிலை உப்புக் கலந்ததாய் உள்ளது. கடல் நீரும் உப்பு. இப்பூமியில் கடல் மட்டத்திற்கு மேல் பல ஆயிரம் அடிகள் உயர்வாக உள்ள மலைப் பிரதேசங்களில் உள்ள கிணறுகளில் நீரும் உப்பாய் உள்ளது.

ஆனால்…
1.ஆழ் கடலிலும் ஆங்காங்கு பல இடங்களில் உப்பில்லாமல் “நல்ல நீர்” கிடைக்கின்றது.
2.அதே போல் இப்பூமியிலிருந்து வெளிப்படும் ஆவி அலையின் சத்தில் பெய்யும் மழை நீரும் உப்புக் கரிப்பதில்லை.

மழை நீர் குணம் கொண்டதாக… இப்பூமி சுழற்சியில் பெய்யும் மழைநீர் எல்லாமே சுவை கொண்டதாகத்தான் பெய்கின்றது. பூமியுடன் கலந்து செயல்படும்போது அந்த நீர் உப்பாகி விடுகின்றது.

அதைப் போன்று…
1.இவ்வாழ்க்கை கர்ம காரிய உடலில் இருந்து வெளிப்படும் இருளான உண்மையிலிருந்து
2.ஒளி கண்டு… காணும் அறியும் நிலையை…! நாம் ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

அதாவது… கடல் நீரும் கிணறுகளில் உள்ள நீரும் உப்பாயிருந்தாலும் கடலின் மத்தியிலே சுவை கொண்ட நல்ல நீரை நாம் காண்பது போன்று
1.இவ்வுடலில் ஏற்படக்கூடிய உணர்வின் எண்ணச் செயலில் மோதும் எச்செயலையும்
2.இருளான நிலைப்படுத்தி மோதும் அந்தச் செயலிலுள்ள உண்மை ஒளியை
3.நமக்குகந்த சத்தாக… “ஒளி” பெற வேண்டும்.

பூமியில் பல கோடி மண் வள கனி வள சத்து நிலைகள் மாறி மாறிப் படர்ந்திருந்தாலும் அச்சத்தின் சத்தாய் அங்கங்கு… சில இடங்களில்… வைரத்தின் ஒளிக் கற்கள் (வைரங்கள்) வளர்கின்றதல்லவா..!

அதைப் போன்று இவ்வுடலின் உணர்வு எண்ணக் கோள கர்ம காரிய சரீர இயக்கத்தில் உள்ள உண்மை வெளிப்பட…
ஞானமென்ற ஒளியை…
காரிய சிந்தையை…
காரிய சித்தாய்
“நம் ஒளி ஞானம்” செயல்படல் வேண்டும்.

பிறர் பால் உள்ள குறைவினாலேயே… உயர்வினாலேயே… நம்மை உயர்த்தியும்… குறைத்தும்… எண்ணத்தைச் செலுத்தாமல்…
1.அறியும் ஞான ஒளித் தொடரில் மோதப்படும் ஒவ்வொரு நிலையில் இருந்தும்
2.நம் உயிர் ஆத்மாவிற்கு ஜீவ காந்த வளர்ப்புக்குகந்த சத்து நிலை உணர்வில்
3.நாம் கூட்டும் ஒளி நிலை கொண்டு தான்… ஆத்ம ஜோதி ஜொலிக்க வேண்டும்.

எண்ணமுடன் கூடிய உணர்வினால்தான்… ஒளி நிலையான ஜோதி நிலைக்கு… “இவ்வாத்ம உயிரை” ஜீவ காந்த மின் அலையைக் கொண்டு… வலு கூட்ட முடியும்.

இஜ்ஜீவ காந்தமின் அலை உணர்வு சரீரத்தைக் கர்ம காரியத்தில் சுழலும் மாய வாழ்க்கை இருளிலிருந்து எண்ணத்தை அறியும் ஞான ஒளி பாய்ச்சி உண்மையை உயிராத்மா வலுக் கூட்டிக் கொள்ள வளர் ஞானம் கொள்ள வேண்டும்.

அந்த வளர் ஞானம் கொண்டோமானால்… இன்றெப்படி வாழ்க்கையில் சுவை… மணம்… உணர்வு… உறக்கம்… போன்றவற்றில் இன்ப நிலையை உணர்கின்றோமோ…
1;இவற்றிற்கு மேல் பேரின்ப நிலையான ஒளி சக்தியைக் கொண்டு
2.மனித பிம்பத்தில் உணர முடியாத உன்னதமான… இனிமையான…
3.சுவை கலந்த இன்ப நிலையைப் பெற முடியும்.

Leave a Reply