உயிர் காக்கும் திருமந்திரம்

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

நமது குருநாதர் அவர் பைத்தியக்காரராக இருந்தார். அவர் இந்த உடலுக்கு இச்சைப்படவில்லை.

அது தான் ஒவ்வொரு உயிருக்கும் டெலிஃபோன் கம்பியை அடித்து அவர்களுக்கு ஞானத்தை கொடு. நல் வழியைக் கொடு என்று சொன்னேன்,

அதற்காக வேண்டித்தான் டெலிஃபோன் அடித்தேன்.

ஒவ்வொரு உயிரும் அவன் கடவுள் அவனுக்கு இதைச் செய்து ஏன்டா…! இந்த உடலில் வீற்றிருக்கும் “நீ…” அந்தக் கோவிலைச் சுத்தப்படுத்துகின்ற உணர்வை ”ஏன் நீ கொடுக்கவில்லை…?” என்று அவனிடம் முறையிடுகிறேன்.

அவனிடம் (ஒவ்வொரு உயிரிடமும்) முறையிடுகின்றேன். அதே சமயத்தில் என்னை இயக்கிக் கொண்டிக்கின்ற இவனிடமும் (என் உயிரிடமும்) முறையிடுகின்றேன்.

அப்படி என்றால் என்ன அர்த்தம் ஆகின்றது?

நீங்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று நான் சொன்னால் எனக்கு நல்லதாகின்றது. நீங்கள் உயர வேண்டும் என்று சொன்னால் (என் உயிர்) எனக்கு நல்லதைச் செய்வான். அதற்குத் தான் இப்படிச் சொன்னேன் என்று மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் சொல்கிறார்.

இப்படி சூட்சம நிலையில் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் விளக்கம் கொடுத்துக் கொண்டு வந்தார். அதைத்தான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 129

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உண்மையின் உணர்வுகளை அறியச் செய்வதற்காக காட்டிற்குள்ளும் மேட்டிற்குள்ளும் அழைத்துச் சென்றார் குருநாதர். பல பேருண்மைகள் மறைந்து உள்ளது.

அரசர்கள் மதங்களாக்கி அவர்கள் இட்ட சட்டத்தை நம் உடலுக்குள் பதிவாக்கி விட்டால் மீண்டும் அதை எண்ணும் போது நமக்குள் கடவுளாக அது இயங்கத் தொடங்கிவிடும்.

அது எந்தெந்த குணங்கள் எதுவோ அது குணத்தின் தெய்வமாக அது இயங்கும் என்ற நிலையைத் தெளிவாகக் காட்டினார் நமது குருநாதர்.

மனிதனின் வாழ்க்கையில் நாம் எப்படி எல்லாம் பல இன்னல்கள் பட்டு வளர்ந்தோம்; பிறந்தோம்; இன்று மனிதனானோம்.

வளர்ந்தோம்; பிறந்தோம் என்றால் மீண்டும் மடிந்தோம்; பிறந்தோம்; மடிந்தோம்; பிறந்தோம் – பல கொடுமைகள் பட்டுத்தான் ஒவ்வொரு சரீரத்தையும் காக்கும் உணர்வின் வலு பெற்று வந்தோம்.

எது இதைக் கொடுமைப்படுத்துகின்றதோ அதன் உடலுக்குள் சென்று இப்படித்தான் மாறி மாறி வந்தது என்ற நிலையைத் தெளிவாக்கினார் குருநாதர்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 128

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

அகண்ட அண்டத்தையும் இந்த பிண்டத்திற்குள் எப்படி இயங்குகின்றது என்ற உண்மையினை உணர்ந்தவன் முதன் முதல் மனிதன் அகஸ்தியன்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அவனுக்குள் விளைந்த உணர்வுகள் இன்றும் பூமியில் படர்ந்துள்ளது. அகஸ்தியன் கண்டுணர்ந்த (மறைந்த) அந்தப் பேருண்மையின் உணர்வுகளை அறியும்படிச் செய்தார் குரு.

பல காலம் 20 வருடம் காடு மேடெல்லாம் அலையச் செய்தார் குருநாதர். அவர் உபதேசித்து உணர்த்திய உணர்வுகளை எமக்குள் பதிவாக்கி அந்த நினைவு கொண்டு அகஸ்தியர் உணர்வுகள் எங்கெங்கெல்லாம் எவ்வழியில் இருந்தது? அகஸ்தியன் எங்கெங்கெல்லாம் சென்றான்? அவன் நடந்து சென்ற பாதைகளில் உணர்வுகள் எவ்வாறு படர்ந்துள்ளது? என்று பார்க்கும் படிச் செய்தார்.

உதாரணமாக அவர் உடலோடு இருக்கும் போது பித்தனாக இருப்பினும் கைகளில் அடிக்கடி ஒரு கிழிந்த துணியைக் கட்டுவார். காலில் ஒரு துணியைக் கட்டுவார். வித விதமான துணிகளைக் கட்டுவார்.

பார்ப்போருக்கு அவர் பைத்தியம் போலவும் இருப்பினும் அவர் செடி கொடிகளில் துணிகளைக் கட்டுவார். என்னென்னமோ புரியாத பாஷையில் சொல்வார்.

நான் அதைக் கேட்பேன்… அர்த்தமாகாது….! ஏதோ செய்கின்றார்…! என்று தான் இருக்கும்.

ஆனால் கடைசி நிலையில் அவர் சரீரத்திற்குப்பின் அவர் எதையெதையெல்லாம் எப்பாஷையில் பேசினாலும் அதை எமக்குள் பதிவாக்கி நினைவாக்கும் முறையை உருவாக்கினார்.

அவரை நினைக்கும் போதெல்லாம் குரு சென்ற பாதையில் அவர் எங்கெங்கெல்லாம் சென்றார்? அகஸ்தியரின் நிலைகளை எப்படியெல்லாம் அறிந்தார்?

அவர் அறிந்த உணர்வுகளில் அக்காலத்தில் அகஸ்தியன் வாழ்ந்த நிலையும் அவர் கண்டுணர்ந்த உணர்வுகளை அறிய முடிந்தது.

அகஸ்தியன் துருவனான நிலையும் துருவ மகரிஷியான நிலையும் துருவ மகரிஷி ஆனபின் துருவ நட்சத்திரமான இந்த வழிமுறைகளை அவர் எமக்குள் உபதேசித்த இந்த உணர்வின் வழி கொண்டு கண்டுணர முடிந்தது.

நான் பல காடுகளுக்குச் செல்லப்படும்போது இந்தத் துணிகளைக் கட்டிக் காண்பித்த நிலையில் அங்கே… “அந்தச் செடிகளில்… மரங்களில்… தெரியும்.”

அப்போது அந்த நினைவுகள் வரும்.

அந்த நேரம் அந்தச் செடியின் அருகிலே போய் நின்றோம் என்றால் அந்தத் தழை அப்படியே வந்து என் மீது ஒட்ட வரும். அப்போது அவர் சொன்ன நினைவுகள் வரும்.

ஏனென்றால் இந்தச் செடிகளில் அந்தத் துணிகளைக் காட்டும் போது நாம் போகும் போது அந்த துணிகள் தெரிந்தால் அது எச்சரிக்கையாக இருக்கும்.

ஆனால் ஊரில் இருக்கும் போது அவர் இந்தத் துணிகளைக் கட்டிக் காண்பிக்கும்போது ஏதோ…, “பைத்தியம் பிடித்த நிலையில் தான் இருக்கிறார்…” என்று யாம் எண்ணினோம்.

அவர் உணர்த்திய உணர்வுகள் எனக்குப் புரியாத பாஷையில் புரிய வைத்துப் பதிய வைத்தார். ஆனால் அந்தத் துணிகளைப் பார்க்கப்படும் போது இந்த நிகழ்ச்சிகள் எமக்குத் தெரிகின்றது.

ஏனென்றால் இங்கே படர்ந்திருப்பதை நுகர முடிகின்றது.

எப்படி கம்ப்யூட்டர் அதில் செய்த எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலைகள் வரப்படும் போது அந்த அதிர்வுகளை அந்த கம்ப்யூட்டரில் உள்ள நாடாக்களில் ஒலி ஒளி என்ற நிலையில் பதிவாக்குகின்றார்கள். அதன் வழி ரூபங்களைக் காணுகின்றான் விஞ்ஞானி.

ஆனால் மெய்ஞானி (நமது குருநாதர்) இப்படி காட்டச் சொன்னார்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 127

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

வைகுண்ட ஏகாதசி அன்று உடலை விட்டுச் செல்லும் பொழுது குருநாதர் எம்மிடம் சொன்ன நிலைகள் இது.

பல அற்புதங்களை நான் செய்து காட்டினேன். அந்த அற்புதங்களிடத்தில் மயங்கியிருந்தோர் உண்டு. அதன் வழியில் என்னை அணுகியவர்கள் பலர்.

என்னிடமிருந்து அதைத் தெரிந்து கொள்ள எப்படி எல்லாம் வந்தார்கள் என்பதைத் தெரிந்து கொள் என்றார் குருநாதர். ஆனால், என்னிடம் எதை நாடி வந்தார்கள்?

எனக்குச் சொத்து வேண்டும். சுகம் வேண்டும். உடல் நலம் வேண்டும். இதைத்தான் கேட்டார்கள். அதே சமயத்தில் வருவோரெல்லாம் எனக்கு “அந்த அருள் வேண்டும்.., இந்த அருள் வேண்டும்..,” என்று தான் கேட்டார்கள்.

மெய்ப்பொருள் காணும் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். இந்த உலகம் நலமாக இருக்க வேண்டும் உலக மக்கள் அவர்கள் குடும்பம் நலமாக இருக்க வேண்டும்.

பிறருடைய குடும்பங்களை நலம் பெறச் செய்யும் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். எங்கள் பேச்சால் மூச்சால் அனைவரின் துன்பங்கள் அகல வேண்டும். நாங்கள் பார்ப்போர் குடும்பமெல்லாம் நலம் பெறவேண்டும் என்று “இதைப் பற்றிக் கேட்பார்.., யாரும் இல்லை”.

அத்தகைய மனம் உள்ளோர் என்னை அணுகி வந்தார்கள்.  “தனக்காகத்தான்.., கேட்டார்களே தவிர.., எல்லோரும் நலம் பெறவேண்டும்..,” என்ற கேள்வியே அங்கே எழவில்லை.

ஆனால், அத்தகைய தன்மை பெற்றோர்களும் மற்ற எல்லோரும் அருள் ஞான சக்தி பெறவேண்டும் என்று நான் எண்ணினேன். நான் அதைப் பெற்றேன்.

இந்த உணர்வின் தன்மை கொண்டு வைகுண்ட ஏகாதசி அன்று நான் உடலை விட்டுச் செல்லப் போகின்றேன்.

ஆனால், நீ எதை எண்ணப் போகின்றாய்? நீ எதைப் போகின்றாய்? என்று பல வினாக்களை எழுப்பினார். நீ பெறவேண்டிய தகுதிகள் எது? அதைப் பெறுவது எப்படி?

இதையெல்லாம் எமக்குள் தெளிவாக்கிக் காட்டினார்.

இந்த உடலை விட்டுச் சென்றபின் நீ என்னுடன் இணைந்து வர வேண்டும் என்றால் “நீ எதை எண்ண வேண்டும்..?” என்றும் சொன்னார்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி குரு பெறவேண்டும். அவர் அழியாத ஒளியின் சரீரம் பெறவேண்டும். அவர் பேரின்பப் பெருவாழ்வு வாழ வேண்டும். பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும்.

இவ்வாறு அந்த அருள் வழி குரு பெறவேண்டும் என்று நீ எண்ணினால் அந்தக் குரு உனக்குள் ஒளியின் சரீரமாக ஆகின்றார். ஆகவே, நீ எதை எண்ணுகின்றாயோ நீ அவ்வாறு ஆகின்றாய் என்று உணர்த்தினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 126

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சில பேர் தியானம் இருக்கின்றேன் என்று சொல்லிவிட்டு அந்தத் தியானம் ஒன்றைத்தான் சொல்கின்றார்களே தீமையைத் தடுத்துப் பழகும் ஆற்றலைச் செயலாக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும் என்று உணரவில்லை.

என்னை இப்படிப் பேசுகின்றான்.., நான் எத்தனை நாள் பொறுத்துக் கொண்டிருப்பது…? கடன் கொடுத்தவன் பணம் திரும்பத் தர மறுக்கின்றான்.., நான் எத்தனை நாள் தான் பொறுத்துக் கொண்டிருப்பது…? என்று இப்படி மாற்றிக் கொள்கின்றார்கள்.

நாம் எண்ணியதைத்தான் நம் உயிர் உருவாக்குகின்றது. கண்கள் அந்த வழியைக் காட்டுகின்றது.

குருநாதர் எமக்கு உபதேசித்தது ஒவ்வொருவர் உயிரையும் கடவுளாகவும் ஒவ்வொரு உடலையும் கோவிலாகவும் மதித்து நீ செயல்பட வேண்டும் என்றார்.

அப்பொழுது “அவர்களிடமிருந்து பகைமை மறைந்து.. அவர்கள் ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்த வேண்டும்” என்ற எண்ணம் எனக்கு வருகின்றது.

அவர்கள் ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்த வேண்டும் என்று எண்ணும் பொழுது “என் உடலான.. இந்த ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்துகின்றேன்”.

“நீங்கள் நன்றாக ஆக வேண்டும்” என்று நான் எண்ணினால் எனக்குள் நல்ல நிலை ஆகின்றது.

இப்பொழுது யார் நமக்குத் தீமைகள் செய்தார்களோ அவருக்கும் “நல்லது செய்யக்கூடிய எண்ணம் வரவேண்டும்” என்று சொன்னால் அந்தத் “தீமையின் உணர்வுகள்” நமக்குள் வருவதில்லை.

அவர் எல்லோருக்கும் நன்மை செய்யும் எண்ணம் வரவேண்டும் என்று சொன்னால் அவரைப் பற்றிய “வெறுப்பான உணர்வுகள்” நம் உடலுக்குள் வருவதில்லை.

அவர் எல்லோருக்கும் நன்மை செய்யும் எண்ணம் வரவேண்டும் அவர் எல்லோருக்கும் நன்மை செய்யும் எண்ணம் வரவேண்டும் என்று இப்படித்தான் எண்ண வேண்டுமே தவிர அவர் நன்றாக இருக்க வேண்டும் என்று சொன்னால் அவர் கெட்டதைத்தான் நல்லதாக்கும். அவர் செய்யும் தவறுக்கு ஊக்கம் கொடுத்த மாதிரி ஆகிவிடும்.

அவர் எல்லோருக்கும் நன்மை செய்யும் எண்ணம் வரவேண்டும். எல்லோரிடமும் பண்பும் பரிவும் காட்டும் எண்ணங்கள் வரவேண்டும் அந்த அருள் ஞானம் அங்கே வர வேண்டும் என்று சொன்னால் இந்த உணர்வுகள் அவர்களைத் தவறு செய்ய விடுவதில்லை. அப்பொழுது இதை நாம் வெறுமனே சொல்ல முடியாது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று இதைக் கலந்து நம் எண்ணங்களுக்கு “முதலில்” வலிமை கொடுக்க வேண்டும்.

இப்படி நீங்கள் செய்து வந்தீர்கள் என்றால் உங்கள் குடும்பத்தில் “எத்தகையை சங்கடங்கள் வந்தாலும்” மாற்றி அமைக்கலாம்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 125

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமக்கு நோய் என்று வந்து விட்டால் நமக்கு வேதனை வருகின்றது. வேதனைப்படும் பொழுது அந்த நேரத்தில் நல்லதை யாராவது சொன்னாலும் கூட ஏற்றுக் கொள்ள மறுப்போம்.

வேதனைப்பட்டுள்ளோர்களுக்கு வேதனைப்படும் நிலைகளைச் சொல்லிக் கொண்டேயிருந்தால் ரசித்துக் கேட்பார்கள். அப்பொழுது அந்த நேரத்தில் அவர்களுடைய வேதனைகள் தெரியாது.

அவர்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது “இது நல்லது.., அது அப்படி இருந்தது..,” என்று உயர்ந்த குணங்களைப் பற்றி நீங்கள் சொன்னாலும் அதற்கு எதிர்மறையாகி அதனுடைய நிலைகளை நாம் கேட்க மறுப்போம்.

ஏனென்றால் அந்த வேதனை உணர்வு நமக்குள் அதிகரிக்கப்படும் பொழுது நல்ல உணர்வுகளை நுகராதவண்ணம் தடைப்படுத்தி நமக்குள் தீமைகளையே விளைய வைக்கும்.

இதிலிருந்து நாம் ஒவ்வொருவரும் விடுபட வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 124

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

நம் உடல் எல்லாம் பொய் உடல்கள். உடலைப் பொய் என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் இப்போது நாம் மனிதனாக இருக்கிறோம். அடுத்துப் பார்த்தால் சுருங்கிப் போகிறோம்.

சுருங்கிய உணர்வு கொண்டு இந்த உயிர் என்ன செய்கிறது…? வேறொரு உடலை நாடுகிறது. ஆகவே பொய் உலகில் வாழுகின்றோம் என்பதை நாம் தெளிவாக உணர வேண்டும்.

இதைத்தான் குருநாதர் அடிக்கடி எம்மிடம் (ஞானகுரு) சொல்வார். “டேய்…! ஏன்டா பொய் உலகிற்கு போகிறாய்…? மெய் உலகத்திற்கு வாடா…!” என்பார். ஆகவே நம் உயிரை நீ எப்படி மதித்தல் வேண்டும்…?

உயிர் எல்லாவற்றையும் உணர்த்துகின்றான்… உணருகின்றான்… உணரச் செய்கின்றான்… உணரும் வழியில் வாழச் செய்கின்றான்…!

ஆனால் இதை ஆறாவது அறிவால் தெரிந்து கொண்ட பின் நீ எந்த உலகிற்குச் செல்லுகின்றாய் என்று சில இக்கட்டான நேரங்களில் குருநாதர் இப்படியெல்லாம் கேட்பார்.

