நமக்கு நியாயம் வேண்டும் என்றால் எப்படித் தியானிக்க வேண்டும்…?

morning meditation

நமக்கு நியாயம் வேண்டும் என்றால் எப்படித் தியானிக்க வேண்டும்…?

கோர்ட்டுகளில் பணம் கொடுத்துச் சிலர் கேஸ்களைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்வார்கள். அந்த மாதிரி நிலைகளிலிருந்து விடுபட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

காலை துருவ தியான நேரத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் எண்ணங்களைச் செலுத்தி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று அதை வலுவாக நமக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அப்படி எடுத்துக் கொண்ட பின்…
1.எனது சார்புடைய கட்டுகளை வக்கீலோ அல்லது நீதிபதியோ எடுக்கும் பொழுது
2.அவர்களுக்குள் சிந்திக்கும் திறன் வந்து…
3.உண்மையின் உணர்வை உணர்ந்து…
4.அதன் வழியில் தீர்ப்புக் கூறும் சக்தி பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

எந்த நீதிபதி முன்னாடி வாதங்கள் நடக்கின்றதோ அவர்ளுக்கு இந்த உணர்வைப் பாய்ச்சிப் பாருங்கள். அதிகாலையில் இவ்வாறு செயல்படுத்த வேண்டும்.

1.இந்த உணர்வுகள் அவர்களுக்குள் பாய்ந்து… அவருக்குள் உண்மையின் உணர்வை உணர்த்தும்.
2.அதன் பின் அவரை அறியாமலே பேசுவார்கள்
3.பணம் வாங்கியிருந்தாலும் கூட அவர்கள் அறியாமலே நல்ல தீர்ப்பைக் கூறும் நிலை வரும்.

வக்கீல்கள் எல்லாம் கொக்கி போட்டே பேசுவார்கள். எதிர் வக்கீல் அப்படி வாதாடிக் கொண்டிருந்தாலும் நாம் பாய்ச்சும் அருள் உணர்வுகள் அவருக்குள் பாய்ந்த பின் – நாரதன் கலகப் பிரியன் ஆகின்றது.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அவருக்குள் ஊடுருவிய பின்
2.அவர் தன்னை மறந்து உண்மைகளை வெளிப்படுத்திவிடுவார்.

நீங்கள் நாரதரைப் பற்றிய காவியங்களில் படித்திருப்பீர்கள். ரொம்பவும் நாசூக்காகச் சொல்லித் தான் அந்த நாரதன் உண்மையை வரவழைப்பான்.

அதனால் தான் “நாரதன் கலகப் பிரியன்… கலகமோ நன்மையில் முடியும்..!” என்று சொல்வது.

தீமைகளை அகற்றும் சக்தி பெற்றது துருவ நட்சத்திரம். வாழ்க்கையில் வந்த நஞ்சு கொண்ட உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது அந்தத் துருவ நட்சத்திரம்.

ஆகவே..
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எவர் நுகர்ந்தாலும்
2.தனக்குள் அறியாது சேர்ந்த உணர்வினைப் பிரித்துத் தவறு என்ற நிலைகளை உணர்த்தும்.

இந்த உணர்வின் தன்மையைக் கூட்டப்படும் பொழுது… நம்மைப் பார்த்து அந்த உணர்வுகளை நீதிபதி எண்ணும் பொழுது அவரை அறியாமலே அந்த நல்ல தீர்ப்பினைக் கூறிவிடுவார்.

செல்வத்திற்கு அடிமையானவர்கள்… பணத்தின் மீது குறிக்கோளாக வைத்து பிறருக்குத் துன்பம் விளைவிக்கும் தீர்ப்பினையே கூறுவார்கள். அவர்களிடம் நியாயமான… உண்மையான தீர்ப்பு வராது…!

இன்று சத்தியமும் தர்மங்களும் “செல்வத்தில் தான்” இருக்கின்றது.
ஆனால் நாம் அந்த அருள் செல்வத்தை வைத்து… அருள் ஞானத்தை வைத்து… நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்.

மற்றவர்களும் தவறில்லாத நிலைகளில் நடந்து கொள்வதற்கு…
1.தவறு செய்வோரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்
2.அவர்களும் உண்மையை உணர வேண்டும்… நல் வழியில் நடக்கும் செயலாக்கத்திற்கு வரவேண்டும் என்ற உணர்வை நாம் பாய்ச்ச வேண்டும்.

இப்படி ஒரு பழக்கம் வரப்படும் பொழுது மற்றவர்கள் நம்மை எண்ணும் பொழுது
1.அவர்களை அறியாது இயக்கும் உணர்வினைப் பிளந்து
2.உண்மையின் உணர்வை உணர்த்தும் சக்தியாக மாறும்

இந்தச் சக்தி உங்கள் அனைவருக்குமே உண்டு…!

Leave a Reply