இன்று யாகம் நடத்துவதற்கும் அன்று யாகம் நடத்தியதற்கும் உண்டான வித்தியாசம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Rishi-Panchami

இன்று யாகம் நடத்துவதற்கும் அன்று யாகம் நடத்தியதற்கும் உண்டான வித்தியாசம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஏழு வகைக் குணச் சேர்க்கையில் அமிலத் தன்மை கொண்ட இந்தப் புவியின் நாத ஈர்ப்பு வளர்ச்சியின் உண்மையறிந்த ரிஷிகள் தன் ஞானத்தின் தொடர் சித்து நிலை கொண்ட காலத்திலேயே இவ்வொலி நாதத்தின் ஈர்ப்பைத் தன் ஆத்ம உயிர் சேமிதம் கொள்ள யாக பூஜை முறை மேற்கொண்டார்கள்.

இப்புவியின் மணம்.. சுவை… உலோகம்… இவற்றைப் போன்று ஏழு தன்மை கொண்ட வஸ்துக்களை அதிகமாக யாக குண்டத்தில் செலுத்தி அதிலிருந்து வரும் புகையினால் தன் சுவாச ஈர்ப்பிற்கு எடுக்கும் நிலையைப் பக்குவப்படுத்தினார்கள்.

1.இப்புகை மண்டலத்தின் அமில விகித நிலையைக் கொண்டு
2.எந்தெந்த அமிலச் சேர்க்கையின் புகை சுவாச நிலையைத் தன் ஈர்ப்பிற்கு எடுக்கின்றதோ
2.அதே மந்திர ஜெபத்தை ஜெபித்துக் கொண்டே அவ்வலைத் தொடரைக் கவர்ந்து
4.அதன் மூலம் மற்ற மண்டலங்களின் வழித் தொடர் அலை ஈர்ப்பைப் பெறுவதற்கு
5.உடல் பிம்ப இயந்திர அணுக்களின் வளர்ப்பை இயங்கச் செய்து
6.உயிராத்மாவின் செயலைக் கொண்டு அவ்வலைத் தொடரின் சக்தியை
7.தன் ஜீவ சக்தியுடன் கூடிய அணு மண்டல ஆத்ம உயிரின் வளர்ப்பிற்கு வலுவாக்கிக் கொண்டார்கள்.

வீணையின் நாதத்தில் சேர்க்கப்படும் அத்தந்திகளின் நிலையைக் கொண்டு எப்படி ஒலி மாறுபடுகின்றதோ… அதைப் போன்றே இவ் எண்ண ஒலி நாதத்தில் ஜெபிக்கப்படும் ஜெப ஒலியின் தன்மை கொண்ட அதனதன் தொடர் குண வலுவை எல்லாம் இந்த ஆத்ம உயிர் எடுத்துக் கொள்கின்றது.

1.ரிஷிகளும் சித்தர்களும் ஜெபமெடுத்த உண்மைத் தன்மைகளை எல்லாம்
2.பூஜை யாக வழித் தொடரில் நம் முன்னோர்கள் நமக்குச் சுட்டிக் காட்டியிருந்தாலும்
3.அதன் உண்மையைகளை அறிய முடியாத விகிதத்தில் தான் இன்று நாம் உள்ளோம்.

இப்புவியின் வளர்ப்பிலிருந்தே தன் ஜீவ பிம்பத்தின் தன் ஞான வளர்ப்பை அறிந்து கொள்ளும் செயல் யாவையுமே இந்தப் பூஜை வழிபாட்டில் இம்மந்திர நாதத்தால் பல சக்திகளைப் பெற்றனர்.

நாற்பத்தி எட்டு நாள் விடாமல் யாகம் செய்தார்கள்…! என்றும் சில ரிஷிகள் சில குறிப்பிட்ட மரங்களில் நதி ஒரங்களிலிருந்து ஜெபமிருந்தார்கள் என்றும் அறிந்திருப்பீர்கள்.

1.அந்த ஞானிகள் தன் வலுவின் சக்தியை வலுப்படுத்திக் கொள்ள
2.தன் உயிராத்மாவின் வளர்ப்பிற்கு பல அலைத் தொடர்புகளை எடுத்து
2.வலுவாக்கிக் கொள்ளும் வளர்ப்புக்குத் தானப்பா இந்த வழிபாட்டுத் தன்மையை ஜெபம் கொண்டு எடுத்தார்கள்.

இஜ்ஜெபத்தால் ஓதிய தியான ஈர்ப்பின் வலுத் தன்மை சேர்க்கையாக தன் உடல் கூறு அமில வளர்ப்பே அவ்வலைத் தொடர்பின் வளர்ப்பாக தன் உயிராத்மா வளர்ந்த பிறகு அவர்கள் சொல் நாதத்தின் வாக்குத் தன்மையின் பலிதமும் இப்பார்வையின் தன்மையிலேயே நினைத்த நினைப்பு நடைபெறும் வலுவைக் கூட்டிக் கொள்கின்றனர்.

அவர்கள் பார்வை பட்டாலே… எந்தக் குணத்தில் அப்பார்வை செலுத்துகின்றனரோ அவ்வமில ஈர்ப்பு… இச்சுவாசத்தின் அலையினால் அந்த இடத்தில் பாய்ந்து அதன் தன்மை தான் அங்கே நடக்கும்.

இஜ்ஜெபத்தால் தியானம் கொண்டு தன் வலுவை வளர்த்துக் கொண்ட ஆத்மாக்களின் (மகரிஷிகள் சித்தர்கள் ஞானிகள்) ஈர்ப்பு நிலையானது
1.நேராக மேலிருந்து வரும் விண்ணின் ஆற்றல் மிக்க அலைத் தொடரை
2.உடலின் மேல் சிரசில் படச் செய்து
3.இந்த உயிர்த் துடிப்பின் வளர்ப்பைக் கொண்டு சுவாச இயந்திரம் இயங்குகின்றது.
4.அப்பொழுத் பூமியின் ஈர்ப்பு பிடிப்பு குறைந்து விடுகின்றது.

ஏனென்றால் பூமியின் கீழ் நோக்கிய சுவாச எண்ண அலையுடன் வாழும் தன்மையில் பல எண்ண மோதலின் சிக்கலுடன் இந்தக் கனம் கொண்ட சுவாசம் எடுக்க எடுக்க இப்புவிப் பிடிப்பின் சுழல் பிடிப்பாகத் தன் இருக்க முடியும்.

இதிலிருந்து விடுபடத்தான்… சப்தரிஷிகள் தன் ஞானத்தால் தன் வலுவின் சக்தியைப் பார்வையிலும்… சொல்லாற்றலிலும் எத்தன்மையையும் வளர வைத்தனர்.

இந்தப் புவியில் வாழும் ஆத்மாக்களான நாமும் இந்த வலுத் தன்மையை வலுவாக்கிக் கொண்டோமானால் அதன் வளர் தன்மையில் செயல் வழித் தொடராக அவர்கள் வாழும் இடத்தை அடையலாம்.

1.இந்நாத ஈர்ப்பின் வீரிய சக்தி கொண்ட
2.மனித ஆத்மாவின் செயலினால் மட்டும் தான் (நம்மால்)
3.இந்த வலுவின் வலுவைக் கூட்டிக் கொள்ள முடியும்.

Leave a Reply