நம் நினைவுகளுக்குள் ஏற்படும் “இரு நிலைப் போராட்டம்” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Two way thinking

நம் நினைவுகளுக்குள் ஏற்படும் “இரு நிலைப் போராட்டம்” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

பிறப்பெடுத்த நாளிலிருந்து நாம் இறக்கும் காலம் வரை… “நினைவின் ஓட்ட நிலை” சுழன்று கொண்டே தான் உள்ளது.

எண்ணத்தின் சரீர உணர்வின் நினைவு நிலை இச்சரீர வாழ்க்கையில் மட்டும் தானா…? ஆவி நிலையில் கர்ப்பக் காலத்தில் இதன் ஓட்ட நிலை யாது…? என்ற நிலையை உணரல் வேண்டும்.

ஆத்ம பிம்பத்தில் இந்நினைவலைகளின் சுழற்சி ஓட்ட எண்ண உணர்வு ஒவ்வொரு நொடிப் பொழுதும் ஓடக்கூடிய நிலைக்கொப்ப எண்ணத்தின் நினைவின் ஆணைக்கொப்ப சரீரச் செயல் சொல்லாகவும் செயலாகவும் நடைபெறுகின்றது.

எண்ணத்தின் ஓட்ட இயக்க நிலைக்கொப்பச் சரீரச் செயல் நடக்கவும்… உண்ணவும்… எழுதவும்… சரீரத்தால் இயங்கத்தக்க அவய நிலைகள் எண்ணத்தின் உணர்வு உந்தியவுடன்… தன் தன் செயலைப் புரிகின்றது.

எண்ணத்தின் நினைவோட்டத்தை
1.செய்த நிலை… செய்யப் போகும் நிலை… செய்யும் நிலை என்ற தொடரில் எண்ணத்தைச் செலுத்தும் நிலையிலும்
2.சரீர அங்கத்தின் செயல் நிலை செயல் கொள்ளா எண்ண நிலையிலும்
3.எதில் எதிலெல்லாம் எண்ணத்தின் உணர்வுகள் உருள்கின்றதோ அத்தொடரில் எல்லாம்
4.ஜீவ சக்தியுடன் கூடிய உஷ்ண அலை கொண்ட இச்சரீர ஓட்ட இயக்கத் தன்மையிலேயே
5.சுவாசத்தின் மோதலில் – நடக்கப் போகும் நினைவின் எண்ண உணர்வு செலுத்தக் கூடிய தருணத்திலும்
6.சுவாச அலையின் துடிப்பு நிலை அணு வளர்ப்பைக் கொண்டு
7.நினைவலையின் எண்ண உணர்வை இச்சரீர பிம்ப வாழ்க்கையில்
8.ஆத்மா தன் பதிவு நிலைக்குப் பதித்துக் கொள்கின்றது.

ஆனால் நடை முறையில் அவரவர்கள் உடல் அமைப்பு நிலைக்கொப்ப நினைவின் எண்ண ஓட்டம் சுழன்று கொண்டேயுள்ள நிலையில் “ஒரே சமயத்தில்” இரண்டு நிலையான போராட்ட நிலையும் இச்சரீரத்திற்கு உண்டு.

நினைவின் எண்ணத்தால் ஆத்மாவில் பதியப் பெற்ற எண்ண நிலையும்… எண்ணத்தின் உணர்வை ஆத்மா சமைக்கும் தருண நிலை மோதலில் “பதிவு பெற்ற நிலை… பதிவாக்கும் நிலை…!” இந்த இரண்டு நிலையில் ஒன்றை நாம் முடிவெடுக்க எண்ணத்தைச் செலுத்தும் தருணத்தில் போராட்டமாகின்றது.

எச்செயலுக்காக எண்ணத்தைச் செலுத்திச் செயல் கொள்ள விழைகின்றோமோ அதே செயலைச் செய்விக்க வேண்டிய நிலைக்காக
1.ஆத்மாவின் பதிவு நிலையில் ஏற்கனவே பதியப் பெற்ற நிலையில் எண்ணங்கள் மோதும் பொழுது
உள் மனம் வெளி மனம் என்ற இரண்டு நிலையான ஓட்ட நிலையில் மோதும் எண்ணச் செயலை
3.இச்சரீர பிம்ப வாழ்க்கையில் காண்கின்றோம்.

அதில் சில போராட்ட நிலைகளும் எண்ணத்தில் ஏற்பட்டு அதன் வழியிலும் சில முடிவுகள் ஏடுக்கின்றோம்.

சரீர அங்கத்தில்… ஆத்மாவின் செயல் இயக்கும் பிறப்பு இறப்பு கால ஓட்டத்தில்… எண்ணத்தின் நினைவோட்ட நிலை “இரண்டு நிலையில்” செயல் கொள்ளும்.
1.இத்தகைய இரண்டு நிலையே
2.மனிதனின் அறிவு… பகுத்தறியக் கூடிய உயர் ஞானத்திற்கு வித்தாக அமைந்துள்ளது.

மிருகங்களின் செயலில் இத்தகைய இரண்டு நிலை கொண்ட எண்ண ஓட்ட அறிவின் பகுத்தறியும் தன்மை நிலை குறைவாக உள்ளது. மேலும் சரீர அங்கத்தின் செயல் தன்மையும் மனிதனை ஒத்த சொல்லாற்றல் நிலையும் குறைவு.

ஆகையினால்… சரீர உணர்வின் நிலைக்கொப்ப ஆத்மாவின் பதிவு நிலை செயலை “எண்ண உணர்வின் மோதாத சரீர எண்ண நிலைக்கொப்ப… ஒரு நிலையில் தான்” மிருகத்தின் செயல் உள்ளது.

ஆனால் மனித ஞானத்தில் உயர்ந்த சக்தி நிலையாக ஆத்மாவின் பதிவு நிலை செயல் ஞானம் அமைந்துள்ளது.

உடலுடன் உள்ள சரீர ஜீவ சக்தியின் செயலினால் மனித ஆத்மாவின் உயர்வு நிலையே “உள் மனம்… வெளி மனம்…” என்ற நினைவின் எண்ண உணர்வு செயல் கொள்ளும் செயலினால்…
1.அறிவின் பகுத்தறிவு நிலை கொண்டு
2.ஞானத்தின் வளர்ச்சியை எந்நிலைக்கும் வளர்த்துக் கொள்ள முடியும்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆத்மாக்கள்… சரீரத்தில் உள்ள பொழுது பதித்துக் கொண்ட அதனின் நினைவோட்டங்கள் ஆத்மாவுடன் பதிவாகி… ஆவி நிலையில் சுழன்று ஓடினாலும் எவ் எண்ண அலையாக இந்த ஆத்மா பதித்துக் கொண்டதோ அதே எண்ண நிலைக்கொப்பத்தான் சுழல முடியும்.

அவ்வாறு சுழலும் நிலையில் தான் பெற்ற சுவை குண எண்ண நிலைக்கொப்பச் சரீரங்கள் கிடைக்கும் பொழுது அவ் ஈர்ப்பில் இவை சிக்கி ஆவி நிலையில் உள்ள ஆத்மா சரீர ஈர்ப்பில் உட்புகுந்து விடுகின்றது.

அதாவது…
1.ஜீவ சக்தி கொண்ட அலை கிடைத்தவுடன்
2.தன் ஆத்மாவின் வலுவை வளர்க்க நீர் சத்தின் உஷ்ண நிலை கிட்டியவுடன்
3.அதனுடைய வளர்ப்பு நிலை வளர்ச்சி கொண்டு பிறப்பு நிலைக்கு வருகின்றது.

Leave a Reply