எண்ணத்தின் வலுவால் தான் ஆத்ம சக்தியைக் கூட்ட முடியும்… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

samadhi stage

எண்ணத்தின் வலுவால் தான் ஆத்ம சக்தியைக் கூட்ட முடியும்… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

ஜீவராசிகளின் எண்ண ஈர்ப்பின் சமைப்பு நிலையில் ஏற்படும் ஆவியான உஷ்ண அலைகள் வளர்வதினால் தான் இவ்வெண்ணத்தின் ஓட்ட அடக்க நிலையின் உறக்க நிலையால் சரீர பிம்பம் சாந்தம் கொண்டு மீண்டும் விழிப்பிற்கு வந்து செயல் கொள்கிறது.

இவ்வெண்ணச் ஓட்டச் செயல் ஒவ்வொரு ஜீவராசிக்கும் உறக்க விகிதம் மாறுபட்டு இருந்தாலும் உறங்கா நிலையின்றி ஜீவராசிகளால் இருக்க முடியாது. வலு நிலை கூடிய ஆத்மாவிற்கு உறக்க நிலையும் வேண்டியுள்ளது.

1.”ஐம்புலனை அடக்கி…!” நாம் பெறும் தியானம் என்பது
2.ஞானத்தின் வளர் கூட்டை வளர்க்கும் தன்மையற்று உறக்க நிலையும்
3.சமாதி நிலை பூண்டு புலன் அடங்கிய தன்மையில்
4.இச்சரீர பிம்பத்தின் எண்ணத்தின் உணர்வின் செலுத்தும் ஞானத்தின் வலுவை
5.இவ்வாத்மா வலுவாக்கிக் கொள்ள முடியாது.

 

உறக்க நிலையினால் சரீர சமைப்புச் செயல் அங்கங்கள் ஓய்வு பெறும் நிலை தான் ஏற்படுகிறது.

ஒலி ஈர்த்து… ஒளி கண்டு… உணர்வின் எண்ணம் எடுக்கும்… சுவாச அலையின்
1.ஒளி
2.ஒலி
3.உணர்வு
4.எண்ணம்
5.சுவாசம் என்ற
6.இந்திரிய ஐந்துமுகச் செயல் வடிவில் தான் சரீர பிம்ப இயக்கமும்
7.இயக்கத்தால் வலுக் கொள்ளும் ஆத்ம வலுவும் வலுவாகிறது.
8.எண்ணத்தின் சுவாசத் தொடர் இருந்தால் தான் இவ்வாத்மாவின் வலுவை வளர்க்க முடியும்.

எண்ணத்தின் உணர்வை
1.இனிமை கொண்ட இனிய செயலில் இனியன வளர்க்க
2.இனிது வாழும் வாழ்க்கையில்
3.இல்லறச் சுவையில் இனிய சொல்லை உரமாக இட்டு
4.இனிய மணமாக இவ்வாத்மா வலுப் பெறும் வளர்ப்பிற்காக
5.எண்ணத்தின் உணர்வைப் பிற ஈர்ப்பின் மோதலை ஏற்கக்கூடிய ஈர்ப்புப்பிடியில் சிக்க விடக்கூடாது.

இனிய குண வழித் தொடர் வார்ப்பாத்மாவாக இவ்வாத்மாவை… இனிமை கொள்ளும் ஞானத்தால்… உயர் ஞானத் தொடர்பு கொண்ட ஆத்மத் தொடரில் அறியும் உண்மைகளை…
1.சஞ்சல சபல பேராசை என்ற ஈர்ப்புப் பிடிக்குச் செயல்படுத்தாமல்
2.உண்மையான இறை நிலையை வளர்க்க
3.இனிய குண வார்ப்பாத்மாவின் தொடர் செயல் கொள்ளுங்கள்.

Leave a Reply