விந்தையான யோகாசனங்களைச் செய்யும் மனிதனால் “ஞானச் சித்தைச் செயல்படுத்த முடியாதா…?” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

YOGA

விந்தையான யோகாசனங்களைச் செய்யும் மனிதனால் “ஞானச் சித்தைச் செயல்படுத்த முடியாதா…?” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

சரீரத்தைக் கொண்டு யோகாசனம் சில வித்தை விளையாட்டுக்கள் எல்லாம் செயல் புரிகிறார்கள். அவர்களின் அங்கக்கூறின் அமிலத் தன்மையே அவ் ஈர்ப்பின் எண்ண உணர்வின் வலுவான அணு வளர்ப்பினால்
1.சரீரத்தைப் பத்து நாட்கள் அல்லது பதினைந்து நாட்கள்
2.சுவாசத்தை அடக்கிய முறையிலேயே சில விந்தை புரிபவர்களும் உண்டு.

அதைப் போன்றே சரீர இயக்கத்தால் சரீரத்தைப் பல விந்தைச் செயலாக யோகாசனம் (GYMNASTICS) போன்ற வழி முறையில் செயல்படும் முறையும் இதன் தன்மைக்கு உகந்தது தான்.

நாட்டியம்… சங்கீதம்.. உடல் பயிற்சி… சில விளையாட்டு வழி முறைகள் இவற்றில் ஒவ்வொன்றிலுமே
1.எண்ணத்தின் உணர்வைக் கூர்மையாக்கி
2.எத்துறையின் வழிப்படி இச்சரீர இயக்கம் அதிகப்படியாகச் செயல் கொள்கின்றதோ
3.அதற்குகந்த அணு வளர்ப்பை இச்சரீரம் பெற்று
4.எடுக்கும் எண்ணத்தினாலேயே அவ்வமிலத்தைக் காந்த மின் அணு வளர்ப்பாக சரீரம் வளர்ச்சி கொள்கின்றது.

அதாவது… எண்ணத்தின் உணர்வைக் கூர்மையாக்கி… துரிதம் கொண்ட ஆர்வ உணர்வின் உந்தலுக்குகந்த வார்ப்பாகச் சரீரம் வழி வகுத்துக் கொள்கின்றது.

இத்தொடர் சரீர இயக்கத்தில் மட்டும் அல்லாமல்… தொழில் முறையிலும்… மற்ற கலைகள் ஒவ்வொன்றிலுமே… ஒரு மனிதன் தன் வாழ் நாளில்…
1.எண்ணத்தின் உணர்வு சுவாசத்தை எச்செயலுடன் ஒன்றிய சுழலில் வாழ்கின்றானோ
2.அவ்வலையின் வளர்ப்பைச் சரீர அணுக்களே வளர்ப்பதோடு மட்டுமல்லாமல்
3.அதே நிலை கொண்ட அமிலக்கூறின் ஆவி நிலை அமிலத் தொடர்பும்
4.இவ்வளர்ப்பின் தொடர்புடன் வளரும் அலைத் தொடர்பாக இவ் ஈர்ப்புடன் தொடர்ந்து வளர்கின்றது.

“இனம் இனத்துடன் சேரும்…” என்ற உண்மையின் தத்துவ உணர்வு இதன் அடிப்படையில் சொல்லப்பட்டது தான்.

ஆகவே இச்சரீர உணர்வின் எண்ணத்தைச் “செலுத்தும் வழி முறையைக் கொண்டு” வாழ்க்கையின் நடைமுறைச் செயலையே..
1.மனித சக்தியின் செயலை உயர்வின் வழியமைக்கச் செயல்படுத்தும் முறை அறிந்து
2.எண்ணத்தின் உணர்வை உயர்வு கொண்ட மகரிஷிகளின் தொடர்புடன் தன் ஞானத்தை வளர்த்து
3.சகல சித்தும் அறியும் ரிஷித் தன்மையின் வழி பெறலாம்.

சரீர உணர்வுடன் இந்த ரிஷித் தன்மை பெற ஆண் பெண் கூட்டு உணர்வு எண்ண வழி முறையின் வளர்ச்சியினால் தான் முடியும். சகல சித்துவும் பெறும் தன்மை அடைய வேண்டும் என்றால் வாழ்க்கையில் ஆண் பெண் எண்ணக் கூட்டு நிலை தேவைப்படுகின்றது.

ஒவ்வொரு சித்தரும் ஒவ்வொரு நிலையில் சக்தி பெற்றார்கள்.

ஞானச் சித்தின் வளர்ப்பு நிலைக்குச் சிவ சக்தி என்ற ஆண் பெண் அமிலக் கூட்டின் உணர்வுத் தொடர்பு அவசியம்.

தனித்த சக்தியினால் நான் செயல்படுவேன்…! என்பது வளர்ப்புத் தன்மையக் காட்டிலும் மலட்டுத் தன்மையான முனிவர்களின் நிலையை ஒத்துத்தான் தனித்து இயங்க முடியும்.

ஏனென்றால் ஆண் பெண் அமில சக்தி தான் நம் பூமியின் சக்தியே…!

அச்சக்தியின் தொடர்பு போன்றே பூமியில் உள்ள சகல நிலைகளும் இன்றளவும் வளர்ந்துள்ளதைப் போன்று ஞானத்தின் தொடருக்கும் இவ்வழி முறையைப் பெற்றிடுங்கள்.

Leave a Reply