சில சிக்கலான நிலைகள் வரும் போது என்ன செய்வேன்..? என்ன வாழ்க்கை போ…!

என் மனைவியை நோயிலிருந்து எழுப்பி விட்டார். சொல்வதைச் செய்கிறாயா என்று வாக்கை வாங்கிக் கொண்டார்.

ஆனால் காட்டுக்குள் அழைத்துச் சென்று “இப்படித் தொல்லை கொடுக்கிறாரே…!” என்று ரொம்பக் கஷ்டம் வரும் போதெல்லாம் என்னுடைய நினைவு இப்படி வரும்.

எங்கேயாவது பேசாமல் உடலை விட்டுப் போயிடலாம்…! என்று இரண்டு மூன்று முறை தோன்றியது. அந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலையில் “தற்கொலை செய்து கொள்ளலாம்…! என்ற உணர்வு வரும்.

அப்போதெல்லாம் குருநாதர் சிரிப்பார். இந்த உலகத்தை என்ன என்று நீ அறிந்தாய்…? உன் உயிரை யார் என்றும் அறிந்தாய்…! இந்த உடலையும் அறிந்தாய்… மீண்டும் ஏன்டா பொய் உலகத்திற்கு போகிறாய்…?

வேதனையிலிருந்து தப்ப வேண்டும் என்று நான் எண்ணுகின்றாய். நீ யாரை எண்ணி இதைச் செய்து கொண்டாயோ இந்த வேதனையான உணர்வுகள் கேட்பவருக்குள் வலுவாகும். அவர் உடலுக்குள் இதையே நீ செய்வாய். அவனையும் வீழ்த்துவாய்.

இந்த உணர்வின் தன்மை இந்த உடலுக்குப் பின் என்ன என்ன ஆவாய்..? பிறிதொன்றைக் கொன்று தின்னும் உணர்வின் தன்மை தான் உடல் பெறும். இன்று நீ மனிதனாக இருக்கின்றாய். அடுத்து நீ பொய் உலகிற்குத் தானே போகின்றாய்…?

உயிரால் மனித உடல் பெற்று ஆறாவது அறிவால் இதையெல்லாம் தெரிந்து கொள்ளும் நிலைகள் கார்த்திகேயா என்ற நிலைக்கு நீ வந்தாய். மீண்டும் ஏன் பொய் உலகிற்குச் செல்கின்றாய்…? என்று இந்த இடத்தில் விளக்கங்களைக் கொடுப்பார் குருநாதர்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 122

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பழனியில் ஒரு பித்தரைப் போல இருப்பார் என்றாலும் பிறர் அவரைப் “பித்தர்” என்றே எண்ணுவார்கள்.

ஒவ்வொரு மனிதனும் எப்படிப் பித்துப் பிடித்துச் செல்வம் தேட வேண்டும் என்று எண்ணுவான். அதே சமயத்தில் செல்வத்தில் குறை என்றால் பித்துப் பிடித்து “வெறி பிடித்தவன்” போல் மற்றவரை எப்படித் தாக்குகின்றான்…!

பித்துப் பிடித்து மற்றவர்களுக்கு எப்படித் தொல்லைகள் கொடுக்கின்றான்…! ஒவ்வொரு மனிதனும் “பித்துப்பிடித்துத்தான் அலைகின்றான்” என்று சொல்வார்.

குருநாதர் போஸ்ட் கம்பத்தில் கல்லைக் கொண்டு தட்டுவார். அலோ.., ஹலோ.., என்பார்.

“ஏன் சாமி.., கல்லைக் கொண்டு போஸ்ட் கம்பத்தில் தட்டுகிறீர்கள்..,?” என்று கேட்டேன்

நீ தான்டா.., கேட்கின்றாய். மற்ற எல்லோருமே என்னைப் “பைத்தியக்காரன்..” என்று சொல்கின்றார்கள். நான் டெலிபோன் செய்கின்றேன் என்கிறார்.

என்ன சாமி டெலிபோன் செய்கின்றீர்கள்?

இந்தக் கம்பத்தின் மூலம் ஆண்டவனுக்கே அனுப்புகின்றேன். அந்த ஆண்டவன் என்பது “யார் தெரியுமா..?” என்றார்.

நான் தட்டும் உணர்வுகள் சேர்த்து “உயிரில் பட்டபின்” அந்த ஆண்டவன் என்ன செய்கின்றான்? இந்த உணர்வை என்னைச் செயல்படுத்தச் சொல்கின்றான்.

தட்டும் பொழுது நான்.., எதை எண்ணித் தட்டுகின்றேன்?

ஏனென்றால்.. “தட்டும் பொழுது.. சப்தம் வருகின்றது”. ஒவ்வொரு பொருளிலும் தட்டும் பொழுது அதில் என்னென்ன நாதம் வருகின்றது?

கல்லில் தட்டினால் ஒரு நாதம் மண்ணிலே தட்டினால் ஒரு நாதம் மரத்தில் தட்டினால் ஒரு நாதம் உலோகத்தில் தட்டினால் அது ஒரு நாதம்.

உணர்வின் ஒலியின் நிலைகள் நான் தட்டும் பொழுது என் உயிரான இவனுக்கே எட்டுகின்றது. அப்படி எட்டும் பொழுது நான் என்ன செய்கிறேன்…?

இந்த உலகில் உள்ள மக்கள் அனைவரும் ஒவ்வொருவரும் தெரிந்து வாழ வேண்டும். அந்த ஆண்டவன் கட்டிய ஆலயத்தில் அவர்கள் பரிசுத்த நிலைகள் பெறவேண்டும். அவர்கள் புனிதம் பெறவேண்டும். புனிதமான வாழ்க்கை வாழ வேண்டும். புனிதமான ஆலயமாக மாற்றவேண்டும்.

இப்படி இதை நினைத்து நான் டெலிபோன் செய்கின்றேன் என்கிறார் குருநாதர்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 121

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மெய் ஞானிகள் கண்டுணர்ந்த பேருண்மைகளை அறியும் வண்ணம் குருநாதர் எனக்குப் (ஞானகுரு) பல உபதேசங்களைக் கொடுப்பார்.

அதே சமயத்தில் அதை எனக்குள் ஆழமாகப் பதிவு செய்து உண்மையை நான் உணர்வதற்காக வேண்டி என்னைக் கடுமையாகத் திட்டுவார். அப்பொழுது எனக்குச் சோர்வு வரும்.

நான் சோர்வடையும் அந்த மாதிரி நேரங்களில் குருநாதர் என்னை அழைத்துச் சென்று இந்த மாதிரி நோயால் வாடும் ஆள்கள் இருக்கும் குடும்பங்களை நிறையக் காண்பிப்பார்.

உதாரணமாக… செல்வம் சொத்து எல்லாம் ஆரம்பத்தில் சம்பாரித்திருப்பார்கள். வயதான காலத்தில் நோய்வாய்ப்பட்டு நடமாட்டம் குறைந்து படுக்கையில் இருப்பார்கள்.

அந்த மாதிரி நேரத்தில் வீட்டில் இருக்கும் தன் பையனிடமோ மற்றவர்களிடமோ “தாகமாக இருக்கிறது… கொஞ்சம் தண்ணீர் கொடுப்பா…!”  என்பார்கள்.

உடனே தண்ணீரைக் கொடுக்காதபடி “உனக்கு வேறு வேலையே இல்லை… போ..!” என்று இவர்கள் திட்டிக் கொண்டு இருப்பார்கள்.

மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே
நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ
நிலையில்லாத இந்த உலகம் உனக்குச் சதமா?

ஏனென்றால் அவர் நேற்று நன்றாக இருந்தார். சந்தோஷமான உலகமாக அவருக்கு இருந்தது. அதிலே அவர் எடுத்து வளர்த்துக் கொண்ட உணர்வு உடலில் சேர்ந்து நோயானவுடன் “கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் கொண்டாப்பா…!” என்கிறார்.

சும்மா போகும் பொழுதும் வரும் பொழுதும் ஏதாவது வேலை சொல்லிக் கொண்டேயிருப்பது…! “இது தான் உன் வேலை” என்று பையன் திட்டுகிறான்.

இவர் நன்றாக இருக்கும் பொழுது என்ன செய்கிறார்?

தன் பையனை அவன் சிறு பிள்ளையாக இருக்கப்படும் போது  அவனைக் காக்க வேண்டும் என்பதற்காக “அங்கே போயிடாதடா… இங்கு போயிடாதடா…!” என்று சொல்லி இருக்கின்றார்.

மீண்டும் மீண்டும் பையன் அந்தக் குறும்புத்தனம் செய்யும் பொழுது சங்கடப்பட்டு இவர் சொல்கிறார். பையனைக் காத்துவிடுகின்றார். ஆனால்… இவர் வயதான காலத்தில் நோயில் விழுந்து விட்ட பின்னாடி அதே சங்கடம் இங்கே பையனுக்கு வருகின்றது. இவருக்கு வேறு வேலையே இல்லை “எப்போது பார்த்தாலும் “நச்… நச்…” என்று எதையாவது கேட்டுக் கொண்டேயிருப்பார் என்கிறான் பையன்.

தன் பையன் நன்றாக இருப்பதற்காக வேண்டிச் சங்கடப்பட்டுச் சொன்னார். அந்தச் சங்கடமான உணர்வு நோயாக வந்து விட்டது. இவர் நோயில் விழுந்து விட்டார்.

அதே சமயத்தில் நோயானபின் “அப்பாவிற்குக் குடிக்கத் தண்ணீர் கொண்டு வாடா…” என்று சொன்னால் பையன் செய்யாதபடி திட்டிக் கொண்டிருக்கின்றான்.

இது நடந்த நிகழ்ச்சி. அப்படியே இந்த உணர்வைப் படம் பிடித்துக் காட்டுகின்றார் குருநாதர்.

இதைப் போன்று மூன்று இலட்சம் பேரைக் (குடும்பங்களைக்) காண்பித்து “மனமே இனியாகிலும் மயங்காதே…!” என்ற பாட்டின் மூலமாக எனக்கு ஒவ்வொரு நிமிடமும் உண்மைகளைத் தெரியும்படிச் செய்தார். அறிய வைத்தார்.

மின்னலைப் போலே மறைவதைப் பாராய்
நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ
நிலையில்லாத இந்த உலகம் உனக்குச் சதமா…?
நிலை இல்லாத இந்த உலகத்திற்கு “நீ ஏன்டா (என்னிடம்) வாதாடுகிறாய்…?” என்று மெய்ப் பொருளைக் காட்டுவார்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 120

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர்கள் தியானம் என்றால் என்ன என்பதையும் தவத்தையும் விண் செல்லும் அந்தப் பாதையையும் எனக்கு (ஞானகுரு) அனுபவபூர்வமாகக் கொடுத்தார்.

அதை மீண்டும் மீண்டும் உங்களுக்குள் பதிவு செய்து ஞாபகப்படுத்துகின்றோம். மெய் ஞானிகள் சென்ற வழியில் நாம் விண் செல்ல வேண்டும்.

நம்மைப் பார்க்கின்றவர்களுக்கெல்லாம் அந்த நல்ல நிலைகள் ஏற்பட வேண்டும் என்ற இந்த உணர்வை வளர்த்துக் கொண்டால் நமது ஆன்மாவில் இது பெருகுகின்றது.

நமக்குள் அது பெருகும் பொழுது எந்த விஷத் தன்மையும் நமக்குள் வளராது. மகரிஷிகளின் உணர்வுகள் நம் ஆன்மாவாக மாறும் போது அதே உணர்வின் இயக்கமாக நம் உடலும் நினைவும் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் தொடர்பு கொள்கின்றது.

சப்தரிஷி மண்டலத்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட பின் நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிராத்மாக்களை உந்தித் தள்ளி அங்கே இணைக்க வேண்டும்.

மூதாதையர்கள் குலதெய்வங்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தால் அவர்கள் முதலில் மகரிஷியாகின்றார்கள்.

அவர்களைப் பின் தொடர்ந்து நாமும் விண் செல்ல முடியும். நாமும் மகரிஷியாக முடியும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 119

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இனி வரும் காலங்களில் சிந்திக்க நேரம் இருக்குமா…? என்று சொல்ல முடியாது.

மெய் ஞானிகள் பெற்ற தீமையை வென்ற அருள் சக்திகளை உங்களுக்குள் திரும்பத் திரும்பப் பதிவு செய்கின்றோம். யாம் சொல்லும் அருள் ஞான உபதேசங்களை அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.

இதைக் கேட்டுணர்ந்தோர் உங்கள் வாழ்க்கையில் எத்தகைய துன்பம் வந்தாலும் ஆத்ம சுத்தி செய்யுங்கள். அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகருங்கள். சுவாசித்து உங்கள் உடலுக்குள் இணையுங்கள்.

அந்த உயர்வான எண்ணத்தை எடுத்து நீங்கள் விடும் மூச்சலைகள் உங்கள் குடும்பத்திலுள்ளோர் அனைவரையும் மகிழச் செய்ய வேண்டும். உலக மக்கள் அனைவருக்கும் நல்லதாக அமைய வேண்டும்.

நீங்கள் பேசும் பேச்சு என்பது “செய்யும் தொழிலே தெய்வம்” போல் என் மூச்சுப் பட்டால் மற்றவர்களின் துன்பங்கள் போய்விட்டது என்ற நிலைக்கு வளர வேண்டும்.

இந்த மாதிரிச் செய்து பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 118

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்று புருவ மத்தியிலிருக்கும் உயிரை எண்ணி 27 நட்சத்திரங்களின் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

27 நட்சத்திரங்களையும் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் (ஞானகுரு) காட்டும் பொழுது அந்த 27 நட்சத்திரத்தையும் எப்படித் தொட வேண்டும் என்று எனக்கு அந்தப் பக்குவத்தைக் கொடுத்தார்கள்.

இதை எதனுடன் இணைக்க வேண்டும்…? அதை எடுத்தால் அந்தக் கதிரியக்கங்கள் உன்னை எப்படிச் சுடாதிருக்கும்…? அந்தக் கதிரியக்கங்கள் உன்னைத் தொடாதிருக்கும்…? என்பதையும் காட்டினார் குருநாதர்.

அதன் வழி கொண்டு பிரார்த்தனை செய்து விட்டுத் தான் குருவின் துணை கொண்டு 27 நட்சத்திரங்களின் சக்திகளை நான் கவர்கின்றேன்.

கவர்ந்த அந்த நிலை கொண்டு தான் 27 நட்சத்திரத்தின் சக்தி நீங்கள் பெறவேண்டும் என்று நான் எண்ணும் பொழுது உங்களை எண்ணச் சொல்லி – இந்த இணைப்புடன் அதை ஊழ் வினையாக உங்களுக்குள் சிறுகச் சிறுகப் பதியச் செய்கின்றேன்.

அதை உங்களுக்குள் கிடைக்கப் பெறச் செய்வதற்கும் அந்த 27 நட்சத்திரங்களின் ஆற்றல்களையும் சமப்படுத்தும் நிலைக்கும் கொண்டு வருகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 118 png

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு உணர்வுகளை ஒளியாக மாற்றும் தன்மையை இந்த மனித உடலில் இருந்து தான் கருவாக்கினான் அகஸ்தியன்.

அகஸ்தியன் தான் துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்….!

இந்த உடலை விட்டுச் சென்றால்… “என்றும் நிலையான… ஒளியின் சரீரமாக இருக்க முடியும்…!” என்ற அந்த நோக்கத்துடன் எவர் வருகின்றனரோ அவர்கள் அனைவருமே நிச்சயம் அகஸ்தியனைப் போன்று பெற முடியும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 117 png.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

நமது சூரியக் குடும்பத்தில் பூமியில் உருவான மனிதன் சில் உண்மைகளைக் கண்ட பின் மின்னல்கள் தாக்கி கடல்களிலே படும்போது மணல் ஆவதை அதற்குள் இருக்கும் நிலையை வடிகட்டி கதிர் இயக்கப் பொறிகளாக மாற்றுகின்றான்.

இன்று அணு குண்டுகளாகவும் லேசர் கதிரியக்கங்களாகவும் அதை உருவாக்கி விட்டார்கள்.

தன்னுடைய உடல் ஆசைக்காக வேண்டி நாட்டு ஆசைக்காக வேண்டி உலகை அழித்திடும் தன்மைகளாக அது இந்த உலகம் முழுவதற்கும் பரவி விட்டது.

நம் பூமியில் விளைவதை சூரியன் கவர்ந்தாலும் அது கவர்ந்து செல்லும் பாதையில் மற்ற கோள்களும் இந்தக் கதிரியக்கங்களை கவர்ந்து இன்று நமது பிரபஞ்சமே கதிர் இயக்கமாக மாறிவிட்டது.

மனிதனின் விஞ்ஞான அறிவால் ஏற்படுத்தப்பட்ட இந்த நிலையால் உலகமே இருள் சூழும் நிலைக்கு வந்து விட்டது. சூரியனும் சிறுகச் சிறுக செயல் இழந்து கொண்டு இருக்கின்றது. அது செயலிழக்கும் பொழுது அதனுடன் சேர்ந்த நம் பூமியும் அது செயல் இழக்கும்.

இங்கே வாழும் மனிதர்களும் அசுர உணர்வு கொண்டு தீவிரவாதம் என்ற நிலைகளில் ஒருவருக்கொருவர் கொன்று சாப்பிடும் நிலை வருகின்றது.

பாதரசங்களை உருவாக்கும் சூரியனுக்குள் விஞ்ஞானக் கதிரியக்கச் சக்திகள் கலக்கப்பட்டு அந்த பாதரசங்களைக் கருகிய விஷத் தன்மையாக மாற்றி உமிழ்ந்து கொண்டுள்ளது.

சூரியன் செயல் இழக்கும் தன்மையால் சூரியனால் உருவாக்கப்பட்ட இந்தப் பிரபஞ்சமும் செயலிழக்கும் நிலை ஆகின்றது. நான் (ஞானகுரு) சொல்வது வெறும் சொல்லாகச் சொல்லவில்லை.

