உடலை விட்டுச் சென்றால் பறக்கும் நிலையை நாம் பெறவேண்டும்

flying powers

உடலை விட்டுச் சென்றால் பறக்கும் நிலையை நாம் பெறவேண்டும்

 

உதாரணமாக ஒரு புழு தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு தன் மணத்தால் உருவாகும் மலத்தை நூலாம்படை போல் தனக்குள் சுற்றுகின்றது.

அந்தப் பட்டுப் புழு… இவ்வாறு தனக்குள் சுழற்றிக் கொண்ட பின்
1.தன்னை அறியாமலே ஒரு பாதுகாப்புக் கூடாகக் கட்டிக் கொள்கின்றது.
2.பாதை இல்லாத நிலைகள் அடைபட்டுக் கொண்ட பின்
3.”வெளியிலே செல்ல வேண்டும்…” என்ற உணர்ச்சிகள் தூண்டப்படுகின்றது.

வெளியே செல்ல வேண்டும்…! என்ற உணர்வுகள் ஊட்டப்படும் பொழுது தன் உடலிலிருந்து வெளிப்பட்ட மலத்தால் கட்டப்பட்ட கூட்டின் நிலைகளிலிருந்து தன் உணர்வின் தன்மையை வளர்த்து
1.இந்த நினைவின் ஆற்றல் “வெளியிலே பறக்க வேண்டும்…” என்ற உணர்வுகள் முதிர்ந்து
2.அது இறக்கைகளாக வளர்கின்றது.

பின் தன் மலத்தால் கட்டப்பட்ட அந்தக் கூட்டைக் கத்திரித்து வெளியே வரப்படும் பொழுது பூச்சியாக வருகின்றது.

பின் அந்தப் பூச்சி முட்டையிடும் பொழுது அதன் கருவாகத் தன் இனங்களாகப் பெருக்குகின்றது. இதைப் போல் அது கூடு கட்டி மீண்டும் பறக்கும் பூச்சியாக மாறுகின்றது.

இதைப் போல் தான் அருள் மகரிஷிகளின் உணர்வு கொண்டு நமக்குள் இந்தக் கூட்டைக் கட்டி இந்த உணர்வின் தன்மை அருள் வட்டமாக நமக்குள் சேர்க்கப்படுகின்றது.

1.எந்த அருள் ஞானியின் உணர்வை நமக்குள் சேர்க்கின்றோமோ
2.இந்தக் கூட்டை விட்டு வெளியிலே செல்லும் பொழுது
3.அந்த அருள் ஞானியின் அருள் வட்டத்திற்குள் சென்று
4.நாம் என்றும் பிறவியில்லா நிலைகள் அடைய முடியும்.

ஒரு பட்டாம்பூச்சி அது இடக்கூடிய முட்டையிலிருந்து புழுவின் தன்மை விளைவித்தாலும் வளர்ச்சியில் இதே பூச்சி பறந்து சென்று ஒரு பூவின் மீது அதன் தேனின் சுவைக்காகச் சென்றால் அந்தச் சுவையின் தன்மையில் அதிலே முட்டைகளை இடுகின்றது.

முட்டைகள் அந்தத் தேனுக்குள் சிக்கப்பட்டு அந்த அமுதத்தை அதற்குள் செருகப்பட்டு இந்த உணர்வின் தன்மை அதன் கருவை அது வளர்த்து அதனுடைய நிலைகள் பட்டாம்பூச்சியாகப் பிறக்கின்றது.
1.பட்டாம்பூச்சியாக வரப்படும் பொழுது
2.அந்தப் பூவியின் நிறம் எதுவோ அதைப் போல் பட்டாம்பூச்சியின் இறக்கைகள் வளருகின்றது.

இது எல்லாம்…
1.அதனதன் நுகர்ந்து கொண்ட உணர்வு கொண்டு
2.அது இடும் முட்டைகள் அது “கருவிலே சேர்க்கும்” நிலைகள் கொண்டு
3.பல பல நிறங்களில் இவ்வாறு வருகின்றது.

நாம் ஒரு வேதனையான உணர்வை நுகரப்படும் பொழுது அது அணுக்கருவாக நம் உடலிலே உருவானாலும் அடுத்த கணம் அந்த அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் பெறவேண்டும் என்ற உணர்வை நுகரப்படும் பொழுது அந்தக் கருக்களின் வட்டத்தில் இது சேர்ந்து விடுகின்றது.

பின் அந்த வேதனைப்படும் உணர்வை நுகராது இந்த அருள் உணர்வுகளையே அது நுகர்ந்து இந்த உணர்வின் தன்மை கொண்டு அருள் ஒளியை நுகரும் அணுவாக இது உருப்பெற்று விடுகிறது.

நாம் நுகர்ந்த மகரிஷிகளின் உணர்வின் அணுக்களாக வெளிவரப்படும் பொழுது
1.அந்த உணர்ச்சிகளை நமக்குள் எழுப்பி
2.அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெறவேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கின்றது.

இது எல்லாம்…
1.நம் எண்ணத்தால் உருவாக்கும்… உணர்வால்… இயக்கும் உணர்வுகள்
2.ஒவ்வொருவரும் மறக்காது இதன் வழி செயல்படுத்த வேண்டும்.

Leave a Reply