நம்மைப் புகழ்ந்து பேசுவோரிடம் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்… ஏன்.…?

Effects of praise

நம்மைப் புகழ்ந்து பேசுவோரிடம் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்… ஏன்.…?

இந்த வாழ்க்கைக்குத் தேவையானவற்றை மற்றவர் (யாரோ) நமக்குச் செய்வார்கள் என்ற ஏக்கத்தில் செல்லப்படும் பொழுது தான் “அவர்கள் மகா சக்தி பெற்றவர்கள்” என்ற நிலைகள் கொண்டு அவர் வலையில் சிக்கி… நம் புத்தியை இழந்து… அவர்களிடம் நாம் அடிமையாகின்றோம்.

பாதிப்படைந்த பின்… “தப்ப வேண்டும் தப்ப வேண்டும்…” என்ற எண்ணத்திற்கு வருகின்றோம்.

உதாரணமாக இந்தத் தொழிலைச் செய்தால் அதிலே நீ அதிகமான லாபம் பெறலாம் என்ற உணர்ச்சிகளை ஒருவர் தூண்டிவிட்டால் போதும். அவர்களைப் பற்றிய புகழாரம் அனைத்தும் பாடத் தொடங்குவார்கள்… அவர் உதவி செய்வார்… உதவி செய்வார்… என்று…!

அவர் உதவி செய்வார் என்ற எண்ணத்தில் ஏக்கத்தில் இருக்கும் பொழுது ஒரு நூறு ரூபாய் வேண்டும் என்பார்கள். அதாவது புகழ்ந்து பேசிய பின் இப்படிக் கேட்பார்கள்.

கொடுத்து விடுவீர்கள்…!

சிறிது நாள் கழித்து கொடுத்ததைக் கேட்கலாம்… என்று சென்றாலும் “நீங்கள் தக்க நேரத்தில் உதவி செய்தீர்கள்…! இன்னும் ஒரு நூறு ரூபாய் கொடுத்தால் பரவாயில்லை…” என்பார்.

இப்படிப் புகழ்ந்து பேசுபவருடைய நிலைகளுக்கு நாம் அடிமையாகி விட்டால் இப்படிப் பேசிப் பேசியே நம்மிடமிருந்து காசை வாங்கிக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் கஷ்டமாக இருக்கும் பொழுது நாம் கேட்டால் நம்மைப் புகழ்ந்து பேசியவர் “ஐயோ…!” இப்பொழுது என்னிடம் காசில்லையே…! என்பார்.
1.ஆனால் நாம் கொடுத்த பணத்தைத் திரும்பக் கொடுக்க மாட்டார்.
2.நம்மிடம் பணம் கேட்பதையும் நிறுத்த மாட்டார்
3.நாம் பணம் இல்லை… என்று சொன்னாலோ உடனே பகைமையை ஊட்டிவிடுவார்.
4.காசைத் திருப்பிக் கேட்கிறார் என்றும் அடுத்தவரிடம் நம்மைப் பற்றிச் சொல்லிச் சீண்டிவிடுவார்.
5.இவருடைய செயல்கள் இப்படி…! என்று கற்பனையாக உருவாக்கி கற்பனையான சொல்களைச் சொல்லி இடையூறுகளை ஊட்டுவார்.

கடைசியில் கொடுத்ததை எல்லாம் கேட்டால் என்னிடம் எப்பொழுது பணம் கொடுத்தீர்கள்…! என்பார். இப்படியெல்லாம் புகழாரம் பாடுவோர் கையில் நாம் சிக்கிவிட்டால் இந்த மனித வாழ்க்கையில் ஏமாற்றமே மிஞ்சுகின்றது.

ஆகவே…
1.நாம் ஒருவருக்கு உபகாரம் செய்வது என்றால் திருப்பிப் பெறும் நிலைகள் இருக்கக் கூடாது
2.திருப்பிப் பெறாத நிலைகள் செயல்படுத்த வேண்டும்
3.ஒன்று இரண்டு ஏதோ அவர்களுக்கு.. எப்படியோ நன்றாக இருக்கட்டும்…! என்ற நிலைகளில்
4.புகழ் பாடுவோர் கையில் கொடுத்து விட்டால் போதும்…!
5.கொடுத்ததைத் திரும்பக் கேட்கும் நிலையற்ற நிலையில் இருக்க வேண்டும்.

ஏனென்றால் ஒரு தரம் உதவி செய்தாலும் மீண்டும் அவர்கள் கேட்பார்கள். உதவி செய்யவில்லை என்றால் பழியைச் சுமத்துவார்கள். அதனால்…
1.நம்மை அறியாமலே நண்பர்களுக்குள் பகைமை உருவாகின்றது.
2.இன்றைய உலகம் இப்படித்தான் இருக்கின்றது…!

இதைப் போன்ற தீமைகளிலிருந்து நாம் விடுபடுதல் வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்…?

ஒவ்வொரு நொடியிலேயும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்ற உணர்வினைச் சுவாசித்து உடலுக்குள் கருவின் தன்மையை உருவாக்கி அந்தக் கருவை நமக்குள் அணுவாக வளர்த்திட வேண்டும்.

அதன் வளர்ச்சி கொண்டு இந்த அருள் உணர்வின் வலிமை பெற்று

1.என் பார்வை அவரை நல்லதாக்க வேண்டும்
2.சிந்திக்கும் தன்மை அவருக்கு வர வேண்டும்
3.என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவருக்கு நல்ல உணர்வு தோன்ற வேண்டும் என்ற
4.இப்படிப்பட்ட உணர்வினைக் கருவாக்கி உணர்வின் தன்மை பெற்றுவிட்டால்
5.உற்று நோக்கி நம்மை ஏமாற்றுவோரும் இந்த உணர்வுகளை நுகர்ந்த பின்
6.அந்த ஏமாற்றும் தன்மையே அவர் உடலிலிருந்து மறைந்து விடுகின்றது.

ஆகவே இன்றைய உலகில்… பிறிதொரு பகைமையோ ஏமாற்றும் உணர்வுகளோ வராதபடி நாம் மாற்றியமைத்தல் வேண்டும்.

அதே சமயத்தில் நாம் நுகரும்… அல்லது நுகர்ந்த அருள் சக்திகள் நமக்குள் வளர்ந்து அரும் பெரும் சக்தியாக மலர்கின்றது.

இதையே நமக்குள் வளர்த்துக் கொண்டால் இந்த உடலை விட்டு நாம் சென்ற பின் மெய் ஒளி பெறுகின்றோம்.

Leave a Reply