இந்த உணர்வுகளை நீங்கள் பதிவாக்கிக் கொண்டு மீண்டும் அதை நினைவாக்கினால் சூரியனின் இயக்கத்தை நீங்கள் உணர முடியும். சூரியன் தொடர் கொண்டு இந்தப் பிரபஞ்சம் இயங்குவதையும் நீங்கள் உணர முடியும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 116 png

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உங்களுக்கு யாம் “படிப்படியாக.., சிறுகச் சிறுகச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்”. எல்லாம் “பூரணமாகச் சொல்ல வேண்டும்..,” என்றால் காலம் இல்லை.

ஏனென்றால், குருநாதர் எனக்குள் பதிவு செய்த பேருண்மைகள் “எண்ணிலடங்காதது..,” இந்த மனித உடலுக்கு ஆயுள் பத்தாது.

அவ்வளவு பெரிய அண்டத்தின் (பிரம்மாண்டத்தின்) உணர்வுகள் பதிவு செய்ததை “எல்லோருக்கும் கிடைக்கச் செய்யவேண்டும்” என்று அவ்வப்பொழுது துணுக்குத் துணுக்காக எடுத்துக் கொடுக்கின்றோம்.

ஆக, அந்த நினைவைக் கூட்டும் பொழுது உணர்வை ஒளியாக்கி உணர்வின் தன்மை எண்ணமாக்கி அதனின் நிலைகளைத்தான் செயல்படுத்துகின்றோம்.

ஒவ்வொரு நிலைகளிலும் ஒவ்வொரு ரூபத்திலும் குருநாதர் காட்டிய அருள் வழியை அவர் பதிய வைத்த உணர்வின் ஏட்டை நினைவு கொள்ளும் பொழுது எனக்குள் உணர்த்தி அந்த உணர்வின் தன்மையை அவரே தான் இங்கே வழி நடத்துகின்றார்.

ஏனென்றால், என்னுள் அவர் இருந்து அல்ல.

“அவர் பதிவு செய்த நாடாவாக..,” (MEMORY DISC) நான் எண்ணும் பொழுது உணர்வுகள் இயக்கப்பட்டு அது பெறப்பட்டு “நீங்கள் பெறவேண்டும்.., என்று அவர் செய்த உணர்வைத் தான்..,” நான் செய்கின்றேன்.

அவருடைய உணர்வுகள் தான் என்னைச் செய்ய வைக்கின்றது.

ஆகவே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளை நாம் அனைவரும் பெறுவோம். குரு காட்டிய அருள் வழிகளில் நாம் செல்வோம்.

இந்த மனித வாழ்க்கையில் அருள் ஞானிகளின் உணர்வைப் பெறுவோம். மகிழ்ச்சி பெறும் நிலையை இந்த உடலுக்கு மகிழ்ச்சி பெறச் செய்வோம். நாம் பார்க்கும் அனைவரது உடல்களையும் மகிழச் செய்வோம்.

மகரிஷிகளின் அருள் உணர்வுடன் ஒன்றியே இந்த வாழ்க்கையை வாழ்வோம். என்றும் பேரானந்த நிலைகள் பெற்று பெரு வாழ்வாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளுடன் வாழும் நிலையை நாம் உருவாக்குவோம்.

இதைப் படித்துணர்ந்தோர் அனைவரும் அவர்கள் வீட்டில் மகிழ்ச்சி போங்கும் நிலைகளாக உருவாகும். கணவன் மனைவி இருவரும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்திட குரு அருளும் எமது அருளும் உறுதுணையாக இருக்கும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 115 png

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும் என்றுமே அழிவதில்லை. எத்தகைய நஞ்சானாலும் அதை மாற்றி விடுகின்றது.

நம் பூமியின் துருவத்திற்கு நேராக இருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எப்போதும் நீங்கள் பெறலாம். நீங்கள் அதைப் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்தத்தான் அடிக்கடி வலியுறுத்துகின்றோம்.

உங்கள் நினைவாற்றலை அங்கே துருவ நட்சத்திரத்துடன் இணைக்கச் செய்கின்றோம். பதிவு செய்து கொள்ளுங்கள். பதிவான பின் நினைவைக் கூட்டி நஞ்சை வென்று உணர்வை ஒளியாக மாற்றும் திறன் நீங்கள் ஒவ்வொருவரும் பெற முடியும்.

விஞ்ஞான அறிவு ஒரு பக்கம் விஷத்தைப் பரப்பினாலும் அதில் இருந்து மீட்டுக் கொள்ளும் அரும் பெரும் சக்தியாக உங்களுக்குள் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியை உபதேசிக்கின்றோம். இப்பொழுது பதிவாகின்றது.

இதனை நீங்கள் நினைவு கூறுங்கள். கூட்டுத் தியானம் செய்யுங்கள் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று பாய்ச்சுங்கள். கருவிலே வளரும் சிசு இதைப்பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

இதைப்போல எண்ணி இவ்வுலகில் வரும் விஷத் தன்மைகளை மாற்றி இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து வாழ முடியும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 114

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

குருநாதர் ஏகாந்த நிலைகள் கொண்டு ஒளியின் சுடராக ஒளியின் சரீரமாகி எந்த உடலின் ஈர்ப்புக்குள்ளும் சிக்காது இந்த உடலை விட்டுப் பிரிந்து சென்றார் (1971).

ஒளியின் சுடராக அவர் தனக்குள் மலரச் செய்து மனித வாழ்க்கையில் வந்த இருள் சூழ்ந்த நஞ்சினை மாய்க்கும் ஆற்றல்மிக்க சக்திகளை  அவர் வெளிப்படுத்தியுள்ளார்,

அந்த உணர்வலைகள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு இந்தப் பூமியில் சுழன்று கொண்டிருக்கின்றது. அவர் விண் சென்றது போல் நீங்கள் அனைவரும் அந்த ஆற்றல்களைப் பெறவேண்டும் என்ற நிலைக்குத்தான் “குரு பூஜை”.

”குரு…” என்பது நாம் எதை ஆழமாகப் பதியச் செய்கின்றோமோ அதை மீண்டும் செய்ய எண்ணும் பொழுது அது குருவாக நின்று நமக்குள் செயல்படுத்துகின்றது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தன் உணர்வுகளை ஒளியாக மாற்றி ஒளியின் சுடராகச் சென்ற அந்த நாள் தான் வைகுண்ட ஏகாதசி.

அவர் ஒளிச் சரீரத்தைப் பெற்றபின் தான் உடலை விட்டுச் செல்லும்போது “என்னைக் கண்ணுற்றுப் பார்க்கச் செய்தார்”.

இந்தப் பூமிக்குள் நான் வாழ்ந்த காலங்களில் எத்தனையோ உணர்வு கொண்டு எல்லோரிடமும் பழகினேன். அதே சமயம் எல்லோருடைய நோய்களையும் நீக்கவும் உதவினேன்.

அவர்கள் அனைவரும் என் பால் பற்றுதலும் கொண்டார்கள். இருப்பினும் அவர்களுடைய பாச உணர்வுக்குள் சிக்காது அவர்கள் எண்ணும் ஏக்கம் என்னை இயக்காது அவர்களுக்குள் உள்ள இருள்களை நீக்கிடவும் மெய்ப் பொருள் காணும் சக்தி அவர்கள் பெறவேண்டும் என்ற நிலைக்குத்தான் என் உணர்வுகள் செயல்பட்டது.

இந்த உடலை விட்டு (உயிரான்மா) “நான் செல்கின்றேன்”. ஒளியின் சுடராக எவருக்கும் சிக்காது இந்த உயிரான்மா எப்படிச் செல்கிறது என்று “பார்…” என்று உணர்த்தினார்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 113

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் இணைக்கப்படும் பொழுது அந்த நஞ்சினை ஒளியாக மாற்றி அறிவின் ஞானமாகவும் இந்த மனித வாழ்க்கையில் இருளை வென்றிடும் உணர்வும் அந்த மெய்ஞானிகளுடன் ஒன்றும் வலிமையும் நமக்குக் கிடைக்கின்றது. அதைப் பெறச் செய்வதற்காகத்தான் இதை உபதேசிக்கின்றோம்.

ஆகவே மறவாதீர்கள். உங்களை மனிதனாக உருவாக்கிய உயிரை ஈசனாக மதித்து அவனால் உருவாக்கப்பட்ட இந்த மனித உடலைக் காத்திட வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுங்கள்.

இந்த உடல் உங்களது அல்ல. உயிரால் தான் உருவாக்கப்பட்டது.

அறிவால் உணரப்பட்ட உணர்வின் தன்மை “தன்னை யார்…? என்று அறிந்து தனக்குள் விளையும் தீமைகளை நாம் அகற்றக் கற்றுக் கொண்டால் நம்மை இயக்கிய நம்மை உருவாக்கிய உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக என்றும் நிலைத்திருந்து பிறவியில்லா நிலைகளை அடையலாம்.

யாம் உபதேசத்தின் வாயிலாகப் பதிவாக்கும் நிலைகளை நீங்கள் ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டு மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் அதைப் பெற முடியும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 112

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

“சாமி…” (ஞானகுரு) உங்கள் உணர்வுக்குள்ளே தான் இருக்கிறேன்.

குருவின் உணர்வை நீங்கள் பெற்றீர்கள் என்றால் அந்த உணர்விலிருந்து எல்லாமே நீங்கள் பெறலாம் அந்த நிலையை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தான் திரும்பத் திரும்பச் சொல்கின்றேன்.

சாமியாரைப் பார்த்து.. அவரைப் பார்த்து… இவரைப் பார்த்து… கடைசியில் “சாமியார் தான் எல்லாவற்றையும் மீட்டிக் கொடுப்பார்…” என்று நினைக்கிறீர்கள்.

அருள் ஞானியின் உணர்வை நீங்கள் நுகர்ந்தால் உங்கள் எண்ணம் உங்கள் உடலுக்குள் இருக்கும் பகைமை உணர்வை நீக்குகின்றது. உங்கள் உடலை நலமாக்குகின்றது. உங்கள் வாழ்க்கையை உயர்த்துகின்றது.

இந்தப் பழக்கங்கள் வரவேண்டும்.

ஒரு இடத்தில் அழுக்குத் தண்ணீர் இருக்கிறது என்றால் அதைத் தூய்மைப்படுத்துகின்றோம். இன்னும் கொஞ்சம் இருக்கிறது அதையும் தூய்மையாக்கிப் பழக வேண்டும் என்ற நிலைக்கு நீங்கள் அனைவரும் வரவேண்டும்,

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அருள் சக்திகளை பெற்று உங்கள் வாழ்க்கையில் தீமைகள் புகாது ஒவ்வொரு நொடியிலும் விழித்திருத்தல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 111

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மெய்ஞானிகளைப் பற்றி யாம் உபதேசிக்கின்றோம். மகரிஷிகள் தீமைகளை வென்று ஒளியாக மாற்றிய உணர்வை வெளிப்படுத்தும் பொழுது அந்த உணர்ச்சிகள் தூண்டி உங்களை மேல் நோக்கிச் சுவாசிக்க வைக்கின்றது.

அதைப் பெறவேண்டும் என்று நீங்கள் எண்ணி ஏங்கும் பொழுது கிடைக்கவேண்டும் என்று பெருமூச்சாக அமைந்து அந்த ஆற்றல் கிடைக்கின்றது.

சிலர் அடி பணியும் நிலைகள் கொண்டு கீழ் நோக்கி எண்ணிச் சுவாசிக்கின்றார்கள். மேல் நோக்கி எண்ணி எடுப்பதற்கு பதில் கீழ் நோக்கி எடுக்கும் பொழுது சாதாரண மனிதருடைய உணர்வைத்தான் பெற முடியும்.

ஏனென்றால் நாம் பெறவேண்டிய ஆற்றல் விண்ணிலே இருக்கின்றது. விண்ணின் ஆற்றல் நீங்கள் பெறவேண்டும் என்று நான் தியானிக்கும் பொழுது நீங்களும் அதே வழியில் எண்ணினால் அந்தச் சக்திகளைப் பெறுவது எளிதாக இருக்கும்.

சாதாரண வாழ்க்கையில் பெரியவர்களுக்குப் பாத பூஜையும் பாத நமஸ்காரமும் கும்ப அபிஷேகமும் செய்து அடிபணிந்தே பழகி விட்டோம்.

நமக்குள் வரும் இந்த ஆசை நம்மை அறியாமல் இருள் சூழச் செய்யும் நிலைகளுக்கே அழைத்துச் செல்லும். இந்த உயர்வு நமக்குத் தேவை இல்லை. உயர்ந்த எண்ணங்கள் தான் நமக்குத் தேவை.

நாம் எந்த உயர்ந்த உணர்வின் தன்மையைப் பெறவேண்டும் என்ற ஆர்வம் கொண்டு வருகின்றமோ அந்த உணர்ச்சியின் தன்மையை நாம் தூண்ட வேண்டும்.

பிறரைப் போற்றிப் புகழ்ந்து பேசித் துதிக்க வேண்டும். அப்படியெல்லாம் போற்றினால் தான் நமக்கு நல்லது கிடைக்க வேண்டும் என்ற நிலைக்கு நம் எண்ணங்கள் செல்லக் கூடாது.

மெய் ஒளி பெறும் உயர்வான எண்ணங்களை எடுத்து எடுத்து எடுத்து நம் உடலுக்குள் தீமையான உணர்வுகளையும் தீய வினைகளையும் (அவைகளை) அடிபணியச் செய்ய வைக்க வேண்டும். இது நம் பழக்கத்திற்கு வர வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 110

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தீமைகளை வென்று இன்றும் ஒளியின் சுடராக நிலையாக வாழ்ந்து கொண்டிருப்பது துருவ நட்சத்திரம். அதனைப் பின்பற்றித் தொடர்ந்து சென்றவர்கள் சப்தரிஷி மண்டலமாக இருக்கின்றார்கள்.

சப்தரிஷி மண்டலம் பூமியின் துருவப் பகுதியில் நின்று அந்தத் துருவப் பகுதியிலேயே இந்தச் சுழற்சியின் தன்மை வருகின்றது.

சப்தரிஷி மண்டலத்தை எடுத்துக் கொண்டால் துருவத்தினை மையமாகக் கொண்டு அதன் ஈர்ப்பு வட்டத்தில் தான் சுழன்று வரும்.

அது ஒரு வட்டமாக அமைந்திருக்கும்.

நம் பூமியில் மனிதனாக வாழ்ந்தவர்கள் ஒளியின் சரீரம் பெற்று சப்தரிஷி மண்டலத்திலிருந்து அதனின் உணர்வின் சத்தை இங்கே பரப்பிக் கொண்டுள்ளார்கள்.

அதை எடுத்துப் பழகியவர்கள் வெளிப்படுத்திய நிலைகள் பல உண்டு. நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அந்த ஆற்றல்மிக்க சக்தியைப் பெற்றவர்.

அதிலே கருவாகி உருவாக்கிய அணுவின் வித்தாக உருவான அந்த நிலையைத்தான் எமக்குள் பதிவு செய்து அதை நுகரும்படி செய்தார். நுகர்ந்த அந்த உணர்வின் சத்தைத்தான் இப்பொழுது உங்களுக்குள்ளும் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 109

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு அருளியது போன்று குரு காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் ஏங்கிப் பெற தியானிப்போம்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான  அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கிப் பெறுங்கள்.

கண்களைத் திறந்தே தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினைப் புருவ மத்தியில் வைத்து உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானிக்கவும்.

இப்பொழுது நமது குரு அருளும் அவர் கண்ட துருவ நட்சத்திரத்தின் உணர்வும் நீங்கள் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள். அந்த உணர்வுகள் உங்களுக்குக் காட்சியாகவும் கிடைக்கலாம். கிடைப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து ஏங்கும் பொழுது குரு அருளால் பெறப்பட்ட அந்த ஆன்மாவை நீங்கள் உணர முடியும். காட்சியாகவும் பார்க்க முடியும்.

நமது குரு அருளும் துருவ நட்சத்திரத்தின் உணர்வும் இப்போது உங்கள் சுவாசித்திற்குள் வரும். உங்கள் உடலுக்குள் மகிழ்ச்சியூட்டும் நல்ல உணர்ச்சிகள்  உருவாகும்.

உங்கள் இரத்த நாளங்களில் அந்த அரும்பெரும் சக்தி உடல் முழுவதும் அது சுழன்று வரும் அந்த உணர்ச்சிகள் உங்களில் தோன்றும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 108

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒவ்வொரு நிமிடமும் “மெய்ஞானியின் அருள் ஒளியை…” யாம் உபதேசிக்கும் பொழுது நமது குருநாதர் காட்டிய நிலைகள் கொண்ட புலனறிவுகள் ஐந்திலும் கண்ணின் பார்வையிலும் உணர்வைச் செலுத்தி உங்கள்பால் யாம் செலுத்துகின்றோம்.

நீங்கள் எந்த ஏக்கத்துடன் வருகின்றீர்களோ அந்த ஏக்கத்திற்குள் நாம் இதைப் பாய்ச்சச் செய்கின்றோம். இதைப் போன்ற உணர்வின் வேகம் கொண்டு குருநாதர் காட்டிய அருள் வழிப்படி யாம் உங்கள் ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து உங்கள் உயிரான காந்தத்துடன் தொடர்பு கொள்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியை முதலில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டு மெய்ஞானியின் அருள் சக்திகளை யாம் சுவாசிக்கின்றோம்.

அவ்வாறு சுவாசிக்கும் பொழுது எனது புலனறிவான ஐந்திலும் அது பாய்கின்றது. அதே சமயம் எனது உணர்ச்சியின் சொல்லின் வடிவிலும் அது வருகின்றது. அவ்வாறு வரும் நிலைகளைத்தான் உங்களுக்குள் யாம் எண்ணிப் பாய்ச்சுகின்றோம்.

