தானும் வலுவான தெய்வ சக்தியின் சக்தியாகலாம்…! என்பதை மறந்து வாழும் மனிதர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

self trust and confidance

தானும் வலுவான தெய்வ சக்தியின் சக்தியாகலாம்…! என்பதை மறந்து வாழும் மனிதர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

1.தன்னைத்தான் நம்பாமல்…
2.தனக்கு மேல் வலுவான பூஜிப்பு முறையால்…
3.பல அலைத் தொடர்புகளின் சக்தி அலையை நம்பி…
4.அதன் தொடர்புடன் தான் இன்றளவும் “பக்தி பூஜிப்பு வழி முறை…“ இருக்கின்றது.

நமக்கு மேல் சக்தி கொண்ட தெய்வங்களை அடிபணிந்து… அருள் வேண்டி… அவ்வலையின் வசத்தில் நாம் வளரும் பக்குவத்திலேயே இன்றளவும் காலம் சென்று விட்டது.

தன் வலுவைத் தான் கூட்டி தன்னையே தான் நம்பி தானும் வலுவான தெய்வ சக்தியின் சக்தியாகலாம்…! என்பதையே மறந்து வாழ்கின்றனர்.

மற்றொன்றிடம் யாசித்து… பக்தி உணர்வு கொண்டு வேண்டிப் பெறும் குண வழிச் செயலாகத் தான் இன்றளவும் செயல்கள் உள்ளது.. ஞானத்தை எட்டிப் பார்க்கும் தன்மை இல்லை…!

ஒவ்வொரு ஜீவ சக்தியிலுமே தன் வலுவை வளர்க்கக்கூடிய வலுத் தன்மை உண்டு.
1.உடல் வேறு… ஆத்மா வேறு…!
2.ஆத்மா பிரிந்து விட்டால் உடல் செயல் இழந்துவிடும் என்ற உண்மையை உணர்ந்த மனிதன்
3.தன் ஆத்ம இயக்கத்தின் உண்மையை உணரவில்லை.

உடலை விட்டுப் பிரிந்தவர்களுக்கும் ஆத்ம உயிர் உண்டு. சரீர பிம்ப உடலை இயக்குவதும் அவ்வாத்ம பிம்பம் தான். உடலைச் சுற்றி இவ்வாத்மாவின் இயக்கம் செயலாற்றும் தன்மைக்கு… “ஜீவத் துடிப்பு கொண்ட” இயக்க இயந்திரம் தான் இவ்வுடல் கோளம்.

எண்ணம் எப்படி உதயமாகின்றது…?

மூளையின் பதிவு நிலையிலோ… மற்ற சரீர பிம்ப உடல் உறுப்பின் நெஞ்சிலிருந்தோ… எண்ணம் உதயம் பெறவில்லை…!

இவ்வாத்மாவின் உந்தலின் எண்ணம் கொண்டுதான்… இவ்வுடல் இயந்திரத் துடிப்புக் கோளத்தின் ஆத்ம உயிரின் மோதலினால்.. இச்சுவாசம் எடுத்த உயிர்த் துடிப்பின் மோதல் இருந்தால்தான் சுவாசம் எடுக்க முடியும்.

1.ஆத்மாவின் செயலாக இந்த உயிர்த் துடிப்பு ஏற்பட்டு
2.உயிர்த் துடிப்பின் உந்தலுக்கு இச்சுவாசத்தின் மூலமாக
3.ஆத்மாவின் எண்ண செயல் கவன நரம்பில் மோதி
4.சிறு மூளையின் இயக்கத்தால் செவி ஒலி ஈர்த்து எண்ணச் செயல் நடக்கின்றது.
5.ஆத்மாவின் உந்தலுக்குகந்த எண்ணச் செயலை
6.உடல் கோளத்தைக் கொண்டு செயலாக்கிக் கொள்கின்றனர்.

காற்றலையில் கலந்துள்ள ஒலி அலையை வானொலிப் பெட்டி மின் தொடர்பு ஏற்படுத்தியவுடன் எவ்வலைத் தொடரில் அம்முள்ளை வைக்கின்றோமோ அவ்வலையின் ஒலி கேட்பதைப் போல்
1.இவ்வாத்மா அலையின் உந்தல் இவ்வுயிர் சிரசில் பட்டு
2.உயிர்த் துடிப்பைக் கொண்டு… சுவாசத்தின் எண்ணச் செயல் நடக்கின்றது.

இவ்வெண்ணத்தின் செயலை மாற்றியமைக்கும் நிலை… வளர்க்கும் நிலை… குறைக்கும் நிலை… எதுவாக இருந்தாலும்
1.இஜ்ஜீவத் துடிப்பு கொண்ட சரீர இயக்க அணு வளர்ப்பின் வளர்ப்பில் இருந்து தான்
2.இவ்வாத்மாவின் வலுவையே வலுவாக்கக்கூடிய வழித் தொடர் பெற முடியும்.

ஆத்மாவின் செயலான எண்ணத்தை உயர் அலையின்பால் செலுத்தி அதை வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.

உயர் அலை என்பது இந்தப் பூமியின் பிடிப்பலையில் இந்தப் பூமியின் சுழற்சியுடன் சுழலும் அலைத் தொடர்பின் வட்ட ஈர்ப்பில் வாழும் நிலையிலிருந்து மகரிஷிகளின் அலைத் தொடர்பு ஞானத்தை மேல் நோக்கிய சுவாசத்தால் எடுக்கப் பழகுதல் வேண்டும்.

எண்ணத்தைச் செலுத்தி எடுக்கும் முறை வழியால் அந்த உயர் காந்த மின் அலையின் தொடர்பை நாம் எடுக்க எடுக்க இந்த உடலில் இருந்தே சரீர அணுக்களின் ஈர்ப்பு வளர்ப்பலையால் ஆத்மாவின் வலுவைக் கூட்டி இவ்வாத்மாவை எந்த நிலைக்கும் செலுத்திச் செயலாக்ககூடிய வலுவை இந்த மனிதச் சரீரம் பெற முடியும்.

தன்னைத் தான் நம்பி…! தனக்குள் உள்ள இறை சக்தியின் உயர் அலையைப் பிற அலைகள் தங்க இடம் தராமல் நல்லதாக மாற்றிட முடியும்.

ஏற்கனவே நம் உடலில் குடிவந்துள்ள எந்த வகையான குண வலு கொண்ட ஆத்மா இருந்தாலும்… நம் ஆன்மா வலு கூடக் கூட… நம் வசப்பிடி வலுவாக… அதனையும் செயலாக்கும் வலுவாக்கி… நம் ஆத்ம சக்தியை நாம் வளர்த்து… “ஒவ்வொருவருமே இறைவனாகலாம்…!”

எங்கோ இல்லை இறைவன்…! இங்குள்ள இறைவனை நாம் தூசிக்காமல் ஒவ்வொருவருமே நாம் இறைவனாகலாம்.

மனிதனும் தெய்வமாகலாம் என்பது… போற்றலில் பிறர் போற்றி வணங்கும் தெய்வமல்ல…!
1.மனிதன்தான் தெய்வ சக்தியைப் படைக்கவல்லவன்.
2.தெய்வ குண வழி முறை செயல்பாடு உருவக குண செயலையே உருவாக்க வல்ல சக்தி… “மனித சக்தி தான்…”

ஒவ்வொரு ஆத்மாவும் அந்த நிலை பெறலாம்.

Leave a Reply