வேதனைப்படுவோரைக் கண்டு நாம் ரசிக்கக் கூடாது… ரசித்தால் நமக்கும் அதே நிலை தான்…!

Life

வேதனைப்படுவோரைக் கண்டு நாம் ரசிக்கக் கூடாது… ரசித்தால் நமக்கும் அதே நிலை தான்…!

 

மதுபானத்தை எடுத்துக் கொண்டால் மிகவும் கடினமானதுதான்…!
1.அந்த வாடை பட்டாலே அதைக் குடிக்காதவர்களுக்கு
2.அதைக் கண்டவுடனே உமட்டல் வருகின்றது.. வெறுப்பு வருகின்றது.

ஆனால் அதைக் குடித்து பழகி விட்டாலோ அதை கண்டு ரசிக்கத்தான் செய்கின்றார்கள். அந்த ரசிக்கும் தன்மை அவர்களின் சிந்தனையை இழக்கச் செய்கின்றது. “அது இல்லை” என்றால் அவர்கள் வாழ்க்கையே நடக்காது…!

இதைப் போன்றுதான்… மனித வாழ்க்கையில் வேதனைப்படுவோரை நாம் கண்டு ரசித்து விட்டால் மீண்டும் பிறரையும் வேதனைப்படச் செய்து கொண்டே இருக்கும். அந்த வேதனையைக் கண்டு ரசித்து கொண்டே இருக்கும்

நண்பனாகப் பழகும் போது நண்பன் என்று போற்றித் துதிப்போம். ஆனால் பிடிக்கவில்லை என்றால் அந்தப் பிடிக்கவில்லை என்ற நிலைகள் கொண்டு
1.நாம் அந்த வேதனையைத்தான் ரசிக்க வேண்டி வரும்
2.வேதனைப்படச் செய்து என்னென்ன இடையூறு செய்ய வேண்டுமோ செய்து
3.அவனை வேதனைப்படச் செய்யும்… தொழிலை நஷ்டப்படச் செய்யும்
4.வேதனைப்படுவதைக் கண்டு ரசித்துக் கொண்டுதான் நாம் இருக்கின்றோம்.
5.ரசித்த வேதனைகள் இங்கே உடலில் விளைகின்றது.

வேதனை என்றாலே அது நஞ்சு தான்…! அதைக் கண்டு ரசிக்கும்போது என்ன ஆகும்…?

பாம்பினம் எவ்வாறு தன் நஞ்சினைப் பாய்ச்சி தன் இரையை அது உணவாக உட்கொள்ளுகின்றதோ இதைப் போன்று தான் நாம் நஞ்சினை மற்றொரு நிலைகள் கொண்டு அந்த உணர்வினை நாம் நஞ்சாக ரசிக்கும்போது
1.நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் அனைத்தும்
2.பாம்பு எப்படி நஞ்சினைப் பாய்ச்சி அந்த நஞ்சினைக் கொண்டு ரசித்ததோ இதைப் போல
3.நாம் ரசித்த வேதனை உணர்வுகள் நம் நல்ல குணத்தை அது விழுங்கி அதைச் செயலற்றதாக்கி
4.இந்த நஞ்சின் தன்மை நமக்குள் பெருகி வரும்.

இவ்வாறு பெருகி வரும் போது நம் உடல் நலியும்போது அம்மா… அப்பா…! என்ற இந்த வேதனை தான் அதிகமாகும். விளைந்த பின்… ஒவ்வொரு சமயமும்
1.அந்த வேதனையின் தன்மை எதுவோ அந்த வேதனையைச் சுவாசித்தா\ல் அந்த வலியும் அடங்கும்.
2.மகிழ்ச்சியாக யாராவது பேசினாலே கோபம் தான் நமக்கு அதிகமாக வரும்.
3.அந்த மகிழ்ச்சியின் தன்மை பேசும்போது இங்கே வேதனை அடங்காது.
4.அதற்கு வேண்டிய உணவு இல்லையென்றால் அது துடிக்கும்.
5.மகிழ்ச்சிக்கு பதில் கொதிக்கும் உணர்வே இங்கே உருவாகும்.

இதைப் போன்றுதான் நம் வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டுள்ளோம். ஆக நாம் எங்கே இருக்கின்றோம் என்றால் தேய் பிறையாகத் தான் இருக்கின்றோம்.

நமக்குள் இருக்கும் நல்ல எண்ணங்கள் மறையும் தருவாயில் எந்தப் பக்தி மார்க்கமாக இருப்பினும் சரி… எந்த மதத்தின் தன்மையில் அவர்கள் சாஸ்திரங்கள் விதித்தபடி செய்வோரும் சரி…
1.மதத்தின் அடிப்படையில் சிக்கி
2.மனிதனாகப் பிறந்த நிலையை மறந்திடும் நிலையே வருகின்றது.

மனிதன் தன் வாழ்வில் உணர்வினை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றி இன்றும் நிலை கொண்டு முழுமை அடைந்துள்ளான்.

ஒரு வித்தை நாம் பூமியிலே நட்டால் வித்தில் உள்ள உணர்வுகள் எதுவோ… அது தன் இனத்தின் சக்தையக் கவர்ந்து மரமாக அது விளையச் செய்து தன் இனத்தின் தன்மை வித்தாக அது விளைகின்றது.

இதைப் போன்று தான் உயிர் ஒளியானது ஒரு வித்தானது. அந்த வித்தின் தன்மை கொண்டு தான் புழுவிலிருந்து மனிதனாக வளர்ந்து வந்துள்ளோம்.

மனிதனானபின்…. தீமைகளை அகற்றித் தீமைகளை அகற்றிடும் சக்தியைத் தன்னுடன் இணைத்து உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலை கொண்டு
1.இன்றும் விண்ணில் ஒளிச் சரீரமாக முழுமையான வித்தாக முதிர்ந்து
2.ஒளியின் சிகரமாக வளர்க்கும் ஒளி அலைகளைப் பரப்பிக் கொண்டுள்ளது… “துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும்…!”

அதனின் உணர்வை வித்தாக எடுத்து அதனின் துணை கொண்டு தனக்குள் வளர்த்து நமது வாழ்க்கையில் வந்த மதத்தால் ஏற்பட்ட நிலையோ… இனத்தால் வந்த வெறித் தன்மையோ… இனத்தால் மொழியால் வந்த உணர்வுகளை எல்லாம் அது இயங்காது தடைப்படுத்துதல் வேண்டும்.

புவியின் பற்றுடன் மீண்டும் தேய்பிறையான நிலைகளுக்குச் செல்லாது வளர்பிறையாக வளர்ந்து உலகைக் காத்திடும் ஞானிகளாக எப்படி வளர வேண்டும் என்பதற்குத்தான் இந்த உபதேசக் கருத்துகளை உங்களுக்குள் தெளிவாகக் கொடுப்பது.

Leave a Reply