அதைப் பெறவேண்டும் என்று சமமாக எண்ணும் பொழுது உங்களுக்குள் இது ஆழமாகப் ப்திவாகின்றது. எண்ணும் போது அந்தச் சக்தி உங்களுக்குக் கிடைக்கும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 107

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த மனித உடலுக்குப் பின் அடுத்து நம்முடைய எல்லை எது? என்று ஒரு முடிவிற்கு ஒவ்வொருவரும் வர வேண்டும். ஏனென்றால் நமது எல்லை அந்தச் சப்தரிஷி மண்டலம் தான்.

இந்த வாழ்க்கையில் வரக்கூடிய எத்தகைய தீமையாக இருந்தாலும் உடனுக்குடனே இது மாற்ற வேண்டும்.

மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்..?

கெட்டதைப் பார்க்கின்றோம். அதைத் தெரிந்து கொள்கின்றோம். ஆனால் அந்தத் தீமையான உணர்வு நமக்குள் பதிந்து விடக்கூடாது.

கெட்டது விளையாமல் தடுப்பதற்குத்தான் உங்களுக்கு சக்தி கொடுக்கின்றோம். அதை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

வெளியிலிருந்து உள்ளுக்குள் புகும் தீமைகளை “ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் எண்ணி அதை இடைமறித்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று இதை இணைக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 106

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய உணர்வைத்தான் உங்களுக்குள் ஏங்க வைத்து அதை நுகரச் செய்து அந்த வலிமையை ஊட்டிக் கொண்டிருக்கின்றோம்.

இந்த வலிமையின் துணை கொண்டு உங்கள் உடலிலுள்ள அணுக்களுக்கு இந்தச் சக்தியை ஊட்ட முடியும்.

உங்கள் கண்ணின் நினைவினை துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள். துருவ நட்சத்திரம் எப்படி இருக்கும் அது எங்கே இருக்கும் என்று எண்ண வேண்டியதில்லை.

உதாரணமாக உங்கள் நண்பர் ஒருவர் அமெரிக்காவில் எங்கேயோ இருக்கின்றார். அவர் இந்த மாதிரி எல்லாம் அவஸ்தைப்படுகின்றார் என்று கேள்விப்பட்டவுடன் உங்களுக்குள் பதிவாகின்றது.

அது நினைவாகும் பொழுது என்ன செய்கின்றது? அவர் அங்கே “எப்படிச் சிரமப்படுகின்றாரோ..! என்ன செய்கின்றாரோ..?” என்று அந்த உணர்ச்சிகள் உங்களுக்குள்ளும் இயங்குகின்றது.

இதைப் போல துருவ நட்சத்திரம் எங்கேயோ இருக்கின்றது. உங்கள் கண்களால் பார்க்க முடியவில்லை. குருநாதர் எனக்குக் காட்டினார். பார்த்தேன்.

அவர் காட்டிய நிலைகள் கொண்டு அதனின் ஆற்றலைப் பெற்றேன். அந்த உணர்வினை இப்பொழுது உங்களுக்குள்ளும் பதிவாக்கிக் கொண்டேயிருக்கின்றேன்.

பதிவானதை நீங்கள் எண்ணினீர்கள் என்றால் அடுத்து உங்கள் கண்களாலேயும் பார்க்க முடியும். இப்பொழுது உபதேசித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த அருள் ஒளிகள் இங்கே படர்ந்து வருவதையும் உங்களால் பார்க்க முடியும். நீல நிற ஒளி அலைகள் சுழன்று வருவதைப் பார்க்கலாம்.

ஒரு வெல்டிங்கைத் (WELDING) தட்டினால் “பளீர்..,” என்று வெளிச்சமாவது போல் தெரியும். ஏனென்றால், பழக்கப்பட்டோர் உணர்வுகளில் இதைப் பெற முடியும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 105

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

முதுமை என்பது வயதால் வருவது அல்ல. அறுபது வயது…, எழுபது வயது… நான் முதுமை அடைந்து விட்டேன்..! என்று வெறும் வருடத்தால் கணக்கிட்டுச் சொல்வதல்ல…!

ஒரு தானியம் விளைந்தாலும் அதனின் முதிர்ச்சியின் தன்மையில் தன் இனத்தை உருவாக்கும் வித்தின் தன்மையாக அடைந்து அது மீண்டும் தன் வளர்ப்பின் வளர்ப்பாக வளர்க்கச் செய்யும் போது தான் அது முதுமை அடைந்தது (முதிர்ந்த வித்து) என்று சொல்ல முடியும்.

அதைப் போன்று தான் ஒரு உயிரின் தன்மை மனித உடலாக உருப் பெற்ற பின் அறிந்திடும் உணர்வு கொண்ட ஒளியின் சரீரம் பெற்ற மெய் ஞானியின் உணர்வைச் சேர்த்து உடலை முதுமையாக்கிவிட்டு உணர்வின் தன்மையை – நம்மை என்றும் இளமையாக்கும் நிலைக்கு வளர வேண்டும்.

(உடல் அழியக்கூடியது உயிர் என்றுமே அழியாதது)

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 104

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

எத்தனையோ கோடி மகரிஷிகள் விண் சென்றுள்ளார்கள். அவர்களுடைய உணர்வலைகள் எத்தனையோ உண்டு. அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் தகுதியை ஏற்படுத்துவதற்காகத்தான் இதை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

திரும்பத் திரும்ப இதைப் பதிவு செய்தாலும் “ஒவ்வொரு நேரத்திற்கும் ஒவ்வொரு உணர்வின் ஆற்றலை…” உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

ஒன்றை எடுத்து ஒன்றின் சக்தி வளர்ந்த பின் அதனின் துணை கொண்டு விண்ணின் நிலைகளை ஒவ்வொன்றையும் வளர்க்கும் நிலைக்கு நீங்கள் வர முடியும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 103

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஈஸ்வரபட்டர் எம்மிடம் சொன்னது:-

ஒவ்வொரு நொடியிலேயும் ஒருவர் வேதனைப்படுகின்றார் என்று நாம் பார்த்து அதனை நுகர்ந்து விட்டால் வேதனையிலிருந்து அவர் மீள வேண்டும் என்று தான் நீ எண்ணுதல் வேண்டும்.

அதே போல ஒருவன் தீங்கு செய்ய நினைத்தால் அதிலிருந்து அவன் மீள வேண்டும் என்று தான் நீ எண்ண வேண்டும்.

நான் கொடுத்த அருள் சக்தியின் துணை கொண்டு அவர்களைத் தீமையிலிருந்து மீட்க வேண்டும். வேதனைகளிலிருந்து மீட்க வேண்டும் என்று உணர்த்தினார் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

உங்களுக்கும் இதைத்தான் யாம் தெளிவுபடுத்துவது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் பெறுங்கள். அந்த உணர்வின் தன்மை கொண்டு தீமையான உணர்வு நுகர்ந்ததைத் தூய்மையாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் ஆன்மாவைத் தூய்மையாக்கிக் கொள்ளுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 103

புருவ மத்தியின் இரகசியம் பற்றித் தெரிந்து கொள்வோம்

விண்ணுலகில் உள்ள ஞானிகளின் உணர்வைப் பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் உயிரிலே புருவ மத்தியிலே எண்ணும் போது அவர்கள் ஈர்ப்புக்குள் நாம் செல்கிறோம். அதைக் கவரும் ஆற்றலும் பெறுகின்றோம்.

புருவ மத்தியிலிருக்கும்… நம் உயிரை” எந்த அளவிற்கு அதிகமாக எண்ணுகின்றோமோ அந்த அளவிற்கு இயக்கச் சக்தியின் ஆற்றலைப் பெற்று எண்ணிய சக்தியைப் பெற முடியும்.

ஞானிகள் அவ்வாறு பெற்றுத்தான் இன்றும் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாகி துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் உள்ளார்கள்.

விண்ணிலிருந்து வரும் ஆற்றல்மிக்க சக்திகளை நுகர்ந்து உயிர் வழி நாம் சுவாசித்தால் உயிருடன் ஒன்றும் உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறும். ஒளியின் சரீரம் பெற முடியும்.

அகண்ட அண்டத்தில் என்றுமே அழியாத நிலைகள் கொண்டு மரணமில்லாப் பெரு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகளுடன் ஒன்றிட முடியும். சப்தரிஷி மண்டலத்தில் நாம் இணையலாம்.

அருள் உணர்வைப் பெருக்கினால் நமக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளை நாம் பார்க்க முடியும் பார்க்கும் சந்தர்ப்பம் கண்டிப்பாக வரும் என்றும் அந்த அகண்ட அண்டத்துடன் (2000 சூரியக் குடும்பம்) தொடர்பு கொண்ட உணர்வையும் நம்மால் உணர முடியும் என்றும் அதன் வழியில் நாம் எங்கே போக வேண்டும்…! என்ற உணர்வு வரும் என்பதையும் அதை வைத்து நாம் செல்ல வேண்டிய சப்தரிஷி மண்டல எல்லையை நிச்சயம் அடைய முடியும் என்றும் ஞானகுரு நமக்கு வழிகாட்டுகின்றார்கள். நாம் அதன் வழி செல்வோம்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… விண்ணிலிருக்கும் துருவ நட்சத்திரத்தின் பால் நம் நினைவைச் செலுத்தி… துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி… அதிலிருந்து வரும் பேரருள் பேரொளியைப் பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 102

புருவ மத்தியின் இரகசியம் பற்றித் தெரிந்து கொள்வோம்

பேசுவதற்கு முன் “மைக்கைச் (MIC)” சரி செய்து வைத்துக் கொள்கின்றோம். அது சரியாக இருந்தால்தான் பேசுவதை அது கிரகித்து ஒலியைப் பெருக்கிக் காட்ட முடியும்.

இதைப் போல “ஓ..ம் ஈஸ்வரா குருதேவா…” என்று புருவ மத்தியில் அடிக்கடி எண்ணினால்தான் நம் உயிரின் இயக்கம் உயிர் வழி சுவாசமாக அமையும்.

ஏனென்றால் இந்த உலகத் தொடர்பு கொண்ட மற்ற உணர்வுகள் நம் ஆன்மாவாக இருக்கப்படும் பொழுது அந்த நிலைகள் நமக்குள் இயங்காதவண்ணம் அதைத் தடுத்து நிறுத்தவும்… நம்முடைய எண்ண ஏக்க அலைகள் ஞானிகளின் உணர்வுகளை எலும்புக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்வதற்கும்… ஓ…ம் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணினால் தான் அது மிகவும் ஏதுவாக இருக்கும்.

“எண்ணிலடங்காத உணர்வின் சுழற்சிகள்” நம் ஆன்மாவில் உண்டு. அதையெல்லாம் நம் சுவாசத்திற்குள் வராதபடி தடுத்துவிட்டு மெய் ஞானிகளின் உணர்வை உள் புகுத்துவதற்காகத்தான் நாம் எல்லோரும் சேர்ந்து ஒரே உணர்வாக ஓ..ம் ஈஸ்வரா… குருதேவா…” என்று சொல்கிறோம்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… விண்ணிலிருக்கும் துருவ நட்சத்திரத்தின் பால் நம் நினைவைச் செலுத்தி… துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி… அதிலிருந்து வரும் பேரருள் பேரொளியைப் பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 101

புருவ மத்தியின் இரகசியம் பற்றித் தெரிந்து கொள்வோம்

உயிரின் உணர்வின் தன்மை கொண்டு அழியா ஒளிச் சரீரம் பெற்ற அருள் ஞானிகளின் உணர்வைப் பெற வேண்டும் என்றால் நாம் உயிரை அவசியம் மதித்துப் பழக வேண்டும். ஞானிகள் உணர்த்தியபடி அதை நாம் பின்பற்ற வேண்டும்.

இப்படி ஒவ்வொருவரும் அவரவர்கள் உயிரைப் புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி அந்த உணர்வின் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா என்று திரும்பத் திரும்பச் சொல்வது. அதே போல் எண்ணியதை.., எண்ணியவாறு நடத்தித் தரும் “நாயகன்… நம் உயிர் தான்..” என்பதை நாம் உணர்தல் வேண்டும்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… விண்ணிலிருக்கும் துருவ நட்சத்திரத்தின் பால் நம் நினைவைச் செலுத்தி… துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி… அதிலிருந்து வரும் பேரருள் பேரொளியைப் பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 100

புருவ மத்தியின் இரகசியம் பற்றித் தெரிந்து கொள்வோம்

ஈஸ்வரா என்றாலே புருவ மத்தியில் நம் உயிரைத்தான் நினைவில் கொள்ள வேண்டும். ஈசன் எங்கேயோ இருந்து நம்மை இயக்குகின்றான் என்று வெளியிலே தேட வேண்டியதில்லை. வெளியிலே நினைவு செல்ல வேண்டியதில்லை.

குரு என்றால் உடலில் உள்ள அனைத்திற்கும் குருவே அவன் தான். ஏனென்றால் உயிர் ஒளியாகப் பெற்றவன். குரு ஒளியாக இருக்கின்றான். அந்த ஒளியின் நிலை பெற வேண்டும் என்ற ஆறாவது அறிவின் தன்மை கொண்டு எண்ணினால் குருவை நாம் மதிக்கின்றோம் என்று பொருள்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… விண்ணிலிருக்கும் துருவ நட்சத்திரத்தின் பால் நம் நினைவைச் செலுத்தி… துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி… அதிலிருந்து வரும் பேரருள் பேரொளியைப் பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 99

புருவ மத்தியின் இரகசியம் பற்றித் தெரிந்து கொள்வோம்

ஓ…ம் ஈஸ்வரா…! என்று எண்ணும் போது புருவ மத்தியில் உயிரைப் பரிபூரணமாக எண்ண வேண்டும். குருதேவா என்கின்ற போது உடலுக்குள் இருக்கும் அனைத்து குணத்திற்கும் நம் உயிரே “குரு…” என்ற நிலைகளில் மதித்துப் பழக வேண்டும்

ஈசனாக இருப்பதும் உயிரே
விஷ்ணுவாக இருப்பதும் உயிரே
கடவுளாக இருப்பதும் நமது உயிரே
பிரம்மமாக இருப்பதும் உயிரே.
நாம் எண்ணியது எதுவோ அதைச் சிருஷ்டிப்பதும் நம் உயிரே,
எண்ணத்தால் கவர்ந்த உணர்வினைத் தன் ஆன்மாவாக மாற்றிக் கொள்வதும் “உயிரே”.
ஆன்மாவின் நிலைகள் அது உறையும்போது கடவுளாக உள் நின்று அதை உறையச் செய்யும் செயலாகச் செயல்படும் நிலைகளும் “உயிரே”.
நாம் எண்ணியது எதுவோ அதை உடலாக்குகின்றது நம் உயிர்
நாம் எண்ணியது எதுவோ அந்தச் சக்தியாக உள் நின்று மீண்டும் நம்மை இயக்குகின்றது.
நாம் எண்ணியதை ஆண்டு கொண்டிருப்பதும் ஆண்டவனாக இருப்பதும் நம் “உயிரே”.
நாம் எதை எண்ணுகின்றோமோ அதை வைத்து… அடுத்து…, “அவன் ஆட்சியும் நம்மை ஆளுவதும் அவனே”.

ஆகவே ஓம் ஈஸ்வரா குருதேவா என்கின்ற போது நம் உயிரின் இயக்கத்தைத் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். மந்திரம் சொல்கிற மாதிரிச் சொல்ல வேண்டியதில்லை.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… விண்ணிலிருக்கும் துருவ நட்சத்திரத்தின் பால் நம் நினைவைச் செலுத்தி… துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி… அதிலிருந்து வரும் பேரருள் பேரொளியைப் பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 98

பிருகு மாமகரிஷியின் அருள் சக்தியும் கொங்கணவ மாமகரிஷியின் அருள் சக்தியும் பெறுவோம்

கொங்கணவர் வந்து தங்கியிருந்த “இடம்” இன்றும் திருப்பதியில் உண்டு. அன்று திருப்பதி மலை மேலே சென்று அங்கே ஏழ்மையிலே வாழ்ந்து கொண்டிருந்த மங்கம்மாள் என்ற அந்தத் தாயிடம் உணவை உட்கொண்டு சிரமத்தின் எல்லைக்கே சென்று கடந்தபின் தான் ஒவ்வொரு நிமிடமும் தான் எடுத்துக் கொண்ட அகங்காரத்தை அழித்துவிட்டு, மனதைத் தங்கமாக்கும் நிலைக்கு வந்தார்.

தங்கத்திற்கு எவ்வளவு வலுவோ அடுத்த அழுக்கு அதிலே மாசுபடாத நிலைகளில் அது தங்கம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும். இதைப் போல தன் மனதில் எண்ணத்தை வலுக் கூட்டி அந்த உணர்வின் தன்மை கொண்டு உயிரான ஒளியுடன் ஒளியைச் சேர்க்கும் நிலையையே அன்று கொங்கணவ மாமகரிஷி பெற்றார்.

தான் எடுத்துக் கொண்ட ஆற்றல்மிக்க நிலைகள் கொண்டு ஒரு மனிதனுடைய துன்ப அலைகளை மாற்றியபின் அவர்கள் எண்ணும் “நல்ல எண்ணங்களினுடைய சுவாசமே” தன்னை அந்த “ஒளிச் சரீரம் பெறவைக்கும்” என்று உணர்ந்தபின் பிருகு தன் மனதைத் தங்கமாக்கக் கொங்கணவர் உடலிலே புகுந்து செயல்பட்டார்.

ஆகவே “மனதைத் தங்கமாக்குவதற்குத்தான்..” கொங்கணவர் உடலிலிருந்த பிருகு மகரிஷி ஒவ்வொரு வீட்டுக்கும் யாசகம் கேட்டுச் சென்றார்.  இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

முன்பு திருப்பதியில் வைத்திருந்த சிலை ஆறாவது அறிவினுடைய நிலைகள்தான் வெங்கடாஜலபதி சிலை வைத்தது பின்னாடி தான்.

