நல்லதையும் கெட்டதையும் சமமாக்கி ஒளியாக மாற்றியவன் அகஸ்தியன்

good or bad

நல்லதையும் கெட்டதையும் சமமாக்கி ஒளியாக மாற்றியவன் அகஸ்தியன்

கேள்வி:
சமமான உணர்வு எண்ணச் சுவாச நிலை என்றால் என்ன…?

பதில்:
மனிதனுடைய முக்கியமான குணங்கள் பன்னிரெண்டு. அதிலே ஆறு நல்ல குணங்கள். ஆறு தீய குணங்கள்.

1.வெறும் நல்ல குணங்களை வைத்து நல்லதை வளர்க்க முடியுமா என்றால் முடியாது.
2.ஆக அந்த நல்லதை மேலும் மேலும் உயர்த்த மீதம் உள்ள ஆறு தீய குணங்கள் தேவைப்படுகிறது.

ஒரு குழம்பை வைக்கின்றோம் என்றால் அதிலே இனிப்பைப் போட்டு வைக்க முடியாது. புளிப்பு கரிப்பு கசப்பு காரம் துவர்ப்பு நமநமப்பு எல்லாம் இணைத்தால் தான்
1.“அதாவது சமமான நிலைகளில்…!” அந்தச் சேர்மானம் இருந்தால் தான்
2.அது மிகவும் சுவையாக இருக்கும்.
3.உமிழ் நீர் அதிகமாகச் சுரக்கும்.
4.சாப்பாடு உடனே உள்ளுக்குள் போகும்.

ஆனால் மேலே சொன்ன சுவையில் ஏதாவது கூடி மற்றது குறைந்து விட்டால் உமிழ் நீர் கூடாது… வாயிலே வைத்துக் கொண்டே இருப்போம். உள்ளே போகாது.

இதைப் போன்று தான் அன்றாட வாழ்க்கையில் வரும் எத்தனையோ நிலைகளில் “நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத…!” அந்தத் தீமைகளை எல்லாம் குழம்பிலே பலசரக்குகளைப் போட்டுச் சமமாக்குவது போல் சமமாக்கி விட வேண்டும்.

வாழ்க்கையில் வருவதைச் சமமாக்குவது எப்படி…?

ஏனென்றால் அதைச் சமப்படுத்தியவர்கள் மகரிஷிகள். நல்ல மணமாகவும் நல்ல சுவையாகவும் மாற்றியவர்கள் மகரிஷிகள்.

ஆனால் மனிதர்களான நாம்…
1.நல்லதுக்காக ஏங்குவதும்.
2.கெட்டது வந்தால் சோர்வடைவதும் அல்லது ஆத்திரப்படுவதும் போன்ற நிலையிலேயே நின்று விடுகின்றோம்.
3.அதைச் சமப்படுத்த வேண்டும் என்ற எண்ணமே வருவதில்லை.

நல்லதையும் கெட்டதையும் ஒரே நிலையில் பார்த்து அதை இரண்டையும் இணைந்து வாழச் செய்யும் பக்குவமாக நம் சுவாசம அமைதல் வேண்டும்.

அது தான் சமமான உணர்வு… சமமான சுவாசம்….!

நல்லதையும் கெட்டதையும் ஒரே உணர்வுடன் பார்க்க ஒரே நிலையில் சீரான சுவாசமாக்க வேண்டும் என்றால் மகரிஷிகளின் உணர்வை எடுத்தால் தான் அது முடியும்.

நல்லது என்றும் கெட்டது என்றும் மகரிஷிகள் பார்வையில் எதுவும் இல்லை. நாம் குழம்பில் போடும் புளி காரம் உப்பு போல்…! அதை இணைத்தால் தான் குழம்பிற்குச் சுவை. தெரிந்தே தானே நாம் மிளகாயைப் போடுகின்றோம்…!

எந்தச் சந்தர்ப்பத்திலும் நம் சுவாசம் தடையாகக் கூடாது. ஒரே சீராக இருக்க வேண்டும்.

நல்லது நடந்தாலும்… கெட்டது நடந்தாலும்… அகஸ்தியன்
1.வாதாபியை ஜீரணித்தது போலவும்
2.அவனுடைய சகோதரனை ஒளியாக மாற்றியது போலவும் நம்முடைய செயல்கள் இருந்தால்
3.வருவது அனைத்தும் உணவாகவும் முழுமையான வளர்ச்சியாகவும் இந்த வாழ்க்கை நிச்சயம் அமையும்.

அகஸ்தியன் தான் இந்தப் பூமியையே சமப்படுத்திவன். அந்த அகஸ்தியன் உணர்வை நுகர்ந்தால் நாமும் நிச்சயம் சமப்படுத்த முடியும்.

Leave a Reply