துன்பங்களைக் கேட்டு வேதனைப்பட்டாலும் சரி.. துன்பங்கள் செய்வோரை எண்ணி வெறுப்படைந்தாலும் சரி… அது நோயாகத்தான் மாறும்

Fool proof protection

துன்பங்களைக் கேட்டு வேதனைப்பட்டாலும் சரி.. துன்பங்கள் செய்வோரை எண்ணி வெறுப்படைந்தாலும் சரி… அது நோயாகத்தான் மாறும்

இன்றைய மனித வாழ்க்கையில் சிலர்… பகைமை கொண்ட நிலையில் அடுத்தவர்களுக்குப் பல இடைஞ்சல்கள் செய்தே தன்னை வளர்த்துக் கொள்ள விரும்புகின்றார்கள்.

பிறர் துன்பப்படுவதைக் கண்டு ரசித்து மகிழும் தன்மையே அவருக்குள் வருகின்றது. (உலகம் முழுவதும் இந்த நிலை தான்)

ஆனால் அவர் அப்படித் துன்பப்படுத்தும் பொழுது
1.அவர் என்னைத் துன்பப்படுத்துகின்றாரே…! என்ற நிலைகளில் அந்த உணர்வை நாம் நுகரப்படும் பொழுது
2.துன்பப்படும் அணுக்கள் நமக்குள் விளைகின்றது
3.அது கடும் நோயாகவும் நம் உடலிலே விளைகின்றது.

துன்பப்படும் நிலையையும் அதனால் வேதனையாகி நோயானதையும் சொல்லாக வெளிப்படுத்தும் பொழுது நம் சொல்லுக்குள்ளும் அது கலந்து வருகின்றது.

அத்தகைய நிலையை நம் நண்பர்கள் கேட்டறிந்தாலும் அவர்களும் அதனால் வெறுக்கும் தன்மையே வருகின்றது. (இவன் எப்பொழுது பார்த்தாலும் இப்படியே சொல்லிக் கொண்டிருக்கின்றான் என்று..!)

இப்படிப் பாதிப்படைந்த நிலையில் ஒரு சிலர் அவர் படும் கஷ்டங்களைச் சொல்வார்கள். நீங்கள் அதைக் கேட்டவுடனே… அல்லது அவர்களைக் கண்டவுனே…
1.இவன் வந்துவிட்டானா…?
2.என்ன சொல்லப் போகிறானோ…! என்று பதட்டமாகி
3.மனது பட…பட.. என்று அடிக்கும். இதைப் பார்க்கலாம்.

இருந்தாலும் அந்தக் கஷ்டங்களை எல்லாம் “உ…ம்..” கொடுத்துக் கேட்டால் அவர்களுடைய துன்பங்களைக் கேட்ட பின் அடுத்து ஒரு தொழிலையே செய்யச் சென்றாலும் அன்றைய தொழில் கெடும்.

கஷ்டத்தைக் கேட்ட பின் ஒரு சமையலுக்கே சென்றாலும் சுவை இருக்காது. ஏனென்றால் அந்த வெறுப்பை அதிகமாகக் கூட்டி விட்டால் அடுப்பில் வைத்த பொருள்கள் ஒரு பக்கம் சரியாக வேகாது. இன்னொரு பக்கம் குழைந்து போகும்.

அதாவது நெருப்பைச் சீராக வைக்காது அதைச் சுவையாக்கச் செய்யும் சக்தியும் இழந்து விடும். இதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

ஆக… உங்களிடம் யாராவது கஷ்டத்தைச் சொன்னால் அதைக் கேட்டுக் கொண்டிருந்தால் போதும்….!
1.அவர்கள் சொல்லும் உணர்வுகள்…
2.அது எந்தெந்த உணர்வோ இதைப் போல் நமக்குள்ளும் தோன்றும்.

அடுத்தாற்போல் ஒரு காரியத்திற்குச் செல்ல வேண்டும் என்றாலும் கூட அவரைக் கண்ட பின் இனம் புரியாதபடி வெறுப்பாகும்.

1.அவர் போன பிற்பாடு அவரைப் பற்றிக் குறையாகப் பேசுவோம்.
2.அவர் உணர்வுகள் நமக்குள் கருவாக உருவான பின்
3.அவர் குறைகளைப் பற்றியும் குற்றங்களைப் பற்றியும் பேசும் பொழுது
4.அவர் குறை கூறும் உணர்வு நமக்குள்ளும் வளர்கின்றது.

இந்தக் குறை உணர்வை வளர்க்கப்படும் பொழுது உடலுக்குள் இருக்கும் மற்ற நல்ல அணுக்களும் எதிர் நிலை ஆகும். அதனால் நல்ல ஆரோக்கியமாக இருக்கும் நம் மனதும் உடலும் கெடும்.

இதைப் போன்ற நிலைகள் வளராது தடுப்பதற்குத்தான் மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் சேர்ப்பிக்கும் விதமாக ஆத்ம சுத்தி என்ற பயிற்சியைக் கொடுத்துள்ளோம்.

அதை உடனுக்குடன் செய்தால் தீமை செய்யும் அந்த அணுக்கள் உருவாகாதபடி தடுக்கலாம். நோய் வராது தடுக்கவும் முடியும். சிந்திக்கும் சக்தியும் கிடைக்கும்.

நம்மிடம் குறை சொல்பவர்களுக்கு உண்டான சரியான உபாயத்தையும் நாம் வழி காட்ட முடியும். இதை ஒரு பழக்கமாக்கிக் கொண்டால் அதுவே நமக்குப் பாதுகாப்புக் கவசமாகி விடும்.

Leave a Reply