அந்த ஆறாவது அறிவின் தன்மையைத் தன் உடலுக்குள் எடுத்து உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றும் நிலைகளுக்குத்தான் அன்று மனதைத் தங்கமாக்கும் நிலைகளில் செயல்பட்டார் கொங்கணவர்.

போகமாமகரிஷி எப்படி மனித உடலில் விஷத்தை நீக்கி மகிழ்ச்சியான உணர்வுகளைத் தான் பெறவேண்டும் என்று பழனியிலே செய்தாரோ இதைப் போலத்தான் திருப்பதியிலே கொங்கணவ மாமகரிஷி செய்தார்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… பிருகு மாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… கொங்கணவ மாமகரிஷியின் பால் நினைவைச் செலுத்தி அவர்களுடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 97

பிருகு மாமகரிஷியின் அருள் சக்தியும் கொங்கணவ மாமகரிஷியின் அருள் சக்தியும் பெறுவோம்

கொங்கணவர் உடலிலிருந்த பிருகு மகரிஷி முந்தைய அரச நிலைகளில் அவர எடுத்துக் கொண்ட மந்திரத்தால் சில நேரங்களில் இவரை எதிர்க்கும் நிலையில் யாராவது வந்தால் தன்னுடைய மந்திர சக்தி கொண்டு அவரை அச்சுறுத்தியோ அல்லது வீழ்த்தும் நிலைகளில்தான் செயல்பட்டார்.

ஒரு சந்தர்ப்பம்… ஒரு சமயம் மலர் சோலைகளுக்கு மத்தியில் நடந்து வரும் பொழுது கொக்கு ஒன்று பறந்து செல்லும் பொழுது அதனுடைய எச்சம் கொங்கணர் மீது பட்டுவிட்டது.

கொக்கு என்னை இப்படி அசுத்தமாக்கி விட்டது என்று தன் எண்ணத்தின் பார்வையால் அதனுடைய சிறகை ஒடித்து விடுகின்றான். ஆனால் அந்தக் கொக்கு ஒன்றும் தவறு செய்யவில்லை. இவர் முன்பு அரசன் அல்லவா…! அந்த உணர்வின் தன்மை அவரை விட்டு நீங்கவில்லை.

கொங்கணர் தான் கற்றுக் கொண்ட உணர்வுகள் கொண்டு வளர்ந்திருந்தாலும் போகும் பாதையில் தற்செயலாகத் தான் எச்சம் விழுந்தது என்று சிநதிக்க முடியவில்லை.

“பிச்சாந்தேஹி…!” என்று கேட்டுக் கொண்டு வாசுகி வீட்டிற்கு வருகின்றான். அங்கே வந்தவுடன் பல குரல் கேட்கிறது. தன்னைச் சொல்லி “ஆண்டவனை வழிபடுபவனை நீ கவனிக்கவில்லையே…!” என்று கொங்கணர் அகம் கொள்ளுகின்றான்.

ஏனென்றால் ஒரு வீட்டிற்குச் சென்று தான் பிச்சாந்தேஹி என்று யாசகம் கேட்பார்கள். (கிடைத்தாலும் கிடைக்கவில்லை என்றாலும் வேறு வீட்டிற்குச் செல்ல மாட்டார்கள்)

வாசுகி அம்மாவிற்குத்தான் சக்தி அதிகம், திருவள்ளுவருக்கு அல்ல. வாசுகி தன் ஆற்றல்மிக்க சக்தியின் துணை கொண்டு சொல்லும் உணர்வின் ஆற்றலைத்தான் திருவள்ளுவர் எழுதி வந்தார்.

வாசுகி அம்மாள் தன் சக்தியினுடைய நிலைகள் கொண்டு கொங்கணவர் நினைத்ததை உணர்கின்றார். அவர் வெளியே வருவதற்குச் சிறிது நேரமாகிவிட்டது.

இவர் முணுமுணுத்துக் கொண்டிருந்தார். யாசகம் கேட்க வந்தாலும் அந்த “அகங்காரம்” இவருக்குள் இருந்தது. ஏனென்றால் அன்று அரசராக இருந்தவர்.

மக்களுக்காகச் சேவை செய்கிறேன். எனக்குக் கொடுப்பதற்கு தாமதமாகின்றது என்ற மன உறுமல் ஏற்பட்டு முணுமுணுக்கின்றார்.

கொஞ்ச நேரம் தாமதமானவுடன் மனதிற்குள் உறுத்தல். ஏனென்றால் அரசாட்சி செய்தே பழக்கமானவர். இவர் எந்த நிலைக்கு மாறவேண்டும் என்றாலும் அங்கேயும் அந்த நிலைகளே வருகின்றது.

அப்பொழுதுதான் வாசுகி அம்மாள் இவரிடம், “கொக்கென்று நினைத்தாயா… கொங்கணவா…?” என்றார்.

அவர் கொக்கை வீழ்த்திய நிலைகளை… ஒரு சாதாரண கிராமத்திலே ஒன்றும் தெரியாத… “ஒரு பெண் சொல்கிறதே…” என்ற நிலையில் அதை உணர்த்தப்படும் பொழுது தான் அவருக்கு அங்கே “ஞானம்” வருகின்றது.

தான் அரசனாக (பிருகுவாக) இருக்கக்கூடிய காலத்தில் செய்த நிலைகளிலிருந்து மீண்டு தெளிவுபடும் நிலைகளுக்கு வந்தாலும் தான் மீண்டும் ஒரு உடலிலிருந்து தெளிவு பெறும் எண்ணம் வரவில்லை.

கொக்கின் இறக்கையை ஒடித்தது உனக்கு எப்படித் தெரிந்தது…? நீ எங்கே இதைக் கற்றுக் கொண்டாய்…! என்று கொங்கணர் கேட்கின்றார்.

கசாப்புக் கடைக்காரரிடம் கேள்..! என்கிறது வாசுகி. கசாப்புக் கடைக்காரனிடம் கேட்டால் தான் “உனக்குத் தெரியும்…!” என்று சொல்கிறது.

கசாப்புக் கடைக்காரன் என்ன செய்கிறான்…? ஆடை வெட்டி வியாபாரத்தைச் செய்கிறான். ஆட்டைக் கொல்லப் போகும் போது ஆட்டின் உயிர் அவனுக்குள் போய் அது மனிதனாகப் பிறக்கிறது.

ஆனால் ஆட்டைத் தின்றவன் உடலில் என்ன செய்கிறது…? ஆட்டை ரசித்துச் சாப்பிட்டவனை எல்லாம் ஆடாகப் பிறக்கச் செய்கிறது.

நீ கொக்கை வீழ்த்தினாய். உனக்குள் வீழ்த்திடும் சக்தி வருகிறது. அதைக் கொல்லும் உணர்வு கொண்ட பின் நீ அதே நிலையையே அடையப் போகின்றாய் என்று வாசுகி தன்னுடைய கவிப் புலமைகளில் “சொல்லாமல் சொல்கிறது…” அந்தச் சொல்லுக்குள் எவ்வளவு அர்த்தம் இருக்கிறது…?

வாசுகி அம்மாள் உணர்த்திய உணர்வின் அலைகள் வரப்படும் பொழுதுதான் கொங்கணவருக்குச் சிந்திக்கும் நிலைகள் வருகின்றது. அப்பொழுது தான் அவர் சிந்தித்து மனதைத் தங்கமாக்கும் நிலைகள் கொண்டு திருப்பதிக்கு வருகின்றார்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… பிருகு மாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… கொங்கணவ மாமகரிஷியின் பால் நினைவைச் செலுத்தி அவர்களுடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 96

பிருகு மாமகரிஷியின் அருள் சக்தியும் கொங்கணவ மாமகரிஷியின் அருள் சக்தியும் பெறுவோம்

கொங்கணவர் உடலிலிருந்து கொண்டு வீடு தோறும் சென்று யாசகம் செய்து அவர்கள் ஒவ்வொருவருடைய நிலைகளிலும் துன்பம் போக வேண்டும் அவர்கள் புனிதமாக வேண்டும் என்று செயல்பட்டு வந்தார்.

பிருகு அவ்வாறு யாசிக்கும் பொழுது அவர்கள் நலம் பெறவேண்டுமென்று எண்ணிச் செல்வார். அவர் வந்துவிட்டுச் சென்றபின், அவர்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாகின்றது.

அவர்கள் பட்ட துன்பங்கள் நீங்கி அங்கே நல்லதாகும் பொழுது, “அன்று பிருகு வந்து சென்றார், அதிலிருந்து என் குடும்பம் ஷேமமாக இருக்கின்றது” என்று மகிழ்ந்த உணர்வை அவர்கள் வெளிப்படுத்துகின்றார்கள்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… பிருகு மாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… கொங்கணவ மாமகரிஷியின் பால் நினைவைச் செலுத்தி அவர்களுடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 95

பிருகு மாமகரிஷியின் அருள் சக்தியும் கொங்கணவ மாமகரிஷியின் அருள் சக்தியும் பெறுவோம்

பிருகு இராஜ வம்சத்தில் பிறந்து மன்னராகச் செயல்பட்டவர். அவர் உலகையே… அண்டத்தையே ஆட்டிப் படைக்கும் நிலைகள் கொண்டவர். தான் வாழ்ந்த காலத்தில் எத்தனையோ இராஜ தந்திரங்களைச் செய்தார். எத்தனையோ நாடுகளை வென்றார். மந்திர சக்திகள் கொண்டு போர்முனைகளில் செயல்பட்டவர்தான்.

செல்வத்திலே செருக்கும் செருக்கின் நிலைகள் கொண்டு விண்ணின் ஆற்றலைத் தனக்குள் எடுத்துக் கொண்டவர். மந்திரம் என்ற நிலைகள் கொண்டு மதத்தின் அடிப்படையிலே மக்கள் மத்தியிலே செருகி அதன் வழியில் ஆற்றல் கொண்டு ஆட்சி புரிந்தவர்.

பிருகு மகரிஷி பல உடல்கள் மாறி மாறி  நாடிகளை எழுதி வைத்து அந்த நாடியின் தன்மையை மற்றவர் வாசிக்க அவ்வாறு வாசித்தவர் உடலுக்குள் பிருகு புகுந்து அந்த உடலின் தன்மையையும் தான் செயலாக்கி அந்த ஆற்றல் மிக்க சக்திகளைத் தேடி அலைந்தவர் தான்.

அன்று பிருகு மகரிஷி தான் எடுத்துக் கொண்ட நிலைகள் கொண்டு உலகையே ஆள வேண்டும் என்ற தன் அரசாட்சியினுடைய நிலையில் எவ்வளவோ கடுமையாக இருந்தும் கடைசியில் அரசைத் துறந்து தான் மெய் வழியைக் காண வேண்டும் என்ற நிலைக்குச் சென்றாலும் அவர் எடுத்துக் கொண்ட உணர்வு யானை தேய்ந்து கட்டெறும்பான மாதிரி விண் செல்ல முடியவில்லை. ஏனென்றால் மனித உணர்வுடன் அவர் சென்றதினாலே விண் செல்ல முடியவில்லை.

அவர் மீண்டும் கூடு விட்டுக் கூடு பாய்ந்ததிலேதான் இன்று நாம் “கொங்கணவ மாமகரிஷி” என்று சொல்கின்றோமே அவர் உடலில் புகுந்தார். திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் தான் அவர் கொங்கணவ மகரிஷியாக வந்தது.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… பிருகு மாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… கொங்கணவ மாமகரிஷியின் பால் நினைவைச் செலுத்தி அவர்களுடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 94

அத்திரி மாமகரிஷியின் அருள் சக்தியைப் பெறுவோம்

அத்திரி மாமகரிஷி அருளாற்றல்களை இந்தப் பூமியிலே எவ்வாறு பெற்றார்…? அவர் ஆற்றல் பெற்ற நிலைகள் கொண்டு தன் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றி எவ்வாறு விண் சென்றார்…? என்ற இந்தப் பேருண்மையை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு உணர்த்திய வழியில் அந்த ஆற்றலை நுகர்ந்த பின் அந்த ஆற்றலின் சக்தியை ஜெபத்தால் மேலும் பெருக்கி அந்த எண்ண அலைகளை எல்லோருக்கும் பதியச் செய்ய வேண்டும் என்ற ஆசையிலே தான் இதை வெளிப்படுத்துகின்றோம்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… அத்திரி மாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 93

அத்திரி மாமகரிஷியின் அருள் சக்தியைப் பெறுவோம்

அரசாட்சி காலங்களில் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் கண்டுணர்ந்து… இதையெல்லாம் வெறுத்து… இனி நாம் ஒவ்வொரு மக்களின் நல் எண்ணங்களை நாம் பெற்றால் தான்… நாம் விண் செல்ல முடியும்  என்ற நிலைக்கு வந்து அரச நிலையைத் துறந்து… காடு வனம் என்ற நிலைகளில் திரிந்து ஆற்றல் மிக்க சக்தியைத் தனக்குள் பெற்று… மக்கள் மத்தியிலே ஊடுருவி வந்து ஒவ்வொரு மக்களையும் மகிழச் செய்து… அந்த மகிழ்ச்சியான எண்ணத்தைத் தான் சுவாசித்து… அந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கித் தன் உயிராத்மாவின் நிலைகளை ஒளியாக மாற்றிச் சென்றவர் அத்திரி மாமகரிஷி.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… அத்திரி மாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 92

அத்திரி மாமகரிஷியின் அருள் சக்தியைப் பெறுவோம்

பெரிய அரசனாக இருந்த அத்திரி தன் வாழ்க்கையில் இருக்கக்கூடியதைத் துறந்து அந்த மெய் ஞானியின் அருள் ஒளி பெற வேண்டுமென்று மக்கள் மத்தியிலே வந்தான்.

பின் ஒவ்வொரு உயிரின் தன்மையில் அவர்கள் எடுத்துக் கொண்ட நல்ல எண்ணமும் அந்த நல்ல எண்ணத்தை நாம் பெற்றால் அந்த உணர்வின் ஆற்றல் கொண்டு மெய் உணர்வின் நிலைகளை நமக்குள் வளர்த்து அந்த மெய்யின் தன்மையான ஒளி நிலையைத் தான் பெற முடியும் என்ற பேருண்மையை அறிந்து உணர்ந்தவர்தான் அத்திரி மாமகரிஷி.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… அத்திரி மாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 91

அத்திரி மாமகரிஷியின் அருள் சக்தியைப் பெறுவோம்

அத்தி மரத்தின் நிழலிலே அத்திப் பழங்கள் எப்படி தன் தண்டுகளில் உருப்பெறுகின்றதோ அந்த உணர்வின் எண்ணத்தைக் கொண்டு ஒவ்வொரு அணுவிற்குள்ளும் அது தோன்றும் உணர்வின் நிலைகள் கொண்டு ஒவ்வொன்றிலும் உருப்பெறச் செய்ய முடியும் என்று தன் உணர்வின் தன்மை கொண்டு அரசனாக இருந்தவன் அத்திரி.

நாட்டின் நிலையும் தனது குடும்பத்தில் தன் மக்கள் தன்னுடைய அரசுக்குள் போர் முறைகள் கொண்டு தனக்கு இந்தச் சொத்து வேண்டும் அந்தக் சொத்து வேண்டும் என்றும் இந்த அரசுக்குள் போர் முறைகள் கொண்டு இந்த அரசனையே (அத்திரியை) திருப்பித் தாக்கும் நிலை வரும்போது தான் ஆற்றல் மிக்க மெய் நிலைகளை உணர்ந்து அரச சபையைக் கூட்டி அதன் வழிகளிலே அரசை நடத்தி அந்தப் பேரண்டத்தின் பேருண்மையின் நிலைகளைப் பெறமுடியும் என்று இருந்தாலும் அரசனான அவனால் பெற முடியவில்லை.

அவனுடைய குடும்பத்தில் மக்கள் எதிர்நிலைகள் செய்யும்போது, இவனது சிந்தனைகள் குலைந்து நாட்டிற்குள் தன் பிள்ளைகள் என்று வரும்போது மக்கள் மத்தியிலே பல கொடூரத் தன்மைகளை விளைய வைத்து மக்களின் நிலைகளில் எல்லை கடந்த நிலைகளாகி அவர்கள் பரிதவித்துக் கொண்டிருக்கும் நிலையும் மழை நீர் பெய்யாத நிலையும், அது தவித்துக் கொண்டிருக்கக் கூடிய நிலைகளில்தான் இந்த அரச நிலையே வேண்டியதில்லை என்று உணர்கின்றான்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… அத்திரி மாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 90

கோலமாமகரிஷியின் அருள் சக்தியும் ஆதிசங்கரரின் அருள் சக்தியும் பெறுவோம்

ஞானகுரு அவர்கள் சுமார் 6 வருட காலம் கொல்லூரில் இருந்தேன் என்று சொல்லி இருக்கிறார். அதற்குப் பின்பும் பல தடவை அங்கே சென்று வந்துள்ளார்.

அதாவது ஆரம்பத்தில் கோலமாமகரிஷி அவர்கள் கொல்லூரில் கடும் தவமிருக்கும் பொழுது அவர் உடலிலிருந்த வெறுப்புணர்வுகள் உயர்ந்த உணர்வுகளை எடுக்கவிடாது அவருடைய ஜீவான்மாவில் பதிவு செய்த நிலைகள் ஆன்மாவாக முன் நிற்கிறது. சுவாசித்த உணர்வோ தன்னைத் தான் வளர்த்துக் கொள்வதற்கு வேலை செய்கின்றது.

ஒவ்வொரு குணமும் தன்னை வளர்த்துக் கொள்ள முந்துகின்றது. முந்தும் பொழுது ஒரு நஞ்சான உணர்வை எடுத்துக் கொண்டால், நஞ்சின் தன்மை நல்ல குணங்களை அழிக்கும். தீமையை அகற்றும் சக்தியாக எடுத்தால், தீமைகளை அகற்றும் என்ற இந்தப் பேருண்மையை அறிந்து கொள்வதற்குத்தான் கோலமாமகரிஷி எதை எடுத்தார்…? எதை வெறுத்தார்…? எதை அறிந்தார்…? ஞானத்தால் எப்படித் தான் உணர்ந்தார்…? என்று அதை எல்லாம் அறிவதற்குத்தான் கொல்லூரில் பல வருட காலம் தங்கியிருந்து ஜெபமிருந்தோம் என்று ஞானகுரு சொல்கிறார்.

ஆகவே… அன்று கோலமாமகரிஷி எப்படி ஆதிசங்கரருடைய உடலிலிருந்து வெளிப்படுத்தினாரோ அதே உணர்வின் தன்மையை அவர்கள்தான் இங்கே இதை எல்லாம் வெளிப்படுத்துகின்றார்கள். அவ்வாறு அவர்கள் வெளிப்படுத்தும் அந்த உணர்வின் ஆற்றலைப் பெற நாம் தியானிப்போம்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… கோலமாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… ஆதிசங்கரரின் பால் நினைவைச் செலுத்தி அவர்களுடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 89

கோலமாமகரிஷியின் அருள் சக்தியும் ஆதிசங்கரரின் அருள் சக்தியும் பெறுவோம்

ஆதிசங்கரர் சொன்னது… உயிர் ஈசன்… எண்ணும் எண்ணங்கள் சுவாசிக்கும் பொழுது உயிரான ஈசனிடத்தில் அந்த சுவாசங்கள் பட்டு அது உறைகின்றது. எந்தெந்தக் குணங்களை எண்ணுகிறோமோ அந்த குணமே நம் உயிரில் பட்டு அபிஷேகமாக நடக்கின்றது

நாம் பாலைப் போல மனம் வேண்டுமென்று எண்ணினால் பால் எவ்வளவு தூய்மையான சத்தாக இருக்கின்றதோ அதைப் போல பிறருடைய எண்ணம் கண்டு கலக்கமில்லாத நிலைகள் ஏற்படுத்தி நல்லது செய்ய வேண்டும் என்று சுவாசிக்கும் போது அது உயிரிலே பட்டு அந்த உணர்வின் அலைகள் உயிரான ஈசனுக்கு அபிஷேகமாகின்றது. அந்த அலைகள் உடல் முழுவதற்கும் சென்றவுடன் நம் உடலிலிருக்கும் நல்ல குணங்களுக்கு அது மகிழ்ச்சியாக இருக்கும். இது தான் உயிரான ஈசனுக்குச் செய்ய வேண்டிய அபிஷேகம்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… கோலமாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… ஆதிசங்கரரின் பால் நினைவைச் செலுத்தி அவர்களுடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 88

கோலமாமகரிஷியின் அருள் சக்தியும் ஆதிசங்கரரின் அருள் சக்தியும் பெறுவோம்

அத்வைதத்தின் உண்மையினுடைய நிலைகளை அன்று ஆதிசங்கரர் சொல்லும்போது… துவைதவாதிகள் “நீ இந்த வேள்விகள் செய்யா விட்டால் அவஸ்தைப்படுவாய்…” என்று சொன்னார்கள். சொன்னதோடு மட்டுமல்லாது ஏவல் செய்து ஆதிசங்கரருக்கு வயிற்று வலி வரவைத்து விட்டார்கள்.

வயிற்று வலி வந்தபின் இவர் கடும் நிலைகளில் சுவாசித்து அத்வைத நிலைகளில் தன் வயிற்று வலியை நிவர்த்தி செய்தார். நிவர்த்தி செய்து அந்தத் தத்துவத்தை தன் நிலையை அங்கே நிலைநாட்டிக் காட்டுகின்றார்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… கோலமாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… ஆதிசங்கரரின் பால் நினைவைச் செலுத்தி அவர்களுடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra

கோலமாமகரிஷியின் அருள் சக்தியும் ஆதிசங்கரரின் அருள் சக்தியும் பெறுவோம்

நாம் சுவாசிக்கும் இந்த உணர்வின் தன்மைகள் எந்த குணத்தைக் கொண்டு சுவாசிக்கின்றோமோ அது உயிருடன் சேர்க்கப்படும்போது “விஸ்வ விநோதினி”,

அன்றைய துவைதவாதிகள் ஆதிசங்கரரை “நீ காசியில் இருக்கும் அந்த விநாயகருக்கு யாகங்கள் செய்து வந்தால்தான் நல்லது” என்கிறார்கள், ஆதிசங்கரர் அதைச் செய்ய வேண்டியதில்லை என்றார்.

உடலுக்குள் உணர்வின் எண்ணங்கள் உண்டு. எண்ணத்தாலே எடுத்து அதைச் சுவாசிக்கும்போது உயிரின் துடிப்பைக் கூட்டி மெய் ஞானியின் அருள் உணர்வைச் சுவாசிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டினார் ஆதிசங்கரர்

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… கோலமாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… ஆதிசங்கரரின் பால் நினைவைச் செலுத்தி அவர்களுடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 86

கோலமாமகரிஷியின் அருள் சக்தியும் ஆதிசங்கரரின் அருள் சக்தியும் பெறுவோம்

சூட்சம நிலையில் எடுத்துக் கொண்ட உணர்வின் அலையை அது எவ்வாறு செயல்படுகின்றது என்ற நிலையில் ஆதிசங்கரர் தன் தாயின் ஆற்றலைச் செயல்படுத்தும்போது பாடுகின்றார்… “ஐகிரி நந்தினி நந்திதமேதினி விஸ்வ விநோதினி நந்தினிதே”

ஒவ்வொரு அணுவுக்குள்ளும் ஐந்து அறிவின் புலனறிவு தான் அதாவது வெப்பம் காந்தம் விஷம் மணம் உணர்வு. வெப்பத்திற்குள் மறைந்திருக்கக்கூடிய காந்தம் அது ஈர்க்கும் சக்தி (1), ஆனால் அந்த வெப்பத்தை உருவாக்கும் அணுவின் தன்மையை அது பொருளைக் கொடுத்தவுடன் உருவாக்கவும் செய்கின்றது. அது மற்றதை மறைக்கவும் செய்கின்றது.

ஒரு உணர்வின் தன்மையை மறைத்து மாய்த்துவிட்டு ஒன்றைத் தனக்குள் எடுத்து அது வளர்க்கச் செய்யும். ஒன்றுடன் ஒன்று சேர்க்கப்படும்போது ஒரு கருவின் தன்மை மாய்த்துவிட்டு ஒரு சக்தியின் தன்மையை உருவாக்கும் (2,3)

எந்தக் கோளின் தன்மையை எடுத்துக் கொண்டதோ அந்த உணர்வின் சக்தி அணுவுக்குள் சேர்க்கப்படும்போது இந்த அணுவின் தன்மை அந்த மணத்தை வெளிப்படுத்தும்(4).  அதே சமயம் அந்த உணர்வின் தன்மை ஒரு பொருளுக்குள் சேர்ந்தவுடன் இந்த உணர்வுகள் தூண்டப்பட்டு இயக்கும்(5) – ஆக ஐந்து.

மனிதனுக்குள் இருக்கும் புலனறிவு – ஐந்து. அதுதான், “ஐகிரி நந்தினி, நந்திதமேதினி விஸ்வ விநோதினி, நந்தினிதே” என்று சொல்லும்போது ஐந்து புலனறிவுகள்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… கோலமாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… ஆதிசங்கரரின் பால் நினைவைச் செலுத்தி அவர்களுடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 85

கோலமாமகரிஷியின் அருள் சக்தியும் ஆதிசங்கரரின் அருள் சக்தியும் பெறுவோம்

கோலமாமகரிஷி ஆதிசங்கரருடைய உடலிலிருந்துதான் மெய் ஒளியைப் பெற்று விண் சென்றார். ஆதிசங்கரருடைய உயிராத்மாவும் விண்வெளி சென்று விட்டது. அவர்களெல்லாம் இன்று விண்வெளியில் நட்சத்திரமாக இருக்கின்றார்கள்.

கோலமாமகரிஷி தன் தத்துவத்தினுடைய நிலைகளை அத்வைதம் துவைதம் என்ற நிலைகள் கொண்டு அவருடைய ஆற்றல் இந்த உலகம் முழுவதற்கும் ஆதிசங்கரர் மூலம் வெளிப்பட்டது.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… கோலமாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… ஆதிசங்கரரின் பால் நினைவைச் செலுத்தி அவர்களுடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 84

கோலமாமகரிஷியின் அருள் சக்தியும் ஆதிசங்கரரின் அருள் சக்தியும் பெறுவோம் 

அரச காலங்களில் பேருண்மையினுடைய நிலைகளை கற்றுக் கொண்டதினாலே அதையே பற்றிக் கொண்டு தன் வலிமையினாலே இந்த உடலை விட்டுச் சென்றால் ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்ற உணர்ச்சிகள் தூண்டிய பின்தான் அவர் சிந்திக்கத் தொடங்குகின்றார்.

அப்படிச் சிந்திக்கத் தொடங்கும் போதுதான் “மூகாம்பிகை” என்று கொல்லூரில் அந்தச் சிலையை வடித்தார்.

கோலமாமகரிஷி என்ற பெயர் வந்ததின் காரணமே கோள்களின் ஆற்றலின் பேருண்மைகளை அறிந்தவர் ஆகையினாலேதான் கோலமாமகரிஷி.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… கோலமாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… ஆதிசங்கரரின் பால் நினைவைச் செலுத்தி அவர்களுடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 83

கோலமாமகரிஷியின் அருள் சக்தியும் ஆதிசங்கரரின் அருள் சக்தியும் பெறுவோம் 

கோலமாமகரிஷி அரச நிலைகளில் வந்தவர். அவர் அரச நிலை எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு மெய் ஒளியைக் காண வேண்டும் என்று வந்தவர்.

அவர் கர்நாடகாவில் உள்ள கொல்லூர் என்ற ஊருக்கு அருகில் “குடசாஸ்திரி” இறக்கத்தில் காட்டுக்குள் போய்த் தனித்து ஜெபமிருக்கிறார். ஜெபம் செய்து கொண்டிருந்தாலும் இவர் சேர்த்துக் கொண்ட நிலைகளுக்கு ஆவியின் நிலைகள் எதிர்ப்பணுக்கள் அதிகமாயிற்று. கடும் தவமிருந்து தான் அதிலிருந்து அவர் மீண்டார்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… கோலமாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… ஆதிசங்கரரின் பால் நினைவைச் செலுத்தி அவர்களுடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 82

வியாசக பகவானின் அருள் சக்தியைப்  பெறுவோம்

வேதங்கள் என்றாலே “நாதங்கள்…” என்று பொருள். ஒலிக்கொப்ப உணர்வும்… உணர்வுக்கொப்ப ஒலியும்… உணர்வுக்கொப்ப ரூபமும்… பெற்ற நாம் அடுத்து எந்த ரூபத்தை அடைய வேண்டும்…? என்பதை வேதங்களின் மூலமாக வியாசகர் காட்டியுள்ளார்

உருவம் திடப் பொருள் ரிக் அதிலிருந்து வரும் மணம் சாம மற்றொரு பொருளுடன் இணைந்து உருமாற்றும்போது இரண்டுமே தன் நிலை இழக்கின்றது அதர்வண. இரண்டும் மாறி ஒன்றாக இணைக்கப்படும்போது “யஜூர்”.

எதை அதிகமாக நுகர்ந்தோமோ அதனின் கணக்கின் பிரகாரம் தான் அடுத்த உடலின் ரூபம் அமைகின்றது என்பதே வியாசர் காட்டிய உண்மை.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… வியாசக பகவானின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 81

வியாசக பகவானின் அருள் சக்தியைப்  பெறுவோம்

சூரியனிலிருந்து வரும் வெப்பம் காந்தம் விஷம் ஒரு உணர்வின் தன்மையை எடுத்தால் அந்த உணர்ச்சி கொண்டு தாக்கி இயக்கும் போது – அர்ச்சுனன். கவர்ந்து கொண்ட உணர்வுகள் காந்தம் – நகுலன். எடுத்து இணைந்து செயல்படுத்தும் தன்மையாக வருவது வெப்பம் – சகாதேவன். நுகர்ந்தது வலிமையாகி அணுவானால் – பீமன். அந்த உணர்வு தன்னைக் காக்கும் வலிமை பெறுகின்றது

எல்லாம் சேர்த்து உடலாக்கப்படும்போது – தர்மன். எதனின் உணர்வின் தன்மை எதை எடுத்ததோ அதைத்தான் வளர்த்துக் கொள்ளும் தன்மை வருகின்றது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், இந்த உணர்வுகள் நமக்குள் எப்படி உணர்ச்சிகளைத் தூண்டி நம்மை எப்படி இயக்குகின்றது? என்று மகாபாரத்தில் வியாசகர் சாதாரண மக்களும் புரியும்படி தெளிவாக உணர்த்தியுள்ளார்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… வியாசக பகவானின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 80

manrdra 79

வியாசக பகவானின் அருள் சக்தியைப்  பெறுவோம்

கண்கள் உபதேசிக்கும் பொழுது நீ எங்கே எடுத்தாலும் என்னிடம் தான் வருகின்றாய்.

எதை நினைத்தாலும் என் வழி கொண்டு தான் நீ அறிய முடியும்.

நீ எதைச் சேர்த்தாலும் அதனின் உணர்வு கொண்டு தான் இந்த உடலிலே விளைகின்றது.

நீ எதை நினைக்கின்றாயோ அதனின் நிலைகள் யார் எதைச் செய்தாலும் என்னிடமே நீ வந்து சேர்வாய்.

என் நிலையையே நீ அறிவாய் என்று இந்தக் கண்ணின் உபதேசம் கண்ணனின் நிலைகள் கொண்டு காட்டப்பட்டது.

கண்ணன் என்ற கண்கள் உண்மையை உணர்த்தினாலும் ஒருவன் தவறு செய்கின்றான் என்ற உணர்வை நுகரப்படும்போது உயிரிலே பட்ட பின் நம் உயிர் என்ற உணர்வுகள் கண்ணனின் சகோதரியாகத்  திரௌபதை அது கவர்ந்து சொல்கின்றது.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… வியாசக பகவானின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 78

manrdra 77

வியாசக பகவானின் அருள் சக்தியைப்  பெறுவோம்

சிறு சிறு துளிகளாக அணுக்களாகச் சேர்ந்து ஒரு மலையாகப் பாற்கடலில் தோன்றியது நமது பூமி தன் சுழற்சியால் ஏற்படும் உராய்வின் தன்மை கொண்டு அது இயங்குகின்றது. வாசுகி,

பாற்கடலிலே நமது பூமி சுழலும் பொழுது அதாவது கடையும் பொழுது பாறைகளாகவும், கற்களாகவும், மரம், செடி, கொடிகளாக விளையச் செய்கின்றது.

அதிலிருந்து வெளிப்படும் சத்தை, விண்ணிலிருந்து வந்த உயிரணு கவரும் போது அந்தச் சத்து அணுத்திசுக்களாகி புழுவிலிருந்து மனிதனாக வருவதை அவரவர்கள் விழுங்கிய நிலைகள் கொண்டு உடல்களாக உருப்பெற்றது என்பதை மகாபாரதம் என்று உணர்த்துகின்றார் வியாசர்

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… வியாசக பகவானின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 76

manrdra 75

வியாசக பகவானின் அருள் சக்தியைப்  பெறுவோம்

அகஸ்தியன் விண்ணுலக ஆற்றலை எப்படித் தனக்குள் கண்டறிந்தானோ அந்தப் பேருண்மைகள் எல்லாம் வியாசனான ஒன்றுமறியாத அந்த மீனவனுடைய உடலிலே தென்படுகின்றது.

ஆதிசக்தி எவ்வாறு உருபெற்றது…? அது சூரியனாக எவ்வாறு தோன்றியது…? என்பதையும் பிரபஞ்சத்திற்குள் நமது பூமி மேரு என்ற மலையை மத்தாகவும் வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் வைத்து பாற்கடலிலே கடைந்தெடுத்தான் என்று மகாபாரதத்திலே வியாசர் அருளினார்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… வியாசக பகவானின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 74

வியாசக பகவானின் அருள் சக்தியைப்  பெறுவோம்

அன்று வாழ்ந்த பெரும்பகுதி மக்கள் அனைவருமே சூரியனை வணங்கிப் பழகியவர்கள். அந்தச் சூரியனை எண்ணி ஏங்கி தான் தவறு செய்தேன்… ஆனால் இந்த மீன் இனம் என்னைக் காத்தது என்ற உணர்வை மேல் நோக்கி வானிலே நினைவைச் செலுத்துகின்றான் மீனவனான வியாசகன்.

இது நடந்தது காலை நான்கு மணி. கடல் பகுதியில் செல்பவர்கள் நான்கு மணிக்கெல்லாம் துருவ நட்சத்திரத்தை நன்றாகப் பார்க்க முடியும். அதே சமயத்தில் சூரியன் அந்த துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வைக் கவர்ந்து அலைகளாக மாற்றி நம் பூமிக்குள் கொண்டு வரும் நேரம் அது.

அந்த நேரத்தில் வியாசகன் இவ்வாறு எண்ணுகின்றான். அப்படி எண்ணும்போது துருவ நட்சத்திரத்தின் உணர்வை அவன் நுகர நேருகின்றது.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் இந்தப் பூமியில் வாழ்ந்த அகஸ்தியன் அகண்ட அண்டமும் இந்தப் பிண்டத்திற்குள் எவ்வாறு இருக்கிறது என்று அகஸ்தியன் வெளிப்படுத்திய உணர்வுகளை வியாசகன் நுகர்கின்றான். வியாபித்திருக்கும் உணர்வை வியாசகன் கண்டுண்ர்ந்தான். மெய்ஞானியாக ஆனான்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… வியாசக பகவானின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 73

வியாசக பகவானின் அருள் சக்தியைப்  பெறுவோம்

சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் வியாசகன் கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது புயலில் கிக்கிப் படகு கவிழ்ந்து கடலிலே விழுந்து விடுகின்றான். அப்படித் தத்தளிக்கும்போது தான் எப்படியும் மீளவேண்டும் என்ற மனப் போராட்டம் அதிகமாகின்றது.

தான் எப்படியும் தப்பிக்க வேண்டும் என்ற உணர்வின் ஏக்கம், உடலின் உணர்வுகளை மறந்து தன் உடலைக் காக்க வேண்டும் என்ற உணர்வுடன் ஒரே எண்ண ஒலிகளை ஈர்த்து அதனின் இயக்கத்திலிருக்கும் பொழுதுதான் அவன் எந்த மீனைப் பிடித்து வேட்டையாடி அதைப் புசித்து அதன்வழி கொண்டு அவன் வாழ்ந்தானோ அதே மீன் இனம் வியாசரைக் காக்கின்றது இவனைக் காப்பாற்றிக் கரை சேர்க்கின்றது.

நாம் எதைக் கொன்றோமோ அந்த மீன் இனமே தன்னைக் காத்தது என்று திரும்பிப் பார்ர்கும்போது தன் தவறை உணர்ந்து உயரந்த குணங்களை எண்ணி ஏங்குகின்றான்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… வியாசக பகவானின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 71

வான்மீகி மாமகரிஷியின் அருள் சக்தியைப்  பெறுவோம்

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் படர வேண்டும் என்று நுகர்ந்தால் “லவ குசா…!”

நாம் எடுக்கும் மெய் உணர்வுகள் உடலுக்குள் (சீதாவிற்குள்) விளைந்தபின் நம்மைப் பற்றியும் நமக்குள் இயங்கும் அனைத்தையும் அறிந்து அது வெளிப்படுத்திக் காட்டும். தன்னைத் தான் அறியும் நிலையாக நாம் நம்மை அறிய முடியும் என்றும் வான்மீகி காட்டினார்.

ஆகவே இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்த நாம் நம்மை மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்களைக் காத்திடல் வேண்டும் வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து தப்பிட இச்சைப் பட வேண்டும் என்று தெளிவாக உணர்த்துகின்றார் வான்மீகி.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… வான்மீகி மகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 71

வான்மீகி மாமகரிஷியின் அருள் சக்தியைப்  பெறுவோம்

காவியத்திலே காட்டும் போது கர்ப்பமாக இருக்கும் சீதாவை மக்களின் உணர்ச்சியால் உந்தப்பட்டு உண்மையின் உணர்வை அறியாதபடி சீதா என்ற சுவையைப் புண்படும்படிச் செய்து விட்டனர். ஆனால்… அதிலே வரும் வேதனை என்ற கருவை உருவாக்கிவிடக் கூடாது என்பதற்காகச் சீதாவின் மனதை மாற்றி அருள் உணர்வைச் செவி வழி ஊட்டி அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் கூட்டிக் கருவிலே வளரும் குழந்தைக்கு ஞானத்தை ஊட்டுவதாகக் காட்டினார் வான்மீகி.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… வான்மீகி மகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 70

வான்மீகி மாமகரிஷியின் அருள் சக்தியைப்  பெறுவோம்

சீதை மானுக்காக வேண்டி ஆசைப்படுகிறாள் என்றால் சீதையினுடைய ஆசையில் அவள் எண்ணிய நிலைகள் தான் அந்த மான். இது பொய் மான். நேரிலே பார்க்கப்படும் நிலைகள் வேறு ஆனால் எண்ணங்களில் ஆசைகளைக் (பொய்யாக) கூட்டப்படும் போது அது எவ்வாறு நம் வாழ்க்கையைத் திசை திருப்புகிறது…? அதிலே எப்ப்டிச் சிக்குகின்றோம் என்று நமக்கு முன் நிகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய நிலைகளைத்தான்… “பொய் மான்…!” என்று அவ்வாறு மிகவும் தெளிவாகக் காட்டுகின்றார் வான்மீகி.

இப்படி ஒவ்வொரு நாளும் நமது எண்ணத்தால் இந்த மனித வாழ்க்கையில் எத்தனையோ துயரங்கள் வருகிறது…! இந்த உடல் வாழ்க்கையில் வந்த அந்தத் தீய வினைகள் தீமைகள் துன்பங்கள் அனைத்தும் மண்ணோடு மண்ணாகப் போகட்டும்…! அதை விடுத்து விட்டு உயிரான விஷ்ணு என்ற உணர்வை நாம் எடுத்து உயிருடன் ஒன்றி பிறவியில்லா நிலை என்ற சொர்க்க நிலையை நாம் அடைய வேண்டும் என்று உணர்த்துகின்றார்கள்

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… வான்மீகி மகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 69

வான்மீகி மாமகரிஷியின் அருள் சக்தியைப்  பெறுவோம்

இராமாயணம் நமக்குக் கிடைத்த அரும்பெரும் பொக்கிஷம். துருவ நட்சத்திரம் எந்த வழிகளிலே அது ஒளியாக மாறியதோ, அந்த உண்மையின் ஆற்றல் பூராவுமே வான்மீகியின் உடலுக்குள் நின்று வெளிப்படுத்தியதுதான் இந்த இராமாயணக் காவியம்.

(உயிர் – விஷ்ணு; உயிரின் காந்தம் –  இலட்சுமி; இராமன் – எண்ணங்கள்; சீதா என்றால் சுவை – மகிழ்ச்சி; உடல் – இலங்கை; ஆஞ்சநேயன் – எண்ணங்கள் வாயுவாகச் செல்வது; வாலி – விஷம் தீமை செய்யும் உணர்வு.. உடலின் இச்சை – இராவணன் சுக்ரீவன் – துருவ நட்சத்திரம் லவ குசா – மகரிஷிகள் உணர்வு)

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… வான்மீகி மகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 68

வான்மீகி மாமகரிஷியின் அருள் சக்தியைப்  பெறுவோம்

வான்மீகி மூடராக இருந்தார் கொலைகாரராக இருந்தார் கொள்ளைக்காரராக இருந்தார். இருந்தாலும், பட்சியின் பாச உணர்வு இவரிடம் வரும் பொழுது, பட்சியின் துடிப்பை உணர்ந்தார். தவறிலிருந்து மீண்டிடும் ஏக்கம் கொண்டு, விண்ணை நோக்கி ஏகுகின்றார்.

அன்று அகஸ்தியன் தான் எந்தப் பாசத்தைச் செலுத்தி தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றிச் சென்றானோ அந்த ஆற்றலை இவர் நுகர நேருகின்றது. “வான்மீகி” என்று அப்பொழுதுதான் பெயர் வந்தது.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… வான்மீகி மகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 67

போகமாமகரிஷியின் அருள் சக்தியைப்  பெறுவோம்

போகர் சொன்ன முறைப்படி துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்மிக்க சக்தியைக் கண்களாலே, காதாலே, வாயாலே, உடலாலே, சுவாசத்தாலே எடுத்து நமக்குள் சேர்த்தால் அது பஞ்சாபிஷேகம.

இவ்வாறு புலனறிவில் கவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அனைத்தும் பஞ்ச அமிர்தமாக நம் உடலை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் படர்கிறது.

அந்தப் பஞ்ச அமிர்தத்தை எல்லோருக்கும் கிடைக்கச் செய்வதற்குத்தான் முருகன் சிலையை உருவாக்கினான் போகன்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… போகரின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 65 png

போகமாமகரிஷியின் அருள் சக்தியைப்  பெறுவோம்

மனிதனைப் போன்ற ஒரு உருவச் சிலையாக அமைத்து NEGATIVE POSITIVE அதாவது சத்ரு மித்ரு என்ற நிலைகளில் இயக்கப்படும் போது எப்படி மின் அணுவின் நிலைகளில் விளக்கு எரிகின்றதோ… காந்தக் கட்டைகளைச் சுழற்றும் போது காந்தப் புலனறிவு இயங்குகின்றதோ அதைப் போன்று உயிருள்ள சிலையாக உருவாக்கினான்.

மனிதனைப் போன்ற இந்த உணர்வின் சத்தை அது உருவாக்கி மக்கள் அனைவரும் சிலையிலிருந்து வெளிப்படும் மணத்தை நுகரச் செய்து மனித வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீமைகளை அது உள் நின்றே பொசுக்கி மக்களை இன்னல்களிலிருந்து விடுபடச் செய்யும் தத்துவத்தை உருவாக்கினான் போகன்.

போகர் எதைக் காட்டினாரோ அந்தச் சக்திகள் அனைத்தும் முருகன் சிலைக்குள் உண்டு. முருகன் சிலையிலிருந்து வரக்கூடிய அந்த ஆவியின் தன்மையை நாம் சுவாசித்தால் நமக்குள் இருக்கக்கூடிய பல விஷத் தன்மைகளை அது மாய்த்துவிடும்.. அறியாது சேர்ந்த கடும் பிணிகளும் போகும்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… போகரின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 64 png.

போகமாமகரிஷியின் அருள் சக்தியைப்  பெறுவோம்

பாதரசம் நம் உடலிலும் உண்டு. தாவர இனத்திலும் உண்டு. கல்லிலும் உண்டு. எவை எவைகளில் எதனின் நிலைகள் எவ்வாறு இருக்கின்றன என்ற நிலைகளை உணர்ந்தவன் போகன்.

கண்ணாடிக் கற்களைக் (QUARTZ – CRYSTAL) கண்டுபிடித்தவன் போகன். ஏனென்றால் ஒளியின் தன்மை கொண்டு தெளிவாக உணர்த்தும் அந்த உணர்வின் தன்மையை அதை உரசி அதையும் சிலை செய்ய இணைத்துக் கொண்டான்.

மனிதனின் எண்ணத்தின் சிந்தனைகள் உருவாகக் காரணமான பல கோடித் தாவர இனங்களைத் தேடி அலைந்து அவைகளையும் முருகன் சிலைக்குள் இணைத்தான்.

சிந்தனைத் திறன் கூடி தீமைகளை அகற்றிடும் உணர்வின் ஞானங்கள் மனிதனுக்குள் எவ்வாறு வளர்ந்தது என்ற நிலையும் அந்த ஆற்றல்கள் எந்தெந்தத் தாவர இனச் சத்திற்குள் இருக்கின்றது என்பதையும் நுகர்ந்தறிந்தான். தன் உயிரின் துணை கொண்டு அதை எல்லாம் அறிந்தான் போகன்.

அத்தகைய பல கோடி உணர்வின் சத்தையும் காந்தப் புலனின் நிலைகள் கொண்ட பாதரசத்தையும் அதற்குள் இணைத்துத் தீமைகளை அகற்றும் ஆற்றல்களையும் நஞ்சினை அகற்றிடும் உணர்வின் சத்துக்களையும் முருகன் சிலையில் சாரணையாக ஏற்றினான் போகன்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… போகரின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 63 png

போகமாமகரிஷியின் அருள் சக்தியைப்  பெறுவோம்

ஒவ்வொரு தாவர சக்தியை நுகர்ந்தறிந்து அந்த உணர்வின் ஆற்றலைத் தன் உடலில் ஆற்றல் மிக்கதாகச் சேர்த்து அதற்கொத்த நிலைகள் கொண்டு தன் உணர்வின் ஆற்றலைப் பெருக்கி வந்தார்,

போகர். தான் வளர்த்துக் கொண்ட நிலைகளை மற்றவர்களும் பெற எண்ணி ஏங்கினார்.

நட்சத்திரங்களால் விளையப்பட்ட வைரங்களையும் நவபாஷாணத்தையும் சூரியனிலிருந்து வெளிப்படும் பாதரசத்தையும் மூன்றையும் ஒன்றாக இணைத்து முருகன் சிலையைச் செய்தார் போகர்

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… போகரின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 62 png.

போகமாமகரிஷியின் அருள் சக்தியைப்  பெறுவோம்

விஷம் தீண்டி தன் தாய் விஷத்தாலே மடிய அதனின் வலுக் கொண்டு அதனில் ஏங்கி இந்த உணர்வின் ஆற்றலை தனக்குள் எண்ணி ஏங்கி விண்ணை நோக்குகின்றார் போகர்.

அவ்வாறு ஏங்கிய நிலைகள் கொண்டு ஏக்கத்தாலே சுவாசிக்கப்படும் பொழுது துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்ட அந்தப் பேரொளி இவர் சுவாசத்திலே ஈர்க்கப்பட்டது.

ஈர்க்கப்பட்டபின்… அந்த மாமகரிஷிகளின் வானஇயல் தத்துவத்தை எப்படி உணர்ந்தார்களோ அந்த உணர்வின் ஆற்றல் போகருக்குள் இது பிரம்மமாகின்றது. உருப்பெறுகின்றது.

அவருடய வ்ளர்ச்சியில் எந்த விஷமான சக்தியும், அவரை ஒன்றும் பாதிக்காத நிலையைச் செயல்படுத்தினார்

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… போகரின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 61 png

ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்திகளைப்  பெறுவோம்

குரு கவர்ந்த அந்த உணர்வின் சக்தி… குரு பக்தி கொண்டு எவர் கவருகின்றாரோ… அவர் நினைக்கும் பொழுதெல்லாம்… குரு… தான் நுகர்ந்த அந்த உணர்வின் சக்தி எளிதில் கிடைக்கும்.

எளிதில் செயல்படுத்த முடியும். தீமை என்ற நிலைகள் தனக்குள் புகாது தடுத்து நிறுத்த முடியும்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… ஈஸ்வரபட்டரின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 60 png

ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்திகளைப்  பெறுவோம்

பல கோடி ஆண்டுகளுக்கு முன் விண்ணிலே சப்தரிஷி மண்டலமாக இணைந்தவர் நம் குருநாதர்.

அதன்வழி நமது பூமியிலே அந்த உணர்வின் வித்துக்கள் பட்டு  மற்ற உயிர்களிலே அது விளைந்து பலவாறு பல உணர்வின் தன்மையை இங்கே பரப்பிய நிலைகள் கொண்டு அந்தந்த உணர்வுகள் பட்டு… அந்தந்த உடல்கள்… அந்த உயிராத்மாக்கள் விண்ணிலே அவருடன் ஐக்கியமாகி உள்ளனர்.

அவருடன் விண்ணிலே பெரும் மண்டலங்களாக இதைப் போன்று எத்தனையோ ரிஷிகள் சேர்ந்து விண் சென்றுள்ளார்கள்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… ஈஸ்வரபட்டரின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 59 png

ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்திகளைப்  பெறுவோம்

பேரண்டத்தின் உண்மைகளைக் கண்டுணர்ந்த இயக்கம் அவருக்குள் இருந்தாலும்… அதன் வழிகொண்டு எதை எதை… எவ்வாறு பெறவேண்டும்…? என்று உபதேசித்து அருளினார்.

அவருக்குள் விளைந்த ஆற்றல்மிக்க சக்திகள்… அவரிடமிருந்து வெளிப்பட்ட உணர்வின் அலைகள் இங்கே படர்ந்து கொண்டுள்ளது… எல்லோருக்கும் கிடைக்கும்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… ஈஸ்வரபட்டரின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 58

ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்திகளைப்  பெறுவோம்

பித்தரைப் போன்றுதான் அவர் இந்த உலகிலே உலாவிக் கொண்டிருந்தார். ஏனென்றால் இந்தப் பித்தனான உலகிலிருந்து மக்கள் பித்தைப் போன்று வாழ்க்கை வாழ்ந்திடும் “ஒவ்வொரு பித்து நிலைகளிலிருந்து அவர்கள் மீளவேண்டும்…” என்ற சிந்தனைதான் எனக்கு…! என்று அடிக்கடி உபதேசிப்பார்.

ஆனால் இளமையிலே ஏழ்மையில் வாடிவந்த நிலையிலிருந்து தீமைகளிலிருந்து விடுபட்டு… அவர் உடலிலே விண்ணின் ஆற்றல்களைப் பெருக்கி அந்த உணர்வு கொண்டு ஒளியின் சரீரம் பெற்று… இன்றும் அவர் விண்ணின் ஆற்றலுடன் சுழன்று கொண்டுள்ளார்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… ஈஸ்வரபட்டரின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 57

ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்திகளைப்  பெறுவோம்

ஐந்து அல்லது ஆறு வயதில் வெளியே கிளம்பி இந்த பூமி முழுவதும் வலம் வந்துள்ளார். இந்த பூமிக்குள் எத்தனை பாஷைகள் உண்டோ அத்தனையும் இவருக்குத் தெரியும். நமது சூரிய குடும்பத்தின் தொடர் கொண்ட 2000 சூரியக் குடும்பங்கள் உண்டு. இப்படி ஏனைய எத்தனையோ சூரியக் குடும்பங்கள் இருப்பினும் இந்த 2000 சூரியகுடும்பத்தின் உண்மை நிலைகளையும் உணர்ந்தறிந்தவர் நமது குருநாதர். அவர் அறியாது அவருக்குள் இருந்த ஆற்றல்மிக்க சக்தியின் நிலைகள் கொண்டு பேரண்டத்தின் நிலைகளை அவர் அறிய முடிந்தது.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… ஈஸ்வரபட்டரின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 56

ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்திகளைப்  பெறுவோம் – 1

இளமைப் பருவத்திலேயே உலகம் முழுவதற்கும் ஈஸ்வரபட்டர் சுற்றுப் பயணம் செய்துள்ளார். இளமைப் பருவத்தில் இவர் அறியாதபடியே பல ஆற்றல்களை அவர் பெற்றார்

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… ஈஸ்வரபட்டரின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 55

அகஸ்தியரின் அற்புத சக்திகளைப் பெறுவோம்

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… அகஸ்திய மாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 54

mantra 53

mantra 52

mantra 51

mantra 50

அகஸ்தியர் உணர்வைக் கவர்ந்தவர்கள் அனைவரும் மகரிஷிகள் ஆகிவிட்டார்கள்… நாமும் கவர்ந்து மகரிஷியாக ஆவோம்…!

அகஸ்தியன் தனக்குள் விளைய வைத்த உணர்வுகளை நம் ஞானகுரு உபதேசித்த அருள் வழிப்படி நமக்குள் ஆழமாகப் பதிவு செய்வோம். அகசதியரின் ஸ்டேஷனை நாம் வலுவாக்கிக் கொண்டு ஒவ்வொரு நொடியிலும் நஞ்சை வெல்வோம்.. ஒளியாக மாற்றுவோம்…!

mantra 49

மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் புகுத்தி… நமக்குள் தீமையை விளைவிக்கும் உணர்வுகளை அடக்கி… உலக மக்கள் அனைவரும் ஒன்றென்ற நிலையில் நாம் வாழ்ந்து காட்டிடல் வேண்டும்

இந்தப் பூமி தான் நமக்குத் தாய்…! எந்தெந்த நாட்டிலே… ஊரிலே… நாம் பிறந்திருந்தாலும் நமக்குத் தாய் இந்தப் பூமியே…!

mantra 48

நமக்குள் மகரிஷிகளின் உணர்வுகளை வளர்க்க வேண்டும்… அந்த உயர்ந்த சக்திகளை வலுவாகக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

சிரமங்கள் பட்டுக் கொண்டுள்ளோருக்கு அந்த மகரிஷிகள் அருள் உணர்வுகளை எடுத்து நாம் பாய்ச்சுதல் வேண்டும்… அவர்களையும் துன்பங்களிலிருந்து மீட்க வேண்டும். 

mantra 47

அன்று அகஸ்தியன் செய்தது போன்று மீண்டும் இந்தப் பூமியைச் சீராக்க நம்மால் முடியும்

மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் விண்ணிலே நினைவைச் செலுத்தி… அவர்களின் அருள் வட்டத்தில் இருந்து… நம் உடலைக் காக்கவும் நம் நாட்டைக் காக்கவும் முடியும்…!

mantra 46

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் நினைவினை மேகங்களில் செலுத்தி மழை பெய்யத் தியானிக்கும்படி வேண்டிக் கொள்கிறோம்

மனிதர்களான நாம் எதை அழுத்தமாக எண்ணுகின்றோமோ… அந்த வலிமை கூடி… மழை பெய்ய வேண்டும் என்ற எண்ண அலைகளை எங்கே நினைவைச் செலுத்துகிறோமோ அங்கே பாய்கின்றது… அந்த உணர்வுகள் படர்கின்றது. மழை பெய்ய வைக்கின்றது…!

mantra 45

நாம் கனியின் தன்மை அடைந்து… ஒளியான வித்துக்களாகப் பேரொளியாக மாற வேண்டும் 

திரை மறைவாக இருக்கும் உயிருடன் ஒன்றி … மகரிஷிகள் அருள் ஒளியை ஏடுத்து முழுமை அடைந்தால் நாம் கனியாகின்றோம்.. அழியாத ஜோதி நிலை அடைகின்றோம்…!

mantra 44

மகரிஷிகளின் அருளைச் சேமிப்பதே உயிராத்மாவிற்கு அழியாத சொத்து

விண்ணிலிருந்து பூமிக்குள் விஜயம் செய்த… உயிரால் உருவாக்கப்பட்டது தான் உடல். இந்த உடல் வாழ்க்கையில்… இருளைப் போக்கிடும் அருளைப் பெருக்கி “பேரருள் பேரொளியாகப் பெருகுவதே” படைப்பின் முக்கிய நோக்கம் 

mantra 43

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து  நாம் வாழும் இடங்களில் அடர்த்தியாக அதைப் பரவச் செய்ய வேண்டும் 

நஞ்சை அடக்கி அதைப் பேரொளியாக மாற்றும்… துருவ  நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி… இந்தப் பூமி முழுவதும் பரவிப் படர்ந்து… பூமியில் படர்ந்துள்ள நச்சுத் தன்மைகள் அனைத்தும் நீங்கிட… அருள்வாய் ஈஸ்வரா 

mantra 42

துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம்  நுரையீரலுக்குள் பாய்ச்சி அதை வலுவாக்கி எந்த நச்சுத் தனமையான காற்றும் நம் அருகே வராது தடுத்துக் கொள்ள வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நுரையீரல் முழுவதும் படர்ந்து எங்கள் நுரையீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா 

mantra 41

ஆண்டவன் செய்யவில்லை… அவனாகவே செய்வதுதான் அவன் வாழ்க்கை நிலை எல்லாம்…!

தான் எடுத்த ஈஸ்வர சக்தியின் துணை கொண்டு தன்னைக் காத்து.. அந்த அருள் ஒளியை மற்றவருக்குள் பாய்ச்சுவது தான்…! தன் நிலையில் இருப்பது என்பது…!”

mantra 40

உயிரே கடவுள்…! உடலே ஆலயம்…! சுவாசிக்கும் உணர்வே தெய்வமாக இருந்து இயக்குகிறது

“சுவாச நிலையில்” உயர்ந்த சக்திகளைப் பெறுவதே தியானம் செய்வதன் முக்கியமான நோக்கம். மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சுவாசித்தால் நம் உயிராத்மா ஒளி நிலை பெறும்.

mantra 39

தீமை என்ற துவாரங்களை அடைத்தால் தான் அருள் ஒளி நமக்குள் கூடும்

இனி நாம் செய்வதெல்லாம் நமக்கும் நம் நாட்டிற்கும் உலகுக்கும் நன்மை பயப்பதாக அமையட்டும்.

mantra 37

வாழ்க்கையில் திரும்பத் திரும்ப வரும் தடங்கல்களை எண்ணிச் சலிப்படைய வேண்டியதில்லை

சலிப்பையும் சோர்வையும் அண்ட விட்டால் அது ஒரு பகடைக் காயைப் போல் நம்மை ஆட்டிப் படைத்துவிடும். மகரிஷிகளின் உணர்வு கொண்டு நாம் மீண்டும் மீண்டும் உற்சாகத்தை ஏற்படுத்த வேண்டும்.

mantra 38

மாமகரிஷிகளுடன் இணைந்த நிலையில் நாமும் தியானிப்போம்

மகரிஷிகளின் செயல்கள் இந்தப் பூமியில் இனி வெளிப்படும் காலம் வந்து விட்டது.

mantra 36

எத்தகைய நிலை வந்தாலும் தியானத்தின் மூலம் மகரிஷிகளின் அருள் சக்தியை  எடுத்து நமக்குள் வலுப்படுத்தும் பழக்கம் வர வேண்டும் 

நமக்காக வேண்டிப் பிரார்த்திக்கக்கூடிய குரு இருந்தாலும்… நாம் நமக்குள் இருக்கும் ஈசனிடம் நினைவைச் செலுத்தி… அவனிடம் அழுத்தமாக வேண்டினால் தான் நம் உயிர் அதை உருவாக்கும்… அந்த ஆற்றல் நமக்குள் கூடும்…!

mantra 35

நாம் எண்ணும் எண்ணத்தால் வருவது தான் எல்லாமே…! 

அடுத்தவர் கொடுத்து நாம் பெறுவதல்ல அருள்…! வரும் இன்னல்களிலிருந்து மீண்டு பெறுவது தான் அருள்…! அப்படிப் பெறும் அருள் என்றுமே நமக்குள் நிலைக்கும்… வளரும்..!

mantra 34

எலும்புகளுக்குள் இருக்கும்  ஊழ்வினையின் பதிவே நம் வாழ்க்கையின் வினைப் பயன் ஆகின்றது

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் எலும்புகளுக்குள் உறைந்துள்ள ஊன் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா…! ஊனை உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா…!

mantra 33

அழியாச் செல்வம் என்பது அவரவர்களின் உயிராத்மா தான்…! வேறு எதுவும் இல்லை…! 

உயிரே நமக்குச் சொந்தம்… அருள் மகரிஷிகளே நமக்குப் பந்தம்…!

mantra 32

ஒவ்வொரு நிமிடமும் உடல் நலத்துடன் வாழ மகா பச்சிலைகளின் மணங்களைச் சுவாசிக்க வேண்டும்  

அகஸ்தியன் பெற்ற பல கோடித் தாவர இனச் சத்துகளும்… அருள் ஞான மூலிகைகளின் மணங்களும்… பச்சிலை வாசனைகளும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! 

mantra 31

மகரிஷிகளுடன் தொடர்பு கொள்ளும் முறை 

இதிலே கொடுக்கப்பட்ட ஐந்தையும் ஒரு பழக்கமாகப் பயிற்சியாக எடுத்துக் கொண்டே வந்தால் மகரிஷிகளைப் பற்றிய உணர்ச்சிகள் நேரடியாகக் கிடைக்கும்

mantra 30

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியரை எண்ணி அவர் விட்ட மூச்சலைகளைச் சுவாசியுங்கள் 

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து… எங்கள் உடலில் உள்ள உறுப்புகள் முழுவதும் படர்ந்து… எங்கள் உடல் உறுப்புக்களை உருவாக்கிய எல்லா அணுக்களும் அகஸ்தியரின் அருள் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா…!

mantra 29

ஞானகுருவின் உபதேச ஒலிகளுக்குள் எண்ணிலடங்கா மகரிஷிகளின் உணர்ச்சிகள் (சூட்சம சக்திகள்) உண்டு 

மகரிஷிகளின் உணர்ச்சிகள் நமக்குள் தூண்டப்பட்டால் தான் அதனின் இயக்கமாக நாமும் ஞானிகளாக ஆவோம். (கேட்க விரும்புவோர் இந்த இரண்டு லிங்குகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் – https://wp.me/p3UBkg-1Uc  https://wp.me/p3UBkg-1Yh )

mantra 28

மீண்டும் இன்னொரு (உடலுக்குள்) பிறவிக்கு நாம் வந்து விடக்கூடாது 

நாம் மீண்டும் பிறவிக்கு வரக்கூடாது என்றால் உடலை விட்டுப் பிரிந்து சென்ற “ஒரு உயிரான்மாவையாவது” சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும் 

mantra 27

“தீமைகளை மறக்க” நாம் அவசியம் பழகித் தான் ஆக வேண்டும் 

தீமைகளை மறந்தால் தான் நம் நல்ல குணங்களும் சிந்தனைகளும் சீராக… வலுவாக… உறுதியாக… தெளிவாக… உத்வேகமாக.. இயங்கும்

mantrta 26

மகரிஷிகள் உணர்வைச் சுவாசித்தால்  “நல்லதாக்க வேண்டும்… நல்லதாக்க முடியும்…” என்ற எண்ண வலு கூடிக் கொண்டே வரும் 

“உயிர் பற்று கொண்டு…” நாம் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் பாசம் எந்த வகையிலும் நம்மை நல் வழிப்படுத்திக் கொண்டேயிருக்கும்

mantra 25

பாசம் வைப்பது தப்பா…! அது எப்படித் தப்பாகும்…? என்று தான் கேட்போம் 

நம்முடைய பாசமும் பற்றும் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவதில் தான் இருக்க வேண்டும் 

mantra 24

நம் சுவாசம் மேல் நோக்கியதாக இருக்க வேண்டும்

விண்ணிலிருந்து எடுக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகளை மற்றவருக்குப் பாய்ச்ச வேண்டும். இங்கிருந்து எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

mantra 23

துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் கொண்டு  நச்சுத் தன்மைகளைச் “சுட்டுப் பொசுக்க வேண்டும்” 

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனான். அந்தச் சக்தியை நுகர்ந்தால் நஞ்சுகளை எல்லாம் வேக வைக்க முடியும்.

mantra 22

மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் வாழ வேண்டும்

உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்…. மெய் ஞானிகளாக உயர்ந்திட வேண்டும்…! என்று நாம் எண்ணினால் மகரிஷிகளின் ஈர்ப்பு ஒளி வட்டத்திற்குள் நாம் செல்ல முடியும்.

mantra 21

ஞானகுருவின் கண்களைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டிய “ஊடுருவும் சக்தி” 

ஞானகுருவின் கண்கள் கூர்மையாக இருந்தாலும் பார்வை எங்கே நிலை குத்தி இருக்கிறது…? என்பதை நாமும் அதைச் செய்து பார்த்துப் பழகிக் கொள்ள வேண்டும். அதன் மூலம் லேசர் (LASER) போன்று அறியலாம்… இயக்கலாம்…!

MANTRA 20

புவியின் ஈர்ப்பைக் கடந்து நம் கண்ணின் நினைவாற்றல் விண்ணுலகம் செல்ல வேண்டும் – பயிற்சி

கண்களைத் திறந்து செய்யும் தியானத்தின் மூலம் நம்முடைய புலனறிவு ஆற்றல் மிக்கதாகின்றது. ஆண்டென்னா சரியாக இருந்தால்  டி.வி ரேடியோ சரியாக வேலை செய்வது போல் நம் “கண்கள் +சுவாசம்” இரண்டும் ஒன்றாக இருந்தால் அதன் மூலம் நம் நினைவாற்றல் விண்ணுலகிற்கு எளிதில் செல்லும். தொடர்பு  (NETWORK) விண்ணுடன் இருப்பதால் இந்தக் காற்று மண்டலத்தின் நச்சுத் தன்மை நம்மை ஒன்றும் செய்ய முடியாது. 

MANTRA 19

இருளைப் பிளந்து அதை ஒளியாக மாற்றும் திறன் பெறுவோம் 

துருவ நட்சத்திரம் தன் அருகில் சிறிதளவு நஞ்சு வந்தாலும் அதை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது. அந்தச் சக்தியை நம் உயிருக்கு உணவாகக் கொடுப்போம்

mantra 18

உயிர் காக்கும் பாதுகாப்புக் கவசம் 

விண்ணிலிருந்து வரும் அரும் பெரும் சக்திகளை நம் உயிரில் சேமிக்கும் பயிற்சியை எடுத்துக் கொள்ள வேண்டும். 

mantra 17

நம்பிக்கையுடன் செய்யும் எந்தக் காரியமும் தோல்வி அடைவதில்லை 

எந்த எண்ணத்தையும் புருவ மத்தியிலே உயிரான ஈசனிடம் அழுத்தமாகச் (ELECTRONIC) செலுத்தினால் தான் உயிர் அதைப் பெற்றுத் தரும். 

MANTRA 16

ஓ…ம் ஈஸ்வரா… என்ற நெருப்பைக் கூட்டி தீமைகளைச் சுட்டுப் பொசுக்க வேண்டும் 

தியானம் என்றாலே  உயர்ந்த சுவாசத்தை எடுக்க வேண்டும் என்று தான் பொருள் 

mantra 15

நல் சுவாசத்தை எடுத்தால் தப்பலாம் 

மகரிஷிகளின் அருள் வட்டத்திலேயே நாம் என்றும் வாழ்ந்திட வேண்டும் 

mantra 14

காற்று மண்டலத்தையே நாம் முழுமையாகப் பரிசுத்தப்படுத்த முடியும் 

அகஸ்தியரைப் போன்று நாம் வெளிவிடும் சக்தி வாய்ந்த மூச்சால்  விஷக் காற்றையே புனிதமாக்க வேண்டும் – மனித குலத்திற்கு இன்று நாம் செய்ய வேண்டிய சேவை இது தான்…!

mantra 13

நாம் பற்ற வேண்டியது மகரிஷிகளின் அருள் உனர்வை…!

எந்த நோய்க் கிருமியும் நமக்குள் ஜீவன் பெற முடியாது

mantra 11

விஷத்தை வென்றிடும் எம அக்னியை நமக்குள் சேர்த்துக் கொள்வோம் 

நெருப்பைக் கொண்டு தான் விஷத்தை வெலல வேண்டும்… வெல்ல முடியும். 

mantra 10

எந்த ஒரு காரியத்திற்கும் புருவ மத்தியிலிருக்கும் ஈசனை அழைத்துச் செல்வோம்…! 

எந்தச் சிக்கலாக இருந்தாலும் எத்தகைய கடுமையான நிலையைச் சந்தித்தாலும் அடுத்த கணம்  நினைவு ஈசனிடம் தான் செல்ல வேண்டும்.

mantra 9

புருவ மத்தியில் இருக்கும் ஈசனிடம் வேண்டுவோம்

இரு கண்களுக்கு மத்தியில் இருக்கும் உயிரிடம் ஈசனிடம் வலுக் கூட்டி உணர்வு மாறாது வேண்டுவதே ஊசி முனைத் தவம்

mantra 9

எத்தகைய நஞ்சையும் ஒடுக்குவோம்…! 

அகஸ்தியன் நஞ்சை ஓடுக்கிய வழியிலேயே நாமும் செயல்படுவோம்

mantra 8

நடப்பதெல்லாம் நன்மைக்கே…! 

எது நடந்ததோ… அது நன்றாகவே நடந்தது… எது நடக்கப் போகின்றதோ… அதுவும் நன்றாகவே நடக்கும்..! என்ற இந்தச் சிந்தனை தான் நமக்கு வேண்டும்.

mantra7

மரண பயத்தை அகற்றுவோம்…! 

பயத்தின் துடிப்பை வைத்தே அதீதமாக மகரிஷிகளின் ஆற்றல்களைப் பெற்றுப் பழகுவோம்

mantra 6

நல்ல மூச்சை விடுங்கள்… நல் சுவாசமே எடுங்கள்…! 

உங்கள் சுவாச நிலையை உயிர் வழியாக மாற்றுவதற்காகத்தான் இந்த உபதேசமே…!

mantra 5

சுவாச நிலையை மாற்றுங்களப்பா…!

கீழ் நோக்கிய சுவாசத்தை மாற்றி விண்ணிலிருந்து வரும் சக்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

mantra 4

தூசிகளைத் தட்டி விடுவது போல்

தீமைகளைத் தட்டி விட வேண்டும்

AGATHIAR2

நல்லதைச் சேர்த்துச் சேர்த்துச் சேர்த்துத்

தீமைகளை நம் அருகில் வராதபடி விரட்டி அடிப்போம்

mantra 2

உயிர் காக்கும் ஒரே மருந்து

புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இணைப்பது தான்

mantra 1

Leave a Reply